ஞானச் சுடர்
-இன்னம்பூரான்
தீபாவளி தினம் 2017
அக்டோபர் 18, 2017
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான். (பூதத்தாழ்வார்)
*****
ஞானச் சுடர் [1]
முன்னுரை
மதிநுட்பம் அல்லது ஞானம் பற்றிய இந்த நூல் சராசரி மனிதனால், சராசரி மனிதனுக்கு எழுதப்படுகிறது. சான்றோர்களும், மேதாவிகளும் இதில் புதிதாக ஒன்றும் காணவில்லையே என்று அங்கலாய்க்கலாம். பொறுத்தாள்க. கருத்துரிமை யாவருக்கும் உண்டு என்பதால், மாற்றுக்கருத்து, திசைமாற்றம், குறுக்குசால் போன்றவற்றை தடுத்தாட்கொள்ளப்போவதில்லை. சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று அசால்ட்டாக இருக்காமல், சிறு துளி பெரு வெள்ளம் என்று அமரிக்கையாகப் படித்துப் பயன்பெறுக.
*****
சித்திரத்துக்கு நன்றி: http://3.bp.blogspot.com/-GKTV8vAXyxE/TfOpUvFnW5I/AAAAAAAADRQ/jSnSKdaJMNE/s1600/5210610419_3a6291cd93_b.jpg