தேடும் அன்பு! 

-பா வானதி வேதா. இலங்காதிலகம்

அடிமனதில் உள்ளூர ஊறும்
அன்பூற்றில் ஆழ்ந்து நனையாமலும்
அலுக்காது காயம் செய்தலாய்                            hearts-of-flame
இல்லா நெருக்கமுடை உறவுகள்
இருந்தென்ன? விலகியென்ன? சமனே!

விருந்தெனும் ஆனந்தக் கீழ்வானமாகக்
கரும்பெனும் ஆழ்மன அன்பை
விருப்பித் தேடுதலாய் நிதமும்.

திறந்து வெளியான அன்பைப்
பறந்து மினுமினுக்கும் அன்பிறகைக்
கறந்த பாலினிளம் சூட்டில்
சிறந்து மகிழ்ந்தருந்தத் தேடுகிறோம்.

புதிர்கள் வழியும் உறவுகளிடம்
எதிர்ப்படுமா பொங்கிப் பிரவகிக்கும்
கதிர்வீசும் உயிர்ப்புடை அன்பு
உதிர்ந்துதான் போகிறது!

 

 

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *