Year: 2016

  • ”நெமிலி பாலா திரிபுர சுந்தரி”….

    %e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf

    ”பாப்பா நெமிலிவாழ் பாலா திரிபுரை,
    காப்பாள், அடியார் கரம்பிடித்துச், -சேர்ப்பாள்
    அதியற் புதமான ஆன்ம உலகில்:
    துதியவளை சாக்லேட்டைத் தந்து’’….(1)

    ’’அமளி இலாத அமைதி லயத்தில்,
    ரமண மயமாய் ரமிப்பு, -நெமிலிவாழ்,
    பாண்டுரங்கன் சோதரி, பாலா திரிபுரையை
    வேண்டி யுறங்க வரம்’’….(2)

    ‘’காளி அரக்கர்க்கு, கற்பகம் பக்தர்க்கு,
    யாளி அமரும் எஜமானி, -தோளிரெண்டில்,
    வேலா யுதன்அண்ணன் வேழனைச் சுமந்திடும்,
    பாலா நவராத்ரிப் பெண்’’….(3)

    ’’வெள்ளை அரவிந்தம் வீற்று நெமிலியில்
    கொள்ளை அழகாய் கொலுவிருக்கும், -பிள்ளையவள்,
    பாலா திரிபுரையைப் போற்றிப் பணிவோர்க்கு
    நாளாம் நவராத்ரி நாள்’’….(4)

    ’’சுப்ரமண்ய அய்யரின் சொப்பனத்தில் வந்(து)ஆற்றில்,
    தெப்பமாய் நீந்திக்கண் தென்படுவேன், -அப்புறம்,
    ஆலயம் வேண்டாம், அகத்தில் குடிவைப்பீர்’’,
    வாலைபா லாஅருள் வாக்கு’’….(5)

    ‘’மூலாதா ரத்தினில் மூளும் கனலவள்,
    கோலா கலகோ குலன்தங்கை, -பாலா
    திரிபுரையைக் காண திருநெமிலி செல்வோம்
    ஹரிசோ தரியே அரண்’’….கிரேசி மோகன்….(6)

    ”சுண்டு விரலளவு சொப்புப் பதுமையாய்
    கண்டு பிடித்தனர் காட்டாற்றில், -கொண்டுவந்த,
    நாலா யிரத்தோன் நவனீதன் சோதரி
    பாலாம் பிகையவள் பேர்”….கிரேசி மோகன்….(7)

    விடிகாலை வெளிச்சம்”….
    ———————————–

    “மாலை மயக்கம், மதிய உதயம்அதி
    காலை வெளிச்சம் கனவாகும், -பாலை,
    திரிபுரையைக் கண்டு தரிசிப்போர் , தம்முன்,
    எரிபவை கூட எழில்”…..கிரேசி மோகன்….(8)

    ”பாலாவின் பேர்சொல்லி பாம்பை எழுப்பிடு.
    மூலாதா ரத்தில் முழிபிதுங்கும் : -தோளா
    யிரத்தில் உறங்கிடும், யாதவன் தங்கை,
    சிரத்தில் சிரிப்பாள் சிலிர்த்து’’….கிரேசி மோகன்….(9)

    ’’இமியளவும் தீங்கின்றி, இன்சொல் உரைக்க,
    நெமிலிவாழ் பாலா நெகிழ்வாள் , -ஞமலியின்,
    வாலை நிமிர்த்தித்தன், ஆளாய் அமர்த்துவது,
    பாலை திரிபுரையின் போக்கு’’….கிரேசி மோகன்….(10)

    ஞமலி -நாய்

    ”ஓலை ஜபமணி மாலை அபயமொடு
    காலை மடித்து கொலுவிருக்கும் -பாலை
    திரிபுர சுந்தரியைத் தேடி நெமிலி
    வருபவர் வாழ்வில் வளம்….கிரேசி மோகன்….(11)

    ”பயமகல பாலா, பலம்பெருக பாலா,
    லயமடைய பாலா, லலிதை -மயமான,
    ரூப தியான ரமிப்பில் இருப்போர்க்கு,
    ஆபத்(து) உதவி அவள்”….கிரேசி மோகன்….(12)

    ’’நெமிலி பாலா திரிபுர சுந்தரி’’….
    ————————————————————

    tamil-daily-news-paper_49138605595

    ‘’திரிபுர சுந்தரி தேவி நமஸ்தே,
    பரிபூ ரணமுணர பாலா -சரிபுகல்வாய்,
    சாதகனாய் ஆக்கி சதாசர்வ காலமும்
    மாதவத்தில் மூழ்கயென், மனு’’….கிரேசி மோகன்….(13)

    ”நெமிலி பாலா திரிபுர சுந்தரி”….
    ———————————————————–

    ”தாலேலோ தாலேலோ தாயாரின் தாலாட்டு,
    பாலேலோ பாலேலோ பையனிவன் -தாலேலோ,
    தூங்காமல் தூங்கும் திருமால் சகோதரி
    ஓங்காரி பாலாவுக்(கு) ஓய்வு”….கிரேசி மோகன்….(14)

    ”நெமிலி பாலா திரிபுர சுந்தரி’’….
    ——————————————————–

    ‘’கல்லைச் சிலையாக்கும் கல்லுளி மங்கம்மா,
    சொல்லைக் கவியாக்கும் சுந்தரி, -கொல்லை,
    குமுதத்தில் பூப்பாள் குலம்ஜாதி காணா,
    அமுதத்தன் தங்கை அவள்’’….கிரேசி மோகன்….(15)

    ”நெமிலி பாலா திரிபுர சுந்தரி’’….
    —————————————————

    ‘’ஆலோல வள்ளியின் ஆம்படையான் அன்னையே,
    தாலேலோ பாடவந்தேன் தாயுனக்கு, -பாலேலோ,
    மாலோலன் தங்காய், மனோன்மணி கண்ணுறங்கு,
    காலேல கண்மலர்ந்து கா’’….கிரேசி மோகன்….(16)

    கா -காப்பாய்….

    ’’நெமிலி பாலா திரிபுர சுந்தரி’’….
    ————————————————————–

    ‘’பொற்கரத்தில் மாலையும், புத்தகமும் ஏந்தியவா(று)
    அற்புதங்கள் செய்ய அலைந்தனையே, -கற்பகமே,
    கண்ணுறங்கு பாலேலோ,கால்வலிக்கப் போகிறது,
    பண்ணுறங்கப் பாடுமெனைப் பார்’’….கிரேசி மோகன்….(17)

    ’’நெமிலி பாலா திரிபுர சுந்தரி’’….
    ———————————————————-

    ‘’ஈசனிரு கண்ணை இறுகநீ மூடியதால்,
    தேசம் இருண்டதே தேவியே ! -வீசிடும்
    கண்ணிமைகள் பொத்தியதி காலை எழந்திடலாம்,
    பெண்ணிமய பாலா படு’’….கிரேசி மோகன்….(18)

    ’’நெமிலி பாலா திரிபுர சுந்தரி’’….
    ——————————————————-

    ’’நையப் புடைப்பாள் நமதகந்தை போக்கிட,
    ஐயம் அகன்றதும் ஆதரவாய், -கையைப்
    பிடித்திழுத்துச் செல்வாள், பரமசுகம் கூட்ட,
    படித்ததெலாம் பாலாமுன் பாழ்’’….கிரேசி மோகன்….(19)

    ”நெமிலி பாலா திரிபுர சுந்தரி”….
    ———————————————————–

    ”அமளியில் லாமல் , அமைதியைக் காத்தால்,
    நெமிலிவாழ் பாலா நினக்குள், -கமலியாய்,
    நெஞ்சகத் தாமரையில் நின்று நிலைத்திருந்து,
    அஞ்சேல் அபயம் அளிப்பு”….கிரேசி மோகன்….(20)

    ’நெமிலி பாலா திரிபுர சுந்தரி’’…..
    ——————————————————

    ‘’சீட்டிப்பா வாடையும் ,சில்க்கில் சட்டையுமாய்,
    நாட்டுப் புறஊர் நெமிலியின், -வீட்டுக்குள்
    வீற்றவளே பாலா , வருக வருகநான்
    சாற்றும்வெண் பாவை சகித்து’’….(21)….கிரேசி மோகன்….30-11-2015

    ‘நெமிலி பாலா திரிபுர சுந்தரி”….
    ——————————————————-

    “கஷ்டம் கலைந்திடும் , இஷ்டம் இணங்கிடும்,
    அஷ்ட இலக்குமிகள் ஆசியால் -இஷ்டமாய்,
    சுக்குமி ளக்குதி திப்பிலி என்பதின்றி ,
    லக்கு(LUCK)பாலா ஊர்நெமி லி “….(22)….கிரேசி மோகன்….

    Share
  • கைக்கொள்ள வேண்டிய கட்டளைகள் பத்து!

    -மேகலா இராமமூர்த்தி

    ஹீப்ருக்களின் விவிலியம் (Hebrew Bible) கடவுளின் கட்டளைகளாகப் பத்தைப் பட்டியலிடுகின்றது. மனித வாழ்வை நேரிய வழியில் பயணிக்கவைப்பதே இவற்றின் தலையாய நோக்கம்.

    அக்கட்டளைகள் பின்வருமாறு:

    1. I am the Lord thy God; thou shalt not have strange gods before Me. 

    நான் ஒருவனே ஏக இறைவன். ஆதலால் நீங்களாகவே (மக்கள்) போலியான கடவுளர்களை உருவாக்கிக்கொள்வதோ வணங்குவதோ கூடாது என்று எச்சரிக்கின்றது இக்கட்டளை.

    ’ஒருவனே தேவன்’ என்ற திருமூலரின் கருத்து இங்கே ஒப்புநோக்கத்தக்கது. சிறுதெய்வ வழிப்பாடு (The worship of demigods), பலகடவுளர் கொள்கை (poly-theism) முதலியவற்றை முதற்கட்டளை கண்டிக்கின்றது என்று கொள்ளலாம்.

    (இங்கே இறைவனாகச் சுட்டப்படுபவர் யெஹோவா (Jehovah) என்று எண்ணுகிறேன். ஏசுகிறிஸ்துவை இவரின் திருமகனாகக் கருதுகின்றனர் கிறித்தவர்கள். யூதர்களுக்கு அதில் உடன்பாடில்லை எனத் தெரிகிறது.)

    2. Thou shalt not take the name of the Lord thy God in sermononthemountvain.

    என் பெயரைத் தேவையின்றி வீணாகப் பயன்படுத்தாதீர்கள் என்பது இறையனாரின் இரண்டாவது கட்டளை.

    (கடவுளின் பெயரைச் சொல்லிப் பொய்சத்தியம் செய்வது, பிறரை ஏமாற்றுவது, இன்னபிற இதில் அடங்கும்.)

    3. Remember that thou keep holy the Sabbath day.

    இறைவழிபாட்டிற்கான நாளைப் புனிதநாளாக (Sabbath
    Day) அனுசரியுங்கள்.

    (பழைய ஏற்பாட்டின்படி (Old Testament) வாரத்தின் ஏழாவது நாளைக் கிறித்தவர்கள் புனிதநாளாக அனுசரித்திருக்கின்றனர். ஏனெனில், அந்நாளில்தான் இறைவன் தன் படைப்புத்தொழிலை நிறுத்திவிட்டு ஓய்வுகொண்டாராம்!)

    4. Honor thy father and thy mother.

    தந்தை தாயை மதியுங்கள் என்பது நான்காவது கட்டளை.  

    நம் தமிழ்மூதாட்டி அவ்வையோ இன்னும் ஒருபடி மேலேபோய், அன்னையை ஆலயமாகவும் , தந்தையின் சொல்லை மந்திரமாகவும் கருதச் சொல்லியிருக்கிறார்!

    5. Thou shalt not kill.

    கொலையைக் கடியுங்கள்; அதாவது கொல்லாமையை மேற்கொண்டு ஒழுகுங்கள்!

    அவசியத்தின்பேரில் அறம்சார்ந்த கொலைகள் புரிவதை விவிலியம் கண்டிக்கவில்லை. போர்க்களத்தில் எதிரிகளைக் கொல்வது, தம்மைத் தாக்கவருவோரைத் தற்காப்பிற்காகக் கொல்வது, பெண்கள் தங்களிடம் முறைகேடாக நடந்துகொள்வோரைக் கொல்வது போன்றவற்றை அறம்சார்ந்த கொலைகள் (Lawful-killing) என்று நாம் கருதலாம்.

    6. Thou shalt not commit adultery.

    தனக்கு உரிமையில்லாத ஆணுடனோ/பெண்ணுடனோ மனிதர்கள் பாலுறவு கொள்வதைத் தவிர்க்கவேண்டும்.

    அனைத்து வகையான முறைதவறிய பாலுறவுகளையும், ஏன்…ஓரினச்சேர்க்கையையும் (homo-sexuality) ’பாவம்’ என்றும், அது இறைவனின் விருப்பத்திற்கு எதிரானது என்றும் விவிலியம் விளம்புகின்றது.

    10-commandmentsஆனால் தற்போது அந்த எண்ணம் மாறிவருகின்றது. ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவான குரல்கள் உலகெங்கும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. அர்ஜென்டினா, கனடா, ஸ்பெயின், நார்வே உள்ளிட்ட நாடுகள் ஓரினத் திருமணங்களை சட்டபூர்வமாகவே அங்கீகரித்துவிட்டன. நீதிமன்றம் இசைவுதெரிவித்துவிட்டது. ஆனால் இவற்றின் விளைவுகள் நாட்டிற்கும் சமூகத்திற்கும் இசைவானவையாக இருக்குமா என்பதைக் காலம்தான் கணிக்கவேண்டும்!

    7. Thou shalt not steal.

    பிறரின் உடைமைகளைக் களவாடாதீர்கள் என்கிறது ஏழாவது கட்டளை.

    களவாடுவதா…? பிறர் பொருளைக் களவாடவேண்டும் என உள்ளத்தால் உள்ளுவதும் தீது என்பது நம் வள்ளுவப் பேராசானின் உயர்ந்த கருத்து.

    ”உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
    கள்ளத்தால் கள்வேம் எனல்” என்பது குறள்.

    8. Thou shalt not bear false witness against thy neighbor.

    அண்டை அயலாருக்கு எதிராகப் பொய்சாட்சி சொல்லாதிருக்கவேண்டும் என்பது எட்டாவது கட்டளை.

    பொய்க்கரி போகன்மின்’ என்று சிலப்பதிகாரமும் இதுகுறித்து எச்சரிக்கின்றது.

    இதனை விளக்கும் சுவையான சம்பவம் ஒன்றும் சிலப்பதிகாரத்தில் உண்டு!

    பூம்புகாரில் வாழ்ந்துவந்த தீயவன் ஒருவன் அயலான் மனைவிக்குக் கேடுவிளைவிக்கும் வகையில் பொய்சாட்சி சொன்னான். இதனையறிந்தது புகாரின் சதுக்கபூதம்! தீயோரைத் தண்டிப்பதையே தன் தொழிலாகக் கொண்ட அப்பூதம், அந்தத் தீயவனைத் தன் கைகளால் பற்றிப் புடைத்துண்ண முற்பட்டது. இதனைக் கேள்வியுற்ற கோவலன் அவ்விடத்திற்கு விரைந்துவந்தான். அங்கே பூதத்தின் கையில் அகப்பட்டிருந்த அத்தீயவனின் நிலைக்காக வருந்தி அவனுடைய தாய் கண்ணீர்சிந்திக்கொண்டிருப்பதைக் கண்டான். கோவலன் உள்ளத்தில் அருள் சுரந்தது. பூதத்தருகே சென்று ”என்னுயிரை எடுத்துக்கொள்! இவனை விட்டுவிடு!” என்று கெஞ்சினான். அந்தப் பூதம் அவன் கோரிக்கையை ஏற்க மறுத்து,

    நரகன் உயிர்க்கு நல்லுயிர் கொண்டு
    பரகதி யிழக்கும் பண்பீங்கு இல்லை என்று கம்பீரமாகக் கூறிவிட்டு அந்தத் தீயவனை உண்டுவிட்டதாம்!

    (அந்தச் சதுக்கபூதம் மட்டும் இப்போது இருந்தால் காவல்துறைக்கும் நீதிமன்றங்களுக்கும் எவ்வளவோ வேலை குறையும்!).

    9. Thou shalt not covet thy neighbor’s wife.

    ’தவறான உறவு கூடாது’ என்று ஏற்கனவே ஆறாவது கட்டளை எச்சரித்திருக்கக் கண்டோம். ’பிறன்மனை விழையாமை வேண்டும்’ என்று மீண்டும் அதனையே வேறுசொற்களால் வலியுறுத்திச் சொல்கின்றது ஒன்பதாவது கட்டளை.

    பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
    அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு என்று வள்ளுவமும் பிறனில்விழையாமையின் அவசியத்தை எடுத்தியம்புகின்றது.

    10. Thou shalt not covet thy neighbor’s goods.

    பிறர் பொருளை நயவாதிருக்க வேண்டும் என்பது பத்தாவது கட்டளையாகக் கூறப்பட்டிருக்கின்றது.

    வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
    யாண்டும் அஃதொப்பது இல்”
    என்பது வள்ளுவம். 

    ’வேண்டாம்’ என்று கூறும் மனமே சிறந்த செல்வம் என்பதே இக்குறள் நவிலும் நற்பொருள்! ’போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து’ எனும் பழமொழி நாமறிந்ததுதானே?

    மனிதனின் ஆசையே எல்லாத் துன்பங்களுக்கும் ஆணிவேர் என்பதைப் புத்தர் ஏசு வள்ளுவர் என அறிஞர் பலரும் அட்டியின்றி ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால் ஒருசிலரோ…‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்று மக்களை ஆசைப்படுகுழியில் தள்ளுகின்றார்கள். விளைவு? அவ்வளவுக்கும் சேர்த்து அவஸ்தைப்படுகிறார்கள் மக்கள்!

    விவிலியம் விவரிக்கும் பத்துக் கட்டளைகளும் பத்தரைமாற்றுத் தங்கங்களாய் மின்னுகின்றன. இவற்றைப் பின்பற்றி வாழ்ந்தால் மானுடம் சிறக்கும்! 

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் … (36)

    நிர்மலா ராகவன்

    ஐ லவ் யு சொன்னால்தான் அன்பா?

    %e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-2-1

    திருமணத்திற்குமுன் அண்ணனைத் தவிர வேறு எந்த ஆணுடனும் பழகியிராத பெண்கள் பலர் உண்டு. `அப்பா’ என்பவரிடம் மரியாதை மட்டும்தான். அவருடன்கூட அதிகம் பேசியது கிடையாது என்று பெருமிதம் கொள்வார்கள். அதனாலேயே ஆண்களுடன் கலகலப்பாகப் பேசிப் பழகும் பெண்களையும், அவர்களுடன் கலந்து உரையாடும் ஆண்களையும் ஏளனமாக, ஒருவித சந்தேகத்துடன் பார்ப்பவர்கள். இப்படிப்பட்டவர்களுக்கு ஆண்களின் மனோபாவம் எப்படிப் புரியும்? அதனால் சில எதிர்பாராத விளைவுகளும் ஏற்படுகின்றன.

    கதை

    ஒரு அண்ணனும் தங்கையும் முறையே இன்னொரு குடும்பத்தின் மகளையும் மகனையும் மணந்தனர்.

    சில வருடங்கள் ஆனதும், அவர்களுள் ஒருத்தி என்னிடம் அலுத்துக்கொண்டாள்: `நான் என் கணவருடன் என்ன பேசினாலும், அது சண்டையில் முடிகிறது. அதனால், அவருடன் பேசுவதையே குறைத்துவிட்டேன்.  ஆனால், என் அண்ணனுடன் நிறைய பேச முடிகிறது,’ என்றபடி சிறிது யோசித்தவள், `அவனுடைய மனைவிக்கும் இதே பிரச்னைதான்!’ என்றாள் அதிசயப்பட்டவளாக.

    `அதாவது, உன் கணவருடன் அண்ணிக்கு எந்தவிதத் தடங்கலுமின்றி பேச முடியும். ஆனால், உன் அண்ணன், அதுதான் அவள் கணவருடன், பேச முடிவதில்லையாக்கும்!’ என்று குறுக்கிட்டேன்.

    வருத்தத்துடன் சற்று மௌனம் சாதித்துவிட்டு, `அண்ணன் தங்கையையே கல்யாணம் செய்துகொள்ளலாம் என்றிருக்க வேண்டும்!’ என்றாள்.

    இது நடைமுறைக்கு ஒத்துவராது; ஏனெனில் பிறக்கும் குழந்தைகள் உடற்குறையோடு பிறக்க வாய்ப்பிருக்கிறது என்பது அவளுக்கும் தெரியும். இருந்தாலும், `இந்த பொறுக்க முடியாத இல்லறம் இன்னும் எத்தனை காலமோ!’ என்ற அயர்ச்சி அவளை அப்படிப் பேசவைத்தது.

    தம் தாய் தந்தையர் ஏனோ நெருக்கமாக இல்லையே என்று குழம்பும் இளவயதுப் பெண்கள் இதற்கு நிவர்த்தி தம் வயதொத்த ஆண்களுடன் சரிசமமாகப் பழகுவதுதான் என்று கருதுவதுபோல் நடக்கிறார்கள். இதில் பிரச்னை என்னவென்றால், பழகுவதன் எல்லை என்னவென்று அந்த இருபாலருக்கும் புரியாததுதான்.

    இன்றைய நாகரிகம்!

    ஈராண்டுகளுக்குமுன், சென்னையில் ஒரு விழாவிற்குச் சென்றிருந்தேன். பதினெட்டு வயதான பெண் ஒருத்தி, ஓடி வந்து அவளைவிடச் சற்று பெரியவனாக இருந்த பையனைக் கட்டி அணைத்தாள். அவனும் அவளுடைய தோளில் கை போட்டுக்கொண்டான். `காதலர்களோ?’ என்று நினைக்கவைத்தது அவர்களது நெருக்கம்.

    சற்று பொறுத்து இன்னொரு நண்பன் நுழைய, அதே பெண் அவனருகே ஓடி, சிறுகுழந்தைபோல் தாவினாள். அவளுடைய கால்கள் அவனுடைய இடுப்பைச் சுற்றிக்கொண்டன. கைகள் கழுத்தைச் சுற்றின. இப்படியெல்லாம் நடப்பதுதான் இன்றைய நாகரீகம் என்று கருதினாளோ?

    `உங்களைப் பார்த்ததில் எனக்குப் பேரானந்தம்!’ என்று உணர்த்த நினைப்பவள்போல அவள் நடந்துகொண்டது அந்த இளைஞர்கள் மனதில் எந்தவிதக் கிலேசத்தை உண்டுபண்ணி இருக்குமோ!

    தமிழ்ப்படங்களின் தாக்கம், அல்லது மேல்நாட்டு நாகரிகத்தின் சில (வேண்டாத) அம்சங்களை மட்டும் காப்பி அடிப்பது இப்போக்கின் அடிப்படை.

    இதெல்லாம் காதலா!

    தான் எப்படி நடந்தாலும் இப்பெண் பொறுத்துப்போவாள் என்ற நம்பிக்கையை உண்டாக்கும் பெண்ணை ஒருவன் விரும்பி மணக்கிறான். யோசித்துச் செய்யும் காரியம் இல்லை அது.`இவள்தான் எனக்குச் சரியானவள்!’ என்று தோன்றும்போது,`காதல்’ என்ற பிரமை ஏற்படுகிறது.

    பெண்களும் இக்கலையில் சளைத்தவர்களல்ல. ஒருவன் என்ன பேசினாலும் அதை உன்னிப்பாகக் கவனித்து, குறுக்கே பேசாது, அதற்கு மயங்குவதுபோல் நடித்து, அவன் சொல்வதற்கெல்லாம் சிரித்துவைத்தால் அவனுடைய தற்பெருமை அதிகரித்துவிடுகிறது என்று விரைவில் புரிந்துகொள்கிறார்கள். தன்னைத்தானே உயர்வாக நினைக்கவைக்கும் பெண்ணிடம் எவனும் காதலில் வீழ்ந்துவிடுகிறான்.

    இப்படி எதையாவது இலக்கு வைத்து ஒருவரையொருவர் வசப்படுத்துவது காதலா? இப்படிப்பட்டவர்கள் கல்யாணம் செய்துகொண்டாலும், இரண்டே ஆண்டுகளில் அவர்களது நெருக்கம் பிசுபிசுத்துவிடுகிறதே!

    கதை

    “இப்போதெல்லாம் பதினேழு வயதாகிவிட்டால், காதலிக்க ஒருவர் கண்டிப்பாக இருக்கவேண்டும்!” என்று என்னிடம் ஒரு தமிழகப் பேராசிரியை கூறினார், கேலிச்சிரிப்புடன்.

    அப்படிக் காதலித்த கல்லூரி மாணவி ஒருத்தி அடுத்த ஆண்டே இரு தரப்புப் பெற்றோரின் சம்மதத்துடன் தன் காதலனை மணந்தாள்.

    ஐந்து வருடங்கள் கழித்து அவள் தன் பேராசிரியைச் சந்தித்தபோது,`அவனை விவாகரத்து செய்துவிட்டேன். ரொம்பக் குடித்துவிட்டு அடிக்கிறான்!’ என்று தெரிவித்தாளாம். `படிக்க வேண்டிய வயசில் புத்தி தடுமாறிவிட்டது! படிப்பும் அரைகுறையாப் போச்சு!’காலங்கடந்து புத்தி வந்ததில் வருத்தம்தான் மிஞ்சியது.

    சுதந்திரமான சேர்க்கை

    கல்யாணத்திற்குப்பின் ஒருவரது குணாதிசயங்களும்,`பராக்கிரமும்’  ஒத்துப்போகாவிட்டால் என்ன செய்வது என்று சிலர் முதலிலேயே கணவன் மனைவிபோல் சேர்ந்து வாழ்கிறார்கள்.

    ஒருவரது சுதந்திரத்தில் மற்றவர் குறுக்கிடக்கூடாது, அதெல்லாம் கல்யாணமானவர்கள் செய்வது என்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டது இந்த ஏற்பாடு.

    `வேண்டாம்’ என்றால் எளிதாகப் பிரிந்துவிடலாம் என்று அவர்கள் முதலில் போட்ட ஒப்பந்தம் தப்பாகிவிடும். ஏனெனில், ஒன்றாக இன்பதுன்பங்களைப் பகிர்ந்துவிட்டபிறகு, பிரிவு துயரத்தை உண்டுபண்ணிவிடுகிறது. (இம்மாதிரியான உறவை முறித்துக்கொண்ட ஒரு பெண்மணி என்னடம் கூறியது இது).

    பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்

    நான் மூன்று வெவ்வேறு பள்ளிக்கூடங்களில் ஆசிரியைகள் நாம் இயல்பாக ஏற்கும் இந்த  விஷயத்தை மிக சுவாரசியத்துடன் விவாதிக்கக் கேட்டிருக்கிறேன்.

    `அதெப்படி முதலிரவில் முன்பின் தெரியாதவருடன் உடலுறவு கொள்ள உங்களால் முடியும்? காதலிக்க வேண்டாம்?’ காதல் திருமணம்தான் இல்லற வாழ்க்கைக்கு ஏற்றது என்று வாதாடும் பெண்கள். (இவ்வளவு வெளிப்படையாகக் கேட்கவில்லை. சுற்றி வளைத்து, கண்களை உருட்டி, தடுமாற்றத்துடன்தான் கேட்டார்கள்!)

    பெண்களும் விட்டுக்கொடுக்காது பதிலளிப்பார்கள்:

    `நாங்கள் கல்யாணத்திற்குப் பிறகு காதலிப்போம்!’

    `எங்களை மணப்பவருக்கும் அது புதிய அனுபவம்தானே?’

    கல்யாணத்துக்குமுன் வருவது ROMANTIC LOVE. அதில் இளமையின் துள்ளல், ரகசியமாக வைத்திருப்பதால் ஒரு த்ரில் எல்லாம் இருக்கும். எப்போதோதான் சந்திக்கிறார்கள், இல்லையா? மீதி நேரங்களில் மற்றவரைப்பற்றிய கனவிலேயே திளைத்து இன்பம் அடைகிறார்கள்.

    இப்படிப்பட்ட இருவர் ஒருவரையொருவர் நன்கு அறிந்திருக்க வாய்ப்பில்லை. மற்றவருக்கு என்ன பிடிக்குமோ, அந்தத் தன்மையை மட்டும் வெளிக்காட்டுவர் இருவரும். பின் எப்படித்தான் காதலைத் தக்கவைப்பது!

    அவர்களது காதல் கல்யாணத்தில் முடிந்தாலும், அதற்குப்பின் பிற குணங்கள் வெளிப்பட, ஏமாற்றம் அல்லது மனக்கசப்பு தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிறது.

    காதல் திருமணம் புரிந்துகொண்ட அலெக்சாண்ட்ரா என்னிடம் கூறினாள்: `காதல் எல்லாம் கல்யாணமாகி ரெண்டு வருஷத்துக்குத்தான்! அதுக்கப்புறம், உவ்வே!’ (இவள் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவள். கணவர் மிக நல்லவர். நான் இருவருடனும் பழகியிருக்கிறேன்).

    ஐ லவ் யு சொன்னால்தான் அன்பா?

    பெரியவர்கள் நிச்சயித்ததோ அல்லது காதல் கல்யாணமோ, கல்யாணத்திற்குப் பின்னரும் நிலைக்கும் காதலானது ஒருவர்மேல் மற்றவர் காட்டும் அன்பு, அக்கறை, மரியாதை இதையெல்லாம் பொறுத்தது. இதுதான் நீண்டகாலம் நிலைத்திருக்கும்.

    இது அருவிபோல் கொட்டுவதில்லை. ஆழமாக, அதிகச் சலசலப்பின்றி சீராக ஓடும் நதி போன்றது.

    இந்த உறவில், பார்க்கும்போதெல்லாம் சிரித்த முகத்துடன், `ஐ லவ் யு’ சொல்ல வேண்டிய அவசியமில்லை. பிறந்தநாளையும், திருமணத்தேதியையும் மறக்காது பரிசுப்பொருட்கள் வாங்கித்தர வேண்டியதில்லை. மனதால் புரிந்துகொள்ள வேண்டிய நெருக்கம் இது.

    தொடருவோம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(148)

     செண்பக ஜெகதீசன்

    துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
    நஞ்சுண்பார் கள்ளுண் பவர்
    . (திருக்குறள்-926: கள்ளுண்ணாமை) 

    புதுக் கவிதையில்…

    பொழுதும் உறங்குவோரும்
    பிணமும் வேறல்ல,
    அதுபோல்தான்
    கள்ளுண்பவர் ஒப்பாவார்
    நஞ்சுண்பவர்க்கே…! 

    குறும்பாவில்…

    பிணம்போல்வர் பொழுதும் உறங்குபவர்,
    கள்ளுண்பவர் கருதப்படுவர்
    நஞ்சுண்பவராய்…! 

    மரபுக் கவிதையில்…

    காலம் நேரம் பாராமல்
       -கடமை யேதும் செய்யாமல்,
    ஞாலம் மறந்தே உறங்குவோரெலாம்
       -நிச்சய மாகப் பிணமேதான்,
    சாலப் பொருத்தமாய்ச் சொல்லிடலாம்
       -சற்றும் நலமதை யெண்ணாமல்
    ஆலம் உண்பதற் கொப்பாமே
       -அற்பக் கள்ளை உண்பதுவே…! 

    லிமரைக்கூ…

    அதிகமாய்த் தூங்கினாலது பிணம்,
    அளவேதுமின்றிக் கள்ளைக் குடிப்போர்க்கு
    அதுகாட்டும் நஞ்சினது குணம்…! 

    கிராமிய பாணியில்…

    ஒறங்காத நீயும் ஒறங்காத
    ஒழைக்காம எப்பவும் ஒறங்காத,
    ஒறக்கம் ஒனக்கு அதிகமானா
    ஒனக்கும் பொணத்துக்கும் வித்தியாசமில்ல… 

    அதுபோல
    குடிக்காத குடிக்காத
    கள்ள நீயும் குடிக்காத,
    கண்ணுமண்ணு தெரியாம
    கள்ள நீயும் குடிச்சியண்ணா
    அது
    வெசத்தக் குடிச்சது போலவும்… 

    அதால
    குடிக்காத குடிக்காத
    கள்ள நீயும் குடிக்காத…!

     

     

    Share
  • மார்கழி மணாளன் (11)

     

     

    திருக்கண்ணன்மங்கை = அருள்மிகு பக்தவத்சலப்  பெருமாள்

    ag

    பாற்கடல் பூத்தவள் அன்புடை அலைமகள்

    பாம்பணை படுத்தவன் பாதங்கள் நாடியே

    பற்றினில் மற்றவை மறந்தே நோன்பிட

    பற்றினாய் கைகளை பரமனே பரந்தாமா !

     

    வெட்கிடும் கன்னியை விழியினில் ஏந்தியே

    துடித்திடும் இதயத்தில் துணையாய் வைத்தாய்

    அருளிடும் நேரத்தில் அன்னையின் கருணையும்

    அளவின்றிக் கிடைத்திட அருளிய அச்சுதா !

     

    மலரினில் மதுவினைத் தேடிடும் வண்டென

    மரணத்தைத் தாண்டிய அமரர்கள் வந்தனர்

    மங்கலம் தந்திடும் பாதங்கள் மையலில்

    மனதினை இழந்தே மகிழ்ந்தனர் மாதவா !

     

    மங்கையை மனதினில் நிறுத்திய மன்னனே

    மலையினைக் கைகளில் ஏந்திய கண்ணனே

    மானத்தைக் காத்திடத் துகிலினைத் தந்தாய்

    மாடங்கள் கொடுத்திட அவலினைப் பெற்றாய் !

     

    கர்ணனின் வல்லமை கைகொண்ட  காலனே

    வருணனும் பிரம்மனும் வந்தனர் வேண்டியே !

    மறுமையம் இம்மையும் கைகளில் ஏந்தியே

    வறுமையில் வந்தேன் வளவனைத்  தேடியே !

     

    ஒட்டிய பருக்கையைத் தட்டியே எடுத்தவள்

    சட்டியில் அமுதினை அளவின்றித் தந்தாய்

    பட்டியல் போடவோ பரமனே உன்னருள்

    நெற்றியில் நினைவாய் நித்தமும் வந்தருள் !

    Share
  • படக்கவிதைப் போட்டி 91-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

     

    dancing-doll

    தலையாட்டி பொம்மையைக் கலைநயத்தோடு படம்பிடித்திருப்பவர் திருமிகு. ஷாம்னி. அதனை இவ்வாரப்போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றியை நவில்கின்றேன்.

    அரங்கில் பெண்கள் தலையாட்டலாம் அது கலை! வாழ்வில் அது கூடாது! தம்மிடம் வாலாட்டும் வல்லூறுகளை வெட்டிவீழ்த்தும் ஆற்றல் வனிதையர்க்கு வேண்டும் என்று என் காதோரம் கிசுகிசுத்துச் செல்கின்றது அபயமுத்திரை காட்டும் இந்தத் தலையாட்டி பொம்மை!

    பொம்மையை வைத்து நம் கவிஞர் குழாம் தீட்டியிருக்கும் கவிஓவியங்கள் அழைக்கின்றன நம்மை! அவற்றைக் கண்டு ரசிப்போம் இனி!

    ***

    ”அளவான ஆட்டம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பது; அதுவே அளவை மீஞ்சினால் வாழ்வையே ஆட்டங்காண வைப்பது!” எனும் அரிய தத்துவத்தை எளிமையாய் விளக்குகின்றாள் இந்தப் பாவை” என்று பூரிக்கின்றார் திருமிகு. ராதா விஸ்வநாதன்.

    …அசைவுகளும் ஆட்டமும்
    அடங்கியதே இவ் வாழ்க்கை

    அசைவுகளும் ஆட்டமும் இல்லாவிடில்
    அனைத்தும் ஆவியில்லா ஜடமாகுமே

    இதையே உணர்த்துகிறானோ
    இறைவனும் ஆடலரசனாக‌

    பார்க்கும் நமக்கு இந்த‌
    பாவையின் ஆட்டமும் பள்ளிக்கூடமே

    கற்க பாடமும் பல உண்டு இவளிடத்தில்
    கவனித்துப் பார்க்கும் நமக்கு

    இருக்கிறது இவளுக்கு என்றும்
    சுதந்திரம் சுழன்று சுற்றி ஆட–ஆனால்

    வஞ்சி இவளின் ஆட்டம் என்றும்
    வரம்பும் எல்லையும் மீறுவதில்லை

    ஆடும் ஆட்டத்திற்கும் எங்கும்
    இடம், பொருள், ஏவலுண்டாம்

    எல்லை மீறா ஆட்டம் தருமாம்
    என்றும் எல்லோருக்கும் இன்பம்

    இதனை எடுத்து இயம்புகிறாள்
    இந்தப் பாவை தன் தலை ஆட்டத்தில்

    ***

    ”கொடுமை செய்து சண்டையிடும் வீணரின் கொண்டை பிடித்தாட்டும் வீரம் பெண்டிருக்கு வேண்டும்” என்று பெண்ணுரிமை பேசுகின்றது திருமிகு. நாகினியின் இனிய கவிதை.

    பிடித்து ஆட்டு… 

    கொடுமை கண்டு துடித்தெழ
    .. கொடுப்பினை இல்லையெனப் பெண்மகவு
    கொலுவீற் றிருந்தால் உரிமை
    …கொடுத்திடுவார் என்றுன தெண்ணத்தீ
    கொடியைத் தகர்த்தெ றியுந்நல்
    .. கொள்கைப் படிகளில் ஏறிநின்று
    *கொழுத்தா டுசெய்திடும் ஈனர்கள்
    .. கொண்டை பிடித்தாட்டு கண்ணே!

    ***

    பகுத்தறிவைப் புதைத்துவிட்டு, சுயமரியாதையைத் தொலைத்துவிட்டு, கொள்கையற்ற அரசியல்வாதிகளுக்குத் தலையாட்டும் இளையோரைச் சாடுகின்றார் திருமிகு. மா. பத்ம பிரியா.

    தலையாட்டிகள்

    எதிர்கேள்வி கேளாத எதிர்காலமே!
    நம்முள்ளே எத்தனை தலையாட்டிகள்
    தலையின் பயனே தலையாட்டவா
    தமையனே!
    தன்மானமில்லா தள்ளாடும் தமிழனமே!
    தலைமை கண்டு தலைகுனியும் தலைவனுக்கா
    உன்தலை ஆட வேண்டும்
    எத்தனை தலைமை வந்தாலும்
    ஏன்னென்று கேளாது தலையாட்டும் தலைவனுக்கா
    உன் தலை வீழ வேண்டும்
    பகுத்தறிவில்லா பாமர தலையாட்டிகள்
    பாவம் ஆட்டினால் பரவாயில்லை
    பட்டதாரி கூட்டமும் சேர்ந்தா தலையாட்டும்
    பதறும் நெஞ்சுள்ளே கதறும் தமிழ்மானம்
    புரட்சியாளர் வந்து போன புண்ணிய பூமியிது
    பொய் புரட்டு ஆதிக்கத்தை வேடிக்கை பார்க்கிறது
    விழிப்புணர்வில்லா வாக்காளத் தலையாட்டிகளால்
    ஆளும் வர்க்கத்தை ஆதரிக்கும்
    அரசியல் தலையாட்டிகள் நம்முள்ளே
    இலவசத்தில் மயங்கிய மக்களால்
    இலஞ்சத்தில் மிதக்கும் இரக்கமில்லா தலையாட்டிகள்
    தலைகுனிவு தமிழனுக்கா
    தலைநிமிர்ந்து பாருங்கள்
    தயவுகூர்ந்து தலையாட்டிகளே
    தளிர்க்கும் பிஞ்சுகளை தலையாட்டிகளாய் மாற்றாதீர்

    ***

    அமைதியாய் வாழவேண்டிய மனித வாழ்வில் தேவையற்ற ஆர்ப்பாட்டம் எதற்கு? அது கேட்டிற்கன்றோ வழிவகுக்கும்! என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    ஆடும் பொம்மை ஆட்டமென
    அமைந்த உலக வாழ்வினிலே
    ஓடும் இந்த மாந்தரெல்லாம்
    ஒன்று மறியா தாடுகின்றார்,
    கேடு செய்தும் ஏமாற்றியும்
    குவித்த பொருளும் நிலைப்பதில்லை,
    நாடு செயலில் நல்லதையே
    நாளும் நலமாய் வாழ்ந்திடவே…!

    ***

    ”உலகமென்னும் நாடகமேடையில் நித்தம் ஒரு புத்தம்புது நாடகம்! அதிலொன்று அரசியல் பதவிகளுக்காக மனிதர்கள் தம் கண்ணியம் விற்று அதிகாரத்தில் உள்ள பெண்மணிகளிடம் ’பதவி’சாகத் தலைதாழ்ந்து நிற்பது!” என்று வருந்துகின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

    ஆட்டுவித்தால் யாரொருவர்
    ஆட மாட்டார் உலகினில்
    ஆட்சிப் பீடத்தைப் பிடிக்க
    அள்ளி அள்ளி கொடுத்து
    ஆடவைக்கும் வஞ்சிப் பெண்ணின்வரம்பு மீறல்
    ஆட்டுவிப்பிற்கு ஆடுகின்றார்
    அமைச்சர் யாவரும் பதவிஆசையில்
    தன் மானத்தை அடகு வைத்து
    தலயாட்டி பொம்மைகளாய் மாறுவது
    தலைவிதியா ? இல்லை இறைவனின் சதியா ?
    அக்கிரமங்களுக்கு தலையாட்டும்
    பொம்மையாய் மானிடர் இருக்கும் வரை
    தலை நிமிர்வு தமிழகத்திற்கும் அவர்தம்
    எதிர்கால வாரிசுகளுக்கும் இல்லை ஒரு போதும்
    வேதனையும் சோதனையும் தமிழக மக்களுக்கே!

    ***

    படத்திலுள்ள தலையாட்டி பொம்மை, பெண்ணியம் முதல் அரசியல் கண்ணியம் வரைப் பலவற்றை யோசிக்கவைத்திருக்கின்றது நம் கவிஞர்களை! தம் சிந்தனை வீச்சைச் சிறப்பாய்ப் பாய்ச்சியிருக்கும் அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வரப்போவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை!

    பெண்ணடிமை!

    தலையாட்டிப் பொம்மைகளா
    தாய்க் குலத்து
    வாய்பேசா வனிதையர் ?
    சாவி கொடுத்தால்
    சலங்கை ஒலி
    தாளமிடத்
    தாவியாடும் பாவைகளா ?
    பாரதிராஜா தேர்ந் தெடுக்கும்
    திரை உலகத்
    தேனிலவு வானிலவுத்
    தேவதையரா?
    தொப்புள் கொடி அறுந்ததும்
    அப்பனுக்கு அடிமை!
    தாலிக் கொடி ஏறியதும்
    போலிப் புருசனுக்கு அடிமை!
    வேலைக்குப் போன
    ஊழியத்தில்
    மேலதிகாரிக்கு அடிமை!
    வாழ்க்கையில்
    உனக்கில்லாத பட்டமா?
    விதவை, மலடி,
    உடன்கட்டை ஏறடி!
    வரதட்சணை வர்த்தகி!
    புகுந்த வீட்டில்
    மாமியாருக்கு அடிமை!
    ஆணைப் பெற்றவள் நீ!
    பெண்ணைப் பெற்றவளும் நீ!
    ஆயினும்
    இல்லமும், நாடும் உனக்குப்
    பொல்லாத சிறைதான் !
    தலையாட்டம் நின்று
    தலை நிமிர்ந்து
    விதியை எதிர்க்கி றாயோ
    அன்றுதான்
    விடுதலை உனக்கு!

    எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை எனும்போதும், எட்டும் உயரத்தில் அவர்களிடையே நிறையவே வேறுபாடுகள் உள. விடுதலை வேள்வி செய்து மண்ணடிமையை நாம் தீர்த்தபின்பும், பெண்ணடிமை நம்மிடையே முற்றாய்த் தீர்ந்ததா எனும் கேள்விக்கு ’இல்லை’ என்று நம்மால் விடையிறுக்க இயலவில்லை!

    பெண்ணுக்கொரு நீதி ஆணுக்கொரு நீதி எனும் சமமற்ற சமுதாயமே இன்றுவரை நீடிக்கின்றது. தலையாட்டி பொம்மைகளாகவே இன்னமும் பெண்ணினம் வாழ்ந்துகொண்டிருந்தால் ’நிமிர்ந்த நன்னடையோடும், திமிர்ந்த ஞானச்செருக்கோடும்’ பாரதி கண்ட புதுமைப்பெண்ணாய் வாழ்வதற்கு அவர்களுக்கு வாய்ப்பில்லாமலே போய்விடும்! என்று மாதரை எச்சரிக்கும் திரு. ஜெயபாரதனின் கவிதை நெஞ்சின் ஆழம் சென்று தைக்கிறது!  இக்க’விதை’யை வீரியத்தோடு நட்டிருக்கும் திரு. ஜெயபாரதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தெரிவுசெய்து பாராட்டுகின்றேன்.

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    161225 - Tiruppavai 10 -Tulasigandh -lores

    ”திருத்துழாய் மார்பன், திருவரங்க மாலன்,
    கருத்தவன் காதலித்தக் கோதை -திருப்பாவை
    செப்பினாள் முப்பதை சேர்ந்தாள் மடிமீதவ்(THOU)
    ஒப்பிலா தோள்சக்தி ஓம்’’….கிரேசி மோகன்….!

    Share
  • மார்கழி மணாளன் (10 )

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருப்படகம் – அருள்மிகு பாண்டவ தூதப் பெருமாள் கோயில்

    ag

    அறத்தினைக் காத்திட அமைதியை நாட்டிட

    அரியணை தர்மத்தை அனைவரும் உணர்ந்திட

    அமரர்கள் போற்றிடும் அச்சுதா அனந்தா

    அரசவை நின்றாய் தூதனாய் மாதவா !

     

    தூதுவன் போற்றிடத் தவறிய துரியனும்

    மாதவன் உன்னை மண்ணினில் வீழ்த்திட

    மாயங்கள் நினைத்ததும் மனத்திலே வீழ்ந்தான்

    மாயைகள் படைத்த மாலனே மடிவதோ ?

     

    ஆடையை உருவிய அரக்கர்கள் நடுவில் 

    ஆணவம் பெருக்கிய அவையினர் முன்னில்

    புண்ணுடை  கண்ணிரு  அரசனின் விழிகளில்

    விண்ணுயர்  வள்ளலாய் மண்ணிலே நின்றாய்!

     

    பொன்னிரு தாள்களை பூமியே போற்றிட

    விண்ணுறை கோள்களே விழிகளைப்  போற்றிட

    மண்ணுறை உயிரெல்லாம் மார்பினைப் போற்றிட

    வானுறை அமரர்கள் வாழ்த்திய வேங்கடா !

     

    ஐம்பொறி ஆள்கின்றாய் அரவணை அயர்ந்தே

    ஐம்புலன் ஆள்கின்ற அரங்கனே அமரனே 

    ஐவரின் நண்பனே ! அமைதியின் தூதனே !

    ஐயங்கள் நீங்கிய மனதினை அருள்வாய் !

     

    அச்சங்கள் ஏதுமில்லை அச்சுதன் துணையிலே

    உச்சங்கள் தொடலாம் ஒப்பிலி அருளினால்

    பச்சைநிற மேனியன் பார்வையில்  இருந்தால்

    இச்சைகள் நீங்கியே  இசைத்திடும் வாழ்வே !

     

     

    Share
  • ஐரோப்பிய விண்ணுளவி ரோஸெட்டா இறுதியாக வால்மீன் மேல் விழ வைத்து புதிய தகவல் அனுப்புகிறது.

    aj

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++

    rosetta-mission-1

    கியூப்பர் முகில் கூண்டைத் தாண்டி,
    பரிதி ஈர்ப்பு மண்டத்தில்
    திரிந்து வருபவை
    பூர்வ வால்மீன்கள் !
    பூதக்கோள் வியாழன் கவர்ச்சி
    வலையில் சிக்கிய
    வால்மீன் மேல் கவண் வீசிக்
    காயப் படுத்தி
    ஆய்வுகள் புரிந்தார் !
    வால் நெடுவே வெளியேறும்,
    வாயுத் தூள்களை
    வடிகட்டியில் பிடித்து
    வையகத்தில் சோதித்தார் !
    அண்ட கோள்களின்
    ஆதித் தோற்றம் அறிய,
    உயிரின மூலத்தை உளவப் போன
    விண்ணுளவி புவிக்கு மீளும்.
    பரிதிக்கதிர் பட்ட ஒளிக்கிளர்ச்சி
    முதன்முதல் பதிவானது
    முன்பு ஒருநாள் !
    ரோஸெட்டா ஆற்றலின்றி
    பூர்வ வால்மீனை மோதி
    அனுப்பியது
    நேர்முகத் தகவல் !

    +++++++++++++++

     rosetta-mission
    ரோஸெட்டா விண்ணுளவிப் பயணம் மீண்டுமோர் வரலாற்று நிகழ்ச்சியாய் நூல் வடிவம் பெற்றது.  இன்று முதன்முதல் வால்மீனை நேராக நோக்கிய புதிய குறிப்பணி வெற்றியைக் கொண்டாடுகிறோம். எங்கள் எதிர்பார்ப்பைத் தாண்டி எமது கனவை நினைவாக்கியது.
    ஜோஹான் டையடிரிச் வொர்னர் [European Space Agency Director General]
     
    பத்தாண்டுகளாக அகில் நாட்டு கூட்டு முயற்சியால் உலகத் திறன் வாய்ந்த விஞ்ஞான ஆய்வகத்தை [Rosetta Space Probe & Philae Lander] தூக்கிச் சென்று, வால்மீன் ஒன்றைச் சுற்றி வந்து, அதன் பல்லாண்டு வளர்ச்சியை அறிந்து வந்தோம்.  இதுவரைச் செய்த விண்வெளித் தேடல்களில் இதற்கு ஈடு இணை எதுவுமில்லை.
    அல்வேரோ ஜிமினெஸ் [European Space Agency Director of Science]
     
    Comet Outbursts -2
    வால்மீனைச் சுற்றியுள்ள தீவிரச் சூழ்வெளியில், நாங்கள் ரோஸெட்டா விண்ணுளவியை 786 நாட்கள் பயணம் செய்ய விட்டு, அதைச் சுற்றிவந்து வேக முடுக்கம் [Flyby Swing] பெற்று, வால்மீன் ஒளிக்கிளர்ச்சியில்  தப்பிப் பிழைத்து, தாய்க் கப்பலையும், தளவுளவியையும் காப்பாற்றி யுள்ளோம். இறுதியாக விண்ணுளவியை வால்மீன் மீது மோத விட்டது பெரும் துணிகரச் செயல்.  தளவுளவி வால்மீனில் இறங்கியதைப் பின்பற்றி, விண்ணுளவி மோதல் எஞ்சிய குறிப்பணியை இறுதியில் வெற்றிகரமாக முடித்தது.
    சில்வைன் லோடியட் [Rosetta Operation Manager]
     
    தவிர்க்க முடியாதபடி இப்போது புதிய மர்மங்களை நாங்கள் தீர்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.  வால்மீன் இன்னும் முழுமையாகத் தனது இரகசியங்களை வெளியிட வில்லை !  நிச்சயமாகப் பற்பல அற்புதப் பண்பாடுகள் வால்மீன் களஞ்சியத்தில் நிரம்பியுள்ளன !  இப்போதுதான் அப்பணியை நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.
    மாத்தியூ டெய்லர் [ரோஸெட்டா திட்ட விஞ்ஞானி]
     
     
    philae-lander

    கடந்த ஆண்டில் [2015] ஐரோப்பிய விண்ணுளவி ரோஸெட்டாவின் பயணக் காலத்தை நீடிக்க முடிந்தாலும், உறங்கும் உறைந்த வால்மீன் எப்போது வெடித்தெழுந்து ஒளிக்கிளர்ச்சி வால் நீளும் என்று உறுதியாகச் சொல்ல இயலாது.  ரோஸெட்டாவின் இந்த திடீர் வால்மீன் ஒளிக்கிளர்ச்சிப் பதிவு எதிர்பாராத அதிர்ஷ்டக் காட்சி.

    ஒருங்கொத்த மகிழ்ச்சி நிகழ்வாக ரோஸெட்டாவின் பெரும்பான்மைக் கருவிகள் வால்மீன் ஒளிக்கிளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.  ஒரே சமயத்தில் ஒளித்தூசி எழுச்சியை அளவெடுத்த கருவிகள் ஒருங்கே முழுமையான தகவலை அனுப்பியுள்ளன.

    மாத்தியூடெய்லர் [ESA Rosetta Project Scientist]

    Halley's comet -2
     
    ரோஸெட்டா வால்மீன் விண்ணுளவித் திட்டச் சாதனைகள்
    முதன்முதலில் வால்மீன் ஒன்றைக் குறிவைத்து 2004 இல் ஏவிய ரோஸெட்டா விண்ணுளவி கடந்த 12 ஆண்டுகளாகப் பல பில்லியன் மைல் பயணம் செய்து, பிலே [Philae] என்னும் தளவுளவியை இறக்கிப் பற்பலத் தோற்றப் பண்பாடுகளைச் சேமித்து வந்துள்ளது.
    சூரிய மண்டலத்துக் கோள்கள் தோன்றும் போது வால்மீன்கள், தொடக்க காலத்துப் பூர்வீக எச்சங்கள் கொண்ட ஒருவகைக் காலச் சிமிழ்கள் [Time Capsules] என்று கருதப்படுகின்றன.  வால்மீன் வெளியாக்கும் வாயு, தூசி தலைக்கரு [Nucleus] அமைப்பு, அதைச் சார்ந்த ஆர்கானிக் பண்டங்கள் [Organic Materials] ஆகியவற்றை ஆராய்ந்து அறியும் போது, சூரியக் கோள் மண்டலத்தின் பூர்வ கால வரலாற்றை, ரோஸெட்டா விண்வெளித் திட்டம் செதுக்கி வைத்துள்ளது.
    வால்மீனின் விந்தையான, கரடு முரடான வடிவத்தை ரோஸெட்டா காட்டியது.  மேலும் வால்மீன், தனிதனித் தலைகள் பூர்வ காலத்து மித மோதலில் சேர்ந்த இரட்டைத் தலை [Two Lobes] கொண்ட உருவம் என்பது முதன்முறை தெளிவானது.
    Comet Outbursts -1
    தூசி நகர்ச்சி நிகழும் வால்மீனின் பருவ காலத்தை அறியவும், கோமாவின் மாறுபட்ட திணிவு, உள்ளமைப்பு அளக்கவும் [Density & Composition of Coma], நீண்டகாலக் கண்காணிப்பு ஆய்வு உதவியது. வால்மீனின் ஆக்ஸிஜன், நைட்டிரஜன் & நீர் ஆகியவற்றின் மூலக்கூறுகள், பூமிக்கடலில் உள்ள ஆக்ஸிஜன், நைட்டிரஜன், தண்ணீர் போலின்றி வேறுவிதச் சுவையில் [Different Flavours] இருந்தன !  அதாவது நாம் முன்பு கருதியபடி, பூமியின் கடல்நீர் வெள்ளம் வால்மீனிலிருந்து கொட்டியதில்லை !  உயிர்மூல இம்மிகள் வால்மீனிலிருந்து வந்தனவா என்பதும் கேள்விக்குரியதே.  நாம் இந்த விளைவுகள் மூலம் அறிவது : இந்த வால்மீன் 4.5 பில்லியன் ஆண்டுக்கு முன்பு சூரிய மண்டலம் தோன்றி வரும்போது, பூர்வக்கோள் காலத்து நிபுளா [Protoplanetary Nebula] இருந்த குளிர்ப்பருவ அரங்கில் பிறந்தது.
    டியென்ஏ-வுக்கு, செல் தகடுகளுக்கு [DNA & Cell Membranes] மூல காரணியும், புரோடினிலும் உள்ள அமினோ அமில கிளிசைன் [Amino Acid Glycine], மற்றும் பல்வேறு ஆர்கானிக் கலவைகள்  ரோஸெட்டா கண்டுபிடித்து விஞ்ஞானிகளுக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை.
      difficult-landing-1
     ரோஸெட்டா விண்ணுளவியின் நோக்குப் பதிவுகளில் நாங்கள் நம்புவது, அந்த ஒளிக்கிளர்ச்சிகள் வால்மீனின் ஆட்டம் அரங்கில்  [Atum Region] பெருந்தலையின் [Large Lobe] செங்குத்துச் சரிவிலிருந்து எழுந்திருக்க வேண்டும் என்பது.   விண்ணுளவிப் படங்களை நெடு நேரத் தூசித் தாக்குத லோடு சேர்த்துப் பார்த்தால், தூசிக் கூம்பு [Dust Cone] மிகவும் அகண்டதாக இருக்க வேண்டும் என்று நம்புகிறோம். அதன் விளைவாக ஒளிக்கிளர்ச்சி புதிய கீழ்ப் பொருட்களை வெளியில் தள்ளும், உட்தள உந்து ஆற்றலின்றி மேற்தளச் சரிவிலிருந்து எழுந்துள்ளது என்றும் எண்ணுகிறோம்.
    எபெர்கார்டு குருயன் [Eberhard Grun, Nuclear Physics, Max-Plank Institute, Heidelberg, Germany]
     
     

    Which Instruments saw outbursts

     
    2015 ஆம் ஆண்டில் நேர்ந்த ரோஸெட்டா விண்ணுளவியின் பதிவு ஆய்வுகள்
     
    ரோஸெட்டா எதிர்பாராத விதமாக 2015 பிப்ரவரி 19 இல் வால்மீன் சூரியுமோவ்-ஜெராசி மெங்கோவில் [Comet Name :  67P/Churyumov-Gerasimenko] உறைந்த உறக்கத்திலிருந்து திடீரென எழுந்த ஒளிக்கிளர்ச்சியை [Comet Outburst] பதிவு செய்து படமெடுத்தது. 20 மைல் தூரத்தில் விண்ணுளவி பறந்து பதிவு செய்த வரைப் படங்களை ஒன்பது கருவிகள் [காமிராக்கள், தூசி சேர்ப்பிகள், வாயு, ஒளிப் பிழம்பு ஆய்வு மானிகள்] [Cameras, Dust Collectors, Gas & Plasma Analysers] ஒரே சமயத்தில் உடனே அனுப்பியுள்ளன.  இந்த நிகழ்ச்சி வால்மீன் விண்வெளித் தேடல் ஆராய்ச்சியில் வரலாற்று முக்கியத்துவம் உள்ளது.  வால்மீன் ஒளிக் கிளர்ச்சிப் பதிவுகள் முதன்முறையாக ராயல் வானியல் குழுவினரால் [Royal Astronomical Society] ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவரது மாத அறிவிப்பு இதழில் வெளிவரப் போகிறது.  அதன் தலைமை விஞ்ஞானி ஜெர்மனியைச் சேர்ந்த ஹைடல்பர்க் நகரின் மாக்ஸ் பிளங்க் ஆய்வுக் கூடத்தின் எபர்ஹார்டு குருயின் [Eberhard Grun, Max-Plank Institute, Heidelberg, Germany].
    Comet Halley
    ரோஸெட்டின் விரிகோணக் காமிரா 2016 பிப்ரவரி காலை 9:40 மணிக்கு [GMT] நிழலில் உறங்கும் உறைப்பனித் தூசித் தலையிலிருந்து [Comet Dusty Coma] மிக்க வெளிச்சத்தில் பளிச்சென எழும் ஒளிக்கிளர்ச்சி உண்டாவது ஓர் அரங்கில் தெரிந்தது.  அடுத்த இரண்டு மணிப் பொழுதில் ரோஸெட்டா 100 மடங்கு வெளிச்சமுள்ள ஒளிக்கிளர்ச்சிப் பதிவுகளை அலிஸ் [ALICE] கருவி மூலம் காட்டியது. அவற்றில் சூரியனின் புறவூதா வெளிச்சம் வால்மீன் தலைக்கரு பிரதிபலித்தது [Ultraviolet Brightness of the Sunlight Reflected by the Comet Nucleus].  வால்மீன் தூசிக் கிளர்ச்சி ஒளியுடன் 6 மடங்கு வெளிச்சத்தில் தெரிந்தது.  ரோஸினா, ஆர்பிசி கருவிகள் [ROSINA & RPC] பெருத்த அளவில் [1.5 TO 2.5 மடங்கு] வாயு வீச்சு, ஒளிப்பிழம்பு வீச்சுகளைக் காட்டின.  மேலும் மைரோ [MIRO] கருவி சூழ்ந்த வாயுவின் உஷ்ணம் 30.C ஏறிடக் காட்டியது.  சாதாரணமாக 3 முதல் 10 வரை காட்டும் கியாடா கருவி [GIADA] 200 துகள்களைக் கண்டுபிடித்தது.  ரோஸெட்டா விண்ணுளவியில் குறுங்கோணக் காமிரா ஒளிக்கிளர்ச்சியில் தூசித் துகள்கள் [Dust Grains] வெளியாகப் படம்பிடித்தது.  புவி மீதுள்ள வானியல் விஞ்ஞானிகள் வால்மீன் ஒளித்திரள் திணிவு [Comet Coma Density] மிகையாகக் கண்டனர்.

    Halley's comet -1

    Comet Halley
    ரோஸெட்டா விண்ணுளவியின் நோக்குப் பதிவுகளில் விஞ்ஞானிகள்  நம்புவது, அந்த ஒளிக்கிளர்ச்சிகள் வால்மீனின் ஆட்டும் அரங்கில்  [Atum Region] பெருந்தலையின் [Large Lobe] செங்குத்துச் சரிவிலிருந்துதான் நேர்ந்திருக்க வேண்டும் என்பது.   விண்ணுளவிப் படங்களை நெடு நேரத் தூசித் தாக்குதலோடு சேர்த்துப் பார்த்தால், தூசிக் கூம்பு [Dust Cone] மிகவும் அகண்டதாக இருக்க வேண்டும் என்று நம்புகிறார். அதன் விளைவாக ஒளிக்கிளர்ச்சி புதிய கீழ்ப் பொருட்களை வெளியில் தள்ளும், உட்தள உந்து ஆற்றலின்றி மேற்தளச் சரிவிலிருந்து எழுந்துள்ளது என்றும் எண்ணுகிறார்.  வால்மீன் நிழலிலிருந்து வெளிச்சத்துக்கு வந்ததும் மேற்தளத்தில் வெப்ப அழுத்தப்பாடு [Thermal Stress] உந்தியே தளச்சரிவு தூண்டப்பட்டு நீர்ப்பகுதி நேரடி சூரிய ஒளியின் பாதிப்புக்கு உட்பட்டிருக்க வேண்டும்.  உடனே நீர் ஆவியாகி அருகில் எழும் தூசியோடு கலந்து வால்மீன் ஒளிவாலாய் உருவாகி இருக்க வேண்டும் என்று ஊகிக்கப் படுகிறது.
    ++++++++++++++++
    Rosetta launch

     

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cArihDTnOZg

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=5b7u6stKgfs

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=TwkliXod6Ns

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=nrwelZ7E4Y0

    http://www.esa.int/spaceinvideos/Videos/2014/11/Philae_landing_status_update_and_latest_science

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=E0tLcrty-PY

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=7Xm6y0LzlLo

    http://www.bbc.com/news/science-environment-30058176

    +++++++++++++++++++++++

    Difficult landing

    ஓய்வில் இருந்த ஃபிலே தளவுளவியில் [Philae Lander] இன்னும் மிகை யான தகவல் சேமிப்பில் உள்ளது.  பரிதி ஒளிபட்டு அடுத்துக் கிடைக்கும் தொடர்பில் நிறையச் செய்தி நாங்கள் பெற முடியும்.  இதுவரை பெற்ற தகவலில் தளவுளவியின் உடல்நலமும், விழித்துக் கொண்ட செய்தியும் அறிந்து கொண்டோம். தளவுளவி உட்புற வெப்பநிலை சீராக இருந்தது. பரிதி வெப்பத் தட்டுகள்  யாம் எதிர்பார்த்தது போல் சூரிய சக்தி சேமித்த வண்ணம் இருந்தன.

    பார்பரா கொஸ்ஸோனி  [ஜெர்மன் விண்வெளி மைய எஞ்சினியர்] 

    240 கி.மீ. [150 மைல்] உயரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் ரோஸெட்டா விண்ணுளவி இப்போது வால்மீனை நெருங்கி, தளவுளவி தகவல் பெற 180 கி.மீ. [110 மைல்] உயரத்துக்குக் கீழிறக்கப்படும்.

    எல்ஸா மாண்டாகனன் [ரோஸெட்டா விண்ணுளவி துணைப் பயண மேலாளர்] 

    Rosetta probe landing

    “எமது பெரு வேட்கை ரோஸெட்டா குறிப்பணித் திட்டம் விண்வெளித் தேடல் வரலாற்று மைல் கல்லாய் ஓரிடத்தைப் பெற்றுள்ளது.  ஓடும் வால்மீனை முதன்முதல் நெருங்கிச் சுற்றியது மட்டுமின்றி, முதன்முதல் தளவுளவி ஒன்றை வால்மீனில் இறக்கிச் சோதனை செய்தது.  ரோஸெட்டா புவிக்கோளின் தோற்ற மூலத்தை அறியக் கதவைத் திறந்துள்ளது மகத்தான ஒரு சாதனை.”

    ஜான் ஜேக்கஸ் டோர்டயின்   [ESA Director General]  [November 12, 2014]

    “விண்வெளியில் பத்தாண்டுகள் [2004 – 2014] தொடர்ந்து பயணம் செய்து, ரோஸெட்டா சூரிய குடும்பத் தோற்றத்தின் பூர்வீக எச்சங்களில் ஒன்றான வால்மீனில் தளவுளவி ஒன்றை இறக்கி சிறந்த முறையில் விஞ்ஞானச் சோதனை செய்து வருகிறது.”

    அல்வாரோ கிமென்னிஷ்  [ESA  Director of Scince & Robotic Exploration]  [November 12, 2014]

    comet-chemicals

    “வால்மீன்களைப் பற்றி ஏன் அறிந்து கொள்ள வேண்டும்?  வால்மீன்களை விண் வெளியில் ஏன் உளவு செய்ய வேண்டும்?  காரணம் இதுதான், பரிதி மண்டலத்தில் திரிந்து வரும் வால்மீன்களே பிரபஞ்சத்தின் பூர்வீகக் கோள்கள்!  அவற்றில் காணப்படும் பிண்டப் பொருட்களில்தான் அனைத்து அண்ட கோள்களும், பரிதியும் ஆக்கப் பட்டிருப்ப தாகக் கருதப் படுகிறது!  நாசாவின் ஆழ்மோதல் திட்டம் [Deep Impact] உயிரினத் தோற்றத்தின் ஆரம்பத் தோற்றத்தை ஆராய உதவும்.  இதுவரைச் செய்யாத, துணிச்சலான, புத்துணர்வு மூட்டும், ஒரு பரபரப்பான முதல் விஞ்ஞான முயற்சி அது!”

    ஆண்டிரூஸ் டான்ஸ்லர் [Acting Diretor, Solar System Division, NASA]

    Roetta Probe on comet -1

    Mothership Rosetta  Drops Lander on the Comet

    முதன்முதல் வால்மீனில் இறங்கிய ஐரோப்பிய விண்கப்பல் தளவுளவி

    2014 நவம்பர் 12 ஆம் தேதி விண்வெளித் தேடல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் !  அன்றுதான் ஈசாவின் ரோஸெட்டா விண்கப்பல் [ESA -European Space Agency Spaceship Rosetta] முதன்முதல் ஒரு வால்மீனை நெருங்கிச் சுற்றி அதன் மீது தளவுளவி [Philae Lander] ஒன்றை இறக்கிச் சோதித்துத் தகவல் அனுப்பியது.  1969  ஆண்டில் முதன்முதல் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் தடம் வைத்தது போன்ற ஓர் மகத்தான சாதனையாக இந்நிகழ்ச்சி கருதப் படுகிறது.  2004 ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி ஏவப்பட்ட ஈசாவின் ரோஸெட்டா விண்கப்பல் 10 ஆண்டுகள் பயணம் செய்து,  6.4 பில்லியன் கி.மீ. தூரம் [3.8 பில்லியன் மைல்] கடந்து சென்று ஒரு வால்மீனை [Comet : 67P /Churyumov-Gerasimenko] 2014 ஆகஸ் 6 ஆம் தேதி நெருங்கி வட்டமிட்டு, துல்லிய மாகத் தளத்தில் இறங்கியது, சவாலான ஒருபெரும் விண்வெளிச் சாதனையாகும்.   ரோஸெட்டா விண்கப்பல் வால்மீனுக்கு 30 கி.மீ. தூரத்தில் சுற்றி, 34,000 mph [55,000 kmh]  வேகத்தில் வால்மீனைப் பின்பற்றி வந்தது.  சூரியன் அருகில் சென்று வால்மீன் சுற்றும் போது, ரோஸெட்டா விண்கப்பலும், ஃபிலேயும் பரிதியைச் சுற்றித் தகவல் அனுப்பும்.

    First comet image from Philae

    வரலாற்று முக்கிய அந்த வால்மீன் அப்போது பூமியிலிருந்து 510 மில்லியன் கி.மீ. [300 மில்லிய மைல்] தூரத்தில் சூரியனை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.   வால்மீனில் இறங்கிய ஃபிலே தளவுளதி தரையில் அமர்ந்ததும், அது தாய்க்கப்பல் ரோஸெட்டா மூலம் தகவல் தெரிவித்து வால்மீனின் படங்களையும் அனுப்பியது.   மூன்று கால் உடைய ஃபிலே தளவுளவி இறங்கிய வேகம் : விநாடிக்கு சுமார் 1 மீடர்.  “ரோஸெட்டா, ஃபிலேயின் தொடர்ந்த தொலைத் தொடர்வு இயக்கக் கட்டுப்பாடுகள் மிகச் சவாலான பொறியியல் சாதனையாகும்.   அதற்கு நுணுக்கமான பொறியியல் ஆக்க பூர்வத் திறனும், விண்வெளிப் பயணக் கட்டுப்பாடு அனுபவமும் தேவை,” என்று ஈசா ஆளுநர் [ESA Director of Human Spaceflight Operations] கூறினார்.  தற்போதைய வால்மீன் வேகம் : 18 kms [3600 mph].  பின்னால் சூரியனை நெருங்கும் போது வால்மீன் வேகம் பன்மடங்கு மிகையாகும்.  ரோஸெட்டா வால்மீன் குறிப்பணித்  திட்ட நிதி ஒதுக்கு : 1.6 பில்லியன் டாலர் [1.3 பில்லியன் ஈரோ]

    comet-structure-1

    வால்மீனில் இறங்கிய தளவுளவி  ஃபிலே

    தளவுளவி இறங்கிய முதல் மூன்று நாட்கள், மின்கலன் ஆற்றலில் இயங்கி வால்மீன் பற்றித் தகவல் அனுப்பியது.  மின்கலன் ஆற்றல் 60 மணி நேரம்தான் நீடிக்கும்.  வால்மீனின் ஒருநாள் பொழுது 12 மணி நேரமே ! துரதிர்ஷ்ட்மாக தளவுளவி தவறிப் போய் ஓர் இடுக்குக் குழியில் இறங்கி விட்டதால், திட்டப்படி எதிர்பார்த்த சூரிய ஆற்றல் மின்சக்தி சேமிக்க இயலவில்லை.  மூன்று நாட்கள் கழித்து தளவுளவி ஓய்ந்து போய் உறங்கி விட்டது.  சூரியனை    வேகத்தில் நெருங்கும் வால்மீனில் சூரியக் கதிர்கள் மிகையாக விழும் போது, மீண்டும் தளவுளவி இயங்கிடலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  ஃபிலே தளவுளவி 2015 மார்ச் மாதம் வரை பணிசெய்யும் என்று திட்டமிடப் பட்டது.  சூரியக் கதிர்கள் பட்டு மீண்டும் தளவுளவி எப்போது விழித்து வேலை செய்யும் என்பது ஊகிக்க முடியவில்லை.  அத்துடன் வால்மீன் இன்னும் 13 மாதங்களில் சூரியனை நெருங்கிச் சுற்றும் போது நேரும் மகத்தான நிகழ்ச்சிகளை விண்கப்பல் ரோஸெட்டாவும், தளவுளவி ஃபிலேயும் விளக்கமாகத் தகவல் அனுப்பப் போகின்றன.

    comet-structure-2

    அப்போது [டிசம்பர் 6, 2014] ரோஸெட்டா விண்கப்பல் வால்மீனை 20 கி.மீ. [12 மைல்] தூர வட்டவீதியில் சுற்றக் கட்டுப் படுத்தப் படும்.  மேலும் ரோஸெட்டா இயக்கமாகி வால்மீனை 8 கி.மீ. [5 மைல்] தூரத்தில் நெருங்கிச் சுற்ற வைத்து ஆய்வுகள் நடத்தப்படும். அச்சமயத்தில் [2015 ஆகஸ்டு 13] வால்மீன் பூமிக்கும் செவ்வாய்க் கோளுக்கும் இடையே பூமியிலிருந்து 185 மில்லியன் கி.மீ. [சுமார் 110 மில்லியன் மைல் ] தூரத்தில் பயணம் செய்யும்.

    ஈசாவின் ரோஸெட்டா வால்மீன் குறிப்பணி, நமது சூரிய மண்டலத் தோற்றத்தின் சில புதிர்களை விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  4.5 பில்லியன் ஆண்டுக்கு முன்பு தோன்றிய சூரிய குடும்பத்தின் பூர்வீக ஆரம்ப நிலை எப்படி இருந்தது, அதனில் எச்சப் படைப்புகளான வால்மீன்களின் பங்குகள் என்ன, வால்மீனின் உள்ளமைப்பு யாது போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கலாம் என்று வானியல் விஞ்ஞானிகள் கருதுகிறார்.

    comet-structure-3

    2014 ஆண்டில் செவ்வாய்க் கோளுக்குப் போகும் முதற் பயண ஆரம்பத்துக்கு முன்பு அணுசக்தி ஆற்றலில் உந்தி மூவர் செல்லும் விண்வெளிக் கப்பல் “ஓரியான்” [Orion Spacecraft] வெண்ணிலவைத் தாண்டி 7 முதல் 14 நாட்கள் வரை ஒரு விண்கல்லைச் [Asteroid] சுற்றி வந்து ராயப் போவதாகத் திட்டமிடப் பட்டுள்ளது.  விண்கப்பல் விண்கல்லைச் சுற்றி வரும் போது விண்விமானிகள் விண்கல்லில் இறங்கி முதன் முதல் தடம் வைத்து மண் தளத்தில் ஆய்வுகள் செய்வார்கள்.  அதுவே விண்வெளி வரலாற்றில் நிலவுக்கு அப்பால் மனிதர் பயணம் செய்து முதன்முதலில் ஆராய்ச்சிகள் நடத்திய மாபெரும் சாதனையாகக் கருதப்படும்.”

    டாக்டர் பால் பெல், வானியல் நிபுணர் [Dr. Paul Abell, NASA Jonson Space Center, Houston]

    “டெம்பெல் வால்மீனுக்குக் கிடைத்த அடி ஒரு பேரடி மட்டுமன்று!  நாங்கள் நெடுங்காலமாய் வாதித்து வரும் ஆய்வுரைகளுக்கு ஓர் அரிய சோதனையாகவும் ஆயிற்று!  வால்மீன்கள் வெறும் குப்பைப் புழுதி கொண்டவை அல்ல!  அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் பனித்தளக் கட்டிகளின் களஞ்சியமும் அல்ல! கரித் தூள்கள் நிரம்பிய மேற்தட்டுக்கு அடியே துளைகளுள்ள ஆர்கானிக்ஸ் பிண்டமும் (Porous Organic Mass), உறைந்த பனித்தளமும் அமைந்திருப்பதை வால்மீனின் ஆழ்குழிச் சோதனை நிரூபித்துக் காட்டும்.”

    டாக்டர் சந்திரா விக்கிரமசிங், பேராசிரியர் கார்டி·ப் பல்கலைக் கழகம், இங்கிலாந்து

    Rosetta Mission

    ரோஸெட்டா விண்ணுளவிப் பயணத் திட்டத்தின் குறிக்கோள் என்ன?

    ஈசாவின் விண்ணுளவி ரோஸெட்டா பத்தாண்டுகள் பயணம் செய்து விண்வெளியில் பரிதியை நோக்கி விரையும் ஒரு வால்மீனைச் சுற்றி விந்தையாக முதன்முதல் தள உளவி ஒன்றை இறக்கி உட்கார வைத்து, ஆய்வுத் தகவலைப் பூமிக்கு அனுப்பப் போகிறது!  அந்த வெகு நீண்ட பயணத்துக்கு [1000 மில்லியன் கி.மீ] விண்ணுளவி மூன்று முறைப் பூகோளத்தையும், ஒருமுறைச் செவ்வாய்க் கோளையும், ஓரிரு முறை விண்கற்களையும் சுற்றிப் ஈர்ப்பியக்கக் கவண் சுழற்சியால் [Gravity Assist Swing] தனது சுற்றுப் பாதையின் நீள்வட்டத்தையும் வேகத்தையும் [Elliptical Path & Velocity] மிகையாக்கும். பரிதியை நோக்கிச் செல்லும் விண்ணுளவி வால்மீனின் ஈர்ப்பு மண்டலத்தில் பாய்ந்து பற்றிக் கொண்டு முதன்முதல் சாதனையாக அதைச் சுற்றி வரும்!  வால்மீனைச் சுற்றி வந்து தன் முதுகில் தாங்கிச் செல்லும் தள உளவியை வால்மீனில் இறக்கி விடும். தாய்க் கப்பல் எனப்படும் விண்ணுளவித் தளவுளவியைக் கண்காணிப்பதுடன் தளத்தில் நிகழும் ஆய்வுகளை ரேடியோ அலைகளில் பூமிக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கும்!

    rosetta-journey

    [Click to Enlarge]

    வால்மீனைச் சுற்றி வந்து தன் முதுகில் தாங்கிச் செல்லும் தள உளவியை வால்மீனில் இறக்கி விடும். தாய்க் கப்பல் எனப்படும் விண்ணுளவித் தள உளவியைக் கண்காணிப்ப துடன் தளத்தில் நிகழும் ஆய்வுகளை ரேடியோ அலைகளில் பூமிக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கும்!  ரோஸெட்டா விண்ணுளவியின் உன்னத விஞ்ஞான ஆய்வுக் கருவிகள் வால்மீன் மூலத் தோற்றத்தை நேராக அறிய முற்படும்.  விண்கற்களுக்கும் [Asteroids] வால்மீன்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை நுட்பமாய்க் கண்டறியும்.  பரிதி மண்டலத் தோற்றத்திற்கு வால்மீன்களின் பங்களிப்புகள் உள்ளனவா?  மேற்கூறிய வினாக்களுக்கு விடை அளிக்கும் தகுதி பெற்ற கீழ்க்காணும் பொறியியற் கருவிகள் ரோஸெட்டாவில் அமைக்கப் பட்டுள்ளன.

    philae-lander-instruments

    ரோஸெட்டா விண்ணுளவியில் உள்ள கருவிகள்

    ரோஸெட்டா விண்ணுளவித் திட்டத்தின் தொகைநிதி மதிப்பீடு: 1000 மில்லியன் ஈரோ [டாலர் நாணய மதிப்பு: 1.325 பில்லியன் டாலர்]  ரோஸெட்டா விண்ணுளவித் திட்டத்தைச் சிந்தித்து உருவாக்கிக் கண்காணித்து வரும் ஈரோப்பியன் விண்வெளி ணையகத்தின் [European Space Agency (ESA)] கூட்டியக்க உறுப்பினர்கள்: ஜெர்மெனி, பிரான்ஸ், பிரிட்டன், ஃபின்லாந்து, ஸ்டிரியா, அயர்லாந்து, இத்தாலி, ஹங்கேரி ஆகியவை.  அந்த கூட்டியக்கம் ஜெர்மெனி தலைமையில் ஜெர்மென் வாயுவெளி ஆய்வுக் கூடத்தின் [German Aerospace Research Institute (DLR)] கீழாக விண்வெளி ஆய்வுகளை நடத்தி வருகிறது.

    ரோஸெட்டா விண்கப்பலின் பரிமாணம் உளவிகளுடன் [3 மீடர் x 2 மீடர் x 2 மீடர்] நீளம், அலகம், உயரம் உள்ளது. ரோஸெட்டாவின் எடை: 100 கிலோ கிராம்.  மின்சக்தி தயாரிக்க இரண்டு 14 மீடர் பரிதித் தட்டுகள் [Solar Panels] விண்கப்பலின் இறக்கைகள் போல் பொருத்தப் பட்டிருக்கின்றன.  பரிதித் தட்டுகளின் மொத்தப் பரப்பு 64 சதுர மீடர். விண்ணுளவியின் ஒரு பக்கத்தில் 2.2 மீடர் விட்டமுள்ள ரேடியோ அலைத் தொலைத் தொடர்புத் தட்டு பிணைக்கப் பட்டுள்ளது. அடுத்த பக்கத்தில் தள உளவி பொருத்தப் பட்டிருக்கிறது.

    ESA Control Room -2

     விண்ணுளவியின் 11 விஞ்ஞான ஆய்வுக் கருவிகள்:

    1.  “அலிஸ்” புறவூதா படமெடுப்பு ஒளிப்பட்டை மானி [ALlCE: Ultraviolet Imaging Spectrameter]

    2. “கான்ஸெர்ட்” வால்மீன் உட்கரு உளவி [CONSERT: Comet Nucleus Sounding]

    3. “காஸிமா” வால்மீன் அடுத்த நிலை அயான் நிறை அளவி [COSIMA: Cometary Secondary Ion Mass Analyser]

    4. “ஜியாடியா” தூள் மோதல் ஆய்வு, தூள் நிரப்பி [GIADIA: Grain Impact Analyser & Dust Accumulator]

    5. “மைடாஸ்” நுட்பப் படமெடுப்பு ஆய்வு ஏற்பாடு [MIDAS: Micro-Imaging Analysing System]

    6. “மைக்ரோ” ரோஸெட்டா விண்சுற்றியின் நுட்பலைக் கருவி [MICRO: Microwave Instrument for Rosetta Orbiter]

    7. “ஓஸிரிஸ்” ரோஸெட்டா விண்சுற்றிப் படமெடுப்பு ஏற்பாடு [OSIRIS: Rosetta Orbiter Imaging System]

    Image result for comet's structure

    8. “ரோஸினா” அயான், நடுநிலை ஆய்வு செய்யும் ரோஸெட்டா விண்சுற்றி ஒளிப்பட்டை மானி [ROSINA: Rosetta Orbiter Spectrometer for Ion & Neutral Analysis]

    9. “ஆர்பிஸி” ரோஸெட்டா ஒளிப்பிழம்பு ஆய்வுக்குழுக் கருவி [RPC: Rosetta Plasma Consortium]

    10 “ஆரெஸை” வானலை விஞ்ஞான உளவுக் கருவி [RSI: Radio Science Investigation]

    11 “விர்டிஸ்” புலப்படும், உட்சிவப்புத் தள ஆய்வு ஒளிப்பட்டை மானி [VIRTIS: Visible & Infrared Mapping Spectrometer]

    Image result for comet's structure

    வால்மீனில் கால்வைக்கும் தள உளவியின் கருவிகள்:

    தள உளவியில் உள்ள 9 விஞ்ஞானக் கருவிகள்:

    1. “அபெக்ஸ்” ஆல்ஃபா புரோட்டான் எக்ஸ்-ரே ஒளிப்பட்டை மானி [APXS: Alpha Proton X-Ray Spectrometer]

    2. “சிவா/ரோலிஸ்” ரோஸெட்டா தள உளவி படமெடுப்பு ஏற்பாடு [CIVA/ROLIS: Rosetta Lander Imaging System]

    3. “கான்ஸெர்ட்” வால்மீன் உட்கரு உளவி [CONSERT: Comet Nucleus Sounding]

    Philae Lander 

    Philae Lander

    4. “கோஸாக்” வால்மீன் மாதிரி உட்பொருள் ஆயும் சோதனை [COSAC: Cometary Sampling & Composition Experiment]

    5. “மாடுலஸ் டாலமி” வெளியேறும் வாயு உளவி [MODULUS PTOLEMY: Evolved Gas Analyser]

    6. “முபஸ்” மேற்தளக் கீழ்த்தள பல்வினை உணர்ச்சிக் கருவி [MUPUS: Multi-Purpose Sensor for Surface & Subsurface Science]

    7. “ரோமாப்” ரோலண்டு காந்தவியல், ஒளிப்பிழம்பு மானி [ROMAP: RoLand Magentometer & Plasma Monitor]

    8. “லெஸ்டி2” மாதிரி பரிமாறும் கருவி [SD2: Sample & Distribution Device]

    9. “ஸெஸமி” தள மின்னொலிச் சோதனை மானி, தூசி மோதல் நிரப்பி [SESAME: Surface Electrical & Acoustic Monitoring Experiment, Dust Impact Collector]

    விண்ணுளவி கட்டுப்பாடு நிலையம்: ஈரோப்பியன் விண்வெளி இயக்க மையம் [European Space Operation Centre (ESOC), Darmstadt, Germany]  கண்காணிப்பு நிலையம்: நியூ நார்ஸியா, பெர்த், ஸ்திரேலியா [New Norcia, Near Perth, Australia]

    Philae Lander components

    அணுசக்தி உந்தும் விண்ணுளவியில் விண்கல் தள ஆய்வுகள்

    2007 மார்ச் 14 ம் தேதி நாசா வானியல் நிபுணர் டாக்டர் பால் பெல் 2014 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கோளில் கால் வைக்க மனிதரை அனுப்புவதற்கு முன்பாக, நிலவுக்கு அப்பால் நகர்ந்து கொண்டிருக்கும் சின்னஞ் சிறு விண்கற்களில் [Asteroid] விண்வெளி விமானிகளை அனுப்பி அவற்றைப் பற்றி அறிந்து வரும் விண்கப்பல் ஓரியான் [Orion Spacecraft] திட்டத்தை அறிவித்திருக்கிறார். ஓரியான் விண்கப்பல் முதன்முதலில் அணுசக்தி ஆற்றலில் ஏவப்பட்டு அண்ட வெளியில் பயணம் செய்யப் போகிறது. அத்திட்டத்தில் விண்கப்பல் தேர்ந்தெடுத்த சிறு விண்கல் ஒன்றைச் சுற்றும். பயணம் செய்து பங்கெடுக்கும் மூன்று விஞ்ஞானிகளில் ஒருவர் விண்கப்பலில் அமர்ந்து கண்காணிக்க இருவர் விண்கல்லில் இறங்கித் தடம் வைத்து அதன் மண்தளப் பண்பாடுகளை ஆய்வு செய்வார்.  அத்துடன் அங்கே நீர் உற்பத்தி செய்யத் தேவையான ஆக்ஸிஜென், ஹைடிரஜன் வாயுக்களைப் பிரித்தெடுக்க ஏதுவான மூலத்தாதுக்கள் கிடைக்குமா வென்றும் கண்டறிவார்.  செவ்வாய்க் கோள் யாத்திரைக்கு நிலவைப் போல் விண்கற்களை இடைத்தங்கு அண்டங்களாக விமானிகள் பயன்படுத்த முடியுமா வென்றும் கண்டறிவார்கள்.  அந்த பயணத்துக்கு நிலவுக்குச் செல்வதை விட சற்று கூடுமானதாய் 7 முதல் 14 தினங்கள் நாட்கள் எடுக்கலாம் என்று மதிப்பிடப் படுகிறது.  டாக்டர் பால் பெல் தயாரித்த அந்த புதிய திட்டத்திற்கு நாசா மேலதிகாரிகள் அங்கீகாரம் அளித்துள்ளர்கள்.

    Rosetta Spaceship Launching 

    [March 2, 2004]

    Rosetta launching

    2004 மார்ச் 2 ஆம் தேதி பிரென்ச் கயானாவிலிருந்து ஏரியன்-5 ராக்கெட் [Ariane-5G+] மூலமாக ஏவப்பட்டது, ரோஸெட்டா விண்ணுளவி.  ரோஸெட்டாவின் முதல் பூகோளச் சுழல்வீச்சு [Earth Gravity Assist (Earth’s Fly-by)] 2005 மார்ச் 4 ஆம் தேதி நிகழ்ந்தது. “ஈர்ப்பாற்றல் உந்தியக்கம்” என்பது கவண் கல்லைக் கையால் வீசிச் சுழற்றி அடிப்பது [Sling-shot like Effect] போன்றது.  விண்ணுளவியின் இரண்டாவது கவண் வீச்சைச் செவ்வாய்க் கோளின் ஈர்ப்பாற்றல் புரிந்தது.  அப்போது விண்ணுளவின் வேகம் செவ்வாய்க் கோளின் வேகத்துக்கு ஒப்பாக மணிக்கு 22,500 மைல் வீதத்தில் பயணம் செய்தது.  மூன்று டன் எடையுடைய ரோஸெட்டா விண்ணுளவி செவ்வாய்க் கோளைச் சுற்றப் பின்புறம் சென்ற போது 20 நிமிடங்கள் ரேடியோ அலைச் சமிக்கைப் பூமிக்கு வராமல் தடைப் பட்டது!  விண்ணுளவியின் சூரிய ஒளித்தட்டுகளுக்கு பரிதி ஒளி மறைக்கப் பட்டு மின்சார உற்பத்தி நின்றது.  நுணுக்க விண்வெளி இயக்கத்தில் நடந்த அந்த பயங்கர 20 நிமிடங்களில் ஈசா எஞ்சினியரின் மூச்சும், பேச்சும் சற்று நின்று நெஞ்சத் துடிப்பு வேகமாய் அடித்துக் கொண்டது.  விண்ணுளவி செவ்வாயின் முதுகுப் புறத்தைத் தாண்டி வெளிவந்து, பூமியில் ரேடியோ தொடர்பு மீண்டதும் அனைவரது முகத்தில் ஆனந்த வெள்ளம் பொங்கி எழுந்தது.

    Philae touchdown-3

    ஈரோப்பிய விண்வெளி ஆணையகத்தின் வால்மீன் உளவுப்பணி

    ஈசாவின் ராக்கெட் ஏவுதளம் தென் அமெரிக்காவின் வடக்கே பிரென்ச் கயானாவில் கௌரொவ் [Kourov, French Guiana] என்னுமிடத்தில் அமைக்கப் பட்டுள்ளது. 1993 நவம்பரில் அகில நாடுகளின் ரோஸெட்டா விண்வெளித் திட்டம் ஈசா விஞ்ஞானக் குழுவின் அங்கீகாரம் பெற்றது.  அந்த திட்டத்தின் குறிக்கோள், விண்ணுளவி ஒன்றை அனுப்பி, வியாழன் ஈர்ப்பு மண்டலத்தில் சுற்றிவரும் “சூரியுமாவ்-ஜெராஸிமென்கோ” (Churyumov-Gerasimenko) என்னும் வால்மீனைச் (67P) சந்திப்பது.  விண்கப்பல் ஒன்று வால்மீனை வட்டமிட, தள உளவி ஒன்று கீழிறங்கி வால்மீனில் தங்கிச் சோதனைகள் செய்யும். அது பத்தாண்டு நீள் பயணத் திட்டம்.  அந்த விண்ணுளவிக்கு “ரோஸெட்டா” [Name from Rosetta Stone of Black Basalt with Egyptian Scripts about Ptolemy V] என்னும் பெயர் அளிக்கப்பட்டது. ராக்கெட் எஞ்சின் ஏரியன்-5 [Ariane 5 Generic Rocket Engine, Payload 6-9.5 Tons] 2004 மார்ச் 2 ஆம் தேதி பிரென்ச் கயானாவிலிருந்து, ஈசாவின் ரோஸெட்டா விண்ணுளவியைத் தூக்கிக் கொண்டு கிளம்பியது.

    Rosetta Orbit

    ரோஸெட்டாவின் வேகத்தை அதிகமாக்கவும், பயணப் பாதையை நீளமாக்கவும் பூமி, செவ்வாய், லுடீஸியா, ஸ்டைன்ஸ் விண்கற்கள் [Astroids: Lutetia & Steins] ஆகிய அண்டக்கோள்களின் ஈர்ப்பாற்றல் சுழல் உந்துத் திருப்புகள் [Gravity Assist Maneuvers] பயன்படுத்தப் பட்டன.  2005 மார்ச் 4 ஆம் நாள் விண்ணுளவி பூமியைச் சுற்றி வந்து வேகத்தையும், பாதை நீள்வட்டத்தையும் முதலில் மிகையாக்கியது.  நுணுக்கமான அந்த இயக்க முறைகள் அனைத்தும் ஜெர்மெனியில் உள்ள ஈசாவின் விண்ணுளவி ஆட்சி அரங்க எஞ்சியர்களால் தூண்டப்பட்டுச் செம்மை யாக்கப்பட்டுக் கண்காணிக்கப் பட்டன.  சமீபத்தில் [2007 பிப்ரவரி 25] வெற்றிகரமாகச் செவ்வாய்க் கோள் சுழல் உந்துத் திருப்பல் [Mars Fly-by] செய்யப் பட்டுள்ளது.  அடுத்த இரண்டு பூகோளச் சுழல் உந்து திருப்பல்கள் 2007 நவம்பரிலும், 2009 நவம்பரிலும் நிகழப் போகின்றன.  பிறகு லுடீஸியா, ஸ்டைன்ஸ் விண்கற்கள் சுழல் உந்துத் திருப்பல்கள் முறையே 2008 செப்டம்பரிலும், 2010 ஜூலையிலும் திட்டமிடப் பட்டுள்ளன.

    Rosetta-comet orbit

    பரிதியை நோக்கிப் பயணம் செய்யும் ரோஸெட்டா விண்ணுளவி நீள் வட்டப் பாதையை விட்டுப் புலம்பெயர்ந்து, வால்மீனின் ஈர்ப்பு மண்டலத்துக்குப் புகுந்திடும் நிகழ்ச்சி, இன்னும் ஏழாண்டுகள் கடந்து 2014 மே மாதம் ஆரம்பிக்கும்.  2014 ஆகஸ்டில் தாய்க் கப்பல் விண்ணுளவி வால்மீனைச் சுற்ற ஆரம்பித்து, நவம்பரில் தள உளவியைக் கீழே இறக்கி விடும்.  தள உளவி வால்மீனில் அமர்ந்து சில மாதங்கள் வால்மீனின் தளப் பண்பாடுகளை ஆய்வு செய்துத் தகவலைத் தாய்க் கப்பலுக்கு அனுப்பிக்கும்.  தாய்க் கப்பல் அனுப்பும் தகவலை ஆஸ்திரேலியாவில் உள்ள ரேடியோ அலைத்தட்டு உறிஞ்சி எடுத்து ஜெர்மெனியில் உள்ள ஆட்சி அறைக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கும்.  ரோஸெட்டா வால்மீன் திட்டப் பணிகள் 2015 டிசம்பர் மாதம் நிறைவு பெறும்.

    Rosetta near comet

    Comet Details

    (தொடரும்)

    **********************
    தகவல்:

    1. Deep Impact Prepares for Comet Crash By: Declan McCullagh [www.news.com] July 2, 2005
    2. NASA Probe Could Reveal Comet Life, By UK Team Cardiff University, U.K. [July 5, 2005]
    3. Photo Credits NASA, JPL-Caltech, California [July 5, 2005] & Toronto Star Daily [July 5, 2005]
    4. Watch Deep Impact’s Comet Collision Via Webcast By: Tariq Malik [www.space.com July 1, 2005]
    5. NASA to Study Comet Collision www.PhysOrg.com [2005]
    6. The Stardust Mission, Silicone Chip Online-NASA Mission, To Catch a Comet [Jan 15, 2006] [www.siliconchip.com.au/cms]
    7. Stardust: How to Bring Home a Comet [http://stardust.jpl.nasa.gov/science/feature002.html] [Jan 15, 2006]
    8. Public to Look for Dust Grains in Stardust Detectors By: Robert Sanders [Jan 10, 2006] [www.berkeley.edu/news/media/releases/2006/01/10_dust.shtml]
    9. Stardust Comet Sample Program [www.astronautix.com/craft/stardust.htm]
    10 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40507071&format=html[Deep Impact: 1]
    11 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40507151&format=html[Deep Impact: 1]
    12 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40601202&format=html[Stardust Probe: 1]
    13 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40601272&format=html[Stardust Probe: 2]
    14 BBC News: Space Probe Performs Mars Fly-By [Feb 25, 2007]
    15 European Space Agency (ESA) Science & Technology -Rosetta Fact Sheet [Feb 19, 2007]
    16 Europe’s Space Probe Swings By Mars [Feb 25, 2007]
    17 Europe Comet Probe Makes Key Mars Flyby By: David McHugh (Associated Press) [Feb 24, 2007]
    18 Spaceflight Now: Comet-bound Probe Enjoys Close Encounter with Mars By: Stephan Clark [Feb 25, 2007].
    19 SkyNews: Was Hyakutake the Comet of the Century [July 1996] &
    SkyNews: Comet Hale-Bopp [April 1997]
    20 Sky & Telescope: Brightest Comet in 41 Years [April 2007]
    21 BBC News Houston: Asteroid Mission Concept Unveiled By: Paul Rincon [March 14, 2007]

    22. http://www.spacedaily.com/reports/Touchdown!_Rosettas_Philae_probe_lands_on_comet_999.html  [November 12, 2014]

    23.  http://www.spacedaily.com/reports/A_close_up_with_a_comet_999.html  [November 12, 2014]

    24. http://www.spacedaily.com/reports/European_probe_lands_on_comet_fails_to_anchor_999.html  [November 12, 2014]

    25.  http://www.bbc.com/news/science-environment-30034060  [November 13, 2014]

    26.  http://www.spacedaily.com/reports/Philae_to_attempt_comet_drill_mission_scientist_999.html  [November 14, 2014]

    27.  http://www.bbc.com/news/science-environment-30058176  [November 15, 2014]

    28.  http://en.wikipedia.org/wiki/Rosetta_(spacecraft)  [November 15, 2014]

    29.  http://fr.wikipedia.org/wiki/Rosetta_(sonde_spatiale)  [?November 15, 2014]

    30.  http://sci.esa.int/rosetta/14615-comet-67p/  [November 16, 2014]

    31. http://storiesbywilliams.com/2014/09/17/news-from-space-rosetta-maps-comet-surface/

    32.  http://sci.esa.int/rosetta/  ESA Rosetta Website [June 19, 2015]

    33. https://en.wikipedia.org/wiki/Rosetta_(spacecraft) [June 20, 2015]

    34.  http://rosetta.jpl.nasa.gov/  [NASA Rosetta Site]

    35.  http://www.space.com/27697-rosetta-comet-landing-full-coverage.html

    36.  http://blogs.esa.int/rosetta/2015/03/27/cometwatch-around-anubis-and-atum/ [March 21, 2015]

    37.  http://www.telegraph.co.uk/news/science/space/11195744/The-Rosetta-mission-everything-you-need-to-know-about-the-quest-to-catch-a-comet.html  [June 20, 2015]

    38. http://www.spacedaily.com/reports/Rosetta_comet-chasing_mission_extended_to_September_2016_999.html  [June 23, 2015]

    38[a]  http://www.dailykos.com/story/2016/7/1/1544447/-Rosetta-the-Final-Journey  [July 1, 2016]

    39.  https://en.wikipedia.org/wiki/Halley%27s_Comet  [August 19, 2016]

    40. http://www.esa.int/Our_Activities/Space_Science/Rosetta/Rosetta_captures_comet_outburst  [August 25, 2016]

    41. http://phys.org/news/2016-08-rosetta-captures-comet-outburst.html  [August 25, 2016]

    42.  http://blogs.esa.int/rosetta/2016/08/25/rosetta-captures-comet-outburst/ [ August 25, 2016]

    43.  http://www.pbs.org/newshour/rundown/rosetta-first-comet-orbiting-probe-ends-life-smash/  [September 30, 2016]

    44. http://www.esa.int/Our_Activities/Space_Science/Rosetta/Mission_complete_Rosetta_s_journey_ends_in_daring_descent_to_comet  [September 30, 2016]

    45.  http://www.esa.int/Our_Activities/Space_Science/Rosetta  [December 15, 2016]

    ********************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  (December 24, 2016) [R-3]

    Share
  • பெயர் போன எழுத்தாளர்

    நிர்மலா ராகவன்

    எழுத்தாளர் கார்மேக வண்ணன் எழுத்தாளர் ஆனதற்கு முக்கிய காரணம் அவரது பெற்றோர்கள்.
    ‘கருப்பண்ணசாமி’ என்று அவர்கள் வைத்த பெயரால் சிறுவயதில் நண்பர்கள் செய்த கேலியும், அதனால் தான் அடைந்த துயரும் பொறுக்காதுதானே அவர் வாழ்வில் உயர்ந்தார்?

    இப்படியெல்லாம் சொன்னால் உங்களுக்குப் புரியாது. முப்பத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கிப் போவோம், வாருங்கள்.

    அப்போது வெறும் கருப்பண்ணசாமியாக இருந்த நம் கதாநாயகனுக்கு ஆறு வயது. தன்னை ஒத்த நண்பர்கள், ஆறுமுகத்தை ‘ஆறு’ என்றும், ஏழுமலையை ‘ஏழு’ என்றும் அழைக்கும்போது, தன்னைக் ‘கருப்பு’ என்று விளித்ததை வித்தியாசமாக நினைக்கத் தோன்றாத பருவம்.

    அவன் பள்ளியில் சேர்ந்த சில வருடங்களுக்குப்பின், இலக்கணப் பாடத்தை நடத்திய ஆசிரியர் ‘காரணப் பெயர்’, ‘இடுகுறிப் பெயர்’ என்ற பதங்களை விளக்க முயன்றபோதுதான் வினை பிறந்தது.

    “ஊறும் காய் என்பது ஊறுகாய் ஆயிற்று,” என்று புத்தகத்திலிருந்த உதாரணத்தை விளக்கியதோடு நில்லாமல், தன் சொந்தக் கற்பனையையும் சிறிது கலந்துகொண்டார் அவர். “இதோ நம்ப கருப்பண்ணசாமியை எடுத்துக் கொண்டால், பிறந்தபோது இவன் கருப்பாக இருந்ததால், இந்தப் பெயரை இவனுக்குச் சூட்டி இருக்கிறார்கள். ஆக, இதுவும் ஒரு காரணப் பெயர்தான்!”

    என்னமோ தானே நேரில் வந்து, அவனுடைய பெயர்சூட்டு விழாவை நடத்தி வைத்திருந்ததுபோல் அளந்தார் வாத்தியார். தனக்கே தெரியாமல் தன்னுள் இவ்வளவு நகைச்சுவை உணர்வு இருந்திருக்கிறதே என்ற பூரிப்பில் அவர் தொந்தி குலுங்கச் சிரித்தார்.

    அவருடைய அடிவயிற்றை இறுக்கியிருந்த பெல்ட் எந்த வினாடியும் அறுந்து, நடக்கக்கூடாதது நடந்துவிடும் என்று பயந்தபடி இருந்த மாணவர்கள், அக்கற்பனையிலும், வாத்தியாரே சிரிக்கும்போது நாமும் சிரிக்காவிட்டால் மரியாதை இல்லை என்ற உசிதத்தாலும் பலக்கச் சிரித்துவைத்தார்கள்.

    அவர்களில் பலரும் கறுப்புத்தான் என்பதால், ‘நல்லவேளை! நம்ப வீட்டில நமக்கு இப்படி ஒரு பேரை வெக்காம போனாங்களே!’ என்ற நிம்மதி அச்சிரிப்புடன் வெளிப்பட்டது.

    கருப்பண்ணசாமிக்குள் வைராக்கியம் பிறந்தது அன்றுதான்.

    ‘நான் தோத்துட்டா, என் பேரை மாத்தி வெச்சுக்கறேண்டா!’ என்று எந்த ஒரு சிறு பந்தயமாக இருந்தாலும் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எப்போதும் சவால் விடுவதை உண்மை ஆக்கிவிட்டால் என்ன?

    ஆனாலும், பணங்காசு செலவழித்து, உற்றார், உறவினர் முன்னிலையில் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற எண்ணுவதே அவர்களுக்குத் துரோகம் இழைப்பதைப்போல் பட்டது.

    உடன்படித்தவர்கள் ‘டேய் கருப்பு!’ என்று விளித்தபோது, முன்போல் யதார்த்தமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. உலகமெல்லாம் கூடி தன்னை மட்டம் தட்டுவதுபோல் இருந்தது.

    பிறருடன் பேசிப் பழகினால், அவர்கள் தன்னை அந்த பாழாய்ப்போன பெயரால் கூப்பிட்டு விடுவார்களே என்று பயந்தவனாகத் தனிமையில் இருக்கத் தலைப்பட்டான்.

    எதுவும் செய்யாமல் இருந்ததில் விசனம் அதிகமாகவே, அந்நேரங்களில் எல்லாம் கதைப் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தான்.

    அதிகம் படித்திராத அம்மா, “கண்ட புஸ்தகங்ககளைப் படிச்சுக் கெட்டுப் போகாதேடா!” என்று ஓயாது கண்டித்ததில், அவன் வயதுக்கு மீறிய புத்தகங்களைப் படிக்கும் ஆர்வம் வந்தது.

    புத்தகத்தைக் கையில் எடுத்தாலே தூக்கம் வந்துவிடும், அல்லது கவனம் திசைமாறிவிடும் என்ற பொது நிலை அவன்வரை பொய்த்துப்போய், யாருமே எதிர்பாராதபடி, வகுப்பில் முதல் மாணவனாக வர ஆரம்பித்தான்.

    சகமாணவர்கள் பொறாமை தாங்காது, “காரணப் பெயருன்னா என்னடா?” என்று அவன் காதுபட கேட்டபோதுதான் அவனுக்கு அந்த யோசனை உதித்தது.

    தான் ஒரு எழுத்தாளனாகிவிட வேண்டும்!

    அப்பா, அம்மா வைத்த பெயரை மாற்றி வைத்துக்கொள்ள இதைவிட வேறு சிறந்த வழி கிடையாது. யாரும், எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார்கள். தனக்கும் குற்ற உணர்வு தோன்றாது.

    இந்த எண்ணம் எழுந்தவுடனேயே ஏதோ பெரிய பாவத்தைத் தொலைத்துவிட்டமாதிரி ஒரு நிம்மதி பிறந்தது அவனுக்குள்.

    ‘எதை எழுதுவது?’ என்று யோசித்து, ஒன்றும் பிடிபடாமல், அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம், இப்போதைக்கு முக்கியமான விஷயம் புனைப்பெயர்தான் என்று தீர்மானித்தான். புனைப்பெயரில் இன்னொரு சௌகரியம். எழுதுவது சற்று முன்னே பின்னே இருந்தாலும், தான்தான் அது என்று பிறருக்குத் தெரியாமல் போய்விடும்.

    அடுத்த சில மாதங்களை வாசகசாலையில் கழித்தான் கருப்பண்ணசாமி. கேட்டவர்களிடம், ‘ஆராய்ச்சி,’ என்றான்.

    எல்லாம் புனைப்பெயர் ஆராய்ச்சிதான். அந்தத் தேடுதலில் சில உண்மைகளைக் கண்டுபிடித்தான்.

    சில எழுத்தாளர்கள் தம் மனைவியின் பெயரில் ஒளிந்திருந்தார்கள். ‘பாவம், பெண்!’ என்று பத்திரிகை ஆசிரியர்கள் சற்றே மட்டமான படைப்பையும் வெளியிட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கையோ, என்னவோ!

    ஒருவேளை, மனைவியின் விருப்பு வெறுப்பில் அவ்வளவு தூரம் ஒன்றிப்போய், தாம் வேறு, அவள் வேறு என்ற வித்தியாசம் எல்லாம் இல்லை என்பதை உலகிற்கு உணர்த்தவோ என்னவோ என்றுகூட அவன் நினைத்தான்.

    தன்னால் அப்படிச் செய்ய முடியாது, தனக்கு ஒரு மனைவி வருவதற்குப் பல வருடங்கள் இருக்கின்றன என்பதோடு, ‘மிஸஸ். கருப்பண்ணசாமி’ என்பதாகத் தன் பெயரை மாற்றிக்கொள்ள எவளும் வலிய வரமாட்டாள் என்று தோன்றியது. அப்படி வருபவள் அவனுக்கு வேண்டவும் வேண்டாம். சுயகௌரவம் உள்ளவளாக இருக்கவேண்டும் அவனுக்கு வாய்ப்பவள்.

    இன்னும் சிலர், ‘நான் ஆண்மை பொருந்தியவன், என் மனைவியை நேசிப்பவன்’ என்று தங்கள் புனைப்பெயரால் விளம்பரப்படுத்திக் கொண்டார்கள். அதாவது, கொண்டவள் ஜானகியாக இருந்தால், இவன் ‘ஜானகிமணாளன்’ அல்லது ‘ஜானகிப்ரியா’ என்று மாறினான்.

    இலக்கியத் துறையில் புகழ் வாய்ந்தவர்கள் மறைந்தபிறகு, பூவுடன் சேர்ந்த நாரும் மணம் பெறலாமே என்ற நப்பாசையுடன் தத்தம் பெயருடன் ‘தாசன்’ என்று இணைத்து, அந்த இரவல் சுகத்தில் புகழ் தேடியவர்கள் கண்ணில் பட்டார்கள். இப்படியாகத்தானே கருப்பண்ணசாமியின் ஆராய்ச்சி தொடர்ந்தது.

    ‘அது ஏன் ஒளவையாருடன் எந்தப் பெண் எழுத்தாளரும் ஒட்டிக்கொள்ளவில்லை?’ என்ற் சிலகாலம் யோசித்ததில், ‘தாசன்’ என்ற வார்த்தைக்குப் பெண்பால் ‘தாசி’. அது அவ்வளவு மரியாதைப்பட்டதாக இருக்காது என்பது புரிந்தது.

    இந்த ரீதியில் எழுத்தாளர்களுடைய பெயர் வண்ணங்களை ஆராய்ச்சி செய்துவந்ததிலும், ஓயாது படித்ததிலும் கருப்பண்ணசாமியின் வயதும், அறிவும் கூடின. ஆனால், தன் பெயரைப்பற்றிய ஏக்கம் என்னவோ சற்றும் குறையவில்லை.

    இயற்பெயர் பிடிக்காது போனாலும், கன்னத்தில் இருந்த மச்சத்தைப்போல் அதுவும் அவனுடைய ஒரு அங்கமாகிவிட்டது. ‘விரைவில் அதை இழக்கப் போகிறோம்’ என்ற நினைவு எழும்போது சற்று வருத்தம்கூட வந்தது.

    பெயருக்குச் சம்பந்தம் இல்லாத இன்னெரு பெயரை எங்கேயாவது போய்த் தேடுவானேன் என்ற ஞானோதயம் அப்போதுதான் உதித்தது.

    இந்தமாதிரி வேண்டாத ஆராய்ச்சியும், யோசனையும் செய்துகொண்டே இருந்தால், தன் பெயருக்கு ஒரு விமோசனமே கிட்டாது என்று ஒரு நாள் உறைக்க, அண்மையில் இறந்துவிட்ட அவனது அப்பாவின் ஆத்மா சாந்தியடைய, ‘கருப்பு’ என்ற பொருளில் ஏதாவது புனைப்பெயர் வைத்துக் கொள்வதுதான் நியாயம் என்று தோன்றிப் போயிற்று.

    ஒரு விடுமுறை நாளன்று பகலில் அயர்ந்த தூக்கத்தில் இருந்தவன் திடுக்கிட்டு விழித்துக் கொண்டான்.
    ‘படபட’வென்று நிறையபேர் கைதட்ட, “நம்ப கார்மேகவண்ணன் இன்னும் அனேக எழுத்துப் படிவங்களைப் படைத்து நம்மை நீண்ட காலம் மகிழ்விக்க வேண்டும்!” என்று யாரோ ஒருவர் சொல்லி, பொன்னாடை போர்த்துகிறார். இன்னொருவர் முன்னால் வந்து, “நமது கார்மேகவண்ணனின் புகழில் பாதி அவருடைய மனைவிக்குச் சேரவேண்டும். இரவும், பகலுமாக அவர் இலக்கியச் சேவையில் ஈடுபட்டிருப்பது மனைவியின் புரிந்துணர்வால்தான்!” என்று மெச்சுகிறார்.

    இம்மாதிரி பல பாராட்டு விழாக்களில் தான் பேசி இருப்பது நினைவுக்கு வந்தது. தன்னைப் போலவே, விழா நாயகன் தலைமறைந்ததும், ‘இவனெல்லாம் பெரிய எழுத்தாளனாம்! இவனுக்கு ஒரு விழா எடுக்கறாங்களாம், வேலையத்தவங்க!’ என்று அனேகமாகச் சொல்லக்கூடும் என்பதும் அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது.

    பொன்னாடைமேல் ஒரு மலர்மாலை விழுகிறது. அதன் கனமானது எழுதி, எழுதி வலிகண்டிருக்கும் அவனுடைய கழுத்தை மேலும் அழுத்த, அந்தப் நோவைப் பெரிதாக மதிக்காது, ஒரு பெரிய எழுத்தாளனுக்கே உரிய அடக்கத்துடனும், கம்பீரத்துடனும், “உங்களைமாதிரி தரமான வாசகர்கள் அமையாவிட்டால் நான் ஏது!” என்று பற்கள் (அவை வெகு வெண்மை) தெரியப் புன்னகைத்து…

    இந்த இடத்தில் கருப்பண்ணசாமி விழித்துக்கொண்டான். சற்றும் எதிர்பாராவிதமாக புனைப்பெயர் அமைந்ததில் அவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

    கார்மேகம். அதாவது கரிய மேகம். அந்த மேகத்தின் வண்ணத்தைக் கொண்டவன் கண்ணன்.

    நினைவுதெரிந்த நாளாகத் தன்னை அவமானப்படுத்திவந்த பெயரை மாற்றினாற்போலவும் ஆயிற்று, கடவுள் பெயரை அடிக்கடி எழுதினால் புண்ணியத்திற்குப் புண்ணியமும் ஆயிற்று.

    நிம்மதி பிறந்தவுடனேயே மறைந்தும் போயிற்று. புனைப்பெயரெல்லாம் சரிதான், அதை வைத்துக்கொண்டு ஏதாவது எழுதித் தொலைக்க வேண்டுமே!

    தன் பெயர் மாற்றத்துக்காக செய்த ஆராய்ச்சிகள், கழித்த ஆண்டுகளையெல்லாம் நினைவில் கொண்டுவர முயற்சித்தான். நாற்பது, ஐம்பது கதைகளைப் படித்து, அதன்பின் அதில் கொஞ்சம், இதில் கொஞ்சம் என்று நிரவினால், ஒன்றாவது தேறாது!

    இந்தக் கற்பனை அளித்த உற்சாகத்தில், ‘கருப்பண்ணசாமி’ விரைவில் மறைந்து, அந்த இடத்தை ‘கார்மேகவண்ணன்’ பிடித்துக் கொள்வதை மானசீகமாகக் கண்டு மகிழ்ந்தான் அவன்.

    பி.கு: இக்கதையால் எவரையும் நோகடிக்க எண்ணமில்லை. நகைச்சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருக்கிறது.

    (தமிழ் நேசன், 1992)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    161224 -Tiruppavai notes 09-lores

    ”செந்திரு(ஸ்ரீதேவி) கோதைக்கு ஸ்ரீமாலைக் காட்ட,
    என்கிறுக்கு கண்ணனிடம் என்றனள், -முந்தினம்(பாகவதக் காலம்)
    வந்தவன் தானென்று எந்திரித்தார் கண்ணனாய்
    நந்தன்சேய் நான்தான் நவின்று”….கிரேசி மோகன்….!

    Share
  • அடியாரேயாயினும் உழைப்போரே உன்னதம் பெறுவர்!

    பவள சங்கரி

    appar_thirunavukkarasar-95x300ஞானசம்பந்தப்பெருமானும், அப்பர் பெருமானும் ஏழாம் நூற்றாண்டின் இடையில் சமக்காலத்தில் வாழ்ந்த திருத்தொண்டர்கள். இவர்கள் இறை வழிபாட்டிற்காக திருவீழிமிழலையில் தங்கியிருந்த காலத்தில் அந்த நாட்டில், மழையின்மைக் காரணமாக பெரும் பஞ்சம் ஏற்பட்டு, உயிர்கள் அனைத்தும் பசியால் வாடி வருந்தியிருந்தன. அடியார்களும் துயர்மிக உற்ற நிலையில் ஆண்டவனிடம் முறையிட்டு வேண்டினர். இதனையறிந்த திருஞானசம்பந்தப்பிள்ளையார், `கண்ணுதலான் திருநீற்றுச் சார்வினோர்க்கும் கவலை வருமோ?’ என்று மனம் நொந்தவாறே, இறைவனை நினைந்துறுகியவாறே உறங்கச் செல்கிறார். எம்பெருமானார் பிள்ளையின் துயர் பொறுக்கவில்லை போலும்! அவர்தம் கனவில் தோன்றி, மக்கள், மாக்கள் துயர் தீர்க்கும்பொருட்டு ஆலயத்தில் உள்ள கிழக்கு, மேற்கு பலிபீடங்களில் இருவருக்கும் பொற்காசுகள் அளித்துள்ளதாகக் கூறுகிறார். விழித்தெழுந்த ஞானசம்பந்தப்பெருமான், அப்பரடிகளையும் உடன் அழைத்துக்கொண்டு ஆண்டவன் அருளியவாறு பலிபீடம் நோக்கிச்செல்கிறார். கிழக்கு பலிபீடத்தில் சம்பந்தப்பெருமானும், மேற்குப் பலிபீடத்தில் அப்பர் பெருமானும் காசு பெற்று உயிரினங்களின் துயர் துடைக்க மேவுகிறார்கள். அவரவர் திருமடங்களுக்குச் சென்று அடியவர்களுக்கும் அமுதளிக்க விரைகின்றனர். இங்குதான் வினை விடுபடுகிறது. அப்பர் பெருமானின் திருமடத்தில் விரைவாகவும், சம்பந்தப்பெருமானின் திருமடத்தில் காலம் தாழ்ந்தும் திருவமுது அளிக்கப்படுகிறது. இதையறிந்த சம்பந்தப்பிள்ளையார் அதற்குரிய பொறுப்பாளர்களை அழைத்து காரணம் வினவுகிறார். அவர்களும், சம்பந்தப்பெருமானின் பொற்காசுகள் மாற்று குறைந்ததாக இருந்ததால் அதனை மாற்றி பொருட்கள் பெறுவதில் தாமதம் ஏற்படுவதே காரணம் என்று கூறுகிறார். ஓய்வின்றி உழவாரப்பணி செய்து நொந்து போயிருக்கும் அப்பர் பெருமானாருக்கு மேலும் துன்பம் நேரக்கூடாது என்றுதானோ நல்ல காசுகளை அளித்துள்ளார் எம்பெருமானார் என்று உணர்ந்த சம்பந்தப்பிள்ளையார் மறுநாள் ஆலயம் சென்று `வாசிதீரவே காசு நல்குவீர்` என்ற கீழ்கண்ட திருப்பதிகம் பாடி இறைவனை மனம் குளிரச்செய்து தாமும் நற்காசினைப்பெற்று அடியார்களுக்கு விரைவில் தக்க சமயத்தில் உணவளித்து மகிழ்வித்து தாமும் மனமகிழ்ந்தார். இறையருளால் சில நாட்களிலேயே மழைவளம் பெற்று நாடும் செழித்து, பஞ்சமும் நீங்கி, மக்களும் நலமாக வாழ்ந்தனர்.

    வாசிதீரவே, காசு நல்குவீர்;sambandhar1
    மாசுஇல் மிழலையீர்; ஏசல் இல்லையே

    இறைவர் ஆயினீர்; மறைகொள் மிழலையீர்;
    கறைகொள் காசினை, முறைமை நல்குமே

    செய்யமேனியீர்; மெய்கொள் மிழலையீர்;
    பைகொள் அரவினீர்;உய்ய நல்குமே

    நீறு பூசினீர்; ஏறு அது ஏறினீர்;
    கூறு மிழலையீர்;பேறும் அருளுமே

    காமன்வேவ, ஓர் தூமக் கண்ணினீர்;
    நாம மிழலையீர்; சேமம் நல்குமே

    பிணிகொள் சடையினீர்; மணிகொள் மிடறினீர்;
    அணிகொள் மிழலையீர்; பணிகொண்டு அருளுமே

    மங்கை பங்கினீர்; துங்க மிழலையீர்;
    கங்கை முடியினீர்; சங்கை தவிர்மினே

    அரக்கன் நெரிதர, இரக்கம் எய்தினீர்;
    பரக்கும் மிழலையீர்; கரக்கை தவிர்மினே

    அயனும் மாலுமாய் முயலும் முடியினீர்;
    இயலும் மிழலையீர்; பயனும் அருளுமே

    பறிகொள் தலையினார், அறிவது அறிகிலார்;
    வெறிகொள் மிழலையீர்; பிரிவது அரியதே

    காழிமா நகர் வாழி சம்பந்தன்,
    வீழிமிழலை மேல், தாழும் மொழிகளே

    பி.கு. செய்தொழில்களில் இலாபம் பெருகுவதற்கும், கடினமான வழக்குகளிலும் வெற்றி பெறுவதற்கும் ஓதவேண்டிய பதிகம் இது!

    Share
  • மார்கழி மணாளன் (9)

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருப்பார்த்தான்பள்ளி  – அருள்மிகு தாமரையாள் கேள்வன் பெருமாள் 

     ag

    காவிரியைக் கமண்டலத்தில் கசிவின்றி அடைத்தவன்

    கயிலையின் திருமணத்தைப் பொதிகையிலே பார்த்தவன்

    கரையில்லா ஆர்வத்துடன் கலைகளெல்லாம் கற்றவன்

    கடுந்தவத்தில் தனைமறந்து மகிழ்ந்தான் அகத்தியன்

     

    பார்த்தனுக்கே பருகிடவே நீரின்றிப் பார்த்தவனும்

    படைத்தவனை வேண்டிடவே பரிந்துரை செய்திடவே

    பங்கயச் செல்வியின் பார்வையுடை கோவிந்தன்

    பாண்டவனுக்கு  அருளிடவே பாற்கடலைத் துறந்தான்

     

    போர்முனை எதிரிகள் போலவரும் உணர்வுகள்

    வாள்முனை அச்சத்தில் வளர்ந்திடும் கனவுகள்

    தேர்முனை பார்த்தவன் திசையின்றி நின்றிடவே

    ஊழ்வினை களைந்திட உத்தமனை அழைத்தானே !

     

    போர்முனையில் அறம்காக்கக்  கீதையைச் சொன்னவன்

    விதிமுனையில் மனம்காக்க வாழ்க்கையைச் சொன்னான்

    தோள்முனையில் துளிர்த்திட்ட வல்லமைகள் வீழ்கையிலே 

    வாழ்முறையில் வளம்காக்க மறைசொன்னான் மாதவனே !

     

    “பொருளில்லா வாழ்க்கைக்குப் புவியில் இடமேது

    பொருள்மட்டும் தேடுகின்ற மனத்திற்குப் புகலேது

    புகலொன்றே பார்த்தா பொற்பாதம்! இணையேது

    புரிந்தாலே மன்னுயிர்க்கு மண்ணுலகில் முடிவேது ?

     

    விண்ணெல்லாம் அலைந்தாலும் விடையறியா அமரர்கள்

    மண்ணெல்லாம் அலைந்தாலும்  மனதறியா மாந்தர்கள்

    கண்ணெல்லாம் ஒளியாக்கிக்  கல்லுள்ளே பார்த்தாலும்

    தன்னுள்ளே வைத்திருந்தால்  த தவறாமல் வந்திடுவேன்! ”

     

    இலையென்று சொல்லாத இயல்பென்றும் உனக்குண்டு

    நிலைகெட்ட மனிதரிலும் கலைபடைக்கும் திறனுண்டு

    விலையில்லா அருள்தந்து வழிகாட்டும் வேங்கடவா

    விதையிட்ட பொருப்பேற்று விதிக்காக்க வருவாயோ ?

     

     

     

     

     

     

    Share
  • ’’பெருமாள் புகழ்’’….!

     

    தந்ததன தந்தனம் தந்ததன தந்தனம்
    தந்ததன தந்தனம் – தந்ததான

    “சஞ்சலமொ ழிந்திடும் சிந்தைமவு னம்பெறும்
    செங்கிரிய மர்ந்திடும்-வெங்கடேச
    பின்புரம ணன்சொலும் அந்தர்முகம் சென்றிடும்
    அன்பரின கந்தையுளம்-எந்தநாளும்
    அஞ்சலென சென்றமரும் அந்தரிசி வன்பதம்
    அந்தவழி சென்றிடும்-நெஞ்சுதாராய்
    சங்கொடுசு ழன்றிடும் செந்திகிரி தண்டமும்
    நந்தகிவில் தங்கிடும் -அங்கையோடு
    பஞ்செனப டர்ந்திடும் செந்திருக ரம்தரும்
    சங்கமசு கம்பெரும் -ரங்கநாதா
    வந்திரணி யன்பலம் வென்றவனை கொன்றிடும்
    கம்பமுறை சிங்கமுகம் -கொண்டமாலே
    தஞ்சமென வந்துதன் செஞ்சரண்அ டைந்ததும்
    தம்பிமுறை தந்திடும் -அஞ்சனாவின்
    பஞ்சமுகம் கொண்டவன் இந்திரியம் வென்றவன்
    சம்புஅனு மன்தொழும் -எம்பிரானே”….கிரேசி மோகன்….!

    அனுமனாய் வந்தது -ருத்திராம்ஸ சம்பு….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    161223 - Tiruppavai notes 08 -wcol-lores
    161223 – Tiruppavai notes 08 -wcol-lores

    ”கேசி குதிரையைக் கொண்டவர்(பாரதத் தேர்குதிரையாக), மல்லரை
    ஆசீர் வதிக்க அடிமிதித்தார் -க்ரேசி
    கிருஷ்ணனை ஸ்ரீவில்லி கோதையார் பாடும்
    விருஷ்ணி குலக்கொழுந்தை வாழ்த்து’’….கிரேசி மோகன்….!

    Share