காலம் வெகுவாக மாறி விட்டது. ஒரு காலத்தில் தமிழ்ச்சமுதாயம் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தது. ஒரு பெரிய கூடம் (ஹால்) இருக்கும். குறைந்தது 20 பேரை நிம்மதியாகப் படுத்து உறங்க வைக்கும் கொள்ளளவு அந்தக் கூடத்திற்கு இருக்கும். ஒரே நேரத்தில் முப்பது அல்லது 40 பேருக்குப் பந்தி வைக்க வேண்டும் என்னும் கொள்கை அளவும் அதற்கு இருக்கும். இதை பட்டாசாலை என்று கூறும் வழக்கம் இருந்துள்ளது. இதற்கு அடுத்து அங்கணம் என்று கூறப்படும் சின்ன பட்டாசாலை ஒன்று இருக்கும். இதிலும் சுமார் 20 பேர் படுக்கலாம். இது இன்னும் சில வீடுகளில் நிலா முற்றம் எனப்படும் நிலவொளி உள்ளே விழும் அமைப்பில் கம்பிகள் மட்டும் மேற்கூறையாகப் போட்டு அமைந்திருக்கும்.
இவை தவிர, ரேழி ஒன்று இருக்கும். முன்னறைக்கும் வாசலுக்கும் இடைப்பட்ட பகுதியைத்தான் ரேழி என்று கூறுவது வழக்கம். அறை என்று சொன்னால் பொதுவாக ஒன்றோ இரண்டோ அறைகள் சின்னஞ்சிறிய அளவில் இருக்கலாம். ஒன்று அந்த வீட்டு மாப்பிள்ளை வந்தால் தங்க வைப்பதற்கு. மாப்பிள்ளைகள் வந்தால்….? கூடி கும்மாளம் அடிக்க வேண்டியதுதான். மற்றொன்று சாமான்கள் வைக்கும் ஸ்டோர் ரூம். மற்றபடி சமையல் அறை ஒன்று பெரிதாக இருக்கும். ஒத்தார் ஓர்ப்படிகள் ஒன்றாய்க் கூடி கும்மியடிக்கும். தப்பு தப்பு சமையல் செய்யும் இடம்.
ஆமாம் இப்போது எதற்கு இந்த வாஸ்து சாஸ்திரம் என்று கேட்கத் தோன்றுகின்றதா? தோன்றவில்லை என்றால் நீங்கள் ஏதோ இயந்திரத்தனமாக இந்தக் கட்டுரையைப் படிக்கத் தொடங்கி உள்ளீர்கள் என்று பொருள்.
சங்க இலக்கிய மான் குடும்பத்துக் காட்சி ஒன்றை இப்போது கூறுவது இக்கட்டுரைப் பொருளுக்குப் பொருத்தமாக இருக்கும். தமிழில் எதைச் சொல்லப் புகுந்தாலும் சங்கத்தில் இருந்து எடுத்துக்காட்டிச் சொல்வது தமிழுக்குப் பெருமை என்பதை விடவும் அதைச் சொன்னவருக்கே பெருமை அதிகம் . “எத்தனைதான் தேக்கு இருந்தாலும் பர்மா தேக்கு போல வராது என்பார்கள். அது போலத்தான் பக்தித்தமிழ், பாமரத்தமிழ், இலக்கியத்தமிழ் என்று பல சொன்னாலும் சங்கத்தமிழ் என்பதில் உள்ள பெருமை மற்ற எதிலும் இல்லை” என்று பேரா. தி. இராசகோபாலன் சொல்வார். விளக்க முற்படும் எந்தச் செய்திக்கும் சங்கச் சான்றே தங்கச் சான்றாக ஒளிவீசும் என்பதில் ஒருவருக்கும் ஐயம் இருக்காது. உயர் மதிப்பையும் அள்ளித் தருவது. தமிழனின் அறவியல், அறிவியல், உடலியல், உளவியல் நுட்பத்தை எடுத்துக் கூறும் சான்றுகளின் கருவுலமும் அதுவே எனலாம்.
தான் காதலித்த தலைவனோடு உடன் போக்கு சென்று விடுகிறாள் தலைவி. அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்து விடுகின்றது. அப்போதும் அவளது தாயும் தந்தையும் அவள் மீது கோபத்துடன் இருக்கின்றனர். ஆனால் அவளை வளர்த்தச் செவிலித்தாயால் அப்படி இருக்க இயலவில்லை. அவள் சென்று தலைவியைப் பார்த்துவிட்டு வருகிறாள். தான் கண்டு வந்த காட்சியைச் சொன்னால் நற்றாய் மனம் மாறி, தலைவி மீது கொண்டுள்ள சினத்தை மாற்றிக் கொள்வாள் என்று நினைக்கிறாள். தலைவியின் கடிமனைக்குச் சென்று வந்த செவிலி உவந்த உள்ளத்தினளாய் நற்றாய்க்குப் பின்வருமாறு கூறுகிறாள்.
மறியிடைப் படுத்த மான்பிணை போல,
புதல்வன் நடுவணன் ஆக நன்றும்
இனிது மன்றஅவர் கிடக்கை; முனிவின்றி
நீல் நிற வியலகம் கவைஇய
ஈனும் உம்பரும் பெறலருங்குரைத்தே!
காட்டில் குட்டியை ஈன்ற காதல் மான்கள், குட்டி இடையில் படுத்திருக்க அதனைத் தழுவிக் கலைமானும்(ஆண்மான்) பிணை மானும் (பெண்மான்) படுத்திருக்குமாம். அது போல, புதல்வன் நடுவே படுத்திருக்க, அவனைத் தழுவியவாறு தலைவனும் தலைவியும் படுத்திருக்கும் காட்சி இனிமையானது. பரந்து விரிந்த நீல வானத்தைத் தழுவிக்கொண்டிருக்கும் இந்த மண்ணுலகத்திலும் இதற்கு அப்பாற்பட்ட தேவர் உலகமாகிய விண்ணுலகத்திலும் இந்தக் காட்சி கிடைப்பது அரிது என்று கூறுகிறாள். இதில் தலைவன், தலைவி இருவரும் தம் குழந்தை மீது கொண்ட காதலை விளக்குகிறாள். இருவரது அன்பையும் பற்றி கூறுகிறாள். அப்போதும் மனம் மாறாத நற்றாயைப் பார்க்கிறாள். மற்றொரு காட்சியையும் கூறுகிறாள்.
“புதல்வன் கவையினன் தந்தை; மென்மொழிப் புதல்வன் தாயோ இருவரும் கவைஇயினள்
இனிது மன்ற அவர் கிடக்கை
நனி இரும் பரப்பின் இவ்வுலகுடன் உறுமே”
உன் மகள் எப்படிப் பட்ட தாயாக இருக்கிறாள் தெரியுமா? தலைவன் தன் புதல்வனாகிய உன் பேரனைத் தழுவியபடி படுத்திருக்கிறான். உன் மகளோ தான் ஈன்றெடுத்த மகனான உன் பெயரனையும் தன் காதல் தலைவனையும் ஒரு சேர ஒரு தாயாக தழுவிக்கொண்டு படுத்திருக்கிறாள் என்னும் கருத்து தொணிக்கப் பாடுகிறாள். அப்போதும் சினம் தணியாத தாய்க்கு அங்கு அரங்கேறிய மற்றொரு காட்சியையும் படம் பிடிக்கிறாள்.
புதல்வன் கவைஇய தாய் புறம் முயங்கி
நசையினன் வதிந்த கிடக்கை, பாணர்
நரம்பு உளர் முரற்கை போல
இனிதால் அம்ம! பண்புமார் உடைத்தே!
இப்போது புதல்வனை அரவணைத்துக் கொண்டு படுத்திருக்கிறாள் தலைவி. அவளின் முதுகுப் புறத்தைத் தழுவி, விருப்பத்தோடு படுத்துக் கொண்டிருக்கிறான் தலைவன். அவர்களை அவ்வாறு காண்பது மிகவும் இனிய காட்சி. அது பாணர்கள் தங்கள் யாழின் நரம்புகளை மீட்டி இசைக்கும் இசையைப் போல இனியது; மிகுந்த பண்பும் உடையது” என்கிறாள். இப்படிப் பட்ட அழகொளிரும் இல்லறக் காட்சிகளை அமைக்கிறார் பேயனார் என்னும் சங்கத் தமிழ்ப் புலவர்.
பூனைக் குட்டிகளைப் பாருங்கள். தாய்ப்பூனை அருகில் இருக்கும்போது பாதுகாப்பு உள்ளது என்னும் உணர்ச்சியில் அச்சமற்று நன்கு உறங்கும். தாய்ப்பூனை வெளியில் சென்றிருக்கும்போது அவை அச்சத்துடன் திரு திருவென விழித்துக் கொண்டிருக்கும்.
ஐந்தறிவே உள்ள மான்கள் தங்கள் குட்டியை அணைத்துக் கொண்டு படுக்கின்றன என்கிறது முதல் பாடல். வீட்டு விலங்குகளான பூனை, நாய் முதல் சிங்கம், புலி முதலிய விலங்கினங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட பருவம் வரைத் தம் மக்களைத் தனியாகப் படுக்க வைப்பதில்லை.
நம் பண்டைய பண்பாட்டுத் தமிழர்கள் தங்கள் குழந்தையைத் தனியாகப் படுக்க வைத்ததில்லை. ஒரு வேளை செல்வந்தர்களின் இல்லங்களில் இணையர் தனியறையில் படுக்க நேர்ந்தால் அவர்களின் குழந்தைச் செல்வங்கள் பாட்டன், பாட்டியுடன் கதை கேட்டு, பாட்டுக் கேட்டு மகிழ்வாகப் படுத்துறங்கும்.
கூட்டுக் குடும்பம் நலிந்து தனிக்குடும்பம் மலிந்த, நாகரிகத்தில் முற்றிப்போன இன்றைய சமுதாயத்தில் தனியறையில் குழந்தைகளைப் படுக்க வைப்பதும் மலிந்து போனது. எட்டுக்கு எட்டு அறை ஒன்றில் குழந்தையையும் அதற்கென ஒரு கணிப்பொறி மற்றும் இத்யாதி இத்யாதிகளையும் வாங்கி அடைத்து விடுகின்றனர். அணைப்பாரற்ற அந்தக் குழந்தை அன்பு, பாசம் என்னும் ஏக்கத்தால் மூச்சு முட்டியபடியே உறங்குகிறது. உயிர் வாழ்கிறது.
இதனினும் பெருங்கொடுமை மகிழ்வுந்துப் பயணம். இப்போதெல்லாம் அம்மாவும் அப்பாவும் வெளியில் செல்கின்றார்கள் என்றால் குழந்தைகள் வரமாட்டேன் என்று அடம் பிடிக்கின்றன. காரணம் காரில் முன் இருக்கையில் கணவனுடன் மனைவிதான் அமர வேண்டும். இது இன்றைய நாகரிகம். அதாவது கணவரது எஜமானியாம் மனைவி. அவர்கள் இருவரும் பாட்டுக் கேட்டுக்கொண்டோ, அல்லது ஆங்கிலத்தில் பேசிக்கொண்டோ தம் குழந்தையைச் சட்டை செய்யாமல் முன்பக்க இருக்கைகளில். அந்தக் குழந்தையோ பின் இருக்கையில் சோர்ந்த வாடிய முகத்துடன் ஜன்னலில் இருந்து வெளியே வெறித்துப் பார்த்தபடி.
இந்நிலையில் அக்குழந்தைக்கு எப்படி மன ஆரோக்கியம் இருக்கும்? அக்குழந்தையின் உலகம் எந்திரங்களாக ஆன பின்பு அக்குழந்தையும் பாசம், பந்தம், அன்பு, கருணை, இரக்கம் என்னும் நற்பண்புகள் எதனையும் புரிந்து கொள்ள முடியாத எந்திரமாகவே ஆகிவிடுகின்றது. அதனால் எதிராளியின் துன்பத்தைக் கூடப் புரிந்து கொள்ளவோ, உதவவோ முடியாமல் போய்விடுகின்றது. சற்று அழுத்தமாகக் கூறவேண்டுமென்றால் எதிராளியைத் துன்புறுத்துவதும் கூடிப் போகிறது என்று கூறலாம். குழந்தைகள் வளரும்போது இக்குணமும் படிப் படியே வளர்ந்து வன்முறையாளர்களாக அவர்களை மாற்றிவிடுகின்றது.
இளமையில் தம்மைத் தனிமைப் படுத்திய பெற்றோர்களை முதுமையில் அவை தனிமைப் படுத்திவிடத் துடிக்கின்றன. முதியோர் இல்லங்களில் பெற்றோர்களைப் போடுகின்றன. ஐந்தில் விளைவுதுதான் விளைவு. குழந்தையின் பத்து வயதிற்குள் அதன் சிந்தையில் என்ன நற்பண்புகள் பதிகின்றதோ அதுதான் எப்போதும் ஒளிவிடும். இவற்றை உணராது ஐயோ முதியோர் இல்லங்கள் பெருகிவிட்டனவே என்று அங்கலாய்த்தலில் ஒரு பயனும் விளையப் போவது இல்லை.
ஆய்வு என்று எதையும் மேற்கொள்ளாத சங்கத் தமிழன் இந்த உளவியல் சார்ந்த உண்மைகளை உணர்ந்தவன். இதற்குச் சான்றுகளே மேற்கூறிய பாடல்கள்.
ஆனால் இதனை இத்தனை ஆண்டுகள் கழித்து ஆய்ந்து கண்டவர்கள் டென்மார்க் ஆய்வாளர்கள். 2 முதல் 6 வயது வரையிலான 500 குழந்தைகளை ஆய்வு செய்த. டென்மார்க் ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர். நன்னா ஓல்சன் கூறுவதாவது, “பெற்றோருடன் உறங்கும் குழந்தைகள் உடல் மற்றும் மன நலத்துடன் இருக்கிறார்கள் என்கின்றனர். முக்கியமாக பாதுகாப்பு உணர்வு இருப்பதால் நிம்மதியாக உறங்குகின்றனர். ஹார்மொன்கள் அளவாகச் சுரக்கின்றன. அவர்களது செரிமானம் சீராக இருக்கறது. அதனால் அவர்கள் குண்டாவதில்லை.
தனியாக உறங்கும் குழந்தைகள் அச்சத்துடன் சரியாக உறங்குவதில்லை. தூக்கத்தில் தொந்தரவு ஏற்பட்டால், அது ஹார்மோன்களைப் பாதித்து உடல்பெருக்கத்தைத் தூண்டும். சரியான உறக்கமின்மையால் உண்ட உணவு சரியாக செரிப்பது இல்லை. அதன் காரணமாகக் குண்டாக இருக்கின்றனர். பெற்றொருடன் படுத்து உறங்கும் குழந்தைகளைவிட தனியாகப் படுத்து உறங்கும் குழந்தைகளின் உடல் எடை மூன்று மடங்கு கூடுதலாக உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது” என்கிறார்.
“மக்கள்மெய்தீண்டல்உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு”
என்பார் திருவள்ளுவர். மழலைகளின் மெய்யை வருடுவது குழந்தைக்கு இன்பம் தரும். பெற்றோர்க்கு பேரின்பம் தரும். அந்த இன்பப் போதையில் மூழ்கித் திளைத்த மீசைக்காரனும்,
என்று பாடிப் பரவசமடைந்து படிப்போரையும் பரவசத்துள் ஆழ்த்துகின்றான்.
குழலையும் யாழையும் தம் இனிய குரலில் இசைத்து நம்மை இன்பமாக இசைவிக்கும் மழலைகளைத் தனியாக உறங்க விடாதீர்கள். ஏக்கத்தின் தவிப்பில் உழலவும் விடாதீர்கள். இனியேனும் பெற்றோர்கள் விழித்துக்கொள்வீர்களாக. தங்கள் குழந்தையை பதமாக அணைத்து இதமாக உறங்க வைப்பீர்களாக! ஒரு மன, உள நோயற்ற குழந்தையின் பெற்றோர் என்னும் பெருமையுடன் உலாவருவீர்களாக!
ஸ்ரீ த்யாகராஜ ஆராதனை பகுள பஞ்சமி அன்று திருவையாற்றில் அவரது பிருந்தாவனத்தில் மிகச் சிறப்பாக நடக்கும் அன்றைய தினம் பெரிய சங்கீத மேதைகள் அவர் இயற்றியப் பஞ்ச ரத்ன கீர்த்தனங்கள் பாடுவார்கள்.அப்போது அவரது சிலைக்கும் அபிஷேகம் ஆராதனை, பூஜைகள் நடக்கும் . அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் இது .அவர் தன் ஐந்து வயதிலிருந்தே ஸ்ரீராமநாமத்தை ஜபிக்க ஆரம்பித்தார் சுமார் 95கோடிகள் ஜபித்திருக்கிறார், ஒரு சமயம் அவ்ர் திருப்பதி கோவிலுக்குப் போய் திரும்பி வந்துக் கொண்டிருந்தார் அப்போது ஒரு இடத்தில்ஒரே கூட்டம் , என்னவென்று விஜாரித்ததில் ஒருவன் கிணற்றில் விழுந்து இறந்து விட்டான் என்றுத் தெரிய வந்தது அதாவது ஒரு பிராமணன் தன் மனைவி, குழந்தையுடன் அங்கிருக்கும் ஒரு கோவிலுக்குப் போனான், இருட்டிவிட்டது ஒரு ஆலயத்திற்குள் சென்று இரவைக் கழித்துவிட்டுச் செல்ல நினைத்தான் ஆனால் அந்தக் கோவில் உள்ளேத் தாழிடப்பட்டிருந்தது என்ன செயவது என்றுத் தெரியாமல் அங்கிருக்கும் மதில் மேல் ஏறி உள்ளேக் குதித்து பின் உள் இருக்கும் தாழ்ப்பாளைத் திறக்கலாம் என்று எண்ணி உள்ளே குதித்தான் அவ்வளவுதான் டம் என்றச் சத்தத்துடன் கிணற்றில் விழுந்து விட்டான் நீரில் மூழ்கி தத்தளித்து செத்துப்போனன் ,.அவள் மனைவி வாசலில் தன் கணவன் இவ்வளவு நாழியாகியும் வெளியில் வரவில்லையெ என்றுக் கவலையுடன் அழுது ஊரைக் கூட்டினாள் /எல்லொரும் கோவில் உள்ளேத்தேடி பின் அவனைக் கிணற்றிலிருந்து வெளியே எடுத்தார்கள். அவன் கழுத்தில் துளசி மாலை
இருந்தது அவன் சிறந்த விஷ்ணு பக்தன் என்று தெரிந்து, கொண்டார்
“நா ஜீவோ தாரா” என்றுத் தெலுங்கில் ஒரு பாட்டு அதாவது அந்த மனிதனின் உயிரைத் தந்துவிடு ராமா என்று உள்ளம் உருகிப் பாடினார் தியாகராசர் அந்த உயிர்ப் போன மனிதன் உறங்கி எழுந்தவன் போல உயிர்ப் பெற்று நின்றான் .என்னபக்தி! என்ன ராம நாமத்தின் மகிமை ,,,
,
அவர் பாடிய பாடல்
நாஜீவாதா ர நாநோமு ப லமா
ராஜீவலோசந ராஜ ராஜ சிரோமணி
நா சூபு ப்ரகாசமா
நா நாஸிகா பரிமளமா
நா ஜபவர்ண ரூபமா
நாது பூஜா ஸூமமா த்யாக ராஜநுத
இதன் பொருள்
என்னுடைய ஜீவனுக்கு ஆதாரமாயுள்ளவனே
நான் பார்க்காத ஒளியாய் உள்ளவனே நான் என்னுடைய சுவாசத்தினால் உன்னுடைய சுகந்தத்தை முகர்கிறேன் நான் ஜபிக்கும் அக்ஷரத்தின் ரூபமாய் உள்ளவனே , என்னுடைய பூசையின் புஷ்பமாய் உள்ளவனே தியாகராஜனால் துதிக்கப்பட்டவனே …..
பாகவதத்தில் துருவசரித்திரத்தில் துருவனுக்கு மஹாவிஷ்ணு பிரத்த்யட்சமான்வுடன் ஒருஸ்லோகம் வரும் அதன் பொருள் இந்தப்பாட்டுப்போல் தான் இருக்கும்
” எவர் என்னுள் பிரவேசித்து தூங்கிக்கொண்டிருந்த வாக்கு கை கால் காது கண்கள் ,தேகம் முதலியவைகளைத் தன் சக்தியினால்
ஜீவிக்குமாறு செய்தாரோ அந்த மஹாபுருஷனான மஹாவிஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன்
இந்தப்பாட்டிலும் ஸ்ரீ தியாகராஜர் ஆரம்பத்திலேயே“என்னுடைய ஜிவனுக்கு ஆதாரமானவனே “என்கிறார் இதில் “அஹம் பிரும்மாஸ்மி “என்ற தத்துவம் சொல்லி அந்த இறந்தவன் ஜீவனுக்கும் நீதான் ஆதாரம் என்று சொல்லாமல் சொல்லி பாடுகிறார் ……. கீதையில்
பத்தாவது அத்தியாயம் 20 ஸ்லோகத்திலும் இது சொல்லப்பட்டிருக்கிறது என்று தெரிந்துகொண்டேன்
அவருடைய பாடலிலும் “நா ஜீவோ தாரா” என்பது இதைக்குறிக்கிறது என நினைக்கிறேன்
அந்த மனிதனின் உயிரைத் தந்துவிடு ராமா என்ற பொருள் பட பாடிய பாடலால் அந்த உயிர்ப் போன மனிதன் உறங்கி எழுந்தவன் போல உயிர்ப் பெற்று நின்றான் .என்னபக்தி! என்ன ராம நாமத்தின் மகிமை …… “ராம நாமம்” ஒரு சிறந்த மந்திரம் இதை எப்போதும் ஜபிக்கலாம் ப்டுக்கையிலும் ஜபிக்கலாம் அதன் சக்தியே தனி வாருங்கள் நாமும் ராம நாமம் சொல்லலாமே !
காந்தீயக் கோட்பாடு என்ன என்பது முதலில் நான் குறிப்பிட வேண்டும்.
சத்தியம், சுதந்திரம், சமத்துவம் ஆகிய மூன்றும் பின்னிய தேசம், ஆட்சி, ஆணையகம், அரசாங்கம், அமைச்சர், அரசாங்கப் பணியாளர், நாடாளும் மன்றம், ஊராட்சி, பல்கலைக் கழகம், கல்விக்கூடம், துணை வேந்தர், கோயில் திருப்பணி, சமயத் திருப்பணி, சட்ட நீதி மன்றம், நீதிபதி, உயர்நீதி, உச்சநீதி மன்றம், காவல்துறை, தொழிற்சாலைகள், தொழிற்சாலை அதிபர், ஊழியர், சமூக சேவை, இல்லறம், துறவறம், மருத்துவக் கூடம், மருத்துவர், மருத்துவப் பணியாளி, சட்ட நிபுணர், வழக்காடுவோர் ஆகியோர் இந்தியருக்கு வேண்டும்.
சுதந்திரம் [உரிமைப்பாடு, விடுதலை உணர்வு] மனிதப் பிறப்புரிமை. சுதந்திரம் என்பது கட்டுப்பாடுள்ள சுதந்திரம். கட்டவிழ்த்தோடும் பூரண சுதந்திரமில்லை. சுதந்திரம் நடுவில் அடைபட, அதைக் கட்டுப்படுத்த ஒருபுறம் சத்தியம், மறுபுறம் சமத்துவம் உள்ளது.
சத்தியம் என்பது நேர்மை, மெய்ப்பாடு, உண்மை நெறி. சத்திய நெறியற்ற சுதந்திரம் தீவிர இன்னல் விளைவிக்கிறது. அதுபோல் சமத்துவம் இல்லாத சுதந்திரம் மேல்ஜாதி, கீழ்ஜாதி பிரிவுகளைப் பெருக்கிறது. நேர்மையில்லாத துணைவேந்தர் பதவிக்கு லஞ்சம் வாங்குகிறார்.
அறநெறி, உரிமை, சமநெறி என்பது முப்பெரும் ஒப்பிலாப் பண்புகளே காந்தீயக் கோட்பாடு. சத்தியம், சுதந்திரம், சமத்துவம் எந்த நாட்டுக்கும், எந்த நூற்றாண்டுக்கும் ஏற்புடைதாகும்.
*****************************
அறப் போர் புரிய மனிதர்
ஆதர வில்லை யெனின்
தனியே நடந்து செல் ! நீ
தனியே நடந்து செல் !
பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மரணம் நம் எல்லாருக்கும் நண்பன். நமது நன்றிக்கு உரியது. எனென்றால் அது எல்லா விதத் துயர்களிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது.
மகாத்மா காந்தி
முடிவிலாக் கீர்த்தி பெற்றார்! புவிக்குள்ளே முதன்மை யுற்றார்!
கி.மு.399 இல் கிரேக்க வேதாந்த ஞானி சாக்ரெடிஸ் [Socrates] எழுபதாவது வயதில் விஷம் ஊட்டப் பட்டுத் தன் இனத்தாரால் கொல்லப் பட்டார்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏசு நாதர் தன் இனத்தாரால் காட்டிக் கொடுக்கப் பட்டு, ரோமானியரால் சிலுவையில் அறையப்பட்டு செத்து மடிந்தார்! அடிமை வாழ்வு ஒழித்த ஆப்ரகாம் லிங்கன் 1865 ஆண்டில் அமெரிக்கன், ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் சுடப்பட்டு உயிர் இழந்தார்! ஆஃப்ரிக்க அமெரிக்கர் விடுதலைப் பிதா, மார்டின் லூதர் கிங் வெள்ளைக் காரன் ஒருவனால் 1968 இல் சுடப்பட்டு மாண்டார்! மகாத்மா காந்தி 1948 ஜனவரி 30 ஆம் நாள் மாலை 5 மணிக்குப் பிரார்த்தனைக்குச் செல்லும் வழியில் இந்து மத வெறியன் ஒருவனால் கண்முன் நேரே சுடப்பட்டு “ஹே ராம்” என்று முணங்கிய வண்ணம் மடிந்தார்!
உலக வரலாறு மீண்டும் மீண்டும் மீள்கிறது [History repeats again & again]! பல நூற்றாண்டுகளுக் கிடையே அந்த நான்கு பேர் வாழ்ந்த போதிலும், மனிதரால் கொல்லப்பட்ட அவர்களிடம் ஒளிர்ந்த ஓர் அரிய ஒற்றுமை என்ன ? அனைவரும் மனிதப் பணிபுரிந்த உயர்ந்த மனிதாபிமானிகள்! ஆயுள் உள்ள போது சாதித்ததை விட, அவர்கள் மரணத்தின் பின் உலகுக்குப் போதித்தவை, பிரமிக்கத் தக்கவை!
ஏசு மகான் சிலுவைச் சின்னம் இமயத்தளவு ஓங்கி வளர்ந்து, உலகிலே மாபெரும் கிறிஸ்துவ மதம் பரவ ஆணிவேரானது. மார்டின் லூதர் கிங் அமெரிக்காவின் மகாத்மா வானார்! மகாத்மா காந்தியைப் பற்றி, ‘முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்! புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்!’ என்று மகாகவி பாரதியார், காந்தி உயிரோடுள்ள போதே போற்றிப் புகழ்ந்தார். அவரது அமர வாக்கு காந்தியின் மரணத்துக்குப் பின், எத்தகைய மெய்மொழியாய் ஆகி விட்டது! ஆனால் கொலை மரணத்தில் இறந்தவர் எல்லோரும் முடிவில்லாக் கீர்த்தியும், புவிக்குள் முதன்மையும் அடைவ தில்லை! அந்தக் கோணத்தில் பார்க்கும் போது, கொலை செய்யப் பட்ட இந்திரா காந்தியும், அவரது மகன் ராஜீவ் காந்தியும், மகாத்மா காந்தியின் உன்னத மகிமையைப் பெற வில்லை!
அகால மரணத்திற்கு அபூர்வ இரங்கல் அறிவிப்புகள்!
மகாத்மாவின் மரணச் செய்தியைக் கேட்டு 1948 ஜனவரியில், “அகில உலகும் இந்தியாவுடன் சேர்ந்து வருந்துகிறது” என்று அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் அவலச் செய்தி அனுப்பி யிருந்தார். காந்தியின் முதற்போர்க் களமாகிய தென் ஆப்பிரிக்காவி லிருந்து, அவரை வெறுத்த தளபதி ஜான் ஸ்மட் “நம்முடன் இருந்த ஓர் இளவரசர் பிரிந்து விட்டார்” என்று ஒரு புகழுரையை அனுப்பினார். இத்தாலியில் வாட்டிகன் போப் பாண்டவர் பையஸ் XII தனது இரங்கல் மொழியில், “கிறிஸ்துவ மதத்தின் நண்பர், சமாதானத்தின் சீடர் ஒருவர் மறைந்தார்” என்று எழுதி யிருந்தார். சைனாவும் இந்தோனேசியாவும், “ஆசிய விடுதலையின் முதல் மூல கர்த்தா மாண்டார்” என்று கூறி அதிர்ச்சி அடைந்தன.
ஒன்றான பாரதத்தைத் துண்டு படுத்திய அரசியல் போட்டியாளர் மகமதலி ஜின்னா, தன் இரங்கல் உரையில், “இந்து இனம் உண்டாக்கிய உன்னத மனிதருள் ஒருவர், காந்தி” என்றார். மரணச் செய்தி கேட்டு, இங்கிலாந்தில் லண்டன் மக்கள் கண்ணீர் விட்டனர். காந்தியைப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் அவர்கள் நேராகப் பார்த்ததை நெஞ்சம் மறக்க வில்லை! உலக மகா யுத்தம் முடிந்த தறுவாயில் பல சம்பவங்களைக் கேட்ட பிறகு அவர்களை நிலைகுலையச் செய்த நிகழ்ச்சி காந்தியின் கோர மரணம்! காந்தியை வெறுத்த வின்ஸ்டன் சர்ச்சில், வருந்தற் கடிதம் அனுப்பி யிருந்தார். எல்லாருக்கும் மேலாக, நாடக மேதை பெர்னாட் ஷா கூறியது, சிந்திக்க வைப்பது ! “நல்லவராக இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்று காட்டுகிறது, காந்தியின் மரணம்” என்று ஷா கூறினார். ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜய லட்சுமி பண்டிட், மாஸ்கோவில் புதிதாகத் திறக்கப் பட்ட இந்திய எம்பஸியில் வருந்தல் பதிவுப் புத்தகத்தை எடுத்து வைத்தார். ஆனால் ஸ்டாலின் வெளித்துறை உறுப்பினர் ஒருவர் கூடத் தன் பெயரை எழுதிக் காந்தியின் மரணத்துக்கு வருத்தம் தெரிவிக்க வில்லை!
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை சமயத்தில், மனைவிமார் காமப் பலாத்காரத்திற்கு இரையாகும் போது, குழந்தைகள் கண்முன் கொலை செய்யப்படும் போது, உறவினர் தலைகள் சீவப்படும் போது, பழிவாங்க ஆய்தமோடு ஓடும் இந்துக்களைத் தடுத்துப் பொறுக்குமாறு, காந்தி அகிம்சா வேதம் போதித்தார். “அகிம்சா வழித் தூதரே! சொல்லுங்கள்! எப்படி இந்த நரகத்தில் வாழ்வது ? பஞ்சாபில் இந்துக்களைக் கண்டதும் முஸ்லீம் ஆட்கள் கொலை செய்யும் போது, ஆயுதத்தைக் கைவிட நீங்கள் எப்படிச் சொல்லலாம் ? கசாப்புக் கடை ஆடுகளைப் போல எங்கள் தலைகள் அறுபட்டுக் கூறுபட வேண்டுமா ?” என்று புலம்பெயர்ந்த கூட்டத்தார் யாவரும் கத்தினார்கள்! “காந்தி சாகட்டும்” என்று கூச்சலிட்டார்கள்!
டெல்லியில் வாழும் காந்தியின் முஸ்லீம் நண்பர்கள், “உயிருக்கு ஆபத்து என அறிந்தும் இந்தியாவிலே தங்குவதா ? அன்றி எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் பாகிஸ்தானுக்கு ஓடுவதா ?” என்று கேட்டால், “ஓடிப் போகாமல் தங்கி மரண ஆபத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்பது காந்தியின் பதிலாக இருந்தது! போகப் போக, காந்தியின் அறிவுரை, அவரைப் பின்பற்றியவருக்கும் பிடிக்க வில்லை! எப்போதும் இஸ்லாமியருக்குப் பரிந்து, அவர் பேசுவது பலருக்கு வெறுப்பூட்டின!
“முஸ்லீம்களுக்குப் பகைவன் எவனோ, அவன் இந்தியாவுக்கும் பகைவன். இந்தியா, பாகிஸ்தான் இரண்டிலும் ஒருங்கே அமைதி நிலவட்டும். நாம் ஒருவரை ஒருவர் பகைவராக எண்ணக் கூடாது. இந்துக்கள் குர்ரானைப் படிக்க வேண்டும். முஸ்லீம் பகவத் கீதையின் உட்பொருளை அறிய வேண்டும். நமது மதத்தை நாம் மதிப்பதுபோல், மற்றவர் மதங்களையும் மதிக்க வேண்டும். உயர்ந்த கருத்துக்கள் உருது மொழியில் இருந்தா லென்ன ? சமஸ்கிருதத்தில் இருந்தா லென்ன ? பார்ஸி மொழியில் இருந்தா லென்ன ? அவை எல்லாமே மெய்யான மொழிகள் தான்! நமக்கும் உலகுக்கும் கடவுள் நல்லறிவைத் தரவேண்டும்.” இவை காந்தியின் அழுத்தமான வார்த்தைகள்.
காந்தியைக் கொல்ல பலவிதச் சதிகள்
காந்தி இஸ்லமியருக்குப் பரிந்து பேசுவது, சிலருக்கு வேப்பங் காய்போல் கசந்தது! மகாராஷ்ட்ராவில் ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க [R.S.S.S] உறுப்பினர் பலருக்கு எட்டிக் காயாய் இருந்தது. அவர்கள் தூய இந்துக்கள்; மத வெறியர்கள். குறிப்பாக பூனாவைச் சேர்ந்த நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகிய இரு வாலிபருக்கு காந்தி பகைவரானார்! தென் ஆப்பிரிக்காவில் வேலை முடிந்து 1915 இல் பாரதம் திரும்பிய காந்தியை, விடுதலைப் போராட்டத்திற்கு இழுத்து வந்தவரும், ஒரு மராட்டியரே; அவர்தான் கோபால கிருஷ்ண கோகலே! 1948 இல் சதி செய்து அவரைக் கொன்றவனும் ஒரு மராட்டியனே! அவன்தான் நாதுராம் விநாயகக் கோட்சே! முதலில் கோட்சே முழுக்க முழுக்க காந்தியை பின்பற்றினான்! 1937 இல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு, கைதி செய்யப் பட்டுச் சிறைக்குச் சென்றவன், கோட்சே! பிறகு கொள்கை பிடிக்காமல் அவரை விட்டுவிட்டு ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க இந்து போராட்டத் தளபதி வீர சாவர்க்கரைப் பின் பற்றினான். வீர சாவர்க்கர் இந்து மதத்தைக் காக்க வந்த கடவுளின் தூதராகப் போற்றப்படும் ஒரு பட்டாளிய இந்து [Messiah of Militant Hindu]. சாவர்க்கர் காந்தியின் கொள்கை எல்லாவற்றையும் எதிர்க்கும் ஓர் எதேச்சை அதிகாரி! மெளண்ட் பாட்டன் தனது இந்தியப் பிரிவினைத் திட்டத்தை, 1947 ஜூலை 3 இல் வெளியிட்ட போது, அதைப் ‘பாரதத்தின் இருண்ட நாள்’ என்று பறை சாற்றி, வீர சாவர்க்கர் தனது பூரண எதிர்ப்புத் தெரிவித்தார்!
40 கோடி [1948] இந்திய மக்களின் விதி, அப்போது காந்தியின் கையில் இருந்தது! பாரதக் கண்டம் இரு துண்டமாக வெட்டுப்படப் போவதை காந்தி எப்போதும் எதிர்த்தார்! ‘என் இறந்த உடம்பு மீதுதான், இந்தியா பிரிவுபட வேண்டும் ‘ என்று வெகுண்டார். ‘இந்தியா பிளவு பட்டால் ஒழிய, இந்து முஸ்லீம் தனித் தனியே சமரசமாய் வாழ முடியாது’ , என்பது வைஸ்ராய் மெளண்ட் பாட்டனின் உறுதியான எண்ணம். நேரு, வல்லபாய்ப் படேல், ராஜாஜி ஆகியோர் மூவரும் இந்தியா இரண்டாய்ப் பிரிவதைத் தவிர வேறு வழியில்லை என்று காந்தியுடன் வாதாடினர்.
காந்தி பாரதப் பிரிவினைப் போராட்டத்தில் தோல்வி அடைந்தார்! ‘இந்தியா இரண்டாகப் பிளக்கப் பட்டது. ஆனால் காந்தி உயிரைப் போக்கிக் கொள்ள வில்லையே’ என்று கோட்சே ஆங்காரம் அடைந்தான். ‘காந்தியின் அகிம்சா வேதம், இந்து மக்களைக் கோழையாக்கி, எதிர்க்கும் சக்தியை இழக்க வைத்து, எதிரிகள் முன் மண்டியிடச் செய்து விட்டது! மானத்தைக் காக்க இந்து மாதர்கள், காம பலாத்கார வேதனையிலிருந்து தப்பிக் கொள்ள, கிணற்றில் குதித்துத் தம் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்! பலியானப் பெண்களுக்கு அது ஒரு வெற்றி, என்று காந்தி அவர்களது சாவைப் பாராட்டுகிறார்! அப்படிப் பலியாகும் மாதர்களில் ஒருத்தி, அடுத்து என் தாயாக இருக்கலாம்’ என்று கொதித்தான் கோட்சே! ‘பாரத மாதாவின் சதையைப் பசிக் கழுகுகள் உயிரோடு கிழிக்கின்றன! நம் பெண்டிர் நடுத் தெருவில் கற்பழிக்கப் படுவதை, காங்கிரஸ் அலிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன! எத்தனை காலம் பொறுப்பது ? இதற்கு ஒரே முடிவு, காந்தியைக் கொல்ல வேண்டும்’ என்று கொதித் தெழுந்தான் கோட்சே. இந்து மகா சபையில் காந்தியைக் கொல்ல பலவித சதித் திட்டங்கள், வீர சாவர்க்கர் தலைமையில் உருவாகின! குழுச் சதியாளர்கள்: நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே, கோபால் கோட்சே, விஷ்ணு கார்காரே, மதன்லால் பாவா, இன்னும் சிலர்.
மகாத்மா காந்தியின் இறுதி உண்ணா விரதம்
பாரதப் பிரிவினை ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு ஈடாகத் தர வேண்டிய 55 கோடி ரூபாயை, பாரத அரசாங்கம் பிடித்து வைத்துக் கொள்ளப் போவதை, காந்தி அறவே வெறுத்தார். அவரது எதிர்ப்புத் தர்க்கம் நேருவையும், படேலையும் உடன்பட வைக்க முடியவில்லை! இறப்பதற்கு 17 நாட்களுக்கு முன், 1948 ஜனவரி 13 ஆம் தேதி காந்தி, அதற்காகத் தான் உண்ணா விரதத்தைத் தொடங்கப் போவதாக, பிர்லா மாளிகையிலிருந்து அறிவித்தார். ஓராண்டுக்கு முன்பு இந்து முஸ்லீம் படுகொலைக் கலகத்தை நிறுத்த, காந்தி நெளகாலி நோக்கித் தனியாகத் தைரியமாகப் பாத யாத்திரை செய்தார். அப்போது ரவீந்திர நாத் தாகூரின் ஒரு பாடலைப் [தலைப்பில் உள்ளது] பாடிக் கொண்டு தன் உண்ணா விரதத்தைத் துவங்கினார்.
சில நாட்கள் கழித்து இந்தியாவின் எல்லை மாநிலத்திலிருந்து, பாரதப் பிரிவினைக் கலகத்தில் பாடுபட்ட சில இந்துகளும், சீக்கியர்களும் கூக்குரலுடன் காந்தியைக் காண வந்தனர். ஆறுதல் மொழி கூறு வந்த காந்தியை, அவர்கள் யாவரும் உடனே திட்ட ஆரம்பித்தனர்! ‘இதுவரை எங்களைக் கொடுமைப் படுத்தியது போதும். முற்றிலும் எங்களை நாச மாக்கி விட்டார்! எங்களைத் தனியே வாழ விடு! இமயத்தில் போய் ஓய்வெடு! ‘ என்று காந்தியை நோக்கிக் கூச்சல் போட்டனர். இக்கடுஞ் சொற்கள் காந்தியின் நெஞ்சை ஊடுருவித் தாக்கின! அவற்றைக் கேட்டு கற்சிலையாய் நின்று விட்டார், காந்தி! அவரது மெலிந்த மேனி மீது ஒரு பெரிய பாறாங்கல் விழுந்து எலும்பு நொருங்கியது போல் உணர்ந்தார்! பிறகு சில நாட்கள் சென்றபின் வேறு ஒரு கூட்டம் வந்து, உண்ணா விரதத்தை நிறுத்துமாறுக் காந்தியைக் கெஞ்சியது. அந்தக் கூட்டத்தில் இஸ்லாமியர், சீக்கியர், இந்துக்கள் எல்லா இனத்தவரும் இருந்தனர்.
[bws_captcha]
‘இந்தியாவுக்கு அகிம்சா வழி இனி தேவை இல்லை என்றால், நான் இங்கு உயிர் வாழ்வதிலும் பயனில்லை! பாரதத்தின் தலைவர்கள் ஒருநாள், இந்தக் கிழவனால் நாம் பட்டது போதும்! நம்மை விட்டு அவன் ஒழிந்து போக மாட்டானா ? என்று கூறினால் கூட நான் ஆச்சரியப் படமாட்டேன்’ என்று காந்தி ஒருதரம் சொல்லி யிருக்கிறார்.
மெளண்ட் பாட்டன் தம்பதியர் உண்ணா விரதத்தில் கிடந்த காந்தியைக் காண வந்தனர். ‘மலையை மகமதிடம் கொண்டு வர, நான் ஓர் உண்ணா விரதம் எடுக்க வேண்டி யிருக்கிறது! ‘ என்று காந்தி நகைப்பூட்டி அவர்களை வரவேற்றார். காந்தியின் மெலிந்து போன உடலைக் கண்டு, எட்வீனா பாட்டன் கண்களில் நீர் பெருகியது! ‘வருத்தப் படாதே, எட்வீனா, காந்தி எதைச் செய்ய விரும்புகிறாரோ, அதைச் செய்து கொண்டிருக்கிறார். அவர் மிகுந்த மனத்திட முடைய மெலிந்த மனிதர்’, என்று மனைவியைத் தேற்றினார் மெளண்ட் பாட்டன்.
கோபால் கோட்சே, தன் அண்ணன் நாதுராம் கோட்சேயிக்குக் கொடுத்த வாக்குப்படி, ஜனவரி 17 ஆம் தேதி காந்தியைக் கொல்ல .32 காலிபர் கைத் துப்பாக்கியுடன், டெல்லிக்கு வந்தான். ஆனால் அன்று அதை நிறைவேற்ற அவனால் முடியவில்லை!
கடேசியில் பெற்ற காந்தியின் வெற்றி!
இறுதியில் பாரத அரசாங்கம் 55 கோடி ரூபாயைப் பாகிஸ்தானுக்குக் கொடுக்க முன் வந்தது! காந்தி ஜனவரி 18 ஆம் தேதி உண்ணா விரதத்தை நிறுத்தினார். அன்றைய பிரார்த்தனை சொற்பொழிவில் நேரு பேசினார், ‘இந்திய விடுதலை நான் கண்ட ஓர் ஒளிக்காட்சி! ஆசியாவின் எதிர்காலத்தை என் மனதில் வரைந்து வைத்தேன். ஆனால் அந்த ஒளிக்காட்சியை அளித்தவர் ஓர் அரிய, எளிய மனிதர்! அவரைக் காப்பாற்றச் செய்யும் எந்தத் தியாகமும் அத்தனை பெரியதல்ல! அவர் ஒருவர்தான் நம்மை மெய்யானக் குறிக்கோளை நோக்கி நடத்திச் செல்ல முடியும். அது நம் குருட்டு நம்பிக்கை இல்லை!’
அன்று கூட்டத்தில் காந்தி பேசினார், ‘பாரத நாடு இந்துக்களுக்கு மட்டுமே! அதுபோல் பாகிஸ்தான் இஸ்லாமியருக்கு மட்டுமே! என்று கூறுவது போல் முட்டாள்தனமான எண்ணம் எதுவும் இருக்க முடியாது! இந்தியா, பாகிஸ்தான் இரண்டையும் ஒருங்கே சீர்திருத்துவது என்பது மிகவும் கடின மானது! ஆனால் நாம் மனம் வைத்து செய்தால், எதுவும் நிச்சயமாக முடியும்!’
1947 ஜனவரி 20 ஆம் நாள் மிகப் பலவீனமுள்ள காந்தியை, பிர்லா மாளிகைப் பிரார்த்தனை மேடையில் ஒரு நாற்காலியில் வைத்துக் கொண்டு போய் அமர்த்தினர்! அப்போது இந்து மகா சபைச் சதியினர் கொலை ஆயுதங்களோடு கூட்டத்தினுள் நுழைந்தனர். மதன்லால் பாவா பற்ற வைத்த கைவெடி எதிர் பாராதவாறு கூட்டத்தில் வெடித்தது. ஆனால் காந்தி உயிர் தப்பினார். போலீஸ் பாவாவைத் தேடிப் பிடித்துக் கைதி செய்தனர்.
காந்தி இறப்பதற்கு முந்திய நாள் [ஜனவரி 29, 1948] வியாழக்கிழமை, அவர் அணு ஆயுதங்களைப் பற்றி இந்திரா காந்தியிடம் கூறியது: ‘அணுகுண்டை ஒருங்கே அமெரிக்கா தவிர்க்க வேண்டும். அகிம்சா வழிப் போராட்டம் ஒன்றை மட்டும் அணு குண்டுகள் அழிக்க முடியாது! அணுகுண்டு நம்மைத் தாக்கும் போது, அச்சமின்றி நிமிர்ந்து நின்று மேல் நோக்கிப் பார்த்து, விமானிக்காகப் பிரார்த்திக்க வேண்டு மென்று, என்னைப் பின்பற்று வோரிடம் நான் கட்டாயப் படுத்துவேன்.’ மற்றும் ஒரு சமயம், ‘அகிம்சா இயக்கம் ஒன்றுதான் மனித இனத்தின் கைவசமுள்ள மாபெரும் சக்தி பெற்ற ஓர் ஆயுதம். பேரழிவுச் சக்தியுடைய எந்த யுத்த ஆயுதத்தையும் விட பெரியது, அது!’ என்று சொல்லியிருக்கிறார்.
இரண்டாம் தடவை ஜனவரி 30 ஆம் தேதி மாலை ஆப்தே, கோட்சே இருவரும் கைத் துப்பாக்கியை மறைத்துக் கொண்டு, காந்தியின் பிரார்த்தனை மைதானத்தில் நடமாடிக் கொண்டிருந்தனர். அன்று கோட்சே வெற்றி அடைந்தான்! காந்தியைக் கொன்ற சதிகாரனாய்ச் சரித்திரத்தில் இடம் பெற்றான்! 1948 மே மாதம் 27 ஆம் தேதி நாதுராம் கோட்சே, ஆப்தே, கோபால் கோட்சே, சாவர்க்கர் உள்பட எட்டுப் பேர் கைதி செய்யப் பட்டு சதி வழக்குப் பல மாதங்கள் நடந்தது. முடிவில் நாதுராம் கோட்சே, ஆப்தே இருவரும் கொலைக் குற்றம் சாட்டப் பட்டு, நவம்பர் 15 ஆம் தேதி தூக்கிலிடப் பட்டனர்! கோபால் கோட்சே, கார்காரே, பாவா மூவருக்கும் 12 வருட சிறைத் தண்டனை கொடுக்கப் பட்டது! போதிய சாட்சி இல்லாது போனதால், சாவர்க்கர் உள்பட மற்றோர் விடுவிக்கப் பட்டனர்!
ஜாதி மதங்களைப் பார்ப்போம்! சகிப்போம் மதிப்போம்!
பாரத அரசியல் நிர்ணயச் சட்டப்படி, இந்தியா ‘மதச் சார்பற்ற [Secular]’ ஒரு குடியரசு. மகாத்மா காந்தி மதச் சார்பற்ற ஒரு பாரத நாட்டை உருவாக்கும் பணிக்கே உயிர் வாழ்ந்தார்; அதை இந்தியாவில் நிலைநாட்டப் போராடியதில் அவர் தோல்வியுற்று மாண்டார்! பாரதச் சட்டங்கள் வழக்கறிஞர்களுக்கும் நீதி மன்ற நீதிபதிகளுக்கும் மட்டுமே பயன்படும் கருவிகள்! பாமர மக்கள், அரசியல் வாதிகள், மதவாதிகள், மடாதிபதிகள் ஆகியோருக்கு, எழுதப் பட்டாலும் அவர்கள் சட்டத்தைப் பின்பற்றுவ தில்லை! இஸ்லாமிய மதம், கிறிஸ்துவ மதம், சீக்கிய மதம், புத்த மதம், ஜெயின மதம் இந்திய நாட்டில் பல நூற்றாண்டுகள் வேரூன்றி, இந்து மதத்துடன் இணைந்து உலவி வருகின்றன. ஆயிரக் கணக்கில் நம்மிடையே ஜாதிகள் உள்ளன! பல்லாயிரம் ஆண்டுக் காலம் வளர்ந்து வேரூன்றி விட்ட ஜாதிப் புற்றுநோயை எந்த அறுவை முறையிலும், எத்தனை ஆண்டுகள் முயன்றாலும், அவற்றைப் பாரத மண்ணிலிருந்து களை எடுக்க முடியாது! ‘எம்மதமும் சம்மதமே’ என்று காந்தியின் மரணம், நமக்கு அறிவுரை சொல்லட்டும்! பாரத நாடு இம்மதங்கள் ஒருங்கே தனித்து வாழப் பல நூற்றாண்டுகள் இடம் கொடுத்தது. எல்லோருக்கும் இணையான சமரச வாழ்வைத் தொடர்ந்து, ஏன் பாரதம் அளிக்கக் கூடாது ?
வட இந்தியாவில் இந்து மத வெறியர்கள், அடிக்கடிக் கிறிஸ்துவக் கோயில்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், அங்குள்ள பாதிரியார்களைக் கொலை செய்தும் வருகிறார்கள்! தாழ்த்தப் பட்ட ஏழை மக்களை, மேலினத்தார் வட நாட்டிலும், தென் நாட்டிலும் படாத பாடு படுத்தி வருகிறார்கள். பாரத்திலே பிறந்து வளர்ந்த புத்த மதத்தினரை, இந்து மதவாதிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நசுக்கி பாரத நாட்டிலிருந்து விரட்டி விட்டதால், மிஞ்சிய சிறுபான்மையினர் இருக்குமிடம் தெரியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள்! சீக்கியர் தனி நாடு கோரிப் போராடித் தொல்லை கொடுத்துத் துன்புற்று, அவர்கள் கொட்டம் அடக்கப் பட்டு இப்போது சற்று அமைதி நிலவி வருகிறது.
[bws_captcha]
காந்தி ஏசு நாதரை மிகவும் நேசித்தார். ‘ஏசு நாதரின் ‘மலைப் பிரசங்கம்’ [Sermon on the Mount] காந்தியைக் கவர்ந்த ஓர் அரிய வாக்குரை! இந்து வேதங்கள் மட்டுமே தேவ வாக்குகள் என்பதைக் காந்தி ஒருபோதும் ஒப்புக் கொண்ட தில்லை! அவை ஏன் பைபிளாகவும், கொரானாகவும் இருக்கக் கூடாது ? என்று கேள்வி எழுப்பினார். ‘நீங்கள் கிறிஸ்துவர் இல்லை’, என்று ஒருவர் குறிப்பிட்ட போது, காந்தி சொன்னார், ‘நான் ஒரு கிறிஸ்டியன்! நான் ஒரு இந்து! நான் ஒரு முஸ்லீம்! நான் ஒரு யூதன்!’ அந்த ரீதியில் அவர் மற்றவர்களை விடத் தான் ஒரு தகுந்த இந்தியன், என்று காட்டிக் கொண்டார்.
‘எனது ஆழ்ந்த நம்பிக்கை இதுதான்: இந்துக்கள், சீக்கியர், இஸ்லாமியர், கிறித்துவர் யாவரும் ஒரே பாரத மாதாவின் புத்திரர், புத்திரிகள். பாரதத்திலோ, பாகிஸ்தானிலோ நடக்கும் எந்த விதப் படு கொலையும் கண்டு பலிவாங்க முற்பட்டு, நம் மக்கள் கடமை யிலிருந்து பிறழக் கூடாது! பாகிஸ்தானில் உள்ள எல்லா இந்துக்களும், சீக்கியரும் கொல்லப் பட்டாலும், இந்தியாவில் உள்ள ஓர் இஸ்லாமியச் சிறு பிள்ளையைக் காப்பாற்ற நாம் முற்படவேண்டும்!’ என்பது காந்தியின் வாக்கு!
[bws_captcha]
இந்தியர் பலருக்குத் தேசப்பற்று குன்றி வருவதைக், காஷ்மீரிலிருந்து கன்னியா குமரி முதல் பயணம் செய்யும் எவரும் கண்டு பிடித்து விடலாம்! தேசப்பற்று என்றால், நாட்டு மக்கள், நாட்டு மொழிகள், நாட்டுப் பண்புகள், பழக்க வழக்கங்கள், நடையுடை பாவனைகள் மீதுள்ள சகிப்புத்தன்மை, மதிப்பு, நம்பிக்கை ஆகியவற்றின் மீது இந்தியர் காட்டும் மனிதத் தன்மை! அதற்கு மக்களிடம் மதச் சகிப்பு, இனச் சகிப்பு, ஜாதிச் சகிப்பு, மாநிலச் சகிப்பு, மொழிச் சகிப்பு மிக மிகத் தேவை! மதச் சார்பில்லாமை என்றாலும் இதுதான் அர்த்தம்! பாரதத்தின் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம், இந்தியரிடம் குறைந்துள்ள, இந்தச் சகிப்பற்ற தன்மைகளே !
‘ஜாதிகள் இல்லயடி பாப்பா! ஜாதி மதங்களைப் பாரோம்! மற்றும் செப்பும் மொழி பதினெட் டுடையாள், ஆயின் சிந்தை ஒன்றுடையாள்’ என்று பாரத மாதாவைப் பற்றிப் பாரதியார் பாடியதற்கும் இதுதான் அர்த்தம்! ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு’ என்றும் நமக்குக் கூறினார்! நாற்பது ஆண்டுகள் ஒன்றாக எல்லா ஜாதியினரும், எல்லா இனத்தவரும், எல்லா மதத்தினரும் பிரிட்டீஷ் சாம்ராஜியத்தோடு போராடி இந்தியா மகத்தான விடுதலைக் குறிக்கோளை அடைய வில்லையா ?
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே!
பிரிட்டீஷ் அரசாங்கம் பாரத நாட்டை அடிமைப் படுத்தினாலும், அது செய்த நல்ல காரியங்களும் உண்டு. துண்டுபட்டுப் போன பரத கண்டத்தை ஒன்றாக்கியது பிரிட்டீஷ் அரசு! ஆங்கில மொழி நம்மிடையே பரவி யிருந்ததால், பாரத நாடு கல்வி, தொழில், வாணிபம், விஞ்ஞானம், வேளாண்மை போன்ற எல்லாத் துறைகளிலும் முன்னேறி இருக்கிறது. இந்தியாவின் பதினெட்டு மொழிகள் வளர்ச்சி பெற, ஆங்கில மொழி உதவியாக இருந்திருக்கிறது. இந்திய நகரங்கள், பெரும்பான்மையான ஊர்கள் ரயில் பாதைகளில் இணைக்கப் பட்டு, ரயில்தொடர் வாகனங்கள் ஜாதி மதம் பாராது எல்லா இனத்தாரையும் ஒருங்கே ஏற்றிச் செல்கின்றன. இந்தியத் தபால், தந்தி நிலையங்கள் ஜாதி மதம் பாராது, எல்லா ஊர்களுக்கும் நமது கடிதங்களைப் பரிமாறி வருகின்றன. இந்திய ரயில்தொடர் வாகனங்கள், ஆகாய விமானங்கள் போன்ற சாதனங்களில் நாம் பயணம் செய்யும் போது, ஜாதி, மதம், இனம் எதையும் பார்க்காமல், ஒரு தேச மக்களாய் நடந்து வருகிறோம்! பன்மொழி பேசும் பல்வேறு இந்திய மக்களைப் பிணைக்கும் ஓர் இணைப்பு மொழியாய் ஆங்கில மொழியும் பாரதத்தில் பணி செய்து வருகிறது!
[bws_captcha]
இப்போது அடிப்படைவாத இந்துக்கள் மதப் போர்வைக்குள் புகுந்து கொண்டு, இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர் ஆகியோர்க்குத் தொல்லை கொடுத்து வருகிறார்கள். அதனால் நாட்டில் மீண்டும் மீண்டும் எழும் கொலை பாதக எதிர்ப்புகளுக்கும் இந்துக்கள் ஆளாகி வருகிறார்கள். 16 ஆம் நூற்றாண்டில் பாபர் கட்டிய பாப்ரி மசூதியை அயோத்தியாவில் 1992 ஆம் ஆண்டில் இடித்துத் தரைமட்ட மாக்கிய பிறகு, அங்கே சில இந்துக்கள் ராமர் கோயில் கட்டப் புகுவது ஒரு மாபெரும் பிரச்சனைக் குரிய மதச் சம்பவம்! இராமர் பிறந்த புண்ணிய பூமியாகக் கருதப்படும் அந்தத் தளத்தில் இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும் நிரந்தர மதப்போரை உண்டாக்கிப் பலரது குருதி வெள்ளம் ஓடி விட்டது! இதைப் பற்றி மத்திய அரசியல் மந்திரி, உமா பாரதி அழுத்தமாகச் சொன்னாராம், ‘பாப்ரி மசூதி தேசீய அவமானச் சின்னம்! ஓர் அடிமைச் சின்னம்! அது நமது தேசப்பற்றைப் பாதிக்கிறது! முகலாய சாம்ராஜியத்தைப் பாரத தேசத்தில் நிலைநாட்டிய ஓர் ஆக்கிரமிப்பாளன் பாபர், பெயரைத் தாங்கி நிற்கிறது! மசூதி இடிப்பில் எந்த விதச் சதித் திட்டமும் இல்லை! அது ஓர் அடிமைச் சின்னம், என்பது எனது உறுதியான நம்பிக்கை’ என்று முழக்கினாராம்!
[bws_captcha]
அப்படிப் பார்க்கப் போனால், ஆக்ராவில் உள்ள ‘தாஜ் மஹால்’ ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? டெல்லியில் உள்ள ‘குதுப்மினார்’ கம்பம் ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? மொம்பையில் பிரிட்டீஷ் அரசாங்கம் கட்டிய, ‘இந்தியத் தலை வாசல்’ [Gateway of India] ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? சையத் அகமத் புகாரி உமா பாரதியைத் தாக்கி, ‘பாப்ரி மசூதியை ஓர் அடிமைச் சின்னம் என்பது இஸ்லாமியரை அவமானப் படுத்துவதாகும்! இஸ்லாம் மதத்தை எடுத்துக் காட்டும், ஓர் தனித்துவச் சின்னம் அது’ என்று சீறினார். இராமர் பிறந்த பூமிக்காக தீராத இந்து முஸ்லீம் சண்டைகள், கொலைகள், தீயெரிப்புகள் !
மீண்டும் வட நாட்டில் 2002 ஆம் ஆண்டில் ‘ராம் ஆலயப் போர்’ தலை தூக்கி யிருக்கிறது! இந்து முஸ்லீம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக், கொலை செய்து பலிவாங்கிக் கொண்டனர்! இறந்தவர்களில் முஸ்லீம் மக்கள் எண்ணிக்கை மிக அதிகம்! பெரும்பான்மையான அடிப்படை இந்து மத வெறியர்கள், தீங்கிழைக்காத சிறுபான்மை முஸ்லீம் மக்கள் இல்லங்களைத் தீயிட்டு, அவர்களை உயிரோடு கொளுத்தி யிருக்கிறார்கள்! காந்தி எந்த மதச் சண்டைகள் நிகழக் கூடா தென்று தன் ஆருயிரைக் கொடுத்தாரோ, அந்த மதச் சண்டைகள் பாரதத்தில் இன்னும் ஓயவில்லை ! இனியும் ஓயப் போவதில்லை!
கிறிஸ்துவ ஆலயங்களைத் தீயிட்டுக் கொளுத்திப் பாதிரியாரைக் கொன்ற போதோ, பாப்ரி மசூதியை இடித்துத் தரைமட்ட மாக்கிய போதோ, சங்கராச்சாரியார் போன்ற இந்து மதாதிபதிகள், இந்து மத வெறியர்களைக் கண்டிக்கவும் இல்லை! தண்டிக்கவும் இல்லை! ராம ராஜியத்தை ஆதரித்த மகாத்மா இருந்திருந்தால், ராம பூமிக்காக மசூதி தகர்க்கப் படுவதைத் தடுத்து நிறுத்திக் காப்பாற்றி யிருப்பார்! கிறிஸ்துவர் புனிதக் கோயில் எரிப்புகளையும், அருட் பாதிரியார் கொலைகளையும் தடுக்க அறப்போர் நடத்தி யிருப்பார்! ஆனால் காந்தி சீடர்கள் என்று சொல்லிக் கொள்பவரும், மதச் சார்பற்ற பாரத அரசின் ஆட்சியாளர்களும் கோரக் கொலைகளை, தீயெரிப்புகளை இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அநாகரீகம், அவமானம், அநியாயம், அறிவீனம்!
வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்!
மகாத்மா காந்தி இன்னும் மாண்டு போகவில்லை! அவர் ஓர் உலக மனிதாபிமானி! ‘மகாத்மா’ என்னும் பட்டத்தை காந்திக்கு அளித்தவர், கவியோகி இரவீந்திரநாத் தாகூர். ‘உலக சரித்திரத்தில் மகாத்மா காந்தி புத்தர், ஏசுக் கிறிஸ்து ஆகியோருக்கு இணையான இடத்தைப் பெறுவார்’, என்று இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மெளண்ட் பாட்டன் கூறி யிருக்கிறார். ரஷ்ய மேதை லியோ டால்ஸ்டாய், விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் காந்தியின் ஆயுதமற்ற விடுதலைப் போராட்டத்தைப் பாராட்டியுள்ளார். ஆஃப்ரிக்க அமெரிக்கர் விடுதலைப் பிதா, மார்டின் லூதர் கிங், காந்தியின் அகிம்சாப் போராட்ட முறையைப் பின்பற்றினார். ‘வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்’ என்று பாரதியார் பாடியுள்ளது போல், மகாத்மா காந்தி பிற நாடுகளில் ‘மாதிரி மனிதராய்’ மாந்தருக்கு வழிகாட்டியாய் மறைமுகமாகப் பணி செய்து கொண்டிருக்கிறார்! ஆனால் இந்தியாவை விட்டு, அவரது ஆத்மா என்றோ போய் விட்டது ! பாழ்பட்டுப் பரிதபிக்கும் பாரத தேசம் தன்னை, இனி வாழ்விப்பது எப்படி என்று விண்ணுலகிலிருந்து கவலைபட்டுக் கொண்டிருக்கிறார், மகாத்மா காந்தி!
Picture from Gandhi Movie with Ben Kingsley as Gandhi
+++++++++++++++++
Mohandas Gandhi
Timeline
October 2, 1869: Birth of Mohandas Karamchand Gandhi
1883: Gandhi and Kasturbai are married.
1885: Death of Karamchand Gandhi, Gandhi’s father
September 4, 1888: Gandhi leaves for England to study law.
June 10, 1891: Gandhi passes the bar exam in England.
1891-1893: Gandhi fails as a lawyer in India.
April 1893: Gandhi accepts commission to spend a year in South Africa advising on a lawsuit.
Spring 1894: Gandhi elects to stay on South Africa, and founds the Natal Indian Congress.
Spring 1896: Gandhi returns to India to collect his wife and children.
December 1896: Gandhi returns to South Africa with his family.
October 1899: Outbreak of Boer War (1899-1901) in South Africa. Gandhi organizes an ambulance corps for the British.
1901: Gandhi returns to India to attend the Indian National Congress. G.K. Gokhale introduces him to nationalist leaders.
1901-1906: Gandhi struggles toward Brahmacharya, or celibacy, finally ending his sexual activity in 1906.
1904: Nationalists found the magazine the Indian Opinion, and soon print it on Gandhi’s farm, the “Phoenix Settlement.”
July 31, 1907: The Boer Republic Transvaal, now under the control of the British, attempts to register all Indians as members; Gandhi and others refuse to register. Their resistance efforts mark the first use of nonviolent non-cooperation by the Indian minority in South Africa, soon calledsatyagraha, or “soul-force.”
January 11, 1908: Gandhi is arrested and sentenced to two months in prison.
October 10, 1908: Gandhi is arrested again, spends a month in jail.
1909: Gandhi travels to London, pushing for rights of South African Indians. The Transvaal registration law is repealed.
November 13, 1913: Indians in Natal and Transvaal, under Gandhi’s leadership, march peacefully in protest of a racist poll tax and marriage laws. The marches continue through the winter.
June 30, 1914: Gandhi and Smuts, the Prime Minister of the Transvaal, reach an agreement, ending the protests.
July 18, 1914: Gandhi sails to England.
August 1914: Gandhi arrives in England, just at the outbreak of World War I(1914-1918).
January 9, 1915: Gandhi returns home to India, and receives a hero’s welcome.
May 25, 1915: Gandhi and his followers found Satyagraha ashram, the religiously-oriented communal farm where Gandhi, his family, and his followers will live.
April 6, 1919: Nationalists hold a hartal, or day of fasting and prayer, in protest of the Rowlatt Act, which drastically curtails civil liberties in India.
April 13, 1919: Amritsar Massacre; Under General Dyer, British troops slaughter Indian protesters.
August 1, 1920: Gandhi calls for a period of non-cooperation across India.
March 10, 1922: Gandhi is arrested for sedition.
March 1922-January 1924: Gandhi remains in prison.
1924-1928: Gandhi avoids politics, focusing his writings on the improvement of India.
1925: Despite his long absence from politics, Gandhi becomes President of the Indian National Congress.
February-August 1928: Residents in the district of Bardoli protest high rents using methods of non-cooperation inspired by Gandhi.
January 26, 1930: Gandhi publishes the Declaration of Independence of India.
March 2, 1931: Gandhi warns the Viceroy of his intention to break the Salt Laws.
March 12-April 6, 1931: Gandhi leads his Salt March to the sea.
May 5, 1931: Gandhi is arrested for violating the Salt Laws; non-cooperation movements break out across India.
January 1931: British government yields to protests, releases all prisoners, invites a Congress representative to Britain for a Round Table Conference (the Congress asks Gandhi to be this representative).
Autumn 1931: Gandhi participates in the Round Table Conference in Britain.
December 28, 1931: Gandhi returns to India.
January 4, 1932: Gandhi is arrested for sedition, and held without a trial.
September 20-25, 1932: Gandhi fasts in prison to protest the treatment of untouchables.
1934-38: Gandhi avoids politics, travels in rural India.
1935: Government of India Act passes British Parliament and is implemented in India; it is the first movement toward independence.
September 1939: World War II begins, lasting until 1945.
March 22, 1942: Sir Stafford Cripps arrives in India, presenting to the Indian National Congress a proposal for Dominion status (autonomy within the British Commonwealth) after the War.
August 8, 1942: The Indian National Congress rejects the Cripps proposal, and declares it will grant its support for the British war effort only in return for independence.
August 1942: Congress leaders are arrested; Gandhi is imprisoned in the Aga Khan’s palace.
February 10 to March 2, 1943: Gandhi fasts while imprisoned, to protest British rule.
February 22, 1944: Death of Kasturbai
May 6, 1944: Gandhi is released from the Aga Khan’s palace.
Summer 1944: Gandhi visits Muhammed Ali Jinnah in Bombay, but is unable to work out an agreement that will keep India whole.
May 16, 1946: British Cabinet Mission publishes proposal for an Indian state, without partition; Jinnah and the Muslim League reject the proposal.
March 1947: Lord Mountbatten arrives in India and hammers out agreement for independence and partition.
August 15, 1947: Indian independence becomes official, as does the partition into two countries, India and Pakistan.
August-December 1948: India dissolves into chaos and killings, as Hindus and Muslims flee for the borders of India and Pakistan.
January 30, 1948: Gandhi is assassinated by Nathuram Vinayuk Godse, a Hindu nationalist.
அழகுத் தெய்வமாகக் காட்டப் படும் பார்வதி, இந்துமதப் பெரும் கடவுள் சிவனின் மனைவி, யானைத் தலையினையை உடைய கணேசர் மற்றும் வீரமிகு போர்க் கடவுள் கந்தனின் அன்னையும் ஆவார். கருணை வடிவான தெய்வமான பார்வதியே உக்கிரம் நிறைந்த துர்காவாகவும், காளியாகவும் காட்சி கொடுப்பார். நான்கு கரங்களுடன் வழக்கமான பாணியில் அமைக்கப்பட்டுள்ள பார்வதி சிலையின் கையில், பெரும்பாலும் இடம் பெறும் வடிவங்களில் இரண்டு; ஒன்று அழகையும் தெய்வீகத் தன்மையையும் காட்டும் தாமரை மலர், மற்றொன்று இறையாண்மையை உணர்த்தி அருள் வழங்கும் ருத்திராட்ச மாலை. பெரிய கண்களையும், நிறைந்த வடிவுடைய மார்பையும், குறுகலாகத் துவங்கி பிறகு அகண்டு கால்களுடன் இணையும் இடையையும் கொண்டு, பண்டைய இந்தியாவின் பெண்களின் அழகு எனக்குறிப்பிடப்படும் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு பார்வதியின் சிலை அமைக்கப் பட்டுள்ளது.
அருங்காட்சியக அடையாள எண்: B61S4+L2012.0801.036
இந்து தெய்வம் பார்வதி , தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 13 – 15 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது. அருங்காட்சியக அடையாள எண்: B61S4+L2012.0801.036
துர்கை:
அருங்காட்சியக அடையாள எண்: B63S7+L2012.0801.025
துர்கை என்னும் பெண் தெய்வம், இந்துமத ஆண் தெய்வங்களின் சக்தி வாய்ந்த ஆயுதங்களை ஏந்தி, தேவர்களுக்குத் துன்பம் விளைவித்த எருமை வடிவ அரக்கனை (மகிஷாசுரன்) கொன்றழித்தவர். இங்கு காட்டப்பட்டுள்ள சிலையில் துர்கை தனது வாகனமான சிங்கம் அருகிருக்க, தப்பிக்க முயலும் எருமை அரக்கனின் முகத்தை ஒரு கையினால் அழுத்தி, மறு கையில் உள்ள சூலாயுதத்தை அரக்கனின் முதுகில் செலுத்தித் தாக்குவதாகக் காட்டப் பட்டுள்ளது. துர்கையின் குணம் எளிதில் மதிப்பிட முடியாதது. கோபத்துடன், இணையில்லா ஆற்றலுள்ள வீரப் பெண்ணாக துர்கா சித்தரிக்கப் பட்டாலும், முகபாவம் அமைதியும் சாந்தம் நிறைந்ததாகவும் வடிவமைக்கப் பட்டது இதனை விளக்கும். துர்கை அரக்கனைக் கொன்று அடைந்த வெற்றி ஒவ்வொரு ஆண்டும் அறுபது நாட்களுக்கு விழாவாக இன்றும் கொண்டாடப் பட்டு வருகிறது.
அருங்காட்சியக அடையாள எண்: B63S7+L2012.0801.025
மகிஷாசுர வதம் செய்யும் இந்து தெய்வம் துர்க்கை, இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தின் மதுரா பகுதியினைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 9 – 10 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது. அருங்காட்சியக அடையாள எண்: B63S7+L2012.0801.025
திரிபுரசுந்தரி:
அருங்காட்சியக அடையாள எண்: B61S17+L2012.0801.028
திரிபுரசுந்தரி என்று வழங்கப்படும் அழகியப் பெண் தெய்வம் இந்துமதப் புராணத்தில் செல்வமாகக் குறிப்பிடப் படும் உடல், ஆன்மா, முக்தி நிலை ஆகிய மூன்றிற்கும் உரிய தெய்வம். புராண இலக்கியங்களில் பார்வதியின் சக்தி வாய்ந்த பத்து வடிவங்களில் ஒரு வடிவமாக திரிபுரசுந்தரி குறிக்கப் படுகிறார். அத்துடன் திரிபுரசுந்தரி, காளியின் உறுதியும், துர்கையின் அழகும் அருளும் ஒருங்கிணைந்த குணத்தை உடைய தெய்வமாகச் சித்தரிக்கப் படுகிறார். இப்பண்புகளைக் குறிக்கும் வகையில் ஒரு கையில் பாசக் கயிற்றையும், மறு கையில் யானையை அடக்கும் அங்குசத்தையும் ஏந்தி, அணிகலன்கள் பல அணிந்து தாமரை மலராசனத்தில் அமர்ந்துள்ளதாகக் காட்டப் பட்டுள்ளது.
அருங்காட்சியக அடையாள எண்: B61S17+L2012.0801.028
இந்து தெய்வம் திரிபுரசுந்தரி , தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 15 – 17 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது. அருங்காட்சியக அடையாள எண்: B61S17+L2012.0801.028
காளி/சாமுண்டி:
அருங்காட்சியக அடையாள எண்: B61S15+L2012.0801.026
அச்சுறுத்தும் வகையில் பல கரங்களுடன் காட்சி தரும் இந்தப் பெண் தெய்வத்தின் கரம் ஒன்றில் மண்டை ஓட்டாலனப் பாத்திரமுள்ளது, சிதைந்துவிட்ட மற்ற கரங்களில் கொலைத்தொழில் செய்யத் தேவையான பிற ஆயுதங்களும் இருந்திருக்கக் கூடும். இரு ஆண் அரக்கர்கள் (சண்ட முண்ட அரக்கர்கள்) வீரப் பெண் தெய்வம் துர்கையை அழிக்க அனுப்பப் பட்டார்கள். அவர்களைக் கண்டு “கோபம் கொண்ட அவள் முகம் மையைப் போன்ற கருமை கொண்டது. அவளது நெரிந்த புருவங்களில் இருந்து பயங்கரமான முகத்தை உடைய காளி தோன்றினாள். அவள் கபால முனை கொண்ட தண்டாயுதத்துடன், புலித்தோலை ஆடையாக அணிந்து, வறண்ட தோலுடனும், எட்டுத்திசையும் அவளது கர்ஜனயால் அதிர, திறந்த வாயின் வழி துருத்திய நாக்குடன் கோரத் தோற்றத்தினைக் கொண்டிருந்தாள்.”**
** மேற்கோளாகக் கொடுக்கப் பட்டிருப்பது 1500 அண்டுகள் பழமையான “தேவி மகாத்மியம்” என்ற இந்துமத இலக்கியத்தின் சாரம். இவ்வரிகள், வித்யா தேஹிஜியா எழுதிய, “தேவி: சிறந்த பெண் தெய்வம்” (Devi:the great goddess) என்ற 1999 ஆண்டு வெளியான நூலில் இடம் பெற்ற தாமஸ் பி. கோபர்ன் அவர்களின் மொழி பெயர்ப்பு வரிகள்.
அருங்காட்சியக அடையாள எண்: B61S15+L2012.0801.026
இந்து தெய்வம் சாமுண்டி, மத்திய இந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 10 – 11 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது. அருங்காட்சியக அடையாள எண்: B61S15+L2012.0801.026
(தொடரும்)
[படங்களின் குறிப்பு, அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் குறிப்பின் மொழிபெயர்ப்பு]
Source:
Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum
San Francisco Asian Art Museum
August 25, 2012–February 25, 2013
பள்ளிப் பருவத்தில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் குழந்தை எழுத்தாளராக அறிமுகம் ஆனவர்.. தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி.ஆகியோரால் ஊக்குவிக்கப் பட்டதன் பின், 1968 இல் கலப்புமணம் பற்றிய சர்ச்சைக்குரிய குறுநாவல் வாயிலாக ஆனந்தவிகடனில் பெரியோர்க்கான எழுத்தாளராக அறிமுகம் கிடைத்தது.
எழுதியுள்ளவை : 600க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 20 க்கும் மேற்பட்ட புதினங்கள், 60 க்கும் மேற்பட்ட குறும் புதினங்கள் , 60 க்கும் மேற்பட்ட சமுதாயப் பிரச்சனைகள் சார்ந்த கட்டுரைகள், 3 நெடிய நாடகங்கள், சில வசன கவிதைகள், நகைச்சுவை துணுக்கு எழுத்தாளராகவும் ஆனந்த விகடனில் 1987 இல் அறிமுகமாகப் பெற்றவர்.
பெற்ற பரிசுகள்: தினமணி கதிர் நாவல் போட்டி, கல்கி பொன்விழா வரலாற்று நாவல் போட்டி, லிலி தேவசிகாமணி அறக்கட்டளையின் சிறுகதைத் தொகுதிக்கான பரிசு. அமுதசுரபி நாவல் போட்டி, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருது, திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் சமுதாய நாவல் பரிசு, தமிழக அரசின் மிகச் சிறந்த நாவலுக்கான பரிசு ஆகியன். ‘நம் நாடு’ எனும் சிறுவர் நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் யுக்ரெயின் மொழியாக்கம் 1987 இல் மாஸ்கோவில் நடந்த இந்தியக் கலைவிழாவில் வெளியிடப்பெற்றது.
ஆங்கிலத்தில் 1975 இல் ஃ பெமினாவின் வாயிலாக அறிமுகம். 25 சிறுகதைகள், ஒரு மினி நாவல். ஆங்கில மரபுக் கவிதை இராமாயணம் (1789 பாடல்கள்) , திருக்குறள், (Voice of Valluvar) காந்தியடிகளின் வாழ்க்கை நிகழ்வுகள் (Gandhi Episodes), நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள் (Pearls from the Prophet), சத்தியசாயி பாபாவின் வரலாறு (The Living God at Puttaparthi ) ஆகியவை டாக்டர் கிருஷ்ண ஸ்ரீநிவாஸ் நடத்தும் POET இல் தொடர்களாக வந்துள்ளன.
விம்ன்ஸ் எரா , தி ஹிந்து, துக்ளக், மற்றும் இணையத்தில் திண்ணையிலும் தனது இன்றைய எண்ணங்களை எழுதிக் கொண்டு வருகிறார்கள்.
சமீபத்தில் “செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி, மன்னார்குடி” இந்த சமூக அமைப்பு இவரை “2012 க்கான சிறந்த பன்முக எழுத்தாளராகத் தேர்ந்தெடுத்து அதற்கான பரிசும் , விருதும் , கேடயமும் அளித்து கெளரவித்துப் பெருமை சேர்த்துக் கொண்டது குறிப்பிடத் தக்கது.
2. அதிர்ச்சி …!
குறுநாவல் எழுதியவர்: ஜோதிர்லதா கிரிஜா.
வெளியான வருடம்: 1970.
இரண்டாவது மலராக நறுமணம் வீசும் இந்த “அதிர்ச்சி ” என்கிற இந்த குறிஞ்சி மலரைப் பறிக்கிறேன்..
கதை குறிஞ்சிப்பூவாக மலர்ந்து கிட்டத்தட்ட 42 வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் இன்னும் சிறுகதை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை நிரந்தரமாகப் பிடித்துக் கொண்டு படித்தவர் மனதை இறுக்கிப் பற்றிக் கொண்டிருக்கிறது.
மலரின் கூம்பு இதழ்களைப் போலவே இதில் பாத்திரப் படைப்புகளும் கச்சிதமாக கூம்பாக உள்வாங்கி உணர்வுகளைக் கொத்துக் கொத்தாக மென்மையாக மனதைக் கவர்கிறது.
பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி மலரையொத்த இந்த குறுநாவலைப் படிக்கும் ஒவ்வொரு உள்ளமும் “இது போன்ற ஒரு கதையை இது வரை படித்ததில்லை….இனியும் யாரும் இவ்வளவு அழகாக எழுதவும் மாட்டார்” என்று எண்ணாமல் இருக்க முடியாது. படிக்கும் போதே கதை பேசும் ‘அதிர்ச்சி’ அனுபவம் உண்டாவதும் உறுதி.
இத்தனை ‘அதிர்ச்சி’ தரும் கதையில் அப்படி என்ன தான் இருக்கிறது..? குறிஞ்சி மலரை மலை சார்ந்த இடங்களில் உயரமான இடங்களில் மட்டுமே காணக் கிடைப்பது போல கதையைப் படிக்கும் போதே மலை ஏற்றம் தரும் உணர்வுடன் கொண்டு செல்வது புதுமை.
கதையின் சாரம்:
தனது மனைவியை இழந்தவர் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் தனக்கு இரண்டாவதாக கல்யாணம் செய்து கொண்டு மேலும் அரை டஜன் குழந்தைகளைப் பெற்று, இருக்கும் இயலாமை , ஏழ்மை இரண்டும் தீராமல் போக, வயது வந்த பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்விக்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லாது இருக்கும் ஒரு தகப்பன்.
ஏழ்மை தனக்குத் தந்த வரமான வாழ்க்கையாக இரண்டாம் தாரமாக வாக்கப்பட்ட அவரின் மனைவி தான் வெறும் பிள்ளைப் பெறும் இயந்திரம் மட்டுமே எனபதைப் போல பத்து வருடத்தில் ஆறு குழந்தைகளைப் படைத்து படைப்பாளியாகப் பெருமை கொள்ளும் விதமாக ‘சித்தி’ யின் பாத்திரப் படைப்பு.
தாயை இழந்த மூத்த மகள் தன் தந்தை செய்த இந்த இரண்டாம் கல்யாணத்தை ஏற்க மனசில்லாமல்,மனதோடு புழுங்கி இப்படி செய்து விட்டாரே..என்று வேதனை பட்டு, ஆத்திரப் பட்டும், அதனாலேயே தனக்கு அன்னை முறையாக வந்த ‘சித்தி ‘ யைக் கூட மனசளவில் ஏற்காமல் தாயை நினைத்து வருந்துவது.
குடும்பத்தின் கஷ்டத்தை மனதில் கொண்டு அக்கா, தங்கை இருவருமே மாலையில் பஜ்ஜியும், போண்டாவும் செய்து தெருத் தெருவாக நடந்து விற்பனை செய்ய, அந்த வியாபார நேரத்தில் நடக்கும் வியாபாரம் செய்கிறேன் என்று வீடுகளில் ஆண்கள் செய்யும் பல வித அத்துமீறல்கள்.., அவர்களின் வக்கிரங்கள் , ஒரு ஏழைப் பெண் தனது வாழ்வாதாரத்துக்கு உழைத்து சம்பாதிக்க முனைந்தாலும் அதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டு, அவர்களின் நைந்து போன உள்ளத்தைப் பார்க்காமல்…உடலைப் பார்த்து தனது வக்கிரங்களுக்கு வடிகால் தேட முயலும் போது…மேலும் உள்ளம் புண்ணாக…அங்கங்கு வியாபாரம் செய்வதையே நிறுத்தி விடுகிறார்கள்.இதற்கெல்லாம் விடிவே கிடையாதா? என்றும் மனசு ஏங்க வைக்கிறது.
அக்காவுக்கு வயதாகியும் இன்னும் திருமணம் நடக்காமல் இருக்கிறதே என்று மனசுக்குள் கவலைப் பட்டு…அதைத் தனது அக்காவிடமே எடுத்துச் சொல்லி…நானா இருந்திருந்தால் ‘ஓடிப் போயிருப்பேண்டி அக்கா….ஓடிப் போயிருப்பேன்…’ என்று தனது ஆதங்கத்தை வெளிப் படுத்துகிறார் தங்கை ஜானகி. தங்களது பெருகிய குடும்பத்தின் ஏழ்மையை விரட்ட வீடு வீடாகச் சென்று பஜ்ஜியும் , போண்டாவும் வியாபாரம் செய்து பணம் கொண்டு வருவதனால் தான் தனது தந்தை நம் இருவரையும் திருமணம் செய்து வைக்காமல் வீட்டோடு வைத்துக் கொண்டிருக்கிறார். இதை நானே கேட்கிறேன்…என்று நேரம் பார்த்து தன் தந்தையை கேட்கும் அனல் பறக்கும் வார்த்தைகளைக் கேட்டு அக்காவே தங்கையைத் திட்டுகிறாள்.
தனது இயலாமையை உணர்ந்தாலும் இப்போது தன்னால் ஏதும் செய்ய இயலாது , மகளின் திருமணத்திற்கு வரதட்சிணை ஏதும் தந்து நடத்தி வைக்க இயலாது என்று தெரிவித்ததும்…இப்பேர்பட்ட குடும்பத்தை விட்டு ஓடினாலும் பரவாயில்லை என்னும் தனது உணர்வுக்கு சரியான முடிவாக அவள் மனதுக்குள் ஏற்றுக் கொள்கிறாள்.
இந்நிலையில், அக்காவின் வாடிக்கையாக வியாபாரம் செய்யும் பெட்டிக்கடைக்காரர் நடேசன் அவளைக் காதலிப்பதாகவும், தான் முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் உள்ளூரில் மணந்து கொண்டு வாழ இயலாது என்பதால் எங்காவது வெளியூரில் சென்று வாழலாம்…அதற்கான சம்மதம் கேட்டுக் கடிதம் எழுதித் தரவும். அதை வாங்கிப் படித்து மனம் ஏற்றாலும் , பரிபூரணமாக நடேசனைத் தானும் விரும்பினாலும், குடும்பத்தில் மூத்தவளாக இருந்து கொண்டு, தனக்கும் மனசுக்குப் பிடித்திருக்கிறது என்னும் ஒரே காரணத்தில் சுயநலமாக எண்ணி தான் ‘நடேசனோடு ஓடிப் போனால்’ தன் தங்கையின் திருமணம் தடைபட்டு விடுமே என்ற ஒரே நல்லெண்ணத்தில் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு அவரைத் நிராகரித்து, தவிர்த்து விடுகிறாள்.
இருந்தும் சில நாட்கள் கழித்து நடேசனைப் பார்க்க வேண்டும் என்று மேலோங்கிய எண்ணத்தினால் அந்தப் பெட்டிக் கடைக்குச் செல்லும் போது தான், அவர் அந்தக் கடையை வேறோருவருக்கு விற்று விட்டு சென்ற விஷயம். மனம் ஓடிந்தவளாக வீடு திரும்பும் அக்கா இனி அவனைப் பார்க்கும் வாய்ப்பு தனக்கு இல்லை என்பதைப் புரிந்து கொண்டு வருந்துகிறாள். அதுவும் ஒரு விதத்தில் நல்லது தான் என்று தன்னைத் தேற்றி கொண்டு வளைய வரும் வேளையில் தான் அவளது தங்கை ஜானகி தான் இரண்டு வருஷமாக அந்த ஊரின் மெயின் ரோட்டில் ஹோட்டல் வைத்து நடத்தும் கேசவன் நாயரின் தம்பி மாதவன் நாயரைத் தான் என்பவரை மனதார விரும்புவதாகவும், அவர்கள் வீட்டில் திருமணத்துக்கு அவசரப் படுத்துவதாலும், அவர்கள் குடும்பத்தோடு கேரளாவுக்கு சென்று விடுவதால் தானும் அவர்களோடு சேர்ந்து சென்று விடலாம் என்னும் எண்ணத்தில் இருப்பதாகவும் சொல்கிறாள்.
இரண்டு வருஷமாகச் சொல்லாமல் மூடி வைத்ததால், தங்கையின் எதிர்காலம் கருதி தனது காதலைக் கருக்கி விட்டேனே என்று மனதுக்குள் அழுதவளாக தனது அக்காவிடம் மட்டும் சொல்லி ஆசி வாங்கிச் செல்ல வரும் தங்கையின் தோளில் முகம் புதைத்து மனத்தின் பாரம் இறங்க அடக்க முடியாமல் அழுகிறாள் அக்கா.
அதில், கூடப் பிறந்த தங்கையைப் பிரிகிறோமே என்ற வருத்தத்தைத் தாண்டி தான் ஏமாந்து விட்டேனே என்ற ஆற்றாமையும் சேர்ந்து கொண்டது அவளது தங்கைக்குத் தெரியாது .
பரிமளாவுக்கு ஏற்பட்ட ‘அதிர்ச்சி’யை மிகவும் அழகாக எடுத்துக் கூறி தலைப்போடு கூடி கதை முடிகிறது.
இனி , கொத்தாக குறிஞ்சி மலர் :
இந்தக் கதையில் ஒரு சராசரி மனுஷியின் அத்தனை குணங்களும் பிரதி பலிக்கும் வண்ணம்
இருக்கும் பாத்திரப் படைப்புகளைச் சித்தரித்திருப்பது யதார்த்தம். கதை முடிந்த பின்பும் கூட மனதைத் தாக்கி மௌனப் படுத்திவிடும் ‘அதிர்ச்சி’.
இதோ.. மொட்டாக :
விளக்கைச் சுற்றி சுற்றிப் பறந்து கொண்டிருந்த விட்டில் பூச்சி கடைசியில் அதற்குள் விழுந்து விளக்கையும் அணைத்து தானும் அதிலேயே விழுந்து செத்துப் போய் கூடத்தை இருள் மயமாக்கியது. இந்த ஒரு நிகழ்ச்சி கூட தத்ரூபமாக எழுத்திலேயே ஒளியைக் காண்பித்தது .
கதையின் ஆரம்பம், இருட்டை ஒளிமயமாக்க வேண்டி தீப்பெட்டி தேடும் நிலையில் கதையின் நாயகி வெளியே வருகிறாள். அந்த நேரத்தில் அந்த இருளில் தீப்பெட்டி தேடும் போதே…நமக்கு தன தங்கை, சித்தி, அப்பா..இறந்து போன தனது அம்மா என்று ஒவ்வொருவராக அறிமுகம் செய்து வைக்கும் விதம் அருமை.
விளக்கேற்றி அந்த இடத்தில் ஒளி வரும்போது, நம்மிடையே அந்தப் பாத்திரத்தின் பரிமளம் புரிபடுகிறது.
மெல்ல இதழ் விரிகிறது :
வெறுப்பு:
தன்னைப் பெற்ற தந்தையாகவே இருந்தாலும், “அந்த விட்டில் பூச்சிக்கும் நாற்பது வயதுக்கு மேல் இரண்டாம் தடவையாகத் திருமணம் செய்து கொண்டு வேண்டாத குடும்பச் சுமையை இழுத்து விட்டுக் கொண்டிருக்கும் இந்த அசட்டு அப்பாவுக்குமிடையே எந்த வகையான வேறுபாடும் இருப்பதாகத் தெரியவில்லை எனக்கு ” அந்தப் பூச்சி உயிரையே விட்டுத் தொலைத்து விட்டது. இந்த மனிதப் பூச்சியோ நானும் உயிர் வாழ்ந்து கொண்டு இன்னும் சில உயிர்களை பிறப்பித்துக் கொண்டு நானும் வாழ்கிறேன் என்று அரை உயிராய் வாழ்ந்து கொண்டிருக்கிறது…” என்று எண்ணுமிடத்தில் வெறுப்பை உமிழ்கிறது.
அருவருப்பு:
படுக்கையில் விழுந்த எனக்குத் தூக்கம் வரமாட்டேன் என்றது. சித்திக்குப் பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்த அவளுடைய ஐந்து குழந்தைகளையும் ஆறாவதாக அவள் வயிற்றுள் வளர்ந்து கொண்டிருந்த உயிரையும் நினைத்துப் பார்த்தபோது எனக்கு அருவருப்பாய் இருந்தது. ஆமாம்..என் தம்பி , தங்கைகள் என்கிற நினைப்பைக் காட்டிலும் சித்தியின் குழந்தைகள் என்கிற நினைப்பே மிகுதியாக நெஞ்சில் எழுகிறது.அப்படி நினைப்பது தப்பாக இருக்கலாம். ஆனால் அப்படித்தான் என்னால் நினைக்க முடிகிறது. இந்த வரிகள் மிதமிஞ்சிய ஒரு அருவருப்பை தன் உறவுகள் மீதே பொழிகிறது.
நியாயம் :
“ஆழ்ந்து சிந்திக்கும் போது சித்தியையோ அவள் பெற்றிருக்கிற குழந்தைகளையோ வெறுப்பது பாவம் என்றும் அம்மா செத்துப் போய் ஒரே வருடத்துக்குள் சித்தியை அழைத்துக் கொண்டு வந்தவரும் இத்தனை உயிர்களுக்கு படைப்பாளியுமான அப்பாவைத் தான் நியாயமாகப் பார்க்கப் போனால் வெறுக்க வேண்டும் என்று தோன்றுகிறது”. இந்த நியாயமும் பேசும் கதை.
ஏக்கம்:
“அம்மா….அம்மா தான். இன்றைய தேதியில் அம்மா உயிருடன் இருந்தால் இந்த வீடு இப்படி இருக்குமா என்பதைப் பற்றிய கற்பனையில் ஈடுபடாமல் இருக்க முடியவில்லை. அம்மா இருந்த வரையில் ஜானகியும் நானும் அவளது அன்பு மழையில் நனைந்து கொண்டு மகிழ்ச்சியும் சிரிப்புமாக வாழ்ந்து கொண்டிருந்தோம். வறுமை எங்களைச் சிறிதும் பாதிக்கவில்லை”. இந்த வரிகள் அம்மாவின் மேல் இருக்கும் ஏக்கத்தை பிரதிபலிக்கிறது.
பரிதாபம்:
குழந்தை வேண்டும் என்று ஒருவன் ஆசைப்பட்டு அது பிறக்காமல் இருப்பது வேண்டுமானால் கடவுளின் செயலாக இருக்கலாம். வருஷா வருஷம் பெற்றுகொள்வது கூட ‘அவன்’ செயலா? அது ‘அவன்’ செயலோ,இல்லாவிட்டால் அவன் மேல் பழிசுமத்தும் அப்பாவின் செயலோ. அதன் விளைவு ‘அவள்’ அல்லவோ அனுபவிக்க வேண்டியிருக்கிறது..? என்னதான் இருந்தாலும் வருஷா வருஷம் வயிற்றைத் தூகிக் கொண்டு சித்தி பெற்றுப் பிழைப்பதை நினைத்துப் பார்த்தால் பாவமாகத் தான் இருக்கிறது. ஒரு பெண்ணின் நிலை கண்டு இன்னொரு பெண் பரிதாபப் படும் வரிகள்.
அவமானம்:
“தங்க விக்கிரகம் மாதிரி மூக்கும் முழியுமாக ஒரு பெண்டாட்டி இருக்கையில் குறுகுறுவென்று என்னை என்ன அப்படிப் பார்க்க வேண்டிக் கிடக்கிறது? என் சாண் உடம்பும் ஒரு சாணாய் குறுகிப் போய் விடும் எனக்கு. உச்சந்தலையில் தொடங்கி உள்ளங்கால் வரைக்கும் அவன் உற்றுப் பார்க்கும்போது பூமி பிளந்து அப்படியே என்னை விழுங்கி விடாதா என்று இருக்கும். சில பெண்கள் வேண்டுமானால் ஒருவேளை நம்மை ஒருவன் உற்றுப் பார்க்கிறாப்போல் அழகாய் இருக்கிறோம் என்பதில் கர்வப்பட்டுக் கொள்ளக்கூடும். ஆனால் எனக்கென்னவோ அந்த மாதிரி சமயங்களில் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வேண்டும்போல் அவமானமாக இருக்கும்”. ஒரு இளம் பெண்ணின் இயல்பான எண்ணம் இது. ஏழ்மை ஏற்படுத்தும் உணர்வில் இதுவும் சேரும்.
கவலை:
“மொத்தத்தில் பெரும்பாலோருடைய பார்வையே நன்றாகயில்லை. எல்லாம் மொய்க்கிற பார்வைகள். துகிலுரிக்கிற பார்வைகள், கற்பழிக்கிற பார்வைகள், இப்படித்தான். தங்கை ஜானகிக்கு இம்மாதிரியான தொந்தரவுகள் ஏற்பட்டனவா என்பது தெரியவில்லை”
“ஜானகிக்கு இந்த மாதிரி தொந்தரவெல்லாம் வராமே இருக்கணுமே பகவானே” என்று அடிக்கடி வேண்டிக் கொள்வேன்”. இதில் ஒரு தாயின் கவலை தெரியும்.
அலுப்பும் சலிப்பும் :
“ஐயே…போதுமே! என் சந்தோஷமும் நானும்”
கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு கவலைப் படுவதற்கென்றே கொஞ்ச நேரம் கூட ஒதுக்க முடியாத அளவுக்கு வேலைகள் உடம்பை வெட்டி முறிக்கிற நிலை கூட நாட்கள் கிடுகிடுவென்று ஓடுவதற்குக் காரணமில்லையா? – இதில் தெரியும்.
ஆச்சரியம்:
ஆச்சு. அடுத்த ஆண்டு பிறக்கும் போது என் இருபத்தாறாம் வயசும் பிறந்து விடும். “என்னது? எனக்கு இருபத்தஞ்சு வயசா முடியப் போறது? அடேயப்பா! இன்னும் அஞ்சு வருஷம் ஓடிடுத்துன்னா முப்பது வயசுன்னா ஆயிடும்?”
கழிவிரக்கம்:
“இந்த இருபத்தைந்து வருட வாழ்க்கையில் ‘என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா’ என்று எவனும் என்னிடம் கேட்டது கிடையாது. ‘உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படறேன்’ என்று எவனும் சொன்னதுமில்லை”. இந்த வரிகள் உள்ளத்தின் உணர்வை அப்படியே வெளிப் படுத்துகிறது.
நிஜம்:
பெண்கள் வீட்டுக்குள் வைத்துப் போற்றப்பட வேண்டியர்கள் என்று நம் பெரியவர்கள் வைத்திருப்பது பெண்களினுடயவும் இந்தச் சமூகத்தினுடையவும் ஒட்டுமொத்தமான நலனைக் கருதிதான் என்பதை என் அனுபவங்கள் அடிக்கடி எனக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன.
ஆத்திரம்:
“டூப் அடிக்கிறதைப் பார்த்தியோல்லியோ – சம்ஸ்க்ருத மந்திரம் சொல்ற வாயாலே சமஸ்கிருதம் செத்துப் போனதே இந்த மாதிரி ஆசாமிகளாலே தாண்டி ..! என்று எரிச்சலோடு என்னிடம் முணு முணுப்பாள் ஜானகி.
எங்கள் கல்யாணத்தைப் பற்றி அசதிமறதியாகக் கூட மூச்சும் விட்டறியாத அப்பா அப்படித்தான் தயங்காமல் “பார்த்துண்டு தான் இருக்கேன்…ஒண்ணும் சரியா அமைய மாட்டேங் கிறதே” என்று புளுகும் போது”.
பச்சாதாபம்:
விருப்பமற்ற ஒரு பெண்ணைத் தொடுவதைக் காட்டிலும் மோசமான குற்றம் ஏதும் இருக்க முடியாது என்று தோன்றுகிறது. ஒரு பெண்ணை – அவள் சற்றும் இணங்காத போதும் – தொட்டுக் கற்பழிப்பது கொலை செய்வதைக் காட்டிலும் கொடியது. அம்மாதிரியான கொடுமைக்கு ஆளாகாமல் என் வானாளைக் கழித்துவிட வேண்டும்”. ஒரு மணமாகாத இளம் பெண்ணின் நியாயமான எண்ணம்.
காதல்:
அது தகாத உறவு. கூடாக் கனவு, யாருடைய ஏற் கையையும் பெற முடியாத தொந்தம் என்பது நன்றாக எனக்குத் தெரிந்திருந்த நிலையிலும் கூட இந்தப் பாழும் மனசு ஏன் தான் இப்படி அவனையே சுற்றி சுற்றி வர வேண்டுமோ புரியவே இல்லை” அழகான வெளிப்பாடு.
நாணம்:
“மூஞ்சி சொல்றதோல்லியோ அப்ப அதையே கேட்டுக்கோடி” என்று சொல்லிவிட்டு நான் அவள் முகத்தைப் பார்க்காமலே கிடுகிடு என்று குழவியை ஆட்டினேன்.
இருந்தாலும் சொல்லு சொல்லுன்னா என்னத்தைச் சொல்றது? ஏதாவது இருந்தாத்தானே சொல்றதுக்கு?
“உன் குரலே காட்டிக் குடுக்கிரதுடி அக்கா”…என்று ஜானகி மெதுவாகச் சிரித்தாள் .
“அப்படியே வெச்சுக்கோ போ..”
தங்கையிடம் சொல்லத் தவிக்க நாணம் மூடும் காட்சி.
திகைப்பு:
(தந்தைக்கு மகள் செய்த உபதேசம்)
வசிஷ்ட மகரிஷி என்ன சொல்லியிருக்கார்ங்கறது தெரியாதா உங்களுக்கு? வயசுக்கு வந்த பெண்ணை மூணு வருஷத்துக்குள்ளே கல்யாணம் பண்ணி குடுக்கல்லேன்னா
தனக்குப் பிடிச்ச எவநோடையும் போறதுக்கு ஒரு பொண்ணுக்கு முழு உரிமை உண்டுன்னும் அந்த மாதிரி செய்யற ஒரு பொண்ணோ இல்லேன்னா அவளை அழைச்சிண்டு போற ஆணோ குற்றவாளிகள் இல்லைன்னு அவரும் மனுவும் சொல்லியிருக்கிறதை நான் ஞாபகப் படுத்த வேண்டாம்னு பார்க்கறேன். தன பொண்ணு வயசுக்கு வந்த ஏழு மாசத்துக்குள்ளே ஒரு தகப்பன் அவளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கலைன்னா ஏழு கொழந்தைகளைக் கொன்ன பாவம் அவனுக்கு வந்து சேரும்னு மனு தர்ம சாஸ்திரத்திலே கூடத்தான் சொல்லியிருக்கு.இதெல்லாம் சமஸ்கிருதத்தைக் கரைச்சுக் குடிச்சிருக்கிற உங்களுக்குத் தெரியாதா என்ன? சும்மா சமஸ்கிருதப் புஸ்தகங்களை வரிசையா அலமாரியிலே அடுக்கி வெச்சுட்டாப்லே ஆச்சா? நாக்கில் பல்லைப் போட்டு அவள் கூசாமல் கேட்ட கேள்விகள். வயசு வந்த ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய குறைந்த பட்சக் கூச்சம் கூட இல்லாமல் ஜானகியா இப்படியெல்லாம் பேசுகிறாள் என்று எனக்குத் திகைப்பாய் இருந்தது.
இயலாமை..:
” இந்த ஆவணிக்குள்ளே அக்கா கல்யாணம் நடந்தாகணும்..ஆமா..! குதிர் குதிரைப் பொண்ணுகளை வளர்த்து வெச்சிண்டு அவா சம்பாத்தியத்துலே வயிறு வளர்த்துண்டிருக்கேள்ன்னும் அதனாலே தான் எங்க கல்யாணத்தைப் பத்தின பிரக்ஞையே உங்களுக்கு இல்லைன்னும் ஊர்லே நாலு பேர் பேசற பேச்சு காதுலே விழரச்சே உங்களுக்கு அவமானமாய் இல்லே? நானாயிருந்திருந்தால் நாக்கைப் பிடுங்கிண்டு பிராணனை விட்டுடுவேன்..”
ஜானகியின் ஒவ்வொரு சொல்லும் பச்சை மரத்தில் ஆணி அடித்தார் போல் பளிச் பளிச்சென்று வந்து விழுந்தது.
விரக்தி:
“பாவ புண்ணியம்” நாகரிக-அநாகரிகம் ” நீ சொல்ற ரசாபாசம்- இதுகளெல்லாம் பார்க்க வேண்டிய வீடுகள் வேறேடி . இந்த வீடு இல்லை”.
அறிவுரை:
இன்னிக்கு நம்ம அப்பா- அம்மாவுக்கு நாம என்ன மாதிரி மரியாதை காட்றோமோ அந்த மாதிரியான மரியாதையைத்தான் நாளைக்கு நம்ம குழந்தைகள் நமக்குக் காட்டும்..”
குறும்பு:
“கல்யாணமே ஆகக் காணோம். அதுக்குள்ளே குழந்தை-குட்டிக்குப் போயிட்டா இவ ..! வேடிக்கை தான்”.
எகத்தாளம்:
“ஓடிப் போயிருப்பேண்டி …ஓடிப் போயிருப்பேன் ” இருபத்தாறு வயசு வரைக்கும் தன் பொண்ணோட கல்யாணத்தைப் பத்தி யோசிக்காத தகப்பனுக்கு மரியாதை குடுக்கணுமாம் மரியாதை” – தங்கையின் எகத்தாளம்.
துடிப்பு:
“இந்த நடேசன் மொதலியார் ஜாதியிலே போய்ப் பொறந்து வெச்சிருக்கானே? பிராமண ஜாதியிலே பொறந்து தொலைச்சிருக்கப் படாதோ? என்று என் மனசு முட்டாள்தனமாக ஏங்கத் தொடங்கிற்று…என்ன பைத்தியக்காரத்தனம்?
நேசம்:
“பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலொழிய கலப்பு மணம் வெற்றியில் முடியாது என்பதையும் முக்கியமாக ஆணுக்கு அந்த மனப்பான்மை மிகுதியாக இருக்க வேண்டும் . பெற்றவர்களை விரோதித்துக் கொண்டு ஒருவனை நம்பி “அவனே கதி என்று ” ஓடி வருகிற ஒரு பெண்ணை அனுதாபத்தோடு பார்க்கும் பரந்த மனப்பான்மை ஆணுக்குள் இருக்க வேண்டும். ஏனென்றால் பெற்றவர்களுடைய அதிருப்தியும் விரோதமும் பெண்ணுக்கு பெரிய நஷ்டங்கள். புகுந்த இடத்திலும் அவள் மனப்பூர்வமாக வரவேற்கப்படுவதில்லை…என்கிற நிலையில் விட்டுக் கொடுக்கிற தன்மை பெண்ணைக் காட்டிலும் ஆணுக்குச் சற்று அதிகமாவே இருந்தால்தான் கலப்பு மனம் செய்து கொள்ளும் ஒரு பெண் நிம்மதியாக வாழ முடியும். இந்த நேசம் நடேசனின் கடிதத்தில் எதிரொலித்தது.
மனசாட்சி:
“நீ நிமிஷத்தில் ஓடிப் போயிடுவேடி. ஆனா அப்படி ஓடிப்போனவளுடைய தங்கையை யாரு கல்யாணம் பண்ணிப்பா நாளைக்கு? அதைப் பத்தி யோசிச்சுப் பார்த்தியா? உனக்காகப் பரிஞ்சு அப்பாகிட்டக் கன்னாப் பின்னான்னு பேசின ஜானகியுடைய வருங்கால வாழ்க்கையை உன்னுடைய காரியம் எந்த அளவுக்குப் பாதிக்கும்கிரதைப் பத்தி துளிக்கூட யோசிச்சுப் பார்ககாமே…”ஓடிப்போனா என்ன” என்று நீ நினைப்பது சுயநலமில்லையா ?
கண்ணியம்:
“உங்கள் பயன்தராத அன்புக்கு மற்றுமொரு முறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” – பரிமளாவின் முழுக் கடிதமும் வார்த்தைகளை கோர்த்த விதம் அருமை.
ஆசை:
“திடீரென்று ஒரு நாள் என் மன உறுதி சிதைந்து போயிற்று.நடேசனைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் கட்டுக்கு அடங்காமல் என்னுள் பொங்கிற்று. தொலைவில் நின்றாவது அவனது அன்பு முகத்தை ஒருதரமாகிலும் பார்த்து விடவேண்டும் போல் மனசு கிடந்து அடித்துக் கொண்டது. அந்த எனது ஆவலுக்குத் தடை போட முடியாமல் நான் வெகு நாட்களுக்குப் பிறகு அந்தப் பெட்டிக்கடைப் பக்கம் நடக்கலுற்றேன்” .
ஏமாற்றம்:
“அவுரு கடையை வித்துட்டுப் போயி அஞ்சாறு மாசத்துக்கு மேலே ஆகுதேம்மா”…..
“இந்த ஊரை விட்டுப் போயிட்டாருங்கறது மட்டுந்தான் தெரியும். எங்கிட்டு இருக்காருங்குற வெவரம் தெரியலியேம்மா”
இதைக் கேட்டதும் என் நெஞ்சுக்கூட்டினுள் ஒரு நரம்பு அருந்தாற்போல் இருந்தது.
தைரியம்:
“அன்னிக்குச் சொன்னேனோல்லியோ? அதைத் தான் காரியத்திலே காட்டப் போறேன்.அதாவது ஓடிப் போகப் போறேன்.”
“..”
பயம்:
“பையன் யாரு என்னன்னு தெரிஞ்சா அப்பா கட்டையை எடுத்துண்டு வருவா. நீ கூட என்ன நினைப்பியோ தெரியல்லே”.
“நீ கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு தீர்மாநிசிருக்கிரதைப் பற்றி ரொம்ப சந்தோஷம் ஜானகி.
ஆனா ரெண்டு வருஷமா இந்த விஷயத்தை என்கிட்டேர்ந்து மூடி மறைசிருந்திருக்கியே நியாயமா? என்று கேட்டேன்.
அதனாலே எனக்கு எவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்குன்னு தெரியுமாடி உனக்கு ? என்று கேட்க முடியாமல் மனசுக்குள் பொருமினேன்.
மகிழ்ச்சி:
“அக்கா ! என்னை ஆசீர்வாதம் பண்ணுடீ” என்றவாறு அவள் திடீரென உணர்ச்சிவசப்பட்டு பாய்ந்து வந்து என்னைக் கட்டிக்கொண்ட போது, என்ன சொல்வது என்றே தோன்றாமல் அவள் முதுகைத் தடவிக் கொடுத்தேன்.
“ஜானகி என்னோட ஆசீர்வாதம் எப்பவும் உனக்கு உண்டுடீ! அதை நீ கேட்டு வாங்கிக்கணு ம்னுட்டு இல்லை “- இப்படிச் சொல்லி விட்டு நான் அவள் தோளில் என் முகத்தை அழுத்திக் கொண்டேன்.
துக்கம்:
நான் அழுதது அதற்காக மட்டும் இல்லை என்றும் வேறு இன்னொன்றுக்காகவும்கூட என்றும் அவளுக்கு எப்படித் தெரியும்?
மலர்க் கொத்தை நீட்டும் போது :
“இந்த ஒரு அதிர்ச்சி கதைக்குள்….ஒரு பெண்ணின் அத்தனை மன உணர்வுகளும் அளவாக அழகாகச் சேர்ந்து கொத்து மலராக நறுமணம் வீசி படிப்பவர்களை தன்னோடு கூடவே இழுத்துக் கொண்டு செல்லும் உயிர்ப்பு இருக்கிறது.
கதை வந்து நாற்பது வருடங்களுக்கு மேலே ஆனாலும் என்ன…? இன்னும் பூமி சுற்றும் வரையில், ஏழ்மை இருக்கும் வரையில்…இது போன்ற பரிமளாக்களும் ஜானகியும் எங்கேயோ இதே உணர்வுகளோடு திண்டாடிக் கொண்டும், போராடிக் கொண்டும் தான் இருக்கிறார்கள்.
எத்தனையோ விதத்தில் சமுதாய முன்னேற்றங்களும், மாற்றங்களும் வந்திருந்த போதிலும் பூமிக்கடியில் வேர்கள் ஒன்றாக இருப்பது போல வாழ்வியலின் அடிப்படை என்றும் மாறாதது என்பதை உணர்த்தும் விதமாக ஆசையும் …ஆசாபாசங்களும் தீராது என்றும் ஆணித்தரமாக நம்மை நம்ப வைக்கிறது.
இத்தனை வருட இடைவெளிகளுக்குப் பிறகு இந்தக் கதையை படித்தாலும் “குடும்பம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் ” ஒரே குழந்தையோடு நின்றுவிடும் முன்னேற்றம் மட்டும் கண்கூடு.
மேலும் பெண்களுக்கு மிதமிஞ்சிய சுதந்திரம் வீட்டிலும் வெளியிலும், படித்ததனால் நல மதிப்பு…தங்களின் வாழ்க்கையைத் தாங்களே முடிவு எடுத்துக் கொள்ளும் திறனும், தைரியமும் வாழ்வின் முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக தற்போது நடை முறையில் வந்து விட்டது பாராட்டப் பட வேண்டிய விஷயம் தான் .
தலைமுறை இடைவெளியில் ஆண்களில் கூட நல்ல எண்ணத்தில் முன்னேற்றமும் பரந்த மனமும், வரதட்சிணை விழிப்புணர்வும் மாற்றமாக வந்துள்ளது. எல்லாம் உயர்மட்டத்திலும் , மேல்மட்ட நடுத்தர வர்கத்திலும் வந்திருந்தாலும்….இன்னும் நடுத்தர, கீழ் மட்ட வர்கத்துக் குடும்பங்கள் அதே சூழலில் தான் உழன்று வருகின்றனர்.
எந்த வகையான மாற்றங்களிலும் கீழ், நடுத்தர, உயர்ரக மட்டங்கள் எப்போதும் மாறாமல் இருந்து கொண்டே தான் இருக்கிறது. எல்லோரும் பொருளாதாரத்தில் சமமாகும் காலம் என்றுமே வரப் போவதில்லை. மாற்றங்கள் மனதளவே என்றாலும் சமுதாயத்தில் பொருளாதார மாற்றம் தான் வாழ்வியல் மாற்றமும் ஆகும். வாழ்க்கையில் கஷ்டப் படும் குடும்பமும், சுக போகமாய் வாழும் குடும்பமும் – இரு வேறு முனைகளாக என்றென்றும் நிரந்தரமாக இருக்கும். அது மாறாதது.
மற்றபடி கதையின் சாரம் அன்றும், இன்றும், என்றும் ஒரே உணர்வின் சூத்திரத்தை தான் சொல்கிறது. அதிர்ச்சிக்குள் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம்.
கதையின் நாயகி ‘பரிமளா’ இந்தக் கதையைத் தாண்டி மனசுக்குள் வந்து உலாவுகிறாள். இதயத்துக்குள் காலத்துக்கும் உறைந்து போகிறாள். இது தான் ‘அதிர்ச்சி’யின் வெற்றி. காலம் கடந்தும் இந்தக் கதை மனிதனின் வக்கிர முகமூடியைக் கிழித்து நிஜத்தை சொல்லிக் கொண்டிருக்கும்.
தத்ரூபமாக நாயகியை முன்னிறுத்தி கதை சொல்லிய அழகு தனி.. அனைவரும் அவசியம் இந்த எழுத்துக்கள் பேசுவதைப் படித்தால் கேட்கலாம்.
================================================================================================================
[ A close-up view of the planetary nebula Fleming 1 seen with
European ESO’s Very Large Telescope ]
சுருள் நிபுளாவில் வெளியேறும் முரண்பட்ட பேரளவு அண்டத் துண்டுகள்
அண்டக் கோள் நிபுளா [Planetary Nebula] என்பது விண்வெளியில் மனிதக் கண்களுக்கும் நேராக மங்கித் தெரியும் முதிய விண்மீன். தன் கூர்மையான தொலைநோக்கியில் கண்டு முதன்முதல் “பிளநேட்டரி நிபுளா” [Planetary Nebula] என்று பெயர் வைத்தவர் வானியல் விஞ்ஞானி வில்லியம் ஹெர்ச்செல் [1738 -1822]. ஹெர்ச்செல் அவ்விதம் பெயரிட்டாலும் பிளாநெட்டுக்கும், நிபுளாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விண்மீன்கள் நமது பரிதியைப் போல் 8 மடங்கு நிறை பெற்றால், அவற்றின் முடிவு ஒரு பெரும் கொந்தளிப்பு முறையில் சூப்ப்பர்நோவா வெடிப்பாகச் சிதைகிறது. விண்மீன்கள் தம் ஆயுள் முழுதும் தம்மிடமுள்ள திரட்சியான ஹைடிரஜன் எரிவாயு ஈர்ப்பு அழுத்தத்தில் உஷ்ணத்தை உண்டாக்கிப் பிணைவு சக்தியில் பிணைத்து ஹீலியமாகி சுய ஒளிவீசுகின்றன. எரிவாயுவின் கொள்ளளவு குறையக் குறைய, பிணைவு சக்தி குன்றி விண்மீன் ஒளிமங்குகிறது. நிபுளா என்பது மரணத் தருவாயில் உள்ள ஒரு முதிய விண்மீன் !
நமக்கு மிக நெருங்கியுள்ள பிளநேட்டரி நிபுளாகளில் ஒன்று “சுருள் நிபுளா” [Helix Nebula]. அது கும்ப நட்சத்திரக் கோலத்தில் [Constellation Aquarius (The Water Bearer)] உள்ளது. பூமியி லிருந்து சுமார் 700 ஒளியாண்டு தூரத்தில் சுருள் நிபுளா அமைந்திருக்கிறது. இந்த ஆபூர்வ சுருள் நிபுளா நமது பரிதி போல் உருவாகி தற்போது தனது ஆயுள் முடிந்து இறுதி மரண நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சுருள் நிபுளா தன் சுற்றுப் போர்வை அடுக்கின் கிழிவைத் தடுக்க முடியாது நிபுளாவை உருவாக்கிய வாயுவை மெதுவாக இழந்த வண்ணம் இருக்கிறது ! அடுத்து அந்த விண்மீன் வடிவு “வெள்ளைக் குள்ளி” [White Dwarf Star] ஆகப் போகிறது !
இந்தச் சுருள் நிபுளாவின் அமைப்பை 2013 ஜனவரி 22 ஆம் தேதி ஈஸோ பிரிட்டீஷ் வானோக்ககம் [ESO VISTA Telescope – European Southern Observatory in Chile] துல்லியமாகப் புதுப்படம் எடுத்துக் காட்டியுள்ளது. அது உட்சிவப்பொளியில் [Infrared Light] குளிர்ந்த நிபுளா வாயுப் பட்டைகளின் ஒளி தெரிய எடுத்துள்ளது. இவை சாதாரண கண்களுக்கு தெரியா. சுருள் நிபுளா ஒரு சிக்கலான அமைப்பு உடையது. அதனில் வாயு அயனிகளும், தூசியும் கலந்திருக்கும். அயனியான தனிமங்களும் வாயு மூலக்கூறுகளும் [Ionised Material & Molecular Gas] பெற்று “ரோஜா மலர்” இதழ்கள் போல் எழிலுடன் நிபுளா காணப்படும்.
சுருள் நிபுளா வளையத்தின் குறுக்கு அகலம் 2 ஒளியாண்டு தூரம் ! அந்த விண்மீனிலிருந்து வெளியேறிப் பரவும் வாயுத் தூசி வீச்சுகள் குறைந்தது 4 ஒளியாண்டு தூரம் நீள்பவை. சுருள் நிபுளாவிலிருந்து பரவும் மின்னொளி வாயுவை விஸ்டா விண்ணோக்கி எளிதில் படம் பிடித்து விடுகிறது. 4 மீடர் [13 அடி] விட்டமுள்ள விஸ்டா விண்ணோக்கி வெகு தூரத்தில் பின்புலத்தில் உள்ள விண்மீன்களையும், காலக்ஸி ஒளி மந்தைகளையும் கூர்ந்து படமெடுக்கும் தகுதி யுள்ளது. நிபுளாவின் நுண்ணிய வளையங்களையும் நோக்க வல்லது.
அவை ஹைடிரஜன் மூலக்கூறுகளய் [Molecular Hydrogen] நுண்ணிய குமிழாகத் தோன்றி னாலும் அவை ஒவ்வொன்றும் நமது சூரிய மண்டலத்தை போன்று பெரியவை. அச்சிறு வெளிவீச்சுகளை வால்மீன் முடிச்சுகள் [Cometary Knots] என்று அழைக்கிறார். அவை மரிக்கும் நிபுளாவிலிருந்து சக்தி மிக்க காமா கதிர்வீச்சுகளாய் [High Energy Radiation] வெளியேறுகின்றன. அந்த முடிச்சுகள் பிறகு தூசி, மூலக்கூறு வாயுவால் கவசமிடப் படுகின்றன. இந்த வால்மீன் முடிச்சுகள் எப்படித் தோன்றுகின்றன என்று தெரியவில்லை. சுருள் நிபுளாவி லிருந்து வரும் இந்த வெளிவீச்சுகளின் அபூர்வப் படத்தை ஈஸோ வெஸ்டா விண்ணோக்கி படம் எடுத்துள்ளது.
பேரொளி வீசும் பெரும் பூதவுரு விண்மீன் தெரிந்தது விண்ணில் !
உஷ்ணம் ஏறும் விரைவாய் ! கன உலோகம் கதிரியக்க யுரேனியம் போல் சிதைந்து நிலைத்துவம் அடைவது ! வடிவம் பெருத்து வெடிக்கும் விண்மீன் முடிவில் ! அசுரக் காந்த ஆற்றல் கொண்ட மரண விண்மீன்கள் ! பூமிக்கருகில் நெருங்கினால் மக்களின் உடற் மூலக்கூறுகள் முறிந்து முடமாக்கி விடும் ! உயிரினத்துக்கு மரணம் உண்டாக்கும் நியூட்ரான் விண்மீன் ! எரிசக்தி வாயுக் கோளமான உயிர் விண்மீன்கள் எரிசக்தி தீர்ந்த பிறகு வறியதாய் மூப்படைந்து சிறிது சிறிதாகி விரைவாகச் சுற்றிப் பரிதி போல் திணிவு பெற்று பன்மடங்கு பெருத்து ஆயுள் குன்றிச் செத்திடும் விண்மீன் மீண்டும் புத்துயிர் பெறும் !
1980 ஆண்டுகளில் பெரும் பூதவுரு விண்மீன் [HR 8752] காலக்ஸியில் காணப்பட்டது. அது வெடித்துச் சிதைந்து போகும் பெரும் பூத விண்மீன் “ரோ காஸ்” [Rho Cas of Spectral Type F] என்பதை ஒத்தது. ஆனால் 1985 முதல் 2005 ஆண்டுக்குள் HR 8752 விண்மீனின் சூழ்வெளி வெகு விரைவில் 3000 டிகிரி உஷ்ணம் மிகையானது.
அந்த விண்மீன் இப்போது தன் பௌதிகப் பண்பாடுகளைக் காட்டிப் பேரளவு உஷ்ணமுள்ள [A Type] விண்மீன் வரிசையில் வந்து விட்டது. இவ்விதம் 20 ஆண்டுகளில் HR 8752 விண்மீனில் நேர்ந்த பெருத்த மாறுதல் நிகழ்ச்சி எங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அலெக்ஸ் லோபெல் [Alex Lobel, ROB Scientist]
பெரும்பூத விண்மீன் HR 8752 வெற்றரங்கத்தின் ஊடே [மஞ்சள் வளர்ச்சி வெற்றரங்கம்] [YEV- Yellow Evolutionary Void] புகும் போது அதன் பௌதிகப் பண்பாடுகள் சூழ்வெளியில் மாறிப் போய் போராட வேண்டியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் இருவிதப் பகுதிகள் உள்ளன. அவற்றில் ஒன்று பெரும் பூத விண்மீன் [யுரேனியம், ரேடியம் போல் சிதையும் கதிரியக்கமுள்ள கன மூலகங்கள் போல] நிலைத்துவம் இழந்து சிதைவது. அதன் விளைவு : சூழ்வெளியில் ஹைடிரஜன், ஹீலிய வாயுக்களின் அயனிகள் பேரளவு பரவி வெளியாவது. அந்த அயனிகள் குறுகிய அரங்கில் 8000 டிகிரி உஷ்ணத்தில் வகுபடும் போது மீண்டும் நிலைத்துவம் பெறும்.
அலெக்ஸ் லோபெல்
காந்த விண்மீனைச் சுற்றியிருக்கும் காந்த தளத்தின் (Magnetic Field of Magnetar) தீவிரத்தின் ஆழத்தைக் காண்பது கடினம் ! பூகாந்த தளத்தின் அளவு சுமார் அரை காஸ் (0.5 Gauss) (Gauss – Unit of Magnetism). குளிர்ச் சாதனப் பெட்டியின் காந்த அளவு 100 காஸ். ஆனால் ஒரு சாதாரணக் காந்த விண்மீனின் அசுரக் காந்த தளம் குவாடிரில்லியன் காஸ் (Quadrillion Gauss —> 10^15 Gauss. USA) ! அதன் விளைவு உயிரினத்துக்குப் பேராபத்தை உண்டாக்கக் கூடியது ! அதன் காந்த ஆற்றல் வீரியம் பூகோள மாந்தரின் உடல் மூலக்கூறுகளை (Body Molecules) உடனே திரித்து முரணாக்கும் வல்லமை பெற்றது.
விஞ்ஞான விளக்க வெளியீடு (Science Illustrated Magazine) (Jan-Feb 2009)
“பால்வீதியில் (Milky Way) குறைந்தது 100 காந்த விண்மீன்கள் இருக்கலாம். அவற்றால் பூகோளத்துக்குக் கேடுகள் விளையலாம் ! அதிகமாக அவை இருந்தால் எதிர்பார்த்ததற்கும் மாறாகப் பேரளவில் காமாக் கதிர் வெடிப்புகள் (Gamma Ray Bursts) நேரிடும். அதனால் உயிரினத்துக்கு அபாயப் பாதிப்புகள் நிகழ வாய்ப்புள்ளன ! பூமிக்கருகில் அத்தகைய ஓர் காமா வெடிப்பு (பாதுகாப்பான) ஓஸோன் கோளத்தை ஒழித்துவிடலாம் ! அதாவது பிரளய முடிவு போல் மனிதரும் விலங்குகளும் ஒருங்கே முற்றிலும் அழிந்து (Mass Extinctions) போகலாம்.”
டோனால்டு ஃபைகர் (Donald Figer (Rochester Institute of Tecnology, USA)
ஒளிமயமாகிச் சிதையும் பெரும் பூதவுரு விண்மீன் கண்டுபிடிப்பு
சமீபத்தில் ஐரோப்பிய ஆய்வுக் குழுவொன்று ஒளிமயமான ஓர் அரிய பெரும் பூதவுரு விண்மீன் [Hypergiant Star H 8752] “மஞ்சள் வளர்ச்சி வெற்றரங்கம்” [YEV – Yellow Evolutionary Void] என்னும் ஓர் அபூர்வ அரங்கத்தின் ஊடே புகுந்து போவதைக் கண்டுபிடித்தார்கள். அந்தப் பேரொளி வீசும் விண்மீன் மேற்தள உஷ்ணம் [1985 – 2005] அதாவது கடந்த இருபது ஆண்டு களுக்குள் 3000 டிகிரி உஷ்ணம் ஏறியதாகக் கணித்திருக்கிறார்கள். மேலும் முப்பது [1982 -2012] ஆண்டுகளில் அதன் உஷ்ணம் 5000 டிகிரியிலிருந்து 8000 டிகிரி ஏறிவிட்டதாகத் தெரிகிறது. இந்த ஆய்வுக் கண்டுபிடிப்பு, எப்படி நிறை மிகுந்த விண்மீன்கள் காலக்ஸியில் தோன்றி முதிர்ச்சியுற்று வந்துள்ளன என்று அறிந்து கொள்ள உதவி செய்யும். பெரும் பூதவுரு விண்மீன்கள் நமது சூரியன் போல் கால் மில்லியன் அளவு கூடியதாய் பேரொளி வீசுபவை. அவற்றின் வடிவம் நமது பரிதி போல் பல நூறு மடங்கு நீளமுள்ள விட்டம் உடையவை. அதில் விந்தை என்ன வென்றால் அந்த விண்மீன் மஞ்சள் வளர்ச்சி வெற்று அரங்கத்தின் வழியாய்க் கடக்கும் போது சிதைவாகி நிலைத்து மற்றுப் போகிறது.
பெரும் பூதவுரு விண்மீனைச் சாதாரணப் பைனாகுலரிலே காஸ்ஸியோபீடியா விண்மீன் கூட்டத்தில் [Constellation Cassiopedia] பார்க்க முடியும். நமது காலக்ஸியில் இதுவரை 12 பெரும் பூதவுரு விண்மீன்கள் இருப்பது அறியப் பட்டுள்ளது. பூதவுரு விண்மீன்களின் ஆயுள் குறுகியது. அவை கதிர்வீசித் தேயும் யுரேனியம், தோரியம், ரேடியம் ஆகிய கன மூலகங்கள் போன்று நிலையற்றுச் [Unstable Heavy Elemetns] சிதைபவை. இறுதியில் நிலைபெறும் ஈயம் போல், பூதவுரு விண்மீனும் சிதைவாகி இறுதியில் நிலைத்துவம் அடைபவை.
1900 ஆண்டு முதல் 1980 வரை பூதவுரு விண்மீன் HR 8752 சூழ்வெளி உஷ்ணம் 5000 டிகிரியில் நிலையாக இருந்துள்ளது. பிறகு அது 1985 முதல் 2005 வரை திடீரென 8000 டிகிரியா ஏறியது என்று தெரிகிறது. அப்போது பூதவுரு விண்மீனின் ஆரம் நமது பரிதியைப் போல் 750 மடங்கி லிருந்து 400 மடங்காகச் சிறுத்து விட்டதாகக் கணிக்கப் பட்டுள்ளது. பூதவுரு விண்மீன் HR 8752 நிலை எதிர்காலத்தில் எப்படி மாறி இருக்கும் என்று இப்போது உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் அது ஒரு சூப்பர்நோவா பேராற்றல் வெடிப்பில் [Supernova Explosion] சிதைந்து விடும் என்று நம்பிட அழுத்தமானக் குறிகள் உள்ளன என்று கருதுகிறார்கள்.
புதிரான காமாக் கதிர்வீசும் பூதக் காந்த விண்மீன்கள்
1992 ஆம் ஆண்டில்தான் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கிரிஸ்டஃபர் தாம்ப்ஸனும், ராபர்ட் டன்கனும் காந்த விண்மீன் நியதியை முதன்முதலில் நிலைநாட்டினர். அதற்கு ஆதாரமாக 1979 ஆம் ஆண்டிலே காந்த விண்மீன் ஒன்றிலிருந்து எழுந்த காமாக் கதிர்வீச்சுக் களை முதலில் அவரிருவரும் பதிவு செய்தனர். அதன் பிறகு அடுத்த பத்தாண்டு களில் காந்த விண்மீன் நியதி பரவலாகப் பலரால் ஏற்றுக் கொள்ளப் பட்டது. சூப்பர்நோவா (Supernova) வயிற்றிலிருந்து பிறந்து சுருங்கிப் பேரளவு திணிவுள்ள காந்த விண்மீன்கள் (Super-Dense Magnetars) பூமியின் காந்த தளத்தைப் போன்று 1000 டிரில்லியன் மடங்கு தீவிரக் காந்த சக்தியைக் கொண்டவை ! காந்த வின்மீன்கள் என்பவை வாயு எரிசக்தி தீர்ந்து போன ஒருவகை நியூட்ரான் விண்மீன்களே (Neutron Stars) ! அவற்றை அதி தீவிர ஆற்றல் உள்ள காந்தத் தளம் சூழ்ந்திருக்கிறது. அந்தக் காந்த தளமே தேய்வடைந்து பேரளவு சக்தி வாய்ந்த மின்காந்த கதிர்வீச்சாக (High Energy Electromagnetic Radiation) குறிப்பாக எக்ஸ்ரே, காமாக் கதிர்களாக (X-Rays & Gammar Rays) மாறி எழுகின்றன.
இதுவரை விண்வெளியில் 15 காந்த விண்மீன்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அவற்றில் இரண்டு விதங்கள் உள்ளன. முதல் வகை : “SGR” என்று அழைக்கப்படும் “மென்மைக் காமாக் கதிர் மீளெழுச்சி மீன்கள்” (Soft Gamma Ray Repeaters). அடுத்த வகை : AXP என்று குறிப்பிடப் படும் “முரண் எக்ஸ்ரே துடிப்பு மீன்கள் (Anomalous X-Ray Pulsars). இதுவரைப் பிரபஞ்சத்தில் பதிவு செய்த காந்த விண்மீன்களில் அதி தீவிரக் காந்த தளம் கொண்டது : SGR 1806-20. அதன் கணிக்கப்பட்ட காந்த தளம் : 2 X (10^11) Teslas OR 2 X (10^15) Gauss (1 Teslas = 10,000 Gauss). பூத வல்லமை உடைய அந்த காந்த விண்மீனின் தீவிரத்தை ஒப்பாகக் காட்ட வேண்டுமானால் இப்படிக் கூறலாம். பூமியின் காந்த தளம் : அரை காஸ். மருத்துவ மனையில் உள்ள “காந்த இணைத்துடிப்புப் படவரைவு யந்திரம்” (MRI – Magnetic Resonance Imaging Machine) 32,000 காஸ். ஆய்வுக் கூடங்களில் இதுவரை தயாரிக்க முடிந்த காந்த தளம் : 40 டெஸ்லாஸ் (400,000 காஸ்).
காந்த விண்மீன்களின் இயற்கையான அமைப்பு
பூமிக்கு அருகில் இல்லாமல் விண்வெளியில் பல்லாயிரம் ஒளியாண்டு தூரத்தில் உள்ள இந்த வகைக் காந்த விண்மீன்களைப் பற்றிச் சொல்வதற்கு அதிகமில்லை ! பொதுவாகக் காந்த விண்மீன்களின் விட்டம் சிறியதே : சுமார் 12 மைல் (20 கி.மீடர்). ஆனால் அது நமது பரிதியை விடப் பேரளவு திணிவு நிறை அழுத்தம் (Compressed Dense Mass) பெற்றுள்ளது. ஒரு கையளவு வடிவுள்ள காந்த விண்மீன் உண்டை 100 மில்லியன் டன் எடைக்கும் மிகையாகக் கனமுள்ளது. பெரும்பான்மைக் காந்த விண்மீன்கள் தம்மைத் தாமே விநாடிக்குப் பல சுற்றுகளாய் வெகு வேகமாகச் சுற்றிக் கொள்கின்றன. காந்த விண்மீன்களின் ஆயுட் காலம் சிறியது ! அவற்றின் தீவிரக் காந்த தளம் சுமார் 10,000 ஆண்டுகளில் தேய்ந்து சிறுத்துப் போகும் ! அதற்குப் பிறகு அவற்றின் அதி தீவிர எக்ஸ்ரே எழுச்சிகள் நின்று விடும் ! அவ்விதம் கணக்குப் பார்த்ததில் நமது பால்வீதியில் முடங்கிப் போன காந்த விண்மீன்கள் சுமார் 30 மில்லியனுக்கும் மிகையாக இருக்கும் என்று தெரியப்படுகிறது.
காந்த விண்மீன்களின் அதி தீவிரக் காந்தத் தளம்
பிரபஞ்சத்தில் காந்த விண்மீன்களைப் போல் அசுரக் காந்த வல்லமை உடைய வேறெந்த விண்மீன்களும் இதுவரைப் பதிவு செய்யப் படவில்லை. 600 மைல் (1000 கி.மீ) தூரத்தில் ஒரு காந்த விண்மீன் இருந்தாலும் அதன் காந்த தளம் பூமியில் உள்ள உயிரினங்களைக் கொல்லும் ஆற்றல் உடையது. அப்போது உடம்பு நீரில் உள்ள “எதிர்முனைக் காந்த துருவ அமைப்பால்” (Diamagnetism of Water) (Diamagnetism is the property of an object which causes it to create a magnetic field in opposition of an externally applied magnetic field, thus causing a repulsive effect) அது உடற் சதைகளைக் கிழித்து விடுகிறது ! பூமிக்கும் நிலவுக்கும் இடையே பாதித் தூரத்தில் காந்த விண்மீன் ஒன்று இருக்குமேயானால் அந்தக் காந்த தளம் நமது பூமியில் உள்ள “கடன் பிளாஸ்டிக் அட்டைப்” (Credit Card) பதிவுகளை முற்றிலும் அழித்திடும் என்று சொல்லப் படுகிறது ! 2003 பிப்ரவரியில் வெளிவந்த விஞ்ஞான இதழ் (Scientific American Magazine) காந்த விண்மீன் SGR 1900+14 பூமியில் விளைவித்த தீங்குகளை வெளியிட்டது ! எக்ஸ்ரே ஒளித்திரள்கள் (X-Ray Photons) இலகுவாக இரண்டாய்ப் பிரிந்தன அல்லது ஒன்று சேர்ந்தன ! சூனியம் கூட ஒரு மட்டத்தில் காந்த அலை அதிர்வு காட்டியது (Vacuum is Polarized) ! அணுக்கள் கூட துகள் ஒப்புநிலை எலக்டிரான் அலை நீளத்தில் (Quantum-Relativistic Wavelength of an Electron) மெல்லிய அளவில் நீள் உருளையாய் திரிபு அடைந்தன (Deformed into Long Cylinders) ! 10^5 Teslas காந்த தளத்தில் அணுக்களின் சுற்றுவீதிகள் பென்சில் போல் மெலிந்து சிறுத்து விடும் ! 10^10 Teslas தீவிரத்தில் ஹைடிரஜன் அணு ஒன்றின் விட்டம் 200 மடங்கு மெலிந்து குறுகி விடும் !
காந்த விண்மீன்கள் எவ்விதம் உண்டாகுகின்றன ?
நாசாவின் ஸ்பிட்ஸர் விண்வெளித் தொலைநோக்கிதான் (Spitzer Space Telescope) அசுரக் காந்த விண்மீனைக் SGR (1900+14) கண்டுபிடுக்க உதவியது. அந்த விண்மீனைச் சுற்றிலும் ஏழு ஒளியாண்டு தூரம் அகண்ட வாயு “உட்சிவப்பு ஒளிவட்டம்” (Infrared Light) இருப்பது தெரிந்தது. ஆனால் காந்த விண்மீன் எக்ஸ்ரே ஒளியில்தான் பதிவானது. ஒரு சூப்பர்நோவா விண்மீன் சிதைந்து நியூட்ரான் விண்மீனாகும் போது அதன் காந்த தளத்தின் ஆற்றல் நான்கு மடங்கு மிகையாகிறது ! பிரின்ஸ்டன் பல்கலைக் கழக விஞ்ஞானி களான டன்கனும் தாம்ஸனும் நியூட்ரான் விண்மீனின் காந்த தளத்தைக் கணித்தார்கள். சாதாரண அளவில் 10^8 டெஸ்லாஸ் இருக்கும் நியூட்ரான் விண்மீன் “யந்திர இயக்க முறையால்” (Dynamo Mechanism) இன்னும் ஆற்றல் மிகையாகி 10^11 டெஸ்லாஸ் அளவில் பெருகி முடிவில் ஒரு அசுர ஆற்றல் உடைய காந்த விண்மீனாகிறது ! சூப்பர்நோவா வெடிப்பில் விண்மீன் 10% நிறையை இழக்கிறது ! 10 முதல் 30 மடங்கு பரிதி நிறையுடைய அத்தகைய பூத விண்மீன்கள் சிதையும் போது அவை ஒரு கருந்துளையாக (Black Hole) மாறாதபடி இருக்க பேரளவு (80%) நிறையை உதிர்க்க நேரிடுகிறது ! பிரபஞ்சத்தில் பத்தில் ஒரு சூப்பர்நோவா வெடித்து, நியூட்ரான் விண்மீனாகவோ அல்லது துடிப்பு விண்மீனாகவோ (Pulsar) மாறாமல் காந்த விண்மீனாக உருவடைகிறது !
மாபெரும் பிரபஞ்சப் புதிரான காமாக்கதிர் வெடிப்புகள் !
கடந்த முப்பது ஆண்டுகளாக அகிலவெளியில் திடீரென எழும்பும் புதிர்க் காட்சியான காமாக்கதிர் வெடிப்புகள் வானோக்கு விஞ்ஞானிகளைப் பெருவியப்பில் ஆழ்த்தி யிருக்கின்றன ! மகா சக்தி வாய்ந்த அந்தக் காமாக்கதிர் வெடிப்புகள் ஒளிமயமாகத் தோன்றி எங்கிருந்து எழுகின்றன என்று அறிய முடியாமல் அனுதினமும் காட்சி அளித்து வருகின்றன. சில வெடிப்புகள் பின்ன வினாடியில் ஒளிவீசி மறையும். சில வெடிப்புகள் சில நிமிடங்கள் நீடிக்கும். ஆனால் அந்த காமாக்கதிர் வெடிப்புகளின் ஒளிமயம் சிதையும் சூப்பர்நோவாவை விட ஒளி வீசுகின்றன. இருண்ட வான மண்டலத்தில் பெருங்கொண்ட ஒளிமயத்தில் மின்னலைப் போல் வெட்டி மறையும் ஒளித்திரட்சியே காமாக்கதிர் வெடிப்பு ! அவ்வெடிப்புத் தினம் ஒருமுறை ரீதியில் வானில் ஒளிர்கிறது. காமாக்கதிர்ப் பேழையான சூரியனை விடப் பேரளவு ஒளிமயத்தில் மின்னலைப் போல் கண்சிமிட்டும் காமாக்கதிர் வெடிப்புகள் ! சென்ற மூன்று ஆண்டுகளாக காமாக்கதிர் வெடிப்புகளின் மங்கும் எக்ஸ்-ரே, கண்ணொளி, ரேடியோ அலைகள் பற்றிய கருத்துகள் விருத்தியாகி முன்னேற்றம் அடைந்துள்ளன. அவை யாவும் விண்மீன் தோற்றத்துக்கு முன்னோடியாகவோ அல்லது சூப்பர்நோவாவுக்கு மூலமாகவோ உள்ளன !
நியூட்ரான் விண்மீன்களில் காமாக்கதிர் வெடிப்புகள்
பிரபஞ்சத்தில் பிறந்த ஒரு விண்மீனின் இறுதி மரண நிலைகளில் ஒன்று நியூட்ரான் விண்மீன் எனப்படும் முடிவான வடிவம். சூரியப் பளுவைப் போல் 4 முதல் 8 மடங்கு பெருத்த திணிவு விண்மீன்கள் சிதைவாகி விளைவதே ஒரு நியூட்ரான் விண்மீன் ! பொதுவான விண்மீன்கள் தமது அணுக்கரு எரிசக்தி யாவும் எரிந்து போன பிறகு, சூப்பர்நோவாவாக வெடித்து விடுகின்றன ! அந்த வெடிப்பில் விண்மீனின் மேலடுக்குகள் சிதறிப் போய் அது வனப்புள்ள ஓர் சூப்பர்நோவாவின் மிச்சமாகிறது. விண்மீனின் உட்கருவானது பேரளவு ஈர்ப்பு விசை அழுத்தத்தில் சின்னா பின்னம் ஆகச் சிதைகிறது ! அப்படிச் சிதைவாகும் போது விண்மீனில் உள்ள நேர் மின்னியல் புரோட்டான்களும், எதிர் மின்னியல் எலெக்டிரான்களும் இணைந்து (1 புரோட்டான் + 1 எலெக்டிரான் = 1 நியூட்ரான்) நியூட்ரான்களாக மாறிகின்றன. அதனால் அவை நியூட்ரான் விண்மீன் என்று அழைக்கப் படுகின்றன.
ஒரு நியூட்ரான் விண்மீன் சுமார் 20 கி.மீடர் (12 மைல்) விட்டம் கொண்டது. அதன் பளு சூரியனைப் போல் சுமார் 1.4 மடங்குள்ளது. அதாவது நியூட்ரான் விண்மீன் குள்ளி ஆயினும், பளு திண்மையானது (Mass is Dense with High Density). நியூட்ரான் விண்மீனின் சிறு பிண்டம் கூட பல டன் பளுவைக் கொண்டதாய் இருக்கும். நியூட்ரான் விண்மீனின் பளு அடர்த்தி ஆனதால், அதன் ஈர்ப்பாற்றலும் பேரளவில் பிரமிக்க வைப்பதாய் உள்ளது. ஒரு நியூட்ரான் விண்மீனின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசைபோல் (2 X 10^11) மடங்கு மிகையானது ! அதே போல் நியூட்ரான் விண்மீனின் காந்த சக்தி பூமியின் காந்த சக்தி போல் 1 மில்லியன் மடங்கு பெருத்தது !
சூப்பர்நோவா மிச்சங்களாக (Supernova Remnants) நியூட்ரான் விண்மீன்கள் தோன்றலாம் ! தனிப்பட்ட நியூட்ரான் விண்மீன்களாகவும் பிறக்கலாம் ! இரட்டைப் பிறவிகளாக (Binary Systems) காட்சி அளிக்கலாம் ! அவ்விதம் இரட்டையாக அமைந்துள்ள நியூட்ரான் விண்மீனின் பளுவைக் கணிப்பது எளியது. அப்படிக் கண்டுபிடித்ததில் நியூட்ரான் விண்மீன்களின் பளு, பரிதியின் பளுவைப் போல் 1.4 மடங்கு (சந்திரசேகர் வரம்பு) இருந்ததாக அறியப்பட்டது. இரட்டை அமைப்பில் நான்கு நியூட்ரான் விண்மீன்கள் அண்டக் கோள்களைக் கொண்டுள்ளதாக அறியப் படுகிறது ! கருந்துளைகள் (Black Holes) மிகவும் கனமானதால் “சந்திரசேகர் வரம்பு” ஒரு பிண்டத்தை நியூட்ரான் விண்மீனா அல்லது கருந்துளையா என்று அடையாளம் காண உதவுகிறது.
[தொடரும்]
+++++++++++++++++++
தகவல்கள்:
Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines, Science Illustrated, Wikipedia & Earth Science & the Environmental Book.
1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Moon form ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world (1998)
8. Physics for Poets By : Robert March (1983)
9. Atlas of the Skies (2005)
10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
10 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40802141&format=html (Cosmos Gamma Ray Bursts)
11 Space Com – Origins of the Universe’s Most Powerful Magnets (The Magnetars) By : Michael Schirber (Feb 1, 2005)
12 Extreme Universe : Magnetic Fields & Magnetars Posted By : Jcconwell in Astronomy (Mar 12, 2009)
13 Science Illustrated – Death Star – Could the Most Magnetic Objects (Magnetars) in the Universe Cause Extinction on Earth ? (Jan-Feb 2009)
14 From Wikipedea – Magnetar (May 1, 2009).
15. Spectacular Hypergiant Star Found Passing Through “Forbidden Zone.” [December 10, 2012]
அமெரிக்கா உலகிலேயே பணக்கார நாடு; ஜனநாயக நாடு. பிரிட்டன் இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் தன்னுடைய அரச பரம்பரையை இன்னும் வைத்துக்கொண்டிருக்கிறது. டயானா-சார்லஸ் திருமணம் தோல்வியில் முடிந்தது, டயானா தன்னுடைய காதலனோடு காரில் சென்றுகொண்டிருக்கும் போது ஒரு சதியால் கார் விபத்தில் மடிந்தது, இளவரசர் சார்லஸ் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவரைத் திருமணம் செய்துகொண்டது ஆகிய எல்லாம் ஒரு அரச பரம்பரைக்குரிய செயல்களாக நான் நினைக்கவில்லை. நான் நினைப்பது இருக்கட்டும். பிரிட்டன் தன் அரச பரம்பரையை வெகுவாகக் கொண்டாடுகிறது. அது தன் நாட்டின் பெருமைக்குரிய சின்னமாகக் கருதுகிறது. அரசராகப் போகும் இளவரசர் ஹேரியின் மனைவி கருவுற்றது இங்கிலாந்தைப் பொறுத்த வரை பெரிய செய்தி.
அமெரிக்காவிற்கு என்று ஒரு அரச பரம்பரை இல்லாவிட்டாலும் தங்கள் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்போது அந்த நிகழ்ச்சி அரசரின் முடிசூட்டு விழாவைப் போல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் போலும். ஜனாதிபதி பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் முன் அந்தப் பதவிக்குரிய கடமைகளைத் தவறாமல் செய்வதாக சத்தியம் செய்வதுதான் இந்தத் தொடக்க விழாவின் முக்கிய, அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிற, முக்கிய நிகழ்ச்சி. ஆனால் நாளடைவில் இது பெரிய விழாவாக உருவாகியிருக்கிறது. பொதுமக்களும் இதை ஒரு பெரிய திருவிழா போல் கொண்டாட நினைக்கிறார்கள்.
இந்தத் துவக்கவிழா ஜனவரி 20-ஆம் தேதி நடைபெற வேண்டும் என்று திருத்தப்பட்ட அமெரிக்க அரசியல் சாசனம் கூறுகிறது. அன்றிலிருந்துதான் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பதவிக் காலம் ஆரம்பமாகிறது. முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டன் 1789-இல் ஏப்ரல் 30-ஆம் தேதி நியுயார்க்கில் பதவியேற்றாராம். அப்போது அதுதான் அமெரிக்காவின் தலைநகரம். 1801-இல் மூன்றாவது ஜனாதிபதியான தாமஸ் ஜெபர்ஸன் பதவியேற்ற போது வாஷிங்டன் டி.சி. அமெரிக்காவின் தலைநகரமாகியிருந்தது.
அதன் பிறகு மார்ச் மாதம் நாலாம் தேதியை ஜனாதிபதியின் துவக்க விழா நாளாக மாற்றினார்களாம். தொலைபேசி, இண்டெர்னெட் ஆகிய வசதிகள் இல்லாத காலத்தில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தேர்தல் முடிவுகள் குதிரை வீரர்கள் மூலமாக தலைநகருக்கு வந்துசேர வேண்டுமாதலால் நவம்பர் முதல் செவ்வாய்க் கிழமையன்று (அமெரிக்கா உருவான நாளிலிருந்து நவம்பர் மாதம் முதல் செவ்வாய்க் கிழமைதான் ஜனாதிபதித் தேர்தல் நடக்கும் நாள்; இது வியப்பிற்குரிய விஷயம்தான்) தேர்தல் நடந்தாலும், வாக்குகளைக் கையால் எண்ணி, முடிவை அறிவித்து, தேர்தல் குழுவின் (Electoral College) முடிவுகளையும் தெரிந்துகொண்டு ஜனாதிபதி பதவி ஏற்பதற்கு நான்கு மாதங்கள் தேவைப்பட்டன. 1937-இல் ரூஸ்வெட்டின் இரண்டாவது பதவியேற்பின் போது பதவியேற்பு விழா அரசியல் சாசனம் இருபதாவது திருத்தத்தின்படி ஜனவரி 20-க்கு மாற்றி அமைக்கப்பட்டது. இந்த இரண்டரை மாதங்கள் புதிதாகப் பதவியேற்பவர் தன்னுடைய மந்திரி சபையையும் மற்ற அதிகாரிகளையும் தேர்ந்தெடுப்பதற்கு அவகாசம் அளிக்கிறது.
துவக்க விழா அமெரிக்க பார்லிமெண்டான கேபிடல் ஹில்லின் (Capitol Hill) படிகளில் நடக்கும். அமெரிக்க தலைமை நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பார். அதன் பிறகு ஜனாதிபதி பொறுப்பை ஏற்றவர் தன் அதிகார பூர்வமான வீட்டிற்குச் செல்வார். ஜெபர்ஸன் இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பின் குதிரை மீது வாத்தியக் குழுக்கள் புடைசூழ தன் இருப்பிடத்திற்குச் சென்றாராம். அதுதான் இப்போது பெரிய துவக்க விழா அணிவகுப்பாக (Inaugural Parade) உருவாகியிருக்கிறது. ஜெபர்சனை அடுத்து வந்த ஜேம்ஸ் மேடிசன் காலத்தில் அணிவகுப்பிற்குப் பிறகு துவக்க விழா நடனம் (Inaugural Ball) ஆரம்பித்தது. இதில் பங்கு பெற விரும்பும் பொதுமக்கள் $4 கொடுத்து டிக்கெட் வாங்கினார்களாம். இன்று டிக்கெட்டின் விலை $60. ஆனால், நன்கொடை விலையாக முதலில் $1000-உம், பின், $500-உம் பெறப்பட்டது. 1913-இல் பதவியேற்ற உட்ரோ வில்ஸன் இது அதிகப் பணம் செலவாகும் நிகழ்ச்சி என்று கருதி ரத்துசெய்துவிட்டாராம். அவரை அடுத்து வந்த வாரன் ஹார்டிங்கும் அதைத் தொடர்ந்தாராம். 1949-இல் ஹேரி ட்ரூமன் இதை மறுபடியும் கொண்டுவந்தாராம். ஜனாதிபதி கிளிண்டன் காலத்தில் இம்மாதிரியான நிகழ்ச்சிகள் பதினான்காக உயர்ந்தனவாம்.
பதவிப் பிரமாண விழாவிற்கு ஆகும் செலவுகளை மட்டும்தான் அரசு செலவழிக்கிறதாம். மற்ற எல்லா நிகழ்ச்சிகளுக்காகும் செலவுகளை துவக்கவிழா கமிட்டி தனிப்பட்டவர்களிடமிருந்து வசூலிக்கிறதாம். இந்த முறை ஒபாமாவே 50 மில்லியன் டாலர்கள் வசூலிக்கும்படி கமிட்டி அங்கத்தினர்களிடம் கூறினாராம்.
பல நாட்களாக பதவியேற்பிற்கான ஏற்பாடுகள் நடந்தன. மிஷல் ஒபாமாவின் உடைகளுக்காக பல ஆயிரம் டாலர்கள் செலவழிக்கப்பட்டன. (ஆனால் அன்று ஒரு நாள் அதை அணிந்த பிறகு அவருடைய அந்த உடை ஜனாதிபதி ஆவணக் காப்பகத்திற்குச் (presidential archives) சென்றுவிடுமாம்.) பெரிய ஆடை வல்லுநர்கள் அதைத் தயாரித்தார்களாம். அதன் விலை ரகசியம். ஃபாஷன் பற்றித் தெரிந்தவர்கள் $10,000 இருக்கலாம் என்று மதிக்கிறார்கள். முப்பது வருஷங்களுக்கு முன் ஜனாதிபதியாக இருந்த ரீகனின் மனைவி ஆடைகளில் அதிகப் பணம் செலவழிக்கிறார் என்று மக்களிடையே அதிருப்தி இருந்ததாம். இப்போது மிஷல் ஒபாமாவின் உடைகளைப் பற்றி யாரும் குறை சொல்வதாகத் தெரியவில்லை. இந்த முப்பது ஆண்டுகளில் எத்தனை மாற்றம்!
துவக்க விழாவிற்குப் பிறகு அணிவகுப்பு, நடனம் என்று பல நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. சுமார் பத்து லட்சம் பேர் வாஷிங்டனின் குளிரையும் பொருட்படுத்தாமல் துவக்க விழாவில் கலந்துகொண்டனர். இது ஒபாமாவின் முதல் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கிஅயில் பாதி.
ஒபாமா தன்னுடைய துவக்க உரையில் (Inaugural Speech) தேர்தல் பிரச்சாரத்தின்போது தான் கூறிய வாக்குறுதிகளை மறுபடி கூறினார். பலர் அன்றாடத் தேவைகளுக்கே போராடிக்கொண்டிருக்கும்போது சிலர் கையில் மட்டும் பணம் சேருவது நாட்டிற்கே நல்லதல்ல என்றும் ஓரினச் சேர்க்கையில் விருப்பமுள்ளவர்களை மற்றவர்கள் வெறுக்கும் வரையில் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்பதாகாது என்றும் அட்சய பாதிரமான அமெரிக்காவிற்கு வர விரும்புபவர்களில் தகுதி இருப்பவர்களை வரவேற்பதே மனிதநேயம் என்றும் அவர் கூறியது அவர் எப்படிப்பட்ட மனித நேயர் என்பதைக் காட்டியது. சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது பற்றியும் விரிவாகப் பேசினார்.
அவருடைய துவக்க விழாவில் கடவுள் வணக்கம் பாடியவர் ஒரு கருப்புப் பெண். கவிதை வாசித்தவர் ஓரினச் சேர்க்கையில் விருப்பமுள்ளவர். துணைஜனாதிபதிக்குப் பதவிப் பிரமாணம் செய்வித்த உச்சநீதிமன்ற நீதிபதி போர்ட்டரீகோவிலிருந்து சிறு வயதில் அமெரிக்காவிற்குத் தன் பெற்றோர்களுடன் குடியேறி நியுயார்க்கில் வறியவர்கள் பகுதியில் வளர்ந்து படித்து முன்னேறியவர். இவர்களைத் தன் துவக்க விழாவிற்குத் தேர்தெடுத்ததின் மூலம் தான் இவர்களின் நலனில் அக்கறை கொண்டவர் என்பதை உலகிற்கு அறிவித்தார். அமெரிக்கா பல வித மக்களையும் அரவணைக்கும் நாடு; அவர்கள் மேலே வர வாய்ப்புகள் அளிக்கும் நாடு என்று காட்டவும் அப்படிச் செய்தார் என்று நினைக்கிறேன். White Anglo-Saxon Protestant-களுக்குத் துவக்க விழாவில் முக்கிய இடம் இல்லை (இவர்களை WASP என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள்). இவர்கள் அமெரிக்காவிற்கு வந்த முதல் குடியேறிகளின் வழி வந்தவர்கள். இவர்கள் அமெரிக்கா தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று நினைப்பவர்கள். இந்த இனத்தைச் சேர்ந்த யாருக்கும் இறை வணக்கம் பாடவோ கவிதை வாசிக்கவோ ஒபாமா இடம் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் எனக்குள்ளே ஒரு நெருடல். இந்தத் துவக்க விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் வேண்டுமா? சிகாகோ நகரின் முக்கிய வீதி ஒன்றில வயதான கருப்பர் ஒருவர் கடுங்குளிரில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும்போது இத்தனை பணம் இதற்காகச் செலவிட வேண்டுமா? காந்திஜி பற்றி அதிகம் தெரிந்திராத ஒரு அமெரிக்கப் பெண் என்னிடம் ஒரு முறை ‘டயப்பர் (diaper-சிறு குழந்தைகளுக்கு அவர்களுக்கு விபரம் தெரியும் வரை இடையில் கட்டும் துண்டு) கட்டிக்கொண்டு இருப்பாரே அவர்தானே நீங்கள் குறிப்பிடும் காந்திஜி’ என்று கேட்டார். தமிழ்நாட்டிற்கு வந்தபோது இடையில் வேட்டி மட்டும் உடுத்தியிருந்த தமிழ்நாட்டு விவசாயிகளைப் பார்த்த காந்திஜி அன்றிலிருந்து தானும் வேட்டி மட்டும் உடுத்தத் தீர்மானித்தார் என்று அந்தப் பெண்ணிற்கு விளக்குவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. ஆனால் ஒபாமா காந்திஜியைப் பற்றி முழுவதும் அறிந்தவர். அவருடைய எளிமையை வெகுவாகப் போற்றியவர். ‘யாரோடு – அவர்கள் உயிரோடு இருப்பவர்களானாலும் சரி அல்லது இறந்துபோய்விட்டவர்களானாலும் சரி – நீங்கள் உணவு உண்ண விரும்புகிறீர்கள்?’ என்று ஒபாமாவிடம் ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் ஒரு மாணவன் கேட்டபோது எந்த விதத் தாமதமும் இன்றி அவர் உடனடியாகக் கொடுத்த பதில் ‘நான் காந்திஜியோடுதான் உணவு உண்ண விரும்புகிறேன். அவர் உண்ணும் உணவு மிகவும் எளிமையானதாக, அளவில் குறைவாக இருக்கும் என்றாலும்’ என்றார். அவர் காந்திஜியைப் போற்றுபவர் என்பதற்கு இதை விட என்ன ஆதாரம் வேண்டும்? அவராலேயே ஜனாதிபதி பதயேற்பு விழாவை எளிமையாக நடத்த முடியவில்லை என்றால் அமெரிக்காவின் பகட்டிற்கு அவர் பணிய வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது என்பதைத் தவிர என்ன காரணம் இருக்க முடியும்?
பொதுவாக இந்தியாவில் அரசியல்வாதிகள் தாங்கள் எளிய வாழ்க்கை வாழுவதாக – அப்படி வாழுகிறார்களோ இல்லையோ – காட்டிக்கொள்வார்கள். ஆனால் அமெரிக்காவில் அப்படியில்லை. எல்லா அரசியல்வாதிகளும் ‘டிப்டாப்பாக’ உடை அணிந்து வருகிறார்கள். நூற்றுக் கணக்கில் பணம் செலவழித்து தலை அலங்காரம் செய்துகொள்கிறார்கள். (2008 ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்ட ஜான் எட்வர்ட்ஸ் 8000 டாலர் செலவழித்துத் தலை அலங்காரம் செய்துகொண்டதாகக் கூறினார்கள்.) அமெரிக்காவில் எல்லோரும் – முதியவர்கள், வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பவர்கள் உட்பட – தலை அலங்காரம் செய்துகொள்ளுகிறார்கள் என்பது இன்னொரு விஷயம். உடம்பை ஊளைச்சதை எதுவுமில்லாமல் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதும் அமெரிக்க இலக்கணங்களில் ஒன்று. அதுவும் பொதுவாழ்வில் ஈடுப்பட்டிருப்பவர்கள் உடலை நேர்த்தியாக வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு நாகரிகம் தெரியவில்லை என்று பொதுமக்கள் நினைத்துவிடலாம். அதிலும் கருப்பு இனத்தைச் சேர்ந்த ஒபாமாவுக்கும் அவரது மனைவிக்கும் மற்ற வெள்ளையர்கள் போல் நாகரிகமாக இருக்கத் தெரியாது என்று பொதுமக்கள் நினைக்க வாய்ப்பு உண்டு. மிஷல் ஒபாமா அவர் ஜனாதிபதி மனைவியாக ஆவதற்கு முன்பிருந்ததை விட இப்போது தன்னுடைய உடல் அமைப்பில் அக்கறை செலுத்துகிறார் என்று நான் என்று நினைக்கிறேன். தாங்கள் எந்த விதத்திலும் வெள்ளை அமெரிக்கர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்று காட்டிக்கொள்வதற்காகவும் பதவியில் இருப்பவர்கள் அப்படி நடந்துகொள்கிறார்கள்.
அமெரிக்காவின் படிமத்தை உலகில் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஒபாமாவிற்கு இருப்பதும் அமெரிக்கா தன் பலத்தையும் பணத்தையும் உலகிற்குக் காட்ட விரும்பியதும்தான் துவக்க விழா இவ்வளவு ஆடம்பரமாக அமைந்தது என்று நினைத்துக்கொண்டால் ஓரளவு சமாதானம் கிடைக்கிறது.
அன்புக்கு அடைக்கும் தாழ் இல்லையென்றால், பிரேமைக்குத் தளை இல்லை என்று ஆகிவிடுமா என்ன? இல்லை கனிவு கட்டற்ற அரவணைப்பு ஆகிவிடுமோ? விஷ்ணுவுக்கு சகஸ்ரநாமம் என்றால் பிரேமைக்கு லக்ஷார்ச்சனையே செய்து விடலாம். பிரேமை மனம் என்னும் சுரங்கத்தில் ஜனித்து, அலைந்து, திரிந்து, திக்குத்திசை தெரியாமல் தொலைந்து, மீண்டு/ மீட்கப்பட்டு, நிரந்தரமாக மனதில் வாழ்ந்து கொண்டே இருக்கும் ஒரு சஞ்சீவி; சிரஞ்சீவி. அவள் ஒரு தொடர்கதை; அமரகாவியம்.
பெற்றெடுத்த அன்னை தான் பிரேமையின் ஊற்று, நீரோட்டம், பிரவாகம். ரத்த பாசமென்பது உள்ளம் உருகி, உடலும் சிந்தி, உருவும், உயிரும் அருளும் பாக்கியம் என்றால், அது அன்னையின் கொடையே. அவள் மறைந்த பின் ஆண்டாண்டு
தோறும் நினவு நாளை அனுசரிக்கும் போது, மனம் தத்தளிக்கிறது. உள்ளம் பதறுதடா! அவளை நினைக்காத க்ஷணமொன்று உண்டோ? உடன் பிறந்தோரை சஹோதரன், சஹோதரி என்கிறது சம்ஸ்கிருதம். ‘ஒரே வயிற்றில் பிறந்தோர்’ என்று பொருள். அதனால் மட்டுமா சகோதர வாஞ்சை?
பொருள் என்றால் என்ன பொருள்! சொல்லின் புரிதலை நாடி, தேடுவதும் பொருள் தான்.
திரைகடலோடியும் தேடும் திரவியமும் பொருள் தான். திவாகரமும், நிகண்டும், அகராதியும் சொல்லும் பொருள் எல்லாவற்றிற்கும் மேலான பொருள் ஒன்று உண்டு.
பிரேமையினால் தளை கழண்டுபோக, சுகிர்த்து மகிழ்ந்த தலைவன் பரிசம் போட ‘பொருள்’ தேடி செல்ல விழைகிறான். ‘ஒரு பொருளை தேடும் நீ விலை மதியா பொருளையல்லவா தொலைத்து விடுவாய்.’ என்று நைச்சியமாக அவனை பயமுறுத்தி, அவனை தடுத்தாட்கொண்டு விடுகிறாள், தலைவியின் பாங்கி. அவளுக்கு அல்லவோ தெரியும், தலைவியின் பிரேமையின் அருமை. கூட்டுக்களவாணியாயிற்றே!
“கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருளாகுமோ—”என்று ஒரு போடு போட்ட பாங்கி, ஒரு குண்டையும் வீசி அவனை கலங்கடித்தாள்.
“… விடமீன் போல் தொழுதேந்தும் வயங்கிய கற்பினாள்
தடமென் தோள் பிரியாமை பொருளாயன் அல்லதை…” என்று.
இன்றைய சினிமா தமிழில்:
“மிஸ்டர்! நீ எந்த ஊருக்குப் போவையோ? எந்த மீன் கிட்ட சிக்குவையோ? எம்.எஸ். நடிச்சாங்களே அந்த சகுந்தலை சினிமாவின் ஹீரோ (வில்லன்?) துஷ்யந்தன் மாதிரி ஹீரோயினை மறந்திடுவாயோ? யார் கண்டா? அவள் விரகதாபத்தில் துடித்து மடிந்து போனால், யாரடா பொறுப்பு? அவ தாங்கமாட்டாடா கண்ணு. உங்கப்புராணை! போகாதே! போகாதே! என் ஃப்ரெண்டின் ஃப்யூச்சர் கணவா!”
“கடன் இறந்து…அல்லதை…’ என்ற பிரேமபாணம் கலித்தொகையில் செலவு அழுங்குவித்தல் என்ற பகுதியில் இவ்வாறு வருகிறது:
செலவு என்றால் பயணம். அதை நடக்க விடாமல் செய்வதே அழுங்குவித்தல். பாங்கி உணர்த்தும் விலை மதியா, திரும்ப கிடைக்காத ’பொருள்’ தலவியின் இளமை. அது மட்டுமல்ல. அவளின் விரகதாபம் அவளை கொன்றுவிடுமோ என்று சொல்லி ‘மிரட்டுகிறாள்’. அவனும் செலவை தவிர்த்து விடுகிறான். ஒரு பிரமேயம் போதாதா, பிரேமைக்கு! பிரேமை இனிக்கும்; தகிக்கும்; இழுக்கும். இதெல்லாம் எங்களுக்குத் தெரியாத சமாச்சாரமா? என்று கேட்பீர்கள் என்று எனக்கு தெரியும்.
அதனால் தான் வாஞ்சைக்குத் திரும்புகிறேன். ‘ஒரே வயிற்றில் பிறந்தோர்’ என்பது மட்டுமல்ல. ஒரு கூட்டில் வாழ்ந்த பார்ப்புகள் அல்லவா. அதனால் ஒரு பிரேமை. பல வருடங்களுக்கு முன் பிருதிவி ராஜ் நடித்த ‘படோசி’ (அண்டை வீட்டுக்காரன்) என்ற சினிமா பார்த்தது ஞாபகம் வருகிறது. கலோனிய அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியால் பரஸ்பர பிரேமையை இழந்த ஹிந்து-முஸ்லீம் ‘படோசி’. எனவே பிரேமைக்கு பரந்த இயல்பும் உண்டு. அது தான் மனித நேயம். தற்கால அரசியல் வசனமல்ல.
இனி இறை மீது காதல், கனிவு, அன்பு, பிரேமை. ‘குசலம்’ படித்தவர்களில் பலர் ஒரு நுட்பம் பற்றி பேசவில்லை. திருஞானசம்பந்தர், தன்னை தேடி வந்த தகப்பனிடன் வினவியது: ‘…பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.’ குளக்கரையில் அழுது கொண்டு நின்ற திராவிட சிசுவுக்கு தங்கப்பாலாடையில் அடிசல் போட்டிய அம்பாள் நல்லாள். அது பொருத்தமே. கிருபாகரனோ அந்த தோணியப்பர். அவருடைய ‘குசலம்’ விஜாரிக்க வேண்டாமோ? திருஞானசம்பந்த்ரின் மோன நிலையில் சுவாமியும் பிரேமைக்குரிய உறவினன் தான். அதான் ‘நலம். நலம் அறிய அவா.’
அடுத்த கட்டம் மனதுக்குக் கஷ்டம், நம் போன்ற சராசரிகளுக்கு. தோணியப்பர் திவ்ய தம்பதிக்கு குழவியாக இருந்த போதே தெய்வீகசம்பந்தமாகிவிட்ட திருஞானசம்பந்தருக்கு 16 வயதில் இகலோக சம்பந்தம் பேசினார்கள். திருநல்லூர் நம்பியாண்டாரின் பெண்ணை இவருக்கு திருமணம் முடிக்க வந்த சுற்றத்தையும், மணமகளையும் கோயிலுக்கு அழைத்து சென்றார். அங்கு நடந்ததோ பெருமணம். எல்லாரும் கூண்டோடு கைலாசம்.
“இறைவனிடத்துக் காதல் கொண்டு, மனம் கசிந்து, கண்ணீர் நிறைத்து”அந்நிலையில் ஓதுகின்றவர்களை வீடு பேறுவறச்செலுத்துவது (யாதெனில்) நான்கு வேதங்களைக்காட்டிலும் மெய்பொருளாக உள்ளதும், இறைவனுடைய பெயராக உள்ளதுமாகிய ‘நமசிவாய’என்று சொல்லப்படும் திருஐந்து எழுத்து.”
~ அ.ச.ஞானசம்பந்தன்
இப்போது சொல்லுங்கள், பிரேமையின் பிரமையை பற்றி.
பிரேமையுடன்,
இன்னம்பூரான்
25 01 2013
உசாத்துணை: அ.ச.ஞானசம்பந்தன் (2005) இன்னமுதம்: பக்கம் 26.
“மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!” என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. அத்தகைய மங்கையர் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் ஆற்றி வரும் பணிகள் அளவிடற்கரியன. பாரதி கண்ட புதுமைப் பெண்களாய் “நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும்” பெற்ற இன்றைய பெண்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை எனலாம். வீட்டைப் பராமரிப்பது முதல் விண்வெளிக்குச் செல்வது வரை அவர்கள் செய்து வரும் பணிகள் அளப்பரியன. ஆனால் இவ்வளவு ஆற்றல் மிக்க பெண்கள் தங்கள் உடல்நலத்தில் போதுமான அக்கறை செலுத்துகின்றார்களா? என்றால், இல்லை என்றுதான் வருத்ததோடு சொல்லவேண்டியுள்ளது.
திருமணத்திற்கு முன்பு வரை தாயும், தந்தையும் தங்கள் மகளின் உடல்நலனைக் கண்போல் காக்கின்றனர் (பெரும்பாலான குடும்பங்களில்). ஆனால் திருமணத்திற்குப் பிந்தைய காலகட்டம் தான் ஒரு பெண்ணின் வாழ்வில் முக்கியமான காலகட்டமாகத் திகழ்கின்றது என்பதில் இருவேறு கருத்துகட்கு இடமில்லை. ஏனெனில், பல்வேறு குடும்பப் பொறுப்புகள், குழந்தைப் பேறு, அலுவலகப் பணி, கணவனையும், வீட்டிலுள்ள பெரியோர்களையும் பேணுதல் போன்ற பல கடமைகளை அவள் கவனிக்க வேண்டியிருக்கின்றது. இத்தகைய முக்கியமான தருணத்தில் பெண்கள் தம் குடும்ப நலத்தோடு தங்கள் உடல் நலனிலும் தனிக் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது.
”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது அனுபவ மொழி. அத்தகைய நோயற்ற வாழ்வைப் பெறுவதற்கு முறையான, சரியான உணவு முறை அவசியம் என்பதனை எவரே மறுப்பர்? “உணவே மருந்து” என்பது ஆன்றோர் வாக்கு. தெய்வப் புலவர் திருவள்ளுவரும்,
”மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபா டில்லை உயிர்க்கு.” என்கின்றார். உண்ணும் உணவானது நோயற்ற வாழ்வை வழங்குவதில் பெரும்பங்காற்றுகின்றது. அத்தகைய உணவின் தன்மை, உண்ணும் அளவு, காலம் ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு உண்ணுதல் நலம் பயக்கும்.
உணவில் மாவுச்சத்து (carbohydrates), புரதச்சத்து (protein), மற்றும் கொழுப்புச்சத்து (fat) ஆகையவைப் போதுமான அளவில் இருக்கின்றதா என்பதை பெண்கள் (ஏன் அனைவருமே) கவனித்தில் கொள்ள வேண்டும். இதனைத் தான் ”சமச்சீர் உணவு” (balanced diet) என்று இன்றைய மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, குழந்தை பெறுகின்ற வயதில் (child-bearing age) இருக்கும் மகளிர்க்கு இச்சமச்சீர் உணவு மிகவும் முக்கியமானது. அப்போதுதான் பிறக்கும் குழந்தைகள் நல்ல உடல்நலத்தோடும், மன வளத்தோடும், குறைபாடுகள் இன்றியும் பிறக்க வாய்ப்பு ஏற்படும். அதுபோலவே, 50 வயதைக் கடந்த பெண்களுக்கு (குறிப்பாக இந்தியப் பெண்களுக்கு) அதிகப் படியான கால்சியப் பற்றாக்குறை காரணமாக எலும்புத் தேய்மான நோய் (osteoporosis) ஏற்படுகின்றது. இதனால் தவறி அவர்கள் எங்கேனும் கீழே விழுந்தால் கூட எலும்பு முறிவு (bone fracture) ஏற்பட்டு விடுகின்றது. இதனைத் தவிர்க்கப் பெண்கள் கால்சியம் சத்து நிறைந்த பால், தயிர், கீரை வகைகள், சோயா பீன்ஸ், ஆரஞ்சு, முட்டை போன்ற உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம்.
உடல் நலனைச் சீர்குலைக்கும் பிற நோய்கள் என்று பார்த்தால் பரம்பரை நோய்களுக்கு முக்கியப் பங்குண்டு எனலாம். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள் போன்றவை பொதுவான பரம்பரை நோய்களாக அறியப்படுபவை. 30 வயதிற்கு மேல்தான் இந்நோய்கள் தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கும். ஆகவே, தாய், தந்தையர்க்கு இத்தகைய நோய்கள் இருப்பின் அவர்களின் வாரிசுகளுக்கும் அவை வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அதனை உணர்ந்து மருத்துவ ஆலோசனையை நாடுவதும், மருத்துவர் பரிந்துரைக்கும் உணவு முறையினைக் கடைப்பிடிப்பதும் அவசியம்.
இன்றைய மருத்துவ உலகம் பல்வேறு தொழில்நுட்ப முன்னேற்றங்களையும், புரட்சிகளையும் கண்டு வருகின்றது என்றால் மிகையாகாது. சான்றாக, நுண் துளை அறுவை சிகிச்சை (laparoscopic surgery) ஓர் வரப் பிரசாதம் என்றே கூறலாம். இதன் மூலம் பல்வேறு சிக்கலான அறுவை சிகிச்சைகளையும் எளிதாகச் செய்யமுடிகின்றது. வெகு விரைவிலேயே இயல்பு வாழ்க்கைத் திரும்பவும் இயலுகின்றது.
நவீன மருத்துவ வசதிகளை, முன்னேற்றங்களைப் பெண்கள் தங்கள் உடல் நலத்தை காக்கப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நோய்கள் வருவதற்கு முன்னமேயே தற்காப்பு மருத்துவப் பரிசோதனைகளைச் அவ்வப்போது செய்துகொள்வது நல்லது. குறிப்பாக 30 வயதினைக் கடந்த பெண்கள் 3 ஆண்டுகட்கு ஒரு முறை மார்பகப் பரிசோதனை (Mammogram) மற்றும் கருப்பைப் பரிசோதனை (Pap smear) போன்றவற்றைச் செய்துகொள்வது அவசியமானது. இதனால் மார்பகப் புற்றுநோய் (breast cancer), கருப்பைசார் புற்றுநோய்கள் (cervical cancer, endometrial cancer and ovarian cancer) ஆகியவை வராமலே தடுக்கவோ அல்லது ஏற்கனவே வந்திருந்தால் ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தவோ இயலும். அதைவிடுத்து, வீட்டு வேலைகள், அலுவலகப் பணிகள் ஆகியவற்றின் காரணமாகப் பெண்கள் தங்கள் உடல்நலனில் போதிய அக்கறை செலுத்தத் தவறினால் பல்வேறு நோய்கட்கு அவர்கள் ஆட்பட நேரும். அது அவர்களின் இனிய இல்லறத்தைப் பாதிக்கக்கூடும். ஏன்..அலுவலகப் பணிகளையும் செம்மையாகச் செய்ய இயலாது.
அடுத்தபடியாக, பெண்கள் தங்கள் உடலைப் பேணுவதற்கு, கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்கு உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவை பெரிதும் உதவுகின்றன. எனவே, எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும் அதற்கு இடையில் தினமும் (காலையோ அல்லது மாலையோ) 15 அல்லது 20 நிமிடங்களேனும் இத்தகைய பயிற்சிகளில் ஈடுபடுதல் அவசியம். யோகா, தியானம் போன்றவற்றை முறையாகப் பயின்று பின்பு பயிற்சியில் ஈடுபடுவதே சிறந்தது. இத்தகைய பயிற்சிகளினால் உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறும். வேலைகளைத் திறம்பட நிர்வகிக்கத் தேவையான ஆற்றலையும், புத்திக்கூர்மையையும் இவை அளிக்கும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்கின்றனர்.
அலுவலகம் செல்லும் பெண்களைப் பொறுத்தவரையில் அவர்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துவதோடு, நேர மேலாண்மையிலும் (time management) ஆற்றலும் பெற்றவர்களாக இருந்தால் இன்றைய விஞ்ஞான உலகில் அவர்களால் அனைத்து வேலைகளையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் சிறப்பாய்ச் செய்ய முடியும். நேர நிர்வாகம் என்பதனை அவர்கள் முதலில் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். வீட்டு வேலைகளை அவரவர் வயதிற்கும், அனுபவத்திற்கும் தக்கபடி வீட்டிலுள்ள அனைவர்க்கும் பகிர்ந்தளித்தல் வேண்டும். இவ்வாறு செய்வது பெண்களின் வேலை பளுவையும், உடல் சோர்வையும், மன அழுத்தத்தையும் குறைக்கும். இம்முறையை (வாய்ப்பிருப்பின்) அலுவலகத்திலும் பின்பற்றலாம். இதைத்தான் ”delegation of duties” என்று குறிப்பிடுகின்றனர்.
குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய மற்றொன்று, தொ(ல்)லைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தைப் பெண்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதே. வேலைகளுக்கு நடுவில் கிடைக்கின்ற சிறிதளவு ஓய்வு நேரத்தை மிகவும் பயனுள்ள வகையில் செலவழிக்கப் பெண்கள் பழக வேண்டும். தொ(ல்)லைக் காட்சி நிகழ்ச்சிகளைத் தவிர்த்துவிட்டுக் குழந்தைகளோடு செலவிடுதல் வேண்டும். நல்ல கருத்துள்ள நீதிக் கதைகள், திருக்குறள் போன்றவற்றை அவர்களுக்குக் கற்பிக்கலாம். அவர்களின் பள்ளி அனுபவங்களையும், ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் முறைகள் பற்றியும் கேட்டறியலாம். அவர்களோடு சிறிது நேரம் விளையாடலாம். இது போன்ற செயல்கள் குழந்தைகளுக்கு மனமகிழ்ச்சியை நிச்சயம் கொடுக்கும். அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த குடிமக்களாக வாழ வழிகோலும்.
எனவே, உடல் நலத்தையும், மன வளத்தையும் காக்கத் தேவையான உணவினையும், உடற்பயிற்சிகளையும், முறையான மருத்துவப் பரிசோதனைகளையும், சரியான திட்டமிடலையும் மேற்கொண்டால் இன்றைய பெண்கள் மேலும் பல சாதனைகளைப் புரியலாம், சரித்திரம் படைக்கலாம். வீடு, அலுவலகம், இரண்டையும் திறம்பட நிர்வகிக்கலாம்.
சன் டிவியில் திடீர்னு ஒரு வார நாள் காலையில் பார்த்தா – சூரிய வணக்கத்தில் சிவ கார்த்திகேயன் பேசிட்டு இருக்கார். என்னடா இது லீவு நாள் கூட இல்லை; இன்னிக்கு இவரை மாதிரி ஒரு பிரபலத்தை கூட்டி வந்திருக்காங்களே என வியப்போடே பார்த்தேன்
சிவகார்த்திகேயன் நிச்சயமா ஒரு செம என்ட்டர்டேயினர். தொகுத்து வழங்கினாலும் சரி, பேட்டி தந்தாலும் சரி சிரிக்க வச்சிடுறார் (நடிக்கும் போது தான் அந்தளவு Flow வர மாட்டேங்குது )
பள்ளியில் படிக்கும் போது தினம் நெற்றியில் 3 பட்டை போட்டு கொண்டு போனதும், கல்லூரி வந்ததும் செய்த அலம்பல்களும், அஜீத்துடன் முதல் படத்தில் (ஏகன்) நடித்த போது அவர் எப்படி பேசினார் என பேசி காட்டியதும், விஜய் உள்ளிட்ட பலரை மிமிக்ரி செய்ததும் அட்டகாசம் ! ஹீரோவாக இல்லாமல், சந்தானம் போல காமெடியன் ஆனால் செமையாய் கலக்குவார் என தோன்றுகிறது.
சீரியல் பக்கம் : ராஜ குமாரி
சன் டிவி யில் இன்று முதல் தொடங்குகிறது ” ராஜ குமாரி” சீரியல். காசியில் மிக பெரும் பகுதி படமாக்கப்பட்டது இந்த சீரியலில் தான் என்கிறார்கள். ரம்யா கிருஷ்ணன் தனக்கு பேர் வாங்கி தந்த நீலாம்பரி என்கிற பெயரில் நடிக்கிறார். தினம் இரவு 8.30 க்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் நம்ம தோஸ்த் ஒருத்தர் பணி புரிந்துள்ளார்.
பிளாஷ்பேக் : லொள்ளு சபா
இன்றைய சந்தானத்தின் விசிட்டிங் கார்ட் இந்த சீரியல் தான். ஒவ்வொரு ஹிட் படத்தையும் எடுத்து கொண்டு அநியாயத்துக்கு கலாய்ப்பார்கள். பாஷா, சின்ன கவுண்டர் போன்ற உல்ட்டாக்கள் இன்றும் நினைவில் இருக்கிறது. நடித்த சந்தானத்தின் டைமிங் காமெடி மற்றும் இயக்கிய ராம்பாலாவின் புத்தி சாலித்தனம் இரண்டும் சேர்ந்து, தொடர்ந்து பார்க்க வைத்தது. சினிமாவை கலாய்த்த சந்தானத்தை சினிமா துறையினர் வெறுக்காமல், வாரி அணைத்து கொண்டனர். திறமைக்கு சில நேரங்களில் உரிய மரியாதை கிடைத்து விடுகிறது !
ஆமாம் இந்த வகை காமெடி + உல்ட்டா தொடருக்கு இன்னும் கூட நிறைய Viewers இருப்பார்களே.. ஏன் மறுபடி அவர்களோ வேறு டீமோ தொடங்க கூடாது?
கிரிக்கெட் கார்னர்
ஆண்டர்சன், சுவான் போன்ற நல்ல பவுலர்கள் இல்லாததாலோ என்னவோ இந்தியா இங்கிலாந்தை ஒரு நாள் தொடரில் எளிதில் வென்றது. இந்த கம்பீரை கட்டி கொண்டு ஏன் தான் அழுகிறார்களோ தெரியலை. ஓட்டை பீல்டிங் எனினும் எப்படியோ இந்தியா வீடு வந்து சேர்ந்தது. துவக்க ஆட்டக்கார்கள் பார்ம், வீக் ஆன வேக பந்து வீச்சாளர்கள், யுவராஜ் பேட்டிங், வாரி வழங்கும் அஷ்வின் என பல பிரச்சனைகள் – வெற்றிக்கு முன் தெரியாமல் போய் விட்டது. ஜடேஜா இந்திய மண் என்பதாலோ என்னவோ அசத்தி விட்டார்.
தோனி விரைவில் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்கிறார்கள் பார்க்கலாம்
சூப்பர் சிங்கர் T -20-பைனல்
சாய் சரண் அணியும், பூஜா அணியும் பைனலில் மோதிக்கொண்டன. மொத்தம் 9 ஜட்ஜுகள் ! T -20- முழுவதுமே, ஒவ்வொரு மேட்சிலும் இரு டீமுக்கும் இடையில் அதிக வித்யாசம் இருக்க கூடாது; அப்போது தான் கடைசி பாட்டு வரை பார்ப்பார்கள் என மார்க்குகள் இரண்டு அணிக்கும் ஒரே மாதிரி போட்டு வந்தனர். இதுவே அவர்களின் நம்பக தன்மையை குறைத்து விட்டது. இதனை பார்க்கும் ரசிகர்கள் எப்படி கண்டுபிடிக்காமல் போவார்கள் என underestimate செய்தனரோ தெரியலை. உதாரணமாய் எதிர் எதிரே பாடும் இருவரில் ஒருவர் Outstanding ஆக பாடுவார். இன்னொருவர் மிக சுமாராக பாடுவார். நன்கு பாடியவருக்கு 10 மதிப்பெண்ணும், சுமாராய் பாடியவருக்கு 9 மார்க்கும் தருவார்கள். பார்க்கும் நமக்கு காண்டாகும்
பைனலில் பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாட்டை ஷ்ரவன்- பிரியங்கா ஜோடி பாடியது அட்டகாசமாய் இருந்தது. இதே பாட்டை எஸ் பி. பி மேடையில் பாடினால் கூட இஷ்டத்துக்கு மாற்றி பாடுவார். கேட்கும் நமக்கு கஷ்டமாகிடும். ஆனால் ஷ்ரவன் அப்படியே நிஜ பாட்டை கேட்கும் விதத்தில் பாடியது அருமை. பிரியங்கா குரல் தேன் போல் இனிக்கிறது. நமக்கு தெரிந்து பிரியங்காவின் பாடல் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. தமிழகத்தின் அட்டகாசமான பாடகியாக பிரியங்கா வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்தியாவின் 64வது குடியரசு தினம் கொண்டாடும் இந்த வேளையில் நம் நாட்டைச் சுற்றி வளைத்திருக்கும் சிக்கல்களை எப்படி, எப்போது விடுவித்து நம் பாரத மாதாவை மகிழ்ச்சியுறச் செய்யப்போகிறோம்?
பருவ மழை பொய்த்ததால் விவசாயம் பாதிப்பு, மின்வெட்டு பிரச்சனையால் தொழில்கள் பாதிப்பு, அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால் சிறுதொழில் பாதிப்பு, ஊட்டச் சத்து குறைபாட்டினால் இரண்டில் ஒரு குழந்தை பாதிக்கப்பட்டுள்ள அபாயம், கடுமையான விலைவாசி ஏற்றம், இவையனைத்திற்கும் மேலாக பெண்களின் மீது பாலியல் வன்கொடுமை. வேலியே பயிரை மேய்வது போல பள்ளி மாணவிகளுக்கு ஆசியர்களால் தொல்லை, அனைத்திற்கும் மேலாக பெண்கள் வெளியே தலையே காட்ட முடியாதவாறு பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை என அமைதியற்ற சூழலே நிலவுகிறது.
டாஸ்மாக் உபயத்தினால் இன்று தமிழ்நாட்டில் 16 சதவீதம் பேர் மதுவுக்கு அடிமையாகியிருப்பதாக, ‘குளோபல் சர்வே’ என்ற ஆய்வு நிறுவனம் கண்டறிந்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மதுவிற்கு அடிமையான இவர்களாலேயே பாலியல் வன்கொடுமை, போக்குவரத்து விபத்து, கொலை, கொள்ளை போன்ற பலவிதமான பிரச்சனைகளின் அதிகரிப்பு. இதைவிட மேலும் அதிர்ச்சியூட்டும் தகவலாக, தற்போது தமிழ்நாட்டில் சராசரியாக 13 வயதிலேயே மது குடிக்க ஆரம்பித்துள்ளார்கள் என்பதுதான். இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட உத்திரப்பிரதேசத்தில் அதிகமானோர் மதுவிற்கு அடிமையாகியுள்ளனர் என்கிறது அந்த ஆய்வறிக்கை. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 6900 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கிவரும் சூழலில் சிறுவர்களும் அதற்கு அடிமையாவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகிறது.
இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாலியல் கொடுமை வழக்குகள் குறித்து விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்து, அதற்கான 13 உத்தரவுகளையும் பிறப்பித்தது பாராட்டிற்குரியது.
நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக உள்ள சட்டங்களைக் கடுமையாக்க ஒரு குழு அமைக்கப்பட்டு, பரிந்துரைகள், வரவேற்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 60,000 பரிந்துரைகள், நம் நாட்டிலிருந்து மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்துள்ளதும் அதனை அரசு கவனத்தில் கொள்வதும், பாலியல் வழக்குகளை பெண் வழக்கறிஞர்களும், பெண் நீதிபதிகளுமே விசாரணை செய்ய வேண்டும் என்ற ஆணை பிறப்பித்திருப்பதும் வரவேற்பிற்குரியது. மகளிர் காவல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டமும் பயனுள்ள வகையில் அமையலாம். பாலியல் வன்முறைகள் புரியும் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளதும் ஆறுதலான விசயம். மருததுவச் செலவையும் அரசே ஏற்பதும் பேருதவியாக இருக்கும். வணிக வளாகம், கல்லூரி, போன்ற பொது இடங்களில் இரகசியக் கண்காணிப்பு புகைப்படக்கருவி பொருத்துவதால் பிரச்சனை முழுவதுமாக தீரப்போவதில்லை என்றாலும் அத்து மீறல்களைத் தடுக்க ஓரளவிற்குப் பயனுள்ளதாகலாம்.
பல ஆண்டுகள் கழித்து தீர்ப்பு கிடைத்தும் மேல்முறையீடு நடந்துகொண்டிருக்கும், வாச்சாத்தி சம்பவம் மறந்திருக்க முடியாது. பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகும் பெண்களில் வெகு சிலரே அதுபற்றிப் பேச முன்வருகிறார்கள். மற்றவர்கள் அதைப்பற்றி தூண்டித்துருவிக் கேட்டு மேலும் அசிங்கப்படுத்தும் சில காவல் நிலையங்கள் மற்றும் காவலர்களைக் கண்டு வெட்கித் தலைகுனிந்து, அவமானத்தால் தற்கொலை செய்து கொள்ளவும் செய்கிறார்கள். அவர்கள் குடும்பத்தாரும் அதை வெளியில் சொல்லத் தயங்கி மறைக்கவே முற்படுவதும், குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், இது போன்று ஒரு சம்பவத்தில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண், புகார் கொடுக்கப்போன இடத்தில் காவல்துறையினர் மேலும் கொடுத்த தொந்தரவுகளால் மனம் நொந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி, வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டப் பெண், சம்பவம் நடந்தவுடன், தன் உடலில் தங்கிய தடயங்கள் அழியும் முன்பாக, ஒரு மாவட்ட ஆட்சியரோ அல்லது மாவட்ட நீதிபதி போன்ற முக்கிய பதவி வகிப்பவர் முன்பாகவோ புகார் கொடுத்து, மருத்துவப் பரிசோதனை, தடய அறிவியல் ஆய்வு, போன்றவற்றை உடனடியாக செயல்படச் செய்வதன் மூலம் சமபந்தப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வழிவ்குக்கலாம். ஆனால் பெரும் அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாத சூழலில் அப்பெண்களுக்கு உதவிட மகளிர் அமைப்புகளும், சேவை மையங்களும், தொண்டு நிறுவனங்களும் தயங்காமல் உதவி செய்ய வேண்டும். 18 வயதிற்குக் குறைந்தவர்களும் கூட இது போன்று குற்றங்களை இழைப்பதால் அதையும் கவனத்தில் கொண்டு, அதற்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்.
சமீபத்தில் தில்லியில் பிசியோதெரபி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு பலியான சம்பவத்தின் கொந்தளிப்பு அடங்காத நிலையிலும் மேலும் பல சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. வல்லுறவில் ஈடுபடுவோர் மட்டுமே அல்லாமல், அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களிடம் தகாத் முறையில் நடந்து கொள்ளும் உயரதிகாரிகள், உடன் பணிபுரியும் சகாக்கள், ஆகியவர்களும் கண்காணிக்கப்படவேண்டும். பேச்சிலோ, செயலிலோ பெண்களை பாலியல் ரீதியாக மன உளைச்சலுக்கு ஆளாகச் செய்பவர்கள் குறித்த விழிப்புணர்வும், அதற்கான சட்டங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் காவல் நிலையங்கள் மற்றும் பொது இடங்களிலும் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட வேண்டும். பாதுகாப்பான, போக்குவரத்து வசதி, இரவு நேரத்தில் சாலைகளில் உருப்படியாக எரியும் விளக்குகள், இரவு நேர போலீஸ் ரோந்துப்பணி. இவையெல்லாம் தடங்கலில்லாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் உள்ளுக்குள்ளேயே குமுறி, குமைந்துப் போகும் பெண்களுக்கு தங்கள் உரிமையும், அதனைப் பெறும் துணிச்சலும் குறித்த விழிப்புணர்வும் ஏற்படும்.
இப்பொழுதெல்லாம் கணினித் துறையில் பணிபுரியும் பெண்கள் அதிகமாக இரவு நேரப் பணிக்குச் செல்ல வேண்டிய தேவையும் ஏற்படுகிறது. அந்த நேரங்களில்,அலுவலகத்தினுள்ளும், செல்லும் வழியிலும் பிரச்சனை ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல் துறையின் தலையாய கடமையாகும்.
ஊடகங்களும் விளம்பரங்கள் செய்வதில் ஒரு வரையறை நிர்ணயிக்க வேண்டும். ஆண்கள் பயன்படுத்தும் சில வாசனை திரவியங்களுக்கான விளம்பரங்கள் படு மோசமாக இளைஞர்களின் பாலுணர்வைத் தூண்டும் வகையில் இருப்பது எப்படி தணிக்கைத் துறையின் கண்களில் படாமல் போகிறது என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது. இது போன்ற விளம்பர நிறுவனத்தாருக்கும் ஒரு கட்டுப்பாடு வேண்டும். பணம் சம்பாதிப்பது மட்டுமே குறியாக இராமல் சமுதாய நல்லுணர்வும் கொள்ள வேண்டும். கொலை,கொள்ளைகளை தூண்டக்கூடிய வகையில் பல விளம்பரங்கள் அமைந்துள்ளதும் நாம் அனைவரும் அறிந்ததே. இதற்கு உடனடியான தீர்வு காண வேண்டியது அவசியம்.
அனைத்திற்கும் மேலாக பெண்கள் தங்களுக்கென்று ஒரு எல்லைக்கோட்டை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். உடை உடுத்துவதில் ஆகட்டும், சக மாணவர்களிடமோ, உடன் பணியாற்றுபவர்களிடமோ ஒரு எல்லைக்குள் பழகும் வழமை வேண்டும். ஒரு பெண் தனக்குத்தானே அமைத்துக் கொள்ளும் பாதுகாப்பு வளையம் மற்றனைத்தையும்விட மிக உறுதியானது என்பதில் ஐயமில்லை. அதற்கான தற்காப்புக கலைகளைக் கற்றுக் கொள்வதிலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திலும் ஏதோவொரு தற்காப்புக்கலை கட்டாயமாக்கப்பட வேண்டும். பெற்றோர் தம் குழந்தைகளின் மீது முழுமையான கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். தங்கள் குழந்தைகளின் மனமாற்றங்களோ, செயல் மாற்றங்களோ குறித்த ஆழ்ந்த கவனம் கொண்டிருத்தல் இந்த காலகட்டத்தில் மிக அவசியமாகிறது. நம் கடமைகளை உணர்ந்து நாம் அனைவரும் செயல்பட்டாலே நம் நாடு முழுமையான குடியரசு நாடாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
என் தந்தையின் டைரியில் முதல் குடியரசு தினம் கொண்டாடிய குறிப்பு இருந்தது தில்லியில் நடந்த நிகழ்வும் சென்னையில் நடந்த நிகழ்வும் இருந்தன , சென்னையில் நடந்ததை எழுதுகிறேன் குடியரசுதினத்தை முன்னிட்டு 8000 கைதிகள் விடுதலைச் செய்யப்பட்டனர் மாலை ஐந்து மணிக்கு சென்னை கார்ப்பரேஷன் ஸ்டேடியத்தில் விழா நடக்க இருந்தது பகல் 2 மணியிலிருந்தே கூட்டம் சேர ஆரம்பித்து விட்டது சுமார் இரண்டு இலட்சம் இருக்கலாம்.திடீரென்று நிசப்தம் ,,,, கோச்சு வண்டியின் சப்தம் ஆம் கவர்னர் தம்பதி கோச்சில் ஸ்டேடியத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர் நெருக்கமாக இரு குதிரைகள் ராஜ நடைப் போட்டு அவரது கோச்சுடன் வந்துக்கொண்டிருந்தன அதில் ஒருவர் போலீஸ் உதவி கமிஷனர் திரு ஆர் எம் மகாதேவன் மற்றொருவர் சார்ஜெண்ட் மேஜர் லூயிஸ் ,,,,
கவர்னரின் வரவேற்பு மிகப்பிரமாதமாக இருந்தது சென்னையின் முதன் மந்திரி பி எல் குமாரசாமி ராஜா ஓடி வந்து வரவேற்றார், போலீஸ் படையும் மரியாதைச் செலுத்தினர் அங்கு ஒரு மேடையில் தேசியக்கொடி தயாராக வைக்கப்பட்டிருந்தது கவர்னர் அங்குச் சென்று தேசியக்கொடியைப் பறக்கச் செய்தார் பின் அதற்கு மரியாதை அளித்தார். உடனே இராணுவப்படைகளும் மரியாதைச் செலுத்தின ,மாலையிலிருந்து இரவு வரை மெரினா கடற்கரையில் வாண வேடிக்கை கண்களுக்கும் மனதுக்கும் விருந்தாக இருந்தது வனொலியில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது காலையில் வந்தேமாதரம் பாடல் டீஅர் விஸ்வநாத சாஸ்திரிதொகுத்தது பின்மதுரை சோமசுந்தரம் கச்சேரி ,பின் டில்லியில் நடந்த குடியரசு விழாவின் நேர் முக வர்ணனை ,மாலை திருவெண்காடுபி சுப்பிரமண்யப்பிள்ளை நாதஸ்வரம் பின் குமாரசுவாமி ராஜாவின் குடியாட்சி சிறப்புறை , என் எஸ் கிருஷ்ணன ,டிஏ மதுரம் அவர்களின் “விந்தை மனிதன் ” இரவு திருமதி எம்.எஸ் சுப்பலட்சுமி அவர்களின் கச்சேரி ,,,,, இத்துடன் வானொலி நிகழ்ச்சியும் முடிவடைந்தது ,,,,,,,, ஆஹா பழையகால என் தந்தை நினவுகளை நானும் மனதில் கொண்டுவந்து பார்க்கிறேன் இப்போது டிவியில் பல சானலகள் அதில் கச்சேரி என்பது மிக மிக குறைவு ,பல சினிமா கதாநாயகர்கள் நாயகிகள் வந்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர் யாராவது தேசத்திற்கு உழைத்து எங்கேயோ ஒரு சின்ன வீட்டில் வாழ்ந்து வரும் சுதந்திர தியாகிகளைக் கண்டு பேட்டி எடுத்து டிவி முன் அழைத்து கௌரவிக்கலாமே ,இதே போல் அந்தக்காலத்தில் இருந்த கவிஞர் எழுத்தாளர் ,தியாகிகள் வீரர்கள் போன்றவர்களை அழைத்து அவர்கள் அனுபவங்களைப் பகிர்ந்துக்கொள்ளச்சொல்லாமே !….. என் இனிய ‘குடியரசு வாழ்த்துக்கள்’
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பி லாத சமுதாயம்
உலகத் துக்கொரு புதுமை-வாழ்க (பாரத)
மனித ருணவை மனிதர் பறிக்கம்
வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ-புலனில்
வாழ்க்கை இனியுண்டோ?-நம்மி லந்த
வாழ்க்கை இனியுண்டோ?
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு;
கனியும் கிழங்கும் தானி யங்களும்
கணக்கின் றித்தரு நாடு-இது
கணக்கின் றித்தரு நாடு-நித்த நித்தம்
கணக்கின் றித்தரு நாடு-வாழ்க! (பாரத)
இனியொரு விதிசெய் வோம்-அதை
எந்த நாளும் காப்போம்;
தனியொருவனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடு வோம்-வாழ்க! (பாரத)