கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
“ஜராவேடன் அம்பால் ஜனார்த்தனன் மீண்டும்
அராவணை செல்லல் அறிந்த -கராம்பசு;
கோவிந்தன் காலுற்ற காலன்தன் கையெழுத்தை
ஆவின்தன் நாவால் அழிப்பு”….
(OR )…. ….-காராம்பசு
வாசவன்தன் காலின் வலியை விலக்குதோ
கேசவன் ப்ரஷாய் குவிந்து”…..கிரேசி மோகன்….!
“நேற்றைய கண்ணர்க்கும், நாளைய கண்ணர்க்கும்
வேற்றுமை கேசவ் வரைவதிலே -தோற்றம்
மறைவிலா மாலனோ மானஸசஞ் சாரன்
நிரைநேர் தளைசீர் நமக்கு”….கிரேசி மோகன்….!