Blog

  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 37

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 37

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    அகத்திணை விளக்கும் புறத்திணை உவமங்கள் – 1

    முன்னுரை

    சிந்தனையில் கடமையுணர்வு மிக்கிருப்பவன் செய்யும் காதலுக்கும் காதலுணர்வு மட்டுமே மிக்கிருப்பவன் செய்கின்ற காதலுக்கும் வேறுபாடு உண்டு. காதலைப் பற்றி, இல்லாத கற்பனையைச் சொல்லாத கவிஞரில்லை. ஆனால் பரணர் சொல்வதற்கும் மற்றவர் சொல்வதற்குமான வேறுபாடே இங்கு ஆய்வுப் பொருளாகிறது. அகத்திணை மாந்தர்களின் உணர்வு வெளிப்பாடுகள் எல்லாரிடமும் ஒரே தன்மையாயும் பரணரிடம் மட்டும் அது வேறுபட்டும் அமையக் காரணம் என்ன என்பதை ஆராய்கிறபோதுதான் முன்னுரையின் முதல் வரி நினைவுக்கு வந்தது. மன்னர்களோடும் சமுதாய மக்களோடும் களங்காணும் வீரர்களோடும் பழகி அவர்களைப் பற்றிய சிந்தனை அதிகம் நிறைந்த புலவர்களில் பரணர் முன்னிற்கிறார். பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்தைப் பத்திய மருந்தாகச் சேரனுக்குப் பாடி மகிழ்ந்தவர் அவர். அகத்திணைப் பாடல்களைப் பாடுகிறபோது முதற்பொருள்களை உவமமாகக் கொண்டிருப்பதைக் காட்டிலும் சமுதாய நிகழ்வுகளையும் போர்க்களங்களின் ஆரவாரிப்பையும் குறுநில மன்னர்களின் இயல்பையும் இவை போன்ற செய்திகளையுமே உவமமாக்குகிறார். எங்கே உவமம் சொல்ல வேண்டும்? எவற்றை நிலைக்களனாகக் கொண்டு அவை தோன்றும்? யார் யார் உவமம் சொல்லலாம்? அவர்களும் எப்படிச் சொல்ல வேண்டும் என்பதற்கெல்லாம் விதிவகுத்த தொல்காப்பியம் இதனைத்தான் உவமமாகச் சொல்லவேண்டும் என்பதற்கான விதியினை வகுத்திருப்பதாகத் தெரியவில்லை. ‘பொருளைவிட உவமம் உயர்ந்ததாக இருத்தல் வேண்டும்’ என்ற ஒரே நிபந்தனையைத்தான் அது விதிக்கிறது. அந்த உயர்ந்த பொருளை புலவர் பெருமக்கள் வினை, பயன், மெய், உரு என்னும் நான்கிலிருந்தும் எடுத்துக் கொண்டார்கள். அவை பெரும்பாலும் முதற்பொருளைச் சார்ந்தே அமைந்தன. ஆனால் பரணர் மட்டுமே அக்காலச் சான்றோர்களில் யாரும் எண்ணிப் பார்க்காத சமுதாய நிகழ்வுகளை உவமமாக வைத்துப் பாடியிருக்கிறார். அவர் பாடிய அகத்திணைப் பொருண்மையைப் புறத்திணை உவமங்களால் விளக்கியதுதான் புதுமை. அத்தகைய புதுமைகள் சிலவற்றை இக்கட்டுரை ஆராய்கிறது.

    பரணரின் பதிவுகள்

    தனித்தன்மை மிக்க சங்கச் சான்றோருள் பரணரும் ஒருவர். குறிஞ்சிக் கபிலரின் நெருங்கிய நண்பர் இவரென்பதற்கு உம்மைத்தொகைக்கு வழிவழியாகச் சொல்லப்பட்டுவரும் ‘கபிலபரணர்’ என்னும் தொடரே போதுமான சான்றாகலாம். பதிற்றுப்பத்துள் ஐந்தாம் பத்து பாடிய இப்பெருமகனார் நற்றிணை, புறநானூற்றில் நூலுக்குப் பன்னிரண்டும் குறுந்தொகையில் பதினைந்தும் அகநானூற்றில் முப்பத்திரண்டுமாகப் பாடியுள்ளார். குறுந்தொகையில் இவர் பாடியதாகப் பதிவிடப்பட்டிருக்கும் பதினைந்து பாடல்களில் வரலற்றுச் செய்திகள் உவமமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் பாடல்கள் சிலவற்றிலிருந்து பெறப்படும் உவமக் கோட்பாடுகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது,

    தோழி செய்த சூழ்ச்சி

    தமிழ் அகத்திணை மாந்தருள் நுண்ணியத்தோடு வடிவமைக்கப்பட்ட பாத்திரம் தோழியாகும். அகத்திணை நிகழ்வுகளை ஆழ்ந்த சிந்தனையோடும் பொறுப்புணர்வோடும் நிரல்படக் கொண்டு செலுத்தும் அரிய திறமையுள்ள பாத்திரம் அது. பகற்குறி வேண்டி வரும் தலைவனுக்கு இரவுக்குறி காட்டும் தோழி அதனையும் மறுக்கிறாள். இது கண்டு மருகும் தலைவி இனித் தலைவனைக் காண இயலாதோ என எண்ணிப் புலம்ப அவளைத் தேற்றுகிறாள் தோழி!. “நின் மனம் அறிவேன் நான்! அவன் மார்பு விழையும் உனக்கு என் செயல் புதிராகத் தோன்றலாம். நின்னை அவன் குறித்த காலத்தில் வரைந்து கொள்ள வேண்டுமானால் கோசர் செய்த சூழ்ச்சி போலச் சிறிதளவு சூழ்ச்சியும் தேவைப்படுகிறது! நீ கவலற்க!” எனத் தேற்றுகிறாள். ஆண்களின் உள்ளம் அறிந்த அரிய பாத்திரமாகப் படைக்கப்பட்ட தோழி இந்தப் பாட்டில் தான் செய்த சூழ்ச்சிக்குக் கோசர் செய்த சூழ்ச்சியை உவமமாகக் கூறுகிறாள்.

    மகிழ்நன் மார்பே வெய்யை! யான் நீ
    அழியல் வாழி தோழி! நன்னன்
    நறுமா கொன்று நாட்டிற் போக்கிய
    ஒன்றுமொழிக் கோசர் போல
    வன்கண் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே!” (குறுந். 73)

    ஔவையுண்ட  நெல்லிக்கனிபோல் நன்னன் என்பான் நாட்டில், மாமரம் நெடுநாள் சென்று கனியொன்று ஈந்தது. ஆற்றங்கரை மரமாதலின் அக்கனி ஆற்றில் வீழ, அது போழ்து அங்கு நீராடிய கோசர் குலப்பெண் அதனை எடுத்து உண்டாள். அது கேட்ட நன்னன் அவளைக் கொன்றான். மரத்தால் வந்த சிக்கல் என்பதனால் நன்னன் நாட்டில் இல்லாத காலத்தில் மரத்தை அழிக்க மார்க்கம் கண்ட கோசர், அகுதை என்பானிடம் யானைகளைப் பரிசிலாகப் பெற்றுவந்த பாடிணிகளைக் கரையோர மாமரத்தில் அந்த யானைகளைப் பிணிக்கச் சொல்ல, மரத்தோடு பிணிக்கப்பட்ட யானைகள் இழுக்க வேரோடு மரம் சாய்ந்தது என்பது வரலாறு. இது அக்காலத்தில் சூழ்ச்சி எனக் கருதப்பட்டது. நேரடியாக ஒன்றினைச் செய்வதை விட மறைவாகச் செய்வதே சூழ்ச்சியாகும். இந்தச் சூழ்ச்சியைத்தான் தலைவனுக்கு  இருவகை குறிமறுத்த தோழி தன்னுடைய செயலுக்கு உவமமாக்குகிறாள்.

    தலைவனுக்குப் பரிந்துரை நல்கும் தோழி

    ஒரு பாத்திரம் மற்றொரு பாத்திரத்தை எவ்வாறு அறிமுகம் செய்ய வேண்டும் என்னும் படைப்பு நுட்பத்தை இந்தப்பாட்டில் காணலாம். தலைவியைக் காணத் தலைவன் வருகிறான். அவள் மறுக்கிறாள். பரிந்துரைக்காகத் தோழியை நாடுகிறான் தலைவன். அவள் அவன் நிலையைச் சில குறுகிய சொற்களில் எடுத்துரைத்துத் தலைவியை இசையச் செய்வதாக அமைந்துள்ள பாட்டு இது.

    சேரி சேர மெல்ல வந்து வந்து
    அரிது வாய்விட்டு இனிய கூறி
    வைகல் தோறும் நிறம்பெயர்ந்து உறையும் அவன்
    பைதல் நோக்கம் நினையாய் தோழி!” (குறுந். 298)

    தலைவன் செவ்வி நோக்கிச் சேரி வருகிறான். மெல்ல மெல்ல வருகிறான். அரிதாகப் பேசுகிறான். அப்பேச்சு இனிமையாகவும் இருக்கிறது! ஒவ்வொரு நாளும் வருகிறான் அவன் பார்வையில் வெளிப்படும் பைதல் நோக்கம் மடலேறுதலைக் குறிக்கும் என அஞ்சுகிறேன். எனவே இசைக” என்பதாம்!

    இன்கடுங் கள்ளின் அகுதை தந்தை
    வெண்கடைச் சிறுகோல் அகவன் மகளிர்
    மடப்பிடிப் பரிசில் மானப்
    பிறிதொன்று குறித்தது அவன் நெடும்புற நிலையே!” (குறுந். 298)

    என்ற வரிகளிலும் நன்னன் வரலாற்றையே குறிப்பாகக் காட்டுகிறார் பரணர். அகுதை தந்தையிடம் அகவன் மகளிர் பிடிக்கூட்டங்களைப் பரிசிலாகப் பெற்று அவற்றை அப்படியே மாங்கனி உண்ட பெண்ணின் செயலுக்காகத் தண்டம் கட்டியவிடத்தும் அதனைக் கொள்ளானாய். நன்னனின் மனம் வேறொன்றை எண்ணியதைப் போல (‘பிறிதொன்று குறித்தது’ என்பது அந்தப் பெண்ணைக் கொல்வதை எண்ணியது போல) நம் தலைவனின் மனமும் வேறொன்றை எண்ணுகிறது என்று உவம வாயிலாகக் கூறுகிறார் பரணர்.

    தாய்க்கு மகள் இட்ட சாபம்!

    “தாயாகிய உறவினையும் தள்ளுபடி உறவாக்கும் தன்மை தமிழுக்கு உண்டு’ என்று பாடுவார் பாவேந்தர். ‘தயை மிகை உடையாள் அன்னை…….அயலவர் ஆகும் வண்ணம்” என்பது அவர் வாக்கு. பகற்குறி பிழைத்த தலைவன் இரவுக்குறி நாடி வருகிறான். அவ்வாறு அவன் வருகை தந்ததை அறிந்த செவிலி அன்றிலிருந்து உறக்கத்தை மறந்துத்  தலைவியைப் பாதுகாக்கிறாள். அவளுடைய செயல் பாதுகாப்பாக இருந்தாலும் தலைவிக்கு மனத்துன்பத்தைத் தருகிறது. அவள் துன்பம் கண்டு பொறாத தோழி தன் தாயைப் பழிக்கிறாள். (தோழியின் தாயே செவிலி),

    மண்ணிய சென்ற  ஒள் நுதல் அரிவை
    புனல்தகு பசுங்காய் தின்றதன் தப்பற்கு
    ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவணிறை
    பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்
    பெண்கொலை புரிந்த நன்னன் போல
    வரையா நிரையத்துச் செலீஇயரோ? அன்னை
    ஒருநாள் நகைமுகம் விருந்தினன் வந்தெனப்
    பகைமுக ஊரின் துஞ்சலோ இலளே” (குறுந். 292)

    பகைவரால் முற்றுகையிடப்பட்ட ஊரில் உள்ளவர் உறக்கம் மறப்பதைப் போலத் தாய் உறக்கம் துறந்து அவளைக் காக்கிறாளாம். அதனால் “பெண்கொலை புரிந்த நன்னன் போல வரையா நிரையத்துச் செலீஇயரோ?” என்று தாய்க்கே சாபம் இடுகிறாள் தோழி.  பெண்கொலை புரிந்த நன்னன் செயலைப் பலபட விரித்துரைக்கும் பரணர் இந்தப் பாட்டில் பெண்ணுண்ட மாங்கனிக்குப் பதிலாக எண்பத்தோரு களிறுகளையும் பொன்னால் செய்யப்பட்ட பாவையையும் கொடுத்தும் அமைதியடையாத அவனுடைய கொடூரப் பண்பைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

    வம்பு பேசவா வள்ளைப் பாட்டு?

    கற்பியல் ஒழுக்கத்தில் தலைவன் பரத்தையரிடம் சென்று வர, வாயில் மறுத்த தலைவி பரத்தையர் செவியுறும்படி அவர்களைத் தூற்றுகிறாள். தன் கணவனைப் பிரிந்த வேதனை அவளுக்கு. அதனால் பாடுகிறாள். அவள் பாட்டின் பொருள் அவர்களை உறுத்த, அவர்கள் அத்தனைப்பேரும் தமது வள்ளைப்பாட்டில் வைத்துத் தலைவியை ஏசுகிறார்கள். (வள்ளைப்பாட்டு – உரலில் இட்ட பொருளைத் தூய்மை செய்ய உலக்கையை ஏந்தி மகளிர் குற்றும் போது பாடுகிற பாட்டு) அவர்கள் ஏசுவதைக் கேட்ட தோழி “தலைவி ஏசப்படுவதற்குக் காரணமான தலைவனுக்கு வாயில் மறுக்கிறாள்.

    பாவடி உரல பகுவாய் வள்ளை
    ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப!
    அழிவது எவன் கொல்? இப்பேதை ஊர்க்கே
    பெரும்பூண் பொறையன் பேஎம்முதிர் கொல்லிக்
    கருங்கண் தெய்வம் குடவரை எழுதிய
    நல்லியற் பாவை அன்ன இம்
    மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே!” (குறுந். 89)

    இந்தப் பாட்டில் வரலாற்றுப் பதிவு என்பது அக்கால மன்னர்களின் ஆளுகைப்பரப்பையும் சமய நம்பிக்கைகளையும் காட்டுவதாக அமைந்திருக்கிறது. தலைவியை ‘மெல்லியற் குறுமகள்’ எனப் பண்பை முன்னிறுத்தி அடையாளப்படுத்திய தலைவிக்குக் கொல்லிப் பாவையை உவமமாகச் சொல்கிறாள் தோழி. ஆரவாரத்துடன் வள்ளைப்பாட்டில் தலைவியைப் பரத்தையர்கள் ஏசுவதை ‘நுவறல்’ என்றும், தன் தலைவனின் பெருமைகளை மட்டும் அமைதியாகப் பாடுவதைப் ‘பாடினள்’ என்றும் கூறும் நுண்ணியம் உணர்க.  அவ்வாறு பாடும் தலைவிக்குச் சேரனின் ஆளுகைக்கு உட்பட்ட கொல்லிமலையின் மேற்குப் பக்கத்தில் தெய்வத்தால் வரையப்பட்ட பாவையை உவமமாகக் கூறுகிறாள் தோழி!. “பொறையன் உரைசால் உயர்வரைக் கொல்லிக் குடவயின்………தெய்வம் எழுதிய வினைமாண் பாவை அன்னோள்” (185) என்னும் நற்றிணையிலும் இவ்வாறே தலைவி உவமிக்கப்பட்டுள்ளாள் என்பதையும் அறியலாம்.

    கீழ் கடல் நாரையும் மேல் கடல் மீனும்

    தலைவியைக் கண்டுவிடலாம் என்னும் நம்பிக்கையோடு செல்கிற தலைவன்  அல்ல குறிப்பட்டு மீள, ஏமாற்றமடைந்த தனது நெஞ்சிற்குத் தானே சொல்லிக் கொண்ட ஆறுதல் பாட்டு இது. இந்தப் பாட்டில் ‘கிட்டாதாயின வெட்டென மற’ என்னும் உலகியலுக்கு மாறுபட்டு அடைய முடியாத தொலைவில் இருக்கும் அரியளாகிய தலைவியை அடைய எண்ணுவது பேதைமையன்றோ எனத் தன் செயலுக்குத் தன் நெஞ்சையே இடமாக்கி உரைத்தான் என்பதாம். ‘அடைய முடியாத தொலைவு’க்கும் ‘அரியள்’ என்பதற்கும் பரணர் கூறுகிற உவமம்  கீழ் கடல் நாரை மேல் கடல் மீனுக்கு அணவந்தது போல என்பதாம். அணவந்தது — இயலாத ஒன்றிற்கு ஏங்கி நிற்பது.

    குணகடல்  திரையது பறைதபு நாரை
    திண்தேர் பொறையன் தொண்டி முன்துறை
    அயிரை ஆர் இரைக்கு அணந்தாங்குச்
    சேயள் அரியோள் படர்தி!
    நோயை நெஞ்சே நோய்பா லோயே!(குறுந். 128)

    இருதிசைக் கடலும் நாரையும் மீனும் பாட்டில் இடம்பெற்றாலும் அயிரை மீனாகிய இரை வாழ்கிற கடல் ”திண்தேர் பொறையன் தொண்டி முன்துறை” என இடம் சுட்டுவதில் அவருடைய வரலாற்றுப் புலமையை அறிந்து கொள்ள முடிகிறது. சேரனைப் பற்றிய இந்தக் குறிப்பு அவன் திண்தேர் உடையவன் என்பதும் ‘தொண்டி முன்துறை அவன் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது’ என்பதும் உணர்த்தி நின்றது.

    அழிந்தது ஆர்க்காட்டு அழகு!

    இந்தக் கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டதொரு கட்டுரையில் தலைவியின் அழகுக்கு நகரங்கள் ஒன்றாகவோ பலவாகத் தொகுத்தோ உவமிக்கப்படுவது ஆராயப்பட்டுள்ளது. அந்த வகையில் பரத்தையர் மாட்டுச் சென்று பழக்கமான தலைவன், தலைவி வழக்கம் போல் தன்னை ஏற்றுக் கொள்வாள் என்னும் நம்பிக்கையில் வர, அவனுக்கு வாயில் மறுத்த தோழி அவனை நோக்கிக் கூறுகிறாள் அலர் தூற்றுவது உலகியல் வைத்துச் செய்யப்படும் புலனெறி வழக்கு. ‘உன்னையும் என்னையும் வைத்து ஊரு சனம் கும்மியடிக்குது’ என்பார் வைரமுத்து. “உன்னை எண்ணி மூச்சிருக்குது! உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது!’ என்பார் வாலி. இது புலனெறி வழக்கு. பிறர்பழித் தூற்றுவது உலகியல்.! தூற்றுவதைக் கும்மியடிப்பது என்பது இலக்கணை.

    வாரல் எம்சேரி தாரல் நின் தாரே!
    அலரா கின்றால் பெரும!

    ‘எம் சேரிக்கு வராதே! நின் மாலை தராதே! ஊர்மக்கள் அவள் நிலைகண்டு தூற்றும் அலரே காரணம்’ என்பதுதான் தோழிக் கூற்று. எதனால் என்பதற்கான காரணத்தைக்,

    காவிரிப்
    பலராடு பெருந்துறை மருதொடு பிணித்த
    ஏந்துகோட்டு யானைச் சேந்தன் தந்தை
    அரியல் அம் புகவின் அந்தோட்டு வேட்டை
    நிரைய ஒள்வாள் இளைஞர் பெருமகன்
    அழிசி ஆர்க்காட்டு அன்ன  இவள்
    பழிதீர் மாணலம் தொலைதல் கண்டே!” (குறுந். 258)

    என்னும் வரிகளில் பரணர் சுட்டுகிறார். சேந்தனின் தந்தையும் ஒள்வாள் இளைஞர் பெருமகனுமாகிய அழிசியின் ஆர்க்காடு போல் இருந்த அவளின் பழிதீர் அழகு இன்று பாழாய்ப் போனது பற்றிக் குறிப்பிடுகிறார்.

    ஆர்ப்பினை வென்ற அலர்!

    கற்புமணம் உள்ளாது களவொழுக்கத்தை நீட்டிக்கிறான் தலைவன். அலர் பெரிதாகியதால் அல்லலுறும் தலைவியின் நிலையை அவனுக்கு உணர்த்த வேண்டிய நிலை தோழிக்கு! அப்படி உணர்த்துகிற போது இரண்டு செய்திகளைப் பதிவு செய்கிறாள். ஒன்று. தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் முயங்கிய நாள் சில! ஊரார் அலர் தூற்றுகிற காலம் பல! இரண்டு, யாருக்கும் தெரியாமல் குறுகிய காலமே முயக்கம்!  உலகமே அறிந்து கொள்ளும் அளவுக்கு அலர்!

    மயங்கு மலர்க் கோதை குழைய மகிழ்நன்
    முயங்கிய நாள் தவச் சிலவே! அலரே
    கூகைக் கோழி வாகைப் பறந்தலைப்
    பசும்பூண் பாண்டியன்  வினைவல் அதிகன்
    களிறொடு பட்ட ஞான்றை
    ளிறுவாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே (குறுந். 393)

    தலைவனுக்கும் தலைவிக்குமான உறவு பற்றிய பொதுவெளிப் பேச்சுக்கள் அலர் எனப்படும். சிலர் பேசினால் அம்பல்! பலர் பேசினால் அலர். தெரு முணுமுணுப்பு அம்பல்! ஊரின் பேரிரைச்சல் அலர்!. அம்பலின் பரப்பளவு குறைவு. அலரின் பரப்பளவு அதிகம். இந்தப் பரப்பளவை அவ்விருவரும் கூடிய கூட்டத்தின் கால அளவோடு பொருத்திப் பார்க்கிறாள் தோழி!  இரண்டுக்குமான முரணை எண்ணி மருகி நிற்கிறாள். தீராப்பகை கொண்ட பாண்டியருக்கும் கொங்கருக்கும் இடையே நடைபெற்ற போர் ஒன்றில் வினைவலி அதிகன் களிறொடும் கொல்லப்படுகிறான். அவன் வீழ்ச்சி கண்டு கொங்கர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறார்கள். அந்த ஆரவாரத்தைவிடக் களவொழுக்கம் பற்றிய அலர் மிக்குப் பரந்தது எனத் தோழி கூறுகிறாள். ஆர்ப்பினும் என்றால் ஆரவாரத்தினை விட என்பது பொருள். உவம உருபு செய்ய வேண்டிய பணியை இங்கே ஐந்தாம் வேற்றுமை உருபுகளில் ஒன்றான ‘இன்’ செய்கிறது. ‘ஆரவாரத்தைப்போல’ என்னும் ஒப்புப் பொருளினும் ‘ஆரவாரத்தினைவிட’ என்றும் கொள்ளலாம். இலக்கணம் கவிதைக்காக! பாட்டின் உயிர் ‘முயங்கிய நாள் தவச்சில! அலர் கொங்கர் ஆர்ப்பினும் பெரிது’ என்னும் ஒரு தொடரில் துடிப்பதைக் காணலாம்! களநிகழ்வு தும்பை என்னும் புறத்திணையின் பாற்பட்டது. களிறொடு பட்டான் என்பதால் அது ‘யானைமறம்’ என்னும் துறையினைச் சாரும். அப்புறத்துறை நிகழ்வை அகத்திணையின் துறையொன்றிற்கு உவமமாக்கினார் பரணர்.

    மேற்சொன்ன பாட்டில் தலைவன் தலைவியோடு முயங்கிய நாள் சிலவாகவும் அவ்வாறு இருந்தது பற்றிய ஊரார் அலர் பெரிதாகவும் இருந்தமைக்குப் போர்க்களத்துக் கொங்கர் செய்த ஆர்ப்பினை உவமமாகச் சொன்ன பரணர் பின்வரும் பாட்டில் தலைவன் வருவதாகச் சொன்ன நாளின் எண்ணிக்கை சிறிதாகவும் அலரின் பரிமாணம் மிக்கிருப்பதாகவும் கூறுகிறார்.

    சிறுவீ ஞாழல் வேரளைப் பள்ளி
    அலவன் சிறுமனை சிதையப் புணரி
    குணில்வாய் முரசின் இயங்குந் துறைவன்
    நல்கிய நாள் தவச்சிலவே! அலரே
    வில் கெழு தானை விச்சியர் பெருமகன்
    வேந்தரொடு பொருத ஞான்றைப் பாணர்
    புலிநோக்கு உறழ் நிலை கண்ட
    கலிகெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே! (குறுந். 328)

    என்ற பாட்டில் ‘துறைவன் நல்கிய நாள் தவச்சிலவே’ என்னும் அகத்திணைத் தொடரும் ‘அலரே கலிகெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே!’ என்னுந் தொடரும் நோக்கத்தக்கது.  விச்சியர் பெருமகன் வேந்தரோடு பொருதமை கண்ட குறும்பர்கள் அவ்வேந்தர்க்கு அழிவு வந்தமையான் அகமகிழ்ந்து ஆரவாரம் செய்தனர் என்ற வரலாற்றுச் செய்தியை அதாவது புறத்திணை வாகைச் செய்தியை அகத்திணை அலருக்கு உவமமாக்கியிருக்கிறார் பரணர் என்பதாம்.

    நிறைவுரை

    தொல்காப்பியத்தின் உவம மரபு தனித்தன்மை மிக்கது. பொருள் புலப்பாட்டுக் கருவியாகவே உவமம் செயல்படும். செயல்பட வேண்டும். வினை, பயன், மெய், உரு என்னும் நான்கினுள் பரணர் கூறும் உவமம் எதனுள் அடங்கும் என்பது சிந்திக்க வேண்டிய பொருளாகியிருக்கிறது. ‘அலர்’ என்பதும் ‘ஆர்ப்பு’ என்பதும் தொழிற்பெயர்கள். அவ்விரண்டும் தாமாகச் செயல்படாது. பரணர் அவற்றைத் தான் பொருளாகவும் உவமமாகவும் கூறியிருப்பதோடு போர்க்கள ஆரவாரத்தையே உவமமாக்கியிருக்கிறார். மேலும் அகத்திணை மரபுப்படி முதற்பொருளை ஒட்டியே (உள்ளுறை, இறைச்சி என்னும் நுண்ணியங்களுக்காக) உவமம் அமைதல் வேண்டும் என்பதே விதியாயிருக்க இதற்கு மாறுபட்டுப் புறத்திணைச் செய்திகளை உவமமாக்குவதும் சிந்தித்தற்குரியது. இவை பற்றியெல்லாம் எதிர்வரும் கட்டுரைகளிலும் ஆராயப்படும்!.

    (தொடரும்…)

    Share
  • இங்கிலாந்தில் கர்பா நடனம்

    இங்கிலாந்தில் கர்பா நடனம்

    கர்பா நடனம் என்பது, குஜராத்தைத் தாயகமாகக் கொண்டது. மகாசக்தியின் முன்னால் பக்தியுடன் ஆடக் கூடியது. இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கானோர் இணைந்து ஆடிய கர்பா நடனத்தைக் கண்டு களியுங்கள்.

    படப்பதிவு – நவ்யா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இந்தியாவைச் சீண்டுகிறது தமிழரசுக் கட்சி

    இந்தியாவைச் சீண்டுகிறது தமிழரசுக் கட்சி

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    சிவ சேனை
    புரட்டாதி 31, 2052 (17.10.2021)

    வடகடல் என்கின்ற பாக்குநீரிணை. தென்கடல் என்கின்ற மன்னார் வளைகுடா.

    இரண்டையும் சரிசமமாகக் கிழித்துக்கொண்டு நடுவே ஓடுவதே கற்பனையான இலங்கை இந்திய அனைத்துலக எல்லைக்கோடு. 1976உக்கு முன்னர் இத்தைகைய எல்லைக் கோடு இருந்ததே இல்லை.

    தமிழக மீனவர்கள் வடகடலில் எல்லைக் கோட்டைத் தாண்டி வருகிறார்கள். உலகில் இல்லாத வியப்பு நிகழ்வா?

    உலகெங்கும் பல்வேறு இடங்களில் இத்தகைய உள்ளகக் கடல்கள் உள்ளன. அவற்றை ஊடறுத்துச் செல்லும் அனைத்துலக எல்லைக் கோடுகளும் உள்ளன.

    இத்தகைய உள்ளகக் கடல் எல்லைகள் அனைத்துலக உடன்பாடுகளுள் அடங்கா. சிறப்பாகச் சி ஆண்டுகளுக்கு முந்தைய கராக்காசு (Caracas Law of the Sea Conference) அனைத்துலக கடல்வள உடன்பாட்டுள் வடகடல் அடங்காது. தென் கடலின் தெற்குப்பகுதி வரக்கூடும்.

    இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் புகுந்து மீன் பிடிப்பது வழமை.

    இந்திய கன்னியாகுமரிக்குத் தெற்கே உள்ள குமரிப் பரப்பில் (Wadge bank) இலங்கை மீனவர்கள் வளங்களை அள்ளுவதைப் பார்த்துக் கொண்டு தமிழகக் குமரி மாவட்ட மீனவர்கள் கண்டும் காணாது விடுகிறார்கள்.

    திருகோணமலையில் நங்கூரமிட்டு பல நாள்,மீன் பிடி வள்ள (multi day fishing vessels) மீனவர் கிழக்கே அந்தமான் தீவுகள் தொடக்கம் மேற்கே விசாகப்பட்டினம் வரை சென்று மீன்பிடித்து வருகின்றனர். என்றாலும் இந்தியக் கடலோர காவல்படை கண்டு கொள்வதே இல்லை.

    தென் கடலில் தூத்துக்குடி வரை கற்பிட்டி மீனவர்கள் சென்றுவருவது வழமை. எப்போதோ ஒருமுறை இந்தியக் கடலோர காவல்படை அவர்களைத் தளையிட்டு மதுரையில் நீதிமன்றம் முன்பு நிறுத்தம்.

    தனுக்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே 22 கிலோ மீட்டர் தொலைவு. எந்திர வள்ளம் ஒன்றை முடுக்கிய அரை மணி நேரத்தில் தலைமன்னார் மீனவர் தனுஷ்கோடிக் கடலுள் சென்று விடுவார். தனுக்கோடி மீனவர் தலைமன்னார்க் கடலுள் சென்று விடுவார்.  மாதகல் – கோடிக்கரைக் கடல் தொலைவும் அத்தகையதே.

    15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மீனவர் எல்லை தாண்டி வந்ததாலேயே, உயிரைக் கையில் பிடித்தவாறு அவர்கள் வந்ததாலேயே, போராட்டமே தொடர்ந்தது. போராட்ட காலத்தில் வடக்கின் மீது திணித்த பொருளாதாரத் தடைகளை முறியடிக்க உதவியவர் தமிழக மீனவரே.

    நல்லாட்சிக் காலத்தில் எல்லை தாண்டும் இந்திய மீனவர்களைக் கடுமையாக தண்டிக்கும் சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சுமந்திரன்  21 ஏப்பிரல் 2015இல் முன்மொழிந்திருந்தார். Indian trawlers have continued to enter Sri Lankan waters and exploit our resources. …………..Foreign fishermen fishing in our water has caused great distress to our fishermen especially those living in the north”, M.A. Sumanthiran stated regarding the issue…………….. The offender will be sentenced to a two-year prison term and will have to pay a fine of Rs. 50,000.” இரண்டாவது வாசிப்பு வரை அச்சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் வந்தது.

    அந்த சட்ட மூல வரிகளைப் படித்ததும் நான் அதிர்ந்தேன. தமிழர் ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தில் தொப்புள்கொடி உறவுகளைக்கு அவர்களைக் கடுமையாகத் தண்டிக்கும் சட்டமூலத்தைக் கொண்டு வருகிறாரே என நான் வருந்தினேன்.

    என் அருமைத் தம்பி சித்தார்த்தனிடம் சொன்னேன். சுமந்திரனைக் கட்டுப்படுத்த முடியாதே எனச் சித்தார்த்தன் என்னிடம் சொன்னார்.

    என் அருமைத் தம்பி மாவை சேனாதிராசாவிடம் சொன்னேன்  அவ்வாறான ஒரு சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் வந்ததா என மாவை சேனாதிராசா என்னிடம் கேட்டார். நான் சட்ட மூலத்தின் வரிகளைக் காட்டினேன். தமிழரின் அரசியல் எதிர்காலத்துக்குத் தீங்காக அமையுமே என்றேன்.

    மாவை சேனாதிராசா நடவடிக்கை எடுத்தார் போலும்! நாடாளுமன்றத்தில் பின்னர் அச்சட்டமூலத்தைச் சுமந்திரன் முன்னெடுக்கவில்லை.

    அதே சட்டமூலத்தைப் பிரதமர் இரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து சட்டமாக்கினார்.

    எல்லை தாண்டும் இந்திய மீனவரைச் சுட்டுக் கொல்வோம் என்றார், தமிழரசின் ஆதரவுடன் நல்லாட்சியாளர் பிரதமர் இரணில்.

    அச்சட்டத்தையே அமைச்சர் இடக்ளசு தேவானந்தா கைவிட்டுள்ளார் எனச் சுமந்திரன் முறையிடுகிறார்.

    எந்த மீனவர் எம்மைக் காத்தார்களோ, எந்த நாடு எம்மவர் மூன்று இலட்சம் பேருக்குப் புகலிடம் கொடுத்துள்ளதோ, அந்த மீனவருக்கு அந்த நாட்டுக்கு எதிராகப் போராட்டக் களத்தில் தமிழரசுக் கட்சி!

    எந்த முகத்தோடு பாரதம் இலங்கைத் தமிழருக்கு உதவவேண்டும் எனத் தமிழரசுக் கட்சியினர் இந்தியாவைக் கேட்பார்கள்? இந்தியாவைச் சீண்டியவாறே, இந்தியாவிடம் அரசியல் ஆதரவு கேட்கிறதே தமிழரசுக் கட்சி.

    சுமந்திரனை அறிவோம். இந்தியாவுக்கு எதிரானவர் என்பதை அறிவோம். தில்லியில் என்னிடமும் மட்டக்களப்பு யோகேசுவரனிடமும் கூறியவர் தமிழரல்லாத பாரதீய சனதாக் கட்சி மேலிடத்தார்.

    சுமந்திரனை ஏன் இன்னமும் வைத்திருக்கிரீற்கள்? தமிழரசுக் கட்சி சார்பில் சென்னையில் தமிழக பாரதீய சனதாக் கட்சியைச் சந்தித்த சத்தியலிங்கத்திடமும் குகதாசனிடமும் கேட்டோர், தமிழக பாரதீய சனதாக் கட்சித் தலைவர்கள்.

    மாவை சேனாதிராசாவையும் சிறீதரனையும் சாணக்கியனையும் அந்தப் பட்டியலில் இந்திய அரசியல்வாதிகளும் ஆட்சியாளரும் இன்று முதலாகச் சேர்த்துக் கொள்வர். முதுகில் குத்துவதும் அதே நேரத்தில் ஆதரவு கேட்பதும் ஈழத் தமிழரின் இயல்பு என இந்திய அரசியலாரும் ஆட்சியாளரும் என்னிடம் பலமுறை கூறுவர்.

    Share
  • 2021 ஆண்டில் 20 செல்வீக நாடுகளில் கரிவாயு வீச்சு மிகுதி

    2021 ஆண்டில் 20 செல்வீக நாடுகளில் கரிவாயு வீச்சு மிகுதி

    A coal-fired power plant in China’s Inner Mongolia. Carbon emissions are rebounding strongly and are rising across the world’s 20 richest nations, according to a new study.

    சி. ஜெயபாரதன், B.E.(Hons). P.Eng. [Nuclear],Canada

    Ontario's Weather Is Turning Chaotic RN & Cities Are Being Warned Of Tornado Risks

    © Provided by Narcity Ontario’s Weather Is Turning Chaotic RN & Cities Are Being Warned Of Tornado Risks

    Environment Canada has just issued severe thunderstorm watches across parts of the province and Ontario’s weather is about to turn chaotic.

    What’s abundantly clear is that the United States of America is the all-time biggest, baddest greenhouse gas emitter on the planet.

    உலகிலே மிகப்பெரும் சூழ்வெளி விஷ வாயு வெளிவீச்சு வல்லமை நாடு

    அமெரிக்கா, அமெரிக்கா, அமெரிக்கா அசுர வல்லமை நாடு. கியோடோ, கோபன்ஹேகன், பாரிஸ் போன்ற உலகச் சூழ்வெளி விஷ வாயுக்கள் குறைப்பு ஒப்பந்தங்களில் உடன்படாத ஒரு பெரும் வல்லரசு நாடு அமெரிக்காதான். 2021 ஆண்டு கரிவாயு வீச்சு அளவை ஒப்பிடும்போது உலகச் செல்வீக நாடுகளில் 20 இல் கரிவாயுக் கொள்ளளவு விரைவாக மிகுந்துள்ளது என்று “காலநிலைத் தெளிவு அறிக்கை” தயாரிப்பாளர் [Climate Transparency Report] கூறுகிறார். இன்னும் இரண்டு வாரத்தில் கிளாஸ்கோ, ஸ்காட்லாந்தில் COP26 காலநிலைக் கூட்டிணைப்பு உலகப் பேரவை கூடிப் பேசப் போகிறது. .

    மேலும் தெளிவு அறிக்கை கூறுவது.

    1. G20 குழுமை நாடுகளால் இந்த 2021 ஆண்டில் கரிவாயு அளவு 4% ஏறுகிறது.;
    2. 2020 கொரோனா பேரிடரால் G20 குழுமை நாடுகளில் கரிவாயு சேர்க்கை 6% குறைந்தது.
    3. சைனா, இந்தியா, அர்ஜென்டைனா நாடுகளில் கரிவாயு வீச்சு 2019 ஆண்டை விட மிகையானது.
    4. இயற்கை வாயு, பெட்ரோலியம் எரிசக்தி தொடர்ப் பயன்பாடு சூழ்வெளி உஷ்ணக் கட்டுப்பாடை தடுத்தது.
    5. கடல்நீர் உஷ்ணம் தற்போது 1.1C ஆக உள்ளது. அது 1.5.C ஆக ஏறி விடாமல் தடுப்பு முறைகள் கையாள்வது.
    6. . G20 குழு நாடுகள்75% சுழ்வெளி விஷ வாயுக்கள் எழுச்சிக்குப் பங்கு ஏற்புக்கு துணை செய்கின்றன.
    7. G20 குழு நாடுகளில் நிலக்கரிப் பயன்பாடுகளால் கரிவாயு எழுச்சி இந்த ஆண்டு 5%
    8. சைனா நிலக்கரி எரிசக்தி பயன்படுத்தி கரிவாயு எழுச்சி 60% உலகில் இவ்வாண்டு மிகையாகி விட்டது.
    9. அமெரிக்கா, இந்தியாவில் இவ்வாண்டு நிலக்கரிப் பயன்பாடு அதிகரித்துள்ளது.
    10. இவ்வாண்டில் [2021] நிலக்கரி விலை 200% மிகையாகி மின்வெட்டு நிலை ஏற்பட்டுள்ளது.
    11. G20 குழு நாடுகளில் எரிவாயு பயன்பாடு 12% [2015-2020] ஆண்டுகளில்.

    ============================================================

    That’s true, despite recent gains in energy efficiency and cuts in emissions. These relatively small steps now cannot offset more than a century of reckless emissions that have built up in the atmosphere. Much more drastic steps are now needed to slow climate change. And as the top cumulative emitter, the US bears a greater imperative for curbing its carbon dioxide output and a greater moral responsibility for the impacts of global warming.

    Yet the US is now the only country aiming to withdraw from the Paris climate agreement. China now emits more than the US, and India’s emissions are rapidly rising. But these countries have a much smaller share of cumulative global emissions. Their populations are also much bigger than the US and other wealthier countries, so the amount that India and China emit per person is vastly smaller than the United States or the United Kingdom.

    Climate change: animation shows US leading the world in carbon emissions -  VoxGlobal CO2 Emissions by Country 2008 The global emissions of CO2 for... |  Download Scientific Diagram

    Global CO2 Emissions by Country 2008 The global emissions of CO2 for time 1900-2008 from fossil fuels and industrial processes are shown in Figure 2.

    Global Greenhouse Gas Emissions Data | US EPAGlobal GHG emissions by gas: 65% is from carbon dioxide fossil fuel use and industrial processes. 11% is from carbon dioxide deforestation, decay of biomass, etc. 16% is from methane. 6% is from nitrous oxide and 2% is from fluorinated gases.

    • Carbon dioxide (CO2): Fossil fuel use is the primary source of CO2. CO2 can also be emitted from direct human-induced impacts on forestry and other land use, such as through deforestation, land clearing for agriculture, and degradation of soils. Likewise, land can also remove CO2 from the atmosphere through reforestation, improvement of soils, and other activities.
    • Methane (CH4): Agricultural activities, waste management, energy use, and biomass burning all contribute to CH4 emissions.
    • Nitrous oxide (N2O): Agricultural activities, such as fertilizer use, are the primary source of N2O emissions. Fossil fuel combustion also generates N2O.
    • Fluorinated gases (F-gases): Industrial processes, refrigeration, and the use of a variety of consumer products contribute to emissions of F-gases, which include hydrofluorocarbons (HFCs), perfluorocarbons (PFCs), and sulfur hexafluoride (SF6).

    Black carbon is a solid particle or aerosol, not a gas, but it also contributes to warming of the atmosphere. Learn more about black carbon and climate change on our Causes of Climate Change page.

    floodsFlooding has taken place in many parts of USA, UK, Germany & China across 2021

    Report highlights

    • Coal consumption is projected to rise by almost 5% in 2021, with this growth driven by China (accounting for 61% of the growth), the USA (18%) and India (17%)
    • The US (4.9 tCO2/capita) and Australia (4.1 tCO2/capita) have the highest building emissions per capita in the G20 (average is 1.4 tCO2/capita), reflecting the high share of fossil fuels, especially natural gas and oil, used for heat generation
    • Between 1999 and 2018 there have been nearly 500,000 fatalities and close to $3.5 trillion of economic costs due to climate impacts worldwide, with China, India, Japan, Germany, and the US being hit particularly hard in 2018
    • Across the G20, the current average market share of electric vehicles (EVs) in new car sales remains low at 3.2% (excluding the EU), with Germany, France, and the UK having the highest shares of EVs

    2px presentational grey line

    There are expectations that both India and China will submit new national plans before the meeting in Glasgow, which could give a significant boost to attempts to keep the 1.5C target in view.

    The G20 group will meet in Rome in the days leading up to COP26 and the UK minister who will lead the talks has in recent days urged the leaders of these countries to now step up.

    “It is leaders who made a promise to the world in Paris six years ago, and it is leaders that must honour it,” said Alok Sharma.

    “Responsibility rests with each and every country, and we must all play our part. Because on climate, the world will succeed, or fail, as one.”

    October 16th, 2021 [நீரகவாயு பயன்பாடு]

    Ignore the hydrogen market at your own peril.

    Haven’t heard of the hydrogen economy and all the new technologies being developed around it?

    That’s okay, you’re not alone.

    And it isn’t too late. In fact, now is the perfect time to gain exposure.

    But first, what exactly is “the hydrogen economy”?

    Simply put, the hydrogen economy is a collection of markets and technologies that surround the fast-growing hydrogen market.

    Between liquid hydrogen and hydrogen fuel cell airplanes and cars, hydrogen is quickly becoming the hottest source of clean energy investing.

    This is the optimal time for investors to make the most of their money.

    Because the various technologies are real and decisions are still being made, investors in the know have a chance to make gains of a lifetime.

    While lithium-ion batteries have been leading the way in clean energy technology advancements, hydrogen is about to take the spotlight.

    We’ve been following the developments in hydrogen and the various technologies surrounding it for years, all the while taking notes and researching.

    Our latest (free) report contains that research and some investment ideas for those looking to take advantage of this quickly growing economy.

    It’s called “The Hydrogen Economy 2.0,” and in it, we detail:

    • Various industries impacted by hydrogen tech
    • What is causing recent breakthroughs for the technology
    • Why hydrogen technology has infinite room to grow

    After reading our free report, you’ll know why we’re excited about the huge potential of hydrogen technology not only for investors, but for the world as a whole.

    This is not an opportunity you want to delay taking action on.

    ===================================================

    தகவல்

    1. https://thelogicalindian.com/environment/carbon-emissions-by-rich-country-31224

    2.https://secure.energyandcapital.com/206207?

    3. https://www.nytimes.com/2021/10/13/opinion/climate-change-imf-carbon.html?auth=login-google1tap&login=google1ta

    4. https://ca.movies.yahoo.com/climate-change-carbon-emissions-rich-040016912.html

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 5

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 5

    முனைவர் ச. சுப்பிரமணியன்

     ‘நீ’தான் கவிதை!
    (துரை. வசந்தராசனின் கவிதைகளில் உத்தியால் சிறக்கும் உள்ளடக்கம்)

    முன்னுரை

    காட்டு மூலிகைபோல் கண்டெடுக்க முடியாமல் ஓட்டைக் குடிசைகளில் உயிர்வாழும் நடைப்பிணங்கள்” என்னும் ஓர் வரி நா.காமராசன் எழுதிய ‘கறுப்புமலர்கள்’ என்ற நூலில் வரும். மலைவாழ் பனியர் குல மக்களின் அவலத்தைப் பாடிய அந்த வரிகளை நான் படிக்கிறபோது வெளி உலகத்துக்குத் தெரியாமல் இருக்கும் கவிதை வல்லாளர்கள் சிலர் என் நினைவுக்கு வருவார்கள். தமிழ்நாட்டில் மருந்துக்கடைகள்போல் கவிஞர் இலட்சக்கணக்கில் இருந்தாலும்  கவிதைகள் கோவாக்சின் மருந்துபோலக் குறைவாகத்தான் கிடைக்கின்றன என்பது புகார் இல்லாமலேயே புலப்பட்ட உண்மை. அந்தக் கோவாக்சின் துளிகளில் ஒரு துளியாக முகநூலில் தன் முகம் காட்டுபவர் தம்பி வசந்தராசன்!. ‘பண்ணைக் கவிக்கோ என எல்லார் எண்ணத்திலும் இனிப்பவர் அவர்.!   அமர்ந்து படிக்க வேண்டிய அன்னாரது கவிதைகளைப் பலரும் நடந்து கொண்டே படித்து வீடு வந்து சேருமுன் ‘விரலாலே’யே விமர்சனமும் செய்து முடித்துவிடுகிறார்கள். அது அவர்கள் உரிமை. கவிதை என்றால் செறிவு, அழகு, எளிமை, உறுதியான கட்டுமானம் என்பதை நன்கு புரிந்து வைத்திருக்கும் இந்த எழுபத்தாறு வயது முதியவன் காலங்கடந்து கண்டெடுத்த என் தம்பி வசந்தனின் கவிதைளைப் பல்லில்லாமலேயே படித்துச் சுவைக்கிறேன். சுவைத்ததைப் பந்தி வைக்கிறேன்.! இது எனக்குப் பிடித்த பந்தி! உங்களுக்கும் பிடித்தால் பெருமை எனக்கன்று, வசந்தனுக்கு! பந்தியில் பரிமாறியவன் மட்டுமே நான். நெஞ்சத்து மடப்பள்ளியில் சீர் அரிசியை கவிதைப் பிரசாதமாக்கியவன் அவன் என்பதால்!

    கவிதைக் கட்டுமானம் என்றால் என்ன?

    வீடுகள் பலவகையான கட்டுமானங்களைக் கொண்டவை. ஒவ்வொரு வீட்டின் கட்டுமானமும் தனித்தன்மை உடையன. குடிசைக்கு ஒரு கட்டுமானம். தொகுப்பு வீட்டுக்கு ஒரு கட்டுமானம். தேவைக்கு ஒரு கட்டுமானம் அடக்கத்திற்கு ஒரு கட்டுமானம். ஆடம்பரத்திற்கு ஒரு கட்டுமானம். அவரவர் பொருளாதார வலிமைக்கு ஏற்பவும் இக்கட்டுமானம் மாறுபடுவதுண்டு. வாடகைக்கு விடுகிற வீடுகள் என்றால் அந்தக் கட்டுமானமே தனி!. புதுக்கவிதை உள்ளிட்ட அத்தனைக் கவிதைகளுக்கும் இது பொருந்தும். வீடுகளில் ஒரு கட்டுமானத்தை மற்றொரு கட்டுமானத்தோடு ஒப்பிடுவது அறியாமை. காரணம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வலுவான  பொருளாதார மற்றும் ரசனையாகிய காரணிகளின் பின்னால் வடிவமைக்கப்படுகிறது. கவிதையிலும் ஒன்றினை மற்றொன்றோடு ஒபபிட்டு மதிப்பிடுவது நெறியன்று. சங்கச் சான்றோர்கள் அவர்தம்  வெளிப்பாட்டுக்குப் பெரும்பாலும் ஆசிரியப்பாவையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். காரணம் பாடுபொருள் அகம் புறம் என்னும் இரண்டு மட்டுமே ஆனதால். இளங்கோ தன் கதைக்குத் தேர்ந்தேடுத்துக் கொண்ட வடிவம் ஆசிரியப்பா. அதன் வடிவம் பல இடங்களில் கற்பாருக்குச் சோர்வு தரும் எனக்கருதியோ என்னவோ வரிப்பாடல்களையும் குரவைப் பாடல்களையும் இணைத்துக் கொள்கிறார். இந்த நெறியைப் பாஞ்சாலி சபதத்தில் மகாகவி பாரதியும் வீரத்தாய் காவியத்தில் பாவேந்தரும் பின்பற்றுகின்றனர் பொருண்மைக்கேற்ற வடிவம் என்பதுதான் தமழ்க்கவிதைகளின் வடிவக்கோட்பாடு. இதில் இன்னொரு நுண்ணியமும் இருக்கிறது. அண்ணாமலை ரெட்டியார் எழுதித் தற்போது அச்சில் வந்திருக்கும் காவடிச்சிந்து இருபத்து மூன்று பாடல்களும் இருபத்து மூன்று தனித்தனிச் சந்தத்தைத் தமக்கென கொண்டவை. எழுத்து வடிவம் சிந்தாக இருந்தாலும் இசைவடிவம் இன்னும் நுண்ணியமாகிறது என்பதை அறிந்து கொள்ளுதல் வேண்டும். கம்பராமாயணத்தை ஆசிரியப்பாவில் எழுதியிருந்தாலோ சீவகசிந்தாமணியை வெண்பாவில் எழுதியிருந்தாலோ அவ்விலக்கியங்கள் இத்தகைய வெற்றியைப் பெற்றிருக்க முடியாது. இந்தப் பின்புலத்தில் தம்பி வசந்தராசன் எழுதியிருக்கும் ஒரு கவிதையின் உள்ளடக்கமும் கட்டுமானமும் எப்படி இரண்டறக் கலந்து நிற்கிறது என்பதை இக்கட்டுரை சுருக்கமாக ஆராய முனைகிறது.

    முன்னிலைப் பரவல் என்றால் என்ன?

    இறைவனையோ பாட்டுடைத் தலைவரையோ, தலைவியையோ இயற்கைப் பொருள்களையோ படர்க்கையில் வைத்துப் பாடுவதே பெருவழக்கு.  சில நேர்வுகளில் வெளிப்பாட்டின் வேகம் குறைந்துவிடுகிறது என்றோ, உள்ளத்துக் கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் சரியான முறையில் படர்க்கை நிலை வெளிப்பாட்டில் முழுமையாக கொண்டுவரவியலவில்லை என்று நினைத்தாலோ படைப்பாளனின் எண்ணவோட்டத்தினாலோ அவறறையெல்லாம் முன்னிலையிலேயே வைததுப் பாடி விடுவது என்பது  ஓர் இலக்கிய வெளிப்பாடடு மரபு. அல்லது இலக்கிய வெளிப்பாட்டு உத்தி.

    கவிதைகள் சிறப்பது உத்திகளால்.

    முல்லைக்குத் தேரளித்த பாரியை இப்படிப் பாடுகிறார் புலவர் ஒருவர்.

    “பூத்தலை அறாஅப் புனைக்கொடி முல்லை
    நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்
    கறங்குமணி நெடுந்தேர் கொள்கென கொடுத்த
    பரந்தோங்கு சிறப்பிற் பாரி மகளிர்”

    என்னும் வரிகளில் முல்லையின் பாட இயலாமை  படர்க்கையில் பாடப்பட்டிருப்பது காண்க.  பாடுபவர்க்கே பரிசளித்துப் பழக்கப்பட்ட மரபில் பாடுதற்கு நாக்கில்லா முல்லைக்குத் தேர்கொடுத்ததே வள்ளன்மைக்குப் பெருமை என்பதுதான் பாட்டின் சாரம். இன்னொரு புலவர் பாடுகிறார். ‘கொய்வார் இன்றி முல்லை வாடுகிறது’ என்பதைக் கருத்திற் கொண்டு அதனை முன்னிலையாக்கிப் பாடுகிறார்

    “இளையோர் கொய்யார்! வளையோர் சூடார்
    நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கி
    பாணன் சூடான், பாணினி அணியாள்.
    வல்வேல் சாத்தன் மாயந்த பின்றை
    முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே!”

    “முல்லையே நீ இப்போது பூத்து என்ன பயன்? வலிமை வாய்ந்த வேலையுடைய சாத்தன் மறைந்து போனான். அதனால் அமங்கலம் நிலவுகிறது நாடடில்! உன்னை இளையவர்கள பறிக்க மாட்டார்கள். வளைசூடிய இளம்பெண்களும் அணிய மாட்;டார்கள். யாழின் வளைவுகொண்டு ஒருபகுதியால் உனனை பாணனும் கொய்ய மாடடான். அதனால் பாணினியும் அணியமாட்டாள்! இந்த நிலையில் ஒல்லையூர் நாட்டில் நீ பூத்தனையோ? எனபதுதான் உள்ளடக்கம். உள்ளத்து எண்ணங்களைப் படர்க்கையில் சொன்னவர், முல்லையை நோக்கிய வினாவையும் ‘முல்லையும் பூத்ததே! எனப் படர்க்கையில் சொல்லியிருக்கலாம். அவர் அதனை விரும்பாமல் ‘முல்லையும் பூத்தியோ?’ என முன்னிலையில் விளித்துச் சொன்னது காண்க. முன்னிலைப் பரவலாகிய இந்த நெறி காலங்காலமாகத் தமிழ் இலக்கியப் படைப்புலகில் அதாவது கவிதையுலகில் படிந்துவருகிறது..

    மெல்லிசைப் பாடல்களில் முன்னிலை உத்தி!

    “நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ என்பதும் ஒரு முன்னிலைப் பரவல். ‘நீயல்லால் தெய்வமில்லை’ என்பதும் ஒரு முன்னிலைப் பரவல். ‘கற்பனை எனறாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் என்பதும் ஒரு முன்னிலைப் பரவலே! இன்னொரு வகையான முன்னிலைப் பரவல் இப்படி அமைந்திருப்பதை அனைவரும் அறிந்திருக்கலாம். ‘ காலத்தை வென்றவன் நீ! காவியமானவன் நீ! வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன் வெற்றித்திருமகன் நீ’ “அன்புத் தெய்வம் நீ எங்கள் அன்னைவடிவம் நீ ….காமதேனு கற்பகம் நீயே! கோதையர் வணங்கும் குலமகள் நீயே!” ‘காலையும் நீயே மாலையும் நீயே! காற்றும் நீயே! கடலும் நீயே! ஆலய மணிவாய் ஓசையும் நீயே! அருள் வடிவாகும் தெய்வமும் நீயே!  “அமிழ்தாய் ஆழ்ந்த விதானம் நீ! அழகே நாயகி! விஷ்ணுவின் மோகினி அண்ட சராசர நிழல் நீ! வைகுண்ட நிவாஸினி என் தமிழ் நீ! என்பன போன்ற மெல்லிசைப் பாடல்களிலும் ‘நீ’ உததியால் பாடல்கள் சிறந்தன என்பது வரலாறு.

    புறத்திணையுள்  பாடாண் திணை

    தொல்காப்பியப் புறத்திணை பெரும்பாலும் மனித மதிப்புக்களையே தனது கருத்திற் கொண்டு அமைந்திருக்கிறது. போர்பற்றிப் பாட வேண்டிய புறத்திணை, புகழுக்கான காரணங்களைப் பாடுவதையும் அதன் பகுதிகளுள் ஒன்றாக்கியிருக்கிறது.  அத்தகைய புறவொழுக்கத்தைத்தான் ‘பாடாண் பகுதி’ எனக் குறித்தனர்;. இப்பாடாண்திணைப் பாடல்கள் முன்னிலையிலும் படர்க்கையிலும் அமையும். இதற்கான சான்றுகள் சங்க இலக்கியத்துள் பல உண்டு. எடுத்துக்காட்டாக,

    “கறங்குமிசை அருவிய பிறங்குமலை நள்ளி! நின்
    அசைவில் நோன்தாள் நசைவளன் ஏத்தி
    நாள்தொறும் நன்கலம் களிற்றொடு கொணர்ந்து,
    கூடுவிளங்குவியன்நகா;, பரிசில் முற்றளிப்ப
    பீடில் மன்னா; புகழ்ச்சி வேண்டி
    செய்யா கூறிக் கிளத்தல்
    எய்யாதாகின்று எம் சிறு செந்நாவே”

    ‘கறங்குமிசை அருவிய பிறங்குமலை நள்ளி!’ என வன்பரணா;, கண்டீரக் கோப்பெரு நள்ளியை முன்னிலைப்படுத்திப் பாடியிருக்கிறார்  இதனைப் போன்றே கோவூர்க் கிழார் ,

    “குணதிசை நின்று குடமுதல் செலினும்
    குடதிசை நின்று குணமுதல் செலினும்
    வடதிசை நின்று தென்வயின் செலினும்
    தென்திசை நின்று குறுகாது நீடினும்
    யாண்டும் நிற்க, வள்ளி., யாம்
    வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழியவே”

    சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை,‘யாம்; வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழியவே’ எனப் படர்க்கையில் வைத்துப் பாடியிருக்கிறார்.

    “விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும்
    அறனும், ஆர்வலர்க்கு அளியும், நீ;
    திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின்
    மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;
    அம் கண் ஏர் வானத்து அணி நிலாத் திகழ்தரும்
    திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ;
    ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்
    மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;
    நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
    புலமும், பூவனும், நாற்றமும், நீ;
    வலன் உயர் எழிலியும், மாக விசும்பும்,
    நிலனும், நீடிய இமயமும் நீ!.

    என்னும்; பரிபாடலில் திருமாலின் இலக்கணங்களாகிய  அறமும் அளியும் மறனும் அணங்கும் திங்களு; ஞாயிறும் அரனும அயனும்  அவர் செய்தொழிலும் விசும்பு முதலிய பூதமுமாகிய எல்லாப் பொருளும அவனே என்னும் கருத்தினை முன்னிலையாக்கிக் கூறுதல் காண்க.

     தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
    கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
    அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;
    வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
    வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
    அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ;  (பரிபாடல்)

    என்னும் கடுவன் இளவெயினனார் பாடலிலும்  இயற்கையாற்றல்கள் அத்தனையும் ‘நீ’ என்னும் ஒரு சொல்லால் குறித்திருப்பது காணலாம்.

    வாலி தொடங்கி பாரதி வரை

    வசந்தராசன் கவிதைகளில் உத்தியால் சிறக்கும் உள்ளடக்கம் பற்றி ஆராயும் இந்தக் கட்டுரையில் அது தொடர்பான முன்னுரை சற்று நீண்டிருப்பது போல் தோன்றக்கூடும்.  காரணம் நீட்சி என்பது மரபின் தொடர்ச்சி. இந்த வீடு இன்றைக்கு என் வீடு, நேற்றைக்குத் தந்தை வீடு, அதற்கு முன் பாட்டன் வீடு, அவருக்கு முன் பூட்டன் வீடு என்று சொன்னால்தானே தற்கால வீட்டின் வழிவழி வந்த பழம்பெருமை புலப்படும்? வசந்தராசன் சிந்தனையில் வந்த மரபு அவரையும் அறியாது வந்து விழுந்த மரபு என்பதுதான் கட்டுரையின் சாரம். அந்த மரபே உத்தியாகி உள்ளடக்கத்தை மேலும் சிறக்க வைக்கிறது என்பதுதான் கட்டுரை சொல்ல வந்த சேதி!.

    “ஏவு கூர் வாளியால்  எய்து நாய் அடியனேன்
    ஆவிபோம் வேளைவாய் அறிவு தந்து அருளினாய்!
    மூவர் நீ! முதல்வன் நீ! முற்றும் நீ!  மற்றும் நீ!
    பாவம் நீ! தருமம் நீ! பகையும் நீ! உறவும் நீ” (கம்ப 4063)

    என்று வாலி இராமனைப் போற்றுவதற்கும்

    “அப்பன் நீ, அம்மை நீ, ஐய னும் நீ,

    அன்பு உடைய மாமனும் மாமி யும் நீ,
    ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ,

    ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ,
    துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ,

    துணை ஆய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ,
    இப் பொன் நீ, இம் மணி நீ, இம் முத்து(ந்)நீ,

    இறைவன் நீ ஏறுஊர்ந்த செல்வன் நீயே.

    என்று அப்பர் தாணடகம் பாடுதற்கும்

    “மண்ணும் நீ விண்ணும் நீ மறிகடல்கள் ஏழும் நீ
    எண்ணும் நீ எழுத்தும் நீ இசைத்த பண் எழுத்தும் நீ
    கண்ணும் நீ மணியும் நீ கண்ணுளாடும் பாவை நீ
    நண்ணும் நீர்மை நின்ற பாதம் நண்ணுமாறு அருளிடாய் “.

    என்று சிவவாக்கியர் தம் தத்துவத்தைப் பதிவு செய்வதற்கும்

    அறிவு நீ தருமம் நீ உள்ளம் நீ அதனிடை
    மருமம் நீ உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ
    தோளிடை வன்பு நீ நெஞ்சத்து அன்பு நீ
    ஆலயந் தோறும் அணி பெற விளங்கும்
    தெய்வச் சிலையெலாம் தேவி இங்குனதே!

    என்று மகாகவி தன் சக்தியை வழிபடுதற்கும் இந்த ‘நீ’ என்னும் முன்னிலை உத்திதான் பயன்பட்டிருக்கிறது. அதனால் உள்ளடக்கம் சிறந்திருக்கிறது. ‘இதனால்தான் உள்ளடக்கம் சிறந்திருக்கிறது’ என்பதன்று. இந்த உத்தியினால் உள்ளடக்கச் சிறப்பு கூடியிருக்கிறது என்பதாம். இந்தப் பின்புலத்தில்தான் தம்பி வசந்தராசன் கலைஞரைப் பற்றிய கவிதை ஆராயப்படுகிறது, பாடாணில் தொடங்கிக் கையறுநிலையில் முடிந்திருக்கும் இந்தக் கவிதையை நான் படிக்கவில்லை. ஊரோடு வந்த உறவுபோல் விருத்தங்களின் சீரோடு பழகினேன்! சிலிர்த்துப் போனேன்!

    வாராக்கடனை வசூலித்தவன் நீ!

    பல்வகை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களில் ஒன்று ‘காய் காய் மா மா’ என்னும் அரையடி அமைப்பு. கொண்டது. கவிஞர் பலரும் இறுதி இரண்டு சீர்களை ‘மா மா’ எனக் கொள்வதால் தனித்தனி மாச்சீர்களுக்காக திக்குத் தெரியாமல் அலைந்து திரிகிறார்கள்.  அவர்கள் தேமாந்தண்பூவும் புளிமாந்தண்பூவும் கூவிளம் தண்பூவும் மா மா என்னும் இரண்டு இருசீர்களுக்குரியன என்பதை மறந்து விடுகிறார்கள். மேலும் மூவசைச்சீர்களை இரண்டு ஈரசைச்சீர்களாக ஆக்கலாம் என்னும் வித்தையும் தெரிவதில்லை. காரணம் முனைப்பு! சொற்கள் சீராகும். சீர்கள் வாய்பாட்டுக்குள் அடங்கும். அடங்க வேண்டும். இது மாறி, வாய்பாட்டைச் சீர்களுக்குள் அடக்கம் செய்து சீர்களைச் சொற்களுக்குள் தேடும் முயற்சிதான் இன்றைக்கு எண்சீர் விருத்தம் சவலை தட்டிப் போனதற்குக் காரணம். கவிஞன் எதனை எண்ணுகிறானோ அதனை அப்படியே கவித்துவம் பிசகாமல் கொட்டிவிட வேண்டும். பிறகு களையெடுக்க வேண்டும். களையே இல்லாமல் பயிர் செய்ய நினைத்தால் கவிதைப்பயிர் எப்படி வரும்? வளரும்? வசந்தராசன் கவிதைகளில் யாப்பமைதி என்பது தனித்த ஆய்வுக்குரியது. கலைஞரைப் பற்றி இந்த எண்சீர் விருத்தங்களில் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய இடங்களைத் தவிர பிற அரையடிக்கான மூன்று மற்றும் நான்காம் சீர்களில் முழுமையான சொற்கள் இல்லை என்பதை நோக்குதல் வேண்டும். இது இயல்பாக அமைவது. இட்டுக்கட்டுவது அன்று. உணர்ச்சியும் உணர்வும் மொழிக்கட்டமைப்புக்குள் வரும்போது யாப்பு தானாக அமைந்துவிடும் என்பதற்கு வசந்தனின் கவிதைகள் போதுமான சான்றாகும்.

    பார்ப்புகட்குக் குடைபிடிக்கும் பறவைத் தாய்நீ !
    பாவலரைக் கூர்தீட்டும் உலைக்க ளம்நீ !
    வேர்த்திருந்தால் சிறகுகளால் விசிறு வாய்நீ !
    வேர்க்கருணை நீர்சுரக்கும் ஊற்றுக் கண்நீ !
    கார்திகைக்கும் வானம்நீ ! கதிர வன்நீ !
    கண்மலரில் கருணைத்தேன் தேக்கி வைத்துச்
    சேர்த்தூட்டும் காவலன்நீ ! சேயும் நீதான் !
    செத்துதினம் பிழைப்போர்க்கோ கடவு ளும்நீ !

    திராவிடத்தின் தேர்க்கால்நீ ! தன்மா னம்நீ !
    திராவிடத்துப் பண்பாட்டை மீட்டெ டுத்த
    வராக்கடனை வசூலித்த வங்கி யும்நீ !
    வரலாற்றைத் திருத்தவந்த வாலி பம்நீ !
    இராசராச சோழன்நீ ! ராப்ப கல்நீ !
    இரகசியமே இல்லாத வள்ளு வம்நீ !
    திராணிகளின் திகைப்பும்நீ ! திருத்த மும்நீ |
    தெம்புதரும் நெஞ்சுக்கு நீதி யும்நீ !

    தமிழகத்தின் வரைபடம்நீ ! தமிழர்க் கெல்லாம்
    தாதுபுஷ்டி லேகியம்நீ ! உண்மை சொன்னால்
    உமர்கய்யாம் போதைநீ ! கரக ரத்த
    உடன்பிறப்பால் உயிர்சுண்ட திசைகள் எட்டைக்
    கவர்ந்திழுத்த காந்தம்நீ ! உன்போல் யாரோ
    கைவிரலில் போதிமரக் காட்டைச் செய்தார் ?
    உவந்திருக்கத் தன்மானக் கோட்டை தந்தார்?
    உயிர்த்திருக்கும் தன்மான உருவம் நீ !ஆம் !

    ஒவ்வொரு அசையாக நோக்கிச் சுவைக்க வேண்டிய நிலையில் வசந்தனின் பாட்டு அமைந்திருக்கிறது.  எனனை அவர் அறியார்.  அவரை நான் அறியேன். முகநூற் வயல் வரப்பில் நின்று ஒரு கவிதை கிட்டுமா என நாற்றிசையிலும் என் பார்வை அலைந்தபோது நான் ஒரு கவிதைக் காடடுக்குள் இருப்பதை உணர்ந்தேன். அந்தக் காட்டுக்குச் சொந்தமானவர் வசந்தன் என்பது எனக்கு தாமதமாக வந்த செய்தி!.

    ‘பார்ப்பு’ என்னும் தொடக்கமே இவர் ஒரு மரபுக காவலர் என்பதைக் காட்டிவிடுகிறது. ‘பார்ப்புகட்குக் குடைபிடிக்கும் பறவைத் தாய்நீ !என்னும் தொடரில் பறவைகளின் குஞ்சுகளுக்குப் பார்ப்பு என்பது பெயர் என்னும் மரபியல் நூற்பாவை நினைவுபடுத்திவிடுகிறார். யாப்பினை முறையாகக் கற்கும் வாய்ப்பின்றித் தன்னுடைய இறுதிக்காலம் வரை தான் முறையாகத் தமிழ் கற்கவில்லையே என்னும் ஏக்கத்தோடு மறைந்தவர் கலைஞர். ஆனால் தமிழகத்துக் கவிதைச் சிற்பிகள் எல்லாம் அவருடைய கவிதைவரிகளைக் கண்டு தம்மைச் செப்பம் செய்து கொண்டார்கள், செதுக்கிக் கொணடார்கள் என்பது மேடைக்கவிதை வரலாறு எழுதிவைத்துள்ள பின்குறிப்பு. ‘பாவலரைக் கூர்தீட்டும் உலைக்களம் நீ! என்னும் வரிகளின் உண்மைப் பொருளை உணர்ந்து சுவைக்க வேண்டுமானால் அக்காலத்தில் கலைஞர் தலைமையில் நடைபெற்ற கவியரங்குகளை இணையத்தில் காணவேண்டும்!. கார் மழையாகுமே தவிர வானம் மழையாகாது. ‘வான்சிறப்பு’ என்றால் வானத்தின் சிறப்பன்று மழையின் சிறப்பு.  ‘கார்’ என்பது கலைஞரால் கூர் தீட்டப் பெற்ற கவிஞர் கூட்டத்திற்கான உருவகம் என்றால்  கலைஞர் வானமாகிறார். வானம் கறுக்காது. பெய்யாது. ஆனால் கலைஞராகிய வானம் கொட்டுகிறது கவிதை மழையை! பெய்தும் வெளுக்காத கார், நீல வானத்தைக் கண்டு திகைக்கிறது என்கிறார். ‘கார் திகைக்கும் வானம்’ கலைஞராம்! தண்ணீருக்கே தாகம்! காற்றுக்கே வேர்வை! என்று கூன்விழுந்த புதுக்கவிதைக் கூறுகளைக் கண்டே களைத்துப் போன எனக்குக் ‘கார் திகைக்கும் வானம் கலைஞர்’ என்னும் தொடர் மருந்தால் கலைக்க  முடியாத மயக்கததைத் தந்திருக்கிறது. இனி கார்த்திகைக்கும் வானம்’ என்று கார்த்திகையைத் மழைத்திங்களாகக் கொண்டால் ‘கவிஞர் அனைவர்க்கும் கலைஞர் பேராசிரியர்’ என்பது விளங்கிக் கொள்ளலாம். ஏனைய திங்கள்களுக்கு மட்டுமன்று கார்த்திகைக்கும் கலைஞர்தான் வானம் என்பது நயம். பிரிமொழிச் சிலேடையை இப்படித்தான் கையாள வேண்டும்!

    வாராக்கடனை வசூலிக்க முடியாமல் அரசு திணறுகிறது என்பது தினச்செய்தி. பணத்தை வசூலிக்கத் திணறும் ஒரு கட்டமைப்பில் இனத்தை அதன் பணபாட்டை மீட்டெடுக்கும் பணியைக் கலைஞர் செய்திருக்கிறார். திராவிட இன மீட்பு என்பது கொள்ளையக்கப்பட்ட கட்டித் தங்கத்தை ஏழை தனியொருவனாக நின்று மீட்பது போன்றது.. பெரியார், அண்ணா என்னும் பெரியோர்கள் வழி நின்று திராவிடப் பண்பாடு என்னும் வாராக் கடனை மீட்டெடுத்த இனப்போராளி கலைஞர். இநத உருவகப் பாடடில் இனனொரு சேதியையும் இலாவகமாகச் சொல்லுகிறார் வசந்தன்.  அது திருக்குறள் பற்றியது. திருக்குறளில் எல்லாருக்கும் எல்லாம் தெரியும். புரியும். ஆனால் துறவறவியல் புரியாது. அதனால் அது மந்தணத்தை (இரகசியம்) உள்ளடக்கியது. ஆனால் கலைஞரின் கவிதையும் எழுத்தும் பேச்சும்  திறந்த புத்தகம். உப்பைப் போல் எல்லாருக்கும் உரியது, எவருக்கும் புரிவது!. ‘ரகசியமே இல்லாத வள்ளுவம் நீ!’ என்று இவர் பாடுவது குறளோவியத்தை உள்ளடக்கியும் என்பது அந்நூலைப் படித்தார்ககுப் புலனாம்.!

    தமிழகத்தின் பூகோளத்தைத் தம்முடைய ‘கால்களால்’ வரைந்தவர்கள் இருவர். ஒருவர் பெருந்தலைவர் காமராசர். மற்றொருவர் கலைஞர். ‘பூகோளம்’ என்பது ஆயிரத்துத் தொள்ளாயிர்த்து அறுபத்து ஏழுக்கு முன்பாகத் தமிழகப் பள்ளிகளில் புவியியல் பாடத்திற்கு வைக்கப்படடிருந்த பெயர். உண்மையில் அதற்குப் ‘பூமியாகிய கோளம்’ என்பதுதான் பொருள். ஆனால் புவியியல் என்பது ஆகுபெயராக அப்பாடத்தை உணர்த்தியதாம். பூகோளத்தில் ஆகுபெயரை அறிந்தவர்கள் நாம். காமராசரும் கலைஞரும் தமிழகத்துச் சாலைகளை வரைபடம் பார்த்து அறிந்தவர்கள் அல்லர். தலைச்சாலையிலிருந்து பிரியும் கிளைச்சாலை எந்த ஊருக்குப் போகும் என்பதை அவர்கள சென்னையிலிருந்தே சொல்லிவிடுவார்கள். மதகுகளின் எண்ணிக்கை அவர்களுக்குத் தெரியாது. ஆனால் தடுப்பணை எந்தெந்த ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளன என்பது பற்றி அதிகாரிகளுக்கு வகுப்பெடுப்பார்கள். எந்த மாவட்டத்தில் எத்தனை  ஏக்கரில் என்ன பயிர் விளையும் என்பது வேளாண் கல்லூரிக்குப் போகாத அந்தப் பெருமக்கள் விளக்கமளிப்பார்கள். இந்த இரு தலைவர்களும் செல்லாத ஊரில்லை. ஊர்களை மட்டுமன்று அந்த ஊர்களில் உள்ள தம் நண்பர்களை எப்போது சென்றாலும் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு அளப்பரிய நினைவாற்றல் கொண்டவர்கள்.  ‘தமிழகத்தின் வரைபடமே! என்னும் தொடர் கலைஞரின் பொதுவாழ்வுப் பயணத்தைச் சித்திரிக்கும் ஆத்திசூடி!  அருமை! கவிதை சுருக்கமானது! இது சுருக்கத்திலும் சுருக்கம்!

    உணர்வுகளுக்குப் பெருந்தமனி நீ!

    யாப்பமைக் கவிதைகளை எழுதுவார்க்கு முதல் எதுகையிலேயே தெரிந்து விடும் ‘இந்தப் பாட்டு என்ன கதிக்கு ஆளாகும்?’ என்று! கருத்துக்களும் சீர்களும் ஓரளவு புலப்பட்ட நிலையில் கைக்குக் கிட்டிவிடும் எதுகையால் கவிஞன் மகிழ்கிறானோ இல்லையோ கவிதைக்கு அன்றைக்குத் தீபாவளி! எண்சீர் விருத்தங்களில் எதுகையால் வெற்றி பெற்ற ஒரே கவிஞர் பாவேந்தரே!. ‘விருத்தத்தில் வெற்றிபெற்றார் பாவேந்தர்’ என்று சுரதா பாடியதற்குக் காரணம் பாவேந்தரின் எண்சீர் விருத்தங்களே. இந்த விருத்த வித்தையின் அனைத்து வேடிக்கைகளையும் செய்து காட்டியிருக்கிறார் வசந்தன்.  புதிதாக விருத்தம் எழுதுகிற அலலது எழுத விரும்புகிற அன்பர்கள் குறைந்த அளவு ஒரு நூறு விருத்தங்களையாவது மனப்பாடம் செய்திருக்க வேண்டும். கவிதை ஓட்டம் அப்போதுதான கைகூடும். சீர்கள் இறவாணத்தில் இல்லை என்பதையும்  கவிஞர் பிறரின் படைப்புக்களில் இருக்கின்றன என்பதையும் படைப்பாளர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. ‘விழிப்புரை’ என்னும் சொல்லை இரண்டாவது சீரில் வைத்த வசந்தன் அதற்கான எதுகையை அடுத்த சீரில் ‘பொழிப்புரை’ என்று எழுதுவதும், பரப்புரை,  இடித்துரை,  படித்துறை என இயைபு நோக்கி எதுகை அமைப்பதும் கவிதை வலலாளர்களுக்கன்றிப் பிறரக்குக் கிட்டாத வரமாம். அதனால் இவர் வரம்பெற்ற வசந்தன்!

    “பெரியாரின் விழிப்புரைநீ !அண்ணா எங்கள்
    பேரறிஞர் பொழிப்புரைநீ ! திரைப்ப டத்தின்
    சரியான பரப்புரைநீ !சனாத னத்துச்
    சழக்கர்களின் இடித்துரைநீ ! சமூகத் திற்காய்
    விரிந்தமடி படித்துறைநீ ! வீணர் கட்கும்
    விளையாட்டுக் கடிந்துரைநீ ! வெற்றி யே நீ !
    புரிந்தவர்க்கோ புன்னகைநீ !புரியா தார்க்கோ
    புதிர்தான்நீ ! ஆனாலும் புதையல் நீதான் !

    அகரத்தைச் சிகரமாக்கும் அற்பு தம்நீ!
    அருந்தொண்டர் தோள்சுமக்கும் பெருந்தொண் டன்நீ !
    தகரத்தைத் தங்கமாக்கும் ரசவா தம்நீ !
    தமிழ்நிலத்தின் உயிர்முகம்நீ ! நிகழ்கா லத்தின்
    நிகரற்ற இலக்கியம்நீ ! நிலைத்து வாழும்
    நெஞ்சுக்கு நீதியும் நீ !என்போன் றோர்க்கு
    உகந்துவரும் உயிரெழுத்தே நீதான் !எங்கள்
    உணர்வுகளின் பெருந்தமனி நீயே தானே !

    பெரியார் தட்டி எழுப்பிய பிறகுதான் தமிழினம் தான் தூங்கிவிட்டதை அறிந்தது. கற்றவர்களுக்கு மடல் எழுதினார் அண்ணா! பெரியாரின் மூலத்திற்குப் பதவுரையை  அண்ணா எழுத அந்தப் பதவுரைக்குப் பொழிப்புரை எழுதி உடன்பிறப்புக்களைச் சிந்திக்க வைத்தவர் கலைஞர். கலைஞரின் எதிரிகள் யாராக இருந்தாலும் கோபாலபுரம் வீட்டில் ஒரு முறை அவரை நேரில் சந்தித்துவிட்டு வெளியே வருகிறபோது இதயத்தைச் ‘சுகமாகத் தொலைத்து’விட்டுத்  திரும்புவார்கள் என்பது அந்த வீட்டில் இன்னும் வைக்கப்படாத கல்வெட்டுச் செய்தி!. கலைஞரின் மனத்தை அறிவது அவ்வளவு எளிதன்று. அவர் அணிந்திருந்த கண்ணாடி கறுப்பாயினும் பிறரை எளிதில் படம்பிடித்துவிடும் ஆற்றல் வாய்ந்தது. அதனால்தான வசந்தன் அவரைப் புதிராகவும் பார்க்கிறார். புதையலாகவும் கண்டெடுக்கிறார்.

    ‘அருந்தொண்டன் தோள் சுமக்கும்’ என்னும்  இரட்டுற மொழிதல் மிகச் சிறப்பான வரிகள். தொண்டன் அவரைச் சுமக்கின்றான். தொண்டனை அவர் சுமக்கின்றார். முன்னதற்கு விளக்கம் தேவையில்லை. பின்னது பலராலும் அறியப்படாத செய்தி. கலைஞருக்குப பெருஞ்செல்வமே அவரது நினைவாற்றல்தான். முன்பே சொன்னதுபோல் எந்தச் சிற்றூருக்குச் சென்றாலும் அங்கேயிருக்கும் கடைசித் தொண்டனையும் அடையாளம் கண்டு பெயர் சொல்லி அழைக்கும் அசுர நினைவாற்றல் உடையவர் கலைஞர். ஒரு தலைவனைச் சுமக்கின்றவன தொண்டனாகிறான். தொண்டர்கள் அனைவரையும் சுமக்கின்றவன் பெருந்தொண்டனாகிறான். ‘பெருமை’ என்பதற்கு என்னால் இப்படித்தான்  பொருள்படுத்திக் கொள்ள முடிகிறது.

    எழுப்பியவனும் நீ! இழுத்து வந்தவனும் நீ!

    பாடப்படுபவன் பெருமை சொல்வதோடு அமைந்துவிடக் கூடாது ஒரு பாடாண்திணைப் பாட்டு! அழுது புலம்புவதோடு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுவிடக் கூடாது ஒரு கையறுநிலைப் பாட்டு. பரணர் பாட்டுப் போல் வரலாறு சொல்ல வேண்டும். வாழ்க்கை நெறி சொல்ல வேண்டும்.  அரசியல் சொல்ல வேண்டும். அக்காலச் சமுதாயம் சொல்ல வேண்டும். அனைத்தும் சொல்ல வேண்டும். வசந்தன் பாடல் அத்தனையும் மொத்தமாகச் சொல்கிற அற்புதக் களஞ்சியம். கலைஞரின் தொண்டைக்குரலைப் பாடியவர் பலர். அவர் அரசியல் தொண்டினைச் சுவைகுன்றாப் பாடலில் பதிவு செய்திருப்பவர் ஒரு சிலரே. அச்சிலருள் வசந்தனும் ஒருவர்.

    “குடிசைகளின் கோபுரம்நீ ! பாதை யோரக்
    கும்பிகளின் கூழும்நீ ! தனியு டைமைக்(குக்)
    கடிவாளக் கயிறும்நீ !பொதுவு டைமைக்
    கனவுகளின் மெய்ப்பொருள்நீ !சமூக நீதி
    வடிவமைப்பின் விடியல்நீ ! வரலாற் றுக்கோ
    வள்ளுவரின் கோட்டம்நீ ! கண்துஞ் சாது
    விடியலுக்காய்க் கதிரவனை எழுப்பி வைத்த
    வீரியம்நீ ! வீரன்நீ !வெற்றி யும்நீ !”

    குடிசைகளைப் பாடியவர்கள் இருந்தார்கள். ஆனால் குடிசைகளை வீடாக மாற்றும் சிந்தனையை ‘அரசியல் கவிஞர்’ கலைஞர்தான் முன்னெடுத்தார். குடிசைமாற்று வாரியத்தை அமைத்து  நாடடுக்கே வழிகாட்டியானார். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்து நாளில் போக்குவரத்துக் கழகங்களை நாடடுடைமையாக்கினார் கலைஞர். பொதுவுடைமைக் கனவுகளின் மெய்ப்பொருள் ஆனார்!, இன்றைக்கு அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றால் அன்றைக்கு அனைத்துச் சாதியினரையும் ஒரே குடியிருப்பில் வைக்க பெரியார் சமத்துவபுரம் கண்ட பெரியார் கலைஞர். அந்த வரலாற்றைப் பாடிய நம் காலத்துப் பரணர் வசந்தன்!

    “நெருக்கடிக்கே நெருக்கடியைத் தந்த வன்நீ !
    நிமிர்ந்திருக்கத் தன்மானம் நெய்த வன்நீ !
    துருப்பிடிக்காத் தொண்டுள்ளத் தூய வன்நீ !
    தொலையாத எழுத்துக்குச் சொந்த மும்நீ !
    கருக்கரிவாள் கூர்ச்சொல்லின் கருப்பை நீ!வான்
    கார்மேகக் கருணைநீ ! கடலும் நீதான் !
    விருப்புற்று வந்தோர்க்கு நிதியும் நீதான் !
    விழுதுகளைத் தாங்குகின்ற வேரும் நீதான் !

    ஒருவருக்குப் பல வாரிசுகள் இருக்கலாம். ஆனால் கலைஞர் பலருக்கும் வாரிசாகத் திகழ்கிறார் என்பதுதான் கவிதை சொல்ல வரும் சேதி! கவிதை சொல்லப்படும் பொருளில் இல்லை. சொல்லப்படும் முறையில் இருக்கிறது. நெருக்கடிநிலை அமலில் இருந்த காலததில் அனைத்துவகையான ஊடகங்களும் தணிக்கைக்கு ஆளானபோது தணிக்கைக் குழுவின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவிய மந்திரக்காரன் கருணாநிதி! ‘வெங்காயம் உடல்நலததிற்கு நல்லது’ என்பது அன்றைய முரசொலி தலைப்புச் செய்தி!. தலைப்பை மட்டும் தணிக்கைக் குழு பாரத்தது. உள்ளடக்கத்தைக் கழகத் தொண்டன் புரிந்து கொணடான்.  நெருக்கடிக்கு நெருக்கடியைக் கலைஞர் தந்தது இப்படித்தான்!

    “இழிவகற்றி இருள்தின்ன பேனா வுக்குள்
    ஈரோட்டு மைபோட்ட செங்க திர்நீ !
    பழித்தவனைத் தாய்தடுத்தும் விடேன் என்ற
    பாவேந்தர் வழிநின்று வளர்ந்த வன்நீ !
    விழித்திருந்து விழித்திருந்து விடிய லையே
    இழுத்துவந்த அண்ணாவின் இதயம் நீ !உன்
    கழுத்துவரை அழுத்தங்கள் இருந்த போதும்
    கலங்காது தரைநடந்த கதிர வன்நீ !

    ‘இழிவகற்றி இருள் தின்ன’ என்பதை  ‘இருள் இழிவு அகற்றி’ என மாற்றியுரைக்க.  சமுதாயத்தின் பன்முக இழிவு இருளாக  உருவகம் செய்யப்பட்டது. இழிவாகிய இருளை அகற்ற ஈரோட்டு மைபோடப்பட்டது என்பதாம். ஈரோட்டு மை போடப்பட்டது கலைஞரின் பேனாவில் என்பதால், எழுதியே அகற்றியவர் என்பது பெறப்பட்டது. ‘கூவி வைப்போம விடியும் போது விடியட்டும்’ என்று திண்ணைக் கதை பேசியவர் அல்லர் கலைஞர். ‘தீ அணையாதா? தென்றல் வீசாதா? என்று விடியலுக்குக் காத்திருந்தவர் அவர்.  தமிழ்ச்சமுதாயத்தின் ஒவ்வொரு சிக்கலின் ஆழத்தையும் நன்கு புரிந்து கொண்டவர் அது தீர்கிறவரை மெய்வருத்தம் பாரார், கண்துஞ்சார். அதனால்தான் ‘விழித்திருந்து விழித்திருந்து விடியலையே இழுத்துவந்த அண்ணாவின் இதயம் நீ!’ என்கிறார் வசந்தன். ‘விடியலுக்காய்க் கதிரவனை எழுப்பி வைத்த வீரன்’ என்று முதற்பாட்டில் சொன்னவர், அவரை அங்கேயே அப்படியே விட்டுவிடாமல் கதிரவனோடு விடியலையும் கையோடு கொண்டுவந்தவர் என்று கவிதை பாடுகிறார். ‘தென்றலின் கையைப் பிடித்துக் கொண்டு நந்த வனததிற்குள் நடந்து போனதாக’ வைரமுத்து எழுதுவார். விடியலின் கையை வலியப் பிடித்து இழுத்து வந்ததாக வசந்தன் கற்பனை செய்கிறார். வைரமுத்தின் கற்பனை அழகியல். வசந்தனின் கற்பனை நடப்பியல்!

    சுருக்குப்பை நிறைக்கவந்த உழவர் சந்தை நீ

    ஏசி அறையில் அமர்ந்து, கவிதை மாதிரி எழுதிக்கொண்டு பிறரைத் தொல்லைக்கு ஆளாக்குபவர் பலர். பட்டுக்கோட்டையைப் போல, கம்பதாசனைப் போல, தோழர் ஜீவா அவர்களைப் போல கே.சி.எஸ் அருணாசலத்தைப் போல மக்களில் ஒருவனாக இருந்து கொண்டு பாடுபவர் சிலர். ‘உழவர் சந்தை’ என்பது கலைஞரின் சிந்தனையில் பூத்த ஒரு சமுதாயத் திட்டம். நீண்ட சணல் சாக்கை விரித்து வைத்துப் பகல் முழுவதும் நடக்கின்ற விற்பனையில் நொண்டிக் கிழவியின் சுருக்குப்பையில் காசு விழும் சத்தம் பைக்கே கேட்காது. ஆனால் உழவர் சந்தை வந்தபிறகு கிழவியின் சுருக்குப்பை பேரப்பிள்ளைகளுக்கு அமுதசுரபியானது. இதனைச் சிந்திக்கிறார் வசந்தன்.

    “சுருக்குப்பை நிறைக்கவந்த உழவர் சந்தை !
    சுடர்விளக்காய் வீட்டுக்கோர் ஒளிவி ளக்கு!

    பொதுநன்மைக்கான மக்கள்நலத் திடட்மானாலும் ஒவ்வொரு தனிமனிதனும் மகிழ்ச்சிக்கு அது உதவினால்தான் முழுமையடையும். உழவர் சந்தை என்னும் பொதுநன்மை சார்ந்த திட்டம் இங்கே கிழவியின் சுருக்குப்பையை நிறைக்கிறது. “வெட்டவெளி உழவர் சந்தை வீட்டுக்கோர் விளக்கு!” அருமை! எழுபதுகளிலேயே மனிதனை மனிதன் வைத்து இழுக்கும் கொடுமைக்கு முடிவு கட்டிக் காலால் மிதிக்கின்ற ரிக்‌ஷாக்களை அரசுத் திட்டமாகச் செயல்படுத்தியும் மகளிர்க்கு இந்தியாவிலேயே முதன் முதலாகச் சொத்துரிமைக்குச் சட்டம் செய்தவரும் கலைஞரே!

    “இருப்பவனை இல்லாதோன் கையி ரண்டால்
    இழுத்துவந்த இழிநிலைக்குப் புதிய மாற்று ;
    பெருமையுடன் பெண்ணுக்கும் சமமாய்ப் பங்கு ;
    பெறுங்கல்வி இலவசம் முதல் தலை முறைக்கு !
    அருமையுடன் திட்டங்கள் செயல்ப டுத்தி
    ஆண்டவனும் நீதானே ! தமிழ்நாட் டுக்கு !

    என்று பாடுகிறார் வசந்தன். பொருளிருப்பவன் அமர்ந்திருக்கிறான். இல்லாத பொருளுக்காக, இருக்கின்ற கைகளால் இழுக்கிறானாம்!. இதில் என்ன சிறப்பு? பாடாண் திணை என்பது மன்னனின் தனிச்சிறப்புக்களைப் பாடுவது. நம்முடைய கவிஞர்கள் என்ன பாடுவார்கள் என்பதைக் கலைஞரைப் பற்றிய கவிதைகளைப் படித்தவர்கள் தெரிந்து கொள்ளலாம். அவருடைய நேர்வகிடு  பற்றிப் பாடுவார்கள். கரகரத்த குரலைப் பற்றிப் பாடுவார்கள். அவர் தோளில் போடும் நீண்ட துண்டு பற்றிப் பாடுவார்கள். பராசக்தி பற்றிப் பாடுவார்கள். மனோகராவை அவர்கள் மறப்பதே இல்லை. அவர் செய்த இவையெல்லாம் கவிதையில் இனிக்கும். ஆனால் அவருடைய சமுதாயப் பணிகளை எதிர்காலத்திற்கு அறிமுகப்படுத்தும் கவிதைகளில் செய்திகள் இருக்கும். கவிதை இருக்காது.  இனிக்காது. செய்திகளின் தொகுப்பு கவிதையாகாது. தகவல்களின் தொகுப்பு கவிதையாகாது. செய்தியைக் கவிதையாக்க முடியுமா? முடியும்? எப்படி? இப்படி! ‘சுருக்குப்பை நிறைக்க வந்த உழவர் சந்தை’ என்பதும் ஒரு செய்திதான்!. ஆனால் ஒரு மூதாட்டியைத் தோன்றா எழுவாயாக்கிச் செய்தியைக் கவிதையாக்குகிற வித்தை வசந்தனுக்கு கைவந்திருக்கிறது!.

    செயலகம் நீ!

    சமுதாய அக்கறையை, செய்ய வேண்டிய சமுதாயத் தொண்டுகளை அரசு பதவிகொண்டு நிறைவேற்றிய கலைஞரின் சாதனைகளைப் பாடிய வசந்தன் தொடர்ந்து  கலைஞருடைய பண்பாடு மற்றும் கலாச்சார மீட்புப் பணிகளையும் பாதுகாப்புப் பணிகளைப் பட்டியலிடுகிறார்.

    “குமரியிலே வள்ளுவன்நீ ! புகழே என்றும்
    குன்றாத பூம்புகார்நீ ! தந்தை தந்த
    திமிர்ந்தஞானப் பகுத்தறிவுச் செருக்கி ருந்தும்
    திருவாரூர்த் தேராய்நீ ! தேச மெங்கும்
    நிமிர்ந்திருக்கும் பாலமாய்நீ ! நெஞ்சைக் காக்கும்
    நூற்றாண்டு நூலகம்நீ ! அறிவின் ஆசான்
    அமர்ந்திருக்கும் சிலைமுன்னே செயல கம்நீ !
    அடடாவோ அத்தனையும் நீதான் !நீதான் !

    இந்தப் பட்டியலில் தன் நெஞ்சுக்கு நெருக்கமான பெரியாரையும் அண்ணாவையும் மறக்காமல் கலைஞர் செய்திருக்கும் பணிகளை நிரல்படுத்துகிறார். சில முரண்களைச் சாதுரியமாகச் சுட்டுகிறார். குறளோவியம் எழுதிக் குமரியில் வள்ளுவனுக்குச் சிலை வைத்த கலைஞர் திருவாரூர் தேரை ஒடச் செய்தார். “ஏரோட்டும் உழவரெல்லாம் ஏங்கிக் கிடக்கையிலே தேரோட்டம் உனக்கெதற்கு தியாகராசா? என்னும் கொள்கையுடையவர் பெரியார். அவருடைய ‘திமிர்ந்த ஞானச செருக்கு’ கலைஞரின் நெஞ்சுக்குள் இருந்தும் ஊர்ப்பணி கருதி தேர்ப்பணி செய்தார். “செந்தமிழ்ச செல்வி சிலப்பதிகாரத் தலைவி, வீரத் தமிழகத்தின் விடிவிளக்கு வெற்றிக் காவியத்தின் பேசும் பெண்தெய்வம்” என்று கலைஞராலேயே புகழப்பெற்ற கண்ணகி வாழ்ந்த பூம்புகாரை மீட்டுருவாக்கம் செய்தது, அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைத்தது ஆகிய செய்திகளை ‘நீ’ என்னும் முன்னிலையால் அடக்கிக் காட்டுகிறார். அறிவாளி அண்ணா நூலகம் அமைத்ததும் நோயாளிகளுக்காக அதனை மருத்துவமனையாக்கியதும் வரலாறு!

    உரசல்கள் இல்லாத உயிரெழுதது நீ!

    ‘தமிழகத்தின் வரைபடமே!’ என்று பாடியவர் பரிணாமத்தால் ‘திராவிடத்தின் வரைபடமே’ என்கிறார். கால்டுவெல்லைப் படிக்காதவர்களுக்கு இந்தக் கருத்து அவ்வளவாகப் புரிய வாய்ப்பில்லை. அவசர நிலைக்காலத்தில் அவர் முரசொலியில் எழுதிய ஒவ்வொரு உடன்பிறப்புக்கான மடலும் ஒவ்வொரு முனைவர்ப் பட்ட கருதுகோளாகலாம்!.

    “திராவிடத்தின் வரைபடமுன்கையெ ழுத்து!
    ……………………………………………………………|
    மிசாவுக்கோ நீமட்டும் ஆய்தெ ழுத்து !
    உரசல்க ளில்லாத உயிரெ ழுத்தே!
    உண்மையில்நீ தமிழ்நிலத்தின்பொன்னெ ழுத்து !”

    என்னும் வரிகளில் ‘உரசல்கள் இல்லாத உயிரெழுத்து’ என்பதுதான் கவிதை. தமிழெழுத்துக்களின் பிறப்புக்களை ஆராயும் தொல்காப்பியம் முதலில் உயிரெழுத்துக்களின் பிறப்புக்களை ஆராய்ந்து சொல்கிற முடிவு இதுதான். “உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் வாய்திறத்தல், நாவின் விளிம்பு நிலை, இதழ்குவித்தல் என்னும் முத்திறத்துக்குள அடங்கும்.” உச்சரரிப்பில் எத்தகைய  இடர்ப்பாடும் இல்லாத பிறப்புக்குரியன உயிரெழுத்து என்பதை ‘தத்தம் திரிபே சிறிய என்ப’ என்னும் விதிக்குள் அடக்கிக் காட்டுவார். கலைஞரின் பொதுவாழ்க்கையும் தமிழின் உயிரெழுத்துக்களின் உச்சரிப்பைப் போல் உரசல் இலலாதது. எவரையும் பகைத்துக் கொள்ளும் அல்லது உறழ்ந்து நோக்கும் போக்கு அவரிடம் காணாதது. காண முடியாதது. தன்னைக் கட்டமைப்பதிலும் தன் திறமையை, வளர்த்துக் கொள்வதிலும் தன்னைத் தானே பக்குவப்படுததிக் கொள்வதிலுமே முழுக்கவனத்தையும் செலுத்தியவர். வசந்தனின் பாடுபொருளில் நாம் கருணாநிதியைக் காணவில்லை. கலைஞரைத்தான் காணுகிறோம்  தனக்குத்தானே புடம்போட்டுக் கொண்ட தங்கம் கலைஞர் என்பதைத்தான் தமிழகத்தின் பொன்னெழுத்து என்கிறார் வசந்தன்!

    வாய்மை வரைந்து கொணட ஓவியம் நீ!

    உயர்வு நவிற்சி அணி என்று ஒன்று உண்டு. இதனை மிகைக் கற்பனை என்றும் சொல்வார்கள் இதிகாசங்களிலும் தொன்மங்களிலும் சிறந்திருக்கும் இது பொதுவாக இலக்கியங்களில் சிறப்பதில்லை.

    “வைரத்தால் புள்ளிவைத்துத் தன்னைத் தானே
    வாய்மையே வரைந்துகொண்ட ஓவி யம்நீ !”

    வசந்தன் எழுதுகிறார் இப்படி. வாய்மை வினைமுதல்!  அது ஒரு ஓவியம் வரைகிறது.  புள்ளி வைக்கிறது. வஞ்சி கோலமிட கோலமாவு போதும். வாய்மையென்னும் சத்தியவதி கோலமிட்டால் கோலமாவு போதுமா? எனவே வைரத்தைக் கொண்டு புள்ளிவைக்கிறாளாம். எந்தத் திறனாய்வு அளவுகோலாலும் அளக்க முடியாத கற்பனை!. ‘தெள்ளுதமிழ் பாடம் எழுதப் பள்ளியில் சேர்க்க வரும்  மாமனை’ப் பற்றிக் காமாட்சி சுந்தரம்  எழுதினார் அன்று  ‘வெள்ளியினால் செய்த ஏட்டில் நல்ல வைர எழுத்தாணி கொண்டு’ என்று!  ஏடு வெள்ளி! எழுதியவன் கல்யாணியின் மகன்! எழுதுகோல் வைரம்! மொழி தெள்ளுதமிழ்! அனைத்தும் ஒரே அலைவரிசை! இதுதான் கவிதை! வைரத்தைத் தங்கத்திலே வைத்தால் மதிப்பா?  தகரத்தில் வைத்தால் மதிப்பா?

    பாடாண் திணைக்குள் ஒரு கையறு நிலை!

    இந்தப் பாடலை ‘நீ’ என்னும் முன்னிலையில் தொடங்கிப் பாடிய வசந்தன் பல நுண்ணியங்களைப் பதிவு செய்திருப்பதை என்னால் உணர முடிகிறது. உணர்ந்து சுவைக்க முடிகிறது. பாட்டுடைத் தலைவனை நிகழ்காலத்தில் பாடினால் அது பாடாண் இழந்த நிலையில் இறந்த காலத்தில் பாடினால் அது கையறு நிலை!. கையறு நிலைக்குள் பாடாண் அடக்கம். ஆனால் பாடாணுக்குள் கையறு நிலை அடங்காது.  முதல் பன்னிரண்டு விருத்தங்களில் பாடாண் குறிப்புடன் பாடிய வசந்தனால் இறுதி விருத்தததை அவ்வாறு பாட முடியவில்லை. ‘கலைஞர் இல்லை’ என்னும் உண்மை அவரைப் பிழிகிறது.  அவரையும் அறியாமல் கொட்டுகிறார்.

    “நீரின்றி நிழலின்றிக் காற்று மின்றி
    நிலைகுலைந்து குடைசாய்ந்தே கிடக்க எங்கள்
    வேர்சாய்ந்து வான்பார்த்தால் என்ன செய்வோம் ?
    வெறுங்கையைப் பிசைந்துள்ளோம் !

    பாட்டுடைத் தலைவன் மறைவையும் அதனால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளையும் வெற்றிடத்தையும் ஏழு எச்சங்களால் அடுக்கிக் காட்டுகிறார்.  “நீரின்றி நிழலின்றிக் காற்றுமின்றி நிலைகுலைந்து குடைசாய்ந்தே கிடக்க ….. வேர்சாய்ந்து” என்னும் எச்சங்கள் எல்லாம் கலைஞரைப் பற்றிய எதிர்மறை உருவகங்கள். ‘எல்லாமாக இருந்த நீ போய்விட்டதால் ஏதுமற்ற ஏழையானோம்’ என்பதை ‘வெறுங்கையைப் பிசைந்துள்ளோம்’ என்னும் மரபுத் தொடரால் புரிய வைக்கிறார்.

    வாழ்கிற காலத்தில் எவரையும் உரிமையோடு பேசலாம் என்பதால் இதுவரை ‘நீ’ என்று பாடி வந்தவர், ‘கலைஞர் இனி இல்லை’ என்னும் உண்மை உறுத்த,  இறுதி விருத்தத்தில்

    “………………………………………………………………………நீங்கள் வந்தால்
    தேர்வந்த தெருவாக மகிழ்ந்தி ருப்போம் !
    தென்னிமயம் கண்டுயிர்த்து களித்தி ருப்போம் !

    என்று ‘நீங்கள்’ என்று அழைப்பது காண்க. இதில் என்ன நயம் இருக்கிறது? எனச் சிலர் வினவக்கூடும். மகாகவி பாடிய ‘நந்தலாலா’வைக் கவனித்தவர்களுக்கு இந்த நுண்ணியம் புரியும். அந்தப் பாடடில் உள்ள நான்கு கண்ணிகளில் முதலிரண்டு கண்ணிகளில் ‘தோன்றுதையே!’ என்று விளித்த பாரதி, அடுத்த இரண்டு கண்ணிகளில் ‘தோன்றுதடா’ என்று விளிப்பார். இறைவன் எட்ட நிற்கிறபோது ‘ஐயே’ என்று வணங்கியும் அருகில் வந்து இனிக்கிறபோது ‘அடா’ என்ற  உரிமையோடும் அழைப்பது கவித்துவ நுண்ணியம். அது வசந்தன் பாட்டில் இடம் மாறியிருக்கிறது. கலைஞர் உயிரோடு இருக்கிறபோது உரிமையுடன் ‘நீ’ என்றவர், அவர் திரும்பாத இடத்திற்குச் சென்றுவிட்டார் என்று கைபிசைந்து நிற்கிறபோது ‘நீங்கள்’ என வணங்கி மதிப்பளித்துப் பாடுகிறார் என்பதாம். இது இச்சை வெளிப்பாடு அன்று. அனிச்சை வெளிப்பாடு!

    “சீர்கொண்டு வரும்சிரிப்பே ! வா! பி றந்து !
    சிறுநகையில் உயிர்மீட்பாய் ! சீக்கி ரம்வா !”

    உணர்ச்சியின் உச்சம் கவிதை என்பதை ‘பிறந்து வா என்பதை ‘வா பிறந்து என்னும் பிறழ்ச்சியில் உணர்க. பிறப்பு தாய்க்கு மகிழ்ச்சி. வருவது சமுதாயத்திற்குப் பயன். போய் வா! சென்று வா! வென்று வா! ஆடி வா! பாடி வா! என எச்சத்தை முன்னாக்கி ஏவலைப் பின்னாக்குவதுதான் பொதுமை. ‘இன்று போய் நின் தானையொடு நாளை வா!” என்பது கம்பன் தமிழ்! இந்தப் பொதுமையில்  பழகியவர்க்கு ‘வா! பிறந்து! என்பது மாற்றுச் சுவையைத் தரககூடும்!.

    நிறைவுரை

    இயற்கையைப் பாடலாம்! இறைவனைப பாடலாம்! தமிழைப் பாடலாம்! தத்துவத்தைப் பாடலாம்! ஆனால் தனிமனிதச் சிறப்புக்களைப் பாடுபொருளாக்கிக் கவிதைத் தொழில் செய்வது அவ்வளவு எளிதானதன்று. காரணம் பாட்டுடைத் தலைவனின் பண்புகளும் செயல்களுமே முன்னிற்பதால் கற்பனை குறைந்த அந்தச் சூழலில், அவற்றைக் கவிதையில் கொண்டுவருவது மிகமிகக் கடினம். ‘அன்பு மக்கள் கடலின் மீதில் அறிவுத் தேக்கம் தங்கத்தேரில்! என்று தந்தை பெரியாரைப் பாவேந்தரால் பாட முடிகிறது என்றால் அவர் பாவேந்தர்! அதனால் முடிகிறது!  ’சாவே! உனக்கொருநாள் சாவு வந்து சேராதோ?” என்ற கையறுநிலையில் நேருவைப் பாடவந்த கண்ணதாசன் சாவை நோக்கி ஏசுவது காண்க! “நான் வருகிறபோது மீண்டும் உன் (அண்ணாவின்)  இதயத்தைக் கொண்டு வந்து அவர் கால் மலரில் வைப்பேன்” என்னும் கற்பனையைக் கையறு நிலையில் கொண்டுவருவது கலைஞருக்கு எளிது! எல்லாருக்கும் எளிதன்று. பாடாண் மற்றும் கையறு நிலையில் நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பே இடம் பெறும். இத்தகைய இத்தகைய சிக்கலான துறையில் ‘நீ’ என்னும் முன்னிலையை உத்தியாக்கிக் கற்பனை கலந்து கவிதைத் தொழில் செய்து களவெற்றிக் கண்டிருக்கிறார் வசந்தராசன். மீள் பார்வை செய்யாததாலும், அவசரம் காரணமாகவும் எளிதாகத் தவிரத்திருக்க வேண்டிய யாப்புக் குறைகள் உட்பட சில குறைகள் ஆங்காங்கே தென்படுகின்றன.  இந்த ஆய்வு கொழுக்கட்டைச் சுவைபற்றியதாதலின் பானையின் ஓட்டையைப் பொருட்படுத்தவில்லை! தம்பி வசந்தராசனின் உள்ளங்கை விரல்களுக்கு ஒரு குருணி வாழ்த்துக்கள்!

    (தொடரும்)

    Share
  • A Blind Alley Ahead?

    A Blind Alley Ahead?

    Seshadri Baskar

    ADMK which was started fifty years ago (17th October 1972) is starting the Golden Jubilee Year. It was a big storm when the Famed MGR Started this party and it almost brought a death knell to the DMK. Karunanidhi started his downfall almost after this and due to misrule and other factors DMK Got the Power back after several years. Jaya who took the mantle took it to a big stride and she developed the party to its peak even bettering MGR. But all came became Topsy Turvy after corruption and adamancy became the order of the day. Then comes to the massive corruption and Emergence of Sasikala as a power centre.

    The rest is known to all. Till last month the seizure of the properties and Benami assets of sasi had totally wiped out her amassed wealth but she still holds a say in the party. After almost ten years the party is now routed and with all the party squabbles and greed among the party members at top level had razed it to ashes.

    Now sasi is attempting to make an entry and cases on top echelon is hanging like a Damocles sword. Unless OPS and EPS Join hands with a real seriousness and cope up with Sasi there is no way they can emerge successful. If its not done ADMK May be wiped out well before the next elections. And going by the present happenings their emergence back is highly doubtful. Its end of the road of the ADMK almost. There is no one there for a soul searching at this stage in the party but their strong Volunteer base is amazing which if kept alive can help to kick back to life some time later.

    But who will bell the cat? Is there any one there is a million dollar Question. Its time they have to wake up from the slumber.

    Share
  • குறளின் கதிர்களாய்…(372)

    குறளின் கதிர்களாய்…(372)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(372)

    மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
    தற்றது போற்றி யுணின்.

    – திருக்குறள் – 942(மருந்து)

    புதுக் கவிதையில்

    முன் உண்ட உணவு
    முழுமையாய்ச் செரித்ததா
    என்பதை
    உடல் குறிகளால்
    உணர்ந்தே அறிந்தபின் அளவாய்
    உண்டால் மேலும்,
    ஒருவனுக்கு
    உடற் பிணிகளுக்கான
    மருந்து என்பது
    வேண்டவே வேண்டாம்…!

    குறும்பாவில்

    உண்டது செரித்ததா என்பதை
    உடல்குறிகளால் அறிந்தபின் அதற்கேற்ப உண்பவனுக்கு
    உடற்பிணி மருந்தென்பதே வேண்டாம்…!

    மரபுக் கவிதையில்

    முதலி லுண்ட உணவெல்லாம்
    முழுதும் செரித்த நிலையதனை
    அதனுக் கான குறிகளினால்
    அறிந்த பின்னே அடுத்தவேளை
    மிதமா யுணவு உண்ணுதலே
    மிக்க நல்ல செயலாமே,
    அதனால் அவன்தன் உடற்பிணிகள்
    அகற்ற மருந்தே வேண்டாமே…!

    லிமரைக்கூ

    உணவது முதலில் உண்டது
    செரித்ததறிந்தே யுண்போர்க்கு மருந்தென்பதே வேண்டாம்,
    அனுபவ அறிவில் கண்டது…!

    கிராமிய பாணியில்

    தேவயில்ல தேவயில்ல
    மருந்தே தேவயில்ல,
    தேவைக்கேத்த ஒணவுதின்னா
    மருந்தே தேவயில்ல..

    மொதலுல தின்ன ஒணவு
    செமிச்சதாண்ணு
    ஒடம்புக் குறியளவச்சி
    நல்லா அறிஞ்சபின்னே
    அடுத்தவேள திங்கிறவன்
    ஒடம்புக்கு
    மருந்துண்ணு ஒண்ணு
    வேண்டவே வேண்டாம்..

    தெரிஞ்சிக்கோ,
    தேவயில்ல தேவயில்ல
    மருந்தே தேவயில்ல,
    தேவைக்கேத்த ஒணவுதின்னா
    மருந்தே தேவயில்ல…!

    Share
  • கோட்டையினில் கவியரசு

        புது கோட்டைகளில்  உன் முடியரசு
         மது  ஊற்றுகளில்      தமிழ்  குடியரசு
         உள  மாளிகையில்    பெருமா நிலஅரசு
         நீ  மாத்திரம்  தான்  கவி புவியரசு       ()
        செட்டினில்  நுழைந்ததும் மெட்டுவரும்
        மெட்டினில்  கலந்ததும்  சந்தம் வரும்
        சட்டென  சொற்களில் ஆற்றல்வரும்
        தட்டினில்  பதிவிடும் பாட்டுவரும்
        பள்ளி களறியா பாமரர்க்கும்
        கல்வி களறியா  காதலருக்கும்
        மல்யுத்தமறியா கோழையருக்கும்
        புரிந்திடும் உரந்தரம்  பொருளிருக்கும்   ()
        கண்ணனும் பிறந்து தவழ்ந்திடுவான்
       ஆயரின்  மடியினில் உறங்கிடுவான்
       மூங்கில்  காடுகள் குழலோதும்
       தூங்கிட   மருத்துவம் இது போதும்
        ஏய்த்தவர் இன்னும்   இருந்தாலும்
       ஏமாற்றியவர்  தான்  இளித்தாலும்
       கோட்டைகள்  உன்கொடி  பறக்குதய்யா
       கோபுரங்கள் பார் வணங்குதய்யா !!   ()
    Share
  • மைதிலி கண்ணன் வீட்டுக் கொலு

    மைதிலி கண்ணன் வீட்டுக் கொலு

    திருப்பதியில் வசிக்கும் மைதிலி கண்ணன் வீட்டுக் கொலு இதோ. அம்பாள் ஊர்வலத்தைத் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தியுள்ள விதம், அழகு. படிகள்தோறும் படிப்பினையைத் தரும் இந்த இனிய கொலுவைக் கண்டுகளியுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆண் சிலை – ஷைலஜாவின் கவிதை

    ஷைலஜாவின் ‘ஆண் சிலை’ கவிதை, அவரது குரலில்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வீட்டிலேயே சாம்பார் பொடி செய்வது எப்படி?

    வீட்டிலேயே சாம்பார் பொடி செய்வது எப்படி?

    கடைகளில் வாங்கும் சாம்பார் பொடியின் தரத்தில் உங்களுக்குச் சந்தேகம் இருக்கிறதா? வீட்டிலேயே நாமே எளிமையான முறையில் சாம்பார் பொடி செய்யலாம். நமக்கு ஏற்ற அளவில், விருப்பமான கலவையில், சுகாதாரமான, சுவையான சாம்பார் பொடி (குழம்புப் பொடி) தயாரிக்க முடியும். இதோ சுதா மாதவன் நமக்காகச் செய்து காட்டுகிறார். நீங்களும் செய்து பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மாதுளை அறுவடை

    மாதுளை அறுவடை

    நம் வீட்டுத் தோட்டத்தில் இன்று மாதுளை அறுவடை.

    இந்த நாள் இனிய நாள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பொம்மைகளை எடுத்து வைப்பது எப்படி?

    பொம்மைகளை எடுத்து வைப்பது எப்படி?

    கொலு முடிந்த பிறகு, பொம்மைகளைப் பாதுகாப்பாக எடுத்து வைப்பது, மிக முக்கியப் பணி. இதில் மிகுந்த கவனமும் பொறுமையும் வேண்டும். இதை எப்படிச் செய்வது? இதோ விளக்குகிறார், வெ.சுப்ரமணியன்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிவனை நம்பிய இஸ்லாமியர்

    சிவனை நம்பிய இஸ்லாமியர்

    சிதம்பரம் நடராஜர் கோவில் வாசலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி. மத நல்லிணக்கத்திற்கு ஓர் அடையாளம். இந்தியாவின் ஒற்றுமைக்கு ஓர் உதாரணம். வெ.சுப்ரமணியன் சொல்லும் சம்பவத்தைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சாய் குமாரின் அதிசயக் கொலு

    சாய் குமாரின் அதிசயக் கொலு

    25 நூல்களை எழுதியுள்ள ஆன்மிக எழுத்தாளர் சாய் குமார், தம் வீட்டில் 15 படிகள் கொண்ட மிகப் பெரிய கொலுவை அமைத்துள்ளார். நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த அபூர்வப் பொருள்கள் இந்தக் கொலுவை அலங்கரிக்கின்றன. இதில் பல அதிசயங்களைக் காட்சிப்படுத்தியுள்ளார். சித்தமெல்லாம் எனக்குச் சிவமயமே என்ற அர்ப்பணிப்புடன் இதை உருவாக்கியுள்ளார். இந்த அரிய கொலுவைக் கண்டுகளிக்க வாருங்கள்.

    சந்திப்பு – வெ.சுப்ரமணியன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share