”உஷ்ணத்தின் முன்னே உருகும் பனிபோல,
நஷ்டத்தைப் போக்கும் நிதிபோல்ஸ்ரீ, -முஷ்ணத்தின்
ஆண்டவன் சாமிகள் ஆசீர் வதிக்கும்முன்,
வேண்டுதல் விஷ்ணுசெ விக்கு”….கிரேசி மோகன்
Author: admin
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
ஆடிவெள்ளி அம்மை கவிதை
-சரஸ்வதி ராசேந்திரன்
வருவாய் அன்னை அபிராமி
திருக்கட வூரின் அபிராமி
திருவருள் தந்து அருளிடு நீ
பட்டருக்கு நிலவைக் காட்டிடவே
தோட்டைக் கழற்றி எறிந்து நீ
பக்தரின் உயிரைக் காத்தாயே இந்த
பக்தையின் குரலுக்கும் செவிசாயி
பொய்கள் நிறைந்த உலகினிலே
மெய்கள் ஜெயித்திட அருளிடுநீ
சூது கள் சூழ்ச்சிகள் வஞ்சனைகள்
ஏதுமில்லா நல்மனதை தந்திடு நீ
தொழுதேன் நானே தினந்தோறும்
தோற்றம் நீ இன்னும் தரவில்லை
அம்மா உனைத்தான் அழைத்தேனே
சும்மா இருப்பதோ உன் நீதி ?
வருவாய் அன்னை அபிராமி
அருள்விழி காட்டி நலம்தருவாய்! -
சிந்துசமவெளியும், குமரிக்கண்டமும்
–முனைவர் பி.ஆர்.லக்ஷ்மி.
மொகஞ்சதாரோ, அரப்பா நகரங்களில் புதையுண்ட பல பொருட்கள் 1920களில் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் காணப்படும் பல முத்திரைகள் குறித்து இன்னமும் தெளிவுபடாத பல கருத்துகள் நிலவி வருகின்றன. ஆஸ்திரேலியா, இலங்கை, இந்தியாவின் தென்பகுதி, இந்தியப்பெருங்கடலின் சில பகுதிகள் என அழிந்து போன குமரிக்கண்டத்தின் பகுதிகளாக ஆய்வுகள் வரையறுக்கின்றன.
கொடுமுடி சண்முகத்தின் ஆய்வுகள் குமரிக்கண்டம் இல்லையெனக் குறிப்பிடுகின்றன. இதற்குக் காரணம் தமிழகத்தில் காணப்படும் நில அமைப்பினைக் குறிப்பிட்டுள்ளார். நில அமைப்பு மாறுபடும் தன்மை கொண்டதாலும், மூழ்கிக் கிடக்கும் புகார் குறித்த இடங்கள் குறித்த ஆய்வுகளும் குமரிக்கண்டம் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதிப்படுத்துபவையாக இருக்கின்றன.
கடல்கோள் என்பது ஒரே நேரங்களில் நிகழ்வது அல்ல. சிறிதுசிறிதாக நிலம் கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டுவருவது ஆண்டாண்டுகாலமாக நடைபெற்றுவரும் நிகழ்வாகும். குமரிக்கண்டத்தின் அழிவினால் இடம்பெயர்ந்த மக்கள் பல இடங்களுக்கும் குடி பெயர்ந்துள்ளனர். இடப்பெயர்வு ஏற்படினும் தாங்கள் வசித்துவந்த ஊர்ப்பெயரினை வைத்து அந்தந்த இடங்களில் வாழ்ந்து வந்திருக்கலாம்.இராமாயணத்தில் குமரிக்கண்டம் இருந்ததற்கான பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. அழிந்துபோன தமிழ்நூல்களின் பெயர்களே இதற்கு ஆதாரமாக இருக்கின்றன.
குமரிக்கண்டத்தில் பரவியிருந்த தமிழ்மொழி சிந்துவெளி நாகரிகத்திலும் வேரூன்றி காணப்பட்டது. ஆதிச்சநல்லூரில் இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. இதைப்போன்றே மொகஞ்சதாரோவிலும் காணப்பட்டுள்ளது. ஆனால், அங்கு காணப்பட்ட தாழிகளில் எழுத்துகள் தென்படவில்லை.
ஆதிச்சநல்லூரில் காணப்பட்ட தாழிகளில் எழுத்துகள் காணப்படுகின்றன. சேரர், சோழர் ,பாண்டியர் என்ற மூவேந்தரின் கீழ் தமிழ்மொழி வளர்ந்துள்ளதை பண்டைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. சிந்துவெளி நாகரிகத்தின் சின்னங்களை அடையாளப்படுத்த இவ்வரசர்கள் பயன்படுத்திய குறியீடுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
குமரிக்கண்டத்தில் முத்து, பவளம், வாசனைத்திரவியங்கள், மருந்துப்பொருட்கள் எனப் பல ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அக்காலத்தில் பொருளுக்குப் பதிலாகப் பொன்னோ, பணமோ பெறப்படவில்லை. பெரும்பாலும் பண்டமாற்றுமுறைகள் நடந்து வந்துள்ளன. மகாபாரதத்தில் கிருட்டிணன் குடக்கூத்து ஆடிய இடம் வாணன்பேரூர் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. வாணன்பேரூர் என்பது மலாய்க்கா என்ற மாமல்லபுரத்தைக் குறிப்பதாகும்.
பொருட்களை ஏற்றிச் செல்லும் வணிக இடமாக மாமல்லபுரம் இருந்திருப்பதன்வழி தமிழ்நாட்டின் பழமை புலப்படுகிறது. மகாபலிபுரம் போன்ற துறைமுகத்தினை ஒட்டிய பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் ஆய்வுகளின் முடிவுகள் இன்னமும் மாறுபடலாம்.
சிவ வழிபாடு சிந்துவெளிநாகரிகத்தில் இருப்பதைக் கணக்கில்கொண்டு இந்நாகரிகம் வேதங்களுக்குப் பிந்தையது என்ற கருத்து தவறானது. இராமாயணக் காலத்திலேதான் இருக்கு, யசூர், சாம வேதங்கள் இயற்றப்பட்டுள்ளன. சிவ வழிபாட்டின் அடையாளச்சின்னத்தை ஒப்புநோக்கும்போது மயன்வம்சத்துத் தலையலங்காரம் புலப்படுகிறது.
குமரிக்கண்டமக்கள் இரும்பின் பயன்பாடு அறிந்தவர்கள். எனவேதான் எகிப்தியப்பிரமிடுகள் இரும்பினால் ஆன கருவியினைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. நிலப்பிரிவுகளின் அடிப்படையில்தான் தொழில்கள் நடந்துள்ளன எனவே சிந்துவெளிச் சின்னங்களில் காணப்படுபவை நிலத்தின் கருப்பொருள் குறித்த குறியீடுகளாக இருக்கலாம்.
செங்கோல் வடிவம் கொண்ட குறியீடு அந்த நாட்டின் மன்னனுடையதாக இருந்திருக்கலாம். நான்கு முதல் ஏழு வரை கொண்ட மேல்வரிசைக் குறியீகளில் காணப்படும் மீன்கள் நெய்தல் நிலம் சார்ந்தனவையாகவோ, அல்லது பாண்டிய மன்னனைக் குறிப்பதாகவோ இருக்கலாம். மரஇலை குறித்த சின்னம் சேர மன்னனுடையதாக்க் கருதுவதற்கு இடமுண்டு. மனிதன் இருபுறமும் காவடி தூக்குவதுபோல அமைந்துள்ள குறியீடு தேனெடுத்தலைக் குறிப்பதாகும்.தேனெடுத்தல் தொழில்குறிஞ்சி நிலத்திற்குரியதாகும்.
பொதுவாக வணிகம் என்பது கற்றவர், கல்லாதவர் என இருவேறுபட்ட சமுதாயத்தினரிடையில் நிகழ்வதாகும். அவ்வாறு நோக்கிடின் கடினமான எழுத்துப்பகுதிகள் இலக்கிய நோக்கில் அமைந்திருக்க வாய்ப்புகள் இல்லை. எனவே சதுரம் சார்ந்த குறியீடு நான் மாடக்கூடல் எனக் கூறுவது பொருந்தாது. வணிகர்களும் தங்களுக்கென்ற குறியீடுகளை ஏற்படுத்திக்கொண்டு வாழ்ந்துள்ளனர். இதைப்போன்று குழுவாக வாழ்ந்த குடும்பங்களுக்கென்று ஒரு குறியீட்டினையும் ஏற்படுத்தி வாழ்ந்துள்ளனர். இவை பெரும்பாலும் விலங்கு, பறவை, மரம் இவற்றை அடிப்படையாக்க் கொண்டு அமைத்து வந்துள்ளனர். இதனால் சிவன் குறித்த சின்னங்களும், விலங்குகள் குறித்த சின்னங்களும் குறிக்கப்பட்டிருக்கலாம்.
இருமீன் சார்ந்த குறியீடு என்பது குற்றாலத்தில் காணப்படும் கோவில் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. அம்மீனினை உற்று நோக்கும்போது ஒரு மீனினைப்போல மற்றொரு மீன் அமைக்கப்படவில்லை.
ஈஸ்தர் தீவில் கண்டெடுக்கப்பட்ட மரச்சட்ட எழுத்து முத்திரையும் இதைப்போன்றதாகவே கருதலாம். ப்ரோஎலமைட் மொழியில் காணப்படும் குறியீடுகள் சிந்துசமவெளியில் கிடைத்த முத்திரைகளோடு ஒத்து வருகின்றன.
ஒரு பொருளை அளக்கப் பண்டைக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட அளவைக் குறியீடுகளே மேல்வரிசையில் காணப்படும் தமிழ்ப்பிராமி எழுத்துகள் எனக் கருதலாம். சாலைவிதிகளுக்கு என வரையறுக்கப்பட்ட சில குறியீடுகளும் இவற்றில் காணப்படுகின்றன.
பொதுவாக ஒரு தாழியில் இறந்தவரைப் புதைக்கும்போது பெயர், பிறப்பு, இறப்பு குறித்தவற்றையே பதிவு செய்யும் வழக்கம் நடந்து வந்துள்ளது. எனவே கிடைத்துள்ள பானை ஓடுகளில் காணப்படும் எழுத்துகள் அத்தகையனவாக இருந்திருக்கலாம்.
வடஅமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களின் அருகே காணப்படும் சிறு தீவுகளிலும் தமிழ்மொழி இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இயற்கைச் சீரழிவினால் நிகழ்ந்துள்ள மாற்றங்களினால் பல இடங்களுக்கும் சென்ற குமரிக்கண்ட மக்கள் தங்கள் பண்பாட்டினை மறக்காமல் வாழ்ந்துவருவது ஆய்வுகளின்வழி அறிய இயலுகிறது.
தமிழ்மொழியின் பழமையினை இன்னமும் உறுதிப்படுத்த பல நிலைகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
-
காமராசர்
நித்ய லட்சுமி

கறுப்புக் காந்தி என்றழைக்கப்பட்ட காமராசர்தான் இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக இருந்த ஜவகர்லால் நேரு மறைந்தபோது லால்பகதூர் சாஸ்திரியை ஏகமானதாகத் தேர்வு செய்தவர். அவரது திறமையை, பெரு மையை உலகமே பாராட்டியது.விருதுநகரில் மேகவர்ணம் என்ற பிரிவினரைச் சேர்ந்த பிரபல வியாபாரியான குமாரசாமி நாடார் – சிவகாமி அம்மையாருக்கு 1903-ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாள் காமராசர் பிறந்தார். அங்கே சத்திரிய வித்தியா சாலை என்ற பள்ளியில் அவர் 6-ஆம் வயதில் சேர்க்கப்பட்டார். இந்தப் பள்ளிக் கூடத்திற்கு ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு கைப்பிடி அரிசி கொண்டு போய் கொடுக்க வேண்டும். ஆதலால் இப்பள்ளி பிடியரிசிப் பள்ளிக்கூடம் என்று அழைக்கப்பட்டது. காமராசரின் 12-ஆம் வயதிலேயே அவரது தந்தையார் எதிர்பாராது முடிவெய்திய காரணத்தால் அவரது பள்ளி செல்லும் வாய்ப்பு நிறுத்தப்பட்டது.1920-ஆம் ஆண்டு காந்தி அறை கூவல் விடுத்த ஒத்துழையாமைப் போராட்டத் தின்போது காமராசர் அதை ஏற்று, போராட்டத்தில் பங்குகொண்டார். விருதுநகரில் மட்டுமன்றி சுற்று வட்டார கிராமங்கள் எல்லாவற்றுக்கும் நடந்தே சென்றுதான் பிரச்சாரம் செய்தார். ஒரு முறை 60 கிலோ மீட்டர் சுற்றி மதுரைக்கு நடந்து சென்று கட்சிப் பணியாற்றி விட்டுத் திரும்பி வந்தார்.1924 தந்தை பெரியார் கேரள மாநிலம் வைக்கத்தில் நடத்திய போராட்டத்தில் ஒரு தொண்டராக காமராசர் விருதுநகரிலிருந்து சென்று வந்தார்.
காங்கிரஸ் தலைவராக 1940-இல் காமராசர் வெற்றி பெற்றார். அப்போது அவரைத் தேசத்துரோகி எனக் குற்றம் சாட்டி பிரிட்டிஷ் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. 1941-இல் அவர் சிறையில் இருந்தபோதே விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்து நகராட்சித் தலைவர் என்ற முறையில் கூட்டத்தை நடத்தி விட்டுப் பின் அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.இந்தப் பதவியில் இருந்தால் காங்கிரஸ் கட்சியின் இதர கடமைகளையெல்லாம் கவனித்துச் செய்ய முடியாது என்ற காரணத்தால்தான் அப்பதவியிலிருந்து விலகினேன் என்று அவர் சொன்னார். அதுபோலவே பொதுத்தொண்டு செய்பவருக்குத் திருமணம் ஒரு தொல்லை என்று முடிவு செய்து திருமணத்தைத் தவிர்த்து கடைசிவரை பிரமச்சாரியாகவே வாழ்ந்து தொண்டாற்றினார்.
காந்தியார் நடத்திய 1942 ஆகஸ்டு 9 வெள்ளையனே வெளியேறு என்ற மாநாட்டிலும் இயக்கத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு உழைத்தார். 1952இல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது நடைபெற்ற முதல் இந்தியப் பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. ஆனாலும் காங்கிரசேதான் கூட்டணி மந்திரி சபை அமைத்தது. இராஜாஜி முதலமைச்சரானார். அப்போது தமிழ்நாட்டில் இருந்த 12 ஆயிரம் பள்ளிகளில், அரசு நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி 6 ஆயிரம் கிராமப் பள்ளிக் கூடங்களை இராஜாஜி மூடினார். மீதி இருந்த பள்ளிகளிலும் அரை நேரப்படிப்பும் மீதி அரைநேரம் அவரவர் குலத் தொழிலைச் செய்தால் போதுமானது என்கிற கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
தந்தை பெரியார் இத்திட்டத்தைக் குலக்கல்வித் திட்டம் என்று சொல்லி இதனால் தமிழர்களின் எதிர்காலம் இருளடைந்து பாழாகிவிடும் எனவும் எச்சரிக்கை செய்தார். இத்திட்டத்தை ஒழிக்க பெரியார் குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் பிரச்சாரப் படையை அமைத்தார். அந்தப் பிரச்சாரப் படை நீடாமங்கலம் அ.ஆறுமுகம் தலைமையில் நாகப்பட் டினத்திலிருந்து சென்னையை நோக்கிப் புறப்பட்டது. இக்குலக்கல்வித் திட்டத்தின் தீமைகளை விளக்கி வழியெங்கும் பல்வேறு இடங்களில் கூட்டங்களை நடத்திப் பிரச்சாரம் செய்து கொண்டே இக்குழு வந்தது. பொதுமக்களிடையே குலக்கல்வித் திட்டத்திற்கான எதிர்ப்பு வலுவடைந்ததைக் கண்ட இராஜாஜி தமக்கு உடல்நலம் சரியில்லை என்று சொல்லி முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.
தந்தை பெரியார் வலியுறுத்தியதன் பேரில் காமராஜர் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட உடனேயே குலக் கல்வித் திட்டத்தை ஒழித்தார். இராஜாஜி மூடிய 6 ஆயிரம் கிராமப் பள்ளிக் கூடங்களையும் மீண்டும் திறந்தார். மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளி என்ற கொள்கையை வகுத்துத் தமிழ்நாடு முழுவதும் உடனே செயல்படுத்தினார். பெரியார் காமராசரைக் கல்வி வள்ளல் என்று அழைத்துப் பாராட்டினார். தமிழ்நாட்டில் கல்விப் புரட்சி வரலாற்றில் காமராசர் வகிக்கும் மகத்தான பங்கில் உரிமை கொண்டாட வேறு யாருக்கும் அருகதை கிடையாது என்று தந்தை பெரியார் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பச்சைத் தமிழர் காமராசர் விழாவின் போது தன் கைப்பட எழுதிய செய்தியை அனுப்பிவைத்தார்.
ஏழைப்பங்காளர் என்று எல்லோராலும் சொல்லப்பட்ட காமராசர் 1954 முதல் 1963 வரை ஒன்பது ஆண்டுகள் இணையற்ற முதலமைச்சராக மிகக் குறைந்த அளவில் எட்டு பேர் அடங்கிய மந்திரி சபையைக் கொண்டு சேவை செய்தார். அவரது அமைச்சரவையில், சட்டசபையில் காங் கிரசை எதிர்த்து வந்த எதிர்க்கட்சித் தலைவரான எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியையும் ஒரு அமைச் சராக சேர்த்துக் கொண்டு காங்கிரசுக்கு வெளியே இருந்த எதிர்ப்பையும் இல்லாமல் செய்து கொண்டு அவரது அணுகுமுறை எல்லோராலும் பின்பற்றத்தக்கது, பாராட்டத்தக்கது.
அப்போது ஒரு முறை காமராசர் குறிப்பிட்டார். நான் பல்கலைக் கழகங் களில் படித்தது இல்லை. ஆனால் எனக்கு பூகோளம் தெரியும். சென்னை மாகாணத்தில் உள்ள எல்லா இடங்களையும் நான் அறிவேன். ஏரிகள் எங்கெங்கு இருக்கின்றன, மக்கள் என்னென்ன தொழில் செய்து வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்பதையெல்லாம் அறிந்திருக்கிறேன். இதையெல்லாம் பூகோளம் என்று கருத வில்லை என்றால் அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. வெறும் கோடுகளால் எல்லைகள் வகுத்து புள்ளிகளால் இடங்களைக் குறிப்பதுதான் பூகோளம் என்றால் அது எனக்குத் தேவையில்லை என்றார்.
அவரது சிந்தனை, உழைப்பு, ஊக்கம் எப்போதும் தெளிவாக இருந்தது, உறுதியாக இருந்தது. ஏழை மக்களின் துயர் துடைப்பதையே முக்கிய அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தார். அவர் அடுத்த படியாக அதிக கவனம் எடுத்துக் கொண்ட துறைகளில் மின்சாரம் முதலிடம் பெற்றது. அடுத்தது போக்குவரத்து. இவை இரண்டும் மக்கள் வாழ்க் கைக்கு மிகச் சிறந்த ஏற்றத்தைக் கொடுத்தன.
காமராசரின் நடைமுறை அறிவு எத்தனையோ பட்டப் படிப்பு படித்தவர்களை விட மேலானது. ஒரே ஒரு உதாரணம். அப்போது சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியின் பொன்விழாவில் கலந்து கொள்ள பிரதமர் ஜவகர்லால் நேரு சென்னை வந்தார். அவ்விழாவில் உரையாற்றும்போது, விஞ்ஞானிகள் எல்லாம் விவசாயிகள் வாழ்வு மேம்பட உழைக்க வேண்டும். தமிழ்நாட்டின் கால்நடைச் செல்வத்தை அதிகப்படுத்திப் பால் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நேருவை விமான நிலையத்தில் வழியனுப்பிவிட்டு வந்த கையோடு கால்நடைக் கல்லூரி முதல்வரையும், துறை இயக்குநரையும், அரசு செயலாளரையும் அழைத்து இதை எப்படி நடைமுறைப்படுத்துவது? என்று கலந்து ஆலோசித்தார்.
அப்போது பக்தவத்சலம் இத்துறையில் அமைச்சராக இருந்தார். ஓராண்டுக்கு எத்தனை கால்நடை மருத்துவர்களை நீங்கள் உருவாக்குகிறீர்கள்? என்று அதிகாரிகளிடம் கேட்க, அப்போது ஆண்டுக்கு 60 பேர் என்று சொன்னார் கள். தமிழ்நாட்டுக்கு 12 ஆயிரம் பஞ்சாயத்துகளிலும், கால்நடை கருவூட்டல் நிலையங்களில் நியமிக்க ஆண்டுக்கு 60 பேர் என்றால் அத்தனை ஆண்டுகள் காத்திருக்க முடியாது. நம் பிரதம மந்திரி சொன்னத நாம் எப்படிச் செய்வது என்று யோசியுங்கள் என்று சொல்லி அதிகாரிகளை அனுப்பிவிட்டார். அப் போது மத்திய அரசு கேந்திர கிராமத் திட்டங்களை நிறைவேற்ற பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.அடுத்த நாள் முதலமைச்சர் காமராசர் அதிகாரிகளை அழைத்துச் சொன்னார்: தமிழ்நாட்டில் பள்ளி இறுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு காலம் கால்நடை அபிவிருத்தி பற்றி சிறப்புப்பயிற்சி கொடுக்க வேண்டும் என்று அறிவித்தார்.
தந்தை பெரியார் அவர்களால் தமிழ் நாட்டின் ரட்சகர் என்று அழைக்கப்பட்டார் கல்வி வள்ளல் பெருந்தலைவர் காமராசர். வட இந்திய மக்கள் காமராஜரை ‘காலா காந்தி’ என்று அழைத்தனர். காலா காந்தி என்றால் கறுப்பு காந்தி என்று அர்த்தம். காமராஜரை ‘பச்சைத் தமிழன்’ என்ற பெயரை சூட்டியவர் ஈ.வெ.ரா. பெரியார்.
-
எப்பொழுதும் நீ என்னை ஆதரி!
-மன்னை சரஸ்வதி ராசேந்திரன்
புள்ளி மயில் வாகனா
வள்ளி மனம் கொண்டவா
துள்ளி வரும் வேலுடன்
அள்ளித் தருவாய் அருளையே!சந்த இசை ஷண்முகா
கந்த மலைக் கடம்பனே
வந்தெ னெக்குக் காட்சிதா
சந்தம் இசைத்துப் பாடறேன்வள்ளிக் கணவா வடிவேலா
உள்ளங் கவர் அழகனே
தள்ளி நின்றது போதுமய்யா
அள்ளி அணைத்துக் காத்திடுஅப்பனுக்குப் பாடம் சொன்ன
சுப்பையா சாமிமலை முருகா
தப்பெதுவும் செய்யாமல் காத்திடு
எப்பொழுதும் என்னை நீஆதரி -
அவர் விஸ்வநாதம்
பத்து வருஷங்களுக்கு முன்பு நான் மந்தவெளி பக்கம் வசித்து வந்தேன். காலை கொஞ்சம் சாந்தோம் பக்கம் நடை பயிற்சி செல்வேன். அப்போது என் கால்களில் பாதிப்பு இல்லை. உடன் என் மனைவி வருவாள். எம் எஸ் வீ . வீட்டு பக்கம் ( அது பழைய வீடு ) வரும்போது அவரை பார்ப்பேன். பொதுவாக எந்த பிரபலத்தையும் தொந்தரவு செய்ய பிடிக்காது. ஆனால் அன்று அவர் பால்கனியில் லுங்கியில் உலாவி கொண்டிருந்தார். கீழே நாங்கள் பார்த்து வரவா என வினவினோம். அவருக்கே உரிய தோரணையில் வாங்கோ என்றார். மேலே சென்று அவரை கை குவித்து வணங்கி அமர்ந்து சிறிது நேரம் பேசினேன்.எவ்வளவு பெரிய இசை மேதை ? கொஞ்சம் கூட அலட்டல் இல்லாமல் என்ன இயல்பாய் இருந்தார் … இந்த பண்பு படித்து வருவது அல்ல. உள்ளம் அப்படி. பிறிதொரு சமயம் சந்தூர் விஸ்வேஸ்வரன் மறைந்த போது அவர் கீழ் அமர்ந்து பேசும்போது அவர் என்னை தரையில் அமர விடாமல் இருக்கையில் உட்கார சொன்னார். என்னை பொறுத்த வரை எனக்கு எப்படி நடிகர் திலகமோ அப்படியே விசுவும். அவர் இசையில் நான் மயங்காத நாள் உண்டா ? எத்தனை பாடல்கள், எவ்வளவு நுணுக்கங்கள்…சந்தோஷமான சூழலா அங்கே விசு… வயிற்றை பிசையும் துக்கமா ..விசு அங்கே .
சென்ற வாரம் அவர் மகனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அவரை பார்க்க வேண்டும் என சொன்னேன். ரெண்டு நாளில் சொல்வதாச் சொன்னார். பின்னர் அவரே அழைத்து நன்கு தேறி வருவதை தெரிவித்தார். எனக்கு இருப்பு கொள்ளவில்லை. இரவு கிளம்பி சென்றேன். மலர் அடையாரில் இருந்தார். சில பழைய நண்பர்கள் அங்கிருக்க விசுவின் குடும்பத்தினர் அங்கு குழுமி இருந்தனர். ICU வில் இருந்ததால் அவரை பார்க்க முடியவில்லை. அரை மணி நேரம் இருந்து பேசி விட்டுப் புறப்பட்டேன்.
அவர் மகள் பேசும் போது சொன்னார்கள். சிகிச்சை செய்ய வந்த நர்சை பார்த்து உன்னை நான் சந்தித்தேன் …நீ ஆயிரத்தில் ஒருத்தி என்று … கைகள் படபடக்க அவர் படுத்த படுக்கையிலே தாளம் போட்டபடி இருந்தாராம். இரண்டு நாள் முன்பு இளையாராஜா வந்து அவர் கால்களை பிடித்து விட்டதையும் , வித்யாசாகர் பாடினதையும் நினவு கூர்ந்தார்கள். பாலு வந்தவுடன் அவர் நெகிழ்ந்து பேசினாராம். இன்று காலை என் மகன் செய்தி சொன்னனான். அப்பா , எம் எஸ் வீ இஸ் நோ மோர் என்றான்–எனக்கு ஓர் ஆசை இருந்தது.என் மகன் அவர் முன் பாடவேண்டும் என்று. அது நிறைவேறவில்லை.
வாழ்க்கையில் சில விஷயம் முடியாமற் போவதின் பின் ஓர் உண்மை உண்டு. நான் வீட்டில் கவலையாய் இருக்கும் தருணத்தில் என் மகன் இணையத்தில் இருந்து நாலு பாடல்களை போட்டு காட்டி ராகம் பேசுவான் .எனக்கு நிறைவாய் இருக்கும். எனக்கு பிடித்த விசுவை என் மகனே சிலாகிக்கும் போது போது எவ்வளவு நிறைவு ——அவர் விஸ்வநாதம் .
Baskar Seshadri
chennai -
என்னையா ஊர் இது .?
சேசாத்திரி பாஸ்கர்
ஒரு சினிமா கொட்டகையில் இப்போது குறைந்த பட்சம் டிக்கெட் விலை நூற்றி இருபது ருபாய் .இரு சக்கர வாகனம் நிறுத்த கட்டணம் முப்பது ருபாய் .வெளியே வாங்கிய தின்பண்டங்களை உள்ளே எடுத்து செல்ல அனுமதி இல்லை . முன்பு கபாலி காமதேனு தியேட்டர்களில் கூட ஒரு எவர்சில்வர் அண்டா போல பாத்திரத்தில் குடிநீர் இருக்கும் .ஒரு டம்ப்ளரில் நீரை பிடித்து குடிக்க வேண்டும் .களவு போகாமல் இருக்க டம்ப்ளரில் ஒரு செயின் கட்டி இருப்பார்கள் .தலையை கீழே குனிந்து குடிக்க சட்டையெல்லாம் வீணாகும் .அது பரவாயில்லை போல்இருக்கிறது . இப்போது இந்த பெரிய கொட்டகையில் பாட்டில் தண்ணீர் தான் .நாற்பது ருபாய் .சின்ன பாப்கார்ன் பொட்டலம் என்பது ரூபாயாம் . அடப்பாவிகளா ? என்னை போல் ஆசாமிகள் உள்ளே சென்றால் சண்டை தான் .இத்தனைக்கும் கிட்டத்தட்ட எல்லா சினிமாவுக்கும் இப்போது வரிவிலக்கு.இவ்வளவு வசதிகள் அரசிடம் இருந்து பெற்று கொண்டு விடுமறை நாளில் பத்து காட்சிகள் வரை திரையிட அனுமதி பெற்றும் இவர்கள் ஆசை அடங்கவில்லை .ஒரு சின்ன கணக்கு நேற்று இரவு போட்டு பார்த்தேன் . ஒரு காட்சியில் ஆயிரம் இருக்கைகள் கொண்ட அரங்கில் முந்நூறு பேர் இரு சக்கர வண்டியில் வருவோர் என்றால் அவர்கள் தரும் தொகை சுமார் ஒன்பது ஆயிரம் ருபாய் .இது ஒரு காட்சிக்கு .ஒரு நாள் வசூல் சுமார் இருபத்தி ஏழாயிரம் என்றால் வருஷம் கிட்டத்தட்ட ஒன்பது கோடி .தனி மனித ஒழுக்கம் , நேர்மையான வியபாரம் , தொழில் தர்மம் எல்லாம் போதித்தவர்கள் எல்லாம் முட்டாளா ?இந்த சமூகம் நல்லவர்களை நகர்த்தி கொண்டிருக்கிறது .எல்லாம் நியாயம் என்றால் என்னையா ஊர் இது .? காந்தி நீதிமன்றம் வந்த போது நீதிபதியே எழுந்து நின்ற இந்த தேசத்தில் இப்படியா ?மனசு ஆறவில்லை …….Agitated .
Baskar CS
Chennai 4 -
பயன்மிகு இணையவழிச் சேவைகள் – தகவல் சேமிப்பு
– எஸ். நித்யலக்ஷ்மி.
பென்டிரைவ் (Pen Drive) போல தகவல்களை சேமிக்கும் மென்பொருள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
முன்னுரை :
டிராப்பாக்ஸ் (Dropbox) என்பது நம்முடைய ஃபைல்களை இண்டர்நெட்டில் பாதுகாப்பாகச் சேமிக்க உதவும் ஒரு சேவையாகும். இதனால் நமக்குத் தேவையான தகவல்களை Pen drive இல் கொண்டுபோகும் அவசியம் இல்லை. உங்களுடைய முக்கிய தகவல்கள் அழிந்தாலும் கவலைப்படத் தேவையில்லை, அவை பத்திரமாக டிராப் பாக்ஸ் Server களில் சேமிக்கப்பட்டு இருக்கும்.வழிமுறைகள் :
முதலில் டிராப் பாக்ஸ் இல் உங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள் பின் உங்கள் கணினியில் டிராப் பாக்ஸ் ஸினால் வழங்கப்படும் மென்பொருளை Install செய்து கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் கணினியில் டிராப் பாக்ஸ் என்ற ஒரு Folder உருவாக்கி இருக்கும். இனி நீங்கள் அந்த டிராப் பாக்ஸ் folder இல் போடும் எந்த ஒரு கோப்பும் இணைய இணைப்புள்ள எந்தக் கணினியில் இருந்தும் www.Dropbox.com என்ற தளத்தின் வழியாக அல்லது நீங்கள் நிறுவியுள்ள டிராப் பாக்ஸ் மென்பொருளினூடாகப் பெற்றுக்கொள்ள முடியும். டிராப் பாக்ஸ் மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவியவுடன் Public, Photos என்ற இரண்டு Folder கள் உருவாகியிருக்கும்.தகவல்களை பரிமாற வழிகள் :
Public :
இதில் Public என்ற Folder இனுள் போடும் கோப்புக்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம் அந்தக் கோப்பின் மேல் Right click செய்து Public Link ஐ copy செய்து email மூலமாக அல்லது ஏதாவது சமூகவலைத் தளங்களின் மூலம் வேறு ஒருவருடன் பகிர்ந்து கொள்ள முடியும்.Photos :
அதே போல் Photos என்ற Folder இனுள் உங்கள் படங்கள் உள்ள Folder ஐ போட்டு விட்டு நீங்கள் போட்ட அந்த folder இனுள் Right click செய்து Copy Public Gallery link என்பதை Click செய்து உங்கள் Photo Gallery க்கான அந்த link ஐ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.Sharing :
மேலும் டிராப் பாக்ஸ் இக்குள் இருக்கும் விரும்பிய ஒரு Folder ஐ நீங்கள் விரும்பினால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். இதன் மூலம் அந்த Folder இல் நீங்கள் போடும் கோப்புக்களை உங்கள் நண்பரும், உங்கள் நண்பர் போடும் கோப்புகளை நீங்களும் பயன்படுத்த முடியும்முடிவுரை :
டிராப் பாக்ஸ் இனுள் Public , Photos எனும் இவ்விரு Folderகள் தவிர மற்றைய Folder இனுள் போடும் உங்கள் கோப்புக்களை உங்களைத் தவிர வேறு யாராலும் பார்க்க முடியாது. டிராப் பாக்ஸ் இல் நீங்கள் பதிவு செய்வதன் மூலம் இலவச 2 GB சேமிப்பிடத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். உங்கள் டிராப் பாக்ஸ் கணக்கில் இருந்து உங்கள் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களை டிராப் பாக்ஸ் இல் இணைப்பதன் மூலம் உங்கள் சேமிப்பிடத்தைப் 8GB வரை அதிகரிக்க முடியும் . -
நிசாரியின் (சூரியன்) வீரியம்.
பா வானதி வேதா. இலங்காதிலகம்
குளிருது குளிருது என்று குடங்குதலானோம்.
குனிய நிமிர உடல் நோவானோம்.
நிமிர்ந்து நிம்மதி கொள்வாய் என்று
நிசாரி தன் கிரணங்களை வீசினான்
கஞ்சத்தனம் காட்டாது அதி பரிவை
வஞ்சகம் இன்றிக் காட்டுதல் கொடுமை
அஞ்சுகிறார் மக்கள் அலறுகிறார் வெப்பத்தால்
விஞ்சுதலாய் வெக்கையில் வியர்வை வழிகிறதுகோடை வேண்டும் கோடை வேண்டுமென்றோம்
கோரிக்கை கோரமாகித் துடிக்கிறோம் இன்று
மரங்களின் கீழ் மக்கள். பறவை
மரங்கொத்தியாய் முயற்சி, நிழல் தேடி.
குளியல் இரண்டு மூன்று முறை
எளிதான பருத்தி உடைத் தேர்வு
களித்திட கடல் தேடி ஓடல்.
புளித்திடாத குறையாக வெயில்..வெயில்..பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-7-2015 -
இலைகள்
மெய்யன் நடராஜ்
மழைக்காலத்துக்கான மேகங்கள்
உதிர்கின்ற இலைகளில் இருந்துதான்
சேமிக்கின்றன
வானவில்லுக்கான நிறங்கள்!இதழ்கள் பரப்பி பூப்பதில்
காம்புகளின் வெற்றிடங்கள் நிரப்பும்
மலர்களை அந்நியப்படுத்திவிட்டு
இலைகள் பரப்பி நிறங்களை
புஷ்பிக்கும் இலையுதிர்கால
வர்ணங்களில் வசப்படுகிறது
மரணத்தின் அழகுமர வீடுகளின்
கூரைகளுக்கு வேயப்படும்
பச்சை ஓடுகள் இலைகள்தூக்கி வளர்த்தக் கிளைகள்
துரத்திவிடும் பட்சத்தில்
பாதத்தில் சரணடையும்
பழுத்த இலைகள்
வேர்களுக்கு விருந்து
கொடுக்கின்றன உரமாய்.தாமரை இலைகளின்மேல
தண்ணீராய் ஒட்டாமல்
தாவர வளர்ப்பின் மேல்
ஒட்டாமை வளர்க்கின்ற
பிரபஞ்சத்துக்கு
வரும்பஞ்சத்தை
பாடமாக்கிப் போதிக்கின்றன
இலைகள் .இலைகள் இயற்கை வைத்தியர்கள்.
தூதுவளை ,துளசி
கொத்தமல்லி புதினா
வல்லாரை முருங்கை என்று
நீள்கின்ற மூலிகை இலைகள்
இயற்கை வைத்திய மாளிகைபுழுக்கள் கூடுகட்ட
தன்னையே கொடுக்கும்
ஈகைக் குணத்தில்
வள்ளல்களை மிஞ்சிவிடுகின்றனவிலங்குகள் கேட்டாலும்
மனிதன் கேட்டாலும்
இலைகள் இல்லை என்று
கைவிரிப்பதில்லை .சருகாகி உதிர்ந்தாலும்
மக்கி உரமாகும் வரமாகும்
இலைகள் ஒருநாளும்
கைவிரிப்பதில்லை.வாழை இலைபோட்டு
வயிறார உண்ணும்போது
எடுத்தெறியும்
கரிவேப்பிலையைபோல்
எடுத்து வீசி விடுகிறோம்
இலைகளின் மகிமைகளைசுபகாரியங்களில்
முதலிடம் கொடுத்து வரவேற்று
பின் அதையே மென்றுத் துப்பி
பொது இடங்களை அசுத்தமாக்கி
கெட்ட பேர் வாங்கிக் கொடுக்கிறோம்
வெற்றிலைகளுக்குமொட்டைமரங்களின்
ஓட்டை நிழல்களில்
உட்கார்ந்து பேச
யாருமில்லா ஊர் வாய்
இலைகளை பற்றிப்
பேசத்தவருவதில்லைஇலைகள் இருப்பதால்தான்
இளைப்பாருகிறோம்.
இறந்தாலும் பாடையாய்ச் சுமக்கும்
இலைகளைப் பார்த்து
மண்மேல் வந்தது வாழ்ந்தது
மண்ணுக்குச் சொந்தம் என்பதை
மனதுக்குள் வைப்போம். -
கவிதையாகும் விளங்காமை!
-மெய்யன் நடராஜ்
விளக்கமாக விளக்கிச் சொல்லியும்
விளங்காத நிலையில்
விளங்குச்சா என்னும்
வாத்தியாரின் அதட்டலில்
விளங்காததையும்
விளங்கியதாய் தலையசைக்கும்
விடலைநாட்களின் தொடர்ச்சி
விடவே இல்லை இன்னும்….விளங்கிப் படிச்சவங்க எல்லாம்
விலங்கியலும் பௌதீகமும் என
விரிவாகப் படிக்கப் போனபோது
விளங்காம படிச்ச எனக்கும்
விளங்கிப் படிச்சிருந்தா கொஞ்சம்
விளக்கமாப் படிக்கலாமுன்னு
விளங்கியது,
விளங்க வேண்டிய நேரத்தில்
விளங்கிக்காம இருந்துட்டு
விளங்காததை இப்போ
விளக்கமாக விளக்குமாறு
விளங்கியவர்களிடம் கேட்க, எடு
விளக்கமாத்த என்பதில்
விரிகிறது விசனத்தின் விசும்பு.விளக்குமாறு பற்றி
விளக்குமாறு கேட்டால்
விளக்குமாறே விளக்கும்விளக்கு மாதிரி இருந்தும்
வெளிச்சம் தர மறுக்கும்
விளக்கமானோர் எல்லாம்
விளங்கியும் விளங்காமல் நடிக்கும்
விவஸ்தைஇல்லா அவஸ்தைகளில் நின்று
விடுதலைக்காய் போராடுவதிலும்
விளங்காமல் இருப்பதே மேலென்று
விளங்குவதில் விளங்குகிறது
விளங்காம படிக்காததின் விளக்கம்விளக்கமாக படித்ததின்
விலைகளில் நிர்ணயமாகின்ற
விளக்கங்கள் இருதயம் மூடும்
விசித்திரங்களில் விளையாடும்
விளையாட்டு மைதானத்தில்
விளையாடப்படும் பந்தாய்
விளையாட்டுக்கும் விளையாடாமல்
விளைவிக்கப்படும் சந்தோசங்களில்
விளையாடுகிறது
விலைகொடுத்தும் கிடைக்கா வான
வில்லின் அழகுகள்விளங்கியதை விளங்காததாய் நோக்கும்
விலங்கு மனசு வேண்டுவதற்கு
விளக்கமாகும் விளக்கங்களுக்கு
விலைகொடுக்கும் கொலைகளிலும்,
விளங்காமலிருக்கும் கலைகளில்தான்
வீணை வாசிக்கிறாள் என் சரஸ்வதி
என்பதால்தான்
வைத்தியமும் உபாத்தியாயமும்
பொறியியலும் வணிகமும் என்ற
பணம்பிடுங்கும் பிழைப்புகளிலும் நுழைந்து
கவிதையாகி நிற்கிறது என் விளங்காமை!



