நடிகை(கள்)
-பொன். இராம்
உதடுகள் கூறும்
கண்ணீர் வரிகள்!
அடிமை விலங்கு
அவிழ்க்கப்பட்டும்
அரிதார பொம்மைகளாய்
நனவுலகில் சிரிக்கின்றோம்!
கள் மட்டுமே
போதை!
இங்கு நாங்கள்
திரையுலகக்
கண்ணாடிக் குடுவைக்குள்
போதைப் பதுமைகளாய்
வாழ்கின்றோம்!
இடியாக மாறி
படியாத ஆணுலகை
மாற்றிவிட எத்தனையோ முயன்றாலும்
பணமழை தான் ஜெயிக்குதடி!
பட்டமொன்று பெற்றாலும்
பாவி மனம்
புகழுக்கு ஏங்குதடி!
விடியாத பெண்ணுலகத்
திரையுலகக் கும்மிருட்டில்
விரைவாய் யார் வருவார்
அறிவு விளக்கேற்ற?
படத்துக்கு நன்றி: http://www.123rf.com/photo_10204675_single-bottle-of-beer-with-shiny-woman-s-silhouette-inside.html
ஆரம்ப காலகட்டம் தொட்டு
ஆண்களுக்கான உலகமாகவே
இருந்துவருகிறது நிழலுலகம் …
வெறும் கவர்ச்சி போதைக்காக மட்டுமே
பெண்களை பயன்படுத்தியும் வருகிறது..
அதையும் தாண்டி சிலரே அந்தத் தடைகளை
உடைத்தெறிந்து வென்றனர்…
புகழுக்கு மயங்கி ஏங்கும் இந்த
அரிதார அவதாரங்களுக்கு யாரிங்கு வருவார்
திரியிட்டு எண்ணெய்விட்டு அறிவு விளக்கேற்ற???
அழகான கேள்விக்கணை…ஆனால் விடையற்ற வினா தான்….
அன்பன்
மகேந்திரன் பன்னீர்செல்வம்