காலம் பொன் போன்றது!

-ரா.பார்த்தசாரதி

காலம்  நம்மை  வாழ  வைக்கும்
காலம் நம்மைச் சிந்திக்க வைக்கும்
காலம் கருதி  செயலாற்றத் துவங்கு
அதுவே உன் வெற்றிக்கு  இலக்கு!

காலம் என்பது கடிவாளமில்லாக் குதிரை
கடிவாளமிட்டு  அடக்குவது நம் திறமை
காலம்  எனும் கண்ணாடியில் முகம் காணுங்கள்
கண்ணாடியைப்  பார்த்தே வெற்றி காணுங்கள்!

காலத்தின் அருமை அறிந்து செய்தால் வெற்றி தேடி வரும்
காலத்தைச்  சரிவரப்  பயன்படுத்தினால் மகத்தான வெற்றி
காலம் என்பது  யானை  போன்றது
அதனை அடக்கும் அங்குசம் நம்மிடம் உள்ளது !

காலம் மதியாதவனை மிதித்துவிட்டுப் போகும்
காலத்தின் அருமை உணர்ந்தவனை வெற்றி சேரும்
காலமும் கடல் அலையும்  மனிதனுக்காகக் காத்திருக்காது
காலம் கடந்த செயல்கள் என்றும்  பலன்  தராது !

நமது லட்சியத்தைக்  காலத்தோடு கைகோத்துச்
சந்தர்ப்பத்தையும் நேரத்தையும் ஒருங்கே சேர்த்து
எத்தொழிலையும் தொடங்கினால் வெற்றி நமதே
நாம் நினைக்க  வேண்டியதுகாலம் பொன் போன்றதே !

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *