எனக்குள்….

 

சு.ரவி

C34A4ABF-599A-4D23-ADB6-D2FF3BCC2728

உள்ளக் காட்டில் உலவும் விலங்கின்
உறுமல் கேட்கிறது-கோபப்
பொருமல் கேட்கிறது!

அன்பால் வசியம் செய்தேன் அதனால்
அடங்கி ஒடுங்கியது- பிறரை
வணங்கி ஒதுங்கியது. – அந்த
அன்பின் வலிமை அறியா மாந்தர்
அதட்டி மிரட்டியதால் – விழியை
உருட்டி வெருட்டியதால் – என் (உள்ளக்)

அறிவுத் தீயை மூட்டி வளர்த்தேன்
அஞ்சி நடுங்கியது – உள்ளே
சென்று பதுங்கியது – எரியும்
அறிவுத் தீயை அணைக்கும் மாந்தர்
அறியாச் செய்கையினால் -அவர்தம்
புரியாக் கொள்கையினால் – என் (உள்ளக்)

தூங்கும் விலங்கைத் துணிப் பந்தாம் என
எட்டி உதைப்பவரே – காலால்
தட்டி மிதிப்பவரே – மிருகம்
ஓங்கும் பழிவெறி விழிகளில் மின்னிட
எழுமென்றறியீரோ – உமதுடல்
விழுமென் றுணரீரோ! – இதோ என் ( உள்ளக்)

Share

Comments

4 responses to “எனக்குள்….”

  1. அண்ணா .நன்றி .அதில் ஒரு பாரா விடுபட்டு போயிருக்கிறதோ ?

  2. Su.Ravi

    What a sharp memory! Yes.. Here it goes..the stanza that follows the pallavi…

    ……………………………………………………..- உலகின்
    கள்ளத் தனமொரு பிள்ளைத் தனமாய்ச்
    சீண்டி எழுப்பியதால் – அதனைத்
    தூண்டி உலுக்கியதல் – என்              (உள்ளக்) 

    Thanks for pointing out

    Su.Ra

  3. அண்ணா , மன்னிக்கவும் . இன்னும் ஒரு பாரா ? 

  4. K.Ravi

    The tiger roars, my heart soars to the dizzy heights of poetry
    The force of love shines above and thats the greatest mystery
    Thank you Bhaskar thanks a lot and thank you Su.Ravi
    Poetry is my wine divine your loving brother k.Ravi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *