Year: 2016

  • காதல் ரோஜாவே

     

                      ரா.பார்த்தசாரதி

     

    முள்ளிடையே  காணும்  அழகிய  ரோஜாப் பூவே

    எப்படி பூத்து அழகாய்  தலையசைக்கின்றாள்

    வண்டுகள் சொன்ன  புகழ்ந்துரையா! புகழுரைகூறும் யா !

    ரோஜா மலரே நீ கொண்ட  நாணத்தினாலா !

     

    காதலன்  கொடுத்த  காதல் மலர் அடையாளத்திலா ,

    அவள் கூறும் இனிமை பேச்சினிலா

    காதலியின்  மயக்கும் வேல்விழிப் பார்வைலா

    தேவதையே ! என் நெஞ்சத்தின்  நினைப்பிலா !

     

    இளமைக்  காதல்,   இணைவதும் இயற்கையே

    காதலன் வர்ணிக்கும் வார்த்தைகள் செயற்கையே

    காதல் என்பதே  இரு  விழிகளின்  நேசமே

    அதுவே அவர்கள் வசிக்கும் காதல் தேசமே !

     

    சூரியனைக்  கண்டால்  தாமரை  மலருமே

    சந்திரனைக் கண்டால்  அல்லி  மலருமே

    இயற்கையான  ஒன்று, உள்ளம் கவர்வதும் ஒன்று

    உள்ளம் கவர்ந்தவனை கண்டால் முகம் மலர்வது என்று !

     

    காதலில்  கனவுகள்  மாறி, மாறித்  தோன்றும்

    காதலியை நினைந்து  மனம்  மகிழும்

    விழித்தவுடன்  தெரியும் எது  உண்மையென்று

    மனம் நினைத்தாலே காதலியை  அழைக்கும் என்று !

     

    காதல்  ரோஜாவே,  காதல் கண்மணியே 1

    ரோஜா இதழ் என  நின் மேனி  கண்டேனே

    கோவைப் பழம் போன்ற நின் உதட்டினை  கண்டேனே !

    உன் முல்லைச் சிரிப்பினிலே நான் தொலைந்துபோனேனே !

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 229

    மலர் சபா

    மதுரைக் காண்டம்அழற்படு காதை

    இல்லறம் வழுவாத மகளிர்

    தம் இல்லத்துக்கு வருகின்ற
    விருந்தினர்களைப் பேணி,
    ஒவ்வொரு நாளும் இல்லத்து அறங்கள்
    தவறாமல் செய்து வருகின்ற,
    பெரிய மனைகளில் வாழும் மகளிர் fire
    மிகுந்த மகிழ்ச்சி அடைந்து,
    “அழகான அணிகள் அணிந்த மார்பினை உடைய,
    கணவனை இழந்த,
    அந்த இழப்புக்குக் காரணமாய் விளங்கிய
    பாண்டிய மன்னனை வென்ற,
    சிறப்பான அணிகளை அணிந்த கண்ணகி,
    தன் கொங்கையால் செய்த
    இந்தப்பூசல் முறையானது” எனக்கூறி
    அவர்களும் கோபப்பட்டு,
    பற்றி எரியும் தீக்கடவுளையும்
    கைதொழுது வணங்கி நின்றனர்.

    நாடக மடந்தையர்

    ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்
    கற்றுத் தேர்வுபெற்ற இசையின் இயல்பறிந்து,
    அதற்கேற்ப நடனம் ஆடும் மகளிர்
    வாழ்கின்ற வீதிகளிலும் தீ பரவியது.
    மத்தளம், முழவு, இசையைத்
    தாழ்ந்து ஒலிக்கச் செய்யும்
    இனிமையான புல்லாங்குழலும்,
    பண் மற்றும் அதன் வகைகளை
    இசைக்கச் செய்யும் யாழ்ப்பாடல்
    இவற்றின் துணைகொண்டு நடிக்கின்ற நாடக மகளிர்,
    தாம் ஆடுகின்ற அரங்குகளில் தீ பரவியது கண்டு,
    அரங்குகளை விட்டு வெளியேறி,
    கண்ணகியைக் கண்டு,
    “இம்மூதூர் மதுரைக்கு வந்து
    தன் கணவனை இழந்து,
    ஆராயாமல் தன் செங்கோல் வழுவிய
    பாண்டிய மன்னனைத்தன் சிலம்பின் மூலம் வென்று
    இந்த ஊரை நெருப்புக்கிரையாக்கிய
    இவள் எந்நாட்டினளோ?
    யாருடைய மகளோ?”
    என அஞ்சி இரக்கப்பட்டனர்.

    ***

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • தொல்காப்பியமும் புதுக்கவிதையும்

    -முனைவர் மா.சியாமளாதேவி

    படைக்கப்படுவன படைப்பு என்பது போல செய்யப்படுவன செய்யுள் எனக்கொள்கின்றது தொல்காப்பியம். இலக்கியக்கோட்பாடுகளைச் செய்யுளியல் ஆழமாகவும் அகலமாகவும் கூறுகின்றது. செய்யுள் என்ற சொல் இன்றைய இலக்கிய வழக்கில் பாட்டினை மட்டும் உணர்த்துவதாக உள்ளது. தொடக்க வகுப்பு முதல் பட்டப்படிப்புவரை உள்ள தமிழ்ப்பாட நூல்கள் பாடற்பகுதிகளைச் செய்யுட்பகுதி என்று சுட்டுகின்றன. இந்த வழக்கு இடைக்கால நூல்களிலும் காணப்படுகின்றன. ஆனால் தொல்காப்பியம் செய்யுள் என்ற சொல்லை இலக்கிய வகை அனைத்திற்கும் பொதுவான சொல்லாகவே பயன்படுத்துகிறது.

    வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எனவும்
    எழுநிலத்து எழுந்த செய்யுள் தெரியின்
    அடிவரை இல்லன ஆறு என மொழிப

    எனவும் கூறப்படும் நூற்பாக்கள் இதனை உணர்த்தும்.

    எழுநிலமாவன பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்பன. அவற்றுள் பாட்டு ஒழிந்த ஆறும் அடிவரையறை என்பர்.எனவே செய்யுள் என்ற சொல் பாட்டு முதலிய ஏழு வகையினையும்  உணர்த்தும் பொதுச்சொல் ஆகும். அது பாட்டை மட்டும் உணர்த்தாமல் படைப்பிலக்கிய வகைகளாகிய உரைநடை, நூற்பா முதலிய பிற வகைகளையும் அடக்கியுள்ளது. இதனால் கவிதை, கதை, மருத்துவம், மெய்யியல் முதலியவற்றைப் பாட்டிலும், உரைநடையிலும் எழுதலாம் என்பது புலனாகிறது. அதனால் பண்டைய மருத்துவம், மெய்யியல் முதலியன பாட்டு வடிவில்  எழுதப்பட்டதையும் அறியலாம்.

    இன்றைய புதுக்கவிதை பாட்டு என்ற செய்யுள் வகையைத் தவிரப் பிற உரைநடை, நூற்பா, வாய்மொழி,பிசி, அங்கதம், முதுசொல் என்ற அடிவறையறை இல்லாத ஆறு செய்யுள் வகைகளையும் பயன்படுத்திக்கொள்கிறது.

    பாவிற்கும் பாவினங்களுக்கும் அடிப்படையான  அசை, சீர், அடி, தூக்கு, பா, அளவியல் என்ற ஆறு உறுப்புகளும் புதுக்கவிதையில் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், இவற்றின் தாக்கம் ஆங்காங்கே உண்டு.

    மாத்திரை, எழுத்து, இயல், அசை வகை, எனாஅ;
    யாத்த சீரே, அடி, யாப்பு எனாஅ;
    மரபே, தூக்கே, தொடைவகை, எனாஅ;
    …………
    நல்இசைப் புலவர்செய்யுள் உறுப்பு
    எனக்கூறி, வகுத்து உரைத்தனரே

    என்ற நூற்பாவில் கூறப்படும், செய்யுள் உறுப்புக்கள் முப்பத்து நான்கு. இவற்றில் மேற்கூறப்பட்ட அசை முதலான ஆறு உறுப்புக்கள் தவிர பிற 28 உறுப்புக்களும், புதுக்கவிதையில் பயின்று வருகின்றன.

    ஓர் இலக்கியப் படைப்பின் மூலப்பொருள்கள், சொற்கள், கருத்துக்கள் அதனைச் சொல்லும் முறை என்பனவாகும். ஒலிநயமுடைய சொற்கள் படிப்பவனின் மனத்தில் ஏற்ற மாற்றத்தை ஏற்படுத்தி, அவனிடம் தாம் சாதிக்க வேண்டியவற்றைச் சாதித்துக் கொள்கின்றன. தாளம் என்கிற கருவியை வைத்துக்கொண்டு தான் கவிஞன் கேட்போருடைய இருதயத்தைத் தட்டி எழுப்பிப் பாடாகப்படுத்தி விடுகிறான் என்பர். இந்தத் தாளம்  அறியச் சொல்லின் ஓசையை, அதற்கு மூலமான எழுத்தின் ஓசையைக் கணக்கிட வேண்டியுள்ளது. இந்தப் பணிக்குத் துணையாவது மாத்திரை ஆகும்.

    இம்மாத்திரை குறித்தே தொல்காப்பியம் எழுத்ததிகாரம் விரிவாகப் பேசுகின்றது. செய்யுளியலில் செய்யுளுக்குத் தக்கவாறு எழுத்தின் மாத்திரை குறித்துப் பேசுகின்றது.

    பாயிரத்துள்,

    வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
    எழுத்தும் சொல்லும் பொருளும் (தொல்.பாயிரம்)

    ஆராய்தலென்று புகுந்தமையால், எழுத்தினுஞ் சொல்லனும் வழக்கிற்கும் செய்யுட்கும் வேண்டுவன. பொருளதிகாரத்துள்ளும் இதுகாறும் பெரும்பான்மையும் வழக்கிற்கு வேண்டுவன கூறிவந்தான், அப்பொருள்  பற்றிச் செய்யுள் கூறுமாகளின் இவ்வதிகாரத்துட் செய்யுளிலக்கண மெல்லாந் தொகுத்துக்கூறுகின்றான்,

    அவற்றுள்,

    மாத்திரை வகையும் எழுத்து இயல் வகையும்
    மேற்கிளந்தனவேஎன்மனார் புலவர்

    என்ற நூற்பாவிற்கு ‘மாத்திரை’ என்பது எழுத்தை உச்சரிக்கும் கால அளவு என்றும் ‘எழுத்துக்களுக்கு  ஓதிய இசையும் ஒலியும் பற்றிய அளவு’ என்றும் மாத்திரை என்பது எழுத்திற்கோதிய மாத்திரைகளுள் செய்யுளிள் விரவிக்கிடக்கும் அளவை’ என்றும் பொருள் கூறுவர்` பொருளுக்கிசைந்த ஒலிநயத்தைக் கவிஞர்கள் விரும்பிய வண்ணம் அமைக்கும் சுதந்திரம் வசனத்தில் அமைந்து கிடக்கிறது.

    மன வலியுண்டு என்று உரைநடையில் ஓசை பொருட்புலப் பாட்டிற்குத் துணை செய்வதை விளக்குவர்.உரைநடை முதலிய ஆறு அடிவரையறையற்ற யாப்பினைத்தளமாகக் கொண்ட புதுக்கவிதையில் ஒலிநயம் இடம் பெறுவதை,

    கயிறுண்டு உன் கையில்
    வாளுண்டு என் கையில்

    என்ற கவிதையில் காணலாம்.

    எழுத்தின் ஒலி அளவு பற்றிய அறிவு மாத்திரை அளவு பற்றிய அறிவு சொல்லைக் கையாளுவதில் ஒலிநயச் சேர்க்கையில் கவிஞனுக்குக் கைகொடுக்கும்.

    கட்ட வண்டி கட்டிக்கிட்டு
    கல்லப் பயிர ஏத்திக்கிட்டு
    கமிட்டிக்கு விக்க வந்தேன்
    காசு பணம் வாங்க வந்தேன்

    கட்ட(டை) வண்டி, பயிர(ரை) ஐகாரக்குறுக்கம் வந்தன.

    வெள்ளை வேட்டி கட்டினால்
    என்னடா தங்கவேலு….. என்பவர்கள்
    சட்டையோடு பார்த்தால்
    என்னடா என்பார்கள்
    வரலாறு அதிர்ச்சிகள் தருவது

    என்னடா என்பதில் வரும் ஒற்றளபெடை இயற்கை அளபெடை. உரையாடலில் ஓர் எழுத்துக்கு அழுத்தம் தரும்போது ஏளனம், இகழ்ச்சி, செருக்கு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைகிறது. பொருட்செறிவை, உணர்வழுத்தத்தை வெளிப்படுத்தப் புதுக்கவிதை அளபெடையைப் பயன்படுத்திக் கொள்கிறது.

    தமிழ் எழுத்துக்களைச் செய்யுளுக்கேற்ப வகைப்படுத்தும் தொல்காப்பியம், வடமொழி எழுத்துக் குறித்துச் சொல்லதிகார எச்சவியலில் சில குறிப்புகள் தருகின்றது.

    வடசொல் கிளவி வடவெழுத்து ஓரீஇ,
    எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே
    சிதைந்தன வரினும், இயைந்தன  வரையார் 

    வடசொற்கிளவியாவது வடசொற்கே உரியவெனப்படுஞ் சிறப்பெழுத்தினீங்கி இருளர் மொழிக்கும் பொதுவாகிய எழுத்தானியன்ற சொல்லலாம். வடசொல் என்பது ஆரியச் சொற்போலுந் சொல் என்பார் இளம்பூரணார்.

    பீரங்கியாம் பீரங்கி
    பேருபோன பீரங்கி
    பேரம் பேசிச் சந்தையிலே
    பெற்று வந்த பீரங்கி

    எனப் பீரங்கிப் பேர ஊழலைச் சுட்டிக்காட்டி, அரசியல் சிறுமையை விவரிக்கும் போது, புதிய சொல்லாக்கம்- தூய தமிழ்ச் சொல்லாக்கம், கவிதையின் புருட்புலப்பாட்டை முழுமைப்படுத்தும் என்று சொல்ல இயலாது. எனவே, பிற மொழிச்சொல்லை எடுத்தாளும் போது, எழுத்து அமைப்பையும் சொற்பயிற்சியையும் கருத்தில் கொண்டால், மரபுக்கு எதிரான தோற்றம் தராது.

    புரிந்த பின்
    இல்லை கேள்வி

    இந்த இரண்டு வரிக்கவிதை நூற்பா ‘சூத்திரம் போல நின்று பல எண்ணங்களை விவரிக்கின்றது.’ இதில் மோனையும், எதுகையும் நின்று ஒலிநயம் ஏற்படுத்துகிறது.

     

     

    Share
  • ஒளவையார் கண்ட ஆட்சிமுறை

      -பேரா.வி.நாகலெட்சுமி

    பண்டைய தமிழர் ஆட்சிமுறை குடியாட்சி தழுவிய முடியாட்சி. நாடு நல்லமைதி பெற்று மக்கள் இன்புற்று வாழ வேண்டுமானால் அந்நாட்டில் அரசுமுறை சிறந்து விளங்க வேண்டும். ஆட்சியே ஒரு நாட்டை வழிநடத்துகிறது. ஆட்சி சரியில்லாது போனால் அறமோங்காது.  உலகம் மழையை நோக்கி வாழ்வது போல் நாடு அரசனின் செங்கோண்மையை நோக்கி வாழ்கின்றது. ஒளவையாரின் நீதிநூல்கள் வழி ஆட்சிமுறைக் கருத்துக்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

    ஆட்சிமுறை

    நாட்டின் அரசாட்சியை நடத்துபவன் அரசன். அவன் அறநெறி பிழையாது குடிமக்கள் நன்மை பேணி ஆட்சி செய்யக் கடமைப்பட்டவன். மக்களுக்காக ஆட்சி செய்யும் அரசனின் ஆணையின்படி மக்கள் நடக்க வேண்டும். ஆட்சியில் வல்லவன் என்று பெரியோர்கள் போற்றும்படி அரசன் நடந்து கொள்ளவேண்டும்.

     ‘சக்கர நெறி நில் (ஆத்திசூடி.43)

    தக்கோனெனத்திரி (ஆத்திசூடி.54)

    தூக்கி வினைசெய்’(ஆத்திசூடி.59)

    எந்தவொரு காரியத்தையும் முடிப்பதற்குரிய வழியை ஆராய்ந்து செய்யவேண்டும்.

    வினை வலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
    துணை வலியும் தூக்கிச் செயல்” (குறள்.471)

    என்று திருக்குறள் கூறுகிறது.

    அரசனது கடமை

    ஆட்சி செய்பவன் தன்னுடைய நலம் மட்டுமல்லாது உடல் நலத்தையும் எண்ணி எந்தச் செயலையும் செய்யவேண்டும். சுயநலமற்ற சேவையை நாட்டில் உள்ள பலரும் மதித்துப் போற்றுவர். அரசு இருக்கையில் அமர்ந்திருப்பவன் அறிந்து கொள்ள வேண்டியது மக்கள் துன்புற்ற இடத்திற்குச் சென்று அவர்களுக்கு உதவி புரிவதே ஆகும்.

    மலையவும் கடலவும் பண்ணியம்
    ஆறுமுட் டுறாஅ  தறம்புரிந் தொழுகும்
    நாடல் சான்ற  துப்பிற் பணைத்தோட்
    பாடுசா  னன்கலந் தரூஉம்
    நாடுபுறந்  தருத  னினக்குமார் கடனே(பதிற்றுப்பத்து.59:15-19)

    என்று மக்களை ஆளும் மன்னனின் கடமையைப் பதிற்றுப்பத்துக் கூறுகிறது.

    எனவே, ஒளவையாரும் ஆட்சி செய்பவர் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமைகளை மனதிற் கொண்டு,

    தானமது விரும்பு’ (ஆத்திசூடி.55)

    நாடொப்பன செய்’ (ஆத்திசூடி.56)

    கொற்ற வனறிதலுற்றிடத் துதவி’ (கொன்றை வேந்தன்.23)

    என்று கூறியுள்ளார்.

    போர்முறை

    மன்னன் மிகுதியாய்ச் சினம் கொண்டால் இவர் நமக்குத் தொன்று தொட்டுப் பழகி வருபவர் என்பதையும் நிலைநிறுத்தார். இவர் நமக்கு நட்பினர் என்பதையும் பார்க்கமாட்டார். அவையன்றி இவர் நமக்கு உரியவர் என்பதையும் சிறிதும் நினைக்கமாட்டார்.

      “பழமை கடைப்பிடியார் கேண்மையும் பாரார்
       கிழமை பிறிதொன்றும் கொள்ளார்…..
           …………………………..
      ஆர்வலரும் இல்லை அவர்க்கு (நீதிநெறிவிளக்கம்.47)

    ஒளவையும் இதனையே தோல்வியடையக்கூடிய சண்டையாகிய தொழிலைச் செய்யாதே; போர்முனையில் நின்று  கொண்டிருக்காதே; மூர்க்க குணமுள்ளவர்களோடு சேர்ந்து பழகாதே என்றும், தணியாத கோபமானது சண்டையாக முடியும் என்றும்  கூறுகிறார்.

     ‘போர்த்தொழில் புரியேல்’ (ஆத்திசூடி.86)

     ‘முனைமுகத்து நில்லேல்’ (ஆத்திசூடி.91)

    மூர்க்கரோடு இணங்கேல்’ (ஆத்திசூடி.92)

    பகைவனுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்றும், வீரனுடைய கேண்மை கூர்மையான அம்பாகும் என்றும், அரசன் ஒருவனைக் கோபிப்பானேயானால் அவனுக்கு அப்பொழுதே துணையாக வந்து உதவுபவர்கள் கிடைக்கமாட்டார்கள் என்பதனையும்,

    மாற்றானுக்கு இடங்கொடேல்’ (ஆத்திசூடி.88)

    வீரன் கேண்மை கூரம்பாகும்’ (கொன்றை வேந்தன்.84)

    வேந்தன் சீறின் ஆந்துணையில்லை’ (கொன்றை வேந்தன்.88)

    என்று போர்முறைப் பற்றிச்சொல்லிவிட்டுப் போர்புரியேல் என்றும் கூறியுள்ளார் ஒளவையார்.

    அரசர்க்காகாதன

    பிறருடன் சூதாடுதல் தவறான செயலாகும். எனவே, சூதாடுதலை ஒருபொழுதும் விரும்பக்கூடாது.பொருளை அபகரிக்க ஆசை கொள்ளக்கூடாது. அது ஆபத்தாய் முடிந்துவிடும்.

    கொள்ளை விரும்பேல்’ (ஆத்திசூடி.41)

    சூது விரும்பேல்’ (ஆத்திசூடி.48)

    என்கிறார் ஒளவையார்.

    நாட்டை ஆளும் அரசர்க்கு அமையக்கூடாத குணங்களையும் செயல்களையும்,

    போகம் பொருள்கேடு மான்வேட்டம் பொல்லாக்கண்
     சோகம் படுஞ்சூதே சொல்வன்மைசோகக்
     கடுங்கதத்துத் தண்ட மடங்காமை காப்பி
     அடுங்கதமி லேனை யரசு”  (ஏலாதி.18)

    என்று ஏலாதி கூறுகிறது. 

    கல்லா அரசனும் காலனு நேரொப்பர்
    கல்லா அரசனிற் காலன் மிகநல்லன்
    கல்லா அரசன் அறம்ஓரான் கொல்என்பான்
    நல்லாரைக் காலன் நணுகநில்லானே

    என்று நாலடியார் எடுத்துக்காட்டுகிறது.

    மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
    மன்னனில் கற்றோன் சிறப்புடையார் மன்னற்கு
    தன் தேசமல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
    சென்ற விடமெல்லாம் சிறப்பு”  (மூதுரை.26)

    என்று அரசனுக்குக் கல்வி இன்றியமையாததொன்றாகும் என்கிறார் ஒளவையார்.

    கொடைத்தன்மை மாறாதவர்

    அரசர்கள் தத்தம் செல்வத்திற் குறைந்தவராயினும் அவ்வறுமையினால் மன ஊக்கத்திலும் கொடைத்தன்மையிலும் குன்றமாட்டார்கள்.

    “…………………..


    தனஞ்சிறிய ராயினும் தார்வேந்தர் கேட்டால்
    மனஞ்சிறிய
    ராவரோ மற்று” (மூதுரை.28:3-4)

    நாட்டாட்சி மக்கள் நன்மைக்காக இயங்க வேண்டுமெனின், புலவர்களே நாட்டையாள வேண்டும்; அல்லது மன்னர்கள் புலவர்களாதல் வேண்டும் என்றார் மேனாட்டறிஞர் ஒருவர். புலவர்கள் அரசாளும் வாய்ப்பைப் பெற்றிலர். ஆனால், மன்னர்கள் புலவர்களாக இருந்தார்கள். ஆதலின் அறநெறியிற் சென்ற அவர்கள் ஆட்சி எவரும் போற்றும் நிலையில் இருந்தது. அரசன் தன் கடமையில் தவறாது போர்முறையில் வழுவாது கொடைத்தன்மை குன்றாது அக்காலச் சூழ்நிலைகட்கு ஏற்பச் செய்து மக்களைப் புரந்து மாண்புற்றனர்.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் … (34)

    நிர்மலா ராகவன்

    சமமாக நடத்த முடியுமா?

    %e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-2
    சில பெற்றோர் , `நான் என் குழந்தைகள் மூவரையும் சமமாக நடத்துகிறேன்!’ என்று பெருமையாகக் கூறுவது நடக்காத காரியம். ஏனெனில், முதலாவதாகப் பிறந்த குழந்தையின் குணாதிசயங்கள் அதற்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளிடமிருந்து வேறுபடும். இது இயற்கை நியதி. அத்துடன், வயதுக்குத் தகுந்தாற்போல் திறமைகளும் இருக்குமே! இவர்கள் அனைவரையும் சமமாக நடத்த எப்படி முடியும்?

    வயதுக்கேற்ற வேலை

    ஒரு குடும்பத்தில் குழந்தைகளை நடத்துவது — வீட்டு வேலையோ, பாராட்டோ, தண்டனையோ –அவரவர் வயதுக்கும் திறமைக்கும் ஏற்றபடி இருக்கவேண்டும். உதாரணமாக, எட்டு வயதான மகன் தான் சாப்பிட்ட தட்டைத் தானே கழுவுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அது அவன் வேலை என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவனுடைய மூன்று வயது தம்பிக்கோ, தங்கைக்கோ அது கடினமான வேலை. அதற்குப் பதிலாக, அவர்களால் எளிதில் செய்யக்கூடிய வேலைகளைக் கொடுத்தால், அவர்களுக்கும் சுயமதிப்பு பெருகும்.

    `அப்படி என்ன வேலை இருக்கிறது?’ என்கிறீர்களா? காலணிகளை வரிசையாக அடுக்கிவைப்பது, சப்பாத்தி, தோசை போன்றவற்றை ஒரு தட்டில் போட்டு அவர்களிடம் கொடுத்து, பிறருக்குப் `பரிமாற’ச் செய்வது இப்படி எதையாவது கொடுத்தால், மிகப் பெருமையுடன் செய்வார்கள். `எவ்வளவு சமர்த்தா வேலை செய்யறது, பார்!’ என்று பாராட்டிவைத்தால், எந்த வயதிலும் பொறுப்பு, வேலை என்றால் அஞ்சி ஓடமாட்டார்கள்.

    பாராட்டால் மனவலிமை

    வயதுக்கும் திறமைக்கும் ஏற்றதாக இல்லாத பொறுப்புகளைச் சிறுவர்களுக்குக் கொடுக்கும்போது தவறுகள் நிகழலாம். தவற்றைப் பெரிதுபண்ணாது, அல்லது குற்றம் சாட்டாது, அடுத்த முறை அதே காரியத்தை எப்படிச் செய்தால் சரியாக அமையும் என்று விளக்கினால், தவறோ, ஏமாற்றமோ விளைந்தால் தாங்கும் மனவலிமை வரும். பொறுப்பாக முனைந்து செய்ததற்காகப் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

    பாரபட்சம் ஏன்?

    ஆண், பெண் என்ற பாரபட்சம் காட்டாமல் வளர்த்தல் அவர்களுடைய பிற்காலத்திற்கு நல்லது.
    பல இல்லங்களில், `என்ன இருந்தாலும், நீ ஒரு பொண்ணு! ஒன் தம்பி ஆம்பளை! அவனோட நீ போட்டி போடலாமா?’ என்று கூறிக் கூறியே பெண் குழந்தைகளை வளர்த்துவிடுகிறார்கள்.

    இதனால், தாங்கள் ஏதோ ஒரு விதத்தில் தாழ்ந்தவர்கள் என்ற மனப்பான்மை பெண்கள் மனதில் சிறுவயதிலேயே விதைக்கப்பட்டு விடுகிறது. துணிச்சலாக எந்தக் காரியத்தைச் செய்யவும் தயங்கி, `இப்படிச் செய்வதால் நமக்கு அவப்பெயர் வந்துவிடுமோ?’ என்று யோசிக்க முனைகிறார்கள்.

    வேறு சில இல்லங்களில் இதற்கு நேர் எதிரிடையான வளர்ப்புமுறை. `சில காலம்தான் நம்முடன் இருக்கப்போகிறாள். கல்யாணமானால், எப்படியெல்லாம் கஷ்டப்பட நேரிடுமோ!’ என்று, பெண்களுக்கு நிறைய சுதந்திரமும் சலுகையும் கொடுத்து வளர்ப்பார்கள்.

    ஆனால், திருமணமானபின்னரும் அவள் விரும்பியதெல்லாம் கிடைக்கும், அவளது தனித்துவத்திற்கு மதிப்பு கிடைக்கும் என்பது உறுதியில்லை.

    பிறர் பாராட்டியபோது பல வெற்றிகளைப் பெற்றவள், இப்போது அடுக்கடுக்காக தோல்வியைச் சந்திக்கிறாள். அப்போது, `பிறந்த வீட்டில் மகிழ்ச்சியாக இருந்தோமே! இப்போது என்ன ஆகிவிட்டது?’ என்ற குழப்பமும் வருத்தமும்தான் மிஞ்சும். இளம் வயதில் குடும்பத்தினர் அளித்த துணிவு கைகொடுக்க, மீண்டும் எழ வாய்ப்பிருக்கிறது.

    வேலையில் என்ன வேற்றுமை?

    `இது ஆணின் வேலை, இது பெண்ணின் வேலை’ என்ற பாகுபாடு இக்காலத்திற்கு ஏற்றதல்ல. இருவருமே கல்வி பயில்கிறார்கள், வெளிவேலைக்குப் போகிறார்கள். ஆகையால், சிறுவயதிலிருந்தே எளிதான வீட்டுக்காரியங்களில் இருபாலரையும் ஈடுபடுத்தினால், அவர்கள் சுதந்திரமாக வாழப் பழகிக்கொள்வார்கள்.

    சில சமயம், `நான்தான் வேலைக்காரியா?’ என்று முரண்டு செய்வார்கள் சிறுவர்கள்.
    `நான்தானே தினமும் சமைக்கிறேன்! நான் என்ன, சமையல்காரியா?’ என்று கேட்டு அவர்களைச் சிரிக்க வைத்துவிட்டு, `நம் வீட்டில் வேலை செய்தால் அதில் தவறோ, கேவலமோ இல்லை,’ என்று புரிய வைக்கலாம்.

    இதனாலெல்லாம் பெரியவர்கள் அவர்களைத் துன்புறுத்துகிறார்கள் என்பதில்லை. பிற்காலத்தில் அவர்களுக்கு நன்மையாகத்தான் முடியும்.

    கதை 1

    எங்கள் குடும்ப நண்பரான இஸ்மாயில் குழந்தை வளர்ப்பை மனைவிடம் விட்டிருந்தார். அசிரத்தையால் அல்ல; அது அவளுடைய பொறுப்பு, நாம் குறுக்கிடுவது நாகரீகமாகாது என்ற பெரிய மனதுடன்.

    இஸ்மாயில் அரசாங்க நிறுவனம் ஒன்றில் பெரிய அதிகாரி. மனைவியோ அதிகம் படிப்போ, குழந்தைகளின் மனோபாவத்தைப் புரிந்துகொள்ளும் திறமையோ இல்லாதவள். `என் குழந்தைகளெல்லாம் ரொம்ப வீக்!’ என்று, என்னைப் பார்க்கும்போதெல்லாம் அரற்றுவார் நண்பர்.

    `எதை ஆரம்பித்தாலும் பாதியில் விட்டுவிடுகிறான்!’ என்று பதினேழு வயதான கைருல்லை என்னிடம் அனுப்பினார். ஏதாவது வேலை கொடுத்தால், நாற்காலியில் சரிந்து உட்கார்ந்துகொள்வான். ஈராண்டுகள் அவனுக்குப் பாடங்களைப் போதிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது எனக்கு.
    கைருல் ஒரு வழியாக பள்ளி இறுதியாண்டுப் படிப்பை முடித்ததும், `அவனுக்கு படிப்பில் கொஞ்சங்கூட பிடிப்பில்லை. சித்திரம் வரைய மிகவும் பிடித்திருக்கிறது. நல்ல திறமையும் இருக்கிறது. அத்துறையில் ஈடுபடுத்தினால், நன்றாக முன்னுக்கு வருவான்,’ என்றேன். என் வார்த்தைகளை மதித்து, மகனை ஃபிரான்சு நாட்டிற்கு அனுப்பினார், அத்துறையில் சிறக்க.

    துணிச்சலான பெண்கள்

    நான் பார்த்தவரை, தற்காப்புப் பயிற்சியைப் பயின்ற பெண்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறார்கள்.

    கதை 2

    எனது பதின்ம வயது மாணவிகளில் ஒருத்தியான ராபியா பிற பெண்களைவிட வெளிப்படையாகப் பேசுவாள். பிற பெண்கள் தம் உடலைக் குறித்து வீண் வெட்கம் கொள்வது ஏன் என்று என்னுடன் கலந்து பேசியிருக்கிறாள். அவள் சிலாட் (SILAT) என்னும் தற்காப்புக்கலையில் சிறந்தவள் என்று பிறகு அறிந்தேன்.

    இம்மாதிரிப் பெண்கள் நளினமாக, ஒரு காலின் முன்னால் இன்னொன்றை வைத்து, நடக்கமாட்டார்கள். தம் வயதொத்த பையன்களுடன் சரிசமமாகப் பழகுவார்கள். இதனால் எல்லாம் பிற பெண்களின் கேலிக்கு ஆளானாலும், அதைப் பொருட்படுத்தமாட்டார்கள்.

    கதை 3

    சுயநம்பிக்கையுடன் வளர்க்கப்பட்ட ஒரு தமிழ்ப்பெண் உயர்கல்வி கற்று, ஓர் அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தாள்.

    அவளைவிட அனுபவம் முதிர்ந்த சீனப்பெண்மணி, “இந்தமாதிரி ஆடைகளையெல்லாம் நீ உடுத்தி வரக்கூடாது!” என்று கண்டித்தாள்.

    “நான் அணிந்திருப்பது பஞ்சாபி ஆடை. இந்தியப் பாரம்பரிய உடை. இது தவறு என்று எழுதப்பட்ட ஏதாவது சட்டம் இங்கு இருக்கிறதா? எனக்கு அதைக் காட்டு!” என்று கேட்க, மற்றவள் வாயடைத்துப்போனாளாம்.

    இச்செய்தி பிற இந்தியப் பெண்களிடம் பரவ, வழக்கமாக குட்டைப்பாவாடையோ, கவுனோ அணிபவர்கள் அதன்பின், `சௌகரியமாக இருக்கிறது!’ என்று ஸல்வார், சூடிதார் போன்ற உடைகளை அதிகம் வாங்கி அலுவலகத்திற்கு அணிந்துவந்தார்களாம்!

    பெண்களை வதைக்கும் ஆண்கள்

    ஆண்பிள்ளையைப் பெற்றெடுத்துவிட்டால், எதையோ பெரிதாகச் சாதித்துவிட்டதுபோல் நினைத்துக்கொள்ளும் தாய்மார்கள் தவறு செய்யும்போது அவர்களைக் கண்டித்து வளர்க்கமாட்டார்கள்.

    வேறு சில பெற்றோர் குழந்தை வளர்ப்பில் அசிரத்தையாக இருந்துவிடுகிறார்கள்.
    இப்படி வளர்க்கப்பட்டவர்கள் தாம் என்ன செய்தாலும் சரிதான் என்ற மனப்போக்குடன் வளர்வதால், பெண்களை வம்புக்கு இழுக்கிறார்கள். அல்லது, பாலியல் ரீதியில் வதை செய்யத் துணிகிறார்கள்.

    கதை 4

    பதினான்கு வயதான மாணவர்கள் தம் நீலப்படப் பழக்கத்தை (!) என்னுடன் பகிர்ந்துகொண்டபோது, வகுப்பில் மாணவர் தலைவன் மட்டும் ஏனோ அவைகளைப் பார்க்க விரும்புவதில்லை என்று அதிசயப்பட்டார்கள். அவனை அழைத்து விசாரித்தேன்.

    `எல்லாம் பெண்களை இழிவுபடுத்துவதாக இருக்கின்றன!’ என்றான்.

    நான் முகமலர்ச்சியுடன், `உனக்கு உன் தாயை ரொம்பப் பிடிக்குமோ?’ என்று கேட்டேன்.
    ஒரு தாய் பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்தால், எந்தப் பிள்ளையும் கெட்டுப்போகமாட்டான்.

    கதை 5

    மலேசியாவில், விவாகரத்து சம்பந்தமான புள்ளி விவரங்களைச் சேகரிக்கவென சம்பந்தப்பட்ட அரசாங்கத்துறைக்குச் சென்றிருந்தேன்.

    அங்கு வேலை செய்த ஒரு மலாய்ப்பெண், `நானும்தான் வேலைக்குப் போகிறேன். ஆனால், வீட்டுக்கு வந்ததும், சமையல், துணி தோய்த்தல், குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கற்றுக்கொடுத்தல் — இவை எல்லாவற்றையும் நானேதான் செய்யவேண்டும். என் கணவரோ, டி.வி பார்ப்பார். இல்லாவிட்டால், தினசரியில் மூழ்கிவிடுவார்,’ என்று என்னிடம் பொரிந்தாள். அப்படியும் மனம் ஆறாது, `அதுதான் என் கணவர்!’ என்றாள் அழுத்தமாக.

    `எல்லாக் கணவன்மார்களும் அதே லட்சணம்தான்!’ என்றாள் பக்கத்திலிருந்தவள், நிராசையுடன் கூடிய பெருமூச்சுடன்.

    இப்படிப்பட்ட மனக்கசப்புடன் இருக்கும் பெண்ணிடம் அவள் கணவன் எப்படி அன்பை எதிர்பார்க்க முடியும்?

    இனி பேச என்ன இருக்கிறது!

    பல இல்லங்களில் முப்பது, நாற்பது வருட இல்லற வாழ்க்கைக்குப்பின், கணவனோ, மனைவியோ, `நாங்க ரெண்டு பேரும் அதிகமா பேசிக்கிறதே கிடையாது!’ என்று சொல்லிக்கொள்வது சர்வசாதாரணமாகிவிட்டது.

    உடலுறவுக்கும், பிள்ளை பெறுவதற்கும்தானா திருமண பந்தம்?

    பெண்களை மதிக்கக் கற்றவர்கள் மனைவியை உற்ற தோழியாக நடத்துவதால், வயதானபின்னரும் அவர்களால் கலந்து பேச முடிகிறது. மனைவியின் வேலைப்பளுவைப் புரிந்து அதைக் குறைக்க தம்மால் ஆனதைச் செய்கிறார்கள். வீட்டுவேலைகளிலும், குழந்தை வளர்ப்பிலும் விரும்பிப் பங்கெடுக்கிறார்கள்.

    அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சிறு சிறு விஷயங்களைப்பற்றிப் பேசினால்தானே உறவு பலப்படும்?

    தொடருவோம்

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் -56

    க. பாலசுப்பிரமணியன்

    கற்றலும் வீட்டுச்சூழ்நிலைகளும் (4)

    education

    “அப்பா” என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி .. பள்ளிக்கூடத்தில் மூன்றாம் வகுப்பில் படிக்கின்ற மாணவர்களுக்கு தாஜ்மகாலைப் பற்றிய ஒரு செயல்பாடு கொடுக்கப்பட்டு அனைத்து மாணவர்களும் அதன் வடிவத்தை தயார் செய்து கொண்டுவரும்படி கூறப்படுகின்றனர். அதன்படி பல மாணவர்களுடைய வீடுகளில் பெற்றோர்கள் அருகில் உள்ள ஒரு கடையில் தயாரிக்கப்பட்ட ஒரு வடிவத்தை விலைகொடுத்து வாங்கி அதை மாணவர்களே தயாரித்ததாக பொய்ப்படுத்தி பள்ளிக்கு எடுத்துச் செல்கின்றனர். ஆனால் ஒரு தந்தை மட்டும் தனது மகனுக்குத் துணையாக அமர்ந்து அவனையே அதைத் தயாரிக்கச் செய்து எடுத்துச் செல்ல உதவுகின்றார். இந்த வடிவம் கடையில் வாங்கிய வடிவத்திற்கு இணையாக இல்லாததாலும் மேலும் அது நிலையாக இல்லாததாலும் நிராகரிக்கப்பட்டு பள்ளி ஆசிரியர்கள் அதைக் கொச்சைப்படுத்தி அந்த மாணவனின் மனம் புண்படச் செய்கின்றனர் திரையில் கதை தொடர்கின்றது..

    ஆனால் இது இன்று பல இடங்களில் நடக்கின்ற உண்மையான நிகழ்ச்சி. பள்ளியிலே கொடுக்கப்படும் பல செயல்கள் தாய் தந்தையாராலோ அல்லது உறவினர்களாலோ செய்யப்பட்டும் அல்லது அருகிலுள்ள கடைகளில் விலைக்கு வாங்கப்பட்டும் இருக்கும் நிலையில் அது மாணவர்களின் கற்றலுக்குச் சான்றாக அமைகின்றது. நர்சரி வகுப்பு முதல் கல்லூரிகளில் ஆராய்ச்சி வரைக்கும் பதிவுகளும், வடிவமைப்புக்களும், கோப்புக்களும் தயாரான நிலையில் விற்கப்படும் வேதனை நிதர்சனமான உண்மை. கல்வியை விற்பனைப் பொருளாக மாற்றப்பட்டதற்கு மறக்கமுடியாத சாட்சி.

    வகுப்பறைகளில் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் சிந்தனைக்குரிய கேள்விகளும், ப்ராஜெக்ட்டுகளும் அவர்களால் செய்யக்கூடியதாகவும் திறமைக்கும் சூழ்நிலைக்கும் உகந்ததாகவும் இருத்தல் மிக்க அவசியம். இந்த வடிவமைப்புக்கள் அவர்களால் சொந்தத் திறனுக்கும் சமூகப் பொருளாதாரத் சூழ்நிலைகளுக்கு ஏற்புடையதாகவும் இருத்தல் அவசியம். இவைகளின் நோக்கம் எந்த குடும்பத்தைச் சார்ந்தவரால் தன் குழந்தைக்கு அதிகமாகச் செலவழிக்க முடியும் என்பதற்கு விளக்கமாக இல்லாமல் எவ்வாறு ஒரு குழந்தையின் ஆர்வத்தையும் சிந்தனையையும் தூண்டுவதற்கு ஏதுவாக இருக்கும் என்பதை யோசித்துக் கொடுப்பது நல்லது.

    வீடுகளில் பெற்றோர்கள் இந்தமாதிரியான நுணுக்கமான செயல்களுக்கு தங்கள் குழந்தைச் செல்வங்களுடன் கூட அமர்ந்து அதன் செயல்பாடுகளுக்குத் துணையாக இருத்தல் அவசியமாகிறது. பொதுவாக இது போன்ற நிகழ்வுகள் அந்த ப்ராஜெக்ட்டுகளின் தரங்களையோ அல்லது மாணவர்களின் சாதிப்புக்களை பாராட்டுவதாக மட்டுமின்றி அவர்களின் முயற்சிகளை பாராட்டுவதை நோக்கமாகக் கொள்ளவேண்டும்.
    பெற்றோர்கள் இந்தத் தருணங்களில் தங்களுக்கு ஏதாவது கருத்துக்களோ அல்லது மனக்குறைகளோ இருந்தால் அவற்றை பள்ளி நிர்வாகத்தோடு பேசுதல் வேண்டும். “அப்பா” படத்தில் காட்டியது போல் பள்ளிகள் செவிமடுக்க மறுத்தால் அதைத் திருத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுவதில் தவறு ஏதுமில்லை.

    தங்களுடைய குழந்தைகள் இளம் வயதிலேயே பாராட்டுக்களுக்கு பாத்திரம் ஆகவேண்டுமென்றோ அல்லது அவர்களுடைய புகைப்படங்கள் பத்திரிகைகளில் வரவேண்டுமென்றோ எதிர்பார்த்து அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது தவறு. பல நேரங்களில் தங்கள் குழந்தைகளை தொலைக்காட்சிகளில் குழந்தை நட்சத்திரங்களாக்க பெற்றோர்கள் நேரத்தையும் பொழுதையும் செலவழித்து அதில் அவர்கள் வெற்றிபெற முடியாது போனால் அவர்களுடைய முயற்சியையும் தன்னம்பிக்கையையும் தாழ்மைப்படுத்தும் செயல்களும் காணப்படுகிறது. இந்தக் காரணங்களினால் சில நேரங்களில் குழந்தைகள் மன அழுத்தங்களுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். சில நேரங்களில் குழந்தைகளுக்குத் திறனோ அல்லது விருப்பமோ இல்லாத பட்சத்திலும் அவர்களைத் தங்கள் தற்பெருமைக்காகவும் கனவுகளின் வெற்றிக்காகவும் ஈடுபடுத்துவதும் வெளிப்படியாகத் தெரிகின்றது. இந்தப் போக்கினைத் தவிர்த்தல் குழந்தைகளின் மன நலனுக்கும் கற்றலின் மேம்பாட்டிற்கும் அவசியமானது.

    எந்த ஒரு செயலிலும் குழந்தைகள் ஈடுபடும்பொழுது அதில் உள்ள தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டுவதை விட அந்தத் தவறுகளுக்கு என்ன காரணம் என்பதைச் சொல்லி அதை எவ்வாறு திருத்திக்கொள்ளவேண்டும் என்று கருத்துச் சொல்லுவது மேன்மையானது. ஒருவேளை, அந்தத் தவறுகளுக்கு காரணங்கள் நமக்குத் தெரியாவிட்டால் அதைப்பற்றி நன்கு தெரிந்தவர்களிடம் பேசி அவர்களுடைய கருத்துக்களை ஏற்று முறைப்படுத்துவதும் ஒரு நல்ல வழியாகும். ஒரு குழந்தையின் மன மற்றும் அறிவு வளர்ச்சிக்கும் நலத்திற்கும் வீட்டுச் சூழ்நிலை ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆகவே இந்தச் சூழ்நிலை அவர்களின் முன்னேற்றத்திற்கு ஏதுவாக அமைதல் மிக அவசியம்.

    (தொடரும்)

    Share
  • அமைப்பியல் ஆய்வுமுறையும்  அறிமுகமும்

    -முனைவர் இரா.தேவேந்திரன்

           மனிதரையும் அவர் சார்ந்த பண்பாடுகளையும் ஆராய முற்பட்டப் போது பல்வேறு ஆய்வுப் போக்குகளை மானிடவியல் அறிஞர்களும் ஆய்வியல் சிந்தனையாளர்களும் உருவாக்கினார்கள். வரலாற்று அணுகுமுறை (Historical Approach), பண்பாட்டுப் பரவல் கோட்பாட்டு அணுகுமுறை (Cultural Diffusionistic Approach), செயற்பாட்டியல் அணுகுமுறை (Functionalistic Approach), அமைப்பியல் அணுகுமுறை (Structural Functionalistic Approach), அமைப்பியல் செயற்பாட்டியல் அணுகுமுறை (Structural Functionalistic Approach) என்பன அவற்றுள் சிலவாகும். மேற்குறித்த அணுகுமுறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொறு காலக்கட்டத்தில் ஒருசில சூழல்களில் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. இவற்றுள் அமைப்பியல் அணுகுமுறை முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வு நிலையாகும்.

     இலக்கியத்திலும், மொழியியலிலும், நாட்டார் பண்பாட்டியலிலும் தொடர்ந்து சமுதாய அரசியல் பற்றிய கருத்துருவங்களிலும் உளவியல் போன்ற பல்துறைகளிலும் செல்வாக்குச் செலுத்துகின்ற அறிவாராய்ச்சி முறையாக அமைப்பியல் காணப்படுகின்றது. அமைப்பியல் ஓர் உலகப்போக்கு எனவும் தத்துவம், பொதுமுறையியல் எனவும் தற்காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக, படிப்பாளிகளுக்கிடையில் இது கவர்ச்சிகரமன ஒரு கொள்கையாகப் பரவிவருகிறது; பரப்பப்பட்டு வருகிறது. அத்தகைய அமைப்பியல் ஆய்வும் தோற்றம் மற்றும் வகைமைப்பாடும் இக்கட்டுரையில் விளக்கப்படுகின்றது.

    அமைப்பியல் தத்துவப்பின்னணி

    கி.பி.17, 18 ஆம் நூற்றாண்டுகளில் மேற்கு நாடுகளின் தத்துவத்தில் பகுத்தறிவுவாதமும், விஞ்ஞான ரீதியான அணுகுமுறையும் ஆளுமை புரிந்தன. வரலாறு, மனிதச்சிந்தனை, சமூகம், இயற்கை ஆகிய அனைத்துப் பகுதிளையும் ஒன்றினைத்து அறிவுபூர்வமாக விளக்கம் கொடுக்கும்போது உலகுநோக்குத் தத்துவங்கள் ஐரோப்பாவில் தோன்றின. அறியொணாவாதம், நம்பிக்கைவறட்சி, அகவயவாதம், பொது உலகநோக்குத் தத்துவங்களை எதிர்ப்பது போன்ற போக்குகள் அதிகமாயின. அத்தகைய போக்குகளைப் பயன்பாட்டுவாதம் (Pragmatism), பாசிட்டிவிசம் (Positivism), இருத்தலியல் (Existentialism), பிராயிடிசம்(Freudism), போன்ற தத்துவங்கள் பிரதிநிதித்துவப்படுத்தின. அமைப்பியல்வாதம் இத்தத்துவங்களின் சூழலில்தான் பிறந்தது. விஞ்ஞான ரீதியாக உலகை அணுகுதல் என்னும் வரையறைகளும் உருவாக்கப்பட்டன. தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட புறவயமான அறிவியல் அணுகுமுறை என கருதப்பட்டது. வாழ்க்கைத் தகவல்களைச் சேகரித்து வகைப்படுத்திப் பகுப்பாய்வு செய்து பொது விதிகளைக்கண்டு அறிவது விஞ்ஞான அணுகுமுறையாயிற்று. தகவல்களால் மெய்ப்பிக்கப் படாதவற்றை விஞ்ஞானம் ஏற்றுக் கொள்ளவில்லை. தர்க்க விதிகளால் விளக்க முடியாதவற்றையும் விஞ்ஞானம் ஏற்றுக் கொள்ளவில்லை. அமைப்பியல் வாழ்க்கைத் தகவல்களின் அடிப்படையிலும் தர்க்கவியல் மூலமாகவும் அறிவுப்பூர்வமான சிந்தனை உலகை அறிந்துகொள்ள முயற்சி செய்தது.

    இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயற்கை அறிவியலில் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து புதிய தத்துவமுறையியல் நடைமுறைகள் தோன்றின. இத்துடன் மானுடஅறிவியல்(Humanitics Anthopiyaloghy)  துறைகளிலும் புதிய சிந்தனைகள் தோன்றின.  ஒவ்வொரு கருத்தையும் விவரங்களையும் தொகுத்தறியும் போக்கு(Empirical descriptive level) மாறித்  தோன்றியது. அதாவது கோட்பாட்டில் கணக்கு முறைகளும், வடிவப்படுத்தும் (Formalisation) முறையும் உள்ளடங்கிய நுண்மையான அமைப்புகளின் உறவுகள் எப்படி உள்ளன என்றும் ஆராயப்பட்டன.(Avtonomova. Natalia, Frenchstructuralism: Mathodo-Logicalnotes,Social sciences, No:4.) தகவல்கள், வகைப்படுத்துதல், பகுப்பாய்வு, தர்க்கவியல், உள்ளார்ந்த பொதுவிதிகளைக் கண்டறிதல் என்பன போன்ற முறைமைகள் புதுபிக்கப்பட்டன. ஆழமான அமைப்புகளைக் கண்டறிய அமைப்பியல் முனைகிறது. உணர்ச்சிகளில் இருந்து முரண்படாத அவற்றிலிருந்து பிளவுப்படாத அறிவார்ந்த தன்மை அமைப்பியலில் பேசப்படுகின்றது.

    இவ்வாறாக 19ஆம் நூற்றாண்டின் அறிவுவாதம் அமைப்பியலால் மீட்டுருவாக்கம் பெறுகின்றது. அமைப்பியல் முதன்முதலில் மொழியியலில் பயன்படுத்தப்பட்டது. இச்சிந்தனைப்போக்கு சில தனித்தனி விஞ்ஞானத் துறைகளில் முதலில் தோன்றியது. சமூகவியல், மொழியியல் ஆகிய துறைகளிலும் இதன் ஆரம்பத்தொடக்கம் காணப்பட்டது. சமூகவியலில் ‘டர்க்கெய்ம்’ என்ற பிரஞ்சு அறிஞரும் மொழியியலில் பெர்டினண்ட்-டி-சசூரும் அமைப்பியலின் முதலாசிரியர்கள் என்று போற்றப்படுகின்றனர். மொழியியலையும், சமூகவியலையும் கடந்து மானுடவியல், உளவியல், புராணவியல், நாட்டார் வழக்காற்றியல், இலக்கியம் போன்ற துறைகளிலும் அமைப்பியல் அணுகுமுறை பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

    அமைப்பியல் நோக்கம்

         அமைப்பியலறிஞர்கள் இலக்கியத்தைத் தனக்குள் பல உறுப்புக்கள் கொண்ட ஓர் ஒழுங்கமைவு என்றனர். அமைப்பு என்பது தன்னளவில் கட்டுக்கோப்பானது; உயிர்த்தன்மை உடையது. அதனுடைய உறுப்புக்கள்  அல்லது பகுதிகள் அந்த அமைப்பின் எல்லைக்குள்ளிருந்தே ஆராயப்படக்கூடியவை. “இலக்கியத்தை (அல்லது எந்தப் பொருளையும்)  ஆய்வுக்கென எடுத்துக்கொள்கின்றபோது அதனைத் தனக்குள் பல உறுப்புகள் கொண்ட குறிப்பிட்ட ஓர் ஒழுங்கமைவுடன் கூடிய ஓர் அமைப்பாக அமைப்பியல் காணுகிறது. அமைப்பு என்பது ஒரு முழுமை இந்த முழுமை அதன் ஒவ்வொரு உறுப்பையும் பகுதியையும் குறிக்கும் என்பர்.”(நடராஜன் தி.சு., திறனாய்வுக்கலை, ப-131) மேலும் இலக்கியத்தை மொழியாகக்கொள்ள வேண்டும் என்று அமைப்பியல்  முன்மொழிகின்றது. “மொழி அமைப்பைக் கண்டறிவது போல் இலக்கியத்திலும் உள்கட்டமைப்பைக் காணுவது அமைப்பியல் திறனாய்வின் நோக்கமாகக் கொள்ளப்படுகின்றது என ந.முத்துமோகன் குறிப்பிடுகின்றார்” (முத்துமோகன். ந, ஐரோப்பிய தத்துவங்கள், ப-196) இலக்கியத்தை மொழியென்று கொள்ளும்பொது அதனை இலக்கிய அலகுகளால் ஆன கட்டமைப்பு என்று அறியமுடிகின்றது. இலக்கியப் படைப்பின் ஓர் அலகு பிற அலகுகளுடன் கொள்ளும் உறவு நிலைத்த உறவல்ல அது மாறுபடும் உறவு. உறவு மாறுபடுவதற்கு ஏற்ப பொருண்மையும் மாறுபடுகின்றது. அமைப்பியல் மொழி, தொன்மம், இலக்கியம் ஆகியவற்றின் உள்ளீடான ஒழுங்கு, முழுமை, கட்டமைப்பு, உருவம் ஆகியவற்றை ஆராய்ந்து, சமூக யதார்த்தத்திலிருந்து இலக்கியத்தைப் பிரித்து வைத்து இலக்கியத்தை இலக்கிய அலகுகளுக்கு இடையிலான உறவுகளாலும், உறவுகளின் கட்டமைப்பாலும் விளக்கிட அமைப்பியல் முனைகிறது.

    அமைப்பியல் சொற்பொருளும் விளக்கமும்

         அமைப்பியல் என்னும் சொல் கட்டமைப்பு, உள்ளடக்கம், ஒட்டுமொத்தம் எனப் பலவாறாகப் பொருள்கொள்ளும் தன்மையுடையனவாக உள்ளது. Structural என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இலக்கியப் பகுதிகளின் ஒன்றுக்கொன்றுள்ள உறவு முறைகளின் தொகுப்பு  என்று இலக்கிய அகராதிப் பொருள் கூறுகின்றது (Alex preminger, klarnke, J.Frank and Hardison (Ed) Princeton Encyclopedia of Poetry and Poetics, p.812)  அமைப்பு என்பது பொருள் நிறைந்த மொழிக்கூறுகள் ஒன்று சேர்ந்து ஒரு வடிவத்தை உருவாக்குகின்றது. ஒரு மொழியின் ஒலிகள், இலக்கணக்கூறுகள், சொற்கள் முதலியவற்றின் அமைப்பை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட அணுகுமுறையாக அமைப்பியல் திகழ்கிறது.

         மொழியியல் அறிஞர்கள் இலக்கியத்தினை குறி – குறிப்பான் – குறிப்பிடுபொருள் என்று பாகுப்படுத்துகின்றனர். குறி(Sign) என்பதற்கு இருதள இயக்கம் உண்டு. குறி என்பது தன்னையும் சுட்டும், பிறிதொருப் பொருளையும் சுட்டும். தொல்காப்பியர் இதனைச் சொன்மை (தன்னைச் சுட்டுவது) என்றும் பொருண்மை (பிறிதொன்றைச் சுட்டுவது) என்று விளக்குகின்றார் (தொல்.சொல்.நூ.153). “இலக்கியப் பிரதியின் பல்வேறு உறுப்புகளைச் சொல், வாக்கியம், அரைப்புள்ளி, தலைப்பு போன்றன குறி என்றும், இவற்றின் சேர்க்கை மொத்தம் இலக்கியம் எனச்சுட்டும் குறிப்பான் என்றும் அதன் பொருள் குறிப்பிடு என்றும் புரிந்துகொள்கிறோம் என்பர்.” (தமிழவன், அமைப்பியல் வாதமும் தமிழிலக்கியமும், ப-82).  மார்க்ஸிய அமைப்பியல்வாதியான லூயி அல்துஸ்ஸரும் ஒரு முழுமையின் உறுப்புக்கள் பலத்தளங்களில் தம்முள் உறவு கொண்டிருக்கிருக்கும் என்கின்றார். இப்பல்வேறு உறுப்புக்களின் தொடர்புகளை அறிதலில்தான் அமைப்புப் பற்றிய அறிவு அடங்குகிறது. இலக்கியத்தை ஒரு குறிப்பிட்ட அடிப்படைகள் கொண்ட உற்பத்தி என்று அமைப்பியலாளர்கள் பார்த்தனர். ஆய்வாளர்களின் கருத்தின்படி அமைப்பியல் என்பது படைப்பின் கட்டமைப்புக் கூறுகளை வெளிப்படுத்தும் அறிவியல் தன்மை கொண்ட ஆய்வுப்போக்கு என்பதை அறிந்துகொள்ளமுடிகிறது.

    அமைப்பியலின் வகைகள்

         அமைப்பியல் ஆய்வுநிலைகளின் அடிப்படையிலும் பொருண்மையின் அடிப்படையிலும் மொழியியல் அமைப்பியல், மானிடவியல் அமைப்பியல், மார்க்ஸிய அமைப்பியல், இலக்கிய அமைப்பியல் என்ற பகுப்பாய்வுகளுடன் ஆய்வுச் செய்யப்பட்டு வருகின்றது.

    மொழியியல் அமைப்பியல்

         மொழியியல் அமைப்பியலின் தோற்றத்திற்கு காரணமாயிருந்தவர் ஃபெர்தினெண்ட் தெ சசூர்(Ferdinand De Sasur). சசூர் மொழி என்பது சப்தக் குறிகளின் இணைப்பாலான அமைப்பு என்று கூறுகிறார். சொல் என்பது ஒரு குறி இத்தகைய பல குறிகளின் இணைப்பாலான அமைப்பே மொழி. சப்த ஒலி அணுக்களாலான சொல்லின் ஓசையமைப்பைக் குறிப்பான் (Signifier) எனலாம். அவ்வோசை அமைப்பால் குறிக்கப்படும் அர்த்தத்தைக் குறிப்பீடு(Signified) எனலாம் என்பது சசூரின் கூற்றாகும். மொழிக்கிடங்கு என்பதும் பேச்சு (Parole) என்பதும் சசூரின் சிந்தனைகளாக காணப்படுகின்றன. “இலக்கியத் தகுதி(Literary Competence) என்னும் எண்ணம் சசூரின் மொழிக்கிடங்கு பற்றிய சிந்தனையின் விரிவு. இலக்கியப் படைப்பில் மொழி இல்லை என்றால் உருவமிருக்கமுடியாது;  அதுபோல் உருவம் இல்லையென்றால் நூலும் இலக்கியமாய் இருப்பதில்லை. உருவமும் மொழியும் இயக்கவியல் அடிப்படையில் செயல்படுகின்றன எனக் குறிப்பிடுவார்.”(Culler, Jonathan. Structural Poetics, P-20).  மொத்ததில் சிறு சிறு ஒலிக்கூறுகளின் வேறுபாட்டினால் மொழி உருவானது போலவே மொழி அமைப்பை இணைப்பு நிலைப் பார்வையாலும் அடுக்குநிலைப் பார்வையாலும் சசூர் உள்ளிட்ட மொழியியல் அறிஞர்கள் விளக்குகின்றனர்.

    மானிடவியல் அமைப்பியல்

         மொழியியல் அமைப்பியலில் சசூர் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தவரோ அத்தகைய நிலையை மானிடவியல் அமைப்பியலில் லெவிஸ்ட்ராஸ் அடைந்துள்ளார். மானிடவியல் என்னும் அறிவியல் லெவிஸ்ட்ராஸ் எண்ணப்படி பொருள்களுக்கு அர்த்தம் நல்கும் ஒன்றாகும். இரு ஒலிகளின் வேறுபாட்டில்தான் அர்த்தம் உருவாகிறது. சசூர் குறிப்பிட்ட குறியியல் (Semiotics) என்னும் புது அறிவியல் பற்றிய சிந்தனையையும் குறிப்பான் குறிப்பீடு என்னும் சிந்தனையையும், தளப்பார்வை, காலப்பார்வையையும், பேச்சு/மொழிக்கிடங்கு என்னும் பார்வையையும் தன் மானிடவியல் ஆய்வுகளில் பயன்படுத்தியுள்ளார். ஆழ்மன நிலையில் கிடக்கின்ற அமைப்புகளைத்தான் ஆய்வு செய்யவேண்டுமே தவிர வெளிப்படையாகத் தெரிகின்ற பொருள்களை நேரடியாக ஆய்வுசெய்வதில் பயனில்லை. அதுபோல் ஆய்வில் ஒரு பொருளின் கூறுகளைப்பற்றித் தெரிந்து கொள்வதைவிட அந்தக் கூறுகளுக்கு இடையில் உள்ள உறவைத்தான் ஆய்வு செய்யவேண்டும் என்பர். உண்மைப்பார்வைக்கு அப்பால்தான் அந்தப் பொருளின் உண்மை அடங்கி உள்ளது. மரபு, எண்ணம், பழக்கம் போன்றவற்றால் உருவாகும் கருத்துருவம் சமூகத்தை உருவாக்காது; ஆனால் சமூகம் தான் கருத்துருவங்களை உருவாக்கும் என லெவிஸ்ட்ராஸ் குறிப்பிடுகின்றார்.(Levistrass., Clande the Savage Mind, PP-117-130).

         மானிடவியல் அமைப்பியல் கலாசாரத்தின் எந்த அமைப்பை ஆராய வேண்டுமோ அந்த அமைப்பைச் சிறுசிறு கூறுகளாக உடைத்து ஒவ்வொரு கூறுக்கும் ஓர் அடையாளத்தைக் கொடுத்து, பின் அந்தக் கூறுகள் தமக்குள் கொண்டுள்ள உறவை ஆராய்கின்றது. லெவிஸ்ட்ராஸ் ‘உறவு முறை அடிப்படை அமைப்புகள்’ என்னும் நூலை எழுதியபின்  தனது நூறு கட்டுரைகளில் இருந்து சில முக்கியக் கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து ‘அமைப்பியல் மானிடவியல்’ என்னும் பெயரில் நூலாக வெளியிட்டார். அக்கட்டுரையிலும் பல்வேறு பிரச்சினைகளைத் தேர்ந்தெடுத்துத் தன் அமைப்பியல் முறை ஆய்வைப் பயன்படுத்தி தீர்வுகள் கண்டார். அதே நேரத்தில் உலகுக்கு அமைப்பியல் ஆய்முறையை மேலும் பலமாக அறிந்து கொள்ள உதவினார்.

    மார்க்ஸிய அமைப்பியல்

         சிந்தனை என்பது வரலாற்றால் உருவாக்கப்பட்ட ஒரு கருவி. சமூக யதார்த்தத்தால் உருவானது. அதாவது ஓர் உற்பத்தி முறையால் உருவானது. ஆகவே, அறிவு சிந்தனைக்குள் உருவாவது என்பதை அறியலாம். அறிவு என்பது கோட்பாட்டுக் களத்தில் தோன்றும் சிந்தனையே. இதனை மார்க்ஸ் ‘பருப்பொருள் தன்மை கொண்ட முழுமை என்னும் சிந்தனை; முழுமைப் பருப்பொருள் கொண்ட சிந்தனையாய் மாறுகின்றது.  அச்சிந்தனையானது சிந்திப்பது, அறிவது என்பவற்றின் விளைவேயாகும்.  இச்சிந்தனை வழியே மார்க்ஸிய அமைப்பியல் தோற்றம் கொள்கிறது என லூயி அல்துஸ்ஸர் குறிப்பிடுகின்றார் (Althusser Louis, Reeding Capital, p-41).  மார்க்ஸிய அமைப்பியல் பொருள் முதல்வாதக் கோட்பாட்டை முன்னெடுத்துச் செல்கிறது. மார்க்ஸியச் சிந்தனையை எங்கல்ஸ், காட்ஸ்கி போன்ற ஜெர்மனிய  சிந்தனையாளர்களும்; போலந்தின் ரோஸோ லக்ஸம்பர்க்;  ரஷியாவின் பிளக்னோவ், லெனின்; இத்தாலியின் லஃபிரியோலா, கிராம்சி போன்றோரும் உலகறியச் செய்தனர்.

                கோட்பாடு, தத்துவம், பொருளாதரம், இலக்கியம் இவையெல்லாம் ஒரு மொத்த  முழுமையின் பல்வேறு வெளிப்பாடுகள். இவை ஒவ்வொன்றும் தனித்தனியான அமைப்புகளையும் விதிகளையும் செயல்களையும் அதே நேரத்தில் சில ஒற்றுமைகளையும் கொண்டு அமைப்பியல் வடிவத்தில் இணைந்திருக்கும்  என்பதுதான் மார்க்ஸின் கொள்கையாகும். படைப்பில் சிந்தனைவளம்  இருக்கிறதா, தர்க்க நெறிக்குட்பட்டுப் புற எதார்த்தத்துடன் இணைந்து போகிறதா, வரலாற்றுடன் பொருந்துகிறதா  என்ற பகுப்புகளுடன் மார்க்ஸிய அமைப்பியல் ஆராய்கிறது.

    இலக்கிய அமைப்பியல்

                அமைப்பியலின் சிந்தனை முறையிலே மிகவும் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியது இலக்கிய அமைப்பியலாகும். இலக்கிய அமைப்பியலுக்கு முன்னோடியாக இருந்தது ரஷ்யாவில் உருவாக்கம் பெற்ற உருவவியல் வாதமாகும். உருவவியலாளர்களில்  முக்கியமானவர்களாக ரோமன் யாக்கப்சன், விக்டர் ஷக்லோவாஸ்கி, போரிஸ் எஹென்பாம், தொமோஷோவாஸ்கி, யுரிகின்யனொவ் என்னும் ஆய்வாளர்களைக் குறிப்பிடலாம்.  உருவவியல்வாதிகள்  படைப்பை  அதன் மாதிரிகளைக் கட்டுடைத்தனர். இலக்கியம், கலை போன்றவை எப்போதும்  ஒரு புதுமையை, புது அறிதலை, புது அனுபவத்தைப் புலன்களுக்கு தருவதாய் அமைதல் வேண்டும். ஒரு புதுப்படைப்பு என்பது  முந்தையப் படைப்பிலிருந்து வேறுபட்டிருக்க வேண்டும். அந்த படைப்பைப் படித்த கனத்திலிருந்து உலகைப் புதுவகையானதாய்ப் பார்க்க வேண்டும். கலையும் இலக்கியமும் தொடர்ந்து மாறும் என்னும்  கொள்கை உடையவராய் உருவவியல்வாதிகள் காணப்படுகின்றனர். “முதலில் இலக்கியத்துறைப் பார்வையாலும்(Synchrenic) அடுத்தாக காலப் பார்வையாலும்(Diachronic) உருவவியல்வாதிகளின் சிந்தனைமுறை சென்றதனை தமிழவன் குறிப்பிடுகின்றார். (தமிழவன், அமைப்பியல் வாதமும் தமிழிலக்கியமும், ப-241.)

                ஒரு படைப்பினுடைய பல்வேறு உறுப்புகளின் ஒன்றிணைந்த ஒரு முழுமையே உருவம் என்பது  இக்கொள்கையாளர்களின் மையமாக கருதப்படுகின்றது.  இலக்கிய அமைப்பின் வழி படைப்பினை அணுகின்றபோது அதனுள் பொதிந்து கிடக்கும் அனைத்து அம்சங்களையும் வெளிக்கொணர வழிவகை அமைகின்றது. பல்வேறுத் துண்டுகளாகச் சிதறிகிடக்கும் படைப்பு மையத்தை நோக்கிப் பயனிக்கின்றது. இலக்கியத்திற்குள் இருவகைப் பார்வைகளை இவ்வாய்வுமுறை காணுகின்றது. ஒன்று,   படைப்பின் அமைப்பு, அதன் உருவமும், இது ஒரு படைப்பின் பகுதி மற்றும், பாடலின் தொடர்ச்சியினையும்  அதன் அவசியங்களையும் வெளிப்படுத்துவன. அடுத்து, படைப்பு வெளிப்படுத்தும் கருத்துக்கள் உலக யதார்த்தங்களையும்  வெளிப்படுத்துவனவாக  அமைதல் வேண்டும். மேற்காணும் வகையில் இலக்கிய அமைப்பியல் ஆராய்ச்சி உலகில் அவசியமாகிறது.

    தமிழில் அமைப்பியல்சார் ஆய்வுகள்

                அமைப்பியல் என்ற இலக்கியத் திறனாய்வு நெறி இன்று உலகமெங்கும்  பரவியுள்ளது. தமிழில் எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்து கோட்பாட்டளவில் அறிமுகமாகி இன்று செயல்முறைத் திறனாய்விலும் தன் தாக்கத்தை செலுத்திவருகின்றது. “இந்தியாவிலும்  இம்முறையில் உருவான திறனாய்வு தமிழில் தான் முதன்முதலாக மிக விரிவாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதாக தமிழவன் எடுத்துரைப்பார்.(அமைப்பியல் வாதமும் தமிழிலக்கியமும், ப-59.) இலக்கியத் திறனாய்வு தான் அணுகுகிற எழுத்தைப்(writting) பகுத்தும், தொகுத்தும், துண்டு துண்டாக்கி அலசிப்பார்ப்பதும் தவறல்ல என்ற எண்ணம் அமைப்பியலாளரிடம் காணப்படுகின்றது. இந்த அலசிப்பார்க்கும்(Analytical Approch) அணுகுமுறை இலக்கியதில் கலையாக, படைப்பாகப் பார்ப்பதிலிருந்து தவறுவதில்லை. “இலக்கிய சுவைப்பிற்கு அடிப்படையான தேவைகளாக நிலை, பின்னணி, வடிவம், கருத்து ஆகிய நான்கும் கருதப்படுகின்றன என  ஜெ.நீதிவாணன் குறிப்பிடுகின்றனர்.(நடையியல், ப-9). இத்தகைய வடிவம், உருவம், கட்டமைப்பு என்ற அமைப்புநிலைப் பற்றிய ஆய்வுகள் பழங்காலந்தொட்டே தமிழில் இருந்து வருகின்றன.

    தமிழ் யாப்பியல் வரலாற்றின் முதல்வராகத் தமிழிலக்கிய கோட்பாட்டின் முன்னோடியாகத் திகழும் தொல்காப்பியரின் காலத்திற்கு முன்னமே பாடல்களின் அமைப்புகளை ஆராய்ந்து அவற்றின் உறுப்புகளை வரையறை செய்துள்ளனர்.

         “நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென
          வல்லிதிற் கூறி வகுத்துரைத்தனரே”
         “யாப்பென மொழிப யாப்பறி புலவர்”
         “நூல் நவில் புலவர் நுவன்றறைந் தனரே”     “என்பனார் புலவர்” என வரும் தொல்காப்பிய தொடர்களால் அறியலாம் (தொல், பொருள், செய்யுள்(இளம்) நூ-310, 383, 457, 311, 422, 433, 434).

    செய்யுளுக்குச் சிறப்பியல்பாகிய பல்வகை ஒலிநயம் பொருந்திய சொற்கோவையினைப் பகுத்து ஆராய்தலும் ஆராய்ந்தவற்றை விளக்குதலும் யாப்பியல் பணியாக அமைகின்றது. சோ.ந. கந்தசாமி தனது ‘தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற நூலில், “சங்க யாப்பு என்பது முற்காலத்துச் சங்க யாப்பினை ஆராய்வதன்று என்பதும், பின்னர் எழுந்த சங்கத்துப் பாக்களின் அமைப்பியலை ஆராய்ந்து இலக்கணம் கூறுவதாக அமைந்திருத்தல் வேண்டும் என்பது எண்ணத்தக்கதாகும்.(ப-40.)

         பொருளதிகாரத்தில் பேசப்படும் செய்யுள் உறுப்புகள் கவிதையின் கட்டமைப்புத் தன்மையினை விளக்குவதாக அமைகின்றது. இது அமைப்பியலாளர் குறிப்பிடுகின்ற ‘ஒட்டுமொத்தம்’ என்ற நிலையினோடு தொடர்புடையனவாக உள்ளது. ஒலியில் தொடங்கி நோக்கு வரையிலும் பேசப்படும் அனைத்தும் ஒருசேரக் கட்டப்படுவதே செய்யுளாகும் என்ற பாவியல் சிந்தனைகளை தொல்காப்பியத்தின் வாயிலாக உணரலாம். தமிழ்ச் செய்யுள் உறுப்புகள் சார்ந்த ஆய்வுகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. கி.பி. 1911 ஆம் ஆண்டு தி. வீரபத்திரமுதலியார் அகழாய்வு தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நிகழ்த்திய உரையின் விளக்கமாக எழுதிய (The Evoluation of Tamil Virutham) என்ற ஆய்வுக்கட்டுரையில் பாவியல் சார்ந்த சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளார் (பக்-9-28).

    அ. சிதம்பரநாதனார் தமது முனைவர் பட்டத்திற்காக எழுதிய ஆய்வுநூலும் (Advanced Studies in Tamil Prosody) இலக்கியக் கட்டமைப்புச் சிந்தனைகளை வெளிப்படுத்துகின்றது. மேலும், பல்வேறு ஆய்வாளர்கள் இச்சிந்தனை வழிப்பட்டவர்கள் என்பதை தமிழிலக்கிய ஆய்வுகள் வெளிக்காட்டுகின்றன. தமிழவன் தமது “அமைப்பியல் வாதமும் தமிழ் இலக்கியமும்” என்ற நூலில் தமிழின் முக்கியமான மூன்று திறனாய்வுக் குழுக்களைக் குறிப்பிடுகின்றார்.

    அவை,

    1. இலக்கியவியல் திறனாய்வுக்குழு
    2. தமிழ்க் கல்வியியல் திறனாய்வுக்குழு
    3. மார்க்சியவியல் திறனாய்வுக்குழு. என்பன.

         இக்குழுக்களில் இடம் பெற்றுள்ள ஆய்வாளர்களில் முக்கியமானவர்கள் க.நா.சு, சி.சு.செல்லப்பா, ஆ.முத்துச்சிவன், மு.வ, க.கைலாசபதி, நா.வானமாமலை, கா.சிவத்தம்பி போன்றோராவர். இவர்களின் ஆய்வுமுறைகள் தமிழிலக்கிய வளங்களை அமைப்பியலார் போன்று வகைப்படுத்தலிலும், கட்டமைப்பதிலும், ஒப்பீட்டு முறையிலும் மேலும் முழுமையை நோக்கிய சிந்தனைகளோடும் அமைந்துள்ளதைக் காணமுடிகின்றது. இலக்கிய ஆய்வியலாளர்கள் ஒவ்வொருவரும் தம் சிந்தனைப் போக்கினை வெளிப்படுத்துகின்றனர். இலக்கியவியல் குழுவினர் சங்க இலக்கியத்திற்கு ரசனை என்று எதிர்வினை காட்டுகின்றனர். மார்க்ஸியலாளர்கள் அதற்கு அரசியல் எதிர்வினை சுட்டுகின்றனர். தமிழ்க் கல்வியாளர்கள் அதற்கு மரபு என்று எதிர்வினைக் காட்டுகின்றனர். அவரவர் தனக்கான பொருளையும் வடிவத்தையும் காணுகின்றனர். அதன் உணர்வினையும் உயிர்ப்பையும் பெருகின்றனர். அதற்கான எதிர்வினையை இயக்குகின்றனர். இதுதான் அமைப்பியல் திறனாய்வாளரின் புரட்சிகர இலக்கிய கொள்கையாக அமைவதை அறியமுடிகின்றது. தமிழில் தற்போதைய அமைப்பியல் ஆய்வாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர்களாக தமிழவன், பூர்ணச்சந்திரன், நாகர்ஜுனன், ஆலிஸ்  போன்ற ஆய்வாளர்களைச் சுட்டலாம்.

    தொகுப்புரை

        அமைப்பியல் மனிதப் பண்பாட்டுத் துறைகளில் மிகவும் சக்திவாய்ந்த அறிவாராய்ச்சி முறையாக விளங்குவதை இக்கட்டுரை விளக்குகிறது. 19ஆம் நூற்றாண்டின் அறிவுவாதம் 20ஆம் நூற்றாண்டின் அமைப்பியல் வாதமாக மீட்டுருவாக்கம் பெறுகின்றது. அமைப்பியல் தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட புறவயமான அணுகுமுறையாகக் கருதப்பட்டுள்ளது. தகவல்கள், வகைப்படுத்துதல், பகுப்பாய்வுசெய்தல், தர்க்கவியல் உள்ளார்ந்த பொது விதிகளைக் கண்டறிதல் என்பன போன்ற முறைமைகளைப் பேசின.  அமைப்பியல் என்ற சொல்லாக்கம் ஐரோப்பியச்  சிந்தனைமரபோடு தமிழில் அறிமுகப் படுத்தப்பட்டாலும் இவ்வாய்வுமுறை வருவதற்கு முன்னரே பாடல்களின் அமைப்புகளை ஆராய்தல் அவற்றின் உறுப்புகளை வரையறை செய்தல் போன்ற சிந்தனைப்போக்கு  தமிழிலக்கிய உலகில் காணமுடிகின்றது.

    Share
  • படக்கவிதைப் போட்டி 89-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கடற்கரை மணலில் பதிந்த காலடித்தடங்களைப் புகைப்படப்பெட்டிக்குள் அடக்கிவந்திருப்பவர் திரு. ராமச்சந்திரன். இந்தக் காலடித்தடங்களை வைத்துக் கவிபாடுங்கள் என்று இவ்வாரப்படக்கவிதைப் போட்டிக்கு இதனைத் தெரிவுசெய்து தந்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவரும் நம் நன்றிக்கு உரியவர்கள்.

    footprints

    ஆறடி நிலத்தில் வாழ்க்கை அடங்கும்வரை மனிதர்களின் காலடிகள் பயணப்பட்டுக் கற்றுக்கொள்ளத்தான் எத்தனை விஷயங்கள் இத்தரை மீதினில் கொட்டிக்கிடக்கின்றன! இலட்சிய மனிதர்களின் காலடிச் சுவடுகளோ பின்னர்க் காலத்தின் சுவடுகளாகவே மாறி வரலாற்றில் தடம்பதித்துவிடுகின்றன!

    இனி, இவ்வாரப் போட்டிக்கு வந்துள்ள கவிதைகளை இரசித்துவருவோம்.

    ”நிலத்தில் பதிந்த மனிதக் காலடி நிலவில் பதிந்த நாளொரு நன்னாள். அவை செவ்வாயிலும் வெற்றித்தடம் பதிக்கும் நாளே நமக்குப் பொன்னாள்!” என்று தன் ஆசை பகர்கின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

    நிலத்தில் தடங்கள்

    நிலத்தில் நடக்கும் கால்கள்
    நேற்றுப் பகலில்
    நிலவில் தடம் பதித்து
    வரலாற்றுக் கல்லை
    நிலைநாட்டும் !
    எளிய மனிதனின்
    பூதகர மான எட்டு வைப்பு !
    ஆறறிவு மானிடன்
    பேரளவு முயற்சியில் ஆற்றிய
    ஏழறிவுச் சாதனை !
    தவழப் பயின்று தட்டுத் தடுமாறி
    நடக்கப் பழகி
    இறக்கை யின்றிப் பறந்து
    பிற அண்டத்தில்
    தடங்கள் இட்டு மீண்டான் !
    அடுத்துப்
    பதினைந்து ஆண்டுகளில்
    செந்நிறக் கோள்
    செவ்வாயில் தடம் வைத்து
    வெற்றி
    விண்ணவனாய்
    மீள்வான்,
    மண்ணிலே தடம் வைத்த
    மனிதன் !

    ***

    கடற்கரையில் பதிக்கும் வெற்றுத் தடங்கள் கடலலைகளால் அழியலாம்; ஆனால் வாழ்வில் பதிக்கும் வெற்றித்தடங்களோ காலக் கடலலைகளால் அழிக்கமுடியாதவை என்பது திரு. செண்பக ஜெகதீசனின் திண்ணமான எண்ணம்.

    கடற்கரையில்
    காலடித் தடங்கள்
    தொடர் பயணத்திற்கு ஏற்றவையல்ல..

    இலக்கை எட்டமுடியாது
    இவற்றைத் தொடர்ந்து சென்றால்..

    கடலலைக் கரங்களால் அழிக்கப்பட்டு
    காணாமலும் போய்விடும்..

    வாழ்க்கைப் பயணத்தில்
    நீ பதிக்கும்
    வெற்றிக் காலடித்தடங்கள்,
    காலக் கடலலைகளால் அழிவதில்லை..

    வாழ்க்கை இது சாதிப்பதற்கே,
    வெற்றித் தடங்களைப் பதிப்பதற்கே…!

     *** 

    மனித வாழ்க்கை போன்று மனிதக் காதலும் நிலையற்றதாய் மாறிவரும் நிலையினை, கடலலை போல் அது விரைந்து மறையும் விந்தையைத் தன் கவிதையில் அழகுறக் காட்சிப்படுத்தியுள்ளார் திருமிகு. ஜோ. குமாரி எலிசபெத். (புதிய கவிஞருக்கு நல்வரவு!)

    அவசர வாழ்வில் அந்நிய மானது
    அன்புட னிருந்த அருமை உறவுகள்
    அன்றொரு நாள் அப்படித் தான்
    அவளும் அவனும் பிரிந்ததைக் கண்டேன்

    அவளின் கண்கள் அவனை நோக்க
    அவனின் கண்கள் எங்கோ பார்க்க
    வெறுப்பில் அவளின் வார்த்தை வெடிக்க
    சிறுத்த முகத்துடன் அறைந்தானவளை…!

    விழுந்த அறையில் காதல் ஒடிந்தது
    கடந்து போனது காதல் அலைபோல்
    எழுந்து போயினர் ஆளுக் கொருபுறம்
    அழிந்தன அவரடி அலைகளினாலே….!

    ஐந்தே நிமிடம் அந்த இடத்தில்
    வந்து அமர்ந்தது மற்றொரு சோடி
    இங்கு வந்ததில் ஆணோ பழையவன்
    அறைந்தவளில்லை இவள் புதியவள்…!

    அகன்ற கண்களை விலக்கிக் கொண்டு
    அவசர உலகின் அவசரம் உணர்ந்தேன்
    கடற்கரை காற்று எத்தனை கண்டதோ
    வெறுத்து வீசுது வெப்பத்தோடு…!

    *** 

    காலடித் தடங்களுக்குப் புதிய சிந்தனை முகங்களைத் தம் கவிதைகளில் தந்திருக்கும் கவிஞர்களுக்குப் பாராட்டுக்கள்! 

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து… 

    காலத்தால் அழியாத காலடிகள்

    காலடிகள் காணாமல் போகும் ஒருநாள் – ஆனால்
    காவியம் படைத்தும் உள்ளது சில காலடிகள்…

    அண்ணல் இராமன் காலடி ஸ்பரிக்க
    அங்கே எழுந்தாள் அகல்யை உயிர் சிலிர்க்க‌

    மூன்றடி மண்தான் கேட்டான் மாதவன் -ஆனால்
    மூவுலகமும் வசமானது அவன் காலடியாலே

    அஹிம்சையைப் போதித்தது புத்தனின் காலடி
    அவ்வழி நடந்தது அண்ணல் காந்தியின் காலடிகள்

    ஞானக் குஞ்சொன்று பிறந்தது காலடியிலே
    அஞ்ஞானம் மாண்டதும் அவர் காலடியிலே

    அறிஞரைப் போல மெய்யடியார்களைப் போல‌
    அவர் வழி நடந்து பதிப்போம் நம் காலடிகளை

    வரமாகப் பெற்ற இவ் வாழ்க்கைப் பாதையில்
    தரமாக விட்டுச் செல்வோம் நமது காலடிகளை

    ஞாலத்தில் பிறந்த மாந்தர் அனைவரும் காலடித்தடம் பதித்துத்தான் நடக்கிறார்கள். என்றாலும், அனைவரின் தடங்களும் பின்பற்றுவதற்கேற்ற வழித்தடங்களாய், வாழ்க்கைத்தடங்களாய் மாறுவதில்லை. அத்தகு திறனும் ஆற்றலும் ஒருசிலருக்கு மட்டுமே வாய்க்கும் வரம்!

    ”காலடியில் பிறந்த ஆதிசங்கரரின் காலடி அத்துவைதத்திற்குப் பாதை அமைத்தது. கருணைக்கடலாம் சித்தார்த்தரின் காலடி சத்தியத்துக்குப் பாதை அமைத்தது. அதன்வழி நடந்த அண்ணலின் காலடியோ அகிம்சைக்குப் பாதை அமைத்தது!” என்று காலத்தால் அழியாத காலடிகளின் வரிசையைக் காதலுடன் தன் கவிதையில் பதிவுசெய்திருக்கும் திருமிகு. ராதா விஸ்வநாதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

     

    Share
  • ’’பெருமாள் திருப்புகழ்’’….!

    கிரேசி மோகன்
    தாத்தன தத்த தனந்த தாத்தன தத்த தனந்த
    தாத்தன தத்த தனந்த -தனதான

    “சாப்பிடும் சக்தி இழந்து ,பேச்சில்பி தற்றல் மிகுந்து
    மூப்பினில் புத்தி மழுங்க -எமனேள
    காப்பிடு பத்னி கலங்க ,தீக்கிட மக்கள் நெருங்க
    ஆப்பதில்சிக்கு குரங்கின் -கதையாவாய்

    கேட்பதை விட்டு ணவின்றி ,மாற்றுடை யற்று, குளிர்ந்த
    காற்றினில் வெப்பில் திரிந்த -ரமணேசர்
    மூச்சைய டக்கி மடிந்து கூற்றைவி ருப்பில் கலந்து
    வேற்றுரு வுற்று விரைந்து -அருணேசர்

    கூப்பிட அப்ப திசென்று சேர்த்த சுகத்தி னில்பங்கு
    வாய்க்கயெ னக்கு வழங்க -அருள்வாயே
    சூர்பகை யுச்சம் விளங்க வேற்படை வெற்பி லெறிந்த
    தீக்கண்பி றப்பு குகன்தன் -முறைமாம

    சூர்ப்பண கைக்கு வலிந்து மூக்கைய றுத்தவ் விலங்கை
    ராக்கத னுக்குள் புகுந்த -அவதார
    வீற்றுப டுத்து நிமிர்ந்து ஆற்றடி,வெற்பில் அமைந்த
    நூற்றொடு யெட்டில் இலங்கு -பெருமாளே”….கிரேசி மோகன்….!

    Share
  • பாரதியார் பிறந்த நாள்….!

    images-2

     

    ”தெய்வம் மகாகவி ரூபேண”….!
    ———————————————————————

    ”சாவுக்கேன் அச்சம் சகாக்களே பாரதியார்
    கோயிலானை கேட்கக் கொடுத்தயெம் -தேவுக்கு(பாரதியார் கண்ணன்போல் கடவுள்)-
    பாசறைக் கேணியில் பல்லக்கு ஏந்துகிறோம்:
    ‘பா’சிறைக்குள் கண்ணன் பிறப்பு”….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    161211 -Dhruva -wcol - lores

     

    ”பக்த துருவனை பக்கம் அழைத்தவர்க்கு
    உட்கார் மடிதானே உன்தேவை -தேவுவவர்(தேவு அவர்)
    புள்ளா சனமமர்ந்து புள்ளைக்(கு) அளித்தார்,வான்,
    உல்லாஸ மீனாய்(துருவ நக்ஷத்திரம்) உலவு”….கிரேசி மோகன்….!

     
    பெற்றவளும் கூடவர புஷ்பகவி மானத்தில்
    உற்றான் துருவன் உயர்பதவி -கற்றவர்க்கும்
    கிட்டாத அந்தஸ்து கண்மூடி பக்திக்கு
    கிட்டுமெனக் கூறும் கதை….கிரேசி மோகன்….!

    Share
  • பாரதி – ஒரு பார்வை

     

    க பாலசுப்ரமணியன்

    images-2

    அணுவைத் துளைத்து
    அதன்
    கருவைக் கிழித்து
    அதனுள்
    தன் கருத்தை வைத்தான் !!
    சொல்லைப் பிரித்து
    அதனுள்
    சுடரை வைத்து
    சுதந்திரம் கொடுத்தான் !

    மூச்சின் நெருப்பை
    மொழியினுள் வைத்து
    முழங்கிடச் செய்தான் !
    முத்தமிழ் சொற்களை
    பெற்றவள்போலே
    உச்சிகள் முகர்ந்து
    உலவிட வைத்தான் !

    விழிகளினுள்ளே
    வீரத்தைச் செதுக்கி
    விண்ணிடம்
    கதைகள் சொன்னான் !

    விழித்திரை ஓரம்
    வேதனை எழுதும்
    பாவையை
    விழித்திடச் சொன்னான் !

    வறுமையில் வளவலாய்
    விருந்திட்டு
    குருவிக்கும் காக்கைக்கும்
    வாழ்த்துரை சொன்னான் !

    வல்லினம் இடையினம்
    மெல்லினம் அனைத்தும்
    ஓரினம் என்றே
    உண்மையைச் சொன்னான் !

    Share
  • களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்

    KALARI HERITAGE&CHARITABLE TRUST  நிகழ்த்தும் மக்கள் கலையிலக்கிய விழா-2017


    15417793_1121692647908846_1658706594_o

    15397813_1121692674575510_361902160_o

    15417760_1121692691242175_1612764271_o

    15419423_1121692611242183_465861544_o

    15491875_1121692677908843_287836088_o

    15397813_1121692674575510_361902160_o

    15388709_1121692687908842_1295028633_o

    15419310_1121692657908845_1410269353_o

    15398846_1121692654575512_1041091113_o

    தங்கள் வரவு நல்வரவாகுக

    மு. ஹரிகிருஷ்ணன்,
    ஆசிரியர் -மணல்வீடு.

    Share
  • நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி முதன்முதல் சனிக்கோளின் சுற்று வளையத்தை ஊடுருவி ஆய்வு செய்கிறது

    சனிக்கோளின் வளையங்கள்

    ++++++++++++

    சனிக்கோளின் துணைக்கோளில்
    பனித்தளம் முறியக்
    கொந்தளிக்கும் தென் துருவம் !
    தரைத்தளம் பிளந்து
    வரிப்பட்டை  வாய்பிளக்கும் !
    முறிவுப் பிளவுகளில்
    பீறிட்டெழும்
    வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் !
    முகில் அயான் வாயுக்கள் எழும் !
    பனித்துளித் துகள்களும்
    எரிமலை போல்
    விண்வெளியில் வெடித்தெழும் !
    புண்ணான பிளவுகள்
    மூடும் மீண்டும் திறக்கும் !
    நீரெழுச்சி வேகம் தணியும், விரையும் !
    வாயிலை வெப்ப மாக்கும் !
    பனிக்கடல்  உருகித்
    தென்துருவ ஆழத்தில் மட்டும்
    திரவ மானது ஓர் புதிர் !
    ஊற்று நீராக வெப்பத்தை,
    உந்துவிசை தனை  அளிப்பது எது ?
    காஸ்ஸினி விண்ணுளவி இப்போது
    வளையத்தை ஊடுருவிச் சென்று
    விளக்கமாய்  உளவும் !

    ++++++++++++++++++++

    காஸ்ஸினி விண்ணுளவிப் பாதையைச் சிறிதளவு கட்டுப்பாடு செய்ததும், எங்களுக்குப் புதிய குறிக்கோள் [Radio Science Experiment] நிறைவேற வழி அமைந்தது. நாசா விண்ணுளவி  சனிக்கோள் வளையத்தின் இடைவழி புகுந்து முதன்முதலாய் வளையங்களை ஆழ்ந்து ஆய்வு செய்தது.

    ஏர்ல் மைஸ் [காஸ்ஸினி திட்ட ஆளுநர், நாசா ஜெட் உந்து ஆய்வகம்] 

    பல்லாண்டுகளாய் நாங்கள் திட்டமிட்டது.  இப்போது அது வெற்றி பெற்று வளைய நோக்குச் சுற்றுப் பாதையில் [Ring-Gazing Orbit] புதிய தகவல் இலக்கம் வருகிறது என்பதை அறியும்போது மனம் துள்ளுகிறது.  இந்தப் புல்லரிப்புப் பயணத்தில் இது ஓர் உன்னத தருணம்.

    லிண்டா ஸ்பில்கர் [காஸ்ஸினி திட்ட விஞ்ஞானி, ஜெட் உந்து ஆய்வகம்] 

    சனிக்கோள் வளையத்தை ஊடுருவும் காஸ்ஸினி விண்ணுளவி

    2016 டிசம்பர் 6 இல் முதன்முதலாக, நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி திசை திருப்பப்பட்டு சனிக்கோளின் வளையங்களின் இடைவெளிப் புகுந்து விளக்கமாய்ப் படம் எடுக்க ஆரம்பித்துள்ளது.  டிசம்பர் 4 ஆம் தேதியன்று விண்ணுளவி சனிக்கோளின் முகிலுக்கு மேல் 57,000 மைல் [91,000 கி.மீ] உயரத்தில் பயணம் செய்து கொண்டிருந்தது.  அவ்விடத்தில்தான் சனிக்கோளின் சிறு துணைக்கோள்கள் “ஜானஸ்”, எபிமேதிஸ்” [Janus & Epimetheus] உருவாகி மிஞ்சிய  மங்கலான தூசி வளையம் ஒன்று சுற்றி வந்தது.  அது சனிக்கோள் வளையம் F இன் மையத்திலிருந்து [Saturn’s F Ring]  சுமார் 6,800 தூரத்தில் உள்ளது.  காஸ்ஸினி விண்ணுளவியின் காமிராக்கள் வளையத்தைக் கடக்கும் முன்பே படமெடுக்கத் தொடங்கின. அடுத்த வளையத்தின் ஆய்வு டிசம்பர் 11 இல் திட்டமிடப் பட்டுள்ளது. மொத்தம் 20 வளையங்கள் ஏப்ரல் 22, 2017 வரை நெருங்கி ஆராயப்படும்.

    cassini-final-images-1

    இறுதியாக விண்ணுளவி சனிக்கோளின் துணைக்கோள் டைடானை [Titan] நெருங்கிச் சுற்றி [Flyby Swing] விரைவாக்கம் பெறும்.  அதன் பிறகு, 1500 மைல் [2400 கி.மீ.] அகலமுள்ள சனிக்கோளின் உட்புற வளையத்தை ஏப்ரல் 26, 2017 இல் 22 முறைகள் கடந்து தகவல் அனுப்பும்.  முடிவாக செப்டம்பர் 15, 2017 இல் விண்ணுளவி சனிக்கோள் சூழ்வெளியில் விழ விடப்பட்டு, சமிக்கை தீரும்வரைத் தகவல் அனுப்பிக் கொண்டிருக்கும்.

    காஸ்ஸினி விண்ணுளவி 1997 இல் ஏவப்பட்டு 2004 இல் சனிக்கோளைச் சுற்ற ஆரம்பித்து 12 ஆண்டுகள், சனிக்கோள், அதன் துணைக்கோள்கள், வளையங்கள் பற்றித் தொடர்ந்து தகவல் அனுப்பி வருகிறது.  இப்போது வளையத்தை ஆராயும் இறுதிப் பணியோடு காஸ்ஸினியின் பயணம் முடிவடையப் போகிறது.  காஸ்ஸினி விண்ணுளவியின் சிறப்பான கண்டுபிடிப்புகள் துணைக்கோள் என்சிலாடஸில் [Enceladus] உள்ள கடல் நீரூற்றுகள், டைடான் துணைக்கோளில் உள்ள திரவ மீதேன் [Liquid Methane]

    fig-1b-geysers-in-the-south-pole-of-enceladus

    பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோளில் 101 வெந்நீர் எழுச்சி ஊற்றுகள் கண்டுபிடிப்பு

    Encyladus geysers -2

    சனிக்கோளின் சந்திரன் என்செலாடஸில் 101 நீரூற்று எழுச்சிகள் கண்டுபிடித்ததின் குறிப்புணர்வு,  நமது சூரிய மண்டலத்தில் எதிர்பாராத வாறு உயிரின வசிப்புக்குத் தகுதியான  வாய்ப்புகள் அமைந்தமைக்கு ஆதாரங்கள் உள்ளன என்பதே.   என்செலாடஸ் மேற்தள உஷ்ணம் : சுமார் -180 செல்சியஸ் [-292 டிகிரி F].  ஆனால் அப்பனித்தள அடியில் இருப்பது விந்தையாக திரவ நீர்.   கடல் நீர்மயம் சுமார் 6 மைல் ஆழத்தில், 20 -25 மைல் உயரமுள்ள திடப்பாறைக்குக் கீழே  உள்ளது என்று கணிக்கப் படுகிறது.  கடலும் உயிரின வசிப்புக்கு ஏற்ற தகுதியில்,  பல்வேறு ரசாயன இயக்கங்கள் நிகழும் வாய்ப்புள்ள, ஒரு பாறை மட்டத்தின் மேலே அமைந்துள்ளது.

    லுசியானோ லெஸ்  [ரோம், ஸபைன்ஸா பல்கலைக் கழகப் பதிவுத் தலைமை ஆசிரியர்] 

    Encyladus geysers -1

    நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினியின் மிகக் கூரிய உஷ்ண உணர்வுக் கருவி 2010 ஆண்டில் சேகரித்த தகவலின்படி, தனித்தனியாக எழும் நீரூற்றுகளின் அருகே, பத்து மீடர் அகண்ட [30-40 அடி] சிறு சிறு வெப்பத் தளங்கள்  இருப்பது நிரூபணம் செய்யப் பட்டது.   அவை உராய்வு உஷ்ணம் அல்ல.  தளவாய்ப் பகுதியில் குளிர்ந்து குவிந்த ஆவியால் [Condensation of Vapour] எழும் மறை வெப்பமே [Latent Heat] அது.   இந்த விளைவைப் பற்றி அறிந்தவுடன் நாங்கள் முடிவு செய்தது :   நீர் ஊற்றுகள் எழுவதற்குக் காரணம் உராய்வு வெப்பமில்லை;  நீரூற்று வெளியேற்றத்தாலே வாய்ப் புறத்திலே வெப்பம் உண்டாகிறது.  மேலும் நீரூற்று எழுச்சிகள் யாவும் மேற்தள நிகழ்ச்சிகள் அல்ல !   அவை துணைக்கோள்  ஆழத்தில் உற்பத்தியாகி வெளியேறுபவை.

    காரலின் போர்கோ [காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி]

    “(சனிக்கோளுக்கு அனுப்பிய) காஸ்ஸினி விண்கப்பல் உளவித் தேடிய விண்வெளித் தளங்களுக்குள் என்செலாடஸின் தென் துருவத்தில் கண்டுபிடித்தைப் போல் பிரமிக்கத் தக்க நிகழ்ச்சி வேறில்லை !  மிகச் சிறிய கோளில், மிகக் குளிர்ந்த தளத்தில் அவ்விதம் நீர் இருப்பது வியப்பளிக்கிறது !  அங்கே பீறிட்டெழும் வெந்நீர் எழுச்சி ஊற்றுக்களின் குறிப்பான தடங்கள் எதுவும் அருகில் காணப்பட வில்லை.  அதாவது தென் துருவத்தில் பனித்தளப் பிளவுகள் பல்லாண்டு காலமாகத் திறந்தும், மூடியும், மேலும் கீழும் நகர்ந்தும் போனதாகக் கருத இடமிருக்கிறது.  நீர் ஊற்றுகளில் வெளிப்படும் துகள்கள் பல்லாண்டு காலமாகத் தளத்தின் மீது பெய்து கவசப்பனி மூடிப்போனவை.”

    காரலின் போர்கோ, காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி [அக்டோபர் 5, 2008]

    Enceladus Erupts

    “என்சிலாடஸிலிருந்து பீறிட்டெழும் துகள்களின் மின் அயனிகள் (Ions of the Particles) என்சிலாடஸின் சுற்றுவீதி வேகத்திலிருந்து [12.64 கி.மீ/விநாடி (7.5 மைல்/விநாடி)] சனிக்கோளின் சுற்றுவீதி வேகத்துக்கு [9.54 கி.மீ/விநாடி (6 மைல்/விநாடி)] மாறிச் சேர்கின்றன.  மென்மேலும் அயான் துகள்கள் முகில் எழுச்சியில் (Plume from the Jets) மிகையாகும் போது, சனிக்கோளுக்கு மிக்க சிரமத்தைக் கொடுத்து, புதிய துகள் அயனிகளின் வேகம் விரைவாகக் கால தாமதம் ஆகிறது.”

    கிரிஸ்டஃபர் ரஸ்ஸல், கலி·போர்னியா பல்கலைக் கழகம், காஸ்ஸினி விஞ்ஞானக் குழு.

    Encyladus Icy Moon

    பனிக்கோள் என்செலாடஸில் 101 வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் கண்டுபிடிப்பு

    2014 ஜூலை 28 இல், நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினி  சனிக்கோளின் சிறிய சந்திரன் என்செலாடஸின் தென்துருவத்தில்  101 வெந்நீர் எழுச்சி ஊற்றுக்களைப் [101 Geysers] படமெடுத்து அனுப்பியுள்ளது.   என்செலாடஸ் ஒரு பனிக்கோள்.  நாசா விஞ்ஞானிகள்  பனிக்கோளின் அடித்தளத்தில் ஒரு கடல் இருக்க வேண்டும் என்று கருதுகிறார்.   அத்தகைய வெந்நீர் ஊற்றுக்கள் வெடித்தெழுவதைப் பற்றித்  தற்போது வெளிவந்துள்ள வானியல் வெளியீட்டில் இரு அறிவிப்புகள் பதிவாகியுள்ளன.  காஸ்ஸினி விண்ணுளவி கடந்த ஏழாண்டுகளாகத் தொடர்ந்து, என்செலாடஸின் தென் துருவத்தைக் கூர்ந்து நோக்கி வருகிறது.   அந்த ஆய்வுகளின் விளைவாக  நான்கு புலிப் பட்டடைகள் போல் [Four Tiger Stripes] தளப்பிளவுகள் தென் துருவத்தில் தென்பட்டு அவற்றிலிருந்து வெந்நீர்த் திவலைகள் ஆவியுடன் [Water Particles & Vapour]  பத்தாண்டுகட்கு முன்னரே வெளிவரக் கண்டனர்.   இப்போது அவற்றின் எண்ணிக்கை 101 என்று தெளிவாகக் கூறுகிறார்.   அவ்வாறு வெளிவரும் வெந்நீர் ஊற்றுக்களின் வாயில் சூடாக இருப்பதாகவும் கண்டிருக்கிறார்.  2005 ஆண்டில்தான் முதன்முறை வெந்நீர் ஊற்றுகள் இருப்பு அறியப் பட்டது.   சனிக்கோளின் அலைகள் ஓட்டமே அதனைச் சுற்றும் என்செலாடஸில் இத்தைய கொந்தளிப்பை உண்டாக்கி  இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.

    fig-1-saturns-moon-enceladus

    நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினியின் மிகக் கூரிய உஷ்ண உணர்வுக் கருவி 2010 ஆண்டில் சேகரித்த தகவலின்படி, தனித்தனியாக எழும் நீரூற்றுகளின் அருகே, பத்து மீடர் அகண்ட [30-40 அடி] சிறு சிறு வெப்பத் தளங்கள்  இருப்பது நிரூபணம் செய்யப் பட்டது.   அவை உராய்வு உஷ்ணம் அல்ல.  தளவாய்ப் பகுதியில் குளிர்ந்து குவிந்த ஆவியால் [Condensation of Vapour] எழும் மறை வெப்பமே [Latent Heat] அது.   இந்த விளைவைப் பற்றி அறிந்தவுடன் நாங்கள் முடிவு செய்தது :   நீர் ஊற்றுகள் எழுவதற்குக் காரணம் உராய்வு வெப்பமில்லை;  நீரூற்று வெளியேற்றத்தாலே வாய்ப் புறத்திலே வெப்பம் உண்டாகிறது.  மேலும் நீரூற்று எழுச்சிகள் யாவும் மேற்தள நிகழ்ச்சிகள் அல்ல !   அவை துணைக்கோள்  ஆழத்தில் உற்பத்தியாகி வெளியேறுபவை என்று காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி, காரலின் போர்கோ கூறுகிறார்.

    “சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸின் உட்தளத்தில் திரவ நீர்ச் சேமிப்புகள் தங்கி, அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்கா கெய்ஸர் நீர் ஊற்றுகள் [Yellowstone Park Geysers] போல் தளத்தைத் துளைத்துக் கொண்டு வருகின்றன என்று ஊகிக்கிறோம். முதலில் எரிமலைப் பனிவெடிப்புகள் என்று கருதினோம். ஆனால் வெளியாகும் துணுக்குகளின் பரிமாணத்தைக் கண்ட போது, பேரழுத்தம் உள்ள புதைவு நீர்க்குளம் ஒளிந்திருப்பது ஆய்வுகளுக்குப் பிறகு அறியப்பட்டது!”

    லிண்டா ஸ்பில்கர் [காஸ்ஸினி துணைத் திட்ட விஞ்ஞானி (மார்ச் 9, 2006)]

    “சூரிய மண்டலம் எப்போது தோன்றியது, உயிரினங்கள் எவ்விதம் உதயமாகின போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கும் ஓர் அபூர்வ வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு அளிக்கப் போகிறது, காஸ்ஸினி விண்கப்பலின் குறிப்பணி”

    வெஸ்லி ஹன்ட்டிரஸ் [Wesley Huntress, NASA Scientist]

    american-yellowstone-park-geysers

    “இதுவரை அனுப்பிய அண்டவெளி உளவுக் கப்பல்களிலே காஸ்ஸினி விண்கப்பலே மாபெரும் வேட்கையான தொலைப் பயணக் கருவியாகக் கருதப்படுகிறது. மனித இனம் அண்டவெளியைத் தேடித் தகவல் திரட்டி, நமது எதிர்கால விஞ்ஞான அறிவுக்கு முன்னடி வைக்கும் ஆய்வுப்பணி அது”

    டாக்டர் ஆன்ரே பிராஹிக் [Dr. Andre Brahic, Professor at University of Paris]

    “பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம் ‘ [Time Machine] போன்றது, சனிக்கோளின் டிடான் துணைக்கோள்! முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம்!”

    டாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]

    Fountains -1


    சனிக்கோளின் துணைக்கோளை நெருங்கிப் படமெடுத்த காஸ்ஸினி விண்ணுளவி

    2008 அக்டோபர் 5 ஆம் தேதி சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸைச் சுற்றிவரும் காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பல் (Cassini-Huygens Spacecraft) துணைக்கோளின் அருகே 25 கி.மீ. (15 மைல்) தூரத்தில் சுற்றும் போது அதன் கொந்தளிக்கும் தென் துருவத்திலிருந்து 300 மைல் உயரத்தில் பீறிடெழும் பிரமிப்பான ஊற்றுக்களையும் நீர்மயத் தூள்களையும் தெளிவாகப் படமெடுத்தது.  என்சிலாடஸ் பனித்தளத்தைப் பிளந்து பீறிடும் முகில் எழுச்சிகள் (Erupting Plumes) அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்காவின் “வெந்நீர் ஊற்றுக்களைப்” (Yellowstone Park Geysers) போல் காட்சி அளிக்கின்றன.  என்சிலாடஸில் வெந்நீர் ஊற்றுக்கள் எழுகின்ற தென்புறத் தளமானது மற்ற இடங்களை விடச் சூடாக உள்ளது.  மேலும் அந்தப் பனித்தள முறிவுகள் வரி வரியாக “வரிப்புலி” (Tiger Stripe Cracks) போல் காணப்படுகின்றன,  அந்தப் பிளவுகளிலிருந்து ஓங்கி உயர்ந்தெழும் “மின் அயானிக் துகள்கள்” (Plumes of Ionic Particles) சனிக்கோளின் E வளையத்தில் விழுந்திருக்கலாம் என்று கருதுவோரும் உள்ளார்.  அதற்கு மாறாக சனிக்கோள் E வளையத்தின் தூள்கள் என்சிலாடஸ் துணைக்கோளில் படிந்திருக்கலாம் என்று நினைப்போரும் இருக்கிறார்.

    fig-1a-geysers-in-saturns-moon-enceladus1

    சனிக்கோளின் 52 துணைக்கோள்களில் (2008 கணிப்பு) 300 மைல் விட்டமுள்ள சிறிய கோள் என்சிலாடஸை 1789 இல் கண்டுபிடித்தவர் விஞ்ஞான மேதை வில்லியம் ஹெர்செல் (William Herschel).  சனிக்கோளின் வெளி விளிம்பில் சுற்றும் மாபெரும் E வளையத்தை (Outermost E Ring) அதி விரைவில் 1.37 நாட்களில் சுற்றி வருகிறது.  சனிக்கோளைச் சுற்றும் அதே 1.37 நாட்களில் அது தன்னையும் ஒருமுறைச் சுற்றிக் கொள்கிறது.  அதாவது நமது நிலவு ஒரே முகத்தைக் காட்டிப் பூமியைச் சுற்றுவது போல் என்சிலாடஸ் துணைக்கோளும் சனிக்கோளுக்கு ஒரே முகத்தைக் காட்டிச் சுற்றி வருகிறது.  E வளையத்துக்கு அருகில் சுற்றுவதால் சனிக்கோளின் வளையத்தில் சிக்கிய தூசி துணுக்குகள் தொடர்ந்து கோடான கோடி ஆண்டுகள் என்சிலாடஸில் விழுந்து கொண்டிருக்கின்றன.  பூமிக்கு அடியில் அடிக்கடிப் புவித்தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) ஏற்படுவது போல், எரிமலைகள் வெடிப்பதுபோல் என்சிலாடஸ் துணைக் கோளிலும் நிகழ்ந்து வருவதாக விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது.  அவ்விதக் கொந்தளிப்பு அதன் தென் துருவப் பகுதில் நிகழ்ந்து வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் (Geyser Like Volcanic Eruptions) வெளிப்படுகின்றன என்று எண்ணப்படுகிறது. சூரிய மண்டலத்தில் பூமி, செவ்வாய், பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “ஈரோப்பா” ஆகிய மூன்று அண்டக் கோள்கள் போன்று என்சிலாடஸிலும் தீவிர எரிமலைக் கொந்தளிப்புகளும், அடித்தள நீர்மயப் பகுதிகளும் இருப்பதாக அறியப் பட்டுள்ளன.  காஸ்ஸினி விண்கப்பல் 2005 ஆண்டில் முதன்முதலில் என்சிலாடஸ் அருகில் பயணம் செய்த போது வெந்நீர் ஊற்றுக்கள் கிளம்புவதைப் படமெடுத்து வானியல் விஞ்ஞானிகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது !

    Encyladus geysers -4

    என்சிலாடஸ் தென் துருவத்தில் பீறிடும் முகில் எழுச்சிகளில் உள்ளவை என்ன ?

    வரிப்புலிப் பனித்தளத்தில் பீச்சிடும் ஊற்றுக்களில் உள்ளவை, வால்மீன்களின் பனித்தூள்கள் (Icy Grains) போல் தெரிகின்றன.  என்சிலாடஸ் துணைக்கோளின் ஊற்று எழுச்சிகள் வால்மீனின் வால் எழுச்சிகள் போல் தோன்றினாலும் அது வால்மீன் ஆகாது.  வால்மீனின் வால் நீட்சி பரிதியின் ஈர்ப்பு விசையால் எதிராகத் தள்ளப்படுகிறது.  ஆனால் என்சிலாடஸின் வெந்நீர் எழுச்சிகள் அதன் அடித்தட்டு நகர்ச்சிகளால் (Plate Tectonics) உந்தப் படுகின்றன.  பனித்தளங்கள் தென் துருவப் பகுதியில் நூற்றுக் கணக்கான மீடர் ஆழம்வரைப் படர்ந்துள்ளன.  சில இடங்களில் ஆழம் குறைவு.  அந்தத் தளங்களின் பிளவுகளிலிருந்து பீறிடும் ஊற்றுக்களின் உஷ்ணமும், அழுத்தமும் குன்றியே உள்ளன.

    பரிதியைச் சுற்றிவரும் சனிக்கோளின் தூரம் சுமார் 1.3 பில்லியன் கி.மீடர் (800 மில்லியன் மைல்).  ஆதலால் அதன் வெளி விளிம்பு வளையத்தின் அருகில் சுற்றிவரும் என்சிலாடஸ் மிக்கக் குளிர்ச்சியுள்ள கோளாகத்தான் இருக்க வேண்டும்.  ஆனால் அப்படி மிகக் குளிர்ந்த மண்டலத்தில் வெந்நீர் ஊற்றுக்கள் எப்படித் தென் துருவத்தில் எழுகின்றன ?  பனித்தளமாக இறுகி இருக்கும் நீர்க்கட்டிகள் முதலில் எப்படித் திரவம் ஆகின்றன ?  அதற்குப் பேரளவு வெப்ப சக்தி கோளின் உள்ளே எங்கிருந்து தொடர்ந்து கிடைக்கிறது ?  இரண்டாவது அந்த திரவ நீர் வெள்ளத்தை எரிமலை போல் கிளப்பி வெளித்தள்ள எப்படிப் பேரளவு உந்துசக்தி தொடர்ந்து உண்டாகுகிறது ?

    fig-1c-how-the-geyser-does-function

    பரிதி மண்டலத்தில் பூமியைப் போல் தன் வடிவுக்குள் சக்தியை உற்பத்தி செய்யும் சிறிய எண்ணிக்கைக் கோள்களில் என்சிலாடஸ் துணைக்கோளும் ஒன்று.  பூமியைப் போல் அடித்தட்டு நகர்ச்சியே உராய்வு வெப்பத்தை (Frictional Heat Generated by Tectonics Plates) என்சிடாலஸில் உண்டாக்குகிறது என்பது ஒரு கோட்பாடு.  யுரேனியம் போன்ற கதிரியக்க உலோகங்கள் தேய்வதால் எழும் வெப்பச் சக்தியால் (Radioactive Decay Heat) பனிக்கட்டிகள் திரவமாக மாறுகின்றன என்பது இரண்டாவது கோட்பாடு.  நீர் வெள்ளத்துக்கு உந்துசக்தி அளிப்பது, பூமியில் சுனாமியை உண்டாக்கும் கடல் அடித்தட்டு ஆட்ட உசுப்புகள் போன்ற நிகழ்ச்சியே.  காஸ்ஸினி விண்ணுளவியில் அமைக்கப் பட்டுள்ள “உட்சிவப்புக் கதிர்வீச்சு மானி” (Infrared Radiation Monitor) என்சிலாடஸின் தென்துருவத்தில் மிகுந்துள்ள உஷ்ணத்தை அளந்து வெப்பப் பகுதிகள் இருப்பதைக் காட்டியது.  அடுத்தொரு கருவி மற்ற பகுதியில் இல்லாத கண்ணாடிப் பனித்தளங் களைக் காட்டியது.  மேலும் காமிராக்கள் பனித்தளத்தில் உள்ள பெரும் பிளவு முறிவுகளைப் படமெடுத்தன.  மற்றுமொரு கருவி நூற்றுக் கணக்கான மைல் உயரத்தில் எழுந்திடும் நீர்ப்பனித் தூள்கள் கலந்த வாயு முகில்களைக் காட்டியது.

    aj

    தென்துருவ ஊற்றுகளில் கசிந்து வெளியேறும் வெப்பமும் வாயுக்களும்

    என்சிலாடஸின் தென்பகுதியில் உள்ள புதிரான, மர்மமான வெப்ப சக்தியைக் குளிர்மயம் சூழ்ந்த விண்வெளியில் சூரியன் அளிக்க முடியாது.  சனிக்கோளில் நேரும் கொந்தளிப்பு “இழுப்பு-விலக்கு” விசைகள் என்சிலாடஸில் வெப்பத்தை உண்டாக்கலாம்.  அந்த வெப்பம் பனித்தட்டை நீராக்கி அடித்தளதில் அழுத்ததை மிகையாக்கலாம்.  பிறகு நீர் கொதித்து வெப்ப ஆவி பனித்தளத்தைப் பிளந்து நீரெழுச்சி ஊற்றுக்கள் தோன்றிப் பனித்தூள்களுடன் பீறிட்டு எழலாம்.  என்சிலாடஸ் போன்று உட்புற வெப்பத்தைக் காட்டும் மற்ற கோள்கள் : பூமி, வியழக் கோளின் துணைக்கோள் “லோ” [LO] மற்றும் நெப்டியூன் கோளின் துணைக்கோள் டிரிடான் (Triton).  பூமியும், லோ துணைக்கோளும் வெளியேற்றும் எரிமலை எழுச்சிகளில் உருகியோடும் தாதுக்களையும் (Molten Materials), ஆவி வாயுக்களையும் காணலாம்.

    தென் துருவத்தில் தெரியும் நீண்ட பனிப்பிளவுகளின் மேல்தளம் அதிக உஷ்ணத்தில் இருக்கிறது.  பிளவின் உட்புற உஷ்ணம் : 145 டிகிரி கெல்வின் (-200 டிகிரி F) அல்லது (-130 டிகிரி C)   பனித்தளத்தின் கீழ் 40 மீடர் (130 அடி ஆழத்தில்) கொதிக்கும் வெந்நீர் இருக்க வேண்டும் என்று கணிக்கப்படுகிறது.  இந்தக் கண்டுபிடிப்பு மகத்தானது.  அதுவே என்சிலாடஸில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடுமா என்று சிந்திக்கவும் அது வழி காட்டுகிறது.  வெந்நீர் எழுச்சி முகில் ஊற்றுக்களில் நீரைத் தவிர மற்றும் நைட்டிரஜன், மீதேன், கார்பன் டையாக்ஸைடு ஆகிய வாயுக்களுடன், கார்பன் கலந்த மூலக்கூறுகளும் காணப்பட்டன.  2007 மே மாதம் வெளியான ஆய்வு அறிவிப்பில் என்சிலாடஸ் பனித்தளம் 3 முதல் 5 மைல் ஆழம் வரை அல்லது பத்து கி.மீடர் ஆழத்தில் கூட ஒருவேளை அமைந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் மதிப்பீடு செய்கிறார்.

    fig-4-hot-geysers-jump-upon-friction

    சனிக்கோளுக்கு ஏவப்பட்ட காஸ்ஸினி விண்கப்பல்

    1997 இல் ஏவப்பட்டு 2004 ஆண்டு ஜூலை முதல் தேதி காஸ்ஸினி விண்கப்பல் சனிக்கோளின் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கி, முதன்முதலாக அதைச் சுற்றத் துவங்கி அண்டவெளி யுகத்தில் ஒரு புதிய மைல் கல்லை நாட்டியது! பிளாரிடா கென்னடி விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து, 1997 அக்டோபர் 15 ஆம் தேதி நாசா ஏவிய காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், சுமார் நான்கு ஆண்டுகளாய் 2.2 பில்லியன் மைல் கடந்து, சனிக்கோளை முற்றுகையிட ஆரம்பித்தது! தாய்க்கப்பல் காஸ்ஸினி சனிக்கோளைச் சுற்றிவர, 2004 டிசம்பர் 25 ஆம் தேதி ஹியூஜென்ஸ் சேய்க்கப்பல் பிரிக்கப்பட்டு, பாராசூட் குடை விரித்து டிடானில் 2005 ஜனவரி 15 இல் இறங்கி முதன் முதலாக நெருங்கிப் படமெடுத்தது. சனிக்கோள், அதன் வளையங்கள், அதன் காந்த கோளம், டிடான் போன்ற மற்ற பனித்தளத் துணைக்கோள்கள் ஆகியவற்றைப் பற்றி மிகையான மெய்ப்பாடுத் தகவல்களை அறியப் பதினேழு உலக நாடுகளின் திறமை மிக்க 260 விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறார்கள்! 3.4 மில்லியன் நிதிச் செலவில் உருவான காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்வெளித் திட்டம் மாபெரும் அண்டவெளிப் பயணமாகும். காஸ்ஸினி ஹியூஜென்ஸ் நூதன விண்கப்பல் புரியும் மகத்தான சனிக்கோள்-டிடான் பயணம் 40 வருட அனுபவம் பெற்ற நாசா, ஈசா விஞ்ஞானிகள் பலரின் வல்லமையால் வடிவம் பெற்றது!

    fig-3-water-springs

    2006 மார்ச் மாதம் 9 ஆம் தேதி சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்கப்பல் அதன் துணைக் கோளான என்செலாடஸ் [Enceladus] உட்தளத்திலிருந்து பீறிட்டு எழும் நீர் ஊற்றுகளைப் [Geysers] படமெடுத்து பூகோளத்து விஞ்ஞானிகளுக்கு முதன்முதல் அனுப்பியுள்ளது! சனிக் கோளுக்கு இதுவரைக் கண்டுபிடிக்கப்பட்ட 52 (2008 வரை) சந்திரன்களில் ஒன்று என்செலாடஸ். சூரிய மண்டலத்திலே பூமிக்கு அடுத்தபடி நீர்மை யுள்ளதாகக் காட்டும் நீர்ப்பனிப் பாறைகள் கொண்ட செவ்வாய்க் கோளை விண்வெளிக் கப்பல்கள் படமெடுத்து அனுப்பின. விஞ்ஞானிகள் வியாழக் கோளின் துணைக்கோள் யுரோப்பாவில் [Europa] திரவக் கடல் ஒன்று உறைந்த பனித்தளத்தின் கீழிருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். இப்போது சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், அதன் துணைக்கோள் ஒன்றில் வெளியேறும் நீர் ஊற்றுக்கள் பீறிட்டு உட்தளத்தில் நீர் திரவமாகத் தங்கி யிருப்பதை நிரூபித்து உலக மாந்தரை வியப்பில் ஆழ்த்தி யிருக்கிறது !

    காஸ்ஸினி-ஹியூஜென் விண்ணுளவுத் திட்டக் குறிக்கோள் என்ன ?

    1970-1980 ஆண்டுகளில் பரிதியின் புறக்கோள்களை ஆராய ஏவிய பயனீயர், வாயேஜர் [Pioneer-11, Voyager-I & II] ஆகிய விண்கப்பல் பயணங்களில் தீர்க்கப்படாத புதிர்களை ஆய்ந்தறியக் காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பல் அண்டவெளியில் குறிப்பாக சனிக்கோளையும், அதன் பெரிய துணைக்கோளையும் உளவிட அனுப்பப்பட்டது. திட்டமிட்ட முக்கிய பயணக் குறிப்பணிகள் பின்வருபவை:

    1. சனிக்கோளுக்குப் பரிதியிலிருந்து உறிஞ்சும் ஒளிச்சக்தியை விட 87% மிகையான சக்தி சனியின் உட்கருவுக்கு எங்கிருந்து கிடைக்கிறது ?

    2. சனிக்கோளைத் தொடாமல் வெகு வேகத்தில் சுற்றிவரும் வளையங்களின் மூலப் பிறப்பிடம் எது ?

    3. சனிக்கோளின் வளையங்களுக்குக் கண்கவர் நிறங்கள் எங்கிருந்து பூசப்படுகின்றன ?

    4. முப்பத்தி யொன்று நிலவுகளைக் கொண்ட சனிக்கோளுக்கு, வேறு சந்திரன்கள் ஏதேனும் உண்டா ? [இப்போது காஸ்ஸினி மேலும் 21 (மொத்தம் :52) துணைக்கோள்களைக் கண்டுபிடித்துள்ளது.]

    fig-5-saturns-moons

    5. சனியின் சந்திரன் என்சிலாடஸ் [Enceladus Moon] எப்படி வழவழப்பான ஒரு மேனியைக் கொண்டதாய் உள்ளது ? சமீபத்தில் உருகிப் போன குழம்பு ஆழக்குழிகளை [Craters] நிரப்பியதாய்க் கருதுவது ஒரு காரணமா ?  பனித்தளமாக இருந்தால் அடித்தளத்தில் நீர்க்கடல் ஒன்று உள்ளதா ?  2005 ஆம் ஆண்டில் காணப்பற்ற வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் எப்படி உண்டாகிகின்றன ?

    6. சனிக்கோளின் சந்திரன் ஐயாபீடஸ் [Iapetus Moon] ஒருபுறம் மட்டும் கரிய ஆர்கானிக் இரசாயனத்தை ஏன் பூசியுள்ளது ? அதன் மூலப் பிறப்பிடம் எது ?

    7. டிடான் சூழ்வெளியில் ஏற்படும் இரசாயன இயக்கங்கள் யாவை ?

    8. பூமியில் உயிரியல் நடப்புக்கு [Biological Activity] ஆதார மூலக்கூட்டான மீதேன் [Methane Compound] எப்படி டைட்டான் தளத்தில் பேரளவில் வந்தடைந்தது ?

    9. டிடானில் ஏதாவது கடல்கள் [மீதேன், ஈதேன்] உள்ளனவா ?

    10 மேலும் பெரும் பின்னலான ஆர்கானிக் மூலக்கூட்டுகள் [Complex Organic Compounds], உயிரியல் முன்தோற்ற மூலக்கூறுகள் [Pre-Biotic Molecules] டைட்டானில் இருக்கின்றனவா ?

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++
    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – Is There Life on Mars, Titan or Europa ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805151&format=html(வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ?
    20 (i) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40603171&format=html(Elceladus & Mars)
    20 (ii) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40407085&format=html(Cassini-Huygens Space Mission-1)
    20 (iii) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40501202&format=html(Cassini-Huygens Space Mission-2)
    21. The Daily Galaxy Website -The Biological Universe -A Galaxy Insight Posted By : Casey Kazan [Nov 20, 2008]
    22. Hutchinson Encyclopedia of the Earth Edited By : Peter Smith [1985]
    22 Earth Science & The Environment By : Graham Thompson, Ph.D. & Jonathan Turk, Ph.D.
    23. Astronomy Magazine : The Solar System -What Makes Earth Right for Life ? By : Jonathan Lunine [Dec 2008]
    24. Saturn’s Strangely Warm Moon By Emily Sohn [Dec 2005]
    25. NASA’s Report : Icy Particles Streaming form Saturn’s Enceladus [Dec 6, 2005]
    26 A Hot Start Might Explain Geysers on Enceladus [March 24, 2006]
    27. Science Daily: Enormous Plume of Dust & Water Spurts into Space from the South Pole of Enceladus [Feb 23, 2008]
    28. Daily Galaxy – Geysers on Saturn’s Moon Enceladus May Signal Underground Water & Microbial Life By Casey Kazan [Nov 11, 2008]
    29.  Saturn’s Dynamic Moon Enceladus Shows More Signs of Activity [Dec 15, 2008]
    30. Astronomy Now Online – Cassini Reveals Enceladus’ Shifting Terrain By Dr. Emily Baldwin [Dec 19, 2008]
    31 NASA Scientists Ask : Is Life Possible on Saturn’s Moon Enceladus ? [Dec 19, 2008]

    32. http://www.space.com/25340-saturn-moon-enceladus-ocean-discovery.html [April 3, 2014]

    33. http://www.jpl.nasa.gov/news/news.php?release=2014-246&utm_source=iContact&utm_medium=email&utm_campaign=NASAJPL&utm_content=cassini20140728  [July 28, 2014]

    34.  http://thetechjournal.com/space/nasas-spacecraft-cassini-spotted-101-geysers-saturns-icy-moon-enceladus.xhtml  [July 31, 2014]

    35.  http://www.techtimes.com/articles/11504/20140731/nasa-cassini-saturn-probe-spots-101-geysers-on-enceladus.htm [July 31, 2014]

    36.  http://live-news24.com/sci-tech/17282/Cassini-is-preparing-for-Saturns- [November 24, 2016]

    37. http://www.saturndaily.com/reports/Cassini_Makes_First_Ring_Grazing_Plunge_999.html  [December 6, 2016]

    38. https://www.sciencedaily.com/releases/2016/12/161207155755.htm  [December 7, 2016]

    39. http://howldb.com/p/nasa-cassini-spacecraft-sends-new-images-of-hexagon-on-verge-of-skimming-saturn-s-rings-03siu9  [December 7, 2016]

    40. http://live-news24.com/sci-tech/17790/Cassini-beams-first-Images-from-New-Orbit [December 8, 2016]

    ******************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) [December 9, 2016] [R-1]

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”ஸ்ரீ பகவான் உவாச’’….!
    ———————————————

    161210 - Gita Jayanti -wcol - lores

    ’’வானத்தில் மாருதி வந்துவிட்டார் வெற்றிக்கு,
    சேணத்தில் என்னிருப்புன் செல்வாக்கு, -ஞானமாய்
    கானத்தைத் தந்தேன்கேள், கீதா ரஹஸ்யமிது
    மானத்தைக் காக்கும் மருந்து’’….கிரேசி மோகன்….!

    Share