தெரியாதது…

 

  செண்பக ஜெகதீசன்

தென்றலின் வரவு

தெரிகிறது

தலைசாய்க்கும் இலை அசைவில்..

 

கதிரவன் வரவுக்குக்

கட்டியம் கூறும்

கதிர்க் கரங்கள்..

 

பருந்தின் வரவைப்

பார்த்திடலாம்

பறக்கும் தாய்க்கோழியின்

பாசக் கண்களில்..

 

மழை வரவின்

முன்னோடியாய்

மின்னலும் இடியும்..

 

இறக்கும் மனிதனைக் காட்டிடும்

இதயத் துடிப்பு..

 

இருக்கும் மனிதனின்

இதயத்தில்

இருப்பதைத் தெரியத்தான்

எதனாலும் முடியவில்லையே…!

படத்துக்கு நன்றி

 http://www.reneedmd.com/american-heart-month/

     

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *