’’ராஜாவாய் ஆனாலும் ரங்கனவர் ராதைக்கு
கூஜாவாய் ஆனாரே காதலால் : -’’ஆஜா’’(ஹிந்தி -Come)
அவள்சொல்ல வந்திடுவார், ஆவினத்தை விட்டு
இவளுக்(கு) இணை இவள்’’….கிரேசி மோகன்….!
Category: திருமால் திருப்புகழ்
பெருமாள் திருப்புகழ்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

“ஜராவேடன் அம்பால் ஜனார்த்தனன் மீண்டும்
அராவணை செல்லல் அறிந்த -கராம்பசு;
கோவிந்தன் காலுற்ற காலன்தன் கையெழுத்தை
ஆவின்தன் நாவால் அழிப்பு”….(OR )…. ….-காராம்பசு
வாசவன்தன் காலின் வலியை விலக்குதோ
கேசவன் ப்ரஷாய் குவிந்து”…..கிரேசி மோகன்….!“நேற்றைய கண்ணர்க்கும், நாளைய கண்ணர்க்கும்
வேற்றுமை கேசவ் வரைவதிலே -தோற்றம்
மறைவிலா மாலனோ மானஸசஞ் சாரன்
நிரைநேர் தளைசீர் நமக்கு”….கிரேசி மோகன்….! -
’’வெண்பூ வெண்பாக்கள்’’….!
’’வரலஷ்மி விரதம் ஆச்சு…அடுத்து வரவீணா நமஸ்துப்யம்’’….!
———————————————————————————————————————
நாணல் இடையாளாம் ,நாவன்மை உடையாளாம்
பூணல் அயன்மணந்த புண்ணியளாம்-வீணில்
அலையாதெ நெஞ்சே அறுபத்தி நான்கு
கலையாளை சேரக் கவி….(1)நாக்கில் நரம்பின்றி நாளும் வசைபாடி
தீக்குள் குளிர்காயா தேநெஞ்சே -வாக்கில்
கலைவாணி வந்து குடியேறும் வண்ணம்
அலைபாய்ந் திடா(து) அடங்கு….(2)ரவியுடன் சுற்றி ரகசியங்கள் கற்ற
கவிஅனுமன் கானம் குளிரப் -புவிமிசை
பாயப் பொழிவாள் படிக நிறத்தாள்
ஆய கலையாள் அருள்….(3)வந்தனம் செய்ய வரமளிக்கும் வாணியால்
மந்தனும் ஆவானே மாகவி -சிந்தையும்
வாக்கும் செயலுமவள் போக்கே துதித்திட
தேக்கும் வடிக்குமே தேன்….(4)பலகலைக்கு ஞானி பயில்வோர்க்கு தோணி
தளைதப்பா தீந்தமிழின் தேனி -நிலைகுலைந்து
நான்நீ எனப்பேசும் நாநீ நுழையாயே
வாணி வரமருள வா’’….(5)தேஜ சொரூபிணீ தேவி சரஸ்வதி
ராஜ ஷியாமளா ரக்ஷிநீ -பூஜை
புனஸ்காரம் எந்தன் நமஸ்காரம் தாயே
மனக்கிலேச யாழினை மீட்டு….(6)….கிரேசி மோகன்…! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
———————————————————–
சரணா கதியென்று சார்ந்து கிடப்போர்க்(கு)
அரணாய் இருக்கும் அரியே -நரனாய்ப்
பிறந்து வளர்ந்து பிணியென்ற சாக்கில்
இறந்தில்லை யாவ(து) எதற்கு….!அகந்தை இறக்குமங்(கு) ஆன்மா பிறக்கும்
புகழ்ந்திகழ்ந்த வாசனை போகும் -மகிழ்ந்திருப்போம்
ஆரா அமுதத்தில் ஆனந்த சாகரத்தில்
நாரா யணஓம் நம….!
நமநம என்றவனை நச்சரிப்பாய் நாமம்
கமகமக்கும் நாவால் கணமும் -எமனெதிர்
வந்தாலும் அச்சமின்றி நந்தமகன் அச்சுதன்
சொந்தம் நமக்கென்று சொல்….கொட்டுது தேளின் கொடுக்காய்ப் புலனைந்தும்
பட்டது போதும் பரந்தாமா -சட்டென
வந்தெனக்குச் சத்துவ வாழ்வை அளித்திடுவாய்
நந்தலாலா இந்தநாளே நீ….!நீயின்றி நானில்லை நானின்றி நீயுண்டு
தீயின்றி தீபம் திரிதானே -வாஇன்றே
வெப்பமாய் வந்தென்னை அப்புவாய் சந்தனமாய்
அப்பனே ஆரா அமுது….!அமுதா அளவினை விஞ்சுகின்ற நஞ்சாம்
எமதாசை நெஞ்சினை ஏற்று -குமுதவாய்
பேய்ச்சி முலைப்பாலை உண்டதுபோல் எம்மனச் -
‘’படமும் பாடலும்’’….!
-
கிரேசி QUOTE from கிரேசிஸ் கிழிஞ்ச COAT….!
1)தை பொறந்தா வழி பொறக்கும்….ஆனா ஆடி பொறந்தாத்தான் தை பொறக்கும்….!
2)”சினிமா வாழ்க்கை மாதிரிதான்….ஃபர்ஸ்ட் -ஹாஃப் நன்னா இருந்தா செகெண்ட் -ஹாஃப் சுமாராத்தான் இருக்கும்’’….அதான் சொல்றேன் ‘’இண்டெர்வெல் விடாதீங்க….
கிரேசி கோட் ஃப்ரம் க்ரேசிஸ் கிழிஞ்ச கோட்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
எதுரா எதுராவென எங்கெங்கோ தேடும்
புதிராம் புவிவாழ்வு போதும் – மதுரா
நகரொளிந்த தெய்வம் நவனீதக் கண்ணன்
சுகமளிக்கும் செல்வச் செழிப்பு….கிரேசி மோகன்….! -
’’பொது வெண்பாக்கள்’’….!
அச்சம் விலகிடும் ஆண்மை பெருகிடும்
நிச்சயித்தக் கர்மம் நொறுங்கிடும் -இச்சகச்
சேறான மாயையில் செந்தா மரைபூக்கும்
கூறாமல் சந்யாசம் கொள்….பயமில்லா வாழ்வே பெருவாழ்வு மற்று
ஜயமென்ப(து) எல்லாம்வீண் ஜம்பம் -முயலாமை
காதை உரைத்தது கீதை உரைத்தது
ஏதும் உறைக்கலை யே….
பயமாசை கோபம் பசிதாகம் தூக்கம்
மயமான மூட மனமே -அயலாம்
இவைதவிர்த்து ஆழ இதயத்தில் இருக்கும்
சுவைசுகித்து வாழ சுகம்….
வருவதை ஏற்று வராததை விட்டு
தருவதில் கொள்வாய் பெருமை -இறைவனவன்
தானேதன் கைப்பட தானியம் எண்ணிடுவான்
தானேமே நாம்லிக்கா ஹை….கிரேசி மோகன்….! -
’’வரலஷ்மி விரத வாழ்த்துக்கள்’’(பொன்மகள் வந்தாள்)….!

“பிருகு குலத்தில் பிறந்த திருவே
உருகும் அடியார்க் (கு ) உதவ -பெருகும்
அறம்பொருள் இன்பம் அளிப்போய் , எனக்கு
வரம்தரவா வீட்டுக்குள் வீடு”….!
—————————————————————————————————————————பொன்மகள் வந்தாள்…. மூவர்க்கும் சேர்த்து முதற்பாடல்
——————————————————————————————————–“படைத்திடும் வாணி துடைத்திடும் துர்க்கா
இடைபுகுந்து காக்கும் இவளும் -சடைப்பின்னல்
ஆக இணைந்து அலகிலா ஆட்டத்தை
பாகப் பிரிவினையில் பார்ப்பு”….!
——————————————————————————————————————“பத்தவ தாரப் பணிக்குதவ பூதேவி,
நித்திரை யோகமோ நீளாவால், -பத்தர்க்கு
சேர அருள்சகாயம் ஸ்ரீதேவி , ஆகமால்
தாரங் களின்தயவால் தான்”….!“உச்சிவான் தோன்றி உறுமும் இடிமின்னல்
பச்சை மலையில் பளிச்சிடலாய் – அச்சுதன்
மாலின் மரகத மார்பில் மகாலட்சுமி
பாலின் நிறத்தில் பொலிவு”….!“வீரத் துணிச்சலை (தைரியம் ), வெற்றிக் கனிச்சுவையை ( விஜயம் )
ஈரப் பசைநெஞ்சுக்(கு) ஈகையை (தனம் )-சேரும்
மனைமக்கள்(சந்தானம்) வித்தை(வித்யா) முளைக்கதிர்(தான்யம்), எட்டு
முனையானை(அஷ்ட திக் கஜங்கள்) ஆதி முடிப்பு”….!கிரேசி மோகன்….!
————————————————————————————————————————– -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
SRI AUROBINDO
————————-
AN ETERNAL CHILD PLAYING AN ETERNAL GAME IN AN ETERNAL GARDEN….!”சிந்தையில் சிக்காத சச்சிதா னந்தமே
எந்தையே ஏகப் பரம்பொருளே -விந்தையே
தீராத ஆட்டத்தை மாறாத தோட்டத்தில்
சீராக ஆடிடும் சேய்’’….!
——————————————————————————————————————————————BEYOND PERSONALITY THE MAYAVADIN
SEES INDEFINABLE EXISTANCE; I FOLLOWED
HIM THERE AND FOUND MY ”KRISHNA”
BEYOND IN INDEFINABLE PERSONALITY….முடிந்தவரை மொழிபெயர்ப்பு
————————————
நேதிநேதி என்று நினைப்பைக் கடந்தமாயா
வாதிகள் கண்டனர் வாழ்விருப்பை -பாதையில்
சென்றன்று கண்டேன்காண் கன்றன்று மேய்த்தோனை;
ஒன்றென்று உள்ளம் உவப்பு….!
——————————————————————————————————-
”சேணம் குதிரைபோல் சேர்ந்தே செல்வது
ஞானம் அறிவு நமக்குள்ளே -காணும்நாம்
வேகத் திலைவதால் வேறாகும், உண்மைவி
வேகக்கண் ணேதெய் வதம்”….கிரேசி மோகன்….!
————————————————————————————————————— -
’’ஆடிப் பெருக்கு’’….!
”ஆடிப் பெருக்கினாலும் ஆடா(து) இளைத்தாலும்
வாடி வதங்கிடும் வாழ்விது – கூடி
இருக்கையில் இன்பம் பிரிகையில் துன்பம்
பருக்கைக்கோ தீராப் பசி”….கிரேசி மோகன்…. -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
’’ஜீவான்மன்’’….!
’’பிரம்மா, விஷ்ணு, ஈசர்கள் மூவரும்
பூமியைப் பிரித்து ஆள்கின்றார்
ஏனோ ஜீவா இந்த விசாரம்
ஆன்மனாகிநீ ஆள் உலகைலாப நஷ்டங்கள் கொள்ளாதவரை
கஷ்டம் என்செய்யும் சொல்ஜீவா
ஏனோ ஜீவா இந்த விசாரம்
ஆன்மனாகிநீ ஆள் உலகைகவிதை கணக்கு கற்பூரத்தை
கழுதைக்கு காட்டுவதேன் ஜீவா
ஏனோ ஜீவா இந்த விசாரம்
ஆன்மனாகிநீ ஆள் உலகைஅட்டமா சித்திகள் வந்த பிற்பாடு
அரேணா ஒரேணா வாய்ப்பாடேன்
ஏனோ ஜீவா இந்த விசாரம்
ஆன்மனாகிநீ ஆள் உலகை….கிரேசி மோகன்….!’’பிரம்மா, விஷ்ணு, ஈசர்கள் மூவரும்
பூமியைப் பிரித்து ஆள்கின்றார்
ஏனோ ஜீவா இந்த விசாரம்
ஆன்மனாகிநீ ஆள் உலகைலாப நஷ்டங்கள் கொள்ளாதவரை
கஷ்டம் என்செய்யும் சொல்ஜீவா
ஏனோ ஜீவா இந்த விசாரம்
ஆன்மனாகிநீ ஆள் உலகைகவிதை கணக்கு கற்பூரத்தை
கழுதைக்கு காட்டுவதேன் ஜீவா
ஏனோ ஜீவா இந்த விசாரம்
ஆன்மனாகிநீ ஆள் உலகைஅட்டமா சித்திகள் வந்த பிற்பாடு
அரேணா ஒரேணா வாய்ப்பாடேன்
ஏனோ ஜீவா இந்த விசாரம்
ஆன்மனாகிநீ ஆள் உலகை….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
இன்று பார்க்க ‘’தன்வந்த்ரி” போலிருக்கார், உடுப்பி கிருஷ்ணர், அமிர்த கலஸ ஹஸ்தராய்….!
—————————————————————————————————————————————-‘புண்வந்(து) அரித்து புரையோடிப் போனாலும்
தன்வந் திரியிருக்கார் தீர்வுக்கு: -மண்வந்த
எல்லோர்க்கும் உண்டு எமபயம், தன்வந்த்ரி
கொள்வார்க்கு என்றுமவர் காப்பு”….கிரேசி மோகன்….’’பானைக்குள் பாற்கடல், த்வாபர(துவாபர -த்வார) பாலகன்,
ஆனைக்கா அய்யன் அகிலாண்ட -மோனே(மலையாளம்)
எதுகையாய் வந்தோன் யதுகுல அண்ணன்
முதுமை இலாமுகுந்த(மூவா முகுந்தர்க்கு இளையவளே-அபிராமி அந்தாதி) மால்’’….கிரேசி மோகன்….!









