- Wednesday, February 22, 2012, 11:24
- இலக்கியம், கவிதைகள்
கவிநயா
கண்ணூறச் செய்யும் பாசம் போல
கவியூறச் செய்கின்றது,
உன் நேசம்.
என் இதய வானத்தை
நிரந்தர பௌர்ணமியாக்குகிறது,
உன் மதி வதனம்.
என் எண்ணக் கூரையில்
இடைவெளியில்லாமல் வேயப் பட்டிருக்கின்றன,
உன் நினைவு நட்சத்திரங்கள்.
உன் அருட்பார்வைப் பொழிவிற்கென
ஆவலாய்க் காத்திருக்கிறது,
இந்தப் பாவை வனம்.
படத்திற்கு நன்றி:
http://www.innocentenglish.com/funny-amazing-pictures-videos/optical-illusions-3d/optical-illusion-pictures.html
Full story
- Wednesday, February 22, 2012, 5:10
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
புதுவை எழில்
முனைவர் மு.வ - அக்கால இளைஞர் அனைவர் நெஞ்சிலும் இடம் பெற்ற மூத்த தமிழ் அறிஞர்.அவர்தம் நூற்றாண்டு விழாவைப் பல இடங்களில் கொண்டாடி வருகிறார்கள், தாய்த் தமிழகத்தில். ஐரோப்பாவில் அதனை முதலில் கொண்டாடிய பெருமை பிரான்சு கம்பன் கழகத்தையே சாரும். தமிழறிஞர்கள், தமிழுக்கு உழைத்தவர்கள், விடுதலை வீரர்கள் எனப் பலருக்கும் நூற்றாண்டு விழா எடுக்கும் நல்ல வழக்கம் இக் கம்பன் கழகத்துக்கு உண்டு. அந்த வரிசையில், 19.02.2012 ஞாயிறு அன்று பிரான்சு கம்பன் கழகம், முனைவர் மு;வ அவர்களுக்கு விழா எடுத்தது. ...
Full story
- Tuesday, February 21, 2012, 11:36
- இலக்கியம், சிறுகதைகள்
பர்வதவர்தினி
“அழாதே கீதா! என்னாச்சுன்னு சொன்னாத்தானே தெரியும்? இந்தா கொஞ்சம் தண்ணி குடி!. குடிச்சுட்டு என்ன நடந்ததுன்னு சொல்லு” என்றாள் கல்யாணி.
கீதாவும் கல்யாணியும் கல்லூரித் தோழிகள். இருவரும் மாலைக் கல்லூரியில் படித்து வந்தார்கள். இவர்கள் முதன்முறை சந்தித்ததே தியாகராய நகர் பஸ்நிலையத்தில் தான்; அதுவும் கல்லூரிக்குச் செல்ல பேருந்துக்காகக் காத்திருக்கும் போதுதான். கீதா பி.ஏ வும், கல்யாணி பி.காமும் படித்துக் கொண்டிருந்தனர்.
இவர்கள் இருவரும் ...
Full story
- Tuesday, February 21, 2012, 10:37
- இலக்கியம், கவிதைகள்
ஜெ.ராஜ்குமார்
கண் உறங்கிக்
கண் விழிக்கிறோம் தினம்
கடவுளின் கருணையினால்!
உன் பிறப்பு
உன் இறப்பு தெரியாமல்
நீ வந்தாய் இவ்வுலகில்!
உன்னுடையதென்று எதுவும் இல்லை
என்பதே உண்மை!
உனக்கென வரலாறு நீ படைத்துச் சென்றாலும்...
எடுத்து செல்ல முடியாதே...!
உன்னோடு கடைசியில்.
எவரேனும் அதைக் கெடுத்து விடவும்
அனுமதி கிடையாது...!
உன் உயிரில்
ஒவ்வொரு உயிரையும் பார்த்தாலே
ஒரு துயரமும் வாராதே!
உண்மையான உறவுகளால்
ஒரு தொந்தரவும் வாய்க்காதே!
நன்மை செய் மனமே...!
உயிர் இருக்கும் வரையில்
உண்மை சொல் மனமே!
வன்மை ஒழித்திட்ட நாடு செய் மனமே!
கண் இமை போல் காத்தருள்வாய்
உன்னையே நம்பி இருக்கும் சொந்தங்களை...!
சோர்வு வேண்டாம்
சுறுசுறுப்பை மணந்து கொள்!
சிரிப்போடு
சிந்திப்பதையும் கற்றுக்கொள்!
சற்றும் தளரா
மனதாய் மாற்றிக்கொள்!
சருகாய் விழும் முன்
சரித்திரம் ...
Full story
- Tuesday, February 21, 2012, 10:24
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
பெருவை பார்த்தசாரதி
ஆசிரியர்கள்: “எனது பிறப்புக்குக் காரணமான பெற்றோர்களுக்கு நான் முதலில் கடமைப்பட்டிருப்பது போல, நான் முறையாக வாழ்வதற்கு வழிகாட்டிய எனது ஆசிரியர் அறிஞர் அரிஸ்டாட்டில் அவர்களுக்கு நான் இரண்டாவதாகக் கடமைப் பட்டிருக்கிறேன்" என்றார் மாவீரன் அலெக்சாண்டர்.
மருத்துவத் தொழில், வக்கீல் தொழில், ஆராய்ச்சி போன்ற பல துறைகளில், ஆசிரியப் பணியும் ஒரு உன்னதமான தொழில்களில் ஒன்று. ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையேயான உறவும், குடும்ப உறவைப் போலவே ஒரு வகையில் உன்னதமானதுதான்....
Full story
- Tuesday, February 21, 2012, 5:04
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
பேரா. பெஞ்சமின் லெபோ
புதுச்சேரியின் புகழ் பெற்ற பள்ளி - பெத்தி செமினரி உயர் நிலைப் பள்ளி.. அதில் மூன்றாம் படிவம் படித்துக்கொண்டிருந்த சமயம். அறிவின் மீது அடங்காத தாகம் ; கண்டதையும் படித்து முடித்துவிடவேண்டும் என்ற வேகம் ; தமிழின் மேல் தணியாத மோகம் - எனக்கு! விளைவு, உண்ணும் போது மட்டுமல்ல கண்ணுறங்கும் போது கூடக் கையில் புத்தகத்தோடுதான் இருப்பேன்.அப்போது, முனைவர் மு.வ அவர்களின் அறிமுகம் ...
Full story
- Monday, February 20, 2012, 16:03
- Featured, கட்டுரைகள்
சாந்தி மாரியப்பன்
மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் சந்திக்க நேரிடும் இன்பதுன்பங்கள், ஏற்றத்தாழ்வுகள், தோஷங்கள் எல்லாவற்றிற்கும் தன்னுடைய கர்ம வினைகளும், செய்த பாவங்களுமே காரணமென்று நம்புகிறான். இதிலிருந்து விடுபடவும், பயங்களைப் போக்கி கொள்ளவும் கடவுளைச் சரணடைகிறான். பூஜை புனஸ்காரங்கள், விரதங்கள் என்று விதவிதமான வழிபாடுகளை மேற்கொண்டாலும் அவன் நாடுவது இறையருளை மட்டுமே. எல்லா நாட்களிலும் இறைவனை வழிபட்டாலும் சில நாட்களுக்கும் மாதங்களுக்கும் மட்டும் தனிப்பட்ட சிறப்பு கிடைத்து விடுகிறது. உதாரணமாக, மார்கழி, புரட்டாசி, கார்த்திகை, தை ...
Full story
- Monday, February 20, 2012, 12:06
- Featured, இலக்கியம், சட்ட ஆலோசனைகள்
முனைவர் நாக பூஷணம்
சட்டத்தின் வட்டத்துள் வாழ்வாங்கு வாழ்வோம் - (பகுதி - 6)
சட்ட நுணுக்கங்களுக்குப் போகும்முன் என்னுடைய சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன். என் எண்ண ஓட்டம் தன்போக்கில் ஓடாவிட்டால் , எண்ணிறந்த கருத்துக்களைக் கண்டறிந்து எங்ஙனம் பகிர்ந்துகொள்ள இயலும்? இதில் வரலாறு எதற்கு? இன்றுள்ள நிலை என்ன? எதற்கு இந்த இலக்கிய நடை? என்பது போன்று உணர்த்த முற்படுவோர் உளர் என அறிகின்றேன். வரவேற்கின்றேன். என்றாலும் வரலாறு அறியாமல் வளர் நிலைக்கு வழிகாணல் இயல்பாக இருக்காது என்று நம்புவோரில் நானும் அடக்கம். நேற்றைய வளமையும் ...
Full story
- Monday, February 20, 2012, 10:28
- Featured, இலக்கியம், பத்திகள்
திவாகர்
நாடகம்-4 - விசாகப்பட்டினமும் முதல் தமிழ் நாடகமும்
விஜயவாடாவில் நாங்கள் போட்ட ‘ஒரு பெண் தேடுகிறோம்’ நாடகத்தைப் பற்றி அடுத்தநாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் விமர்சனம் எழுதினார் திரு வி.எஸ்.எஸ் (இவர் பிரபல விமர்சகர். அந்தக் கால கட்டத்தில் ஆனந்த விகடனில் வெளிவரும் நாடகங்கள், இசைக் கச்சேரிகள் பற்றிய இவரது விமர்சனங்கள் பிரபலமானவை) இவர் அன்று எங்கள் நாடகத்துக்கு வந்திருந்து, பார்த்து விட்டு பத்திரிக்கையில் எங்களை கிண்டலாக, குற்றம் சாட்டியிருந்தார். நிறைய நாடகங்கள் பார்த்த அனுபவஸ்தரானவர் எங்களை அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் எனப் பார்க்காமல் ப்ரொஃபெஷனல் ஆர்டிஸ்ட் போல, அதுவும் ...
Full story
- Monday, February 20, 2012, 10:09
- இலக்கியம், கவிதைகள்
செண்பக ஜெகதீசன்
மலையில் மழையது பெய்தால்
மண்ணில் குதித்திடும் அருவி.
சிலையாய் நின்றிடும் தெய்வம்
சிந்திடும் அழகுடன் அருளும்,
இலையில் விழுந்திடும் சோறே
ஏழையின் பசியை ஓட்டும்,
கலைபல கற்றிடும் வாய்ப்பைக்
காட்டிடும் இயற்கை இனிதே...!
அலையில் கதை சொல்லும் கடலும்,
ஆற்றில் காண்பது முயற்சி,
வலையில் வீழ்ந்திடும் மீனும்
வல்லமை காட்டிடும் புலியும்,
தலைகீழ் தொங்கிடும் வெளவால்
தந்திடும் பலப்பலப் பாடம்,
கலைபல கற்றிடும் வாய்ப்பைக்
காட்டிடும் இயற்கை இனிதே...!
படத்திற்கு நன்றி:
http://www.soultravelmultimedia.com/2011/09/04/30-breathtakingly-beautiful-nature-wallpapers Full story
- Monday, February 20, 2012, 7:47
- Featured, இலக்கியம், நேர்காணல்கள்
பவள சங்கரி
நேர்காணல் - சித்தார்த்தா பள்ளி மாணவர்கள்
உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற முடியாது.! - காந்தியடிகளின் இந்த சத்தியமான வார்த்தைகள் எக்காலத்திற்கும், மனிதராய்ப் பிறந்த எந்நாட்டவருக்கும் பொருந்தக்கூடியது.
ஒரு குழந்தை பிறந்தவுடன், பெற்றவர்களுக்குத் தம் குழந்தையின் எதிர்காலம் குறித்து பல கனவுகளும், கற்பனைகளும் உடன் தோன்றுவதும் இயற்கை. அதனை நன்முறையில் செயல்படுத்தும் வகையில் அவர்கள் மனதில் தோன்றக்கூடிய அடுத்த விசயம் குழந்தையின் கல்வி. தம் குழந்தையை, ஒரு பிரபலமான பள்ளியில் சிறந்த மாணவனாக உருவாக்க வேண்டும் என்பதுதான் ...
Full story
- Sunday, February 19, 2012, 15:33
- கட்டுரைகள், ஜோதிடம், வார ராசி பலன்
காயத்ரி பாலசுப்ரமணியன்
மேஷம்: குரு உங்கள் ராசியில் உள்ளார். சுய தொழில் புரிபவர்கள் கடனுக்குரிய தொகையைக் குறித்த கெடுவிற்குள் செலுத்துதல் நல்லது. 2-ல் கேது. 8-ல் ராகு. பொறுப்புக்களை வகிப்பவர்கள் சட்டம் தொடர்பான பிரச்னைகளில் தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டால், மன உளைச்சல் இராது. 5-ல் செவ்வாய். மாணவர்கள் நண்பர்களுடன் பொருட்களைப் பரிமாறிக் கொள்வதில் கவனமாக இருந்தால், வீண் தொல்லைகள் வராமலிருக்கும். 7-ல் சனி. பண விவகாரங்களில் வாக்கைக் காப்பாற்றாமல் இழுத்தடிப்பவர்களின் சகவாசத்தை ஒதுக்குதல் மூலம் ...
Full story
- Sunday, February 19, 2012, 10:08
- home-lit, இலக்கியம், கவிதைகள்
பிச்சினிக்காடு இளங்கோ
கரைகளே இல்லாமல்
குளிர்ந்த நீரோடுஓடிக்கொண்டிருக்கும் நதி
நானும் என் உடலும்வெப்பமடைந்து வியர்க்கையில்அதில் விழுந்துதான் குளிர்கிறோம்குதூகலமடைகிறோம்
நான் நதியில் விழுந்துஅலையெழுப்பாமல்நதி என்னுள் விழுந்துஅலையெழுப்புகிறது
கண்ணுக்குள் நுழைந்துதாகம் தீர்க்கிறதுதாகத்தைத் தருகிறது
மாய மூலிகையாய்மருத்துவம் செய்கிறதுஇருள் நெஞ்சங்களில்வெள்ளையடிக்கிறது
கைகாட்டி எனக்குவழிகாட்டுகிறதுகலங்கரை விளக்காய்கரைசேர்க்கிறது
கல்லாய் இருந்த என்னைசிலை செய்த சிற்பி
கற்காலமாய் இருந்தேன்நிகழ்காலமாகவும்எதிர்காலமாகவும்நிரந்தரமானவனாகவும்ஆக்கியது அதுதான்
இந்தப்புல்லாங்குழலுக்குள்
...
Full story
- Sunday, February 19, 2012, 9:21
- இலக்கியம், கட்டுரைகள்
சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், என, பல்வேறு வகைப்பட்ட 90 க்கும் மேற்பட்ட அழிந்து கொண்டிருந்த ஓலைச்சுவடிகளுக்கு நூல் வடிவம் கொடுத்ததோடு, தம் வருங்காலச் சந்ததியினர் அறியும் வகையில், சமண சமய நூலான சீவக சிந்தாமணி நூலைக் கண்டறிந்து, சேகரித்ததோடு, அதனைப் பகுத்தாய்ந்து, அதற்கான தெளிவான உரையும் எழுதி, தம்முடைய 84வது வயது வரையிலான இறுதிக் காலம் வரை ஓய்வில்லாது உழைத்து அரும்பாடுபட்டு எழுதி வழங்கியுள்ளார். சங்ககாலத் தமிழும் பிற்காலத் ...
Full story
- Saturday, February 18, 2012, 18:44
- home-lit, இலக்கியம், சிறுகதைகள்
வே.முத்துக்குமார்
சண்முகம் மாமா இறந்த செய்தியை முதலில் அப்பாவிடம் சொன்னது காந்தி அக்கா வீட்டு அத்தான் தான். எதுவும் பேசாமல் அப்பா அமைதியாக இருக்க கையிலிருந்த அன்றைய தினசரியை விரித்துப் பிடித்தவாறு சொன்னார்.
'மாணிக்க வாசகர் மன்றத்துலேர்ந்து திருவாசக முற்றோதுதலுக்காக திருநெல்வேலியிலிருந்து பன்னிரெண்டு பேரு தஞ்சாவூருக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி போயிருக்காங்க. அதுல நம்ம சண்முகம் அண்ணாச்சியும் கூட போயிருக்காங்க. முற்றோதுதலை முடிச்சுகிட்டு ராத்திரி ஏழு மணிக்கு அங்கேயிருந்து கிளம்பியிருக்காங்க. அதிகாலையில கங்கைகொண்டான் ...
Full story
- Saturday, February 18, 2012, 11:07
- இலக்கியம், கவிதைகள்
தேவா
காளிக்குக் கிடா வெட்டுதல்,
கழுத்தில் தாயத்துக் கட்டுதல்,
மூட நம்பிக்கையாம்,
சொன்னது தந்தை..
வேலை வாய்ப்பு அலுவலகத்தில்
பதிவு செய்யச் சொன்னதும் அவரே;
தந்தைக்குத் தெரியாது,
இதுவும் ஒரு மூட நம்பிக்கை என்று.
படத்திற்கு நன்றி:
http://www.dailymail.co.uk/news/article-508547/Numbers-claiming-unemployment-benefit-drops-32-year-low.html Full story
- Friday, February 17, 2012, 14:36
- home-lit, இலக்கியம், கட்டுரைகள்
சு.கோதண்டராமன்
ஐந்தெழுத்து
அம்மையாரின் பாடல்களில் சிவன் என்ற சொல் காணப்படாதது போல, அதை ஒட்டிப் பிறந்த நமசிவாய மந்திரமும் காணக் கிடைத்திலது. திருவிரட்டை மணிமாலையில் 10 மற்றும் 16 ஆவது பாடல்களில் வரும் ஐந்து என்ற சொல் நமசிவாய மந்திரத்தைக் குறிப்பதாகச் சிலர் பொருள் கொள்கின்றனர். கூர்ந்து நோக்கினால் உண்மையை உணரலாம்.
தலையாய ஐந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து
தலையா யினவுணர்ந்தோர் காண்பர் தலையாய...
Full story
- Friday, February 17, 2012, 9:41
- home-lit, இலக்கியம், பத்திகள்
அன்பு நண்பர்களே,
சிங்கப்பூரில் தற்சமயம் கப்பல் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் திரு விஜயகுமார் உலக அளவில் ஏற்கனவே அறிமுகமானவர்தான்.
‘கல்லிலே கலை வண்ணம் கண்டோம்’ எனும் பெயரில் அருமையான வலைப் பூவை நடத்தி வருபவர். காணக் கிடைக்காத சிற்பங்களையும், அறிவறியாத சிற்பங்களையும் இந்த வலைப் பூவின் மூலம் மலரவிட்டு அந்தச் சிற்பங்களின் வளமான சுகமான வாசனையைப் பரவச் செய்தவர். கோவை செம்மொழி மாநாட்டில் இவரது சிற்ப்ங்களைப் பற்றிய ஆய்வுக்கட்டுரை வாசிப்பு பலரது பாராட்டைப் ...
Full story
- Friday, February 17, 2012, 6:18
- இலக்கியம், கவிதைகள்
ஸ்ரவாணி
மாந்தோப்பிற்கு ஒத்தையில் வா என
மறைவாய் சேதி சொல்லிப் போனவரே ஓடோடி நான் வந்தேன் -தோப்பில் மாங்காயும் இல்லை மன்மதரும் இல்லை மங்கை நான் தனிமரமாய்த் தான் நின்றேன் .....
ஆத்தங்கரைப் பக்கம் நீராடும் சாக்கில் வா விஷயம் ஒண்ணு காத்திருக்கு என சொல்லிப் போனவரே மஞ்சத் தேய்ச்சுக் குளிச்சாச்சுஆத்துல மீனையும் காணலகள்வரையும் தான் காணல ....
சந்தைப் பக்கம் சந்தடி இல்லாம நீ ...
Full story
- Thursday, February 16, 2012, 5:19
- home-lit, இலக்கியம், பத்திகள்
வெங்கட் சாமிநாதன்
நினைவுகளின் சுவட்டில் - பாகம் - II (பகுதி - 38)
காலையில் எழுந்து பார்த்தால் கம்பும் கழியுமாக ரயில் நிலைய ப்ளாட்ஃபாரத்தில் இருந்த கூட்டம் இல்லை. ஆனால் ரயில் நிலையத்துக்கு வெளியே சுற்றிலும் அவர்களின் நடமாட்டம் இருந்தது. இரவில் பார்த்த பத்துப் பதினைந்து பேருக்கு மேலாக நிறையப் பேரின் நடமாட்டம் இருந்தது. இவர்கள எல்லாம் சுற்று வட்டார கிராமத்து ஜனங்கள். என்றார் ஜார்ஜ்.
சரி வாங்க காலைக் கடனெல்லாம் முடித்துவிட்டு குளித்து ஏதாச்சும் சாப்பிடலாம் என்று கிளம்பினோம். ஸ்டேஷனில் தான் எல்லா வசதிகளும் இருக்குமே. அது ஒரு ...
Full story
- Thursday, February 16, 2012, 5:00
- home-lit, இலக்கியம், கட்டுரைகள்
நாகேஸ்வரி அண்ணாமலை
இந்தியாவில் திருமணம் என்றாலே அது ஒரு பெண்ணிற்கும் ஆணிற்கும் இடையே நடக்கும் ஒரு ஒப்பந்தம் என்றுதான் வழங்கி வருகிறது. இந்தியாவில் ஓரினச் சேர்க்கையில் நாட்டமுடையவர்கள் இருந்தாலும் இன்னும் அதற்கு சமூக அங்கீகாரம் இல்லையாதலால் பலர் அதை வெளியில் காட்டிக் கொள்வதில்லை என்கிறார்கள். அதனால்தான் அதற்குரிய புள்ளி விபரங்கள் நம் நாட்டில் கிடைக்கவில்லை. வெளிப்படையாக ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் பகிரங்கமாகத் திருமணம் செய்துகொண்டதாகச் செய்தி எதுவும் இல்லை.
அமெரிக்காவில் திருமணம் என்ற ...
Full story
- Thursday, February 16, 2012, 4:32
- home-lit, இலக்கியம், பத்திகள்
பாஸ்கர பாரதி
'என்னங்க.. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி, வாடகை வீட்டுலயே காலத்தை கழிக்கப் போறோம்?' - மனைவியின் குரல்.
'ஏன்டா.. இப்பத்தான் அப்பாவோட ரிடையர்மென்ட் பணம் இருக்கே.. அது அப்படியே செலவாறதுக்குள்ளே ஏதாவது நெலமோ ஃப்ளாட்டோ வாங்கிப் போட்டா நல்லா இருக்கும் இல்லே..?- இது அம்மாவின் ஆதங்கம்.
'இதோ பாருடா.., 'ஹிண்டு'வுல இன்னைக்கி ஒரு 'அட்வர்டைஸ்மென்ட்' வந்திருக்கு, 'ஸ்டேஷன்'ல இருந்து அரை கி. மீ. தானாம். எப்படியும் அம்பதாயிரத்துக்கு ...
Full story
- Wednesday, February 15, 2012, 5:15
- home-lit, இலக்கியம், கவிதைகள்
கவிநயா
கயிலாய நாதனுக்கு கல்யாணமாம்
கயிலாய மலையெங்கும் கொண்டாட்டமாம்எயிலெ ல்லாம் நீறாக முறுவலித்த சிவனுக்கு,அயி லேந்தும் அரனுக்கு கல்யாணமாம்! நந்திதேவர் மேளங் கொட்டிச் சொல்லநாரதர் கீதத்தில் சேதி சொல்லவாயுதேவன் தென்றல் வீசிச் சொல்லவானவர் எல்லோரும் கூடினராம்! தடாதகைப் பிராட்டிக்கு கல்யாணமாம்தரணியில் எங்கெங்கும் கொண்டாட்டமாம்திக்குகள் அத்தனையும் தனியளாய் வென்றிட்டதென்னவளாம் தேவிக்கு கல்யாணமாம்! மதுரையில் எங்கிலும் முரசொலிக்க, அதுமாநில மெங்கிலும் எதிரொலிக்க...
Full story
- Wednesday, February 15, 2012, 5:09
- home-lit, இலக்கியம், பத்திகள்
அவ்வை மகள்
முதல் வெட்டு கணக்காய் கணக்கின் மீது விழுந்தது!
கல்வியில் வெகுகாலமாக ஒரு போக்கு நிலவி வந்திருக்கிறது. அது என்னவென்றால்: மாணவர்கள் என்பவர்கள் வெற்றுப் பாத்திரங்கள்! இந்த வெற்றுப் பாத்திரங்கள் ஒரு ஆசிரியரின் முன்வந்து அமருவன – அவ்வாறு அமர்ந்த அப்பாத்திரங்களுக்கு, ஆசிரியரானவர் கல்வி வார்த்து அவற்றை இட்டு நிரப்புவார்!!கல்விக்குத் தரப்பட்ட இந்த வடிவமைப்பை ஒரு மாபெரும் அறிவார்ந்த அறிவாக – அசைக்கமுடியாத விதியாக – வழக்கமாக்கி - அச்சேற்றி – அரசாணை செய்த கதையாய் ...
Full story
- Wednesday, February 15, 2012, 4:58
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
இன்னம்பூரான்
வாசகர் ஒருவர், ஏலம் பிடிப்பதில் கூட்டுக்களவாணித்தனத்தை பற்றி, இத்தொடரின் பின்னூட்டத்தில், கேள்வி எழுப்பியிருந்தார். இன்றைய (11 02 2012) ஊடகச்செய்தி அதற்கு பிரமாணத்துடன் பதில் அளிக்கிறது. அதை படித்தவுடன் நினைவில் வந்தது, 1956/57ல் அக்காலத்து சென்னை மாகாண அரசாணை ஒன்றை தணிக்கை செய்தது. அந்த அரசாணை குறிப்பிட்ட நபரின் பெயர் நன்றாக நினைவில் இருக்கிறது. அவருடைய சந்ததியின் மனம் புண் படலாகாது என்று அதைச் சொல்ல வில்லை. அவர் ஒரு உயர் போலீஸ் அதிகாரி. மக்களிடையே ...
Full story