Blog

  • மாசுக்கட்டுப்பாடு ஊழல்

    பவள சங்கரி

    தலையங்கம்

    நிலக்கரி ஊழல், கருப்புப்பண ஊழல் என்பதுபோல மாசுக்கட்டுப்பாடு ஊழல் மிக வேகமாகப் பரவி வரக்கூடிய ஒன்றாக உள்ளது. வாட்டர் கேட் ஊழல் போல இதுவும் பன்னாட்டு நிறுவனங்களால் இந்தியாவில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மிகப்பெரிய ஊழல். “எமிசன் தரக்கட்டுப்பாடுகள்” இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களால் காற்றில் பறக்க விடப்படுகின்றன. “வோல்ஸ்வேகன்”செருமனியின் மிக பிரசித்தி பெற்ற கார் கம்பெனி. இந்தக் கம்பெனியின் டீசல் கார்கள் தரக்கட்டுப்பாடுகளில் குறைபாடுகள் உள்ளதாகவும், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் தரக்கட்டுப்பாடு வல்லுநர் குழுக்களால் குற்றம் சாட்டப்பட்டு அந்த நாட்டில் இதற்காக ஆய்வாளர்களை நியமித்து மாதத்திற்கு 20,000 கார்கள் திரும்பப் பெறப்பட்டு மீண்டும் சரி செய்யப்படுகின்றன. இந்த தொழிலகத்தின் தலைமை நிர்வாகி இதற்கு பல நூறு கோடி டாலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தக் கார் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை அளித்துள்ளதாகவும் அறிவித்துள்ளார். இந்தியாவைப் பொருத்தவரை இந்த வோல்ஸ்வேகன் மட்டுமல்லாமல் அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும் இந்த மாசுக்கட்டுப்பாட்டு தரத்தை காற்றில் பறக்கவிட்டுத்தான் மகிழுந்துகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துகின்றனர். நமது மத்திய மாநில அரசுகள் இதற்கு எந்த விதமான தடைகளும் செய்யாமலும், தரத்தையும் ஆய்வு செய்யாமலும் இருக்கின்றனர். இந்தியாவில் தயாரிக்கக்கூடிய அசோக் லேலாண்ட், டாட்டா, மகேந்திரா போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் இதே நிலைதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனங்களின் அனைத்து வாகனங்களும் மாசு தரக்கட்டுப்பாடு சான்றிதழ் பெறுவதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது? இது ஒருபுறமிருக்க சில ஆண்டுகளின் ஓட்டத்திலேயே இந்த வாகனங்கள் மாசுக் கட்டுப்பாட்டிற்கு ஏற்றுக்கொள்ளத் தக்க வகையில் ஒரு சதவிகிதம் கூட இருப்பதில்லை என்கின்றனர் வல்லுநர்கள். பெட்ரோல், இயற்கை எரிவாய்வு, திரவ எரிவாய்வு வாகனங்கள் இதற்கு விதிவிலக்கு.

    இந்த எமிசன் ஊழலால் தயாரிப்பாளர்களுக்கு பல கோடி உரூபாய் இலாபம் என்றாலும் நமது இயற்கை சுற்றுச்சூழல் மிகவும் மாசுபட்டு நுரையீரல் நோய்கள் மிகப்பெருமளவில் பரவி வருவதாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரிப்பதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. ஒரு தனி மனிதன் புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புக்களைவிட ஒரு காரிலிருந்து வெளிவரக்கூடிய புகை என்பது 100 பேர் ஒரே சமயத்தில் சிகரெட் புகை விடுவதற்கு சமமாகும். கண் கெட்ட பிறகு சூரிய வணக்கமா அல்லது முன்பே விழித்துக்கொள்வது அவசியமா என்று முடிவெடுக்க வேண்டிய கட்டாயத் தருணம் இது. அரசு மற்றும் சமூக அமைப்புகள் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும் அவசியம். மேற்கத்திய நாடுகள் 2008ஆம் ஆண்டில் விழித்துக்கொண்டு கட்டுப்பாடுகளை விதிக்கவும் ஆரம்பித்துவிட்டனர். ஆனால் வேலை வாய்ப்பு என்ற ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கு பங்கம் விளைவிக்கும் இது போன்ற ஊழல்களைக் கண்டுபிடித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

    பொதுவாக பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்தும்போது இந்தியாவிற்கு ஒரு தரத்தையும், அந்நிய நாடுகளுக்கு ஒரு தரத்தையும் கொண்டுள்ளதையும் காணமுடிகிறது. அவைகள் நமக்கு வழங்கக்கூடிய குளிர் பானங்களிலிருந்து உடல் நலத்திற்கு பயன்படுத்தக்கூடிய மருந்துகள் வரை தரத்தில் பல வேறுபாடுகளைக் கடைபிடிப்பதையும் அறியமுடிகிறது. வெளிநாட்டுக் கார் என்று ஆசைப்பட்டு பெருங்கனவுகளுடன் பல இலட்சங்கள், கோடிகள் என்று கொடுத்து வாங்கக்கூடிய கார்களுக்கும் இதே நிலைதான். மாருதி நிறுவனம் தயாரிக்கக்கூடிய மிகவும் பிரசித்தி பெற்ற ‘டிசையர்’ என்ற கார் இந்தியர்களின் பயன்பாட்டிற்கு ஒரு விதமாகவும் மேலை நாடுகளுக்கு ஏற்றுமதிக்காகத் தயாரிக்கப்படும் கார்கள் வேறு விதமாகவும், தரத்தில் வித்தியாசப்படுத்தப்படுகின்றன. இந்தியாவிற்கு அளிக்கும் டிசையர் கார்களைவிட ஏற்றுமதி செய்யப்படும் டிசையர் கார்கள் எடையிலேயே ஒரு டன் வித்தியாசப்படுத்தப்படுகிறது என்கிறார்கள். அனைத்துக் கார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். தரக்கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்படக்கூடிய இந்தக் கார்கள் உலகத் தரக்கட்டுப்பாட்டில் ‘crushing test’ (வாகனங்களை மோதி அதன் தரத்தை பரிசோதிக்கும் முறை) இதில் 60 கி.மீ. வேகத்தில் காரை இயக்கி கார்களை மோதவிட்டு தரத்தை பரிசோதிக்கும் முறையில், அந்நிய நாடுகளுக்காக தயாரிக்கும் கார்கள் 5/4 புள்ளிகள் தேர்வாகின்றன. ஆனால் இந்தியர்களுக்காகத் தயாரிக்கப்படும் கார்கள் ஒரு புள்ளிக்கும் மேல் தேர்வாவதில்லை என்பது வேதனைக்குரிய செய்தி.

    இந்தியாவில் கார்களை சந்தைப்படுத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் ஊழலை ஆய்வு செய்து அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம். சுற்றுச்சூழல், காற்று மாசுபடுவதால் ஏற்படும் பாதிப்புகள் சீனாவைவிட நம் இந்தியாவில் மிக அதிகம் என்பதும் வேதனைக்குரிய செய்தி.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”’பார்த்ததோ(பாட்டனார், குருக்களை) பார்த்தன்! பரமாத்மா உள்ளிருந்து,
    வேர்த்ததோ லீலா வினோதம்! : -தீர்த்தர்,(பாற்கடல்)
    இணக்கமான அர்ஜுனர்க்கு இங்கித கீதை,
    தனக்கவர்தா னேகடைந் து”….கிரேசி மோகன்….!

    Share
  • மூளை!

    பவள சங்கரி

    brain

    நம்முடைய மூளையில் 10% மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். மீதி 90% வீணாக இருக்கிறதாம். மாபெரும் அறிவுஜீவிகளுக்கும் இது பொருந்தும். தூக்கத்திலும் விழித்து செயல்படும் உறுப்பு மூளை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். சூழ்நிலைக்கேற்ப மூளை சுறுசுறுப்படைந்து செயல்பட ஆரம்பிக்கிறதாம். சூழ்நிலையை உணர்ந்து நம் மூளையை பயன்படுத்தி பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு முடிவெடுத்து செயல்பட வேண்டியது அவரவர் வசம் தான் உள்ளது என்பதுதான் செய்தி.. கூடுதலாக இன்னுமொரு  5% மட்டுமாவது பயன்படுத்திப் பார்க்கலாமே..

    Share
  • சிறுவாணி வாசகர் மையம்

    சுபாஷிணி திருமலை

    இனிய நண்பர்களே!

    வணக்கம்.

    ass
    இலக்கியத்தின் இயங்குவிசை நல்வாசிப்புத்தான்.நல்ல நூல்களைத் தேடி வாசிக்க வாசிக்க , வாசகரின் ஞானம் வளர்ந்து, மொழி மிளிர்ந்து, ரசனை ஒளிர்ந்து ஒளியாய்ப் பரிணமிக்கிறது.

    இது தொடர் இயக்கமாய் இருத்தல் வேண்டும்.

    இவ்வுணர்வை செயல்படுத்தும் நோக்கில் ” சிறுவாணி வாசகர் மையம்” எனும் அமைப்பு பொங்கல் நன்னாளில் பல நல் இதயங்களின் வாழ்த்துக்களுடன் நிறுவப்பட்டது.

    நண்பர்களே ! சிறுவாணி வாசகர் மையம் மூலம் உங்கள் நல்வாசிப்பை நயன்மிகு
    வாசிப்பாய் மிளிரச் செய்ய நாங்கள் நல்ல நூல்களைத் தேனீ போல் தேடித்தேடிப் பதிப்பித்து உங்களுக்கு ஏதுவான விலையில் உங்கள் வீட்டிற்கே அனுப்பத் திட்டமிட்டுள்ளோம்.

    asp
    இத்திட்டத்தை ஒளிமிகு தங்கத்திட்டமாய் செயலாக்க நீங்களும் உங்கள் நண்பர்களும் அங்கத்தினராய் இணைய அன்பாய் வேண்டுகிறோம்.

    நீங்கள் செய்ய வேண்டியது, வருடசந்தா ₹1200 அளிக்க வேண்டியதுதான். நாங்கள் தங்களுக்கு மொத்த மதிப்பு 1600-க்கான நல்ல நூல்களை மாதம் ஒரு நூல் வீதம் அனுப்பிவைக்கிறோம்.

    புத்தக வாசிப்பால் மனிதமனங்களைப் பண்படுத்தும் எங்களின் முயற்சிக்கு தங்கள் பங்களிப்பை வேண்டுகிறோம்.

    அன்புடன்
    தி. சுபாஷிணி
    G.R.பிரகாஷ்
    ——————————————-
    Siruvani Vasagar Maiyam
    24-5 Sakthi Mahal,
    Chinnammal Street,
    K K Pudur (post),
    Coimbatore-641 038.
    ——————————————-
    வருடசந்தா ₹1200.
    MO/ Cheque /DD மூலமும் சந்தாவை மேற்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்
    ——————————————–
    NEFT/ RTGS மூலம் பணம் அனுப்புவதற்கு…
    Syndicate Bank
    Avinashi Road Branch
    Coimbatore- 641 018.
    Current A/c No: 61211010003590
    IFSC. : SYNB0006121
    Benificiary: Siruvani Vasagar Maiyam

    (SMS மூலம் தங்கள் முகவரி மற்றும் விவரங்களைக் கீழ்க்காணும் எண்ணுக்கு அல்லது மின்னஞ்சலுக்குத் தெரிவிக்கவும்.)
    ——————————————
    94881 85920 (பிரகாஷ்)
    siruvanivasagar@gmail.com

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    பீதாம் பரமாட பீலி மயிலாட
    தோதான தோழர்கள் தோளிலுறி-மீதேறி
    வெண்ணையை வாரி வழங்கிடும் வாசுதேவக்
    கண்ணனை நெஞ்சே கருது….

    வாய்ப்பூதான் வாடிடுமோ,! வாழ்விலாழ் வாராகும்
    வாய்ப்பெனெக்குத் தந்திட வாசுதேவா, -நோய்ப்பாயில்
    கூற்றன்கைப் பாவையாய் தோற்றுக் கிடப்பேனோ
    ஏற்றம் தரவா எனக்கு….கிரேசி மோகன்….!

    Share
  • துறட்டுக்கோல்!

    -கவியோகி வேதம்

    தடைகள் இன்றி நடக்கத் தெரிந்தும்
    –தாத்தா கையில் துறட்டுக்கோல்!
    முடவ னாய்யா என்றே கேட்டால்
    –முறுவல் தானே! பதில்சொல்லார்;
    யார்க்கும் உதவும் எண்ணத் தோடே
    –இன்றும் கிளம்புவார் காட்டுக்கு!
    வேர்க்க வேர்க்கத் தழைகள் பறித்தே
    –வெட்டிப் போடுவார் ஆட்டுக்கு!

    பத்தடி உயரம் துறட்டிக் கோலாம்
    –பதமாய்த் தாத்தா ஏந்திடுவார்!
    கொத்தாய் மாங்காய் தந்தே பாலரைக்
    –கொஞ்சி அழகை மாந்திடுவார்
    கம்பியில் சிக்கிய பட்டம் எடுத்துக்
    –கனிவாய் அவர்க்கே உதவிடுவார்
    எம்பிக் குத்துவார் புளியங் காய்கள்
    –இவரின் கைவரச் சிரித்திடுவார்!

    ஆ! இப்போ!
    படப்பில் சிக்கிய வேலிமுள் அய்யோ
    –பாதை முழுக்கக் கிடக்கிறதே!
    முடங்கிக் கிடக்குதே துறட்டிக் கோலும்
    –மூலையில் தாத்தா படுத்ததுமே…!

     

     

    Share
  • இந்தியாவின் மொழிகள் நிலை

    பவள சங்கரி 

    1961ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் புழக்கத்தில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை 1,652 என்று கண்டறியப்பட்டுள்ளன.

    1971ஆம் ஆண்டின் கணக்கெடுப்பில், 10,000 மக்களுக்கும் குறைவாகப் பேசப்படும் மொழிகளைத் தவிர்த்து 108 மொழிகளை மட்டும் பட்டியலிட்டிருக்கிறார்கள். மற்ற மொழிகள் “மற்றவைகள்” என்று பட்டியலிடப்பட்டுள்ளன.

    1991ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, தனிப்பட்ட இலக்கண அமைப்புகளுடன் கூடிய மொழிகளாக 1,576 மொழிகளைக் கண்டறிந்து வெளியிட்டுள்ளது.

    2001ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள மொழிகளின் எண்ணிக்கை 1,721. அதில் 122 முக்கியமான மொழிகள் மட்டுமே பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகிறார்கள். மற்ற 1,599 மொழிகள் சிறுபான்மை சமூகத்தினர், உள்ளூர் குழுக்கள், பழங்குடிகள் போன்றவர்கள் பயன்படுத்தக்கூடியவைகள்.

    முக்கியமான 122 மொழிகள் 10,000 ற்கும் அதிகமான பயனாளிகள் உள்ளனர். இதில் 29 மொழிகள் மட்டுமே 1 மில்லியன் மக்களின் புழக்கத்தில் உள்ளன.

    2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 122 மொழிகள் மட்டுமே 10,000 ற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்துவதாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

    கடந்த 50 ஆண்டுகளில் இந்தியா 250 மொழிகளை இழந்துள்ளது.  இன்று 880 மொழிகள் வழக்கில் உள்ளன. 29 மொழிகள் 1 மில்லியன் மக்களுக்கும் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அருணாசலப் பிரதேசத்தில் மட்டும் அதிகபட்சமாக 90 மொழிகள் வழக்கில் உள்ளன!

    Share
  • சர்வதேச தாய்மொழி தினம்!

    பவள சங்கரி

    என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
    தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!

    553997_10152582888510198_2088060395_n[1]

    இன்று சர்வதேச தாய்மொழி தினம். உறவு, உணவு, உணர்வு என அனைத்தையும் கற்றுத் தரும் தாயின் மொழியே ஒருவரின் முக்கியமான மொழி. ஒருவர் எத்தனைதான் அந்நிய மொழிகள் கற்றிருந்தாலும் வேதனை, ஆபத்து, உணர்வினால் சூழப்பட்ட தருணம் போன்ற காலங்களில் தாய்மொழி மட்டுமே உள்ளத்திலிருந்து வார்த்தைகளாகி வெளிவரும். அப்படி வருவதற்கான வாய்ப்பு அமையப் பெறாதவர்கள் எதையோ இழந்தது போன்றதொரு நிலையில் இருப்பதை உணர்வார்கள். அந்த நிலையில் இதனால் மனக் குழப்பம் மேலும் அதிகரிக்கவும் வழிவகுக்கும்.

    ஒரு தாயின் கருவறையில் உருவாகும் உயிர் சில மாதங்களுக்குப் பிறகு அத்தாயின் குரல் மட்டுமின்றி, சூழ்ந்திருக்கும் நெருங்கிய ஒலிகளையும் கூர்ந்து கவனித்தவண்ணம் இருப்பதாகவே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் பொருட்டே கருவுற்றிருக்கும் தாய்மார்களை நல்ல சிந்தைகளை ஊக்குவிக்கும் படைப்புகள், அதிர்வற்ற மெல்லிய இசைகள் போன்றவற்றை அதிகமாக செவிமடுக்கும்படி அக்காலந்தொட்டே அறிவுறுத்தப்பட்டு வந்ததோடு நம் முன்னோர்கள் வழி இன்றும் தொடர்ந்து வருவதும் கண்கூடு. அந்த வகையில் தாய் வழி வந்த மொழி என்பது ஒவ்வொருவருக்கும் எத்துணை இன்றியமையாததொன்று என்பதைச் சொல்லத் தேவையில்லை.

    சர்வதேச தாய்மொழி தினம், 1999ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 21ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

    பாகிசுதான் நாடு நம் இந்திய நாட்டிலிருந்து சுதந்திரம் பெற்றபின் அங்கு உருது மொழி அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருந்தது. 1952ஆம் ஆண்டு, தற்போதைய வங்க தேசமான, அன்றைய கிழக்கு பாகிசுதானில் உருது மொழிக்குப் பதிலாக வங்க மொழியை ஆட்சி மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் கோரிக்கை விடுத்தபோதும் அது நடைமுறைப்படுத்த முடியாமல் இருந்தது. அதே ஆண்டில் பிப்., 21ஆம் நாள் தாகா பல்கலைக்கழக மாணவர்கள் ஊரடங்கு உத்தரவையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் 4 மாணவர்கள் உள்பட பலர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிர் நீத்த மாணவர்களின் நினைவாகவே இத்தினத்தை யுனெசுகோ அமைப்பு சர்வதேச தாய்மொழி தினமாக அறிவித்துள்ளார்கள்.

    தாய்மொழி, தேசிய மொழி, தொடர்பு மொழி என்ற மூன்று விதமான மொழிகளின் வல்லமை பெற்றவர்கள் வாழ்வில் பல வகையான வெற்றிகளை எளிதாகப் பெறக்கூடியவர்கள் என்ற கருத்தின் அடிப்படையில், பேச்சு வழக்கில் மட்டுமின்றி கல்வித் திட்டங்களிலும் இந்த மும்மொழிகள் சேர்க்கப்பட வேண்டும் என யுனெசுகோ வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது. உலகில் பேச்சு வழக்கில் ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளதும், இது கண்டம், நாடு, மாநிலம், மாவட்டம், கிராமம் என பல்வகையில் வேறுபடுகிறது. ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் உள்ள தனிப்பட்ட தாய்மொழியின் தனித்தன்மை, அப்பகுதி மக்களின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்கக்கூடியது. அந்த வகையில் ஒரு இனத்தின் அடையாளம் மொழி என்றாகிறது. இனப்பாகுபாடு என்ற பேதங்களின்றி அனைத்து உலக மக்களும் ஒற்றுமையாக வாழ வழி காண்பதே இந்த நாளின் முக்கியத்துவமாகும்.

    “தாய்மொழி ஒருவருக்கு கண் போன்றது; மற்ற பிற மொழிகளனைத்தும் கண்ணாடி போன்றது” என்பார்கள். கண் போன்று தாய்மொழியைக் காக்கவேண்டியது ஒவ்வொருவரின் முக்கிய கடமை. தாய்மொழியின் மூலம் சிந்திக்கும்போதே ஒருவரின் சிந்தனா சக்தி பெரிதும் விரிவடைகிறது என்கின்றனர் அறிஞர்கள். குழந்தைகளிடம் மூன்று வயதுவரை ஒரு மொழியில் மட்டுமே, குறிப்பாக தாய்மொழியில் மட்டுமே உரையாடுவது அவர்களின் பேச்சுத் திறனையும், சிந்திக்கும் திறனையும் வளர்க்கச் செய்கிறது என்கின்றனர் வல்லுநர்கள்.

    ஒரு ஆய்வு நிறுவனம், தமிழில், எளிதாக வாசிக்கக்கூடிய, 8 வரிகள் கொண்ட ஒரு சிறு பத்தியை தமிழகத்தில் உள்ள 28 மாவட்டங்களில் பள்ளி மாணவர்களிடம் கொடுத்து வாசிக்கச் செய்தனர். இந்த ஆய்வின் முடிவில், ஐந்து வயதான, முதல் வகுப்பில் படிக்கும், 43.4 சதவிகித குழந்தைகளால் மட்டுமே தமிழ் எழுத்துக்களை அடையாளம் காண முடிகிறது என்ற அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர். 2ஆம் வகுப்பு படிக்கும் ஆறு வயது குழந்தைகளில் 43.6 சதவிகித குழந்தைகளால் மட்டுமே வார்த்தைகளைப் புரிந்து வாசிக்க முடிகிறது என்றும் 5ஆம் வகுப்பு படிக்கும், 29.9 சதவிகித குழந்தைகளால் மட்டுமே 2ஆம் வகுப்பு கதைகளை வாசிக்க முடிகிறது என்றும் வெளியிட்டனர். தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழகத்தில் இப்படியொரு நிலை என்றால் புலம் பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளின் நிலை எப்படியிருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. எதிர் காலத்தில் தமிழ் மொழியின் நிலை என்னவாகும் என்று நினைத்து அச்சம் கொள்வதையும் தவிர்க்க முடியவில்லை. இன்னும் 100 ஆண்டுகளில் அழியப் போகிற மொழி என்று சர்வதேச அமைப்பு ஒன்றின் பட்டியலில் உள்ள 25 மொழிகளில் பழம்பெருமை வாய்ந்த நம் தமிழ் மொழி 8வது இடத்தில் உள்ளது என்பதும் அதிர்ச்சியான தகவல். அந்த வகையில் உலகின் மொழிகள் அனைத்தும் அழிவிலிருந்து காக்கப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கம் கொண்ட இந்நாள் போற்றுதலுக்குரியது.

    பல மொழிகள் பேசக்கூடிய நம் இந்திய நாட்டில் 74 சதவிகித மக்கள் இந்திய, ஐரோப்பிய மொழிகளையும், 23 சதவிகித மக்கள் தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளையும் பேசினாலும் இந்திய அரசு 22 மொழிகளையும் அங்கீகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஒரு இனத்தின் மொழி அழிதல் என்பது அந்த பண்பாடு, பாரம்பரியம், மற்றுமந்த இனமே அழிவதாகத்தான் அர்த்தம்.

    இந்தியாவில் மொத்த மொழிகள் 1652 (1961ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி) என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதில் 5வது இடத்தில் தமிழ் உள்ளது.  216 மொழிகளை 10,000க்கும் குறைவானவர்களே பேசுகின்றனர். இவற்றில் 18 மொழிகள் அரசின் அதிகாரப்பூர்வ மொழிகள். மீதமுள்ள பெரும்பாலான மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை. பேச்சு வழக்கில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது.

    இந்தியாவில் இந்தி பேசும் அதிக மக்கள் தொகையாக 41% உள்ளனர். இரண்டாவது இடத்தில் பெங்காலி (6,95,0738). மூன்றாவது இடத்தில் தெலுங்கு மொழி (6,60,17,615). நான்காவது இடத்தில் மராத்தி (6,24,81,681).
    5வது இடத்தில் தமிழ் மொழி பேசுபவர்கள். (5,30,06,368). இந்தியாவில் தமிழ் பேசுபவர்கள் 6.32% புதுவையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 89.2%. தமிழகத்தில் 86.7%. கேரளாவில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை 2.1% கர்நாடகத்தில் 4வது இடத்தில் தமிழ் பேசுவோர் உள்ளனர்.

    நம் தமிழ் மொழி பல்வேறு நாட்டு மக்களின் மொழிகளுடன் பின்னிப்பிணைந்து இருப்பதே நம் மொழியின் பழமைக்கு சான்றாக உள்ளது. உதாரணமாக:
    கொரியா – 6,500
    சப்பான் – 1400
    சீனா – 700
    மலேசியா – 1600
    தாய்லாந்து – 850

    dc-Cover-92atcjrblbo92flf9lnk9vcpp7-20160911071508.Mediஉலகளவில் 136 மொழிகளின் வேர்ச்சொற்களுடன் தமிழ் மொழி கலந்துள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளதாக கடல் ஆய்வறிஞர் திரு ஒரிசா பாலு அவர்கள் கூறுகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டு முதல் பல நாடுகளிலும் உள்ள 600 இளைஞர்களுடன் தொடர்பு கொண்டு இதற்கான ஆதாரங்களை சேமித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலக மொழிகளின் தர வரிசைப்பட்டியலில் நம் தமிழ் மொழி இன்று 14வது இடத்தில் உள்ளதையும், இதனை 6வது இடத்திற்குக் கொண்டு வருவதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் வருகிற 2018 ஆம் ஆண்டின் சர்வதேச அறிக்கையில் நம் தமிழ் மொழி ஆறாவது இடத்தில் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாகவும் கூறுகிறார். நீர் மேலாண்மை, காடுகள் மேலாண்மை, மரபுசார் அறிவியல், உழவில்மொழிகள், பண்பாடு ஒப்பீட்டுவியல் போன்றவைகளில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருபவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகெங்கிலும் 19,000ற்கும் மேற்பட்ட ஊர்கள் தமிழ் பெயர்களில் உள்ளன என்பதையும் குறிப்பிடுகிறார்.

    தமிழ்மொழியில் உள்ள பலதரப்பட்ட உச்சரிப்புகள் கொண்ட எழுத்துக்களால் குழந்தைகளுக்கு நாக்கு நன்கு சுழற்சி அடைவதன் மூலம் அவர்களின் அடிப்படைப் பேச்சுத் திறன் எளிதாக வளர்ச்சியடைகிறது. வாயை நன்றாக திறந்து பேசுவதற்கும் வழிவகுக்கிறது நம் தமிழ்மொழி. அதாவது நாக்கு வாயின் எல்லாப் பகுதிகளைத் தொட்டும், வளைந்தும் நன்கு பேச வழியமைப்பதும் தமிழ்மொழியில் தான். அதாவது பேச்சின் தெளிவு வருவதற்கு தமிழ்மொழி உதவும் என்பதே நிதர்சனம். பல மொழிகள் அறிந்த பெற்றோராக இருந்தாலும், அவர்கள் வெளியில் எந்த மொழியில் பேசினாலும், வீட்டில் குழந்தைகளுடன் தாய்மொழியில் மட்டும்தான் பேசவேண்டும் என்ற கட்டுப்பாடு கொண்டிருக்கவேண்டும். அப்போது தான் குழந்தைகள் எளிதாக, சொல் வழக்கைப் புரிந்து கொள்வதோடு, தாய்மொழியை மறந்துவிடாமல் பாதுகாக்கவும் வழியமைக்க முடியும். 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நம் தமிழ் மொழியின் பெருமை பற்றி நம் குழந்தைகளுக்கு ஓரளவேனும் தெளிவுபடுத்த வேண்டியது இன்றைய பெற்றோரின் முக்கிய சவாலாகவே உள்ளது என்பதும் சத்தியம். அறிவியல், வானவியல் சாத்திரம், கணிதம் குறித்த சொற்கள் நம் பழந்தமிழில் இருந்தன என்பதை இலக்கியச் சான்றுகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. பள்ளியில் குழந்தைகளுக்கு இரண்டாம் மொழியாக தமிழைத் தேர்ந்தெடுக்காமல் பிறமொழிகளைத் தேர்ந்தெடுப்பது நம் தமிழ் மொழிக்கு நாம் செய்யும் துரோகம் எனலாம். தாய்மொழியில் சரளமாக எழுதவும், படிக்கவும் தெரிந்திருப்பவர்களுக்கு வேறு எந்த மொழியையும் எளிதாகக் கற்க முடியும் என்பதே உண்மை. கற்பனைத் திறன் அதிகரிப்பதோடு படைப்பாற்றலும், எதையும் எதிர்கொள்ளும் துணிவும் பெருகும். அதாவது தாய் மொழியில் எழுதவும், படிக்கவும் தெரியாமல் பிற மொழிகள் பலப்பல கற்றிருந்தாலும் அது ஏட்டுக் கல்வி என்ற அளவிலேயே இருக்குமே தவிர வாழ்வின் முழுமையான பயன்பாட்டில் இருக்காது என்பதும் சத்தியம். ஆக அப்படிப்பட்டவர்கள் எந்த மொழியிலும் சரளமாக பேசவோ, எழுதவோ முடியாமல் ஏட்டுச் சுரைக்காயாக, பல மொழிகளைக் கற்றதிற்கான சான்றிதழ்களை மட்டுமே வைத்திருப்பார்கள். ஆனால் தாய்மொழியை நேசிப்பவர்கள், அவர்கள் கற்றறிந்த ஏனைய மொழிகளிலும் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்தவர்களாக இருக்கின்றனர்.

    தம் தாய்மொழியில் புலமை பெரும் ஒருவருக்கு மற்ற மொழிகளைக் கற்கத் தேவையான புரிதல் கிடைப்பதோடு அதன் மூலம் ஒப்பீடு செய்தும், கற்பனை செய்தும் மேலும் கற்றுக் கொள்ளும் ஆற்றலையும் அளிக்கிறது. அந்தந்த மொழிகளுக்கான இலக்கணங்களிலும் ஆழ்ந்த புலமை பெற வழியமைக்கிறது.

    உலகில் மொத்த மொழிகள் 6200 . இதில் 1,500 மொழிகள் ஆயிரம் பேருக்கு கீழ் பேசுகிறார்கள். 3000 மொழிகள் பத்தாயிரத்திற்கும் குறைவானோர் மட்டுமே பேசுகிறார்கள். ஆனால் நம் தமிழ் மொழியைப் பேசுவோர்களின் எண்ணிக்கை 7 கோடிக்கும் அதிகம். உலகளவில், 94 நாடுகளில் தமிழ்பேசும் மக்கள் உள்ளனர். அந்த வகையில் நாம் அனைவரும் நம் மொழியைக் காக்கும் உறுதிமொழி எடுத்தோமானால் இந்தப் பிரபஞ்சம் உள்ளமட்டும் நம் தமிழ் மொழி நீடு வாழும் என்பதில் ஐயமில்லை. நம் தமிழ் மொழியைக் காப்போம். வையம் தலைமை கொள்வோம்!

    தாய்மொழியோடு வாழ்ந்து, பிற மொழிகளோடு பயணிப்பதன் மூலம் வாழ்க்கையை வெற்றி கொள்வோம்!

    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா
    நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
    சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
    இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
    இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
    வானம் தண்துளி தலைஇ யானாது
    கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
    நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
    முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
    காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
    பெரியோரை வியத்தலும் இலமே,
    சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

    (புறம்: 192)
    கணியன் பூங்குன்றனார்.

    வாழ்க தமிழ்!

    வெல்க தமிழகம்!!

    Share
  • வைரமணிக் கதைகள்

    bre

    வாக்கிய அமைப்பில் எளிமையையும் ஏற்படுத்துகிற தாக்கத்தில் இமயத்தையும் தொடுபவர் எழுத்தாளர் வையவன்.வைரமணிக்கதைகள் என்ற பெயரில் வெளிவந்திருக்கும் அவரது 497 பக்க சிறுகதைத்தொகுப்பின் ஒவ்வொரு கதையிலும் புரியும் உண்மை இது . தன்னைச் சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகள் குறித்த கூர்ந்த கவனிப்பு, இது சரி-இது தவறு என்பது குறித்த தெளிவான நிலைப்பாடு , சிறுகதையின் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த தெளிவான இலக்கியப் புரிதல் , சிறந்த சொல்லாடல் என வையவனின் எழுத்துச் சிறப்பைச் சொல்லிக்கொண்டே போகலாம். தமிழ் இலக்கியத்தின் ஜாம்பவான்களின் ஒருவர் என்று சொல்ல வைக்கும் கதைகளை வழங்கினாலும் மிகுந்த தன்னடக்கத்தை வெளிப்படுத்துபவர்.எழுத்தாளர் வையவன். 58 ஆண்டுகளாக இலக்கியப்பங்காற்றிவரும் வையவனின் செழுமையின் தொகுப்பாகவே இந்த 80 கதைகளின் தொகுப்பு அமைந்துள்ளது. கதை பேசும் இடங்களின் -நபர்களின் சித்தரிப்பு , மனக்கண்ணில் கதையை ஓடவிடும் எழுத்தாளுமை , புத்தகத்தை கீழே வைக்கவிடாத அளவு ஈர்க்கும் கதைகள் என இது ஒரு தவறவிடக்கூடாத தொகுப்பு .

    சிறிய கதைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துபவர் இவர். நல்ல இலக்கியம் கால வித்தியாசமின்றி , தலைமுறைகளைத் தாண்டி வசீகரிக்கும் என்பார்கள். அவ்வாறு ட்விட்டரின் குறள் அளவு கமெண்ட்களின் யுகத்திலும் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த எழுத்தாளர் வையவன்.

    ———————–

    மதிப்புரை வழங்கியவர் : பெமினா இதழில் எஸ். செந்தில் குமார்

    வெளியிட்டோர்: தாரிணி பதிப்பகம், 4A , ரம்யா பிளாட்ஸ், 32 /79 ,காந்தி நகர் நகர் நான்காவது பிரதான சாலை, அடையாறு, சென்னை-20
    [இந்த மதிப்புரையின் யூட்யூப் வடிவினை[http://vaiyavanvideos.blogspot.in/] காணலாம்]

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav
    ’’சிந்தை வெளிகடந்து மந்தை வெளிபுகுந்து
    கந்தல் உடையணிந்து கன்றுகளைத் -தந்தையாய்,
    மாதாவாய் காத்து, மடியளிக்கும் நித்திய
    நூதனரை நெஞ்சே நினை’’….கிரேசி மோகன்….!

    Share
  • உலகத் தாய்மொழித் திருநாள்

    aui

    அன்னை ஊட்டிய பிள்ளைத்தமிழே
    ஆசான் பயிற்றுவித்த முத்தமிழே
    இல்லை உன் போன்ற செம்மொழியே
    ஈடில்லாப் புகழ் கொண்ட தாய்மொழியே
    உன்னில் தானே உயிர்மெய் அடக்கம்
    ஊர் பல கடந்துமே நின் புகழ் சிறக்கும்
    எளிய நடையிலும் உனைப் பயில்வோமே
    ஏட்டுச் சுரைக்காயாய் நாங்கள் இரோமே
    ஐ! எங்கள் தமிழே ஆரத்தியும் உனக்கு எடுத்து
    ஒன்றா இரண்டா பலகோடி பாமாலை தொடுத்து
    ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டா என்ற
    ஔவை மூதாட்டி அவர்தம் நல்வழி நின்று
    இஃதே எம் தாய்மொழியின் தனிச் சிறப்பென்று
    இறுமாப்புடனே மார்தட்டி யாவரும் முன்னின்று
    தப்பாது தானே நின் புகழ் பலவும் தன்னையே
    தரணிக்கே உரக்கச் சொல்வோம் தமிழன்னையே
    தாய்மொழித் திருநாள் நல்வாழ்த்துகள்!

    – சித்ரப்ரியங்கா ராஜா,
    திருவண்ணாமலை.

    Share
  • ஸ்ரீ அன்னை பிறந்தநாள்

    Mother

     

    வேலை இருக்குது நிரம்ப -என்னை
    வேகப் படுத்திடு தாயே –
    பாலை சுரந்திடு தளும்ப -உந்தன்
    பாதம் பணிந்திடும் சேய்நான்
    ஆலை கரும்பெனெப் பிழிந்து-எந்தன்
    ஆவி பிரிந்திடும் முன்னே
    சோலை நகச்சுவைக் காற்றை – இவன்
    நாளும் நுகர்ந்திட அருள்வாய்….

    அன்னை பிறந்த நாள்
    —————————-

    கண்ணை இமைகாக்கும், தென்னை குலம்காக்கும்
    அன்னை நமைகாக்கும் அற்புதம் -விண்ணை
    இறங்கவைத்து மண்ணில் இருத்திய தாயின்
    பிறந்தநாள் இன்று போற்று….கிரேசி மோகன்….!

    Share
  • எழிலரசி கிளியோபாத்ரா [பேரங்க நாடகம்]

    aj
    மூலம்: ஷேக்ஸ்பியர் & பெர்னாட்ஷா
    தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

    +++++++++++++++++

    அங்கம் -1 பாகம் -3

    அவளது கண்கள் தீவிர சக்தி வாய்ந்தவை!
    அணங்கின் வனப்பிற்கும் அப்பாற் பட்டவை!
    வான்வெளி நிலவையும் வசீகரம் செய்பவை!
    வாக்கு வன்மையில் நெகிழ வைப்பவள்!

    ஜான் டிரைடென் [John Dryden, Drama: All for Love]

    “வாழ்க்கையில் நடந்த தொடர் நிகழ்ச்சிகள் யாவும் தானாக நேர்ந்த விளைவுகள் அல்ல! அவை ஒவ்வொன்றும் உள்ளத் தூண்டலின் தேவையால்தான் ஏற்பட்டது!”

    ஹன்னா ஸெனிஷ், யூதப் பெண் கவிஞர் [Hanna Senesh (1921-1944)]

    நாடகப் பாத்திரங்கள்:

    ஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது]
    கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது]
    டாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது]
    ·பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது]
    போதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [40 வயது]
    தியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [50 வயது]
    அக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [35 வயது]
    பிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது]
    ரூஃபியோ: சீஸரின் லெ·ப்டினன்ட் [40 வயது]
    லூசியஸ் செப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது]
    அபெல்லோடோரஸ்: ஸிசிலியன்

    மற்றும்:

    பெல்ஸானர்: கிளியோபாத்ராவின் காவலர் காப்டன் [35 வயது]
    பெல் அ·ப்பிரிஸ்: மெம்·பிஸ் “ரா” தேவாலயத்தின் மதாதிபதி.
    ரோமானியப் படையாளிகள்.
    கிளியோபாத்ராவின் அடிமைச் சேடிகள்.
    எகிப்தின் படையாளிகள்

    காலம், நேரம், இடம்:

    கி.மு. 48. எகிப்தின் நீள நைல் நதிக்கருகில் உள்ள பாலைவனம். ஒளிமிக்க பௌர்ணமி முழுநிலவு பொங்கி எழுகிறது. நீல நிற வானில் காளான்கள் முளைப்பது போல் விண்மீன்கள் விழித்தெழுகின்றன. பிரமிட் பின்னால் நிற்க, முன்னால் பிரம்மாண்டமான மனிதத் தலைச் சிங்கம் படுத்திருக்கிறது!

    நாடகப் பாத்திரங்கள்:

    ஜூலியஸ் சீஸர், அவரது லெஃப்டினன்ட் ரூஃபியோ, ரோமானியக் காவலர் சிலர், கிளியோபாத்ராவின் காப்டன் பெல்ஸானர், உதவிக் காப்டன், எகிப்திய காவலர் சிலர் சிங்கச் சிற்பத்தின் அருகே நடமாடி வருகிறார்கள். திடகாத்திரமும், உடல் உறுதியும் படைத்த பெல்ஸானர் தூரத்தில் வரும் ரோமானியப் படைவீரர் கூட்டத்தைக் கண்டு வியப்புற்று நிற்கிறான்.

    aj1

    ஜூலியஸ் சீஸர்: [பிரம்மாண்டமாக வீற்றிருக்கும் மனிதச் சிங்கச் சிற்பத்தை (Sphinx) நோக்கி] மனிதச் சிங்கமே! கால வெள்ளம் அடித்துச் செல்லாத சிற்பமே! பாலை வனத்தில் மண்புயல் இழுத்துச் செல்லாத மகத்தான படைப்புச் சிற்பமே! வெற்றி மமதையுடன் நீ வீற்றிருக்கிறாய்! உனக்கு ஜூலியஸ் சீஸர் வணக்கம் செய்கிறார்! ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எகிப்தின் பாலைவனக் காவலனாகக் கண்மூடாது நிமிர்ந்து படுத்திருக்கிறாய்! நீயும் நானும் ஒரே குறிக்கோள் உடையவர்! உன்னைப் புரிந்து கொள்வது எப்படிச் சிரமமானதோ, அப்படிக் கடினமானது என்னை அறிந்து கொள்வதும்! சிறுவனாக உள்ள போது நஉன்னைப் பற்றி அறிவேன்! உன் நிழலில் எனது பராக்கிரமும் வல்லமையும் வளர வேண்டும் என்று சிறு வயதில் கனவு கண்டதுண்டு! அக்கனவு மெய்யானது! உங்கள் எகிப்து நாட்டுக்கும் நான் ஓர் அதிபதி! ரோம் பைத்தியகாரின் விளையாட்டுத் தளமாகி விட்டது! ஆனால் எகிப்து நாடு பொன்னும், பொருளும் குவிந்த நாடு! உங்களது நாட்டால் ரோம் செல்வ நாடாகச் செழித்திருக்கிறது! ரோம சாம்ராஜியத்தைத் தாங்கி நிற்கும் பிரதான தூண்களில் எகிப்தும் ஒன்று! உன் மகத்துவம், உன்னதம் வாழ்க! உனது நாட்டுக்கு இரண்டு மன்னர்! ஆண் மன்னர் டாலமி! பெண் மன்னர் கிளியோபாத்ரா! அவர்களிருவரும் ஒருவர் முகம் ஒருவர் பாராமல், ஒருவரை ஒருவர் ஒழித்துக் கட்டத் துணிந்து விட்டார்! யார் தலை விழப் போகிற தென்று தெரிய வில்லை! அவரது சண்டையை நிறுத்த நான் வந்திருக்கிறேன். மன்னர் டாலமிக்கு பதினைந்து வயதாமே! அந்த பாலகன் இந்த நாட்டு வேந்தனா? விளையாட்டுப் பிள்ளை எப்படி வேந்தனாக ஆசனத்தில் அமர்ந்திருக்கிறான்? கிளியோபாத்ராக்கு வாலிப வயதாமே! கவர்ச்சி நங்கையை நான் சந்திக்க வேண்டும். எங்கே ஓடிவிட்டாள் உங்கள் ராணி?

    [கிளியோபாத்ராவின் காப்டன் பெல்ஸானர், உதவிக் காப்டன் மற்றும் எகிப்த் காவலர் ரோமானியரை நெருங்கி ஜூலியஸ் சீஸருக்கு ராவணுவ முறையில் வணக்கம் செய்கிறார்கள்]

    பெல்ஸானர்: [சீஸர் கையைக் குலுக்கி] வருக, வருக ரோமாபுரித் தளபதி அவர்களே! எகிப்து அரசு உங்களைக் கனிவுடன் வரவேற்கிறது! நான்தான் காப்டன் பெல்ஸானர். அரசி கிளியோபாத்ராவின் காப்டன். இவர்தான் உதவிக் காப்டன்.

    ஜூலியஸ் சீஸர்: [புன்னகையுடன்] கனிந்த வரவேற்புக்கு மகிழ்ச்சி. இவர்தான் ரூஃபியோ, லெஃப்டினென்ட் ரூஃபியோ. அரசி கிளியோபாத்ராவின் காப்டன் என்றால், அரசர் டாலமிக்கு வேறொரு காப்டனா?

    பெல்ஸானர்: ஆமாம் ஜெனரல். அக்கில்லாஸ் என்பவர் டாலமியின் போர்த் தளபதி. அரசர் டாலமிக்கு ஆசிரியர் ஒருவரும் உண்டு. தியோடோடஸ் என்பது அவர் பெயர். டாலமியின் முதல் மந்திரி அவர். அவரே அரசாங்க அதிகாரி. பல மொழிகளைக் கற்றவர். ஆனால் எங்கள் அரசி கிளியோபாத்ராவுக்கு ஏழு மொழிகள் எழுதப் பேசத் தெரியும். எகிப்திய மொழியில் எழுதவும், பேசவும் அறிந்த முதல் கிரேக்க அரசி அவர்.

    ஜூலியஸ் சீஸர்: கிளியோபாத்ரா எங்கே இருக்கிறார்? நான் அலெக்ஸாண்டிரியா போகிறேன். நான் கண்டு பேச வேண்டும் உங்கள் ராணியை. ஏற்பாடு செய்வீரா?

    பெல்ஸானர்: ஜெனரல் அவர்களே! நீங்கள் தேடிப் போக வேண்டாம். அவரே உங்களைக் காணத்தான் முயன்று கொண்டிருக்கிறார். மன்னர் டாலமி எங்கள் அரசியியை நாடு கடத்தி விட்டார்! சிரியா நாட்டில் வசித்து வருகிறார் தற்போது. ஆனால் அவர் சிரியாவில் எங்கே யிருக்கிறார் என்பதை அறிய முடியாது. அவருக்குச் சேதி அனுப்பவும் முடியாது! டாலமியின் ஒற்றர் அவர் ஒளிந்திருக்கு மிடத்தைக் கண்டால், அவரது உயிருக்கே ஆபத்து! அவரைத் தேடிக் காண்பதும் அத்தனை எளிதன்று. டாலமியின் ஓநாய்கள் எங்கள் அரசியைத் தேடி அலைகின்றன!

    ஜூலியஸ் சீஸர்: ஏனிப்படி உமது ராணியார் ஒளிந்து, ஒளிந்து உயிர் வாழ்கிறார்? யாரிடம் அத்தனை பயம்! டாலமிக்கு கிளியோபாத்ரா மீது ஏனிந்த வெறுப்பு? அவள் டாலமியின் ச்கோதரி அல்லவா?

    பெல்ஸானர்: டாலமியிடம்தான் பயம்! நாடு கடத்திய பிறகும் டாலமி தமக்கையை நசுக்கத்தான் காத்திருக்கிறார். பாலைவனத்தில் அலைய விட்ட பாவை நாளை அவர் உயிரைப் பறிக்க வரலாம் என்று டாலமி அஞ்சுகிறார்.

    ஜூலியஸ் சீஸர்: ஆச்சரியமா யிருக்கிறது. டாலமிக்கு அஞ்சுபவர் அரசி கிளியோபாத்ராவா? கிளியோபாத்ராவுக்கு அஞ்சுபவர் அரசர் டாலமியா? எகிப்தின் பால மன்னர்கள் ஒருவரை ஒருவர் பிடிக்கக் கண்ணாமூச்சி விளையாடுகிறாரா? யார் யாரை பிடித்துக் கவிழ்த்தப் போகிறாரோ? …. நான் எகிப்துக்கு வந்திருப்பதின் காரணம் டாலமி கிளியோபாத்ரா இருவரையும் ஒன்று சேர்ப்பதற்கே! ஒரு தந்தைக்குப் பிறந்த இருவரும் கைகோர்த்து எகிப்தை ஆள வேண்டும் என்று ஆசைப் படுகிறேன். அவ்விதமே ரோமா புரியும் ஆசைப் படுகிறது.

    பெல்ஸானர்: மதிப்புக் குரிய தளபதி அவர்களே! இருவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்தான்! கணவன் மனைவியாக எகிப்தின் விதிப்படித் திருமணம் புரிந்து கொண்டவர்தான்! ஆனால் இது மிகவும் சிக்கலான ஆட்சி! பிரச்சனை மிக்கது! ஆண் அரசர் போடும் ஒரு சட்டத்தைப் பெண்ணரசர் பிடிக்காமல் நிராகரிக்கிறார்! பெண்ணரசி போடும் சட்டத்தை டாலமி ஏற்றுக் கொள்வதில்லை! இருவருக்கும் இடையில் மக்கள் வேதனைப் படுகிறார்! இருவர் ஒரு நாட்டை ஆள முடியாது! ஒருவர் ஆள ஒருவர் மேற்பார்வை யிடலாம்! ஒருவர் ஆள ஒருவர் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்! ஆனால் ஒரு நாட்டுக்கிரு மன்னர் கூட்டாட்சி நடத்த முடியாது! யாராவது ஒருவர் ஆள்வதுதான் மதியுடைமை. வயதில் மூத்த, கல்வி ஞானமுள்ள, கலைப் பேறுள்ள எங்கள் அரசி கிளியோபாத்ராதான் நாட்டை ஆளத் தகுதி பெற்றவர்! டாலமி அடுத்தவர் ஆட்டி வைக்கும் கைப்பொம்மை ஆடி வருகிறார்! அவருக்கு வயது பதினைந்து! முகத்தில் இன்னும் பால் வடிகிறது! கல்வி அறிவு, உலக அனுபவம் டாலமிக்குப் போதாது! அவருக்கு எகிப்தைப் பற்றியும் அறிவு போதாது! ரோமைப் பற்றி எதுவும் அறியதவர்!

    ஜூலியஸ் சீஸர்: கிளியோபாத்ராவும் வாலிப மங்கை என்று கேள்விப் பட்டேன். பெண்ணரசி நாட்டை ஆள முடியுமா? கண்ணுக்கு மையிடும் மாதரசி, கட்டளை யிட்டுப் படைகளை நடத்த முடியுமா? மென்மை மிகுந்த பெண்ணரசி குதிரை ஏறி, வாள் வீசிப் போரிட முடியுமா? ஆயிரம் ஆயிரம் சேனைகளை ஆணையிட்டு நாட்டைப் பிடிக்க ஆசை உள்ளதா?

    aj2

    பெல்ஸானர்: எமது அரசி மகா வீரர் அலெக்ஸாண்டர் வம்சா வழியில் பிறந்தவர்! மீன் குஞ்சுக்கு நீந்தத் தெரியுமா என்று கேட்கிறீர்! இருபது வயது அரசி கிளியோபாத்ராவுக்கு உள்ள திறமை நாற்பது வயது ரோமானியத் தளபதிக்குக் கூடக் கிடையாது! கணித அறிவு மிக்கவர். விஞ்ஞான அறிவு மிக்கவர். வானியல் ஞானம் உள்ளவர்! தினமும் படிக்கிறார். புதுப்புது மொழிகளைக் கற்கிறார். பூகோள ஞானம் மிக்கவர்! போர் புரியும் வல்லமை உடையவர். அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்துச் சென்று வென்றதைப் படித்தவர்! இந்தியாவுக்குப் பயணம் செய்யும் பாதைகளைக் கூடத் தெளிவாகத் தெரிந்தவர்!

    ஜூலியஸ் சீஸர்: ஆச்சரியப் படுகிறேன்! வாலிபத்தின் வாசலில் கால் வைத்த ஒரு பால்ய மங்கைக்கு இத்தனை ஆழ்ந்த அறிவா? மெச்சுகிறேன்! மகா வீரர் அலெக்ஸாண்டர் இந்தியாவுக்குப் போன பாதையை அறிந்தவர், நிச்சயம் மகா அறிவாளியாக இருக்க வேண்டும். கிளியோபத்ராவை நான் நேராகக் காண வேண்டும். உடனே ஏற்பாடு செய்வீரா?

    பெல்ஸானர்: ஜெனரல் அவர்களே! கிளியோபாத்ரா எங்கு ஒளிந்துள்ளார் என்று எனக்கே தெரியாது! எங்கள் அரசியைத் தனியாகக் காண்பது அத்தனை எளிய காரிய மில்லை! அவர் ஓரிடத்தில் இரண்டு நாள் தங்குவதில்லை! கொஞ்சம் பொறுங்கள். அவரிடத்தை முதலில் நான் தெரிந்தாக வேண்டும். தெரிந்த பின் உங்களுக்குத் தகவல் அனுப்புவேன்.

    *********************

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”சென்ற வருடம் என்று நினைக்கிறேன்….திருவல்லிக்கேணி ஸ்ரீபிரியா நினைவூட்டியும், பாழும் தூக்கத்தால் பெருமாள் கருட வாகனம் பாராது பாழானேன்…இன்று ”கேசவ்” உபயத்தால் வினதை மகன் முதுகேறி வரும் புள்ளமர்ந்த(கருட வாகனன்) புருஷோத்தமனை தரிசிக்கும் வாய்ப்பு….!

    பார்த்தசாரதி பெருமாள் கருட வாகனம்….
    ——————————————————–

    kesav
    கொள்ளும்புண் ணாக்கும் குதிரைக்(கு) அளித்தன்று
    வில்விஜயன் தேரை விரட்டியவன் -புள்ளமர்ந்து
    வல்லிக் குளத்தை வலம்வருதல் காணாது
    பள்ளிக் கிடந்தொழிந்தேன் பாழ்….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ‘’மனப்பால் அபிஷேகம் மாதவர்க்கு, மாடு
    தினப்பால் கறக்காமல் தூக்கம் : -வனப்பிதை,
    தந்தகேசவ் வாழ்க, தினம்மடி மோட்சமிடும்
    கந்தவேளின் மாமன்வாழ் க’’….கிரேசி மோகன்….!

    Share