பொங்கிடு பாரதமே!

 

சத்தியமணி

தாமரைப் பூக்களுக்கு சன்மானம் கற்பழிப்போ
காமனின் பாவத்திலே தன்மானம் வழிபறிப்போ
சேமங்கள் தரும்மாதர் குலத்துக்கோ இத்துன்பம்
சன்மங்கள் தரும்தாயின் பெண்மைக்கோ இத்துயரம்
வன்மங்கள் வீழாதோ வஞ்சகமும் சாகாதோ
தன்மக்கள் பாழாதல் அரசாங்கம் தகர்க்காதோ
என்னக் கொடுமையாடா எதனைச் சொல்லிடுவேன்
உண்ணச் சோறில்லை ஒழுக்கமும் ஊணில்இல்லை
கர்மத்தின் பலியென்றின் கடவுளுக்கும் வலிக்காதோ
பார்த்து இருப்பதுவும் பாரதப் பண்பாடோ
பொறுத்தது போதும் பொங்கிடு பாரதமே – இந்நிலை
கொடுத்தவர் கெடுத்தவர் கூட்டம் வீழ்த்திடுமே

படத்திற்கு நன்றி:

http://www.picturesof.net/pages/110113-174848-182053.html

Share

Comments

2 responses to “பொங்கிடு பாரதமே!”

  1. sowmeya

    மங்கையர்க்கு  அதுவும்  குமரிகளுக்கு நேரிடும்  பயங்கரத்தை பிளக்கும் கவிதை அருமை

  2. venkatesan

    Great …. and nice one

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *