Month: October 2017

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171025a Udupi Krishna

    “இடக்கையில் மத்து, வலக்கையில் வெண்ணை
    உடுப்பிவிலாஸ் கண்ணன் உரத்து- விடுக்கின்றான்,
    ” இன்றை யMENUவைக், கன்றது உண்டபின்,
    தின்றிடு பார்த்தாகீ தை”….கிரேசி மோகன்….

    Share
  • சைவ சமய வரலாற்றில் காதக்கல் Today is a milestone day in the annals of Saiva religion

    சைவ சமய வரலாற்றில் காதக்கல் Today is a milestone day in the annals of Saiva religion.

    ஐப்பசி 13, 2048 திங்கள் (30.10.2017)

    photo jeyaprakashtelugu
    திருப்பதி வேங்கடவன் பல்கலைக் கழக மேனாள் தமிழ்த்துறைப் பேராசிரியர், மதுரை காமராசர் பல்கலைக்கழக மேனாள் தெலுங்குப் பேராசிரியர், சங்க இலக்கியங்களைத் தெலுங்குக்கு மொழிபெயர்க்கும் செம்மொழி நிறுவனக் குழுத் தலைவர், பேராசிரியர் சிறீபாத செயப்பிரகாசர்.
    03.03.2011இல் முதன் முதலாகத் திருப்பதியில் சந்தித்தேன். பெரியபுரணத்தைத் தெலுங்குக்கு மொழிபெயர்க்கும் தொடக்கநிலையில் இருப்பதாகக் கூறினார். தருமை ஆதீனச் செயற்றிட்டத்தில் திருமலை திருப்பதி தேவத்தான நிதி வழங்கலுடன் மொழிபெயர்ப்பதை தொடருங்கள் எனக் கேட்டேன்.

    dharmapuram adheenam 04
    மொழிபெயர்ப்புகளைப் பகுதி பகுதியாக அனுப்பி வந்தார். இன்று அவர் அனுப்பிய மின்னஞ்சலில் 4274 பாடல் வரையான இறுதிப் பகுதி இணைப்பில் வந்தது.

    tnrgopalaaiyarsachi

    telugu jayaprakash0396
    அன்னாருக்கு நான் அனுப்பிய பதில்

    Vanakkam
    Today the entire text of 4274 hymns of Periyapuranam is in Telugu.
    An effort which squeezed the time, energy, scholarship and the multilingual capability of Prof Jayaprakash over a period of about 10 years.
    Today is a milestone day in the annals of Saiva religion.
    It is a day where Tamil – Telugu interaction provided a new bondage.
    It is a day for adorning the feather, another feather, in the cap of achievements of Prof. Jayapraksh.
    Let us celebrate the blessings of Lord Shiva Parvathi, Saraswathi, Lord Venkatesa Pathmavathi.
    Let us congratulate Prof Jayaprakash, a probable incarnate of Sekkizhaar.
    Let Devas shower the most fragrant choicest flowers on Prof.Jayaprakash, his family and Ms. Gayathri.
    Let us move to book making of this holy text and making it available at www.thevaaram.org site.
    I shall keep you informed.
    HH Gurumaha Sanithanam of Dharmapuram Adhenam, and
    Scholar par excellence, nature’s inbuilt translator, with every syllable of Tirumurai transposed in each cell of his physical form, Sekkizhaar Adipodi TN Ramachandran,
    were behind this blessed endeavor of translations (beginning 2000 CE) of Thirumurai to
    English (9, 11)
    German (portions of 1st Thirumurai),
    Telugu (1,2,3,4, 7,8,9, portions of 5,10, 11 and now the entire 12),
    Kannada (1, 8.1 and 9),
    Malayalam (8)
    Hindi (1, now 2 in progress)
    Sanskrit (4, 5, 6, 8.1 and portions of 10)
    Sinhala (8.1, 9)
    Chinese ( 1 hymn of Thevaaram with all of 8.1 now in progress)
    Malay (8.1 now in progress)
    Myanmar (thiruvembavai of 8.1)
    Thai (transcriptions of selected Tirumurai hymns in Thai language and Grantha to facilitate Thai Royality follow Saiva rituals)
    Grantha (Transcribing from Grantha to Devanagari the entire text of 12 Upamnayu Baktha Vilasam – digitized in Jaffna)
    Blessed are those universalizing the fathomless knowledge embedded in Thirumurai.
    Regards

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    Maravanpulavu K. Sachithananthan

    Share
  • இந்த வார வல்லமையாளர் (246)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக எழுத்தாளர் பா.ராகவன் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.

    அமுதசுரபி, தாய் இதழ்களில் இவரது எழுத்துலக பயணம் துவங்கியது. அதன்பின் கல்கியில் துணையாசிரியராகப் பணியாற்றினார். அதன்பின் குமுதம் வார இதழின் துணையாசிரியராக மூன்று ஆண்டு காலம் பணியாற்றினார். குமுதம் குழுமத்திலிருந்து ‘ஜங்ஷன்’ என்ற மாதமிருமுறை இதழ் தொடங்கப்பட்டபோது அதன் பொறுப்பாசிரியராக ஓராண்டுகாலம் பணியாற்றினார். அதன்பின் பத்திரிகைப் பணியிலிருந்து விலகி பதிப்புத்துறைக்கு வந்த இவர், தற்போது நியூ ஒரைசன் மீடியா நிறுவனத்தின் முதன்மை ஆசிரியராகப் பணிபுரிகிறார். சில தொலைக்காட்சித் தொடர்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதியிருக்கும் இவர், இப்போது திரைப்படங்களுக்கும் திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.

    வாணி ராணி தொடரின் வசனகர்த்தாவாக அத்தொடரின் 1400வது எபிசோடை இவ்வாரம் எழுதிமுடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். பாரதிய பாஷா பரிஷத், இலக்கியபீடத்தின் சிறந்த நாவலாசிரியர் விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.

    மாய வலை, பாக், ஒரு புதிரின் சரிதம் போன்ற நூல்களை எழுதினாலும் இவரை அனைவரும் திரும்பிப்பார்க்க வைத்தது “நிலமெல்லாம் இரத்தம்” தொடர்தான். இஸ்ரேலிய வரலாற்றை பைபிள் காலம் துவங்கி தற்போதைய பாலஸ்தின பிரச்சனை காலகட்டம் வரை எழுதிய நூல் இதற்கு முன்னரும், பின்னரும் தமிழில் இதுவரை வந்ததில்லை எனலாம்.

    அதன்பின் இவரது டாலர்தேசம் எனும் அமெரிக்காவின் வரலாற்றை சொல்லும் தொடரும் வெளிவந்து பெருத்த வெற்றியை அடைந்தது. இவை நூல்களாக வெளிவந்தும் பெருவெற்றி பெற்றன. அவ்விதத்த்தில் தமிழின் மிகச்சிறந்த வரலாற்று நூல் ஆசிரியர்களில் ஒருவர் என இவரை கருதலாம்.
    இவரைப்பற்றி பொதுமக்களுக்கு தெரியாத விஷயம் ஒன்று உண்டு. அது இவர் ஒரு சிறந்த சமையல் கலைஞர் என்பதே. பனீர் டிக்கா சில்லி பனீர் , காய்கறிபொறியல், அவியல் என சமையலை கற்றுக்கொண்டு அதில் இவர் காட்டும் நளபாகம் அனைவரையும் வியக்கவைக்கும். இவரது முகநூல் நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த இவரது நளபாகத்திறனை உலகுக்கு தெரிவிக்கும் விதம் ருசியியல் எனும் தொடரை தமிழ் இந்து பத்திரிக்கையில் எழுதி வாசகர்களுக்கும் கொண்டுபோய் சேர்த்தார்.

    ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட இவர் எழுதிய பொலிக, பொலிக எனும் இராமானுஜ முனிவரின் வாழ்க்கைசரிதம் நூலாக வந்து வெற்றிபெற்றது.

    இவரது முகநூல் பதிவுகள் பலவும் இவரது நூல்களை மிஞ்சும் அளவு சுவாரசியத்துடன் இருக்கும். புறாவை பிடித்த பூனை பற்றிய இப்பதிவு அதற்கு ஒரு உதாரணம்.

    “இன்றைய காலை நடையின்போது ஒரு காட்சியைக் கண்டேன். இந்தக் கணம் வரை கண்ணையும் மனத்தையும்விட்டு நகராத காட்சி.

    நான் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தை மொத்தமாக ஒரு சுற்று சுற்றி வந்தால் 618 தப்படிகள் காட்டும். மித வேக நடையில் தோராயமாக அதற்கு ஆறு நிமிடங்கள் பிடிக்கும். பொதுவாக நான் இந்த நீண்ட நடை வட்டத்தைத் தேர்ந்தெடுப்பதில்லை. வளாகத்திலேயே அறுபத்து ஐந்து தப்படிகள் வரக்கூடிய அளவுக்கு ஒரு சிறு ரவுண்டானா உண்டு. அதில்தான் நடப்பேன். நீள் நடையைக் காட்டிலும் சிறு வட்ட நடையில் அதிக கலோரி எரிக்கப்படுகிறது என்பது என் பிரத்தியேக ஆய்வுத் தீர்மானம். [இது அறிவியல்பூர்வமானதோ இல்லையோ, எனக்கு இதுதான் சரிப்பட்டு வருகிறது.]

    நிற்க. இன்று ஒரு மாறுதலுக்கு மூன்று சுற்றுகள் நீள்நடை போகலாம் என்று முடிவு செய்தேன். அதாவது சுமார் இரண்டாயிரம் தப்படிகளுக்கு நீண்ட நடை.

    முதல் சுற்று முடியும்போது வளாகத்தில் எப்போதும் சுற்றி வரும் பூனையொன்றைக் கண்டேன். முன்னூறு குடும்பங்கள் உள்ள வளாகத்தில் இதற்கு உணவுப் பிரச்னை இராது என்று எப்போதும் நினைத்துக்கொள்வதையே இன்றும் நினைத்துக்கொண்டு நடந்தேன்.

    மேலே படபடவென்று புறாக்கள் சிறகடித்துக்கொண்டன. காலைப் பொழுதில் புறாக்களின் புறப்பாட்டைக் கவனிப்பது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. அவற்றின் சுறுசுறுப்பு, காகங்களிடமும் காண முடியாதது. கொத்தாக பத்து சன் ஷேடுகளின்மீது நூறு புறாக்கள் அமரும். ரெடி ஒன் டூ த்ரீ சொல்லி சொய்யாவென்று எம்பிப் பறக்கத் தொடங்கும். ஒரு நீரூற்று பீய்ச்சியடிப்பது போல.
    முன்னூறு குடும்பங்கள் உள்ள வளாகத்தில் இப்புறாக்களுக்கு தானியம் வைப்போர் எத்தனை பேர் என்று எனக்குத் தெரியாது. என் மனைவி தினமும் சமையலறை ஜன்னல் திறந்து ஒரு தட்டு சாதம் வைப்பார். சமர்த்தாக நேரத்துக்கு வந்து சாப்பிட்டுப் போகும் புறாக்கள் சிலவற்றை நானறிவேன். உணவு வைக்கும் மனித உயிர்களிடம் பறவைகள் காட்டும் பிரியம் மகத்தானது. உண்டு முடித்ததும் அவை எழுப்பும் ஒரு வினோதமான ஒலியில் நன்றியை உணர முடியும். மகிழ்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும்.

    இன்றைய எனது இரண்டாவது சுற்று நடையின்போது சன்ஷேடுகளில் புறாக்களின் அணிவகுப்பு நிகழ்ந்து முடிந்திருந்தது.

    ரெடி ஒன் டூ த்ரீ.

    படபடவென்று சிறகுகளை அடித்துக்கொண்டு அவை உயரே எழும்பிப் பறக்கத் தொடங்கின. ஒரு கணம் நின்று அண்ணாந்து பார்த்து ரசித்தேன். பறக்கத் தொடங்கிய ஒரு புறாவுக்கு என்ன தோன்றியதோ, சரேலென்று அறுபது, எழுபது டிகிரி சரிவில் தரையை நோக்கிச் சீறி வந்தது. அதன் கண்ணில் அங்கு ஏதோ தானிய மணிகள் பட்டிருக்க வேண்டும்.

    அதனைக் கொத்திக்கொண்டு அது மீண்டும் மேலேறிப் பறக்க ஓரிரு வினாடிகள்கூடப் பிடிக்காது. ஆனால் அந்த ஓரிரு வினாடிகளுக்குள்தான் அந்தச் சம்பவம் நடந்துவிட்டது.

    புறா கீழே பாய்ந்து வந்து தானியத்தைக் கொத்திய அதே கணத்தில் எங்கிருந்தோ பாய்ந்து வந்த பூனை ஒரே கவ்வாக அதன் கழுத்தைக் கவ்வியது.

    துடித்துவிட்டேன். ஒரு வீராவேசம் வந்து ஏய் என்று கத்திக்கொண்டு நான் அதை நோக்கி ஓடுவதற்குள் கவ்விய புறாவைத் தூக்கிக்கொண்டு பூனை ஒரு காருக்கு அடியில் பாய்ந்தது.
    எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. புறாவின் மரண ஓலம் கேட்டுக்கொண்டே இருந்தது. அது தினசரி ஜன்னலில் உண்டு முடித்துவிட்டு நன்றி சொல்லும் குரல் அல்ல. அடி வயிற்றில் இருந்து எழுந்த அவல ஓலம். தனது இறுதி மூச்சை விடப் போகிற பதற்றத்தில் அதன் சிறகுகள் படபடவென்று அடித்துக்கொண்டன.

    காருக்கடியில் குனிந்து பூனையை விரட்டப் பார்த்தேன். எடுத்து எறிய ஏதேனும் கல்லோ வேறு பொருளோ கிடைக்குமா என்று தேடினேன். ஒரு வாட்டர் பாட்டில் கிடந்தது. அதை எடுத்து விட்டெறிந்தேன். பூனை உடனே அடுத்த காரின் அடியே ஓடி மறைந்தது. கீழ்த்தளம் முழுதும் கார்கள். குறைந்தது இருநூறு, இருநூற்றைம்பது கார்கள். அந்தப் பூனை சரியான மறைவிடத்தைத்தான் தேர்ந்தெடுத்திருந்தது. என்னால் ஒவ்வொரு காருக்கு அடியிலும் குனிந்து விரட்டுவதென்பது இயலாத காரியம். தவிர ஒவ்வொரு முறையும் அந்தத் தண்ணீர் பாட்டிலையும் பொறுக்கி எடுத்து எறிய வேண்டும். நடக்கிற கதை இல்லை என்று தோன்றியது.

    பதற்றத்தில் செக்யூரிடியை அழைத்து விவரம் சொன்னேன். எப்படியாவது அந்தப் பூனையை வெளியே கொண்டு வாருங்கள். அதன் வாயில் கவ்வியிருக்கும் புறாவுக்கு விடுதலை கொடுக்கப் பாருங்கள்.

    அவரும் தம்மாலான முயற்சிகளைச் செய்து பார்த்தார். ஆனால் அந்தப் பூனை பிடிபடவேயில்லை. கவ்விய புறா கதறக் கதற அதன் கழுத்தைக் குதறியெடுத்தபடி அது ஓடியேவிட்டது.
    எலியை உண்ணும் பூனையை அறிவேன். புறாவைத் தின்னுமா?

    தானியத்துக்காகப் புறா தேடிக் கிளம்பியது எத்தனை சரியோ, அதே அளவு தனது உணவைத் தேடியடைந்த பூனை செய்ததும் சரியே. ஆனாலும் அடித்துத் தின்பதை உணர்ச்சிவசப்படாமல் பார்க்க முடியவில்லை. சுய உணர்வின்றி வாட்டர் பாட்டிலைத் தேடியெடுத்து அதன்மீது நாலைந்து முறை விட்டெறிந்த என் கோபத்தை எண்ணிப் பார்த்தேன். பிறகு கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது.
    இயற்கையை அதன் அனைத்து குணாதிசயங்களுடனும் ஏற்கும் மனம் எனக்கில்லை. இந்த ஜென்மத்தில் அது வரவும் வராது என்று தோன்றுகிறது.

    இன்று மதியம் என் மனைவி ஜன்னல் திறந்து சாப்பாடு வைக்கும்போது என் ஒரு சொட்டுக் கண்ணீர்த்துளியைச் சேர்த்து வைப்பேன். உண்ண வரும் புறாவுக்கு அது நிச்சயம் புரியும்.”

    தமிழ்மண்ணின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான பா.ராகவன் அவர்களுக்கு அளிக்கும் இந்த விருதானது அவரைப்போல் சுவாரசியமாக எழுத இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என வல்ல்மை நம்புகிறது

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171030 Karuna sagara
    ”பாலாழி(பாற்கடல்) சேடன் படுத்த பெருமாள்தன்
    வாலாட்டும் கன்றுக்கு வாத்ஸல்யம்: -மாலூழி(மால் ஊழி)
    காலத்தும் மாட்டுக்கு காலை அளித்திடுவார்,
    ஞாலா வதாரத்தில் நின்று’’….கிரேசி மோகன்….!

    Share
  • தீ தின்ற உயிர்..!

     பெருவை பார்த்தசாரதி

     

    Daily_News_2017_4252697229386

     

     

     

     

     

     

    விந்தையாய் அனைத்தும் மாறுகின்ற வியனுலகில்..

    ……….வியக்கும் வகையில் வீண்செயல்களும் உண்டாம்.!

    கந்தைத்துணியுடன் கடுமுழைத்து வாழும் வர்க்கம்..

    ……….காலம்தள்ளக் கந்துவட்டிக் கடனால் தத்தளிப்பார்.!

    சிந்தை கலக்கும்வட்டியும்.!அசலையே விழுங்கிவிட..

    ……….     சீர்கெடும் தம்வாழ்வைத் தடுக்கமுயன்று தோற்பார்.!

    தந்தையும்தாயும் எடுக்கும் தவறான கொடுமுடிவால்..

    ……….தளிர்க்குழந்தையும் தீக்குளிப்பது கொடுமை யன்றோ.!

     

    உள்ளத்தில் நல்லுள்ளம் கொண்டே பெற்றோர்தன்

    ……….பிள்ளையின் படிப்பினிலே  பெருமிதம் கொள்வார்கள்.!

    பள்ளிக்குச் செல்வார்கள்! சிறப்பாகப் படிப்பார்கள்!

    ……….போற்றும் வித்தகனாவார்! என்றேதான் எண்ணுவர்.!

    கள்ளமற்ற உள்ளத்தை உறவாய்க் கொண்டுவளர்ந்த

    ……….கபடமறியாப் பருவமதை யாரிழக்க நினைப்பார்கள்.!

    பள்ளியினுள் பாலகர்கள் கவனம் பாடத்திலிருக்க

    ……….பற்றியதீ தின்றது பச்சிளங்குழந்தைகளை உயிரோடு.!

     

    மேற்படிப்பு என்பது கனவாகுமெனும் நிலையினால்..

    ……….மேன்மையில் அரியமானுடப் பிறவியைத் துறக்க…!

    தற்கொலையெனும் முடிவை தனித்தே எடுப்பார்.!

    ……….தரணியில் வாழ்வதில்லை இனியெனச் சபதமேற்பார்.!

    கற்றபயனறியுமுன் தன்னுயிரைத் தீக்கிரை யாக்குவர்..

    ……….காலத்தின் கோளாறா?…….பருவத்தின் கோளாறா.?

    தற்கொலை ஒன்றுதான் நிரந்தரமான தீர்வென்றால்..

    ……….தரணியில் நிலையாய்வாழ கற்றகல்வி பயனுறாது!

     

    மாயோன்நம்மை மண்ணுலகில் படைத்து விட்டான்..

    ……….மானிடராய் வாழ்ந்து பிறர்க்குதவி செய்துவாழ்வோம்.!

    தீயோமண்ணோ ஏதோவொன்று இறந்தபின் உடலைத்..

    ……….தின்றுவிடும் எனுமெண்ணச் சிந்தனையில் வாழ்வோம்.!

    தூயோமாய் வருமெண்ணமே வாழ்விலுயர வழியாகும்..

    ……….தழைத்துயர வழிகோலும்!..தற்கொலையைத் தவிர்க்கும்.!

    ஐயோ.! இக்கொடுங்செய்கை இனிவேண்டாம் இறைவா?

    ……….அகத்தினில் இருள்நீக்கி ஜகத்தினில் சிறக்கவாழஅருள்.!

     

    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::28-10-17

    நன்றி:: படம் கூகுள் இமேஜ்

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 132-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    kids with a young lady

    கண்ணைக் கவரும் வண்ணப் பசுமைக்குமுன் காண்போர் எண்ணம் கவரும் வன்ன மழலையர் மாநாடு நடத்த, அதனைக் கைகோத்து வேடிக்கை பார்க்கிறார் இளம்பெண்ணொருவர்! ஆர்வத்தைத் தூண்டும் இந்த இனிய காட்சியைத் தன் படப்பிடிப்புக் கருவியில் அள்ளிவந்திருப்பவர் திரு. கோகுல்நாத். படக்கவிதைப் போட்டிக்கு இதனைத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

    நம் உளம் களிக்கும் வண்ணம், விழிகள் குளுமையில் குளிக்கும் வண்ணம் எங்கும் படர்ந்திருக்கின்றது இச்சையூட்டும் மரகதப் பச்சை வண்ணம்!

    எங்கெங்கு காணினும் பசுமையடா – அங்கே
    தங்க மழலையர் பேசிடும் காட்சி அருமையடா! என்று பாடத்தோன்றுகிறது இவ்வெழிற் காட்சிகண்டு!

    இனி, கவிதையெனும் பொற்தூரிகையால் இக்காட்சிக்கு மேலும் வலிவும் பொலிவும் சேர்க்கப் புறப்பட்டு வருகிறார்கள் பாவலர்கள்.

    *****

    மருள்நீக்கியை நாவுக்கரசர் ஆக்கினார் அக்கை திலகவதியார்; அருள்மொழியை இராசராசன் ஆக்கினார் அவர் தமக்கை குந்தவை நாச்சியார். அதுபோல் அன்னையாய் அறிவுரை பகரும் அக்கை சொல் கேட்டால் அகிலத்தை வெல்லலாம் எனும் வாழ்வியல் உண்மையைத் தன் கவிதையில் சிறப்பாய்ப் செப்பியிருக்கிறார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    தமக்கையும் தாயாவாள்:

    பச்சை வண்ண ஆடைகட்டிய மலை மகள்!
    மலைமகள் அருகே குழந்தைகளோடு நிற்கும் தாய் இவள்!
    பிள்ளைகளைப் பெற்றுத் தந்ததால் அவள் பெற்றவள்!
    அன்னையாய் இவளை அடைந்ததால்
    இப்பிள்ளைகள் பேறு பெற்றவர்கள்!
    கல்விச்சாலைக்கு செல்லக் காத்திருக்கும் பிள்ளைகள்!
    நாளைய நல்ல பாரதத்தை நிர்மாணிக்கக் ,
    காத்திருக்கும் சிற்பிகள்!
    பட்டி தொட்டியெல்லாம் பள்ளிக்கூடம் கட்டிவைத்து
    கல்விக் கண் திறந்து வைத்த கர்ம வீரன் காமராசர்!
    கனவுகளை நனவாக்க வந்த நல்முத்துக்கள்!
    அக்கா வார்த்தைகளை அப்படியே கேட்கின்ற
    அன்புத் தம்பிதனை இங்கே பாருங்கள்!
    தமக்கையும், இன்னொரு தாய், தம்பிக்கென்ற
    உண்மையை உணருங்கள்!.
    திலகவதியார் வளர்ப்பாலே, மருள் நீக்கியார்
    நாவுக்கரசரானது நாமறிவோம்!
    குந்தவை வளர்ப்பாலே, ராச ராச சோழன்
    சிகரம் தொட்டதை நாமறிவோம்!
    அருணகிரி நாதர், முருகன் அருள் பெற்றதும்
    அக்கா வளர்ப்பாலே நாமறிவோம்!
    தமக்கை இருந்துவிட்டால் தம்பியர் வாழ்க்கை எல்லாம்
    தரணியில் உயர்ந்தோங்கும்!

    *****

    சோலையில் விளையாட விரும்பும் தம்பியைப் பார்த்து, ”கல்விச்சாலைக்கு வா அன்புத் தம்பி! ஒழுங்காய்ப் படித்தால்தான் ’நீட்’ தேர்வில் நாம் பெறலாம் வெற்றி!” என்று மனமுதிர்ச்சியோடு வாழ்வில் வெல்லும் வழிசொல்லும் அறிவார்ந்த அக்காவைக் காண்கிறோம் திரு. எஸ். கருணானந்தராஜாவின் கவிதையில்.

    கொழுந்தெடுக்க யாருமின்னும்
    கூடிடாத காலையில்
    குழந்தைகளைப் பள்ளிக் கூடம்
    கூட்டிச் செல்லும் தாயுடன்
    விளைந்த தேயிலைப் பரப்பின்
    விளிம்பிலுள்ள வீதியில்
    விருப்ப மின்றிப் பள்ளி போக
    வெறுத்த தம்பி சொல்கிறான்

    தம்பி-
    பச்சைவயல் அழகாகப் படர்ந்திருக்கு தேக் கொழுந்துப்
    பற்றையெல்லாம் ஓடி விளையாடி – நாம
    இச்சைப்படி இன்பமாக இந்த நாளைக் கழிச்சிடலாம்
    என்னோட நீயும் கூட வாடி!

    அக்கா-
    நீட்டுத் தேர்வில் நீயும் நானும்
    நெறைய மார்க்கு வாங்க வேணும் தம்பி -அதுக்கு
    நேரகாலத்தோட நாம
    பாதை போட்டு வச்சுக்கணும் தம்பி.
    ஆட்டுவிக்கிற அம்மாவுக்கும்
    அது தாண்டா ஆனந்தம் தம்பி
    அதுக்காச்சும் பள்ளிக்கூடம்
    அலுப்பில்லாமப் போக வேணும் தம்பி.

    அடை மழை வந்தாலு மெண்ணு
    கொடயக் கையில எடுத்துக்கிட்டு
    கூட்டிப் போற அம்மாவுக்குத் தம்பி-நல்ல
    பாட்டி போட மார்க் கெடுத்து
    பரீட்சையில பாஸு பண்ணி
    காட்ட வேணும் திறமையெல்லாம் தம்பி.

    இப்பருந்தே படிச்சாத்தான்
    எதிர்காலம் நமக்கிருக்கும்
    தப்ப விட்டா தோத்துப் போவம் தம்பி-நாம
    எப்ப வேணு முண்ணாலும்
    எறங்கி விளையாடிக்கலாம்
    இப்ப போவம் பள்ளிக்கூடம் தம்பி.

    அன்னை-
    நெஞ்சமெங்கும் தன் குழந்தை
    நீட்டுத் தேர்வில் வெல்லணும்
    கொஞ்சமும் குறைந்திடாது
    மார்க்கு வாங்கிக் கொள்ளணும்
    தஞ்சமது கல்விதான் தமக்கு என்று தாயவள்
    தன்குழந்தை சொல்லும் வார்த்தை
    தன்னிலே மகிழ்கிறாள்.

    *****

    ”தேயிலை பறித்து நமைக் காக்கும் தாயிலையேல் நம் வாழ்வு என்னாகும் தம்பி? அந்த அன்னைக்கு நாம் செய்யும் கைம்மாறு, நன்கு கற்று வாழ்வில் நல்லபெயர் பெற்று வாழ்வதே!” என்று இளவலுக்கு இன்மொழி கூறும் தமக்கையின் உருவில் தோன்றுகிறாள் மற்றோர் அன்னை!” என்று சிலிர்க்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    இன்னொரு அன்னை…

    வெளியூரு போன அப்பா
    வரவில்லை நெடுநாளா..
    வெளியே காட்டாமல் துக்கத்தை,

    வெயிலினிலும் மழையினிலும்
    தேயிலை பறித்துத் தேய்ந்து
    வேலை பார்த்து நம்மைப்
    படிக்கவைக்கிறாள் அம்மா..

    வேடிக்கை விளையாட்டு
    வேண்டாமடா தம்பி இப்போது,
    நன்றாய் நாம் படித்து
    நல்லபெயர் எடுப்போம்,
    பொல்லாத உலகத்தில்
    பெற்ற தாய்க்குப்
    பெருந்துணையாய் இருப்போம்
    அவள்
    பேர் சிறக்க வாழ்வோம்..

    அங்கே பிறக்கிறாள்
    அக்கா உருவிலோர்
    அன்னை…!

    *****

    குறும்பாவில் தேனிதழ் மழலையரைப் போற்றியிருக்கிறார் திரு. பா.வசிம். (பிழைநீக்கிப் பதிவிடுக கவிதைகளை). 

    தேயிலைத் தோட்டத்தில் தேய்ந்த முகத்திற்கு பின்னால் நிற்கும்
    தேன்இதழ்ச் செல்வங்கள்…

    *****

    அன்னையவள் தன் பிள்ளைகளை ஒழுக்கத்தோடும், நல்லநெறியோடும் வளர்ப்பதிலேயே குறியாயிருந்து குவலயம் போற்றும் உயர்ந்தோராய் அவர்கள் விளங்கப் பாடுபடும் திறத்தைச் சிறப்பாய்த் தன் கவிதையில் பதிவுசெய்திருக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    எங்கள் அன்னை..!

    எழில்கொஞ்சும் பசுமைத் தோட்ட மருகே..
    …………எதிர்காலக் கனவுகளை ஏந்திய நினைவுடன்.!
    அழகாய் மகிழும் குழந்தைகள் அவளருகே..
    …………ஆனந்தமாய்ப் பள்ளி செல்லும் எண்ணமுடன்.!
    ஒழுக்கமுடன் வளர்ந்து அவர்கள் உலகிலோங்க..
    …………உற்றதுணையாக என்று மிருப்பார் அன்னை.!
    நிழலாய்த் தம் பிள்ளைகளைத் தொடருவார்..
    …………நெறியாய் வளர்ப்பதில் கவனமிகு கொள்வார்.!

    கண்ணாகப் பெற்ற குழந்தையுடன் மகிழ்வார்..
    …………கனிவான அன்பை அளவின்றிக் கொடுப்பார்.!
    கண்ணசையா கவனமுடன் அவரைக் காத்து..
    …………கருத்துடனே பள்ளிசெல்ல தினம் அனுப்புவார்.!
    வண்ணச் சீருடையில் பள்ளிசெலும் அவர்களை..
    …………வாழ்த்துடன் முத்தம் பொழிந்து அனுப்புவார்.!
    எண்ணமுதச் செய்கையால் அன்னை என்பவள்..
    …………எப்போதும் இதயத்தில் நிறைந்தே இருப்பாள்.!

    *****

    நல்ல கருத்துக்களைக் கனிமழலையருக்குத் தம் கவிதைகள்வழிச் சொல்லியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    *****

    இன்றைய இயந்திர உலகில் இயற்கையை இரசிப்பதற்கோ, மழலையரோடு மனம் மகிழ்வதற்கோ யாருக்கும் நேரமில்லை. உருண்டோடும் செல்வத்தைத் துரத்திக்கொண்டே மக்கள் திரண்டோடுகின்றனர். அதனால் அன்பினால் நிரப்பப்படவேண்டிய இல்லங்கள்கூட வெறும் உறங்குமிடங்களாக (dormitories) மாறிவிட்டிருப்பது கண்கூடு. கணவனும் மனைவியும் காசைத் தேடுவதிலேயே கவனமாயிருப்பதால் அவர்தம் மாசற்ற மழலையரைத் தாங்க, அவர்களோடு விளையாட, கதைபேசப் பணிப்பெண்கள் தேவைப்படுகின்றார்கள். ஆம், அவர்களே இன்றைய மழலையர்க்குச் ’செவிலித் தாயர்.’ அந்த மாற்றுத் தாயின் அன்பு(ம்), அன்னையெனும் பொன்னில்லா இடத்தில் வைக்கப்படும் பூவைப்போல் நறுநாற்றமுடையதே (மணம்) என்பதைத் தன் தம்பிக்குப் பொறுப்போடு விளக்கும் சிறந்த அக்கையைத் தன் கவிதையில் அடையாளப்படுத்தியிருக்கும் திருமிகு. சொல்லின் செல்வியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிப்பதில் மகிழ்கின்றேன்.

    அவருடைய கவிதை…

    மாற்றுத் தாய் இவளடா..தம்பி..!

    வெறுப்பு காட்டாதேயடா தம்பி…
    இவள் வேலைக்கு வந்தவள்தானே என்று!
    அக்கா நான் கூறும் பேச்சைக் கேள் அமைதியாய் நீ நின்று!

    அன்னைக்கோ நேரமில்லை அன்புகாட்ட
    தந்தைக்கு நேரமில்லை பாசம் காட்ட

    வேலைக்கு ஆளிருக்கு என்று அடிமையென இவளை ஏவி விட்டு
    காசுக்கு அடிமைகளாய்
    கம்பெனிக்குச் சென்றுவிட்டார் நம் பெற்றோர்!

    நாம் கண்விழிக்கும் காலை முதல் கால்பதித்த பள்ளிவரை
    உணவு ஊட்டி உறக்கம் காட்டி,
    காசு வாங்கிப் பாசம் காட்டும் கண்ணியமான அன்னையிவள்!

    பட்டுத்துணியும் கட்டுப் பணமும் தராத பாசத்தைத்
    தட்டுநிறை உணவு தீர்க்காத நம் பசியை,
    தேக்குக் கட்டிலும், பஞ்சு மெத்தையும் கொடுக்காத உறக்கத்தை
    அடிமையென வந்தஇவள் அற்புதமாய்த் தந்தனளே!

    முதல் தரத்துத் தேயிலைகள் வெளிதேசம் போவது போல்
    வெளிநாட்டுக் கம்பெனியில் அடிமையாய் போயினரே நம் பெற்றோர்!
    மூன்றாம் தரத் தேயிலைகள் தாய்நாட்டில் சுவைப்பதுபோல்
    தாய்ப்பாசம்தனைக் காட்டி நம் வாழ்வில் சுவை ஊட்டுகிறாள் வேலைக்குவந்த இவள்!

    வேசம் காட்டி நாசம் செய்யும் வஞ்சக உலகினிலே
    பாசம் காட்டும் பாமரப் பெண்ணிவளை
    நாசம் செய்யாதே உன் கடும் சொல்லால்!
    மோசம் ஒன்றும் போக மாட்டாய் அவள் அன்பை ஏற்றுக் கொண்டால்!

    எதிர்காலம் என்ற கணக்கை நோக்கிப்
    பணத்தை சேர்க்க ஒடுகின்ற பெற்றோர் நமக்கிருந்தாலும்,
    அன்னைபோல அன்புகாட்ட தந்தைபோல பாசம் காட்ட அடிமையிவள் இல்லையென்றால் அன்புக்கு ஏங்குகின்ற அனாதைகளே நாமுமின்று!

    அன்னையெனப் பாவித்து அவள் மடி நீ சாய்ந்திட்டால்
    விண்ணையும் வளைத்திட்ட சந்தோசம் கொண்டிடுவாள்
    ஆசையாய் நீ பேசிவிட்டால் அகிலத்தையே தந்திடுவாள்!

     

     

     

    Share
  • இருபது கப்பல் அணு மின்சக்தி உற்பத்தி நிலையங்களைக் கட்ட சைனா திட்டமிட்டுள்ளது

    Posted on October 29, 2017

     unnamed

    இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன!  இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும்.  இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.”

    முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம்.

    “2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்.”

    டாக்டர் எஸ். கதிரொளி, டைரக்டர், சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடம்.

     

    Image result for floating reactors

    கப்பல் அணு மின்சக்தி நிலையம் கடற்தள ஆயில் கிணறு நிறுவ  மின்சாரம் பரிமாறுகிறது

    Floating reactors can support offshore drilling and production rigs by providing them with large amounts of power, thus reducing the need to store extra fuel on board for power generation. That means a much safer rig.

    China Nuclear Group

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    +++++++++++++++++

    https://link.springer.com/content/pdf/10.1007%2Fs13280-015-0732-y.pdf

    http://www.oecd.org/environment/nuclearenergyinthe21stcentury.htm

    blob:https://www.dailymotion.com/86cffd55-0baa-418c-9b6f-8e7a606b129c

    https://www.c-span.org/video/?326786-1/hearing-nuclear-deterrence-21st-century

    https://media.c-spanvideo.org/trimmed/program/040/405246/program.405246.MP4-D20.mp4?

    முன்னுரை:  21 ஆம் நூற்றாண்டில் இன்னும் 50 வருடங்களுக்கு உலக மின்சாரத் தேவையாய் அணுப்பிளவு மின்சக்திதான் [Fission Power] மின்சாரம் பரிமாறப் போகிறது என்பது ஆசிரியர் கருத்து. அதற்குள் அணுப்பிணைவு [Fusion Power] முன்னோடி மின்சக்தி நிலையம் இயங்கி வணிக ரீதியில் உற்பத்தி நிலையங்கள் உலகில் நிறுவகமாகும் என்று எதிபார்க்கப் படுகிறது.  இப்போது 30 உலக நாடுகள் இன்னும் 450 அணுமின் நிலையங்களை இயக்கி வருவதுடன் 11% அளவு மின்சாரத்தைப் பரிமாறி வருகின்றன.  மேலும் 60 புதிய அணுமின் நிலையங்கள் உலகில் கட்டப்பட்டு வருகின்றன.  அடுத்து 30 உலக நாடுகள் புதிய அணுமின் நிலையங்கள் கட்டலாமா என்று சிந்திக்கின்றன. அமெரிக்காவிலே திரிமைல் ஐலண்டு அணு உலை விபத்து, ரஷ்யாவிலே தீவிர செர்நோபிள் அணு உலை வெடிப்பு, ஜப்பானிலே புகுஷிமா அணு உலை வெடிப்புகள் சுனாமி யால் நேர்ந்தாலும், உலக நாடுகள் பாடங்கள் கற்றுக் கொண்டு, துணிந்து மீண்டும் அணுப்பிளவு சக்தியைப் பயன்படுத்தவே முன்வந்துள்ளன.

    China Floating Nuclear Reactor ACP 100

    சைனாவில் புதிய மிதப்பு அணு மின்சக்தி நிலையங்கள் கட்டுமானத் திட்டங்கள்

    21 ஆம் நூற்றாண்டில் சைனாவில் தொழிற்புரட்சி ஏற்பட்டு பேரளவு மின்சக்தித் தேவையைப் பூர்த்தி செய்ய  37 அணு மின்சக்தி  நிலையங்கள் இயங்கி 32.4 கிகாவாட் [ 32400 மெகாவாட்] மின்சாரம் தற்போது உற்பத்தி செய்கிறது.   அத்துடன் புதியதாய் 20 அணு மின்சக்தி நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.   அடுத்து சைனா 20 மிதப்பு அணு மின்சக்தி நிலையங்களைக் கப்பல் மீது கட்டத் திட்டமிட்டுள்ளது. மிதப்பு அணுமின் நிலையங்கள் கடலில் பயணம் செய்து ஆயில் ஆழ்கிணறுகள் தோண்டவும், சுவைநீர் தயாரிக்க உப்பு நீக்கி நிலையங்கள்கள் ஆக்கவும்,  அபாய பூகம்ப / சுனாமி/ சூறாவளி மழையடிப்புக் காலங்களில் கடற்கரைப் பகுதி / தீவுகளில் அவசர மின்சாரம் பரிமாறவும் பயன்படுகின்றன்.  2017 அக்டோபரில் சமீபத்தில் ஹர்ரிக்கேன் பேய்மழை பெய்து பியோட்டரிகோ தீவில் மின்சாரமின்றி பல நாட்கள் மக்கள் பெருந்துயருற்றார். வல்லரசான அமெரிக்காவிடம் மிதப்பு மின்சக்தி நிலையங்கள் இல்லாமல் பியோட்டரிகோ பட்ட துயரை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

    China Floating Nuclear Reactor CNNP

    CNNP hopes to have the first of these floating reactors in operation around 2020. Lloyd’s Registry will assist with regulatory and safety issues.

    China National Nuclear Power

    சைனா மிதப்பு அணுமின் நிலையங்கள் நிறுவ 150 மில்லியன் டாலர் திட்டத்தைத் தனியார் தொழிற்துறைக் கூட்டுறவில் [Chinese Shipyards & Electric Machinery Companies, Nuclear Reactor Suppliers]  நிறைவேற்றப் போகிறது.  முதலில் 2020 இல் இயங்கப் போகும் ACPR50S REACTOR அணு உலை 200 மெகாவாட் வெப்பசக்தி, [60 மெகாவாட் மின்சக்தி] தரும் திட்டம் 2016 ஜனவரியில் ஆரம்ப மானது.  அடுத்து  2015 இல் உடன்பாடான ACP100 REACTOR 450 MWt வெப்பசக்தி [140 மெகாவாட் மின்சக்தி ]மாடல் திட்டம்  இணை யாக ஆரம்பிக்கப் போகிறது.

    Image result for floating reactors

    Floating Reactor Building Model

    Image result for floating reactors

    மிதப்பு அணுமின் சக்தி 10 மெகாவாட் நிலையத் திட்டத்தை முதலில் 1967 இல் துவங்கியது அமெரிக்க இராணுவத்துறை.  அது 1968 முதல் 1975 வரை பனாமா கால்வாய்ச் சீரமைப்புக்கு மின்சாரம் பரிமாறியது.  அடுத்து ரஷ்யா 2010 இல் 21,000 டன் கப்பலில் 70 மெகாவாட் அணுமின் நிலையத்தை நிறுவத் துவங்கியது.  அது 2018 – 2019 ஆண்டுகளில் இயங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.  இவற்றுக்கு [SMR – SMALL MODULAR REACTOR] [எஸ்ஸமார்] சிற்றரங்கு அணு உலைகள் என்னும் பெயரும் உள்ளது. விலை மிகையான இந்த மிதப்பு அணு உலைகளின் மின்சார யூனிட் விலை மதிப்பீடு : டாலர் 135 / MWh. இம்மாதிரிச் சிற்றரங்க மிதப்பு அணுமின்சக்தி நிலையங்கள் இந்திய / தமிழகக் கடற்கரைப் பகுதி நகரங்களின் அவரசரத் தேவைக்கு மின்சக்தி பரிமாறவும், உப்பு நீக்கிச் சுவைநீர் தயாரிக்கவும் பயன்படும்.

    Floating Nclear Power Plant model.jpg

    Model of the Russian Floating Power Project 20870 (back)

    with a desalination unit (front)

    unnamed

    ACPR50

    This China Nuclear Group model for a floating reactor is the competitor to the CNNP design.

    China Nuclear Group

    Image result for small mudular reactors SMR

    அணுசக்தி உலைச் சாதனங்கள் 

    ++++++++++++++++++++++++++

    கூடங்குளம் அணுமின் உலைகள், உப்பு நீக்கி நிலையங்கள் 

    vver-layout

    “இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன!  இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும்.  இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.”

    முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம்.

    “2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்.”

    டாக்டர் எஸ். கதிரொளி, டைரக்டர், சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடம்.

    ‘அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு, பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி படைப்போம் ‘

    அமெரிக்க ஆக்கமேதை, தாமஸ் ஆல்வா எடிஸன் [ஆகஸ்டு 22, 1921]

    செர்நோபிள் ஒரு விதி விலக்கு ! நிபுணருக்கும், மூடருக்கும் ஒரு மதி விளக்கு !

    நெருங்காது நீங்காது தீக்காய்வார் போல
    கருஅணுவில் மின்சக்தி ஆக்கு !

    சி. ஜெயபாரதன்

    இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலே தமிழ்மக்கள் உள்பட உலக மாந்தர் அனைவருக்கும் நாகரீகமாக அனுதினமும் உயிர்வாழக் குடிநீரும், மின்சக்தியும் மிக மிகத் தேவை.  அணுசக்தி நிலையத்தையும், உப்பு நீக்கி இராசயனச் சாலையையும் கூடங்குளத்தில் அமைக்க வேண்டா மென்று நிறுத்தக் கையில் செருப்புடனும், தடியுடனும் முன்கூட்டியே வர அசுரப் பட்டாளத்தை ஏற்பாடு செய்தது, விடுதலைப் பூமியில் ஓர் அநாகரீகப் போராட்டமே ! ஆக்கப்பணி புரியும் அரசாங்கப் பணியாளரை அவமானப் படுத்தி நாச வேலைகள் புரிகின்றன அழிவுப்பணி புரியும் ஆவேச எதிர்க்கட்சிகள்.  அணு உலைகளில் விபத்துக்கள் நேரா என்னும் உத்தரவாதம் அளிக்க வேண்டுமென அவர்கள் கேட்பது வியப்பாக உள்ளது.  அமெரிக்காவில் 9/11 விமானத் தற்கொலைத் தாக்கல்களுக்குப் பிறகு விமானப் பயணம், இரயில் பயணம், கப்பல் பயணம், அணு உலைகள், தொழிற்சாலைகள் அனைத்திலும் மனிதப் பாதுகாப்பு என்பதே கனவாகி, கதையாகி, கற்பனையாகிப் போனது.  மில்லியன் கணக்கில் தினமும் பயணம் செய்யும் மொம்பை மின்சார இரயில்களில் எவரெல்லாம் உத்தரவாதம் வாங்கிக் கொண்டு வண்டியில் ஏறி நிம்மதியாக உட்கார்ந்திருக்கிறார் ?  21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களை விட, மக்கள் அனுதின ஊதியத்துக்குப் பயன்படுத்தும் இரயில் பயணங்களில் ஆபத்துக்கள் மிகையாகிப் பெருகி விட்டன !

    ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணு ஆயுதங்களால் ஆயிரக் கணக்கான மாந்தர் மாண்டு, கதிர்க்காயங்களால் துன்புற்று வரும் ஜப்பான் பூகம்ப சுனாமித் தீவுகளில் தற்போது 50 அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி 40,000 MWe ஆற்றல் மின்சாரத்தைப் (30%) பரிமாறி வருகின்றன.  அவற்றுள் கூடங்குள அணு உலைகள் போல் ஆற்றல் கொண்ட (> 1100 MWe) 14 அசுர அணுமின்சக்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அனைத்து நிலையங் களும் கடல்நீரைத் வெப்பத் தணிப்பு நீராகவும், சில நிலையங்கள் கடல்நீரைச் சுத்தீகரித்து உப்பு நீக்கிய நீரையும் பயன்படுத்தி வருகின்றன.

    1950 ஆம் ஆண்டுமுதல் 30 உலக நாடுகளில் 435 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம், ஜப்பானில் புகுஷிமா அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன.  மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் ஆய்வுகள் நடத்திக் கொண்டு வருகின்றன.

    அதற்கு அடுத்தபடி அணுசக்தி இயக்கும் 220 கப்பல்களும், கடலடிக் கப்பல்களும் (Submarines) கடல் மீதும், கீழும் உலாவி வருகின்றன.  ஈழத்தீவில் பாதிக்கும் குறைவாக அரை மாங்காய் போலிருக்கும் தென் கொரியாவில் 20 அணுமின் நிலையங்கள் 39% ஆற்றலைத் தயாரித்து மின்சாரம் அனுப்பி வருகின்றன.  இந்தியாவின் அணு மின்சக்திப் பரிமாற்றப் பங்கு 2.6%  இயங்கி வருபவை 20 அணுமின் நிலையங்கள்.  இந்தியாவில் அனைத்து அணுசக்தி நிலையங்களைப் பாதுகாப்பாக இயக்கத் திறமையுள்ள, துணிவுள்ள நிபுணர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள்.

    அணுமின்சக்தி  தேவையான தீங்கு  என்று உலக நாடுகள் தெரிந்தே பயன்படுத்தி  வருகின்றன. அதன் பயன்பாட்டை இப்போது முழுவதும் நீக்க முடியாத, மீள  இயலாத நிலைக்கு நாம் வந்து விட்டோம்.   அணு உலை விபத்துக்களில் கற்கும் பாடங்களைக்  கையாண்டு அவற்றைப் பாதுகாப்பாக இயக்க முடியும் என்பது என் கருத்து.  வேறு மின்சக்தி உற்பத்திச் சாதனங்கள் எதிர்காலத்தில் வரும்வரைப் பேரளவு பயன்தரும் அணுமின்  சக்தி நிலையங்கள் உலகில் பாதுகாப்பாய் இயங்கிவரும்.

    அணுசக்தி நிலையங்கள் தமிழகத்தில் புதிதாக எழாமல், அசுரப் படைகளும், தற்கொலைப் படைகளும் தடுத்துப் பொதுமக்களைப் பீரங்கிகளாக மாற்றித் தாக்கவிடும் அறிவீன யுக்திகளைக் கைவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

    ஆஸ்டிரியா வியன்னாவில் உள்ள அகில அணுசக்தித் துறைப் பேரவையில் [International Atomic Energy Agency (IAEA)] அனைத்து அணுவியல் ஆய்வு நாடுகளும் உறுப்பினராக இருந்து அணு உலைகள் டிசைன், கட்டுமானம், இயக்கம், பாதுகாப்பு, முடக்கம் (Decommissioning) சம்பந்தப் பட்ட அனைத்து விஞ்ஞானப் பொறியியல் நூல்களின் பயன்களைப் பெற்று வருகின்றன.  மற்ற தொழிற்துறைகள் எவற்றிலும் பின்பற்றப்படாமல், அணு உலை டிசைன்களில் மட்டும் வலியுறுத்தப் படும் பாதுகாப்பு விதிமுறையை, அணுசக்தி பற்றித் தர்க்கமிடும் அறிஞர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.  அந்த நிர்ப்பந்த விதி இதுதான்:  பூகம்பம், சூறாவளி, சுனாமி, சைக்குளோன், ஹர்ரிக்கேன், புயல், பேய்மழை, இடி, மின்னல், தீவிபத்து, மனிதத் தவறு, யந்திரத் தவறு போன்றவை தூண்டி எந்த விபத்து நேர்ந்தாலும் அணு உலையின் தடுப்புச் சாதனங்கள் இயங்கிப் பாதுகாப்பாக, சுயமாக [Automatic Shutdown Systems] அணு உலை உடனே நிறுத்தப்பட வேண்டும்.  வெப்பத் தணிப்பு நீரோட்டம் குன்றி யுரேனிய எரிக்கோல்கள் சிதைவுற்றால் அவற்றின் கதிரியக்கமும் பிளவுத் துணுக்களும் வெளியேறாது உள்ளடங்கும் “கோட்டை அரண்” [Containment Structure] கட்டாயம் அமைக்கப் படவேண்டும்.  செர்நோபிள் அணு உலையை டிசைன் செய்த ரஷ்யப் பொதுடைமை நிபுணர்கள் அணுசக்திப் பேரவை நியதிகளைப் பின்பற்றவில்லை.  பேரவை சுட்டிக்காட்டினும் ஏற்றுக் கொள்ளாத ரஷ்யப் பொதுடைமை நிபுணர்கள் செர்நோபிள் விபத்தின் போது பேரளவில் உயிரைப் பறிகொடுத்து, நிதி செலவாகிப் பெரிய பாடத்தைக் கற்றுக் கொண்டார்கள்.  செர்நோபிள் ஒரு விதிவிலக்கு ! நிபுணருக்கும் மூடருக்கும் ஒரு மதி விளக்கு !

    கடலும், கடற்சார்ந்த பகுதிகளுக்கு நீர் முடக்கம் ஏற்பட்டால், கடல் வெள்ளத்தின் உப்பை நீக்கிக் குடிநீராக்குவது ஒன்றும் புதிய விஞ்ஞான முறை யில்லை.  ஜப்பான் போன்ற தீவுகளிலும் மற்றும் அரேபிய நாடுகளிலும் உப்பு நீக்கி இரசாயனச் சாலைகள் எண்ணற்றவை சிறந்த முறையில் இயங்கி வருகின்றன.  அனுதினமும் ஆயிரக் கணக்கான டன்னளவில் குடிநீர் கடலிலிருந்து சுவைநீராகத் தயாரிக்கப் படுகிறது.  உப்பு கலந்த எச்சநீர் மீண்டும் கடலில்தான் பாய்ச்சப் படுகிறது.  இவற்றிலிருந்து வெளியாகும் இராசயனப் பொருட்களால் மீனினம் சேதாரம் அடையலாம் என்றோர் அச்சம் சிலரிடம் உள்ளது.  ஆனால் நமக்குக் குடிக்க, புழங்க கடற்பகுதிகளில் குடிநீர் பேரளவு தேவைப்படும் போது இந்த வழியைத் தவிர்த்து வேறு வழிகள் ஏதேனும் உள்ளனவா ?  செத்துப்போன மீன்களை விட்டுவிட்டுச் சற்று தூரம் சென்று உயிருள்ள நல்ல மீன்களை பிடித்துக் கொள்ள மீனவருக்குச் சொல்லித் தர வேண்டுமா ?  நமக்கு முதலில் வேண்டியது நீர்வளம்.  அதற்கு அடுத்தபடிதான் மீனினம்.  அப்படி வேறு வழிகள் இருப்பினும் நீர் வெள்ளத்தைக் கொண்டு வரச் சிக்கனச் செலவில் சாதிக்க முடியுமா என்றும் கணக்குப் பார்க்க வேண்டும்.

    இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலே தமிழகத்தில் பலரிடம் பீடக் கணினிகளும், மடிக் கணினிகளும், காதில் செல்பேசிகளும் நம்முடன் அனுதினம் சல்லாபித்துக் கொண்டுள்ள போது மின்சக்தி குன்றிப் போனால் என்னவாகும் என்று நான் விளக்க வேண்டியதில்லை.  சூழ்வெளி, உயிரினப் பாதுகாப்பளிக்கும் எந்த மின்சக்தி உற்பத்தியும் நமக்குக் கொடைதான்.  அணுசக்தி நிலையங்களிலிருந்து கிரீன் ஹௌஸ் வாயுக்கள் [CO2, SO2, & Nitrous Gases] வெளியாவ தில்லை.  அவை கூடங்குளத்தில் தேவையில்லை என்று பாமர மக்களின் கைகளில் செருப்பை மாட்டி, சுற்றுச் சூழல் ஆய்வலசல் பற்றி உரையாட வந்த விஞ்ஞானிகளின் வாயை மூடியது நாகரீகச் செயலில்லை.  அரசியல் மூர்க்க வர்க்க எதேச்சவாதிகளின் பிற்போக்குத் தன்மை அது.

    அணு உலையா ? வாழ்வுக்கு உலையா ?  இப்படி மேலோடி இடித்துரைப்பது ஓர் அசுரப் போக்கு.  அணு உலை அருகே வாழ்பவருக்கு எல்லாம் ஆறாம் விரல் முளைக்குது,  புற்று நோய் தாக்குது என்றெல்லாம் நையாண்டி செய்வது அறிஞர்களின் கோமாளித்தனம்.  புற்று நோயுடன் மற்ற நோயும் தொற்றுது என்னும் பாட்டி கதைகளைக் கட்டிக் எறிந்து விட்டு சற்று புள்ளி விபரத்தோடு டாக்டர் புகழேந்தி ஆய்ந்து காட்டினால் நாமெல்லாம் நம்பலாம்.  கல்பாக்கத்தில் அணு உலை கட்டும் முன்பு அத்தகைய நோய்களால் துன்புற்றோர் அல்லது செத்தவர் எத்தனை பேர் ?  அப்போது அங்கு வாழும் நபருக்கு எத்தனை விரல்கள் இருந்தன என்று எண்ணிப் பார்த்தவர் யார் ?  அணு உலைகள் கட்டிய பின் இயங்கும் போது எத்தனை பேர் புற்று நோயில் செத்தனர்,  மற்ற நோயில் மடிந்தனர் என்ற எண்ணிக்கைகள் தேவை.  அப்படி அதிகமானால் அந்த தொகை கூறப்பட வேண்டும்.  அப்போதுதான் அணு உலையால் மனிதருக்கு ஏழாம் விரல் முளைத்த விந்தைகளைப் பற்றிப் புகாரிடலாம்.   உலகத்திலே இயங்கி வரும் (435+284+220) 939 அணு உலைகளுக்கு அருகில் வாழ்வோர் யாராவது புற்று நோயுற்றுத் செத்தால் அங்குள்ள பராக்கிரம யூனியன் நிலைய அதிகாரிகளைச் சும்மா விட்டுவிடுமா ? அவர்களைச் சிறையிலிட்டு பெருத்த நட்ட ஈடைப் பிடுங்கி விடும்.  நான் இந்தியாவிலும் கனடாவிலும் 45 ஆண்டுகளுக்கு மேல் யுரேனிய எரிசக்தி ஊட்டும் யந்திரக் கதிரியக்க வேலைகளில் நேரிடையாகத் தொடர்ந்து பணியாற்றி யிருக்கிறேன்.  இப்போது பொறியியல் படித்த என் புதல்வி கனடாவில் பிக்கரிங் அணுமின் நிலையத்தில் பணி புரிகிறாள்.  அவளது கணவரும் டார்லிங்டன் என்று அழைக்கப்படும் வேறோர் அணுமின் நிலையத்தில் எஞ்சினியராகப் பணி செய்கிறார்.  எனக்கோ, அவர்களுக்கோ அவரது இரண்டு பிள்ளைகளுக்கோ எவருக்கும் ஏழாவது விரல் முளைக்க வில்லை.  ஆகவே அசுரன் போன்ற அணுசக்திப் பொறிநுணுக்க வாதிகள், ஞாநி போன்ற எழுத்தாளர்கள், டாக்டர் புகழேந்தி போன்ற மருத்துவர்கள் ஆதாரமற்ற மூன்றாவது நபர் கருத்துக்களைப் பாமர மக்களுக்கு ஊட்டிப் பயமுறுத்தும் வழக்கத்தைக் கைவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

    பாரதத்தில் அணுசக்தி எச்சக் கழிவுகள் மீளியக்க முறையில் பயன்படுத்தப்பட்டு புளுடோனியம் பிரித்தெடுக்கப் படுகிறது.  அந்தப் புளுடோனியம் அணு ஆயுதங்களுக்கும், வேகப்பெருக்கி அணு உலைகளுக்கும் பயன்படுத்தப் படுவதால் அரசாங்கம் கதிர்க்கழிவு புதைப்பு விபரங்களை << தேசீயப் பாதுகாப்பு இரகசியமாக >> [National Security Secret] வைத்துள்ளது.  தெருவில் போவோனுக்குத் << தேசீயப் பாதுகாப்பு >> என்று சொன்னால் என்ன புரியும் ? ஆனால் எப்படி கதிரியக்கக் கழிவுகள் பாதுகாப்பாக புதைபட வேண்டும் என்ற விஞ்ஞானப் பொறி நுணுக்கங்கள் இந்திய அணுசக்தித் துறையகத்திடம் உள்ளன.  பொதுநபருக்கு வெளிப்படையாக அறிவிக்கா விட்டாலும் அரசியல் அமைச்சர்களின் மூலமாக முயன்றால் விபரங்கள் கிடைக்கலாம் என்பது என் கருத்து.  பிரம்மாண்டமான அணு உலைகள் கட்டும் போது, பாதுகாப்பாக வேலை செய்தாலும் மனித அல்லது யந்திரத் தவறுகளால் மனிதருக்கோ, கட்டுமானச் சாதனங்களுக்கோ விபத்துகள் நேர பல வாய்ப்புகள் உள்ளன.  அவற்றால் விளையும் விளைவுகளால் மரணம் ஏற்படாத வரை அவற்றை அரசு மறைத்து வைப்பது மன்னிக்க முடியாத குற்றமில்லை.  அரசியல் கட்சிகளுக்குள் அனுதினமும் நிகழும் கைச் சண்டைகள், வாய்ச்சண்டைகள் எல்லாம் வெளிப்படையாக எவரெல்லாம் முரசடித்து வருகிறார்கள்?

    (http://www.thinnai.com/?module=displaystory&story_id=20706073&format=htmlஅசுரனின் அணு உலையா ? வாழ்வுக்கு உலையா ?  கூடங்குளம் அணுமின் திட்டம்.)

    மேற்காணும் கட்டுரையில் உள்ள சில அநாகரீகத் தற்கொலை மிரட்டல்கள், தாக்கல்கள்

    +++++++++

    << கோட்டாறைச் சேர்ந்த பரமார்த்தலிங்கம் பேசுகையில், “அணுமின் திட்டத்தை நிறுத்தாவிட்டால் தினமும் 3 பேர் வீதம் தீக்குளிப்போம்!” என்றார். உடனே “அணு உலை வேண்டாம்’, “அணு உலை வேண்டாம்’ என அங்கிருந்தவர்கள் முழக்கமிட்டனர். இதனால் ஏற்பட்ட அமளிக்கு இடையே திட்டத்தை ஆதரித்து இந்திய கலாசார நட்புறவுக் கழகத் தலைவர் ராமையா பேசுகையில், அணு உலையால் ஆபத்து வராது என்றும் இதனால் பல நன்மைகள் உண்டும் என்றும் தெரிவித்தார். ஆதரவாகப் பேசிய இராமையாவை அடிக்க பெண்கள் செருப்புகளுடன் பாய்ந்தனர். >>

    << இடிந்தகரையைச் சேர்ந்த என். சுரேஷ் என்பவர் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார். அவரது கருத்துகளுக்கு எதிர்ப்புக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளரான ஆன்டன் கோமஸ் ஆட்சேபம் தெரிவித்தார். உடனே, அரங்கிற்குள் இருந்தவர்கள் மீண்டும் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். இதனிடையே திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்துத் தெரிவித்துப் பேசியவர்களிடம் அதற்கான காரணத்தை கேட்டு குறிப்பெடுத்த இளைஞர் ஒருவருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது சிலர் அந்த இளைஞரைத் தாக்கினர். போலீஸார் அந்த இளைஞரை மீட்டு வெளியே அனுப்பி வைத்தனர். ஆதரவாகப் பேசிய இளைஞருக்கு பெண்களின் செருப்படியும் அடி, உதைகளும தாராளமாகக் கிடைத்ததன. >>

    << இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளைத் தலைவர் விஞ்ஞானி லால்மோகன் பேசுகையில், மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றார். பத்திரிகையாளர் பிரபுல் பித்வாய் பேசுகையில், “அணு உலைக் கழிவுகளால் ஆபத்து ஏற்படும் என்றும், விபத்து நடக்காது என்பதற்கான உத்தரவாதம் இல்லை!” என்றும் தெரிவித்தார். >>

    << அதற்குப் பதிலளித்து இந்திய அணுமின் கழகத் திட்ட இயக்குநர் (மும்பை) எஸ்.கே. அகர்வால் பேசுகையில், கழிவுப் பொருள்கள் மீண்டும் பயன்படுத்தப்படும் என்றார். அப்போது எதிர்ப்பாளர்கள் மீண்டும் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். இவ்வாறு அவ்வப்போது எதிர்ப்பாளர்கள் முழக்கமிட்டுக் கொண்டே இருந்ததால் அரங்கில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது. அப்போது மாவட்ட ஆட்சியர் திடீரென்று கூட்டம் முடிந்துவிட்டது என்று அறிவித்தார். இவ்வாறு பலத்த எதிர்ப்புகளுக்கிடையே அரைகுறையாக நடந்து முடிந்தது.  இப்படியாக பல இலட்சம் மக்களின் எதிர்காலம் குறித்த இந்த மக்கள் கருத்தாய்வானது வெறும் ஒன்றே முக்கால் மணி நேரத்தில் நடந்து முடிந்தது >>

    +++++++++

    நீர்ப் பற்றாக்குறை பற்றிக் கல்பாக்கத்தில் டாக்டர் அப்துல் கலாம்

    2003 டிசம்பர் 17 ஆம் தேதி கல்பாக்கத்தில் நிகழ்ந்த இந்திய அணுவியல் குழுவின் 14 ஆவது ஆண்டு நிறைவு விழாவில், உலோகவியல் வல்லுநரான பேராசிரியர் சி.வி. சுந்தரம் அவர்களுக்குப் பாராட்டு விருது அளித்த குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம் விழாத் துவக்கவுரையில் கூறியது: “இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சம், எரிசக்திப் பற்றாக்குறை இரண்டும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன!  இந்தியாவைப் பொருத்தமட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக்  கனலைப் பயன்படுத்தியும், அணுக்கனல் சக்தியை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும். பாபா அணுசக்தி ஆய்வு மையம், அணுசக்தி ஆற்றல் நிறுவனம், பாரத கனமின் யந்திர நிறுவனம் [BARC, NPCIL, BHEL] ஆகிய மூன்றும் இணைந்து தொழிற்துறைக் கூட்டணி அமைத்து, உப்பு நீக்கி துறையகங்கள், மின்சக்தி நிலையங்கள் [Water & Energy Production through Consortium] உண்டாக்குவதை ஓர் குறிப்பணியாய் [Mission] மேற்கொள்ள வேண்டும்”.

    “இன்றுள்ள [2004] உலக ஜனத்தொகை 6 பில்லியனில் 3 பில்லியன் மக்கள் கட்டுப்பாடுள்ள அல்லது பற்றியும் பற்றாத நீர் வசதியுடன் வாழ்கின்றனர்!  உலக மக்கள் தொகையில் 33% போதிய சுகாதாரப் புழக்க நீரின்றியும், 17% மாசுக்கள் மண்டிய நீரைப் பயன்படுத்தியும் வருகிறார்! 2025 ஆண்டுக்குள் ஜனப்பெருக்கு 8 பில்லியனாக ஏறி, அவர்களில் ஒரு பில்லியனுக்கு மட்டுமே போதிய நீர் வசதி இருக்கப் போகிறது!  இரண்டு பில்லியனுக்கு மாசு மறுவற்ற நீர் வசதி வாய்க்கப் போவதிலை!  ஐந்து பில்லியன் மக்களுக்குச் சுகாதார நலனுக்குப் பயன்படும் புழக்கநீர் கிடைக்கப் போவதில்லை! இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு வழிகளைக் காண நாம் யாவரும் ஒன்று சேர்ந்து பணிபுரிய வேண்டும்”.

    நீர்ப் பற்றாக்குறையை நிவிர்த்திக்க வழிமுறைகள்

    ஜனாதிபதி மேலும் கூறியது: “நீர்வசதிப் பற்றாக்குறையை நிவிர்த்தி செய்ய நமக்கு உள்ளவை, சில வழிகளே! ஏரிகளில் மழைக் காலத்தில் மழைநீர் சேகரிப்பு, நகர்ப் புறங்களில் புழக்கநீரை மீள் பயன்பாடு செய்வது, நீர் வசதி வீணாக்கப் படுவதைத் தடுப்பது போன்றவை நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டியவை. பெரிய திட்டங்கள் இரண்டு. ஒன்று: மத்திய அரசாங்கம் எண்ணிக் கொண்டிருக்கும் நதிகள் இணைப்பு! அடுத்த பெருந் திட்டம், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம். அதிர்ஷ்ட வசமாக நமக்குள்ள மூல நீர்வளம், அகில மெங்கும் 97% பேரளவில் பரவி இருக்கும் கடல்நீர்.  கடல்நீரைப் புதுநீராக்கும் உப்புநீக்கி நிலையங்கள் உலகில் 7500 இப்போது இயங்கி வருகின்றன!  பிரச்சனைகள் அதிகமின்றி நீடித்து இயங்கிவரும் உப்புநீக்கி நிலையங்கள் பல உள்ளன. அவற்றில் 60% மையக் கிழக்கு நாடுகளில் எரிவாயு, எரி ஆயில் தரும் வெப்பசக்தியில் கடல்நீர் புதுநீராக ஆக்கப்பட்டு வருகிறது.  அநேக நாடுகள் நீர்ப்பற்றாக் குறையை நிவிர்த்தி செய்யக் கடல்நீரில் உப்பை அகற்றும் வழிகளைத்தான் பின்பற்றுகின்றன”.

    இந்தியாவில் அணுசக்தியின் கனல் மட்டும் பயன்பாடாமல், மற்ற வெப்ப முறைகளைக் கையாண்டு பல உப்புநீக்கி நிலையங்கள் இயங்கி வருகின்றன. ராஜஸ்தான், குஜராத், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தினம் 30,000 லிட்டர் ஆக்கும் சிறிய உப்புநீக்கி நிலையங்கள் உள்ளன. மேலும் ஏழு தொழிற்சாலைகள் அனுமதி அளிக்கப்பட்டு, 16 சிறிய உப்புநீக்கித் துறைக்கூடங்கள் இயங்கி கனியிழந்த நீர் [Demin Water] தயாரிக்கப் படுகிறது. கல்பாக்கம் அணுவியல் ஆய்வுக் கூடத்தில் மீள்தடுப்புச் சுத்தீகரிப்பு [Reverse Osmosis] முறையில் நாளொன்றுக்கு 1,8 மில்லியன் லிட்டர் புதுநீர் தயாரிக்கப்படுகிறது. 40 கோடி ரூபாய்ச் செலவில் பாபா அணுசக்தி ஆய்வு மையம் டிசைன் செய்து, அணுக் கனல்சக்தியைப் பயன்படுத்திப் பல்லடுக்கு நீராவி வீச்சு [Multi Stage Flash] முறையில் கடல்நீரை ஆவியாக்கிப் புதுநீர் உண்டாக்கும் நிலையம் ஒன்று பாம்பே டிராம்பேயில் நிறுவப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாரத கனமின் யந்திர நிறுவகம் [BHEL] மீள்தடுப்புச் சுத்தீகரிப்பு முறையில் இயக்கிவரும் 12 உப்புநீக்கி நிலையங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் கடல்நீரைக் குடிநீராக மாற்றி வருகின்றன.

    2004 ஜூலை 13 இல் இந்திய அணுசக்தி ஆணைக்குழுவின் அதிபதி [Chairman, Indian Atomic Energy Commission] டாக்டர் அனில் ககோட்கர் கல்பாக்கம் உப்புநீக்கி நிலையத்தைக் காணச் சென்ற போது கூறியது, “பாபா அணுசக்தி ஆய்வு மையம் [Bhabha Atomic Energy Centre (BARC)] டிசைன் செய்து கல்பாக்கத்தில் கட்டியுள்ள உப்புநீக்கி மாதிரிக் கூடம் கடந்த இரண்டு வருடங்களாக [2002-2004] நாளொன்றுக்கு 1.8 மில்லியன் லிட்டர் [480,000 gallon/day] புதியநீரைக் கடல்நீரிலிருந்து உற்பத்தி செய்து வருகிறது. அடுத்து இயக்க வினைகள் பயிற்சிக்கப் படும், கல்பாக்கத்தின் உப்பு நீக்கிப் பெருநிலையம் இன்னும் ஆறு மாதங்களில் முன்னைவிட இரண்டரை மடங்கு அளவில் 4.8 மில்லியன் லிட்டர் [தினம் 1.27 மில்லியன் காலன்] நாளொன்றுப் புதியநீரைப் பரிமாறப் போகிறது. இரண்டும் சேர்ந்தால் நாளொன்றுக்கு 6.3 மில்லியன் லிட்டர் [தினம் 1.66 மில்லியன் காலன்] புதியநீர் உற்பத்தியாகும்.”

    கல்பாக்கத்தில் கலப்பு முறை உப்புநீக்கம் [Hybrid Desalination] செயல்பட்டு வருகிறது. பல்லடுக்கு நீராவி [Multi Stage Flash (MSF)] முறையில் உப்புநீக்கம் புரிய அச்சாதன ஏற்பாடுகள் 170 MWe மின்சக்தி ஆற்றல் கொண்ட ஓர் அணுமின் உலையுடன் இணைக்கப் பட்டுள்ளன. கல்பாக்கம் உப்பு நீக்கியில் வெளிவரும் புது நீர் தினம் 1.8 மில்லியன் லிட்டர் கொள்ளளவாகும். அத்துணை அளவு புதுநீரை உற்பத்தி செய்ய, கல்பாக்கம் அணு உலையில் புகும் கடல்நீரின் கொள்ளளவு அதைவிட ஏழு அல்லது எட்டு மடங்காகும் [12-14 மில்லியன் litre/day]! இரட்டை நுணுக்கச் சுத்தீகரிப்பில் கடல்நீரிலிருந்து வெளிவரும் புதுநீரின் உப்பளவைக் கட்டுப்படுத்து எளிது. ஆதலால் அம்முறையில் குடிநீரும், தொழிற்துறை நீரும் ஒருங்கே பெற்றுக் கொள்ள முடிகிறது.

    2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார் என்று சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடத்தின் டைரக்டர், டாக்டர் எஸ். கதிரொளி குறிப்பிடுகிறார்! இந்தியாவின் நான்காவது பெருநகர் சென்னையில் 2003 ஆண்டு இறுதியிலே குடிநீர்ப் பஞ்சம் துவங்கி விட்டது என்று கோ. ஜோதி ‘தீருமா சென்னையின் தாகம் ‘ என்னும் தனது திண்ணைக் கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார்!

    Russian VVER & Chernobyl Reactors

    சென்னைப் நீர்ப்பஞ்சத்தைத் தீர்க்கத் தற்போது இந்தியாவின் கைவசம் இருக்கும் ஒரே ஒரு வழி, கடல் வெள்ளத்தில் கனல்சக்தி மூலம் உப்பை நீக்கிச் சுவை நீராக்கும் முறை ஒன்றுதான்! பரிதிக்கனல் வெப்பத்தைப் பயன்படுத்தியோ, கனல் மின்சார நிலையம் அல்லது அணு மின்சார நிலையத்தின் டர்பைன் வெளிக்கழிவு வெப்பத்தை உபயோகித்தோ, கடல்நீரைக் குடிநீராக்கும் மாபெரும் உப்புநீக்கி நிலையங்கள் மூன்று அல்லது நான்கு சென்னையின் நீண்ட கடற்கரையில் உடனே நிறுவப்பட வேண்டும்.

    பாரதத்தில் நீர்ப் பற்றாக்குறை, நீர்ப் பஞ்சத்தைக் குறைக்க ஜீவ நதிகள் செத்த நதிகளுடன் சேர்க்கப் பட வேண்டும். ஒரு மாநிலத்தில் ஓடும் நதிகளின் நீரை, அண்டை மாநிலத்தில் ஓடாத நதிகளுக்குப் பங்கீடு செய்ய மாநில அரசுகள் முன்வர வேண்டும்.  கடற்கரைப் பகுதிகளில் உப்புநீக்கி துறையகங்கள் அணுமின் சக்தி நிலையங்களுடனும், அனல் மின்சக்தி நிலையங்களுடன் கூடவே கட்டப்பட வேண்டும். இந்த இமாலயத் திட்டங்கள் நிறைவேற மத்திய அரசும், மாநில அரசுகளும் மெய்வருந்திப் பணிபுரிய முன்வர வேண்டும்.

    யந்திர யுகத்திலே மனிதரின் பயிற்சியும் சாதனங்களின் செம்மைப்பாடும்

    யந்திர யுகத்திலே முப்பெரும் தீங்குகளால் விபத்துக்கள் உலகெங்கும் அடிக்கடி யந்திர சாதனங்களில் நேர்கின்றன ! முதலாவது மனிதத் தவறு, இரண்டாவது யந்திரக் கோளாறு, மூன்றாவது புயல், இடிமின்னல், வெள்ளம், சூறாவளி, சுனாமி, பேய்மழை, பூகம்பம், எரிமலை போன்ற இயற்கைச் சீற்றங்கள் ! குறையுள்ள மனிதரும், பழுதுள்ள சாதனங்களும் இருக்கும் வரை ஆகாய விமானத்திலும், அண்டவெளிக் கப்பலிலும், இரயில் பயணத்திலும், அணுமின்சக்தி நிலையத்திலும், ஏனைய தொழிற் சாலைகளிலும் “அபாய எதிர்பார்ப்பு களை” [Risks] உலக மாந்தர் எதிர்நோக்கி இருக்க வேண்டும். செம்மையான பயிற்சி முறைகள் மனிதத் தவறு களைக் குறைத்துவிடும். அதுபோல் சீரான சாதனங்களும் விபத்துகளைச் சிறிய எண்ணிக்கை ஆக்கிவிடும். ஆனால் கூடியவரை விபத்துக்கள் மனிதராலோ, யந்திரத்தாலோ, இயற்கைச் சீற்றத்தாலோ நேர்ந்தால் யந்திரங்கள் பாதுகாப்பான நிலைக்குச் சுயமாக மாறி, மனிதர் தப்பிக் கொள்ள வழிகள் இருக்க வேண்டும். அதுதான் 21 ஆம் நூற்றாண்டில் யந்திர உலகிலே விஞ்ஞானிகள் மற்றும் பொறியியல் வல்லுநரின் குறிக்கோளாய் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

    யந்திர யுகத்திலே தம்மைப் பிணைத்துக் கொண்ட உலக நாடுகள் 21 ஆம் நூற்றாண்டிலே தனித்தியங்க முடியாத நிலையில் ஏதோ ஒரு தொப்புள் கொடி இணைப்பால் மாட்டிக் கொண்டுள்ளன ! செர்நோபில் விபத்தை ரஷ்யா விரும்பியும் ஒளித்து வைக்க முடியவில்லை ! அந்த விபத்தால் வெளியாகிப் பரவிய கதிரியக்கப் பொழிகள் கிழக்கே ஜப்பான் வரையிலும், மேற்கே கனடா வரையிலும் படிந்து விட்டன. ஆஃபிரிக்காவில் தோன்றிய எயிட்ஸ் காமநோய் பரவிச் சென்று உலகில் தாக்காத நாடெதுவும் இல்லை ! 2001 செப்டம்பர் 11 இல் அமெரிக்காவில் மூர்க்கர் பட்டாளம் வாஷிங்டன், நியூ யார்க் நகரங்களைத் தாக்கியதின் எதிரொலி இப்போது உலக நாடுகள் அனைத்தையும் பயத்துள்ளே தள்ளி விட்டிருக்கிறது. பறக்கும் ஜம்போ ஜெட் விமானம் 737 ஒன்றில் பழுது நேர்ந்து விபத்து ஏற்பட்டு அனைவரும் மரித்தால் அதை வாங்கிப் பயன்படுத்தும் எல்லா உலக நாடுகளும் அதிர்ச்சி அடைகின்றன. யந்திர யுகம் ஒரு போக்கில், ஒரு திசையில் செல்வது. அதற்குப் பின்னோக்கிச் செல்லும் உந்து சக்தி கிடையாது !

    Pressurized Water Reactor

    Schematic

    தொழிற்புரட்சிக்குப் (1780-1850) பிறகு மின்சக்தி நிலையங்கள் பெருகி அதன் ஆற்றலில் இயங்கும் யந்திரங்கள் ஆயிரக் கணக்கில் ஈசல்கள் போல் தோன்றன. அவற்றில் முக்கியமாக எரி ஆயிலில் இயங்கும் வாகனங்கள், விமானங்கள், ஏவுகணைகள், அண்ட வெளிக் கப்பல்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.  கடந்த நூறாண்டு களாக செம்மையாக இயங்கி வரும் கார் வாகனங்களின் தொழில் நுட்பம் சீராக்கப்பட்டு முதிர்ச்சி நிலை அடைந்துள்ளதை எவரும் மறுக்க முடியாது. அவற்றைப் போல் கோடிக்கணக்கான பேர் அனுதினமும் பயணம் செய்யும் ஆகாய விமானங்களும் சீராக்கப்பட்டு அவற்றின் தொழில் நுட்பமும் முதிர்ச்சி நிலை பெற்றுள்ளதை யாரும் எதிர்த்துச் சொல்ல முடியாது. அந்த வழிமுறையில் உலக நாடுகள் கடந்த 50 ஆண்டுகளாக 900 மேற்பட்ட அணு உலைகள், அணு ஆய்வு உலைகள், அணுமின் உலைகள் ஆகியவற்றை நிறுவி அனுபவம் அடைந்து, தற்போது 400 மேற்பட்ட அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக அனுதினமும் மின்சாரத்தை பரிமாறி வருகின்றன. அவற்றின் இயக்கங்களைக் கண்காணிப்பதோடு, அவற்றில் விளையும் அபாய நிகழ்ச்சிகளையும் நேராக உளவிப் பதிவு செய்து மற்ற நாடுகளுக்கும் 1957 ஆண்டு முதல் பகிர்ந்து வருவது, ஆஸ்டிரியாவில் உள்ள அகில நாட்டு அணுசக்திப் பேரவை [International Atomic Energy Agency (IAEA)].

    International Atomic Energy Agency,  Vienna

    1986 இல் நேர்ந்த செர்நோபில் அணுமின் உலை வெடிப்பு உலக நாடுகளைப் பேரளவில் அதிர்ச்சியில் தள்ளியது. அதனால் உலகெலாம் பரவிய கதிரியக்கப் பொழிகளால் பல நாடுகள் பாதகம் அடைந்தன. அவ்விதம் கவலைப்பட்ட நாடுகள் ரஷ்யாவின் செர்நோபில் விபத்தைத் தீவிர உளவுகள் செய்து தங்கள் அணுமின் உலைகளிலும் பெருத்த மாற்றத்தையும், பயிற்சி முறைகளையும் செம்மைப்படுத்தினார்கள். அதன் விளைவாக 1989 இல் உலக அணு உலை இயக்குநர்கள் அனைவரும் ஒன்று கூடி “உலக அணுமின் உலை இயக்குநர் ஐக்கியப் பேரவையை” WANO [World Association of Nuclear Operation] நிறுவகத்தை ஏற்படுத்தி அணு உலை இயக்கங் களைப் பகிர்ந்து கொண்டார்கள். அத்துடன் உலக நாடுகளின் WANO குழுவினர் ஓரிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அணுமின் உலைகளுக்கு விஜயம் செய்து, அதன் பாதுகாப்பான இயக்கங்களை உளவிக் கண்காணிப்பும் செய்து தரப்படுத்தியும் வருகிறார்கள்.

    +++++++++++++++++

    தகவல்:

    (http://www.thinnai.com/?module=displaystory&story_id=20706073&format=htmlஅசுரனின் அணு உலையா ? வாழ்வுக்கு உலையா ?  கூடங்குளம் அணுமின் திட்டம்.)

    1.  http://www.npcil.nic.in/index.asp [Nuclear Power Corporation of India Ltd Website for Nuclear Power Updates]

    2. http://pib.nic.in/release/release.asp?relid=20878 [President Dr. Abdul Kalam Speech on Kudungulam (Sep 22, 2006)]

    3. http://www.stratmag.com/issue2Nov-15/page03.htm
    [Russia Breaches Nuclear Blockade against India By: C. Raja Mohan (Nov 16, 2001)]

    4.  World Nuclear Association – WNA
    Radiological Protection Working Group – RPWG
    (Official List – July 20, 2006)
    http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

    5. World Nuclear Association – WNA
    Waste Management and Decommissioning Working Group – WM&DWG
    (Official List – July 25, 2006)
    http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

    6. http://www.candu.org/npcil.html [Indian Heavywater Nuclear Power Plants]

    7. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40409022&format=html [ உப்பு நீக்கி நிலையங்கள் Desalination Plants – கடல் நீரிலிருந்து குடிநீர் – திண்ணைக் கட்டுரை]

    8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40303233&format=html

    [கூடங்குளம் அணுமின் உலைப் பாதுகாப்பு ஆய்வுகள்]

    9. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40607071&format=html

    [செர்நோபிள் விபத்துபோல் கூடங்குளத்து அணுமின் உலையில் நிகழுமா ? ]

    10 Picture Credit: The Hindu

    11.  http://www.npcil.nic.in/  (Nuclear Power Corporation of India Website  (Kudungulam Update & Reports)

    12  http://npcil.nic.in/main/AboutUs.aspx  (Indian Nuclear Power Program)

    13. http://www.npcil.nic.in/main/ConstructionDetail.aspx?ReactorID=77  (Kudungulam Reactor Status)

    14.  http://en.wikipedia.org/wiki/Kudankulam_Nuclear_Power_Plant  (January 30, 2012)

    15.  http://www.world-nuclear.org/info/inf53.html  (World Nuclear Association Report on Indian Nuclear Power)  (February 2012)

    16. https://www.bing.com/search?q=US%20nuclear%20support%20seen%20as%20crucial%20to%20security  [August 16, 2017]

    17. https://www.popsci.com/china-floating-nuclear-reactors#page-4 [August 18, 2017]

    18.  https://en.wikipedia.org/wiki/Russian_floating_nuclear_power_station [October 16, 2017]

    19.  https://www.iaea.org/events/nuclear-power-conference-2017

    20.  https://www.iaea.org/newscenter/news/nuclear-power-21st-century

    21. http://www.oecd.org/environment/nuclearenergyinthe21stcentury.htm

    22.  https://link.springer.com/content/pdf/10.1007%2Fs13280-015-0732-y.pdf

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com] (October 29, 2017)  (R -2)

    Share
  • படக்கவிதைப் போட்டி (133)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    22894732_1465864570134404_1363780446_n

    ஆய்மன் பின் முபாரக் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (04.11.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(190)

     

    செண்பக ஜெகதீசன்

     

    குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

    கணமேயுங் காத்த லரிது.

    -திருக்குறள் -29(நீத்தார் பெருமை)

     

    புதுக் கவிதையில்…

     

    துறவு முதலாய

    நற்பண்புகளாம் மலைமீது நிற்கும்

    பெரியோர் கொள்ளும் சினம்,

    கணப்பொழுதுதானென்றாலும்

    ஆற்றல் அதிகமென்பதால்,

    அதற்கு ஆளானோரால்

    தடுக்கமுடியாது அதனை…!

     

    குறும்பாவில்…

     

    நற்பண்பெனும் மலையில் நிற்கும்

    பெரியோர்தம் கோபம் கணப்பொழுதுதானென்றாலும்,

    தடுக்கமுடியாது அதனை யாராலும்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    துறவு போன்ற பண்புகளாம்

    தூய மலையில் நின்றிருக்கும்

    அறவோர் கொள்ளும் சினமதுதான்

    அதிக நேரம் நிலைப்பதில்லை,

    சிறிது கால மென்றாலும்

    சினமதை யங்கே தடுத்தேதான்

    நிறுத்தி நலம்பெற யாராலும்

    நினைத்துப் பார்க்கவும் முடியாதே…!

     

    லிமரைக்கூ..

     

    நற்குணப் பெரியோர்தம் சினம்,

    சிலகணம்தானெனிலும் தடுத்திட முடியாது,

    தாக்கியழிக்கும் தக்கோர் இனம்…!

     

    கிராமிய பாணியில்…

     

    நெலைக்காது கோவம் நெலைக்காது

    நல்லகொணம் நெறஞ்ச

    பெரியவங்க கோவம் நெலைக்காது..

     

    அது

    கொஞ்சநேரக் கோவமுண்ணாலும்

    அதத்தடுக்க யாராலயும் முடியாதே..

     

    அதுக்குக் காரணமானவன

    தாக்காம உட்டுடாதே,

    அவனாலயும் தடுக்கமுடியாதே..

     

    நெலைக்காது கோவம் நெலைக்காது

    நல்லகொணம் நெறஞ்ச

    பெரியவங்க கோவம் நெலைக்காது…!

     

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (79)

    நாளைக்குப் பண்ணலாமே!

    நலம்-1
    “நாளை என்பது இன்று செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யும் தினம்!”
    இப்படி வேடிக்கையாகக் கூறுகிறார் ஒருவர்.

    ஒத்திப்போடும் தன்மை பலருக்கும் இருப்பதால், அதுதான் சரி என்பதுபோல் ஆகிவிட்டது.
    இக்குணம் ஏன் ஏற்படுகிறது?

    சோம்பலும், எது அவசியம் என்று புரிந்துகொள்ளாததும் ஒரு முக்கிய காரணம்.

    செய்யத் துணிவில்லாததை, `பிறகு பார்த்துக்கொள்ளலாம்!’ என்று அலட்சியப்படுத்துகிறோம். நாம் விரும்பாதவர்களைச் சந்திப்பதை ஒத்திப்போடுவதும் இதனால்தான்.
    சில நாட்களில் ஒரே சமயத்தில் பல வேலைகள் காத்திருக்கும். எங்கு ஆரம்பிப்பது என்று புரியாது, எதையும் ஆரம்பிக்கத் துணிவின்றி விழித்ததுண்டா நீங்கள்?

    `நாளை பார்த்துக்கொள்ளலாம்,’ என்று ஒத்திப்போடத் தோன்றிவிடும்.

    இன்று இருப்பதைவிட நாளை புத்தி கூர்மையாகிவிடுமா? அல்லது, இன்று கடினமாக இருப்பது நாளை எளிதாகிவிடுமா? . எப்படியானாலும், பதட்டம் ஏற்பட்டிருக்குமே!
    எங்காவது ஆரம்பித்தால்தான் ஒரு காரியத்தைச் செய்து முடிக்க முடியும் என்பது பிறர் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. செய்ய வேண்டியதைத் திருப்திகரமாகச் செய்ய முதலில் ஒரு பட்டியல் தயாரித்துக்கொள்ளலாம். மிக முக்கியமானதை முதலில் செய்துவிட்டு, பிறகு மற்றவைகளைக் கவனிக்கலாம். (எளிதானவற்றை முதலில் செய்து முடிப்பது நம் மீது நாமே கொண்டிருக்கும் அவநம்பிக்கையைக் காட்டுகிறது).

    பாடங்களை ஒத்திப்போடுவது

    பள்ளி அல்லது கல்லூரிப் பாடங்களைவிட திரைப்படங்களும், தொலைகாட்சியும் சுவாரசியமாக இருக்கும். அதில் சந்தேகமில்லை. இரவு எத்தனை நேரமானாலும் தூக்கம் கண்ணைச் சுழற்றாது. ஏனென்றால், அப்போது மூளை கடுமையாக உழைத்து வேலை செய்ய வேண்டியதில்லை. அதனால் பாடம் படிப்பது இரண்டாம்பட்சமாகிவிடும். அலட்சியப்படுத்தி விடுகிறோம்.

    நாம் புதிதாகக் கற்பது எதுவும் இருபத்து நான்கு மணி நேரம்தான் நம் நினைவில் நிற்கும். இதைவிட்டு, ஆசிரியை கற்பித்து சில மாதங்கள் கழித்து பரீட்சை வரும்போது புத்தகத்தை எடுத்தால், எதுவும் புரியாது. `இப்பாடம் நடத்தப்பட்டதோ?’ என்ற சந்தேகம்கூட எழும்.

    சிறப்பான தேர்ச்சி பெற்ற எந்த மாணவியையாவது கேட்டுப்பாருங்கள். “சொல்லிக்கொடுக்கப்பட்ட அன்றே பாடங்களை மேலெழுந்தவாறு ஒரு பார்வை பார்ப்பேன். (அதாவது, இருபத்து நான்கு மணிக்குள்). வாராந்திர விடுமுறையின்போது கவனமாகப் படிப்பேன். அவ்வளவுதான்!” என்பாள். இம்முறையைக் கைப்பிடித்தால் அதன்பின் மறக்காது. பரீட்சைக்கு முதல் நாள் புத்தகத்தை ஒரு புரட்டு புரட்டினாலே போதும்.

    பெரும்பாலான மாணவர்கள் பரீட்சைக்கு முதல் நாள்தான் பாடம் படிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்வார்கள்! இரவு முழுவதும் கண்விழித்துப் படிப்பார்கள். எல்லாம் புரிந்ததுபோல்தான் இருக்கும். ஆனால், உடலும் மனமும் ஒருங்கே களைத்துப்போக, படித்ததில் பலவும் பரீட்சை எழுதும்போது மறந்துபோயிருக்கும். (`எல்லாரும் செய்கிறார்களே, நாமும் அப்படிச் செய்தால் என்ன?’ என்று நான் ஒரு முறை பரிசோதித்துப் பார்த்ததன் விளைவு அது).

    கதை

    ஒரு பத்திரிகை ஆசிரியர் என்னிடம் ஒரு வாரத்திற்குள் ஒரு கதை எழுதித் தரும்படி கேட்டுக்கொண்டிருந்தார். மூன்று நாட்களில் எழுதி அனுப்பினேன்.
    அடுத்த முறை என்னைச் சந்தித்தபோது, “என்னங்க, இப்படிப் பண்ணிட்டீங்களே!” என்றார், குற்றம் சாட்டுவதுபோல்.
    “உடனே எழுதி அனுப்பினேனே! கிடைக்கலே?” என்றேன்.
    “கிடைச்சிச்சு. அதான் சொல்றேன்!”

    எனக்குப் புரியவில்லை. நன்றி சொல்வதற்குப் பதிலாக ஏன் தாக்குகிறார்?
    அவரே தொடர்ந்தார்: “எல்லாரும் அனுப்பறேம்பாங்க. ஆனா அனுப்பமாட்டாங்க. நீங்க என்னடான்னா..!”

    நான் சிரித்தேன். “இந்தக் காலத்திலே நல்லவளா இருக்கிறதுகூட தப்பு!”
    அவரும் என் சிரிப்பில் கலந்துகொண்டார்.

    பலருக்கும் ஒத்திப்போடும் குணம் இருக்கிறது. கேட்டால், `சோம்பல்,’ `மறதி,’ `வேறு வேலை வந்துவிட்டது’ என்று சமாளிப்பார்கள்.

    அதை அவர்கள் மாற்றிக்கொள்ள விரும்பாததற்குக் காரணம் பிறரிடமிருந்து மாறுபட்டிருக்க வேண்டாம் என்பதுதானோ?

    `ஊருடன் ஒத்து வாழ்!’ என்று சொல்லிப்போனவர் கட்டாயம் இதை எதிர்பார்த்துச் சொல்லி இருக்கமாட்டார்.

    கதை

    பல வருடங்களுக்குமுன் நான் ஆசிரியப் பயிற்சி மேற்கொண்டபோது, ஒரு பாடத் திட்டத்தைத் தயாரிக்கச் சொல்லி இருந்தார்கள். ஒரு மாதத்திற்குமேல் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

    அடுத்த நாளே வாசகசாலைக்குச் சென்று, வேண்டிய புத்தகங்களைத் தேடி எடுத்துக்கொண்டேன்.
    முடிவு நாளுக்கு முன்னரே விரிவுரையாளரிடம் என் உழைப்பின் பலனைக் கொடுக்கச் சென்றேன்.
    அங்கு உடன் படித்த பல மாணவ மாணவிகள் நின்றிருந்தார்கள், சண்டை பிடிப்பவர்கள்போல்.
    அவர்களுடைய விவாதம்: கொடுக்கப்பட்ட நேரம் போதவில்லை. ஒரே சமயத்தில் எல்லாருக்கும் தேவைப்படுவதால், வாசகசாலையில் அப்புத்தகங்கள் கிடைப்பதில்லை.

    அவர்கள் கோரிக்கையை ஏற்று, முடிவு நாள் இன்னும் ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
    நான் ஒருத்திதான் உரிய காலத்தில் வேலையை முடித்திருந்தேன்.

    அதற்காக பாராட்டினார்களா?

    பாராட்டாவது!
    விரிவுரையாளர் என்னைக் கேலியாகப் பார்த்து, “This one is an early bird!” என்றார்!

    ஒரு சிலர் பொறாமையாக என்னை வெறித்தார்கள். சிலர் கேலியாகப் பார்த்தார்கள், நான் ஏதோ தவறு செய்துவிட்டவள்போல. `பிறருடன் ஒத்துப்போக வேண்டாமா! இவளுக்கு மட்டும் என்ன அவசரம்!’ என்று உள்ளுக்குள் ஆத்திரப்பட்டிருப்பார்கள்.

    நாளை என்பது நமனது கையில்
    `நினைச்சதை உடனே சாதிச்சுடணும் ஒனக்கு!’
    இந்த வசவை நான் பலமுறை பெற்றிருக்கிறேன்.

    இப்படிக் கண்டனம் செய்பவர்களிடம், “நாளைக்கு நான் உயிரோடு இருப்பேனோ, என்னவோ!” என்று சொல்லிவிடுவேன், சிறு சிரிப்புடன்.

    உண்மைதானே! இன்று செய்ய வேண்டியதை உடனுக்குடன் செய்தால் நம் அமைதியும், நிம்மதியும் கெடாது, அல்லவா?

    ஒரு வேளை, உயிர் போகாது பிழைத்துக் கிடந்தால், நாளைக்கும் ஏதாவது வேலை வரும். செய்துவிட்டுப்போகிறது!

    தொடருவோம்

    Share
  • கண்ணதாசன் கூறும் வாழ்வியல் நெறிகள்

    -த.அமுதஜோதி

    amuthajothiஇருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களுள் ஒருவராகக் கண்ணதாசன் விளங்குகின்றார். புராண இதிகாச, காப்பியங்களை எளிமையாக்கித் தமது பாடல்களில் சாரமாகத் தந்தவர். இவர் திரைப்பாடல்களில் வைத்துப் பாடாத துறைகளே இல்லை எனலாம். தமிழ் இலக்கியத்தைப் பாடல் வடிவில் மக்களிடம்  கொண்டு சென்றவர். தமிழர்கள் மத்தியில் அவர்கள் மனதில் மக்கள் நேசக்கவிஞனாக என்றென்றும் நம்மோடு  வாழும் கவியரசாக இடம் பெற்றவர். இவருடைய பாடல், கவிதை முதலாக அனைத்துப் படைப்புகளிலும் இலக்கியத்தாக்கமும், வாழ்வியல் சிந்தனையும் அதிகம் இடம் பெற்றுள்ளன. அவருடைய இறைநம்பிக்கை, காதல், கனவு, சமூக உணர்வு எனும் பொருண்மையை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    இறை நம்பிக்கை

    மனித வாழ்க்கையே நம்பிக்கையின் அடிப்படையில் தான் இயங்குகிறது. வாழ்நாளின் ஒவ்வொரு நொடியும், மணியும், நாளும் நம்மை வாழ வைப்பது நம்பிக்கையே ஆகும். மக்கள் அனைவரையும் பாதுகாத்து வருபவர் இறைவன் என்பதை கண்ணதாசன்,

     ”நம்பினார் கெடுவதில்லை நான்கு மறைதீர்ப்பு
    நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்புஎன்று இறைஅருளின் சிறப்பினை உணர்த்தியுள்ளார்.

       வேத வடிவிலுள்ள இறைவனையும், இறை வடிவிலுள்ள வேதத்தையும் நம்ப வேண்டும். யாரைப் பார்த்து உலக உயிர்கள் வணங்கும் என்பதற்குச் சான்றாக,

     ”உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
    உலகம் உன்னிடம் மயங்கும்
    நிலை உயரும்
    போது பணிவு கொண்டால்
     உயிர்கள் உன்னை வணங்கும்.” என்று பாடியுள்ளார்.

    மனிதனைத் தாண்டிய சக்தி ஒன்று உள்ளது. அந்தச் சக்தியிடம் விண்ணப்பித்துக் கொண்டால் பலன் தருகிறது. மனஅமைதியை  உண்டாக்குகிறது என்று கடவுள் நம்பிக்கை குறித்தும் கூறியுள்ளார்.

    திருமூலர் திருவள்ளுவரின் கருத்துகள் இவரின் பாடல்களில் காணப்படுகிறது.

    மனிதன் தவறு செய்வதற்கு ஆசைதான் மூலகாரணமாயிருக்கின்றது. ஆசைகள் இல்லாத இடத்தில் குற்றங்கள் குறைகின்றன. குற்றங்களும் பாவங்களும் இல்லாவிட்டால்  மனிதனுக்கு இறைஅனுபவம் ஏற்படுகிறது. இதனைத் திருமூலர்,

     ஆசை அறுமின் ஆசைஅறுமின்
    ஈசனோடாயினும் ஆசைஅறுமின்                  (திருமந்திரம் -2570 )

    என்று பாடியுள்ளார். உலகப் பொருட்கள் மீதுள்ள ஆசைகளை விடுவதற்கு இறைவனைத் துணையாகப் பற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளுவர். இதனைப்

    பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு. எனும் குறட்பா மூலம் அறியலாம்.

    இறைவன் மீது ஆழ்ந்த நம்பிக்கை வைத்து, ஆசையைத் துறந்து குற்றம் இல்லாத வாழ்வை வாழ்வதற்கு வழிகாட்டியுள்ளார்.

    காதல்

     இலக்கியம் என்ற சொல் முதலில் வாழ்க்கையைத் தான் குறிக்கும். வாழ்க்கையை பிரதிபலிப்பதே இலக்கியம் என்பதைக் கவியரசரின் ஒவ்வொரு படைப்பிலும் உணரலாம். சங்க இலக்கியத்தில் வாழ்வின் அனைத்துக் கூறுகளும் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியர் இதனை,

    உண்டற்குரிய வல்லாப் பொருளை
    உண்டன போலக் கூறலும் மரபே (தொல் -1156 )

    என்று கூறியுள்ளார். இதனடிப்படையில் கவியரசரின் பாடல்களில் வாழ்வியல் சிந்தனைகளைக் காணலாம். கண்ணதாசன் காதலைப்பற்றிப் பாடும்போது,

    தென்றலிலே எனது உடல் தேய்ந்தது பாதி –அது
    தின்றதெல்லாம்
    போக இங்கே இருப்பது மீதி என்கிறார்.

    அந்தி நேரத்தில் காதலன் வராததை எண்ணி ஏங்குகிறாள். ஐயோ தென்றல் என் உடலைத் தின்று விட்டதே என வருந்திக் குறிப்பிடுகிறார். இப்பாடல் வரி,

    ”பயலையால் உணப்பட்டுப் பண்டைநீ ரொழிந்தக்கால்” எனும் கலித்தொகைப் பாடல்வரியைச் சார்ந்து பாடப்பட்டதாகும்.

    இருவருடைய உணர்வுகளும் ஒன்றுபடும் பொழுது காதல் பிறக்கிறது என்பதை கண்ணதாசன்,

      நீ யாரோ நான் யாரோ தெரியாது – இன்று
    நே
    ர்ந்தது என்னவென்று புரியாது

    என்று குறிப்பிட்டுள்ளார். இப்பாடல் வரி குறுந்தொகைப் பாடலொன்றைச் சார்ந்து பாடியது என்பதை,

    யாயும் ஞாயும் யார் ஆகியரோ
    எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
    யானும் நீயும் எவ்வழி அறிதும்
    செம்புலப் பெயல்நீர் போல
    அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே                         குறுந் -40) எனும் பாடல் மூலம் அறியலாம்.

    சங்க கால மக்கள் அந்தந்த நிலத்துக்குரிய ஒழுகலாறுகளின் அடிப்படையில் வாழ்வை மேற்கொண்டிருந்தனர். காதலால்  ஒன்றுபட்ட அன்பு வாழ்வை மேற்கொள்ளுவதே இல்வாழ்கை எனப்படும். அந்த அன்பு வாழ்க்கையைத் தங்களுடைய முதுமைக்காலத்திலும் தொடர்ந்து வைத்திருந்ததைச் சங்க இலக்கியம் விவரிப்பதைக் கண்ணதாசன் கவிதைகளில் பார்க்க முடிகிறது.

    கனவு
    மனம் என்பது உள்மனம், வெளிமனம் என இரண்டு வகைப்படும் என்பர். வெளிமனத்தில் உதயமாகின்ற அழுத்தமான நினைவுகள் பதிவாகின்றன. அவ்வாறு பதிவு பெற்ற நினைவுகளில் சில முன்பின் தொடர்பில்லாத சிறுசிறு பகுதிகளாக வெளிப்படும். இதனைத்தான் கனவு என்று குறிப்பிடுவர். இதனைக் குறுந்தொகைப் பாடலைச் சான்றாகக் கொண்டு ஆராயலாம்.

    கேட்டிசின் வாழி தோழி அல்கல்
    பொய்வ லாளன் மெய்உற மரீஇய
    வாய்தகைப் பொய்கனா மருட்ட ஏற்றெழுந்து
    அமளி தைவந் தனனே.                                 (குறுந் -30)

    என்ற பாடல் பிரிந்து சென்ற தலைவனைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்கின்ற தலைவி, கனவு காண்பதாகக் குறிப்பிடுகிறது. எனவே இதன் மூலம் அழுத்தமாகத் தன் நெஞ்சில் படுகின்ற எண்ணங்களே கனவுகளாக வெளிப்படும் என்ற உண்மை புலப்படுகின்றது.

       கவிஞர் கண்ணதாசனிடத்தும் இத்தொடருக்குப் பொருத்தமான ஒரு பாடலைக் காணமுடிகிறது.

    கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன்
    கணவர் என்றார் தோழி
    கணவரென்றால் அவர் கனவு முடிந்ததும்
    பிரிந்தது ஏன் தோழி?

    என்று அவர் பாடியுள்ளமை தெளிவாகும். இரு பாடல்களிலும் கனவை உண்மை என்று நம்பி ஏமாற்றம் அடைந்தது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சமூக உணர்வு

      மேடு பள்ளங்களைச் சீராக்கிச் சமமாகப் பண்படுத்தப்பட்ட நிலத்தில்தான், எங்கும் ஒரே சீராக நீர் பாய்ச்ச முடியும். அப்பொழுதுதான் பயிர் செழித்து வளர்ந்து நல்ல பலனைக் கொடுக்கும். அதுபோல மனித சமுதாயத்தில் சாதியின வேறுபாடு, பாகுபாடு இருக்ககூடாது; அனைவரும் ஒருதாய் மக்கள் என்று எண்ண வேண்டும். இந்தக் கருத்தின் அடிப்படையை உணர்ந்த பாரதியார்,

    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு –இங்கு
    ஒற்றுமை நீங்கிடில்  அனைவருக்கும் தாழ்வு
    நன்றிதைத் தேர்ந்திடல் வேண்டும் –இந்த
    ஞானம் வந்தால்பின் நமக்கது வேண்டும்

    என்று பாடுகிறார். இதனையே கண்ணதாசன் ,

    வெள்ளை மனிதன் வியர்வையும்
    கறுப்பு மனிதன் கண்ணீரும்
    உப்பு நீரின் வடிவிலே
    ஒன்று சேரும் கடலிலே

    என்று பாடுகிறார். பல்வேறு இடங்களில் தோன்றக் கூடிய நதிகள் அனைத்தும் கடல் தாயிடமே சங்கமமாகின்றன. இந்நிலை மனிதனிடமும் வரவேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் மனித சமுதாயம் ஒற்றுமையுடன் வாழ வழிகாட்டியுள்ளார்.

    மனிதனுக்கு மாற்றம் தேவை தான். மானுடத்தையே அழிக்கும் மாற்றம் கூடாது. சமுதாயத்தை நெறிப்படுத்த வேண்டும் என்ற இயல்போடு குற்றங்களைச் சுட்டிக் காட்டும் அங்கதக் குறிப்புப் பொருள் நிரம்பிய பாடல்கள் சங்க இலக்கியத்திலும் கண்ணதாசன் கவிதைகளிலும் நிரம்பி இருப்பதை மேற்கண்ட பாடல்களின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

    ***** 

    துணைநூல்கள்:

    1. தொல்காப்பியம்
    2. திருமந்திரம்
    3.  குறுந்தொகை

    *****

    கட்டுரையாளர்
    தமிழ்த்துறைப் பேராசிரியர்,
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    தஞ்சாவூர்.

     

     

     

    Share
  • பெருமிதமெனும் மெய்ப்பாட்டில் உரையாசிரியா்களின் அகநானூற்றுத் திறன்

     -பீ.பெரியசாமி

       1.முன்னுரை

    FB_IMG_15018996565301641நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டையும் முதன்மையான எண்வகை மெய்ப்பாடுகள் என்கிறார் தொல்காப்பியா். (தொல்.மெய்.நூ3) அவற்றுள் பெருமிதமெனும் மெய்ப்பாட்டிற்கான தோற்றுவாய்களாக, கல்வி, தறுகண், புகழ்மை, கொடை என்பனவற்றை விரித்துரைத்துள்ளார். இக்கட்டுரை தொல்காப்பியா் விரித்துரைக்கும் பெருமிதத்திற்குரிய மெய்ப்பாடுகளுக்கு உரைவகுத்த உரையாசிரியா்களின் உரைகளில் அகநானூற்றுப் பாடல்கள் எவ்வாறு எடுத்தாளப்பட்டள்ளன என்பதனை ஆராய்கிறது.

           1.1  பெருமிதம் தோன்றும் களன்கள்

    பெருமிதமெனும் மெய்ப்பாடு தோன்றும் களன்களைத் தொல்காப்பியா்,

    கல்வி தறுகண் புகழ்மை கொடையெனச்
    சொல்லப்
    பட்ட பெருமிதம் நான்கே” (‘தொல்.மெய்.9)
    எனும் நூற்பாவினில் கூறியுள்ளார்.

    1.2  உரையாசிரியா்கள் பார்வையில் பெருமிதமெனும் மெய்ப்பாடு

    பெருமிதம் வீரத்திற் பிறப்பது என இளம்பூரணரும், பெருமிதமென்பது வீரம் எனப் பேராசிரியரும், பெருமிதம் – வீரம் எனப் புலவா் குழந்தையும் உரை கொள்வா். இவற்றின்வழி பெருமிதமென்பது வீரம் என அறியப்படுகிறது.

      1.2.1  கல்வி

    கல்வியென்பது தவ முதலாகிய விச்சை (பேரா.மெய்.நூ.9) எனப் பேராசிரியா் உரை கொள்வார். இதன்வழி கல்வி என்பது இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழறிவும், படைக்கல்வியும்,  நுண்கலையும் அடங்குமென்பது அறியப்படுகிறது. இதனை விளக்க பேராசிரியரும் புலவா் குழந்தையும் கலி.141ஆம் பாடலை எடுத்தாண்டுள்ளனா்.

      1.2.2  தறுகண்

    தறுகணென்பது அஞ்சத்தக்கன கண்ட இடத்து அஞ்சாமை எனப் பேராசிரியரும்; தறுகண்-தறுகண்மை-அஞ்சாமை எனப் புலவா் குழந்தையும் உரை கொள்வா். இவற்றின் வழி தறுகண் என்பது அஞ்சத்தகுந்தன நடத்தவிடத்து அஞ்சாது செயல்படுதல் என்பது அறியப்படுகிறது. இதனை விளக்க இளம்பூரணர் புறப். வெண்பா.78.ஐயும் பேராசிரியரும் புலவா் குழந்தையும் கலி.141 ஐயும் எடுத்துக்காட்டியுள்ளனா்.

       1.2.3  புகழ்மை

    புகழ்மை என்பதனை இசைமையெனப் பொருள் கொள்வர் பேராசிரியரும் புலவர் குழந்தையும்.  “இசைமை “ -புகழ்; ஒலி; சீர்த்தி – எனப் பொருள் கூறுகிறது கழகத் தமிழ் அகராதி (க.த.அ.ப.98).  “புகழ்மை“ – புகழ்; புகழுடைமை- (க.த.அ.ப.664) எனப் பொருள் கூறுகிறது கழகத் தமிழ் அகராதி. இதன்வழி, புகழ்மை எனினும் இசைமையெனும் புகழ் என்பதனை உணா்த்துகிறது என்பது அறிப்படுகிறது.

    இசைமையென்பது இன்பமும் பொருளும் இறப்பப் பயப்பினும் பழியொடு வருவன செய்யாமையென பேராசிரியரும், இசைமை-புகழ்; அதாவது, இன்பமும் பொருளும் மிகுதியாக உண்டாயினும் பழிக்கத் தகுவன செய்யாமை எனப் புலவா் குழந்தையும் பொருள் கொள்வா். இவற்றின் வழிப் புகழ்மையென்பது நம்வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியும் செல்வமும் கிடைப்பதாக இருப்பினும் மற்றோர் பழிக்க நேரும் செயலை செய்யாது விடுத்தல் என்பது அறியப்படுகிறது. இதனை விளக்கப் பேராசிரியரும் புலவர் குழந்தையும்,

    கழியாக்  காதல  ராயினுஞ்  சான்றோர்
    பழியொடு  
    வரூஉம்  இன்பம்  வெஃகார்”    (அகம்-112)

    எனும் அகநானூற்றுப் பாடலை எடுத்தாண்டுள்ளனா். இப்பாடலானது நீங்காத காதலையுடையவராயினும் சான்றோர் பழியோடு வரும் இன்பத்தை விரும்ப மாட்டார்கள் என்கிறது. எனவே புகழோடு வருமின்பத்தை விரும்புவா் என்றமையால் புகழ்பற்றி வந்த பெருமிதத்தை உணா்த்தியது.

      1.2.4  கொடை

    கொடையென்பது உயிரும் உடம்பும் உறுப்பும் முதலாகிய எல்லாப் பொருளும் கொடுத்தல் எனப் பேராசிரியா் உரை கொள்வார். இதன்வழி கொடையென்பது தன்னிடம் உள்ள அனைத்தையும் வேண்டுவோருக்கு வேண்டியவாறு அளித்தல் என்பது அறியப்படுகிறது. இதனை விளக்கப் பேராசிரியா், கலி-141, புறம்-43 ஆகிய பாடல்களையும் புலவா் குழந்தை கலி-141 ஆம் பாடலையும் எடுத்தாண்டு ள்ளனா்.

      1.2.5  சொல்லப்பட்ட பெருமிதம்

    சொல்லப்பட்ட பெருமிதம் என்றமையால் உரையாசிரியா்கள் (பேராசிரியா், புலவா் குழந்தை) காமம் பற்றியும் பெருமிதம் பிறக்கும் என்கின்றனா். இதனை விளக்கப் பேராசிரியரும் புலவா் குழந்தையும் புறம் -73 ஆம் பாடலை எடுத்தாண்டுள்ளனா்.

        1.3   முடிவுரை

    பெருமிதமெனும் இம்மெய்ப்பாட்டினை விளக்க இளம்பூரணர் புறப்- வெண்பா ஒரு பாடலையும், பேராசிரியா் கலித்தொகை -1, அகநானூறு -1, புறநானூறு-2 என நான்கு பாடல்களையும், புலவா் குழந்தை கலித்தொகை, அகநானூறு புறநானூறு ஆகியவற்றில் தலா ஒரு பாடல் என மூன்று பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனா். கலி-141, ஆம் பாடலை மட்டும் பேராசிரியரும், புலவா் குழந்தையும் கல்வி, தறுகண், கொடை எனும் மூன்று மெய்ப்பாடுகளையும் விளக்க எடுத்தாண்டுள்ளனா்.

    உரையாசிரியா்கள் (இளம்பூரணர், பேராசிரியா், புலவா் குழந்தை) அகநானூற்றில் (112) ஒரு பாடலையும், கலித்தொகையில் (141) ஒரு பாடலையும் புறநானூற்றில் (43, 73) என இரண்டு பாடல்களையும் புறப் வெண்பா-78 ஆம் நூற்பாவையும் என ஐந்து உதாரணப்பாடல்களை எடுத்தாண்டுள்ளனா். இவற்றின் வழி புறநானூறு தவிர்த்த ஏனைய வற்றிலிருந்து தலா ஒரு பாடல் எடுத்தாளப்பட்டுள்ளது என்பது குறிப்பாக அகநானூற்றில் ஒரு பாடல் மட்டுமே எடுத்தாளப்பட்டுள்ளது என்பது முடிவு.

    *** 

    கட்டுரையாசிரியர்
    தமிழ்த்துறைத் தலைவர்
    டி.எல்.ஆர். கலைமற்றும் அறிவியல் கல்லூரி
    விளாப்பாக்கம்

     

     

     

    Share
  • சுயம்வரகலா பார்வதி ஹோமம்

    தன்வந்திரி பீடத்தில்
    சுயம்வரகலா பார்வதி ஹோமம்
    நடைபெற்றது.

    IMG_20171029_121804
    வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் இன்று 29.10.2017 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணியளவில் சிறந்த வேத விற்பன்னர்களை கொண்டு சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடைபெற்றது. இந்த ஹோமத்தில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம், முனீஸ்வர ஹோமம் ராகு கேது ஹோமம், சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடைபெற்றது.

    ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளாலும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடனும் சுயம்வரகலா பார்வதி ஹோமத்தில் பெண்களின் திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற்று மகிழ்ச்சியாக வாழவும், மனைவிக்கு ஏற்ற நல்ல கணவர் அமையவும். அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கவும் பிரார்த்தனை நடைபெற்று பங்கேற்ற பெண்களுக்கு கலசாபிஷேகம் செய்து அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    “பகவான் உவாச “….!
    ————————————————-

    Dialogue with Arjuna ink and watercolour

    ”என்னை மறக்கா(து) எதையும் நினைக்காதே
    உன்னைநான் உச்சிக்(கு) உயர்த்துவேன் -எண்ணை
    திரியின்றி தானாய் எரியா(து) அதுபோல்
    திரிநீஎண் ணைநான் தெளி’’….
    ”ஆரத் தழுவி அருச்சுன காமத்தை(பேதத்தை-அதுவும் காமத்தில் சேர்த்தி)
    வேரறுத்துச் சொன்னார் , விஜயரே! , -பாருச்சி,
    தேருச் சியில்காக்கும் தேவன் அனுமனுள்ளான்,
    நூறைச் சிதைக்க நிமிர்’’….
    “வேரோடு கிள்ளி விருட்சம் அகந்தையொடு –
    போரோடு போராகப் போராடு -வீராநீ! –
    வெற்றி உனக்கதை வீழ்த்துதல் தானன்றி –
    சுற்றியுள்ள நூறு சடங்கு “…..கிரேசி மோகன் ….!

     

    Share