- Wednesday, February 22, 2012, 5:10
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
புதுவை எழில்
முனைவர் மு.வ - அக்கால இளைஞர் அனைவர் நெஞ்சிலும் இடம் பெற்ற மூத்த தமிழ் அறிஞர்.அவர்தம் நூற்றாண்டு விழாவைப் பல இடங்களில் கொண்டாடி வருகிறார்கள், தாய்த் தமிழகத்தில். ஐரோப்பாவில் அதனை முதலில் கொண்டாடிய பெருமை பிரான்சு கம்பன் கழகத்தையே சாரும். தமிழறிஞர்கள், தமிழுக்கு உழைத்தவர்கள், விடுதலை வீரர்கள் எனப் பலருக்கும் நூற்றாண்டு விழா எடுக்கும் நல்ல வழக்கம் இக் கம்பன் கழகத்துக்கு உண்டு. அந்த வரிசையில், 19.02.2012 ஞாயிறு அன்று பிரான்சு கம்பன் கழகம், முனைவர் மு;வ அவர்களுக்கு விழா எடுத்தது. ...
Full story
- Tuesday, February 21, 2012, 10:24
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
பெருவை பார்த்தசாரதி
ஆசிரியர்கள்: “எனது பிறப்புக்குக் காரணமான பெற்றோர்களுக்கு நான் முதலில் கடமைப்பட்டிருப்பது போல, நான் முறையாக வாழ்வதற்கு வழிகாட்டிய எனது ஆசிரியர் அறிஞர் அரிஸ்டாட்டில் அவர்களுக்கு நான் இரண்டாவதாகக் கடமைப் பட்டிருக்கிறேன்" என்றார் மாவீரன் அலெக்சாண்டர்.
மருத்துவத் தொழில், வக்கீல் தொழில், ஆராய்ச்சி போன்ற பல துறைகளில், ஆசிரியப் பணியும் ஒரு உன்னதமான தொழில்களில் ஒன்று. ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையேயான உறவும், குடும்ப உறவைப் போலவே ஒரு வகையில் உன்னதமானதுதான்....
Full story
- Tuesday, February 21, 2012, 5:04
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
பேரா. பெஞ்சமின் லெபோ
புதுச்சேரியின் புகழ் பெற்ற பள்ளி - பெத்தி செமினரி உயர் நிலைப் பள்ளி.. அதில் மூன்றாம் படிவம் படித்துக்கொண்டிருந்த சமயம். அறிவின் மீது அடங்காத தாகம் ; கண்டதையும் படித்து முடித்துவிடவேண்டும் என்ற வேகம் ; தமிழின் மேல் தணியாத மோகம் - எனக்கு! விளைவு, உண்ணும் போது மட்டுமல்ல கண்ணுறங்கும் போது கூடக் கையில் புத்தகத்தோடுதான் இருப்பேன்.அப்போது, முனைவர் மு.வ அவர்களின் அறிமுகம் ...
Full story
- Monday, February 20, 2012, 16:03
- Featured, கட்டுரைகள்
சாந்தி மாரியப்பன்
மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் சந்திக்க நேரிடும் இன்பதுன்பங்கள், ஏற்றத்தாழ்வுகள், தோஷங்கள் எல்லாவற்றிற்கும் தன்னுடைய கர்ம வினைகளும், செய்த பாவங்களுமே காரணமென்று நம்புகிறான். இதிலிருந்து விடுபடவும், பயங்களைப் போக்கி கொள்ளவும் கடவுளைச் சரணடைகிறான். பூஜை புனஸ்காரங்கள், விரதங்கள் என்று விதவிதமான வழிபாடுகளை மேற்கொண்டாலும் அவன் நாடுவது இறையருளை மட்டுமே. எல்லா நாட்களிலும் இறைவனை வழிபட்டாலும் சில நாட்களுக்கும் மாதங்களுக்கும் மட்டும் தனிப்பட்ட சிறப்பு கிடைத்து விடுகிறது. உதாரணமாக, மார்கழி, புரட்டாசி, கார்த்திகை, தை ...
Full story
- Sunday, February 19, 2012, 15:33
- கட்டுரைகள், ஜோதிடம், வார ராசி பலன்
காயத்ரி பாலசுப்ரமணியன்
மேஷம்: குரு உங்கள் ராசியில் உள்ளார். சுய தொழில் புரிபவர்கள் கடனுக்குரிய தொகையைக் குறித்த கெடுவிற்குள் செலுத்துதல் நல்லது. 2-ல் கேது. 8-ல் ராகு. பொறுப்புக்களை வகிப்பவர்கள் சட்டம் தொடர்பான பிரச்னைகளில் தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டால், மன உளைச்சல் இராது. 5-ல் செவ்வாய். மாணவர்கள் நண்பர்களுடன் பொருட்களைப் பரிமாறிக் கொள்வதில் கவனமாக இருந்தால், வீண் தொல்லைகள் வராமலிருக்கும். 7-ல் சனி. பண விவகாரங்களில் வாக்கைக் காப்பாற்றாமல் இழுத்தடிப்பவர்களின் சகவாசத்தை ஒதுக்குதல் மூலம் ...
Full story
- Sunday, February 19, 2012, 9:21
- இலக்கியம், கட்டுரைகள்
சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், என, பல்வேறு வகைப்பட்ட 90 க்கும் மேற்பட்ட அழிந்து கொண்டிருந்த ஓலைச்சுவடிகளுக்கு நூல் வடிவம் கொடுத்ததோடு, தம் வருங்காலச் சந்ததியினர் அறியும் வகையில், சமண சமய நூலான சீவக சிந்தாமணி நூலைக் கண்டறிந்து, சேகரித்ததோடு, அதனைப் பகுத்தாய்ந்து, அதற்கான தெளிவான உரையும் எழுதி, தம்முடைய 84வது வயது வரையிலான இறுதிக் காலம் வரை ஓய்வில்லாது உழைத்து அரும்பாடுபட்டு எழுதி வழங்கியுள்ளார். சங்ககாலத் தமிழும் பிற்காலத் ...
Full story
- Friday, February 17, 2012, 14:36
- home-lit, இலக்கியம், கட்டுரைகள்
சு.கோதண்டராமன்
ஐந்தெழுத்து
அம்மையாரின் பாடல்களில் சிவன் என்ற சொல் காணப்படாதது போல, அதை ஒட்டிப் பிறந்த நமசிவாய மந்திரமும் காணக் கிடைத்திலது. திருவிரட்டை மணிமாலையில் 10 மற்றும் 16 ஆவது பாடல்களில் வரும் ஐந்து என்ற சொல் நமசிவாய மந்திரத்தைக் குறிப்பதாகச் சிலர் பொருள் கொள்கின்றனர். கூர்ந்து நோக்கினால் உண்மையை உணரலாம்.
தலையாய ஐந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து
தலையா யினவுணர்ந்தோர் காண்பர் தலையாய...
Full story
- Thursday, February 16, 2012, 5:00
- home-lit, இலக்கியம், கட்டுரைகள்
நாகேஸ்வரி அண்ணாமலை
இந்தியாவில் திருமணம் என்றாலே அது ஒரு பெண்ணிற்கும் ஆணிற்கும் இடையே நடக்கும் ஒரு ஒப்பந்தம் என்றுதான் வழங்கி வருகிறது. இந்தியாவில் ஓரினச் சேர்க்கையில் நாட்டமுடையவர்கள் இருந்தாலும் இன்னும் அதற்கு சமூக அங்கீகாரம் இல்லையாதலால் பலர் அதை வெளியில் காட்டிக் கொள்வதில்லை என்கிறார்கள். அதனால்தான் அதற்குரிய புள்ளி விபரங்கள் நம் நாட்டில் கிடைக்கவில்லை. வெளிப்படையாக ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் பகிரங்கமாகத் திருமணம் செய்துகொண்டதாகச் செய்தி எதுவும் இல்லை.
அமெரிக்காவில் திருமணம் என்ற ...
Full story
- Wednesday, February 15, 2012, 4:58
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
இன்னம்பூரான்
வாசகர் ஒருவர், ஏலம் பிடிப்பதில் கூட்டுக்களவாணித்தனத்தை பற்றி, இத்தொடரின் பின்னூட்டத்தில், கேள்வி எழுப்பியிருந்தார். இன்றைய (11 02 2012) ஊடகச்செய்தி அதற்கு பிரமாணத்துடன் பதில் அளிக்கிறது. அதை படித்தவுடன் நினைவில் வந்தது, 1956/57ல் அக்காலத்து சென்னை மாகாண அரசாணை ஒன்றை தணிக்கை செய்தது. அந்த அரசாணை குறிப்பிட்ட நபரின் பெயர் நன்றாக நினைவில் இருக்கிறது. அவருடைய சந்ததியின் மனம் புண் படலாகாது என்று அதைச் சொல்ல வில்லை. அவர் ஒரு உயர் போலீஸ் அதிகாரி. மக்களிடையே ...
Full story
- Tuesday, February 14, 2012, 5:23
- home-lit, இலக்கியம், கட்டுரைகள்
ஸ்ரீஜா வெங்கடேஷ்
பதினைந்து வயதுச் சிறுவன் ஒருவன் தனக்கு கற்பிக்கும் ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்றிருக்கிறான். அதுவும் திட்டமிட்டு நிதானமாக செயல் படுத்தியிருக்கிறான். இவற்றிற்கு இடையே வெளிநாட்டினர் நம் கலாசாரத்தைப் பாராட்டி அதைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் இந்தியா வருகை என்ற செய்தி வேறு.
இவர்கள் எந்த கலாசாரத்தைத் தெரிந்து கொள்ளப் போகிறார்கள்? ஆசிரியர்களை பெற்றொருக்கும் மேலாக வைத்து அவர்களுக்கென ஒரு நாளையே ஒதுக்கி மரியாதை செய்யும் கலாசாரத்தையா? இல்லை தவறுகளைச் சுட்டிக் காட்டினார் என்று கொலை செய்த கலாசாரத்தையா? பெண்களை சக்தியின் சொரூபமாக வணங்கி ...
Full story
- Tuesday, February 14, 2012, 5:00
- home-lit, இலக்கியம், கட்டுரைகள்
தமிழ்த்தேனீ
“ காதலர் தினம் “
ஏன் என்று தெரியவில்லை எப்படி என்றால் பதிலில்லை தகுதிகள் யோசிக்கவில்லை அதிசயம் ஆனால் உண்மை விளைவுகள் தெரியாது! முன் பின் எனக்கு பழக்கமில்லை பார்த்தபின் உன்னை மறக்கவே இல்லைநீயும் என்போல்தானா தெரியவில்லைஆனாலும் உண்மை ...
Full story
- Monday, February 13, 2012, 15:15
- home-lit, இலக்கியம், கட்டுரைகள்
கேள்வி :
இத்தனை காலமாக இந்தியாவின் ஒரே செம்மொழி என்று கூத்தாடப்பட்டு வந்த வடமொழிக்கு இல்லாத, அதேபோது தமிழுக்கு மட்டுமே இருப்பதாக, நிறுவப்பட்ட சிறப்புகள் எவை? அவை நிறுவப்பட்ட பின்தான் - வேறுவழியின்றி - நம்மை மைய அரசு 'கண்டு' கொண்டதாக அறிகிறேன். தொன்மை, முன்மை, எண்மை, ஒண்மை, இனிமை தனிமை, இளமை, வளமை, இறைமை, மறைமை, தாய்மை, தூய்மை, அம்மை, செம்மை, இயன்மை, வியன்மை ஆகிய பதினாறும் செம்மொழிக்கு இலக்கணம் என்று படித்தேன். இவற்றில் வடமொழி பெறத் தவறிய தகுதிகள் ...
Full story
- Monday, February 13, 2012, 5:14
- இலக்கியம், கட்டுரைகள்
ராஜராஜேஸ்வரி
கஜப்பிருஷ்ட விமானம் அமைந்த 108 கோவில்களில் நூம்பல் அகத்தீஸ்வரர் ஆனந்தவல்லி அம்மனுடன் அருளும் பழமையான சிவாலயம் .சர்வதோஷ நிவர்த்தித் தலமாகத் திகழ்கிறது.
காசியில் அருள்புரியும் விஸ்வநாதருக்கு மிகவும் பிரியமான மலரே நூம்பல். ஒரு மகரிஷி அந்த மலரைக் கொண்டு வந்து இந்த சிவபெருமானைப் பூஜை செய்தார்.
அதன் காரணமாகவே இத்தலம் நூம்பல் என்று பெயர் பெற்றது. அகத்தியருக்கு சிவபெருமான் காட்சி கொடுத்த சிவாலயங்களில் இதுவும் ஒன்று. அதனால் சுவாமிக்கு அகத்தீஸ்வரர் என்ற பெயர் ...
Full story
- Monday, February 13, 2012, 5:01
- home-lit, இலக்கியம், கட்டுரைகள்
மோகன்குமார்
புதிதாக கதை எழுதுவோருக்கு சுஜாதா சொல்வார் : “உங்கள் தெருவில், அலுவலகத்தில் உங்களைச் சுற்றி என்னென்ன உள்ளது என்பதை எந்த அளவு கவனிக்கிறீர்கள்? முதலில் இதை ஆழ்ந்து கவனியுங்கள். இந்த, கூர்மையான பார்வை இன்றி எழுதவே முடியாது !” .
ஒரு குழப்பமான முடிச்சை போட்டு விட்டு படத்தின் முக்கிய கேரக்டர் இப்படி உன்னிப்பாய் கவனித்த ஒரு சிறு விஷயம் மூலம் அந்தச் சிக்கலை விடுவிப்பது தான் தங்க முடிச்சு !
கதை...
Full story
- Sunday, February 12, 2012, 5:00
- கட்டுரைகள், ஜோதிடம், வார ராசி பலன்
பிரபல சோதிடர் காயத்ரி பாலசுப்பிரமணியன்
மேஷம்: குரு 1-ல். கலைஞர்கள் தங்கள் திறமையால் போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி, புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். 2-ல் கேது. வியாபாரிகள் பணப்பெட்டி சாவி, பத்திரங்கள் முதலியவற்றை உங்கள் நேரடிக் கண்காணிப்பில் வைத்துக் கொள்வது அவசியம். 5-ல் செவ்வாய்.நிர்வாகத் துறையில் உள்ளவர்கள், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வேண்டியிருப்பதால், விழிப்புடன் இருத்தல் நல்லது. 7-ல் சனி. சுய தொழில் புரிபவர்கள் அதிகமாக கடன் வாங்குவதைக் குறைக்கவும். 11-ல் சூரியன்.புதன். மாணவர்கள் ...
Full story
- Saturday, February 11, 2012, 12:08
- கட்டுரைகள்
இன்னம்பூரான்
1.16: இனி ஸன் ட்ஸு பேசுவார். முதல் பகுதி: திட்டம் வகுப்பது:
1.17: சமர்க்கலை நாடாளுவதற்கு இன்றியமையாதது.
1.18: வாகை சூடினால் வாழ்வு. தோல்வி தழுவினால் சாவு. அரண் (இருந்தால்) காக்கும். (எதிரி) அகழ் கடந்தால் எல்லாம் இழந்தோம். எனவே, தீவிரமான ஆய்ந்து அறிதல் வேண்டும். சூழல் அறிய வேண்டும், அரசே.
1.19: தமிழிலக்கியம் கூறுவது என்ன? ஐயனாரிதனார் என்ற புலவரின் புறப்பொருள் வெண்பா மாலை ...
Full story
- Saturday, February 11, 2012, 6:16
- home-lit, இலக்கியம், கட்டுரைகள்
சீராசை சேதுபாலா
மொழிபெயர்ப்பைப் படித்தவுடன் எழுந்த சிந்தனைகளும் நூல் அறிமுகமும்।
படிக்கும் வாய்ப்பைத் தந்த பெரியவர், கண்ணதாசன் பதிப்பகம் மூலமாக 30க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்களை வெளிட்ட பெரியவர் லயன் சீனிவாசன்। ( அவரது ஆங்கில வலைப்பூ :
http://densrinivasan.blogspot.in/p/blog-page_09.html
மாணாக்கர்கள் மத்தியில் பள்ளி/கல்லூரிகளில் மாதிரி சட்டமன்றம்/பாராளுமன்றம் நடத்துவதைக் கேள்விப்பட்டிருக்கின்றோம்। நுகர்வோர் மன்றம் துளிர்விடத் ...
Full story
- Friday, February 10, 2012, 12:45
- இலக்கியம், கட்டுரைகள்
வசந்தா சுத்தானந்தம்
உலகத்தமிழ் பண்பாட்டு பேரவை துவக்க விழா, மற்றும் தமிழுறவு இலக்கியத் திங்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, உரையாற்றிய திருமதி வசந்தா சுத்தானந்தம், அவர்கள் உரையாற்றினார். அதில் அவர், புத்தகங்கள் தான் மிகப் பெரிய சொத்து. மனிதனை சாதாரண நிலையில் இருந்து மிகவும் உன்னதமான உயாந்த நிலைக்கு அழைத்துச் செல்வது புத்தகங்கள் தான்.
“ கற்க கசடறக் கற்பவைகற்றபின் நிற்க அதற்குத் தக”...
Full story
- Friday, February 10, 2012, 10:00
- Featured, கட்டுரைகள்
ஜெ.ராஜ்குமார்
ஏ! மானிடா, உன் பூத உடலாக நான் இருப்பதற்குப் பதிலாக, விலங்கினங்களாகவோ, பறவை இனங்களாகவோ பிறவி எடுத்திருக்கலாம். எத்தனையோ நன்மை புரிவதும்,கட்டுப்பாடோடும் இருக்கும் மனிதர்களுக்கிடையில் தீய மனிதர்களாக ஏன் நீங்களும் பிறவி எடுத்துள்ளீர்கள்.
எந்த ஒரு மிருகமும் தனக்குச் சோகம், அல்லது நிறையச் சந்தோஷம் வந்து விட்டதென்று மது அருந்துவதில்லை. மனிதன் மட்டும் தான் தனக்குச் சிந்தனை வரவில்லை எனவும், ஒரு ஸ்டைலுக்காகவும், தனிமையில் இருக்கும் போதும், சிகரெட் பிடித்துக் கொண்டு ...
Full story
- Thursday, February 9, 2012, 10:18
- கட்டுரைகள்
விசாலம்
இந்தத் தை மாதத்தில் ஆன்மீகத்துடன் நம் தேசத்தில் நடந்த முக்கிய நிகழ்வான "குடியரசு தினமும்" கொண்டாடப் படுகிறது. நமது பாரத நாடு அடிமைத் தளையில் சிக்கிக் கொண்டுத் தவித்த நேரத்தில், பலர் நம் நாட்டின் சுதந்திரத்திற்காகப் பல விதமாகப் போராடினர். சிலர் அஹிம்சையை மேற் கொண்டனர். சிலரோ இதை மட்டும் கொண்டால் காரியம் நடக்காது என்று உணர்ந்து தீவிரவாதத்தையும் எதிர் கொண்டனர். இதனால் பலியானவர்களில் ஒருவரான "பகத்சிங்"கை மறக்க முடியுமா?" திருப்பூர்க் குமரனைத்தான்" மறக்க முடியுமா? ...
Full story
- Thursday, February 9, 2012, 9:14
- இலக்கியம், கட்டுரைகள்
பாஸ்கர பாரதி
நேற்று நடந்தது. அதற்கு முதல் நாள். அல்லது, அதற்கும் முன்னர் நடந்தது. என்றோ எப்போதோ எப்படியோ நிகழ்ந்து விட்டதை எண்ணியெண்ணி, மாளாமல் மனத்துயரம் கொள்வோர் ஏராளம். நடந்திருக்கக் கூடாதுதான். ஆனாலும் நடந்தேறி விட்டது. அடிமனதில் வெகு ஆழமாக அழுத்தமாக இடம் பிடித்து விட்டத் துயர சம்பவம், கொடிய நிகழ்ச்சி.
இன்னும் எத்தனை நாட்களுக்கு உள்ளுக்குள்ளே புகைந்து கொண்டிருக்க அனுமதிக்கலாம்?. கவலை - ஒரு அதி பயங்கர நோய். தனக்குப் புகலிடம் ...
Full story
- Wednesday, February 8, 2012, 19:22
- இலக்கியம், கட்டுரைகள்
வி.டில்லிபாபு
(08.01.2012 அன்று பெங்களூரூ தமிழ்ச்சங்க அரங்கில் நிகழ்ந்த கருத்தரங்கில் ஆற்றிய உரை)
தமிழுக்கும் தொழிற்நுட்பத்திற்குமான உறவு நீண்ட நெடியது.
ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே,
ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி,
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.
பெண்பாற் புலவராக அறியப்படுகிற பொன்முடியார் எழுதிய பாடல் இது. பிள்ளையைப் பெற்றெடுத்தல் என் கடன், சான்றோனாக்குதல் தந்தையின் கடன் என ஒவ்வொருவரின் கடமையையும் பட்டியலிடுகிறாள் பண்டைய தமிழ்த்தாய்.
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
என்கிற வரியில் ...
Full story
- Wednesday, February 8, 2012, 10:04
- கட்டுரைகள்
பெருவை பார்த்தசாரதி
பள்ளிக்கூடங்கள்: (சென்ற இதழின் தொடர்ச்சி)
பள்ளிக்கூடங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றியச் செய்திகளைப், படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமோ, யாரையாவது கேட்டு அறிந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமோ யாருக்கும் வராது?. ஏனென்றால் எல்லோரும் இந்த அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள்.
இன்றைய பள்ளிக்கூடங்களில் செயல் படுத்தப்படும் கல்வி முறைகளில் இன்னும் பல மாற்றங்கள் வர வேண்டும் என்பதே ...
Full story
- Wednesday, February 8, 2012, 9:04
- Featured, கட்டுரைகள்
அவ்வை மகள்
வகுப்பறையில் மாணாக்கர்கள், பாடத்திலிருந்து விலகித் தாமே தமக்குள் நடத்திக் கொள்ளும் “தள்ளிய” கல்வியும் தாளாக் கல்வியும் கற்பித்தலின் வெள்ளாமை எனக் கண்டோம். இது தரும் விளைவு மாணாக்கர்களின் தேர்ச்சியில் எதிரொலிக்கின்றது, எதிரொளிக்கின்றது என்பதும் கண்டோம். கல்வியில் இது ஒரு எதிரிடை வினை. இது ஒரு ஆற்றல் கசிவு, இது ஒரு காலவிரயம், இது ஒரு மனிதவளச் சேதாரம், இது ஒரு மூலாதாரப் பலவீனம். ஒட்டு மொத்தத்தில் இது ஒரு நிரந்தர இழப்பு, ...
Full story
- Tuesday, February 7, 2012, 9:54
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
சு. கோதண்டராமன்
சைவத் தொட்டில் – சோழநாடு
தமிழ்நாட்டின் பிற பகுதிகள் போல் சோழ நாட்டிலும் சமண சாக்கியச் சமயங்கள் பெருகி வளர்ந்தன. புகழ் பெற்ற புத்த விகாரங்கள் இருந்த நாகப்பட்டினம், பூதமங்கலம் ஆகியனவும், காரைக்காலுக்கு மிக அருகாமையில் கொல்லார்புரம், புத்தர்குடி என வழங்கும் ஊர்ப் பெயர்களும், சம்பந்தர் திருநள்ளாறிலிருந்துத் திருத்தெளிச்சேரி வருமுன் அவரை வாதுக்கு அழைத்த சாக்கியர்கள் மீது இடி விழுமாறு செய்தார் என்ற பெரிய ...
Full story