-சேஷாத்ரி பாஸ்கர்
ஒரு சின்னப் பந்து
கருஞ்சிவப்பில்
சுற்றி வெள்ளை முகப்பூச்சு
பெண் பார்க்க செல்லும் பையன் போல்!
குவியலாகக் கிடக்கும்
நாம் நினைத்த இடத்தில்
பார்த்தோர் செல்வார் பத்து வருடம் பின்பு
சூரியன் போல் அனைவருக்கு பொது!
அது உள் இருக்கையில் வராது பேச்சு
சுரக்கும் அளவில்லாமல்
சுழற்றியபடி பந்தாடும், வாய்
உடைக்கத் துடிக்கும் மனம்!
தடுக்க நினைக்கும் மறு கணம்
மென்மை ஆக்கி நா உறிஞ்சும்
பொறுக்க மாட்டா(து) பல் கடிக்கும்
உடைந்திறங்கும் தேன் மிட்டாய்!

Leave a Reply