வளர்ச்சியான பாதையில் இந்தியா செல்ல.. குடும்ப அட்டையில் முதலில் மாற்றம்….!
சித்திரை சிங்கர்
புதியதாக இப்போது விண்ணப்பித்துள்ள பொது மக்களுக்கு, ஏப்ரல் மாதம் புதிய ரேசன் அட்டைகள் வழங்குவது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றாலும் இந்த ரேசன் அட்டைகள்…. அதில் பதிவு செய்யப்பட்டுள்ள பதிவுகளின் “உண்மை நிலை” கண்டிப்பாக ஆய்வு செய்யப்பட வேண்டியதே. இது வரை போனது போகட்டும் என்றாலும் இனியாவது முறையாக உண்மையாக பதிவுகள் இருக்கும் வண்ணம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான சாதாரண மக்களின் நெடுநாள் ஆசை.
இதில் முதலில் குடும்ப வருமானம் அரசுப் பணியில் உள்ளவர்கள் கூட தங்களது சம்பளத்தை இந்த குடும்ப அட்டைகளில் ஒழுங்காக பதிவு செய்வதில்லை என்பது வேதனையான விஷயம்….! இவர்கள் அரசுப் பணியில் தொடரவே தகுதி இல்லாதவர்கள் என்பதுதான் உண்மை…! இலவசங்கள் ஓட்டுக்காகவே அரசியல்வாதிகளால் மக்களின் பணத்தில் இருந்து அவர்களுக்கே கொடுக்கப்படும் ஒரு கண்கட்டி வித்தைதான். இலவசங்கள் மக்களை மிகுந்த சோம்பேறியாக்கி விடுகிறது என்றாலும் ஓட்டுக்காக அரசு தரும் இந்த இலவசங்கள் குடும்ப அட்டைகளின் உண்மையான வருமானத்தை அடிப்படையாக கொண்டு கொடுக்காமல் அரசு வழங்கும் குடும்ப அட்டைகளின் வண்ணங்களை வைத்து கொடுக்க்கபடுவது ஒரு வேடிக்கையான விஷயம். வெள்ளை கார்டு வைத்துள்ளவர்கள் (தேவையான “சர்க்கரை”க்காக) விருப்பமான பொருளை வாங்குவதற்கு என்று பதிவு செய்பவர்களே தவிர இவர்கள் அரசு தரும் இலவச பொருட்களை வாங்க தகுதியில்லாதவர்கள் அல்ல…! அரிசி கார்டு வைத்துள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் அரிசி வாங்குகிறார்களா அதை அவர்கள் உப்யோகிக்கிறார்களா என்றால்… குடிசை வீடுகளிலும் பிளாட்பாரங்களிலும் வசிப்பவர்களையும் தவிர்த்து மற்றவர்கள் ‘இல்லை’ என்ற பதில்தான் மனசாட்சியுள்ளவர்கள் சொல்லும் பதிலாக இருக்கும். இப்போது இந்த ரேசன் அரிசிகள் பெரும்பாலும் புதிதாகத் தோன்றி பெருகிவரும் உணவகங்களுக்கு, முழுமையாகப் பயன்படுகிறது என்பது மகிழ்ச்சியான உண்மை..
வருமான அடிப்படையில் என்றால் கூட அரசு வேலையில் உள்ளவர்கள் அனைவருக்குமே “கௌரவ கார்டு” வாங்கும் தகுதிக்கு உள்ளவர்களே…! இதை நன்கு உணர்ந்த அரசாங்கமே…..அந்தந்த அரசு அலுவலகங்கள் வழியாக தங்கள் பணியாளர்களுக்கு இப்போதுள்ள குடும்ப அட்டைகளை சமர்ப்பித்து இந்த கௌரவ அட்டைகளை தங்கள் துறையின் மூல்ம் சுலபமாக வழங்கலாம். இது போன்ற முறையான மாற்றங்களை இப்போது தாள் ஒட்டி உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் குடும்ப அட்டைகள் புதியதாக கொடுக்கும் நிலையில் சீர் செய்தால் குடும்ப அட்டைகளும் குறைந்து விடும்….! ரேசன் கடைகளில் கூட்டமும் கொஞ்சம் குறைந்து விடும்.
பொதுவாக சொந்த வீடு வைத்துள்ளவர்களில் ஒரு சிலரை தவிர்த்து மற்றவர்கள் அனைவருமே ஓரளவுக்கு வசதியானவர்கள்தான்….! நகர்ப் புறங்களில் வேண்டுமானால் புதிதாக வீடு வாங்குபவர்கள் வருமான வரி கழிவுக்காகவும், வாடகைக்கு இருப்பது போன்ற எண்ணத்தில் மாதாமாதம் தவணைகள் தங்களின் வருமானத்துக்கு தகுந்தவாறுதான் வீட்டு வாடகைக்கு இணையாக தவணைகளை கட்டுகிறார்கள். இவர்களும் தங்களின் உண்மையான வருமானத்தைக் கொடுத்து தேவையான பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் குடும்ப அட்டைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். சொந்த வீட்டுகாரர்கள் தாங்கள் செலுத்தும் “சொத்து வரி” அடிப்படையில் இவர்களுக்கும் குடும்ப அட்டைகளை வழங்கலாம். கூட்டு குடும்பங்களுக்கு அந்தந்த குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு சிறப்பு சலுகை கொடுக்கலாம். ஓன்று… இரண்டு… காஸ் சிலிண்டர்கள் வைத்துள்ளவர்களுக்கு மண்ணெண்னை கொடுப்பதை குறைக்கும்… நிறுத்தும்… உணவு பொருள் வழங்கும் துறை பல இடங்களில் வாடகை வீடுகளின் வருமானத்தால் வாழ்ந்து கொண்டிருக்கும் செல்வந்தர்கள் இன்னமும் ரேசனில் முழுமையாக மண்ணெண்ணை வாங்குவதை நாம் கண் கூடாக காண முடிகிறது. நியாயமான குறைகளை அகற்றி முறையான பதிவுகளுடன் புதிய குடும்ப அட்டைகளை இந்த “ஒட்டுதாள்” முடிய இன்னும் 18 மாதங்கள் இருக்கும் நிலையில் உண்மையான விபரங்களை பதிவு செய்து புதியதாக குடும்ப அட்டைகளை 2015 ஜனவரி முதல் மக்கள் பயன்படுத்தும் வகையில், வழங்க, இந்த ” உணவு பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை” தக்க நடவடிக்கை எடுத்தால்தான் குடும்ப அட்டைகளை ஒழுங்கு படுத்த முடியும். நமது பொது மக்களும் அரசின் கணக்கெடுப்பு. நேரத்தில் உண்மையான தகவல்களைக் கொடுத்து பதிவு செய்து நமது முன்னேற்றத்துக்கும் நாட்டின் முன்னேற்றத்துக்கும் உதவ வேண்டும். அரசு வேலையில் நிரந்தரமாக பணிபுரியும் கடை நிலை ஊழியர்கள் கூட “கௌரவ குடும்ப அட்டை” வாங்கவே தகுதியானவர்கள் என்பதுதான் உண்மை நிலை….! தனியார் நிறுவனங்களில் பன்னாட்டு நிறுவனங்களைத் தவிர்த்து மற்றைய நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு சம்பள அடிப்படையில் மிகவும் பின் தங்கிதான் உள்ளார்கள்.
எந்த ஒரு மாற்றமும் அரசின் திட்டத்தாலோ… அரசின் கொள்கை முடிவினால் வந்து விடாது நாட்டு மக்கள் மனது வைக்க வேண்டும். எழுச்சியான தமிழகம் காண வேண்டுமானால்…. வளர்ச்சியான பாதையில் இந்தியா செல்ல வேண்டுமானால் முதலில் அடிப்படையில் இது போன்ற மாற்றங்களை மக்கள முழுமனதுடன் செய்ய வேண்டும். மக்கள் சக்திதான் மகேசன் சக்தி…! இந்திய மக்களே கொஞ்சம் திருந்துங்கள்…! உங்களின் உண்மை நிலையை குடும்ப அட்டைகளில் பதிவு செய்து மாற்றங்களை உருவாக்குங்கள்…!
அவர்கள் சரியில்லை…! இவர்கள் சரியில்லை என்று மற்றவர்களை மட்டுமே குறை கூறி காலத்தை வீணாக்காமல் நமக்கு நாமே திருந்த வேண்டும்..! நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும்….!.
சித்திரை சிங்கர் , சென்னை.
nantri
அடிப்படை குடிமையியல் பிரச்சனைகளை ஆராய்ந்து அதற்கு முறையான தீர்வுகளையும் முன் வைக்கும் இது போன்ற கட்டுரைகள் தமிழ் இந்திய மக்களை முழுமையாகச் சென்று சேர வேண்டும்.
வாழ்த்துக்கள் திரு.சித்திரை சங்கர் அவர்களே.