” நா ஜீவோ தாரா “
விசாலம்
ஸ்ரீ த்யாகராஜ ஆராதனை பகுள பஞ்சமி அன்று திருவையாற்றில் அவரது பிருந்தாவனத்தில் மிகச் சிறப்பாக நடக்கும் அன்றைய தினம் பெரிய சங்கீத மேதைகள் அவர் இயற்றியப் பஞ்ச ரத்ன கீர்த்தனங்கள் பாடுவார்கள்.அப்போது அவரது சிலைக்கும் அபிஷேகம் ஆராதனை, பூஜைகள் நடக்கும் . அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் இது .அவர் தன் ஐந்து வயதிலிருந்தே ஸ்ரீராமநாமத்தை ஜபிக்க ஆரம்பித்தார் சுமார் 95கோடிகள் ஜபித்திருக்கிறார், ஒரு சமயம் அவ்ர் திருப்பதி கோவிலுக்குப் போய் திரும்பி வந்துக் கொண்டிருந்தார் அப்போது ஒரு இடத்தில்ஒரே கூட்டம் , என்னவென்று விஜாரித்ததில் ஒருவன் கிணற்றில் விழுந்து இறந்து விட்டான் என்றுத் தெரிய வந்தது அதாவது ஒரு பிராமணன் தன் மனைவி, குழந்தையுடன் அங்கிருக்கும் ஒரு கோவிலுக்குப் போனான், இருட்டிவிட்டது ஒரு ஆலயத்திற்குள் சென்று இரவைக் கழித்துவிட்டுச் செல்ல நினைத்தான் ஆனால் அந்தக் கோவில் உள்ளேத் தாழிடப்பட்டிருந்தது என்ன செயவது என்றுத் தெரியாமல் அங்கிருக்கும் மதில் மேல் ஏறி உள்ளேக் குதித்து பின் உள் இருக்கும் தாழ்ப்பாளைத் திறக்கலாம் என்று எண்ணி உள்ளே குதித்தான் அவ்வளவுதான் டம் என்றச் சத்தத்துடன் கிணற்றில் விழுந்து விட்டான் நீரில் மூழ்கி தத்தளித்து செத்துப்போனன் ,.அவள் மனைவி வாசலில் தன் கணவன் இவ்வளவு நாழியாகியும் வெளியில் வரவில்லையெ என்றுக் கவலையுடன் அழுது ஊரைக் கூட்டினாள் /எல்லொரும் கோவில் உள்ளேத்தேடி பின் அவனைக் கிணற்றிலிருந்து வெளியே எடுத்தார்கள். அவன் கழுத்தில் துளசி மாலை
இருந்தது அவன் சிறந்த விஷ்ணு பக்தன் என்று தெரிந்து, கொண்டார்
“நா ஜீவோ தாரா” என்றுத் தெலுங்கில் ஒரு பாட்டு அதாவது அந்த மனிதனின் உயிரைத் தந்துவிடு ராமா என்று உள்ளம் உருகிப் பாடினார் தியாகராசர் அந்த உயிர்ப் போன மனிதன் உறங்கி எழுந்தவன் போல உயிர்ப் பெற்று நின்றான் .என்னபக்தி! என்ன ராம நாமத்தின் மகிமை ,,,
,
அவர் பாடிய பாடல்
ராஜீவலோசந ராஜ ராஜ சிரோமணி
நா சூபு ப்ரகாசமா
நா நாஸிகா பரிமளமா
நா ஜபவர்ண ரூபமா
நாது பூஜா ஸூமமா த்யாக ராஜநுத
இதன் பொருள்
என்னுடைய ஜீவனுக்கு ஆதாரமாயுள்ளவனே
நான் பார்க்காத ஒளியாய் உள்ளவனே
நான் என்னுடைய சுவாசத்தினால் உன்னுடைய சுகந்தத்தை முகர்கிறேன்
நான் ஜபிக்கும் அக்ஷரத்தின் ரூபமாய் உள்ளவனே ,
என்னுடைய பூசையின் புஷ்பமாய் உள்ளவனே
தியாகராஜனால் துதிக்கப்பட்டவனே …..
பாகவதத்தில் துருவசரித்திரத்தில் துருவனுக்கு மஹாவிஷ்ணு பிரத்த்யட்சமான்வுடன் ஒருஸ்லோகம் வரும் அதன் பொருள் இந்தப்பாட்டுப்போல் தான் இருக்கும்
” எவர் என்னுள் பிரவேசித்து தூங்கிக்கொண்டிருந்த வாக்கு கை கால் காது கண்கள் ,தேகம் முதலியவைகளைத் தன் சக்தியினால்
ஜீவிக்குமாறு செய்தாரோ அந்த மஹாபுருஷனான மஹாவிஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன்
ஸ்லோகம்
யோந்த பிரவிக்ய மம வாசாமிமாம் ப்ரஸிப்தம்
ஸஞ்ஜீவயதியகில சக்திதர ஸ்வதாம்னா
அன்யாம்ச ஹஸ்த சரணா ஸ்ரவண த்வகாதீன
பிராணான் நமோ பகவதே புருஷாய துப்யம் ‘
இந்தப்பாட்டிலும் ஸ்ரீ தியாகராஜர் ஆரம்பத்திலேயே “என்னுடைய ஜிவனுக்கு ஆதாரமானவனே “ என்கிறார் இதில் “அஹம் பிரும்மாஸ்மி “என்ற தத்துவம் சொல்லி அந்த இறந்தவன் ஜீவனுக்கும் நீதான் ஆதாரம் என்று சொல்லாமல் சொல்லி பாடுகிறார் ……. கீதையில்
பத்தாவது அத்தியாயம் 20 ஸ்லோகத்திலும் இது சொல்லப்பட்டிருக்கிறது என்று தெரிந்துகொண்டேன்
அவருடைய பாடலிலும் “நா ஜீவோ தாரா” என்பது இதைக்குறிக்கிறது என நினைக்கிறேன்
அந்த மனிதனின் உயிரைத் தந்துவிடு ராமா என்ற பொருள் பட பாடிய பாடலால் அந்த உயிர்ப் போன மனிதன் உறங்கி எழுந்தவன் போல உயிர்ப் பெற்று நின்றான் .என்னபக்தி! என்ன ராம நாமத்தின் மகிமை …… “ராம நாமம்” ஒரு சிறந்த மந்திரம் இதை எப்போதும் ஜபிக்கலாம் ப்டுக்கையிலும் ஜபிக்கலாம் அதன் சக்தியே தனி வாருங்கள் நாமும் ராம நாமம் சொல்லலாமே !
படத்திற்கு நன்றி:
http://devotionalonly.com/wp-content/uploads/2010/04/sri-ramchandraji-ki-jai.jpg
தாரக மந்திரமாம் ராம நாமத்தின் புகழ் போற்றும் மிக அற்புதமான கட்டுரை.
கீதை பத்தாவது அத்தியாயம், விபூதி யோகம் 20வது ஸ்லோகம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
அஹமாத்மா கு³டா³கேஸ² ஸர்வபூ⁴தாஸ²யஸ்தி²த: |
அஹமாதி³ஸ்²ச மத்⁴யம் ச பூ⁴தாநாமந்த ஏவ ச || 10- 20||
‘அர்ஜுனா, அனைத்து உயிர்களின் உள்ளே இருக்கும் ஆத்மா நானே. அந்த உயிர்களின் ஆதி, நடு மற்றும் இறுதியும் நானே தான்’.
அனைத்து ஜீவர்களுக்கும் ஆதாரமானது ராமநாமமே. இன்று நாம் வணங்கும் எத்தனையோ மஹான்கள், ராம நாமத்தை இடைவிடாது ஜபித்து நமக்கு நல்வழி காட்டியவர்களே. இதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். தங்களுக்கு பல கோடி நன்றிகள்.