தந்தையர் நாள் கவிதை

 

தந்தை
18.06.17

unnamed (2)

அன்னைக்கும் தனயன்
ஆண்மையில் பேரழகன்
இல்லத்தின் ஆணிவேர்
ஈசனாய்க் காப்பவன்
உன்னத சுமைதாங்கி
ஊர்மெச்சும் குணவான்
எளிமையைத் தனதாக்கி
ஏற்றத்திற்கு வழிவகுப்பவன்
ஐயமறுக்கும் ஆசான்
ஒப்பற்ற நண்பன்
ஓய்விலும் ஜீவநதி
ஔடதமாய் ஆறுதலில்
ஃதே தந்தையாம் தாயுமானவன்.

– கவிஞர் சித்ரப்ரியங்கா ராஜா,
திருவண்ணாமலை.

Share

Comments

One response to “தந்தையர் நாள் கவிதை”

  1. பழ.செல்வமாணிக்கம்

    அருமை. தந்தையின் அன்பை , உயிரெழுத்துக்கள் வரிசையில் அழகு கவிதை படைத்து, தந்தை உயிருக்கு நிகர் என்பதை எழுதிய கவிஞருக்கு பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *