-செண்பக ஜெகதீசன்
ஆண்டவன் படைப்பு
அலட்சியப்படுத்ப்படுகிறது..
தொப்புள்கொடி உறவும்
தொலைந்து போகிறது..
இரத்த பாசத்தை
இயலாமை வென்றுவிடுகிறது..
அவசர ஆசை
அவமானச் சின்னமாகிவிடுகிறது..
கண்ணியம் என்பது
காற்றில் பறந்துவிட்டது..
ஏமாந்ததற்கு ஓர்
எடுத்துக்காட்டாகி விட்டது..
தவறு செய்ததற்கு
தண்டனை மாறிவிட்டது..
தாய்மை என்பது
தலைகுனிவாகிவிட்டது-
குப்பைத் தொட்டியில்
குழந்தை…!

Leave a Reply