காதல் ரோஜாவே
ரா.பார்த்தசாரதி
முள்ளிடையே காணும் அழகிய ரோஜாப் பூவே
எப்படி பூத்து அழகாய் தலையசைக்கின்றாள்
வண்டுகள் சொன்ன புகழ்ந்துரையா! புகழுரைகூறும் யா !
ரோஜா மலரே நீ கொண்ட நாணத்தினாலா !
காதலன் கொடுத்த காதல் மலர் அடையாளத்திலா ,
அவள் கூறும் இனிமை பேச்சினிலா
காதலியின் மயக்கும் வேல்விழிப் பார்வைலா
தேவதையே ! என் நெஞ்சத்தின் நினைப்பிலா !
இளமைக் காதல், இணைவதும் இயற்கையே
காதலன் வர்ணிக்கும் வார்த்தைகள் செயற்கையே
காதல் என்பதே இரு விழிகளின் நேசமே
அதுவே அவர்கள் வசிக்கும் காதல் தேசமே !
சூரியனைக் கண்டால் தாமரை மலருமே
சந்திரனைக் கண்டால் அல்லி மலருமே
இயற்கையான ஒன்று, உள்ளம் கவர்வதும் ஒன்று
உள்ளம் கவர்ந்தவனை கண்டால் முகம் மலர்வது என்று !
காதலில் கனவுகள் மாறி, மாறித் தோன்றும்
காதலியை நினைந்து மனம் மகிழும்
விழித்தவுடன் தெரியும் எது உண்மையென்று
மனம் நினைத்தாலே காதலியை அழைக்கும் என்று !
காதல் ரோஜாவே, காதல் கண்மணியே 1
ரோஜா இதழ் என நின் மேனி கண்டேனே
கோவைப் பழம் போன்ற நின் உதட்டினை கண்டேனே !
உன் முல்லைச் சிரிப்பினிலே நான் தொலைந்துபோனேனே !