Archive for the ‘பத்திகள்’ Category

Page 1 of 1112345...10...Last »

டியூஷன் வகுப்பை எதிர்பார்ப்புடன் எண்ணியபடியே!!

டியூஷன் வகுப்பை எதிர்பார்ப்புடன் எண்ணியபடியே!!
  அவ்வை மகள் “செரியாத “ கல்வியின் சுமை..! (5) பள்ளி முடிந்த பின்பு டியூஷன் சென்டரிலோ அல்லது தன் வீட்டிலோ தான் எடுக்கும் டியூஷன் வகுப்பிற்காய்ப் பள்ளியில் பரிதவிப்புடன் காத்திருக்கும் கணித ஆசிரியர்கள் தாம் பணிபுரியும் பள்ளியில் மாணவர்களுக்கு எட்டும் வகையில் கணிதத்தைக் கற்பிக்கும் கடைமை துறந்து – சதா சர்வகாலமும் வேறெந்தச் சிந்தனையிலோ செயலிலோ ஈடுபட்டவராய் மெய்மறந்த ... Full story

டாக்டர்.. டாக்டர்..!!

டாக்டர்.. டாக்டர்..!!
  திவாகர் நாடகம்-4 - விசாகப்பட்டினமும் முதல் தமிழ் நாடகமும்   விஜயவாடாவில் நாங்கள் போட்ட ‘ஒரு பெண் தேடுகிறோம்’ நாடகத்தைப் பற்றி அடுத்தநாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் விமர்சனம் எழுதினார் திரு வி.எஸ்.எஸ் (இவர் பிரபல விமர்சகர். அந்தக் கால கட்டத்தில் ஆனந்த விகடனில் வெளிவரும் நாடகங்கள், இசைக் கச்சேரிகள் பற்றிய இவரது விமர்சனங்கள் பிரபலமானவை) இவர் அன்று எங்கள் நாடகத்துக்கு வந்திருந்து, பார்த்து விட்டு பத்திரிக்கையில் எங்களை கிண்டலாக, குற்றம் சாட்டியிருந்தார். நிறைய நாடகங்கள் பார்த்த அனுபவஸ்தரானவர் எங்களை அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் எனப் பார்க்காமல் ப்ரொஃபெஷனல் ஆர்டிஸ்ட் போல, அதுவும் ... Full story

திரை கடல் ஓடியும் அனுபவம் தேடு

திரை கடல் ஓடியும் அனுபவம் தேடு
அன்பு நண்பர்களே, சிங்கப்பூரில் தற்சமயம் கப்பல் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் திரு விஜயகுமார் உலக அளவில் ஏற்கனவே அறிமுகமானவர்தான். ‘கல்லிலே கலை வண்ணம் கண்டோம்’ எனும் பெயரில் அருமையான வலைப் பூவை நடத்தி வருபவர். காணக் கிடைக்காத சிற்பங்களையும், அறிவறியாத சிற்பங்களையும் இந்த வலைப் பூவின் மூலம் மலரவிட்டு அந்தச் சிற்பங்களின் வளமான சுகமான வாசனையைப் பரவச் செய்தவர். கோவை செம்மொழி மாநாட்டில் இவரது சிற்ப்ங்களைப் பற்றிய ஆய்வுக்கட்டுரை வாசிப்பு பலரது பாராட்டைப் ... Full story

தூய மத உணர்வின் அர்ப்பண ரூபம்!

தூய மத உணர்வின் அர்ப்பண ரூபம்!
வெங்கட் சாமிநாதன்  நினைவுகளின் சுவட்டில் - பாகம் - II (பகுதி - 38) காலையில் எழுந்து பார்த்தால் கம்பும் கழியுமாக ரயில் நிலைய ப்ளாட்ஃபாரத்தில் இருந்த கூட்டம் இல்லை. ஆனால் ரயில் நிலையத்துக்கு வெளியே சுற்றிலும் அவர்களின் நடமாட்டம் இருந்தது. இரவில் பார்த்த பத்துப் பதினைந்து பேருக்கு மேலாக நிறையப் பேரின் நடமாட்டம் இருந்தது. இவர்கள எல்லாம் சுற்று வட்டார கிராமத்து ஜனங்கள். என்றார் ஜார்ஜ். சரி வாங்க காலைக் கடனெல்லாம் முடித்துவிட்டு குளித்து ஏதாச்சும் சாப்பிடலாம் என்று கிளம்பினோம். ஸ்டேஷனில் தான் எல்லா வசதிகளும் இருக்குமே. அது ஒரு ... Full story

பாரதிப் பெருங்கடல் (4 )

பாரதிப் பெருங்கடல் (4 )
பாஸ்கர பாரதி 'என்னங்க.. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி, வாடகை வீட்டுலயே காலத்தை கழிக்கப் போறோம்?' - மனைவியின் குரல். 'ஏன்டா.. இப்பத்தான் அப்பாவோட ரிடையர்மென்ட் பணம் இருக்கே.. அது அப்படியே செலவாறதுக்குள்ளே ஏதாவது நெலமோ ஃப்ளாட்டோ வாங்கிப் போட்டா நல்லா இருக்கும் இல்லே..?- இது அம்மாவின் ஆதங்கம். 'இதோ பாருடா.., 'ஹிண்டு'வுல இன்னைக்கி ஒரு 'அட்வர்டைஸ்மென்ட்' வந்திருக்கு, 'ஸ்டேஷன்'ல இருந்து அரை கி. மீ. தானாம். எப்படியும் அம்பதாயிரத்துக்கு ... Full story

“செரியாத “ கல்வியின் சுமை..! (4)

“செரியாத “ கல்வியின் சுமை..! (4)
அவ்வை மகள் முதல் வெட்டு கணக்காய் கணக்கின் மீது விழுந்தது! கல்வியில் வெகுகாலமாக ஒரு போக்கு நிலவி வந்திருக்கிறது. அது என்னவென்றால்: மாணவர்கள் என்பவர்கள் வெற்றுப் பாத்திரங்கள்! இந்த வெற்றுப் பாத்திரங்கள் ஒரு ஆசிரியரின் முன்வந்து அமருவன – அவ்வாறு அமர்ந்த அப்பாத்திரங்களுக்கு, ஆசிரியரானவர் கல்வி வார்த்து அவற்றை இட்டு நிரப்புவார்!!கல்விக்குத் தரப்பட்ட இந்த வடிவமைப்பை ஒரு மாபெரும் அறிவார்ந்த அறிவாக – அசைக்கமுடியாத விதியாக – வழக்கமாக்கி - அச்சேற்றி – அரசாணை செய்த கதையாய் ... Full story

எனக்குக் கிடைத்த ஹில்ஸா மாச்…!

எனக்குக் கிடைத்த ஹில்ஸா மாச்...!
நினைவுகளின் சுவட்டில் - பகுதி - II (பாகம் - 37) வெங்கட் சாமிநாதன் வங்காளிகளுக்கு மிகவும் பிடித்தது ஹில்ஸா மாச் அது புர்லாவில் கிடைப்பதில்லை. அதை யாராவது கல்கத்தாவிலிருந்து வந்தால் வாங்கி வருவார்கள். அப்படி அபூர்வமாக வருவதை புர்லாவிலிருக்கும் மற்ற வங்காளிகளுடன் யாரும் பகிர்ந்து கொள்வார்களா என்ன? மிருணால் சொன்னான்,.’ என் தங்கை வரவிருக்கிறாள். அப்போது அவளிடம் கட்டாயம் ஹில்ஸா மாச் வாங்கிக் கொடுத்து விடுவார்கள். அப்போ உன்னைக் கூப்பிடுவேன். கட்டாயம் வரணும்,” என்று சொல்லியிருக்கிறான். முதலில் ... Full story

அள்ளக் குறையாத ஐஸ்வர்யங்கள்!

அள்ளக் குறையாத ஐஸ்வர்யங்கள்!
அன்பு நண்பர்களே! திரு பாஸ்கர பாரதி, கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகங்கள் கொண்ட நாயகர் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணை நல்லூரைச் சேர்ந்தவர். சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் வருமானவரி அலுவலர் பதவியில் உள்ளவர். இவர் திருக்குறள் 1330 குறள்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வல்லுநர். ”வல்லமை தாராயோ” என்ற இவருடைய மேடை நாடகம் , தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய அகில இந்திய நாடக விழாவில் , ‘வித்தியாசமான ... Full story

“செரியாத “ கல்வியின் சுமை..!

அன்பு நண்பர்களே, ”குருவில்லா வித்தை சிறக்காது “ என்பது ஆன்றோர்களின் வேத வாக்கு. ஆயினும், “ஒன்று எவ்வாறு சொல்லித்தரப் படுகின்றதோ அதுவே அது எவ்வாறு கற்றுக் கொள்ளப் படுகின்றது என்பதை முடிவு செய்கின்றது” என்ற ஆணித்தரமான தம் வாதத்தை அழகுற நடாத்திச் செல்லும், ’அவ்வை மகள்’ என்கிற முனைவர் ரேணுகா ராஜசேகரனின் ஆக்கப்பூர்வமான அறிவியல் சார்ந்த கட்டுரைகள், கற்பித்தலில் உள்ள குறைபாடுகளைக் களையும் முகமாக தொடராக வெளிவர உள்ளது. இவர் அமெரிக்காவில், ... Full story

இந்திய ஓவியர்களும், ஓவியங்களும்!

இந்திய ஓவியர்களும், ஓவியங்களும்!
நினைவுகளின் சுவட்டில் (பகுதி - II பாகம் - 35) வெங்கட் சாமிநாதன் நான் Illustrated Weekly of India வுடன் பரிச்சயம் கொண்டிருந்த காலத்தில் அதற்கு C.R.Mandy என்பவர் ஆசிரியராக இருந்தார். அதன் பெயருக்கு ஏற்பவே எந்தக் கட்டுரையானாலும் நிறைய படங்கள் உடன் பிரசுரமாகி இருக்கும். படங்கள் இல்லாத பக்கமோ கட்டுரையோ அதில் பார்க்கமுடியாது. நான் வாங்கத் தொடங்கிய போது அது 12 அணாவுக்கு விற்று வந்தது. 12 அணா என்பது முக்கால் ரூபாய். படம் என்றதும் ... Full story

அறிவார்ந்த தேடல் அற்ற சூழலின் இன்னொரு பரிமாணம்!

அறிவார்ந்த தேடல் அற்ற சூழலின் இன்னொரு பரிமாணம்!
நினைவுகளின் சுவட்டில் (34) வெங்கட் சாமிநாதன் புர்லாவுக்கு வந்த பிறகு (1951) தான் தினசரி பத்திரிக்கை படிப்பது என்ற பழக்கம் ஏற்பட்டது. அதாவது ஆங்கில தினசரிப் பத்திரிக்கை. தினசரிப் பத்திரிக்கை படிக்கும் பழக்கம் கும்பகோணத்திலேயே, மகாமகக் குளத்தெருவில் குடியிருந்து படித்த காலத்தில் ஆரம்பித்தது என்றாலும் அது பக்கத்துத் தெருவில் இருந்த திராவிட கழக ரீடிங் ரூமுக்குப் பத்திரிக்கைகள் படிக்கும் பழக்கம் ஏற்பட்டதிலிருந்து தொடங்கியது. அது திராவிட கழகப் பத்திரிக்கைகளுக்கிடையே கிடந்த விடுதலையையும் படிக்கத் தொடங்கியதிலிருந்து ஏற்பட்ட பழக்கம். திராவிட ... Full story

சதானந்தன் எங்கள் சச்சிதானந்தன்

சதானந்தன் எங்கள் சச்சிதானந்தன்
சதானந்தன் எங்கள் சச்சிதானந்தன் ஐயாவுக்கு பவள விழா - (70ஆவது அகவை) - வாழ்த்தி வணங்குகின்றோம்     ஆக்கம் : ‘செந்நெறிச் செம்மல்’ சூ. யோ. பற்றிமாகரன் B. A., Special Dip. (Oxford), B. Sc., PG. Dip., M. A.ஆசிரியர், ஊடகவியலாளர், ஆய்வாளர், ஒக்ஸ்வோர்ட், ஐக்கிய ... Full story

தமிழ் – கிரந்தம் – சீயமொழிகளில் திருமுறை

தமிழ் – கிரந்தம் – சீயமொழிகளில் திருமுறை
மறவன்புலவு க. சச்சிதானந்தன் சாலைகளில், மருத்துவ மனைகளில், தொடர்வண்டி நிலையங்களில், வானூர்தி நிலையங்களில், படங்கள் செய்திகளைச் சொல்கின்றன, மக்களை வழிகாட்டுகின்றன. அப்படங்கள் மொழிகளுக்கு அப்பாலானவை. மொழி எல்லைகளைக் கடந்தவை. சீனரின் பட வரிவடிவங்கள், எகிப்தியரின் பட வரிவடிவங்கள், இந்துச் சமவெளியின் பட வரிவடிவங்கள் இத்தைகய இணைப்பு நோக்குக் கொண்டன. வீட்டில், அயலாருடன் எந்த மொழியிலும் பேசலாம், உரையாடலாம். ஒரே மொழியின் வட்டார வழக்கில் பேசலாம் உரையாடலாம். பலர், அதுவும் பல் மொழியாளர் கூடும் இடங்களுக்குப் ... Full story

மியம்மாவில் திருக்குட நன்னீராட்டு

மியம்மாவில் திருக்குட நன்னீராட்டு
மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஏரில் எருது பூட்டி உழுவோர் ஒரு புறம். நெற் சூடுகள் மறுபுறம். அறுவையை எதிரிபார்த்து முற்றிய நெற்கதிர்கள் காய்ந்து தலைசாய்ந்த வயல்கள் ஒருபுறம். வயல் வெளிகளுக்கிடையே மேடுகள். மேடுகளில் மரங்கள். மரங்களின் அடியில் இணையாக குதிரைவீரன் சிலைகள். நடுவே முனீச்சரன் சிலை. திரும்பிப் பார்க்கிறேன். தொலைவில் ஒரு மரம். வேறு குதிரை வீரன் சிலைகள். வேறொரு முனீச்சரன் சிலை நடுவே.உழவர்களுள் தமிழரும் உளர், தொல்குடிகளும் உளர். ... Full story

உலக வரிவடிவங்களில் தமிழ்

உலக வரிவடிவங்களில் தமிழ்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்தமிழின் 247 வரிவடிவங்களால் மட்டும் தமிழை எழுதுகிறோமா? அவ்வாறு கருதுவோர் பலர். மொழிதல் என்பதால் மொழி. எழுத்து மொழிக்குத் துணை. எழுத்தே மொழியாகுமா? தமிழின் 247 வரிவடிவங்களும் தொடக்க காலத்தில் இருந்தே இன்றுள்ளவாறே உள்ளனவா? ஒலிகள் மாறவில்லை. வரிவடிவங்கள் மாறிவந்தன. உலகெங்கும் பரவிய தமிழர் மொழிதலை மறக்கவில்லை, ஆனால் வரிவடிவங்களை அங்கங்கே மறந்தனர்.நியுசிலாந்து வெலிங்ரன் ... Full story

உலகப்புகழ் புதினங்கள்!

உலகப்புகழ் புதினங்கள்!
நினைவுகளின் சுவட்டில் - (33)  வெங்கட் சாமிநாதன் ஸ்டாலின் சம்பந்தப்பட்ட The Great Purges - பற்றி எழுதிக்கொண்டு வரும்போது கம்யூனிஸக் கொள்கைகளால் கவரப்பட்டு பின்னர் ஸ்டாலின் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளிலும், ஸ்டாலினின் கொடூர யதேச்சாதிகாரத்திலும் வெறுப்புற்று வெளியேறியவர்கள் எழுதிய The God that Failed புத்தகத்தைப் பற்றிச் சொல்லி வந்தேன். அதில் சில பெயர்கள் என் மறதியில் விட்டுப் போயின. அதன் பின் எனக்கு ஒரே ஒரு பெயர்தான் நினைவுக்கு வந்தது. ஆர்தர் கெஸ்லர் என்னும் ... Full story

முனைவர் பட்டம் பெற்றேன்

முனைவர் பட்டம் பெற்றேன்
அண்ணாகண்ணன் சென்னைப் பல்கலைக்கழகத்தின் 154ஆவது பட்டமளிப்பு விழா, 2011 நவம்பர் 4ஆம் நாள் நடைபெற்றது. தமிழக ஆளுநர் மாண்புமிகு ரோசய்யா, தமிழக உயர்கல்வி அமைச்சர் மாண்புமிகு பி.பழனியப்பன், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் தலைவர் பேரா.வேதப்பிரகாஷ், சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கர்னல் முனைவர் திருவாசகம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் எனது முனைவர் பட்டத்தைப் பெற்றேன். விழா மேடையில் நான் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் பச்சையப்பன் கல்லூரியில் முனைவர் ... Full story

தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை-21

தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை-21
இன்னம்பூரான் பாலப்பிராயமும், ஆடிட்டும் இத்தொடரின் இலக்கு மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியை, குண்டலினி சக்தியெனத் தட்டி எழுப்புவதே. சில கேள்விகளுக்கு உரிய பதில்களையும், தொடர்புடைய பழைய அனுபவங்களையும் எழுத விழைந்தபோது, கீழ்க்கண்ட ஆவணம் வந்து அடைந்தது. எழுத நினைத்ததை ஒத்திப் போட்டு, தணிக்கையின் மற்றொரு முகாரவிந்தத்தைப் பற்றி எழுதுகிறேன். நீங்கள் சொன்னால்தான் இது செல்லுபடி ஆகுமா இல்லையா என்று தெரியும். தேவையானால், மாற்றியமைக்க இயலும். திசை மாறியும் பயணிக்கலாம். 'ஆடிட்' ... Full story

தேநீர் – தே(ன்)- நீர்

தேநீர் - தே(ன்)- நீர்
வெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில்  (பகுதி – II – பாகம் – 29) அந்த இடத்தில் அந்த இரவு நேரத்தில் அங்கு ஒரு குடிசையில் விளக்கெரியும், அங்கு "டீ கிடைக்குமா?" என்று கேட்டால் டீ கிடைக்கும், என்பது எதிர்பாராது கிடைத்த ஒரு  சந்தோஷம். கிடைத்த சந்தோஷமா? வானத்திலிருந்து தேவர்கள் புஷ்ப மாரி பொழிந்த கதை தான். டீ கிடைத்தது,கொதிக்கக் கொதிக்க. கைகள் ... Full story

தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை-20

தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை-20
இன்னம்பூரான் தமிழ்நாடு தணிக்கை அலுப்புத் தட்டும் விஷயம் தான். ஆனால், மக்கள் அதைச் செங்கோலாக பயன்படுத்த முடியும். அரசைக் கண்டித்துத் தண்டிக்க முடியும், தேவை ஏற்படுமானால். எனவே, அரசு ஆங்கிலத்தில் வரும் ஆடிட் ரிப்போர்ட்களை, என் பேசும் மொழியில், அலசிப், பகிர்ந்து கொள்கிறேன். எந்த வினா எழுந்தாலும், உகந்த பதில் அளிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன். தமிழ் மொழியிலும் ஆடிட் ரிப்போர்ட்டுக்கள் பிரசுரம் ஆகின்றன. சில நாட்களாகவே, ... Full story

பஞ்சாட்சரமும்…….தேவசகாயமும்!

பஞ்சாட்சரமும்.......தேவசகாயமும்!
வெங்கட் சாமிநாதன்   நினைவுகளின் சுவட்டில்  (பகுதி - II - பாகம் - 28)   மிருணாலைப் பற்றிப்  பேச ஆரம்பித்தால் நினைவுகள்  அத்தனையும் அவனைச் சுற்றித் தான் சுழலும். அந்த இனிய நினைவுகளைக்  கொஞ்சம் தள்ளிப் போடவேண்டும். இடையில் மற்ற நண்பர்களையும், அவர்களோடு பெற்ற பல புதிய  அனுபவங்களையும் பற்றிப்  பேசவேண்டும். அவர்களில் பஞ்சாட்சரம் பற்றி முன்னரே பேசியிருக்க வேண்டும். மறந்து விட்டது பற்றிச் சொன்னேன். பஞ்சாட்சரம் F.A. & CAO ... Full story

கவிஞர் ஆடற்கோ, இயற்கை எய்தினார்

கவிஞர் ஆடற்கோ, இயற்கை எய்தினார்
அண்ணாகண்ணன் என் இனிய நண்பரும் சிறந்த மரபுக் கவிஞருமான ஆடற்கோ(72), 08.09.2011 அன்று முன்னிரவு 7 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் இயற்கை எய்தினார். இவரின் இறுதிச் சடங்குகள், 09.09.2011 அன்று நிகழ்ந்தன. ஆடற்கோ எஸ்.நடராஜன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக, ஆடற்கோ என்ற புனைபெயரைச் சூட்டிக்கொண்டார். சென்னையின் புகழ் வாய்ந்த பின்னி ஆலையின் தலைமை அலுவலகத்தில் அலுவலராக ... Full story

தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை – 19

தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை - 19
இன்னம்பூரான்   எண்ணெய் காய்கிறது! செப்டம்பர் 9, 2011: காலை 2 00 மணி: வாணலியில் எண்ணைய் காய்ந்தால், தீ பற்றி எரியும். சமையலறை எரியும். தீ பரவும், வீடு, அடுத்த வீடு, தெரு, பேட்டை எல்லாம் எரியக்கூடும். இப்போ அப்படித்தான் இருக்கு. ஊர்திகள் விரைகின்றன. விமானங்கள் பறக்கின்றன. தோசை வார்க்கிறோம். ராணுவம் தயார் நிலையில். இதற்கெல்லாம் கச்சா பெட்ரோலியம் எண்ணைய் வேண்டும். இந்தியா விடுதலை அடைந்த போது, எண்ணெய் ... Full story

தட்டச்சும் தட்டெழுத்தும்

தட்டச்சும் தட்டெழுத்தும்
அண்ணாகண்ணன் தமிழ்த் திரைப்படங்களில் கத்தி முனையில் ஒரு மிரட்டல் காட்சியை நாம் அடிக்கடி பார்க்கலாம். ஒரு பத்திரத்தைக் கையில் வைத்துக்கொண்டு, ’இதுல கையெழுத்துப் போடு; இல்லேன்னா ஒரே குத்து’ எனத் தாதா ஒருவர் மிரட்டுவார். இங்கு இவர் கேட்பது, கையெழுத்தா? கையொப்பமா? கையால் எழுதும் எழுத்துகள் அனைத்தும் கையெழுத்து ஆகும்; வீட்டுப் பாடம், தேர்வுக்கு விடை, படியெடுத்தல் ஆகிய இடங்களில் எழுதும் முறையைக் குறிப்பது, கையெழுத்து ஆகும். விண்ணப்பங்கள், கடிதங்கள், ... Full story

‘தில்லியின் மரங்கள்’ – நூல் அறிமுகம்

அண்ணாகண்ணன் காந்தி கல்வி மையத்தில் 31.08.2011 அன்று மாலை நடந்த நூல் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்றேன். பேரா.சு.சுவாமிநாதன், 'தில்லியின் மரங்கள்' (Trees of Delhi: A Field Guide) என்ற தலைப்பிலான, பிரதீப் கிருஷ்ணன் எழுதிய நூலைச் சிறப்புற அறிமுகப்படுத்தினார். அவரது காட்சி உரையை, மிகச் சிரத்தையாகவும் அழகியல் உணர்வுடனும் தயாரித்திருந்தார். பற்பல முக்கிய மரங்கள், அவற்றின் பாகங்கள், சிறப்புகள், அமைப்புகள், அடையாளங்கள் ஆகியவற்றைப் பிரதீப் ... Full story
Page 1 of 1112345...10...Last »
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.