- Wednesday, February 22, 2012, 11:24
- இலக்கியம், கவிதைகள்
கவிநயா
கண்ணூறச் செய்யும் பாசம் போல
கவியூறச் செய்கின்றது,
உன் நேசம்.
என் இதய வானத்தை
நிரந்தர பௌர்ணமியாக்குகிறது,
உன் மதி வதனம்.
என் எண்ணக் கூரையில்
இடைவெளியில்லாமல் வேயப் பட்டிருக்கின்றன,
உன் நினைவு நட்சத்திரங்கள்.
உன் அருட்பார்வைப் பொழிவிற்கென
ஆவலாய்க் காத்திருக்கிறது,
இந்தப் பாவை வனம்.
படத்திற்கு நன்றி:
http://www.innocentenglish.com/funny-amazing-pictures-videos/optical-illusions-3d/optical-illusion-pictures.html
Full story
- Tuesday, February 21, 2012, 10:37
- இலக்கியம், கவிதைகள்
ஜெ.ராஜ்குமார்
கண் உறங்கிக்
கண் விழிக்கிறோம் தினம்
கடவுளின் கருணையினால்!
உன் பிறப்பு
உன் இறப்பு தெரியாமல்
நீ வந்தாய் இவ்வுலகில்!
உன்னுடையதென்று எதுவும் இல்லை
என்பதே உண்மை!
உனக்கென வரலாறு நீ படைத்துச் சென்றாலும்...
எடுத்து செல்ல முடியாதே...!
உன்னோடு கடைசியில்.
எவரேனும் அதைக் கெடுத்து விடவும்
அனுமதி கிடையாது...!
உன் உயிரில்
ஒவ்வொரு உயிரையும் பார்த்தாலே
ஒரு துயரமும் வாராதே!
உண்மையான உறவுகளால்
ஒரு தொந்தரவும் வாய்க்காதே!
நன்மை செய் மனமே...!
உயிர் இருக்கும் வரையில்
உண்மை சொல் மனமே!
வன்மை ஒழித்திட்ட நாடு செய் மனமே!
கண் இமை போல் காத்தருள்வாய்
உன்னையே நம்பி இருக்கும் சொந்தங்களை...!
சோர்வு வேண்டாம்
சுறுசுறுப்பை மணந்து கொள்!
சிரிப்போடு
சிந்திப்பதையும் கற்றுக்கொள்!
சற்றும் தளரா
மனதாய் மாற்றிக்கொள்!
சருகாய் விழும் முன்
சரித்திரம் ...
Full story
- Monday, February 20, 2012, 10:09
- இலக்கியம், கவிதைகள்
செண்பக ஜெகதீசன்
மலையில் மழையது பெய்தால்
மண்ணில் குதித்திடும் அருவி.
சிலையாய் நின்றிடும் தெய்வம்
சிந்திடும் அழகுடன் அருளும்,
இலையில் விழுந்திடும் சோறே
ஏழையின் பசியை ஓட்டும்,
கலைபல கற்றிடும் வாய்ப்பைக்
காட்டிடும் இயற்கை இனிதே...!
அலையில் கதை சொல்லும் கடலும்,
ஆற்றில் காண்பது முயற்சி,
வலையில் வீழ்ந்திடும் மீனும்
வல்லமை காட்டிடும் புலியும்,
தலைகீழ் தொங்கிடும் வெளவால்
தந்திடும் பலப்பலப் பாடம்,
கலைபல கற்றிடும் வாய்ப்பைக்
காட்டிடும் இயற்கை இனிதே...!
படத்திற்கு நன்றி:
http://www.soultravelmultimedia.com/2011/09/04/30-breathtakingly-beautiful-nature-wallpapers Full story
- Sunday, February 19, 2012, 10:08
- home-lit, இலக்கியம், கவிதைகள்
பிச்சினிக்காடு இளங்கோ
கரைகளே இல்லாமல்
குளிர்ந்த நீரோடுஓடிக்கொண்டிருக்கும் நதி
நானும் என் உடலும்வெப்பமடைந்து வியர்க்கையில்அதில் விழுந்துதான் குளிர்கிறோம்குதூகலமடைகிறோம்
நான் நதியில் விழுந்துஅலையெழுப்பாமல்நதி என்னுள் விழுந்துஅலையெழுப்புகிறது
கண்ணுக்குள் நுழைந்துதாகம் தீர்க்கிறதுதாகத்தைத் தருகிறது
மாய மூலிகையாய்மருத்துவம் செய்கிறதுஇருள் நெஞ்சங்களில்வெள்ளையடிக்கிறது
கைகாட்டி எனக்குவழிகாட்டுகிறதுகலங்கரை விளக்காய்கரைசேர்க்கிறது
கல்லாய் இருந்த என்னைசிலை செய்த சிற்பி
கற்காலமாய் இருந்தேன்நிகழ்காலமாகவும்எதிர்காலமாகவும்நிரந்தரமானவனாகவும்ஆக்கியது அதுதான்
இந்தப்புல்லாங்குழலுக்குள்
...
Full story
- Saturday, February 18, 2012, 11:07
- இலக்கியம், கவிதைகள்
தேவா
காளிக்குக் கிடா வெட்டுதல்,
கழுத்தில் தாயத்துக் கட்டுதல்,
மூட நம்பிக்கையாம்,
சொன்னது தந்தை..
வேலை வாய்ப்பு அலுவலகத்தில்
பதிவு செய்யச் சொன்னதும் அவரே;
தந்தைக்குத் தெரியாது,
இதுவும் ஒரு மூட நம்பிக்கை என்று.
படத்திற்கு நன்றி:
http://www.dailymail.co.uk/news/article-508547/Numbers-claiming-unemployment-benefit-drops-32-year-low.html Full story
- Friday, February 17, 2012, 6:18
- இலக்கியம், கவிதைகள்
ஸ்ரவாணி
மாந்தோப்பிற்கு ஒத்தையில் வா என
மறைவாய் சேதி சொல்லிப் போனவரே ஓடோடி நான் வந்தேன் -தோப்பில் மாங்காயும் இல்லை மன்மதரும் இல்லை மங்கை நான் தனிமரமாய்த் தான் நின்றேன் .....
ஆத்தங்கரைப் பக்கம் நீராடும் சாக்கில் வா விஷயம் ஒண்ணு காத்திருக்கு என சொல்லிப் போனவரே மஞ்சத் தேய்ச்சுக் குளிச்சாச்சுஆத்துல மீனையும் காணலகள்வரையும் தான் காணல ....
சந்தைப் பக்கம் சந்தடி இல்லாம நீ ...
Full story
- Wednesday, February 15, 2012, 5:15
- home-lit, இலக்கியம், கவிதைகள்
கவிநயா
கயிலாய நாதனுக்கு கல்யாணமாம்
கயிலாய மலையெங்கும் கொண்டாட்டமாம்எயிலெ ல்லாம் நீறாக முறுவலித்த சிவனுக்கு,அயி லேந்தும் அரனுக்கு கல்யாணமாம்! நந்திதேவர் மேளங் கொட்டிச் சொல்லநாரதர் கீதத்தில் சேதி சொல்லவாயுதேவன் தென்றல் வீசிச் சொல்லவானவர் எல்லோரும் கூடினராம்! தடாதகைப் பிராட்டிக்கு கல்யாணமாம்தரணியில் எங்கெங்கும் கொண்டாட்டமாம்திக்குகள் அத்தனையும் தனியளாய் வென்றிட்டதென்னவளாம் தேவிக்கு கல்யாணமாம்! மதுரையில் எங்கிலும் முரசொலிக்க, அதுமாநில மெங்கிலும் எதிரொலிக்க...
Full story
- Tuesday, February 14, 2012, 6:37
- இலக்கியம், கவிதைகள்
தேவா
என் அக்காள் குழந்தைமேல் எனக்கு கோபம் வரும் என் அத்தை மகளின் முத்தங்களைப் பெறுவது அவள் தானே !!
படத்திற்கு நன்றி :
http://media.photobucket.com/image/mother%20and%20baby/reginalake/mother_and_baby.jpg?o=16
Full story
- Tuesday, February 14, 2012, 5:02
- இலக்கியம், கவிதைகள்
பாகம்பிரியாள்
நம் காதல் உலகின் விதையாய்
இரு என்று கேட்ட போது, இரு முளையாய் வரும் வரை காத்திருக்க முடியாது என்றாய். இலையாய் இருக்க சம்மதமா என்ற போது, என்னை உதிரச் சொல்கிறாயா என்று அழுதாய்! மலராய் இருப்பாயா என்ற போது, மாலைக்குப் பின் மங்கிப் போவதில் மகிழ்ச்சியா உனக்கு என்று அங்கலாய்த்தாய். கனியாய் இரு என்ற போது, காலம் தாண்டி விட்டால், ...
Full story
- Tuesday, February 14, 2012, 5:00
- home-lit, இலக்கியம், கவிதைகள்
சுபாஷிணி
யாதினும் யாதினும்
ஆதாம் ஏவாளின் ஆதி காதலினும்ஆதி பகவனின் அருட் காதலினும் அப்பரென நால்வரின் அழகு தேவாரக் காதலினும் அடியார்களின் இறை அடிமைக் காதலினும் அழல் சிவப்புச் சிவனைத் தலை நடையால் கண்ட காதலினும் ஆழ்வார்களின் தாசானு தாசனாய் அஞ்சிறு பெரு மடலேறிய அளப்பறியா அவஸ்தைக் காதலினும் அத்தனையும் ஒப்புக் கொடுத்தஆண்டாளின் காதலினும் அன்புக்காக அன்பு செய்த ...
Full story
- Tuesday, February 14, 2012, 4:36
- இலக்கியம், கவிதைகள்
ஜெ.ராஜ்குமார்
அள்ளி முடித்த கூந்தலைப்போல
ஆசை வருதடி உன்னை அள்ளிக் கொள்ளஇனிமையான உன் குரல் கேட்டுஈர்ப்பு வருதடி என் மனதுக்குள்ளஉண்மையான பெண்ணே உன்னைக் கண்டால்ஊமையாகி விடுதடி என் மொழிகளெல்லாம்எத்தனை நாள் உன்னைப் பார்த்தாலும் - என்ஏக்கம் மட்டும் குறையாதடி!ஐக்கியம் ஆகிவிட்டேன் - உன்னை நினைத்துஒரு பைத்தியமாய் அலைந்திருந்தேன்ஓடி வருவாயா எனைத் தேடிவருவாயா?
படத்திற்கு நன்றி :
http://www.ehow.com/how_4464628_impress-beautiful-indian-girl.html
Full story
- Monday, February 13, 2012, 4:47
- இலக்கியம், கவிதைகள்
செண்பக ஜெகதீசன்
தடியால் அடித்துத்
துவைத்த பின்னும்
கொடியின் பிடியை
விடவில்லை..
கொள்கைப் பிடிப்பு
குமரனுக்கு...
இன்று,
கொடியை மாற்றிப்
பிடிக்கின்றார்-
அடிக்க..
கொள்கைப் பிடிப்பு
கொஞ்சமும் இல்லாததாலே...!
படத்திற்கு நன்றி :
https://profiles.google.com/112497527148617020529/buzz/J3k4xtiCuiv Full story
- Sunday, February 12, 2012, 4:43
- இலக்கியம், கவிதைகள்
எல். கார்த்திக்
மீண்டுமொரு
யாருமற்ற இரவு ..
சிலத் துளி விஷம்
சில முழக் கயிறு
பளபளக்கும் கத்தி
இதயத் துடிப்பு குறைந்து எங்கும் நிசப்தம்....
படத்திற்கு நன்றி :
http://www.fanpop.com/spots/photoshop/images/876693/title/suicide-note-wallpaper Full story
- Thursday, February 9, 2012, 11:25
- இலக்கியம், கவிதைகள்
பிச்சினிக்காடு இளங்கோ
உங்களுக்கே தெரிந்த
குறியீடுகளைக் காட்டுங்கள்,
படிமப்படுத்துங்கள்
மனவெளி மின்னல்களை.
அகவயத் தேடல்களைச்
சித்திரமாக்குங்கள்,
உங்கள் மொழியில்
நடந்து செல்லுங்கள்.
விருப்பம் போல
நடந்து திரும்புங்கள்,
பத்திரப்படுத்துங்கள்
எந்தத் திறவுகோலுமின்றி.
வீடு கட்டுங்கள்
ஜன்னல்கள் இன்றி,
முட்டி மோதி
ரத்தம் கட்டிய நெற்றியோடு,
அதை
எத்துணை அடைமொழியோடும்
அழைக்க
நாங்கள் தயார்.
கருத்தரங்குகள்
காத்திருக்கின்றன
லாபமுமில்லை
நட்டமுமில்லை யார்க்கும்
ஆனாலும்
உங்கள் கவிதை
எல்லாரின் ஆய்விலும்
எடுத்துக்காட்டாய்
இடம் பெறும் லாபம் உங்களுக்கு.
படத்திற்கு நன்றி:
http://thetruthofsmallsteps.com/2010/04/02/write-on-%E2%80%93-the-personal-script Full story
- Wednesday, February 8, 2012, 11:26
- இலக்கியம், கவிதைகள்
பவள சங்கரி
பட்டொளிவீசும் பதின்மத்தின்
தலைவாசலில்பட்டுத்தெளியும் திருமணபந்தமெனும்சிறைவாசம்.
கடமையே கண்ணாக
கணவனின் சுகசீவனமேமாசற்ற கற்புநெறியாக
இனிய பதினாறில் இளம்தாயாகிமறுபிறவியாய்மகத்தான தலைப்பிரசவம்.
கனியும் காதலால் உறவுகளையும் சுமக்கும்அச்சாணியாய்குதூகலமான குடும்ப பாரம்.
தளிர்நடை பயிலும் முன்பே மூத்தாளாகஉயரச்செய்தவல்லமையான மறுபிரசவம்.
தொலைக்காட்சி திரைக்காட்சி அபூர்வமானகாலகட்டத்தில்கட்டில்காட்சியே பொழுதுபோக்காய்!
தொன்விருட்சமாய் விழுதுகள்இரத்த பந்தங்கள்சூப்பிய பனங்கொட்டையாய் சுண்டியவதனம்.
பொருளாதாரமும் வாழ்வாதாரமும்உராயும் கோட்டின்உளைச்சலின் உச்சம்.
குருதியும் கொதித்து இருதயமும் துடித்துபரிதவிக்கும் வேளைகிடுகிடுக்குமோசை படபடக்குமுயிர்.
சரசரக்கும் பாசக்கயிற்றை வீசிதுடிதுடிக்கும் உயிரைசிகரமேற்றும் ...
Full story
- Tuesday, February 7, 2012, 17:44
- இலக்கியம், கவிதைகள்
ஐயப்பன் கிருஷ்ணன்
சண்டையின் போதெழுந்த சுருக்கென்ற கோபத்தில் வெளியேறிச் சென்று தனெக்கெனத் துணையாய் என்றோ ஒப்புமையிட்ட பழைய நிலவொன்றைக் கையில் வைத்திருந்தாள்
பக்கத்திலேயே சில மான்களும், மீன்களும் பறவைகளுமென.
கடந்து வந்த காலங்களில் அவை மட்டும் அப்படியே மாறாமல் இருக்கிறது அவளின் நினைவேட்டில்.
படத்திற்கு நன்றி:
http://nature.desktopnexus.com/wallpaper/576630 Full story
- Monday, February 6, 2012, 11:42
- இலக்கியம், கவிதைகள்
பிச்சினிக்காடு இளங்கோ
படுக்கை விரிப்பை
எடுத்து உதறித்
தயார் செய்தது…
படுக்கையறையில்
தலையணை அருகில்
தாகத்திற்காகத் தண்ணீர் வைத்திருந்தது..
இருக்கையில் உட்கார வைத்துப்
பரிமாறியது…
இலையில்
குறையக் குறைய எடுத்து வைத்தது..
அடுத்த வேளைக்கு
என்ன வேண்டும்?
விருப்பம் கேட்டுச் சமைத்தது…
நாளைக்கு நான் உடுத்தும்
உடையைத் தயார் செய்தது
குளிக்கும் வரை காத்திருந்து
உதவி செய்தது எல்லாம்
மழையின் சாரலாய் ஈரப்படுத்துகிறது
வீட்டுக்கு வெளியே இருந்து
தனியாய்ச் சாப்பிடும்போது
படத்திற்கு நன்றி
: http://www.dawn.com/2011/10/21/bangladesh-old-alone-and-without-support.html Full story
- Saturday, February 4, 2012, 12:21
- இலக்கியம், கவிதைகள்
செண்பக ஜெகதீசன்
இரவு அழுதிருக்கிறது,
என்ன கவலையோ!..
காலைக் கதிரவன் வந்து
கண்ணீர் துடைக்கிறது..
கலங்கவில்லை.
காலடியில் புல்லெல்லாம்-
பல்லைக் காட்டுகிறது
பனித்துளியைத்
தலையில் தாங்கி...!
படத்திற்கு நன்றி:
http://www.sciencephoto.com/media/162428/view Full story
- Friday, February 3, 2012, 16:20
- Featured, இலக்கியம், கவிதைகள்
எழுதுவதிலும், வாசிப்பதிலும் பேரார்வம் கொண்டுள்ள கவிதாயினி கவிநயா, அமெரிக்க நாட்டில் வசிக்கும் ஒரு நாட்டியக் கலைஞர். இளமை விகடன், திண்ணை, திசைகள், போன்ற இணையப் பத்திரிக்கைகள் மூலம் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்
அம்மன் பாட்டு என்ற குழுமத்திலும் தொடர்ந்து தன் முத்திரையைப் பதித்து வருபவர் கவிநயா.
நினைவின் விளிம்பில் என்ற வலைப்பூவும் வைத்திருக்கிறார். நம் வல்லமையின் நலம் விரும்பியும் , ஆலோசகருமான திரு திவாகர் மூலமாக நம் வல்லமையிலும் தொடர்ந்து தம் ...
Full story
- Friday, February 3, 2012, 7:38
- இலக்கியம், கவிதைகள்
எல்.கார்த்திக்
உன் நினைவுகள்
என்னை வட்டமடித்துக் கொண்டிருக்க - உன்னைப் பிரிந்திருந்தால் குறையுமோ என நினைத்து இரு நாட்கள் நீ இல்லா தனிமையில் கழித்தேன்
உன் இருப்பை விட உன் இல்லாமை - உன் நினைவுகளைத் தூண்ட ஒரு வாரப் பிரிவு இரு நாட்களாகின...
பிரிதல் எளிதாம் - பிரிந்தே இருப்பது கடினமாம்
படத்திற்கு நன்றி:
http://www.pxleyes.com/blog/2009/06/100-touching-photos-expressing-loneliness-and-solitude/ Full story
- Wednesday, February 1, 2012, 19:46
- home-lit, இலக்கியம், கவிதைகள்
சாந்தி மாரியப்பன்
உதிரா இலைகளுடனும் அசையா மரங்களுடனும்
தானும் சோகத்தில் கலந்து கொண்ட
முதிராப் பூக்களை
நலம் விசாரிக்க வந்த பட்டாம்பூச்சி
வண்ணங்களையெல்லாம் உதிர்த்து நின்றது
குழந்தைகள் விளையாடாதிருந்த
பூங்காவில்..
சிறு நடை போட்டு வந்த
பிஞ்சுக்கூட்டத்தின்
விரல் பிடித்து வந்த தென்றல்,
கூத்தாடிக் கூத்தாடி உதிர்த்த இலைகளில்
ஒட்டிக் கொண்ட உற்சாக வர்ணங்களில்
புரண்டெழுந்த பூக்களைத்
தூரிகையாக்கித்
தீற்றிப் போகிறது வானவில்லை
பட்டாம்பூச்சியின் இறகுகளில்.
பிரபஞ்சமெங்கும் குளித்தெழுகிறது
வானவில்லின் நறுமணத்தில்.
Full story
- Monday, January 30, 2012, 12:00
- இலக்கியம், கவிதைகள்
நாகை வை. ராமஸ்வாமி
என்றென்றும் முழுநிலவே சொன்னேன்,
என்னருகே நீயிருந்தால் நீயிருந்தால் அன்பே.
பொய்யென்று பொய்யென்று எண்ணாதே,
மெய்யேதான் மெய்யேதான் சொன்னேன்.
துடுப்பில்லாப் படகாவேன்
காற்றில்லா மூச்சாவேன்
ஒளியில்லாக் கண்ணாவேன்
ஒலியில்லாச் சப்தமாவேன்
ஆண்டெல்லாம் அமாவாசை தானே,
கண்ணே நீயின்றேல் நீயின்றேல்.
என்னருகே பிரியாதிருந்திடு என்னன்பே,
என்றென்றும் முழுநிலவாய் நினைப்போம்.
என் துணையே எழுபதிலும் இணை பிரியாதவளே,
என் தோழியே, என்னருமை மனையாளே.
படத்திற்கு நன்றி:
http://www.123rf.com/photo_5594030_happy-elderly-couple-in-love-in-park.html Full story
- Sunday, January 29, 2012, 8:21
- home-lit, இலக்கியம், கவிதைகள்
யாழினி முனுசாமி
என் தோட்டத்தில்
கண் சிமிட்டிக் கொண்டிருந்த
நட்சத்திரங்களெல்லாம்
மேலே மேலே பறந்து சென்று
மேகத்துள் மறைந்து போயின.
வானில் மின்னிக் கொண்டிருக்கும்
மின்மினிகளை இரசித்துக் கொண்டிருக்கிறேன்.
படத்திற்கு நன்றி:
http://raefrazier.blogspot.com/2011/02/simple-pleasures.html Full story
- Saturday, January 28, 2012, 12:23
- home-lit, இலக்கியம், கவிதைகள்
ஐயப்பன் கிருஷ்ணன்
உன் சிறகின் ஓர் இழை பற்றிஉன்னோடு பறந்திடவேதுடிக்கிறது என் உள்ளம்
உன்னைத் தீண்டவென்று ஆவலுடன் எழுமென் கைகளுக்குத்தூது வரும் நாளொன்றில்கரம் பற்றென்கிறது மனம்.
மனமது தினம் தினம் உன் வருகை எதிர் பார்த்துஉயிர்ப் பறவையின் சிறகசைப்பைநீ கொண்டு செல்லும் நாளுக்காய் வாடி நிற்கிறது உயிர்.
படத்திற்கு நன்றி:
http://www.picturesdepot.com/wallpapers/12595/love.html Full story
- Thursday, January 26, 2012, 14:56
- இலக்கியம், கவிதைகள்
அவ்வைமகள்
வணக்கம்
தாயகத்தில் - தமிழ் மண்ணில் அனைவருக்கும் எனது குடியரசு தின வாழ்த்துக்கள்!!
எனது கவிதை ஒன்று இங்கே!
குடிமை பிறந்தது கொடியும் பறந்தது
விடுதலை வந்தது விடிவு பிறந்ததுகடுதலை அந்நியர் ஓடினர் பறந்துமுடிமை வாழ்வை முறியடித்ததால்அடிமை மரித்தது தீர்வு கிடைத்தது வீண்படிமை உணர்வு உதிர்ந்து மறைந்ததுகுடிமை பிறந்தது கொடியும் பறந்ததுஅடிப்படையான வேகம் விரைந்ததுதுடிப்பு பிறந்தது, பிடிப்பு மிகுந்ததுபடிப்பினை கண்டதால் வீரியம் நின்றதுபடிப்படியாக மதிப்பு வளர்ந்தது...
Full story