சத்தியமணி
பங்குனி உத்திரம் நினைவாக (நொய்டாவில் முருகன் ஆலய குடமுழுக்கில் அறுமுகனுக்கு அர்ப்பணித்தது)
அம்மாவின் மடியில் சிம்மாசனம் செய்து
அரசாளும் ஆறுமுகனே
இம்மாகலி காலத் தீவினைகள் அகற்ற
இடம் கண்டு வந்த சிவனே
சிம்மாளம் கண்டு சிரிப்பான வதனத்தால்
சிறைசெய் தமிழ் கள்வனே
பம்மலால் படைவீடு குடிகொண்ட கந்தா
பட்டாடைச் சுற்றும் அழகா
மயில்தோகை விரித்தாடும் எழிலோடுஏறி
விளையாடும் வேலகுகனே
துயில்நீங்கத் துணைவியர் துதிபாடக் காதல்
முகங்காட்டும் சக்திமகனே (1)

Leave a Reply