சத்தியமணி

காரணம்தேடி கலங்கிடும் போதுநீ

காரியம் ஆகவேண்டும்

ஆரணமோதி அடைந்திடும் மகிமைநின்

அடிகளில் காணவேண்டும்

சீரணமாகா திண்டாடும் பிணிநீக்கி

சேமங்கள் சேர்க்க வேண்டும்

பாரணங்  கண்டு பலகாலந் தொண்டு

பணியாற்றும் ஆசி வேண்டும்

மயில்தோகை விரித்தாடும் எழிலோடுஏறி

விளையாடும் வேலகுகனே

துயில்நீங்கத் துணைவியர் துதிபாடக் காதல்

முகங்காட்டும் சக்திமகனே   (2)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “திருமுருகன் துதிமாலை (2)

 1. துயில் நீங்கி
  மயில்மீது ஏறிவா
  சேயின் குரல்கேட்டு

  வேண்டும் வேண்டும் கந்தா
  வேண்டா தீவினைகளை
  வேள்வியிலிட்டு கொளுத்திவிட்டு
  கணத்தினில் ஓடிவருவாய் அப்பனே….
  அன்பன்
  மகேந்திரன் பன்னீர்செல்வம்

Leave a Reply

Your email address will not be published.