இன்னருளைச் சொரிந்துவிடு

 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண் .. அவுஸ்திரேலியா

பழனி மலை மீதமர்ந்தாய்
பாவம் தனைப் போக்கிவிடு
உளம் இரங்கி கேட்கின்றோம்
உன் முகத்தைக் காட்டிவிடு
தனம் எமக்குத் தந்தாலும்
தயாளம் அதில் சேர்த்துவிடு
உதவி விடும் உயர்குணத்தை
உளம் இருக்க அருள்புரிவாய்

கெட்ட எண்ணம் வாராமல்
சஷ்டி தனைப் பிடிக்கின்றோம்
குட்டி எங்கள் தலைமீது
குமரா அருள் சொரிந்துவிடு
நிட்டூரம் செய்து நிற்கும்
துட்டர் எலாம் திருந்துதற்கு
இஷ்டமுடன் உமை மைந்தா
இன்னருளைச் சொரிந்து விடு

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க