Author: பொன் ராம்

  • தமிழக அன்னைக்குத் தாலாட்டு

    jj

    பொன். இராம்

    தாலாட்ட தாயிருந்தும்

    தங்கமே தாயின் அரவணைப்பு சுகம்

    வேலைப்பளுவால் அறிந்ததில்லை!

    தோள் கொடுக்க தந்தையில்லை

    தோள்மீது சாய்ந்து ஆதரிக்க

    ஆதரவில்லை!

    தரணியில் திரையுலகம் காட்டிய

    கண்ணாடி மாளிகையில்

    தங்கவிக்ரமாய் மலர்ந்தருளிய

    தங்கவிளக்கே!

    அரசியல் சாக்கடை

    அநாகரிக விலங்குகளின்

    மத்தியில் ஏன் வந்துதித்தாய்

    பெண் சிங்கமே!

    ஆயகலைகள் கற்றுணர்ந்த

    உனக்கேன் சிறுமதிக்கூட்டங்களை

    கட்டியாளும் வேலை!

    போனதென்னவோ உனதுயிர்தான்

    என்றாலும் தங்கமகள்

    இருந்திருந்தால் தமிழ்நாட்டிற்கு

    குறைவுமுளதோ!

    யாருக்காக நீ சேர்த்த

     தங்கப்புதையல்

    செல்வமகளே!

    புவிமகளை நீ முத்தமிட

    தங்கக் கருவறை அனைத்தும்

    யாருக்காக தங்கம்மா!

    கடலலை தாலாட்ட

    சிலுசிலுக்கும் குளிர்காற்று

    மட்டுமே உனக்கு

    சொந்தமாக வேண்டும் என்றே

    ஆணையிட்டிருந்தால்

    நிலக்கோட்டைகள் எல்லாம் எதற்காக

    அம்மா?

    தாய்க்கு இறுதிக் கடன் செலுத்த

    முடி துறக்க மறுக்கும்

    இவ்வுலகில் முடி துறந்த ஏழை நலம்

    காக்க உண்மையான அரசியல்

    தொண்டன் யாரென்றே

    உரைத்திட்டுச் சென்றிருந்தால்

    தரணி உன்னை வாழ்த்தியிருக்கும்!

    தாலாட்ட கடற்கரைத்தாய்

    அருகிலிருக்க ஆறடி

    சந்தன வாசனையில்

    இப்போதாவது நிம்மதியாக

    கண்ணுறங்குவாயா பெண்குலத்

    தமிழகத் தாயே!

    Share
  • கீழாநெல்லியின் மடல்

    –பொன். இராம்

    மனம் தெளிவுபட
    மருந்துக் கவிதையானாய்!
    பாழ்பட்ட திரையுலகைப்
    பண்படுத்த வேரானாய்!
    என்னை மட்டும்
    ஏன் பயன்படுத்த
    மறந்தாய் மானிடனே?

    சிற்பி வடித்த சிலைகளாய்
    மனித உள்ளங்களைச்
    சீர்திருத்திய நீ
    உடல்நலம் காக்க
    என்னை மட்டும்
    ஏன் மறந்தாய்?

    முத்தான கவிதைகளை
    முத்துக்குமரனாய்
    முருகவேள் தந்த
    தமிழை வளர்த்த
    உன் புகழைத்
    தீந்தமிழ்க்
    கவிதை நெஞ்சங்கள்
    என்றும் பாடும்!

    பணம் தர மறுத்த
    வெற்று உயிர்க் காசோலைகள்
    அல்ல நாங்கள்!
    அடுத்த பிறவி
    அருமையாய் உனக்கு
    அமைந்திட்டால்
    நல்ல உள்ளங்களுக்கு
    மட்டுமே பா வடிக்க
    வேண்டுகிறேன்!

    சும்மா வரவில்லை சுதந்திரம்
    என்பதுபோல
    சும்மா வராது
    தமிழ்க்கவிதை என்றே
    விதி வகுக்க வருவாயா!
    மூலிகைச் செடியான
    என் பெருமையும்
    அடுத்த பிறவியில்
    நீ பாட
    குறுஞ்செடியின்
    தாழ்மையான விண்ணப்பம்!

    என்னை வளர்க்கத்
    தண்ணீரும் பரிதி தயவும்
    போதுமே!
    உயிர் மருந்தாய்
    உச்சந்தொட்ட
    பாவினைக் காணக்
    கண்ணீருடன் காத்திருக்கும்
    கீழாநெல்லி மூலிகை!!

     

     

    Share
  • ஓய்வு!

    -பொன்ராம்

    அசையாத திரைச்சீலை
    எனது இதயக்கனத்தைப்
    புரிந்துகொண்டதோ!
    டிக்! டிக்! கடிகாரம்
    இந்த வீட்டின் சப்தம்
    எழுப்பும் சிறுகை அளாவிய
    குழந்தைமணி!

    சன்னலில் கட்டி விடப்பட்ட
    பாசிமணிகளுடன் தென்றல்
    நண்பர்களுடன் விளையாட்டுச் சப்தம்!
    தாள் கிழிக்கும் ஓசை
    எனது செவிகளுக்கு
    இன்னிசை நாதம்!

    சாய்வு நாற்காலியின்
    கிரீச் ஒலிகூட
    என்னுடன் சரிகமபதநி
    விளையாடி
    அலுத்துக் கிடக்கிறது!

    மௌனத்துடன் சங்கமிக்கும்
    எனதருமை முள்நாட்களுடன்
    நாட்காட்டி குறிப்பிட்டது
    எனது ஓய்வு வயதை!

    வாழ்க்கைப்படகு ஓடிய
    ஓட்டத்தில் அப்போதுதான்
    உணர்ந்தேன் என்னுடன்
    பயணித்த யாருமில்லை
    என்னருகில்!

    ஓடி வந்த நாலுகால்
    நன்றியினத்துடன்
    நான் மட்டுமே
    தீவாய்த் தனித்திருந்தேன்!

    தொலைத்த வாழ்க்கையை
    எங்குத் தேடியும் எனக்கு
    இன்றுவரை கிடைக்கவில்லை!

    வீசிய தென்றலாய்
    தெங்கொன்றில்
    குயிலொன்று இன்னிசையாய்க்
    கொடை கானம் பாடி
    வாழ்க்கைப்பாதை
    தேடிப் பறந்ததோ!                                                                                            

    Share
  • உயர்ந்த இடம்

    –பொன்.ராம்.

    என்ன காமெராவைப் பாத்துட்டு ஓடி வந்துட்ட ………….!

    பசிக்குதுன்னு சொன்னியே! அதான் கூட்டிட்டு வந்தேன் பாப்பா….என்கிட்டயும் காசில்ல…..அப்பா கொடுத்த காசுக்கு பெட்ரோல் போட்டாச்சு……….

    ‘ப்ச்’….எத்தனையோமுறை அப்பாட்டயும், அம்மாட்டயும் சொல்லியாச்சு……ஊரைச்சுத்திக்கடன்….வித்துட்டு இருக்கறதை வச்சு சந்தோஷமா இருங்கன்னு……. ஊரு உலகத்துக்காக பயந்து வாழுற என் அப்பா அம்மாவுக்காக பாக்குறேன். பெரிய பிசினஸ் புள்ளி.  ஆனா நான் எங்க நிக்குறேன்….பாத்தீங்களா! ரமேஷ் அண்ணா…..நான் காருக்குள்ளயே இருக்கேன்………..அம்மா உணவகத்துல என்ன இருக்கோ அத வாங்கிட்டு வாங்க……………….!

    அதெல்லாம் அங்க வச்சே சாப்பிடணும்……….,

    இல்ல……என் ஃப்ரெண்ட் அப்பாவுக்கு உடம்பு ரொம்ப முடியாதவரு….வயசு ரொம்ப ஆயிட்டதால அவரால சமைக்கமுடியாது. அதனால அவ போய் அவங்கப்பாவுக்கு கேக்கறப்ப கொடுத்தாங்க………

    டிஃபன்பாக்ஸ் எதுவும் வச்சிருக்கியா!

    வேலைக்காரிகிட்ட அம்மா பாத்திரம் சரியா கழுவுலன்னு சண்டை போட்டுட்டு,  இன்னைக்கு வரலை…..அதான் நானே கழுவி கொண்டுவந்திருக்கேன்.

    உனக்கேன் பாப்பா இந்தவேலை…… அம்மா உன்னை திட்டலையா!

    அம்மா அப்பாவோட சேந்து தண்ணியடிச்சுட்டு காலைலவரைக்கும் எந்திரிக்கலை……….! சமையல்காரியும் வரலை……..நாலுமணிக்குமேல எனக்கு எழுத வேண்டியிருந்தது…அதான் அடுப்படிக்கு போகலை……இல்லைன்னா சாதமாவது வச்சிருப்பேன்………….,  போகும்போது எனக்கு சமையல் புக் ஒண்ணு வாங்கி வக்கிறியாண்ணா………,  வெளில வந்து சாப்பாட்டுக்கு நிக்கறது அசிங்கமா இருக்கு…….யாராவது பாத்தா அப்பாட்ட சொல்லிடுவாங்க………….

    கண்ணில் எழுந்த கண்ணீரை அவள் பார்க்காதபடி தூசி விழுந்ததுபோல லேசாகத் துடைத்தபடி ஏன் பாப்பா! உங்க ஸ்கூல்லயே காண்டீன் இருக்குல்ல!

    அங்க போறதுக்கும் கைல காசு வேணும்ல……..ரெண்டுபேருக்கும் குடிக்கறதுக்கும், கார்ல அடுத்தவங்க பாக்கறதுக்கும் கடன்வாங்கி செலவு செய்யறாங்க….ஃபாரீன் மாதிரி படிச்சுக்கிட்டே வேலைன்னு இந்தியாவுல வந்தா நல்லாருக்கும்…..பத்துகூட முடிக்காத எனக்கு யார் வேலை தருவா இப்ப………..? காரு ஏன் மாறிப்போவுது அண்ணா?

    நான் உன்னை எல்கேஜில இருந்து வண்டில இந்த ஸ்கூலுக்கு கொண்டுவந்து விட்டுட்டு இருக்கறேன் பாப்பா! என்னைக்கும் நீ பசின்னு சொன்னதில்ல……..அதான் மனசு கேக்கல….என் வீட்டுல சாப்பிட்டு போகலாம்.

    ஆமா! இதுவரை நீங்க தனியால்ல இருக்கேன்னு நினைச்சிட்டு இருக்கேன்.

    இல்ல பாப்பா! எனக்குன்னு ஒரு சின்ன குடும்பம் இருக்கு…வா! வீடு வந்திருச்சு…இறங்கு………

    சுஜின்னு கூப்பிடு….எனக்கும் வயசாகுதுல்ல……….!

    இல்லை பாப்பா…..எனக்கு அப்படியே கூப்புட்டு பழகிடுச்சு……………..நீ கல்யாணமாகி புள்ளை பெத்தாலும் நீ எனக்கு பாப்பாதான்.

    கௌரி யார் வந்திருக்கான்னு பாரு………………!

    எட்டிப்பார்த்த கௌரி சுஜியை வாம்மா! வந்து உட்காரு என்றாள்.

    வீட்டைச்சுற்றிப் பார்த்த சுஜி அலமாரியில் இருந்த மதர் தெரசாவை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.

    அலமாரி முழுவதும் ஷீல்டுகளால் நிறைந்தபடி இருந்ததை வியந்து பார்த்தாள். நடுவில் ஒரு தேவதை டிரஸ் போட்ட எட்டுவயதுப்பெண் பாப்தலையுடன் சிரித்துக்கொண்டிருந்தாள்.

    அண்ணா இது யாரு………..?

    இது என் பொண்ணு……..!

    இப்ப எங்க……………….?

    கடவுளுக்கு அந்த பொண்ணை ரொம்ப பிடிச்சுப்போச்சாம்….அதான் பூமில ப்ரைஸ் நிறைய வாங்கிட்ட………….., என்கூடவந்து இருந்துக்கோன்னு கூட்டிக்கிட்டார்.  உன்ஸ்கூலுதான் பாப்பா…. உன்னோட ஒரு வயசு கம்மி………இருந்தா உன்னோட பேசிட்டு இருந்திருப்பால்ல………..சுவரில் தொங்கிய ஃபோட்டோவை வெறித்தான்.

    வா பாப்பா! டைனிங்டேபிள்ல உட்காருன்னு சொன்ன கௌரியை முதன்முதலாகப் பார்த்தாள்.

    வீட்டில் பரப்பி வைத்திருக்கும் ஹாட்பாக்ஸ், ஆடம்பர கண்ணாடி டம்ளர்,வெள்ளி பழத்தட்டு எனப் பார்த்துப் பழகிய கண்களுக்கு பரப்பிய வாழைஇலை சாப்பாடு அவளுக்குப் புதிதாகத் தெரிந்தது. அதைவிட கௌரி பரிமாறக் காத்திருந்தது  புதிதாகத் தெரிந்தது.

    சுஜி…எனக்கு ப்யூட்டிபார்லர்ல வேலை இருக்கு. நீ போய் வேலைக்காரிட்ட சொல்லி சாப்பிட்டுக்க…….! என்ற குரல் மனதில் ஒலித்தது.

    நான் உங்க பொண்ணு மாதிரின்னு நினைச்சுதானே வீட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்க….. தரையிலயே உக்காந்துக்கறேன்.

    வாஷ்பேசின் எங்க! ஓ சாரி! கொல்லைப்பக்கம் எங்கிருக்கு?

    ஓடிச் சென்று கையைக் கழுவித் துடைத்தபடி ஸ்கர்டை இழுத்துக்கொண்டு அமர்ந்த பெண்ணை பாசத்துடன் பார்த்தாள் கௌரி.

    இன்னைக்கு நீ வருவேன்னு தெரியாது…….டிஃபன் செய்யல……….அதுதான் உருளைக்கிழங்கு பொரியலும், முருங்கைக்காய்கூட்டும், தக்காளிக்குழம்பும், அப்பளமும் வச்சிருக்கேன். சாப்பிடுறியா……………….

    போடுங்க பசி உயிர் போகுது…..

    ரசித்துச் சாப்பிட்டாள் சுஜி.

    Swamiஅண்ணா! எனக்கொரு உதவி செய்வியா? சாப்பிட்டுக்கொண்டே பேசினாள் சுஜி.

    நான் டெய்லி இங்க வந்து சாப்புட்டுபோறதுக்கு எதாவது ஐடியா இருக்கா? படுத்துத் தூங்கக்கூடப் பிடிக்கல….எங்கயாவது போய் செத்துடலாம்னு தோணுது……….

    கௌரி தன் கணவனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.

    நீ சாப்பிட்டு கிளம்பு பாப்பா! ஸ்கூலுக்கு நேரமாய்டும்…..

    கதவருகில் யாரோ வந்து நிற்பதுபோல நிழலாட………! சிலையாய் நின்றாள் சுஜி. அப்பா என்று உச்சரித்த சொல் தொண்டைக்குள் பயத்தால் குழறியது.

    நான் அப்பவே நினைச்சேன். இவளைப்போய் இங்க கூட்டிட்டு வந்திருக்காரே…..அவங்க குடிச்சா உங்களுக்கென்ன? உங்களுக்கு இனி வேலை வெளில தேட வேண்டியதுதான். அலுத்துக்கொண்டாள் கௌரி.

    இரவுநேரத் தூக்கமின்மையாலா, அல்லது குடித்துச் சிவந்திருந்ததாலா எனத் தெரியாத அதிகாரக்கண்களில் என்றுமே கண்ணீரைப் பார்த்தறியாத சுஜி அன்று கண்ணீரைப் பார்த்தாள்.

    உனக்காகத்தானடா விழுந்து விழுந்து சம்பாதிக்கறேன். நம்ம கார் ஒண்ணை இங்க வொர்க்ஷாப்ல விட்டிருந்தேன். எடுக்கலாம்னு வந்தேன். வர்ற வழில உன் கார் இங்க நிக்குது…. என்னவோ டிரைவர் உன்னைச் என்ன செஞ்சிடுவானோன்னு பயத்துல மறைஞ்சு வந்தேன்.

    பாத்தா இங்க நீ இப்பிடி பேசுற…….ரமேஷ்! இனி இது உன் வீட்டுப்பொண்ணு மாதிரி நினைச்சுக்கோ! அது எப்ப சாப்பாடு கேக்குதோ போடுங்க…..  சுஜி முன்னாலேயே சொன்னமாதிரி கடனையெல்லாம் அடைச்சிடுறேன். மூட்டை தூக்கியாவது எம் பொண்ணைக் காப்பாத்துறேன்..  போதுமாம்மா..இனி நாங்க ரெண்டுபேரும் குடிக்கவும் மாட்டோம். அப்பாவோட ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்துடுறியாம்மா………!

    பன்னீர்ரோஜாக்களை யாரோ தனது தலைமேல் கொட்டியதுபோல உணர்ந்தாள் சுஜி. இதோ! சாப்பிட்டு வர்றம்பா…….ஆண்ட்டி நல்லா வச்சிருக்காங்க…………..

    நீங்களும் சாப்பிடுறீங்களாய்யா?

    சும்மாயிருங்க..! அவரு எவ்வளவோ ஒசந்த இடத்துல இருந்து வந்தவரு……அவர்கிட்டபோய்……..

    உசந்த இடம்கிறது பங்களாவுலயோ….போற கார்லயோ இல்லைம்மா…..பசிக்குதுன்னா…ஒருவேளை சாப்பிட சாப்பாடு கொடுக்கறாங்கபாருங்க …! அவங்கதான் உயர்ந்தவங்க……..கொண்டுவாங்க சாப்பாடை…….‘கீழேயே உக்காந்துக்கறேன்னு உயர்நதவன் என்ன! தாழ்ந்தவன் என்ன‘ எனப் பாடிய  அப்பாவைச் சிரித்தபடி பார்த்தாள் சுஜி. ‘சாதி இரண்டொழிய வேறில்லை‘ எனப் பக்கத்துவீட்டுகுடிசையில் யாரோ படிப்பதைக் கேட்ட சுஜி  அலமாரியில் ஒட்டியிருந்த விவேகானந்தர் படத்தின்கீழ்  ‘உன்னால் எதையும் சாதிக்க முடியும்‘ என்ற வாசகத்தை மனதுக்குள் மௌனமாகப் படித்தாள். அவளுக்கு வாழ்க்கையின் பொருள் புரிந்ததுபோல இருந்தது.

    Share
  • மூழ்கிக் கொண்டிருக்கும் தமிழ்மொழியின் பெருமை

    — முனைவர்.பி.ஆர்..லட்சுமி.
    பி.லிட்.,எம்.ஏ.,(தமிழ்),எம்.ஏ.,(மொழியியல்),எம்ஃபில்.,டிஎல்பி.,(பிஜிடிசிஏ).,(எம்பிஏ)
    தமிழ்த்துறை வல்லுநர்

     

    ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடித் தமிழ்’ எனப் புகழ் பெற்ற செம்மொழித் தமிழின் பெருமையினைச் சங்க இலக்கியங்களும், கல்வெட்டுகளும், புராதனச் சின்னங்களும் வெளிப்படுத்தியுள்ளன. ஆயினும், கடலுக்கடியில் மூழ்கிக்கொண்டிருக்கும் தமிழ் தொடர்பான செய்திகளை வெளிக்கொணர்வது இன்றைய காலகட்டத்திற்கு அவசியமாகிறது.

    தற்போதைய, உலகளாவிய ஆய்வில் கண்டுபிடித்த செய்தியின் அடிப்படையில் மடகாசுகருக்கும், ஆஸ்திரேலியாவிற்கும் தெற்கு  பரந்துபட்ட இந்துமகா சமுத்திரத்தில் மூழ்கிய லெமூரியாக் கண்டம், குமரிக் கண்டம் என அழைக்கப்படுகிறது. பங்கியா-குமரி இருந்த நிலப்பரப்பில்தான் உயிரினம் மனிதனின் வழித் தோன்றல்கள் தோன்றியுள்ளன.அமெரிக்க, ஆஸ்திரேலியக் கண்டங்களில் ஆரம்பகால உயிரினமோ, மனிதவழித் தோன்றலோ, பிறந்ததாக, வாழ்ந்ததாக அடையாளங்கள் இல்லை.

    பங்கியா(பாண்டியா) என்ற நிலப்பகுதி பிளவுபட்டு லுரேசியா, கோண்டுவானா என்று இருந்த குமரிக் கண்டம் பகுதியில் இயற்கைச் சீற்றத்தினால் பல்வேறு மாறுபாட்டினை அடைந்தன.

    கி.மு.300இல் தென்கடலில் பயணம் செய்த கிரேக்கத் தூதுவர் மெகஸ்தனீஸ்  பங்கியாவைப்   ‘பண்டேயா‘ எனக் குறிப்பிட்டுள்ளார். அதிலிருந்து உடையத் தொடங்கிய நிலப்பரப்பு கோண்டுவானா. வடக்கிலிருந்து பிரிந்த நிலப்பரப்பு இலாராசியா. கோண்ட்வானா மீண்டும் உடைந்து தென்னமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா என்று பிரிந்தது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் கோண்ட்வானா பெருங்கண்டம் அமைந்திருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

    கன்னியாகுமரி வரலாற்றுச் சிறப்புமிக்க இதனைத் தென்கடலில் மூழ்கிப் போன குமரியத்தின் எஞ்சிய நிலமாகக் குமரிமுனை, இலங்கை, இலட்சத் தீவுகள் அறியப்படுகின்றன.
    ”பஃறுளி-…………………………………………
    ………………………………கொடுங்கடல் கொள்ள”…….சிலம்பு கா. காதை (19-20) பாடலடிகள் தமிழ்மொழியின் பெருமையை அறியச் செய்துள்ளது. குமரிக்கோடு என்ற மலைநிலத்தைச் சுற்றி குமரி ஆறு, மலை, அதனைச் சுற்றி நாடுகள் பல இருந்தன. அவைகளே பஃறுளியாறு, குமரிக்கோடு. குமரிமுனையின் வரலாறு குறித்து
    •    ஸ்டிராபோ-கி.மு.74-கி.பி-24
    •    தாலமி—கி.பி.119-161
    •    மார்க்கோபோலோ—கி.பி.1254-1324 போன்றோர் ஆய்வு செய்து பல கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
    தாலமி இந்தக் குமரி முனையை ‘ புரோமன்போரியம் குமரி‘ என்று குறிப்பிட்டுள்ளார். முதலில் பஃறுளி ஆறு அழிந்து, குமரிக்கோடு கடலில் மூழ்கிய பின், முசிறியின் பல பகுதிகளும் கடலில் மூழ்கின. கடல்கோள் நடந்த செய்திகள் கி.பி. 79 ஆகஸ்டு 23-24 அத்துடன் கி.மு.மூன்றாம் நூற்றாண்டின் (300) இறுதி எனவும், காவிரிப்பூம்பட்டினம், மலங்கே என்ற மகாபலிபுரம் என்ற மாமல்லபுரம் ஆகியன கடலில் மூழ்கியவற்றைக் கூறுகின்றனர்.

    ”குமரியக் கிழக்கு மலையாளப் பாண்டியப் பண்டு நாட்டிலிருந்து செங்கடல் வழியாக வந்து நைல் நதிக்கரையில் குடியேறிய (தமிழர்) மக்கள்  எகிப்தியர் என்று ” புராதன கிழக்கு வரலாறு”  (The Ancient History of the Near east) என்ற தமது நூலில் ஆர்.எச்.ஹால் என்பவர் கூறுகிறார்.. அவரே  திராவிட மக்களும் எகிப்தியரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்” என்றும் கூறுகிறார். இதே கருத்தினை( outline of history by H.G Wellman”s place in nature  and other essays P.23 Thoms Huxle) மற்றும்” ருக்வேத இந்தியா ” என்ற தமது நூலில் அபினஸ் சுந்தரதாஸ் என்பவரும் ” புராதனக் கலைஞன் ” என்ற தமது நூலில் பண்டிதர் சவுரிராயர், மற்றும் மெகஸ்தனீஸ் ஆகியோரும்  குறிப்பிடுகின்றனர்.

    ஏராளமான சங்கச் செய்திகள் சமகாலமான சங்க இலக்கிய எழுத்துகளில் கிடைத்துள்ளன. புகலூர் ஆறுநாட்டார் மலையில் பதிற்றுப் பத்து 7,8,9 ஆம் பத்துக்குரிய செல்வக்கடுங்கோ வாழியாதன் பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ பெயர் பொறித்த பழந்தமிழ்க் கல்வெட்டு கிடைத்துள்ளது. தேரிருவேலி அகழாய்வில் நெடுங்கிள்ளி பெயர் பொறித்த பானை ஓடும், மாக்கோதை, கொல்லிப்பாறை, கொல்லிரும்பொறை, குட்டுவன்கோதை என்ற சேரர் பெயரும், பெருவழுதி என்ற பாண்டியர் பெயரும் பொறித்த காசுகளும்  கிடைத்துள்ளன.

    அண்மைக்காலத்தில் கிழக்கு நாடுகளிலும், மேற்கு நாடுகளிலும் பல சங்ககாலச் சோழர்  புலிக்காசும், பெரும்பத்தன் கல் என்று பழந்தமிழ் எழுதப்பட்ட தங்கம் உரைத்துப் பார்க்கும் உரைகல்லும் கிடைத்துள்ளன. எகிப்து நைல் நதிக்கரை ஊரான குவாசிர் அல்காதிம் என்ற ஊரில் கண்ணன், சாத்தன், பனை ஒறி என்று எழுதப்பட்ட பானை ஓடுகளும், பெறனிகே என்ற இடத்தில் “கொறபூமான்” என்று எழுதப்பட்ட பானைஓடும் கிடைத்துள்ளது. இவை சங்ககாலத்தின் இருப்பையும், தொன்மையையும், காட்டுகின்றன. (செவ்வியல் ஆய்வுக்கோவை, உலகத் தமிழ்ப்படைப்பாளர் நூல் வெளியீட்டகம், திருச்சிராப்பள்ளி, மு.பதி.2011)

    விழுப்புரம் கீழ்வாலை மலைப்பாறைப் பகுதிகளில் காணப்படும் ஓவியங்கள், குறியீடுகள் போன்றவை பழங்காலத்து வரலாற்றுடன் தொடர்பு கொண்டுள்ளனவாக அமைந்துள்ளன. இங்கு காணப்படும் ஓவியங்கள் ஆப்ரிக்க, ஆஸ்திரேலியா ஓவியங்களை ஒத்துள்ளது.

    செங்கோன் தரைச்செலவு குறித்த நூல் குமரிக்கண்டம் குறித்த பழமையான செய்திகளைத் தரலாம் என ஆய்வுகள் மூலம் அறியப்படுகிறது. சமவயங்க சுத்த என்ற சமண நூல் (18 மொழி-தொகுப்பு) வாயிலாகத் தமிழ்மொழி குறித்த பல செய்திகளை அறியலாம். லலிதா விஸ்தாரம் என்ற பௌத்த நூல் தொகுப்புப் பட்டியலில் தமிழ்மொழி குறித்த செய்திகள் கிடைக்கலாம்.

    கி.மு 4500-இல் எகிப்து நாட்டை மீனன் என்ற தமிழன் ஆண்டான். இதுபற்றி எகிப்திய அக்கால குருவான மனேதா என்பவர் மீனன் முதல், 300 புராதன அரசர் வரலாற்றை அவர் அங்கு எழுதி வைத்தார். எகிப்தில் மீனன் சவ உடல் மதமதக்கத் தாழி என்ற குழு தாழியில் தைலம் பூசிப் புதைக்கப்பட்டுள்ளது. கி.மு.4000 ஆண்டில் பரவன் என்ற தமிழ் மன்னன் எகிப்து அரசனாக விளங்கினான். அவர்கள் பேசிய மொழி தமிழ்மொழி எனப் பலநூல்கள் குறிப்பிட்டுள்ளன.

    tamil 1

    கி.மு.4000 ஆம் வரையில் எகிப்து-பண்டு இடையே நோவா காலம் தொடர்ந்தும் (கி.மு.2400) கப்பற் பயணங்கள் நடந்திருப்பதை பொறிக்கப்பட்டிருக்கும் எகிப்தியச் சின்னங்கள் தெரிவிக்கின்றன.  எகிப்திலிருந்து நோவா என்பவர் கட்டிய கப்பல் கூட பண்டு(பாண்டியர்)நாட்டிற்காகச் செய்தவையாகும். இவை பற்றிய விபரங்களை முதலில் பட எழுத்துகளிலிருந்து மொழி பெயர்த்து ஹென்றிபுரோசு என்பவர் வெளியிட்டார். குமரித் தமிழர்கள் நிலப்பகுதிகள் கடலில் மூழ்க பல இடங்களுக்குக் குடிபெயர்ந்தனர்.

    tamil 2

    சுமேரியர்களை முன்னோடிகளாகக் கொண்டு மத்தியத் தரைக்கடல் கிழக்குப் பகுதியில் பனைமரங்களடர்ந்த இடங்களில் கோட்டை, கொத்தளம்  அமைத்துப் பெரும் வணிகர்களாக வாழ்ந்த  கடலாடிப் பகற்பரவத் தமிழர் வழியினரே பொனீசியர். அவர் வழியினரே பிரிட்டானியர்.  இச்செய்திகளின் வழி தமிழ்மொழி மிகவும் பழமை வாய்ந்தது என அறியப்படுகிறது.

    யோனாகுனி  தீவை ஒட்டிக் கடலில் மூழ்கித் தேய ஆய்வாளர்கள் கடல் மட்டத்திலிருந்து 100 அடி ஆழத்தில் பிரமிடுகள் போன்ற வடிவத்துடன்கூடிய கட்டுமானங்களைக் கண்டறிந்தனர்.கற்களால் ஆன இந்தக் கட்டுமானங்கள் இயற்கையா? இலெமூரியாக் கண்டத்தின் நாகரிக எச்சங்களா என்ற ஆய்வு நிலை நீடித்து வருகிறது.

    இலெமூரியாக் கண்டம் என்பதை மூ என்று சொல்வார்கள். இந்தியாவிலும், பர்மாவிலும் உள்ள இந்து மடாலயங்களில் கிட்டும் ஆவணங்கள் இது பற்றிப் பேசுகின்றன.

    ஆங்கில அமெரிக்க ஆய்வாளர் சேம்சுசர்ச்சுவார்டு 1931 இல் எழுதிய காணாமற்போன மூ அல்லது இலெமூரியாக் கண்டம் ஹவாய் தொடங்கி மரியானாவரை பரவி இருந்ததாகவும், கடற்கோள் ஏற்பட்ட பிறகு தென்னமெரிக்கா வழியாக அட்லாண்டிசுக் கண்டத்தின் கடலோரம் வழியாக ஆப்பிரிக்காவுக்கும் அகதிகள் பரவினர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    பிரெஞ்சு எழுத்தாளர் அகசுதசு லெ பிளாஞ்சீயோன்(1825-1908) 19 ஆம் நூற்றாண்டில் மூ கண்டம் குறித்துக் குறிப்பிட்டுள்ளது சிறப்பானது. மாயன் சுவடிகளை அவர் மொழியாக்கம் செய்தபோது மூ என்னும் கண்டம் இருந்தது குறித்தும், அக்கண்டத்திலிருந்து தப்பித்தவர் மாயன் நாகரிகத்தை உருவாக்கியதாகவும் எழுதியுள்ளார். இதன்வழி இலமூரியாக் கண்டம் இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

    எட்கார் காய்சி(1877-1945) அட்லாண்டிசு பற்றியும், மூ பற்றியும் அறிந்தவரான இவரே முதன்முதலில் இலெமூரியாக்கண்டம் எனப் பெயரிட்டார். துறவி தந்த சுவடிகள் வழி மூ என்னும் பழம்பெரும் நாகரீகம் குறித்து அறியப்பட்டுள்ளதாக நந்திவர்மன் குறிப்பிடுகிறார் (கடலடியில் தமிழர் நாகரீகம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.,மு.ப.2010) .

    tamil 3

    மேலும், மூழ்கிக் கிடக்கும் அட்லாண்டீசு தென் சீனக் கடலில் இருப்பதாயும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மூழ்கிய குமரிக்கண்டம் குறித்துப் பல்வேறு ஆய்வுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் கனடா நாட்டின் புகழ்பெற்ற ஆங்கில ஏடான ஏட்டில் திசம்பர் 7,இல் செய்தியாளர் மைக்கேல்  கியூபா நாட்டருகே கடலடி நாகரிகம் குறித்த சான்றுகள் குறித்துப் பதிவு செய்துள்ளார்.

    tamil 4

    கியூபா நாட்டு மாந்த உயிரியல்( Anthropology ) அகாதமியின் ஆய்வாளர் ஒருவர் அந்தப் பாறையின் மீது குறியீடுகளும், கல்வெட்டு எழுத்துகளும் தெளிவாகப் பார்க்கமுடிந்ததையும், அது எம்மொழி எனத் தெரியவில்லை எனவும் குறித்துள்ளார்.

    இதன்வாயிலாகத் தமிழ்மொழியின் பெருமை அறியப்படவேண்டிய நிலையிலேயே இன்னமும் அமைந்துள்ளது. இவ்வாய்வு முடிவுகள் வெளிவரின் தமிழ்மொழியின் பெருமை தழைத்து வளரும்.இது குறித்து இன்னமும் ஆய்வுகள் வெளிவர தமிழ்மொழி செழித்து வளரவேண்டும்.சுவடிகள் படிக்கவும்,கல்வெட்டுகளில் காணப்படும் செய்திகள் குறித்தும் அறிய மக்கள் முன்வரவேண்டும்.

    Share
  • கானல் நீர் பெண்!

    -பொன்ராம் (லட்சுமி) 

    சாலையெங்கும் பெண் முன்னேற்றக்
    கானல் நீர்!
    சறுக்கி விளையாடிய                                                                     small girl - kanal neer pen
    சிறுமி…நடந்த பாலியல் வேட்டையில்
    கல்லறைப் பெட்டிக்குள்
    பன்னீர் ரோஜாக்களின்
    கண்ணீருடன் உறங்குகின்றாள்!

    வீதியெங்கும் முளைத்த
    மதுப்புட்டிகளின் விளக்குக் கம்ப
    வெளிச்சத்தில் ஆணாதிக்க இதய
    கான்கிரீட் கட்டிடங்கள்!

    பொய் வருத்தத்தில் முளைத்த
    சுயநலக் கள்ளிப்புதர்களாய்ப்
    போதை மருந்துப் பூக்களின்
    நாற்றம்!

    பெண்முன்னேற்றம் பாடிய
    ஊடகத்தில் அரைகுறை
    ஆடையுடன் வெண்குழல்
    ஒழிப்பு விளம்பரத்தில்
    யார் அங்கே வருவது?

    உயரத் தெரிந்த குடும்பப்
    பணிபீடப் பனைமரத்தின்
    உச்சியில் தெரிந்த
    நங்கை பனங்காய்களின்
    கருத்துப் பரிமாற்றம்
    யாருக்காக நாம்
    என்றே அறியாமல்
    வாழ்கிறோம்!

    பனையோலைத் தாத்தாவின்
    படல்காற்றுக் கண்ணீரில்
    நனைந்த விறகாய்,
    தூரத்துச் சிறுமியின்
    கல்லாமைக்காகக்
    கண்ணீர் விடுகின்றது!

    கனிந்த பனம்பழமோ
    மாதந்தோறும் வரதட்சணையாய்
    மாறிய தூரத்து இரட்டைக்குதிரை
    பூட்டிய சாரட்டில் சாரதியான
    பெண்ணிற்காக
    விருந்தோம்பலுக்காகக் காத்திருக்கிறது!

    விதைப்பார் யாருமின்றி
    நச்சென்று மண்மாதாவை
    முத்தமிட்டுக் காத்திருக்கும்
    விழிப்புணர்வு வித்தை
    விதைக்க மறந்த ஆணாதிக்கம்
    எங்கே?

    பனைமரத்தின் வேர்களில்
    புரையோடிக் கொண்டிருக்கும்
    சாதி, பாலியல் வன்முறைக்
    கிருமிகளை அழிக்க மந்திரமாய்
    மாற ஔவையாருக்கு
    எங்கே போவது?

                                

    Share
  • பணிக்குச் செல்லும் பெண்

    பொன்ராம் 1-images

    பனியில் பூத்த ரோஜா

    பார்த்து ரசிக்க ஆளின்றி

    வாடிக் கிடக்கிறது!

    வெண்டை விரலின் ஸ்பரிசம் தேடி

    தோட்டத்தில் வெண்டைப்பூவின் தேடுதல் ஆரம்பம்!

    என் குழந்தையின் மழலை

    அடுத்த வீட்டிற்கு மட்டும்

    சொந்தமாகி விட்டது!

    அடுப்படியின் சிணுங்கல் ஒலி

    அன்னியமாகி விட்டது!

    குளிர்பதனப் பெட்டியில்

    உறைந்த உணவுகள்

    அன்றாட நண்பர்களாகி விட்டன!

    ஆறிலக்கப் பணித்தொகை

    உறவுகளின் ஆற்றுப்படையாகி விட்டன!

    உடைகளின் எண்ணிக்கை

    எனது துயரத்தினை வெளிக்காட்டாத

    மெழுகு முகமூடிகள்!

    எதைக் கொண்டு வந்தோம்

    எதைக் கொண்டு செல்கிறோம்?

    என்ற நோக்கின்றி வாழும்

    உயிரிருந்தும் இயந்திர மனிதர்களாய் நாங்கள்

    எங்கு செல்கிறோம்?

    படத்துக்கு நன்றி

    http://www.hindu.com/mp/2007/03/08/stories/2007030800730100.htm

    Share
  • பாலைப்பூப்பெண்

    முனைவர் இலட்சுமிi-cryndex

    ஒற்றைப் பூவாய்

    மலர்ந்து  தோட்டத்தில்

    மணம் வீசி

    நிற்கையிலே எட்ட

    நின்று வேலிக்கப்பால்

    கைநீட்டி பறித்தவனுக்கு

    பூ சொந்தமா!

    தோட்டத்தில் இருந்து

    மணம் பரப்பியதால்

    மட்டும் தோட்டத்திற்கு  உரிமையாகுமா?

    தெய்வத்திற்கு

    அர்ப்பணம் செய்யக்

    காத்திருக்கும் பூவின்

    யோசனையை யார்

    கேட்பார்?

    நல்ல விலை கொண்டு

    நாயை விற்பார்

    அந்த நாயிடம் யாரும்

    யோசனை கேட்பதில்லை……

    எங்கோ பாரதியின் மௌன

    அழுகை ஆரம்பம்!

     

    http://www.dailymaverick.co.za/article/2013-02-08-the-agony-of-south-africas-daughter-anene-booysen-the-agony-of-south-africa/

    Share
  • இருட்டு நிலா

    ​பொன் ராம்

    பின்னால் வந்த வண்டி நின்ற பின் உலகம் சுற்றி மருந்து வாங்க சென்றபோது பின்னால் வந்தனர். அந்த மருந்து சாப்பிடவே முடியவில்லை. பல சைட் எஃபெக்ட். பயத்தால் அங்கு மறுபடி புத்தாண்டு டபுள் இயர் தமிழுக்குச்  செல்லவில்லை. அந்த மருந்தை நிறுத்தி தேர்ச்சி மதிப்பெண் வந்த பிறகுதான் தூக்கி எறிந்தேன். மறுபடி தேவையில்லாம எழுதுவானுங்க……..நின்னு போய்டுச்சுன்னா கண்ணகி கண்ணீரிலேயே அழுகியிருக்க வேண்டியதுதான் கல்லறையில. ஹரிஹரன் வெகுநேரம் நெட் பார்ப்பதால் வந்தது எனக்கூறியதால் வெகு நேரம் யோசித்தேன். ஏன் மாறுபாடு? மருந்தும் வேறுபாடு?………………

    செத்து வச்சேன்னா பத்தினி இல்ல……சாபம் பலிச்சிட்டுதுன்னு சந்தோஷப்படணும்……..கடவுளை உள்ளிருந்தே வேலிருக்க வினையுண்டா ! இல்லையா என ஆராய்ந்தேன். அப்போதும் உடல் இப்படி இருந்தது. இன்னமும் மோசம். கடைக்குப் போய்த்தான் ஆக வேண்டிய தேவையில் பகலவனிடம் சென்றேன். அது செலவு நிறைய என்பதால் வீட்டிலேயே யோகக்கலை பயின்றேன். அமைதி அதுதான் எனது உடல்நலத்தைக் காத்தது. மருந்தே தேவையில்லாமல் காத்தது. அதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவு. நான் மனத்திடமாக இருக்க வேண்டும். அன்றிலிருந்து குப்பையான பல நினைவிலிருந்து விடுபட்டேன். உடல்நலம் தெளிவாகியது. எதையும் புரிந்து கொள்ளாத நிலைத் துணையுடனும், வெளியே அனுப்பாத நிலையுடனும், போராடிய மனதுடனும் அரவிந்தன் மட்டுமே உற்ற துணை. வந்த இடம் தேடினால் அங்கேயும் நதிவழி, ரிஷி வழி எடுப்பானுங்க…..படு வீக்குங்க அங்க….செத்தே போய்டுவானுங்க……….குடும்பமே சமாதியாயிடும்.  பாத்தேன்…அதான்நான் மட்டும் தனி ரோஸ் போல……… சொன்னா குறைஞ்சா போயிட்டேன். அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்…… யாரோ இட்ட அகிற்புகையின் வாசனை அவள் நெஞ்சை என்னமோ செய்தது.

    சென்றேன் மணம் வீசும் மலர்கள் நிறைந்த தோட்டத்திற்கு……சென்றேன் பிடித்ததை எடுத்துவர…….மலரைப் பறிக்க தோட்டக்காரன் காசு கேட்க….சேர்க்க சித்தப்பாவை நாடினேன். செயற்கை மலருக்கு டைம் உள்ளது. வாடகை மலர் ஒன்று இப்போது இருக்கட்டும் என பல வருடக் கனவை நிறைவேற்ற சென்று கொண்டிருக்கிறேன்.இடையில் குருதி ஓட்ட பாசங்களின் அணிவகுப்பில் போராட்டம்…… தப்பு செய்யக்கூடாது. அது நாம யாரு மேல பாசமா இருக்கமோ அவங்களைப் பாதிக்கும்…இது என் வாழ்வில் கண்டது………….தனியே அமர்ந்தே பழகினேன்.மைண்ட் ரிலாக்ஸாக…..பாசம் என்னை இழுக்கக் கூடாது.. போகும்வழி நெருங்கி விட்டதென்று நினைத்தேன். அதையும் மீறி மகள் பாசம் அலுவலகத்திலும் இழுத்தது. அதுதான் நான்கு அடி கண்ட புதுமை……..

    இருப்பேனோ….இல்லையோ……………சாதாரண பணி…விட்டாலும் என்னை விட்டா ஆளா இல்லை….சைலண்டாக விலக நினைத்தேன்.

    நீ என்ன செல்வது….சாக்கடையில் நீயும் கிட கணபதி இருந்த இடத்தை வளைத்த கதை வெளியே வந்தால் என்ன செய்வது…..மறைந்தேன்……இது தான் ஹூயுமன் ரைட்ஸா! கேள்வி கேட்டேன். மௌனமாக மொபைலில் அகிலமாக அமர்ந்திருந்தவளிடம்…………….வேலிருக்கிறான் என நினைத்தேன். சென்றேன் கடவுளிடம்….விடை கிடைத்தது. சன்னலைத் திறந்து பார்த்தாள். வெளியே பத்து நாள் தாடியுடன் கண்தெரியாமல் பிஞ்ச செருப்புடன் வெற்று வெளியில் வழி தேடிக் காற்றில் கை வீசிக் கொண்டிருந்த பெரியவரைப் பார்த்தாள். சற்று அருகில் சிரித்தபடி வேடிக்கை பார்த்த லேப்டாப் விற்றுக் கொண்டிருந்த இளைஞனையும் பார்த்தாள். நடந்து போனால் வழி சொல்லும் மக்களும் இருக்கிறார்கள்.குருடனுக்கு வழி தெரியவில்லை என்றாலும் சிரிப்பவர்களும் இருக்கிறார்கள். படிக்கும்போதே பாடத்தை மறந்திருப்பார்கள் போலத் தெரிகிறது………அடுத்தவங்க வீக் பாயிண்டைப் பிடிச்சாத் தான ஜெயிக்க முடியும்…….

    பிஸ்தா ஐஸ்கிரீம் சாப்பிட்டது போல் இல்லை…காரணம் உலகம் திருந்த வேண்டும்…அதுவரை மேகம் நிலவை மூடியது போலத்தான் இந்த உலகம்…………….விவேகானந்தர் சொன்ன 100 இளைஞரைத் தேட வேண்டும்……….. எழுதி முடித்த பர்ப்பிள் பேனாவின் முனையை இடது கையால் ஒடித்தாள் புஷ்கரணி. இதுதான் கடைசி அத்தியாயமாக இருக்கலாம்…ஊக்குவித்த கைகள் மாறுகின்றன…………எனக்கிருப்பதோ ஒரே கை…..எழுது….. என்றவனும் மறைந்து கொண்டிருக்கிறானே தவிர வெளியில் வர மறுக்கிறான். இத்தனை பேர் வைத்திருக்கிறான்……… ப்ச்……. வலது தாளை ஒரு முறை படித்தாள்…….யானை புக்மார்க்கைப் பலமுறை தேடினாள்…….கிடைக்கவில்லை….சுவரில் ஆடிய ஃபோட்டோ மரத்தில் பொக்கிஷம் போல் வைத்திருந்தாயே….தூக்கிப் போட்டாயே குப்பைத் தொட்டியில்……………..வேண்டுமென்றே விதவிதமான பேனா யாருக்கு என்ன பிடிக்கும் என்பதற்காக….எனக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்தாளோ…..பாண்டிச்சேரி பூ கொடுத்தவள்……. எம்பாசிங் வடிவத்தில் திருமகள் சிரித்தாள் ப்ளு கலர் வடிவத்தில்.. ‘அமேசான்’ ஆற்றுப் படுகையில் வாழும் காட்டுவாசிகள் பற்றிய அதிசயமான ஒரு குறிப்பை விழுந்து விழுந்து நெட்டில் படித்தாள்.

    குறிப்பிட்ட காட்டுவாசி இனத்தார் வாழும் கிராமங்களில் ஒரு சிறிய மரம் இருக்கிறது. அந்த மரத்தின் மூலமாக, அவர்கள் அடுத்த கிராமத்துடன் தொடர்பு கொள்கிறார்கள்! என்று……இந்த காலத்தில் இப்படியா? அடுத்தவர் மனதையும் ஆராயும் குறிப்பு தேடிச் செல்லலாமா என யோசித்தாள்.

    தூண்டிய விளக்கின் சுடரைப் பார்க்க எழுந்து  சென்றாள் புஷ்கரணி.

    Share
  • நிழல் தேடிய மரம்

    லக்ஷ்மி ​வைரமணி

    ஓம் சரவணபவ மந்திரம் ஓத மறந்து விட்டேனே? அதனால் வந்த விளைவு தானோ இது? சீக்கிரம் பழனி முருகன் கோவிலுக்குப் போலாம் வா என்றாள் சுனிதா. நீ இறைவனுக்கு தாசனா அம்மா? நீ சொன்னா பெய்யெனப் பெய்யும் மழைன்னு ஆயிடுது. கரி நாக்கு……… வட்டமுகத்துடன் பாப்தலையுடன் உதடைச்சுழித்து மழைத்தூறலில் பிளாஸ்டிக் உறைக்குள் உள்ள குறிப்பை மழையில் படித்தபடி இருந்த மாதங்கி கேட்டாள்.

    யாருக்கு யார் தாசனாய் இருப்பது? எல்லோருமே இறைவனுக்கு தாசன்கள்தானம்மா……………….தனக்கு இறைவனிடம் கேட்காமல் பிறருக்காக இறைவனிடம் யாசிக்கும் எவருக்கும் கேட்டது கிடைக்கும்னு படிச்சதில்ல.  புக்கை மூடு….மழைல படிச்சது போதும். விழுந்தா எலும்பு கூடத் தேறாது.

    உயிரைக் காப்பாற்றியவர் கடவுளுக்கு ஒப்பானவர்கள். அந்த இறைவனை நமக்குப் பிடித்த உருவத்தில் வழிபடுவது இயற்கை அவ்வளவுதான். மடிசார் உடுத்திட்டுதான் பகவானை சேவிக்கணும்னு இல்ல. கவுனை மாட்டிட்டு சர்ச்ல இருக்கணும்னு கட்டாயம் இல்ல. மசூதில போய் மண்டியிடணும்னு அவசியமும் இல்ல. பிற உயிருக்குக் கெடுதல் பண்ணாம, முடிஞ்சா நல்லது செய்யணும். இல்லன்னா அடுத்தவங்களக் கெடுக்காமலயாவது இருக்கணும். அவங்க பக்கத்துல கடவுள் கூடவே இருப்பாருன்னு உங்க ஆசிரியர் உனக்கு சொல்லலயா மாதங்கி…………..

    எல்லாரும் அவங்கஅவங்க பொண்ணுக்காக பக்கத்துல வந்தாச்சு…… நீமட்டும் ஹாஸ்டல்ல  ஏம்மா இருக்க…..அப்பாவோடு வந்துடு……ஒண்ணா இருப்போம்.

    ஒண்ணா சேந்து போங்க……..அப்பிடின்னா ஒண்ணு செய்யணும்…

    பசங்கள நாங்க செய்யுற மாதிரி……நிறைய பாடம் இருக்கு…..நீங்க படிச்சுடுங்க. பிரின்சிபால் அப்பிடித்தான் ராட்சசன் என்று சொன்னால் அவன் படிப்பான். அங்க போய் நீங்க கண்டுக்காதீங்க படிக்கறதுக்காகக் குழந்தைக்குப் பேய் வருதுன்னு பயம் காட்டுற மாதிரி ஆசிரியர் நாங்க உங்களக் காட்டுவோம்.கண்டுக்காதீங்கன்னு சொல்வோம். அவ படிச்சுடுவான். அவன் அறிவு அவ்வளவுதான்….ஆனா பசங்க ஒண்ணொண்னும் பாசமாத்தான் இருக்கும் ஆசிரியர்மேலே……….வாழ்க்கைன்னா மாணவனுக்கு இன்னங்கறது ஒரு சிலருக்கு மட்டும்தான் புரியும். புரிஞ்சவன் மேல போறான். புரியாதவன் இப்படித்தான்.அந்த தியாக மனப்பான்மை இருக்கறதுக்காக நான் ஹாஸ்டல்ல இருக்கேன்.சுயநலம் வந்துடக்கூடாது பாரு. கடமைக்காக உன்னை வளர்த்து விட்டேன். பள்ளியே கதின்னு வந்துட்டேன் ஆச்சு இதோ பதினொரு வருட அனுபவம். அதோ நிக்குது பார் மரம். அது இன்னைக்கு தலை விரிச்சுக்கிட்டு பழத்தை எல்லாத்துக்குத் தருது…நான் ஏன் தரணும்னு அந்த மரம் நினைச்சிருந்தா வெயிலடிக்கிறப்ப அது கீழே அந்தக் குழந்தை விளையாட முடியுமா பாரு……அப்ப நீயும் மரமா அம்மா! கிட்டதட்ட அப்படித்தான்….

    காந்தி மாதிரி, காமராஜ்,கக்கன் இவங்கள மாதிரி இந்தக் காலத்துல வாழ்ந்தா பைத்தியம் அப்பிடின்னு சொல்வான். மரத்தையும் வெட்டாத ஆளா பாத்துத் தேடுறேன். நிழலா இருக்கும்னு….கிடைக்க மாட்டேங்குது……..

    சோ…..நிழல் தேடிட்டிருக்கற மரம்…..அப்பிடித்தானே………..

    தனியா உட்கார்ந்துட்டு இருந்தா நிறைய சாதிக்கலாம். தண்டமா பொழுது போக்காம…பேசாமல் இருந்தால் நிறைய வேலை செய்யலாம். அதனால் தான் உன்னையும் சொல்றேன்.

    இப்பத்தான் புரியுது…அம்மா ஏன் தனியா நிக்கறான்னு. ஆனா உங்க பசங்களப்பாத்தா மட்டும் குஷி வந்துடுது…..

    பசங்கன்னாலே ஜாலி தான். அது ஒரு அழகிய காலமப்பா….சந்தோஷமா வாழ்ந்த காலங்கள் அது……நீயும் சேந்து இருன்னு இனிமேலும் சொல்லுவியா!

    எனக்கு அப்படி உங்கள சொல்ல முடியாது. அப்ப அவங்களோட சேர்ந்து சிரிக்கலாம். உள்ள ஒண்ணு! வெளில ஒண்ணுன்னு பேச முடியாது………. அனுபவம் பேசுதப்பா……………..சிரித்தாள் மாதங்கி. அம்மா சித்தப்பா எங்கே அம்மா? அவர் மாணவர்களை உருவாக்கும் பணில முழுமையா இருக்காரம்மா………. சதுரங்கத்திற்கு 64 கட்டங்கள் தான். ஆனால் சில பேருடைய வாழ்க்கையிலும் ஆய கலைகள் 64 போலத் திருட்டுத்தனம் நிறைய உண்டு. யாரை வெட்டுனா யாரு மேல போலாம்னு. தனக்கும் ஒரு பொண்ணு இருக்குன்னு நினைக்கறதில்ல. க்ளாஸ் டோருக்குள்ள அப்பாவும், வெளில பொண்ணுமா இருக்கணும். அப்ப தெரியும் சில பேருக்கு  வேதனைன்னா என்னன்னு? பூஜைக்கு வர்ற ஆளுங்க விபூதி எதுக்கு பூசிக்கிறாங்க! தேங்காய எதுக்கு உடைக்கறாங்கன்னே தெரியாம கலந்துக்கறாங்க! அதெல்லாம் தெரிஞ்சா ஏம்மா அனாவசியமா பேசுவாங்க…

    அம்மா…..இதெல்லாம் உனக்கு யாரும்மா சொல்லிக் கொடுத்தாங்க……..பழைய பேப்பர்கடை புத்தகங்கள் தாம்மா என் அறிவை வளர்த்த அறிவு இயந்திரங்கள்.

    இராஜாவை வெட்டுனா ஆட்டமே க்ளோஸ் என்று தெரிவதில்லை. ஏற்கனவே நிறைய கோளாறுகள்.

    சாமிய நல்லா கும்பிட்டுக்க………..மாதங்கி…..போலாம்………

    தான் என்ற ஆளுமை நிறைய வளர்ந்து விட்ட நிலையில் பிள்ளையார் தான் எங்கும் முழுமுதற்பொருளாய் நிற்கின்றார். ஆனால் இங்கு அவர் ஏன் வர மறந்தார் எனப் பல முறை சிந்தித்தேன். நான் இங்கு வரக் காரணமே அதுதானோ? சுனிதா பல முறை யோசித்தாள். பிள்ளையார் விளக்கு வாங்கி வரச் சொல்லி வாங்கிய நேரம் வைக்க இடத்தைத் தேட யோசித்துக் கொண்டே இருந்தாள். வழி இல்லாமலா போய்விடும் என்று விரைந்தாள் பள்ளியை நோக்கி.

    Share
  • புத்தகத்தின் கண்ணீர் தேடல்

     

    பொன். இராம்

     

    அங்காடித் தெருவில்

    அங்குலமாய் என்னை

    அணைக்க விழிக்கதவின்

    உப்புநீர் மட்டுமே

    உன்னிடம் இருந்ததை

     நான் அறிந்தேன்!

    பாதம் நோக

    காத தூரம்

    நீ நடக்க

    கல்விச்சோலையாய்

    என் உறவுகளின்

    நூலக அணிவகுப்பு

    நூலகத்தில் கறையான்கள்

    மட்டுமே குடியிருக்க

    உரமாய் நானிருக்க

    உன்னுள் அறிவுமல்லிகையாய்

    நான் மலர்ந்தேன்!

    நெருஞ்சி முள்ளாய்

    உறவுகள் உரச

    உப்புநீரால் என்

    தேகத்திற்கு

    அன்றுதான் குளியல்!

    கண்ணிமை ஈரம்

    துடைக்க நானே

    அறிவு மருந்தானேன்!

    பல்லாண்டு கடந்தாலும்

    தொலைந்து போன

     மதலைமுகம்

     தேடி அலைகின்றேன்!

    பட்டம் பல பெற்று

    வரதட்சணை வீதியில்

     தொலைந்தாயோ?

    மாதந்தோறும்

     வரதட்சணை அமுதசுரபியாய்

    மாறினாயோ?

    காலச்சக்கரத் தேரோட்டத்தில்

    தும்பைப்பூ தேகம்

    துகளாய் மாறி

    உதிர்ந்து விடும்

    வேதனையில் நான்!

    அறிவுத் தேடலை

    அகண்டமாக்கிய

    இனிய உறவே!

    என்னை அழிவில்லாமல்

    செய்திட வருவாயோ?


    —————————————————————————————————————————————————————-

     

     

     

    Share
  • மகளின் அன்பு மடல்

     

    பொன் ராம்


    நான் உறங்க

    நீ விசிற

    நீ உறங்க

    நான் விசிற

    ஏன் மறுத்தாய்?

    உன்னால் இன்று

    உலகறிந்த அவைதனில்

    தூண்டி விட்ட

    பிரகாச விளக்காய்

    சுடர் விட்டு

    ஜொலிக்கின்றேன்!

    பெருமை கொண்டு நோக்க

    யாருமில்லை என்னருகில்!

    யாருக்காக இந்த வாழ்க்கை

    என பலமுறை

    உப்பு நீர் தலையணை

    உறவுகளிடம்

    உரைத்திங்கு

    வாழ்கின்றேன்!

    அறுசுவையும் தட்டிலிட

    அன்னையின் முகமோ அதிலாட

    சாப்பிட்டால் என்னருகில் நீ!

    கனவினில் வாழ்கின்றேன்!

    சிதறிய கண்ணாடித் துகளாய்

    சிரிக்கின்றேன்!

    மிதந்த பந்தாய்

    பெற்றவனின் பாசக்

    கணைகளுக்குள்

    கட்டுண்டு கிடக்கின்றேன்!

    கனவில் வந்துதித்த

    பயன் கருதா அட்சய பாத்திரமே!

    நிலவு முகம் காட்ட மறந்தனையோ!

    எத்தனை பிறவி வாழ்ந்தாலும்

    உனது மகளாய்ப் பிறக்க

    இறைவனிடம் வரம் கேட்க

    கவிதைச் சிறகுகளுடன்

    பறக்கத் துடிக்கும்  மகளின்

    தமிழ் விடு தூது.

     

     

    Share
  • கல்யாணப் புடவை

     

    -பொன். இராம்

    “என்னங்க?. . . கோவிந்தனைப் பார்த்தீங்களா? நம்ப பொண்ணு கலாவுக்கு ஒரு புடவை வாங்கணும்னு தேடிக்கிட்டிருக்கேன்”

    “யாரு?. . . அந்த பழைய சைக்கிள்ல துணியால மூட்டை கட்டித் தெருத் தெருவா வித்துட்டு வருவாரே அவரா?”

    “ஆமாங்க! அவரைத்தான் தேடுறேன்”

    சும்மா   செல்ல கைல வைச்சுக்கிட்டு—–எப்பப் பாத்தாலும் பிரஸ் பண்ணிக்கிட்டு….

    காலேஜ் பசங்க மாதிரி காதுல வேற  செருகியாச்சு……

    பிடுங்கி அதை எறிந்தாள் நந்தினி.

    நந்து….உனக்கு விஷயமே புரிய மாட்டேங்குதே…கரெண்ட் டேட் சயின்ஸ் விஷயமெல்லாம் தெரிஞ்சுடணும். இல்லேன்னா வேலை பாக்கற இடத்துல குப்பை கொட்ட முடியாது.

    அதுக்காக கண்ணுல கண்ணாடி வேற—– வெள்ளெழுத்து ஆரம்பிச்சு வருஷக்கணக்கா ஆகுது.

    இந்த  செல் கண்டுபிடிச்சவன் நம்பரெல்லாம் கொஞ்சம் பெரிசா வைக்கப்படாதா? எனக்கொரு டவுட்.

    ‘ பாதகம் செய்பவரைக் கண்டால் நாம் பயங் கொள்ளலாகாது பாப்பா ‘ ன்னார் பாரதியார்.

    ”பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே”ன்னும் அவர்தானே பாடியிருக்கார். இதுக்கு என்ன பொருள்?

    ரெண்டும் ஒரே ஆளாயிருந்தாலும் அவர் எந்த நேரத்துல பாடினாரோ? கவி தன் கற்பனைச் சிறகை எப்போது சிறகடிக்குமோ? யாருக்குத் தெரியும்?

    சரி! என்னவோ கேட்டியே!

    பேச்சை மாத்தாதீங்க……விடிய விடிய இராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பான்னாங்களாம்!

    புடவைக் கடை கோவிந்தனைக் கேட்டேன்……

    “இல்லையே! நான் அவரைப் பாத்துக் குறைஞ்சது மூணு மாசமாவது இருக்கும். அவர் வீடு எங்கன்னு தெரியுமா?”

    “எனக்குத் தெரியாது. அடுத்த தெரு அம்புஜம் மாமிக்குத் தெரியும். கேட்டுச் சொல்றேன்”

    “ஊரிலே எவ்வளவோ ஜவுளிக்கடையெல்லாம் இருக்கும் போது ஏன் கோவிந்தனைத் தேடிக்கிட்டிருக்கே?”

    “ரங்கநாதன் தெருவில போனா ஆயிரம் கடை இருக்குறது எனக்கும் தெரியும். கோவிந்தன் ஒரு ராசியான ஆள். அவர் கையால ஒரு நூல் புடவை வாங்கினா கூட வாங்கினவங்க வீட்லயும், வாங்கினவங்களுக்கும் நல்லது நடக்கும்.இது உங்களுக்குத் தெரியாதா?

    ஏன் நம்ம மூத்த  பொண்ணு லதாவுக்கு அவர்கிட்ட புடவை வாங்கினதக்கப்புறம் தானே மாப்பிள்ளையே அமைஞ்சது. அதை மறந்துட்டீங்களா?”ஆனாலும் கார்த்திகை நட்சத்திர மாப்பிள்ளை தானே கிடைச்சது..

    ஏன் அதுக்கென்ன….இந்த பொம்பளைங்களே இப்படித்தான்….அமையற வரைக்கும் அப்படி…இப்படின்னு சொல்ல வேண்டியது……..அதுக்கப்புறம் ஏமாத்தி செஞ்சுட்டாங்கன்னு ஒரே குறை பாட வேண்டியது. பொண்ணப் பாத்துட்டு ஜாதகம் பாக்கறது, மாசக்கணக்குல வாழ்ந்துட்டு ஜாதகம் பாக்கறது இதெல்லாம் எனக்குப் பிடிக்காது.

    ஆமா…. கார்த்திகை நட்சத்திரத்துக்காரங்ககிட்ட கல்மிஷம் இருக்கும். கண்மூடித்தனமா சொந்தங்ககிட்ட பாசம் இருக்கும். ஆனா வெளியே ஒண்ணு உள்ளே ஒண்ணா இருக்கும். அடுத்தவங்க அந்தரங்கம்னு தெரியும்.இருந்தும் மத்தவங்க கிட்ட சொல்றதுன்னா முதல் ஆளுதான். இது சரி தப்புன்னு ஒரு வயசுக்கு மேல தான் அவங்களால உணர முடியும். தன்னை வெளிப்படுத்திக்க என்ன வேணும்னாலும் செய்வாங்க……”அறை பறையன்ன கயவர்”னு தெரியுமா?

    உன் ஜாதகம் பாக்கற புத்திய விட மாட்டியா? பொண்ணு கலியாணம் முடிஞ்சு ஒரு புள்ளையும் பெத்து அது அஞ்சு படிக்குது. இப்ப போய் விதைச்ச நெல்லை பிடுங்கிப் பாத்த மாதிரி……………திரும்பப் புது அத்தியாயமா எழுத முடியும்?பொண்ணு ஒங்கிட்ட வந்து குறை படிச்சாளா?சும்மா பிலாக்கணம் படிக்காதே.

    ஜோதிடம்  ஒரு சயின்ஸ் அது எல்லாருக்கும் பாக்க அமையாது. அதுக்கு முக ராசி வேணும். ………..அப்படியென்று இழுத்தார். சொன்னா கோபிச்சுக்கக் கூடாது.பெண்கள் ஜாதகம் பார்ப்பது வீட்டுக்கு நல்லது கிடையாது. சொன்னா நீ திட்டுவ….ஆனாலும் நீ சொன்னது கரிநாக்கு போல டாண்ணு தான் நடந்துக்கிட்டு இருக்கு….இருந்தும் உன்னைப் பாராட்ட மாட்டேனே…..என்று சிரித்தார் ராம் அர்த்தத்துடன்.

    முப்பது வருடமாக என்னைக்கு நீங்க என்னை பாராட்டியிருக்கீங்க………………. விட்டா பெண் படிக்கக்கூடாதுன்னு சொல்வீங்களா?

    சிரித்தபடி முகத்தை மலர்த்தினாள் நந்தினி. அவர்களுக்குள் மலர்ந்த தாம்பத்தியத்தின் சுவை அவள் பேச்சில் இனித்தது. அவள் அதைப் பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை. கணவன் சொல்லும் வாயசைவிற்காகக் காத்திருந்தாள். .இல்லடா! பெண்கள் படிக்கணும். தன்னை,தன்னைச் சார்ந்து வாழும் சமூகம் இவற்றிற்குத் தொண்டு செய்து வாழணும். நேர்மையான முறையில. அதுக்குத்தான் உன் அறிவை விருத்தி செய்வதை நான் இவ்வளவு வருஷம் ஆகியும்  தடுக்கல. ஆனா…….  நந்து……………..நட்சத்திரம் பாத்திருக்கியா…………அதைச்சுத்தி இருக்கிற எல்லாவற்றையும் எனக்குத் தெரியுமா? உனக்குத் தெரியுமா? எல்லாவற்றையும் தெரிந்தவர்கள்தாம்மா சரியா வாழ்க்கையைச் சொல்ல முடியும்.

    வெட்டித்தனமா சில பேர் கிடைச்ச சுவடிய வைச்சிக்கிட்டு வயித்தைக் கழுவ உட்கார்ந்து பொழுதைக் கழிக்குதுங்க. ஹூம்…நான் என்ன சொன்னாலும் மாறவா போற….சொல்ல வந்ததைத் தெளிவா சொல்லு…

    “ஆமா! அத நானும் மறந்துட்டேன். “இப்ப கலாவுக்கும் மாப்பிள்ளை தேடிட்டிருக்கோம். எதுவும் அமையல. அதான் கோவிந்தன் கையால ஒரு புடவை வாங்கலாம்னு. . .”நீ கூட பர்ப்பில் கலர்ல லதா கலருக்கேத்த மாதிரி எடுத்த. நான் கூட ஏன் லைட் கலர்ல எடுத்தேன்னு கேட்டேன்”அந்தக் கதை தானே…….

    அதே தாங்க………..

    அவனவன் இருக்கற தகப்பனைச் செத்ததாச் சொல்லி பிள்ளையை பத்து மணிக்கு மேல ஓட விடுறானுங்க……தவிக்க விடுறானுங்க……….இந்த காலத்துல போய் நீ ……….

    என்ன சொல்றீங்க….ஒண்ணுமே புரியலையே……..

    ஜாதகம், சுவடின்னு ….. ஒரு பழைய கதை அம்புலிமாமா கதை மாதிரி இருந்தது. எதுல படிச்சோம்னு கவனமில்லை. நீ ஏதோ சந்தேகம்னு கேட்டாயே? மறுபிறப்பு பத்தி….அதைப்பத்தி நெட்ல தேடினேன். ஆளாளுக்கு ஒண்ணொண்ணு சொல்றாங்க….  என்ன இருமற.. ஹாஸ்பிடல் போகலையா……..

    போகணும்….ஆனா மருந்துக்கு ஆயிரத்துக்கு மேல செலவாகும்….சேல எடுத்துடலாம் அதுக்கு.. உடம்புக்கு வந்தா செத்தா போய்டுவோம் இந்த காலத்துல……

    உன் ஆசைய ஏன் கெடுக்கணும்? இந்தப் பொண்ணுக்குப் பரணி நட்சத்திர மாப்பிள்ளையைப் பாப்பமா? கோவிந்தன் அட்ரஸைக் கொடு. நான் போய்ப் பாத்து வர்றேன்” உன் நம்பிக்கையைப் போய்க் கெடுப்பானேன்! பரணி தரணி ஆளுமில்லையா?

    நந்தினி அம்புஜம் மாமியிடம் அட்ரஸைக் கேட்டு வாங்கிக் கொடுத்து விட்டாள். அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. பகல் 12 மணி வாக்கில்  டிவிஎஸ் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சாலிகிராமம் கிளம்பி விட்ட ராமை உள்மனம் ஏதோ எச்சரித்தது. அதை வெளிக்காட்டாமல் சாலிகிராமத்தை அடைந்தார் ராம்.

    “சாலிகிராமம், தசரதபுரம் 3வது தெரு, 10ம் நம்பர் வீடு இது தானே?”

    “ஆமாம்! நீங்க யாரு? எங்கேயிருந்து வர்றீங்க?” என்றபடி வந்தாள் வெள்ளைப்புடவை உடுத்திய பெண் .

    “என் பேர் ராம். திருவல்லிக்கேணியிலிருந்து வர்றேன். இங்க கோவிந்தன்னு புடவை விக்கறவர் இருந்தாரே!

    “ஆமாங்க!”

    “அவரைப் பாக்கலாம்னு தான் வந்தேன். அவர் இல்லையா?”

    பெண்ணை உற்றுப்பார்க்கும் பழக்கம் ராமிடம் இல்லையென்றாலும் அவள் கண்களில் தெரிந்த ஒளி அவரை என்னவோ செய்தது.

    நீங்க என்ன விஷயமா வந்தீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?

    “உங்க வீட்டுக்காரர் கிட்ட ஒரு புடவை எடுத்த ராசி என் மூத்த பொண்ணுக்கு கல்யாண யோகம் கூடி வந்த மாதிரி என் இளைய பொண்ணுக்கும் ஒரு புடவை அவர் கையால எடுத்து கட்டலாம்னு நினைச்சி வந்தேம்மா!”

    கொஞ்சம் உள்ளே வரீங்களா?

    உட்காருங்க! நீங்க வந்தது சரியான வீடுதான்.

    கொஞ்சம் இருங்க!  புடவையை எடுத்துட்டு வரேன். அவர் நாலு மூட்டை புடவை வாங்கினது கிடக்கு……

    அவள் உள்ளே சென்ற நொடியில் ராமின் மனம் யோசித்தது. இவள் கோவிந்தனுக்கு என்ன உறவு! வெள்ளைப்புடவை வேறு……..என யோசித்தபடி அருகிலிருந்த புத்தக அலமாரியை உற்று நோக்கினார் ராம். பகவத் கீதை தொடங்கி அபிராமி அந்தாதி, ராமகிருஷ்ணர்,சாரதாதேவி, அரவிந்தர் என ஒருவர் விடாமல் இடம்பெற்றிருந்த அந்த இடத்தை விட்டு கண்கள் ஏனோ அகல மறுத்தன.

    ராம் பார்ப்பதைப் புடவை மூட்டையுடன் வந்த அந்தப் பெண் வெங்கலமணிகள் இணைந்த சப்தம்போல் சிரித்தாள். இவையெல்லாம் அவர் படித்தவை.என் பெண்……. எனக்கூறியவள்….கோவில் மணி எங்கோ ஒலிப்பதைக் கூர்ந்து கவனித்தாள்.

    நீங்கள் இந்தப் புடவை மூட்டையில் உங்களுக்குப் பிடித்ததை எடுங்கள். இதோ வருகிறேன் எனக் கூறியபடி விர்ரெனப் பறந்து சென்றதைப்போல ராமிற்குத் தோன்றியது.

    வெளியே நிறைய பேர் பேச்சுக்குரல் கேட்கவே,இலேசாக எட்டிப் பார்த்தார் ராம்.

    வெளியே புழுதி பறக்க கையில் பூஜைத்தட்டுடன் ஒரு ஊரே கூடியிருந்தது.

    ஐயா யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?

    நான் ராம். கோவிந்திடம்  என் பெண்ணுக்கு கல்யாணம் செ்யவதற்காகப் புடவை வாங்க வந்தேன்.

    இதைக் கேட்ட மறுநிமிடம் மஞ்சள் புடவை உடுத்தியிருந்தவள்  புடவைத் தலைப்பால் வாயை மூடி அழத் தொடங்கி விட்டார்.

    “ஏம்மா அழுவுறீங்க? நான் ஏதும் தப்பா சொல்லிட்டேனா?”

    இல்லப்பா! ஊருக்கெல்லாம் கல்யாணம் செய்யப் புடவை வித்தவரு தம்பொண்ணு ஓடிப்போனதால பொண்ணு கல்யாணத்துக்கு எடுத்து வச்ச புடவையில நாண்டுக்கிட்டாங்க புருசன் பொண்டாட்டி  ரெண்டு பேரும்.

    செத்து ஒரு மாதத்துக்கும் மேல ஆவுது. அவுங்க தொழிலை இங்க செய்யறதாகவும், அடிக்கடி வெங்கலமணிக்குரல் சிரிக்கறதா சொன்னாங்க எல்லாரும். அதான் பூசாரி கிட்ட சொல்லி பூஜை செஞ்சு தாயத்து வீட்டுல கட்லாம்னுட்டு வந்தோம்.

    அது என்ன உங்க கைல….. இது கோவிந்து தம் பொண்ணுக்காக எடுத்து வைச்ச புடவையாச்சே…அது உத்தரத்துல பாதியால்ல தொங்குச்சு…

    இதுதானே அவுங்க ரெண்டு பேர் உயிரையும் எடுத்தது.

    சொன்னது தான் தாமதம் டிவிஎஸ்ஸை மறந்து புடவையைத் தூக்கி வீசியபடி ஓடினான் ராம்.

    ‘எங்கோ மூடப்பழக்கத்தினை ஒழிப்போம் ‘ என மைக்கில் யாரோ பேசியது ராமின் காதில் தெளிவாக ஒலித்தது.

     

     

    Share
  • நடிகை(கள்)

     

    -பொன். இராம்


    வண்ணச்சாயப் பூவிதழ்

    உதடுகள் கூறும்

    கண்ணீர் வரிகள்!

    அடிமை விலங்கு

    அவிழ்க்கப்பட்டும்

    அரிதார பொம்மைகளாய்

    நனவுலகில் சிரிக்கின்றோம்!

    கள் மட்டுமே

    போதை!

    இங்கு நாங்கள்

    திரையுலகக்

    கண்ணாடிக் குடுவைக்குள்

    போதைப் பதுமைகளாய்

    வாழ்கின்றோம்!

    இடியாக  மாறி

    படியாத ஆணுலகை

    மாற்றிவிட எத்தனையோ முயன்றாலும்

    பணமழை தான் ஜெயிக்குதடி!

    பட்டமொன்று பெற்றாலும்

    பாவி மனம்

    புகழுக்கு ஏங்குதடி!

    விடியாத பெண்ணுலகத்

    திரையுலகக் கும்மிருட்டில்

    விரைவாய்  யார் வருவார்

    அறிவு விளக்கேற்ற?


    படத்துக்கு நன்றி: http://www.123rf.com/photo_10204675_single-bottle-of-beer-with-shiny-woman-s-silhouette-inside.html

     

    Share
  • கலைமகள்

     

    பொன் ராம்

     

    கலைமகளே! பாராயோ!

    பணவாசம் வேண்டி

    பக்குவமாகச் சிரித்திடும் பகட்டு உலகில்

    பெண்ணுரிமையும் உளதோ!

    உலகை மறந்த சுதந்திர தேவி சிலையின் வாசம்

    அடி நெஞ்சில் இனித்திடும் அதிசயம் கேளாயோ?

    உடன்பிறந்தார் நினைவின்றி சுகபோகம்

    யாவையுமே நித்திய வாழ்வின் பொருளாய்

    ஊணுக்காக உற்றதுணையின் கைப்பிடியில்

    உழலுவதைப் பாராயோ!

    மண்ணுக்குள்ளே நல்லறிவைக் கொடுத்த மாதா

    மண்ணுக்குள் மக்கும்போதாவது வருவாரோ?!

    தாத்தா வைத்த தென்னையுமே

    தாகம் தீர்த்திட வந்ததே!

    தாகம் உலர்ந்த உதட்டிற்கு

    தண்ணீர் தரவே ஆளில்லை!

    பச்சை ஓலை போடுகையிலே

    பரிதவிக்கும் நடிப்பைக் காண

    கலைமகளே வாராயோ!

    பாசப்பனியினை விலக்கிய

    பரிதியும் சோகத்தில்

    மேகத்தாயின் மடியினிலே

    வெட்கப்பட்டு மறைந்திடுதே!

    இதயம் ஒன்று இருப்பதையே

    மறந்த நெஞ்சங்களுக்கு

    கலைமகளே என்ன வரமளிப்பாய்?

    படத்துக்கு நன்றி: http://www.vallamai.com/wp-content/uploads/2013/02/sad-woman-silhouette-225×300.jpg
    Share