Category: திருமால் திருப்புகழ்

பெருமாள் திருப்புகழ்

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    சினம்மிகுந்த மாமன் சிறைபிறந்து ஆயர்
    இனம்புகுந்து வாழ்ந்த இடையன் -மணம்குவிந்த
    மண்ணணைநீர் மேகத்து வண்ணனை மாற்றான்தாய்க்
    கண்ணனை நெஞ்சே கருது….
    சூழ்ச்சி யுடன்வந்த பேழ்ச்சி முலைபற்றி
    மோட்ஷ விருந்தளித்த மோகனனை -மேய்ச்சலில்
    கண்ணென கோகுலக் கன்றுகள் காத்திடும்
    கண்ணனை நெஞ்சே கருது….(6)….24-03-2011

    பாலுக்(கு) அழும்பாலன் பாவை களின்லோலன்
    ஞாயலத் துயர்தீர்க்கும் நாயகன் -மாலுக்குள்
    எண்ணமாய்த் தோன்றி இடைசாதி வந்தவன்
    கண்ணனை நெஞ்சே கருது….

    பக்திக்(கு) அவன்பதங்கள், சக்திக்(கு) அவன்சரணம்
    முக்திக்(கு) அவனின் மலர்த்தாள்கள் -யுக்தியாய்
    கண்ணினுன் தாம்பினால் கட்டும் உரிமைக்குக்
    கண்ணனை நெஞ்சே கருது….

    அப்பண ஆதி அனந்தனில் தூங்குவோன்
    சொப்பனம் இவ்வுலக சாராம்சம் -அற்பநான்
    எண்ணம் தொலைத்து எழுவாய் விழிப்புடன்
    கண்ணனை நெஞ்சே கருது….
    இதுநிஜமாய் ஆகும் அது பொய்யாய்ப் போகும்
    விதவிதமாய் எண்ணல் விடுத்து -எதுவரினும்
    கண்ணணைந்த போதுதிக்கும் காரிருள் வண்ணத்து
    கண்ணனை நெஞ்சே கருது….

    எங்கரி என்றே இரணியன் கேளும்முன்
    அங்கொரு தூணில் அதிர்ந்தவன் -சங்கரி
    அண்ணனை ஆகாய வண்ணனை ஆனந்தக்
    கண்ணனை நெஞ்சே கருது….

    நினைத்திட நம்முள் நவநீதம் பொங்கும்
    கனைத்திடக் காமம் கலங்கும் -மணத்துழாய்
    திண்ணிய தோளில் துலங்கும் துவாபரக்
    கண்ணனை நெஞ்சே கருது….

    காரோத வண்ணனின் பேரோத ஆயிரம்
    நீரோடை போல்தெளிவு நம்வாழ்வில் -ஆராத
    இன்னமுதை தீந்திருக் கண்ணமுதைக் கற்கண்டைக்
    கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    அச்சுறுத்தும் பூதமா! , அன்றிமாத்ரு பூதமா! ,
    அச்சுதம் கேசவம் ஆனது! : -மெச்சிடும்
    வண்ணத்தில் கேசவ் வரைந்தாய், அவர்வெண்பா
    எண்ணத்திற்க்(கு) என்றும் இரை(றை)’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”மந்திமனம் மண்ணிலே மண்டியிட்டுக் கண்ணனின்
    பந்திக்கு முந்தும் பரவசத்தை, -தந்தீர்(கேசவ்): –
    கிருஷ்ணப் பிரேமியென்றார் கோபுலு ஆசான்,
    பிரஷ்ணப்(BRUSH) பிரேமிவெண் பாக்கு”….கிரேசி மோகன்….!

    Share
  • பெருமாள் திருப் புகழ்….!

     

    கிரேசி மோகன்
    ———————————————-

     

    தனனதன தனனதன தனதான தானதன
    தனனதன தனனதன தனதான தானதன -தனதான….!
    “சகலவித சுகமதனில் உறவாடி ஆடியுடல்
    பிணிகளுற மரணயமன் வருநாளில் நாலுகர
    பலகைதனில் பலருமழ சுடுகாடு சேருகணம் -கருடாழ்வார்
    பறவைதனில் புவிமலர்ம கள்சமேத ராய்முதலை
    பிடிநழுவ களிறழுகை முதலாதி காதுபட
    விரையுஅதி துரிதமுடன் வரவேணும், நேமிவலம் -புரியோடு
    தகதகவெ னஜொலிகதை சிலைவாளும் தோளசைய
    அபயமென சரணமுறு எனதாவி வீடுபெற
    ரவிவரும னிறகுவரை கருநீல சோபையுடன் -பரிவாக.
    தளிருவிர லடியில்வரை துகளாக கோனமரன்
    பொழியுமழை இடையருடல் நனையாத வாறவனின்
    கருவமது ஒழியவெயில் விரிவானி லேழுநிற -சிலைமேவ,
    சுகமுரளி இசைபழகு யதுவாசி தோழனென
    வளருதயிர் கடையுமகள் முலைவாட, பூதகியின்
    விடமொழுகு முலைநுனியில் உயிர்போக வாயுறியும் -சிசுமாலே
    சிறகுமயில் முடிநழுவ, பழுதாக பீதகமும்
    அரையிறுகு கயிறுமுனை உரலூற மாமருதம்
    முறியயொளி சுரர்ககன வழிகாண லீலைபுரி -நவநீதா
    பகருமறை எழுதுகதை இதிகாச நாரதிய
    முனிவரொடு மலரயனும் கயிலாய வாசிசிவன்
    புகழுபதம் ஜெயவிஜயர் புரிகாவல் வாசல்வழி -நுழைவோர்காண
    பரமபத அலைகடலில் விடநாக மேளுபதம்
    கனகமழை பொழியவரு அலமேலு மேவுபதம்
    அடியவர்கள் வினைவிலக சரணுறு பாதமலர் -பெருமாளே”….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”ஆலிங் கனித்தஆவின் தோளிங்க நர்த்தனத்தால்
    காளிங்கக் காட்சி கவனத்தில் – மாலிங்(கு)ஆ
    மாதாவின் உச்சி முகர்கின்றான்: வாத்சல்ய
    பீதாம் பரத்தினைப் போற்று’’….கிரேசி மோகன்….!

    Share
  • ஞானேஸ்வரி

     

    ’’கொத்தனாரு கட்டிவச்ச பங்களால-
    குடிபுகுந்தேன் தாய்பத்து திங்களால-
    பெத்தநாழி நான் அழ தாய் சிரிச்சாளே-
    செத்த நாழி தாய் அழ நான் சிரிச்சேனே….

    ’’குஸ்தி பயில்வானுக்(கு) ஈடு இணையாக-
    ஒஸ்தியாய் நின்றேன் ஓங்கி வக்கனையாக-
    அஸ்திவாரம் சரியில்லே என்றார் சங்கிட்டு-
    அஸ்திஓரம் என்றார் மண் அங்கிட்டு’’….

    கீதா விளக்கம் ‘’ஞானேஸ்வரி’’ படிக்கையில், கண்ணன் அர்ஜுனனுக்கு சொல்வது….
    ——————————————————————————————————

    ‘’மரண(ம்)அமு துக்குண்டோ !, மேகம்கண்(டு) அஞ்சி,
    கரணம் அடிக்குமோ காற்று!, -தருணம்
    இருளென்று பானு இயங்காது போமோ!,
    உறவென்(று) உருகா(து) உழை’’….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கேசவ் ஓவியத்தைப் பார்த்த்வுடன் நினைவுக்கு வந்தது ‘’புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’’ கவிஞர் கண்ணதாசர் அவர்களின் ‘’கிருஷ்ண கானம்”….!

    kesav

    ‘’தாம்பிலே கட்டுண்ட தாமோ தரர்குவித்து
    மாம்பூ இதழ்களால் மாலியாகி -பேம்பூ(BAMBOO)
    NOTESஸைவா சித்தாலும் நாட்டுப் பசுவுக்காய்,
    THOUGHTஸோ பளுபார தம்’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170129 -Yogacharya -Dialogue with Arjuna

    ”நூறைநீ வென்றிட ஈரே(ழு) உலகாள்வாய்
    மாரில் கணைதைத்து மாளுங்கால் -வீராநீ
    சொர்கம் புகுவாய் சுதாரித்(து) எழுந்திரு
    தர்கம் புரிதல் தவிர்”….

    ”நாணை இழுத்திட நாணாதே நண்பனே
    ஆனை படுத்தால் அசுவமட்டம் -சேனைக்
    களம்நீங்க செல்லாத காசாவாய், வேந்தருன்
    உளம்நோக வைப்பார் உவந்து”….

    ”ஈங்கிதனைக் கேட்டோய் இதன்பெயர் கேண்மக்கள்
    சாங்கியம் என்போர், இனியடுத்து -தாங்கிய
    கர்மத் தளைகளின் கட்டவிழ்க்கும் யோகத்தின்
    மர்மம் உரைப்போம் உமக்கு”….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    “அக்கிரமம் கண்டால் அதர்மம் அகற்றிட
    சக்கிரம் ஏந்தும் சுதர்ஸன -உக்கிரர்:
    சங்கில் மவுனமாய், சக்கிரத்தில் சீற்றமாய்,
    எங்கும் சுழல்வோனை ஏத்து’’….கிரேசி மோகன்….!

    Share
  • பெருமாள் திருப் புகழ்….

    கிரேசி மோகன்
    தனதன தனான தனதன தனான
    தனதன தனான-தனதான

    “இறகும யிலாடி இலகுசு ருள்கேச
    இடையர்ம கனான -பெருமாள்காண்
    விரைகள பகோபி நடுவில்க ஸுதூரி
    திலகநு தல் பூணும் – பெருமாள்காண்
    கரியவி ழிபாசம் பொழியவ ருராம
    கவுசலை குமார -பெருமாள்காண்
    குமிழழ குவேத மொழிநில வுஸ்வாஸம்
    உமிழள வுநாசி -பெருமாள்காண்
    கறவையி னம்மேய குழலமு தகானம்
    பொழிஅத ரராக – பெருமாள்காண்
    ஜனகம கள்சாய சவுகரி யமான
    விரியுநெ டிமார்பு -பெருமாள்காண்
    விரையவி ரிவானம் ,உலகள வுகாணும்,
    தொழுமுள ரிபாத -பெருமாள்காண்
    அருணகிரி நாதர் வருணனை யிலேளும்
    மருகன்மு றைமாம -பெருமாளே”….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”தும்பிக்கை மாலையாய் தோள்தழுவ ஆனைக்கு
    நம்பிக்கை தந்தார் நவனீத -நம்பீசர்:(மயிலையில் இப்படி ஒரு வெண்ணைக் கடையுண்டு….மலரும் நினைவுக்கு மரியாதை)-
    ஆதிமூல மேயென்ற ஆனை கஜேந்திர
    வாதியாச்சு மோட்ச விலங்கு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    சுகந்த துளசி சிலிர்க்க வலிமை
    மிகுந்த இருதோளில் பூணும் -முகுந்தன்
    நிதர்ஸனம் என்று நடப்போர் வழியை
    சுதர்ஸனம் காக்கும் சுழன்று….

    ஆலில் மிதந்தவா ஆழ்வார்கள் பாசுர
    நூலில் நிறைந்தவா நந்தலாலா -தோளில்
    திருத்துழாய் பூண்ட திருவோணத் தானே
    கருத்தில் கலந்துவளைக் காப்பு….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    நீல பத்பநாபன் அவர்களின் விஷ்ணு-புரம் நாவலை
    இரா.முருகன் படிக்கத் தந்தபோது….
    —————————————————————————————————–

    kesav

    கேசம் திருவல்லா கால்கள் திருவாப்பூர்
    சேஷ சயனத்தில் ஸ்ரீநிதி -வாசனாய்
    நீளப் படுத்தவரே நீலபத்ம நாபரே
    கோலத் திருவுருவே காப்பு….

     

    THREE TIER PROTECTION FOR திருவனந்த புர ஸ்வாமிக்கு….
    ————————————————————————————-
    பாஞ்சாலி, ஆனை, பிரகலாதன் துன்பத்தில்
    பூஞ்சோலை இன்பமாய் பூத்தவா -ஏஞ்சாமி !
    காப்புக் கடவுள்நீ கேரளத்தில் முப்பாது
    காப்பில் கிடக்கலாமோ கூறு….
    சர்வம் விஷ்ணு “மாயம்” ஜகத்….

    “சர்வமும் வாசுதேவ சாயலாய் பார்ப்போர்க்கு
    கர்மப்ரா ரப்தம் கிடையாது ;-மர்மமிதை
    போதித்த யாதவன் பாதத்தைப் பற்றுக;
    வேதத்தின் சாரம் விஷ்ணு”…

     

    வாசுதேவ மயம் ஜகத்….
    ——————————————-

     

    “ஏசுதேவன், அல்லா, எருதேறி வெண்ணீறு
    பூசுதேவன், நான்முகன், பொற்பில்வேல் -வீசுதேவன்
    வீசுகாதன் வேழன், வியனோ வியன்கேசவ்,
    வாசுதேவன் என்றே வணங்கு”….கிரேசி மோகன்….

    பொற்பில்வேல்-மலையில் வேல் முருகன்….
    வியனோ வியன்கேசவ் -வியத்தகு ஓவியன் கேசவ்….

    கேசம் திருவல்லா கால்கள் திருவாப்பூர்
    சேஷ சயனத்தில் ஸ்ரீநிதி -வாசா
    பதினெட்டு மைலாய் படுத்தோய் எனக்கு
    விதியெட்டா வாழ்வை வழங்கு….

    தங்கத்தில் திருவனந்தன் கோலத்தை கணினியில் கண்டு….
    ————————————————————————-
    அங்கம் ஜொலிக்க அயனரன் பாதுகாப்பில்
    தங்கமாய்த் தூங்கும் திருவனந்த -சிங்கமே !-
    பாற்கடல் விட்டெதற்கு பாதாளப் பள்ளிகொண்டீர்
    வேர்க்கலையோ அங்குமக்கு விஷ்ணு….

    அடையார் அனந்த பத்பனாப ஸ்வாமி கோயிலில் எழுதியது
    —————————————————————————

    கடலேழில் தூங்கி களைப்புற்றாய் போலும்
    அடையாற்றில் பள்ளி அடைந்தோய் -மடல்வாழை
    தென்னை மரம்சூழ் திருவனந்தா, ஐம்புலக்
    கண்ணைப் பறித்தெனைக் காண்….கிரேசி மோகன்….!

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    Kamadhenu anoints Krishna as Govinda…..!

    Anoints -As part of religious ceremony, rub or smear oil….எண்ணைக் காப்பு….!

    kesav

    காளியன் குட்டையில் மூளியாய் மூழ்கஅவன்
    தோளினில் ஆடிய தெய்வமே -காளியின்
    அண்ணனே கைமாறி ஆயர் குலம்புகுந்த
    கண்ணனுக்(கு) எண்ணையால் காப்பு….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”அத்தை மடி மெத்தையடி”….!அத்”தை”(தை மாஸத்திற்காய் தவமிருந்த கோ”தை” கோ மாதா) மடி அரங்கனார் மெத்தை….

    kesav

    ”பாற்கடல் பாரதம், பாற்குடல் பாகவதம்
    பார்கடன் பட்டார் பசுவுக்காய், -ஏற்கனவே
    கீதைக்கும், பூமிக்கும்(பூபாரம்) கடன்பட் டவர்புவிகோ
    மாதுக்காய் மெத்தை மடி”….கிரேசி மோகன்….!

    Share