Month: November 2015

  • பறவைகளுக்கு உணவு தரும் பழ மரங்களை நடுங்கள்

    பறவைகளுக்கு உணவு தரும் பழ மரங்களை நடுங்கள் …  பறவைகள் ஆர்வலர் பேச்சு …

    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பறவைகள் அறிமுகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.

    பயிற்சிக்கு வந்தவர்களை ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். பெண் மருத்துவர் பார்கவி முன்னிலை வகித்தார். பறவைகள் ஆர்வலர் பிரசன்னா சிறப்புரை நிகழ்த்தும்போது பறவைகள் பற்றியும் அவற்றின் நன்மைகள் பற்றியும், காடுகளில் அதிகமான மரங்கள் வளர்வதற்குப் பறவைகள்தான் காரணம் என்பது பற்றியும், மரம் நடும்போது பறவைகளுக்கு உணவு தரும் பழ மரங்களை நடுங்கள் என்றும், இருவாட்சி, கொக்கு, தையல்கார குருவி, மான் சிட்டு, தவிட்டுக் குருவி, மீன் கொத்தி, கிளி வகைகள், மரங்கொத்தி போன்ற பறவைகளின் படங்களை காண்பித்தும், அதன் குணங்களை தெரிந்து கொள்ள செய்தும் விளக்கிப் பேசினார்.

    IMG_4370

    மேலும் பேசுகையில், மனிதன் இல்லாமல் பறவைகள் வாழ முடியும். ஆனால், பறவைகள் இல்லாமல் மனிதன் வாழமுடியாது. எனவே பறவைகள் அழியாமல் பாதுகாக்க பழம் தரும் மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்று பேசினார்.

    நிகழ்ச்சியில் மாணவிகள் பரமேஸ்வரி, தனலெட்சுமி, சந்தியா, ராஜலெட்சுமி, கார்த்திகா, கிருத்திகா; மாணவர்கள் ஜீவா, ரஞ்சித், ராஜேஷ் ஆகியோர் பறவைகள் தொடர்பாகக் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர். நிறைவாக ஆசிரியை சாந்தி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

    பட விளக்கம்: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பறவைகள் அறிமுகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பயிற்சியினை பறவைகள் ஆர்வலர் பிரசன்னா விளக்கிக் கூறினார்.
    உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம்.

    Share
  • எமிலி மெடில்டா

    – கவிஜி. 

    முதன் முதலாக காதலை காதலிக்கும் பெண்ணிடம் சொல்வதற்கு பதிலாக அவளின் அப்பாவிடம் சொன்னவன் நானாகத்தான் இருப்பேன்….

    அது ஒரு சனிக்கிழமை….

    கண்டிப்பாக பள்ளி விடுமுறை… அவள் மட்டும்தான் வீட்டில் இருப்பாள்… அவளின் அப்பா அம்மா இருவரும் வேலைக்கு போய் விடுவார்கள்.. என்பது சமீப காலமாக அவளைப் பின் தொடர்ந்ததில் நான் தெரிந்து கொண்டவைகள்…ஏற்கனவே, போட்ட திட்டத்தின்படி.. நேற்றே லவ் கிரீடிங்க்ஸ் வாங்கி “இந்த மாதிரி …..இந்த மாதிரி…….” என்று எல்லாம் (இடது கையால்) எழுதி, பெயர் போடாமல்… “உன்னவன்” என்று எழுதி தபாலில் சேர்த்து விட்டேன்.. இன்று சனிகிழமை.. போஸ்ட்மென் வருவார்.. அவளிடம் கொடுப்பார்.. அவள் படிப்பாள்.. படிக்கும்போது எவ்வாறு எதிர்வினை புரிகிறாள் என்பதனைப் பார்க்கும் ஆவலில் நான் சற்று தள்ளி கிரிக்கெட் விளையாடுவது போல அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்……

    நேரம் ஓடிக் கொண்டிருந்தது…. 9…..10…..11…. 11.30…..

    நானே பந்து வீசிக் கொண்டிருந்தேன்….. பந்து வீசும் இடத்தில் இருந்தால்தான் அவளை நன்றாக நேருக்கு நேர் பார்க்க முடியும்… அவளும் வெளியே நின்று அவளின் சைக்கிளை கழுவிக் கொண்டிருந்தாள்… அதே குட்டைப் பாவாடை.. எனக்கு பிடித்த அதே சிவப்பு பனியனில் நேற்று தான் இந்தியா வந்த பிரெஞ்ச்காரி மாதிரி இருந்தாள்…

    “முதல் முதல் திருடியதால்…. என்னை முழுசாய் திருடவில்லை…………………..” என்று சுப்ரமணி வீட்டு ரேடியோ… எனக்காகவே பாடுவது போல பாடிக் கொண்டிருந்தது……. நேரம் ஆக, ஆக… எனக்குள் கொப்பளிக்கத் தொடங்கியது, டோபாமைனின் வீரியமா… பயங்களின் அமிலமா…? என்று புரியவில்லை.. புரியாத புள்ளியில்தான் அவளின் அப்பா வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தார்….

    நன்றாக கேட்டது……..”போ.. அம்மா கூப்டறா….நான் கழுவறேன்” என்று சொல்லிக் கொண்டே சைக்கிளைக் கழுவத் தொடங்கினார்..

    எனக்கு வியர்த்து விட்டது…. போடுகிற பந்து எல்லாம் நோ பால் ஆகவே போய்க் கொண்டிருக்க……..

    பாலு….. என்னிடம் வந்து “இன்னைக்கு அடி கண்டிப்பாக உண்டு.. பேசாம இங்க இருந்து போய்டு…..”- என்று காதுக்குள் கிசுகிசுத்தான்….

    கையை பிசைய கூட மறந்த விட்ட படபடப்பில்… “என்ன செய்யலாம்”- என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே மகராஜன் போல போஸ்ட்மேன் வந்தார்… நேராக அவரிடமே சென்று …..”உங்க பொண்ணுக்கு போஸ்ட் வந்தருக்கு… குடுத்ருங்க…….” என்று கொடுத்து விட்டு போய் விட்டார்… எனக்கு அழுகையே வந்து விடுவது போல இருந்து… அவர் அங்கேயே பிரித்தார்.. நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன் …… எங்கள் குழுவில் உள்ள 6 பேருமே அவரையேதான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்……திக் திக் நொடிகளில்… எங்கள் விளையாட்டு ஆங்காங்கே காலத்தை நிறுத்துவது போல.. நிறுத்தி ஒரே புள்ளியில் குவிந்த வண்ணம் நடுங்கிக் கொண்டிருக்க……..

    “எமி……………………லீ………………………………..” என்று அழைத்தார்.

    அவளும் விரிந்த கூந்தலோடு டீ குடித்துக் கொண்டே வெளியே வந்தாள்.. ‘என்னப்பா’ என்பது போல…

    கிரீட்டிங்கை நீட்டினார்.. அவள் வாங்கிப் பார்த்த மறுகணம் பட்டென்று என்னைப் பார்த்தாள்…… நான் அதற்கு முந்தைய கணமே சட்டென திரும்பிக் கொண்டேன்… அவளின் அப்பா அவள் பார்த்த பார்வையை நூல் பிடித்தது போல சட்டென திரும்பினார்.. அதற்குள் அவள் கப்பென்று குனிந்து கொண்டு “தெரிலப்பா… யார்னு”- என்றபடியே வீட்டுக்குள் வேகமாக சென்று விட்டாள்…நான் கண்களை எதுவரை முடியுமோ அது வரை நீட்டித்தேன்….

    “அப்பறம் என்னதான் ஆச்சு.. சொல்லு………”- என்றேன்…. சைக்கிளை மிதித்துக் கொண்டே….

    “அதை அனுப்பினது நீ தான்னு ஒத்துக்கோ அப்புறம் ஏன்னாச்சுனு நான் சொல்றேன்…”- என்றாள் எமிலி.. என் சைக்கிளில் பின்னால் அமர்ந்து கொண்டு…

    “அயோ இல்லடி.. நான் அனுப்பல…”-என்று சொல்லி மெல்ல சிரித்தேன்….

    “பொய் சொல்லாதடா………….” என்றபடியே என் வயிற்றைப் பிடித்து கிள்ளினாள்…..

    “எனக்கு தெரியும்.. அவளோ தைரியமா உன்ன தவிர எவனும் அந்த வேலையை பண்ணிருக்க மாட்டான்….” என்று என் முதுகில் சாய்ந்து கொண்டாள், செல்லமாய் முகத்தை முதுகினில் உரசிக் கொண்டே…..

    நாங்கள் பயணித்த மழைப் பிரதேசத்தில் சனிக்கிழமை என்பது அத்தனை அழகா என்பது போல இருந்தது… எங்கள் பார்வைக்குள் கிடந்து உருளும் பொன்னிற கூந்தலென மேகங்களும், பனி சாரலும்….வந்து போகும் காற்றெல்லாம் வாடைக் காற்றா என்பது போல… ஓடை நீரில் முகம் தெரியும் சூட்சுமமாக நீர் தெளித்து விளையாடும்…..இயல்புகளில் இன்னிசை சுமக்கும் இயற்கையோடு நான் அவளாக, அவள் நானாக… நாங்கள் நாங்களாக… அல்லது வேறு யாரோவாக…மாறிக் கொண்டிருந்தோம்… இல்லாத தேசத்தில் இருப்பது போல ஒரு கனவுலகைக் கட்டிக் கொண்டே………

    “உனக்கு ஞபாகம் இருக்கா… நாம எப்டி முதல்ல பார்த்தோம்னு”- கேட்டேன்…..

    அவள்…”ம்ம்ம்………….. இருக்கு………………… ஒரு வெங்காயக்காரன்தானே நம்மல சேத்து விட்டான்……….” என்று சொல்லி சிரித்தாள்…

    உருண்டைக் கண்கள்.. கனத்த உதட்டில்… கேரளக்காரி என்பதை அவ்வப்போது.. கண்கள் சுருக்கி….”அய்ய்யே…….” என்று சொல்வதில் காட்டிக் கொண்டே இருப்பாள்…இருந்தாள்…. அவளோடு இருப்பது போல ஒரு வித பரவச நிலை… வேறெங்கும் நான் கண்டதில்லை… ரிலேடிவிட்டி தியரியை புரிந்து கொண்ட கணம் அவளின் அருகாமை… அவளுக்கும் அப்படித்தானாம்.. சொல்லுவாள்.. சில போது வார்த்தைகளை மெல்லுவாள்…

    “எங்கப்பா யார் தெரியுமா… மிலிட்டரி…” என்ற ஒரு நாளில்தான் முதல் முத்தத்தை எதிர் பார்க்காத கணத்தில் கொடுத்து விட்டு ஓடி வந்தேன்… அடுத்த நாள்… காலையில் கல்லூரி செல்லும் பேருந்துக்காக காத்துக் கொண்டிருக்கையில் என் அருகே கோபமாக வந்து என் தலையில் நங் என்று கொட்டி விட்டு ஓடிப் போனாள்… என் நண்பர்கள் மத்தியில் சிரிப்பதா அழுவதா என்று புரியாமல் பேருந்தில் ஏறி போனது ஞாபகங்களின் கவிதை….

    “ஆங்….. தள்ளுவண்டி வெங்காயக்காரன்…….. இன்றும் எப்போதாவது பார்ப்பேன்…அதே புன்னை கையோடு கடந்து செல்வார்….

    அன்று ஒரு திங்கள் கிழமை…

    நான் தலைக்கு குளித்து விட்டு வாசலில் நின்று தலையைக் காய வைத்துக் கொண்டிருந்தேன்… எனக்கு வலது பக்கத்தில் ஒரு பெண்…………. ம்ம்ம்… ஒரு 11வது படிப்பாள் என்று நினைக்க கூடிய உடல்வாகில்…… துணியை அயர்ன் பண்ணக் கொடுத்து விட்டு காத்துக் கொண்டு நின்றாள்… நான் தலையைத் துவட்டுவதற்கு தலையை அப்படியும் இப்படியும் ஆட்டினேன்… அவளும் எதற்கோ சரி என்பது போல தலையை ஆட்டினாள்… இடையில் வெங்காயக்காரன், என்னையும் பார்த்து விட்டு அவளையும் பார்த்து விட்டு.. “ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்………………. “- என்பது போல தலையை ஆட்டினான்… எனக்கு ஒன்றும் புரியவில்லை… நான் வெங்காயக்காரனையும் பார்க்கிறேன்… அவளையும் பார்க்கிறேன்.. அவளும் அப்படியே பார்த்தாள்….. நான் திரும்பி வீட்டுக்குள் வந்து விட்டேன்…

    ஆனால் அன்று இரவு என்னால் தூங்க முடியவில்லை…என்னமோ செய்தது… யோசிக்க யோசிக்கும், யோசிக்கும் அத்தனை யோசனையும்…ஒரு யோசனையில்தான் போய் நின்றது.. அது அவளின் முகம்..

    “என்னடா இது வம்பா இருக்கு.. நான் ஏன் இப்போ அந்த புள்ளைய நினைக்கறேன்…”- என்று என்னென்னமோ ஓடுகிறது…. காலையில் மந்திரித்து விட்டது போல அதே நேரம் அதே இடத்தில் தலை துவட்டிக் கொண்டு நின்றேன்.. அவளும் அதே இடத்தில் துணி அயர்ன் பண்ணக் கொடுத்து விட்டு காத்துக் கொண்டிருந்தாள்… இன்று வெங்காயக்காரன் இல்லை…. ஆனால் நான் உரிந்து கொண்டு நின்றேன்…எங்கேயோ பார்ப்பது போல பார்த்தேன்.. அவளும் அதே போல் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டாள்…..

    “பேர் என்னவாக இருக்கும்.. என்ன படிப்பாள்…?…”

    அப்போதுதான் கவனித்தேன்… குட்டைப் பாவாடை.. குட்டியூண்டு சட்டை… பொட்டில்லாத முகம்… அழுத்தமான பார்வை… நான் பார்க்க பார்க்கவே துணியை வாங்கிக் கொண்டு நடக்கத் தொடங்கினாள்… அழுத்தமான நடை… அத்தனை அழகான கச்சிதமான… கம்பீரமான நடை… நேர் கொண்ட பார்வையில் வேகமாய் போய்க் கொண்டிருந்தாள்….அந்த வீதியே அதிர்வது போல உணர்ந்தேன்… இன்னும் வேறு வகையான மாய சுழலுக்குள் சூழலுக்குள் நான் போவதும் வருவதும் போல கிறு கிறுத்து நின்றேன்.. நிற்பது நானாக இருப்பினும்… நின்றது காதல்தான் என்று உணர்ந்தேன்…

    “நானும் உன்ன பார்த்தேன்… ஆனா… இப்டி உன்னையே பார்ப்பேன்னு யோசிக்கல…”- நாங்கள் மரத்தினடியில் அமர்ந்து கொண்டு இலை உதிரும் சிறு துளிகளில் சில்லிட்டபடியே கண்களும் கண்களும் நோக்க.. நொடிகளைக் கவிதையாக்கி கற்பனைக்குள் நீராடும் மீனாகும் துடிப்போடு… கொஞ்சம் நெருக்கிக் கொண்டே… நெருங்கினோம்… நெருங்கிய பொழுதெல்லாம் நொருங்கினோம்….

    “ம்ம்ம்… நீயே சொல்லு… நீ தான் கதை சொல்லி ஆச்சே……” என்றாள்… நெற்றி பார்த்த முத்தம் பதித்தபடியே…நான் யுத்தம் கண்ட வாளினையப் போல.. சீறிட்டு கூர்மையானேன்…

    அதன் பிறகு…. அவள் போகும் இடம், வரும் இடம் எல்லாம்… பின் தொடர்ந்து…… அதை அவளும் உணர்ந்து……. ஒரு நாள்.. மொட்டை மாடியில் நின்று அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்…….

    நன்றாக தெரியும்…. நான் நிற்பது தெரிந்துதான்.. சைக்கிளில் அந்த வீதி முழுக்க சுற்றிக் கொண்டேயிருந்தாள்….அவள் சைக்கிளில் சுற்றினாள்… நான் நின்று கொண்டே சுற்றினேன்….

    “சரி.. இன்று கேட்டு விடுவதுதான் சரி”- என்று நம்பி… காற்றினில் வரைந்து கொண்டே மௌன பாஷையில் “-உன் பேர் என்ன…?” என்றேன்..

    அவளுக்கு புரிந்து விட்டது.. போய் விட்டாள்..

    அடுத்த முறை வரும்போது இடது கையை கேண்டில் பாரில் இருந்து எடுத்து ‘படித்துக் கொள்’ என்பது போல சற்று மேல் நோக்கிக் காட்டினாள்.. உள்ளங்கையில் ஏதோ எழுதி இருந்தது… கண்களை சுருக்கி குனிந்து நன்றாக உற்றுப் பார்த்தேன்.. E- இல் தொடங்கி ஏதோ புரியாத மொழி போல இருந்தது பெயர்…. . சத்தியமாக புரியவில்லை… புரியாத போது இருக்கும் அதீத ஆர்வம் புரிந்த பின் இருப்பது இல்லை… ஆனால் எனக்கு புரிந்த இன்னும் இருந்தது…. புரியாத போது இருந்ததைப் போலவே…

    “என்னடா இது……!!!!!”- என்று தலையைப் பியித்துக் கொண்டிருக்கும் போதுதான் ஒரு காகிதத்தை சுருட்டி மேலே வீசினாள்.. ஓடிப் போய் பிரித்தேன்.. சுருக்கம் நிறைந்த இதயம் சீராக துடிப்பது போல இருந்தது, தீராத வேகம் கொண்ட ரத்தத்தில் புது சக்தி பிறந்ததைப் போல…..

    “எமிலி மெடில்டா”- “என்னால் இந்தப் பெயரைப் படிக்க கூட முடியவில்லை….. என்ன மாதிரி பேர் இது.. இதுவரை கேட்டதே இல்லையே….”- மனம் சுருக்கெழுத்து போட்டிக்குள் தடுமாறுவது போல இருந்தது…

    “இது இங்லீஷ் பேர் மாமா…. உனக்குதான் தெர்ல…”-என்று சொல்லி சத்தமாக சிரித்தாள்.. அவள் இப்படி சிரிப்பதற்காகவே இன்னும் ஒரு முறை தெரியல என்று சொல்லலாம் போல……

    “என் பேர் கூட சொல்ல தெரியல… இதுல என் மேல லவ் வேற…..”- என்றபடியே இன்னும் இறுக்கமாக கட்டிக் கொண்ட ஒரு நாள் மதியத்தில் அவளின் சட்டையை நான் அணிந்திருந்தேன்…….. என் சட்டையை அவள் அணிந்திருந்தேன்……. அவளின் வீடு பட்டாம் பூச்சிகளால் நிரப்பப்பட்டது போல காணப்பட்டது…….. அன்று, அப்படி ஒரு மழை… நாங்கள் ஜன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தபடி மழையை பார்த்துக் கொண்டிருந்தோம். மழையும் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தது…. காலங்கள் நின்று போன காலம் அது… ஒரு வித இளம் சூட்டில் இருவருமே… மெல்ல புன்னகைத்துக் கொண்டோம்… பின்மதிய நேரம் கூட இருள்மாலை போல கவிழ்ந்திருந்தது… அவள் கழுத்தின் வாசத்தில் மெய்ம் மறந்த காலம் அது… என் கழுத்துக்குள் முகம் முயங்கிக் கொண்டிந்த காலத்தை யாரோ தடுத்து நிறுத்தியது போல… எங்கள் பின்னால் யாரோ நிற்பது தெரிந்தது…..திரும்பினோம்.. பயந்து கொண்டே…

    அவளின் அம்மா..

    நான் எதுவுமே சொல்லாமல் சட்டையை கழற்றினேன்.. அவளும் நடுங்கிக் கொண்டே பயந்தபடியே… சட்டையை அங்கேயே கழற்றினாள்…

    “அப்புறம் என்னாச்சுடி……” என்று பல முறை கேட்ட பிறகும்.. எமிலி ஒன்றுமே சொல்லாமல்…….” உங்க அத்தைகிட்ட ஓகே வாங்கவேண்டியது என் பொறுப்பு …..” என்று என் தலையைக் கலைத்து விட்டாள்….

    இன்றும் கூட கலைத்து விட்டாள்… நானும் அவள் கூந்தலை கழற்றி விட்டேன்… மலை உச்சி காற்றுக்கு அது குடையாக நீண்டு கொண்டே இருந்தது….. “குடை வேண்டுமா… மழை வேண்டுமா…” என்று முனங்கும் இதழில் “இதழ் வேண்டுமே…இனி மீண்டுமே…” என்று கொஞ்சினேன்…கண்கள் கொண்டு கவிதை செய்தாள்…. படிக்க முடியவில்லை……தொடர்ந்தேன்….

    அவளின் கழுத்தினோரம் நான் முயங்கி சரிந்து கொண்டேன்….

    “ரசனைக்கார மாமா டா நீ ……” என்று செல்லமாக கன்னத்தில் கடித்து வைத்தாள்…

    “உனக்கொரு பேர் வைக்கட்டா…?”- என்றாள் ஒரு கிறிஸ்மஸ் நாள் அன்று…

    “ம்ம்.. வையேன்…” என்றேன்…

    ம்ம்ம்……என்று ….. யோசித்தபடியே… “பிரான்சிஸ் எடின் பாரோ” என்றாள்…

    ‘என்னடி பேர் இது….. உன் பேர் மாதிரியே வாய்க்குள்ள நுழையவே மாட்டேங்குது”- என்றேன்……

    சிரித்துக் கொண்டே …” செம பேர் மாமா…… நம்ம கல்யாண பத்திரிகையில இந்தப் பேர்தான் இருக்கணும் சரியா……?” என்றாள்..

    “எப்படியோ என்னை மதம் மாற சொல்ற.. இல்லியா…”

    “ஏன் மாமா…. மாற மாட்டியா”..

    “உனக்காக மதம் என்ன….. மதத்தையே கூட மாத்துவேன்……..”

    ‘அப்போ நானும் மாறிக்குவேன்…. எனக்கொரு பேர் வையேன்…”

    “ம்ம்ம்….. ரத்னா…. எங்க பாட்டி பேர்…”

    அத்தனை கூட்டத்திலும் கை கோர்த்துக் கொண்டாள்….

    “என்னது ஒன்பதுதான் படிக்கறயா… ஓகாட்……”- என்று புலம்பிய ஒரு டியூசன் நாளில்தான்… நீ லவ் கன்பாம் பண்ணின……. ஞாபகம் இருக்கா..?”- அதற்கும் சிரித்தாள்….

    “11வது படிக்க வேண்டிய வயசு… 3வதுல ஒரு தடவை… 7வதுல ஒரு தடவை பெயில்னு சிரிச்சுட்டே சொன்ன பாரு… நான் முடிவே பண்ணிட்டேன்.. கட்டினா உன்னதான்டின்னு…”-
    அதற்கும் சிரித்தாள்….

    அவள் சிரிப்போடு நான் என் அழுகையை மறந்த காலங்கள்தான் பொற்காலம்… மழை ரசிக்கத் தொடங்கிய காலம் அது… மறுகன்னம் காட்டத் துவங்கிய காலம் அது..காலங்களின் காலம் அது…. அது முழுக்க நாங்கள் மட்டுமே…

    அதன் பிறகு… மலை ரசித்தோம்… மௌனம் புசித்தோம்… முத்தங்களில் இதழ்கள் புதுமைகள் படைத்தன… நாட்கள்….. வருடங்கள்……. நகர…… நகர……. நான் முதுகலைப் பட்டம் வாங்க போய் விட, அவள் இளங்கலை பட்டத்துக்குள் நுழைந்தாள்… வயதும் ஆனது… ஒரு நாள், அந்த ஒரு நாள், நான் மீண்டும் தூக்கம் இல்லாமல் போன அந்த நாள்.. அதை நன்றாக ரீவைண்டிங் செய்து பார்க்க முடிகிறது……

    ஆம்….அவள் என்னை விட கொஞ்சம் உயரமாகியிருந்தாள்… இல்லையே……… நன்றாகத் தெரியும்.. நாங்கள் பழக ஆரம்பிக்கும் போது, அவள் என்னை விட உயரம் குறைவு.. ஆனால் இப்போது எப்படி உயரமாகியிருக்கிறாள்…?…

    “ஹீல்சா”- என்று பார்த்தேன்…. இல்லை…

    அதன் பிறகான நாட்களில்…… அவள் நன்றாக என்னை விட வளர்ந்து விட்டிருந்தாள்… இப்போது அவள் நிஜமாலுமே ஒரு பிரெஞ்சுக்காரியைப் போல தான் இருந்தாள்…இன்னும் இன்னும் அழகாக ஆகி இருந்தாள்….. என்னால் சைக்கிளில் அமர்ந்து கொண்டுதான் அவளிடம் பேச முடிந்தது..

    “ஏன் மாமா.. கிட்ட வரவே மாட்டேங்கற”- என்று ஒரு நாள் கேட்டாள்…வழக்கம் போல ஒரு பார்வை கொண்டு…

    நான் தடுமாறி எக்கி… ஹீல்ஸ் வைத்த ஷூவுடன்….. அருகில் சென்று நின்றும், என்னால் பேச முடியவில்லை…. என் கவனம் முழுக்க உயரத்தில் நின்று விட… அவள் பேசிய வார்த்தைகள் உள்ளுக்குள் போக மறுத்தது… இனம் புரியாத தவிப்புக்குள் நான் கரை புரளத் தொடங்கினேன்…பின் சின்ன சின்ன சண்டைகளை நானே முளைக்க வைத்தேன்…. காரணம் அறியேன் என்று கூறினாலும்… கனன்று கொண்டிருந்த உயரம் என்னை இன்னும் இன்னும் தாழ்த்திக் கொண்டே இருந்தது……நான் அவளைத் தவிர்க்கத் தொடங்கினேன்….தவிர்த்தலின் ஊடாக ஒரு மெல்லிய கோடு.. ரத்தம் கசிவதைக் கண்டேன்…

    “உயரம் ஒரு பொருட்டா.. காதலில்..”- என்று இன்று என்னால் வாய் கிழிய பேச முடியும்.. ஆனால் அன்று பேசவும் முடியவில்லை.. யாரிடமும் பகிரவும் முடியவில்லை…முடியாதவைக்குள்… முயங்கி சரிந்து கொண்டேன்…

    “ஏன் மாமா என்னை பிடிக்கலையா…..?” என்று ஒரு நாள் அழுது கொண்டே கேட்டாள்……

    நான் பதிலே பேசாமல்… கடந்து விட்டேன்… காரணமே இல்லாமல் ஏன் பிரிய வேண்டும் என்று நண்பர்கள் கூட கேட்டார்கள்… ஆனால் யாரிடமும் எதுவும் பேச இயலவில்லை…. இயலாமையின் உச்சம் கூட கீழே எங்கேயோ இருந்தது போலதான் இருந்தது…

    என் ரசனைகள் உடைந்து சுக்கு நூறாகின… நான் நிறைய பயந்து நடுங்கிய நாட்கள் அவை… அவளும் நானும் நாளை ஒன்றாக நடந்து சென்றால் ஊர் பேசும் கேலியை என்ன செய்வது என்று உள்ளுக்குள் புழுங்கிய நாட்கள் அவை…..வேண்டும் என்றே சைக்கிளைக் கழுவியபடி கிரிக்கெட் விளையாடும் என்னை பார்த்து அழுது கொண்டே நிற்பாள்.. நான் அவள் பக்கம் திரும்பவே மாட்டேன்…திரும்ப திரும்ப திரும்பிய காலங்கள் திரும்பாலே திரும்பிக் கொண்டது போல அவள் திரும்பாமலே என் திரும்பதலுக்கு நிற்பாள்… நான் அப்போதும் திரும்ப மாட்டேன்…. திரும்புதலில் நேர்கோடு புரிய மறுக்கின்றன.. எனக்கும் அன்று புரியவில்லை… இரவினில் அவள் வாசலைக் கடப்பதை தவிர்க்கத் தொடங்கினேன்… அவள் பெயர் எழுதிய என் புத்தக பக்கங்களைக் கிழித்தெறிந்தேன்… என்னால் பழையபடி யாரிடமும் சிரிக்க முடியவில்லை….. சிரிப்பது போல கூட இருக்க முடியவில்லை…. மொத்தத்தில் இருக்கவே முடியவில்லை……… ஒரு ஓட்டம் துரத்திய மலை உச்சியில் கால் வலிக்க நின்ற காலங்களை நினைக்காத போதும் நான் மலை உச்சியில் தனியாக சுற்றி..நகர்ந்து நகர்ந்து… ஒரு குட்டைப் பாவாடையைக் கடந்து வர எனக்கு அத்தனை சுலபமாகவும் இருந்து…. ஒரு சிவப்பு பனியனை நான் சுத்தமாக மறந்து போனேன்… மறப்பது ஒன்றுமே இல்லை…… மண்ணாங்கட்டி மனம்.. அதையும் சேர்த்து தான் சொல்கிறேன்……

    நாட்கள்….. மாதங்கள்.. வருடங்கள்… கடந்த ஒரு பத்தாண்டுக்கு பின்னால் ஒரு நண்பனின் திருமணத்திற்கு கோவையில் உள்ள பிரபலமான ஒரு ஆலயத்துக்கு சென்றிருந்தேன்..

    அங்கே ஒரு சிஸ்டர்… என்னையே பார்த்துக் கொண்டிருந்தது போல இருந்தது…… திருமணம் முடிந்து சாப்பிட ஹாலுக்குள் செல்லும் போது நிதானமாக என் அருகே வந்து நின்றார் அந்த சிஸ்டர்…

    நான் பார்த்ததும் தெரிந்து கொண்டேன்……. மனதுக்குள் கிழிந்து பறந்த ஒரு கோடி விவிலியங்கள் எரிந்து கொண்டிருப்பதைப் போல உணர்ந்தேன்…….

    “என்னைத் தெரியுதா?….. என்றார்…….

    நான் தலையைப் பிடித்து கொண்டு சரிந்தேன்… எனக்கு அருகே அத்தனை உயரத்தில் ஒரு ஏசுவைப் போல நின்று கொண்டிருந்தாள் எமிலி மெடில்டா….

    அவள் எனக்கு எழுதிய கடைசி கடிதத்தின் கடைசி வரிகள் அங்கே மீண்டும் ஒலிப்பதாகத் தோன்றியது…………

    “என் ஆதியும் நீயே என் அந்தமும் நீயே…”

    Share
  • பிரியே சகியே அன்பே ஆருயிரே

    திவாகர்

    c2311b6b-ff9e-48f3-888a-df00e3d8c069

    அன்புள்ள ராகி’,

    பிரியே சகியே அன்பே ஆருயிரே என்றெல்லாம் இந்தக் கடிதத்தைத் தொடங்கலாமே என்று யோசித்துப் பார்த்தேன். ஆனால் ஒருவேளை அது உனக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம் என்ற ஒரு சந்தேகமும் கூடவே ஒட்டிக்கொண்டு வந்ததால் இப்படிப்பட்ட ஃபார்மாலிடிக்குள் நுழையாமல் நேரடியாகவே சப்ஜெக்ட்’டுக்கு வரப் பார்க்கிறேன்.

    மூன்று மணி நேரமாக மண்டையைப் போட்டுக் குழப்பிக்கொள்கிறேன். நீ கடைசியாக ராத்திரி மொபைலில் பேசும்போது உன்னிடம் ஏதோ சொல்லவேண்டும் என்று சொன்னேன் இல்லையா.. ஆனால் நீ காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.. நீங்க என்ன சொல்லவேணுமோ அதையெல்லாம் தூங்கறதுக்கு முன்னாடி ஒரு லெட்டெர் எழுதி நாளைக்கு மறக்காம போஸ்ட் பண்ணுங்க’ன்னு சொல்லி டபக்’கென வைத்துவிட்டாய்.

    உன் ஐடியா புரிகிறது. போன தடவை நீ சிம்லா சென்ற போது இதே போல ஒரு கடிதம் எழுதி அனுப்பியதை உன் அக்கா பரம ஆனந்தமாக ரசித்தாள் என்று சொல்லியிருந்தாய்.. அதே உன் அக்காவின் ஆனந்துத்துக்காக மறுபடியும் ஒரு கடிதம்தான் என்னிடமிருந்து வரட்டுமே என்று நீ எதிர்பார்க்கிறாய் போலும்.. ஆனாலும் அந்தக் கடிதம் எழுதி ஒரு வருஷத்துக்கும் மேல் ஆகிவிட்டபடியால் எனக்கு இந்தக் கடிதங்கள் எழுதும் கலையும் மறந்து விட்டபடியால், எப்படி ஆரம்பிப்பது எனக்கூட தெரியாமல் முழிப்பது வாஸ்தவமே.. ஆனாலும் நீ மெனக்கெட்டு கடிதம் கேட்டதால் அதை எழுத வேண்டிய கட்டாயத்தால் நான் கடந்த மூன்று மணி நேரமாக எப்படியும் எழுதி முடித்துவிட்டுத்தான் தூங்குவது என்று விடாப்பிடியாக சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்றால் ‘உன் வார்த்தைக்கு நான் எவ்வளவு தூரம் மதிப்புக் கொடுக்கிறேன்’ என்பதைப் புரிந்து கொள்ளவும்.

    நாம் போனில் பேசும்போதெல்லாம் நீயே பேசிக் கொண்டிருப்பதும் நான் ‘உம்’ கொட்டுவதும் வழக்கமாகிவிட்டதும் இந்தக் குழப்பத்துக்கு இன்னொரு காரணமாக இருக்கலாமோ என்னவோ..

    சென்றமுறை உன் அக்காவின் உடல்நலம் தேறுவதற்கு நானும், முக்கியமாக என்னுடைய கடிதமும் காரணம் என்று நீயே பலமுறை வருவோர் போவோரிடமும் சொல்லிக்கொண்டிருந்தது எனக்கு நினைவு வந்து இப்போது கொஞ்சம் உற்சாகப்படுத்துகிறது. உன் அக்கா சந்தோஷப்படுவதற்காகவாவது நான் கடிதம் எழுதியே ஆக வேண்டும் என்று இந்த நடு இரவிலும் நான் கொட்டக் கொட்ட முழித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டு யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

    கொஞ்சநேரம் முன்புதான் பக்கத்து ஃபிளாட்டு மோகன் வந்தார் (ன்). வாசற்கதவு இன்னும் தாழ்ப்பாள் போடவில்லையாதலாலும், நானும் என்னதான் எழுதுவது என்ற தீர்க்க யோசனையில் அப்படியே பேப்பரும் பேனாவும் வைத்துக் கொண்டிருந்ததாலும் வந்தவரை முதலில் கவனிக்கவில்லை. மோகன் “என்ன சார் மிஸ்ஸஸ் ஊர்ல இல்லைன்னதும் ஒழுங்கா செலவுக் கணக்கைக் காமிக்கணுமே’ன்னு கணக்குப் போடறீங்களா’ என்று கேட்டு அசடு வழிந்தார்.

    நான் அவர் மீது கோபப்படாமல் ‘இல்லை சார், லெட்டெர் எழுதுகிறேன் சார் லெட்டெர், அதுவும் என் அருமை மனைவிக்கு’ என்று நெஞ்சை நிமிர்த்தி கொஞ்சம் பெருமையாகச் சொன்னதும் அவருக்கு உடனே சிரிப்பு வந்துவிட்டது. அடக்கமுடியாமல் ஹாஹ்ஹா என சிரித்துவிட்டு ஏதோ பெரிய ரகசியத்தை அறிந்து விட்டவர் போல அவர் மனைவி பத்துவை (சாரி, பத்மான்னுதான் பேர். நீ அடிக்கடி பத்து..பத்து’ன்னு கூப்பிடுவாய் இல்லையா.. ஒரு ஃஃப்ளோ’வில் அப்படி எழுதிவிட்டேன்.. என்னைப் பொருத்தவரை அந்தம்மா பெயர் எப்போதும் பத்மாவதிதான் என்பதை நீ நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.. இதைப் பற்றி நமக்குள் வேறெந்த விவாதமும் தேவையில்லை)

    அந்த பத்மா உடனே ஓடிவந்துவிட்டாள். இவர் ஏதோ பெரிய ஜோக் சொல்வது போல ‘உனக்குத் தெரியுமா பத்மா.. நம்ம சார் தன்னோட சம்சாரத்துக்குக் கடிதம் எழுதறார் பார்..” என்று தன் மிகப் பெரிய கண்டுபிடிப்பாகச் சொல்லிவிட்டு அத்துடன் விடாமல் கோராமையாக ஹோஹ்ஹோ எனச் சிரித்தார். அந்த பத்மா என்னை ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு ‘ராகினிதான் டெய்லி நூறுதரம் போன்’ல உங்களோட பேசறாளே.. இப்ப எதுக்கு லெட்டெரெல்லாம் போடறீங்க’ன்னு கேட்டதும் கொஞ்சம் யோசித்தேன். ’பார்த்தாயா.. நீ என்னிடம் நூறு தரம் பேசுகிறாயாம்.. காலையில் ஒரு அரை மணி நேரமும், ராத்திரி ஒரு மணி நேரமும் பேசுகிறாய் என்பது வாஸ்தவம்தான்.. நடுவில் நானாகத்தான் உனக்கு ஏதாவது ஒருமுறை போன் போட்டுப் பேசினால்தான் உண்டு. அது எப்படி இந்த பத்துவுக்கு (சாரி, பத்மாதான்) நூறு தடவையாக கண்களில் படுகிறது என்று நினைத்துப் பார்த்தேன்.

    இதற்குள் அவளே அவள் கணவனை என் முன்னாலேயே குற்றம் சொல்ல ஆரம்பித்து விட்டாள். ’கல்யாண ஆன புதுசுல ஒரே ஒரு கார்டு போட்டவர் இவர். அதிலே ஆரம்பமும் இல்லை முடிவும் இல்லை.. மொட்டையாக நான் இத்தனாந்தேதி புறப்பட்டு வருகிறேன்.. ஸ்டேஷனுக்கு ஆள் அனுப்பவும்’னு கட்டளை வேற.. என்ன இருந்தாலும் ராகினி கொடுத்து வைத்தவள்,. பாருங்களேன்.. ராத்திரி இத்தனை நாழியாச்சு, இன்னும் உட்கார்ந்து அழகாக பொண்டாட்டிக்கு கடுதாசி போடணும்’னு உங்களுக்குத் தோணறதே’ என்று ஆதங்கப்பட்டாள்.

    உடனே அவள் கணவன் சமாதானம் செய்ய ஆரம்பித்துவிட்டான். “அதற்காகத்தான் பதிலுக்கு சண்டை போட்டு பட்டுப்புடவை ஒன்று உடனே உடனே வாங்கிக் கொடுத்தேனே.. மறந்து விட்டாயா’ என்று கேள்வி கேட்க, அவள் அந்தப் புடவை வாங்கியவுடன் அதிசீக்கிரம் கிழிந்து போன கதையை கொஞ்சம் பெரிய குரலில் விரிவாகச் சொல்லிக் கொண்டே போக, இந்த சப்தத்தைக் கேட்டு மாடி ஃஃபிளாட் சுப்பு மாமியும் அவள் மூன்றாவது தங்கையான அருணாவும் கடகடவென கீழே இறங்கி வந்தார்கள்.

    “ஏதோ பெரிய சப்தமா கேட்டுதே.. நீங்க தனியா வேறே இருக்கிங்களா, என்னவோ ஏதோ’ன்னு பயந்து வந்தோம்.. நல்ல காலம் கலகலவென பேசிண்டுதான் இருக்கீங்க..” என்று ஏமாற்றப் பெருமூச்சு விட்டு அவள் தங்கையை அறிமுகம் செய்ய முன்வந்தாள். நான் உடனே முந்திக் கொண்டு “தெரியுமே உங்க மூன்றாவது தங்கை அருணாதானே, பெங்களூர்ல இருக்காங்க இல்லே.. உங்க தக்காளி தொக்கு..’ என்று ஆரம்பித்தேன்.. அவளுக்கு உடனே என்னை நன்றாக ஞாபகம் வந்துவிட்டது.. ”ஆமாமா.. உங்களுக்குக் கூட நான் தக்காளித் தொக்குக் கொடுத்திருக்கேன் இல்லே.. (இவளுக்கு இதே வேலையோ என்னவோ) இப்போ நினைவு வந்தாச்சு.. உங்களுக்கு நான் ரெசிபி கொடுத்தேனே.. அதன்படி உங்க மிஸ்ஸஸ் செய்யறாங்களா” என்று ஏதோ டாக்டர் நோயாளியை ‘சரியாக மருந்தெல்லாம் சாப்பிடுகிறாயா’ என்பது போல கேட்க ஆரம்பித்தாள். உனக்குதான் தெரியுமே.. நான் தக்காளி தொக்கைக் கடைசியாக அன்று ஒருநாள்தானே பார்த்தேன்.. இதை எப்படி இவளிடம் சொல்வது என்று முழித்துக் கொண்டிருக்கும்போதே நல்லகாலமாக மோகன் தலையிட்டான்.

    ”சார்.. அவங்க மிஸஸ்ஸுக்கு கடுதாசி எழுதிக்கொண்டிருந்தார், நாங்க வந்து டிஸ்டர்ப் பண்ணிகொண்டே இருக்கறச்சே.. நீங்களும்..” என்று அசடு வழிய சமாளித்தான்,

    அந்த அருணா உடனே “என்னது லெட்டர் ரைடிங்கா.. ரொம்ப இண்டரெஸ்டிங் சப்ஜெக்ட்டாச்சே.. என்னைக் கேட்டா காலேஜிலே ஒரு சிலபஸ் மாதிரி இதை வெக்கணும்’னு சொல்வேன். உங்களுக்குத் தெரியுமா.. மூணாம் வருஷம் எனக்கு கல்யாணம் ஆன புதுசுலே நான் என் வீட்டுக் காரருக்கு ஒரு கடுதாசி எழுதினேன். ரொம்ப கஷ்டப்பட்டு அகராதியெல்லாம் பார்த்து ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுதி அதை அவருக்கு போஸ்ட் பண்ணி அதை அவருக்கு போன்’லயும் சொல்லிட்டேன். ஆனா ரெண்டு மூணு நாளானாலும் அந்தக் கடுதாசி வரவே இல்லியாம். இவர் கடுதாசிக்காக காத்திருந்து அது வராமே கடைசியில் இவரே இங்கே வந்துட்டார்”.

    ”கடைசியில் அந்தக் கடிதம் என்ன ஆச்சு” என்று மிகப் பெரிய சஸ்பென்ஸோடு மோகன் ஆவலாகக் கேட்க பத்மா இவனை முறைக்க, அந்த அருணா கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அவள் எழுதிய கடிதம் அவளுக்குத் திரும்ப வந்ததையும் அவள் புருஷனை ஆயிரம் முறை அதைப் அவள் முன்பே படிக்க வைத்ததையும் பெருமையாகப் பீற்றிக் கொண்டாள். அடடா’ நீ இன்னும் இந்த அருணாவைப் பார்க்கவில்லை இல்லையா. என்னவோ தெரியவில்லை.. சரியாக நீ இல்லாத நாட்களில்தான் அதுவும் நான் கடிதம் எழுதும்போதெல்லாம் அவள் வருகிறாள்.. வேடிக்கையாக இருக்கிறது இல்லை..

    எப்படியோ என் கடித எழுத்துக்குத் தடையாக கொஞ்ச நேரம் இருந்துவிட்டு எழுந்து போனார்கள். போகிறபோது அந்த பத்மா என்னிடம் சிபாரிசு வேறு.. அடுத்த வாரம் அவள் ஊருக்குத் தனியே போகிறாளாம்.. அன்பா, அழகா ஒரு கடிதம் பொண்டாட்டிக்கு எழுதுவது எப்படின்னு அவள் புருஷனுக்கு நான் ஒரு டிரெயினிங் கொடுக்கணுமாம். அவனும் கூசாமல் ‘ யார் யாரோ எழுதறாங்க சார்.. நானும் ஒரு லெட்டர் எப்படியாவது எழுதணும் சார்.. ஸ்கூல் படிக்கறச்சே ‘லெட்டர் ரைடிங்’ கிளாஸே இருந்துச்சு சார்.. அப்பல்லாம் இண்ட்ரெஸ்ட் இல்லாம விட்டாச்சு. எப்படியாவது உங்கள்ட்ட கத்துக்கணும் சார்’ என்று ஏதோ மிகப் பெரிய ரகசியத்தை என்னிடம் கற்றுக் கொண்டே ஆக வேண்டும்’ என்பது போல கெஞ்ச ஆரம்பித்தான்.. அந்த பத்மாவும் ‘நீங்க எப்படியாவது ட்ரெயின் பண்ணித்தான் ஆகவேண்டும்’ என்று கட்டாயப் ’படுத்தி’விட்டுத்தான் சென்றாள் என்றால் பார்த்துக் கொள்ளேன்.. நான் ஒரு பதிலும் அவர்களுக்கு சம்மதமாகத் தெரிவிக்கவில்லை என்பதையும் உனக்கு சொல்லிவிடுகிறேன்..

    இதை ஏன் எழுதுகிறேன் என்றால் நான் ஏதோ கடிதம் எழுதுவதில் நிபுணன் என்று இவர்கள் நினைத்துக் கொண்டதைக் கேட்டு எனக்கு சிரிப்பு வந்ததும் அந்த ஒரு எண்ணத்தை உன்னிடம் பகிர்ந்து கொள்ளலாமே என்ற ஒரு நோக்கத்தில்தான் எழுதினேன்.

    பழைய காலத்தில் இந்தக் காதலன் காதலிக்கு நீண்ட கடிதங்கள்லாம் எப்படியெல்லாம் பக்கம் பக்கமாக எழுதினார்களோ.. என்ன விஷயமாக வைத்து அத்தனை பெரிய கடிதங்கள் எழுதுகிறார்கள் என்று நினைத்துப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை கண்ணே, மணியே கற்கண்டே உன்னைக் காதலிக்கிறேன் என்று இம்போசிஷன் எழுதுவார்களோ என்னவோ.. இருந்தாலும் கடிதம் என்று வந்துவிட்டால் அதை எழுதிவிட்டு போஸ்ட் பண்ணி விட்டால் அதில் ஒரு திருப்திதான்..

    உனக்கு நினைவு இருக்குமோ என்னவோ.. நான் கூட உன்னை ஒரு தடவை கேட்டேன்.. ’நீ எனக்கு ஒரு கடிதம் எழுதவேண்டுமெனத் தோன்றினால் போல சும்மா ஒரு லெட்டர் எழுதிக் காண்பியேன்.’. என்று.. அதற்கு ’ஐயய்ய.. இப்படில்லாம் உங்களுக்கு ஆசையோ’ என்று நீ எனக்கு அழகுக் காட்டி சிரித்தது எனக்கு இன்னமும் நினைவுக்கு வருகிறது..

    அடடா, உன்னிடம் ஏதோ முக்கிய விஷயம் சொல்லவேண்டுமென போனில் சொன்னேன் அல்லவா. நீ கூட இந்தக் கடிதத்தில் எழுதி அனுப்பச் சொன்னாயே.. அது இந்த நிமிடம் வரை ஞாபத்துக்கே வரமேட்டேனென்கிறது.. ஞாபகம் வந்ததும் அதை போனிலேயே சொல்லி விடுகிறேனே..

    அப்புறம் உன் அக்காவை மிகவும் கேட்டதாகச் சொல்லவும் (போன தடவை இதை எழுதியதில் உன் அக்காவுக்கு பரம திருப்தி என்று நீ இங்கே வந்ததும் சொன்னது நினைவுக்கு வருகிறது. )

    மற்றவை போனில்

    உன் அன்புக் கணவன்.

    (வாசகர்களுக்கு அன்புக் கணவன் தன் மனைவிக்கு எழுதிய முதல் கடிதத்தை வாசிக்க http://www.vallamai.com/?p=40314 என்ற லிங்க்’க்கு செல்லவும்.

    Share
  • படக்கவிதைப் போட்டி (39)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12270598_916542848399915_15380368_n

    127764326@N06_rராகுல் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (21.11.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • கற்றல் – ஒரு ஆற்றல்   (3)

    க. பாலசுப்பிரமணியன்

    education

     மூளைஒரு உன்னதமான படைப்பு

    ஒவ்வொரு மனிதனுடைய மூளையும் ஒரு விசித்திரமான படைப்பு. எப்படி ஒருவனுடைய கைரேகைகள் அவனுக்கே உரித்தானதாக இருக்கின்றதோ அதே போல் தான் ஒவ்வொரு மனிதனுடைய மூளையும் ஒரு தனித்துவம் வாய்ந்தது. ஆகவே ஒருவரைப் போல மற்றவர்கள் சிந்திப்பதோ, இல்லை கற்பதோ இயற்கையில் நடப்பதில்லை.

    ஒரு தனி மனிதனுடைய மூளை அவன் பிறப்பு மற்றும் சூழ்நிலைகளால் பாதிக்கப்படுவதால். ஒவ்வொரு மனிதனுடைய சிந்திக்கும் திறனும் முறைகளும் ஒரு தனி வரைபடமாக அமைகின்றது .(cognitive map ) . நம்முடைய பார்வைகள் மூளையால் அலசப்பட்டு அதற்கு ஒரு அர்த்தத்தை உருவாக்கும் செயல் ( meaning making )  மிகவும்  திறன் வாய்ந்த செயல். இதைச்  செய்வதற்கு மூளையின் பல பாகங்கள் ஒருங்கிணைந்தவாறு செயல்படுகின்றன. ஆகவே, ஒரே பொருளை இருவர் நோக்கும் பொது அதன் அர்த்தங்கள் வேறு வேறாக இருக்க வாய்ப்புண்டு. இதனுடைய தாக்கம் கற்றலில் அதிகமாக ஏற்படுகின்றது. ஆகவே ஒவ்வொருவருக்கும் கற்கும் திறன், ஆழம், முறை மற்றும் அவர்களின் அர்த்தங்கள் மாறுபட்டிருக்கும். உதாரணமாக ஒரு விபத்தை இருவர் நோக்கினால் இருவருடைய பார்வைகளும், சிந்தனையும் அதன் பாதிப்பால் ஏற்படும் செயல்களும் வேறாக இருக்க அதிக வாய்ப்புண்டு.

    மனிதனுடைய இந்த மூளை மற்ற பிராணிகளின் மூளையிலிருந்து எவ்வாறு மாறுபடுகின்றது?

    ஒரு மனிதனுடைய மூளை வளர்ச்சியடைந்த நிலையில் சுமார் 1300-1400 கிராம் எடை உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர், இதற்க்கு மாறாக ஒரு கொரில்லா குரங்கின் மூளை சுமார் 450 கிராமும் ஒரு டால்பின் மீனுடைய எடை 1800 கிராமும் ஒரு திமிங்கலத்தின் மூளையின் எடை 7800 கிராமாகவும் இருப்பதாக விஞ்ஞானப் பரிசோதனைககளால் அறிய முடிகின்றது..

    நம்முடைய மூளை எதனால் ஆனது? இது சுமார் 78 விழுக்காடு தண்ணீராலும் 10 விழுக்காடு கொழுப்புச் சத்துக்களாலும், 8 விழுக்காடு ப்ரோடீன்களாலும் ஆனது என்று விஞ்ஞான சோதனைகளால் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மூளையின் எடையும் வடிவும் ஒவ்வொரு மனிதருக்கும் சிறிதளவில் மாறுபட்டிருக்கக் கூடும்.

    ஒவ்வொரு மனிதனுடைய விருப்பு வெறுப்புகளும், ஈடுபாடுகளும், ஆர்வங்களும் மாறுபட்டு இருக்கின்றன. இதை நாம் புரிந்துகொண்டால் நம்மில் பலர் ஏன் ஒருமித்த கருத்துடையவராக இல்லை என்பதை நன்கு உணரலாம். மற்றும் ஏன் ஒவ்வொரு மாணவனின் செயல்பாடுகளும் கற்பனைத் திறன்களும் கற்றலும் மாறுபடுகின்றது என்பதையும் உணர முடியும்.

    ஆகவே, ஒரு வீட்டில் குழந்தைகளைப் பார்த்து பெற்றோரும், பள்ளியில் மாணவனைப் பார்த்து ஆசிர்யர்களும் “அவன் எப்படிப் படிக்கிறான் பார். நீ ஏன் அவனைப் போல் படிக்க மாட்டேன் என்கிறாய் ” என்று வாதிடுவது அறியாமையின் அறிகுறி.

    ஜான் மெடினா என்ற உலகப் புகழ் வாய்ந்த மூளை நரம்பியல் பேராசிரியர் கூறுகின்றார்.” எவ்வாறு ஒரு பெரிய இசைக் கச்சேரியில் பல இசைக் கருவிகள் ஒருங்கிணைந்து வாசிகின்றதோ, அது போல நமது மூளையின் பல பாகங்கள் எப்பொழுதும் ஒன்றாக இணைந்து செயல் படுகின்றன. சொல்லப்போனால் நமது மூளையின் உள்ளே ஒரு இசைக் கச்சேரி எப்போதும் நடந்து கொண்டிருக்கின்றது.”

    இந்த இசைக் கச்சேரியில் நமது பங்கு என்ன? இந்தக் கச்சேரியின் நடுவில் நாம் இடைத் தரகர்களாகி  பாடல்களின் போக்கை மாற்ற முடியுமா? போகப் போக நமக்குப் புரியும்….

    Share
  • நல்கிவிடு அடியவர்க்கு!

     -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்த்திரேலியா

    வேலா என அழைத்தால்
    வினை அகற்றி நின்றிடுவாய்
    கந்தா என அழைத்தால்
    காலனை நீ ஓட்டிடுவாய்
    அரக்க குணம் அழித்துவிட்ட                     Lord Murugan
    அரனுடைய அருட் குமரா
    அடியவரின் வேண்டு தலை
    அய்யா நீ கேட்டிடுவாய்!

    குன்றுதோறும் நின்று கொண்டு
    குறை கேட்கும் குமரையா
    நன்று செய்வார் வாழ்வெல்லாம்
    நஷ்டம் வரல் ஏனையா?
    கொன்று நின்று குவிக்கின்றார்
    குதூகலத்தில் குலவு கின்றார்
    குணக் குன்றே குருபரனே
    கொதிக்கிறதே உள்ளம் எலாம்!

    பிரண வத்தை  அறியாத
    பிரமனை நீ சிறையிலிட்டாய்
    பேர் ஆசை அசுரது
    பெருங்கனவை உடைத் தெறிந்தாய்
    கலி யுகத்தின் கடவுளென
    வந்துதித்த கந்தா நீ
    காணாமல் இருப் பதற்குக்
    காரணத்தைச் சொல்லி விடு !

    ஆணவத்தில் இருப் பவரோ
    ஆட்சிதனைச் செய் கின்றார்
    அறம் பற்றி எண்ணுதற்கு
    அவர் மனமோ மறுக்கிறது
    மதம் கொண்டு எல்லோரும்
    மற்றவரை வதைக் கின்றார்
    மகாதேவன் மைந்தனே நீ
    மெளனமதைக் கலைத்து விடு!

    ஈராறு முகம் உடையாய்
    எங்கள் தமிழ் கடவுளையா
    ஊர்தோறும் உன் கோவில்
    உச்சமாய் இருக்கு தையா
    பேராறாய் உன் கிருபை
    பெருக்கெடுத்து வந்து விடின்
    வேரோடி நிற்கும் இந்த
    விஷமெல்லாம் அகன்று விடும்!

    குவலயத்தில் உள்ள மக்கள்
    குறையின்றி வாழ வேண்டும்
    குணங்கெட்ட மனம் உடையார்
    குமரனடி தொழ வேண்டும்
    நலம் சிறந்த வாழ்க்கையினை
    நாடெல்லாம் பெற வேண்டும்
    நாதனது தவப் புதல்வா
    நல்கி விடு அடியவர்க்கு!

     

    Share
  • மௌனம் உறைந்த மனம் (வரலாறு அல்ல.. கற்பனைக் கதை)

    பவள சங்கரி

    மனத் தெளிவு மட்டுமே ஒரு சாமான்ய மனிதனை புத்தனாக்குகிறது. ஒரு புத்த பிக்குனி கதை கேளுங்கள்.

    a07134i5இயற்கை வளமும், இறை நலமும் ஒருங்கே உறையும் உன்னத மலை அது. அமைதி.. அமைதி.. எங்கும் பேரமைதி.. அமைதியின் அழகில் இறைமையின் வடிவாக வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலை. தெளிந்த நீரோடையின் இதமான குளிர் தென்றல் சுகமாக அணைத்திருக்க, பதமான பல்சுவையமுதாய் புள்ளினங்களின் மெல்லிய கீதங்கள். இரைச்சலற்ற இனிய நாதங்கள். இவையெல்லாம் மகுடமாய் அலங்கரிக்க மகாராணியாய் வீற்றிருக்கிறாள் அம்பிகைதேவி, பூத்துக்குலுங்கி மணம் பரப்பிக்கொண்டிருக்கும் பசுமை வேம்பின் தண்ணிழலில் தனி இராச்சியம் அமைத்தபடி ஆனந்த தியானத்தில் அமைந்திருந்தாள். எண்ணமெல்லாம் இசைக்களிப்பு! சுவாசமெல்லாம் கானத்தின் சிலிர்ப்பு! நேசமெல்லாம் இராகாலாபனையின் உயிர்ப்பு! உண்டியும், உறக்கமும் கூட மறந்த மோன நிலை! இசையே உணவாய், உணர்வாய் உயிர் மூச்சாய் உறைந்திருக்கும் உன்னத நிலை! இதுதான் அம்பிகைதேவியின் இறை நிலை. அவளின் அன்றாட வாடிக்கை. எத்தனைக் காலமாய் இப்படி கிடக்கிறாளோ, அறிந்தவர் எவரும் இலர். பலர் கண்களுக்கு கந்திற்பாவையாகத் தெரிபவள், சிலர் பார்வையில் மட்டும் உயிருள்ள ஓவியமாய், உன்னதக் காவியமாய் காட்சியளிப்பவள். கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று காலம் ஓடிக்கொண்டிருந்தது. இளவரசன் இமயவர்மன் சிறந்த பௌத்த நெறியாளர். கருணையே வடிவாக, கடமையே உறவாக, மக்கள் நலமே பெரிதாக நினைத்து வாழ்பவன். அவனுடைய அன்றாடப் பணிகளுள் முக்கியமான ஒன்று அம்பிகைதேவி தரிசனம். பெரும்பாலும் கந்திற்பாவை காட்சியே காணக்கிடைத்தாலும் பலமுறை கனவிலும், சிலமுறை அரை நினைவிலும் அம்பிகைதேவியின் உருவைக் கண்டவன். அந்த தீப ஒளியில் கண்கள் கூசிட உள்ளம் மட்டும் பட்டொளியாய் பளிச்சென்று மின்ன, சிறிது சிறிதாக ஞானம் பெற்றவாறு புத்தம் நோக்கி நகர்ந்துகொண்டிருந்தவன். புரியாத புதிர் ஒன்று கந்திற்பாவையிடம் இருந்ததையும் கண்டவன், என்றேனும் ஓர்நாள் அம்பிகைதேவி தனக்கு விடை பகர்வாள் என்று ஞானம் பெறக் காத்திருந்தான். தேடல் தொடர்ந்தவண்ணம் இருந்தது. கந்திற்பாவையின் கழுத்தைச் சுற்றிய யாழிசைக் கருவியின் உறுதியான நரம்புகள் நீண்டு நெளிந்து, சில நேரங்களில் இறுக்கியவண்ணம் இருந்தது. ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு வண்ணம் காட்டி காண்போரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்த அந்த மென்நரம்புகள் இடையூறாய் இருப்பதாக நினைத்து போகவர விலக்க நினைக்க, இமயவர்மனைத் தீண்ட விட்டால்தானே.. இறுக்கிய இசை நரம்பிற்கு இதயமில்லையோ என்றுகூட கருவினான் அவன். கேள்வி கேட்பாரும் இல்லாமல் பதிலளிக்கவும் முனையாமல் அசையா சடமாக கந்திற்பாவை … பரபரத்து துடித்த கையை , மடக்குவதைக் காட்டிலும் வேறேதும் செய்ய இயலா நிலை இமயவர்மனுக்கு. விடிவு காலம் வர வினையாவும் தீரும் என்று காத்திருந்தான் அவன்.

    images (1)

    ஒரு பௌர்ணமி நாளில் அதற்கான விடை கிடைக்கக்கூடும் என்ற உள்ளுணர்வின் உந்துதலில் அன்று காலை முதலே அன்ன ஆகாரமின்றி, வேம்பின் புனிதக் காற்றை உண்டபடி கண்ணிமைக்காது கந்திற்பாவையைப் பார்த்துக்கொண்டிருந்தான். அந்தி மயங்கும் இனிய தருணம். சூரியனைக் கண்டு மலர்ந்த மொட்டுக்கள், சந்திரனைக் கண்டு நாணம் கொண்டு துவண்டு வீழ்ந்தது. மீண்டும் கதிரவனின் காட்சிக்காக மொட்டையும் ஈன்றுச் சென்றது. கூட்டில் அடையப்போகும் புள்ளினங்களின் மெல்லிய கீச்சொலியும் கூட அடர்ந்த அமைதியின் ஊடே சீறிப்பாய்ந்த வானூர்தி வெடியானது. நினைத்தது நடந்தது. வெகு நாட்களாகக் கேட்டதும் கிடைத்தது. ஆம் கந்திற்பாவை அசைய ஆரம்பித்தாள். மெல்ல மெல்ல அம்பிகையாக உருக்கொண்டாள். வந்தவளின் பிரகாசம் மலை முழுதும் மின்னலாய் வெட்டியது. சுதாரித்து சுய நினைவிற்கு வந்தவன், விடுத்த வினாக்களில் முதலானது பாவையவளின் மென்னியைத் திருகும் இசைக்கருவியின் மெல்லிய நரம்புகள் பற்றியதுதான்.. கேட்க நினைத்த அனைத்திற்கும் கிடைத்த விடைகள் அவன் ஞானத்தெளிவிற்கு அகண்ட பாதைகளாய் அமைந்தது.

    இவ்வுலகில் பிறக்கும் அனைத்து உயிர்களும் தனியாகத்தான் பிறக்கின்றன. தனியாகத்தான் மரிக்கின்றன. இதில் இடையில் வரும் உறவுகள் அனைத்தும் மாயத்தோற்றம்தான். தனிமை மட்டுமே சாசுவதம். இதனை உணர்ந்துகொண்டாலே மனம் தெளிவு பெறுகிறது.

    உலகோரை உய்ய வைக்கும் உன்னத இசையை வழங்கும் அக்கருவியின் நீண்ட நரம்புகள் அதன் தன்மையிலேயே விலகாமல் நிற்கிறது. இதமாய் இசை மீட்டிட இதயம் நாடுகிறது. இங்கிதம் உணரா உத்வேகம் உந்தித்தள்ள உறுதியாய் நிற்கிறது. போராட்டத்தில் வெற்றியின் இலக்கை வேகத்துடன் நெருங்க மலையையும் மென் நரம்புகளால் இழுக்க எத்தனிக்கிறது. தோல்வி முகம் துன்பத்தைக் கொடுக்கிறது. பற்றே பலவீனம். ஆசையும், பற்றுமே துன்பத்திற்குக் காரணம். ஆசையை விலக்கினால் துன்பம் சூரியனைக் கண்ட பனியாய் விலகும். தவங்கள் பலப்புரிந்த நல்லிதயம் அது. உலகோருக்கு வாழும் வழியுணர்த்த விழையும் சீவனது. புத்தராய் மாறும் தருணமிது. நற்காட்சி , நற்சிந்தை, நன்மொழி, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடைப்பிடி, நற்தியானம் என தன்னகத்தேக் கொண்ட அனைத்தையும் உலகோருக்குத் தெரிவிக்கும்பொருட்டு உவந்து நிற்கும் வித்தையது. மாந்தருக்கு வாழ்ச்சியை உணரச்செய்யும் உவமையது. புத்தமாய் ஒளிரும் தருணமிது!

    ஞானம் பெற்ற புத்தன் புனிதனானான். புத்தர்களை  உருவாக்கப் புறப்பட்டான்!

    படங்களுக்கு நன்றி

    Share
  • குறளின் கதிர்களாய்…(95)

    செண்பக ஜெகதீசன்

    செப்பின் புணர்ச்சிபோற் கூடினுங் கூடாதே
    யுட்பகை யுற்ற குடி. (திருக்குறள்-887: உட்பகை)

    புதுக் கவிதையில்…

    செப்பின் மூடிபோல்
    செம்மையாய்ப் பொருந்தியிருந்தாலும்,
    உட்பகை கொண்ட குடி

    ஒருநாளும் ஒன்றுசேராது
    உறுதியாக!

    குறும்பாவில்… 

    செப்பின் மூடியாய்ச் சேர்ந்திருந்தாலும்,
    சேராது உண்மையில்

    உட்பகை கொண்டோர் உறவு!

    மரபுக் கவிதையில்… 

    உடனிருந் தழித்திடும் உறவினையே
      உட்பகை யென்னும் நஞ்சதுவே,
    அடைத்திடும் மூடியும் செப்பதிலே

      அழகாய்ப் பொருந்தித் தெரிவதுபோல்
    கிடைத்திடும் உறவெலாம் அன்பினாலே
       கைகள் கோப்பதாய்த் தெரிந்தாலும்,
    இடராம் உட்பகை உடனிருந்தால்

      என்றும் ஒன்றாய்ச் சேராதே!

    லிமரைக்கூ… 

    சேர்ந்திருக்கும் நன்றாய் செப்பதிலே மூடி,
    உறவிதுபோல் சேர்ந்திருப்பதாய்த் தெரிந்தாலும்
    சேராதென்றும் உட்பகை வந்தால் தேடி!

    கிராமிய பாணியில்…

    ஒண்ணுசேராது ஒண்ணுசேராது
    ஒறவெல்லாம் ஒண்ணுசேராது,
    உட்பகதான் வந்துசேந்தா
    ஒருநாளும் ஒண்ணுசேராது…

    செப்புலமூடி சேந்ததுபோல
    ஒண்ணாஒறவு தெரிஞ்சாலும்,
    உட்பகமட்டும் உள்ளவந்தா
    ஒண்ணாச்சேர முடியாதே
    ஒறவும்சரியா நெலைக்காதே…

    ஒண்ணுசேராது ஒண்ணுசேராது
    ஒறவெல்லாம் ஒண்ணுசேராது,
    உட்பகதான் வந்துசேந்தா
    ஒருநாளும் ஒண்ணுசேராது…!

     

     

    Share
  • கருப்பு வெள்ளை நாட்கள்!

    -இரா.சந்தோஷ் குமார்

    முதன் முதலாகக்
    கருப்பு வெள்ளைத்
    தொலைக்காட்சிப் பெட்டி
    சொந்தமாக வாங்கி
    வீட்டு மாடியில்
    ஆண்டனாவை முறுக்கித்
    திருப்பி…ஒரு திசையில்
    இழுத்துக் கட்டிப்
    படம் பார்த்தபோது
    எங்கள் இல்லத்தில் ஒளிர்ந்த
    வண்ணமயமான சந்தோசத்தையும்…

    வெள்ளிதோறும்
    ஒளியும் ஒலியும்
    ஞாயிறுதோறும்
    தமிழ்த் திரைப்படம்
    ஒளிப்பரப்பாகும் போதெல்லாம்
    பக்கத்து வீட்டுக் குழந்தைகளுக்கு
    நான் ஒரு திரையரங்கு
    உரிமையாளர் போல
    மமதையில் மிதக்கும்
    கர்வத்தையும்…

    ”தடங்கலுக்கு வருந்துகிறோம்”
    பதாகையைக் காட்டும்போது
    ’ம்ம்க்கும் ‘எனச் சலித்துக்கொண்டு
    அடக்கிவைத்த மூத்திரத்திற்குச்
    சுதந்திரம் கொடுக்கச்செய்து
    பெற்ற பேரின்ப நிம்மதியையும்…

    ஜண்டு பாம்
    ரீகல் சொட்டு நீலம்
    பூஸ்ட் இஸ் மை எனர்ஜி
    உட்வாண்ஸ் கிரேப் வாட்டர்
    விளம்பரங்களை
    ரசித்து ருசித்து பார்த்து
    மனப்பாடம் செய்து
    மகிழ்ந்த
    அந்த நாட்களின் சுகந்த ஆனந்தத்தையும்…

    இன்று
    செயற்கைக் கோளுடன்
    என் இல்லத்தை இணைத்து
    அகன்றத்திரையுடைய
    வண்ணத் தொலைக்காட்சியில்
    விளம்பரங்களுக்கு நடுவில்
    திணித்துத் திரையிடப்படும்
    திரைப்படப் பாடல்களும்
    திரைப்படங்களும்
    ஏனோ எனக்கு கொடுப்பதில்லை!

     

    Share
  • “ஆறு படை அழகன்”  — (5)

    க. பாலசுப்பிரமனியன்

    images

    விழி தேடும் அழகன் நீ

    மதி தேடும் அறிவு !

    உயிர் தேடும் உறவு நீ

    துயர் தீர்க்கும் மருந்து !

     

    தேயாத நிறை நிலவு நீ

    திகட்டாத அருள் வடிவு !

    குறையாத கருணை வெள்ளம் நீ

    கலையாத அழகின் மஞ்சம் !

     

    சுவையான சொல்லுக்குச் சொந்தம் நீ

    சுடரில் பிறந்த ஒளிவெள்ளம் !

    கருத்துக்குள் அடங்காத கவிதை  நீ

    கன்னித்தமிழுக்குத் தந்தை!

     

    புவி காணாத ஈர்ப்பு நீ

    புலன் சிலிர்க்கும் வியப்பு !

    பழமாகப் பழுத்த பிள்ளை நீ

    பரமனுக்கும் குருவான விந்தை !

     

    தினைக் காட்டுத் தலைவன் நீ

    தீந்தமிழ் போற்றும் பண்பு !

    வினை தீர்க்கும் வேலன் நீ

    வேதனைகள் தேடும் விடியல் !

     

     

     

     

    Share
  • உன்னையறிந்தால் …. (31)

    நிர்மலா ராகவன்

    கறுமை நிறம்

    உனையறிந்தால்1

    கேள்வி: சில நாடுகளில் உள்ளவர்கள் சிவப்பாக, வெளுப்பாக இருக்கிறார்கள். பெரும்பான்மையான தமிழர்கள் கறுப்புதான். யார் செய்த பாரபட்சம் இது?

    விளக்கம்: ஃபிசியோக்னோமி (PHYSIOGNOMY) என்ற விஞ்ஞானப்பிரிவு உலகின் வெவ்வேறு பாகங்களில் பிறக்கும் மனிதர்கள் ஏன் நிறத்திலும், உருவ அமைப்பிலும் மாறுபட்டிருக்கிறார்கள் என்பதை விளக்குகிறது.

    மலேசியா, இந்தோனீசியா போன்ற தென்கிழக்காசிய நாடுகள், இந்தியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளின் சில பகுதிகளில் பூமத்திய ரேகை வரைபடத்தின் குறுக்கே, அல்லது மிக அருகில் இருக்கும். அதனால் சூரிய வெப்பம் அதிகம். இந்நாட்டு மக்களை இயற்கைச் சீற்றத்திலிருந்து காக்கவேபோல், அவர்களது சருமத்தில் மெலனின் என்ற வேதியப் பொருள் அமைந்திருக்கிறது. இது நமக்குக் கிடைத்த பேறு. நாம்தான் புரியாமல், நொந்து கொள்கிறோம்.

    மலேசியாவில் உச்சிவேளையில், பன்னிரண்டு மணியிலிருந்து ஒரு மணிவரை வெள்ளைக்காரர்கள் வெற்றுடம்போடு வெளியில் திரிந்தாலோ, `சூரியக் குளியல்’ என்ற பெயரில் அரை நிர்வாணமாக வெயிலில் காய்ந்தாலோ, அவர்களுக்குச் சருமப் புற்று நோய் வரும் சாத்தியக்கூறு நூறு சதவிகிதம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சூரியனின் கிரணங்கள் பட்டாலே வியாதி வரும் என்ற நிலை எவ்வளவு கொடியது!

    இங்கிலாந்திலும், தென்னாப்பிரிக்காவிலும் வெள்ளையர்கள் இருந்தும், ஓட்டப் பந்தயங்களில் இந்நாடுகளைப் பிரிதிநிதிப்பவர்கள் கறுப்பர்களாகவே இருப்பார்கள். கவனித்திருக்கிறீர்களா?

    சில வருடங்களுக்கு முன், ஒரு இத்தாலிய நாட்டு மூதாட்டி என் மணிக்கட்டைப் பிடித்துக்கொண்டு, என் கரத்தைத் தோளிலிருந்து கீழ்வரை தடவினாள்.

    நான் நீச்சல் குளத்திற்குத் தினமும் போய், நீச்சலடிப்பேன். இயற்கையான பழுப்புடன் சிவப்பு கலந்த நிறமாக சருமம் மாறி இருந்தது.

    `எவ்வளவு அழகான நிறம்! இதற்கு எவ்வளவு கொடுத்தாய்?’ என்று ஏக்கத்துடன் அவள் கேட்டபோது, எனக்குச் சிரிப்புப் பொங்கியது. அப்போதுதான் அறிந்தேன், சருமத்தை TAN செய்வதற்கான சலூன்கள் இருக்கின்றன, அதற்காகப் பணத்தைக் கொட்டிக் கொடுப்பார்கள் என்று.

    நாம் வெள்ளைக்காரர்களைப் பார்த்து பிரமிக்கிறோம். அவர்கள் நம் நிறத்தை மெச்சுகிறார்கள்!

    மலேசிய பினாங்குத் தீவு, லங்காவித் தீவு ஆகிய இடங்களில் உள்ள கடற்கரைகளில், தங்கள் தோல் பழுப்பு நிறமாக மாற வேண்டும் என்று மிக விரும்பி, வெள்ளைக்காரர்கள் ரசாயனக் குழம்பை உடம்பெல்லாம் பூசிக்கொண்டு, மிகக் குறைவான ஆடை அணிந்து, (நிர்வாணமாக இருக்க அனுமதி கிடையாது), காலைத் தலைமேல் வைத்துக்கொள்ளாத குறையாக சாய்வு நாற்காலிகளில் படுத்தபடி உறங்குவதையோ, புத்தகம் படிப்பதையோ காணலாம். பல மாதங்கள், பல மணி நேரம் இப்படித் `தவம்’ புரிந்தால்தான் சருமத்தின் வெண்மையோ, சிவப்போ சிறிதேனும் மாறும்.

    அவரவர் அடிப்படை உணவுகூட தட்ப வெப்பத்தைப் பொறுத்தே அமைகிறது. வெப்ப நாடுகளில் வாழ்வோர் மிளகாய், மசாலை வகைகளை உணவில் சேர்ப்பதால் வியர்வை வெளியாகிறது. குளிர் பிரதேசங்களிலோ நிறைய உருளைக்கிழங்கு சாப்பிடுகிறார்கள். புலால், வெண்ணை, பீர் போன்ற கொழுப்பு நிறைந்த ஆகாரம் உடலை ஓரளவாவது குளிரிலிருந்து பாதுகாக்கிறது..

    வட சீனாவில் குளிர் அதிகம். அங்குள்ளவர்களின் சருமம் தடிமனாக இருப்பதுடன், ஆண்களின் முகத்தில் ரோமம் அவ்வளவாக வளராது. (மலேசிய சீனர்கள் தினமும் சவரம் பண்ணிக்கொள்ளும் அவசியமே கிடையாது). பெண்களுக்கோ புருவம் வளருவதில்லை. அதனால், அவர்கள் தினமும் வரைந்து கொள்வார்கள், அல்லது TATTOO முறையில் (பச்சை குத்திக்கொள்வதைப்போல) நிரந்தரமாகச் செய்துகொள்வார்கள்.

    மலேசியாவுக்கு வந்து சில தலைமுறைகள் தெருக்களில் வியாபாரம் செய்யும் சீனர்கள் சற்றே கறுத்து விடுவர். இல்லையேல், சூரிய வெப்பம் இவர்களைப் படாத பாடு படுத்தும்.

    இங்குள்ள சீனப் பெண்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, `உனக்கென்ன! நீ நல்ல நிறம்!’ என்று மெச்சுவார்கள். அவர்கள் எல்லாருமே சற்று மஞ்சள் கலந்த வெண்மை நிறமாகத்தான் தோன்றுவார்கள் நமக்கு. அதிலும், உயர்வு, மட்டம்! இங்கு சரும நோயால் மிக அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள் சீனர்கள்தாம். நான் தொழுநோயைப்பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டபோது கிடைத்த தகவல் இது. இப்போது கோலாலம்பூரில் பார்க்குமிடமெல்லாம் சீன மருத்துவர்களின் சரும வைத்திய நிலையங்கள்!

    ஆப்பிரிக்கவாழ் கறுப்பர்களில் ஒருவர் எவ்வளவுக்கெவ்வளவு கறுப்பாக இருக்கிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு அழகாகக் கருதப்படுகிறார்கள். அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது, தமது கருமை நிறம் இயற்கை அளித்த வரப் பிரசாதம் என்று.

    ஆனால், ஆங்கிலக் காலனித்துவத்துக்கு அடிமைப்பட்ட இந்தியர்களும், பிற நாட்டவரும்தான் வெள்ளைக்காரர்களின் மனோ நிலையைப் பின்பற்றி, தம்மைத் தாமே மட்டமாக எடை போட்டுக் கொள்கின்றனர்.

    ஒருவரை மனோதத்துவ ரீதியாக வீழ்த்த அவரிடம் இருக்கும் நிறையையே குறையெனப் பழித்தது வெள்ளைக்காரர்களின் சாமர்த்தியம். அதை நம்பி, இன்றளவும் நம்மை வருத்திக்கொள்வானேன்!

    தொடருவோம்

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 187

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக்  காதை 

    கல்லாக் களிமகன் ஒருவன் வாளால் எறிய, கோவலன் குருதி சோர மண்ணின் மேல் மாண்டு விழுதல்

    அதனைக் கேட்ட கல்வியறிவில்லாத
    கொலைபாதகத்துக்கு அஞ்சாத
    மூடன் ஒருவன்
    தன் கையில் உள்ள வெள்ளிய வாளால்
    கோவலனை வெட்டினான்.

    அவ்வெட்டானது கோவலன் உடலில்
    குறுக்கே பாய்ந்து அறுத்தது.
    வெட்டுப்பட்ட புண்ணிலிருந்து
    குருதி கொப்பளித்து சுற்றிலும் பரவியது.

    நிலமங்கை மிக்க துயரம் அடைய,
    மன்னனுடைய செங்கோல் வளைந்து நிற்க,
    முன்செய்த ஊழ்வினை முதிர்ந்து நிற்கக்
    கோவலன் வெட்டுண்டு வீழ்ந்தான்.

    வெண்பா 

    பாண்டிய மன்னன் முன்செய்த தீவினையால்
    எப்போதுமே வளைந்திடாத
    அவன் செங்கோல்
    கண்ணகியின் கணவன்
    கோவலன் கொலை காரணமாய் வளைந்தது.

    உலக மக்களே!
    இதன் மூலம் நீவிர் செய்த
    நல்வினை தீவினை
    இவ்விருவினைகளின் பயனும்
    அவற்றைச் செய்தவரைத்
    தப்பாது வந்து சேரும்,
    இதை உணர்ந்து
    நல்லதையே செய்வீர்களாக!

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 212  – 218

    கொலைக்களக் காதை முற்றியது. அடுத்து வருவது ஆய்ச்சியர் குரவை

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-kolaikalakathai

     

    Share
  • குரோம் பிரௌசரை எளிதாக இயக்க சில குறுக்கு வழிகள்

    – எஸ். நித்யலக்ஷ்மி.

    குரோம் பிரௌசரை எளிதாக இயக்க எளிய எழுபது குறுக்கு வழிகள்!

    google

    குரோம் ப்ரௌசரில் இயக்கத்தில் உள்ள வெப் பக்கத்தை எளிதாக இயக்க சில
    குறுக்கு வழிகள் கீழே தரப்பட்டுள்ளது.

    Space Bar – Page down one full screen at a time
    Page Down — Page down one full screen at a time
    Down Arrow – Scroll Down
    Shift + Space Bar – Page up one full screen at a time
    Page Up — Page up one full screen at a time
    Up Arrow – Scroll Up
    Home – Go to the top of the webpage
    End – Go to the bottom of the webpage
    Ctrl + P – Print the current page
    Ctrl + S – Save the current page
    Ctrl + O – Open a file from your computer in Google Chrome
    F5 – Reload the current page
    Esc – Stop page loading
    Ctrl + F5 – Reload the current page (ignore cached content)
    Ctrl + D – Bookmark the current webpage
    Ctrl + Shift + D – Save all open pages as bookmarks in a new folder
    Alt + Click on link – Download link
    Ctrl + F – Open the search box
    F3 – Find the next match for your input in the search box
    Shift + F3 – Find the previous match for your input in the search box
    F11 – Open page in full screen mode
    Ctrl + + – Make the text larger
    Ctrl + – – Make the text smaller
    Ctrl + 0 – Return text to normal size
    Ctrl + Shift + B – Toggle the bookmarks bar
    Ctrl + H – View the History page
    Ctrl + J – View the Downloads page
    Shift + Esc – View the task manager
    Ctrl + Shift + Delete – Open the Clear Browsing Data Dialog
    F1 – Open the Help Center in a new tab
    Ctrl + U – View page source code
    குரோம் பிரௌசர் விண்டோவை எளிதாக இயக்க குறுக்கு வழிகள்:
    குரோம் ப்ரௌசரில் இயக்க மற்றும் மற்ற விண்டோ(window) பக்கங்களை இயக்க
    குறுக்கு வழிகள் கீழே தரப்பட்டுள்ளது.

    Ctrl + N – Open a new window
    Ctrl + Shift + N – Open a new window in incognito mode (Pages
    viewed in incognito mode won’t show in browser history or search
    history. They also won’t leave cookies or other traces)
    Alt + F4 – Close the current window
    Shift + Click on link – Open the link in a new window

    குரோம் பிரௌசர் டேப் (TAB) இயக்க குறுக்கு வழிகள்:
    குரோம் ப்ரௌசரில் ஒரு விண்டோவில் உள்ள டேப்(tab) பக்கங்களை எளிதாக இயக்க
    குறுக்கு வழிகள் கீழே தரப்பட்டுள்ளது.

    Ctrl + Click on link – Open link in a new tab in the background
    Ctrl + Shift — Click on link – Open the link in a new tab and
    switch to the newly opened tab
    Ctrl + T – Open a new tab
    Ctrl + Shift + T – Reopen the last tab that was closed
    Ctrl + 1 through Ctrl + 8 – Switch to the tab at the specified position
    Ctrl + 9 – Switch to the last tab
    Ctrl + Tab – Switch to the next tab
    Ctrl + Shift + Tab or Ctrl + PgUp – Switch to the previous tab
    Backspace – Go to the previous page in your browsing history for the tab
    Shift + Backspace – Go to the next page in your browsing history for the tab
    Ctrl + W – Close the current tab or pop-up
    Alt + Home – Go to your homepage in the current tab
    Ctrl + Click the Back Arrow, Forward Arrow, or Go button – Open
    destination in a new tab in the background
    Drag a link to a tab – Open the link in the tab
    Drag a link to a blank area on the tab strip – Open the link in a new tab
    Drag a tab out of the tab strip – Open the tab in a new window
    Drag a tab out of the tab strip and into an existing window’s tab
    strip – Open the tab in the existing window
    Press ESC while dragging a tab – Return the tab to its original position
    குரோம் பிரௌசர் அட்ரெஸ் பாரை(address bar) இயக்க குறுக்கு வழிகள்:
    குரோம் ப்ரௌசரில் அட்ரெஸ் பாரை(address bar) இயக்க சில குறுக்கு வழிகள்
    கீழே தரப்பட்டுள்ளது.

    Type a search term, then press Enter – Perform a search using your
    default search engine
    Type a search engine URL, then press TAB, type a search term, and
    press Enter – Perform a search using search engine associated with the
    URL
    Ctrl + Enter after typing base web address – Automatically add
    ‘www.’ and ‘.com’ what you have typed in the address bar and open that
    web address.
    F6 – Highlight address bar contents
    Type a web address then Alt + Enter – Open web address that
    appears in the address bar in a new tab
    Ctrl + K – Initiate a Google search with the address bar. After
    typing the shortcut key, a ‘?’ will appear in the address bar. Type
    your query then press Enter.
    Ctrl + Right Arrow – Jump to the next word in the address bar
    Ctrl + Backspace – Delete the previous word in the address bar
    Select an entry from the drop down menu in the address bar, then
    press Shift — Delete – Delete the entry from the browsing history
    Click an entry in the address bar drop down list with the Middle
    Mouse Button – Open that URL in a new tab

    குரோம் பிரௌசர் மவுஸ் இயக்கங்களில் குறுக்கு வழிகள்:
    குரோம் ப்ரௌசரில் மவுஸ் இயக்கங்களில் என்னென்ன குறுக்கு வழிகள் உள்ளன என
    கீழே தரப்பட்டுள்ளது.

    Middle click on link – Open the link in a new tab in the background
    Shift + Middle click on link – Open the link in a new tab and
    switch to the newly opened tab
    Middle click on tab – Close the tab
    Click the Back Button, Forward Arrow, or Go button with Middle
    Mouse Button – Open destination in a new tab in the background
    Shift + Scroll Wheel – Scroll horizontally
    Ctrl + Scroll Wheel – Increase or decrease text size

    Share
  • படக்கவிதைப் போட்டி 38-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. துளசிதாசனின் புகைப்படத்தை இவ்வாரத்தின் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றி.

    painted goddess

     சமூகத்தில் மலிந்துவிட்ட அவலங்களைக் களைய தெய்வங்களுக்கு இனி இரு கைகள் போதா; ஈராயிரம் கைகள்தாம் வேண்டும் என்பதைத்தான் இப்புகைப்படத்தில் காட்சிதரும் பெண்தெய்வம் குறியீடாய் விளக்குகின்றதோ?

    இனி, இவ்வாரப் போட்டிக் கவிதைகளைக் காண்போம்!

    ’குணமும் மனமும் வேறுவேறான மாந்தரைப்போல், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் எத்தனை எத்தனை கடவுளர் உருவங்கள் புதிது புதிதாய் முளைத்தபடி இருக்கின்றன!’ என வியக்கிறார் திரு. கவிஜி.

    வண்ணங்களான கடவுள்
    விடை மறந்த கடவுள்
    வாகை மாதிரியான கடவுள்
    வால் கொண்ட கடவுள்
    குருதி சொட்டும் கடவுள்
    கும்பிட்டு திரியும் கடவுள்
    கூந்தல் வளர்க்கும் கடவுள்
    ஆடை துறந்த கடவுள்
    அழுக்கு நிறைந்த கடவுள்
    வாய் உப்பிய கடவுள்
    வயிறு உப்பிய கடவுள்
    மஞ்சள் புடவைக் கடவுள்
    மகாநதி பேசும் கடவுள்
    மத்தளம் அடிக்கும் கடவுள்
    மயானம் சுமக்கும் கடவுள்..
    குழுமியிருக்கும் கடவுள்கள்
    மத்தியில் திருதிருவென
    விழித்துக் கொண்டிருந்தார்
    புதிதாக சேர்ந்த, இன்னும் பெயர்
    வைக்கப் படாத
    இந்த கடவுளும்….

    ***

    வாழ்வில் வெற்றிபெற நம்பிக்கை ஏராளம் வேண்டும் என்ற மனிதனின் எண்ணந்தான் கடவுளர்தம் கைகளின் எண்ணிக்கையையும் கூட்டிவிட்டதோ? என்று வினவுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    நிறைய வேண்டும்
    நம்பிக்கை என்பதால்தானோ,
    நம்பிக்கையுடன்
    நிறைய கைகள் வைத்துக்கொண்டார்களோ
    நாம் வணங்கும் கடவுள்களுக்கு…!

    ***

    நல்ல கவிதைகளை நயமுடன் படைத்திருக்கும் கவிஞர்களுக்குப் பாராட்டுக்கள்!

    அடுத்து நாம் காணப்போவது இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை!

    ”மரத்தை மறைத்தது மாமத யானை; மரத்தில் மறைந்தது மாமத யானை” என்பார் திருமூலர். சிற்பியின் கலைப்படைப்பான சிலையைக் கடவுளாய்க் காண்பதும், கடவுளாய்க் காட்சியளிக்கும் சிலையானது சிற்பியின் கைவண்ணமேயன்றி வேறில்லை என்று முடிவுசெய்வதும் தனிமனிதனின் விருப்பந்தான். பார்வைக்கேற்றபடி காணும்பொருளும் தோற்றம் தருகின்றது. இந்த அரிய கருத்தை எளிய வரிகளில் விளக்கியிருக்கும் கவிதையொன்று என் கவனத்தைக் கவர்ந்தது.

    பதினாறு கரங்களது விரித்து
    பதித்த எந்த உருவிது!
    பக்தியாய் வணங்குவதும் கலையிதுவென
    பத்திரமாய் மதித்துச் செல்வதும்
    பதுமையாய்ப் பார்த்து விலகுவதும்
    பலரது மன எண்ணமாகுது.
    வேலையற்றவர் வேலையிதுவென சிலரது
    வேற்றுமை எண்ணமும் குவிகிறது.   
     

    இக்கவிதையை எழுதியிருக்கும் திருமிகு. வேதா. இலங்காதிலகத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்க் குறிப்பிட விரும்புகின்றேன். பாராட்டுக்கள் கவிஞரே!

    ***

    அடுத்து, நாட்டில் மண்டிவரும் மதவாத நச்சுச் செடிகளை உதவாது என வேரோடு பிடுங்கியெறிந்து, அனைத்து மதங்களும் ஒன்றே என நிலைநாட்டுதற்குத்தான் இந்தப் பத்ரகாளித் தோற்றமா? இல்லை…இதுவும் பாமர மக்களை ஏய்க்கும் பொய்வேடமா? என்று தெய்வவுருவைப் பார்த்துக் கேள்வியால் வேள்வி செய்யும் கவிதை ஒன்று!  

    தீவிர வாதமும்
    பயங்கர வாதமும்
    உச்சமாகிப்போனது
    கொலைகளைச்செய்வதையே
    கொள்கையாய் கொண்டோரையும்
    நின்றழிக்கும் பத்ர காளியாய் தோன்றி பயமுறுத்த புறப்பட்டாயோ?
    எம்மதமும் நம் மதமாய்
    சம்மதித்து வாழ வழி செய்வாயோ
    இல்லை நீயும் பொய் வேடமிட்டு
    குண்டு வைப்பாயோ யாரறிவார்?
    கடவுள் பெயராலேயே
    கன்னக்கோல் சாத்தும் உலகமாயிற்றே
    எல்லாம் கலிகாலம்

    திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனின் இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய் அறிவிக்கின்றேன்.

    பங்குபெற்றோர் அனைவருக்கும் மீண்டும் என் பாராட்டுக்கள்!

     

    Share
  • ”மழையோன்’’….

    DSC01226

    “திருக்கோயிலூரில்” முதல் மூன்று ஆழ்வார்களுக்கு
    (பொய்கை, பூதம், பேயாழ்வார்) உலகளந்த பெருமாள்
    மழையாகிக் காட்சி தந்தாராம்….இந்த மழையில் அந்த அருள் மழையை
    நினைக்கையில் தோன்றியது….

    “ஒருவர் படுக்க இருவர் அமர
    வருகை புரிந்தவரால் நிற்க -ஒருயிரவில்
    பொய்கைபேய் பூதத்தார் பின்னிப் பிணைந்திட
    செய்த மழையோன் சரண்”….

    “மாரிகாத்த கண்ணனே, ஏரிகாத்த ராமனே,
    ஈரக்கை போதுமே ஈசர்காள் !, -ஊருக்கு,
    அய்யனருள் மீறியதே , ஆகாஸ கங்கையாய்:
    பொய்கைபூ தம்பேய்வெண் பா”….கிரேசி மோகன்

    Share