Month: June 2016

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    ”கண்ணன் அனுபூதி’’
    —————————————-

    6005fb16-72e9-444f-ae9c-9cea6399ab19
    கூப்பிட்டால் ஆயர்க்காய்க் கூச்சலிட்டால் ஆனைக்காய்ச்
    சாப்பிட்டால் நட்புக்காய்ச் சோர்வின்றிக் -காப்பிட்ட
    ராதை கரம்விலக்கிக் கீதை உரைநிறுத்தி
    ஆதரவுக்(கு) ஓடும் அரி….(16)

    அரியா தவனை அறியா தவரே
    அறிய முயல்வர் அறிவால் -எறியா(து)
    ஒளிந்த நெருப்பை உணர மரத்தைப்
    பிளந்த குருடனைப் போல்….(17)

    ‘போலெ’ன்(று) உவமை புகல முடியாது
    மாலென் றனரோ மகாகவிகள் -கேளொன்று
    சிந்தனை தேவையா சித்திரத்திற்(கு) ஓவியா
    எந்தனை வேறுவடி வாக்கு….(18)

    வாக்கிலே பாரதி வார்த்தைகள் வந்திட
    நாக்கிலே நம்மாழ்வார் நின்றிட -நோக்கிலே
    ஆண்டாளின் பக்தி அகலா(து) இருந்திட
    வேண்டினேன் கண்ணா வழங்கு….(19)

    வழங்கினாய் செல்வம், வழங்கினாய் சேலை
    வழங்கினாய் கீதை வணக்கம் -வழங்கிடும்
    காலம் முடிந்ததோ கண்ணா மவுனமாய்
    ஆலில் படுத்தாயோ ஆழ்ந்து….(20)

    வாவென்றால் வாலிபன், வாக்கில் வயோதிகன்
    தாவென்றால் கற்பகத் தாயவன் -சோவென்று
    மாரியருள் பெய்கின்ற காரிருள் கண்ணனே
    வேறிருள் போக்கும் விளக்கு….(23)

    விளக்கீசல் போலே வியனுலகில் ஈசா
    உளத்தாசை கொண்டிங்(கு) உதிர்ந்தேன் -அளப்பரிய
    ஆதியே உந்தனனு பூதியில் மூழ்கிடும்
    தேதியைச் சொல்லியெனைத் தேற்று….(24)….கிரேசி மோகன்….

    ”கோவிந் தனைச்சுற்றி கும்மி அடிக்குது
    ஆவின் தனங்கள்(மடி) அமுதளித்து(பால்சொரிந்து) -மேவுமந்த
    வெற்பேழை(திருமலை) விட்டிறங்கி, வாடும் அலமேலு
    கற்பரசியை கோவிந்தா காண்’’….கிரேசி மோகன்….

    ’’ஈற்றடிக்கு மாற்றடி’’….
    ——————————————–

    ஜரகண்டி சத்தத்தில் ஏன் சாம்பாதிக்கணும்
    செல்வ மகள் பத்மாவதி கீழ் திருப்பதியில் இருக்க….
    ’’கோவிந் தனைச்சுற்றி கும்மி அடிக்குது
    ஆவின் தனங்கள்(மடி) அமுதளித்து(பால்சொரிந்து) -மேவுமந்த
    வெற்பேழை(திருமலை) விட்டிறங்கு ,வாடும் அலமேலு
    கற்பரசி தானுந்தன் காசு’’….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    ’’கண்ணன் அனுபூதி’’
    —————————————-

    2227ce2b-d571-42b3-bffb-1e347e11ad9a
    நாக்கில் நரம்பின்றி நாளை நமதென்ற
    போக்கில் தடம்புரண்டு போய்விழுவோம் -தூக்கில்
    இடப்பட்டும் தூங்கும் மடப்பயலே அந்த
    இடப்பயல் தாளே இருப்பு….(10)
    இருப்பதிங்(கு) ஒன்றே இதன்பேர் கண்ணன்
    மறுப்பதை விட்டென் மனமே -கருப்பொருளைப்
    பார்க்காத போதும் பாடப் பரவசத்தில்
    கார்கால மேகத்தில் காண்….(11)

    காணவனைக் காற்றில் கலந்துவரும் கீதத்தில்
    நானென(து) இல்லாத மோனத்தில் -தேனளவு
    பார்க்கும் மலர்வண்டின் போக்கில் இனப்பெருக்கம்
    கோர்க்கும் குயுக்தியின் கண்….(12)

    கன்னங் கருத்தது காரிருள் போன்றது
    நண்ணும் நமக்கொளி நாளது -முன்னம்
    பிறக்காது பின்னர் இறக்காதாம் இன்னும்
    திறவாசொர் கத்தாள் அது….(13)

    அதனால் இதுவாய் இதனால் அதுவாய்
    மதனால் மயங்கும் மனமே -முதலாம்
    பதியாய் இருந்து பசுக்களை மேய்ப்போன்
    கதியாய்க் கிடக்கக் களிப்பு….(14)

    களிப்பில் திளைத்துக் களைத்துச் சலித்துப்
    புளிக்கும் பழமாம்இப் பூமி -ஒளித்த
    நிலத்தை வராகமாய் நெம்பிய ஆயர்
    குலத்தோனின் கால்கண்கை கூப்பு….(15)….கிரேசி மோகன்….

    Share
  • ’’கண்டேன் அனுமனை’’….

    கிரேசி மோகன்
    —————————————-

    வாழ்த்தியவன் வாகை விளம்பிட ஜாம்பவான்
    ஆழ்திரை ஆழிமேல் ஆதவனாய் -பாழ்படுத்த
    லங்கா புரிசென்று அங்கசோகக் கானுறையும்
    செங்கமலத் தாள்கண்ட சேய்….(49)

    சேயாய் இருக்கையில் சூரியனை சாப்பிட
    தாயார் தடுத்தும் தவிர்த்துவான் -பாய
    வெகுண்ட சுரர்கோன் வயிரத்தால் தாக்க
    அகண்ட(து) அனுமன் அடல்….(50)

    அடலவன் மோனம் கடலவன் ஞானம்
    சுடர்விடும் ராமம் சுகித்து -அட!இவன்
    எத்திறமும் அஞ்சிடும் ருத்திரன் அம்சமே
    சித்தமொரு மித்திவனைச் சேர்….(51)

    சேர்ந்த கவிக்குள சேற்றுச்செந் தாமரை
    நேர்ந்தரா மாயண நுட்பொருள் -சோர்ந்த
    மனமதில் பூக்க மகிழ்வு, நமஓம்
    அனுமதே நாமம் அணி….(52)

    அணிவான் அடக்கம் அயோத்தி இராமன்
    பணிவரக் கொள்வான் பதட்டம் -கனவிலும்
    அய்யனிடு காரியத்தை மெய்ப்பட வைத்திடச்
    செய்யும் இவன்தொழில் சீர்….(53)

    சீராகச் செல்ல சுவாஸத்தை நேர்படுத்தி
    காரோத ஆழக் கடல்தாண்டி -ஸ்ரீராமன்
    தாஸனெனச் சொல்லி தஸகண்டன் முன்வாலால்
    ஆஸனம் கொண்டோன் அழகு….(54)….கிரேசி மோகன்….

    Share
  • இன்னம்பூரான் பக்கம் [6] பெண்ணியம்: புதிய பார்வை [2]

    இன்னம்பூரான்
    ஜூன் 16, 2016

    innam

    கொள்ளிவாய் பிசாசு, பேய், குட்டிச்சாத்தான் ஆகியவை கண்டு அஞ்சுபவர்கள் ஆண் வர்க்கத்தைக் கண்டு நடுங்கவேண்டியதில்லை. ஆண்வர்க்கம் பேய்,பிசாசுகளுக்கு விலக்கு. ‘பெண் என்றால் பேயும் இரங்கும்’ என்பார்கள். ஆண்வர்க்கம் கிறங்குவதுடன் சரி.

    சில வருடங்களுக்கு முன் ஒரு மஞ்சள் நீராட்டு விழாவுக்கு அழைப்பு வரவே, எனக்கு செல்லமான அந்த சிறுமிக்கு என்ன பரிசு வாங்கலாம் என்று புரியவில்லை. தருணம் கிடைத்த போது, அவளையே கேட்டேன். ‘… உங்களிடம் கேட்க எனக்கு தயக்கம் இல்லை. எனக்கு இதெல்லாம் என்ன என்றே புரியவில்லை. கொஞ்சம் கிலியாகக் கூட இருக்கிறது. அம்மா ஏதோ கொஞ்சம் சொன்னாள். சரியாக புரியவில்லை. இதையெல்லாம் விளக்கிக் கூறும் புத்தகம் ஒன்றும், ஷீலா அணிந்திருக்கும் நெளி (ஒரு அழகிய வகை மோதிரம்) போல ஒன்று வாங்கி வரவும்…’ என்றாள். [‘பெரியவளான‘ அவள் ஒரு சிறுமி.] அவளை, சந்தேகங்கள் மட்டுமல்ல. இனம் தெரியாத பயம் ஒன்றும் சூழ்ந்திருந்தது. அது சில பழைய உண்மை சம்பவங்களை முன் கொணர்ந்தது. கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளுக்கு முன் ஒரு கர்நாடகமான குடும்பத்து சிறுமி ஒருவள் பூப்படைந்ததும், குடும்பமே ஒன்று திரண்டு, அந்த நிகழ்வை மறைத்து, உடனடியாக கிடைத்த மாப்பிள்ளைக்கு அவளை வரித்தார்கள்; அவனும் அற்பாயுளில் மறைந்தான். இது எந்த தெய்வத்துக்குப் பிரீதி என்று இன்று கூட எனக்கு புரியவில்லை. அது போகட்டும். அந்த காலகட்டத்து மற்றொரு செய்தியும் கிடைத்தது. பூப்படைந்தவுடன் தனிமை படுத்தப்பட்ட சிறுமிக்கு ஒன்றுமே புரியவில்லை. அச்சமும், பயமும், பீதியும் அவளை ஆட்கொண்டன. ஒரே உதறல். நோ ஆறுதல். பெற்றோர்களுக்கு பட்டு வாங்கவும், புட்டு அவிக்கவும் தான் நேரம் இருந்தது. பாவப்பட்ட அந்த ஜென்மம் துணைக்கு அமர்த்தப்பட்ட சிறுமியை தழுவியவாறு தூங்கினாளாம். இதற்கும் முந்திய இங்கிலாந்து கதை ஒன்று உளது. பூப்படைந்ததை, யாரும் விளக்காததால், ஒரு மர்மமான விகாரமாகக் கருதி ஒரு சிறுமி தன்னையே மாய்த்துக்கொண்டாள். அந்த சோகமான நிகழ்வு ஒரு நன்செயலுக்கு வித்திட்டது. ‘Befrienders International’ என்ற புனிதமான தன்னார்வ அமைப்பு உருவாகி, எத்தனையோ மன சஞ்சலங்களை நிவர்த்தி செய்து, பலரின் வாழ்க்கையை சீர்படுத்தியுள்ளது. அதன் மறுபதிப்பாகத் தான் ‘ஸ்நேஹா’ என்ற அமைப்பு சென்னையில் அற்புதமான சேவை செய்து வருகிறது. சரி, விஷயத்துக்குத் திரும்பி வருவோம்.

    பெண்ணியத்தின் புதிய பார்வைக்கு, பெண்ணினம் செய்யக்கூடிய பணிகள் கொஞ்சநஞ்சமில்லை. இந்த தொடரில் ஆணாதிக்கம், வன்முறை, பெண்ணின் மேன்மை, இருபாலாரும், எதிரும் புதிருமாக நிற்காமல் இணைந்து வாழ்வதின் மகிமை, மேலும் பற்பல விஷயங்கள் பேசப்படும். பட்டியலிட்டு, கோர்வையாக எழுதினால் தான் தெளிவு கிடைக்கும். அதனால், எந்ததொரு பகுதியும் பெண்ணியத்தின் புதிய பார்வையின் முழுமையான புத்தகமாக அமையாது. அந்த எல்லையை புரிந்து கொண்டு வரக்கூடிய கருத்துக்கள் மிகவும் உதவும். அவை தாராளமாகவே மாற்றுக்கருத்துக்களாக இருக்கலாம், வசை பாடாமல்.

    சிறார்கள் வளர்வதற்கும், சிறுமிகள் வளர்வதற்கும் இடையே பல வித்தியாசங்கள் இருக்கின்றன. அரும்பு மீசையும், கனத்த குரலும், அலை பாயும் கண்களும், முரட்டுத்தனமும் சிறார்கள் வளரும்போது தோன்றும் சின்னங்கள். அவை நல்வரவுகளே. அவனை அவை பாதித்து அலக்கழிப்பதில்லை. கொஞ்சம் விட்டுப்பிடித்தால் (திட்டமிட்டு) அவர்களை சமாளித்து விடலாம். உடலும், மனமும் நன்கு உரமிட்டு வளர உதவமுடியும். சிறுமிகளின் வனப்பு கூடுவதை கலையுணர்வுடன் பார்த்தால் அது ஒரு கண்கொள்ளாக்காட்சி. இறைவனின் வரம். இருபாலாருக்கும் பாலியல் ஈர்ப்பு ஏற்படுவது திண்ணம். அது இயற்கை. உடனுக்குடன் பாலியல் கனவு நனவாகுவது எந்த சமூகத்திலும் இயலாது என்பதால், கலக்கம், குழப்பம், சகபாடிகளிடமிருந்து தப்பும் தவறுமான செய்திகள் ஆகியவை இருபாலாரையும் பாடாய் படுத்தும். இது நாம் யாவரும் அனுபவத்தில் கண்டது தான். ஆனாலும் பூப்பெய்வது எப்போது நிகழும் என்பது தெரியாது என்பதாலும், சில பெற்றோர்கள் தக்கதொரு ஆலோசனை அளிப்பதைத் தள்ளிப்போடுவதாலும், அதனுடைய உடனடி பாதிப்பு பீதி அளிப்பதாக இருப்பதாலும், இந்த வாழ்வியல் நிகழ்வை பற்றி ஆண்கள் அறிந்து கொண்டதும், அதற்கு அனுசரித்து நடப்பதும் மிக குறைவு. சற்றே ஆங்கிலம் கலப்பதில் தவறு ஒன்றுமில்லை. செய்தி சேரவேண்டும். அவ்வளவு தான்.முன்னோடியாக ஒரு ஜோக். புருஷனும் பொஞ்சாதியும் (ஷிகாகோ சாதி நூல் நினைவுக்கு வருகிறது.)பலமுறை ஒத்திகை (பெண்ணரசியிடம் பேசவேண்டியதை) பார்த்த பின் அம்மாக்காரி மென்மையாக அணுகி, ‘இந்த பாலியல் விவகாரம்…’ என்று ஆரம்பித்தவுடன், பெண் சொன்னாளாம், ‘உனக்கு என்ன தெரிய வேண்டும். ஆண்டவனை – கூகிளாண்டவனை கேட்டு சொல்கிறேன்’ என்றாளாம் !

    “…As knowledge has accumulated about human development during puberty and beyond, and about the development of the brain in particular, it has become clear that the notion of adolescence as a stage of sexual maturation is far too simplistic.1 Many interlinked neuroendocrine changes and processes influence adolescent behaviour, as well as the way young adults think and make decisions.2 A better understanding of these changes and their dynamic extension into early adult life offers not only an opportunity for a new approach to minimising risks to health and wellbeing, but also a moment to engage young people during years that have such far-reaching consequences for their future adult life, and even for future generations…”.

    சித்திரத்துக்கு நன்றி: https://i.ytimg.com/vi/I6dpnQ2Xi9E/hqdefault.jpg

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (200)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இங்கிலாந்திலிருந்து இச்சிறியேனின் அன்பு வணக்கங்களுடன் இந்த மடலின் மூலம் உங்களுடன் மனம் திறப்பதில் மகிழ்வடைகிறேன் .

    fe670b57-95b4-4996-af2a-ee09fc7e1a3f

    இது நான் உங்களுக்கு வரையும் 200வது மடல் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். புலம்பெயர் வாழ்வின் உத்வேகத்துடனான சுழற்சியினுள் அகப்பட்டு ஆழியினுள் ஒரு சுழியில் அகப்பட்டு இழுத்துச் செல்லப்படும் மீனைப்போல காலவோட்டத்தோடு இழுத்துச் செல்லப்படுகையில் மனதின் உணர்வுகளுக்கு ஒரு வடிகாலாய் இம்மடலின் மூலம் உறவாடக் கிடைத்த சந்தர்ப்பத்திற்கு அனைவர்க்கும் பொதுவான இறைக்கு நன்றியைச் செலுத்துவதோடு அன்பினிய வல்லமை ஆசிரியர் குழுவினருக்கு எனது மனமுவந்த நன்றிகளை தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

    இன்று காலை விழித்தவுடன் இன்று 200வது மடல் எழுதப் போகிறேன் எனும் எண்ணம் எழுந்தபோது கூடவே இதன் மூலம் என்ன சாதித்து விட்டாய் என்றவொரு கேள்வியும் எழுந்தது. “சாதனை” என்றால் என்ன அதன் எல்லையை நிர்ணயிப்பது யார்? என்று சிந்தித்தபோது ஒவ்வொரு நாளும் வாழ்வினை மனசாட்சிக்கு விரோதமில்லாமல் வாழ்ந்து முடிப்பதே ஒரு சாதனைதான் எனும் பதிலும் கிடைத்தது.

    என்று என் எழுத்து நிற்கிறதோ அன்று எனது மனிதவாழ்க்கையின் அர்த்தமும் நின்றுபோய்விடும் என்பது உண்மை. என்னைப் பொருத்தவரை எழுத்து என்பது என்னை வாழவைக்கும் போஷாக்கு. உள்ளத்தில் ஓடும் உணர்வுகளை ஒன்று கோர்த்து அதனை சிந்தனை எனும் வடிதட்டினூடாக வடித்தெடுத்து அதை எழுத்துக்களாக வார்த்தெடுப்பது கூட ஒரு சிற்பி சிற்பத்தை செதுக்குவது போல, ஒரு ஓவியன் ஓவியத்தை வரைவது போல கலையின் அம்சமே என்பது உண்மையே.

    என் வாழ்வின் ஒரு 35 வருடகாலத்தை நான் எப்படிச் செலவழித்தேன் என்பதை தொடர்ந்து ஆய்வு செய்யும் போது என்னுள் எனக்குக் கிடைக்கும் தகவல்கள் பலசமயங்களில் என்னை ஆச்சரியப்பட வைக்கின்றன, ஆத்திரப்பட வைக்கின்றன, ஆனந்தப்பட வைக்கின்றன, ஆராதிக்க வைக்கின்றன ஏன் சிலசமயங்களில் அழக்கூட வைக்கின்றன.

    ஆனால் எனது எழுத்தின் அடிப்படை, எழுதத்தூண்டும் உணர்வுகளின் பிறப்பிடம் எனக்கு நான் கடந்து வந்த பாதைகளின் அனுபவத் திரட்டு என்று கூறுவதே பொருத்தமாகவிருக்கும். நான் இந்த மடல் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்வது, பகிர்ந்து கொள்ளப்போவது என் மனதில் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகளே ! ஒரே நிகழ்வு பலரது பார்வையில் பலவிதமாகப்படும் என்பதே உண்மை. அந்த வகையில் ஒரு புலம்பெயர் தமிழனின், இங்கிலாந்தினை தனது வாழ்விடமாக வரித்துக் கொண்ட ஒரு தமிழனின் பார்வையில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதே எனது மடலின் சாரமாக அமைகிறது.

    சில மடல்களில் இங்கிலாந்தின் அரசியல் நிகழ்வுகள், சில மடல்களில் இங்கு நடக்கும் வினோதமான நிகழ்வுகள், இங்குள்ள மக்களின் கலாச்சார வாழ்க்கைமுறை, வாழ்வின் எனது அனுபவங்களின் தாக்கத்தினால் எனது மனதில் விளைந்த எண்ணவோட்டங்கள் என பலவிதமான விடயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளேன், பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.

    நான் படித்த ஒரு குட்டிக்கதை ஞாபகத்திற்கு வருகிறது. “இப்போ படுக்கைக்குப் போகும் நேரமா? இல்லை விளையாட்டு நேரமா? “ என்று கேட்ட பேரக்குழந்தையை மடியில் இருத்தி ஒரு தாத்தா கூறுகிறார். “ நான் உன்னைப் போல் குழந்தையாக இருந்தபோது எல்லையில்லாத நேரம் இருந்தது. நான் விரும்பிய அனைத்தையும் செய்ய முடிந்தது நேரம் மெதுவாக நகர்வது போலத் தென்பட்டது எப்போது வளர்வேன் என்று காத்திருந்தேன். வளர்ந்து வாலிபனாகிப் பெரியவனானதும் எதற்குமே நேரம் போதாததாக இருந்தது எப்போதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டி இருந்தது. இப்போது வயதுபோன முதுமைப்பருவத்தில் என் பின்னால் எல்லையில்லா நேரம் இருக்கிறது முன்னால் இருக்கும் நேரமோ சொற்பமானது. இப்போதுதான் புரிகிறது நேரம் என்பது எப்போதும் ஒன்றுதான் அதை நாம் புரிந்து கொள்ளும் வகையில் தான் அதன் அளவும் இருக்கிறது” என்றார்.

    ஆமாம் முதுமையின் வாசலில் வந்து நிற்கும் என்முன்னே நான் மனதில் எண்ணுபவற்றை எழுதி முடிக்க என் வாழ்வின் நீளம் போதுமானதா ? எனும் சந்தேகம் பிறக்க ஆரம்பித்து விட்டது. ஏனெனில் எழுத வேண்டும் எனும் உணர்ச்சி மடையால் அடைக்கப்பட்டிருக்கும் வெள்ளத்தைப் போல் வீரியத்தோடு சீறிப்பாயக் காத்திருக்கிறது.

    என்னைச் செதுக்கியவர்களைப் பற்றி என் மனதில் எழும் எத்தனையோ எண்ணங்கள் வடிக்கப்படாத ஓவியங்களாக என் மனத்திரையினில் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. இடையில் தடைப்பட்டுப் போயிருந்த எனது “தமிழ்ப்பூங்கா” இதழை மீண்டும் காலாண்டு இதழாக உயிர்ப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் அந்த அனைவர்க்கும் பொதுவான இறையின் அருளால் மீண்டும் விரைவில் தமிழ்ப்பூங்கா இணையவழி மூலம் தவழும் எனும் நம்பிக்கை எனக்குண்டு.

    நடந்து முடிந்த சென்னைப்புத்தக விழாவில் மணிமேகலைப்பிரசுரத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது எனது எட்டாவது நூலான “வியத்தகு விஷயங்களை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடி”.

    முகநூலில் நான் கவியரசருக்குக் கட்டியிருக்கும் ஒரு நினைவூஞ்சல், அன்பு ஜயாவும் என்னைச் செதுக்கியவர்களில் ஒருவருமான வாலி ஜயாவுக்கான “வாலிபக் கவிஞன் வாலி” பக்கம் என எழுத்தோட்டத்தின் சிறிய கால்வாய்கள் ஓட ஆரம்பித்திருக்கின்றன. நெஞ்சினில் ஊறும் எண்ணங்களை எழுத்தாக வடிக்கும் இம்முயற்சிகளின் ஆணிவேரே வாசகர்களாகிய நீங்கள்தான். உங்கள் அன்பும் , ஆதரவும் வல்லமை ஆசிரியர் சகோதரி பவளா உட்பட்ட ஆசிரியர் குழுவினர் மற்றும் பல இணையத்தளங்கள் எனக்கு அளித்திடும் தொடர்ந்த ஆக்கப்பூர்வமான ஊக்கமும் இல்லையேல் எனது எழுத்துக்கள் இல்லை.

    cf943616-7e5a-4ab4-9fe0-aff751956248

    இத்தனை காலமும் எனக்கு அளித்துவந்த அதரவுபோல தொடர்ந்தும் ஆதரவளிப்பீர்கள் எனும் நம்பிக்கையோடு எனது இந்த 200வது மடலில் உங்களுக்கு எனது பணிவன்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    பூபாரம் போக்க வந்தவன்
    ஆபாரம் தூக்குகிறான்….சபாஷ் கேசவ்…..

    da12c2ff-f2e9-4449-9790-04f25365f15d

    ”பட்டா பிஷேகம்:சார் பட்டா பரம்பரைக்,
    கிட்டா கரங்களில் கன்றேந்தி -கொட்டொகொட்
    என்றவன்மேல் கொட்டப்பால், கேசவ் வரைவின்று
    வென்ன்றிடும் ஆஸ்கார் விருது”….கிரேசி மோகன்….

    Share
  • “மதச்சிறைக்குள்”

    மீ.விசுவநாதன்

    பச்சைக் கிளியில் பலவகை வண்ணமும்,
    கொச்சை மொழிசொலும் குஞ்சுக் குருவியில்

    மஞ்சள். கருஞ்சாம்பல். மாநிறம் என்றுபல
    நெஞ்சங் கவர்ந்த நிறைய வண்ணமும்.

    சேவலின் கொண்டையில் செந்நிறச் சேர்க்கையும்,
    தாவிடும் வானரத் தாடையில் சந்தனம்

    நீவிய நேர்த்தியும், நீந்திடும் மீனுக்கு
    ஓவியக் காந்த ஒளிமிகும் வைரமணிக்

    கண்களும், ஊறுகிற கட்டெறும்பின் நாசியில்
    மண்ணளக்கும் ஞானமும், வாலிலே நாய்க்குநல்

    நன்றி சொலும் நரம்புகளும், குட்டையான
    பன்றிக்கு வாயால் பகைவிரட்டு(ம்) ஆற்றலும்,

    பாம்பிற்கு ரெண்டு பகுதியென நாக்குகளும்,
    கூம்பி இருக்கும் குலைவாழைப் பூவுக்குள்

    கொத்தாகக் கொண்டு குவித்த பழக்கூட்ட
    சத்தான சந்ததியும், சங்கீதம் பாடுகிற

    ஆற்றுநீர் மூச்சுக்கு ஆதார வான்மழையும்,
    கூற்றுவன் வந்தாலும் கொஞ்சமும் அஞ்சா

    திருப்பூர் குமரன், இளைய பகத்சிங்,
    கருப்பை முதலே கடுமையாம் போராளி

    வீரத்திலகர், வ.உ.சி, வீரவாஞ்சி போன்றோரின்
    காரமிகு தேசபக்தி கல்யாண நற்குணமும்,

    நாயன்மார் ஆழ்வார்கள் ஞானியர் சொல்லமுதம்,
    தூயன்நா மாவதற்குத் தொண்டுசெய்த சான்றோர்கள்,

    வால்மீகி, கம்பன், மகத்தான காளிதாசன்,
    ஆல்போலே வேர்விழுதாய் ஆடாமல் நிற்கும்

    பரம்பரையைப் பெற்றுள்ள பாரதியார் தேன்கவியும்,
    வரம்வாங்கி வந்ததுபோல் வற்றாத் தமிழ்க்கவிதை

    கண்ணதாசன் சொன்னதுவும், கல்யாண சுந்தரத்தின்
    மண்வாசப் பாடலும் , வாலி, தமிழழகன்,

    ஞானக் கவிரவி, நா.சீ. வரதராஜன்,
    கானக் கவிதேவ நாரா யணனும் ,

    இலந்தை இராமசாமி, வேதமெனக் கூடிக்
    கலந்துற வாடுகின்ற சந்தவ சந்தமும்,

    தமிழர் உ.வே.சா. தவப்பயனும், இன்னும்
    அவிழாத பற்பல ஆன்றோர்கள் சாதனையும்,

    நாத்திகமும் ஆத்திகமும் நாகிழியப் பேசுகிற
    பாத்திரமாய்த் தோன்றிப் படக்கெனப் போவதுவும்,

    எத்தனையோ இப்படி எளிதாக எல்லாமே
    சத்தமின்றிச் செய்யும் சரித்திர நாயகனை

    மொத்தமாய்க் கட்டி முகத்தில் அன்பாலே
    முத்த மிடநான் முடிவெடுத்த வேளை

    மதச்சிறைக்குள் மாட்டியவன் வாடும்
    விதத்தினைப் பார்த்தே விரக்தியில் வாடுறேனே !
    (16.06.2016)

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மய வீதி, ஒளிமந்தைகள், நிபுளாக்கள்

     jay

    (கட்டுரை: 8)

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++++++

    பால்மய வீதி சூரிய காலக்ஸி !

    பரிதி மண்டலக் கோள்கள்

    உருண்டோடும்

    விளையாட்டுச் சந்தை !

    பரிதி அங்கோர் வெள்ளாடு !

    குடை ராட்டினம் போல்

    கோள்கள் சுற்றிவர

    வெய்யோன்

    மையக் கனலை வணங்கி

    வலம்வரும்

    ஒளிமயமான மந்தை !

    பூமி சிறியது !

    பூமி சுற்றும் சூரியன் சிறியது !

    சூரியன் சுற்றி வரும்

    பால்மய வீதிப்

    பூதக் காலக்ஸி சிறியது !

    கோடான கோடி

    ஒளிமய மந்தைகள் விரைவாய்

    உந்திச் செல்லும்

    பிரபஞ்சக் குமிழிதான் பெரியது !

    விரியுது !

    +++++++++++

    ‘புனித வேத நூல்களில் நாம் காணும் மேன்மையான நியதிகளை நிலைநாட்டி மெய்ப்பிக்கவே, மனித முயற்சிகள் விஞ்ஞானத்தில் மேற்கொள்ளப் பட்டன என்று எனக்குத் தோன்றுகிறது ‘

    ஜான் ஹெர்ச்செல் (John F. Herschel) (1792-1871)

    Our Milky Way Galaxy

    பால்மய வீதியை முதன்முதலில் நோக்கிய விஞ்ஞானி கலிலியோ

    1600 ஆண்டின் ஆரம்ப காலத்தில் இத்தாலிய வானியல் விஞ்ஞான மேதை கலிலியோதான் முதன்முதல் நமது பால்மய வீதி (Milky Way Galaxy) காலக்ஸியைத் தனது தொலைநோக்கியில் கண்டு உளவு செய்தவர். அந்த ஒளி விண்ணரங்கில் எண்ணற்ற விண்மீன்கள் இருந்ததைக் கண்டு வியந்தார். அதற்குப் பிறகு 1755 இல் ஜெர்மன் வேதாந்தி இம்மானுவல் கென்ட் (Immanuel Kant) பால்மய வீதி குவியாடி போன்ற விண்மீன்களின் மந்தை (Lens-shaped Group of Stars) என்றும், அதனைப் போல் வேறு விண்மீன்களின் மந்தைகள் உள்ளன வென்றும் கூறினார். பிரிட்டனில் பணிபுரிந்த அடுத்தொரு ஜெர்மன் வானியல் நோக்காளர் வில்லியம் ஹெர்ச்செல்தான் (1738-1822) முதன்முதலில் விஞ்ஞான ரீதியாக பால்மய வீதியைத் துருவி ஆராய்ந்து எழுதியவர். அதற்குப் பிறகு அவரது சகோதரி கரோலின் ஹெர்ச்செல்லும் புதல்வர் ஜான் ஹெர்ச்செல்லும் வில்லியத்தைப் பின்பற்ற ஏராளமான காலாக்ஸிகளைத் தொலைநோக்கிகள் மூலம் கண்டுபிடித்துப் பதிவு செய்தார்கள்.

    காலக்ஸியும் அதில் சுற்றிவரும் கோடான கோடி விண்மீன்களும்

    காலக்ஸி என்றால் என்ன ? சூரியனைப் போன்ற கோடான கோடி விண்மீன்கள் மையக்கண் ஒன்றைச் சுற்றிவரும் ஒரு பூத வடிவான விண்ணரங்கமே காலக்ஸியாகக் கருதப்படுகிறது. அந்த காலக்ஸியில் விண்மீன்களுடன், விண்மீனைச் சுற்றும் அண்டக்கோள்களும், ஒளிமய நிபுளாக்களும், வாயுக்களும், தூசிகளும் மண்டிக் கிடக்கின்றன ! மேலும் காலக்ஸிகளில் மாபெரும் திணிவும், மையத்தில் அளவற்ற ஈர்ர்ப்பாற்றலும் கொண்ட கருந்துளை (Black Hole: A Single Point of Infinite Mass & Gravity) ஒன்றும் இருக்கலாம். பிரபஞ்சத்தின் பெரும்பான்மையான திணிவாகக் (Mass) கருதப்படும் 50 பில்லியனுக்கு மேற்பட்ட காலக்ஸிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கணிக்கிறார்கள் ! கண்ணுக்குப் புலப்படாத கருமைப் பிண்டம் இல்லாமல், அவையே பிரபஞ்சத்தின் 90% திணிவைக் கொண்டிருப்பதாகவும் கருதப்படுகிறது.

    காலக்ஸிகள் சில சுருளாக இருப்பவை. சில நீள்வட்ட வடிவில் இருப்பவை. சில கோணலாக இருப்பவை. பால்மய காலக்ஸியும் அதன் அருகே உள்ள அன்டிரோமேடா காலக்ஸியும் சுருளானவை. காலக்ஸி முழுவதும் ஓர் அச்சில் சுற்றுவதால் விண்மீன்களைக் கவ்விக் கொண்டு சுருள் கரங்கள் தோன்றின. நீள்வட்ட காலக்ஸிகளில் சுருள் கரங்கள் எழாமல் பொதுவாகப் பழைய விண்மீன்களும் மிகச் சிறிதளவு வாயுக்களும், தூசிகளும் உள்ளன.

    குடை ராட்டினம் போல் நமது பரிதி மண்டலம் தனித்து ஒரு மையக்கண்ணைச் சுற்றி வருகிறது பால்மய வீதி காலக்ஸியே ! பால்மய வீதியில் பரிதியைப் போல் நூறு பில்லியன் விண்மீன்களும், ஒருவேளை கருந்துளை ஒன்றும் இருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது. நமது பால்மய வீதியில் விண்மீன் முந்திரிக் கொத்துகளும் (Star Clusters) அண்டக் கோள்களும், ஒளிமயமான நிபுளாக்களும், வாயு மேகங்களும், தூசிகளும், வெற்றிடமும் சேர்ந்து உள்ளன. பூர்வீக விண்மீன்களும், நெருங்கி அடர்ந்த கொத்துக்களும் (Denser Clusters), காலக்ஸி மையத்துக்கு அருகிலும், இளைய விண்மீன்களும், தளர்ந்த கொத்துக்களும் (Open Clusters) காலக்ஸி தளத்தட்டில் அமைந்துள்ளன !

    பால்மய வீதி காலக்ஸியின் தனித்துவச் சிறப்புகள்

    நமது பரிதி மண்டலம் சுற்றிவரும் பால்மய வீதி என்பது ஒருவிதச் சுருள் காலக்ஸியே (Spiral Galaxy). தீபாவளி சுருளாழி மத்தாப்பு போல் சுழல்வது. பால்மய வீதியின் விட்டம் சுமார் 100 ஆயிரம் ஒளியாண்டு தூரம் (One Light Year : ஓர் ஒளியாண்டு என்பது தூர அளவு : அதாவது விநாடிக்கு 186,000 மைல் வேகத்தில் செல்லும் ஒளி ஓராண்டு செல்லும் தூரம்). மையக்கண்ணின் தடிப்பு ஈராயிரம் ஒளியாண்டு தூரம். மையக்கண்ணில் பழைய விண்மீன்களும் ஒரு கருந்துளையும் இருக்கலாம் என்று கருதப் படுகிறது. பால்மய வீதியைச் சுற்றிலும் ஓர் “ஒளிவட்டம்” (Halo) விண்மீன் கொத்துக்களாலும் (Band of Star Clusters), கண்ணுக்குப் புலப்படாத கருமைப் பிண்ட மேகத்தாலும் (Cloud of Dark Matter) அமைக்கப் பட்டுள்ளது ! அந்த சுருள் ஆழியில் நான்கு கரங்கள் சுற்றி வருகின்றன. ஆயிரக் கணக்கான விண்மீன்கள் தோரணங்களாய்ப் பின்னிய நான்கு கரங்களைத் தாங்கி பால்மய காலக்ஸி தன் மையத்தைக் கொண்டு சுற்றி வருகிறது !

    பரிதி மண்டலம் நான்கு கரங்களில் ஒன்றான ஓரியன் கரத்தில் (Orion Arm) மையத்திலிருந்து 30 ஆயிரம் ஒளியாண்டு தூரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது ! நமது பூமி சூரியனைச் சுற்றி வருவதுபோல், சூரியனும் பால்மய வீதியின் மையத்தை விநாடிக்கு 137 மைல் வேகத்தில் (220 கி.மீ./விநாடி) சுற்றி வருகிறது. அந்த வேகத்தில் சூரியன் ஒருமுறை முழுவட்டம் சுற்றிவர 200 மில்லியன் ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிடப் படுகிறது !

    விண்முகில் எனப்படும் நிபுளாக்கள் (Nebulae) என்றால் என்ன ?

    1924 இல் அமெரிக்க வானியல் விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் முதன்முதல் ஒரு சுருள் வடிவான நிபுளாவைக் கலி·போர்னியா வானோக்ககத் தொலைநோக்கியில் கண்டார். நிபுளா என்றால் முகில் என்பது பொருள். அகிலத் தூசிகள், அண்டவெளி வாயுக்கள் சீர்குலைந்த விண்மீன்களில் சிதறிப்போய்க், காட்சி முறையில் கையாளப்படும் ஒரு சொல் நிபுளா ! சில வாயுக்களாய் எஞ்சிய சிதைவுக் காலக்ஸிகள் ! சில நிபுளாக்கள் பேரொளியுடன் சுருளாக, அண்டங்களாக, கதிர் வீசுபவையாக, பிரதிபலிப்பவையாகவும் (Spiral, Planetary, Emission & Reflection Nebulae) உள்ளன. மற்றவை சூப்பர்நோவா வெடித்துச் சிதறிய துணுக்குகள். அண்ட நிபுளா என்பது (Planetary Nebula) வாயு முகில்களே ! தொலைநோக்கியில் பார்க்கும் போது கோள வடிவில் தெரிவதால் அவை அண்ட நிபுளாக்கள் என்று அழைக்கப்பட்டன. கதிர்வீச்சு நிபுளா (Emission Nebula) என்பதில் ஒளிவீசும் வாயு முகில்கள் உள்ளன. அவற்றின் உள்ளே அல்லது பின்னே சூடாக ஒளிவீசும் விண்மீன் இருக்கிறது. வாயுக்கள் அயனிகளாய்ப் பிரிந்து உயர்சக்தி புறவூதாக் கதிர்களை (High Energy Ultra-Violet Radiation) அவை உமிழ்கின்றன ! உதாரணமாக ஓரியன் நிபுளாவில் (Orion Nebula) ஹைடிரஜன் வாயுள்ள ஒருவிதப் பச்சை நிற முகில் தெரிகிறது.

    பிரபஞ்ச காலக்ஸிகளை ஆராய்ந்த ஹெர்ச்செல் குடும்பத்தார்

    பிரிட்டிஷ் ஜெர்மன் விஞ்ஞானி வில்லியம் ஹெர்ச்செல், அவரது தங்கை கரோலின் ஹெர்ச்செல், தனயன் ஜான் ஹெர்ச்செல் ஆகிய மூவரும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் விந்தையான பல ஒளிமீன் மந்தைகளை விண்வெளியில் கண்டுபிடித்து, வானியல் வரலாற்றில் புரட்சியை உண்டாக்கினார்கள். வில்லியம் ஹெர்ச்செல் யுரேனஸ் புதுக்கோளையும், அதனிரு துணைகோளையும் கண்டவர். தங்கை கரோலின் சகோதரன் வில்லியத்துடன் துணையாகப் பணியாற்றி அவற்றைத் தொடர்ந்து பதிவு செய்து, சில வால்மீன்களையும் கண்டு பிடித்தவர். வில்லியத்தின் மகன் ஜான் ஹெர்ச்செல் வானியல், கணிதம், பெளதிகம் [Physics], நிழற்பட இரசாயனம் [Photochemistry], விஞ்ஞான வேதாந்தம் [Philosophy of Science] ஆகிய துறைகளில் தனது மேம்பட்ட பங்கை முக்கிய பகுதியில் அளித்திருக்கிறார். சார்லஸ் டார்வின், மைக்கேல் ·பாரடே, மேரி ஸோமர்வில் மற்றும் பல உலக மேதைகள் அவருடன் கொண்டிருந்த 7500 தொடர்புக் கடிதங்கள், அவரது நூற் களஞ்சியத்தில் [Archives] பாதுகாப்பாய் சேமித்து வைக்கப் பட்டுள்ளன.

    பால்மய வீதி ஒளிமந்தை

    தந்தையைப் பின்பற்றி 20 அடி, 40 அடி குவிநீளத் தொலை நோக்கிகளில் வானைக் கண்ணளாவித் தனயன் ஜான் ஹெர்ச்செல் புரிந்த பணிகள் அநேகம். தென்னாப்பிக்காவின் தெற்குக் கோடியில் உள்ள நன்நம்பிக்கை முனையில் [Cape of Good Hope] பல்லாண்டுகள் தங்கி தென் மண்டல விண்கூரையைத் [Southern Celestical Hemisphere] தொலைநோக்கியில் உளவு செய்து 3347 இரட்டை விண்மீன்களையும் [Double Stars], 2602 நிபுளாக்களையும் [Nebulae] கண்டு பிடித்தார். அவர் வெளியிட்ட முதல் நிபுளா அட்டவணையில் [First Catalogue of Nebulae] காணும் 5079 பால்மய ஒளிமீன் மந்தைகளில் தந்தையார், வில்லியம் ஹெர்ச்செல் கண்டவை 2477. ஜான் கண்டவை: 2602.

    மேலும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய நிழற்படத் துறையை [Photographic Works] வளர்ச்சி செய்த முன்னோடிகளில் முக்கிய படைப்பாளியாகக் கருதப்படுவர், ஜான் ஹெர்ச்செல். ‘·போட்டோகிரா·பி ‘ [Photography] என்னும் பெயரைப் படைத்தவ§ அவர்தான். நிழற்படத் துறையில் ‘எதிர்ப்படநிழல் ‘, ‘நேர்ப்படநிழல் ‘ [Negative, Positive Films] என்னும் வார்த்தைகளைப் படைத்தவரும் ஜான் ஹெர்ச்செல்தான்!

    ஜான் ஹெர்ச்செல் புரிந்த மகத்தான விஞ்ஞானப் பணிகள்

    ஜான் ஹெர்ச்செல் 1792 இல் இங்கிலாந்து ஸ்லோவ் [Slough] என்னும் நகரில் பிரிட்டனில் குடிபுகுந்த ஜெர்மன் வில்லியம் ஹெர்ச்செலுக்குப் பிறந்த ஏக புதல்வன். கேம்பிரிட்ஜில் உள்ள புனித ஜான் கல்லூரியில் பயின்று கணிதத் துறையில் 1816 இல் பட்டம் பெற்றார். ஒப்பற்ற வானியல் விஞ்ஞானிகளான தந்தை வில்லியம், அத்தை கரோலின் இருவராலும் ஜான் வளர்க்கப் பட்டார். அவர் இருவது அருகில் வளர்ந்த ஜான் ஹெர்ச்செல் வானியல் துறையில் வல்லமையும், தொலைநோக்கி மூலம் வானோக்கி உளவும் பயிற்சியும் பெற்றார். தந்தையாரைப் பின்பற்றி அவர் கண்டுபிடித்த பால்மய ஒளிமீன்களின் எண்ணிக்கையை மிகையாக்கி ஆயிரக் கணக்கான இரட்டை மீன்கள் [Double Stars], ஒளிமீன் மந்தைகள் [Star Clusters], நிபுளாக்கள் [Nebulae] ஆகியற்றைக் கண்டுபிடித்தார். முதலில் (1864) வெளிவந்த நிபுளா, விண்மீன் திரட்சி பொது அட்டவணையில் [General Catalogue of Nebulae & Clusters] ஜான் ஹெர்ச்செல் மற்றும் தந்தையார் வில்லியம் ஹெர்ச்செல் இருவரும் கண்டவை 3347 இரட்டை விண்மீன்கள்; 2400 நிபுளாக்கள்.

    ஒளிமந்தை -1

    இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படித்த ஜான் ¦†ர்ச்செல் எவ்விதக் கல்வித் துறையிலும் பதவி ஏற்காமல் வாழ்நாள் முழுதும் வான்வெளி ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். அவரது கல்லூரி கணித ஆசிரியர், உட்ஹவுஸ் [Woodhouse] என்பவர். நியூட்டன் ஆக்கிய கால்குலஸ் [Calculus] போலின்றி சற்று எளிதான லெப்னிட்ஸ் [Leibnitz] படைத்த, கால்குலஸ் அணுகுமுறைக் கணிதத்தை ஆங்கிலத்தில் எழுதியவர் உட்ஹவுஸ்! கேம்ப்ரிட்ஜ் கல்லூரிப் பாடத்திட்டத்தில் ஏனோ லெப்னிட்ஸின் கால்குலஸ் அணுகு முறைகள் சேர்க்கப் படவில்லை. ஜான் தனிதாகத் தானாகப் படித்து அவ்வித எளிதான கால்குலஸ் அணுகு முறைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 1813 இல் கணிதத்தில் முதல்வராகத் தேறி முதல்நிலைப் பட்டம் பெற்றார்.

    ‘கோட்டே தேற்றத்தின் மகத்தான விளைவுப்பயன் ‘ [On a Remarkable Application of Cotes’s Theorem] என்னும் கணித விளக்கவுரையை எழுதி, ராயல் சொஸைட்டியின் ·பெல்லோ [Fellow of Royal Society] ஆனார். 1820 இல் இரண்டு ‘முடிவுறும் வேறுபாடுகளின் பயன்கள் ‘ [Applications of Finite Differences] என்னும் கணிதச் சிறப்பு நூல்களை வெளியிட்டார். 1820 ஆண்டுகளின் முடிவில் கணித ஆய்வுகளிலிருந்து விலகி, ஜான் ஹெர்ச்செல் தன் முழு ஆர்வத்தையும் வானியல் துறையில் [Astronomy] மூழ்க்கினார்.

    ஜான் ஹெர்ச்செல் வானியல் ஆய்வுத் துறையில் நுழைவு

    78 ஆவது வயதில் [1816] தந்தை வில்லியம் ¦†ச்செல் வானியல் பணியில் தளர்ச்சி யுற்றதும், ஜான் ஹெர்ச்செல் அப்பணியை அவர்சார்ப்பில் தொடர்ந்தார். 1822 இல் வில்லியம் காலமானதும்,அத்தை கரோலின் மீண்டும் ஹானோவர், ஜெர்மனிக்குச் சென்றார். அந்த ஆண்டில்தான் ஜான் ஹெர்ச்செல் சந்திர கிரகணத்தைப் புதிய முறையில் கணிக்கும் [Eclipses of the Moon] சிறியதோர் வானியல் விஞ்ஞான முதல் ஆய்விதழை வெளியிட்டார். ஆனால் அவரது முதற் பெரும் பதிப்பு என்று கருதப்படுவது: லண்டன் ராயல் சொஸைடி வெளியிட்ட ‘இரட்டை விண்மீன்களின் அட்டவணை’ [Catalogue of Double Stars (1824)]. வில்லியம் ஹெர்ச்செல்லைப் போல், ஜானும் ஆழ்வெளியில் அதிதூரத்தில் நகரும் விண்மீன்களின் [Deep Space Distant Stars] போக்கை நோக்கி வந்தார். தொலை விண்மீன் ஒன்றின் ‘இணைத்திரிபு இடஅமைப்பைக் ‘ [Parallax of a Star] கணிக்க முயன்றார். அப்போது இரட்டை விண்மீன்கள் யாவும் ஓர் ஈர்ப்பு மையத்தைச் சுற்றி வரக் கண்டு, அவற்றின் சுற்றுவீதிகளைக் [Orbits] கணிக்க, முதன்முதல் கணித முறைகளை வகுத்தார். 1833 ஆம் ஆண்டில் லண்டன் ராயல் சொஸைடி அப்பணிக்குத் தனது ராயல் தங்கப் பதக்கத்தை அளித்தது.

    பல்வகை ஒளிமந்தைகள்

    1834-1838 ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவின் கோடியில் உள்ள நன்னம்பிக்கை முனையில் [Cape of Good Hope] தங்கி தென்னக விண்கூரையை [Southern Hemisphere] நோக்கி உளவு செய்து, பால்மய விண்மீன்கள், நிபுளாக்கள் ஆகியற்றைப் பதிவு செய்தார். அங்கே தான் கொண்டுவந்த 20 அடி குவிநீளத் தொலைநோக்கியைப் பயன்படுத்தி வான்குடையை ஆய்வு செய்தார். தென்னாப்பிரிக்க வானில் அவர் கண்ட விந்தைகள்: 1835 இல் திரும்பி பூமி நோக்கி வந்த ஹாலியின் வால்மீன் [Halley ‘s Comet, Edmund Halley (1656-1742)] அவரது தொலைநோக்கியின் கண்ணில் பட்டது. வால்மீன்களின் விந்தை யான போக்குகளை ஆராய்ந்த போது ஈர்ப்பு விசையைத் தவிர வேறு பலதீவிர விசைகளும் அவற்றின் போக்கைப் பாதிக்கின்றன என்று அறிந்தார். பரிதியிலிருந்து வால்மீனை அப்பால் விரட்டும் விசையை அவரால் கணித முறையில் வகுக்க முடிந்தது. அப்போதுதான் ஜான் ஹெர்ச்செல் முதன் முதல் பரிதிக் காற்றைப் [Solar Wind] பற்றிக் கண்டுபிடிக்க ஏதுவாயிற்று! வால்மீனைத் தள்ளும் விலக்கு விசைக்கு [Repulsive Force], பரிதியின் காற்றே காரணம் என்பதை எடுத்துக் காட்டினார். மேலும் வால்மீனின் அண்டத்தி லிருந்து வாயுக்கள் ஆவியாய் வெளியேறுகின்றன என்று முதலில் கண்டுபிடித்தவரும் ஜான் ஹெர்ச்செல்லே! 1847 இல் தென்னாப்பிரிக்காவில்தான் கண்டுபிடித்த வானியல் விந்தைகளை நூலாக வெளியிட்டு, லண்டன் ராயல் சொஸைடியின் இரண்டாவது கோப்லே தங்கப் பதக்கத்தைப் [Copley Medal] பெற்றார்.

    ஆழ்வெளியில் ஒளிவீசும் பால்மய காலக்ஸி, நிபுளாக்கள்

    ஆதியின் முதல் பிரளயமாய்த் தோன்றிய பெரு வெடிப்பின் [Big Bang] விளைவாய் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிறந்தவையாக காலக்ஸிகள் கருதப் படுகின்றன! பிரபஞ்ச வெளியில் விண்மீன் மந்தைகள் கொண்ட காலக்ஸிகள் சீரான அமைப்புத் தீவுகளாய் உண்டாக வில்லை! அகிலத்தின் ஆக்கிரமிப்பு விசையான ஈர்ப்பியல் [Gravitation] பண்பு இழுத்து இணைத்துக் கொண்ட தீவுக் கூட்டங்களாய் அவை தென்படுகின்றன! ஒரு பில்லியன் ஒளிமயத் தீவுகள் அல்லது விண்மீன் பூத மந்தைகள் [Giant Clusters of Stars] பிரபஞ்சத்தில் உள்ளதாக ஊகிக்கப் படுகிறது. அந்த ஒளிமயத் தீவுகளே காலக்ஸிகள் [Galaxies] என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படுபவை.

    பல்வேறு ஒளிமந்தைகள்

    ஒவ்வொரு காலக்ஸியிலும் 100 பில்லியன் விண்மீன்கள் கூடி யுள்ளன என்று கணிக்கப் பட்டுள்ளது! அத்தகைய ஒரு சுய ஒளிமீனே நமக்குச் சுடர்தரும் பரிதி! நமது சூரிய மண்டலம் நகரும் காலக்ஸியைக் கொண்ட பால்மய வெளியில் [Milky Way] ஏராளமான மற்ற காலக்ஸிகளும் இருக்கின்றன! காலக்ஸிகளின் இடைவெளிகள் நினைத்துப் பார்க்க முடியாத தொலைவு தூரம்! நமது பால்மய வீதிக்கு நெருங்கிய காலக்ஸி 1.9 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ளது! [Light Years -Distance light covers in a year at the rate of 186000 miles/sec]. காலக்ஸித் தீவுகள் நீள்வட்ட உருவத்திலோ அல்லது சுருள் வடிவத்திலோதான் [Elliptical or Spiral Shape] தோன்றும்! ஒருவித ஒழுங்கு வடிவமும் இல்லாத காலக்ஸிகள், பிரபஞ்சத்தில் மிக மிகக் குறைவு.

    நிபுளாக்கள் என்பவை யாவை ? காலக்ஸிகளை உற்பத்தி செய்யும் மூல ஒளிமய முத்துக்களைக் [Materials that form Galaxies] கொண்ட, அல்லது காலக்ஸி விண்மீன் மந்தைகளைப் பெற்ற ஒளிமுகில் கூட்டம்! அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் [Edwin Hubble (1889-1953)] வெளியிட்ட ‘நிபுளாக்களின் பேரரங்கம் ‘ [The Realm of the Nebulae] என்னும் நூலில் காலக்ஸியானது பில்லியன் கணக்கில் விண்மீ ன்களை கோளத்தில் உள்ளடக்கிக் கொண்டு, பூமியிலிருந்து வெகு வெகு தூரத்தில் இருக்கிறது என்று சொல்கிறார். நமது பால்மய வெளிக் காலக்ஸி பில்லியன் காலக்ஸிகளில் ஒன்றானது! எத்தனை வகையான விண்மீன் ஒளித்தீவுகள் உள்ளன ?’ நிபுளா ‘: நிபுளா [Nebula] என்னும் சொல்லுக்கு ‘முகில் ‘ [Cloud] என்று அர்த்தம். அண்டக் கோள்கள், வால்மீன்கள், விண்கற்கள் [Planets, Comets, Astroids] தவிர ஏனைய வானியல் ஒளித்தீவுகள், ஒளி மந்தைகள் யாவும் முதலில் ஒரு சமயம் நிபுளாக்கள் என்று குறிப்பிடப் பட்டன. அப்பழைய அர்த்தத்தில் இன்னும் சில வானியல் நூல்கள் நிபுளா என்னும் பதத்தைப் பயன்படுத்தி வருவதில் குழப்பம் உண்டாகலாம்!

    சில சமயம் காலக்ஸிகள் [Galaxies (M51)], விண்மீன் மந்தைகள் [Star Clusters], அகிலவெளி மீனொளி வாயு/தூசி முகில்கள் [Intersteller Gas/Dust Clouds] ஆகியவற்றை நிபுளாக்கள் என்று குறிப்பிடுகிறோம். துல்லியமாகக் கூறப்போனால் விண்மீன் மந்தைகளைக் குறிப்பிடாது ‘நிபுளா ‘என்னும் சொல் வாயுமயம் அல்லது தூசிமயம் கொண்ட ‘முகிலுக்கு’ மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். பெரும்பான்மை யாக நிபுளாவின் முகிலில் இருப்பது ஹைடிரஜன் வாயு! மில்லியன் விண்மீன்கள் ஈர்ப்பு விசைகளால் கூடிய விண்வெளி மந்தைகள் இவை. பெரும்பாலும் பண்டை விண்மீன்கள் மண்டியவை! அவை சந்தை போன்று அலங்கோலமாய் அங்கு கொஞ்சம் இங்கும் கொஞ்சமாகப் பரவி, காலக்ஸியின் மட்டத்தில் திரண்டு சேராமல் உள்ளன. நமது காலக்ஸியைச் சேர்ந்த அநேக விண்மீன் திரட்சிகள் பொரி உருண்டை போன்றவை! குறிப்பிட்ட ஒரு பொரி உருண்டை ஒருசில ஒளியாண்டுகள் [A few light-years] அகலம் கொண்டது! ‘திறந்த விண்மீன் மந்தைகள் ‘ [Open Clusters (M44)]: சிதறிய முத்துக்களைப் போல் தெரிபவை இவை. நூற்றுக் கணக்கான புதிய விண்மீன்களைக் கொண்டவை. அவை யாவும் ஈர்ப்பு விசைகளால் சேர்க்கப் பட்டு, குறுகிய காலத்தில் பிரிந்து சென்று பிரகாசிப்பவை. காலக்ஸி விண்மீன் Globular Clusters மந்தைகள் [Galactic Clusters] என்றும் அழைக்கப்படுபவை. 50 ஒளியாண்டு தூரத்திற்குக் குறைந்த தொலைவில் இருப்பவை.

    பேரளவு உஷ்ண வாயு மண்டிய முகிலே ஒளி உமிழும் நிபுளாக்களாய் மிளிர்கின்றன. அண்டையில் புறவூதா ஒளியை [Ultra-violet Light] வீசும் விண்மீன் ஒன்றால், நிபுளாவின் முகிலில் உள்ள அணுக்கள் சக்தி பெற்றுக் கீழ் நிலைச் சக்திக்குத் தாவும் போது, நியான் மின்விளக்கு [Neon Light] போல வெளிச்சத்தை உமிழ்கின்றன! பெரும்பாலும் ஒளிசிந்தும் நிபுளாக்கள் செந்நிறமாய்க் காட்சி தருகின்றன! அதற்குக் காரணம், ஹைடிரஜன் வாயுவின் ‘ஒளிவீச்சு நாமம் ‘ [Emission Line] சிவப்பு நிறம்! மற்ற நிறங்கள் அருகில் தென்பட்டாலும், ஹைடிரஜன் அணுக்களே மிகுந்திருப்பதால் செந்நிறமே தனித்து மேனி முழுவதிலும் தெரிகிறது! புதிதாய்த் தோன்றிய விண்மீன் அல்லது தோன்றப் போகும் விண்மீன் அண்டவெளித் தளங்களில்தான், பொதுவாக ஒளிசிந்தும் நிபுளாக்களைக் காண முடிகிறது.

    ‘எதிரொளிக்கும் நிபுளாக்கள் ‘ [Reflection Nebulae (NGC 7023)]:

    பொதுவாக நீல நிறத்தில் தோன்றுபவை இந்த வகையான நிபுளாக்கள்! அருகில் பேரொளி வீசும் விண்மீன் ஒன்றின் ஒளியைப் பிரதிபலிக்கும் தூசி முகில்கள் [Clouds of Dust] இவை! பிரதிபலிக்கும் ஒளியில் மிகையாக நீல ஒளியே சிதறப்பட்டுக் கண்ணுக்குத் தென்படுகிறது! பொதுவாகச் செந்நிறத்தில் ஒளிசிந்தும் நிபுளாக்களும், நீல நிறத்தில் எதிரொளிக்கும் நிபுளாக்களும் அண்டவெளியில் இணையாக அருகிலே காட்சி அளிக்கின்றன! ஆதலால் அந்த இரண்டு நிபுளாக்களையும் ‘மலர்ச்சி நிபுளாக்கள் ‘ [Diffuse Nebulae] என்றும் குறிப்பிடுகிறார்கள்.

    ‘கரிய நிபுளாக்கள் ‘ [Dark Nebulae (NGC 2264)]:

    பின்புறம் அடிக்கும் ஒளியைத் தடுத்து வருவதால், இந்த நிபுளாக்கள் கரிய நிபுளாக்கள் போலக் காட்சி அளிக்கின்றன! நிழற்படக் கலையில் [Silhouette Photography] ஒளியைப் பின்புலமாக்கி வடிவத்தைப் படமெடுத்தால் கரிய உருவம் முகப்பில் தென்படுவதுபோல், கரிய நிபுளாக்கள் தோற்றம் அளிக்கும்! அவை எதிரொளிக்கும் நிபுளாக்களை ஒத்தவை. ஆனால் ஒரு வேறுபாடு: ஒளியானது நிபுளாவின் முகத்தில் படாது, அதன் முதுகில் படுகிறது! கரிய நிபுளாக்கள் பொதுவாக மலர்ச்சி நிபுளாக்களின் அருகே காணப்படுகின்றன!

    ‘அண்டக்கோள் நிபுளாக்கள் ‘ [Planetary Nebulae (M57)]:

    விண்மீன் தனது இறுதிக்கால நிலையில் வீசி எறிந்த வாயுக் கோளமே, அண்ட நிபுளா வென்று அழைக்கப் படுகிறது! நமது பரிதியும் 5 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, அதுபோல் ஓர் அண்டக்கோள் நிபுளாவை வீசி எறியலாம்! அவற்றை அண்டங்கள் என்று விளிப்பது பிழையானது. அண்டக் கோள்களுக்கும் [Planets] அவ்வகை நிபுளாக்களுக்கும் எவ்விதப் பண்பும், ஒற்றுமையும் கிடையாது! தொலைநோக்கியில் பார்க்கும் போது அண்டங்கள் போல் தோன்றலாம். அவ்வளவுதான். சாதாரணமான ஓர் அண்டக்கோள் நிபுளா ஓர் ஒளியாண்டு தூரத்துக்கும் குறைவான அகலத்தில்தான் உள்ளது!

    ‘சூப்பர்நோவா மிச்சங்கள் ‘ [Supernova Remnants (M1)]:

    பூத வடிவான விண்மீன் ஒன்று மரணம் அடையும் போது, பேரளவு ஒளிப்பிழம்புடன் பிரகாசித்துப் பரவிச் சிதறும்! அப்போது, அது ‘சூபர்நோவா ‘ என்று பெயர் பெறுகிறது! சில நாட்கள் சூபர்நோவா வெளியேற்றும் சக்தி, முழு காலக்ஸிக்கு இணையான பேரளவுச் சக்திபோல் தெரிகிறது! அம்மாதிரிப் பிரளய வெடிப்புக்குப் பிறகு, சூபர்நோவாவில் எஞ்சுவது, விண்மீனின் ஒரு பெரும் பகுதி! அம்மிச்சப் பகுதியின் அகலம் ஒரு சில ஒளியாண்டுகளே!

    வானியல் மேதை ஜான் ஹெர்ச்செலின் மறைவு

    ஜான் ஹெர்ச்செல் வெளியிட்ட ‘இயற்பியல் வேதாந்தத் தெளிவுரை ‘ [Discourse on Natural Philosophy] என்னும் நூலைப் படித்து, மைக்கேல் ·பாரடே [Michael Faraday (1791-1867)] அவரது ஞான வல்லமையைப் புகழ்ந்து கூறியது: ‘இயற்பியல் வேதாந்த நூலைப் படித்து இன்புற்ற பலருள் நானும் ஒருவன். அந்நூல் வேதாந்த மாணவருக்கு ஒரு பாடப் பதிப்பாக உதவத் தகுதி பெற்றது. அந்நூல் என்னைச் செம்மையான ஓர் ஆராய்ச்சியாளனாய் ஆக்கியது. என் ஒழுக்கப் பண்பாட்டை உயர்த்தியது. சொல்லப் போனால் என்னைச் சிறந்த சித்தாந்த வேதாந்தி யாக்கியது ‘.

    ஜான் ஹெர்ச்செல் காலத்து விஞ்ஞானிகள் அனைவரிலும் அவர் முன்னணியில் நிற்கும் மேதையாகக் கருதப்படுபவர். 1871 ஆம் ஆண்டில் காலமான ஜான் ஹெர்ச்செல் வெஸ்ட்மின்ஸ்டர் ஆபேயில் அடக்கம் செய்யப்பட்டார். அவரது அடக்கவுரையில் பிரென்ச் கணித நிபுணர் ஷான் பயாட் [Jean Biot (1774-1862)] கூறியது: ‘கணித மேதை லாப்பிளாஸ் [Laplace] 1827 ஆண்டில் மரணம் அடைந்த பின், அவருக்குப் பிறகு இணையாக மதிக்கப் படுபவர், ஜான் ஹெர்ச்செல். பிரிட்டனில் ஸர் ஐஸக் நியூட்டன் மறைவுக்குப் பிறகு, ஜான் ஹெர்ச்செல்லின் மரணமே ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பாக நான் கருதுகிறேன்!’

    தகவல்:

    1. Results of Astronomical Observations of John Herschel By: London, Smith, Elder Co.

    2. Letters & Papers of Sir John Herschel from the Archives of the Royal Society [1990]

    3. Types of Nebulae http://seds.lpl.arizona.edu/billa/twn/types.html

    4. William Herschel ‘s Catalogue of Deep Sky Objects

    5. Nebulae http://www.seds.org/messier/nebula.html

    6. Nebulae http://www.enchantedlearning/subjects/astronomy/stars/nebulae.html

    7. John Herschel By: J.J. O ‘Connor & E.F. Robertson

    8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40310231&format=html(ஜான் ஹெர்செல் கண்டுபிடித்த பால்மய வீதி, காலக்ஸிகள், நிபுளாக்கள்.

    9. The Handy Space Answer Book (1998)

    10. https://www.astroleague.org/content/bright-nebula-observing-program

    11.  https://en.wikipedia.org/wiki/Orion_Nebula  [June 6, 2016]

    ****************************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) June 15, 2016 [R-1]

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    கண்ணன் அனுபூதி….
    ——————————–

    6b98c0b2-d038-49be-bd51-df5b36f4e0dd

    ஆண்டவா நீலவண்ணம் பூண்டவா நீள்விசும்பில்
    நீண்டவா பாரதப் பாண்டவராய் -வேண்டவா?
    தூண்டவா பக்தியால் ? தீண்டவா பாரதியாய் ?
    கீண்டவா தீங்கைக் கிழித்து….
    கிழிந்து பிணியில் கிடக்கும் உடம்பைப்
    பிழிந்து சுகம்மேலும் பார்க்கும் -இழிந்த
    மனமேன் கொடுத்தாய் எனையேன் படைத்தாய்
    உனைஏன் கேட்கநான் உண்டு….
    உண்டில்லை என்றுனை இங்கிரு சாரர்கள்
    விண்டுரைத்த போதும் விசுவமே -கண்டுகொண்டேன்
    மித்யை ஜகத்தென்றும் சத்தியம் நீயென்றும்
    வித்தை பழகும் விதம்….

    விதவிதப் பூவாய் விதவையின் கூந்தற்
    பதவி பெறுவதென்ன பேறா! -புதுப்புது
    மேனியும், நோயும் ,மரணமும் நாடகம்
    தூணிலொளிந் தோன்கண் துடைப்பு….
    துடைப்பங் கழியைத் துணிப்பட்டால் மூடிப்
    படைத்தாய் பிறவிப் பிணியை -இடைப்பையா
    தீராவுன் ஆட்டத்தில் தோள்கொடுக்கும் தோழனெனை
    பாரா திருப்பதேன் பகர்….
    பகர்தல், பரிகசித்தல்,பீற்றல்,புலம்பல்
    இகழ்தல் எனவாச்(சு) வாழ்க்கை -உகிரால்
    இரணியனைக் கொன்றன்(று) இருதோ(ள்) அணிந்த
    நரஹரியே மோனத்தூ ணாக்கு….கிரேசி மோகன்….

    Share
  • பஞ்சமாபாதகம்

    பவள சங்கரி

    கொலை, பொய், களவு, கள்ளூண், குருநிந்தை ஆகிய பஞ்சமாபாதகங்கள் என்பது மிகவும் பெரியதொரு பாவம் என்றுதான் நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவற்றுக்கெல்லாம் கூடப் பரிகாரமும் கழுவாயும் உண்டு என்கிறது புறநானூறு.

    வேதத்தில் வல்லவர்களான அந்தணர்களைக் கொல்வது, பெண் கொலை புரிவது , குழந்தைகளை அழிப்பது போன்றவைகள் கொடும் பாவம் என்று கருதப்பட்டாலும் இந்தப் பாவங்களையெல்லாம் விடக் கொடுமையானது பொய் சொல்வதுதானாம்.

    பொன்ற வான்அந்தணர் பெண் புதல்வரைக்
    கொன்ற பாதகத்தில் கொடும் பொய்
    என்பது செஞ்சடை வேதிய தேசிகர் வாக்கு. – திருப்பனந்தாள் புராணம்

    “பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது” என்ற பழமொழி உறுதியாகச் சொல்லும் உண்மையும் இதுதான்.

    வள்ளுவப் பெருந்தகை இதையே

    பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
    செய்யாமை செய்யாமை நன்று (297)

    அதாவது பொய்யாமையை மட்டும் கடைபிடித்தால் போதும்; மற்ற எந்தவொரு தர்மமும் நீ செய்ய வேண்டிய தேவையில்லை என்கிறார்.

    Share
  • குட்டக் குட்டக் குனியும்போது

    நிர்மலா ராகவன்

    பத்திரிகையில் பெயர் வந்துவிட்டால், புகழ் வருகிறதோ இல்லையோ, எல்லாருக்கும் பொறாமை வருகிறது. என்னமோ பத்திரிகைக்காரர்கள் கொட்டிக் கொடுத்து, அந்த சன்மானத்தில் நாலு பங்களா வாங்கிப் போட்டுவிட்ட மாதிரிதான்! இந்த மனிதர்களை எண்ணி அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை இந்திராவுக்கு.

    இருபத்தைந்து ஆண்டுகளாக புனைப்பெயரிலேயே எழுதி தன்னை மறைத்துக் கொண்டவளின் போதாத காலம் ஏதோ போட்டியில் பரிசு கிடைத்து, புகைப்படம் மூலம் அவள் முகமும், அத்துடன் சொந்தப்பெயரும் எல்லாருக்கும் அறிமுகமாகிவிட்டது.

    பரிசு வாங்கியதில் தன்னம்பிக்கை துளிர்த்தது. துணிந்து, சமூகத்தின் குறைகளைச் சுட்டிக்காட்ட ஆரம்பித்தபோதுதான் பிடித்தது சனி.

    இவள் பெண்களுக்குச் சமத்துவம் கேட்கப்போய், எல்லாப் பெண்களும் விழித்துக்கொண்டு, அப்புறம் நம்மையே குப்புற வீழ்த்தி விடுவார்களோ என்று பயந்தார்கள் ஆண் வாசகர்கள்.

    பயம் இருப்பவன்தான் பயங்கரமானவனாக ஆகிறான் என்று எங்கோ படித்தது இந்திராவுக்கு நினைவு வந்தது.

    அடங்கிக் கிடப்பதுதான் பெண்ணாகப் பிறந்ததன் பயன் என்றெண்ணிய பெண்களோ, `இவள் என்ன நம்மை மட்டம் தட்டுவது!’ என்று ஆத்திரம் அடைந்தார்கள்.

    யாராவது மிகுந்த பலம் அடைவதற்குள் எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்று எல்லாருமே கங்கணம் கட்டிக்கொள்கிறார்கள். சிலர், வெளிப்படையாக எதுவும் செய்யத் துணிவின்றி, புகழ்வதுபோல, தந்திரமாகக் குழிபறிக்கிறார்கள்.

    எவனுக்கோ இவள் தலையெடுத்தது பிடிக்கவில்லை. இல்லாவிட்டால், நாற்பது வயதான, ஒரு பெண்ணுக்கும் தாயான இவள் பெயருக்குமுன்  `மிஸ்` போட்டு கடிதம் எழுதியிருப்பானா?

    `அது எப்படி கண்ட தடியனெல்லாம் என் பெண்டாட்டிக்கு கடுதாசி எழுதப்போச்சு!’ என்ற கோபத்தைவிட, எழுதின முட்டாள் `மிஸ். இந்திரா’ என்று விலாசத்தில் எழுதியிருந்ததுதான் கதிரேசனது ஆத்திரத்தைக் கிளப்பிவிட்டது.

    “உன்னையெல்லாம் காலை ஒடைச்சு, வீட்டிலேயே  வைக்கணும். பெரிய மனசு பண்ணி, வேலைக்குப் போக விட்டிருக்கேன்ல? சம்பாதிக்கிற திமிரு! அதான் கொழுத்துப் போச்சு!” என்று ஆரம்பித்தவன், என்னமோ இவள் தானாகப்போய் எவனுடனோ கள்ள உறவு வைத்துக்கொண்டதுபோல பேயாட்டம் ஆடினான்.

    அடுத்து என்ன நடக்கும் என்று புரிந்து போயிருந்தாலும், கணவனுக்கு எதிர்பேச்சு பேசாது, அடங்கிப்போவதுதான் ஒரு நல்ல மனைவியின் தர்மம் என்று வளர்க்கப்பட்டு இருந்ததால், பலியாடுபோல் எதற்கும் தயாராக நின்றாள்.

    தாயின் வீங்கிய முகத்திலும் உடலிலும் ஒத்தடம் கொடுத்தபடி வசந்தா பேசினாள்: “இன்னும் எத்தனை நாளைக்கும்மா இப்படி அடிபட்டு சாகப்போறீங்க? நீங்கதான் சுயமா சம்பாதிக்கிறீங்களே! எங்கேயாவது தனியா போயிடறது!”

    உலகம் புரியாத மகளைக் கனிவுடன் பார்த்தாள் இந்திரா. கல்யாணத்திற்கு நிற்பவள்!

    ஒரு பெண் கணவனிடம் படும் அவதியைப் பற்றி யாருக்கு என்ன  அக்கறை! `பொண்ணுக்கு அம்மா சரியில்லையாமே!’ என்றுதான் மற்ற எல்லாப் பெண்களும் வம்பு பேசுவார்கள்.

    பிறர் கிடக்கட்டும், தனக்கேகூட பயமாகத்தான் இருக்கிறது. ஒரு பெண் இந்த உலகத்தில் தனியாக இருக்க முடியுமோ? `ஆண் என்னும் கொழுகொம்பில் படருபவள்தான் பெண் என்னும் மெல்லியலாள்’ என்று சினிமா, கதைப்புத்தகங்கள் மூலம் நம்ப வைத்து விட்டார்களே!

    சரி, கொடுமைக்காரரான இவரை விட்டுவிட்டு, வேறு ஓர் ஆணைத் தேடிக்கொள்ளலாம்தான். அவன் மட்டும் நல்லவனாக இருப்பான் என்பது என்ன நிச்சயம்?

    தீர்மானிக்க முடியாததோர் எதிர்காலத்தைவிட கசப்பான நிகழ்காலத்தையே பொறுத்துப் போகலாம் என்றுதான் விரக்தியுடன் எவ்வளவோ இம்சையைத் தாங்கி வந்திருக்கிறாள். எல்லாம் இந்தப் பெண்ணுக்காகத்தானே! அது புரிகிறதா இவளுக்கு!

    “அப்பா முந்தியெல்லாம் இப்படியா இருந்தாரு! நம்ம போதாத காலம், குடிச்சுட்டு காடியை எவன்மேலேயோ ஏத்தி, லைசன்சு போயிடுச்சு. என்னடா, தனக்கு வேலை போயிடுச்சே, பொண்டாட்டி சம்பாதிச்சுக் கொண்டு வர்ற காசில சோறு திங்க வேண்டியிருக்கேன்னு அவமானம், பாவம்! அவரோட கோபத்தையும், வருத்தத்தையும் வேற யார்மேல காட்ட முடியும், வசந்தா?”

    ஆனால், தன் சமாதானத்தை மகளால் ஏற்க முடியவில்லை என்பது புரிந்தது. மகள் தந்தையைத் தவிர்ப்பதையும்,`நான் கல்யாணமே செய்துக்கப் போறதில்லே! அதான் ஃபேக்டரி வேலைக்குப் போறேனே!’ என்று திமிராகப் பேசுவதையும் பார்த்து இந்திராவுக்குப் பயம் வந்தது.

    `இந்த காலத்துப் பெண்கள் நம்மைப்போல கையாலாகாத அசடுகள் இல்லை!’ நினைக்கும்போதே பெருமிதம் ஏற்பட்டது.

    `பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும்,’ என்று அடிக்கடி எழுதிய தன்னுடைய தைரியம் எல்லாம் எழுத்தோடு சரி.`கணவன் செய்யும் எல்லா கொடுமையையும் பொறுத்துப் போகிறவள்தான் நல்ல பெண்!’ என்பதுபோல் அல்லவா நடந்துகொள்கிறோம்!

    இனியாவது ஊருக்கு உபதேசம் செய்து கொள்வதோடு நிற்காமல், தான் சொல்லி வருவதைத் தானே கடைப்பிடிக்க வேண்டும். இப்படித் தீர்மானம் செய்து கொண்டாலும், சிறிது பயமும் எழுந்தது இந்திராவுக்குள்.

    அன்று சம்பள நாள்.

    மனைவிக்காக வீட்டு வாசலிலேயே காத்திருந்தான் கதிரேசன்.

    “கொண்டா!” அவனது நீட்டிய கையை லட்சியம் செய்யாது, உள்ளே நடந்தாள் இந்திரா.

    நாராசமாகக் கத்தியபடி அவன் அவளைப் பின்தொடர்ந்தபோது, சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்தாள் வசந்தா. அவள் கண்கள் பயத்தில் விரிந்தன.

    அவ்வளவுதான். இந்திராவுக்கு எங்கிருந்தோ ஆவேசம் வந்தது. கைப்பையை இறுக அணைத்துக் கொண்டாள். “நான் ராப்பகலா வேலை பாக்கிறதில கிடைக்கற காசு இது! ஒங்களுக்கு எதுக்குக் குடுக்கிறது!”

    வழக்கத்துக்கு விரோதமான அந்த எதிர்ப்பில் கதிரேசன் சற்றே அயர்ந்து போனான். பிறகு, வெறியுடன் அவள்மேல் பாய, அதை எதிர்பார்த்தவளாக, சட்டென விலகினாள். தாவிய வேகத்தில் சுவற்றில் தலை மோதி, கீழே விழுந்தான்.

    சமாளித்தபடி எழுந்திருக்கப்போனவனை இந்திராவின் குரல் தாக்கியது. “சும்மா அப்படியே ஒக்காருங்க. நீங்க பாட்டில எல்லா காசையும் தண்ணியில விட்டுட்டா, வசந்தாவுக்கு ஒரு கல்யாணம், காட்சின்னு எப்படி செய்யறது?”

    “என்னமோ, வசந்தா வசந்தாங்கறியே! நானில்லாட்டி ஒம்பொண்ணு எப்படி வந்திருக்கும்!”

    இந்திராவின் உதடுகள் அலட்சியத்தில் விரிந்தன. `பிள்ளை பெத்துக்க எந்த ஆம்பளையா இருந்தா என்ன! கற்பழிப்புகூடத்தான் கருவில வந்து முடியுது!’ என்று அவள் நினைப்பு ஓடியது. வெளியில் சொல்வது அசிங்கம் என்று அடக்கிக்கொண்டாள்.

    “இதோ பாருங்க! வேலைவெட்டி எதுவும் இல்லாத ஒங்களை வெச்சு சோறு போடறேன் — நீங்க தாலி கட்டின தோஷத்துக்கு. அதுக்கு மீறி, என்மேல ஒங்க கை பட்டுச்சோ, போலீசுக்குப் போயிடுவேன். பொண்டாட்டியை அடிக்கிறது `குடும்ப விவகாரம்’ னு இப்ப யாரும் ஒதுங்கிப் போறதில்ல. நம்ப மலேசிய நாட்டில இது சட்ட விரோதம். தெரியுமில்ல?”

    வசந்தாவின் முகத்தில் ஓர் ஆச்சரியக் குறி. கண்ணில் மின்னல் கீற்று தோன்றி மறைந்தது நன்றாகவே புலப்பட்டது. தனக்குக்கூட தைரியம் வந்துவிட்ட பெருமையில், தலை நிமிர்ந்து உள்ளே நடந்தாள் இந்திரா.

    கதிரேசன் நிலைகுத்திப்போய் உட்கார்ந்திருந்தான்.

    `என்ன பொண்ணு நீ! புருஷனுக்கு மரியாதை குடுத்து நடக்கத் தெரியாது?’ ஏதோ தலைமுறையைச் சேர்ந்த எவளோ கூறியது அசரீரியாகக் கேட்டது.

    இந்திரா உதட்டைச் சுழித்தாள். “மரியாதை எல்லாம் குடுத்து வாங்கற சமாசாரம்!” உரக்கவே சொன்னாள்.

    Share
  • கனடா உலகத் தொல்காப்பிய மன்றத்தின் முதல்நாள் நிகழ்ச்சி

    முனைவர் மு.இளங்கோவன்

     c6ca441f-0aca-40ea-b0ce-77b651a8dd1f

    கனடா உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கருத்தரங்க நிகழ்ச்சி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கனடா வளாகத்தில் அமைந்துள்ள அரங்கில்  04.06.2016(காரிக்கிழமை) காலை 9.15 மணியளவில் தொடங்கியது. முனைவர் மு.இளங்கோவன் தலைமையில் தொடங்கிய கருத்தரங்க நிகழ்வில் 17 ஆய்வாளர்கள் தொல்காப்பியம் குறித்த கட்டுரைகளை வழங்கினர். இரண்டு அமர்வுகளாக இந்த நிகழ்வு நடைபெற்றது.  முதல் அமர்வில் சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்  சீதாலெட்சுமி அவர்கள் தொல்காப்பியம் பரவுவதற்குரிய வழிமுறைகளைத் தம் சிறப்புரையில் குறிப்பிட்டார்.

    கனடாவின் கல்வித்துறை – தமிழ், அதிகாரி திரு. பொ. விவேகானந்தன் அவர்கள் அன்பின் ஐந்திணை என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் தொல்காப்பியத்தில் வெட்சித்திணை என்ற தலைப்பில் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். திரு. க.குமரகுரு அவர்கள் தொல்காப்பியம் செப்பும் செய்யுள் உறுப்புகளும் பா வகைகளும் என்ற தலைப்பில் அரியதோர் ஆய்வுரை வழங்கினார். திருமதி லோகா இரவிச்சந்திரன் அவர்கள் தொல்காப்பியர் கூறும் இசையும் இசைப்பண்பாடும் என்ற தலைப்பில் உரை வழங்கினார். திரு. சபா. அருள் சுப்பிரமணியம் அவர்கள் தொல்காப்பியம் ஆசிரியர் மாணவர் என்ற தலைப்பில் உரை வழங்கி மாணவர்களுக்குத் தொல்காப்பியத்தைக் கொண்டு செல்வதற்குரிய வழிவகைகளைக் குறிப்பிட்டார். முனைவர் பார்வதி கந்தசாமி அவர்கள் தொல்காப்பியத்தில் பெண்கள் பற்றிய கருத்தாக்கம் என்ற தலைப்பில் அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.

    திருமதி யோகரத்தினம் செல்லையா அவர்கள் தொல்காப்பியம் சுட்டும் நாட்டுப்புறவியல் என்ற தலைப்பில் சிறப்பான உரை வழங்கினார்.

    பிற்பகல் 3 மணிக்கு அமைந்த இரண்டாவது செயல் அமர்வில் சுகந்தன் வல்லிபுரம் அவர்கள் கணினித் தமிழும் தொல்காப்பியமும் என்ற தலைப்பில் உரை வழங்கினார்.

    திரு. சிவபாலு அவர்கள் மரபுப்பெயர்கள் என்ற தலைப்பில் சிந்தனையைத் தூண்டும் பல கருத்துகளை முன்வைத்து அரிய உரை வழங்கினார். செல்வி மேரி கியூரி போல் அவர்கள் உடற்கூறியலும் தொல்காப்பியமும் என்ற தலைப்பில் ’உந்தி முதலா முந்து வளி’ என்னும் நூற்பா அடியை விளக்கி அவையினரின் பாராட்டினைப் பெற்றார். முனைவர் பால சிவகடாட்சம் அவர்கள் அரிஸ்டாட்டிலும் தொல்காப்பியரும் – உயிரினப் பாகுபாடு என்ற தலைப்பில் சிறப்பாக உரை வழங்கினார். அருட்தந்தை ஜோசப் சந்திரகாந்தன் அவர்கள் தொல்காப்பியம், வீரசோழியம் நூல்களின் ஒப்பாய்வு என்ற தலைப்பில் சிந்திக்கத் தூண்டும் பல கருத்துகளை முன்வைத்தார். பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் தொல்காப்பியத்தில் பண்டைத் தமிழர் அரசியல் என்ற தலைப்பில் அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். மருதுவர் இலம்போதரன் அவர்கள் கலந்துகொண்டு தொல்காப்பியமும் எழுத்துக்களின் பிறப்பும் என்ற தலைப்பில் தம் மருத்துவப் பட்டறிவுகொண்டு அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். திருமதி கவிதா இராமநாதன் அவர்கள் தொல்காப்பியர் கூறும் மக்கள் சமுதாயம் என்ற தலைப்பில் சிறந்த செய்திகளை அவைக்கு வழங்கினார்.

    திருமதி கார்த்திகா மகாதேவன் அவர்களின் நன்றியுரைக்குப் பிறகு முதல்நாள் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

    கனடாவில் வாழும் தமிழன்பர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    Share
  • இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-20

    உன்னைக்குறைகூறல் நேர்மையாமோ?

    மீனாட்சி பாலகணேஷ்

    ஏழெட்டுச் சிறுமியர்; தமது வழக்கமான சிற்றில் விளையாட்டை மும்முரமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அழகான சிறிய வீட்டைக்கட்டுகிறாள் ஒருத்தி. மலர்களாலும் கிளிஞ்சல்களாலும் சோடனைசெய்கிறாள் இன்னொரு சிறுமி. பக்கத்தில் அழகான பள்ளம் ஒன்றினைத் தோண்டி, அதில் நீரைநிரப்பித் தாமரைக்குளம் அமைத்துவிட்டாள் வேறொருத்தி. தாமரை எனும் பெண் ஓடோடிச்சென்று பக்கத்துக்குளத்திலிருந்து மலர்ந்த தாமரைமலர்கள் இரண்டினைப் பறித்துவந்து அதில் மிதக்கவும் விட்டுக்களிக்கிறாள். எல்லாரும் தாமிழைத்த இச்சிறு வீட்டைச் சுற்றிநின்று பாடிக்களிக்கிறார்கள்: கைகொட்டி ஆடுகிறார்கள்!

    ‘ஆத்தோரம் வீடுகட்டி, அழகான தோட்டம் வைத்து
    பாத்திருந்தோம் கண்ணாலே பரவசமா இந்நாளே!
    தாமரைப் பூங்குளமாம் அதிலேதுள்ளும் மீன்களுமாம்
    நாமெல்லாம் ஆடிடுவோம் நன்றாகப் பாடிடுவோம்’

    திடீரென்று ஓடோடி வருகிறான் ஒரு குறும்புக்காரச்சிறுவன். உயர்ந்து எழும்பி இவர்கள் சிற்றிலைச்சிதைக்கக் காலைத்தூக்கியபடி தாவுகிறான். எல்லாரிலும் பெரியவளான மங்கைக்கு இத்தகைய எதிர்ப்புகளை அவ்வப்பொழுது எதிர்பார்த்தே பழக்கம். தக்கசமயத்தில் சென்று அந்தச்சிறுவனை- அவன் பெயர் குமரன்- பின்புறத்திலிருந்து கட்டிப்பிடித்துக் கொண்டு அவன் தாவுவதைத் தடுத்துவிடுகிறாள்.
    மற்ற சிறுமிகளுக்கெல்லாம் ஒரே ஆத்திரம். அவனை அடிக்காதகுறைதான். அவனோ பெரிய இடத்துக்குழந்தை. வயதிலும் மிகச்சிறியவன். ஐந்தேபிராயம் நிரம்பியவன். அதனால்தான் யோசிக்கிறார்கள். சிவகாமிக்கு அழுகையே வந்துவிட்டது. சிலகணங்களில் அவர்கள் அழகான சிற்றில் சிதைந்திருக்குமே! காலையிலிருந்து முதுகெல்லாம் நோகும்படி, மணலைக்கொழித்துப் பார்த்துப்பார்த்து அமைத்த சிற்றிலல்லவோ?

    தன்முயற்சி தடைப்பட்டு விட்டதால், கைகால்களை உதைத்துக்கொண்டு, மங்கையின் பிடியிலிருந்து விடுபட எத்தனிக்கும் குமரனை அவள் இப்போது தன் இடுப்பில் எடுத்துக்கொண்டு, நல்லவார்த்தைகள் சொல்லி, கையில் ஒரு கொய்யாக்கனியைக் கொடுத்து, மரத்துக்கிளியைப் பிடித்துத்தருகிறேன் என ஆசைகாட்டி சமாதானம் செய்கிறாள். மற்ற சிறுமியர் கேட்கின்றனர்: ஐந்துபிராயத்துக் குழந்தைக்குப் புரியுமோ புரியாதோ அவர்கள் சொல்வது; ஆனால் அவன் சிவனின் குமரனல்லவா? பராசக்தி அன்னையின் மைந்தனல்லவா? தகப்பன் சாமியல்லவா? ஏன் புரியாது? அவர்கள் கேட்பதனை நாமும் செவிமடுப்போமா?



    “உன்தாய் பெரும் தவம்செய்து உன்னைப் பெற்றெடுத்தாள் குமரா! எல்லாக்கடவுள்களையும் அழைத்துக்காப்பிட்டு உன்னைத் தொட்டிலில் கண்வளர்த்தினாள். நீ தவழ்ந்து உன் திருமுகத்தை நிமிர்த்திச் செங்கீரை மொழிவதனைக்கேட்டும், ஆடுவதனைக்கண்டும் இன்புற்றாள். தாலாட்டுப்பாடி உறங்கவைத்தாள். பின் நீ எழுந்து உட்கார்ந்த பருவத்தில் உன்னை இருகரங்களையும் குவித்துச் சப்பாணி கொட்டவைத்தாள் அல்லவோ? உன் கொழுவிய சிவந்த கன்னங்களில் முத்தமிட்டும் மகிழ்ந்தாள். நீ நடைபழகும் காலத்தில், “அப்பா வா,” என உன்னை அழைத்து, கொஞ்சிக்குலாவி மகிழ்ந்து எடுத்து அணைத்துக்கொண்டாள். உனக்கென்ன குறைவைத்தாள்? ஒன்றும் இல்லை.

    “பின்னர் அந்திப்பொழுதில் வானில் உலாவரும் அம்புலியைக் காட்டிச் சோறும் ஊட்டினாள். நீ சிறிது வளர்ந்ததும், வெளியே வீதியில்போய் விளையாடி வா அப்பா என்று உன்னை அனுப்பிவைத்தும் விட்டாள். உன் குறும்புப்புத்தியை அவளறியாது இருப்பாளா என்ன? இவ்வாறு எங்கள் சிற்றிலைச் சிதைக்க நீ முயன்றதனால் உன்னை எதற்காகக் குறைகூறுவது? இவ்வாறு உன்னை வளர்த்த தாயையல்லவோ நாங்கள் நொந்துகொள்ள வேண்டும்? இப்போதாவது கூறுகிறோம். அவள் அன்னை பராசக்தி; அவளை ‘பிள்ளையை வளர்த்த அழகைப்பார்,’ என்று குறைகூறுதல் நன்றாகவா இருக்கும்? குறுக்குத்துறை எனும் இவ்வூரில் வாழும் நிமலனே, எங்கள் சிற்றிலைச் சிதைக்காதே,” என வேண்டுகின்றனர்.

    குறுநகைபுரியும் இளங்குமரன் இவர்கள் வேண்டுதலுக்கு இரங்கமாட்டானா என்ன?

    முந்தித் தவமே புரிந்துன்னை
    முயன்று பெற்றுக் காப்பாற்றி
    முகமே தூக்கிச் செங்கீரை
    மொழிந்தே ஆடத் தாலாட்டிக்
    குந்திக் கரத்தால் சப்பாணி
    கொட்டச் செய்து முத்தமிட்டுக்
    கூவியழைத்து வருகவெனக்
    கொஞ்சிக் குலவி யெடுத்தணைத்தே
    அந்திப் பொழுதைக் கடந்துவரும்
    அம்பு லிகாட்டிப் பின்னருனை
    ஆடி நீவா எனமறுகில்
    அனுப்புந் தாயர் தமைவிடுத்து
    நொந்திங் குன்னைக் குறைகூறல்
    நேர்மை யாமோ உணர்ந்திதனை
    நீர்சூழ் குறுக்குத் துறைவாழும்
    நிமலா சிற்றில் சிதையேலே
    (குந்தி- அமர்ந்து; மறுகில்- வீதியில்)

    (குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்- வித்துவான் தி. சு. ஆறுமுகம். சிவதாசன், திருநெல்வேலி)

    ~~~~~~~~~~

    சரி; கதையிலிருந்து இலக்கியத்துக்குள் சிறிது புகுவோம். பெண்கள் கூற்றாக, சிற்றில்பருவத்துப் பிள்ளைத்தமிழ்ப்பாடலை இயற்றிய புலவர் வித்துவான் தி. சு. ஆறுமுகம் சிவதாசன் ஆவார். இது குறுக்குத்துறையில் வாழும் முருகப்பிரான்மேல் இயற்றப்பட்டது. இப்பாடலின் இலக்கியநயம் யாதெனில், ஆண்பால் பிள்ளைத்தமிழின் எட்டாவது பருவமாக அமையும் சிற்றில்பருவத்திற்கு முன்பு ‘சிற்றிலை அழிக்காதே’ எனச்சிறுபெண்கள் வேண்டும் பாடலில், இயல்பாகவே வரும்விதத்தில் பிள்ளைத்தமிழின் மற்ற முதல் ஏழுபருவங்களையும் (காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி ஆகிய ஏழுபருவங்கள்) வரிசைப்படுத்திக் கூறியிருப்பதுதான். பாடலின் பொருளோடு இவை இயைந்து வருவது அருமையிலும் அருமை. இவ்விலக்கிய நயங்களுக்காகவே பிள்ளைத்தமிழ் நூல்களை ஊன்றிப்படிக்கவேண்டும்!

    ~~~~~~~~~

    இளங்குமரனைக் கண்ணுற்ற சிறுமியருக்கு அவன்பால் தாய்ப்பாசம்தான் மிகுகிறது! “ஏதோ அறியாப்பிள்ளை! சிற்றிலை அழிக்க முற்பட்டான். போனால் போகட்டும். நம்முடன் விளையாடச் சேர்த்துக்கொள்வோம்,” என்கிறாள் சிவகாமி.

    “வா குமரா! எங்களுடன் அமர்ந்து நாங்கள் சமைத்த இந்தச் சிறுசோற்றை உண்டு மகிழ்வாய்.” என்று பெருந்தன்மையுடன் விருந்தோம்புகிறாள் செங்கமலம். அவள், தன்அன்னை இவர்கள் சிற்றில் விளையாட்டிற்காகவெனப் புதியதாகச் செய்தளித்த வெல்லப்பணியாரம், கடலைச்சுண்டல் முதலானவற்றை, வட்டிலில் கொண்டுவந்திருக்கிறாள். மங்கை புளியஞ்சோறு கொண்டுவந்திருக்கிறாள். விளையாட வரும்வழியில் தகப்பன்மார்களைக்கேட்டு, தோட்டத்திலிருந்து சில மாங்கனிகளையும், இளம் நுங்குகளையும் கூடக்கொணர்ந்துள்ளனர் இச்சிறுமியர். திட்டமிடுவதில் தம் தாய்மார்களையும் விஞ்சிவிட்டனர்போலும்! இலைகள் போடப்பட்டு பரிமாறப்பட்ட உணவு சிறுவர்கள் வாயில் நீர் ஊறச்செய்கிறது! ஆனந்தத்தை உண்டுபண்ணி, பகையை மறக்கச்செய்து, கூடியிருந்து உண்ணச் செய்கிறது.

    “ஆமாமடா குமரா, சிற்றிலை அழிப்பதனைமட்டும் செய்யவேண்டா! உண்டு களிப்பாயாக. நாங்கள் செய்த பலவிதமான தின்பண்டங்களை முதன்முதலில் உனக்குத்தான் படைக்கிறோம் தெரியுமா? நாங்களே இன்னும் தின்றுபார்க்கவில்லை. எங்களுக்கு உன்மீது எத்துணை அன்பு (பக்தி) பார்த்தாயா? எங்கள் சிறுவீட்டினை அழிக்காதேயப்பா,” என்கிறாள் தாமரை.

    சிவகாமி குறும்பு கொப்பளிக்க, “ஒருமுறை இந்தப் பண்டங்களை நீ உண்டுவிட்டாயானால் போதும்; பின்பு, நாங்கள் எப்போது திரும்பச் சிற்றிலிழைத்துச் சிறுசோறு சமைத்து உண்போம் என மறுபடியும் மறுபடியும் நீயே கேட்பாய் முருகா! அத்துணை சுவைமிகுந்தவை இவையாம்,” எனக்கூறி நகைக்கிறாள்.

    “அவனைப் பக்கத்தில் இருத்திக்கொண்ட மங்கை சொல்வாள்: “உனக்கன்றி வேறு எவருக்கு இவற்றையெல்லாம் நாங்கள் ஆசையாகக் கொடுப்போம். வா, வந்து உண்டுமகிழ்வாயாக! மாறுபடாத வளங்கள் நிறைந்த தண்மையான துறைகள் கொண்ட குறுக்குத்துறை எனும் ஊரின்கண் வாழும் செல்வனே, எங்கள் சிற்றிலைச் சிதைக்காதே! குழந்தைச்சிறுமிகளாகிய எங்கள் சிற்றிலைச் சிதைக்காதே!”

    ஆவலுடன் சிறுமியர் குமரனுடன் சிறுசோறு உண்டுகளிக்கின்றனர். நமக்குக்கூட அவர்களிடம் சிறிது பொறாமையும், அச்சிறுமிகள் சமைத்திருக்கும் உணவுக்காகச் சிறிது ஆசையும், இதைப் படிப்பதனால் உள்ளத்தில் பெரும்உவகையும் எழுகின்றன.

    உருகா யோநீ உளம்விரும்பின்
    உவப்பா யெம்பா லுடனமர்ந்தே
    உண்டு மகிழ்வாய் சிற்றிலிதை
    உலையா தருள்செய் தேகிடுவாய்
    முருகா சிறியர் யாம்பெரிதும்
    முயன்று செய்த பலபண்டம்
    முன்னா லுனக்கே படைக்கின்றோம்
    முயலாதேயெம் மில்சிதைக்க
    ஒருகா லுண்ணின் மறுகாலும்
    உண்டா வுண்டா எனக்கேட்பாய்
    உனக்கல் லாது யார்க்கிவைதாம்
    உவந்தே யளிப்போம் ஏற்றிடுவாய்
    திருகா வளஞ்சேர் ஆவடுதண்
    துறையார் குறுக்குத் துறைவாழும்
    செல்வா சிற்றில் சிதையேலே
    சேயேம் சிற்றில் சிதையேலே.
    (திருகா- மாறுபடா)

    (குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்- வித்துவான் தி. சு. ஆறுமுகம். சிவதாசன், திருநெல்வேலி)

    இது ஓர் அருமையான பிள்ளைத்தமிழ் நூல். சமீபகாலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். குறுக்குத்துறை எனும் இடத்தைப்பற்றி, நூலின் தொடக்கத்திலுள்ள ,
    ‘அகழ்சேர் பொருநை யணிகரைபால்
    அழகார் பதியாம் நெல்வேலி
    அணித்தாம் குறுக்குத் துறைதங்கி
    அன்பர்க் கருளுந் திருக்குமரன்’ எனும் பாடலால் இது திருநெல்வேலியருகில் அமைந்தவிடம் என அறிகிறோம். ஆசிரியர் பெயரும் கடைசிப் பாடலில் கிட்டுகிறது.
    வேறு அதிகமாகச் செய்திகள் கிடைக்கவில்லை.
    ஆயினும் தமிழ்ச்சுவை நிரம்பிய அழகான நூல்.
    ~~~~~~~~
    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ~~~~~~~~~~~~~~~~~

    Share
  • அவன்

     
    மீ.விசுவநாதன்

     
    அடடா அடடா ஆண்டவனே – என்
    அகத்தில் அன்பு பூண்டவனே !
    விடடா விட்டா என்றாலும் – ஒரு
    விளக்காய் உள்ளே ஒளிர்பவனே !

    எதற்கோ வந்து என்னுள்ளே – தன்
    இருப்பைக் காட்டிச் சிரிப்பவனே !
    பதற்கும் பசுமை காட்டுகிற – தன்
    பரந்த குணத்தால் நிறைந்தவனே !

    எவரோ துன்பம் அடைந்தாலும் – என்
    இதயம் வலிக்கச் செய்பவனே !
    சுவராய் இருக்கும் என்மூலம் – நல்ல
    சோதிக் கவிதை வரைபவனே !

    கவலை வந்த அணுநொடியில் – உள்
    கடவு(ள்) உணர்வு தருபவனே !
    திவலை நானாய் உணர்வதற்கு – பெரு
    வெள்ள வெளியாய் இருப்பவனே !

    இன்னும் உன்னை உணராமல் – இவன்
    இருக்கும் நிலையை வைத்தவனே !
    தன்னுள் என்னை வைத்ததனால் – அதில்
    தவறைக் காணா நல்லவனே !

    (14.06.2016)

    Share
  • இறையியல் சிந்தனைகள்: 1 ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்

    அவ்வைமகள்
    இரேணுகா இராசசேகரன்

     

    அன்று அங்கு விடுபட்டது மதமா? மடைமையா?

    இறையியல் சிந்தனைகள்

    ஸ்டீவ் ஜாப்ஸின் இறையியல் சிந்தனைகள் அவர் மறைவுக்குப் பின்பு நிறையவே பேசப்படுகின்றன. நம்முடன் சமகாலத்தில் வாழ்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு, 2011ல் இறைசோதியுடன் ஐக்கியமாகி இருக்கிற ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்நாள் பயணம் ஒப்பற்றதொரு சரித்திரமே எனும்படியான புரிந்துகொள்ளல் இவ்வுலகில் உண்டாகியிருக்கிறது. இன்றைய காலகட்டத்தைப் பற்றி ஒன்றைச் சொல்வார்கள் – இது நவீனப் பறைசார் ஊடகப் பரவல் காலம். சாதாரண விஷயங்கள் கூட இன்று வெகுப் பிரசித்தி அடைந்துவிடும். சாதாரண மனிதர்களைக் கூட இன்றையகாலம் மகானாக்கி விடும். அதுவும் பெரிய ஆளாக ஒருவர் ஆன பின்பு அவரது சரித்திரத்தை வெகு சாதுரியமாக வடிவமைத்து விடுவது என்பது இங்கே வாடிக்கை. ஆனால், ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை அந்த நிர்பந்தத்திற்கும் நெருக்கடிக்கும் இலக்கானதாகத் தோன்றவில்லை. யதார்த்த உண்மைகள் உண்மையிலேயே அவரது வரலாற்றில் – வாழ்க்கைத் தடயங்களில் – தரவுகளில் நிரம்பிக் கிடக்கின்றன என்பது தனிமனித சரித்திரத்தில் மிகப்பெரிய பலம்.

    வாழ்வின் எந்த காலகட்டத்தில் – எந்த பருவத்தில் எவர் இருந்தாலும் அவருக்கு எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் புதுப்புது உத்வேகத்தை வழங்குகின்ற தன்மையதாய் ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை அமைந்திருக்கிறது. அவரது நடைமுறை வாழ்க்கை எவ்வகையான வாழ்வில் இருப்பவர்க்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமைவது என்று சொன்னால் அது பொருத்தமாய் இராது. அவர் வாழ்வில் தன் வாழ்வை ஒரு முழு நிலைக் கண்ணாடியில் பார்ப்பதைப் போன்று பாரத்துக்கொள்ளும் இலகுவை எவருக்கும் கொடுக்கும் திறந்த வாழ்க்கை அவருடையது என்பதே சரியாக இருக்கும்..

    பிறவியால், ஒரு சர்வ சாதாரண மனிதர்தான் ஸ்டீவ் ஜாப்ஸ். மனிதனாய்ப் பிறப்பெடுக்கும் மனிதருக்கு என்னென்ன கஷ்டங்கள் வருமோ எத்தனைத் துன்பங்கள் வருமோ அத்தனையும் அவருக்கு வந்தது. சொல்லப்போனால் இந்தத் துன்பங்களும் கஷ்டங்களும் அவருக்கு மற்றவரைக் காட்டிலும் கூடுதலாய் இருந்தனவே தவிரக் குறைவாய் அல்ல. அவருக்கு நேர்ந்த அவமானங்களும் பெருத்தவையே. தவறுகள் என்று நாம் சொல்லக்கூடியவற்றையும் அவர் ஏராளமாய்ச் செய்திருக்கிறார் என்பர். ஆனால் இன்றோ ஆண் -பெண், ஏழை – பணக்காரர், மூத்தவர்-இளையவர் என்ற பாகுபாடின்றி எவரொருவக்கும் ஒரு முன்மாதிரியான பிரஜையாக, எண்ணத்தில் அழைத்தும், மனத்தில் இருத்தியும் பின்பற்றும் செம்மலாக அவர் உயர்ந்திருக்கிறார்.

    இவ்வாறான உயர்நிலையினை அவர் எவ்வாறு அடைந்தார் என்பதை அலசி ஆராய்ந்தவர்களும் இன்னமும் ஆராய்ந்து கொண்டிருப்பவர்களும் பலபேர் உண்டு. அவர்கள் யாவரும் கண்டுள்ள பேருண்மை யாதெனில் ஸ்டீவ் ஜாப்ஸ் தனது வாழ்வை யதார்த்தமாய், உள்ளது உள்ளவாறு அணுகி, உறுதியான இலக்குகொண்டு வாழ்ந்து சென்றிருக்கிறார் என்பதே. அலங்காரங்களும் படாடோபமும் இன்றி எதனையும் எதிர்நோக்கும் மனத் திண்மையோடு இயல்பாய், தனது இலக்கை நோக்கித் தன் வாழ்வை நெறிப்படுத்தி இயக்கிச்செல்கிற ஒரு சீர்மையும் எளிமையான வாழ்வணுகுமுறையும் அவரிடத்திலே நித்தமும் காணப்பட்டதாகவே அறிகிறோம். சாதனை என்பதற்கு திடசிந்தனையும், தீர்க்க தரிசனமும், அசைவிலாக் கட்டுப்பாடும் தேவை என்பர். இம்மூன்று சாதகங்களையும் தனது வாழ்வின் அடித்தளமாகக் கொண்டு ஒரு கர்மயோகசித்தி மனோன்மணியாக வாழ்ந்து போந்திருக்கிறவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

    இன்று உலகின் ஒட்டுமொத்தப் பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றவர் ஸ்டீவ் ஜாப்ஸ். அளப்பரிய அவரது சாதனைகள் அவருடைய கடுமையான உழைப்பு, விவேகம், நுண்ணிய திட்டமிடல், தீர்க்கதரிசனம் ஆகிய பண்புகளால் விளைந்தவை என்பதையும் இவ்வுலகம் பறைசாற்றுகிறது. கணினித் தொழுல்நுட்பத் தந்தையெனப் போற்றப்படும் அளவுக்கு அறிவியலை – தொழுல்நுட்பத்தை – உயிர்மூச்சாகக் கொண்டவர் ஸ்டீவ் ஜாப்ஸ். அதுவும் வர்த்தகமே குறி. அவ்வாறான சூழலில் அவர் ஒரு நாத்திகராக விளங்க இயல்பான சாத்தியக் கூறுகள் அவரைச் சுற்றி நிறையவே கிடந்தன. இருப்பினும், அவரது வாழ்வில் ஒரு இன்றியமையாத அங்கமாக அமையப் பெற்றது இறை தேடல். அதுமட்டுமல்ல, ஸ்டீவ் ஜாப்ஸின் இறையியல் சிந்தனைகளில் மதம் ஒரு முக்கிய பங்கை வகித்திருக்கிறது என்பது மிகுந்த சிந்தனைக்குரியது.

    மத மாச்சரியங்களில் வெறுமனே குதித்து விடுவதற்கு ஸ்டீவ் ஜாப்ஸ் அற்ப சொற்ப மனிதர் அல்லர். வாழ்வின் அம்சங்களை ஆழமாக அணுகும் கடுமையான பழக்கம் உள்ளவர் அவர். அவருடைய உள்மனம், சுலபமாக எதிலும் தொலைந்து போகாது – திருப்தி அடையாது. அதுமட்டுமல்ல, நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல் அறிவியல் தொழில்நுட்பத்தின் அதிநுணுக்கங்களை அறிந்தொழுகியவர் என்ற வகையில் சான்றும் ஆதாரமும் இன்றி எதனையும் ஏற்க ஒண்ணாத முறைமை கொண்ட மனப்பாங்கு அவருக்கு நிச்சயம் உண்டு. அத்தகைய ஒரு நபர் இறையுணர்வு கொண்டொழுகினார் என்பது மட்டுமல்ல – இறையுணர்வின் வழியேகி ஆத்மத் தேடலில் ஈடுபட்டார் என்பதும் உண்மை. இவ்வுண்மை, வாழ்வின் பரிபூரணத்துவத்திற்கு இறையுணர்வு எத்தனை அவசியமாகிறது என்பதனை அவர் உணர்ந்திருந்த பாங்கை உணர்த்துவதோடல்லாமல் – இறையுணர்வு என்பது எவ்வித அச்சமுமின்றி – எவரின் நிர்ப்பந்தமுமின்றி சுய மூளையின் அனுமதியுடன் சுயவேட்கையின் விளைப்பாடாய் தங்குதடையற்ற விசையுடன் அனைத்து வரையறைகளையும் தாண்டிச்செல்வதான அசைவிலா உறுதியுடன் உருவாகி விரிவது எனக் காண்கிறோம்.

    நாம் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். ஸ்டீவ் ஜாப்ஸ் தனது இறை தேடலுக்கு மிகச் சரியானதொரு புலனாக, கருவியாக, களமாக, மதத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பதே. இது ஆழ்ந்து நோக்கத்தக்கது. ஆன்மா என்கிற அழிவில்லா – மரணமிலாக் கூறு ஒன்று உள்ளது என்பதை எல்லா மதங்களுமே மொழிகின்றன. ஆனால், அறிவியலின் வாயிலாக மட்டுமல்ல மதங்களின் வாயிலாகவும் கூட ஆன்மாவின் எடை, பொருண்மை, மற்றும் பரிமாணங்களை எவரே அறிவார்? அது மிருதுவானதா – கடினமானதா – அது எந்த நிறம் – என்ன சுவை என்று எவரால் சொல்லமுடியும்? ஆன்மா என்பதை விளக்குவது புவி ஈர்ப்பு விதியா? இயக்க விதியா? தொக்கல் விதியா? அதன் வடிவென்ன? அது ஒலியா – ஒளியா? திடமா? திரவமா? வாயுவா? பளாஸ்மாவா? அண்டமா? பிண்டமா? வெளியா? பிரபஞ்சமா? வினாக்கள் ஆயிரம் தான் – ஆனால் உண்மையாதெனில் அது என்னவென்று சொல்லவொணாத ஒன்று -ஆதாரமில்லாத ஒன்று – சாட்சியும் சான்றும் காட்டமுடியாத ஒன்று.

    ஆன்மா என்பது இவ்வாறே இருப்பினும் அத்தகைய ஒன்றை நான் அறிய வேண்டும் – அவ்வாறு நான் அதனை அறிய அறிவியலை விட மதமே சிலாக்கியம் என்ற உணர்வும் திறமையும் ஸ்டீவ் ஜாப்ஸிற்கு உண்டாயிற்று என்றே காண்கிறோம்.. இந்த முயற்சியில் மத்தைக்கூட ஒரு அறிவியல் தொழில் நுட்பக் கருவியாக ஒருவேளை ஸ்டீவ் எண்ணியிருக்கலாமோ என்றுகூட நாம் எண்ணக்கூடும்.

    மதம் எனும்போது உலகில், பல்வேறு மத மார்க்கங்கள் இருக்கின்றன என்பது உண்மை. எனினும் ஏற்கனவே கையில் இருப்பதை, தெரிந்ததை அணுகுவது தானே எவருக்கும் இயல்பு? அதைத்தான் ஸ்டீவ் ஜாப்ஸ் செய்கிறார்.

    கிறித்துவ மதம் பிரசித்தி பெற்றதாகவும் வெகுவானப் புழக்கத்தில் இருப்பதுமாகவும் உள்ள அமெரிக்காவில் பிறந்து ஒரு கிறித்துவக் குடும்பத்தில் வளர்ந்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். எனவே, வெகு இயல்பாக, அவரது சமீபத்தில் உள்ளதான அவரது மதத்தை அவர் தனது ஆன்மத் தேடலுக்காய் முதலில் அணுகுகிறார். இதற்கு ஏதுவாய் சிறுவனாய் இருக்கும்போதே தேவாலயத்திற்குச் செல்லும் பழக்கமும் அவருக்கு இருந்தது. நிலைநிறுத்தப்பட்ட இறைசாத்திரங்களும் வழிபாட்டு முறைமைகளும், சாங்கியங்களும், அவற்றை உடும்புப் பிடியாய்ப் பிடித்துக்கொள்ளும் மனோபாவமும் ஆச்சாரமும் நிறைந்த குடும்பம் மற்றும் சமூக அமைப்பும் உள்ள சூழல் அது.

    மதப்பற்று நிரம்பிய வளர்ப்புப் பெற்றோர்களுடன் அன்று தேவாலயம் வந்தவன் பதிமூன்றே வயதான ஸ்டீவ். பிரார்த்தனைக் கூட்டமது – இறைநம்பிக்கையோடு, இறை பணிவும், இறை அச்சமும் மிகுந்த திருச்சபைக் கூட்டம் – அக்கூட்டத்தில், தேவாலயத் தந்தையைப் பார்த்து அவன் அன்று கேட்ட கேள்வி – கடவுளுக்கு இவை தெரியுமா? என்பது – விஷயங்களை எடுத்துக் காட்டி இவையெல்லாம் கடவுளுக்குத் தெரியுமா எனக் கேட்கிறான் பாலகன் – கூட்டமும் அதிர்ச்சிமீதுறக் காண்கிறது அவனது கேள்வித் துளைப்பை. தனது கேள்விக்கு இறைதந்தை தந்த விடைகளையும் வியாக்கியானத்தையும் அவன் ஏற்றிலன். எதைக் கேட்கக்கூடாதோ அதைக்கேட்கிறான் என்பதாக அவனைக் கண்டனர் இறைமாட்சிமை புரிந்தவர்கள். அவனோ வெளி நடந்தான் தாகம் தணியாது – அன்று அங்கு விடுபட்டது மதமா? மடைமையா?

    தொடருவோம்

    Share