கிரேசி மோகன்
கஜத்திற்(கு) உபயம், கராமுக்(கு) அபயம்,
நிஜத்திற்கு தர்மம்தான் நீதி; -புஜத்தில்,
கருடனை ஏந்தி, களிறினைக் காத்த,
புருடனில் உத்தமனைப் போற்று”….கிரேசி மோகன்….
கராம்-முதலை….
புருடனில் உத்தமன்-புருஷோத்தமன்….
பெருமாள் திருப்புகழ்
கிரேசி மோகன்
கஜத்திற்(கு) உபயம், கராமுக்(கு) அபயம்,
நிஜத்திற்கு தர்மம்தான் நீதி; -புஜத்தில்,
கருடனை ஏந்தி, களிறினைக் காத்த,
புருடனில் உத்தமனைப் போற்று”….கிரேசி மோகன்….
கராம்-முதலை….
புருடனில் உத்தமன்-புருஷோத்தமன்….
கிரேசி மோகன்
கிரேசி மோகன்
“வாய்ராதை மூடிட, வேய்ங்குழல் ஊதுதல்,
போய்கீதை யோகம் பிறந்தது: -தாய்வீதி,
மண்ணுண்ட போது மிரட்டத் திறந்தாலும்,
பெண்னன்புக்(கு) உண்(டு)அடைக்கும் பூட்டு”….கிரேசி மோகன்….
கிரேசி மோகன்
“இந்திர கர்வம் இடிமழை மின்னலாய்
வந்திட கண்ணன்கோ வர்த்தனத்தை -தந்திட
ஆயர் குடையாய், அடங்கி அவன்அரை
DRAWER தாளில் தடால்”….அரை DRAWER -சின்னப் பையன் கண்ணன் என்றும் DRAWER கேசவ் என்றும் கொள்ளலாம்….
(OR )
ஆயர் குடையாய், அடங்கி அமரேசன்
சேயவர் தாளில் சரண்”….கிரேசி மோகன்….

“தயிராய்ச்சி கண்ணிநுண் தாம்புக்குட் பட்டக்
கயிறால் உரலிழுத்தக் கண்ணன் ; -அயிரா
வதத்தோ(டு) அமரர்கோன் வீழ்ந்திட வைத்தான் ;
இதத்தோ(டு) இருப்போர்க்(கு) இறை”….கிரேசி மோகன் ….
கிரேசி மோகன்
September 1… 1896… A boy came to Arunachala to abide there forever… He was the silent sage, Ramana Maharshi…. Arunachala!

“செப்டெம்பர் ஒன்றின்று, சின்னஞ் சிறுவராய்,
அப்பன்தன் வீடு அருணைக்கு, -சுப்பன்(சுப்ரமண்ய அவதாரம் பகவான்)
குடிபுகுந்த நன்நாள், குருவே வணக்கம்,
மடிபுகுந்தோம் அண்ணா மலை”….கிரேசி மோகன்….
கிரேசி மோகன்
“சோவெனக் கொட்ட, சுகரவி* பாமாரி,
கோவினம் நின்று குளிர்காய, -பூவிரலால்,
கோவர்த் தனமேந்தும் கண்ணனை, கேசவிசை,
ஆவர்த் தனமாய் அளிப்பு”….கிரேசி மோகன்….
*-சுகரவி-எழுத்தறிவித்த சு.ரவி, க.ரவிகள்
‘’சொல்லித் தெரிவதில்லை ரவிகளின் கவித்வம்’’….
கிரேசி மோகன்
“கண்ணம்மா பாரதியார், கண்டாற்போல் சித்திரத்தில்,
வண்ணமாய் கேசவ் வடித்தளித்தாய், -இன்னுமோர்,
நூற்றாண்(டு) இருந்து, நவநீத ஆழ்வானாய்,
சாற்றுன் பிரஷ்பா சுரம்”….கிரேசி மோகன்….
கிரேசி மோகன்
மந்தியொரு காலிலும் மாடொரு காலிலும்,
பந்திக்கு முந்துதல் போதாதென்(று), -அந்தரி,
அண்ணனுக்கு கல்யாணம் ஆண்டா ளுடனாக,
கண்ணனுக்கு காலெல்லாம் கட்டு”
————————————–
கிரேசி மோகன்
பிள்ளையார் வெண்பாக்கள்
———————————————

சோமன்த னைச்சென்னி சூடும் சிவகுடும்ப
சீமந்த மைந்தன் சதுர்த்தியின்று -மாமன்தன்
சக்கரத்தை உண்டுமிழ்ந்த சித்தி வினாயகனை
வக்கிர துண்டனை வாழ்த்து….(1)
தம்பிக்கு காதல் துணைசென்ற தந்தியே
தும்பிக்கை வேழமே, தேவர்கள் -ஸ்தம்பிக்க
ஆட்சி கயிலாயத்தை அவ்வைக்(கு) அளித்தவா
காட்சிக்(கு) இனியபிள்ளாய் காப்பு….(2)
தொந்தி குலுங்கிட தந்தி ஜொலித்திட
முந்தி முழுமுதல் மோதகன்முச் -சந்தி
அரசடியில் வீற்று அருள்பாலிக் கின்றான்
முரசடித்தேன் தந்திக்கு முந்து….(3)
ஆனைக்கா அம்மையும் ஊனைக்கொள் ஊர்த்தவர்க்கும்
சேனைக்கா வேலன் சகோதரனாய்-தீனர்க்காய்
தோன்றிய பிள்ளாய், தமிழாக அவ்வைக்கோல்
ஊன்றிய வேழா உதவு….(4)
அக்கினிக்கு முப்புரத்தை ஆட்படுத்த தேரேறி
உக்கிரமாய் சென்ற உருத்திரர்க்கே -விக்கினமாய்
அச்சொடித்து உன்னிருப்பை எச்சரிக்கை செய்தவரை
உச்சரிக்க வைத்தாய் ஒழுங்கு….(5)
கணபதி ராயா மனிதச காயா
பனிபதி கைலாசப் பையா -தனபதி
மாலின் மருகோனே மயிலோனின் மூத்தோனே
கோல வினாயகனே காப்பு….(6)
கயிலாய சீதனம் கற்பகச் செல்லம்
மயிலாப்பூர் தோழன் மகோதரன் -பயிலோரும்
பள்ளிப் பரிட்சையில் பெற்றிட வெற்றியை
அள்ளித் தருவான் அவன்….(7)
அருகம்புல் தேங்காய் எருக்கம்பூ, மாலின்
மருகன்பால் வைக்க மகிழ்ந்து -ஒருகொம்பால்
நான்முகன் நம்தலையில் நட்ட விதையினை
ஆனைமுகம் ஆக்கும் அரசு….(8)
cowசுகள் பேணிடும் கண்ணன் மருகோனே
mouseயிக வாகனா மோதகா -houseனுள்
வாராய் வினாயகா வேளை சதுர்த்தியில்
தாராய் அறிவில் தெளிவு….(9)
மூஷிக வாகனனை தோஷ விநாசகனை
பாஷைகள் போற்றும் ப்ரணவனை –வேஷமாய்
வேழத்தோல் போர்த்திய தோழக் கடவுளை
ஏழைகள் ஈசனை ஏத்து….(10)
அரச மரத்தடியில் ஆகாசம் பார்த்து
உரசும் எலியோடு ஒண்டி -பெருசாய்
எதிர்பார்ப்பு ஏதுமின்றி ஏழெட்டு தேங்காய்
சதிராக யாதுமருள் வான்….(11)
கமர்கட் கடலையுண்டை குச்சிஐஸ் மூன்றும்
சமர்பிப்பேன் நானுக்கு என்றும் -அமர்ந்திட்டு
செங்கழுநீர் பிள்ளையாரே சாப்பிட்டு த்ருப்தியாய்
சங்கத் தமிழ்மூன்றும் தா….(12)….
————————————————————–
கிரேசி மோகன்
—————————-
காஞ்சி மஹாபெரியவா “அருள் வாக்கில்” எழுதியதைப் படித்து விட்டு எழுதிய வெண்பாக்கள்…. அடியேன் ஆதிநாளில் வரைந்த “சித்தி புத்தி வினாயகர்”, ரவிவர்மாவைப் பார்த்து வரைந்த, வாட்டர் கலர் ஓவியம்.
பிள்ளையார் பிறப்பு
———————–
நீராடும் வேளை நிலைவாசல் காவலுக்கு
ஓராளைத் தேடினாள் ஓங்காரி -சேறாக
மேனியில் பூசிய மஞ்சளால் செய்தனள்
ஞானி வினாயக னை….
ஆதியே ஆனாலும் அன்னை குளிக்கையில்
பாதியில் வந்த பரம்பொருளை -வீதியில்
தள்ளிய பிள்ளை தலையைத் தகப்பனரன்
கிள்ளியங்கு வைத்தான் கஜம்….
ஸுமுகர்
———–
சிரித்த வதன ஸுமுகரைப் போற்ற
விரித்த வலைவெவ் வினையை -அறுத்து
இழைத்திடுவான் அத்தச்சன் எண்ணென் கலையாய்
அழைத்திடுவாய் அவ்வை அளவு….(1)
ஏகதந்தர்
———–
சோகம் களைந்து ஸுமுகம் குவித்திடும்
யோகம் விரும்பிட ஏற்றிவிடும் -ஏகதந்தன்
காப்பிருக்க கற்பூரம் கூடவேண்டாம், காரியக்கை
பூப்பறிக்கும் உன்வீட்டில் பார்….(2)
கபிலர்
——–
சிந்தூர வண்ணனை சித்தி அருளேக
தந்தன் கபிலனைத் தோத்தரிக்க -வந்த
கருத்ததெல்லாம் பாலாக, கண்முன் விலகும்
வருத்தமெலாம் சாயம் வெளுத்து….(3)
கஜகர்ணகர்
—————
கஜகர்ணம் மற்ற கடவுளர்க்கு போட
நிஜவர்ணம் காட்டும் நெகிழ்ந்து -கஜகர்
ணகர்கபிலர் காதினில் நாத்திக பூசை
பகர்அப லைக்கும் பலன்….(4)
லம்போதரர்
————–
சம்போ மகாதேவர் செய்த தலைப்பிள்ளை
லம்போ தரனால் லகுவாக -வம்போடு
தும்பும் விலகும் துதிக்கை விரட்டிடும்;
நம்பாள் கஜகர் ணகர்….(5)
விகடர்
———–
மகுடம் தரித்தரன் முப்புரம் ஏக
சகடத்தின் அச்சை சிதைத்த -விகடன்
லலிதாங்கி மைந்தனை லம்போ தரனை
எலிதாங்கும் ஆனையை ஏத்து….(6)
விக்கினராஜர்
—————-
சுக்கிரன் பார்க்க சுரர்கள் பணிந்திட
இக்கிரக பூமியில் இந்திரனாய், -விக்கின
ராஜன் விகடனை ராப்பகலாய் வேண்டிட
பூஜா பலனாய் பவிஷு….(7)
வினாயகர்
————
வினாஅகம் கேட்க விசாரணை செய்யும்
மனோமுக மார்கம் முனிக்கே -வினாயகன்
விக்கின ராஜனை வேண்டித் துயில்வோர்க்கு
சொக்கிடும் போதேமோட் ஷம்….(8)
தூமகேது
———–
சோமதேவன் சீமந்தன் மாமன்மால் அம்சமாய்
தூமரூப துஷ்டனைத் தீர்த்திட -தூமகேது
வாக அவதரித்து வெற்றியை சூடிய
வாகை வினாயகனை வாழ்த்து….(9)
கணாத்யஷர்
—————
அனாதியாதி அச்சன் அரசவை பூத
கணாதி களின்சேனைக் காவல் -ஜனாதிபதி
தூமகேது முன்புநின்று தோப்புக் கரணமிட
சாமகீதம் சம்சார சிந்து….(10)
பாலசந்த்ரர்
————–
நாலுமுகன் செய்த நடிகர் களையியக்கும்
பாலமுக பாலசந்த்ர பிள்ளையார் -ஞால
கணாத்யஷன் காலில் கிடப்போர்க்கு நாளும்
தனாக்ஷர தீரம் தரும்….(11)
கஜானனர்
————-
அஜாதசத்ரு ஆனை அரக்கனுக்(கு) அன்று
கஜேந்திர மோட்ஷம் கொடுத்த -கஜானனன்
கோலசந்த்ரன் கொண்டமகா கர்வம் அடக்கிய
பாலசந்த்ரன் பாதம் புகு….(12)
வக்ரதுண்டர்
—————
வக்ரதுண்ட சேயின் விடைபெறாமல், முப்புர
நிக்ரகம் செய்ய நினைத்தூர்ந்த -உக்ரகண்டர்
சக்ரதுண்டம் செய்த சதுர்த்தி கஜானனர்
விக்னகண்டம் தீர்ப்பார் விரைந்து….(13)
சூர்ப்பகர்ணர்
—————-
வரம்தரும் போதே முறம்போல தீதை
புரம்தள்ளி நையப் புடைத்து -அறம்பொருள்
ஆர்ப்புகங்கை போலின்பம், அவ்வீடு சேர்த்திடும்
சூர்ப்பகர்ண வக்ரதுண்ட சேய்….(14)
ஹேரம்பர்
————-
பேரம்பார் பண்ணிப்பார் பூவெருக்கம் புல்லருகம்
பேரன்பாய் பாதத்தில் போட்டுவிட்டு -ஆரம்பம்
ஹேரம்பா என்றழைக்க எப்படியும் வெற்றிதான்
நேரும்பார் சூர்ப்பகர்ண னால்….(15)
ஸ்கந்தபூர்வஜர்
—————–
சீரும்பர் கோன்மகள் சேனை கரம்பிடித்த
சூரன்பால் வேலெறிந்த ஸ்கந்தனுக்கு -ஹேரம்பர்
முன்வந்த பூர்வஜர் ,பெண்ணாக வெற்றியாய்நம்
பின்வந்து நிற்கும் பிடி….(16)….
பலஸ்ருதி
————-
பதினாறும் பெற்று பெருவாழ்வு காண
பதினாறு பேர்களைப் பெற்ற -அதிகாரி
அக்கணேச ஆனைமுன் விக்கினங்கள் வைத்திட
மக்கிடுமே மண்புழுவாய் மாய்ந்து….
———————————————————————————————————————–
கிரேசி மோகன்
“நூறஞ்சு வம்சமே நிர்முலம் ஆவதையும்.
பாரஞ்ச செங்குருதி பாய்வதையும், -ORANGE,
மேனியில் சொல்கிறான், மாடுகளுக்கு ,வேய்ங்குழலின்,
பாணியில் சங்கின்பூம் பூம்”….கிரேசி மோகன் ….
கிரேசி மோகன்
“முலைப்பாலை எண்ணி மடியில் படுத்து,
அலைபாய, அன்னை அளித்த, -துளிப்பாலை,
உண்ண மறுத்தனன்; “ஊட்டிக்கே ஆப்பிளா”போல்,
“கண்ணனுக்கே சங்கா” கருத்து”….கிரேசி மோகன்….
கேசவ் OIL PAINTING கண்ணனுக்கு தைலக் காப்பு….
“நள்ளிரவு வண்ணனை, வெள்ளையுறு வாக்கிட,
தெள்ளமுதை வெண்சங்கில் தாயவள், -பிள்ளையதன்,
வாயில் புகட்டுவதை ,வார்த்தனன் கேசவ்ஜி;
OILலில் ஆரா அமுது”….கிரேசி மோகன்….
யசோதை பிடியிலிருந்து தப்ப முயலும் “கிருஷ்ண உவாச”….
“என்னதவம் செய்தாலும் என்னப்ப்ர யோஜனம்,
முன்னமிவன் செய்த முடிவம்மா, -உண்ணதவம்,
நோற்றவள் பூதனை, நச்சுமுலை யோடெமுனை,
ஆற்றருகே WAITING அனுப்பு”….கிரேசி மோகன் ….
கிரேசி மோகன்
“கல்கியேஜ் கண்டு கலிதீர்க்கக் கண்ணனவன்
LKG சேயாய்ஜொ லிக்கின்றான் ; -MILKYAGEல்(துவாபர யுகம் )
கட்டிமல் லாண்டந்த கம்சர்களைக் கொன்றதும்
சொட்டுநீ லம்டோய்கே சவ்”….கிரேசி மோகன்….
“கஷ்கம் சொறிவரது குட்டிக்கு வேடமிட்டாய்
கிஷ்ணன்போல் கேசவ், கிரேசிக்கு -உஷ்ணம்
சகிக்கவில்லை சித்திரையில் சாக்லேட் கிருஷ்ணா
நகைக்கவை கோபி நடித்து”….கிரேசி மோகன்….
பி. கு. இன்றைய பாலகிருஷ்ணர் பார்ப்பதற்கு ஜாடையில் “மைக்கேல் மதனகாம ராஜன் ” புகழ் வரது குட்டி போல் இருக்கிறான்….சாக்லேட் கிருஷ்ணாவில் என்னால் முடியாத போது “கோபியை” substitute ஆக அனுப்ப…. ” ம் மாட்டிக் கொண்டான் கோபி “….கிரேசி மோகன்….
கிரேசி மோகன்
“மீனகூர்ம ஏனசிம்ம மாவலி வாமன
மூணுராம கண்ணனாய் மூண்டேழுந்து -ஆணவம்
அம்பலம் ஆக அதன்முகத்தில் துப்பிடும்
சம்பவாமி சொல்கின்ற சேய்”….
An Eternal Child Playing An eternal Game In An Eternal Garden…. Sri Aravindhar….
“சிந்தையில் சிக்காத சச்சிதா னந்தமே,
எந்தையே ஏகப் பரம்பொருளே, -விந்தையே ,
தீராத ஆட்டத்தை மாறாத தோட்டத்தில்,
சீராக ஆடிடும் சேய்”….
“முரணெனப் பட்டாலும் மூலமே நின்னை,
வரவழைக்க கேசவ் வழியில், -இரணியன்போல்,
மல்லுக்(கு) அழைத்திடுவேன், முன்வந்(து) உமிழ்ந்திடுவாய்,
ஜில்லென்று கீதை ஜலம்”….கிரேசி மோகன் ….
Sambhavami yugey, yugey.
His every avatara, from the matsya to the Krishna avatara and many more, is to put down arrogance born out of power.