‘குடியரசு தின நினைவுகள்’
விசாலம்
என் தந்தையின் டைரியிலிருந்து
குடியரசு தினம் ஜனவரி 26 — 1950
என் தந்தையின் டைரியில் முதல் குடியரசு தினம் கொண்டாடிய குறிப்பு இருந்தது தில்லியில் நடந்த நிகழ்வும் சென்னையில் நடந்த நிகழ்வும் இருந்தன , சென்னையில் நடந்ததை எழுதுகிறேன் குடியரசுதினத்தை முன்னிட்டு 8000 கைதிகள் விடுதலைச் செய்யப்பட்டனர் மாலை ஐந்து மணிக்கு சென்னை கார்ப்பரேஷன் ஸ்டேடியத்தில் விழா நடக்க இருந்தது பகல் 2 மணியிலிருந்தே கூட்டம் சேர ஆரம்பித்து விட்டது சுமார் இரண்டு இலட்சம் இருக்கலாம்.திடீரென்று நிசப்தம் ,,,, கோச்சு வண்டியின் சப்தம் ஆம் கவர்னர் தம்பதி கோச்சில் ஸ்டேடியத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர் நெருக்கமாக இரு குதிரைகள் ராஜ நடைப் போட்டு அவரது கோச்சுடன் வந்துக்கொண்டிருந்தன அதில் ஒருவர் போலீஸ் உதவி கமிஷனர் திரு ஆர் எம் மகாதேவன் மற்றொருவர் சார்ஜெண்ட் மேஜர் லூயிஸ் ,,,,
கவர்னரின் வரவேற்பு மிகப்பிரமாதமாக இருந்தது சென்னையின் முதன் மந்திரி பி எல் குமாரசாமி ராஜா ஓடி வந்து வரவேற்றார், போலீஸ் படையும் மரியாதைச் செலுத்தினர் அங்கு ஒரு மேடையில் தேசியக்கொடி தயாராக வைக்கப்பட்டிருந்தது கவர்னர் அங்குச் சென்று தேசியக்கொடியைப் பறக்கச் செய்தார் பின் அதற்கு மரியாதை அளித்தார். உடனே இராணுவப்படைகளும் மரியாதைச் செலுத்தின ,மாலையிலிருந்து இரவு வரை மெரினா கடற்கரையில் வாண வேடிக்கை கண்களுக்கும் மனதுக்கும் விருந்தாக இருந்தது வனொலியில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது காலையில் வந்தேமாதரம் பாடல் டீஅர் விஸ்வநாத சாஸ்திரிதொகுத்தது பின்மதுரை சோமசுந்தரம் கச்சேரி ,பின் டில்லியில் நடந்த குடியரசு விழாவின் நேர் முக வர்ணனை ,மாலை திருவெண்காடுபி சுப்பிரமண்யப்பிள்ளை நாதஸ்வரம் பின் குமாரசுவாமி ராஜாவின் குடியாட்சி சிறப்புறை , என் எஸ் கிருஷ்ணன ,டிஏ மதுரம் அவர்களின் “விந்தை மனிதன் ” இரவு திருமதி எம்.எஸ் சுப்பலட்சுமி அவர்களின் கச்சேரி ,,,,, இத்துடன் வானொலி நிகழ்ச்சியும் முடிவடைந்தது ,,,,,,,, ஆஹா பழையகால என் தந்தை நினவுகளை நானும் மனதில் கொண்டுவந்து பார்க்கிறேன் இப்போது டிவியில் பல சானலகள் அதில் கச்சேரி என்பது மிக மிக குறைவு ,பல சினிமா கதாநாயகர்கள் நாயகிகள் வந்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர் யாராவது தேசத்திற்கு உழைத்து எங்கேயோ ஒரு சின்ன வீட்டில் வாழ்ந்து வரும் சுதந்திர தியாகிகளைக் கண்டு பேட்டி எடுத்து டிவி முன் அழைத்து கௌரவிக்கலாமே ,இதே போல் அந்தக்காலத்தில் இருந்த கவிஞர் எழுத்தாளர் ,தியாகிகள் வீரர்கள் போன்றவர்களை அழைத்து அவர்கள் அனுபவங்களைப் பகிர்ந்துக்கொள்ளச்சொல்லாமே !….. என் இனிய ‘குடியரசு வாழ்த்துக்கள்’