Tag: இன்னம்பூரான்

  • மதாபிமானமும், சுயமரியாதையும், வாழ்வியலும்: 2

     

    இன்னம்பூரான்

    09 03 2018

    இந்த தொடரின் முதல் பகுதி ஒரு பீடிகையாக இருந்த போதினும், இதை என் வலைப்பூவின் உலகத்தமிழ் வாசகர்களில் பலர் படித்தனர்; நண்பர்கள் ஒரு அரிசோனன், வ.கொ. விஜயராகவன் ( பல வருடங்களுக்குப் பிறகு), சி.ஜெயபாரதன் ஆகியோர் ஆழ்ந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். நன்றி. என்னை வீழ்த்திய இடம் சென்னை ராஸ்தாக்கள் அல்ல. அவை என்னை கொன்றிருக்கக்கூடும். நான் வாழும் இடத்திலேயே காலை உடற்பயிற்சி செய்த இடத்தில் கவனம் பாண்டிச்சேரி தமிழ் ஆய்வு பாடங்கள் மீது செல்ல, உடல் பள்ளத்தில் விழுந்து முகம் ஈயச்சொம்பு போல் நசுங்க, மூக்கு உடைந்தது; நான் தேறி வருகிறேன். இதுவே பகுத்து அறிவதற்கு உவமையாக அமைந்து விட்டதை பாருங்கள். போலி பகுத்தறிவும் கவனக்குறைவால் தான். தும்பையும் விட்டு விட்டு வாலையும் விட்டு விட்டு, காலை பிடிப்பது போல், பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடிந்தது போல் அமைந்து விட்டது. ஈ.வே.ரா.அவர்களின் உன்னதமான சமுதாய சீர்திருத்தங்கள் காழ்ப்புணர்ச்சியினாலும், வன்முறையினாலும், பகைமை அணுகுமுறையினாலும் பாழாயின. அவரின் சிலையை உடைப்பதினால் நன்மை ஏற்படப்போவதில்லை; அவர் பிள்ளையாரை உடைத்துக் கண்ட பயன் யாது? நான் எழுத நினைப்பது எல்லாம் அன்றாடம் மாறிவிடுகின்றன. திரு. ஒரு அரிசோனன் ‘ஒரு இனம் தெரியாத தவிப்பு’ என்றதில் ஒரு உண்மை இருக்கிறது. மதாபிமானம் மதவெறியாக அதிக முயற்சி தேவையில்லை; சுயமரியாதை பிறரை தாழ்த்த நினைக்கும்போது, பூணலையும், குடுமியையும் அறுக்க விழையும்போது, தன்னையே மாய்த்துக்கொள்கிறது; தன் வாழ்வியலை சிதைத்துக்கொள்கிறது. தமிழ்தென்றல் திரு.வி.க. அவர்களின் சகிப்புத்தன்மையை புறம் தள்ளி விடுகிறது. இது நிற்க.

    தற்காலம் அசட்டுத்தனமாக சிலை உடைப்பு தலையெடுத்த போது, அதை பிரதமர் முளையிலே கிள்ளி விட்டார் என்றாலும், பட்ட கறை பட்ட கறை தான்.

    ஆலயத்திலிருக்கும் விக்ரஹங்கள் ஆனாலும் சரி, மனிதர்களின் சிலையாயினும் சரி, ஒரு கிரேக்க பாடம் படிப்போம் இன்று. மஹாத்மா காந்தி, நேரு, ஈ.வே.ரா. ஆகியோர் இன்று நம்மிடம் இல்லை. ஆனால் அவர்களின் சிலாரூபங்கள், மரணத்தையும் கடந்து, அதனால் ஏற்பட்ட இழப்பையும் கடந்து, மாண்டோர்களின் சிலைகளில் உறையும் உயிர்மை சிரஞ்சீவி என்க. ஏன்? அசோகரின் கல்வைட்டு, ராஜராஜன் கட்டிய பெரிய கோயில், எல்லா கோயில்களில் உள்ள சிற்பங்கள், அங்கிருந்து திருடப்பட்ட சிற்பங்கள், மோனா லீசாவின் ஓவியம், சலப சாத்திரத்தின் நுன்கணக்குப்படி அமைக்கப்பட்ட ஆலயங்கள் எல்லாமே வாழ்வியலின் இறவா நிலையை குறிப்பிடுகின்றன எனலாம். இன்று இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

    (தொடரும்)

    -#-

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • மதாபிமானமும், சுயமரியாதையும், வாழ்வியலும்: 1

     

    இன்னம்பூரான்

    26 02 2018

    நாத்திகமும், அதுவும் அற்ற வாழ்வியலும் மதாபிமானங்கள் தான் என்பதைத் திட்டவட்டமாக அறிக. மனிதன் தோன்றியபோதே, இயற்கையின் கூற்றுகள் அவனுடைய சிந்தனையை பாதித்தன; தூண்டுவித்தன; அலைபாய விட்டன; அச்சமூட்டின; கற்பனைக்கு வித்திட்டன; படைப்பாற்றலுக்கு உரமிட்டன. மின்னலடித்த மானம் அவனை, அவளை பயமுறுத்தியது; உடனுறைந்த இடி பீதியடையவைத்தது; அடுத்து வந்த மழை வியப்பைக் கூட்டியது. ஆண்-பெண் உறவு மனிதன் தோன்றுவது பலகோடி வருடங்களுக்கு முன்பே இயற்கை அன்னையின் வரமாக அமைந்தது. கானகத்தே வாழ்ந்த பழங்குடிகள் சிங்கம், புலிகளின் இனப்பெருக்கத்தைக் கண்டார்கள். தாங்கள் வளர்த்த கால்நடைகளின் வாழ்வியலை பாடமாக கற்றார்கள்; ஆதாம்-ஈவாள்-ஆப்பிள்-அரவம்-சாத்தான் கதை பிறப்புதற்கு முன், தொல்காப்பியர் பிற்காலம் பாராட்டிய கலவி பேரின்பத்தை சுவைத்தார்கள். அது ஒரு தொடர்கதை. தொன்மை இலக்கியம். அது செவி வாழ் இலக்கியமாகவும், பின்னர் எழுத்து இலக்கியமாகவும் பிறந்தது. சில வகையில் அது மதாபிமானத்துக்கு வித்திட்டது என்றாலும், தொன்மம் என்ற வாழ்வியல் இலக்கியம், மதாபிமானங்கள் போல் (நாத்திகம் உள்பட) மூளைச்சலவையில் ஈடுபடவில்லை. மதாபிமானங்கள் எல்லாம் தாழ்ந்தவை அல்ல. அவற்றில் வைணவம், பெளதம் போன்றவை, ஏன் எல்லா மதாபிமானங்களும் (நாத்திகம் உள்பட) வாழ்வியலின் உன்னதமான நிலைப்பாடுகளை போதித்திருப்பதை தற்கால விஞ்ஞானம் வெளிப்படுத்துவதை காண்கிறோம்.

    எனக்கு வயது 85. மூன்று வாரங்களுக்கு முன் காலை உடற்பயிற்சிக்கு சென்றபோது கவனக்குறைவால் (?) ஒரு கான்கிரீட் பள்ளத்தில் விழுந்து படுகாயமடைந்தேன். எனவே, சில சொற்களுக்கு மேல் எழுதமுடியவில்லை. சிறிய பகுதிகளை பதிவு செய்வதை வாசகர்கள் பொறுத்தாளவேண்டும். வழக்கம் போல் சித்திரம் போடவில்லை. காட்டாறு போல் சிந்தனையாறு பெருக்கெடுக்கும்போது, சித்திரம் ஏதுக்கடி குதம்பாய்!

    ஒரு இறுதி வரி. திறந்த மனம் வேண்டும். போலி பகுத்தறிவு போறாது.

    -#-
    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • திரு.வி.க. நினைவுகள்: 1

    -இன்னம்பூரான்
    11 02 2018

    நல்லதோர் வீணை செய்து

    nallathor

    தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரம் அவர்கள் தமிழுக்கு ஆற்றிய பணி மகத்தானது. அவருடைய நாட்டுப்பற்று ஊரறிந்த தேசபக்தி.  இதழியலை அவர் உரமிட்டு வளர்த்தார். முதல் இதழ் ‘தேசபக்தன்’.  சூது வாது தெரியாத திரு.வி.க. அவர்கள் ஏமாற்றப்பட்டார். இதழ் கை மாறியது. ஆனால் செழிக்கவில்லை. பின்னர் ‘நவசக்தி’. அந்த இதழின் தொகுப்புகளை அவர் கட்டிக் (பைண்ட் செய்து) காப்பாற்றினார். அவையும் தொலைந்து போயின. சில வருடங்களுக்குமுன் அவற்றைத் தேடிஅலைந்து நான் களைத்துப்போனேன். ரோஜா முத்தையா ஆய்வு மையத்தில் ஓர் ஆண்டு மலர் மட்டும் கிடைத்தது.

    சில நாட்களுக்கு முன் இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் இதழில் வந்த செய்தி ஒன்று கண்டு என் மனம் நொந்தது.தற்காலம் அதருமமிகு சென்னையின் போரூர் பகுதியில் ‘செட்டியார் அகரம்’ என்ற பெயரில் அடங்கி விட்ட ‘துள்ளம்’ என்ற குக்கிராமம் தான் அவர் பிறந்த ஊர். அவருடைய தந்தை நடத்திய திண்ணைப்பள்ளியில் தான் அவர் தமிழ் பயின்றார். சுப்ரதீப கவிராயர், மு.ராகவையங்கார் போன்ற புலவர்கள் நிறைகுடங்களாகத் திகழ்ந்தனர். இதழாசிரியர் ஆனபின் ஒரு முறை, திரு.வி.க. அவர்கள் பிறந்த மண்ணைக் கண்டுகளிக்க அவர் சென்றார். மூன்று நாள் இரட்டை மாட்டு வண்டிப் பயணம். (இப்போது பஸ்ஸில் [ஓடினால்!] விரைவில் போய்விடலாம். அவருடன் ஆரம்பப் பள்ளியில் படித்த கிராமத்துப் பெண்மணி ஒருவர், அங்கு அவரால் ஆக்கபூர்வமாக ஒன்றும் செய்வது இயலாது என்பதை உணர்த்தி, அவரைச் சென்னைக்கே திரும்பச் சொன்னார். உண்மைதான்! தற்காலச் செய்தி என்ன என்றால், அங்கு அவருடைய இல்லத்தையே ஒரு நூலகமாக மாற்றிய அரசு, ‘பாப்பாத்தியம்மா! மாடு வந்தது’ என்ற கூற்றுக்கிணங்க,

    அத்துடன் தன் கைங்கர்யத்தை நிறுத்திக்கொண்டது. கேட்பாரில்லை. நூல்கள் களவு போயின; கிழிந்து போயின. நூற்றுக்கணக்கான நூல்கள் இருந்த இடத்தில் நாற்பது நூல்கள் கூட இல்லை. இந்த அவலம் நேர 16 வருடங்கள் தான் பிடித்தன. அவருடைய நூற்றாண்டு விழா எடுக்கப்போகிறார்களாம். ஆனால், நூலகத்தை விஸ்தரித்துப் பராமரிப்பதை பற்றி ஒரு சொல் கூட பேசப்படவில்லை.

    நல்ல வேளை. தமிழ்மரபு அறக்கட்டளையின் சுபாஷிணி இங்கிலாந்தில் இருந்த என்னைப் பத்து வருடங்களுக்கு முன்னால், திரு.வி.க, அவர்கள் எழுதிய நூல்களையாவது மின்னாக்கம் செய்வதற்காகச் சென்னைக்கு செல்லத் தூண்டினார். நானும் விரைந்தேன். திரு.வி.க. அவர்கள் போற்றிய முருகன் அருள் கிட்டியது என்று தோன்றுகிறது. மற்றவர்களின் மறுபதிப்புகளை மின்னாக்கம் செய்ய விரும்பாத எனக்கு, அவருடைய அத்யந்த மாணவர் பேராசிரியர் மு.வரதராசன் அவர்களின் சீடரும், திரு.வி.க. அவர்களின் ‘பெரிய புராணம்’ நூலை ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்ற முனைவர்.அ.நாகலிங்கம் அவர்களின் நட்பு கிடைத்தது; அவரிடமிருந்து திரு.வி.க, அவர்களின் சாது அச்சுக்கூடத்தில் பிரசுரம் செய்யப்பட்ட  மூலநூட்கள் கிடைத்தன. அவற்றின் மின்னாக்கப்  பிரதிகள் செய்யப்பட்டன. அவை அந்த நூலகத்தின் மின்னாக்க நூலகத்தில் உங்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றன. பின்னணியில் அக்னிஹோத்ரம் டாக்டர் வாசுதேவன் அவர்கள் (எனக்கு மின்னாக்கம் வாத்தியார்) மிளிருகிறார்.

    ******

    Reference:

    http://www.newindianexpress.com/states/tamil-nadu/2018/jan/27/tamiol-nadu-thiru-vi-kas-home-turned-into-library-without-books-1764009.html

    சித்திரத்துக்கு நன்றிhttp://1.bp.blogspot.com/_BmyhDEvtwuE/SYrbdaZXmMI/AAAAAAAAAyQ/MkjLwxTtnkE/w1200-h630-p-k-no-nu/nallathor+veenai.gif

    ******

    “…தொல்காப்பியத்தின் மொழிநடையும், உள்ளுறையும் தமிழரின்தொன்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். தொல்காப்பிய மொழி…விழுமிய கருத்துக்களை இழுமென் மொழியாக எளிதில் மலர்விக்கும்…இத்தொன்மை வழிவழி வந்தவர் தமிழராவர். பழந்தூய தமிழரும், வழிவந்த தமிழரும், இடையே குடிபுகுந்து நிலைத்த சிலருஞ் சேர்ந்த ஓரினமே இப்போதுள்ள தமிழினமாகும்…கலப்பு என்பது இயற்கை. உலகில் எம்மொழியும், எந்நாடும் எவ்வினமும் தோன்றியவாறே கலப்பின்றித் தனிமைத் தூய்மையும் என்றும் ஒரு பெற்றியாய் நிலவுதல் அரிது…கலப்பால் வளர்ச்சியே உண்டு…தமிழ்நாட்டில் ஆரியர் தமிழர் பிரிவு பெரிதும் பேசப்படுகிறது… அதை வாழ்விடை ஏன் பாராட்டிப் பகைமை வளர்த்தல் வேண்டும்?…இப்போது தூய ஆரியர் இன்னார், தூயத் தனித்தமிழர் இன்னார் என்று எவரே பிரிக்க வல்லார்?…இயற்கை நிலை இவ்வாறாக, பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்நட்டில் வாழ்ந்துவரும் ஆரியர்களுக்கும் தமிழர்களுக்கும் கலப்பு ஏற்பட்டிராதென்று கருதுவது மதியுடைமை கொல்! எனவே தூய ஆரியராதல் தூய தமிழராதல் இப்போது இல்லை என்பதை வலியுறுத்துகிறேன்…பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் பூசலையொட்டி வடமொழி தென்மொழிப் பிணக்கும் எழுந்து திருவிளையாடல் புரிகிறது…வடமொழி பாரத நாட்டுக்குரிய பொது மொழி. ’யாதும் ஊரே யாவருங்கேளிர்’ என்னும் விழுமிய கொள்கையுடைய தமிழர் வழிவழி வந்த இக்காலத் தமிழர்  சிறுமைப் பிரிவுகளில் கருத்திருத்தல் அறமாகாது…”

    ~தமிழ் தென்றல் திரு.வி.க. அவர்கள்   ஜூலை 5: 1928, ஏப்ரல்  10,11,12: 1929 & ஆகஸ்ட் 6 :1932 அன்று ஆற்றிய சொற்பொழிவுகளிலிருந்து.

    Share
  • அன்றும் இன்றும் [3]

    -இன்னம்பூரான்
    ஜனவரி 3, 2018

    அன்பினால் இவ்வுலகத்தை ஆட்படுத்தவேண்டுமானால், முதல் படியில் கால் வைப்பது மக்கள்தான். அரசனோ, யதேச்சதிகாரியோ, ஜனநாயகத்தின் தலைவனோ, யாராக இருந்தாலும், அவன் ஒரு கருவிதான்.  ‘யதா ராஜா ததா பிரஜா’/ ‘யதா பிரஜா ததா கூஜா’/ ‘யதா கூஜா ததா பூஜா’  போன்ற பொன்வாக்குகள் ‘ஈயத்தை பாத்து இளித்ததாம் பித்தளை’ என்ற மாதிரி பொலிவு இழந்து பல நூற்றாண்டுகள் கடந்து போயின; இறந்தும் போயின, அண்ணாகண்ணன். ‘தெய்வாம்சம்’ பொருந்திய வம்சாவளி அரசர்களின் கரகாட்டம், தற்காலம் கூடுவிட்டுக்கூடு பாய்ந்து, அரசியல்வாதிகளின் குடும்பநிதிசேகரம் பொருட்டு, மக்கள் நலம் என்ற ‘தோண்டியை போட்டுடைத்த’ கம்பங்கூத்தாடியாகப் பேயாட்டம் ஆடுகிறது. மஹாகவி பாரதியார் பாடிய வகையில் ‘பாப்பானுக்குத் தொப்பை சுருங்கியதோ இல்லையோ’ பிரதிநிதித்துவம் என்ற ஜனநாயகத்தூண் உடைந்தே போனமாதிரி தான் நாடகங்கள் நடந்தேறுகின்றன. இவ்விடம் ‘நாடகமே உலகம்’ என்று கூறினால், அது அடக்கி வாசிப்பது எனலாம். பித்தலாட்டமே நம் உலகம் என்றால் அது மிகையல்ல.

    இந்தியா விடுதலை அடைந்தபோது நான் பாலகன். தந்தையின் நாட்டுப்பற்று எனக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்தது. அவர்தான் என் தகவல் மையம். சில நிமிடங்களுக்கு முன்னால் தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்கள் ஏப்ரல் 28, 1942 அன்று தேகவியோகம் ஆனது பற்றிப் படித்தபோது, அந்த நிகழ்வை என்னிடம் 9 வயதில் என் தந்தை சொன்னது நினைவில் இருப்பதை கவனித்தேன். தேகவியோகம் என்ற சொல் பசுமரத்தாணி அடித்தது போல் நினைவில் இருக்கிறது. தமிழ்த்தாத்தாவின் பெயர் நினைவில் இல்லை. ஒரு காரணத்துடன் தான் நான் இதைச் சொல்கிறேன். பெற்றோர்களும், ஆசிரியப் பெருமக்களும் பசுமரத்தாணி அடிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். சிலவரிகள் கல்வியைப் பற்றி இப்போதைக்கு. பெற்றோர்களுக்குள் கல்வி, திரவியம் ஆகியவை ஒரே மாதிரியாக அமைவதில்லை. திரவியம் இல்லாதவர்களுக்கு நிதி உதவி செய்யலாம். கல்வி இல்லாத பெற்றோர்களுக்கு யார் வழிகாட்டமுடியும்? சில கிராமங்களில், பள்ளி ஆசிரியர், தபாலதிகாரி, கோயில் அர்ச்சகர் போன்றோர் ஓரளவு வழி காட்டமுடியும்; செய்யவும் செய்தார்கள். தற்காலம் ஏராளமான பள்ளி மாணவர்கள்; ஏராளமான படித்து முன்னேறிய மனிதர்கள்.ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு வழிகாட்டி/மார்க்கபந்து அமைவது நடக்கக்கூடியதுதான். அதற்கு பிறகு வருவோம்.

    அன்பு ஒரு தளை. அது எல்லா ஜீவராசிகளிடமும் தென்படும் நற்பண்பு. காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு. புலியோ, சிங்கமோ, நம் வீட்டு நாயோ தன் குட்டிகளைப் பொத்திப் பாதுகாப்பதை நாம் அறிவோம். அது தான் அன்புத் தளை. நமது சமுதாயத்தில் மக்கள் அன்பினால் பிணைக்கப்பட்டால், கட்டப்பஞ்சாயத்தும் வராது; கந்து வட்டியும் மிரட்டாது. ஆனால், அவையும், சாதி மத பேதமும், இன பேதமும், நிற பேதமும், பாலியல் கொடுமைகளும் புதியவை அல்ல; அவை காலம்காலமாக கொடுமை நிகழ்த்தியுள்ளவை என்பதை நினைக்கும்போது, என் மனம் மிரண்டு போகிறது. அன்பு ஒரு மாயையா? அல்லது அன்பும், காழ்ப்புணர்வும் உடன் பிறந்தவர்களோ? இன்பமும் துன்பமும் மாங்காய்ப் பச்சடியாக கலந்து வருவதுதான் வாழ்வின் இயல்போ என்ற கவலைகள் எழுகின்றன.

    அன்பே சிவம் என்று இயங்கும் நிகழ்வுகளையும் காண்கிறோம், அவை சொற்பமாக இருந்தாலும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.ஸேரா கியரிங் (Sarah Gearing) என்பவருக்கு ஓர் அரிய வியாதி ~ சிதறிக்கொண்டிருக்கும் மூளை. பல அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டிய அத்தியாவசியம். இல்லையேல் அவருடைய உயிருக்கு ஆபத்து. அவரை முன்பின் அறியாத ஆயிரக்கணக்கான சராசரி மனிதர்கள் மொத்தமாக 12 கோடி ரூபாயை, எறும்பு போல் சிறுகச்சிறுகச் சேமித்துக் கொடுத்தார்கள். அவரும் சில அறுவை சிகிச்சைகள் முடிந்து, புன்சிரிப்புடன் நன்றி கூறுகிறார் என்று இண்டிபெண்டண்ட் என்ற ஆங்கில இதழ் கூறுகிறது. எங்கிருந்து வந்தது அந்த அன்பு?

    (தொடரும்)

    Share
  • அன்றும் இன்றும் [2]

    இன்னம்பூரான்

    ஜனவரி 2, 2018

    அகஸ்மாத்தாக என் நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் ஒரு முன்சாக்கிரதை மனிதர். வயது 92 என்பதால் எல்லாம் முன்கூட்டியே செய்து விடுவார். அடுத்த க்ஷணம் யார் கண்டா என்பார். 2019 வருட வாழ்த்துக்களை இப்போதே அளித்து விடுவார். அவர் எழுதும் எழுத்து ஒவ்வொன்றும் கம்பீரமாக நின்று நம்மை எடை போடும். அத்தனை அழகிய கையெழுத்து. ஆடாமல் அசையாமல் வாடா என்பார். வந்து கட்டியம் கூறும். அவர் எனக்கு பொங்கல் வாழ்த்துக்களை இன்றே எழுதி கொடுத்து விட்டார். அதற்கு பிறகு வருவோம். ‘கொற்றையருள்’ என்ற தன் புனைப்பெயரால் எழுதிய கவிதை ஒன்றை நீட்டினார். நம்ம ருத்ரனே அசந்து போகிறமாதிரி நீரோட்டம். இந்த தொடருக்கு உகந்த கருத்துக்கள்:

    “இன்னாளில்

    அன்பினால் இவ்வுலகம் ஆட்படவேண்டும்

    அறநெறி ஓங்க வேண்டும் பிறநெறி நீங்கவேண்டும்

    தன்னலம் காத்தலோடு பொதுநலம் பேணவேண்டும்

    பழியிலாப் பொருளீட்டிப் பயனுற வழங்கவேண்டும்

    நல்லன எண்ணிடில் நல்லன விளைந்திடும்

    நல்லன மொழிந்திடில் நட்பது மிகுந்திடும்

    நல்லன ஆற்றிடில் நானிலம் உய்யுமால்

    நல்லன எண்ணி, நல்லன மொழிந்து நல்லன ஆற்றுக!

    நலமோங்க வாழ்க! நாடொறும் வாழ்க!”

    கொற்றவையருள்

    எளிய தமிழில் வழங்கப்பட்ட கவிதை தான். எனினும், உள்ளே தொக்கி நிற்கும்

    பொருட்களஞ்சியம் கண்டு களித்து பேணத்தக்கது. சாங்கோபாங்காமாக அடுத்தத் தொடரில் அலசலாம்.

    (தொடரும்)

    Share
  • அன்றும் இன்றும் [1]

    இன்னம்பூரான்

    ஜனவரி 1, 2018

    இன்றைய உலகின் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள். வருங்காலம் அவர்கள் கையில் தான் இருக்கிறது. அவர்களுக்கு வாழும் கலையை கற்றுக்கொடுக்கும் ஆற்றல், கணிசமான அளவுக்கு, நம்மிடமும், நமது மூதாதையரிடமும் இருக்கிறது. புத்தாண்டு வாழ்த்துக்கள் தத்துவரீதியில் அமைவதும், வாழ்க்கையின் அனுபவத்தை பகிர்ந்துகொள்வதுமாகவும், தோழமையுடன் அளவளாவுதலாகவும் அமைவதும் நலம் பயக்கும். அத்துடன் நிற்காமல், பேராசிரியர் மு.வரதராசன் எழுதிய ‘நல்வழி’ ராஜபாட்டையில் தொன்மை, புதுமை, நவீனம், எத்திசையிலிருந்து தென்றலாக வீசும் சான்றோர் வாக்கை சிந்தனையில் அடை காக்கவைத்து தெளிவடைவது போன்ற செயல்பாடுகள் தொடர்ச்சியாகவும், பெருமளவிலும் நடக்கவேண்டும் என்ற அவா எழுத்திலக்கியத்திலும், சொற்பொழிவுகளிலும், மற்ற ஊடகங்களிலும் தென்படுகிறது. நானும் அதற்கு விலக்கல்ல.

    2018 வருடத்தை வரவேற்கும் தருணத்தில், இந்தியா பல நல்வழிகளில் முன்னேறவேண்டும், தமிழ்நாடு ஒரு முன்மாதிரி மாநிலமாக அமையவேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கி நிற்கவேண்டும், மக்களிடம். வரலாற்றையும், அது அளித்த இன்பதுன்பங்களை மறப்பது எளிதல்ல என்றாலும், அதன் பாடங்களை நாம் இனம் காணமுடியும்; எச்சரிக்கையாக இயங்கமுடியும். அலை ஓசை ஓய்வதில்லை. ஆக்கபூர்வமான கருத்துக்களை நாம் பகிர்ந்து கொள்வதற்கு எல்லையும் இல்லை.

    அருவமான மனம் வடிவியல் ( ஜீஆமட்ரீ ) சாத்திரத்துக்கு அப்பாற்பட்டது. மெய்ஞானத்திற்கும், விஞ்ஞானத்திற்கும், அஞ்ஞானத்திற்கும், ஏன் ? ஞானத்திற்கே அப்பாற்பட்டது. மூளையோ ஒரு அற்புதமான அவயவம். அவை இரண்டுடன், நினைவாற்றல், சிந்தனை, அசை போடுதல், மாற்றி யோசிப்பது, பிரஞ்ஞை போன்ற ஏழு குதிரைகளை பூண் பூட்டிய ரதமாக அமையட்டும், 2018. ஆதவன் அத்தகைய ரதத்தில் தான் ஒளி மயமாக ஜொலித்துக்கொண்டே பிரபஞ்சத்தில், நாள் தவறாமல் பவனி வருவதாக ஐதிகம் கூறுகிறது. வானவியல் அந்த பவனியை பறை சாற்றுகிறது. அந்த உவமை இங்கு ஒத்துத்தான் போகிறது. சுருங்கச்சொல்லின், இந்த பூவுலகத்து வாசிகளான சகல ஜீவராசிகளையும் சகலவித போஷாக்குடன் வளர்த்து உய்விக்கும் திறன் கொண்ட வழிமுறைகளை பகிர்ந்து கொள்ள நாட்தோறும் எழுதினாலும், ஒரு வருடம் போதாது; மாமாங்கமும் போதாது. ஆகவே புத்தாண்டை வரவேற்க, உலகில் மிகவும் எடுத்துக்காட்டப்பட்ட ஒரு வரியை மட்டும், இன்று எடுத்துக்கொள்கிறேன்.

    “The arc of the moral universe is long, but it bends towards justice.” என்றார் தியோடர் பார்க்கர் (1810 -1860) என்ற மத போதகர். விவிலியத்தின் கூற்றுக்கள் யாவற்றையும் ஏற்றுக்கொள்ளாதவர். அதனால் ஏற்பட்ட இன்னல்களை சகித்துக்கொண்டார். அதுவே முதல் பாடம் என்க. அவர் மேற்கல்வி கட்ட விதமே அலாதியானது. வறுமையின் காரணத்தால் அவருக்கு ஹார்வேட்டில் படிக்க இடம் கிடைத்தபோதிலும் அங்கு சேரமுடியவில்லை. தந்தையின் பண்ணையில் ஊழியம் செய்து கொண்டே வீட்டிலிருந்து படித்து, மூன்று வருட தேர்வுகளை முதல் வருடமே கெலித்த 19 வயது இளைஞனவர். இந்த எடுத்துக்காட்டு 65 வருடங்களுக்குப் பின் என் கண்களில் இப்போது தென்படுகிறது. இன்று என் அறையை சுத்தம் செய்தேன். என்னை வியப்பில் ஆழ்த்திய ஒரு ஆவணம் தற்செயலாக கிட்டியது. அதில் ஆழ்ந்து விட்டேன். அது நான் ஜனவரி 1, 1953 முதல் ஓரிண்டு வருடங்கள் எழுதிய நாட்குறிப்பு. நான் அதை எடுத்துப்பார்த்த ஞாபகம் சில மாமாங்களுக்கு முன்னால். அக்காலம் டைரி கிடைப்பது குதிரை கொம்பு. பெண்ட் செய்யப்பட்ட நோட்டுப்புத்தகம் வாங்கவே காசு இல்லை. தினசரி இதழ்கள் வரும் சாணிப்பேப்பர் எனப்படும் மலிவான காகிதம் வாங்கி அதை நோட் புத்தகமாக தைத்து எழுதியிருக்கிறேன். அடிக்கடி முனைந்து படிக்கவேண்டும், நேரம் வீணாக்கலாகாது, வெட்டிப்பேச்சு வேண்டாம் என்றெல்லாம் எழுதியிருக்கிறேன். நான் அப்படித்தான் நாட்தோறும் இயங்கினேன் என்று சொல்வதற்கில்லை. ஆனால் முதலுக்கு மோசம் போகவில்லை என்று இப்போது ஞானோதயம் உதிக்கிறது! இது நிற்க.

    நான் அடிக்கடி சுய விசாரணைக்கு உட்படுத்தும் எடுத்துக்காட்டு, அடிக்கடி அப்ரஹாம் லிங்கனாலும், மார்ட்டின் லுதர் கிங் என்ற அமெரிக்காவின் காந்தியினாலும் அடிக்கடி கூறப்பட்டது. அவர்கள் இருவரின் புரட்சிகரமான சிந்தனைகளுக்கும், செயல்களுக்கும் வித்திட்டது. அது தான்:

    “The arc of the moral universe is long, but it bends towards justice.”

    பொருட்கூறப்போனால் ‘வில் போல் வளையும் தருமத்தின் நீளம் அதிகம்; எனினும் அது நீதியை நாடும் எனலாம்.

    சொற்களை மாற்றி பிரயோகித்தாலும் பொருள் மாறப்போவதில்லை. பொழிப்புரை என்று சொன்னால் பலரும் பலவிதமாக கூறலாம். ‘சத்யமே ஜயதே’ என்று தலை மேல் அடித்து ஆணையிட்டு விட்டு, பொய்யுரைப்பதையே வாழ்விலக்கணமாக அமைத்துக்கொள்பவர்களும் இருக்கிறார்கள், இருந்திருக்கிறார்கள், இனியும் இருப்பார்கள். அவ்வாறு இப்போது பேசிக்கொண்டு போவது திசை மாறி விடும். அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

    ‘வில் போல் வளையும் தருமத்தின் நீளம் அதிகம்; எனினும் அது நீதியை நாடும்.’

    எல்லா மனிதர்களுக்கும் எது நல்லது/ எது தீயது என்பது நன்றாக தெரியும். சிலர் அப்போது கூட தீயதையே செய்து தன்னலத்தை மட்டும் காபந்து செய்து கொள்வார்கள்; அதற்காக மற்றவர்களை வேரோடு சாய்த்து விட்டு, சுதாரித்துக்கொள்வார்கள். அதை நியாயப்படுத்துவார்கள். தியோடர் பார்க்கர் அவர்கள் இந்த அநீதி நிலைத்து நிற்க போவதில்லை. தருமம் தலை காட்டும் என்கிறார். காந்தி மஹானின் வாழ்க்கையே தியோடர் பார்க்கர் வாக்கை நிரூபிக்கிறது. மேலும் பார்க்கலாம்.

    (தொடரும்)

    -#-

    பி.கு. சென்னையில் பயணம் செய்யும் போதெல்லாம் எந்த நிமிடமும் விபத்தில் உயிர் இழக்க நேரிடலாம் என்று அச்சப்படும் அளவுக்கு எதிர்வாடையில் பயங்கரவேகத்தில் மோட்டார் சைக்கிளில் விவரம் தெரிந்த மூடர்கள் கூட வருகிறார்கள். டாணாக்காரர்களும் தூங்கி வழிகிறார்கள். இதை பார்க்கும் போது, இது கலிகாலம். நீதிக்கும் ஒரு வில் உண்டு. அது வளையாது; உடைந்து விடும் என்று தோன்றுகிறது. இது மக்களே மாற்றிக்கொள்ள வேண்டிய அசட்டுத்தனம் அல்லவோ? நீங்கள் என்ன சொல்வீர்களோ?

    அன்றும் இன்றும் [1]

    இன்னம்பூரான்
    ஜனவரி 1, 2018

    இன்றைய உலகின் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள். வருங்காலம் அவர்கள் கையில் தான் இருக்கிறது. அவர்களுக்கு வாழும் கலையை கற்றுக்கொடுக்கும் ஆற்றல், கணிசமான அளவுக்கு, நம்மிடமும், நமது மூதாதையரிடமும் இருக்கிறது. புத்தாண்டு வாழ்த்துக்கள் தத்துவரீதியில் அமைவதும், வாழ்க்கையின் அனுபவத்தை பகிர்ந்துகொள்வதுமாகவும், தோழமையுடன் அளவளாவுதலாகவும் அமைவதும் நலம் பயக்கும். அத்துடன் நிற்காமல், பேராசிரியர் மு.வரதராசன் எழுதிய ‘நல்வழி’ ராஜபாட்டையில் தொன்மை, புதுமை, நவீனம், எத்திசையிலிருந்து தென்றலாக வீசும் சான்றோர் வாக்கை சிந்தனையில் அடை காக்கவைத்து தெளிவடைவது போன்ற செயல்பாடுகள் தொடர்ச்சியாகவும், பெருமளவிலும் நடக்கவேண்டும் என்ற அவா எழுத்திலக்கியத்திலும், சொற்பொழிவுகளிலும், மற்ற ஊடகங்களிலும் தென்படுகிறது. நானும் அதற்கு விலக்கல்ல.

    2018 வருடத்தை வரவேற்கும் தருணத்தில், இந்தியா பல நல்வழிகளில் முன்னேறவேண்டும், தமிழ்நாடு ஒரு முன்மாதிரி மாநிலமாக அமையவேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கி நிற்கவேண்டும், மக்களிடம். வரலாற்றையும், அது அளித்த இன்பதுன்பங்களை மறப்பது எளிதல்ல என்றாலும், அதன் பாடங்களை நாம் இனம் காணமுடியும்; எச்சரிக்கையாக இயங்கமுடியும். அலை ஓசை ஓய்வதில்லை. ஆக்கபூர்வமான கருத்துக்களை நாம் பகிர்ந்து கொள்வதற்கு எல்லையும் இல்லை.

    அருவமான மனம் வடிவியல் (ஜீஆமட்ரீ) சாத்திரத்துக்கு அப்பாற்பட்டது. மெய்ஞானத்திற்கும், விஞ்ஞானத்திற்கும், அஞ்ஞானத்திற்கும், ஏன் ? ஞானத்திற்கே அப்பாற்பட்டது. மூளையோ ஒரு அற்புதமான அவயவம். அவை இரண்டுடன், நினைவாற்றல், சிந்தனை, அசை போடுதல், மாற்றி யோசிப்பது, பிரஞ்ஞை போன்ற ஏழு குதிரைகளை பூண் பூட்டிய ரதமாக அமையட்டும், 2018. ஆதவன் அத்தகைய ரதத்தில் தான் ஒளி மயமாக ஜொலித்துக்கொண்டே பிரபஞ்சத்தில், நாள் தவறாமல் பவனி வருவதாக ஐதிகம் கூறுகிறது. வானவியல் அந்த பவனியை பறை சாற்றுகிறது. அந்த உவமை இங்கு ஒத்துத்தான் போகிறது. சுருங்கச்சொல்லின், இந்த பூவுலகத்து வாசிகளான சகல ஜீவராசிகளையும் சகலவித போஷாக்குடன் வளர்த்து உய்விக்கும் திறன் கொண்ட வழிமுறைகளை பகிர்ந்து கொள்ள நாட்தோறும் எழுதினாலும், ஒரு வருடம் போதாது; மாமாங்கமும் போதாது. ஆகவே புத்தாண்டை வரவேற்க, உலகில் மிகவும் எடுத்துக்காட்டப்பட்ட ஒரு வரியை மட்டும், இன்று எடுத்துக்கொள்கிறேன்.

    “The arc of the moral universe is long, but it bends towards justice.” என்றார் தியோடர் பார்க்கர் (1810 -1860) என்ற மத போதகர். விவிலியத்தின் கூற்றுக்கள் யாவற்றையும் ஏற்றுக்கொள்ளாதவர். அதனால் ஏற்பட்ட இன்னல்களை சகித்துக்கொண்டார். அதுவே முதல் பாடம் என்க. அவர் மேற்கல்வி கட்ட விதமே அலாதியானது. வறுமையின் காரணத்தால் அவருக்கு ஹார்வேட்டில் படிக்க இடம் கிடைத்தபோதிலும் அங்கு சேரமுடியவில்லை. தந்தையின் பண்ணையில் ஊழியம் செய்து கொண்டே வீட்டிலிருந்து படித்து, மூன்று வருட தேர்வுகளை முதல் வருடமே கெலித்த 19 வயது இளைஞனவர். இந்த எடுத்துக்காட்டு 65 வருடங்களுக்குப் பின் என் கண்களில் இப்போது தென்படுகிறது. இன்று என் அறையை சுத்தம் செய்தேன். என்னை வியப்பில் ஆழ்த்திய ஒரு ஆவணம் தற்செயலாக கிட்டியது. அதில் ஆழ்ந்து விட்டேன். அது நான் ஜனவரி 1, 1953 முதல் ஓரிண்டு வருடங்கள் எழுதிய நாட்குறிப்பு. நான் அதை எடுத்துப்பார்த்த ஞாபகம் சில மாமாங்களுக்கு முன்னால். அக்காலம் டைரி கிடைப்பது குதிரை கொம்பு. பெண்ட் செய்யப்பட்ட நோட்டுப்புத்தகம் வாங்கவே காசு இல்லை. தினசரி இதழ்கள் வரும் சாணிப்பேப்பர் எனப்படும் மலிவான காகிதம் வாங்கி அதை நோட் புத்தகமாக தைத்து எழுதியிருக்கிறேன். அடிக்கடி முனைந்து படிக்கவேண்டும், நேரம் வீணாக்கலாகாது, வெட்டிப்பேச்சு வேண்டாம் என்றெல்லாம் எழுதியிருக்கிறேன். நான் அப்படித்தான் நாட்தோறும் இயங்கினேன் என்று சொல்வதற்கில்லை. ஆனால் முதலுக்கு மோசம் போகவில்லை என்று இப்போது ஞானோதயம் உதிக்கிறது! இது நிற்க.

    நான் அடிக்கடி சுய விசாரணைக்கு உட்படுத்தும் எடுத்துக்காட்டு, அடிக்கடி அப்ரஹாம் லிங்கனாலும், மார்ட்டின் லுதர் கிங் என்ற அமெரிக்காவின் காந்தியினாலும் அடிக்கடி கூறப்பட்டது. அவர்கள் இருவரின் புரட்சிகரமான சிந்தனைகளுக்கும், செயல்களுக்கும் வித்திட்டது. அது தான்:

    “The arc of the moral universe is long, but it bends towards justice.”

    பொருட்கூறப்போனால் ‘வில் போல் வளையும் தருமத்தின் நீளம் அதிகம்; எனினும் அது நீதியை நாடும் எனலாம்.

    சொற்களை மாற்றி பிரயோகித்தாலும் பொருள் மாறப்போவதில்லை. பொழிப்புரை என்று சொன்னால் பலரும் பலவிதமாக கூறலாம். ‘சத்யமே ஜயதே’ என்று தலை மேல் அடித்து ஆணையிட்டு விட்டு, பொய்யுரைப்பதையே வாழ்விலக்கணமாக அமைத்துக்கொள்பவர்களும் இருக்கிறார்கள், இருந்திருக்கிறார்கள், இனியும் இருப்பார்கள். அவ்வாறு இப்போது பேசிக்கொண்டு போவது திசை மாறி விடும். அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

    ‘வில் போல் வளையும் தருமத்தின் நீளம் அதிகம்; எனினும் அது நீதியை நாடும்.’

    எல்லா மனிதர்களுக்கும் எது நல்லது/ எது தீயது என்பது நன்றாக தெரியும். சிலர் அப்போது கூட தீயதையே செய்து தன்னலத்தை மட்டும் காபந்து செய்து கொள்வார்கள்; அதற்காக மற்றவர்களை வேரோடு சாய்த்து விட்டு, சுதாரித்துக்கொள்வார்கள். அதை நியாயப்படுத்துவார்கள். தியோடர் பார்க்கர் அவர்கள் இந்த அநீதி நிலைத்து நிற்க போவதில்லை. தருமம் தலை காட்டும் என்கிறார். காந்தி மஹானின் வாழ்க்கையே தியோடர் பார்க்கர் வாக்கை நிரூபிக்கிறது. மேலும் பார்க்கலாம்.

    (தொடரும்)

    -#-

    பி.கு. சென்னையில் பயணம் செய்யும் போதெல்லாம் எந்த நிமிடமும் விபத்தில் உயிர் இழக்க நேரிடலாம் என்று அச்சப்படும் அளவுக்கு எதிர்வாடையில் பயங்கரவேகத்தில் மோட்டார் சைக்கிளில் விவரம் தெரிந்த மூடர்கள் கூட வருகிறார்கள். டாணாக்காரர்களும் தூங்கி வழிகிறார்கள். இதை பார்க்கும் போது, இது கலிகாலம். நீதிக்கும் ஒரு வில் உண்டு. அது வளையாது; உடைந்து விடும் என்று தோன்றுகிறது. இது மக்களே மாற்றிக்கொள்ள வேண்டிய அசட்டுத்தனம் அல்லவோ? நீங்கள் என்ன சொல்வீர்களோ?

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • ஞானச் சுடர் [3]

    -இன்னம்பூரான் 
    நவம்பர் 01, 2017

    innam

    அரசல் புரசலாகக் குழப்பம் அதிகரித்து தலைநகர் முழுதும், பின்னர் சிக்கலாகிவிட்ட மகளிர் கூந்தல்போல் மற்ற பிராந்தியங்களிலும் பரவியது; ‘கந்தரகூளம் போல’ என்று ஒரு பிள்ளையார் கோயிலாண்டி அதை வருணித்தார். இது இப்படியிருக்கும்போது, கணீரென்று நாற்கால் மண்டபத்தின் ஆராய்ச்சி மணி ஒலித்தது; ஜயபேரிகை முழங்கியது; ஆங்காங்கே தண்டோரா சத்தம் காதைப் பிளந்தது. இவையெல்லாம் அவைக்கு அரசர் வருகிறார் என்பதற்கு சமிக்ஞைகள். விழுந்தடித்துக்கொண்டு அதிகாரவர்க்கம், தத்தம் சீருடைகள், மெடல்கள், தலைப்பாகைகள் அணிந்து கொண்டு தர்பார் மண்டபத்துக்கு விரைந்தனர். ரதகஜதுரகபதாதிகளின் படை புடை சூழ, டவாலிகள் ‘பராக்’! பராக்’! ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட வீராதி வீர சூராதி சூர மன்னர்பிரான் வருகிறார் என்று கட்டியம் கூற, அவரும் அலங்கார பூஷிதனாக, ஆனால் சிந்தனையில் ஆழ்ந்த முகத்துடன் அரியணையின் படிகளின் பக்கவாட்டுப் பதுமைகளை பார்த்துக்கொண்டே ஏறியமர்ந்தார்.

    சங்கொலியும், யாழிசையும், பாணர்களின் புகுழ்மாலைகளும் அவருக்கு உற்சாகம் அளிக்க முயன்று தோல்வி அடைந்தன. இது எல்லாம் எல்லா ராஜாங்கங்களிலும் நடப்பவைதான். இங்கு ஒரு வித்தியாசம் யாதெனில் அரசர் ஏதோ ஒரு தெளிவு பெற்று விட்டார் என்று அரண்மனை சோதிடர் காதோடு காதாக திவானிடம் ரகஸ்யம் கூறினார். அது என்ன?

    [தொடரும்]

    *****

    சித்திரத்துக்கு நன்றி:

    https://www.udumalai.com/p_images/main_thumb/sinthanai-sei-maname-35938.jpg

    Share
  • ஞானச் சுடர் [2]

    -இன்னம்பூரான்
    அக்டோபர் 25, 2017

    innam

    பல்லாயிரம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியா எனப்படும் பாரதவர்ஷம் முழுவதையும் ஒரு மன்னர்பிரான் ஆண்டுவந்தார். வெண்குடை, கிரீடம், சாமரம், சிம்மாசனம், செங்கோல் போன்ற அரசாட்சி சின்னங்களும், பட்டு, ஜரிகை, பீதாம்பரம் போன்ற படாடோப ஆடைகளும், ஜொலிக்கும் வைரம், மரகதம், வைடூர்யம், பவழம், நன்முத்து போன்றவை மாசறு பொன்னில் பதித்த அணிகலன்களையும் அணிந்து அவன் யானை மீது அமர்ந்தோ, குதிரை சவாரி செய்தோ, இரதத்தில் பவனி வந்தோ, அந்தப்புரத்திலிருந்து அரண்மணை தர்பார் மண்டபத்துக்கு வருவது கண்கொள்ளாக்காட்சி என்று மக்கள் கூறுவர். ராஜகுரு, மந்திரிமார், தளபதி ஆகிய உயர் அதிகாரிகள் நாணயத்துக்கும், வாய்மை அணுகுமுறைக்கும், மக்கள் நலத்துக்கு உழைப்பதற்கும், ராஜவிசுவாசத்திற்கும் அழியாப்புகழ் பெற்றவர்கள். சுற்று வட்டாரங்கள் அவரவர் பொறுப்புகளைக் கவனத்துடன் சிறப்பாக ஆற்றுவதில் ஈடு, இணை இல்லாதவர்கள். சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வு கிடையாது. தகுதிக்கு மட்டும் தான் மதிப்பு. சிபாரிசு என்பது மன்னனுக்கு ஒவ்வாதது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் இருந்தது என்று பேசிக்கொள்வார்கள்.

    அந்தக்காலத்தில் பல மனைவிகளை மணந்து கொள்ளும் வழக்கம் கிடையாது. ஆகவே, மஹாராணி என்ற அந்தஸ்து ஒரே ஒரு அழகிய பெண்மணியை மட்டும் சாரும். அவரும் சுயம்வரத்தின் போதுதான் இவரைத் தேர்ந்தெடுத்தார். ‘வீட்டுக்கு வீடு வாசற்படி’ என்ற உலகவழக்குக்கிணங்க, அந்தப்புரத்தில் அவள்தான் ராணி. ராஜா அவளை தாஜா பண்ணுவதே ஒரு சுவையான காட்சி என்று தாதிகள் தங்கள் தங்கள் கணவர்களிடம் கூறி, அடக்கி ஆள்வார்கள். அலங்காரத்தில், அரசனை விட ஓர் இம்மி அளவு குறைவு இல்லை என்றாலும், அவர் குணவதி. ராஜகுமாரி அரசுப்பள்ளியில் தான் படித்துவந்தாள். மதிய உணவு அரண்மணையிலிருந்து வராது. மற்றவர்களுடன், அவளும், வரகுச்சோறு, கம்பங்கூழ், கேழ்வரகு அடை, தினைப் பாயசம் போன்றவற்றை உண்டு ஆரோக்யமாக இருந்தாள். செல்வனின் மூதாதையர்கள் கூடப் பிறவாத காலமது. பேலியோ டயட் நடைமுறைக்கு வரவில்லை. பசுஞ்கன்றுகளும் சேஃப்; பன்றிக்குட்டிகளும் சேஃப்; மீன்குஞ்சுகளும் சேஃப்; காடை கெளதாரிகளும் சேஃப். வாத்துக்கள் அன்னநடை போட்டன. புலியும் ஆடும் நட்பு பாராட்டி ஒரே ஓடையில் நீர் பருகின. ஆனாலும், பக்கத்து ராஜாங்கத்தில் சிலர் மர்மமான பேலியோர்கள் என்று இலைமறைவு காய்மறைவாகச் சொல்லப்படுவது உண்டு. இது நிற்க.

    சுருங்கச்சொல்லின், அரசாட்சியின் மேன்மை பாதரசக்கண்ணாடி போல் மக்கள் முகத்தில் மகிழ்ச்சியாகத் திகழ்ந்தது. இப்படியிருக்கும்போது ராஜாவின் முகம் ஒருநாள் இருண்டது. அவர் கவலையில் ஆழ்ந்து விட்டதைக் கண்டு, ராணியும், ராஜகுமாரியும் கண்கலங்கினர். தாதிகள் மூலம் ட்விட்டர் துணுக் போன்றவைத் தற்கால டெங்குவைவிட வேகமாகப் பரவியதால், மக்களும் யாது செய்வது என்று தெரியாமல் தவித்தனர். அரண்மனைக்கு எதிர்வாடையில் ஒரு மினி தர்பார் மண்டபம் உளது. அங்கு அரசர் வரும் மரபு கிடையாது. எனவே, ராஜகுரு, மந்திரிமார், தளபதி ஆகிய உயர் அதிகாரிகள் அங்கு கூடி மந்திராலோசனை செய்தார்கள்; குழப்பம் கூடியது தான் மிச்சம்.

    [தொடரும்]

    ***

    சித்திரத்துக்கு நன்றி:
    https://i.ebayimg.com/images/g/~OAAAOSwCQZZB-lj/s-l225.jpg

     

     

     

    Share
  • ஞானச் சுடர்

    -இன்னம்பூரான்
    தீபாவளி தினம் 2017
    அக்டோபர் 18, 2017

    அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
    இன்புருகு சிந்தை இடுதிரியாநன்புருகி
    ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
    ஞானத் தமிழ் புரிந்த நான்.   (பூதத்தாழ்வார்)

    *****

    ஞானச் சுடர் [1]

    innam

    முன்னுரை

    மதிநுட்பம் அல்லது ஞானம் பற்றிய இந்த நூல் சராசரி மனிதனால், சராசரி மனிதனுக்கு எழுதப்படுகிறது. சான்றோர்களும், மேதாவிகளும் இதில் புதிதாக ஒன்றும் காணவில்லையே என்று அங்கலாய்க்கலாம். பொறுத்தாள்க. கருத்துரிமை யாவருக்கும் உண்டு என்பதால், மாற்றுக்கருத்து, திசைமாற்றம், குறுக்குசால் போன்றவற்றை தடுத்தாட்கொள்ளப்போவதில்லை. சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று அசால்ட்டாக இருக்காமல், சிறு துளி பெரு வெள்ளம் என்று அமரிக்கையாகப் படித்துப் பயன்பெறுக.

    *****

    சித்திரத்துக்கு நன்றி: http://3.bp.blogspot.com/-GKTV8vAXyxE/TfOpUvFnW5I/AAAAAAAADRQ/jSnSKdaJMNE/s1600/5210610419_3a6291cd93_b.jpg

     

     

     

     

    Share
  • நூறு வருடங்களுக்கு முன்னால் [2]

    இன்னம்பூரான்
    செப்டம்பர் 19, 2017

    unnamed (4)

    வரலாறு படைத்தவர்களை பற்றி, நாளாவட்டத்தில் மறந்து விடுவது மனிதனின் இயல்பு. வரலாற்றை மாற்றி எழுதுவதும் அவனின் உத்திகளில் ஒன்று. நூறு வருடங்களுக்கு முன்னால் நேற்றைய தேதியில் (செப்டம்பர் 18, 1917) தேசீய கூட்டங்களுக்கு புகழ் பெற்ற கோகலே மன்றத்தில், சிறையில் இற்செறிக்கப்பட்ட தேசபக்தர்களை போற்றி புகழ்வதற்கு, ஒரு கூட்டம் கூடியது. டாக்டர். சர். எஸ். சுப்ரமணிய ஐயர் அவர்கள் தலைமை வகித்தார். இதை பற்றிய அறிவிப்பு தாமதமாக வெளிவந்தாலும், குறித்த நேரத்துக்கு முன்னரே மன்றம் நிரம்பி வழிந்தது. பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கூட்டத்தில் பிராமணரல்லாதார்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். கூட்டத்தினர், தேசபக்தர்களை சிறையில் அடைத்தவுடன் நடத்தப்பட்ட கூட்டத்தினரை போல் வாடிய முகமில்லாமல், மலர்ந்த முகத்துடன் காணப்பட்டனர். தலைமை மேஜையில் திருமதி பெசண்ட் அம்மையாரின் படமும், சர்.ரவீந்தரநாத் டாகூர் அவர்களின் படமும் வைக்கப்பட்டிருந்தன. லாஹூரை சேர்ந்த 19 வயது இளைஞனால் அவை வரையப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆதாரம்:
    http://www.thehindu.com/archive/release-of-the-interned/article19710458.ece

    குறிப்பு: திரு. எஸ்.சுப்ரமண்ய ஐயர் அவர்கள் ஏற்பாட்டில் சென்னை பிரம்மஞான சபை ஆலமரத்தடியில் தான், திரு.ஆக்டேவியன் ஹ்யூம் அவர்களும் கலந்து கொண்ட அமர்வில் தான் விடுதலைக்கு போராடிய காங்கிரஸ் கட்சி பிறந்தது. அதற்கு பின்னர் தான் வரலாற்றில் காங்கிரஸ் பிறந்த மண்ணாக சுட்டப்படும் பாம்பே அமர்வு நடந்தது. ஐயருக்கு அந்த அந்தஸ்தை கொடுக்கலாமோ என்ற தாக்கம் தான் வரலாற்றை மாற்றி எழுதியதோ? தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் தான் அவரை முனீந்தரர் என்று புகழ் பாடினார். சென்னை செண்டினரி ஹாலின் முன் அவருடைய சிலை நிற்கிறது. கலோனிய அரசை கண்டித்து அவர் அமெரிக்க ஜனாதிபதி உட் ரோ வில்சன் அவர்களுக்கு எழுதிய மடலை பிரம்மஞான சபையின் பிரமுகர் ஹென்றி ஹாட்சனர் அவர்கள் தான் மறைமுகமாக எடுத்துச்சென்றார். அது லண்டனையும் அடைந்து பார்லிமெண்டில் விவாதிக்கப்பட்டது; கலோனிய அரசு கண்டிக்கப்பட்டது. கவலையுற்ற கலோனிய அரசு அவருடைய ‘சர்’ பட்டத்தை பிடுங்கிவிடும் என்று பேசிக்கொண்டார்கள். அவரோ அதை கடாசிவிட்டார். உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய் அவர் எல்லாவற்றையும் துறந்து முனிவராக வாழ்ந்து வந்தார்.

    அடுத்தக்குறிப்பு: பிராமணரல்லாதார் வந்ததை குறிப்பிட்டது இன்று விநோதமாகப்படலாம். அன்றைய காலகட்டத்தில் ஜஸ்டிஸ் கட்சி, கலோனிய ஆட்சியின் விரோதத்தை சம்பாதிக்க விரும்பவில்லை. அது பிராமணரல்லாதார் கட்சி. அத்தகையவர்களில் பலருக்கு நாட்டுப்பற்று இருந்ததை, இந்த குறிப்பு சுட்டுகிறது எனலாம்.

    சித்திரத்துக்கு நன்றி:
    http://www.zahlenparty.de/wp-content/uploads/1917.jpg

    ****

    Share
  • தமிழ் சமுதாயம் 2077 [7]: சூடு, சொரணை காக்கும் கொலைகள்

     

    -இன்னம்பூரான்
    செப்டம்பர் 5, 2017

     

    innam

    2003ஆம் வருடம் ஒரு தீநிமித்தம். கதிரவன் உதிக்கும் முன், முன்னூறுக்கு மேற்பட்ட சராசரி கிராமத்தினர் இரு சடலங்கள் எரிந்து சாம்பலாவதைக் கண்டுகளிக்கக் கூடியிருந்தனர்,  விருத்தாசலத்துக்கு அருகில் இருக்கும் புதுக்கீரைப்பேட்டை என்ற கிராமத்தின் வெட்டவெளியில். மரணச் சான்று பெற, ஆதார் போன்ற மண்ணாங்கட்டிகள் எல்லாம் கிடையாது. தேவையுமில்லை அப்பனும் ஆத்தாளும் இருந்தால் கூட அவை அனாதைப்பிணங்கள். கூடப்பிறந்த அண்ணனும், அருமைச் சுற்றமும், அக்கம்பக்கத்து பிசாசுகளும், கண்ணகி என்ற பட்டதாரி பெண்ணை நஞ்சு உண்ணவைத்து அவள் மரணத்தைக் கொண்டாடினார்களாம். அவள் வன்னியர் குலத்தவள். அவள் காதலித்து மணந்த முருகேசன் என்ற கெமிகல் எஞ்சினியர் அருகில் உள்ள குப்பநத்தத்தில் நசுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து முன்னுக்கு வந்தவர். காதலித்து மணந்த இந்த ஜோடிக்கு தினந்தோறும் மரணபயம்.

    முருகேசன் கண்ணகியை மூங்கில்துறைப்பட்டு என்ற கிராமத்தில் உறவினர்கள் வீட்டில் பாதுகாப்புடன் வைத்துவிட்டு, வண்ணான்குடிக்கடவு என்ற கிராமத்துக்கு சென்றார். அவருடைய மாமன் மூலமாக இதைத் துப்பறிந்த வன்னியர்குலப் பெருந்தகைகள், நைச்சியமாக அவர்மூலம், முருகேசனைத் தருவித்து அவரை, கோயில் அருகில் ஒரு கம்பத்தில் கட்டினார்கள். கண்ணகியின் ரத்த உறவு அவரை விளாசித்தள்ள, வலி பொறுக்கமுடியாமல், அவர் கண்ணகி தஞ்சம் புகுந்த இடத்தை சொல்லிவிட்டார். 12 நபர்கள் கொண்ட படையை ஏற்றிக்கொண்டு கார்கள் பறந்தது. நம் கிராமவாசிகள் ஏழைகள். டில்லியில் கூத்தடிப்பார்கள். ஆனால், கார் மோர் எல்லாம் அத்துபடி. கந்துவட்டியும் அத்துபடியாக இருக்கலாம். அவள் வலுக்கட்டாயமாகக் கொணரப்பட்டாள். நஞ்சு ஊட்டப்பட்டு அவர்கள் இருவரும் -இளம்தம்பதிகள் – செத்துப்போனார்கள். Gleeயுடன் கொளுத்தப்பட்டார்கள். என்ன உலகமடா?

    அப்பனும் அண்ணனும் கண்ணகிக்கு நஞ்சு புகட்டியதாகவும், அப்பனும், மாமனும் முருகேசனுக்கு நஞ்சு புகட்டியதாகவும் விருத்தாசலம் போலீஸ், விடுதலைச் சிறுத்தை படையின் தலைவர் திருமாவளவன் தலையிட்டபின் சொல்கிறார்களாம். இந்தப்பக்கம் நான்கு பேர், அந்தப்பக்கம் நான்கு பேர். கைதாம், என்னே சமச்சீர்? 14 வருடங்கள் கழித்து ஆகஸ்ட் 2017 இறுதியில் கடலூரில் வழக்கு விசாரிக்கப்பட்டது. இரண்டு சாட்சிகள் முரண் சாட்சிகள் ஆயினர்.

    கடந்த அறுபது வருடங்களில், ‘வர வர மாமியார் கழுதைபோல் ஆன கதையாக‘ தமிழ்நாட்டு மக்கள், ஈ.வே.ரா. அவர்களின் சமத்துவ அறிவுரைகளைக் குப்பையில் போட்டுவிட்டு, ராஜாஜியின் விமோசனத் தொண்டுகளை மறந்துவிட்டு, காமராஜரின் பொது அறிவைக் கடாசிவிட்டு, காந்திஜியின் போதனைகளை முற்றும் உதறிவிட்டு, திரு.வி.க. அவர்களின் சீரிய கருத்துக்களைக் கொளுத்தி அழித்துவிட்டு, கொள்ளிவாய்ப் பிசாசுகளாக நடந்துகொண்ட கதை இது.

    ஈ.வே.ரா. அவர்களின் வழித்தோன்றல்கள் அறுபது ஆண்டுகளாகச் சாதி அடிப்படையில் ஆட்சி நடத்தியபோது, இவை அதிகரித்தன. போலீசிடம் கொடுத்த புகாரும், அவசர உதவி கேட்ட வேண்டுகோளையும் காவல்துறை கண்டுகொள்ள மறுத்ததாம்.  இந்த அழகில் நாம் என்றோ இதிகாசத்தில் சொல்லப்பட்ட உபகதை – துரோணன் என்ற பார்ப்பன க்ஷத்திரியர் ஏகலைவனிடம் கட்டை விரலை தக்ஷிணையாக கேட்டதாக சொன்னப்பட்டதை நினைவில் கொணர்ந்து கொதித்துப் போகிறோம். பாரதியார் அதனால் தான் பழங்கதைகளை தனக்குள்ளே பேசி மாய்ந்து போகவேண்டாம் என்று சொன்னார். கேட்பார் இல்லையே!

    தமிழ்நாட்டுக்குத் திரும்புவோம். கடந்த மூன்றாண்டுகளில் இந்த மாதிரி ‘சூடு, சுரணை காக்கும்’81 கொலைகள் நடந்துள்ளன. இப்படித்தான் கெளசல்யாவை மணந்த சங்கரை உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்துக்கு அருகில், மக்கள் மன்றத்தில் நடுவில் அரிவாளால் வெட்டி கொன்றார்கள்.

    வெளிநாடுகளில் சொகுசாக அமர்ந்துகொண்டு தமிழ்நாட்டை, ட்விட்டர், ஃபேஸ்புக், லொட்டு, லொசுக்கு, மண்ணங்கட்டி செய்திகளை நம்பிப் பட்டி மன்றம் நடத்தும் நண்பர்களே! எவிடென்ஸ் கதிர் அவர்கள் சொல்வதை கேளும்:

    • இத்தகைய கொலைகள் அதிகரித்து வந்தபோதிலும், ஒரு கொலை வழக்கிலாவது தண்டனை கொடுக்கப்படவில்லை. ஏன்? எல்லாக் கொலையாளிகளும் குடும்பத்தினர் என்பதால்.
    • 22 மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் ‘மரியாதைக் கொலை’( இணையம் கொடுத்த மொழியாக்கம்) பற்றி விவரம் கொடுத்துள்ளனர். தமிழ்நாடு அவற்றில் ஒன்று அல்ல.
    • தற்கொலை என்று சொல்லித் தப்பிப்பது ஒரு வாழ்நெறி, இங்கு.

    இந்த வாழ்நெறி நசுக்கி ஒழித்து விடாப்பட்டால் 2077 தமிழ்நாடு என்று ஒரு மாநிலம் இருக்காது; அதற்கு இருக்கவேண்டிய தகுதியும் இருக்காது. யாராவது சிலருக்காவது மனம் கொதிக்குதா என்று பார்ப்போம். மனம் இரங்குதா என்று பார்ப்போம்.காஷ்ட மவுனம் சாதிக்காமல், இந்த மாதிரியான வாழ்நெறியைக் கடைபிடிக்காத பிராமணர்களை மட்டும் தாக்கும் மனப்பான்மை தணிந்து நடுநிலை முக்கியத்துவம் பெற்றால், 2077 லாவது தமிழ்நாடு செழிப்புடன் திகழக்கூடும்.

    -#-

    சித்திரத்துக்கு நன்றி:

    படித்தவை:

    http://www.deccanchronicle.com/nation/crime/150316/81-honour-killings-in-three-years-in-tamil-nadu.html

    http://www.newindianexpress.com/states/tamil-nadu/2017/aug/31/trial-begins-2003-tamil-nadu-honour-killing-case-1650474.html

     

     

     

    Share
  • கோப்புக்கூட்டல் (7): தமிழ்

    -இன்னம்பூரான்
    செப்டம்பர் 1, 2917

     

    innam

    டேவிட் ஷுல்மன்

    மொழிகள் ஒன்றுடன் ஒன்று உறவாடுவது அவற்றின் இயல்பு. அந்த இயல்பை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டதால்தான், இன்று ஆங்கிலம் உலகமொழியாக உலவி வருகிறது. ஸம்ஸ்கிருதம் என்ற பெயரின் பொருள், ‘நன்கு உருவாக்கப்பட்டது’. கணினியாளர்களில் பெரும்பாலோர் அது உண்மை என்பார்கள். அது ஒரு புறமிருக்க, எந்த மொழிக்கும் அந்தத் தகுதி இல்லாமல் போகவில்லை என்பதை கிரேக்கம், ரோமானிய மொழி, அரபி, ஹீப்ரு, தமிழ் அறிந்தவர்கள் அறிவார்கள். மேலும் சொல்லப்போனால், தனிமொழியாக இயங்கத்தொடங்கிய ஸம்ஸ்கிருதம், அதனாலேயே பேசாமடந்தை ஆயிற்று.

    இன்றைய கோப்பு, பேராசிரியர் டேவிட் ஷுல்மனின் கருத்தை ஏற்றுக்கொள்கிறது. முனைவர் ஏ.ஆர். வெங்கடாசலபதியின் விமர்சனத்தையும் சுட்டுகிறது.

    இனி அவரவர் பாடு! தமிழின் பாடு!

    “The notion that there was a pure Tamil that had no Sanksrit in it is a complete fantasy. There are Prakrit and Sanskrit words in the earliest Tamil Brahmi inscriptions we have. The Tolkappiyam is permeated by Sanskrit — the phonological analysis of the yezhuthhu (alphabet) is taken from Sanskrit grammarians. The Tamil Brahmi script has some features peculiar to it, but it’s deeply interwoven with the Sanskrit system.”.. “I want, and hasten to say, that everything in life is singular and unique. Tamil is also unique. But it’s not unique because it has nothing to do with Sanskrit. It is unique because Tamil has all of this in it and it has its own genius. Tamil grammarians such as Sivananamunivar in the 18th century themselves say that it has iyarkai, iyalpu, a particular nature. It is the task of Tamil grammarians to unravel and review that logic or nature, and this nature does not depend on separating it from Sanskrit.”

    -David Shulman:  Tamil: A Biography.

    Excerpted with thanks on September 1, 2017 fromhttp://www.thehindu.com/society/i-cannot-compartmentalise-my-life/article19554510.ece

    “,,,But my biggest argument is with a thread that runs through the book. Shulman asserts that a pure, autonomous Tamil never existed. If this was the case, why, even in his own analysis, at every moment in its long history, is Tamil continually resisting and wrestling with Sanskrit to maintain its distinction — a cross that no other Dravidian/ Indian language wants to bear?…”

    Prof. A.R. Venkatachalapathy

    Excerpted with thanks on September 1, 2017 fromhttp://www.thehindu.com/books/books-reviews/review-tamil-a-biography/article17325788.ece

    ***

    சித்திரத்துக்கு நன்றி: https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/74/David_Shulman.jpg/250px-David_Shulman.jpg

     

     

     

    Share
  • கோப்புக்கூட்டல் [6]

    இன்னம்பூரான்
    ஆகஸ்ட் 15, 2017

    ஆங்கிலத்தில் ‘எல்லாவற்றையும் உட்படுத்திய’ என்ற பொருள் கூறும் ecumenical என்ற சொல் உணர்த்தும் இலக்கை, ஒரு பெரிய கோரிக்கையாக முன்வைக்கிறேன். அதன் பொருட்டு, ஒரு கோப்புக்கூட்டல் செய்ய விரும்புகிறேன்.

    இன்றைய கோப்பு: [6]
    அலங்கார வேளையில் ஒரு அலங்கோலம்

    A large number of children admited at ICU for encephalitis treatment ,At least 30 children lost their lives due to encephalitis in last 48 hours at Gorakhpur’s BRD Hospital after Supply of liquid oxygen was disrupted yesterday due to pending payment. Express photo by Vishal Srivastav 12.08.2017
    A large number of children admited at ICU for encephalitis treatment ,At least 30 children lost their lives due to encephalitis in last 48 hours at Gorakhpur’s BRD Hospital after Supply of liquid oxygen was disrupted yesterday due to pending payment. Express photo by Vishal Srivastav 12.08.2017

    சுதந்திர தினம் ஒரு சுபதினம். கொண்டாட வேண்டிய தருணத்தில், பொது மக்கள் மீளா துக்கத்தில் திண்டாடினால், அது பற்றிய கவலை, சோகம் நம்மை ஆட்கொள்ளும். கடந்த ஒரு வாரத்தில் கோரக்பூர் மருத்துவகல்லூரியை சார்ந்த நேரு ஆஸ்பத்திரியில் (950 படுக்கைகள் கொண்டது) 70 சிசுக்களும், சில வயது வந்தவர்களும் மரித்து விட்டார்கள். அது பற்றி இன்றைய சுதந்திர தின உரையில் குறிப்பிட்ட முதல்வர் யோகி ஆதிநாத், இன்றைய தினத்தை சங்கல்பம் செய்யும் தினமாக அறிவித்து, தன்னை ஆற்றிக்கொண்டார். நீண்ட கால உண்மையை செப்பிய அவர் ஊரறிந்த சமீபத்தில் நடந்த இழவின் உண்மை பின்னணியை கூறியிருக்க முடியாது; ஏனெனில் ஒரு விசாரணை துவங்கப்போகிறது. அதை ஒரு மாபெரும் சவாலாக ஏற்றுக்கொண்டு, பொது மன்றத்தில் பிராணவாயு பற்றி உள்ள தகவல்களின் அலசலை சொல்லாமல், நாட்டின் சுகாதாரமின்மை பற்றி அவர் முரசொலித்தது விகாரமாக இருக்கிறது. அது நிஜம் தான். ஆஸ்பத்திரி கந்தரகூலம், பல்லாண்டுகளாக.

    என்னால் இயன்றவரை நம்பகமாக கிடைத்த செய்திகளை அறிந்த கொண்ட எனக்கு இது வரை வெளிவந்த எந்த கருத்தும் பிடிபடவில்லை. ஏனென்றால், ஒவ்வொருவரும் யானையை தொட்டறிந்த ஐந்து கண்ணொளி இழந்தவர்கள் போல முழு பின்னணியையும் நோக்கவில்லை. நானும் செய்யவேண்டிய அலசல்கள் பல உள்ளன. சாணக்கியர் தன் காலில் குத்திய பெரிய முள்ளை பிடுங்கி எடுத்ததும் அல்லாமல், அந்த செடியை வேருடன் பிடுங்கி தீயிட்டு கொளுத்தினாராம். கடந்த முப்பது வருடங்களாக உத்தரபிரதேசத்தை ஆண்ட மகாபிரபுக்கள் (நான் அந்த மாநிலத்தில் ஊழியம் செய்ததால், அவர்களில் சிலரை அறிவேன். சுயநல அரசியல் கம்பங்கூத்தாடிகள். ) மக்களை வாட்டிய மூளைக்காய்ச்சல் (Japanese Encephalitis and Acute Encephalitis Syndrome) பற்றி கவலை கொள்ளாததால், அம்மாநிலத்தின் கிழக்கு பகுதியில் மட்டும், ஐம்பது ஆயிரம் மக்கள் மடிந்தனர். முதல்வர் பலவருடங்களாக இது பற்றி நன்கு அறிவேன்; இதை ஒழிக்க பாடுபட்டேன் என்று ஆஸ்பத்திரி சவகிடங்கை பார்வையிட வந்த போது கூறினார். என்ன செய்தார் என்ற விவரம் தான், எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை, எனக்கு. ஆம். இது தற்காலிக அலசல் தான்.

    ஆனால், இன்று ஆதாரத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டியதை பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டும்.

    மெத்தப்படித்த அரசுபதவி வகிக்கும் மேதாவிகள், தங்கள் முதுகுக்குக் கவசம் பூட்ட, முரண்செய்திகளை ‘இரக்கத்துடன்/வருத்தத்துடன்’ அளிப்பார்கள். பல முரண்செய்திகளில், சம்பந்தப்பட்ட உண்மைகளையும், சம்பந்தமில்லா வரலாற்று உண்மைகளையும் கலந்து சாக்குபோக்குக்கள் கொடுக்கும் போது, அது பொய்யாக மறுஜன்மம் எடுக்கிறது; ஆனால் தோற்றம் உண்மை போல. அது தான் இங்கு நடந்திருக்கிறது. ஒரு விதண்டாவாதத்திற்காக (அதற்கென்ன குறைச்சல்!) சிசுக்கள் (பிறந்த சில நாட்கள் அடகு காத்து பாதுகாக்க வேண்டியவை) மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். சிசுக்கள் உற்பத்தி ஆனதே ஆஸ்பத்திரியில். எந்த சுகாதாரமின்மையினால் அது வந்தது என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. அது தொலையட்டும். அந்த அமைப்புகளுக்கு பிராணாவாயு தேவையில்லையா? அல்லது டாக்டர்கள் ( குறிப்பாக டாக்டர் கஃபீல் அகமது ) பிராணவாயுக்காக ஆலாய் பறக்கவில்லையா? டாக்டர் கஃபீல் அகமது பல இடங்களுக்கு அலைந்து, தன் பணத்தை செலவழித்து, பிராணவாயு வரவழைத்து, பல உயிர்களை காப்பாற்றியதாக செய்தி. அவருக்கு பாரத ரத்னா கொடுக்கலாம் என்று நானும் எனக்கு அதுவரை கிடைத்த செய்திகளை வைத்து எழுதினேன். அவரோ வேலை நீக்கம் செய்யப்பட்டார். காரணமாகத்தான்! அவருக்கு ஒரு சொந்த ஆஸ்பத்திரி உளது, மற்ற டாக்டர்களை போல. அரசு ஆஸ்பத்திரியிலிருந்து பிராணவாயு சிலிண்டர்கள் கூடு விட்டு கூடு பாய்ந்து தனியார் ஆஸ்பத்திரியில் கிடக்குமாம். அவரை திருடன் என்றே குறிப்பிட்டு இருக்கிறது, ஒரு நம்பகத்தனமான ஊடகம். எனக்கு இது வியப்பு அளிக்கவில்லை. நான் 1989ல் பார்த்திருக்கிறேன். அலஹாபாத் கமலா நேரு ஆஸ்பத்திரியில், அதற்கு எதிரே வரிசையாக, அரசு டாக்டர்களின் க்ளினிக்கள் இருக்கும். கோடிக்கணக்கான செலவில் வாங்கப்பட்ட ஆஸ்பத்திரி உபகரணங்கள் ஒடிக்கப்பட்டு கிடக்கும். எங்கள் அலுவலகத்தின் ஒரு கடை நிலை ஊழியருக்கு ஒரு அவசர அறுவை சிகிச்சை தேவை. அந்த துறைத்தலைவர் எனக்கு மிகவும் பரிச்சயமானவர். அவரிடம் அந்த ஊழியரை அழைத்துச்சென்றேன். கனிவின் சிகரமாக திகழ்ந்த அவர், நான் சென்றபின் அவனிடம், ‘இது அபாயகரம். ஆஸ்பத்திரியில் செய்தால், நீ மரித்து போகலாம். நான் என் க்ளினிக்கில் செய்கிறேன். இத்தனை ரூபாய்!’ என்றாராம். பரிச்சயமாவது? மண்ணாங்கட்டியாவது? அந்த ஊழியர் காணாமல் போய்விட்டார். சில வாரம் கழித்து வந்தார். ஒரு கிருத்துவ ஆஸ்பத்திரி இலவசமாக எல்லாம் செய்தார்களாம். ஐயாவுக்கு புது பொலிவு. அவர் ஏன் கிருத்துவனாக மாறி நன்றிக்கடன் செலுத்த வில்லை என்று இன்று கூட புரியவில்லை. நானாக இருந்தால், ஏசு கிரிஸ்துவை பல்லக்கில் எழுந்தருள செய்திருப்பேன்! (ஐயங்காராகவே இருந்து கொண்டு, அதை செய்ய தயார்!)

    உடனே யோகி மீது கில்லி தண்டா ஆடாதீர்கள். நம்ம ஸ்டான்லியில் வந்த நோயாளிகள், காமாலையால் போனஸ் அடி வாங்கியிருக்கிறார்கள்.

    முடிந்தால், மேலும் எழுதுகிறேன். உதாரணமாக, வேலை நீக்கம் செய்யப்பட்ட உடனே ‘மாரல் க்ரவுண்ட்ஸ்’ ராஜிநாமா கொடுத்த தலைமை டாக்டர் ராஜீவ் மிஸ்ரா; புஷ்பா மெடிக்கலுக்கு பல லக்ஷம் பாக்கி; அவர்கள் எல்லா நோட்டீஸும் கொடுத்து விட்டாலும், இப்போது கூண்டில்; உண்மையை ஒத்துக்கொண்டு, அதற்கு பின் ஜகா வாங்கின அமைச்சர்பிரான்; பிணப்பரிசோதனை செய்யப்படவில்லை; ஆவணங்களும் காணாமல் போயின.

    இத்தகைய கூத்துக்களுக்கு மரணம் எப்போது சம்பவிக்கும்? I don’t care what Modi or Yogi or Amit says. I don’t care what condolence message President Trump sends or what Anbumani has to say. Words are dead, to my mind. We want positive deeds from the people also.
    -x-
    சித்திரத்துக்கு நன்றி:
    http://images.indianexpress.com/2017/08/gorakhpur-children-759.jpg

    Share
  • கோப்புக்கூட்டல் [5]

    -இன்னம்பூரான்
    ஆகஸ்ட் 7, 2017

    ஆங்கிலத்தில் ‘எல்லாவற்றையும் உட்படுத்திய’ என்ற பொருள் கூறும் ecumenical என்ற சொல் உணர்த்தும் இலக்கை, ஒரு பெரிய கோரிக்கையாக முன்வைக்கிறேன். அதன் பொருட்டு, ஒரு கோப்புக்கூட்டல் செய்ய விரும்புகிறேன்.

    இன்றைய கோப்பு: [5]

    வல்லமையாளர்

    innam

    வல்லமை என்ற மின்னிதழ் வாரந்தோறும் ஒரு வல்லமையாளரைத் தேர்வு செய்கிறது. தற்காலம் அந்த பணியை மனமுவந்து முன்னின்று நடத்தி வரும் செல்வன், ஆய்ச்சிமார் போல் தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பது போலும், தங்கத்தைப் புடம் போடும் ஆசாரி போலும், நன்கு ஆராய்ந்தபின் நமக்கு நற்செய்திகள் பல அளிக்கிறார், தேர்வு செய்யப்பட்ட வல்லமையாளரின் சாதனைகளை விவரிக்கும்போது. எனக்கு எவிடென்ஸ் கதிர் பற்றிப் பல வருடங்களாகத் தெரியும்; திரு வின்சென்ட் ராஜ் பற்றி இன்றுதான் தெரியும்.

    திரு. வின்செண்ட் ராஜ் தன்னலம் நாடாதவர், நீதிக்குப் போராடும் விடாக்கொண்டர் என்பது தெளிவாகத் தெரிகிறது. சமூகத்தில் அடிக்கசண்டாகத் தங்கிக்கொண்டு, சமுதாயத்தில் நஞ்சு விதைக்கும் சாதி,மத, இன பேதங்கள், கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து,ஊழல்கள், முறைகேடுகளுக்கு அரசு முன்னின்று கவசம் பூட்டும் கேவலங்கள் ஆகியவற்றை எதிர்ப்பது உயிருக்கு அபாயம் என்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். அவர் அத்துடன் நிற்காமல், சமுதாயத்தால் காயம் பட்டவர்களுக்கு புத்துணர்ச்சியும், புனர்வாழ்வும் அளிக்கப் பாடுபடுவது போராளியின் அமைதிச்சாரல் என்க. போனஸ்:  கூட்டுப் போராளி.

    திரு.செல்வன், எவிடென்ஸ் கதிர் அவர்கள் சட்டத்தைக் கையாளும் விதத்தை வருணித்திருப்பது தேவையான அணுகுமுறைதான். சட்டத்தை எதிர்க்குமுன் அமலில் இருக்கும் சட்டத்துக்கு நாம் கட்டுப்படுகிறோமா என்ற வினாவுக்கு விடை நாடுவது நலம் பயக்கும்.

    தேசியச் சட்ட ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் ஆகியவை சாதியப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்தும், இன்னும் இந்த அரசாங்கம் அதை நிறைவேற்றாமல் கிடப்பில்போட்டு வைத்திருப்பது பிரதிநிதித்துவ மேலாண்மைக்கு, ஓர் இழுக்கு. ஏன்? தமிழ்நாட்டு அரசியலில் சாதீயம் தான் பல்லாண்டுகளாகப் பேயாட்டம் ஆடுகிறது. இந்தச் சூழ்நிலையில் நமக்கு நூற்றுக்கணக்கான எவிடென்ஸ் கதிர்கள் தேவை.

    உச்ச நீதிமன்றத்தில் 22 மாநில அரசுகள் தங்களின் மாநிலங்களில் சாதியப் படுகொலையில் நிகழ்வதை ஒப்புக்கொண்டபோதும், கலப்புத் திருமணங்கள் அதிகம் நடக்காத மாநிலங்களில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கும் அவலட்சணத்தில், தமிழகஅரசு தங்கள் மாநிலத்தில் சாதியப் படுகொலைகள் நிகழ்வதே இல்லை என்று கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது மட்டுமன்று; அவ்வாறு சாட்சியம் பதிவு செய்தவர் மீது ‘பொய்சாட்சி’ வழக்குப் பதிவுசெய்ய வேண்டும். பல்லாண்டுகளாக, எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், மலம் அள்ளுவது, துப்புரவு செய்வது ஆகியவற்றைப் பற்றியும் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் அரசு இயந்திரத்தால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 175 சாதியப் படுகொலைகள் இங்கு அரங்கேறி உள்ளன. அவற்றில் கொலையுண்டவர்களில் 80% பேர், தலித் இளைஞர்களைக் காதலித்து மணமுடித்தப் பெண்களே என்ற புள்ளி விவரம் தமிழ்ச் சமுதாயத்தை, நமது சங்க காலப் பண்பை, எள்ளல் செய்கிறது. ஓர் ஆறுதல் செய்தி: ஒரு பெண் ஓர் இளைஞனை அழைத்து வருகிறாள், காதலனாக. அவர் நசுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர். எதிர்நீச்சல் போட்டு முன்னுக்கு வந்த குடும்பம். அதனால் மேல்தட்டு தருமமிகு சென்னைச் சமுதாயம் அவர்களை ஏற்றுக்கொள்வதைக் கண்ணாரக் கண்டேன். பிறந்த வீட்டில் ஒத்துக்கொள்ளமாட்டார்கள்; அவர்களிடம் சொல்லப்போவதில்லை என்பதில் திடமாக இருந்தாள். என் செய்வது? என் தீர்மானத்தை ஒப்புக்கொள்வதிலும் தீர்மானமாக இருந்தார்கள், இருவரும். அதாவது என் சம்மதமில்லாமல் திருமணம் முடிப்பதில்லை என்ற தோற்றம். யாதொருவிதமான அசம்பாவிதம் இல்லாமல் திருமணம் நிறைவேறியது. பிறந்த வீட்டிலும் ஓரளவுக்கு சமாதானம் ஆகிவிட்டது, மேலும் மென்மையான செய்திகள் உண்டு. அவரவது தனிமை உரிமையை மதித்து (ப்ரைவசி) மேலதிக விவரங்களை கூறவில்லை. இந்த உண்மை வரலாறு ஒரு பாடம் போதிக்கிறது. அவரவரது குடும்பத்தில் முதியவர்கள் அறிவு முதிர்ச்சியையும், சங்கப்பாடல்களில் வரும் முக்கோல்பகவர்களைப் போல் இயல்பு வாழ்க்கையின் சுவாசத்தையும், தங்கள் மலர்ந்த நினைவுகளின் இன்பத்தையும் முன்னிறுத்திக் கலப்புமணமோ, சாதி மணமோ, மனம் ஒத்து நடக்கும் காதல் மணங்களை வரவேற்க வேண்டும்.

    -#-

    சித்திரத்துக்கு நன்றி:

    http://discoverybookpalace.com/product_images/p/766/_சமுதாயம்__11579_zoom.JPG

     

     

     

    Share
  • பாமரகீர்த்தி -1:2: ஹரிஜனத் தந்தை

     -இன்னம்பூரான்
    ஜூலை 28 2017

    innam

    பிரசுரம்:

    மதுரை மாநில மத்திய நூலகத்தில் இன்றும் கிடைக்கக்கூடிய MDU93641 நம்பர் உள்ள நூலின் பெயர் பார்ப்பவரின் கவனத்தைக் கவரும். ஏழு வருடங்களுக்கு முன் சீதாலக்ஷ்மி எழுதியது நினைவில் வருகிறது:

    ‘… தினமணி செய்தி இது மதுரை,பிப். 23: அரிசன மக்களுக்கும், தேச விடுதலைக்கும் தன்னை அர்ப்பணித்த  வைத்தியநாதய்யர் நினைவு நாளை முன்னிட்டு (பிப்.23) அவரது சிலைக்கு மாலை அணிவிக்க யாரும் முன்வராதது தியாகிகளிடையே அதிர்ச்சியை

    ஏற்படுத்தியுள்ளது… உப்புச்சத்தியாக் கிரகத்தின்போது ராஜாஜி கைதான பின் அங்கு நடந்த கூட்டத்தில் வைத்தியநாதய்யர் தடையை மீறிப் பேசினார். அப்போது “புளியமர விளாரால்’ அய்யரை தாக்கிய ஆங்கிலேயப் போலீஸார் அவரை சுமார் அரைகிலோமீட்டர் தூரம் தரையில் இழுத்துச் சென்று சித்திரவதை செய்தனர். உடலெங்கும் காயத்துடன் சிறையிலும் அடைத்தனர்.

    கள்ளுக்கடை மறியல், சட்டமறுப்பு இயக்கம் என ஒவ்வோர் விடுதலைப்போராட்டத்திலும் ஆங்கிலேயப் போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டவர் ஆவார்…தனிநபர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தனது மனைவி அகிலாண்டம்மாளை ஈடுபடச் செய்தார். இதனால் அகிலாண்டம்மாள் பல மாதம் வேலூர் சிறையில்

    கடும்தண்டனையும் அனுபவித்தார். தனது இளையமகன் சங்கரனையும் விடுதலை போராட்டத்தில் வைத்தியநாதய்யர் அலிப்புரம் சிறையில் இருந்தபோது அவரது மூத்த மகன் இறந்தார். இதனால் அவரால் மகன் இறுதிச் சடங்கில் கூட பங்கேற்க முடியவில்லை. மகளின் திருமணத்தைக்கூட சிறைத் தண்டனை பரோல் காலத்திலேயே நடத்தமுடிந்தது. அந்த அளவுக்கு சுதந்திரத்துக்காக சிறையில் பல ஆண்டுகள் கொடுமை அனுபவித்த “தியாகதீபம்’ வைத்தியநாதய்யர். அரிசனசேவக சங்கத்தின் தலைவராக திகழ்ந்த அவரது வீட்டில் எப்போதும் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்தனர்…’. அந்த பதிவை படித்த திரு நரசய்யா அவர்களின் ஆதங்கம்:

    ‘இது தான் இன்றைய அரசியல்! தலை குனிய வேண்டியவர்களாயுள்ளோம். நான் சென்ற வாரம் மதுரை சென்றிருந்த போது, ஊரெல்லாம் ஒரு தலைவரின் கட் அவுட்டுகளாகவே இருந்தன. சுதந்திரம் இந்தியாவில் எவருக்குக் கிடைத்துள்ளது? தீர அலோசிப்போம்!’.

    [அவருடைய குடும்பத்திற்கும் வைத்யநாதய்யர் குடும்பத்திற்கும் தொடர்புண்டு. அவர் குமாரர் வை சங்கரன் இவரது சகோதரரின் உற்ற நண்பர். ஆலயப்ரவேசத்தில பங்கு கொண்ட புலி அய்யர் – இயற் பெயர் சுப்ரமணிய அய்யர்- இவரின் உறவினர்.

    ஆம் மதுரை ஏ. வைத்தியநாதய்யர் அவர்களை பற்றிய இந்த நூலின் பெயர் ”ஹரிஜனத் தந்தை.” தன் இடம், பொருள், உடல், ஆவி, குடும்பம் எல்லாவற்றையும் முழுமையாக நசுக்கப்பட்டவர்களை உய்விப்பதற்கு அர்ப்பணம் செய்த இவர் திட்டமிட்டு மீனாக்ஷி ஆலயப்பிரவேசம் செய்து, ராஜாஜி இதற்கேற்ற சட்டம் இயற்றியதை போற்றவேண்டும். அதற்கு முன் ஆண்ட ஜஸ்டிஸ் கட்சி நசுக்கப்பட்டவர்களை கண்டு கொள்ளவில்லை என்பது வரலாறு. அது மேன்மக்களாட்சி.

    1. திருச்செங்கோடு காந்தி ஆசிரமம்;
    2. திருவெண்ணை நல்லூர் கிருபா ஆசிரமம்;
    3. சென்னை நந்தனார் கல்விக்கழகம்ல்
    4. கோவை ராமகிருஷ்ணா வித்யாலயம்;
    5. திருச்சி பொதுநல ஊழியர் சங்கம்ல்
    6. வேலூர் ஒலவையார் கல்விக்கழகம்;
    7. சென்னை ஆதி திராவிடர் மகாஜனசங்கம்;
    8. சென்னை அருந்ததியர் மகாஜனசங்கம்;
    9. தேவேந்திர குல வேளாளர் சங்கங்கள்.

    எல்லாவற்றிற்கும் அரிஜன சேவாசங்கத்தின் தலைவர் என்ற முறையில் பொருளுதவி முதல் பல தொண்டுகள் செய்த சான்றோன், இவர். மதுரையில் இவருடைய விசாலமான வீடு ஓர் அன்னதான சத்திரம்.

    -#-

    சித்திரத்துக்கு நன்றி:

    https://upload.wikimedia.org/wikipedia/ta/d/d7/Vaithiyanatha_aiyar.jpg

     

     

    Share