”ஆடிவரும் பூரம் அவதரித்து, மார்கழியில்
பாடிவரும் ஆண்டாளின் பாசுரத்தை -நாடிவரும்
வைகுண்டம் விட்டந்த வில்லிபுதூர் வாழ்வுக்கு
பைகொண்ட பாம்பணைவோன் பார்….கிரேசி மோகன்….!
Blog
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ‘ பாரதி விழா ’
ஸ்டாலின் குணசேகரன்
*************************************************************************************************************************
மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ‘ பாரதி விழா ’
*************************************************************************************************************************
மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ஈரோடு நகரில் ஆண்டுதோறும் பாரதி பிறந்தநாளாகிய டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி மாநிலம் தழுவிய முறையில் ‘ பாரதி விழா ’ நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டின் ‘ பாரதி விழா ’ 11.12.2017 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு ஈரோடு – கொங்கு கலையரங்கில் நடைபெற்றது. பேரவை
நடத்துகிற பாரதி விழாவில் ஆண்டுதோறும் மூன்று முக்கிய அம்சங்கள் இடம் பெறுகின்றன :
1) பாரதி 1921 ஆம் ஆண்டு இறுதியாக உரை நிகழ்த்திய ஈரோடு – கருங்கல்பாளையம் நூலகத்திலிருந்து பாரதி விழா நடைபெறும் அரங்கம் வரை, பாரதியின் ஈரோடு வருகையை நினைவுகூரும் பொருட்டும் அவ்வருகையின் போது அவர் நிகழ்த்திய ’மனிதருக்கு மரணமில்லை, ‘இந்தியாவின் எதிர்கால நிலை ‘ என்ற தலைப்புகளிலான இறுதிப் பேருரைகளை நினைவுகூரும் விதத்திலும் ’ பாரதி ஜோதி ‘ ஏந்திய வண்ணம் பேரவையின் தன்னார்வலர்களாக விளங்கும் 100 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் அணிவகுப்பு…
2) தமிழகத்தின் தலைசிறந்த ஆளுமை ஒருவருக்கு ‘ பாரதி விருது ’ வழங்குதல்…
3) காலமாகிவிட்ட நாட்டுக்குழைத்த நல்லோர் ஒருவரின் திருவுருவப்படத் திறப்பு…
மாலை 4.30 மணிக்கு ‘ பாரதி ஜோதி ‘ கருங்கல்பாளையம் நூலகத்தில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் வி.ஜீவகுமாரன் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது. இவரின் உரைக்குப் பின்பு அணிவகுப்பு தொடங்கியது.
இந்த ஆண்டின் ‘ பாரதி விருது ‘ தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன் அவர்களுக்கு நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர், கல்வியாளர் – சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்களால் விழாமேடையில் வழங்கப்பட்டது.
கவிஞர் தமிழ்ஒளியின் திருவுருவப்படத்தை பொதுவுடைமை இயக்கத் தலைவர் திரு ஆர் நல்லகண்ணு அவர்கள் திறந்து வைத்தார்.
முன்னதாக மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் விழா அறிமுகவுரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு தேசிய நலவிழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் பத்மஸ்ரீ எஸ்கேஎம். மயிலானந்தன் அவர்கள் தலைமையேற்றார்
பேரவையின் செயலாளர் ந.அன்பரசு வரவேற்புரையாற்றினார். நிறைவாக பொருளாளர் க.அழகன் நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்வில் பல கல்வி நிலையங்களைச் சார்ந்த, மக்கள் சிந்தனைப் பேரவையின் உறுப்பினர்களாகத் திகழும் மாணவ – மாணவியர் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர்.
ஊர்ப் பிரமுகர்கள், கல்வியாளர்கள் பல்வேறு பொதுநல அமைப்புகளின் பொறுப்பாளர்கள், பெண்கள் என பொதுமக்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களின் உரைகள், எழுச்சியுடன் பங்கேற்ற பார்வையாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக அமைந்தது.
மிகச்சரியாக மாலை 6 மணிக்குத் தொடங்கிய கூட்டம், முன் கூட்டியே அறிவித்திருந்தவாறு இரவு 8.30 மணிக்கு நிறைவு பெற்றது.
விழா அரங்கில், பேரவையின் சார்பில் ‘ பாரதி விழா சிறப்பு நூலரங்கம் ’ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கவிஞர் தமிழ்ஒளி, சிலம்பொலி சு.செல்லப்பன், பொற்கோ, ஆர்.நல்லகண்ணு ஆகியோரின் நூல்களோடு மொழி, இலக்கியம், கவிதை மற்றும் தமிழாய்வு சார்ந்த ஏராளமான நூல்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன.
-
பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூமியின் மர்மமான முணுமுணுப்பு ஓசை நாதம் முதன்முதல் கடலடியில் பதிவானது
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா++++++++++++++++++++++++++++++++++++++++
அண்டவெளிக் களிமண்ணை
ஆழியில் சுற்றிக்
காலக் குயவன் கைகள்
முடுக்கிய பம்பரக் கோளம் !
உடுக்க டித்துக் குலுக்கும் மேளம் !
பூமி எங்கிலும் கடலடியில்
பொங்கிடும் நாதம் !
ஏழிசை அல்ல, ஓம் எனும் ஓசை !
முதன்முறைப் பதிவு !
இயற்கை அன்னை வீணை நாதம்
மயக்குது மாந்தரை !
துளையிட்டுக் கேட்க பூமிக்குள்
நுழைவது யார் ?
கடற்தட்டுகள் துடித்தால்
சுனாமி மேளம் !
புவித் தட்டுகள் மோதினால்
பூகம்ப நடனம் !
குடற் தட்டு நெளிந்தால்
நிலக் குலுக்கல் !
சூழ்வெளி மாசாக
தாரணி வயிற்றுக் குள்ளும்
ஆறாத தீக்காயம் !++++++++++++
+++++++++++++பூமியின் மர்மமான முணுமுணுப்பு ஓசையை முதன்முதல் கடலடியில் பதிவு செய்தார்.1959 ஆம் ஆண்டில் பூமியின் மர்ம ஓசை அறியப்பட்டு 1998 ஆம் ஆண்டு உறுதியாகி, 2017 டிசம்பர் மாதம் முதன்முதல் பதிவு செய்யப் பட்டுள்ளது ஒரு வரலாற்று மைல் கல். அது பூமி எழுப்பும் தணிவு அதிர்வு முணுமுணுப்பு ஓசை [Low Frequency Drone]. புவித்தட்டுகள் மென்மைப் பெயர்ச்சியால் உண்டாகும் மிகச் சிறிய மெல்லோசை அவை [Subtle Seismic Movements]. அவை நில நடுக்கம் தூண்டாதவை. கருவிகள் மட்டுமே அவற்றை அளக்கவோ, பதிவு செய்யவோ முடியும்.பூமி முணுமுணுப்பு ஓசை உண்டாக்குகிறது. தொடர்ந்து எழுப்புகிறது. இப்போது முதன்முதலாக, விஞ்ஞானிகள் கடல் அடித்தளத்திலிருந்து அவற்றை அளந்து பதிவு செய்துள்ளார். பூகம்பங்கள் போல் அவை உணரப்படா. ஆனால் பேரளவு எண்ணிக்கையில் பூகம்பங்கள் பூமியில் எழுகின்றன. யூஎஸ்ஜியெஸ் [(USGS) U.S. Geological Survey] அறிவிப்பின்படி ஆண்டுக்குப் பூமியில் 500,000 நிலநடுக்கங்கள் நேர்கின்றன. அவற்றில் உணரக் கூடியவை : 100,000. அந்த எண்ணிக்கையில் பேரிடர் விளைவிப்பவை : 100 பூகம்பங்கள்.
Earth’s Mysterious Humming Recorded under Seafor the First Time1990 ஆம் ஆண்டு முதல் விஞ்ஞான ஆய்வாளர், பூமி தொடர்ந்து சுய ஆட்டங்களில் [Free Oscillations] மின்மினி நடுக்க நிகழ்ச்சிகள் [Microseismic Shakings] உண்டாக்கி வருவதை நன்கு அறிவார். அந்த சுய ஆட்டங்களின் மெல்லோசை முணுமுணுப்புகளை உலகில் எங்கினும் நிலநடுக்க மானிகள் [Seismometers மூலம் உணரப் பட்டுப் பதிவு செய்ய முடியும் என்று புதிய விஞ்ஞான ஆய்வுகள் அறிவிக்கின்றன. பூமியின் முணுமுணுப்பைக் கடலடியில் பதிவு செய்வதுபோல், தரை மீதும் செய்ய முடியும்.சமீபத்தில் விஞ்ஞானிகள் கடற்கோள நிலநடுக்க மானிகளைப் [Spherical Ocean Seismometers] பயன்படுத்தி இந்து மாக்கடல் அடித்தளம் புகுந்து, பூமியின் முணுமுணுப்பைப் பதிவு செய்துள்ளார். 2012 செப்டம்பர் முதல் 2013 நவம்பர் வரை ஆய்வாளர் 57 சுய நுழைவு நிலநடுக்க மானிகளை இறக்கி [Free Fall Seismometers] மடகாஸ்கர் தீவுக்குக் கிழக்கே உள்ள ரீயூனியன் தீவைச் [La Reunion Island] சுற்றிலும் 2000 சதுர மீட்டர் [770 சதுர மைல்] பரப்பில் பூமி முணுமுணுப்பை பதிவு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அங்கே உச்ச அளவு முணுமுணுப்பு பதிவானது என்று தெரிய வருகிறது. அதுபோல் அல்ஜீரியா தளப் பரப்பில் பதிவு செய்ததாகவும் அறியப் படுகிறது. பூமியின் முணுமுணுப்பு ஓசை அளவு : 2.9 – 4.5 millihertz இடைப்பட்டது. மனிதர் கேட்கும் அளவு : 20 hertz. அதாவது பூமியின் மர்ம ஓசை 10,000 மடங்கு தணிவானது !+++++++++++++++++++
++++++++++
“ஹோரேசியோ ! கற்பனையில் தோன்றிய உனது வேதாந்தக் கருத்துக்களை விட மேம்பட்ட தகவல் பூமியிலும் விண்ணுலகிலும் நிரம்ப உள்ளன !”
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஹாம்லட் நாடகம்) (1564-1616)

‘எனக்கு முன்பு அண்ட வெளியில் மனிதர் தேடிய இடத்தைத் தாண்டி, அதற்கும் அப்பால் என் கண்கள் பிரபஞ்சத்தை ஆழமாய் நோக்கிச் சென்றன.’
வில்லியம் ஹெர்ச்செல் (1738-1822)
உலகின் கண்களுக்கு நான் எப்படி தோன்றுகிறேன் என்பது எனக்குத் தெரியாது. கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன், இன்றோ நாளையோ ஏதோ ஓர் அபூர்வக் கூழாங்கல் அல்லது எழிற் சிப்பியைக் கண்டெடுப்பது போல எனக்குத் தெரிகிறது. ஆனால் கண்டு பிடிக்க முடியாதபடி மாபெரும் உண்மைக் கடல் என் கண்முன்னே பரந்து கிடக்கிறது.
ஸர் ஐஸக் நியூட்டன் (1642-1727)
அகிலத் தூசி சேர்ந்து துகளாகி, துகள்கள் மண்ணாகி, மண் கட்டியாகி உருண்டு சிறு கோளாகி முடிவாக ஓர் பெரும் அண்டகோள் ஆனது ! இந்த “ஈர்ப்புத் திரட்சி முறையில்” (Accretion Process) 6 மைல் (10 கி.மீ.) விட்ட அளவுள்ள ஒரு சிறு பூமி உண்டாகச் சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் ஆகலாம் !
ஆட்டோ ஸ்மித் (Otto Schmidt) (1944)
அண்டக்கோள் (Planet) என்பது என்ன ?ஈர்ப்புத் திரட்சியால் (Accretion Process) சூப்பர்நோவாவின் வாயுப் பிண்டத்தை இழுத்துக் கோள வடிவமாகும் ஓர் அண்டம். ஒரு கோள் தன்னச்சில் சுழன்று முக்கியமாக ஒரு சுயவொளி விண்மீனை வட்ட வீதிலோ அல்லது நீள்வட்ட வீதிலோ சுற்றும். தனது சுற்றுவீதியில் குறுக்கிட்ட விண்கற்கள், வால்மீன்கள், எரி விண்மீன்கள், விண்தூசிகள் ஆகியவற்றைப் பற்றிக் கொள்ளும் திறமுடையது. அண்டக்கோள் ஓர் ஈர்ப்புக் கிணறு (Gravity Well). சுயவொளி விண்மீன் உண்டாக்கும் பிணைப்புச் சக்தியால் உற்பத்தியான மூலகங்களை இழுத்துக் கொள்ளும். பொதுவாக ஒரு காந்த மண்டலமும் கொண்டது.
பூகோளத்தின் புதிரான மேற்தட்டு, நடுத்தட்டு, உட்கரு
விஞ்ஞானிகளுக்கு இன்றும் விடுவிக்க முடியாத ஒரு பெரும் புதிராக இருந்து வருவது பூகோளத்தின் கொந்தளிக்கும் விந்தையான உட்புற அமைப்பு ! ஆழமாய்த் துளையிட்டுப் பூமியின் மையத்தைக் கண்ணாலும், கருவியாலும் நோக்க முடியாது ! பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி சேயாகப் பிறந்த காலம் முதல் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. முதல் பில்லியன் ஆண்டுகளில் உருவான அதன் மேற்தட்டு, நடுத்தட்டு, உட்கரு (Crust, Mantle & Core) மூன்றும் மென்மேலும் விருத்தி அடைந்துள்ளதாக ஊகிக்கப்படுகிறது. ஆனால் அவை எப்படி உருவாயின என்பதற்கு உள்ள விஞ்ஞான ஆதாரங்கள் மிகச் சொற்பம். ஒருவேளை ஆரம்பித்திலே ஓரினச் சீர்மைத் திணிவு நிறை (Homogeneous Mass) ஓரளவு அல்லது பூராவும் உருகி ஈர்ப்புச் சக்தி கனமான பிண்டத்தில் பகுதியைத் திரவமாகவும், பகுதியைத் திடவமாகவும் (Partly Liquid & Partly Solid) திரட்டி யிருக்கலாம் ! திடவப் பிண்டம் (Solid Matter) உட்கருவா கவும், அதைப் போர்த்தும் சூடான திரவப் பிண்டம் (Liquid Hot Matter) நடுத்தட்டாகவும் அமைந்து விட்டன என்று கருதலாம் ! நடுத்தட்டுக்கு மேல் மெல்லியதான மேற்தட்டு பரவி 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே நிலையாகப் போனது ! அதற்குப் பிறகும் நீண்ட காலமாக மாறுபாடாகி சிக்கலான முறையில் மேற்தட்டு வடிவாகியுள்ளது.

4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நமது சூரிய குடும்பம் தோன்றியது என்று கணிக்கப் படுகிறது ! சுமார் 7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பூமியின் பெரும்பான்மையான திணிவுப் பிண்டம் (Matter) சூபர்நோவா (Supernova) மூலமும் விண்மீன்களின் கொடையாலும் சேர்ந்தது என்றும் அறியப்படுகிறது. அதனால் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பூமியின் முழு வடிவம் உருவாகி இருக்க வேண்டும் என்று யூகிக்கப் படுகிறது. அதிலிருந்து பூகோளம் பல்வேறு முறைகளில் மாறியுள்ளது. ஆரம்பத்தில் பூமி உருவாகும் போது வெப்பத்தாலும், ஈர்ப்புச் சக்தியாலும் கொந்தளிப்புச் சேமிப்புடன் திரண்ட வடிவம் கரடுமுரடாக உருவானது. பரிதி மண்டலத்தின் மற்ற கோள்கள் உண்டான அதே சம காலத்தில்தான் பூகோளமும் சூரியனை மையமாக வைத்துச் சுற்றிக் கொண்டு உருவானது. அனுமானிக்கப் பட்ட கோள வடிவான சூப்பர்நோவா போன்ற ஒரு பேரண்டம் (Large Body Like Supernova) ஆப்பம் போல் சுற்றிக் கோள்கள் தோன்றின என்னும் கோட்பாடு ஒப்புக்கொள்ளப் பட்டிருக்கிறது. முதலில் குளிர்ந்த சேய் பூமி (Proto Baby Earth) விரைவாகச் சூடாகி 100 மில்லியன் ஆண்டுகளில் அதன் உலோக உட்கரு (Metallic Core) உருவாகி யிருக்கலாம். ஆரம்ப காலத்தில் சேய் பூமியை அடுத்துத் தொடர்ந்து ஏராளமான விண்கற்கள், வால்மீன்கள், எரியும் விண்மீன்கள் (Asteroids, Comets & Meteorites) தாக்கின ! பேபி பூமியின் மேல் புறத்தில் கொந்தளிக்கும் திரவம் (Exterior Molten Skin) இருந்திருக்கலாம், அந்த கனல் திரவம் உஷ்ணம் தணிந்து பிறகு மேல்தட்டு (Crest) உண்டாகி இருக்கலாம்.

பூகோள வரலாற்றின் ஆரம்பத்திலே புற அண்டம் ஒன்று பூமியைத் தாக்கி அதன் துணைக்கோள் நிலவு தோன்றியது என்று கருதப்படுகிறது. இரண்டாம் முறைத் தாக்குதலில் பூமியின் மேற்தட்டு (Crest) அழிந்து போனது. 3.8 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு தற்காலம் வரைப் பிழைத்த பாறைகள் பஸால்ட் மூடிய ஸிலிகா பாறை மேற்தட்டாக (Crest of Silicic Rocks Embedded in Basaltic layer) உலகம் பூராவும் படிந்துள்ளன ! அப்போதுதான் “மேலெழுச்சி பூதட்டு நகர்ச்சி” (Convection-Driven Plate Tectonics) உந்தப்பட்டு பேபிக் கண்டங்கள் (Proto-Continents) நகரத் தொடங்கி இருக்க வேண்டும். ஆரம்ப காலத்துப் பூகோளத்தில் தோன்றிய வாயுச் சூழ்வெளியில் பெரும்பான்மையாக நைடிரஜன், கார்பன் டையாக்ஸைடு அம்மோனியா, மீதேன், சிறிதளவு நீரும் இருந்தன. இவை யாவும் இரசாயனச் சேர்க்கையில் பின்னால் ஆர்கானிக் மூலக்கூறுகள் ஆயின. 3.85 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அவற்றிலிருந்துதான் பூர்வீக ஒற்றைச் செல் பாக்டீரியா (Primitive One-Celled Bacteria) உற்பத்தி யானது. அதன் பின் உயிரின ஜந்துகள் பெருகி சூரிய ஒளிச்சேர்ப்பு முறையால் பேரளவு ஆக்ஸிஜன் சூழ்வெளியில் பெருக ஆரம்பித்தது.
பூமியின் உள்ளமைப்புத் தோற்றம் !பூமியின் சிக்கலான உள்ளமைப்பைப் பொதுவாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். மற்றும் சில உட்பிரிவுகளோடு ஐந்து பகுதிகளாக வகுக்கலாம். மேற்தட்டு, மேல் நடுத்தட்டு, கீழ் நடுத்தெட்டு, உட்கரு, புறக்கரு. (Crust, Upper Mantle, Lower Mantle, Outer Core & Inner Core) என்று ஐந்து பகுதிகளாகப் பாகம்படும்.
1. மேற்தட்டின் தடிப்பு மெல்லியது. பூமியில் 20 மைல் (32 கி.மீ) ஆழத்திலிருந்து ஆரம்பித்து இமயமலை உச்சி வரை உயர்ந்து மேடு பள்ளமாய் இடத்துக்கு இடம் மிகவும் மாறுபடுகிறது. காண்டங்களில் 5 மைல் (8 கி.மீ.) ஆழத்தில் பாறையாயும் (Granite), கடலுக்குக் கீழ் பஸால்டாகவும் (Basaltic) உள்ளன. மேற்தட்டு பலதடவை வெப்பத்தால் அழிந்து மீண்டும் உருவானது என்று கருதப்படுகிறது. கடுமையான சூரிய உஷ்ணத்தால் மேற்தட்டு உருகிச் சிதைந்தால் அதன் மீது வாழும் உயிரினங்கள் அனைத்தும் மாண்டு போகலாம். பூமியின் வாயுச் சூழ்வெளி குடை பிடித்து சூரியனின் உக்கிரக் கனல் மேற்தட்டைப் பாதிக்காமல் பாதுகாக்கிறது !
2. மேற்தட்டுக்குக் கீழாக 375 மைல் (600 கி.மீ) ஆழம் வரை இருப்பதை மேல் நடுத்தட்டு என்ற பெயரில் குறிப்பிட்டு அதை மேலரங்கம், கீழரங்கம் (Upper Zone & Lower Zone) என்று இரண்டாக வெவ்வேறு P-அலை வேகத்தில் பிரிவு செய்யப்படுகிறது.
3. கீழ் நடுத்தட்டு பூமியிலிருந்து 1800 மைல் (2900 கி.மீ) ஆழத்தில் செல்கிறது. மேல் நடுத்தட்டு, கீழ் நடுத்தட்டு இரண்டிலும் தாது மூலகப் பாறை (Peridotite – Mineral Rock) நிரம்பியுள்ளது.4. புறக்கரு பெரும்பான்மையாக திரவ இரும்பு, நிக்கல் உலோகத்தைக் கொண்டது. இந்த திரவ அரங்கம் 3200 மைல் (5120 கி.மீ.) ஆழம் வரைச் செல்வது. இந்த அரங்கத்தில் மேலெழுச்சிக் கொந்தளிப் போட்டம் (Dynamo Action of Convection Currents) உள்ளதால் பூமியின் காந்த மண்டல (Earth’s Magnetic Field) விரிப்புக்கு ஏற்புடையதாகிறது.
5. உட்கரு 800 மைல் (1300 கி.மீ) விட்டமுள்ள ஓர் உலோகத் திடக் கோளம் (Solid Metal Globe) ! ஈர்ப்புச் சக்தியால் அங்குள்ள அழுத்தம் : பூதளத்தில் உள்ள அழுத்தத்தைப் போல் மூன்றரை மில்லியன் மடங்கு (35000 kg/mm^2) மிகையானது !
ஓய்வில்லாமல் உப்பிடும் இன்றைய பூகோளம் !பல மில்லியன் ஆண்டுகளாக படிப்படியாக மிக மெதுவாகப் பூகோளத்தின் பூத வடிவம் மாறி வருகிறது ! 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஆரம்ப காலத்து விட்டம் 4000 மைல் (6600 கி.மீ.). 3.5 பில்லியன் ஆண்டில் அதன் விட்டம் 4800 மைலாக (8000 கி.மீ.) விரிந்தது. 2.8 பில்லியன் ஆண்டில் 5280 மைல் (8800 கி.மீ) விட்டமும், 600 மில்லியன் ஆண்டுகளில் 7200 மைல் (12000 கி,.மீ.) விட்டமும் இருந்து, இப்போது 7850 மைல் (12750 கி.மீ.) விட்டம் கொண்டுள்ளது. பூமியின் பூமத்திய விட்டம் 100 ஆண்டுகளுக்கு 5 அங்குலம் வீதம் நீள்கிறது ! பூதள உள்ளமைப்பில் உள்ள உலோகக் கனல் திரவம் கொந்தளிப்பதால் மேலெழுச்சி ஓட்டங்கள் (Convection Currents) நிகழ்கின்றன ! அந்த ஓட்டமே பூகோளத்தின் உந்துசக்தியாக (Driving Force) மலை மேடுகளை உண்டாக்கியும், கண்ட நகர்ச்சியைத் (Continentel Movement) தூண்டியும் வருகிறது !

பூமியின் உள்ளமைப்பை மெய்யாக நமக்கு அறிவிப்பவை நேரிடைக் கணிப்பு ஆராய்ச்சிகள் இல்லை ! மாறாக பூமிக்குள் எப்போதாவது ஏற்படும் பூகம்ப நடுக்கத்தின் அதிர்ச்சி அலைகளே (Earthquake Shock Waves) பூமியின் உள்ளமைப்பை மறைமுகமாக நமக்கு அறிவிக்கின்றன ! மனிதரின் நேரிடை அறிவு பூமியின் மேற்தட்டை 5 மைல் (8 கி.மீ.) ஆழ்துளை யிட்டுக் கண்டறிந்தவையே ! நிலவையும், செவ்வாய்க் கோளையும் தெரிந்துள்ள அளவு மனிதன் பூமிக்குக் கீழ் 20 மைல் (33 கி.மீ) ஆழத்தில் உள்ள அமைப்பை அறியக் கூடிய நேரிடைக் கருவிகளை இதுவரைப் படைக்க வில்லை !
சூரியனைக் கோண வட்டத்தில் சுற்றும் பூமியும், நிலவும்பூமியின் கடல் அலைகளில் உயர்ச்சி நிலை, தாழ்ச்சி நிலை (High Tide & Low Tide) எனப்படும் இரண்டையும் நிலவும், பரிதியும் தனியாகவும், நேர்கோட்டில் அமைந்தும் உண்டாக்கும். அப்போது கடல் வெள்ளம் பூமியின் ஒருபுறம் நீளமாகும் போது மறுபுறம் குறுகும். பூமி சூரியனைச் சற்று முட்டை வடிவான வீதியில் சுற்றுகிறது. அதனால் ஒரு சமயம் பூமி தன் சராசரி தூரத்தை விட 1,500,000 மைல் (2,500,000 கி.மீ) விலகிச் செல்கிறது. ஆயினும் பூமி பாதுகாப்பான “உயிர்ச்சாதகக் கோளத்தில்” (Ecosphere) இயங்க முடிகிறது. இந்தப் பாதுகாப்பு வெப்ப அரங்கம் சுக்கிரன் சுற்றுவீதி முதல் செவ்வாய்ச் சுற்றுவீதி வரை நீடிக்கிறது. ஏதாவது இயற்கை விதி மீறி பூமியின் சுற்றுவீதி மாறிப் போய் சூரியனுக்கு அருகில் சென்றாலோ அல்லது விலகிச் சென்றாலோ பேரளவு வெப்ப மாறுதல் உண்டாகி உயிரினமும், பயிரினமும் பேரளவில் பாதிக்கப்படும். விலகிச் சென்றால் பூமியின் கடல் பூராவும் உறைந்து பனிக்கோள் ஆகிவிடும். நெருங்கிச் சென்றால் சுக்கிரனைப் போல் பூமியும் சுடுபாலையாய் ஆகிவிடும் !
பூமியின் சாய்ந்த அச்சுக் கோணம் (23.45 டிகிரி)
பூமி தோன்றிய காலத்தில் புற அண்டம் ஏதோ ஒன்று தாக்கி அதன் சுழல் அச்சு 23.45 டிகிரி சாய்ந்து போனது. அந்த சாய்ந்த அச்சால் பூமிக்குக் காலநிலை (வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம், குளிர் காலம்) மாறுகிறது. இந்த சாய்ந்த அச்சின் கோணம் சுமார் 23.5 டிகிரியில் இம்மியளவு கோணம் கூடியோ அல்லது குன்றியோ பூமி சுற்றினால் காலநிலைக் கோளாறுகள் பேரளவு நேர்ந்து பூமியின் உயிர்னங்களும், பயிரினங்களும் பாதிக்கப்படும். சூடேறும் பூகோளமாய் ஒருபுறத்தில் ஆகும் போது, மறுபுறத்தில் குளிர் நடுங்கும் பனிக் கோளாய் ஆகிவிடும்.

பூமியின் பூதக் காந்த மண்டலம் !
சூரியனின் அசுரத்தனமான கதிர்ப்புயலைப் பாதுகாக்கும் ஒரு கவசமாகப் பூமியின் காந்த மண்டலம் உதவுகிறது. சூரியப் புயலில் அபாயகரமான மரண மின்னியல் கதிர்கள் பூமியை நோக்கி வீசுகின்றன. அவை யாவும் பூமியின் “வான் ஆலன் இரட்டை வளையங் களால்” (Van Allen Belts – Two Bands) தடுக்கப் படுகின்றன. பூமியின் பூர்வீக ஏகக் கண்டம் பாங்கியா (Super-Continent Pangaea) ஆரம்ப காலத்துப் பூகோளத்தில் சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்போதுள்ள தனித்தனிக் கண்டங்கள் (ஆசியா, ஆ·பிரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென்னமெரிக்கா, அண்டார்க்டிகா) எல்லாம் நெருங்கி ஒட்டிக் கொண்டு இருந்தன ! அந்த ஒற்றைப் பெருங் கண்டம் “பாங்கியா பூதக்கண்டம்” (Super-Continent Pangaea) என்று குறிப்பிடப் படுகிறது. 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அவை மெதுவாகப் பிரியத் தொடங்கின ! முதலில் பூதக்கண்டம் வடகோளம் (Laurasia), தென்கோளமாக இரண்டாய்ப் (Gondwana) பிரிந்தது. 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு பாதிகள் மேலும் பிரிந்து தற்போதுள்ள இடத்திற்கு நகர்ந்துள்ளன !
[தொடரும்]தகவல்:
Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.
1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How did the Solar System form ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? (April 2008)
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world (1998)
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 National Geographic Picture of Our Universe By Roy Gallant: (1986)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
17 The Geographical Atlas of the World, University of London (1993).
18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
19 The Origin of Earth (www.moorlandschool.co.uk/eart
h/earthorigin.htm) 20 Structure & Composition of Earth’s Atmosphere (http//:ess.geology.ufl.edu/)
21 History of Earth (www.mansfield.ohio-state.edu/
) (March 31 2007) 22. http://www.independent.co
.uk/environment/nature/have-yo u-heard-the-hum-mystery-of-ear ths-low-droning-noise-could- now-be-solved-10182111.html [April 14, 2015] 23. https://www.livescience.c
om/50473-earth-mysterious-hum- explained.html [April 14, 2015] 24. https://www.wired.com/201
4/01/an-artist-records-the-mys terious-rumblings-of-middle- earth/ 25. http://www.bendbulletin.c
om/nation/5827550-151/scientis ts-unlocking-mystery-of-the- hum-of-earth [December 10, 2017] 26. https://www.livescience.c
om/61154-earth-hum-recorded-un derwater.html [December 11, 2017] ******************
S. Jayabarathan [jayabarathans@gmail.com] December 16, 2017 [R-1]
Attachments areaPreview YouTube video Mysterious hum inside Earth baffles experts
Mysterious hum inside Earth baffles expertsPreview YouTube video Mysterious Earth Hum Sound Recorded !
Mysterious Earth Hum Sound Recorded !Preview YouTube video “EARTH’S MYSTERIOUS HUM RECORDED UNDERWATER FOR 1ST TIME”
“EARTH’S MYSTERIOUS HUM RECORDED UNDERWATER FOR 1ST TIME”
The Earth’s Hum Finally Recorded At The Ocean Floor, But We Still Don’t Know Where It Comes FromPreview YouTube video The Earth is Groaning – Unknown sound phenomena occurring 2011
The Earth is Groaning – Unknown sound phenomena occurring 2011 -
மார்கழி மணாளன் ( மூன்றாம் பகுதி) -2
க. பாலசுப்பிரமணியன்
திருச்செங்குன்றூர் -இமையவாரப்பன் பெருமாள்
காலைக் கதிரில் கண்ணனின் நினைப்பில்
காலனின் துயரம் கனவாய்க் கலைந்தது
கலங்கிட்ட வாழ்வைக் கலையாய் செதுக்கிட
கண்ணனின் குழலே காதினில் சொன்னது !
ஆலிலை மேலினில் அசைவின்றி வந்தவன்
ஆயர்கள் நடுவினில் அன்புடன் வளர்ந்தவன்
ஆடிடும் கோபியர் அரங்கத்தை ஆண்டவன்
ஆசையில் கோதையை அரங்கத்தில் ஏற்றவன்!
சொல்லிய பொய்யே சுட்டிட நெஞ்சை
தனிமையில் தவித்தான் தலைமகன் தருமனும்
கண்ணனே கதியென்று கால்களைப் பற்றிட
மன்னவன் மனத்தினில் மலர்ந்தது அமைதியே !
கள்ளுண்ட வண்டின் கலங்கிய கீதமாய்
உள்ளுண்ட உணர்வுகள் உயிரினைத் தாக்கிட
மண்ணுண்ட மழலை மாதவன் திருவடி
மண்டிட்டு வேண்டிட மறையுமே மாயமாய் !
புவியெல்லாம் மங்களம் புனலெனத் தருபவள்
புன்னகை தொடுத்தே பொற்பதம் இருக்க
புலர்ந்திடும் பொழுதில் பேரருள் பெருக்கும்
புண்ணியன் போற்றிட புலமையும் தேவையோ ?
ஏழுமலை நாயகனே எங்கிருந்தால் எனக்கென்ன
ஏழுகடல் தாண்டியே எட்டாமல் இருந்தென்ன
ஏங்குகின்ற நினைவினிலே எண்ணமெல்லாம் நீதானே
ஏற்றிடுவாய் அழைப்பினையே என்னுடனே வந்துவிடு !
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”ஆடிப்பூ ரத்தாள் அளிக்கின்றாள் தள்ளுபடி
வாடிக்கை யாய்வந்தாள், சீராயர் -பாடிக்கு,
கோபியரே செல்லுங்கள் கண்ணன் திருக்கோயில்
HOOBBYயா னாலும் HURRY’’….கிரேசி மோகன்….! -
மார்கழி மணாளன் ( மூன்றாம் பகுதி) -1
க. பாலசுப்பிரமணியன்
திரு வல்லபர் (திருவல்லா)
மார்கழி பிறந்தது மங்களம் நிறைந்தது
மாதவன் நினைவில் மகிழ்வும் வளர்ந்தது
மாலையை ஏந்திய கோதையைப் போல
மாலனைத் தேடி மனமும் சென்றது !
ஆயிரம் பரிதிகள் அணியாய் வந்ததோ
பாயிரம் பாடிப் பணிவாய் எழுப்பிட ?
தாயிடம் சேய்போல் தவழ்ந்தது உலகமே
வேறிடம் இல்லை வேங்கடன் பாதமே !
சேடனின் உடலினில் சீருடன் கிடந்தும்
வேடங்கள் பலவும் விந்தையாய் எடுத்துத்
தேடிய நெஞ்சங்களைத் தேடியே வருவான்
தேனினும் இனிய திருவுடை அரங்கன் !
கூப்பிடப் பெயர்கள் கோடியில் உண்டு
கூவியே அழைத்தால் கோவிந்தன் வருவான்
கூரிட அரக்கரைக் கூடவே இருப்பான்
கூப்பிடும் கைகள் குலத்தினைக் காக்க !
தோளுடை வலிமை துவாரகை வளர்ந்தது
தோகளன் வதைக்கத் துணையாய் வந்தது
தோளுடைத் துணியை தோதுடன் விலக்கிடத்
தாயவள் தரிசனம் திருமார்பில் கிடைத்தது !
வல்லவை கரையினில் வளர்ந்திடும் அருளே
வானவர் வேதியர் வணங்கிடும் வல்லபா !
வந்தவர் நின்றவர் வேண்டிய பொழுதில்
வல்லமை வழங்கிடும் வானுறை வேங்கடா !
சங்குடன் சக்கரம் சங்கடம் நீக்கிடும்
மங்கிடா ஒளியினை மதியினில் சேர்ந்திடும்
தங்கிடா துயரங்கள் தாள்களைப் பற்றினால்
பங்கிலாப் புகழ்தரும் பாவையின் நாயகா !!
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கடவுள் மடியில் கிடக்கும் வரையில்
அட!உள் வெளியேது அஞ்சேல்! -கடலுள்ளே
பன்னகத்தில்(பாம்பில்) யோகம் பயிலும் பரம்பொருளாம்
கன்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….! -
இலக்கண விளக்க யாப்பியல் – 2
– ம.பிரபாகரன்
யாப்பிலக்கண உலகில் முதன்முதலில் தளையால் அடிவகுத்துப் புதுமை செய்தது இலக்கண விளக்கமே என்பர் ஆய்வாளர்கள். ஆனால் தளையால் அடிவகுக்கும் முறை யாப்பருங்கலக்காரிகை காலத்திலேயோ அல்லது அதற்கு முன்னரோ இருந்துள்ளதோ என்று ஐயப்படும் ஒரு குறிப்பு வே.பால்ராஜின் யாப்பருங்கலக் காரிகை பதிப்பிலிருந்து நமக்குக் கிடைக்கிறது. அதாவது யாப்பருங்கலக் காரிகை கூறும் அடி பற்றிய காரிகை உரைப்பகுதியில் வரும் அடி பற்றிய மேற்கோள் சூத்திரத்திற்கு பாடவேறுபாடாக அடிக்குறிப்பில் வே.பால்ராஜ், தளை அடிப்படையில் அடிவகுக்கும் முறையைக் கூறும் சூத்திரம் ஒன்றினை எடுத்துக்காட்டுகிறார். அச்சூத்திரத்தின் முதல் இரண்டு அடியும் இலக்கண விளக்கம் தளை வகை அடி பற்றிக் கூறும் சூத்திரத்தின் முதல் இரண்டடியாகும். இவ்விடத்தில் இலக்கணவிளக்கம் கூறும் தளைவகை அடி பற்றி கூறும் சூத்திரம், வே. பால்ராஜின் யாப்பருங்கலப் பதிப்பிலுள்ள தளை வகை அடி ஆகியவை குறித்துக் காணலாம்.
இலக்கண விளக்கம்:
- குறளொரு பந்த மிருதளை சிந்தா
முத்தளை யளவடி நாற்றளை நெடிலடி
யைந்தளை முதலா வெழுதளை காறும்
வந்தவும் பிறவும் கழிநெடி லென்ப.
பால்ராஜின் யாப்பருங்கலப்பதிப்பு:
” எண்சீ ரெழுசீ ரிவையாம் கழிநெடிற்
கொன்றிய வென்ப உணர்ந்திசி னோரே ”
என்றார் பிறரும்மெனக் கொள்க. (பக். 137:2007)மேற்கண்ட சூத்திரத்திற்கு பாடவேறுபாடாக, பால்ராஜ் அடிக்குறிப்பில் எடுத்துக்காட்டும் சூத்திரமாவது:
” குறளொரு பந்த மிருதளை சிந்தாம்
முத்தளை யளவடி நாற்றலை நெடிலடி
மிக்கன கழிநெடி லென்றி சினோரே ” – ங, ட, ந; ஞ, ண, த, ப, ம, ய, ர சுவடிகளில் இல்லை. (பக். 137 மேலது ).மேலே இலக்கண விளக்கச்சூத்திரத்தையும் வே. பால்ராஜ் எடுத்துக்காட்டும் தளையடி பற்றிய அடிக்குறிப்பில் இடம்பெறும் சூத்திரத்தையும் கவனிக்க. அடிக்குறிப்புச் சூத்திரத்தின் முதல் இரண்டு அடிகள் அப்படியே இலக்கணவிளக்கத்தில் இடம்பெற்றிருப்பதை நோக்குக. வே.பால்ராஜ், அடிக்குறிப்பில் காணப்படும் சூத்திரம் அதிக சுவடிகளில் வராததுகொண்டு அதைப் பாடமாகக் கொள்ளாது விட்டிருப்பார் போலும். உண்மையில் அடிக்குறிப்பில் காணப்படும் சூத்திரம் யாப்பருங்கலக் காரிகைக்குரிய பாடமாக இருந்தால் அச்சூத்திரம் பழையது என்றும் இலக்கண விளக்கம் அச்சூத்திரத்தை எடுத்துப்பயன்படுத்திக்கொண்டது என்று கூறலாம். அத்துடன் அப்பழைய சூத்திரம், தளையை அடிப்படையாகக் கொண்டு அடிவகுக்கும் பழைய தமிழ் யாப்பு மரபோடு தொடர்புடையதாக இருப்பதால், இலக்கணவிளக்கம் தளையை அடிப்படையாகக் கொண்டு அடிவகுத்து, தமிழ் யாப்புலகில் புதுமை செய்தது என்ற யாப்பாராய்ச்சியாளர்களின் முடிவை மாற்றி அமைக்கவும் செய்யும். ஆனால் வே.பால்ராஜ் தம் யாப்பருங்கலப்பதிப்பில் எடுத்துக்காட்டும் சூத்திரம் பழையச்சூத்திரமாக இல்லாமலிருந்து இடைச்செருகலாக இருந்தால் இலக்கணவிளக்கமே முதன்முதலில் தளையை அடிப்படையாகக் கொண்டு அடிவகுத்தது என்று கூறலாம். ஆனால் அப்படிக் கூறுவதற்கு இச்சூத்திரம் தடையாக உள்ளதால் இச்சூத்திரம் குறித்த மேலாய்வு தேவையாக உள்ளது. ஒரு வாதத்திற்கு யாப்பருங்கல காரிகை பதிப்பில், அடிக்குறிப்பில் காட்டப்பட்டிருக்கும் சூத்திரம் இடைச்செருகலாக இருக்கிறது என்று கொண்டால், இலக்கணவிளக்கம் ஏன் தளை அடிப்படையில் அடிவகுத்தது? என்ற நோக்கிலான விவாதத்தை நாம் தொடங்க வேண்டியிருக்கும். மேலே கண்ட சூத்திரத்தின் உண்மைநிலை பற்றித் தற்போது நம்மால் ஒன்றும் சொல்ல முடியாததால் நாம் இலக்கணவிளக்கம் ஏன் தளை அடிப்படையில் அடிவகுத்தது என்ற நோக்கில் விவாதத்தைத் தொடரலாம். வீரசோழிய உரை தளைக்கு எதிரிடையாக வலுவான வாதத்தை வைக்கிறது என்று முன்னர்ப் பார்த்தோம். இவ்விடத்தில் தளைக்கு எதிராகக் அது கூறும் இன்னொரு வாதத்தையும் பார்ப்பது இத்தொடர்பில் உதவியாக இருக்கும்.
‘ கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ
னற்றா டொழாஅ ரெனின் ‘ (கு.2)‘ கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர்
படாஅ முலைமேற் றுகில் ‘ (கு.1087)‘ உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு. ” (கு.1200)என்று இத்தொடக்கத்தனவற்றைச் செவிப்புலனே கருவியாக ஆராய்ந்தபொழுது ஓசை இனியாவாய் இருக்கும்; அலகிட்டு ஓசையூட்டில் அவை ஓசையுண்ணா என்றால், அற்றன்று; இவற்றின்கண் அளபெடை உண்டாகவே ஓசையுண்ணுமெனில், அளபெடை இன்றியேயும் ஓசை இனியனவாக இருந்தன என்க. (பக்.461, தி.வே.கோலையர் பதிப்பு, வீரசோழியம்:2005).
இங்குப் பெருந்தேவனார் ” அலகிட்டு ஓசை ” என்று கூறுவது தளைகளால் கொள்ளும் ஓசையை ஆகும். அதைப் போல பேராசிரியரும் நச்சரும் தளை உறுப்பாகக் கொள்ளத்தக்கதன்று என்று தம் கருத்தை அழுத்தமாக முன்வைக்கின்றனர். இவ்விடத்தில் பேராசிரியர் கருத்தைச் எடுத்துக்காட்டுவது விவாதத்தைப் நன்கு புரிந்து கொள்ள உதவி புரியும் (நச்சர் பேராசிரியரைப் பின்பற்றுவதால் அவர் கருத்து இங்குச் சுட்டிக்காட்டப்படவில்லை):
மற்று, யாத்த சீரேயாப்பென்றதென்னை? தளையென்பதோர் உறுப்புப் பிறர் வேண்டுபவாலெனின், இவருஞ் சீரது தொழிலே தளையென வேண்டுப; தளைத்தலிற் றலையாதலானும் வேறு பொருளென வேண்டாரென்பது; என்றார்க்கு, அசையின்றிச் சீருமில்லை; சீரின்றி அடியுமில்லையாம். பிறவெனின், அற்றன்று; உறுப்பும் உறுப்புடைச் செய்யுளும் போல அவை கொள்ளப்படும்; தளையென வேறொன்றின்மையிற் கொள்ளான்; என்னை? குறளடியென வேறுறுப்பாயின்மையினென்பது; தளையென்பது இதனைக் கோடுமேல் அதனைக் குறளடியெனலாகாதென்பது; அல்லதூஉம், ஈரசை கூடி ஒருசீராயினவாறுபோல இருசீர் கூடியவழி அவ்விரண்டினையும் ஒன்றென்று கோடல்வேண்டும்; கொள்ளவே, நாற்சீரடியினை இடைத்துணித்துச் சொல்லுவதின்றி, நான்கு பகுதியானெய்திக் கண்டம்படச் சொல்லுமாறில்லையென்க. யாத்தசீர் ‘ என்றதனானே அசைதொறுந் துணித்துச் சொல்லப்படா சீரென்பதூஉம் அச்சீரான் அடியானவழிச் ‘ சீரியைந்திற்றது சீரெனவே ‘ படுமென்றதனாற் சீரெல்லாந் துணித்துச் சொல்லப்படும்மென்பதூஉங் கூறினான் இவ்வாசிரியனென்பது; அற்றன்றியும் அவ்வாறு தளை கொள்வார் சீரானடிவகுப்பதூஉங் குற்றமென மறுக்க. மற்றுத் தொடை கூறியதென்னை? அடியிரண்டு தொடுத்தற்றொழி லல்லது இன்மையினெனின், அற்றன்று; தொடுத்தற்றொழின் மாத்திரையானே தொடையென்றானல்லன்; அவ்வடிக்கண் நின்ற எழுத்தும் எழுத்தும் சொல்லும் பிற பொருளாகலான் அவற்றானே தொடை கொண்டைமையின் வேறுறுப்பென்றானென்பது. அஃதேல், சீருஞ்சீரும் இயைந்தவழி அவையிடமாகநின்ற அசையால் தளைகொள்ளாமோவெனின் கோடுமென்றே; அதனி அடியென்னாமாயினென முற்கூறியவாறே மறுக்க (பக்.210-211, சி.கணேசய்யர் பதிப்பு, தொல்காப்பிய பொருளதிகார மூலமும் பேராசிரியருரையும் பின்னான்கியல்கள், பாகம்- இரண்டு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்:2007)
தளைக்கு ஆதரவான யாப்பருங்கல மரபிற்கு எதிரான வாதத்தை மிகத்தீவிரமாக வீரசோழிய உரைகாரரும், தொல்காப்பிய உரையாசிரியர்களும் வைக்கிறார்கள் என்று மேலே கண்டோம். ஆனால் மறுபடியும், வீரசோழியம், தொல்காப்பிய உரைகள் ஆகியவற்றிற்குப் பின் வந்த இலக்கணவிளக்கம் தளைக்கு ஆதரவாகப் பெருங்குரல் கொடுக்கிறது. அக்குரல் தளைக்கு எதிரான சிந்தனை மரபிற்கு எதிராகவே கொடுக்கப்படுகிறது என்று கூறவேண்டும். இலக்கணவிளக்கம், அடியைத் தளை அடிப்படையில் பகுக்கும்போது தளையின் முக்கியத்துவத்தை உறுதியாக எழுப்புகிறது. இதன் மூலம் தமிழ்ச்செய்யுளில் தளையை தவிர்க்க இயலாது என்ற யாப்பருங்கல மரபின் அடிப்படை வாதத்திற்கு வலுசேர்க்கிறது. தொல்காப்பியத்தைப் பொறுத்தவரை ‘ தூக்கு ‘ ‘ பா ‘ என்ற உறுப்புகள் மிக முக்கியமானவை. எனவேதான் ‘ தன்சீர் உள்வழி தளை வகை வேண்டா ‘ என்றது. வீரசோழியமும் ‘ ஓசை ‘ யைப் பொறுத்தவரை தொல்காப்பியத்தோடு ஒத்து அமைகிறது. ஆனால் இலக்கணவிளக்கம் தளைக்கு முக்கியத்துவம் கொடுத்து ‘ தூக்கினைத் ‘ தள்ளி நிறுத்துகிறது:
” இவ்வோசையை (செப்பலோசை) தூக்கு என்று ஓர் உறுப்பாகி மேல்கூறுவாரும் உளர். மேல் இவ்வாறு வருவனவற்றிற்கும் இவ்வுரை உய்த்து உரைக்க ”. (பக். 731, மு.சு.நூ)
இங்கு இலக்கண விளக்கத்தார் தளையால் பெறும் ஓசையை முதன்மைப்படுத்தி ” தூக்கு ” உறுப்பைத் தள்ளி நிறுத்துவதைக் கவனிக்க. தளைக்கு ஆதரவாக இலக்கணவிளக்கம் தளை அடிவகுக்கும் முறைக்கு ஒரு வலுவான காரண அடிப்படையை வழங்கவில்லை. வீரசோழிய உரைகாரர், மற்றும் தொல்காப்பிய உரையாசிரியர்களான பேராசிரியர், நச்சர் ஆகியோர் தளைக்கு எதிரான வாதத்தை வைக்கும் போது இன்னின்ன காரணங்களால் தளை கொள்வதும், தளையை உறுப்பாகக் கொள்வதும் பொருந்தாது என்று விரிவாக விவாதிக்கின்றனர்.
யாப்பருங்கல மரபு கூட ஏழ்வகைத் தளை கொள்வதற்கு ஒரு தத்துவ அடிப்படை இருந்திருக்க வேண்டும். அது சமணம் சார்ந்ததாக இருக்கலாம். யாப்பருங்கல மரபின், தளையைச் செய்யுளின் உறுப்பாகக் கொண்ட தளைகோட்பாடு வீரசோழிய உரையாசிரியர் மற்றும் தொல்காப்பிய உரையாசிரியர்களால் தர்க்கமுறையிலமைந்த காரணத்தை அடிப்படையாகக் கொண்டு மறுக்கப்பட்டது போல இலக்கண விளக்கம், வீரசோழிய உரைகாரர், தொல்காப்பிய உரையாசிரியர்கள் ஆகியோரின் வாதத்தைத் தர்க்கமுறையில் மறுக்கவில்லை. இன்னின்ன காரணங்களால் தளை உறுப்பாக கொள்ளத்தக்கது இன்னின்ன காரணங்களால் தளை அடிப்படையில் ஓசைகொள்வது பொருந்தும்
என்று கூறி எப்படி தளைக்கு எதிரான வாதம் தவறு என்று விளக்கவில்லை. வீரசோழிய உரைகாரர், பேராசிரியர், நச்சர் ஆகியோரின் வாதம் வலுவுடையதாக தனியே நிற்க, இலக்கண விளக்கத்தார் மொழி விளையாட்டுப் போல தளைவகை அடிகள் படைத்து யாப்பு விளையாட்டு ஒன்றை விளையாடியுள்ளார் என்று கூறலாம். ஆனால் அந்த விளையாட்டு என்பது தளைக்கோட்பாட்டை முக்கியத்துவப்படுத்தவே, வலுவூட்டவே செய்யப்பட்டது என்பதை நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது. அந்த யாப்பு விளையாட்டை ஒரு உதாரணம் காட்டி விளக்கலாம். 2+2 = 4 ; இது யாப்பருங்கல மரபு கூறிய இரு சீர் வருவது குறளடி என்பதற்குச் சமமானதாக வைத்துக் கொள்வோம். 2+2 = 4 என்பதை 1+1+1+1 = 4 என்றும் கூறலாம்; இது இலக்கணவிளக்கம் இருசீர் அடியில் வரும் ஒருதளையை அடிப்படையாகக் கொண்டு ஒரு தளை வருவது குறளடி என்று கூறியதோடு ஒப்பிடலாம் (ஏற்கனவே நாம் இலக்கணவிளக்கம் எப்படித் தளைவகை அடிகளுக்கு யாப்பருங்கல மரபு பயன்படுத்திய சீர்வகை அடிகளுக்கான சூத்திரத்தையும் உதாரணங்களையும் பயன்படுத்திக்கொண்டது என்று பார்த்தோம்). இரண்டு சீர்வந்தால் ஒருதளை காணப்படும். இது இயல்பு. இரண்டுசீர் வருவதை யாப்பருங்கல மரபு குறளடி என்று கூறிவிட்டது. ஆனால் இதை ஒருதளை வந்த குறளடி என்று யாப்பருங்கல மரபால் கூற முடிந்திருக்கும். ஆனால் கூறவில்லை. ஏனெனில் தளை அடியின் ஓசையைத் தீர்மானிக்கும் ஆனால் அடியைத் தீர்மானிப்பதில்லை என்ற கருத்தை அம்மரபு கொண்டிருந்தது. தளை அடியைத் தீர்மானிக்கும் என்றால் சீர் செய்யுளின் ஓசையைத் தீர்மானிக்குமா? என்ற கேள்வி எழும். செய்யுளில் தளையின் பங்கு ஓசை நிமித்தமே. ஆனால் இலக்கண விளக்கம் இது எதனையும் கருத்தில் கொண்டதுபோல் தெரியவில்லை. அது தளை அடிப்படையில் அடிவகுக்கும் போது ஒரு புதுமையாகவும்; அதே நேரத்தில் தளையின் இன்றியமையாமையை வற்புறுத்துவதாகவும் அமைகிறது. இலக்கணவிளக்கத்தார் எதிர்பார்த்ததும் இதுவேதான்; அதாவது ஒரு புதுமையான செயல்மூலம் தளைக் கோட்பாட்டை முக்கியத்துவப்படுத்தவேண்டும் அதே நேரத்தில் தர்க்கமும் செய்யக் கூடாது. எனவே தளைவகை அடிகள் கூறியதன் மூலம் தளைக்கோட்பாட்டை முக்கியத்துவபடுத்தியும் விடுகிறார்.
பின்வரும் அட்டவணை தொல்காப்பியம், யாப்பருங்கல மரபு, வீரசோழியம், இலக்கணவிளக்கம் ஆகியவை அடிகளைப் பகுத்துள்ள முறைமையைப் பட்டியலிடுகிறது.
அட்டவணை : 5
தொல்காப்பியம் யாப்பருங்கல மரபு வீரசோழியம் இலக்கணவிளக்கம்
எழுத்தெண்ணிக்கை அடிப்படையில்
- குறளடி
- சிந்தடி
- அளவடி
- நெடிலடி
5.நெடிலடி சீரடிப்படையில்
1.குறளடி
- சிந்தடி
- அளவடி
- நெடிலடி
- கழிநெடிலடி சீரடிப்படையில்
1.குறளடி
- சிந்தடி
- அளவடி
- நெடிலடி
- கழிநெடிலடி தளையடிப்படையில்
1.குறளடி
- சிந்தடி
- அளவடி
- நெடிலடி
- கழிநெடிலடி
தொடை:
தொடை மரபைப் பொறுத்தவரையிலும் இலக்கண விளக்கம் யாப்பருங்கல மரபை அப்படியே பின்பற்றுகிறது. தொல்காப்பியத்தோடு முரண்படவில்லை எனினும் அதைத் தன் வழிக்குரியதாகக் கொள்ளவில்லை. தொல்காப்பியம் முதன்மைத்தொடைகளாக மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என்ற ஐந்தைக் கூறுகிறது. விகற்பத் தொடைகளாக ஒரூஉ, பொழிப்பு ஆகியவற்றைக் கூறுகிறது. விகற்பமில்லாத் தொடைகளில் செந்தொடையை மட்டுமே பேசுகிறது. யாப்பருங்கல மரபு முதன்மைத்தொடைகளாக தொல்காப்பியம் கூறியவற்றையே கூறுகிறது. மேலும் விகற்பத் தொடைகளாக இணை, பொழிப்பு, ஒரூஉ, முதலிய ஏழினைக் குறிப்பிடுகிறது. விகற்பமில்லாத தொடைகளாக இரட்டை, அந்தாதி, செந்தொடை ஆகியவற்றைக் கூறுகிறது. ஒட்டுமொத்தமாகத் தொடை விளக்குமுறையைப் பார்க்கும் போது இலக்கண விளக்கம் யாப்பருங்கல மரபை அப்படியே உள்வாங்கிக்கொள்கிறது. எந்த வித மாற்றுக்கருத்தும் கொள்ளவில்லை.
இலக்கண விளக்கம் ” தொடையும் தொடைவிகற்பமும் ” பகுதியில் (722) தொடைகள் பற்றிய வைப்புமுறையை அமைக்கும்போது தொல்காப்பியம், யாப்பருங்கல மரபைப் போல மோனைக்கு முதலிடமும் எதுகைக்கு இரண்டாமிடமும் அளிக்கின்றது. ” சில தொடை விகற்பங்கள் ” என்ற தொடர்ந்துவரும் பகுதியில் எதுகையை முதலில் வைத்து விளக்குகிறது (எதுகை, மோனை). வீரசோழிய உரை, எதுகை எனினும் தொடை எனினும் ஒக்கும் ‘ என்று எதுகையை முக்கியத்துவப்படுத்தும். எனினும் வீரசோழியத்தின் தொடைகள் பற்றிய வைப்புமுறையில் (தொடைகள் பற்றிய அறிமுகக் காரிகையில்) மோனை, எதுகை என்ற வரிசைமுறையே காணப்படுகிறது. வீரசோழியம் மோனையை வைப்புமுறையில் முதலில் வைத்தாலும் எதுகையையே கருவியாகக் கொண்டு அடிவகுத்து அதனையே முதன்மைப் படித்துகிறது. இதிலிருந்து இலக்கணவிளக்கம் ” சிலதொடைகள் விகற்பம் ” என்ற பகுதியில் எதுகையை முதன்மைபடுத்தியிருப்பது வீரசோழியத்தை பின்பற்றியோ என்று எண்ணத் தோன்றலாம். ஆனால் இலக்கணவிளக்கம் வீரசோழியத்தைப் பின்பற்றி எதுகைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனலாம். இலக்கணவிளக்கம் தோன்றிய காலகட்டம் வாய்பாட்டுத்தன்மையில் கவிதைபுனையும் கவிஞர்கள் பெருகியிருந்த காலகட்டம். வெண்பாவைப் பார்த்து இன்னொரு வெண்பாவும் விருத்தத்தைப் பார்த்து இன்னொரு விருத்தமும் பாடிய காலகட்டம். இக்காலகட்டத்தில் ‘ எதுகை ‘ சொற்சிலம்பம் ஆடுவதற்குத் தேவையான ஒன்று. எனவே இலக்கணவிளக்கம் ” சில தொடை விகற்பங்கள் ” என்ற பகுதியில் எதுகையை முதலில் வைத்து விளக்கியது என்று கூறவேண்டும். மற்றபடி எதுகையைப் பொறுத்தவரை வீரசோழியத்திற்கு இருந்த வலுவான கோட்பாட்டுப் பின்னணி இலக்கணவிளக்கத்திற்கு கிடையாது என்று நிச்சயமாகக் கூறலாம். பின்வரும் அட்டவணை தொல்காப்பியம், யாப்பருங்கல மரபு, வீரசோழியம், இலக்கண விளக்கம் ஆகியவை தொடைகள் பற்றிக் கூறுவதைப் பட்டியலிடுகிறது:
அட்டவணை:6
தொல்காப்பியம் வீரசோழியம் யாப்பருங்கலமரபு இலக்கணவிளக்கம்
முதன்மைத்தொடைகள்
மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை
விகற்பத்தொடைகள்
பொழிப்பு, ஒரூஉ
விகற்பமில்லாத்தொடை
செந்தொடை மோனை
எதுகை முதன்மைத்தொடைகள்
மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை
விகற்பத்தொடைகள்
இணை, பொழிப்பு, ஒரூஉ, மேற்கதுவாய்,
முற்று முதன்மைத்தொடைகள்
மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை
விகற்பத்தொடைகள்
இணை, பொழிப்பு, ஒரூஉ, மேற்கதுவாய்,
முற்று
பா மற்றும் பாவினம் ஆகியவைக்குறித்துப் பேசும் பொழுதும் இலக்கணவிளக்கம், யாப்பருங்கல மரபையே பின்பற்றுகிறது.
கருத்துநிலை அடிப்படையில் இலக்கணவிளக்கம் முழுக்க முழுக்க யாப்பருங்கல மரபையே பின்பற்றுகிறது என்பது மேலே விளக்கப்பட்டது. கருத்துநிலை அடிப்படையில் மட்டுமல்ல விளக்குமுறை அடிப்படையிலும் இலக்கணவிளக்கம் யாப்பருங்கல மரபையே பின்பற்றுகிறது. அதாவது அதன் விளக்குமுறை யாப்பருங்கல மரபின் சூத்திரங்களை அப்படியே எடுத்தாண்டும் தழுவியும், உரைகளைத் தழுவியும் விளக்குவதாக அமைகிறது. இத்தன்மை குறித்துக் கீழே காணலாம்.
இலக்கண விளக்கத்தின் எழுத்துக்கள் குறித்து வரும் சூத்திரமாகிய
” எழுதப் படுதலி னெழுத்தே யவ்வெழுத்து
தசைத்திசை கோடலி னசையே யசையியைந்து
சீர்கொள நிற்றலிற் சீரே சீரிரண்டு
தட்டு நிற்றலிற் றளையே யத்தளை
யடுத்து நடத்தலி னடியே யடியிரண்டு
தொடுத்துமன் சேறலிற் றொடையே யத்தொடை
பாவி நடத்தலிற் பாவே பாவொத்
தினமாய் வழங்களி னினமெனப் படுமே ”என்பது யாப்பருங்கலக்காரிகையுரையில் தற்சிறப்புப் பாயிரப்பகுதியில் மேற்கோளாகக் காட்டப்படுகின்ற சூத்திரம் ஆகும் (பக்.111, மு.சு.நூ). ஆனால் யாப்பருங்கல விருத்தியிலும் இச்சூத்திரம் இடம்பெறுள்ளது எனினும் யாப்பருங்கலக் காரிகையைப் போல எட்டடி பெறாமல் மொத்தம் ஏழு அடிகளை உடையதாக இருக்கின்றது. மேலும் ஆறாவது, ஏழாவது அடிகள் யாப்பருங்கலக்காரிகையைப் பார்க்கிலும் வேறாக அமைகின்றது. அச்சூத்திரம் வருமாறு:
எழுதப் படுதலி னெழுத்தே யவ்வெழுத்
தசைத்திசை கோடலின் னசையே யசைபியைந்து
சீர்கொள நிற்றலிற் சீரே சீரிரண்டு
தட்டு நிற்றலிற் றளையே யத்தளை
அடுத்து நடத்தலி னடியே யடியிரண்டு
தொடுத்தன் முதலாயின் தொடையே யத்தொடை
தூக்கிற்றொடர் திசைத்தலிற் றூக்கெனப் படுமே ” (பக்.18; பவானந்தம் பிள்ளை பதிப்பு, யாப்பருங்கல விருத்தி தொகுதி 1 :1916)மேற்கண்ட இரண்டு சூத்திரங்களையும் ஒப்பிட்டு நோக்குக. மேற்கண்ட பாடலுக்கு யாப்பருங்கல விருத்தியின் பதிப்பாசிரியர் பவானந்தம் பிள்ளை இலக்கண விளக்கத்தில் உள்ள சூத்திரத்தைப் (மேலே நாம் காட்டிய சூத்திரம்) பாடமாகக் கொள்கிறார். அடிக்குறிப்பில் பவானந்தம் பிள்ளை இது குறித்து கூறுவதாவது:
” தொடுத்துமன் சேறலிற் றொடையே யத்தொடை
பாவி நடத்தலிற் பாவே பாவொத்
தினமாய் வழங்கலி னினமெனப் படுமே ”எனப்பாட முரைக்கும் இலக்கணவிளக்கம் (பக்.18; மேலது).இவர் கூறுவது போல இலக்கண விளக்கச் சூத்திரத்தைப் பாடமாகக் கொள்வது பொருந்துமா? என்ற வினா எழுகிறது.
[தொடரும்]
*****
கட்டுரையாசிரியர்
ஆய்வாளர்
பிரெஞ்ச் ஆசியவியல் பள்ளி (EFEO)
புதுச்சேரி - குறளொரு பந்த மிருதளை சிந்தா
-
இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . ( 256 )
சக்தி சக்திதாசன்
அன்பினியவர்களே !
அன்பான வணக்கங்கள். சிலவார இடைவெளிக்குப் பின்னால் இம்மடலுடன் உங்கள் முன்னால் வருவதில் பெருமகிழ்வடைகிறேன். வருடம் முழுவதும் வாழ்க்கை எனும் சிக்கல் மிகுந்த புதிருக்கான விடைதேடி ஓடிக்களைத்ததினால் சிறிது இடைவெளி வேண்டி கொஞ்சம் ஓய்வெடுக்க எண்ணியதின் விளைவே எனது சிறிய மறைவுக்குக் காரணம். மிகவும் மகிழ்வான , ஆனந்தமான, அலாதியான ஒரு விடுமுறை என்றுகூடச் சொல்லலாம். நாங்கள் குடும்ப வாழ்வில் இணைந்து இப்போது சுமார் 36 வருடங்கள் ஓடி விட்டன. ஆரம்பகாலத்தில் வாழ்வினைத் தூக்கி நிறுத்துவதற்கான முயற்சிகளைத் தவிர வேறு எதையுமே எண்ணிப்பார்க்க முடியாத ஒரு வாழ்க்கை. அதைத்தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வாழ்வில் முன்னேற்றமடைந்த ஒரு நிலையில் எமது ஒரே மகனை வாழ்வில் நிலைநிறுத்தும் பணியில் முழுநேரச் செலவு இப்படியாகத்தான் ஓடியது எமது வாழ்க்கை.
சில வருடங்களாகவே குறூஸ் ( Cruise ) எனும் கப்பல் மூலமான விடுமுறையில் ஆர்வம் காட்டி வந்த என் மனைவியின் விருப்பத்தை நான் அறிந்திருந்தேன்.. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தன்னார்வ ஓய்வெடுத்த பின்னால், என் மகனின் திருமணம் முடிந்த பின்னால் கடந்த வருடம் எனது மனைவியின் பலநாள் கனவு நிறைவேறியது. ஆம் கப்பல் விடுமுறையில் ஆர்வம் கொண்டிருந்த எனது சகோதரிகளும் வேறு சில நண்பர்களும் இணைந்து ஐரோப்பிய நாடுகளில் சிலவற்றுக்கான கப்பல் விடுமுறையை கடந்த வருடம் அதாவது 2016 யூலை மாதம் மேற்கொண்டோம். அவ்வகையான் விடுமுறையின் மீதான நாட்டம் அதில் ஈடுபட்ட அனைவருக்குமே அதிகமாகியது.
அவ்விடுமுறையில் இருந்து திரும்பிச் சில மாதங்களிலேயே இவ்வருடம் அதாவது 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் மற்றுமொரு கப்பல் விடுமுறைக்கு முன்பதிவு செய்து கொண்டோம். இப்பயணம் வெஸ்டேர்ன் கரிபியன் குறூஸ் ( Western Caribean cruise ஆகும். அதே கூட்டத்துடன் மேலும் இருவர் இணைந்து 14 பேரடங்கிய குழுவாக இப்பயணத்துக்குத் திட்டமிட்டோம். இங்கிலாந்திலிருந்த 12 பேருடன் அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த இருவர் இணைந்து கொள்வதாக இருந்தது. நவம்பர் மாதம் 23ம் திகதி லண்டன் கட்விக் விமான நிலையத்திலிருந்து 12 பேரும் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள ஒர்லாண்டோ நகருக்கு விமானம் மூலம் பயணித்தோம். எமது நாட்டின் விமான நிலையத்தை எத்தனையோ முறை விமர்சித்த எமக்கு மற்றொரு நாட்டின் விமான நிலையத்தின் அல்லகல்லோலங்களைப் பார்த்ததும் தான் எமது நாட்டு விமான நிலையத்தின் அருமை புரிகிறது போலும் ! அப்பப்பா ஒர்லாண்டோ நாட்டின் விமான நிலையத்தின் குடிவரவுப் பகுதி இருந்த பகுதியில் சுமார் 500 பேர் வளைந்து, வளைந்து ஒரு பத்து வளைவுகள் கொண்ட வரிசையாக நின்றிருந்தோம். வியர்வை வழிந்தோடியது அத்தனை பேருக்கும் பொதுவாக ஒரு பெரிய மின்விசிறி மட்டும் நடுப்பகுதியில் ஓடிக்கொண்டிருந்தது. ஒருவாறு சுமார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னால் குடிவரவு அதிகாரியின் முன்னால் நானும், மனைவியும் போய் நின்றதன் பின்னால் தான் அமெரிக்க நாட்டு விமானநிலையத்தில் மரியாதை என்பது மட்டளவில் கூடக் கிடையாது என்பதைத் தெரிந்து கொண்டோம்.
ஒருவாரு அனைவரும் இணைந்து அங்கு வந்து எம்மோடு இணைந்த அவுஸ்திரேலிய தம்பதியினரையும் இணைத்து ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இரண்டு வாகனங்களில் எமக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு பங்களாவை நோக்கிச் சென்றோம். எமது வாகனத்தை ஓட்டிச் சென்ற சாரதி எம்மோடு பேசிக்கொண்டு வந்தாலும் அவர் முகம் கடுகடுப்பாக இருந்தது. அப்புறம் தான் புரிந்தது அன்று அமெரிக்க நாட்டின் முக்கிய விடுமுறை தினமான ” தாங்ஸ் கிவிங் டே ( Thanks giving day , அன்று இரவு ஒரு விருந்துக்குப் போக வேண்டிய அச்சாரதி எமது தாமதமான வரவால் அவ்விருந்துக்கு தாமதமாகிக் கொண்டிருப்பதே அவரது கடுகடுப்புக்குக் காரணம் என்பது. ஒருவாரு எம் அனைவரையும் விடுதியில் இறக்கி விட்ட போதுதான் கூறினார் அன்று விடுமுறையாதலால் அனைத்து சாப்பாட்டுக் கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும் என்று. எமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் இரவு 9 மணிக்குப் பின்னால் ஏதாவது பிட்சா கடை திறந்தாலும் திறக்கும் என்றார். அன்றைய இரவு பட்டினி போலும் என்று எண்ணிக் கொண்டோம்.
பங்களாவினுள் சென்று உடை மாற்றிக் கொண்ட பின்னால் ஆர்வப்பிரியையான என் மனைவி வெளியே சென்று அடுத்த வீட்டு கதவைத் தட்டியுள்ளார். அங்கே இவ்விடுமுறையைக் கழிப்பதற்காக தனது குடும்பத்துடன் வந்திருந்த ஒரு அமெரிக்கரைப் பார்த்துள்ளார். அவரிடம் எமது நிலையை விளக்கிக் கூறிய போது, அவர் சில பிட்சா கடைகளின் தொலைத்தொடர்புகளைக் கொடுத்ததும் அதை வாங்கிக் கொண்டு திரும்ப வந்து தொலைபேசி மூலம் சில பிட்சாக்களுக்கு ஆர்டர் கொடுத்ததும் தான் அனைவருக்கும் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது. அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது அட பிட்சா இத்தனை சீக்கிரம் வந்து விட்டதே எனும் ஆச்சரியத்தில் கதவைத் திறந்தால் அங்கே அந்த அடுத்த வீட்டு நண்பர் கையில் பல பொருட்களுடன் நின்றார். கோகா கோலா போத்தல், பால் போத்தல் காப்பித்தூள், பாண் என அனைத்தையும் எம்மிடம் கையளித்தார். ஜொஸுவா எனும் அந்த அமெரிக்க நண்பர் அது தமது “தாங்ஸ் கிவிங் டே ” அன்பளிப்பு என்று கூறி பணமமெதுவும் வாங்க மறுத்து விட்டார். அப்போதுதான் கவியரசரின் பாடல் ” பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா ” வரிகளின் உண்மை அர்த்தம் புரிந்தது.
கப்பல் பிரயாணத்தை ஆரம்பிக்கும் முன்னால் இரண்டு நாட்கள் ஒர்லாண்டோவில் கழிப்பது என்பதே எமது திட்டம். அடுத்த நாள் காலை மீண்டும் ஒழுங்கு செய்திருந்த பெரிய கறுத்த காரில் நாம் அருகிருந்த ஒரு ஷாப்பிங் மாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இறக்கி விடப்பட்டோம். அங்கு ஜோடி ஜோடியாக அனைவரும் பிரிந்து சென்று அமெரிக்க கடைகளை ஒரு கை பார்த்துத் திரும்பினோம். திரும்பியது என்னவோ வெறுங் கையுடன் தான். அன்று இரவு எம்முடன் வந்திருந்த ஒரு நண்பரின் மனைவி தான் கொண்டு வந்திருந்த பலசரக்குப் பொருட்களை உபயோகித்து அருமையான சாப்பாடு தயார் பண்ணி விட்டார் போங்கள். அடுத்த நாள் எமது திட்டப்படி ஒர்லாண்டோவில் உள்ள யூனிவர்சல் வேர்ல்ட் எனும் கேளிக்கை இடத்துக்கு விஜயம் செய்தோம். ஆளுக்கு 125 டாலர்கள் கொடுத்து உள்ளே நுழைந்த நாம் பல விடயங்களைப் பார்வையிட்டு விட்டு, சிம்சன் ரைடு எனும் ஒரு ரதத்தில் ஏறி அமர்ந்து விட்டோம். அனைவரும் ஐம்பது வயதுக்கு மேற்பட்டோர். அப்பாடா அந்த சுற்றூர்தியில் இருந்து இறங்கியதும் தான் உயிருடன் தப்பி விட்டோம் என்று எண்ணத் தோன்றியது. அத்தனை அபாயகரமான ஆனால் பாதுகாப்பான ஒரு தேரோட்டம். அதைப் போல பல தினுசான வினோதங்களைப் பார்த்து விட்டுக் களைத்துப்போய் வீடு திரும்பினோம். அடுத்த நாள் எமது கப்பல் பிரயாணத்தைத் தொடங்குவதற்காக மயாமி நகருக்குச் செல்வதற்காக எம்மை அழைத்துச் செல்வதற்கு இரண்டு வாகனங்கள் வந்திருந்தன. சுமார் நான்கு மணி நேர பிரயாணத்தின் பின்னால் மயாமி கப்பற் தளத்தை வந்தடைந்தோம்
மிகுதி அடுத்த வாரம் தொடரும்
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன் -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
காளிக்கு அண்ணன் கார்முகில் வண்ணன்
காளிங்க நர்த்தனம் ஆடிக் களைத்தவன்
கோளரி மாதவன் கோவிந்தன் நான்முகன்
தூளியில் ஆடித் தூங்க வருகவே….கிரேசி மோகன்….!“நாலா யிரக்கண்ணன் நான்முகன் தொட்டிலில் –
ஓலாவில்(taxi ) போவதுபோல் ஓய்ந்திருக்க -தாலாட்டு –
மாலோலர் தூங்கிட மாதா யசோதாவின் –
பாலூறும் பாடல்வெண் பா “….கிரேசி மோகன் ….!Yashoda sings a lullaby to Krishna describing the gem-adorned cradle given by Brahma and reminisces his avatar as Vamana. (Inspired by the 4000 divine songs of the Azhwars) #Krishnafortoday
-
குறுந்தொகை நறுந்தேன் – 15
-மேகலா இராமமூர்த்தி
இல்லக்கிழத்தியாகிவிட்ட செல்வமகளின் மனைமாண்பைச் செவிலி தேர்ந்த சொற்களால் வருணிக்க, வியப்பில் வாய்மூடாது செவிமடுத்துக்கொண்டிருந்தாள் நற்றாய்.
”காட்டுக் கோழியினது கவர்த்த குரலை உடைய சேவலின் ஒளிபொருந்திய புள்ளிகளை உடைய கழுத்தில் குளிர்ந்த நீர்த்துளி துளிக்கும்படி, புதலி(ரி)ன்கண் நீர் ஒழுகும், மலர்மணம் வீசுகின்ற முல்லை நிலத்தின் கண் அமைந்த சிறிய ஊரில் உள்ளாள் நம் காதல் மடந்தை. தலைவனது தேரோ வேந்தனால் ஏவப்பட்ட தொழிலை மேற்கொண்டு வேற்றூருக்குச் சென்றாலும், சென்ற ஊரின் கண்ணே தங்கிப் பின்வருதலை அறியாது உடனே வந்து விடும்” என்றாள் செவிலி.
தலைவன் தன் காதல் மனைவியைப் பிரிந்து வேற்றூர்களுக்கு அதிகம் செல்வதில்லை; அவ்வாறு தவிர்க்க இயலாது வேந்தன் இடுகின்ற பணிகளைச் செய்வதற்காகச் சென்றாலும் வேலைமுடிந்தவுடன் உடனே வீடு திரும்பிவிடுவானென்று, தலைவியைப் பிரியாது உடனுறையும், தலைவனின் உயர்பண்பைப் பாராட்டுகின்றாள் செவிலி.
கானங் கோழி கவர்குரற் சேவல்
ஒண்பொறி எருத்தின் தண்சிதர் உறைப்பப்
புதனீர் வாரும் பூநாறு புறவிற்
சீறூ ரோளே மடந்தை வேறூர்
வேந்துவிடு தொழிலொடு செலினும்
சேந்துவரல் அறியாது செம்மல் தேரே. (குறு2: 242 – குழற்றத்தன்)செவிலியின் இன்சொற்கள் நற்றாயின் பொற்செவியில் தேனாய்ப் பாய்ந்தன. மகளின் மணவாழ்க்கை மணம்பொருந்திய வாழ்க்கையாய் அமைந்ததில் அகமகிழ்ந்தாள் அவள்.
செவிலியின் சொல்லில் மிகையில்லை எனும்படியே தலைவனும் தலைவிபால் கழிகாதலொடு விளங்கினான்.
”விரிந்த அலையையுடைய பெரிய கடலலால் வளைக்கப்பட்ட இப்பூவுலக இன்பமும், பெறுதற்கரிய பெருமையையுடைய தேவருலக இன்பமும் ஆகிய இரண்டும், தாமரைப் பூவைப் போன்ற மையுண்ட கண்களையும், பொன் போன்ற நிறத்தையும், மாட்சிமைப்பட்ட வரிகளையுடைய அல்குலையும் உடைய தலைவியினது தோளோடு தோள் மாறுபடத்தழுவும் நாளிற்பெறும் இன்பத்தோடு ஒருங்குவைத்து ஆராய்ந்தால், தலைவியொடுபெறும் இன்பத்தின் கனத்திற்கு ஈடாகாது” என்று எண்ணியிருந்தான் அவன்.
விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்
அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும்
இரண்டும் தூக்கிற் சீர்சா லாவே
பூப்போல் உண்கண் பொன்போல் மேனி
மாண்வரி அல்குற் குறுமகள்
தோள்மாறு படூஉம் வைகலோ டெமக்கே. (குறுந்: 101 – பரூஉமோவாய்ப் பதுமனார்)தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு. (1103) எனும் குறளும் இதேகருத்தைப் பேசுவதைக் காணலாம்.தலைவியும் தலைவனும் அன்பும் அறனும் உடைத்தாய் இல்லறத்தைப் நடாத்திவருகையில் தலைவன் சேர்த்திருந்த பொருள் சிறுகச் சிறுகச் செலவழியலாயிற்று. ஆதலால் மீண்டும் பொருள்தேடவேண்டிய தேவை அவனுக்கு ஏற்பட்டது.
அறம்பெற ஈதலும், இன்பம்பெறத் துய்த்தலுமான காரியங்கள், அப்பொருளைப் பெறாத இல்லோர்க்கு இல்லையாகிப் போகுமாதலால் பொருள்செய்தலை மேலானதாக எண்ணி யான் மேற்கொள்ளும் வினைக்கு, அழகிய மாமை நிறமுடைய இப்பாவையும் உடன் வருவாளோ? இல்லை என்னை மட்டும் தனியாகச் செலுத்துவாயோ?!” என்று தன் நெஞ்சை வினவி விடைகாண முயன்றான் தலைவன்.
ஈதலும் துய்த்தலும் இல்லோர்க் கில்லெனச்
செய்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்கு
அம்மா அரிவையும் வருமோ
எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே. (குறுந்: 63 – உகாய்க்குடி கிழார்)”நீ வற்புறுத்தினாலன்றி நானாகச் செல்லேன்!” என்று தலைவன் தன்னைக் குற்றமற்றவனாக்கித் தன்னை பொருள்வழியிற்செலுத்தும் தன்நெஞ்சைக் குற்றவாளியாக்கும் முயற்சியில் ஈடுபடுவதனை இப்பாடல்வழி உணர்கின்றோம்.
புணரின் புணராது பொருளே பொருள்வயின்
பிரியின் புணராது புணர்வே ஆயிடைச்
செல்லினும் செல்லாய் ஆயினும்
நல்லதற்கு உரியை வாழிய நெஞ்சே…. (நற் 16 – சிறைக்குடி ஆந்தையார்)எனும் நற்றிணைப் பாடலும் பொருள்தேடவிழையும் தன் நெஞ்சுக்குத் தலைவன் கூறும் மறுமொழியாகவே அமைந்திருக்கின்றது.
இளம் மனைவியைப் பிரிந்து பொருள்தேடச்சென்றால் இளமையின்பம் கிட்டாது; ஆனால் வாழ்வை நெடுங்காலம் செம்மையாய் நடத்துவதோ, வறியோர்க்கு ஈந்து மகிழ்தலோ வளமையில்லையேல் எட்டாது”எனும் சிக்கல் தலைதூக்கும்போது காதலா? பொருள்தேடும் கடமையா? என்று இளந் தலைவன் தடுமாறுவது இயல்பே.
காதலும் அதுகூட்டுவிக்கும் இன்பமும் இளமைப்பருவத்துக்கே உரியது; ஆனால் பொருளோ இளமைக்கு மட்டுமல்லாது முதுமைக்கும் வேண்டுவது; ஆதலினால் தலைவிமாட்டுக் காட்டும் காதலினும் பொருளே வாழ்வுக்குத் தேவையானது என்று அவனைத் தெருட்டியது அவன் அறிவு.

செல்வம் தேட மறுபடியும் செல்வோம் எனும் முடிவுக்குவந்த தலைவன் அதனைப் பக்குவமாய்த் தலைவிக்கு எடுத்துரைக்க விரும்பி, ”பொலிவான குழையணிந்த பெண்ணே! என்னருமைக் கண்ணே! நீலமணி ஒழுகியதுபோல் காட்சிதரும் கரிய அறுகங்கொடியின் மெல்லிய தண்டைப் பெண்மானொடு சேர்ந்து வயிறுநிரம்ப உண்ட ஆண்மானானது துள்ளிவிளையாடும் கானம் ஒன்று நம் ஊருக்கு அணித்தே உள்ளது” என்று மெல்ல ஆரம்பித்தான். தலைவியும் அவன் ஏதோ சுவையான சம்பவத்தைச் சொல்லப்போகிறான் எனும் ஆர்வத்தில் அதனைக் கேட்டுக்கொண்டிருக்கத் தொடர்ந்த தலைவன்…
”அந்தக் கானம் பின்னே செல்லுமாறு நான் அதனைக் கடந்துசென்று பொருளீட்டி வரலாம் என எண்ணுகிறேன்; அதுவரை என் பிரிவை இந்தத் தெரிவை தாங்கியிருப்பாள் அல்லவோ?” என்று கேட்குமுன்னமே தலைவியின் கண்கள் கண்ணீர் மழையைக் கொட்டத் தொடங்கியதைக் கண்ட தலைவன், அவள் கலக்கத்தைத் துலக்கமாய்த் தெரிந்துகொண்டான். தன் பயணத்துக்கு ஆயத்தமாக வெளியில் நிறுத்தியிருந்த தேரிலிருந்த குதிரைகளை அவிழ்த்துவிட்டுப் பயணத்தை நிறுத்தினான்.
மணிவார்ந் தன்ன மாக்கொடி யறுகை
பிணிகான் மென்கொம்பு பிணையொடு மார்ந்த
மானே றுகளுங் கானம் பிற்பட
வினைநலம் படீஇ வருது மவ்வரைத்
தாங்கல் ஒல்லுமோ பூங்குழை யோயெனச்
சொல்லா முன்னர் நில்லா வாகி
நீர்விலங் கழுத லானா
தேர்விலங் கினவால் தெரிவை கண்ணே. (குறுந்: 256 – ?)தலைவியைச் சமாதானப்படுத்திப் புறப்படலாம் எனும் தன் எண்ணத்தில் மண்விழவே ஏமாற்றமடைந்து யோசனையில் ஆழ்ந்தான் அவன்.
அக்காலத்தில் இல்லறம் நடத்துவதற்கு வேண்டிய பொருள்தேடும் முயற்சி ஆடவரைக் குடும்பத்தைவிட்டுப் பிரிக்கும் கொடுவாளாக இருந்ததையும், விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வாழ்க்கை வளம்பெற அதனைச் செய்தே ஆகவேண்டிய கட்டாயம் அவர்கட்கு அமைந்ததையும் பாலைத்திணைப் பாடல்கள் பலவும் பரக்கப்பேசுகின்றன.
உள்ளூரிலேயே செய்வதற்குத் தகுந்த தொழிலேதும் அமையாததால் அவர்கள் வெளியூர்களுக்கு வேலைதேடிச் சென்றார்களா? கடும் பாலைநிலங்களையும் கொடுஞ்சுரங்களையும் கடந்து அவர்கள் வேலைதேடிச் சென்ற ஊர்கள் யாவை? அங்கு அவர்கள் செய்த வேலைகள் என்ன? போன்ற பல கேள்விகளுக்குச் சங்கப் பாடல்களில் தெளிவான பதிலில்லை.
[தொடரும்]
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”மந்திக்கும், பால்பசு மாட்டுக்கும், பேதத்தை
சிந்திக்கா கண்ணன், சமத்துவ -நந்தன்
சுகுமாரன் நெய்வெண்ணை சோரன்வாத் சல்ய,
வெகுமானம் கேசவ் வரைவு’’….!”மந்திமனம் மண்ணிலே மண்டியிட்டுக் கண்ணனின்
பந்திக்கு முந்தும் பரவசத்தை, -தந்தீர்(கேசவ்): –
கிருஷ்ணப் பிரேமியென்றார் கோபுலு ஆசான்,
பிரஷ்ணப்(BRUSH) பிரேமிவெண் பாக்கு”….கிரேசி மோகன்….! -
என்னோடு வாழ வந்த வனிதை
மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++
என் கதையைக் கேட்பார் எங்காவது
எவரேனும் உள்ளாரா,
என்னோடு வாழ வந்த அந்தப்
பெண்ணைப் பற்றித் தெரிந்து கொள்ள ?
பெருங் கதை யுள்ள
பெண்ணைப் பற்றி அறிந்தால் நீ
வருத்தம் அடைவாய் !
ஆயினும்
ஒருநாள் கூட வேதனைப் படாய் !
அவளொரு பெண்ணே !
ஆம் பெண்ணே !
கடந்த போன கால மெல்லாம்
நினைத்த போது,
விலகிச் செல்ல முனைந்தி ருக்கிறேன்
கடினமாக !
அப்போது என்னை நோக்கி
அழத் துவங்குவாள் !
உறுதி செய்வாள் வெகுமதி அளிப்பதாய்;
நானும் அதை நம்புவேன் !
ஏனென அறியேன்!
அவளொரு பெண்ணே !
ஆம் பெண்ணே !
ஒரு மாதிரிப் பெண்ணவள்,
உனைத் தாழ்த்திட முனைபவள் !
உன் சகத் தோழர் முன்பு
உன்னை மூடனாய் ஆக்குபவள் !
நல்லவள் என்று
நான் அவளைப் பாராட்டும் சமயம்
முகக் குளிர்ச்சி தெரியும் !
அவளொரு பெண்ணே !
ஆம் பெண்ணே !
எவரேனும் சொல்லிக் கொடுத்தாரா
இளமையில் உள்ள போது,
துன்பம் அளித்தால்
இன்பம் விளையு மென்று ?
புரியுதா அவளுக்கு,
அனுதினமும்
ஒருவன் களியாட்டம் ஒதுக்கி
முதுகை முறித்துப் பணம்
சம்பாதிக்க வேண்டு மென்று ?
நம்புவாளா
அந்தப் பெண் அதை
அவன் செத்த பின்னும் ?
அவளொரு பெண்ணே !
ஆம் பெண்ணே !
+++++++++++++
-
உனக்கு மட்டும்
முதல் கோணல்
முற்றிலும் கோணல்
உன் வரவில்…..
உற்று நோக்கல் தவறா?
உற்று நோக்கியது தவறா?
வினாக்கள் தொடுத்து
இன்றுவரை
விடைகளைப் பெற முடியவில்லை
என்னால்…..
காரணம் கேட்க எந்தவித
பதிலும் வரவில்லை
உன்பார்வையின் தோற்றம்
இதுவரை வேண்டாதவனாய்
பார்ப்பவர்க்கு மட்டும் அது.
என்னைப் பொறுத்தவரை
வேண்டப்பட்டவராய்
மட்டுமே உன் வரவு…
ஊடல்களுக்கு நடுவில்
சில முரண்பாடுகளின்
விளக்கம் உன் வார்த்தையில்
தெளிவுபெறும் போது
சமாதனம் பெறுவது
மனம் மட்டுமல்ல…..
ஊடல்களைத் தீர்க்க
எந்த உறவுகளுக்கும்
தெரியாது மனம் செய்யும்
ஆறுதல் மொழி
உனக்கு மட்டுமே புரியும்
விளக்கம் இன்று வரைத் தேடலே…….
மூச்சுக் காற்றின்
வெம்மையும் இன்று
அனலாகத் தான்
வெளிப்படுகிறது….
நாள்தோறும் உன்னைத் தேடும் கண்களுக்கு
ஆறுதல் கூறுவது இனி
எப்படி என்பது தேடுதலாக அமைகிறது…..?
ஏக்கம் கொள்ளும்
மனதிற்குப் புரியுமா
இது இன்னொருவரின்
பொருள் என்று….
சொந்தம் கொண்டாட
உரிமையில்லை என்று
விளக்கும் பக்குவம்
மனதிற்கோ அறிவிற்கோ
எட்டாது கோபம்
இடைமறிக்கிறது….
விட்டுச் சென்று
வீரநடைப் போட்டு
வாழ்வைத் தொடங்க
மனம் செயல்பட
நினைக்கும் போதெல்லாம்
பார்வையின் பரிசம்
கண்முன் காட்சியாய்
தோன்ற கோபமும்
கானல் நீராய்
காணமல் போவது
வேடிக்கையாகத்தான்
இருக்கிறது………
கோபங்களைத் தாண்டி
மனம் உறுதியாக எடுக்கும்
முடிவினையும் உன் வார்த்தைகள்
பிளவுபடுத்துகிறது…..
நீ விருப்பம் போல செயல்பட
என் வெறுப்புகளை உன் மீது
வேண்டா வெறுப்பாய்
மட்டுமே திணிக்கிறேன்
நீ வேண்டாம் என்பதற்காக
அல்ல…… நீ விலகிச்
செல்வாய் என்பதற்காக…!
கிட்ட இருந்து
வேதனைப் படுவதைக் காண மனம்
இயங்காத போது
எட்ட இருந்து உன்
சந்தோசத்தை நிலைக்கச்
செய்ய முடியும் என்ற
நம்பிக்கையால் மட்டுமே…..
மழையைக் கூட
ரசிக்க மனம் ஒன்றவில்லை
மழையும் உன்னை
நினைவுபடுத்துகின்றது
பிரிந்து செல்ல மனம்
ஏதுவாக இல்லைதான்
இருப்பினும் என் பிரிவால்
உன்னை நீ பெறுவாய்
என்பதால் மட்டுமே
உனக்குரிய பொருள்
உனக்காக இருக்க
இடையே வந்தது
இடம் தெரியாமல்
போக மனம் ஒன்றாத போதிலும்
விலகிப் போக முடிவு
செய்த போதிலும் நடக்குமா
என்பது கேள்விக் குறியே…….!
சிந்து.மூ, உதவிப்பேராசியர்,தமிழ்த்துறை,கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்,ஈச்சநாரி.
































