Tag Archives: எம்.ஜெயராமசர்மா

மங்கலம் தரும் பொங்கலோ பொங்கல்!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  முன்னாள் தமிழ்மொழி கல்வி இயக்குநர் மெல்பேண், ஆஸ்திரேலியா. “தை பிறந்தால் வழிபிறக்கும்” என்று தமிழர்கள் சொல்லுவது வழக்கமாகும். புலம் பெயர்ந்த நாட்டினில் வாழுகின்ற எங்களின் பிள்ளைகளுக்கு இந்த மொழியின் அர்த்தம் என்னவென்று தெரியவே மாட்டாது. அவர்கள் தையைப் பற்றியோ அல்லது தையில் வருகின்ற பொங்கலைப் பற்றியோ எண்ணிப் பார்ப்பதே இல்லை. வயது வந்தவர்களான நாங்கள்தான் வருஷா வருஷம் தவறாமல் பொங்கலைப் பொங்கி வருகின்றோம். நாங்கள் பொங்கலைப் பொங்கி மகிழ்வது முக்கியம் தான். அதே வேளை எங்களின் பிள்ளைகளுக்கும் பொங்கலைப் பற்றி ...

Read More »

பலவடிவில் கூட்டம் !

மகாதேவஐயர் ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரியுதொரு கூட்டம் பொய்பேசி புழுகுரைத்து நிற்குதொரு கூட்டம் வாழவிடா வழிதேடி வதைக்குதொரு கூட்டம் வையகத்தில் நிறைந்திருக்கு வகைவகையாய் கூட்டம் தாயிடத்துப் பரிவுகொளா தானுமொரு கூட்டம் தள்ளாடும் முதுமைதனைத் தவிர்க்குமொரு கூட்டம் நீதிநெறி தனையொதுக்கி நிற்குமொரு கூட்டம் நீள்புவியில் இப்படியே நிறைந்திருக்கு கூட்டம் ! கடவுளில்லை என்றுரைத்துக் கட்சிகூட்டும் கூட்டம் கடமை செய்வார் கழுத்தறுக்கக் காத்திருக்கும் கூட்டம் தனியுடமை என்றுரைத்துத் தான்பிடுங்கும் கூட்டம் சகலமுமே தெரியுமென்று சவால்விடுக்கும் கூட்டம் தத்துவத்தைச் சமயத்தைச் சாடிநிற்கும் கூட்டம் ...

Read More »

சிக்கெனப் பிடிப்போம் வாரீர்

-மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா கந்தனை நினைத்தால் நெஞ்சில் கவலைகள் பறந்தே போகும் வந்திடும் வினைகள் யாவும் வழியிலே மறைந்தே போகும் அந்தமில் இன்பம் வந்து ஆனந்தம் தந்தே நிற்கும் கந்தவேள் பாதம் தன்னை கட்டியே அணைத்து நிற்போம் ! சூரர்கள் போல எம்மை சூழ்ந்திடும் பகைமை எல்லாம் வேலவன் பெயரைக் கேட்டால் விரைவிலே ஒழிந்து போகும் வாழ்விலே வசந்தம் வீச வள்ளி மணாளன் தன்னை நாளெலாம் தொழுது நிற்போம் நம்வாழ்வு உய்யும் அன்றோ! சேவலாய் மயிலும் ஆக்கி சிந்தையை ...

Read More »

சூறையாடி விட்டார்கள் !

மகாதேவஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண் ….. அவுஸ்திரேலியா யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதை வெளிப்படுத்தும் இதயத்தின் குமுறல் ஏடுகளாய் இருந்தவற்றை எப்படியோ கண்டெடெடுத்து நாடெல்லாம் நன்மைபெற நல்ல்லுளங்கள் விரும்பியதால் ஓடாக உழைத்துநிதம் உருப்படியாய்ச் செய்தமையே வாடாது நிற்கின்ற வகைவகையாம் நூல்களெலாம் எத்தனைபேர் உழைப்பினிலே இங்குவந்த புத்தகங்கள், எத்தனையோ மேதைகளை எமக்களித்து நின்றதுவே! நித்தமும்நாம் படிப்பதற்குப் புத்தகமாய் இருக்குமவை எத்தனையோ சந்ததிகட் கிருக்கின்ற பொக்கிஷமாம் நூல்நிலையம் இல்லையென்றால் நுண்ணறிவு வளராது நூல்நிலையம் அருகிருந்தால் கண்டிடலாம் அறிவையெலாம் பாவலரும் நாவலரும் பலபேரும் உருவாக நூல்நிலையம் காரணமாய் அமைந்ததனை அறிந்திடுவோம் ...

Read More »

அனைவருமே ஆசை கொள்வோம்!

-மகாதேவஐயர் ஜெயராமசர்மா… மெல்பேண் ….. அவுஸ்திரேலியா பணத்தோடு வாழுகிறார் படிப்போடு வாழுகிறார் பட்டம்பல பெறுவதற்கும் திட்டம்பல போடுகிறார் இனம்பற்றி பேசுகிறார் எங்கள்மொழி என்கின்றார் ஈவிரக்கம் தனையவரும் எண்ணிவிட மறுக்கின்றார்! மாநாடு பலசெய்வார் மலர்கள் வெளியிடுவார் மேடைதனில் ஏறிநின்று விறுவிறுப்பாய் பேசிடுவார் உலகமதில் உன்னதத்தை உருவாக்க வேண்டுமென்பார் உள்ளமதில் உண்மைதனை இருத்திவிட மறுக்கின்றார்! நீதிநூல்கள் அத்தனையும் பாடமாக்கி வைத்துள்ளார் பாடலெலாம் பக்குவமாய் பலருக்கும் காட்டிடுவார் ஆதிமுதல் அந்தம்வரை அறங்காக்க வேண்டுமென்பார் அழுதுநிற்பார் துயரகற்ற அவரெண்ண மறுக்கின்றார்! எத்தனைதான் படிப்பிருந்தும் எவ்வளவு பணமிருந்தும் எண்ணமதில் நல்நினைப்பு இல்லாமல் ...

Read More »

காதல் எனும் கனியமுது !

மகாதேவஐயர் ஜெயராமசர்மா ….. மெல்பேண் .. அவுஸ்திரேலியா இளமையிலும் காதல் வரும் முதுமையிலும் காதல் வரும் எக்காதல் இனிமை என்று எல்லோரும் எண்ணி நிற்பர் இளமையிலே வரும் காதல் முதுமையிலும் தொடர்ந்துவரின் இனிமைநிறை காதலென எல்லோரும் மனதில் வைப்போம் காதலுக்குக் கண்ணும் இல்லை காதலுக்குப் பேதம் இல்லை காதல் என்னும் உணர்வுதனைக் கடவுள் தந்தார் பரிசெனவே! காதலிலே மோதல் வரும் காதலிலே பிரிவும் வரும் என்றாலும் காதல் எனில் எல்லோரும் விரும்பி நிற்பார்! காதல் என்று சொன்னவுடன் கவலை எல்லாம் ஓடிவிடும் கனவுபல தோன்றி ...

Read More »

நன்றாகப் பொங்கிடுவோம்

எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா மனங்கவரும் மார்கழியில் மகத்தான நாட்கள்வரும் இந்துக்கள் கிறீத்தவர்கள் எல்லோரும் பங்குகொள்வர் வைஷ்ணவமும் சைவமும் வாழ்த்திநிற்கும் திருவெம்பா மார்கழியின் முக்கியமாய் மனமாசை அகற்றிநிற்கும் ! ஒளிவிழா எனும்பெயரால் உத்தமராம் யேசுபிரான் வழிநிற்போர் அனைவருமே வாழ்த்துக்கூறி நிற்பார்கள் பீடுடைய மாதமாய் மார்கழியும் அமைந்துதுநின்று பெருமகிழ்சி வருவதற்கு தைதனக்கு வழிகொடுக்கும் ! தைபிறந்தால் வழிபிறக்கும் என்கின்ற நம்பிக்கை தளர்வுநிலை அகன்றுவிட தானுரமாய் அமைந்திருக்கு பொங்கலென்னும் மங்கலத்தை பொறுப்புடனே தருகின்ற எங்கள்தையை எல்லோரும் இன்பமுடன் வரவேற்போம் ! புலம்பெயர்ந்த நாட்டினிலும் ...

Read More »

திருத்திடு கந்தப் பெருமானே !

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் … அவுஸ்திரேலியா   மனம் உருகும் அடியார்கள் தினமும் உனைக் காண மரகத மயிலேறும் பெருமானே அரு உருவமாய் இருந்து திரு உருவமாய் வந்த அழகு வடிவேலப் பெருமானே கருவிலே வளரும் பிள்ளை உனது நினைவிலே வளர கருணையே தருவாய் கந்தபெருமானே தெரு எலாம் திரியும் சிறு மதி படைத்தோரை திருத்திடு கந்தப் பெருமானே !

Read More »

இன்னருளைச் சொரிந்துவிடு

  மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா பழனி மலை மீதமர்ந்தாய் பாவம் தனைப் போக்கிவிடு உளம் இரங்கி கேட்கின்றோம் உன் முகத்தைக் காட்டிவிடு தனம் எமக்குத் தந்தாலும் தயாளம் அதில் சேர்த்துவிடு உதவி விடும் உயர்குணத்தை உளம் இருக்க அருள்புரிவாய் கெட்ட எண்ணம் வாராமல் சஷ்டி தனைப் பிடிக்கின்றோம் குட்டி எங்கள் தலைமீது குமரா அருள் சொரிந்துவிடு நிட்டூரம் செய்து நிற்கும் துட்டர் எலாம் திருந்துதற்கு இஷ்டமுடன் உமை மைந்தா இன்னருளைச் சொரிந்து விடு  

Read More »

எல்லோரும் பணிந்து நிற்போம் !

  மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண்…. அவுஸ்திரேலியா கருணைகூர் முகங்கள் கொண்ட கந்தனை நினைக்கும் இந்த பெருமையாம் விரதம் தன்னை உரிமையாய் எண்ணி நிற்கும் அடியவர் ஒன்று கூடி அன்னத்தை ஒறுத்து நிற்பர் அவருளம் புகுந்து கந்தன் அருளொளி காட்டி நிற்பான் ! கந்தனை நினைக்கும் இந்த சஷ்டியாம் விரதம் தன்னை சிந்தையில் இருத்தி வைத்து சீலமாய் இருக்கும் மாந்தர் வந்திடும் வினைகள் எல்லாம் மறைந்துமே போகச் செய்ய எந்தையாம் கந்தன் அப்பன் என்றுமே உதவி நிற்பான் ! ஆணவம் என்னும் மாயை சூரனாய் ...

Read More »

காதலுடன் கைதொழுவோம்!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா அன்னையும் தந்தையும் ஆற்றிய பெருந்தவத்தால் அகிலத்தில் நம்பிறப்பு அற்புதமாய் ஆகியது அரவணைத்துப் பாலூட்டி அன்புதனை காட்டியவர் அறிவுடனே வாழ்வதற்கு ஆசானைக் காட்டினரே ஆசானின் அரவணைப்பால் அசடெம்மை விட்டகன்று ஆண்டவனின் நினைப்புடனே அருங்கல்வி அமைந்ததுவே ஆண்டவனை நினைக்கும்படி அக்கல்வி அளித்துநின்ற ஆசானை வாழ்நாளில் அகமதிலே இருத்திவைப்போம் எல்லோர்க்கும் ஆசானே ஏணியாய் இருந்திடுவார் வல்லவராய் நல்லவராய் வளர்ப்பதும் ஆசானே பொல்லாத குணமதனை போக்குவதும் ஆசானே நல்லபல சேதிகளை நல்குவதும் ஆசானே நல்லாசன் வாய்த்துவிடல் நாம்செய்யும் பாக்கியமே நம்வாழ்வின் ...

Read More »

பொலிவாக அமையும் அன்றோ !

  எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா  மகிழ் வோடு வாழுதற்கு வழிகள் பல இருக்கிறது அவை மனதில் எடுக்காமல் அல்லல் பட்டு நிற்கின்றோம் கோபம் எனும் குணமதனை குறைத்து நாம் வாழ்ந்தாலே குவலயத்தில் எம் வாழ்வு குதுகலமாய் அமையும் அன்றோ ! கோபமது வந்து விடின் குறை சொல்லத் தொடங்கிடுவோம் கோபமது மேல் எழுந்தால் கொலை கூடச் செய்திடுவோம் கோபம் எனும் நெருப்பாலே குடும்பம் கூட பொசுங்கிவிடும் ஆதலினால் கோபம் அதை அனைவருமே ஒதுக்கி வைப்போம் ! கோபம் அது வந்துவிடின் ...

Read More »

காத்துநிற்போம் !

  மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா வெள்ளம் ஒருபக்கம் விபத்துகள் ஒருபக்கம் தெள்ளுதமிழ் நல்லறிஞர் பிரிவுத்துயர் ஒருபக்கம் நல்லநட்பு என்றுசொல்லி நம்பவைத்த நாடுகளும் நரிகளாய் மாறிநின்று நாசம்செய்யும் ஒருபக்கம் உள்ளூரில் அரசியலார் ஊழல்கொள்ளை ஒருபக்கம் உயர்கல்வி உடையாரின் உன்மத்தம் ஒருபக்கம் நல்லபல இருக்கின்ற நற்பாரத நாட்டினிலே தொல்லை எலாம் தொலைந்து நிற்க சுதந்திர நாள் வேண்டி நிற்போம் ! பாரதத்தாய் மடிமீது பலதலைவர் இருந்தார்கள் பாரதத்தாய் துயர்துடைக்க பாடுபட்டார் பலவகையில் பாரதத்தாய் கண்ணீரை பார்ப்பதற்கு விரும்பவில்லை பாரதத்தாய் முகமலர்ச்சி பார்ப்பதற்கே ...

Read More »

அவுஸ்திரேலியாவில் தமிழரது வாழ்க்கை முறை

ம. ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா முன்னாள் தமிழ் கல்வி இயக்குநர் M.Phil , Dip.in Ed , Dip.in.Soc , SLEAS அவுஸ்திரேலியா பல்லின கலாசாரம் கொண்ட நாடாக விளங்குகிறது .இங்கு வந்த தமிழர்கள் தமக்குரிய வாழ்க்கை முறையினத் தேர்ந்தெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இங்கே இந்தியாவில் இருந்து வந்த தமிழர்களும், இலங்கைத் தமிழர்களும், சிங்கப்பூர், மலேசியத் தமிழர்களும் வாழ்கிறார்கள்.இவர்களுக்குள் பெரும்பாலும் மொழியும், சமயமும், பாலமாக இருப்பதனையே முக்கியமான தொடர்பென்று கருதலாம். இலங்கையில் இருந்து வந்த தமிழர்களிலே பல பிரிவுகளும் காணப்படுகிறது.ஆதாவது உயர் ...

Read More »