Blog

  • கையறு நிலையை மாற்றுவோம்!

    பொலிகையூர் ரேகா

     

    தீய ராமன்கள் இணையானால்
    தீக்குளிக்கும் சீதையாகோம்!
    கண்ணகியாய் மாறிக்
    கணவனையும் எரிப்போம்!

    கூடையில் சுமக்கும் நளாயினி்களாயன்றிக்
    கூண்டினில் ஏற்றும்
    நாகினிகள் ஆவோம்!

    தமயந்திகளாயன்றித்
    தனித்துவம் காப்போம்
    சந்திரமதிகளாயன்றிச்
    சபதம் கொள்வோம்!
    வன்முறைகள் பல கண்ட
    வரலாறு எழுதட்டும் இனி
    வீறுகொண்ட வேங்கைகளைச்
    சீண்டிப் பார்க்காதீரென!

    காலம் காலமாய் வந்த
    கைவிலங்கை உடைத்தே
    காவியம் நாட்டுவோம்
    கையறு நிலையை மாற்றுவோம்!

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (241)

    சக்தி சக்திதாசன்

    அன்பானவர்களே !

    அன்புடன் கூடிய வணக்கங்கள். ஜூன் மாதத்தின் இறுதியில் நின்று கொண்டிருக்கிறோம். காலம் எவருக்கும் காத்து நிற்பதில்லை. அது காற்றைப் போல கனவேகத்தில் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. நாம் எமது கடமைகளைச் சரிவரச் செய்கிறோமோ இல்லையோ அது தன் கடமையில் தவறாமல் இருக்கிறது. காலத்தின் மாற்றம் எதைச் சாதித்திருக்கிறதோ இல்லையோ உலக மக்களின் வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது என்பதே உண்மை. இம்மாற்றங்களில் சில வாழ்வின் வசதிகளைக் கூட்டி வாழ்க்கை முறைகளை இலகுவாக்கியிருக்கிறது. மற்றும் சில மக்களிடையே இருந்த பிரிவுகளை அகற்றி மக்களின் ஒன்றுபடலுக்குத் துணை நின்றிருக்கின்றன. பலமாற்றங்களை நேர்மறையான உணர்வுடன் உள்வாங்கிக் கொண்ட மக்கள் வேறு சிலவற்றை எதிர்மறையான நோக்கத்தோடு எதிர்ப்பு மனப்பான்மையோடு அணுகுவதும் உண்டு. சிலருக்கு ஏற்புடையதாக இருக்கும் மாற்றங்கள் வேறு சிலருக்கோ முற்றிலும் ஏற்புடையதாக இருக்காது.

    கலாச்சாரத்தின் பெயரால், தாம் சார்ந்திருக்கும் மதத்தின் கோட்பாடுகளின் காரணமாக பல மாற்றங்களை உள்வாங்கிக் கொள்வதில் தயக்கம் காட்டுவோர் பலருண்டு. இன்றைய வைத்தியத்துறையின் முன்னேற்றங்களும் அதனால் மனிதகுலம் அடைந்திருக்கும் மேம்பாட்டையும் அனைவரும் அறிவோம். நவீனகால வைத்தியவசதிகளின் பால் எமக்கேற்படும் நோய்களுக்கான சிகிச்சைகளும் நவீனமயப்படுத்தப்பட்டு அதனால் நாமடையும் அனுகூலங்களை நாம் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வதே பெரும்பான்மையாக நிகழ்கிறது. ஆனால் அதேசமயம் ஒரு உதாரணத்தை எடுத்தோமானால் பல நோய்களுக்கு சிகிச்சை முறையாக இரத்த பரிமாற்றம் அன்றி இரத்த ஏற்றம் நிகழ்த்தப்படுகிறது. சில நேரங்களில் விபத்தின் மூலம் அதிக இரத்தம் இழக்கப்பட்ட ஒருவரின் உயிர் இரத்த வங்கியிலிருக்கும் இரத்தத்தைச் செலுத்துவதின் மூலமே காப்பாற்றப்படுகிறது. “ஜொகோவாஸ் விட்னஸ் ( Johova`s witness ) “ எனும் ஒருவகை கிறிஸ்தவ பிரிவைச் சேர்ந்தவர்களின் மதக்கோட்பாடுகளின் நிமித்தம் அடுத்தவர்களுடைய இரத்தம் உடலில் ஏற்படுவது பரவலாக மறுக்கப்படுகிறது. இதன் காரணமாக ஒரு உயிரைக் காப்பாற்றும் பொருட்டு வைத்தியர்கள் நீதிமன்றத்தின் மூலம் அத்தகைய தீர்வுகளைப் பெறவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட நிகழ்வுகள் பல நிகழ்ந்துள்ளன.

    இது மிகவும் சிக்கலான விடயமாகிறது, அதாவது கலாச்சாரத்தின் பெயரால். மதக் கோட்பாடுகளின் பெயரால் காப்பாற்றப்படக்கூடிய ஒரு உயிர் பறிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. இது நியாயமானதா ? இத்தகைய கலாச்சாரப் பின்னணிகள் அல்லது மதக் கோட்பாடுகள் உயிருக்கு பங்கம் விளைவிக்கும் நிலை ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதா எனும் விவாதங்கள் பல இடங்களில் பலரிடையே நடந்து கொண்டுதானிருக்கிறது. கலாச்சாரம் அல்லது மதம், இனம், நிறம் எனும் மக்களைப் பிரிக்கும் காரணிகளின் ஆதிக்கத்தை, அதன் நியாயத்தன்மையை சற்று ஆழமாக ஆராயவே சில உதாரணங்களை எடுத்துப்பார்க்க விழைந்தேன். இதற்கு ஓர் காரணம் உண்டு. இங்கிலாந்தில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் ஊடகங்களில் பரவலான விவாதத்தைக் கிளப்பி விட்டுள்ளது.

    அது என்ன ?

    unnamed (5)

    இங்கிலாந்திலுள்ள ” பார்க்‌ஷையர் (Berkshire)” எனும் இடத்தில் சந்தீப் மன்டீர், ரீனா மன்டீர் எனும் ஆசிய தம்பதியர் வசித்து வருகிறார்கள். இவர்கள் சீக்கிய கலாச்சாரப் பின்னணியைக் கொண்டவர்கள். ஆனால் இவர்கள் இருவரும் இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவர்கள். பத்து வருடங்களாக மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வரும் இவர்களுக்கு இருக்கும் ஒரே குறை குழந்தைகள் இல்லை என்பதுவே. மிகவும் வசதியாக ஒரு பெரிய வீட்டில் வசித்து வரும் இவர்கள் குழந்தைக்காக ஏராளனமான பணச்செலவில் பல சிகிச்சைகளை மேற்கொண்டும் எதுவும் பலனளிக்கவில்லை. அடுத்த முயற்சியாக அவர்கள் குழந்தையைத் தத்து எடுக்கும் முயற்சியில் இறங்கினார்கள். அதற்கான தயாரிப்புப் பயிற்சிகளுக்கான முன்பதிவு பயிற்சிகளை மேற்கொண்டு விட்டு தமது பகுதியிலுள்ளஅரசாங்க தத்து எடுக்கும் பிரிவுக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். அவர்களுக்குக் கிடைத்த பதில் அவர்களுக்கு பலத்த அதிர்ச்சியைக் கொடுத்தது.

    அப்படி என்ன அதிர்ச்சி ?

    அவர்களது கலாச்சாரப் பின்னணி இந்தியக் கலாச்சாரப் பின்னணியில் இருப்பதினால் அவர்களது விண்ணப்பத்தை மேலே எடுத்துச்செல்ல முடியாது. இதற்குக் காரணம் தற்போது அப்பகுதியில் தத்து எடுக்கப்படுவதற்காகக் காத்திருக்கும் குழந்தைகள் “வெள்ளை” இனத்தவர்கள் என்பதே. இனம், மதம், நிறம் எனும் வேறுபாடுகள் சட்டமூலமாக ஒழிக்கப்பட்ட ஒரு நாட்டிலே , இனங்களுக்கிடையில் கலப்புத் திருமணம் அதிகளவில் இடம்பெற்று வரும் ஒரு நாட்டிலே, பல்லினக் கலாச்சாரக் கொள்கையை ஊக்குவிக்கும் ஒரு நாட்டிலே அரசாங்கத் தரப்பினால் நடத்தப்படும் ஒரு அரச இலாகாவின் பதில் இனத்துவேஷத்தை முன்னிறுத்துவதாகவே இத்தம்பதியருக்குப்பட்டது. இப்பதிலினால் மிகவும் கொதிப்படைந்த அவர்கள் தொலைபேசி மூலம் அதற்கான இலாகாவைத் தொடர்பு கொண்டு மேலும் விளக்கம் கேட்டுள்ளார்கள். அப்போது அவர்களுக்கு கூறப்பட்ட விளக்கம் ஒரு குழந்தையைத் தத்து கொடுக்கும் போது அக்குழந்தையின் கலாச்சாரப் பின்னணியைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கு இத்தகைய குழந்தையைத் தத்துக் கொடுக்கும் அரசாங்கத் தரப்பிலான நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இது சட்டத்திற்கு புறம்பானது அல்ல ஏனெனில் அதற்கான விதிவிலக்குகள் சட்டத்தில் உள்ளன என்பதுவே.

    “நாங்கள் மிகவும் வசதியான வாழ்க்கை உள்ளவர்கள், எமது இல்லம் 5 அறைகளைக் கொண்டது. குழந்தையை வளர்க்கும் பொறுப்பை மிக பாதுகாப்பாகவும், அன்பாகவும் செய்வோம் ” என்று அவர்கள் கூறியதும். சகோதரர்களாகிய இரு குழந்தைகளை எடுக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதால் உங்கள் விண்ணப்பத்தைப் பரிசீலிக்கிறோம் என்று கூறி ஒரு உத்தியோகத்தரை அவர்களது இல்லத்துக்கு அனுப்பி வைத்தார்களாம். அவர்களது இல்லத்தை நன்கு பார்வையிட்டு அதன் செளகரியத்தை உள்வாங்கிக் கொண்டு, அவர்களுடன் ஓர் நேர் உரையாடலை நடத்திய பின்னர். இத்தகைய வசதி படைத்த உங்களுக்கு உங்களது கலாச்சாரப் பின்னணி இந்தியர் என்பதால் வெள்ளை இனக்குழந்தையைத் தத்து கொடுக்க முடியாததிற்கு வருந்துகிறேன் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார். இதனால் அவர்கள் மிகவும் மனமுடைந்து போயுள்ளார்கள். இந்த விடயத்தை நீதிமன்றம் வரை கொண்டு போக முடிவு செய்துள்ளார்கள். இங்கிலாந்திலே பிறந்து இங்கிலாந்திலே வளர்ந்து ஒரு வெள்ளை இனக்குழந்தையைப் போலவே வளர்ந்து பெரியவர்களாகிய தம்மை தமது நிறத்தின் காரணமாகவே தவிர்ப்பது மனதை மிகவும் வருத்துகிறது என்கிறார்கள். ஒரு குழந்தையைத் தத்து கொடுப்பதன் முன்னால் அதன் கலாச்சாரப் பின்னணி ஒத்துப்போகிறதா என்பதை ஒரு தகுதியாகப் பார்க்கலாமே தவிர மற்ற அனைத்துத் தகுதிகளும் சரியாக இருக்கும்பட்சத்தில் இது ஒன்றை மட்டுமே காரணமாகக் கொண்டு தம்மைத் தவிர்த்திருப்பதே குற்றம் என்கிறார்கள்.

    இவர்களது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் யார் தெரியுமா? இங்கிலாந்தின் பிரதமர் சாட்சாத் தெரேசா மே அவர்களே தான் ! இப்பிரச்சனை அவருக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அவர் இத்தம்பதியரின் விண்ணப்பத்தை ஆதரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.. இந்தப் பிரச்சனையை இரு பக்கமும் இருந்து பார்க்க வேண்டியது அவசியமாகிறது, தனது எதிர்காலத்தைத் தானே நிர்ணயிக்க முடியாத நிலையில் இருக்கும் குழந்தையை முற்றிலும் மாறான ஒரு கலாச்சாரத்தில் வளர்ந்த வெற்றின, வேறு நிறத்துப் பெற்றோருக்குத் தத்துக் கொடுப்பது நீதியாகுமா ? பின்னால் வளர்ந்ததும் அக்குழந்தையின் மனதை இது எவ்வகையில் பாதிக்கும்? இவையெல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டாமா என்பது ஒருபக்க வாதம். மதம், நிறம், இனம் என்பது குழந்தைகளுக்குத் தெரியுமா? பெற்றோர்களை இழந்து அரசாங்க அனாதை இல்லத்தில் வாழும் ஒரு குழந்தைக்குக் கிடைக்கப்போகும் அன்பைத் தமது அதிகாரத்தைக் கொண்டு தடுப்பது எப்படி நீதியாகும் ? அன்பே இங்கு முக்கியத்துவம் பெறப்பட வேண்டும். எந்த நிறத்தவராயினும் ஒரு குழந்தையைத் தமது குழந்தையாக அவர்களுக்கு ஒரு குடும்பச் சூழலைக் கொடுத்து வளர்ப்பதுதானே முக்கியமானது என்பது மறுபக்க வாதமாகிறது.

    சமீபத்தில் பத்திரிகைகளில் ஒரு செய்தி வந்தது ஒரு கறுப்பினக் குழந்தையை வெள்ளை இனப் பெற்றோர் தத்து எடுத்து வளர்த்து வருகிறார்கள். அக்குழந்தை தனது முகத்துக்கு அதிக அளவு சோப் இட்டுக் கழுவ முயற்சித்ததாம். அதற்குக் காரணம் தானும் தனது பெற்றோரின் நிறத்தைப் பெறவேண்டும் என்று கூறியதாம். இதைச் சுட்டிக்காட்டும் சிலர் இத்தகைய வித்தியாசமான கலாச்சாரப் பின்னைக் கலப்புகள் குழந்தைகளின் மனதில் மனநலக்குறைவையே உண்டாக்கிவிடக் கூடும் என்று கூறுகிறார்கள். அதேபோல மற்றொரு உதாரணம் கலப்புமணத் தம்பதியருக்குப் பிறந்த குழந்தை பள்ளிக்குப் போகும் பருவம். பள்ளியில் இருந்து அவர்களது தாத்தா, பாட்டி அழைத்துச் செல்வார்கள். இக்குழந்தையின் ஆசிய தாத்தா, பாட்டி வந்து தன்னை அழைத்துச் செல்வதை அந்தக்குழந்தை விரும்பவில்லையாம். ஏனெனில் அவர்கள் மற்றைய வெள்ளை இனக்குழந்தைகளின் தாத்தா, பாட்டி போலில்லை எனும் காரணத்தினால்.

    அதேசமயம் பெற்றோரின் அரவணைப்பின்றி, பெற்றோரின் நல்வழிப்படுத்தலின்றி அனாதை இல்லங்களில் வாழும் பல சிறுவர்களே குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இனம் எதுவாக இருந்தாலும் அவர்களும் ஒரு பெற்றோரின் அன்பிலும், பாதுகாப்பிலும் வாழ்ந்தால் நன்றாகப் படித்து ஒரு நல்ல நாட்டுப்பிரஜையாக வாழும் சந்தர்ப்பத்தைப் பெறுகிறார்கள். ஆகவே வேறுபாடுகளின்றி வசதியாகப் பராமரிக்கக் கூடியவர்களுக்கு இனப்பாகுபாடின்றி குழந்தைகளைத் தத்துக் கொடுப்பது ஒரு அறிவார்ந்த செயல் என்பதும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதே !

    இந்தத் தம்பதியரைப் பொறுத்த அளவில் அவர்கள் இப்போது அமெரிக்காவில் இருந்து தத்தெடுக்க முயற்சிக்கிறார்கள். இருப்பினும் இங்கிலாந்தில் தமக்குத் தத்துக் கொடுப்பதற்கு மறுத்ததை நீதிமன்றத்தில் வாதாடப் போவதாகக் கூறியுள்ளார்கள். இது தமக்காக மட்டுமல்ல தம்மைப் போன்ற மற்றைய பெற்றோர்களுக்காகவும், அனாதைக் குழந்தைகளுக்காகவும் என்று கூறுகிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக முன்பொரு வழக்கில் இவர்களுக்குச் சாதகமான தீர்ப்பு மற்றொரு வழக்கில் வழங்கப்பட்டுள்ளது நம்பிக்கை அளிப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வழக்கின் முடிவை அனைத்துத் தரப்பினரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள். அனாதை இல்லங்களில் வாடும் குழந்தைகளும் உட்பட.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • புருஷ அவ(ள்)லட்ஷணம்

    கந்தலடி நீயெனக்கு -கசக்கிக்
    கட்டிடும் கஞ்சன் நானுக்கு
    சந்தையடி நீயெனக்கு -டமார
    செவிட்டுப் பொணமடி நானுக்கு
    மொந்தையடி நானுக்கு -மறுநாள்
    மண்டையிடி HANGOVER நீயெனக்கு
    அந்த அடி அங்குலம் ஈறாராகும் -அடியேயுன்
    அடியால் அடியேன்பல் சுக்குநூறாகும்….கிரேசி மோகன்….!

    Share
  • இரண்டாவது கூடங்குள ரஷ்ய அணுமின் உலை 1000 மெகாவாட் ஆற்றல் உச்சத்திறனில் இயங்குகிறது

    Posted on June 29, 2017

     unnamed (6)

    இரண்டாவது கூடங்குளம் ரஷ்ய அணுமின்சக்தி நிலையம் உச்சத் திறனில் இயங்குகிறது.

    2017 மார்ச் 31 தேதி முதல் இரண்டாவது கூடங்குளம் ரஷ்ய அணுமின்சக்தி நிலையம் முழுத்திறன் 1000 MWe ஆற்றலில் சிறப்பாக இயங்கி வருகிறது.  கட்டட அமைப்புகள், யந்திரச் சாதனங்கள் இணைக்கப்பட்டு, அணுக்கரு எரிக்கோல்கள் நிரப்பப்பட்டுப் பாதுகாப்பு இயக்கங்கள் நிறைவேறி அணு உலை 2016 ஜூலை 10 ஆம் தேதி பூரண இயக்க நிலை [First Criticality] அடைந்தது.  அதற்குப் பிறகு மேனிலை ஆற்றல் பாதுகாப்புச் சோதனைகள் பூர்த்தியாகி முதன்முதல் 245 MWe ஆற்றல் மின்சாரம் 2016 ஆகஸ்டு 29 இல், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி தென்னக மின்வடங்களில் பரிமாறப் பட்டது.  இந்த அரியபெரும் சாதனைக்கு ரஷ்ய உதவி பயன்பட்டாலும், இந்திய விஞ்ஞானப் பொறியியல் நிபுணருக்கே பேரளவு பங்கு மதிப்பு நாம் தரவேண்டும். இந்த இரண்டு ரஷ்ய அணுமின்சக்தி நிலைய இயக்கங்களும் இந்திய அணுசக்தி நெறிப்பாடு ஆணையகத்தின் [Atomic Energy Regulatory Board (AERB)] நேரடிக் கண்காணிப்பில்)தான் நிகழ்ந்துள்ளன.  செர்நோபிள், புகுஷிமா அணு உலை விபத்துக்களுக்குப் பிறகு, கூடங்குள ரஷ்ய அணுமின்சக்தி நிலையங்களின் [VVER-1000] இயக்கப் பாதுகாப்பு முறைகள் ஆழ்ந்து மீளாய்வுகள் செய்யப்பட்டு, அணு உலை, இயக்குநர், பொது மக்கள், சூழ்வெளி ஆகியவற்றுக்குக் கதிரியக்கப் பாதகம் நேராதபடிச் சாதனங்கள், இயக்கப் பண்பாடுகள் மாறப்பட்டுப்  புதுப்பிக்கப் பட்டவை.  

    Image result for Power Plant in India

    இரண்டாவது ரஷ்ய அணுசக்தி யூனிட் அனுப்பும் முழுத்திறன் ஆற்றல் 1000 MWe சேர்ந்து இப்போது இந்தியாவின் அணுமின் சக்தி ஆக்கத்திறன் 6780 மெகாவாட் ஆகியுள்ளது.   இரட்டை 1000 மெகாவாட் கூடங்குளம் அணுமின்சக்தி நிலையம் சைனா, ஜப்பானுக்கு அடுத்தபடி ஆசியப் பெரும் இயக்க அணுமின்சக்தி நிலையமாகக் கருதப்படுகிறது.  அடுத்து இரண்டு VVER -1000 மெகாவாட் யூனிட்டுகளின் கட்டுமான வேலைப்பாடுகள் துவங்கிவிட்டன.  அவை இரண்டும் இயங்கத் துவங்கினால் ஒரே இடத்தில் 4000 மெகாவாட் ஆக்கும் நான்கு பெரிய அணுமின்சக்தி நிலையங்கள் இயங்கும் கூடங்குளம் உலகப் பெரும் தளங்களில் ஒன்றாக மதிக்கபடும்.  2016 – 2017 இல் முதல் யூனிட் 189 நாட்களாகத் தொடர்ந்து 100% நெருங்கிய திறனில் இயங்கி வருவதாய் இந்திய அணுமின்சக்தி ஆணையகம் [Nuclear Power Corporation of India, Limited]  [NPCIL]  அறிவித்துள்ளது.  முதல் கூடங்குள நிலையம், 2013 அக்டோபர் முதல் சுமார் 11269 மில்லியன் யூனிட்  மின்சாரம் பரிமாறியுள்ளது.  தற்போது அதன் யூனிட் மின்சாரம் ரூ. 3.89 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.  

    Image result for www.npcil

    முதலாவது கூடங்குளம் ரஷ்ய அணுமின்சக்தி நிலையம் உச்சத் திறனில் இயங்குகிறது.  

    2014 ஜூன் 7 ஆம் தேதி கூடங்குளம் ரஷ்ய அணுமின்சக்தி நிலையம் முதன்முதல் 1000 MWe உச்ச நிலை ஆற்றலில் வெற்றிகரமாக இயங்கி மின்சாரம் தமிழ்நாட்டுக்கு மின்வடங்களில் அனுப்பி வருகிறது.   இந்த முதல் அணுமின் உலை ஆரம்பநிலை இயக்கப் பாதுகாப்புத் தேர்வுகள் முடிந்து, பூரணத்துவம் அடைந்த தேதி : 2013 ஜூலை 14.  மின்னாற்றல் திறன் ஏற்றமாகி 400 மெகாவாட் மேல்நிலை எட்டிய போது முதன்முதல் மின்வடங்களில் இணைப்பாகி, அனுப்பியது.   முதல் யூனிட் அடித்தளம் 2001 இல் போடப்பட்டு, கட்டி முடிந்த பிறகு, கூடங்குள ஊர்ப்புற எதிர்ப்பாளர் போராட்ட நிறுத்தத்தால்  அணு உலை இயக்கம் இரண்டு வருடங்கள் தாமதமானது.   அடுத்த இரண்டாம் யூனிட் இன்னும் ஓரிரு ஆண்டுக்குள்  இயக்கப் பாதுகாப்புத் தேர்வுகள் முடிந்து, மேலும் 1000 MW மின்சக்தி உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கலாம்..

    Image result for www.npcil

    பின்புலம் :  அணு உலையா ? வாழ்வுக்கு உலையா ?  இப்படி மேலோடி இடித்துரைப்பது ஓர் அசுரப் போக்கு.  அணு உலை அருகே வாழ்பவருக்கு எல்லாம் ஆறாம் விரல் முளைக்குது, புற்று நோய் தாக்குது என்றெல்லாம் நையாண்டி செய்வது அறிஞர்களின் கோமாளித்தனம்.  புற்று நோயுடன் மற்ற நோயும் தொற்றுது என்னும் பாட்டி கதைகளைக் கட்டிக் எறிந்து விட்டு சற்று புள்ளி விபரத்தோடு டாக்டர் புகழேந்தி ஆய்ந்து காட்டினால் நாமெல்லாம் நம்பலாம்.  கல்பாக்கத்தில் அணு உலை கட்டும் முன்பு அத்தகைய நோய்களால் துன்புற்றோர் அல்லது செத்தவர் எத்தனை பேர் ?  அப்போது அங்கு வாழும் நபருக்கு எத்தனை விரல்கள் இருந்தன என்று எண்ணிப் பார்த்தவர் யார் ?  அணு உலைகள் கட்டிய பின் இயங்கும் போது எத்தனை பேர் புற்று நோயில் செத்தனர், மற்ற நோயில் மடிந்தனர் என்ற எண்ணிக்கைகள் தேவை.  அப்படி அதிகமானால் அந்த தொகை கூறப்பட வேண்டும். அந்தப் புற்று நோய்கள், உடல் ஊனங்கள் அணு உலைக் கதிரடியால் உண்டாயின என்பது ஆதாரமோடு நிரூபிக்கப் பட வேண்டும். அப்போதுதான் அணு உலையால் மனிதருக்கு ஆறாவது விரல் முளைத்த விந்தைகளைப் பற்றி மக்களிடம் புகாரிடலாம்.

    Image result for npcil

    உலகத்திலே இப்போது இயங்கி வரும் (435+284+220) 939 அணு உலைகளுக்கு அருகில் வாழ்வோர் யாராவது புற்று நோயுற்றுத் செததால் அங்குள்ள பராக்கிரம யூனியன் நிலைய அதிகாரிகளைச் சும்மா விட்டுவிடுமா ? அவர்களைச் சிறையிலிட்டு பெருத்த நட்ட ஈடைப் பிடுங்கி விடும்.  நான் இந்தியாவிலும் கனடாவிலும் 45 ஆண்டுகளுக்கு மேல் யுரேனிய எரிசக்தி ஊட்டும் யந்திரக் கதிரியக்க வேலைகளில் நேரிடையாகத் தொடர்ந்து பணியாற்றி யிருக்கிறேன்.  இப்போது பொறியியல் படித்த என் புதல்வி கனடாவில் பிக்கரிங் அணுமின் நிலையத்தில் பணி புரிகிறாள்.  அவளது கணவரும் டார்லிங்டன் என்று அழைக்கப்படும் வேறோர் அணுமின் நிலையத்தில் எஞ்சினியராகப் பணி செய்கிறார்.  எனக்கோ, அவர்களுக்கோ அவரது இரண்டு பிள்ளைகளுக்கோ எவருக்கும் ஆறாவது விரல் முளைக்க வில்லை.  ஆகவே உதயகுமார் போன்ற அணுவியல் பொறிநுணுக்கவாதிகள், ஞாநி போன்ற எழுத்தாளர்கள், டாக்டர் புகழேந்தி போன்ற மருத்துவர்கள் ஆதாரமற்ற மூன்றாவது நபர் கருத்துக்களைப் பாமர மக்களுக்கு ஊட்டிப் பயமுறுத்தும் வழக்கத்தைக் கைவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

    Schematic Pressurized Reactor

    பேரறிஞர் ஞாநி கல்பாக்க அணு உலைகள் தூங்கும் எரிமலை மேல் நடனம் ஆடுகின்றன என்று அபாயச் சங்கு ஊதுகிறார்.  கூடங்குளம் இரட்டை அணு உலைகள் எரிமலைப் பாறைமேல் பள்ளி கொண்டுள்ள தாக பெரிய புராணம் எழுதியுள்ளார் அடுத்தொருவர் ரா ரமேஷ்.. கல்பாக்கத்துக்கும், கூடங்குளத்துக்கும் இப்போது பிரச்சனை அணுமின் உலைகள் அல்ல !  அவற்றின் கீழாகத் தூங்கும் எரிமலைகள் ! எரிமலைக்கும் அணு உலைக்கும் வரும் சடுகுடுப் போட்டியில் அஞ்ச வேண்டியது எரிமலைக்கு, அணு உலை பாதுகாப்பாக புதைபடும். எரிமலைப் பூதங்கள் தூங்கும் சென்னைக் கடற்கரை மக்களும், குமரிக் கடற்கரை மக்களும் கோடிக் கணக்கில் எங்கே, எப்படிப் புலம் பெயரப் போகிறார்கள் ?

    2012 மார்ச்சில் ஞாநி கல்பாக்கம் அணுமின் உலைகள் தூங்கும் எரிமலை மேல் படுத்துள்ளது என்றும், அது 1757 ஜனவரி 20 இல் வெடித்ததை பரிணாம வளர்ச்சி மேதை டாக்டர் சார்லஸ் டார்வின் நேராகப் பார்த்ததாக ரா. ரமேஷ் தன் நூலில் எழுதி இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.  டார்வின் பிறந்து, இறந்த ஆண்டுகள். (1809-1882). இந்து மாக் கடலில் 1831-1835 ஆண்டுகளில் பயணம் செய்த டார்வின் கப்பல் கல்பாக்கம் அருகில் சென்றதாக அவரது கடல் வரைபடத்தில் இல்லை.  அது ஈழத் தீவுக்குத் தெற்கே ஆயிரம் மைல்களுக்கு அப்பால் சென்றது.  1757 இல் எரிமலை மூச்சு விட்ட புகைத்தடம் கூட அந்த தூரத்தில் தெரிந்திருக்க முடியாது.

    அணு உலை எதிர்ப்பாளி உதயகுமாரின் சில வினாக்களுக்கு என் பதில்

    ////கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோருவதற்கான காரணங்கள் (கீற்றில் வந்தது)  உதயகுமார் திங்கள், 12 செப்டம்பர் 2011 ///
     
    http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=16513

    /////கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 1, 2 உள்ளூர் மக்களை கலந்தாலோசிக்காது, ஜனநாயக, மனித உரிமை மரபுகளை மீறி கட்டப்படுகின்றன. 1, 2 உலைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை மக்களோடு பகிர்ந்து கொள்ளப்படவில்லை. கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை. 1, 2 உலைகள் அமைக்கப் பட்டிருக்கும் தலங்கள் பற்றிய ரசிய விஞ்ஞானிகளின் ஆதங்கங்கள் மூடி மறைக்கப்பட்டதோடு, தல ஆய்வறிக்கை (site Evaluation Study) மக்களுக்கு தரப்படவில்லை. பாதுகாப்பு ஆய்வறிக்கையும் (Safety Analysis Report) பொதுமக்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கு, பத்திரிக்கையாளர்களுக்கு அளிக்கப் படவில்லை. இப்படி மக்களுக்கு எந்தத் தகவலும் தராமல், உண்மைகளைச் சொல்லாமல், ஜனநாயக மரபுகளை மீறி நிறைவேற்றப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.

    kudankulam_323தமிழ்நாடு அரசின் அரசாணை எண். 828 (29.4.1991 – பொதுப்பணித்துறை) அணுமின் நிலையத்திலிருந்து 2 கி.மீ தூரத்திற்குள் அணுமின் கட்டிடங்களைத் தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாது என்றும், 2 முதல் 5 கி.மீ சுற்றளவிலான பகுதி நுண்ம ஒழிப்பு செய்யப்பட்ட பகுதியாக (Sterilization Zone) இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது. வீடுகளோ, மனிதர்களோ இருக்கக்கூடாது என்பதை நேரடியாகக் குறிப்பிடாமல், திசை திருப்பும் வார்த்தைகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அரசின் உண்மைநிலை என்ன என்பதை தெளிவாக தெரிவிக்கவில்லை.

    i) AERB எனும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் விதிமுறைகள் படி 5 கி.மீ. சுற்றளவுக்குள் 20,000 பேருக்கு மேல் வசிக்கக்கூடாது. அணுமின் நிலையத்திலிருந்து 10 கி.மீ தூரத்திற்குள்ளேயே கூடங்குளம் கிராமத்தில் 20,000 மக்களும், இடிந்தகரை கிராமத்தில் 12,000 மக்களும், காசா நகரில் 450 குடும்பங்களும் வசிக்கிறார்கள்.

    ii) 10 கி.மீ சுற்றளவுக்குள் மாநிலத்தின் சராசரி மக்கள் அடர்த்தியின் மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவாகவே மக்கள் இருக்க வேண்டும். ஆனால் மாநில சராசரியை விட மிக அதிகமான மக்கள் இந்த பகுதியில் நெருக்கமாக வாழ்கிறார்கள்.

    Image result for npcil

    iii) 30 கி.மீ சுற்றளவுக்குள் 1,00,000-க்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள் இருக்கக்கூடாது. ஆனால் 2,00,000 மக்கள் வாழும் நாகர்கோவில் நகரம் 28 கி.மீ தூரத்திற்குள் இருக்கிறது.

    iv) 20 கி.மீ சுற்றளவுக்குள் சுற்றுலாத் தலங்களோ, சரித்திர பிரசித்தி பெற்ற இடங்களோ இருக்கக்கூடாது என்று AERB சொன்னாலும் உலக பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி 15 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கிறது.

    இப்படி கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 30 கி.மீ சுற்றளவுக்குள் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில் எங்களை வெளியேற்றுவதோ, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதோ, எங்களுக்கு தேவையான இருப்பிட வசதிகளை செய்வதோ, மருத்துவ வசதிகள் செய்து தருவதோ, பள்ளிகள் அமைத்து தருவதோ, மாற்று வேலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதோ கற்பனையில் கூட நடக்காத காரியம். 2004 டிசம்பர் சுனாமியில் மத்திய மாநில அரசினர் கொண்டிருந்த பேரிடர் மேலாண்மையை நாடே அறியும்.////

    VVER cutout



    என் பதில் : அணுமின் உலைகளுக்கு அருகில் வாழும் மக்கள் எண்ணிக்கை கூடிக் குறைந்து மாறுவது.  2001 இல் கூடங்குள அணுமின்னுலை கட்ட ஆரம்பித்துடன் இருந்த ஜனத்தொகை பத்தாண்டுக்குப் பிறகு அதிகமா யிருக்கும்.  கனடாவில் கடந்த 40 ஆண்டுகளாய்ப் பாதுகாப்பாய் இயங்கி வரும் 12 பெரிய கனநீர் அணுமின் நிலையங்கள் (இந்திய கனநீர் அணுமின் உலைகளை ஒத்தவை). ஜனத்தொகை மிக்க டொரோண்டோ நகருக்கு (மில்லியன் 2011) அருகில் மின்சாரம் அனுப்பி வருகின்றன.  மனித நெருக்கம் புலப் பெயர்ச்சிக்கு  இடையூறாய் இருக்கும்.  கட்டி முடித்த அணுமின் உலைகள் பாதுகாப்பாக இயங்க முடியும். அவை யாவும் மனித நெருக்கத்தால் மூடப் பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

    ///அணுஉலைக் கட்டிடங்களின், குழாய்களின் மோசமான தரம், கட்டிடம் கட்டியதை உடைத்து மீண்டும் கட்டுவதான திருவிளையாடல்கள், உள்ளூர் காண்டிராக்டர்களின் கைங்கரியங்கள், ரசியாவில் இருந்து தாறுமாறாகவும் தலைகீழாகவும் வந்த உதிரிபாகங்கள், நிர்வாக குழப்பங்கள், குளறுபடிகள் என அடிவயிற்றை புரட்டிப் போடும் தகவல்கள், அனுதினமும்  வந்து கொண்டே இருக்கின்றன. 26.9.2006 அன்று அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வருகை தந்தார். அணுசக்தித் துறை உயர் அதிகாரிகளோடு அவர் நின்று கொண்டிருந்த போது கூரையில் இருந்து ஊழியர் ஒருவர் ஓரிரு அடி தூரத்தில் பொத்தென்று விழுந்து அனைவரையும் கதி கலங்கச் செய்தார். குடியரசுத் தலைவர் வந்தபோதே இந்த நிலை என்றால், குடிமக்களுக்கு என்ன நிலை? /////

    Image result for Power Plant in India

    என் பதில் :   யந்திர யுகத்தில் தொழிற்சாலை விபத்துக்கள் ஏதாவது நேர்வது உண்மை.  ஆனால் கடந்த 40 ஆண்டில் அடுத்தடுத்து இயங்கும் 20 இந்திய அணு உலைகளில் ஒருவர் கூட இதுவரை மரிக்க வில்லை என்பதும் உண்மை.  கதிரடி பட்டு இதுவரை ஒருவர் கூட நோய்வாய்ப்பட வில்லை என்பதும் உண்மை.

    /////உலைகளை குளிர்விக்கும் சூடான கதிர்வீச்சு கலந்த தண்ணீரையும், உப்பு அகற்றி ஆலைகளில் இருந்து வெளிவரும் உப்பு, சேறு, ரசாயனங்களையும் கடலில் கொட்டி, ஊட்டச்சத்து மிகுந்த கடல் உணவையும் நச்சாக்கப் போகிறோம். உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகும். மீனவர்களின் விவசாயிகளின் வாழ்வுரி மையும், வாழ்வாதார உரிமைகளும் முற்றிலுமாக அழிக்கப்படும். விபத்துக்களோ, விபரீதங்களோ நடக்கவில்லை என்றாலும் அணு உலைகளில் இருந்து அனுதினமும் வெளியாகும் கதிர்வீச்சு நச்சுப் பொருள்களை உண்டு, பருகி, சுவாசித்து, தொட்டு அணு அணுவாய் சிதைந்து போவோம்.///

    என் பதில் :    உலகத்தில் கடந்த 40 ஆண்டுகளால் அடுத்தடுத்து இயங்கி வரும் 430 மேற்பட்ட அணுமின் உலைகளில் பெரும்பான்மையானவை நதிக் கரையிலோ, கடற்கரையிலோ, ஏரிக்கரை மீதோதான் அமைக்கப் பட்டுள்ளன.  ஆகவே மேற்கூறிய கருத்து முற்றிலும் மெய்யாகாது.  அணு உலைகளில் இருந்து அனுதினமும் கதிர்வீச்சு நச்சுப் பொருள்கள் வெளியாவதில்லை.  விபத்துக்கள் அனுதினம் நேர்வதில்லை.  என்ன ஆதாரம் வைத்து இப்படி வெறுமையாகப் புகார் செய்ய முடியும் ?  அனுதினம் வெளியாகும் திரவ, திடக் கழிவுகள், வாயுப் புகை யாவும் சோதிக்கப் படாமல் வெளியே விடப் படுவதில்லை.

    ////பேரிடர்கள் வராது, நடக்காது, என்று தரப்படும் வெற்று வாக்குறுதிகளை ஏற்க முடியாது. 2003 பிப்ரவரி 9ம் தேதி இரவு 9.45 மணி அளவில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங் கோட்டையில் ஒரு மெலிதான நிலநடுக்கம் ஏற்பட்டது. 2006 மார்ச் 19ம் தேதி மாலை 6.50 மணிக்கு கூடங்குளத்தை சுற்றியுள்ள கன்னன்குளம், அஞ்சுகிராமம், அழகப்புரம், மயிலாடி, சுவாமிதோப்பு போன்ற கிராமங்களில் நில அதிர்வு உண்டானது. வீடுகளின் சுவர்களிலும், கூரைகளிலும் கீறல்களும், விரிசல்களும் தோன்றின. இரண்டு நாட்கள் கழித்து மார்ச் 21ம் தேதி கரூர் மாவட்டத்தில் அதிகாலை 1.30 மணிக்கும், 5.00 மணிக்கும் நில அதிர்வுகள் உண்டாகின. 2011 ஆகத்து முதல் வாரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் நிலநடுக்கம் நடந்திருக்கிறது. மார்ச் 11, 2011 அன்று நடந்த புகுசிமா விபத்தினால் அமெரிக்க அணு உலைகள் ஜப்பானின் மேலாண்மை இருந்த பிறகும் வெடித்து கதிர்வீச்சை உமிழ்ந்திருக் கின்றன. கூடங்குளம் அணுமின் நிலையம் 2004 டிசம்பர் சுனாமிக்கு முன்பே கட்டப்பட்ட நிலையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக அணுசக்தித் துறை சொல்லும் வாதங்கள் உண்மைக்கு புறம்பானவை. /////

    என் பதில் :   9 ரிக்டர் அளவு பயங்கர நிலநடுக்கத்தில் கூட ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையங்கள் எதுவும் பாதிக்கப் படவில்லை.  அத்தனை அணுமின் உலைகளும் நிலம் நடுங்கியதும் பாதுகாப்பாய் நிறுத்தமாயின.  நிறுத்தமான அணு உலையில் அபாய வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் சுனாமியில் மூழ்கிப் போனதாலும், இரட்டை அல்லது முப்படி வெப்ப தணிப்பு ஏற்பாடுகள், (Shutdown Cooling Systems) ஓய்வுத் தணிப்பு அமைப்பு (Passive / Gravity Cooling Systems) இல்லாததாலும் எருக்கோல்கள் சில உருகிக் கதிரியக்கம் கசிந்தது.  கூடங்குளத்தில் அவ்விதப் பிரச்சனைகள் எழமாட்டா.

    1979 இல் நேர்ந்த திரிமைல் தீவு அணுமின் நிலைய விபத்தில் ஹைடிரஜன் வாயுக் கோளம் உருண்டு விபத்து ஏற்படப் பயமுறுத்தினாலும் வெடிப்பு ஏற்பட வில்லை..  அந்த கதிரிக்க விபத்துக்குப் பிறகு உலக நாடுகள் தமது அணுமின் உலைகளில் ஹைடிரஜன் வாயு இணைப்பிகளை (Hydrogen Recombiners) உடனே அமைத்துக் கொண்டன.  தனியார் துறை இயக்கும் புகுஷிமா ஜப்பான் அணுமின் உலைகளில் அவ்விதம் ஏன் இல்லாமல் போயின என்பது 2011 ஆம் ஆண்டில் வியப்பாக இருக்கிறது.  கூடங்குளத்தில் ஹைடிரஜன் வாயு இணைப்பிகள் இருப்பதால் அந்தப் பிரச்சனை எழாது.

    ////அணுமின் நிலையங்கள் மீதான தீவிரவாத அச்சுறுத்தல் பற்றி பாரத பிரதமரே அவ்வப்போது எச்சரித்து வருகிறார். ஆகத்து 18, 2011 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் உள்துறை துணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அணுமின் நிலையங்கள் பயங்கரவாத குழுக்களின் முக்கிய இலக்குகளாக இருக்கின்றன என்கிறார்.////

    என் பதில் :   அமெரிக்காவில் 9/11 மூர்க்கரின் வரலாற்று முக்கிய தாக்குதலில் ஓரிரு நாட்களில் 5000 பேர் ஜெட் விமான மோதலில் மாண்டனர்.  அதன் பிறகு உலகின் 430 மேற்பட்ட அனைத்து அணுமின் உலைகளும் இராணுவப் பாதுகாப்பில் இயங்கத் துவங்கின.  மூர்க்கர் அணு உலைகள் அருகில் வராமல் பாதுகாக்க வேண்டுமே தவிர பயந்து போய் அவற்றை மூடிவிடக் கூடாது.

    ////2007 பிப்ரவரி மாதம் அப்போதைய தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி வசிப்பவர்களுக்கு இலவச குழுக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். சுமார் 1 வருடத்திற்கு முன்னால் இந்திய அணுமின் கழகமும், இந்தியாவுக்கு அணு உலைகள் வழங்கும் ஆட்டம் ஸ்டராய் எக்ஸ்போர்ட் என்னும் ரசிய நிறுவனமும் இழப்பீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ரசியா வழங்கும் உலைகளில் ஏதேனும் விபத்துக்கள் நிகழ்ந்தால், இழப்பீடு வழங்க வேண்டும் என இந்தியா கேட்க, அந்த மாதிரியான உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்ள முடியாது, உலைகளை இயக்கு கின்ற இந்திய அணுமின் கழகமே முழுப் பொறுப்பு ஏற்க வேணுடும் என ரசியா கையை விரித்தது. 2 008ம் ஆண்டு ரகசியமாக கையெழுத்திடப்பட்ட இரு நாட்டு உடன்படிக்கை ஒன்றின் 13-வது சரத்து இதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது என்று சொல்கிறது ரசியா. போபால் நச்சுவாயுக் கசிவில் பாதிக்கப்பட்ட மக்கள் 25 ஆண்டுகள் கழித்தும் இன்னும் இழப்பீடுகள் பெறாமல், எந்தவிதமான உதவிகளும் கிடைக்காமல் வதைப்பட்டுக் கொண்டிருப்பது மொத்த இந்தியாவுக்கே, உலகத்திற்கே தெரியும்.////

    என் பதில் :    போபால் விஷவாயு விபத்துக் கசிவில் பல்லாயிரம் இந்தியர் மரித்தனர்.  பல்லாயிரம் இந்தியர் கண்ணிழந்தார்.  அங்கயீனப் பிறப்புகள் உண்டாயின.  அவருக்கு முறையான காப்பீடு இழப்பு நிதி சரியான தருணத்தில் அளிக்கப் படவில்லை என்பது உண்மை.  இரசாயனத் தொழிற்துறை நிறுவகங்களில் இந்திய அணுசக்திச் சட்டம் போல் (Atomic Energy Act) தெளிவாகக் காப்பீடு முறைகள்/பொறுப்புகள் விளக்கமாக எழுதப் படவில்லை.  ரஷ்ய அணு உலைச் சாதனங்கள் ஆரம்பத்தில் பழுதானல் அவற்றைச் செம்மைப் படுத்தும் பொறுப்பு & செலவு ரஷ்யாவைச் சேர்ந்தது.  அணு உலை இயங்க ஆரம்பித்து மனிதத் தவறாலோ, யந்திரப் பிசகாலோ விபத்து உண்டானால் அந்த நிதி இழப்பை நியூகிளியர் பவர் கம்பெனி (NPCIL) ஏற்றுக் கொள்ளும். செலவு குறிப்பிட்ட வரம்பு மாறினால், இந்திய அரசாங்கம் ஈடு செய்யும்.

    ////அணுஉலை கழிவு ஒரு பெரிய பிரச்சனை. கூடங்குளம் அணுமின் நிலைய கழிவு ரசியாவுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றுதான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர் அது இந்தியாவிலேயே மறு சுழற்சி செய்யப்படும் என்றும், கூடங்குளத்திலேயே அதற்கான உலை நிறுவப்படலாம் எனவும் தெரிவித்தனர். கூடங்குளம் அணு உலைகள் ஆண்டுக்கு சுமார் 30 டன் யுரேனியத்தை பயன்படுத்தும். ஏறத்தாழ 30 ஆண்டுகள் இயங்கும் போது 900 டன் கழிவு வெளியாகும். பயங்கரமான கதிர்வீச்சை வெளியிடும் இந்த கொடிய நச்சை 24,000 ஆண்டுகள் நாம், நமது குழந்தைகள், நமது பேரக்குழந்தைகள் அவரது வழித் தோன்றல்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அபாயகரமான இந்தக் கழிவுகளை தேக்கி வைத்திருப்ப தாலும், மறு சுழற்சி செய்வதாலும் நிலத்தடி நீரும், காற்றும் பாதிக்கப்படும். நமது விளை நிலங்களும், பயிர்களும், கால்நடைகளும் பாதிக்கப்படும்.///

    என் பதில்  :  கூடங்குள அணு உலைத் தீய்ந்த எருக்கோல்களை மீண்டும் ரஷ்யாவுக்கு அனுப்பலாம்.  அல்லது சுத்தீகரித்து எஞ்சிய எருக்கருவை மீட்கலாம்.  இவற்றில் முதல் பொறுப்பு இந்தியாவுக்கு நிதி விழுங்குவது. கப்பலில் கனத்த கவசமோடு நீண்ட தூரம் அனுப்பவதில் சிரமங்கள் அதிகம். தீய்ந்த எருக்கருச் சுத்தீகரிப்பு முறைகள் இந்திய அணுவியல் நிபுணருக்குப் பழக்கமானவை.  மேலும் சேமிப்புச் சுரங்கங்களில் கதிரியக்கக் கசிவுகள் நேர்வதில்லை.  இரண்டாம் வழியைப் பின்பற்றுவதில் பாதுகாப்பு உள்ளது.

    ///அவற்றில் இருந்து பெறப்படுகின்ற பால், காய்கறிகள், பழங்கள் நச்சு உணவுகளாக மாறும். அணு உலைகளை குளிர்விக்கும் கதிர்வீச்சு கலந்த நீர் கடலுக்குள் விடப்படுவதால் கடல் நீரின் வெப்ப நிலை அதிகரித்து கதிர்வீச்சால் நச்சாக்கப்பட்டு மீன் வளம் பாதிக்கப்படும். மீனவ மக்கள் ஏழ்மைக்குள்ளும், வறுமைக்குள்ளும் தள்ளப்படுவார்கள். மீனவ மக்களின் மற்றும் உள்ளூர் மக்களின் கடல் உணவு நச்சாகும் போது நமது உணவு பாதுகாப்பு அழிக்கப்படும். அணு உலையின் புகை போக்கிகளில் இருந்து வருகின்ற நீராவி, புகை மூலமும், கடல் தண்ணீர் மூலமும் அயோடின் 131, 132, 133, சீசியம் 134, 136, 137 அய்சோடோப்புகள், ஸட்ராண்டியம், டீரிசியம், டெலூரியம், போன்ற கதிர்வீச்சு பொருட்கள் நமது உணவில், குடிதண்ணீரில், சுவாசத்தில், வியர்வையில் கலந்து அணு அணுவாக வதைப்படுவோம். நமது குழந்தைகள், பேரக்குழந்தைகள் இந்த நச்சை கொஞ்சம், கொஞ்சமாக நீண்ட நாட்கள் உட்கொண்டு புற்றுநோய், தைராய்டு நோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி உடல் ஊனமுற்ற, மணவளர்ச்சியற்ற குழந்தைகளைப் பெற்று பரிதவிப்பார்கள்.////

    என் பதில் :  அணு உலை எருக்கோல்கள் வெப்பத் தணிப்பின்றிச் சிதைவடையும் வாய்ப்புக்கள் கூடங்குளத்தில் மிக மிக அபூர்வம்.  சிதைவடையா அணு உலையில் ஐயோடின் 131, 132, 133, சீசியம் 134, 136, 137 ஐசோடோப்புகள், ஸட்ராண்டியம், டீரிசியம், டெலூரியம், போன்ற கதிர்வீச்சு பொருட்கள் வெளியேறு வதில்லை.

    ////1988ம் ஆண்டு கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு (முதல் இரண்டு உலைகளுக்கு) 6,000 கோடி ரூபாய் செலவாகும் என்றார்கள். ஆனால் 1997 ஏப்ரல் மாதம் இந்த திட்ட்த்தின் துவக்க மதிப்பீடே 17,000 கோடி ரூபாயாகும் என்று சொன்னார்கள். 1998 நவம்பர் மாதம் கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 2006ம் ஆண்டு இயங்கும் என்றும், 15,500 கோடி ரூபாய் செலவாகும் என்றும் விளக்கமளித்தார்கள். 2001ம் ஆண்டு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் குழு இந்தத் திட்ட்த்தின் மொத்தச் செலவு 13,171 கோடி எனவும், இந்திய அரசு 6,755 கோடி முதலீடு செய்ய, ரசியா மீதமிருக்கும் தொகையை 4% வட்டியில் வழங்கும் என்று சொன்னார்கள். முதன் முறையாக எரிபொருள் வாங்குவதற்கும், அடுத்தடுத்த 5 முறை எரிபொருள் வாங்குவதற்கும் 2,129 கோடி ரூபாயில் ஒதுக்கப்பட்டது. இந்த தொகை கிட்டத்தட்ட ரசிய அரசின் கடனுதவியாகவே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 10 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு எவ்வளவு செலவாகும் என்பதை நாம் ஊகித்துக் கொள்ள முடியும். நமது குழந்தைகளை கடனாளிகளாக ஆக்கும் திட்டம் நமக்கு வேண்டாம்.///

    என் பதில் :   கட்டி முடிக்கப் பட்ட 15,000 கோடி கூடங்குள இரட்டை அணுமின் உலை முடக்கத்தால் இந்திய அரசுக்கும், இந்தியர் வரி நிதிக்கும் குறைந்த அளவு வருவாய் இழப்பு தினமொன்றுக்கு சுமார் 100,000 டாலர் (50 லட்சம் ரூ).  ஆதலால் முதல் இழப்பு, வட்டி இழப்பு, கடன் அடைப்புப் பிரச்சனைகள் அணு உலை முடக்கத்தால் குறையப் போவதில்லை.  கடல் அருகே இருக்கும் அணு உலைச் சாதனங்கள் துருப்பிடித்துப் பயனற்றுப் போகவும் வாய்ப்புள்ளது.

    Image result for www.npcil

    //நமது நாட்டை விட எத்தனையோ மடங்கு வளர்ச்சி அடைந்த, தொழில் வளமிக்க ஜெர்மனி 2022ம் ஆண்டுக்குள் அனைத்து அணு உலைகளையும் மூடிவிட முடிவெடுத்திருக்கிறது. நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் புற்று நோய் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படும் திருமதி.சோனியா காந்தி அவர்களின் பிறந்த நாடான இத்தாலியில் அண்மையில் நட்த்தப்பட்ட வாக்கெடுப்பில் 90% மக்கள் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறார்கள். சுவிச்சர்லாந்து, மெக்சிகோ போன்ற நாடுகள் அணு உலைகளை மூடிவிட முடிவெடுத்தி ருக்கின்றன. புகுசிமா விபத்து நடந்த சப்பான் நாட்டிலே கட்டப்பட்டு கொண்டிருக்கும் 10 அணு உலைகளை நிறுத்தி விட்டனர். 28 பழைய உலைகளையும் மூடிவிட்டனர்////.

    என் பதில் :   புகுஷிமா அணுமின் உலைகள் விபத்தால் ஜப்பானில் உள்ள சுமார் 50 அணுமின் நிலையங்கள் தற்காலிய மாக நிறுத்தம் அடைந்துள்ளன.  சில அணுமின் நிலையங்கள் செம்மைப் படுத்தப் படுகின்றன.  அவை மீண்டும் ஒரு சில மாதங்கள் இயங்க ஆரம்பிக்கும். மற்ற ஆசிய நாடுகளில் (சைனா, இந்தியா, தென் கொரியா) அணுமின் உலைகள் நிறுத்தப் பட வில்லை.  ஐரோப்பா, கனடா, அமெரிக்க நாடுகளில் எந்த ஓர் அணுமின் உலையும் நிறுத்தம் அடைய வில்லை. ஹிரோஷிமா, நாகசாக்கியைச் சுத்தம் செய்து புதுபித்த ஜப்பான் மீண்டும் அணுமின் நிலையங்களைச் செம்மைப் படுத்தி இயக்கும்.  அனைத்தும் மூடப்படும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

    ///நமது நாட்டிலேயே மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வர் மதிப்பிற்குரிய மம்தா பானர்சி அவர்களின் அரசு கரிப்பூர் என்னும் இடத்தில் ரசிய உதவியுடன் கட்டப்படவிருந்த அணு உலைத் திட்டத்தை நிராகரித்து விட்டு, மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் அணு உலைகள் அமைக்க மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என்று அனைத்து கட்சிகளும் ஒருங்கே நின்று எதிர்க்கின்றன.////
    என் பதில் :  கூடங்குளத்தை வர்வேற்றது கருணாநிதி திமுக. இப்போது எதிர்ப்பது ஜெயலலிதா திமுக.  மாநில அரசியல் கட்சிகள் மாறுவதால் இம்மாதிரி ஏற்படும் ஆதரவு / எதிர்ப்பு முடிவுகள் நிரந்தரம் அல்ல.

    ///ரசியா, அமெரிக்கா, பிரஞ்சு நாட்டு நிறுவனங்களின் லாபம் முதன்மையானதா அல்லது இந்திய மக்களின் உயிர்களும், எதிர்காலமுமா ?////

    என் பதில் :   21 ஆம் நூற்றாண்டில்  ஒரிஜினல் 1000 மெகா வாட் அணு உலை டிசைன்கள் செய்து விற்பனை செய்பவை அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, கனடா ஆகிய அந்நிய நாடுகளே.  ஆசிய நாடுகள் சைனா, தென் கொரியா, இந்தியா, ஜப்பான் உட்பட அனைத்தும் இந்த நான்கு நாடுகளிடம்தான் பேரளவு மெகா வாட் உற்பத்தி செய்யும் அணு உலைகளைக் கடனுக்கோ, காசுக்கோ வாங்கி கடந்த 50 ஆண்டுகளாய்க் கட்டி நிறுவகம் செய்கின்றன.

    ++++++++++++++

    Full Power News 2014 June 7

    ++++++++++++++

    தகவல்:

    1.  http://www.npcil.nic.in/index.asp  [Nuclear Power Corporation of India Ltd Website for Nuclear Power Updates]

    2. http://pib.nic.in/release/release.asp?relid=20878  [President Dr. Abdul Kalam Speech on Kudungulam (Sep 22, 2006)]

    3. http://www.stratmag.com/issue2Nov-15/page03.htm
    [Russia Breaches Nuclear Blockade against India By: C. Raja Mohan (Nov 16, 2001)]

    4.  World Nuclear Association – WNA
    Radiological Protection Working Group – RPWG (Official List – July 20, 2006)

    http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

    5. World Nuclear Association – WNA
    Waste Management and Decommissioning Working Group – WM&DWG (Official List – July 25, 2006)    http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

    6. http://www.candu.org/npcil.html  [Indian Heavywater Nuclear Power Plants]

    7. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)

    8. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

    9. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708091&format=html  Letter By R. Bala (August 9, 2007)

    10. http://www.wano.org.uk/WANO_Documents/What_is_Wano.asp  [World Association of Nuclear Operation Website]

    11 IAEA Incident Reporting System Using Operational Experience to Improve Safety (IAEA Instruction)

    12. http://www.world-nuclear.org/info/inf53.html  (World Nuclear Association Report on Indian Nuclear Power)  (February 2012)

    13. https://jayabarathan.wordpress.com/kudankulam-vver-reactor/

    14. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40303233&format=html

    [கூடங்குளம் அணுமின் உலைப் பாதுகாப்பு ஆய்வுகள்]

    15. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40607071&format=html

    [செர்நோபிள் விபத்துபோல் கூடங்குளத்து அணுமின் உலையில் நிகழுமா ? ]

    16.  http://npcil.nic.in/main/MOEF_clearance_EIA_KKNPP.aspx  [February 22, 2016]

    17. http://www.npcil.nic.in/pdf/news_28oct2016_02.pdf  [October 17, 2016]

    18. http://www.npcil.nic.in/pdf/news_30aug2016_01.pdf  [August 29, 2016]

    18.(a) http://www.npcil.nic.in/main/AllProjectOperationDisplay.aspx  [Mrch 17, 2017]

    18.(b) https://en.wikipedia.org/wiki/Nuclear_power_in_India [June 13, 2017]

    19.  http://www.npcil.nic.in/main/Major_Achievements_archive.aspx  [June 28, 2017]

    20.  http://www.npcil.nic.in/main/AllProjectOperationDisplay.aspx  [June 29, 2017]

    21. http://www.world-nuclear.org/information-library/country-profiles/countries-g-n/india.aspx  [June 2017]

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  June 29, 2017  [R-2]

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170629 -Bhakta parAdeena -Sudama- icam -lores

    சுதாமன் அவலுக்கு சொத்தை அளித்த
    கதாதரன் கண்ணன் பரம -பிதாவாம்
    அலர்மேல் அன்னை மணாளன் அருளால்
    மலரும்நாள் காசின் பிறப்பு….!
    ”அவலுக்கு செல்வம், அழகுமயில் ராதை
    அவளுக்குக் காதல், விஜயன் -கவலைக்கு
    கீதை, அடியார்தம் கண்ணீர் திவலைக்கு
    தாதை அளிப்பான் துடைப்பு….!

     

    பள்ள மதைநோக்கிப் பாய்கின்ற வெள்ளமென
    கொள்ளிடத் தானிருகால் கொள்கையாய் -உள்ளமே
    கள்ளமில்லா நம்பிக்கை கண்மூடக் கும்பிடு
    வள்ளலென மாறும்காண் வாழ்வு….கிரேசி மோகன்….!

     

    Share
  • புதுப்பித்தல் அவசியம்!

    பவள சங்கரி

    மருத்துவர்கள் போல, கணினித் தொழில்நுட்ப வல்லுநர்கள் போல, வருங்காலச் சமுதாயத்தையே நிர்ணயிக்கும் ஆசிரியர்களும் புதுமையான சிந்தனைகளையும், சமுதாயத்தின் நவீனக் கட்டமைப்புகளையும் அறியும் வகையில் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டியதும் அவசியம் அல்லவா? அதற்கான பயிற்சித் திட்டங்களும் அமைக்க வேண்டியது அரசின் தலையாயக் கடமை அல்லவா? தற்போது 3 முதல் 5 ஆண்டுகளுக்குஒரு முறை மட்டுமே ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதை ஆண்டிற்கு ஒரு முறையாகவாவது மாற்றியமைக்க வேண்டியது அவசியம்!

    Share
  • ஏர் இந்தியா

    பவள சங்கரி

    ஏர் இந்தியா நிறுவனம் முழுவதுமாகவோ அல்லது அதனுடைய 50% பங்குகளையோ தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக செய்திகள் மூலம் அறியமுடிகிறது. விமானங்களுக்குரிய எரிபொருள் மற்றும் சில சலுகைகள் அளிக்கப்பெற்றும் ஏர் இந்தியா நிறுவனம் இத்தொழிலில் வெற்றி பெற முடியவில்லை என்பது வேதனைக்குரியது. பல ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து இந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கி ஒரு தனியார் நிறுவனத்தினரால் வெற்றி பெற முடியுமென்றால் அரசு நிறுவனமாகிய ஏர் இந்தியா தன்னுடைய நிர்வாகச் சீர்கேட்டை சீர்செய்து நட்டம் ஏற்படாமல் விமான சேவையை நடத்த முடியாதா என்ற ஐயமே எழுகிறது. அரசு சரியான நடவடிக்கை எடுத்து இந்த நிறுவனத்தைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சி எடுக்கவேண்டும். நவரத்னா நிறுவனங்களும், மினி நவரத்னா நிறுவனங்களும் அரசு நிர்வாகத்தில் சிறப்பான செயல்பாட்டில் இருக்கும்போது ஏர் இந்தியா நிறுவனமும் நவரத்னா நிறுவனங்களைப்போல சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதே நம் நம்பிக்கை.

    Share
  • ஜவுளித் துறையின் அவல நிலை..

    பவள சங்கரி

    தலையங்கம்

    விவசாயத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய வேலை வாய்ப்பை ஏற்படுத்தக்கூடியதும், ஏற்றுமதி, உள்நாட்டு சந்தை போன்றவைகளால் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெருமளவில் உறுதுணையாக இருக்கக்கூடியதுமான ஜவுளித்துறைக்கு பாதகம் ஏற்படும் வகையில் 70 ஆண்டுகளாக இல்லாத வரி விதிப்பை தவிர்த்து பல இலட்சம் மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற அரசு வழி வகுக்கவேண்டியது அவசியம். ஜவுளித் துறையினர், அனைத்திந்திய அளவில் போராட்டங்கள் நடத்தி வரும் இந்த மூன்று நாட்களில் மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாய் உற்பத்தி இழப்பும், பொருளாதார இழப்பும் சந்தித்துள்ளனர் என்பது வேதனையான செய்தி. நமது நிதி அமைச்சர் இதனைக் கருத்தில்கொண்டு, மேற்கொண்டு பல ஆயிரம் கோடி பண இழப்பு ஏற்படாமல் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Share
  • “ரமண வசனாம்ருதம்”

    கிரேசி மோகன்
    ———————————

    ‘’எண்ணும் எழுத்துமிரு கண்ணென்று கூறுவர்,
    எண்ணாதோர் உச்சி எழுத்தினை, -அண்ணா,
    மலைரமணர் சொல்லிய மார்க்கம் புகுந்தால்,
    இலைகாய் மறைக்கா இனிப்பு’’….!
    —————————————————————————————————————-

    ”அதுவேண் டுமென்றும், இதுவேண் டுமென்றும்
    எதுவேண் டினாலும்நீ ஏழை, -புதுவிதமாய்,
    ஆடுஓ நாய்க்காய் அழுமோ! அதுநனைய!,
    ’’மேடருணை செல்மன மே’’….!கிரேசி மோகன்…..

    மேடருணை -மேடு(மலை)+ அருணை….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    ”கண்ணன் அனுபூதி’’
    ——————————————–

    170628 -New Forever -lores

    கிழிந்து பிணியில் கிடக்கும் உடம்பைப்
    பிழிந்து சுகம்மேலும் பார்க்கும் -இழிந்த
    மனமேன் கொடுத்தாய் எனையேன் படைத்தாய்
    உனைஏன் கேட்கநான் உண்டு….!
    உண்டில்லை என்றுனை இங்கிரு சாரர்கள்
    விண்டுரைத்த போதும் விசுவமே -கண்டுகொண்டேன்
    மித்யை ஜகத்தென்றும் சத்தியம் நீயென்றும்
    வித்தை பழகும் விதம்….!

    விதவிதப் பூவாய் விதவையின் கூந்தற்
    பதவி பெறுவதென்ன பேறா! -புதுப்புது
    மேனியும், நோயும் ,மரணமும் நாடகம்
    தூணிலொளிந் தோன்கண் துடைப்பு….!
    துடைப்பங் கழியைத் துணிப்பட்டால் மூடிப்
    படைத்தாய் பிறவிப் பிணியை -இடைப்பையா
    தீராவுன் ஆட்டத்தில் தோள்கொடுக்கும் தோழனெனை
    பாரா திருப்பதேன் பகர்….!
    பகர்தல், பரிகசித்தல்,பீற்றல்,புலம்பல்
    இகழ்தல் எனவாச்(சு) வாழ்க்கை -உகிரால்
    இரணியனைக் கொன்றன்(று) இருதோ(ள்) அணிந்த
    நரஹரியே மோனத்தூ ணாக்கு….!
    நாக்கில் நரம்பின்றி நாளை நமதென்ற
    போக்கில் தடம்புரண்டு போய்விழுவோம் -தூக்கில்
    இடப்பட்டும் தூங்கும் மடப்பயலே அந்த
    இடப்பயல் தாளே இருப்பு….(10)
    இருப்பதிங்(கு) ஒன்றே இதன்பேர் கண்ணன்
    மறுப்பதை விட்டென் மனமே -கருப்பொருளைப்
    பார்க்காத போதும் பாடப் பரவசத்தில்
    கார்கால மேகத்தில் காண்….!

    காணவனைக் காற்றில் கலந்துவரும் கீதத்தில்
    நானென(து) இல்லாத மோனத்தில் -தேனளவு
    பார்க்கும் மலர்வண்டின் போக்கில் இனப்பெருக்கம்
    கோர்க்கும் குயுக்தியின் கண்….!

    கன்னங் கருத்தது காரிருள் போன்றது
    நண்ணும் நமக்கொளி நாளது -முன்னம்
    பிறக்காது பின்னர் இறக்காதாம் இன்னும்
    திறக்காசொர் கத்தாள் அது….!

    அதனால் இதுவாய் இதனால் அதுவாய்
    மதனால் மயங்கும் மனமே -முதலாம்
    பதியாய் இருந்து பசுக்களை மேய்ப்போன்
    கதியாய்க் கிடக்கக் களிப்பு….!கிரேசி மோகன்….!

    Share
  • இலவசங்களால் தள்ளாடும் தமிழ்நாட்டின் பொருளாதாரம்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    2006இல் தி.மு.க ஆட்சியில் இருந்தபோது அப்போதைய முதல்வர் திரு. கருணாநிதி அவர்களால், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள், அரிசி போன்றவைகள் மூலம் ஆரம்பிக்கப்பட்ட இலவசங்கள் ஜெயலலிதா ஆட்சியிலும் தொடர்ந்து கொண்டிருந்தன. இதனால் இன்று தமிழகத்தின் கடன் சுமை 2.56 இலட்சம் கோடியாக ஆகியுள்ளது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது அதிர்ச்சியான செய்தி. தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் கல்வியறிவு பெற்றவர்கள் 80.09% . அதாவது அனைத்திந்திய அளவில் 16வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. இவ்வளவு இலவசங்கள் வழங்கியும் 21.2% மக்கள் அதாவது மொத்த ஜனத்தொகையான 6.78 கோடியில், 1.2 கோடி மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறார்கள் என்பதே வேதனையான செய்தி. அனைத்திந்திய அளவில் வறுமைக்கோட்டின் கீழ் வாழக்கூடிய மொத்த மக்கள் தொகையில் 7வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தேவையில்லாமல் இலவசங்கள் வழங்குவதால் மிகவும் அத்தியாவசியமான, பொது மக்களுக்குத் தேவையான மருத்துவம், கல்வி, சாலையமைப்பு போன்றவைகளில் கவனம் செலுத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுவிடுகிறது. அதுமட்டுமின்றி சென்ற ஆண்டைவிட கடன் சுமை 18% அதிகரித்து இன்று 67% ஆக உயர்ந்துள்ளது. அதிகம் கடன் சுமை உள்ள மாநிலங்களான உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம் ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக 4வது இடத்தில் நம் தமிழ்நாடு உள்ளது. பல ஆண்டுகளாக பொருளாதாரத்தில் மிகவும் மேம்பட்டு இருந்த தமிழ்நாடு இன்று மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளது என்பது அதிர்ச்சியான தகவல். இரசாயணம், வாகனத்தயாரிப்புத்துறை ஆயத்த ஆடைகள் தயாரிப்புத்துறை போன்ற பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த தொழில் அமைப்பைக் கொண்டு கடந்த 20 ஆண்டுகளாக 7% முதல் 20% வரை தொடர் வளர்ச்சியைக் கொண்டிருந்த நமது தமிழ்நாடு இன்று மிக மோசமானதொரு நிலையை அடைந்ததற்கு உண்மையான காரணம் மாநிலப் பொருளாதாரத்தை தவறான முறையில் கையாண்டதே என்று தென் பகுதிகளுக்கான தொழில் அமைப்பின் தலைவர் திரு ரவிச்சந்திரன் கூறியுள்ளது சிந்திக்கத்தக்கது.

    Share
  • INDIA & OTHER POEMS – By Kim Yang – Shik

    The Bust of ‘Gurudeb’ Tagore of India adorns Jongno District in Seoul

    2d6459fa733a709a261c5f6b18df2bed-thumb1

    b18e3cf5dd7aa6d59630e78c53d6287a-thumb1
    Even years before Korea was to throw off the yoke of foreign occupation, a literary genius and a champion of human freedom and dignity, Rabindranath Tagore from India, prophesied in his famous poem ‘The Lamp of the East’ written in 1929 that it would not be long before Korea rises again like a Star among the comity of nations. As India celebrates 2011 as the 150th Birth Anniversary of this great poet, the Republic of Korea partakes in India’s joy by installing his bronze bust in Dehangro, the cultural heart of Seoul. The approximately four feet high metal masterpiece, exquisitely carved by the renowned master sculptor from India, Gautam Pal, has been gifted to Korea by the Indian Council for Cultural Relations (ICCR), Government of India, and the people of India.

    LAMP OF THE EAST
    “In the golden age of Asia
    Korea was one of its lamp bearers,
    And that lamp is waiting
    To be lighted once again
    For the illumination of the East.”
    Tagore (1929) Seoul

    In a serene and impressive ceremony, the Hon’ble Speaker of the Lok Sabha (the Lower House of the Parliament) of India, the largest Democracy of the world, H.E. Mrs. Meira Kumar, unveiled the beautiful statue today, jointly with H.E. Mr. Park Hee Tae, the Hon’ble Speaker of the National Assembly of the Republic of Korea. Mr. K. Rahman Khan, Hon’ble Vice Chairman of Rajya Sabha (Upper House of India’s Parliament), Mr. Mo Chul Min, First Vice Minister of Culture, Tourism and Sports, Government of Korea, Mr. Kim Young Jong, Mayor of the Jongno District and H.E. Mr. Skand R. Tayal, Ambassador of India to the Republic of Korea also graced the occasion. Mrs. Kim Yang Shik, the President of the Tagore Society in Korea, who was honored with the title of ‘Padmashree’ by the Government of India in 2002 for her devotion and commitment to the ideals of Tagore, paid a literary tribute to Tagore, the first Asian to win the Nobel Prize in 1913 for his lyrical and poetic work ‘Gitanjali’ or ‘The Song Offering’.

    https://www.indembassy.or.kr/press_detail.php?nid=75

    கிம் யாங் – ஷிக்

    unnamed (2)
    நம் இந்திய அரசாங்கத்திடம் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள கிம் யாங் – ஷிக் கொரிய நாட்டில் சியோல் நகரில் 1931 ஆம் ஆண்டில் பிறந்தவர். ஆங்கில இலக்கியம் ஈஹா பல்கலைக்கழகத்தில் பயின்று, தமது இந்தியத் தத்துவங்கள் முதுநிலை பட்டப்படிப்பை சியோல் டோங்க்குக் (Dongkuk) பல்கலைக்கழகத்தில் பயின்றவர். 1998இல் Academy of International Congress of Poets மூலமாக H.Phd. Lit, என்ற உயரிய பட்டமும் பெற்றவர்.

    unnamed (1)

    கிம் யாங் – ஷிக் கொரிய மொழியில் பல இலக்கியப் படைப்புகளை வெளியிட்டுள்ள மிகச்சிறந்த கொரிய கவிஞரும், தற்போதைய, கொரியாவின் தாகூர் சங்கத் தலைவரும், இந்தியக் கலை அருங்காட்சியக இயக்குநர், சியோல், சர்வதேச கொரிய எழுத்து மையம் (The International Pen-Korean Centre) உறுப்பினர், ஈஹா இலக்கிய எழுத்தாளர்கள் கூட்டமைப்பு ஆலோசகர், கொரிய பெண் எழுத்தாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசகர் போன்ற பல சமூக, இலக்கிய அமைப்புகளில் உற்சாகமான பங்கேற்பாளர்.

    இவர் பெற்றுள்ள விருதுகள் : The current Literature of korea ’69/’Mse’ of World Poetry – 2nd World Congress of Poets in Taipei, ‘Diploma Aureun Honoris Causa’ – 3rd World Congress of Poets in Baltimore, USA, பத்மஸ்ரீ விருது, ‘PEN Literary Award’ போன்ற பல விருதுகள் பெற்றுள்ளவர் இவர். இவர்தம் அற்புதமான கவிதைகளை தமிழில் மொழிபெயர்ப்பதில் பெருமிதம் கொள்கிறேன். அம்மையார் யாங் ஷிக் அன்புகூர்ந்து தாம் கையொப்பமிட்ட தமது கவிதை நூலை தென் கொரியாவிலிருந்து எனக்கு அனுப்பியிருப்பதையும் நன்றியுடன் பகிர்ந்துகொள்வதோடு எமக்களித்த கௌரவமாகவும் கருதுகிறேன்.

    பவள சங்கரி (மொழிபெயர்ப்பு)

    ஓ, எமது குருவே தாகூர் – கிம் யாங் ஷிக்

    ஆங்கிலத்தில் – கிம் ஜின் – சுப்

    உங்களுக்காகப் பாடுகிறேன் நான்
    அன்பின் பாடல், வேதனையின் பாடலும்
    சிலவேளைகளில் விரக்தியின் பாடலும்
    நீங்கள் இசைக்கும் அதே இன்கீதமதை
    உங்களுக்காகப் பாடுகிறேன் நானும்.

    வெகுகாலம் முன்பு
    எம் பத்தாம் அகவையில் அடியெடுத்தபோது
    எம் மென்னிதயமதை நிறைத்திருந்த
    வெகு தொலைவிலிருந்து வளி சுமந்து வந்த
    உங்கள் புதிரான பாடலின் ஓசையைக் கேட்டேன்.

    உங்கள் தாய் மண்ணிலிருந்து வீசிக்கொண்டிருக்கும்
    அந்த வெதுவெதுப்பான வசந்த வளி எமது சாளரத்தையும் சீண்டியது
    பிரகாசத்துடன் ஒளிர்கின்ற கதிரோனையும் நறுமணத்தையும் தழுவுகிறேன் நான்.

    “நீங்கள் யார்?
    நரைமுடிகளுடனும் வளைந்த முதுகுடனும் வந்த நீங்கள்
    கதிரொளியும் நறுமணமும் உடன் கொண்டுவந்துள்ளீர்கள்!”
    “இளம் பெண்ணே,
    எம் பாடல்களின் சுருள்களினூடே தேடியவாறோர் நாள்
    அந்த மர்ம தேசத்திற்கு நானும் வருவேன்
    மணமிகு மாங்கனிகள் பூத்துக்குலுங்கும் அக்களத்தில்
    தங்கமான இன்கனிகள் இலையுதிர்காலத்தில் கனியும்
    அங்கே பசுந்தென்னை மட்டைகள் குளிர் கடற்காற்றில்
    மென்மையாக அசைகிறது!”

    ஆயினும் நான்
    பிறந்து வளர்ந்த அத்தேசம்
    காட்டுமிராண்டிகளின் ஆக்கிரமிப்பால்
    பேரழிவிற்கு உட்பட்டிருந்தது
    எங்கள் தேசம் அடக்குமுறையினாலும்
    அதிபயங்கரமான பேரழிவுகளினாலும்
    இழிந்துபட்டுக் கிடந்தது.
    அன்றிலிருந்து எங்கள் தாய்மண் ஆழ்இருளில் மூழ்கிக்கிடந்தது
    தாங்கொணாப் பேரலைகளும் வீசியடித்தது
    எரிச்சலையும் வேதனைத் துடிப்பையுமே விட்டுவைத்ததது.
    இருபத்தியெட்டு, மார்ச் 1929இல், யோகாஹாமா, ஜப்பானிலிருந்து நீங்கள் திரும்பியிருந்த அந்நொடியில் வேதனையில் வாடும் கொரிய தேசத்திற்காகத் தாங்கள் ஒரு சிறிய நான்கு வரிக்கவிதையை வடித்திருந்தீர்கள்.
    உங்கள் குரல் மெலிந்தும், மென்மையாகவும் இருந்தாலும் நீதிக்காக உங்கள் இதயத்திலிருந்து வெடித்துச்சிதறிய இரைச்சல், வெகுதொலைவில் இல்லாத கொரியாவின் விடுதலைக்கும், சுதந்திரத்திற்கான வெகுகாலக் காத்திருப்பின் தீர்க்கதரிசனமாகவே இருந்தது.
    உங்களுடைய அசைக்கமுடியாத ஆழ்ந்த நம்பிக்கையும், அக்கறையும் ஒரு வாழ்க்கையைக்காத்து பிரகாசிக்கச் செய்தது.
    ‘கிழக்கே ஒரு விளக்கு’ என்ற உங்கள் பாடல், எங்கள் அடக்குமுறைப்புலம்பலினூடே எங்கள் செவிகளை நெருங்கி நெருங்கி வந்தது.

    பாடல் இதோ :

    கிழக்கே ஒரு விளக்கு – ஆர். தாகூர்

    ஆசியாவின் பொற்காலங்களில்
    விளக்கேந்தி ஒளியூட்டியவர்களினூடே
    கொரியாவும் ஒன்றே எனினும்
    கிழக்கு பட்டொளியாய் மின்னுதற்பொருட்டு
    அவ்விளக்கு மீண்டுமொருமுறை
    ஒளியூட்டக் காத்திருக்கும் தருணமிது!

    யோகாஹாமா, மார்ச் 1929

    imagesநீங்கள் சொன்னது சரி.
    உங்கள் நற்கருணையின் உண்மை வெளிப்பாடே இந்த தீர்க்கதரிசனப் பாடல்.
    உங்கள் அறையில், நீங்கள் வழமையாக ஆழ்மன தியானத்தின்போது அமரும் சாய்வு நாற்காலியான, அந்த என் விருப்பமான நாற்காலியின் அருகில் நின்றிருக்கும்போது, நுண்ணிய, எளிய, மெல்லிய ஊதாவாக வளர்ந்துவரும்  புருவம் போன்ற பிறைநிலவையோ அல்லது வானின் துருவ நட்சத்திரத்தையோ அண்ணாந்து பார்ப்பது வழக்கம்.

    ஏதோவொரு தருணத்தில்
    உங்கள் அன்பெனும் நீரூற்றிலிருந்து நீர் இறைத்து,

    எம் மென்மையான இதயத்தின் வலிமிக்க தாகத்தைப்போக்கி,

    அதை ஒரு சாந்தமான கானகத்துக் குளிர்க்காற்றாக புனிதமாக்குகிறேன்.
    இப்படியாக உங்கள் இடைவிடா ஆழ்ந்த அன்பு

    என் ஆன்மாவை சாந்தமாக்கி, செறிவூட்டி,

    என் வாழ்வையும் வளமாக்கியுள்ளது.

    இன்று வளர்ந்துவிட்ட அப்பெண்
    அமைதியாகத் தன் வீணையை வாசிப்பாள்
    அன்பிற்காகவும் அமைதிக்காகவும்
    உங்கள் நித்திய சத்தியத்தை இசைக்கிறாள்..

    இந்த புதிய நூற்றாண்டிலும்
    அனைத்து மக்களின் அன்பிற்காகவும் பாடுவேன்
    நீங்கள் விரும்பியபடி,
    நீங்கள் பாடியவாறு மென்குரலில் பாடுகிறேன்.

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள்  15

    க. பாலசுப்பிரமணியன்

    ஆசைகளை அடக்குவதெப்படி? 

    திருமூலர்-1-3

    ஆசைகளுக்கு  அடிப்படைக் காரணமே அறியாமைதான். தன்னிடம் இல்லாத பொருளைத் தேடியும், தனக்கு உரிமையில்லாத  பொருள்களை நாடியும் மற்றும் மற்றவர்களிடம் உள்ள பொருள்களை விரும்பியும் மனம் அலைபாய்கின்றது. இந்த அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்துவது மிகக் கடினமான காரியம். பல்லாயிரம் ஆண்டுகளாக முனிவர்களும்  வாழ்க்கையை விலக்கி துறவு நாடி போராடிக்கொண்டிருக்கின்ற நிலையை நாம் காண்கின்றோம். 

    இந்த நிலையை அழகாக முன் நிறுத்தும் திருமூலர் கூறுகின்றார் : 

    “அஞ்சு மடக்கடக் கென்பர் அறிவிலார்

    அஞ்சு மடக்கும் அமரரும் அங்கில்லை

    அஞ்சு மடக்கில் அசேதன மாமென்றிட

    அஞ்சு மடக்கா அறிவறிந்த தேனே . “ 

    ஐம்புலன்களையும் அடக்க முடியாத நிலை அமரருக்குமுண்டோ ? இந்த ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வது மனதன்றோ? 

    இந்த மனம் நம்மை எப்படியெல்லாம் ஆட்டிவைக்கின்றது ? அது படுத்திய அல்லல்களிருந்து விடுபட்ட பட்டினத்தார் தன் மனதை எவ்வாறு சாடுகின்றார் தெரியுமா ? 

    மண்காட்டிப் பொன்காட்டி மாய விருள்காட்டிச்

    செங்காட்டி லாடுகின்ற தேசிகனைப் போற்றாமல்

    கண்காட்டும் வேசியர்தங் கண்வலையில் சிக்கிமிக

    அங்காடி நாய்போ லழைந்தனையே நெஞ்சமே .

    பத்திரகிரியாரோ இந்த ஐம்புலன்களையும் அதில் பிறக்கும் உணர்வுகளையும் எரித்துச் சாம்பலாக்கிவிட வேண்டும் ; அது நடப்பது எக்காலம்? என இறைவனையே கேட்கின்றார்.

     ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்

    தூங்கமரத்தூக்கி சுகம் பெறுவதெக்காலம் ?

     இந்த ஆசையை அடக்க ஒரே வழி. இறைவனின் பாதங்களை நம்பிக்கையுடன் உறுதியாகப் பிடித்துக்கொள்வதுதான். எவ்வாறு ஆமை வெளியிலிருக்கும் சூழ்நிலைகளைக் காண்டதும் தன உறுப்புக்களை உள்ளே இழுத்துக் கொள்கின்றதோ அதே போல் இந்த மனமும் ஆசைகளை உள்ளே இழுத்துக்கொள்ளும். 

    ஆகவே மனதில் இருக்கின்ற மாசினையும் இருளையும் நீக்கி மனதில் ஒளியை வரவழைத்தால் இந்தத் துன்பங்களிலிருந்து விடுதலை கிடைக்கும். இந்தக் கருத்தை வலியுறுத்தும் திருமூலர் : 

    மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்

    சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கி

    அனைத்து விளக்குத் திரியோக்கத் தூண்ட

    மனத்து விளக்கது மாயா விளக்கே.

     என அழகாக விளக்குகின்றார்.

     ஒரு முறை அகத்தில் இந்த ஒளி நிறைந்து விட்டால் அது அகத்தை விட்டு புறம் நோக்கிச் செல்லாது. ஆசைகளுக்கு அடி பணியாது. ஆனந்தக் கூத்தில் தன்னை மறந்து இன்புறும். இந்த உன்னத நிலையை அனுபவித்த மாணிக்க வாசகர் பாடுகின்றார்

     வேண்டேன் புகழ் வேண்டேன் செல்வம் வேண்டேன் மண்ணும் விண்ணும்

    வேண்டேன்பிறப்  பிறப்புச் சிவம் வேண்டார் தமை நாளும்

    தீண்டேன் சென்று சேர்ந்தேன் மண்ணு திருப்பெருந்துறை இறைதான்,

    பூண்டேன் புறம் போகேன் இனிப் புறம் போகலொட்டேனே . 

    ஆகவே அகத்தை ஒளிமயக்கும் அறிவும் கல்வியும் பயனுள்ளதாகவும் அமைதியத் தருவதாகவும் அமைகின்றது.

    தொடரும்

    Share