காளிக்கு அண்ணன் கார்முகில் வண்ணன்
காளிங்க நர்த்தனம் ஆடிக் களைத்தவன்
கோளரி மாதவன் கோவிந்தன் என்வீட்டுத்
தூளியில் ஆடித் தூங்க வருகவே….கிரேசி மோகன்….!
Category: திருமால் திருப்புகழ்
பெருமாள் திருப்புகழ்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
புருஷ அவ(ள்)லட்ஷணம்
கந்தலடி நீயெனக்கு -கசக்கிக்
கட்டிடும் கஞ்சன் நானுக்கு
சந்தையடி நீயெனக்கு -டமார
செவிட்டுப் பொணமடி நானுக்கு
மொந்தையடி நானுக்கு -மறுநாள்
மண்டையிடி HANGOVER நீயெனக்கு
அந்த அடி அங்குலம் ஈறாராகும் -அடியேயுன்
அடியால் அடியேன்பல் சுக்குநூறாகும்….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
சுதாமன் அவலுக்கு சொத்தை அளித்த
கதாதரன் கண்ணன் பரம -பிதாவாம்
அலர்மேல் அன்னை மணாளன் அருளால்
மலரும்நாள் காசின் பிறப்பு….!
”அவலுக்கு செல்வம், அழகுமயில் ராதை
அவளுக்குக் காதல், விஜயன் -கவலைக்கு
கீதை, அடியார்தம் கண்ணீர் திவலைக்கு
தாதை அளிப்பான் துடைப்பு….!பள்ள மதைநோக்கிப் பாய்கின்ற வெள்ளமென
கொள்ளிடத் தானிருகால் கொள்கையாய் -உள்ளமே
கள்ளமில்லா நம்பிக்கை கண்மூடக் கும்பிடு
வள்ளலென மாறும்காண் வாழ்வு….கிரேசி மோகன்….! -
“ரமண வசனாம்ருதம்”
கிரேசி மோகன்
———————————‘’எண்ணும் எழுத்துமிரு கண்ணென்று கூறுவர்,
எண்ணாதோர் உச்சி எழுத்தினை, -அண்ணா,
மலைரமணர் சொல்லிய மார்க்கம் புகுந்தால்,
இலைகாய் மறைக்கா இனிப்பு’’….!
—————————————————————————————————————-”அதுவேண் டுமென்றும், இதுவேண் டுமென்றும்
எதுவேண் டினாலும்நீ ஏழை, -புதுவிதமாய்,
ஆடுஓ நாய்க்காய் அழுமோ! அதுநனைய!,
’’மேடருணை செல்மன மே’’….!கிரேசி மோகன்…..மேடருணை -மேடு(மலை)+ அருணை….
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”கண்ணன் அனுபூதி’’
——————————————–கிழிந்து பிணியில் கிடக்கும் உடம்பைப்
பிழிந்து சுகம்மேலும் பார்க்கும் -இழிந்த
மனமேன் கொடுத்தாய் எனையேன் படைத்தாய்
உனைஏன் கேட்கநான் உண்டு….!
உண்டில்லை என்றுனை இங்கிரு சாரர்கள்
விண்டுரைத்த போதும் விசுவமே -கண்டுகொண்டேன்
மித்யை ஜகத்தென்றும் சத்தியம் நீயென்றும்
வித்தை பழகும் விதம்….!விதவிதப் பூவாய் விதவையின் கூந்தற்
பதவி பெறுவதென்ன பேறா! -புதுப்புது
மேனியும், நோயும் ,மரணமும் நாடகம்
தூணிலொளிந் தோன்கண் துடைப்பு….!
துடைப்பங் கழியைத் துணிப்பட்டால் மூடிப்
படைத்தாய் பிறவிப் பிணியை -இடைப்பையா
தீராவுன் ஆட்டத்தில் தோள்கொடுக்கும் தோழனெனை
பாரா திருப்பதேன் பகர்….!
பகர்தல், பரிகசித்தல்,பீற்றல்,புலம்பல்
இகழ்தல் எனவாச்(சு) வாழ்க்கை -உகிரால்
இரணியனைக் கொன்றன்(று) இருதோ(ள்) அணிந்த
நரஹரியே மோனத்தூ ணாக்கு….!
நாக்கில் நரம்பின்றி நாளை நமதென்ற
போக்கில் தடம்புரண்டு போய்விழுவோம் -தூக்கில்
இடப்பட்டும் தூங்கும் மடப்பயலே அந்த
இடப்பயல் தாளே இருப்பு….(10)
இருப்பதிங்(கு) ஒன்றே இதன்பேர் கண்ணன்
மறுப்பதை விட்டென் மனமே -கருப்பொருளைப்
பார்க்காத போதும் பாடப் பரவசத்தில்
கார்கால மேகத்தில் காண்….!காணவனைக் காற்றில் கலந்துவரும் கீதத்தில்
நானென(து) இல்லாத மோனத்தில் -தேனளவு
பார்க்கும் மலர்வண்டின் போக்கில் இனப்பெருக்கம்
கோர்க்கும் குயுக்தியின் கண்….!கன்னங் கருத்தது காரிருள் போன்றது
நண்ணும் நமக்கொளி நாளது -முன்னம்
பிறக்காது பின்னர் இறக்காதாம் இன்னும்
திறக்காசொர் கத்தாள் அது….!அதனால் இதுவாய் இதனால் அதுவாய்
மதனால் மயங்கும் மனமே -முதலாம்
பதியாய் இருந்து பசுக்களை மேய்ப்போன்
கதியாய்க் கிடக்கக் களிப்பு….!கிரேசி மோகன்….! -
சூரி நாகம்மாள் ஸ்ரீ ரமணாஸ்ரம லேகுலு…
கிரேசி மோகன்
பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி தன்னை ‘’நானே லாஸ்ட்டில் ஃபர்ஸ்ட்(கடைசியில் முதல்)’’ என்று சொல்லிக் கொள்வாராம்…
‘’லாஸ்ட்டுலஃபர்ஸ்ட் ஆனால்லாங் லாஸ்டிங் நிறைவுண்டு,
ஃபார்ஸ்ட்ஃபுட்டாம் வாழ்வில் பசியாறி, -வேஸ்ட்டாகாய்:
டேஸ்ட்டான்மா காண திருவருணை ஈசரின்,
கோஸ்ட்டாம்(நிழல்) ரமணபதம் கொள்’’….
—————————————————————————————————-
…’’சப்தஜால மஹாரண்யம் சித்த பிரமண காரகம்’’….சூரி நாகம்மாள் ஸ்ரீரமணாஸ்ரம லேகுலுவில் படித்த பகவானின் பதில் நினைவுக்கு வந்தது”திக்குத் தெரியாது தத்தளிப்போம் காட்டினிலே,
திக்கித் திணறுவோம் தக்கபதில், -கக்கிட:
சொற்கள் பெருங்காடு, சித்தம் கலங்கவைக்கும்,
நிற்கும் நடுத்தெருவே நன்று’’….கிரேசி மோகன்…. -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”மாடு துரத்த மணிவண்ணர் ,யாதவர்
ஓடுகின்றார் ஓங்கி உலகளக்க, -காடுதனில்:
வண்ணக் குழைப்பில் வரைந்தகேசவ் வாழ்கவே:
கண்ணனை நெஞ்சே கருது’’….கிரேசி மோகன்….! -
ரம்ஜான் நோன்பு வாழ்த்துக்கள்
கிரேசி மோகன்
——————————————————”அல்லா அழைக்கின்றார் எல்லா உயிர்களையும்
சொல்லால் செயலால் சுகித்திரு, -மெல்லாது,
நோன்பிரு ரம்ஜானில் நானுக்(கு) அளித்திடுவேன்
வான்விருந்து மோட்சத்தில் வீடு’’….கிரேசி மோகன்…. -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
——————————————————
“ராம கிரணமாய் ,ராத்திரி வந்தவனுக்கு,
நாம கரணம் நடக்கும்முன், -காமதேனு,
பால்சுரக்கப் போச்சு, பழையரா மாயண
வால்குரங்குக்(கு) எட்டியது வாய்ப்பு”….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
’’மந்திக்(கு) ஓருகாலும், மாட்டுக்(கு) ஒருகாலும்,
இந்திர கர்வத்தை ஈயாக்கி -சந்திர
கோத்திரர் ,யாதவர் கோவர் தனதாரி
காத்திருக்கார் வானவில்லுக் காய்’’….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
பகவான் உவாச
———————-
”காரியம் அற்றசோர்வு வீரன் உனக்கெதற்கு
சூரிகள் விண்ணிடை சேர்ப்பாரோ ! -ஆரியா
தேரை குதிரையை தேர்ந்தெடுத்த நீயெனக்குத்
தேரைநான் பாறை துளி’’….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”பொன்னிற வண்ணப் புழுதி எழுந்துயர்
விண்ணவர் கண்ணில் விழுந்திட -செந்நிற
சாயங்கா லத்தில் சகாக்களுடன் வீடேகும்
காயாம்பூ வண்ணனே காப்பு”….!”அதிகாலைப் போதினில் ஆவுக்(கு) அளிப்பு
குதிகாலை கோவிந்தக் கண்ணன் : -சதிகார
மாமன் அனுப்பிட மல்லாண்ட போதிலும்
காமம்(பிரியம்) இவருக்குக் கன்று’’….!’’சகாதேவன் கட்டினான்,ய சோதை பிணைத்தனள்
சுகதேவர் சொல்லுற்ற(பாகவத) சேயோ, -அகமில்லா
அன்பால் அடைபடும் ஆனந்தக் கண்ணன்,ஆ
வின்பால் யசகாதே வர்’’….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
ஓமனக் குட்டனே, கோ(GO)மண கோவிந்தா,
கோமணம் கட்டிய வாமனா, -நாமணக்கும்
ஆரா அமுதனே அய்யா திருவிண்ணகர்(உப்பிலியப்பர்- மாமேகம் சரணம் வ்ரஜ:)
சீராளா சீனிவா ஸா’’….’’அமுதா அளவினை விஞ்சுகின்ற நஞ்சாம்
எமதாசை நெஞ்சினை ஏற்று -குமுதவாய்
பேய்ச்சி முலைப்பாலை உண்டதுபோல் எம்மனச்
சூழ்ச்சியைக் கொள்வாய் சரண்….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”மாட்டை இருத்தி மடிதனில்,தாலாட்டுப்
பாட்டைப் படிக்கின்றார் பாகவதர்: -காட்டில்
வசிக்கின்ற இதுதான் , ரசிக்கின்ற ராதை:
நிசிநிறத் தோனை நினை’’….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்












