2014-15 ஆண்டில் வெளிவந்த நூல்களில் ஒரு பிரதியை மட்டும் கீழ்காணும் முகவரிக்கு அனுப்புங்கள்.
முகவரி:
94, எம் ஜி புதூர் 3ம் வீதி ,
ஓசோ இல்லம்,
பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி,
திருப்பூர் 641 604 ( 221 221 0 )
மின்னஞ்சல்: Srisuganthi2014@gmail.com
கடைசி தேதி : 1/5/2016
கடந்த ஆண்டில் பரிசு பெற்றோர் விவரம்:
திருப்பூர் இலக்கிய விருது — 2015
(கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)
பரிசு பெற்றோர்:
1. நாவல் : ப.க. பொன்னுசாமி – நெடுஞ்சாலை விளக்குகள்
2. கட்டுரை : சேதுபதி – பாரதி தேடலில் சில பரிமாணங்கள்
3. சிறுகதை : முற்றத்துக்கரடி – இலங்கை அகளங்கன்
4. கவிதை : எல்லாளக்காவியம் – இலங்கை ஜின்னாஹ் சரிபுத்தீன்
5. சிறுவர் நூல் : சொட்டுத்தண்ணீர் – இலங்கை ஓ.கெ.குணநாதன்
6. மொழிபெயர்ப்பு : விஜயலட்சுமி சுந்தர்ராஜன் – இந்தி மொழிபெயர்ப்புகள்
அயலகப்பரிசுகள் பெற்றப் படைப்பாளிகள்:
1. ஜெயந்தி சங்கர் (ஜெயந்தி சங்கர் நாவல்கள்)
2. மாதங்கி (சிறுகதைத் தொகுப்பு )
3. சிங்கை டாக்டர் லட்சுமி (ஆய்வு நூல்)
4. நடேசன் (சிறுகதைத் தொகுப்பு)
பூமித்தாயை மகிழ்வித்து இப்புவி வாழ, தாய்த்தமிழ் வாழ, தன்னலமற்ற தொண்டாற்றி தரணியின் வரலாற்றில் தம் தடம் பதிப்பவர்களில் ஐயா முத்துக்குமாரசுவாமியும் ஒருவர். இவர் பஞ்சநாதம் மற்றும் மாரியம்மாள் தம்பதியினருக்கு திருப்பராய்த்துறை, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், 1936ஆம் ஆண்டில், தவப்புதல்வனாய் அவதரித்தவர். பள்ளி மற்றும் உயர் பள்ளிக்கல்வி திருப்பராய்த்துறை அரசு உயர்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீராமகிருஷ்ணர் தபோவனத்திலும் பயின்றுள்ளார். தருமபுரம் பல்கலைக் கல்லூரியில் புலவர் பட்டப்படிப்பும், முதுபெரும் புலவர் சித்தாந்தசிரோமணி முத்து மாணிக்கவாசக முதலியார், பேரா.குருசாமி தேசிகர், செஞ்சொற்கொண்டல், சொ.சிங்காரவேலனார் ஆகியோரிடம் இலக்கண, இலக்கியம் பயின்றுள்ளார். பின் ஆய்வு நூல்கள், ஆன்மீக நூல்கள், வரலாற்று நூல்கள், என நூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். எண்ணிலடங்கா விருதுகளும், பரிசுகளும், பொற்கிழிகளும் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1970லிருந்து 2016 வரையில் 107 நூல்கள் படைத்துள்ளார். துபாய், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இலக்கிய, ஆன்மீக கருத்தரங்குகளில் பங்குபெற்று வருகிறார். இவையனைத்திற்கும் மேலாக இவர் தம் தவப்பயனாகக் கருதுவது நம் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்ற கப்பலோட்டியத் தமிழர் வ.உ..சிதம்பரனார் அவர்களின் வம்சாவளியில் பிறந்துள்ளதை மட்டுமே. பல தமிழறிஞர்களும், உற்றார், உறவினரும், நண்பர்களும் புடைசூழ முத்துக்குமாரசுவாமி ஐயா அவர்களின் முத்து விழா இறையருளால் இனிதே நடந்தேறியது. அதுசமயம் பல்வேறு துறை அதிகாரிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் வாழ்த்துரைகள் அடங்கிய, ‘அன்புத் தவம் செய்யும் அறிஞர்’ என்ற சிறப்பு மலர் வெளியீடு சிறப்பாக நடந்தது.
சிறப்பு மலர் வெளியீடு
எமது வாழ்த்துரை:
தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் றோன்றாமை நன்று (236)
என்ற ஐயன் வள்ளுவன் வாக்கிற்கேற்ப நிறைபுகழோடு தோன்றியவர் ஐயா முத்துக்குமாரசுவாமி அவர்கள். ஆம், நம் இந்தியத் திருநாட்டின் பிறந்து வளர்ந்து பாரதத் தாயின் தவப்புதல்வனாய் அவள்தம் பெருமையை நிலை நாட்டிய ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனார் வழித்தோன்றலாய் அவதரித்த வல்லார் இவர்.
தம் எண்ணத்திலும், சொற்களிலும் பொலிவு கூட்டி அவற்றை வண்ணமிகு நூல்கள் பல படைத்து, தம் கவின்மிகு நடை மூலம் அழகுத் தமிழின் அருமையை உலகம் முழுதும் பறை சாற்றும் வள்ளல் இவர் என்றால் அது மிகையாகாது! இவர்தம் நூல்கள் யாவும் மக்கள் யாவரும் மாக்கள் ஆகாமல், அறவழிப் பேணி, செம்மைப் பண்பு ஓங்கி, இறை பக்தியில் இனிமை காணும் பண்பு ஓங்கி மனிதம் காக்கும் மனநலம் பெறச் செய்யும் அருஞ்சுவைத் தெள்ளமுதம் என்பதும் வெள்ளிடைமலை. ஐயாவின் நூல்களை வாசிக்கும்போது அவரிடம் பரந்துபட்ட நூலறிவு படர்ந்திருப்பதை அவருடைய நூல்களின் பக்கந்தோறும் காணவியலும். செந்தமிழின் செழுமையைத் திறம்பட எடுத்தாண்டிருப்பதை உணரவியலும். கவின்மிகு நடையால் மட்டும் நம் கவனத்தைக் கொள்ளைகொள்ளாமல் தம் கருத்தாழம் மிக்க சொற்களால் தம் படைப்புகளை மிளிரச் செய்திருப்பதையும் காண முடிகிறது. அந்த வகையில் அன்னைத் தமிழின் அருந்தவப் பயனாய் அவதரித்த அன்பு மகன் இவர்.
“வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்” என்ற ஐயன் நாவுக்கரசரின் வழி நடக்கும் உன்னத ஆத்மா நம் ஐயா அவர்கள்.
மகாபாரதத்தை வியாசர் கூற விநாயகப் பெருமான் தம் கொம்பினை எழுத்தாணியாகவும், மேருமலையை ஏடாகவும் கொண்டு எழுதினார் என்பர். அந்த வகையில் ஐயா முத்துக்குமாரசுவாமி அவர்களின் வாழ்க்கைப் பயணக் குறிப்பை, அவர் பெற்ற விருதுகள், பாராட்டுப் பத்திரங்கள், பட்டங்கள் என அனைத்தையும் எழுத இன்னுமொரு மேருமலை ஏடும், சிறப்புமிக்க எழுத்தாணியும் தேவை. அநாதியான இறையோனைப் போன்றே உலகின் தொன்மை வாய்ந்த சிவநெறி. இந்நெறி எப்போது, யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பதும் அறியப்படாத ஒன்று. வாழ்வியல் நெறி மனிதகுலம் உய்ய உயர்ந்த நெறி. அற்புதமான இச்சிவநெறியை அவ்வப்போது தோன்றும் ஐயா முத்துக்குமாரசுவாமி போன்ற அருளாளர்களே பேணிக்காத்து வருவதும் கண்கூடு. நம் தெய்வச் சேக்கிழார் பெருமானார் போற்றிப் பாடிய ‘செழுந் தமிழ் வழக்கு’ என்ற இந்நெறியே தமிழர்தம் தூய செந்நெறியாம். அந்த வகையில் நம் ஐயா முத்துக்குமாரசுவாமி இறை அனுபவத்தைத் தம் தீஞ்சுவைச் சொற்களால் சுவைபட வடித்தருளியவர். அணுவுக்கு அணுவாய், அப்பாலுக்கு அப்பாலாய் நின்று இயக்கும் பொன்னம்பலக் கூத்தனின் திருவருளை முழுமையாகப் பெற்றவர் இவர் என்பதையும் எளிதாக உணரமுடிகிறது.
ஐயா அவர்களின் நூல்களை வாசிக்கும்போது, ஜி.யூ போப் என்ற இங்கிலாந்து நாட்டு அறிஞரின் அருமையான அனுபவம் ஒன்றை நினைவுகூரச் செய்கிறது. திரு போப் அவர்கள் நம் தமிழ் நூல்கற்பால் பேரார்வம் கொண்டு கற்ற சமயத்தில் திருவாசகத் தேன் பருகிய காலகட்டத்தில் தமது நண்பர் ஒருவருக்கு அவ்விறை அனுபவங்களை மடை திறந்த வெள்ளமாகக்கொட்டித் தீர்த்தபோது, அனைத்து வரிகளும் நீரால் அழிந்துபட்டுக் கிடந்து வந்ததை பல கடிதங்களில் கண்டு மனம் பொறுக்காமல் அந்நண்பர் போப் அவர்களை நேரில் சென்று சந்தித்து, “நண்பரே இது என்ன விளையாட்டு? கடிதம் எழுதி தண்ணீர் தெளித்து அனுப்புகிறீர்களே” என்று காரணம் கேட்க, அவரோ, “நண்பரே நான் விளையாடும் பருவத்தைக் கடந்தவன். நான் எப்போதும் கடிதம் எழுதும்போது ‘வெள்ளம் தாழ் விரிசடையாய்’ எனத் தொடங்கும் திருவாசகப் பாடலை எழுதிவிட்டு உங்களுக்கு எழுதிய கடிதத்தை முடிக்கும் முன்பே என் கண்களில் கண்ணீர் வழிகிறது. முற்றுப் பெறாத கடிதத்தில் கலங்கலுக்குத் தண்ணீர் அல்ல காரணம்; என் கண்ணீரே !” என்றாராம். இப்படித்தான் போப் அவர்களின் சிந்தையைக் கரைத்துச் சிவமாக்கிய திருவாசகத் தேன் போன்று ஐயாவின் ஒவ்வொரு நூலும் நம் சிந்தையை முழுமையாக நிறைக்க வல்லது என்றால் அது மிகையாகாது! ஐயா இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து அன்னைத் தமிழுக்கு வெற்றிமாலை சூட்டிக்கொண்டிருக்க வேண்டும் என உளமார எம் இறையைப் பிரார்த்திக்கிறோம்.
எமது வாழ்த்துப்பா!
நற் பாயிரம் பாடிப்பரவும்
கவி யுலகும் கனிந்துருகும்
விண் மீன்கள் மென்னகையால்
புது கவிதைகள் பாடிடுமே
பூங்காற்றும் புதுமணம் வீசியே
இசை சாரல் தூவிடுமே
மஞ்சள் வெயிலும் மலரணையால்
பொன்னாடை சூட்டி மகிழுமே.
சந்திரனும் தண்ணொளி வீசி
சங்கதிகள் பலவும் மொழிந்திடுமே.
வேதமும் நாதமும் விண்ணதிர
நித்தம் இன்னிசை மீட்டிடுமே
விண்மீன்களும் களிப்புற நடமாடி
நல் வாழ்த்துகள் கூறிடுமே!
வாழ்த்துகள் நானும் சொல்ல
வார்த்தைகள் தேடிச் செல்ல
வசமாகிப் போன ஓசைகளாய்
புள்ளினமும் பூந்தளிரும் புவியேழும்
இணைந்து நற்பாமாலை பாடி
தமிழன்னை மடியில் மலர்ந்த
மைந்தனிவனை மனமார வாழ்த்தி
கவின்மிகு சொற்கள் கூட்டி
ஆன்றோர் வாழ்த்துரைக்க ஆயிரம்
ஆயிரமாய் பூச்சொரிந்து புகழ்பரவி
நிலவின் கைபற்றி நித்தம்
நிறைவிழா கண்டு நீடூழிவாழ்க!
தென்றலின் சுகமான சாமரவீச்சில்
திங்களின் இதமான ஒளிஒத்தடத்தில்
வள்ளலின் வளமான வாழ்த்துரைகள்
திக்கெட்டும் முரசு கொட்டட்டும்!
வாழ்க வளமுடன்! வாழ்க பல்லாண்டு!!
நற்றமிழ் நல்கும் முத்தமிழ் வித்தகர் – பழ.முத்து, நிர்வாக இயக்குநர், பழனியப்பா குழுமம்
’மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்பார்கள். இவர் தமிழ்த் தொண்டே தலையாயத் தொண்டு என்று தவம் மேற்கொண்டு நற்றமிழ் நல்கும் முத்தமிழ் வித்தகர். கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் வம்சம். தமிழின் அம்சம். காவிரிக் கரையில் காவி உடைகளிடம் கல்வி கற்று தமிழில் புலமை பெற்றவர்; சிறந்த எழுத்தாளர்; தலைசிறந்த பேச்சாளர்; இவர் பேச்சைக் கேட்டாலும், எழுத்தைப் படித்தாலும் தென்றல் வீசும் சுகம் கிடைக்கும். கேட்கவும், படிக்கவும் திகட்டாத இன்பம் வரும். சிறந்த நூலாசிரியர்; சிறந்த ஆய்வாளர்; சிறந்த பேச்சாளர்; பொற்கிழி விருது, இலக்கிய விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, என இவர் பெற்ற விருதுகள் ஏராளம். உள்நாடு, வெளிநாடு என இவர் ஏறிய மேடைகள் எண்ணிக்கையில் அடங்காது. சிவனுக்கு தொண்டாற்றிய மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறு என்று வரம் அருளிய இறைவன், தமிழ் தொண்டாற்றும் இவருக்கு நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வங்களும் தந்து வாழ்வாங்கு வாழ்ந்திட அருள் புரியட்டும் என்று அன்புடன் வாழ்த்துகிறேன்.
இவர் எங்களில் ஒருவர் – ப. செல்லப்பன், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.
தமிழ் கூறும் நல் உலகமே வியந்து பாராட்டுகின்ற அளவிற்கு அனைத்து தமிழ் கவிஞர்களும் பெருமை கொள்ளும் வகையில் பல ஆண்டுகள் நின்று நிலைத்து பேசக்கூடிய ஓர் ஆவணமாக ஐயா அவர்கள் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் உழைத்து ஒரு மாபெரும் தொகுப்பு நூலான “இருபதாம் நூற்றாண்டின் நூறு தமிழ்க் கவிஞர்கள்” என்ற நூலினை 2004 ஆண்டு பிற்பகுதியில் தயாரித்துக் கொடுத்தார். அப்புத்தகத்திற்கு மட்டும் இரண்டு பரிசுகள் கிடைத்தன. தொடர்ந்து எங்களது பதிப்பகத்தில் அய்யா அவர்கள் ஆன்மிக இலக்கியத் திறனாய்வு, வரலாறு, சுய முன்னேற்றம் என பல நூல்கள் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எழுதிக்கொண்டு வருகிறார். அத்தோடு மட்டுமல்லாது தமிழகத்திலிருந்து தலைசிறந்த சிறுகதை ஆசிரியர்கள், கவிஞர்கள், தமிழறிஞர்கள், திறனாய்வாளர்கள் போன்ற பெருமக்களிடம் பல நூல்களை எழுதிப் பெற்று எங்கள் பதிப்பகத்தில் பதிப்பிக்கச் செய்த பெருமை அவருக்கு உண்டு. அவருடைய பொறுப்பில் ஏறத்தாழ நூறு நூல்களுக்கு மேல் அவரது உழைப்பால் பல நூலாசிரியர்களிடமிருந்து கிடைத்துள்ளன. அதில் அவர் மட்டும் ஏறத்தாழ எங்கள் நிறுவனத்திற்கு முப்பது நூல்களுக்குமேல் எழுதித் தந்துள்ளார். அதில் அவருடைய பத்து நூல்களுக்கு தமிழக அரசின் விருதுகளும், பரிசுகளும், தமிழ் அமைப்புகளின் பரிசுகளும் கிடைத்துள்ளன என்பது ஒன்றே அவரது தமிழ்ப் புலமைக்குச் சான்றாகும்.
எங்கள் குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்குகொண்டும் எங்களை மகிழ்வுறச் செய்பவர். புத்தகத் தயாரிப்பில் எங்களை வழிநடத்திச் சென்றிட என்றென்றும் இறைவன் இவருக்கு நல்ல உடல் வளத்தினையும் உறுதியினையும் வழங்கிட வேண்டுகிறோம். எண்பது அகவையைத் தாண்டியும் அன்றாடம் அலுவலகத்திற்கு வந்து மாலைவரை இருந்து தயாரிப்புப் பணிகளை ஏற்றுக்கொண்டு அவர் ஆற்றுகின்ற தொழில் முறை ஈடுபாடும், சோர்வில்லா உழைப்பும், சுறுசுறுப்பும் எங்கள் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தும். எங்களில் ஒருவராக திகழும் அய்யா அவர்களை எனது மூத்த சகோதரராகவே கருதி இன்றுவரை பழகி வருகிறேன். இத்தகைய பெருமகனாருக்கு இன்று முத்துவிழா நிகழ்கிறது. இந்த நேரத்தில் எங்கள் நிறுவனத்தின் சார்பிலும் என் சார்பிலும் வாழ்த்துக்கூறி, அன்போடு இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து தமிழுக்குத் தொண்டாற்றிட இறையருள் துணை நிற்க வேண்டுகிறோம்.
‘ஒரு கலம் உமி தின்றால் ஓர் அவல் அகப்படாதா’ – எஸ்.ஆர்.சுப்பிரமணியம்
பொறுமையின் எல்லைக்குப் பெயர் எழுத இதற்கும் மேல் ஒரு சொல் இருக்கவே முடியாது. ஐயா அவர்கள் இந்த இரண்டு நிலை நூல்களையும் நன்கறிந்தவர். ஆய்ந்தவர். அவருக்கு அருமை, பெருமை தெரியும். அவரது உழைப்பால் வாழ்வால் இன்றைய இளைய தலைமுறையினர் எடுத்துக்கொள்ள வேண்டிய பாடம் இதுதான் – “படி!படை!படைத்த பின்பும் படி!”
நமக்கெல்லாம் தெரிந்த ‘புத்தகம்’ என்பதற்கு எத்தனையோ பெயர்கள், பொருளும் உண்டு. அத்தனைப் பொருளையும் திறனுடன் உள்வாங்கி ஒருங்கே அமைந்த வித்தக நூல்களை எழுதி வரும் ஐயா அவர்களை இனி நாம் “முத்து அகக் குமார சுவாமி” என்று ஏன் அழைக்கக் கூடாது? முத்துக்களை உள்ளே பொத்தி வைத்திருப்பதால் சிப்பிகளை ‘முத்தகம்’ என்றழைப்பது பொருத்தமாகவே இருக்கும். அவ்வாறே தான் ஒரு சிப்பியைப் போலிருந்து கருத்து முத்துக்களை உள்ளே இருத்தி வைத்திருப்பதால் ஐயா நமக்கொரு ‘முத்தகம்தானே!’ ஆம்! நம் அனைவருக்கும் அவரொரு பெரிய ‘சொத்தகம்’தான்!
ஈழத் தமிழர் சார்பில் வாழ்த்துக்கள் – மறவன்புலவுக.சச்சிதானந்தன்
சைவம் ஒரு கண், தமிழ் மற்றொரு கண் என வாழ்பவர். சைவமும் தமிழும் தழைக்க அரிய நூல்கள் பல படைத்தவர். பரிசுகள் பல பெற்றவர். உலகம் முழுவதும் வாழும் சைவத் தமிழ் அன்பர்களின் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றவர். இலங்கைத் தமிழரின் துயர் போக்க அங்கு சைவத் தமிழ்ப்பணி ஆற்றுபவர். என் நண்பர் ஈசுவரனின் நல் ஆதரவு பெற்றவர். பல்லாண்டு பல்லாண்டு நலத்தோடு வாழ்வாராக. புகழோடு விளங்குவாராக.
சித்பவானந்தர் மர நிழலில் செழுத்த துளசி! – திருப்பூர் கிருஷ்ணன்
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் வம்சாவளியில் வந்தவர் இவர் என்ற முக்கியமான செய்தியை, திருப்பூர் குமரனின் திருப்பூரைச் சார்ந்த நான் சொல்லிப் பெருமைப்படாவிட்டால் எப்படி? தாம் எழுதிய கண்ணதாசன் கவிதைகள் ஒரு மதிப்பீடு என்ற ஆய்வு நூலுக்கான கண்ணதாசன் பரிசைக் காமராஜரிடமிருந்து பெற்றவர்! வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வரலாற்றை இவர் எழுதினார். அப்படி வரலாறு படைத்தார். அந்த நூலுக்கு அணிந்துரை தந்தவர் யார் தெரியுமா? மேனாள் குடியரசுத் தலைவர் ஆர்.கே.நாராயணன். செந்தமிழ் முருகன் என்ற இவரது ஆய்வு நூல் மிக முக்கியமானது. அது தமிழக அரசின் பரிசைப் பெற்றதில் வியப்பில்லை. இவரது இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்கள் என்ற நூலுக்கு எங்கள் திருப்பூர் தமிழ்ச் சங்கப் பரிசும் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் இதுபோல் இவர் பெருமையைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
நரசய்யா – வாழ்த்துரை
வ.உ.சி. ஒரு பெரிய சூரியன்; அவர் வழித்தோன்றல்கள் முக்கியமான கதிர்கள். அவற்றில் முத்துக்குமாரசுவாமி என்றதொரு ஒளிக்கதிர் தனிச்சிறப்பு வாய்ந்தது; அவர் தொகுத்தளித்துள்ள வ.உ.சியின் வரலாறு நூல் அதற்கான வாழும் சான்று. இவ்வயதிலும் சற்றும் தளராது, ஆர்வம் சற்றும் குறையாது அவர் தமிழுக்குச் செய்து வரும் தொண்டு மிகவும் பாராட்டுதலுக்குரியது. அவர் நீண்ட காலம் வாழ்ந்து தமிழன்னைக்கு தனது தொண்டினைச் செய்து தமிழகம் உய்விக்க வாழவேண்டும் என முருகனை வேண்டுகிறேன்.
உழைப்பால் உயர்ந்தவர் – செல்லப்பாப்பா கீரன்
2010 இல் சென்னையிலுள்ள எமது இல்லத்திற்கு ஒரு நாள் வந்து, தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு உங்களை அமுதசுரபிக்காகப் பேட்டி எடுக்க வந்துள்ளேன், நான் தருமையில் உங்களுடன் படித்தேன். பிறகு சர்வோதயாவில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன் என்றார். எங்கள் இருவருக்குமே அப்பொழுது எழுபதிற்கு மேல் ஆகிவிட்டதால் எனக்கு அடையாளம் தெரியவில்லை. …… நான் பெருமையுடன் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அப்பொழுது அவர் அமர்ந்திருந்த கோலம் முற்றத் துறந்த முனிவரின் கோலம்! முதலாண்டுக் கல்வியில் சேர்ந்திருந்த அவரை சில மாதங்களில் குடும்பத்தினர் வற்புறுத்தல் காரணமாக தந்தை அழைத்துச் சென்று பணி, திருமணம் என்று அமைந்தாகிவிட்டது!
எடுத்துக்கொண்ட அந்த அறம் சென்றாலும் வந்து சுமந்த அந்த இல்லற தருமத்தை பெற்றோர், சகோதரி, சகோதரர் என்ற அனைத்துக் கடமைகளையும் செவ்வனே செய்து; தற்போது தனது பிள்ளைகள், பேரக் குழந்தைகள் என்று பாடுபட்டுக்கொண்டிருப்பவர். இப்படி இடையறாது குடும்பச் சுமைகள் இருந்தாலும் இளைஞர் போல ஓடியாடி சுற்றித் திரிந்து விழாக்களை நடத்துவதும், பங்கு கொள்வதும், நூல்களை எழுதித் தள்ளுவதும் குறைவில்லை! அமைதி, அடக்கம், பண்பு, பாசம், பொறுமை, உழைப்பு, உதவும் பாங்கு எல்லாம் நிறைந்த உருவம்!
அதிக கோபம் என்னென்ன பிரச்சனையை ஏற்படுத்தும் என்று நாம் அறியாததல்ல.. ஒருவர் அதிகமாக கோபப்படும்போது அவருக்குள் வேதியியல் மாற்றம் நிகழ்ந்து உடலினுள் ஒருவகை இரசாயணம் உருவாகிறதாம். இதையும் ஒரு விஞ்ஞானி ஆராய்ச்சி செய்திருக்கிறாராம். அதீதமான அச்சத்திலோ, அல்லது கோபத்திலோ உள்ள ஒருவரிடமிருந்து இரத்தத்தை எடுத்து பரிசோதனைக்காக சோதனைக் கூடத்தில் இருந்த பன்றிகளுக்குச் செலுத்திப்பார்த்தபோது அவை இரண்டு நிமிடங்களில் இறந்துபோய்விட்டதாம். ஓர் உயிரைக் கொல்லும் அளவிற்கு பலம் வாய்ந்த இரசாயணம் நமக்குள் எத்தகைய பிரச்சனைகளையெல்லாம் தோற்றுவிக்கும்? ஆம் அதீதமான பயம், கோபம், எரிச்சல், ஏமாற்றம், மன உளைச்சல் போன்றவைகள் தோற்றுவிக்கும் இரசாயணம் மனிதனின் உடலையும் உயிரையும் பெரிதும் பாதிக்கவல்லது! என ஆராய்ச்சியாளர்கள் கவலையோடு தெரிவித்துள்ளனர். சுருக்கமா சொல்லணும்னா நமது மனது தான் நமது உடலின் சிற்பி. நம் உடலை நல்ல சிலையாகவோ அல்லது பின்னமான உருவமாகவோ அமைப்பது நம் கையில்தான் உள்ளது!
‘நேர்மாற்று உளவியல்’அப்படின்னு ஒரு விசயம் இருக்கு தெரியுங்களா..? இது வெற்றிக்கான ஒரு எளிதான உத்தி. சமீபத்தில் ஒரு கடற்கரையில் ஒரு தேநீர் விற்கும் சிறுவனிடம் இதைக்கண்டு ஆச்சரியப்பட்டேன். செம அறிவாளி போல… இந்தப் பையன் இருக்க வேண்டிய இடமே வேறு.. பிற்காலத்துல பெரிய ஆளா வருவாயப்பா என்று வாழ்த்திவிட்டுத்தான் வந்தேன்.. அப்படி என்ன செய்தான்னுதானே யோசிக்கறீங்க..? பின்ன என்னங்க.. எல்லோரும் டீ… டீ… சாய்… சூப்பர் பால் டீ.. சூப்பர் ஏலக்காய் டீ….. சூப்பர் இஞ்சி டீ அப்படீன்னு விற்கறத பார்த்திருக்கோம். இவன் மட்டும் ‘படு மோசமான டீ..’ ரொம்ப ரொம்ப மோசமான டீ..’ அப்படீன்னு கூவிக்கொண்டிருந்தான். என்ன ஆச்சரியம் கொஞ்ச நேரத்தில் அத்தனை தேநீரையும் விற்று தீர்த்து விட்டான் அந்த சிறுவன். தேநீர் அதிகமாக குடிக்கும் வழக்கம் இல்லாத நான்கூட அப்படி என்ன மோசமான டீ, குடித்துதான் பார்க்கலாமே என்று வாங்கிக் குடித்தேன் என்றால் பாருங்கள். இதே உத்தியை சமீபத்தில் விஜய் தொலைக்காட்சி பிரபலம் ஒருவர் பயன்படுத்தி தன் நூல் ஒன்றிற்கு ‘இதை வாங்க வேண்டாம்’ என்று எதிர்மறையாக தலைப்பிட்டு விற்பனையில் சாதனை படைத்தாரே, அது நினைவிருக்குமே? என்னமா யோசிக்கிறாய்ங்கப்பா.. !
5000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து, மெஸோபொடாமியா, இந்தியா, சைனா போன்ற நாடுகளின் பூர்வீக நாகரீகங்கள் செழிப்பான நைல் நதி, டைகிரிஸ் நதி, யுஃபிராடிஸ் நதி, சிந்து நதி, மஞ்சள் நதிக்கரைகளில் சீராகத் தலைதூக்கி விருத்தியாகி வந்துள்ளன. இங்குமங்கும் சிதறிய இனக்குழுக்கள் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து, வேளாண்மை செய்து பயிரினங்களை விதைத்துத் தளிர்க்க வைத்துச் சிற்றூர் ஆட்சி முறை நிலைபெற்றுப் பல இடங்களில் சிற்றரசர்களும், சில தளங்களில் பேரரசர்களும் சிறப்பாக ஆண்டு வந்திருக்கிறார்கள். நூற்றுக் கணக்காக கிராமங்களும், நகரங்களும் பெருகி, மக்கள் அறிவு வளர்ச்சி அடைந்து சிற்பக்கலை, ஓவியக்கலை, கட்டடக்கலை, காவியம், நாடகம், நாட்டியக் கலைகளும் தழைத்தன. நகரங்களில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து, அவரிடையே ஏற்றத் தாழ்வுகள் உண்டாயின! இனவாரிச் சமூகங்களில் அவரவர் புரியும் தொழில்களுக்கு ஏற்பவும், செல்வச் செழிப்புகளுக்கு ஒப்பவும் வகுப்புவாரிப் பிரிவினைகள் கிளைவிட்டு, விழுதுகள் பெருகின! அரச பரம்பரை, செல்வந்தர், படைவீரர், மதவாதிகள், வர்த்தகர், தொழிலாளிகள், அடிமைகள் என்று பகுப்புகள் நிலை பெற்றன! நகரங்களில் ஆட்சி வர்க்கத்தார் அரச மாளிகைகளை எழுப்பி, எதிரிகள் புகாவண்ணம் பாதுகாப்பு அரண்களைச் சுற்றிலும் கட்டின.
புரட்சிகரமான அந்தப் புதிய நாகரீகம், கற்காலத்திற்குப் பிறகு குப்பென தோகை விரித்தது. வலுப் பெற்ற வல்லரசுகள், பலமற்ற மெல்லரசுகளை நசுக்கி அவரது நாடுகளை ஆக்கிரமிப்பு செய்து கொண்டன! போர்வாள் இட்ட விதிகளே சட்டங்களாய் நிலவி வந்தன. ஆரம்ப நாகரீக வரலாறு களில் சமயவாதிகளும், ஜோதிட வானியல் ஞானிகளும், திறமைசாலி களும், பேச்சாளர்களும், எழுத்தாளர்களும், கலைஞர்களும் தோன்றினர். எழுத்துத் திறம் சிறப்புற்று எகிப்து, கிரேக்க [மெஸோபொடமியா] எழுத்தாள ஞானிகள் தமது நாகரீக வரலாறுகளை எழுதிப் பதிவு செய்து வைத்துள்ளது பண்டைய இனங்களின் வரலாறுகளை அறிய உதவி நமக்கு செய்கின்றன.
சிற்பிகள் தமது சிற்பங்கள் மூலமாக, ஓவியர் தமது ஓவியங்கள் மூலமாக, எழுத்தாளர் பேச்சாளர் தமது கல்வெட்டுகள் மூலமாக, கட்டடக் கலைஞர் தாம் கட்டிய மாளிகைகள், அரண்கள், கோயில்கள், கோபுரங்கள், பிரமிட்கள், கலைத் தூண்கள் மூலமாக பூர்வீக நாகரீக வரலாறுகளைப் பதிவு செய்து வைத்துள்ளார்கள். உலக அற்புதங்களில் ஒன்றானது, பிரம்மாண்டமான கூஃபூ பிரமிட் [Khufu Pyramid]. எகிப்தில் கட்டிய பிரமிட்களில் எல்லாவற்றிலும் பெரியதான காஸாவில் உள்ள கூஃபூ பிரமிட் 480 அடி உயரம், 750 அடிச் சதுர பீடத்தில், 2,300,000 பாறைத் துண்டுகள் கூம்பு வடிவில் அடுக்கப் பட்டது! தற்காலப் பொறியல் துறை, கட்டடக் கலை நிபுணர்கள், நவீன யந்திர சாதனங்களால் அத்தகைய பூதக் கற்கோபுரத்தைக் கட்ட முடியமா என்பது ஐயப்பாடே!
எகிப்தின் பொற்காலப் பூர்வீக நாகரீகம்
2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதல் கிரேக்க வரலாற்று ஞானி, ஹெரொடோடஸ் [Herodotus] எகிப்தை ‘நைல் நதியின் கொடை ‘ [The Gift of Nile] என்று வாழ்த்தி எழுதி யிருக்கிறார். உலகப் பெரும் நதிகளிலே எல்லாவற்றையும் விட மிகவும் நீண்டதாகக் கருதப்படும், நைல் நதி 4160 மைல் தூரம் தளத்தில் ஓடி பல்லாயிரம் ஏக்கர் நிலங்களில் பயிர் வளத்தையும், மனிதர் தரத்தையும் உன்னத மாக்கியது. கெய்ரோவுக்கு அருகில் உள்ள சிறப்பான கிஸா பிரமிட்கள் நைல் நதிக்கு அருகே எழுந்தவை. நைல் நதியில் ஆண்டு தோறும் வெள்ளம் வந்து, நிலங்கள் மூழ்கிடும் சமயம் விவசாயிகள் வேலை யில்லாமல் இருந்த போது, அவர்கள் பிரமிட் கட்டும் பணியில் கலந்து கொண்டதாக அறியப்படுகிறது. நீர் வடிந்து நிலங்கள் தயாரான போது அவர்கள் மீண்டும் வேளாண்மையில் முனைந்திருக்கிறார்கள்.
பிரமிட்கள் கட்டி 2700 ஆண்டுகள் கழித்து நேரடியாகக் காண வந்த ஹெரொடோடஸ் எழுதியுள்ள குறிப்புகளின்படி கூஃபூ பிரமிட் [Khufu Pyramid] கட்டுவதற்கு 100,000 மேற்பட்ட நபர்கள் பங்கேற்றிருக்க வேண்டும் என்று அறியப்படுகிறது. நவீன எகிப்தின் கட்டடக் கலைஞர் [Egyptologists] கணிப்பு விவரப்படி, பங்கு பெற்றோர் எண்ணிக்ககை சுமார் 20,000 நபர்களாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. கிஸா பீட பூமியில் 2,300,000 பாறைத் துண்டுகள் கொண்ட மாபெரும் பிரமிட் ஒன்றைக் கடவுளாகக் கருதப்பட்ட ஃபாரோ [Pharaoh] மன்னருக்குக் கட்டி யிருக்கிறார்கள். அவற்றில் பயன்படுத்தப் பட்ட பெரும் பாறைத் துண்டுகள் சில 15 டன் எடை கொண்டிருந்தன. அதை மட்டும் கட்ட 20 ஆண்டுகள் எடுத்துள்ளதாக அறியப்படுகிறது! தொல்பொருள் உளவாளர் மார்க் லேனர், ஸஹி ஹவாஸ் [Archaeologists: Mark Lehner & Zahi Hawass] இருவரும் பணிபுரிந்த 20,000-30,000 பணியாட்கள் எங்கே தங்கி யிருந்தார்கள் என்னும் புதிரை விடுவிக்க முயன்றார்கள்.
5000 ஆண்டுகளுக்கு முன்னால் ஆண்ட எகிப்தின் நான்காம் அரசப் பரம்பரையினர் மிக்க நாகரீகத்தில் வாழ்ந்ததாக அறியப்படுகிறது. அவரது வம்சத்தில் வந்த வலுவாற்றல் பெற்ற ஃபாரோ சக்கரவர்த்திகள் பலர் எகிப்தை ஆண்டு வந்திருக்கிறார்கள். அந்தப் புராதன வேந்தர்கள் முற்போக்கான நாகரீகத்தில் வாழ்ந்து வந்ததின் அடையாளச் சின்னங்கள் யாவும் 5000 ஆண்டுகளாய் மகத்தான பிரமிட் கோபுரங்களில் புதைத்து வைக்கப் பட்டுள்ளன! கடவுளுக்கு இணையாகக் கருதப்பட்ட அந்த மாபெரும் அரசர்கள் இறந்த பின்பு தங்களைப் பின்னால் புதைப்பதற்கு தாங்களே பிரமிக்கத் தக்க பிரமிட்களைக் கட்டியுள்ளார்கள்! எகிப்திய மக்கள் ஃபாரோ சக்கரவர்த்திகளைக் கடவுளாக மதித்து வந்ததைப் பிரமிட் என்னும் அவர்களின் அடக்கக் மாளிகைகளே இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பறைசாற்றப் போகின்றன! ‘பெரும் மாளிகை ‘ என்று அர்த்தம் கொண்ட ஃபாரோ என்னும் சொல், பின்னால் பேரரசர் என்னும் பொருளில் நிலவியது.
பிரமிட் கோபுரங்கள் கட்டப்பட்டதின் காரணங்கள் என்ன ?
எகிப்தின் முதல் கரடுமுரடான ‘படிக்கட்டுப் பிரமிட் ‘ [Step Pyramid] கி.மு.2750 ஆம் ஆண்டில் சாக்காரா [Saqqara] என்னும் இடத்தில் ஸோசர் அரசரால் [King Zoser] கட்டப் பட்டது. அடுத்து சதுரப் பீடத்தின் மீது வழவழப்பான சமகோண சாய்வு முக்கோணப் பிரமிட், கூஃபூ மன்னனின் தந்தைக்கு வட தர்ஹூர் [Dahrhur] என்னும் இடத்தில் கட்டப்பட்டது. 150 ஆண்டுகளுக்குப் பிறகு கீஸாவில் கட்டுமானமாகிய பிரமிட்கள்தான் எல்லாவற்றிலும் மிகச் சிறப்பானவை! அவை பிரம்மாண்டமானவை! பார்ப்போரைத் திகைப்பிலும், வியப்பிலும் ஆழ்த்துபவை! கூஃபூ பேரரசர் [King Khufu] காலத்தில் கட்டப்பட்ட ‘மகா பிரமிட்டுக்கு ‘ [The Great Pyramid] அவரே திறப்பு விழாவைக் கொண்டாடினார். உலகப் புகழ் பெற்றது அதுதான். ஏழு அற்புதங்களில் ஒன்றானதும் அதுதான்!
பிரமிட்கள் யாவும் கடவுளாகக் கருதப்பட்ட எகிப்த் பேரரசர்களுக்குக் கட்டிய சமாதி மாளிகைக் கோபுரங்கள். பூர்வீக எகிப்திய மாந்தர் மரணத்துக்குப் பிறகு பிரியும் ஆன்மா தொடர்ந்து வாழ்கிறது என்று நம்பினார்கள். இறப்புக்குப் பின் தொடரும் வாழ்வில் கிடைக்கும் முழுப்பயனை அடைய, அவர்கள் மிகவும் சிரமம் எடுத்து வழி செய்தார்கள். நகரில் முக்கியத்துவம் பெற்ற நபர்கள் மிக்க மதிப்பு அளிக்கப்பட்டனர். அதிலும் கடவுளாகக் கருதப்பட்ட நாட்டு வேந்தர்கள் எல்லோரையும் விட உன்னத நிலையில் வைக்கப் பட்டனர்! பிரமிட் அடக்க மாளிகைகள் அவ்விதப் பேரரசர்களுக்கே கட்டப் பட்டவை. ஃபாரோ வேந்தர்களின் உடல்கள் பிரமிட் உட்புற அரண்களில் வெகு பாதுகாப்பாக அடக்க மாகியுள்ளன.
ஃபாரோ மன்னனின் முதற்பணி தனக்காகக் கட்டப் பட்டிருக்கும் பிரமிட் மாளிகைக்குத் திறப்பு விழா புரிவது! பேரரசர் தான் அடங்கப் போகும் பிரமிட் மாளிகையைக் கட்ட அவரே ஆரம்ப விழா நடத்திய பின், அவர் சாகும் வரையில் நிபுணர்களால் அது அலங்கரிக்கப் படுகிறது! பேரரசர் இறந்தவுடன் சிங்காரிப்பு வேலைகள் அப்படியே முடிக்கப் படாமல் நிறுத்தம் ஆகின்றன! பிறகு அரசனின் உடலைப் பேழையில் இறுக்கமாய் மூடிப் புதைக்க, பிரமிட்டின் உட்புற அடக்க மாளிகை மட்டும் தயாரிக்கப் படுகிறது. பிரமிட்டின் அடக்க மாளிகை மதில்களில் எல்லாம் ஓவியப் படங்கள் வரையப்பட்டு அந்த அரசர் பரம்பரையின் வரலாறுகள் சொல்லப் படுகின்றன.
பிரமிடைப் பேரரசருக்காகக் கட்டிய நிபுணர் குழுவினர் பெயர்கள் சுவர்களில் எழுதப் பட்டுள்ளன. இறந்த பேரரசரின் செல்வக் களஞ்சியங்கள், தங்க ஆபரணங்கள், அலங்கார ஆசனங்கள் ஆகியவை யாவும் அவருடன் புதைக்கப் பட்டன. அரசர், அரசிகளுக்குப் பணி செய்த பணியாளிகள் இறந்த பின் அவரது சடலங்களும், அரச தம்பதிகளின் அடக்க அறைகளுக்கு அருகே புதைக்கப் பட்டுள்ளன. அரச தம்பதிகளின் உறவினர், அரசாங்க அவையைச் சேர்ந்தவர், பிரமிடைச் சுற்றியுள்ள புறவெளி இடத்தில் புதைக்கப் பட்டிருக்கிறார்கள்.
(தொடரும்)
தகவல்
1. Guide to Places of the World Egypt By: Reader ‘s Digest (1987)
2. Atlas of the World History By: Harper Collins (1998)
3. The Ancient World, Quest for the Past (1984)
4. How in The World By: Reader ‘s Digest (1990)
5. Age of the Pyramids, Egypt ‘s Old Kingdom By: National Geographic (January 1995)
6. Finding A Pharaoh ‘s Funeral Bark & Riddle of the Pyramid Boats By: National Geographic (April 1988)
7. The History of Art for Young People By: H.W. Janson.
8. Ancient Egypt, Who Built the Pyramids, How old Are the Pyramids, PBS & WGBH Web Site (1997)
எனக்கு அலுத்து விட்டது. இயற்றிய சட்டம், அதன் கிளைகள், தீர்வு அளித்த சட்டம், சட்ட நிர்வாகம், சட்ட சீர்திருத்தம் ஆகியவை பற்றி நான் தெளிவாக பலமுறை எழுதியிருந்தாலும், ‘தும்பை விட்டு, வாலையும் விட்டு, வெறும் காற்றை பிடிக்கப்பார்த்து ஏமாந்து போகிறார்கள் சிலர். நம்ம இன்னம்பூரான் தானே ! அவர் என்னத்தைக் கண்டார்? என்று ஒரு இனம். சட்டம் ஒரு இருட்டறை என்றால் எதுகையோ, மோனையோ, அலங்காரமாக இருக்குது; இது மற்றொரு இனம். சட்டம் ஒரு கழுதை என்றால், உவமை அணி என்றொரு கட்சி. ஆக மொத்தம், எல்லாரும் ராங்கு ! புது வாசகர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களாவது படிக்கட்டுமே.
அரசாங்கத்தைக் குறை சொல்வது எளிது; நடாத்துவது கடினம். பல வருடங்களாக, பற்பல அரசு நிர்வாகங்களுடன் இணைந்தும், எதிர்த்தும் நற்பணி செய்து வந்த நான் விதிகளையோ, சட்டப்புத்தகத்தையோ, ஈயடிச்சான் காப்பியாக அமல் படுத்தியதாக ஞாபகம் இல்லை. எங்கள் பயிற்சி மன்றத்தில் இது பற்றி பாடம் எடுத்தார்கள். ஒரு சிறிய உதாரணம். ஒரு நோயாளிக்கு அவசரமாக பென்ஷன் எடுத்துச்செல்ல ஆணையிட்டேன். இடம், பொருள், ஏவல் பெரிய கதை. ஃபோன்: ‘சார்! ஐந்து நிமிடம் முன்னால் அவர் இறந்து விட்டார். என்ன செய்ய?’. அந்தக்காலத்தில் அவர் மனைவிக்கு பென்ஷன் இல்லை; பழம்பாக்கி போய் சேர ஒரு வருடம் ஆகும். ‘சத்தமில்லாமல் பிரேதத்தின் கைநாட்டு எடுத்து வா. நான் அதற்கு சம்மதித்து ஆணையை பதிவு செய்கிறேன்.’ ஆட்டம் க்ளோஸ். என்னது இது? அவர் பேராசிரியர். அவர் கிட்ட கை நாட்டா? பிடி சார்ஜ் ஷீட். விசாரணை முடியும் வரை சஸ்பெண்ட். அதுவும் செல்லுபடியாகும்!!!!
சட்டம் இயற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ஒரு பின்னணியை முன்வைத்து பொது நலம் நாடுவார்கள்: ஜமீன்தாரி ஒழிப்பு. ஓட்டைகள் தவறியும், திட்டமிட்டும் அமையலாம். நீதிபதிகள் மோப்பம் பிடித்து சரி செய்த பின் அது சட்டம் ஆகும். இந்த வகையில் மாற்றங்கள் ஏற்படலாம்.
இந்த வழக்கை பாருங்கள். இந்தியாவின் மத்திய & பேரார் மாகாணத்தில் பேதுல் ஜில்லாவில் ஒரு லேவாதேவிக்காரர் ஒரு பழங்குடி மீது வட்டியும் முதலுமாக வசூலிக்க வழக்குத் தொடர்ந்தார். ஆவணங்கள் பக்கா. கடங்காரரோ, ‘ஐயோ! அந்த பாவி தான் கடங்காரன். காசா கொடுத்தேன். உழைப்பா கொடுத்தேன், சின்ன பசங்கக் கூட உழைத்தார்கள். அவன் நாசமா போக! கடவுளே! நீ கண்ணில்லா கபோதி! எனக்கு எழுதப்படிக்கத் தெரியாது. நோ ஆவணம். ‘ என்று கதறினான்.
ஜட்ஜ்மெண்ட்:
‘சட்டப்படி வாதியின் வழக்கு சரியே. பிரதிவாதி இந்த கடனை தீர்க்கத்தான் வேண்டும். இல்லாவிடின் கடுங்காவல். வட்டியும் முதலுமாக அவர் ₹ 200 கட்டவேண்டும். அவரோ பரம ஏழை. ஆகவே, சட்டப்படி வருடத்துக்கு ஒரு ரூபாய் வீதம் 200 வருடங்கள் கட்டியே ஆகவேண்டும். இந்த ஷரத்துப்படி அப்பீல் கிடையாது.’
-J G Bourne, Deputy Commissioner & ex officio Judge of the Small Cause Court.
ஆதாரம்: MN Buch: 2008 When the Harvest Moon is Blue: Har Anand (p.56-57).
உலக மாந்தரனைவரும் புகழொடு வாழவே விரும்புவர். அப்புகழினைப் பெறல் எவ்வாறு? சிலர் ஈகையினால் புகழ்பெறுவர் கடையெழு வள்ளல்களைப் போல. சிலர் தாம்செய்யும் நற்செயல்களாற் புகழீட்டுவர். சிலர் செயற்கருஞ்செய்து புகழ்பெறுவர். அங்ஙனம் வாய்மையைப் போற்றியும் இன்னாசெய்யாமையை மேற்கொண்டும் புகழ்பெற்றவர் இந்தியத் தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகள். இங்ஙனம் இசைபட வாழ்தலையே நன்மக்கள் விரும்புவர்.
பண்டை நாளைய மன்னர்களும் இத்தகு நல்லொழுக்க, நற்செயல்களாலேயே தம்புகழ் நிறுவினர். எனினும், மக்களைக் காக்கும் மன்னர்களுள்ளும் அடாதுசெய்து பெரும்பழி எய்திய மன்னர்களும் சிலருளர். அவருள் ஒருவனே நீங்காப்பழி யெய்திய நன்னன் என்பான். அவனை இலக்கியப் புலவோர், ‘பெண்கொலை புரிந்த நன்னன்’ என்றே அடைகொடுத்துப் பழித்துரைத்துள்ளனர்.
அந்நன்னன் புரிந்த செயலைச் சற்று விரிவாகத்தான் காண்போமே. நன்னன் ஒரு குறுநில மன்னன். அவனது தோட்டத்தில் பயன்தரு மரங்கள் பல இருந்தன. அத்தோட்டத்திற்குக் காவலும் மிகுதி. அங்கு மாமரமொன்றில் காய்கள் காய்த்திருந்தன. அம்மாமரக்கனிகளை நன்னன் பிறர்க்கீயாது தானே உண்ணவிரும்புவான் போலும்! ஒருநாள் அம்மரத்திலிருந்த காயொன்று காற்றினால் அலைப்புண்டு அதன் பக்கலிலிருந்த ஆற்றுநீரில் வீழ்ந்து மிதந்து சென்றது.
பக்கத்தூரிலிருந்து குறுநிலத் தலைவனின் மகளாகிய இளநங்கையொருத்தி, தன் தோழியர் குழாத்தொடு புனலாடச் சென்றனள். விளையாட்டும் வேடிக்கைப் பேச்சுமாய் அந்நங்கையர், அருகில் பாய்ந்துசென்ற அவ்வாற்றில் நெடுநேரம் புனலாடி மகிழ்ந்தனர். கண்கள் சிவப்ப நீராடிக்கொண்டிருந்த அத்தலைவன் மகள் ஆற்றுநீரில் மிதந்துவந்த மாங்காயைக் கண்டனள். இளநங்கை தானே? விளையாட்டுப் பருவமும் கூட. அம்மாங்காயை எடுத்துக் கடித்துத் தின்றனள்.
இஃதிவ்வாறாக; தோட்டக்காவலர் மாங்காய் ஆற்றுநீரில் வீழ்ந்து மிதந்துசெல்வதை எவ்வாறோ அறிந்து, ஆற்றின் கரைவழியே மாங்காயைத் தேடி வந்துகொண்டிருந்தனர். அதுபொழுது, ஆற்றில் நீராடிய மங்கையொருத்தி அம்மாங்காயை எடுத்துத் தின்றதை யறிந்தனர்; வெகுண்டனர்.
பன்முறை அத்தலைவன் வேண்டியும் ஐயகோ…! அவ்வேண்டுகோளை ஏலாது அந்நங்கையைக் கொன்றான் நன்னன் என்னும் நயனிலன். பெண்கொலை புரிந்த நீங்காப் பழி நன்னனை மட்டுமன்றி அவன் மரபையே சூழ்ந்தது. அவனுடைய இந்த இழிசெயல் இலக்கியத்திலும் இடம்பிடித்துவிட்டது. தமிழிலக்கியங்கள் உள்ளவரை நன்னனின் பழியும் நீங்காமல் நிற்கும் என்பதையறிக.
மன்னன் நீதிவழாது, கோல்கோடாது ஆட்சிபுரியவேண்டியதன் அவசியத்தை உணர்த்தவந்த பொதுமறையாசிரியர்,
ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை (குறள்: 541) எனவும்,
இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின். (குறள்: 547)
எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கண்ட “இறைகாக்கும்” எனத் தொடங்கும் குறட்பாவுக்கு உரைவரைந்த பரிமேலழகர், ”முறைகாக்குங்கால் முட்டுப்பாடு வந்துழியும் முட்டாது செய்தல் வேண்டும்” என்பார். மேலும் இம்முறைசெய்த சிறப்பினைத் தன்கை குறைத்தான் கண்ணும் (பொற்கைப் பாண்டியன்), மகனைத் தேரூர்ந்தான் கண்ணும் (மனுநீதிச்சோழன்) காண்க என்பார்.
எம்.ஜெயராமசர்மாB.A (Hons) Dip. in Edu , Dip. in Soc , M.Phil Edu ,SLEAS
முன்னாள் கல்விஇயக்குனர் … மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா )
திருமுறைகள் வாழ்வியலுடன்
திருமுறைகள் கண்டெடுக்கப்பட்ட இடமே திருக்கோவில்தானே ! திருமுறைகள் பாடப்பட்ட இடமும் திருக்கோவில்கள் தானே ! திருமுறை பாடிய அருளாளர்களை இறைவன் ஆட்கொண்ட இடமும் கோவில் அல்லவா? எனவே கோவிலின் இன்றியமையாமை திருமுறைகளால் தெட்டென வெளிப் படுகிறதல்லவா?
பக்தி இயக்கத்தின் ஊற்றுக் கண்ணே வாழ்வியலோடுதான் இணைகின் றது.அடியார்களை அரவணைத்து நாயன்மார்கள் ஊர்கள் தோறும் சென்று அங்குள்ள கோவில்களைத் துப்பரவு செய்து அங்குள்ள இறைவனைத் துதி பாடிப் பக்தியையும் பக்தி இயக்கத்தையும் வளர்த்தார்கள் அல்லவா?சமூக மயப்படுத்தலில் சம்பந்தப் பெருமானும் , அப்பர் சுவாமிகளும், சுந்தரப் பெருமானும் ஈடுபடாவிட்டால் எங்கள் சமயம் இந்தளவு உயர்ச்சியைப் பெற்றிருக்குமா? எங்களது திருக்கோவில்களும் இன்றுவரை நிலை பெற்றிருக் கத்தான் முடியுமா ? இவை யாவற்றுக்கும் காரணம் சமயத்தையும் கோவிலை யும் வாழ்வியலோடு இணைத்தமை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
” தோடுடைய செவியன் ” என்னும் முதல் வாக்கைச் சம்பந்தப் பெருமான் வாயிலிருந்து வரச் செய்த இடமே சீர்காழியில் அமைந்த தோணியப்பர் கோவில்தானே ! ” பித்தாப் பிறை சூடி ” எனச் சுந்தரரை இறைவன் பாடுமாறு பணித்த இடமும் திருக்கோவில் அல்லவா ? ” கூற்றாயின வாறு விலக்ககலீர்” என அப்பரைப் பாடவைத்த இடமும் திருக்கோவில்தானே ! எனவே திருமுறை கள் கோவிலை மைய மாகக்கொண்டே வந்திருக்கின்றன. அதுமட்டுமல்ல கோவிலை சமூக நிறுவனமாக்கி வாழ்வியலோடு இணைத்த வகையிலும் திருமுறைகளின் பங்கு மிகவும் முக்கியமானதென்றே கொள்ளவேண்டும்.
” நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு ” ஒவ்வொரு நாளும் கோவிலுக்குச் சென்றால் நிலை பெறலாம் என்னும் உறுதியை அப்பர் வாழ்வியல் கருத்தாகக் கோவிலுடன் இணைத்துக் காட்டியிருப்பது நோக்கத் தக்கதாகும்.
” மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும் ” என்று மக்களுக்கு நம்பிக்கை தருமாறு கூறி – அதற்கு ” கழுமல வளநகர் ” பெருமானை வழிபட வேண்டும்.அவரே என்றும் துணையிருப்பார் என அக்கோவிலையே காட்டி நிற்கிறார் சம்பந்தப் பெருமான்.
இவையெல்லாம் உளவியல் சார்ந்த வாழ்வியலாகக் கோவிலுடன் இணைகிறதல்லவா?
அன்றாடம் வீட்டைப் பெருக்குகின்றோம்.கழுவிச் சுத்தம் செய்கின்றோம். வீட்டில் விளக்கு ஏற்றி மகிழ்கின்றோம். பூக்களை பறிக்கின்றோம்.அவற்றை மாலையாக்கிச் சூடி இன்பம் அடைகின்றோம்.இவையெல்லாம் வாழ்வோடு ஒன்றிவிட்ட சம்பவங்கள். இவற்றையெல்லாம் இறைவன் உறைகின்ற கோவிலை நோக்கித்திருப்பினால் எப்படி இருக்கும் என அப்பர் நினைத்தார். அந்த நினைப்புத்தான் சரியைத் தொண்டாகி திருமுறை வாயிலாக மக்கள் வாழ்வியலுடன் இணைந்து வந்தது.
நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீயென்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே
இது வாழ்வியலைக் கோவிலுடன் சேர்த்துவிட்ட மிகச்சிறந்த உத்தி எனலாம்.இந்த உத்தியை யார் வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். எவராலும் செய்யக்கூடிய இலகுவான வழிபாட்டு முறையும் நல்லதொரு சரியைத் தொண்டும் எனலாம்.இதற்கு எந்தவிதமான படிப்பபோ, அறிவு நுணுக்கமோ தேவையில்லை.
மனத்தை உடையவன் மனிதன்.அந்த மனிதனுக்கு நண்பனும் எதிரியும் அவனுடைய மனம்தான்.இதனால் மனத்தை ஒருநிலைப் படுத்தினால் வாழ்வு சிறப்படையும் என்பது உளவியலாகும்.இந்த உளவியல் மக்களது வாழ்வியல்
ஆகும்.மன ஒருநிலைப் பாட்டுக்குக் கோவில்கள் முக்கியம் என்பதை திரு முறைகள் வாயிலாக அருளாளர்கள் கூறியிருப்பது நோக்கத்தக்கது.
இசை மனிதனை இசைவிப்பது. அந்த இசையினைக் கோவில்கள் தோறும் அரூளாளர்களான திருமுறை தந்தவர்கள் பரப்பினார்கள். இறைவனை இசைவடிவினனாகக் கண்டார்கள்.இதனால் திருமுறைகளைப் பண்ணோடு கோவில்கள் தோறும் பாடிப்பரவினார்கள்.தாம் பாடியதோடு மட்டுமே நின்று விடாமல் தம்மோடு மக்களையும் இணைத்துக்கொண்டே பாடினார்கள். இசையொடு பாடப் படும்பொழுது மனமானது அந்த இடத்திலேயே லயித்து நின்றுவிடும். இந்த உளவியலைத் திருமுறையாளர்கள் உணர்ந்து கோவிலுடன் இசையை இணைத்து அதனை வாழ்வியல் நெறியாக்கி விட்டனர்.
” குழல் ஒலி யாழ் ஒலி கூத்தொலி ஏத்தொலி – எங்கும் குழாம் பெருகி ” ” சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் – தமிழோடிசை பாடல் மறந்தறியேன் ” “விழவோடொலி மிகு தகுமாடக சாலை – முழவோடிசை நடமுன் செயு ” “வலம் வந்த மடவார்கள் நடமாட முழவதிர ” – என்றெல்லாம் இசையோடு கோவில் வழிபாட்டை இணைத்து அதற்குள் மக்களையும் உள்வாங்கிய திருமுறைகளின் வாழ்வியல் நோக்கானது வியந்து போற்றத் தக்கதாக இருக்கிறதல்லவா ? வாழ்வியலுடன் ஆகமங்களும் திருமுறைகளும் இணையும் பாங்கு
பக்தி இலக்கியம் என்பது தமிழ் மொழியைத் தவிர வேறு எந்த மொழி யிலும் நாம் கண்டுகொள்ளமுடியாது.அந்தப் பக்தி இலக்கியமானது கோவிலையும் , வழிபாட்டையும் , இறைவனது அருட்திறத்தையும் புலப் படுத்தி நிற்பதாகும். இந்தப் பக்தி இலக்கியத்தில் திருமுறைகளின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும்.திருமுறைகளின் பெரும்பங்கு கோவிலை மையப்படுத்தியே வந்திருக்கிறது. திருமுறைகள் யாவுமே கோவிலையும் வழிபாட்டையும், மனித ஒழுக்கத்தையும், வாழும் விதத்தையும், இல்லறத்தின் தன்மையையும், சமூகக் கட்டமைப்பையும், எடுத்துக் காட்டுகின்றன என்பது முக்கிய அம்சமாகும். இவை யாவும் வாழ்வியலின் இன்றியமையாத அங்கங்கள் என்பது மனங்கொள்ளத்தக்கதே.
கோவில் என்பது வெறுமனவே வழிபடும் இடமாக மட்டும் விளங்கவில்லை. கோவில்களை ஆறுதல் தரும் இடமாக அடியவர்கள் கண்டார்கள். அப்பர் , சம்பந்தர், சுந்தரர் , மணிவாசகர் யாவரும் – கோவிலை மையமாக வைத்துக் கொண்டே … பல தொண்டுகளைத் தொடக்கி இருக்கிறார்கள். இவற்றை எல்லாம் திருமுறைகளின் வாயிலாக நாம் கண்டு கொள்ளுகின்றோம்.
செல்லும் வழியெல்லாம் யாருக்கு என்ன நேரிடினும் அவர்களுக்குத் தங்களால் இயன்ற உதவிகளை இறையருளாலும், மற்றவர் உதவி பெற்றும் அருளாளர்கள் ஆற்றியிருக்கிறார்கள் என்னும் செய்திகளையெல்லாம் திருமுறைகளின் வாயிலாக அறிகின்றோம்.
கோவில்களும் வழிபாட்டு முறைகளும் சமூகத்தில் வாழும் மக்களின் நலன்களை முன்னிட்டே ஏற்படுத்தப்பட்ட ஏற்பாடுகள் என்று எடுப்பதும் பொருத்தமானதே.மனிதனைப் பண்படுத்தவும், மனித நேயச் சிந்தனைகளை வளர்க்கவும், பொதுநல உணர்வை நிலைபெறச் செய்யவும், கோவில்களும் வழிபாடும் துணைசெய்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.உண்மையான வழிபாட்டு உணர்வின் முதிர்ச்சி சமூகத்துக்கு உதவுவதே ஆகும்.இதனால் த்தான் கோவில் என்பது வாழ்வியலாகிவிட்டது.
திருமுறைகள் கோவிலை மையமாக வைத்துக்கொண்டே பணிகள் பலவற்றை ஆற்ற வழிப்படுத்தியதைக் காண்கின்றோம்.
” என்கடன் பணி செய்து கிடப்பதே ” என்னும் அப்பரின் வாக்கு திருமுறையின் நிலையைக் காட்டுகிறதல்லவா ?
பசிப்பிணி போக்க உதவியமை, முத்தியில் கூட தான் மட்டுமே பெற்றுக் கொள்ளாமல் மற்றவர்களும் இடமளித்தமை, தனியாகவும் கூட்டாகவும் மக்கள் மத்தியில் துன்பம் நிகழ்ந்த பொழுது உதவி துயர் துடைத்தமை, சமரச நோக்கத்தைக் கடைப்பிடித்து சமநிலையைக் காட்டியமை, ” ஒன்றே குலம் ஒருவனே தேவன் ” என்றபடி செயற்பட்டமை இவையெல்லாம் கோவிலை மையமாக வைத்தே ஆற்றப் பட்டிருக்கின்றது என்பதைத் திருமுறைகள் வாயிலாக அறிகின்ற பொழுது திருமுறைகள் என்பது தனியே வெறும் பாடல்களாக இல்லாமல் சிறந்த வாழ்வியல் நெறியாகவும் விளங்கி இருக்கிறது என்பதை மறுதுரைக்க முடியாதல்லவா ?
ஆகமங்களில் கூறப்பட்ட சரியை, கிரியை, யோகம், ஞானம், பற்றி திருமுறைகளும் விளக்கி நிற்கின்றன.ஆகமங்களில் கூறப்பட்ட கோவில் அமைப்புக்களின் பெயர்கள் வித்தியாசப் பட்டாலும் – திருமுறைகளும் கோவில்களைப் பற்றியும் அவற்றின் அமைப்புப் பற்றியும் விளக்கி நிற்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஆகமங்களும் திருமுறைகளும் சைவத்தின் இரண்டு கண்கள். இரண்டையும் பிரித்து வித்தியாசம் காண்பது பொருத்தமற்றதே.
” ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ” என்னும் மணிவாசகப் பெருமானின் இக்கூற்றே இதற்கு அரண்செய்து நிற்கிறதல்லவா?
ஆகமங்கள் சமஸ்கிருத மொழியில் இருக்கின்றன. திருமுறைகள் தெள்ளிய தமிழில் அமைந்திருக்கின்றன. ஆகமங்களை இறைவனே அருளினார் என்பதே நம்பிக்கை.அதேவேளை திருமுறைகளும் இறைவனது அருள்பெற்ற அடியார்க ளின் வாக்குகளே என்பதும் நோக்கத்தக்கது.எனவே திருமுறைகளும், சைவ ஆகமங்களும் இறைவனது அருளினைத் தாங்கி நிற்பன என்பதில் பெருமை இருக்கிறதல்லவா ?
இறைத்தன்மை பெற்ற சிவாகமங்களும் திருமுறைகளும் கோவிலைப் பற்றிக் கூறிய அனைத்தும் மக்களுக்கும் சமூகத்துக்கும் ஏற்ற வகையிலேயே இருக்கின்றன அல்லவா? இவற்றை மனக்கொண்டு பார்க்கும் பொழுது கோவில் என்பது வாழ்விய லோடு இணைந்தே இருக்கிறது என்பது வெள்ளிடைமலையாகி நிற்கிறது
இவற்றை எல்லாம் நோக்குமிடத்து சிவாகமங்களும், திருமுறைகளும் கோவிலையும் அவைசார்ந்த விஷயங்களையும் வாழ்வியலாகவே கருதி இருக்கின்றன என்பது புலனாகின்றது.
அன்பினிய வணக்கங்களுடன் அடுத்தொரு வாரத்தில் உங்களைச் சந்திக்கிறேன். இன்று உலகத்திலே நாமனைவரும் ஒரு இக்கட்டான சூழலிலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகம் தனது கால மாற்றங்களில் ஒரு முக்கியமான திருப்பத்தினுள் சென்று கொண்டிருப்பது போன்று ஒரு பிரமை.
எங்கே போகிறோம், நாம் போகும் திசை நாம் பயணிக்க விரும்பிய திசைதானா? என்பது தெரியாமலே ஆற்று வெள்ளத்திலோ, இல்லை பெருங்காற்றினாலோ அடித்துச் செல்லப்படும் ஒரு சருகினைப் போல ஓடிக்கொண்டிருக்கிறது எமது வாழ்க்கை.
இனம், மதம், மொழி எனும் அடையாளங்களைத் தக்க வைத்துக் கொள்கிறோம் எனும் வெறியில் மனிதனை மனிதன் காவு கொள்ளும் நிகழ்வுகள் நடந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் நாமோ கலாச்சாரச் செறிவு கொண்டவர்கள், நாகரீகமடைந்தவர்கள் என்று எம்மை நாமே ஏமாற்றி வாழ்ந்து கொண்டிருப்பது போலத் தென்படுகிறது.
தனிமனிதர்களைக் குடும்பமாக்கி, குடும்பங்களைச் சமுதாயமாக்கி, சமுதாயங்களை நகரமாக்கி, நகரங்களையெல்லாம் சேர்த்து நாடுகளாக்கி, நாடுகள் ஒன்றுகூடிய ஒரு ஒப்பில்லாத உலக சமுதாயமாக ஏதோ புதியதோர் உலகை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டே ஆதிமனிதன் வெட்கித் தலைகுனியக்கூடிய வகையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.
ஆமாம்! மக்களுக்காக அரசியல் என்று ஆரம்பித்து இன்று அரசியலுக்காக மக்கள் எனும் நிலைக்கு எம்மை நாமே மாற்றிக் கொண்டு விட்டோம். அரசியல்வாதிகளைக் குறை கூறும் நாம் இவ்வரசியல்வாதிகளை உருவாக்க யார் காரணம் என்பதைச் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை. ஆங்கிலத்தில் supply and demand என்பார்கள். அதாவது தேவைகளும் அத்தேவைகளுக்கான பூர்த்திகளும் என்பதே அது.
எமக்குத் தேவைகள் இருப்பதால் அத்தேவைகளை நிறைவேற்றும் பணியைத்தான் அரசியல்வாதிகள் செய்கிறார்கள். அத்தேவைகளை எவ்வழியிலும் பெற்றுக் கொள்ளலாம் எனும் மனோபாவத்திற்கு மனிதன் வந்துவிட்டால் அதைப்பூர்த்தி செய்வதற்கு எவ்வழியையும் கையாளலாம் எனும் மனோநிலைக்கு அதைப்பூர்த்தி செய்பவர்கள் ஏன் வரமாட்டார்கள்?
இன்று எமது பின்புல நாடுகள் மட்டுமல்ல மனித நாகரீகத்திற்கு நாம்தான் எடுத்துக்காட்டு என்று மார்தட்டிக் கொள்ளும் மேலைநாடுகளிலும் கூட மக்கள்-அரசியல்-மக்கள் எனும் இந்த வலயம் தொடர்ந்து ராட்டினம் போலச் சுழலுவதால் இன்றைய காலகட்டம் ஒரு அபாயகரமான சூழலை நோக்கித் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது எனலாம்.
செவ்வாய்க்கிழமை பெல்ஜியம் நாட்டில் நடந்த நிகழ்வினை எடுத்துக் கொள்ளுங்கள். பயங்கரவாதமா ? தீவிரவாதமா ? அல்லது நியாயமான போராட்டமா? என்று பலர் விவாதிக்கும் அதேசமயம், இத்தகைய ஒரு நிகழ்விற்கு விலையாகக் கொடுக்கப்பட்டது என்ன ? மனிதஉயிர்கள் மட்டுமே என்று சிலர் கூறக்கூடும்.
இல்லை, மனிதநேயத்திற்கே விடப்பட்ட ஒரு சவாலாகவே இதைக் கருத வேண்டும். நிறவேற்றுமையின் அடிப்படையில் மேலைநாடுகளில் வாழும் மக்களின் மனோநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் இத்தகைய நிகழ்வுகள் வகிக்கும் முக்கியத்துவத்தை ஒருவரும் மறந்து விடக்கூடாது.
பல்லினக் கலாச்சாரம் மிகுந்த அமெரிக்க நாட்டிலே இன்று டொனால்ட் ட்ரம்ப் போன்றதொரு தீவிர வலதுசாரிக் கொள்கையும், இனவேற்றுமையைக் கக்கும் கொள்கைகள் கொண்ட ஒருவர் முக்கிய கட்சிகளில் ஒன்றின் பிரதிநிதியாக வேகமாக முன்னேறிச் செல்லும் நிலைக்கு யார் பொறுப்பு ?
சகிப்புத்தன்மைக்கு முதலிடம் கொடுத்து வந்த, பல்லினக் கலாச்சாரத்திற்கு தம்மை உதாரணமாகக் காட்டும் ஒரு நாடாக விளங்கும் இங்கிலாந்தில் வேற்றின மக்களின் வருகைக்கு எதிர்ப்பும், வேற்றின மக்களின் மீதான காழ்ப்புணர்ச்சியும் அதிகரிப்பதற்கும் யார் பொறுப்பு ?
விசித்திரமான இந்த உலகத்திலே விந்தை மிகுந்த மனிதர் நாம் எம்மை விட விஞ்சியவர்கள் இல்லை எனும் ஓர் நினைப்போடு வாழ்கின்றோமா ? தன்னம்பிக்கை என்பது மனிதனின் மனதில் ஆழமாக வேரூன்றவில்லையானால் அவனால் வாழ்வில் உயர்வடைய முடியாது என்பது யதார்த்தம் எனும் அதேவேளை, அத்தன்னம்பிக்கை எப்போது ஆணவமாக மாறுகிறதோ அப்போது அது அவனின் சரிவிற்கும் வித்திடுகிறது இதுவும் யதார்த்தமே !
இது இன்று நேற்றல்ல அன்றைய மகா அலெக்ஸாண்டர் காலத்திலிருந்து நேற்றைய கேர்னல் கடாபி வரை உண்மையென நிரூபிக்கப் பட்டிருக்கிறது. நாம் பழம்பெருமை பேசிப்பேசி இன்றைய உலகில் வாழ்வது கடினம். அன்றைய பெருமைகளுக்கு காரணமாக இருந்த அதியுயர்ப் பண்புகளை வாழ்வின் வசதிகளுக்காக விற்று விட்டு அன்றைய பெருமைகளை மட்டும் கட்டிக் காத்துக் கொள்வதை எவ்வகையில் யதார்த்தமெனக் கொள்வது ?
இவ்வகிலத்திலே பல்வேறு மொழிகளையும், பல்வேறு மதங்களையும் பின்பற்றுவது மட்டுமல்ல பல்வேறு நிறங்களிலும் நாம் வலம் வருகிறோம். இத்தகையதோர் உலகிலே அமைதியையும், சமாதானத்தையும் பாதுகாத்து எமது சந்ததி நிம்மதியாக வாழவேண்டுமானால் நாமனைவரும் எமது மதங்களுக்கும், மொழிக்கும் முன்னால் மனிதாபிமானத்தையே முக்கியமாகக் கொள்ள வேண்டும். அது ஒன்றே மனிதனை மனிதனுடன் வேற்றுமையின்றி இணைக்க உதவும் பொதுமொழியாகும்.
இன்று நாம் சர்வதேசரீதியில் எமது கலாச்சாரத்தைக் காப்பது எனும் பெயரில் உயிர்களைக் காவும் கொள்ளும் நிகழ்வானது புலம்பெயர் நாடுகளில் ஓரளவிலாவது தமது கலாச்சாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயலும் எமது சகோதர, சகோதரிகளைத்தான் பாதிக்கப் போகிறது என்பதை மறந்தே இத்தகைய பயங்கரமான நிகழ்வுகளை நடத்துகிறது சில கும்பல்கள்.
எந்த ஒரு மதமோ அன்றி அம்மதத்தின் சின்னங்களாக வழிபடும் ஆதிமூலங்களோ நல்லிணக்கத்தைத் தவிர வேறு எதனையும் வலியுறுத்தவில்லை. அப்படி வலியுறுத்துவதாக மதங்களின் சார்பாக யாராவது போதிப்பார்களேயானால் அவர்கள் அதைத் தமது சுயலாபத்திற்காகவே செய்கிறார்கள்.
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் நியாயமான, நிம்மதியான வாழ்வை நடத்தும் உரிமை உண்டு. அதை மதங்களின் பெயராலோ, அன்றி மொழிகளின் பெயராலோ அன்றிச் சாதியின் பெயராலோ பறிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை.
அன்பின் பாதையில், அறத்தின் துணையோடு அடுத்தவரை எம்மைப் போல் எண்ணும் மனிதாபிமான அடிப்படையில் வாழ்வது ஒன்றே இவ்வுலக தர்மமாகும்.
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
படம் உதவி:
http://www.keepcalm-o-matic.co.uk/p/keep-calm-and-share-unity-in-diversity/
தனக்கும் கல்யாணம் என்று ஒன்று ஆனால், அம்மாமாதிரி இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் வைதேகி.
புராண இதிகாச காலங்களில் கணவனை வழிபட்ட பெண்கள் பிற கடவுளை நாட வேண்டி இருந்ததில்லையாம். அப்போது இருந்த ஆண்கள் தெய்வாம்சம் பொருந்தியவர்களாக இருந்தார்களோ, என்னவோ!
ஆனால், `பெண்’ என்றாலே ஒரு மாற்றுக் குறைவாக எடைபோடும் அப்பாவின் மெத்தனத்தை, ஆணான தான் எது சொன்னாலும், செய்தாலும் அதை எல்லாப் பெண்களும் ஏற்க வேண்டும் என்று, ஒரு வரையறையே இல்லாது, உணர்ச்சிப்பூர்வமாக மனைவி மக்களைக் கொடுமைப்படுத்தியதை அவளால் ஏற்கத்தான் முடியவில்லை. அடித்தால்தான் வதையா!
அதற்காக ஒரேயடியாக வெறுப்பை வளர்த்துக்கொண்டு, `கல்யாணமே வேண்டாம்’ என்று பிடிவாதம் பிடிக்கத் தோன்றவில்லை அவளுக்கு. தமிழ்த் திரைப்படங்களும், `கோடிக்கணக்கில் விற்கிறதே, இந்த ஆங்கில நவீனங்களில் அப்படி என்னதான் இருக்கிறது!’ என்று படித்ததும் அவள் மனதில் கட்டுக்கடங்காத இளமைக் கனவுகளை வளர்த்திருந்தன.
அவளை மணப்பவன் அவள் கிழித்த கோட்டைத் தாண்டாத `பத்தினி விரதனாக’ இருக்க வேண்டும் என்று தீர்மானித்தாள். தான் அவனுக்குப் பணிவதற்குப் பதிலாக, தனது ஆற்றலைப் பார்த்து அவன் அடங்கி ஒடுங்க வேண்டும். அப்போதுதான் அவனால் தன்னைக் கீழே தள்ள முடியாது. `நீ படிக்காத முட்டாள்! ஒனக்கு என்ன தெரியும்? சும்மா இரு!’ என்று அப்பா சமயம் கிடைத்தபோதெல்லாம் மட்டம் தட்டுவதைப்போல் அவளுக்கும் நேர்ந்துவிடக்கூடாது.
சினிமா நடிகர்களை மனதால் வரித்து, அவர்களைப்பற்றிப் பேசிச் சிரித்த, தன் வயதுப் பெண்களின் போக்கு அவளுக்கு எரிச்சலைத்தான் உண்டுபண்ணியது. இம்மாதிரியான அர்த்தமற்ற கனவுகள் கண்டு, அதிலேயே நிறைவு பெற்று, பின் உப்புசப்பற்ற மணவாழ்க்கையில் அமுங்கிவிடுவது மடத்தனம். முன்னெச்சரிக்கையுடன், மனதில் ஒரு ஆடவனை உருவாக்கிக் கொண்டாள். அவன் முகம்? அது அவ்வளவு முக்கியமாகப் படவில்லை. அனுதினமும் அவனுக்குள் சில குணங்களைச் செலுத்தினாள். அவன் பிறரது மதிப்பைப் பெற்றவனாக இருப்பான். இன்னொருவரைச் செயலாலோ, வார்த்தையாலோ காயப்படுத்துவதைவிட தானே துன்புறுவது மேல் என்று நினைக்கும் கண்ணியவானாக இருப்பான்.
சற்று யோசித்து, விளையாட்டு வீரன் வேண்டாம், என்றைக்காவது ஒரு நாள் அவனுக்குள் விதைக்கப்பட்டு இருக்கும் போட்டி மனப்பான்மை, எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி, மேலே கிளம்பிவிடும் என்று நிச்சயித்தாள். இன்னும் சற்று ஆழ்ந்து சிந்தித்ததில், கலாரசனை உள்ளவன்தான் உணர்ச்சி மிக்கவனாக இருப்பான், வலுவான தேகம் கொண்டவனைவிட இவனை வீழ்த்துவது எளிது என்று தோன்றியது. இரண்டு, மூன்று வருடங்கள் இதே ரீதியில் முகமற்ற தன் வருங்காலக் கணவனுடன் சிறிது சிறிதாகப் பரிச்சயம் செய்து கொண்டவளுக்கு, அதன்பின் அவனை நினைக்கும்போதே உள்ளுக்குள் ஏதோ கிளர்ந்தெழுந்தது.
வீட்டில் அவளுக்கு வரன் பார்க்க ஆரம்பித்தார்கள். அப்பா தேடிவரும் எவனையாவது மணக்க நேரிடுமோ என்ற அச்சம் பிறந்தது. அப்பா கொண்டு வரும் மாப்பிள்ளையும் அவரைப்போல்தானே இருப்பான்! `எதற்கோ பயந்து, எதிலோ மாட்டிக் கொண்டாற்போல்’ என்பார்களே! அப்படி நடக்க விடக்கூடாது. கல்யாணம் என்ற பிரச்சினையைத் தள்ளிப்போட அதற்கு ஒரே வழிதான் தென்பட்டது. பட்டப்படிப்பு முடியும் தறுவாயில்தான் அது நிகழ்ந்தது.
`இதே கல்லூரியில் இருந்திருக்கிறார்! அது எப்படி இத்தனை நாளாகக் கவனிக்காமல் போனேன்!’ என்று தன்னைத்தானே நொந்துகொண்டாள். அங்கு விரிவுரையாளராக இருந்த சம்பத்தைப் பொறுத்தவரை, `தானுண்டு, தன் வேலையுண்டு’ என்றிருந்தான். அங்கேயே ஹாஸ்டலில் தங்கியிருந்து, வேலை முடிந்ததும் டென்னிஸ் விளையாடி, இரவுப் பொழுதில் புத்தகங்களைப் படிப்பதில் கழித்தான். அவனைத் தற்செயலாகப் பார்த்த வைதேகிக்குப் பொறி தட்டியது. அவள் மனதுள் பல காலமாகப் பதிந்திருந்த உருவம் முழுமை பெற்றது. அடுத்த வேலை, எதிரிலிருந்தவனைப் பக்கத்தில் நிலைநிறுத்திக் கொள்வதுதான்.
அவனை முதன்முதலில் கண்டபோது, இதுவரை அவளை ஆட்டுவித்த வீறாப்பு, ஆண்களை மட்டம் தட்டவேண்டும் என்ற வெறி எல்லாமே மறைய, மனம் பரபரத்தது. இவ்வளவு பண்பான, புத்திசாலியான ஒருவனுடன் காலமெல்லாம் இணைந்து, அவன் மிருதுவாகப் பேசுவதை, தன்னைக் கனிவுடன் பார்ப்பதை, அனுபவிப்பதைவிட வேறென்ன இன்பம் இருக்க முடியும் என்று தோன்றிப்போயிற்று. தன்னையும் அறியாமல், அவனுக்கு வலை விரித்தாள் வைதேகி. முதலில் வகுப்புக்கு வெளியே சந்தேகம் கேட்க ஆரம்பித்தாள். அவன் கேளாமலேயே, சிறுகச் சிறுக, தன்னைப்பற்றி, தன் குடும்பத்தின் அவலத்தைப்பற்றி, சொன்னாள்.
`என்னிடம் ஏன் இந்தப் பெண் இப்படி மனந்திறந்து பேசுகிறாள்?’ என்று குழம்பினாலும், சம்பத் நெகிழ்ந்து போனான். ஓர் அழகான, புத்திசாலிப் பெண் தன் ஆதரவை நாடுகிறாள், தன்னை மதிப்பும் மெச்சுதலுமாகப் பார்க்கிறாள் என்றால், எந்த ஆடவனுக்குத்தான் உச்சி குளிர்ந்துபோகாது? தன்னை வெகுவாகப் பாதித்தவற்றை வைதேகி சொல்லச் சொல்ல, அவளுக்கு ஆறுதலாக ஏதாவது கூற எண்ணியவனாய் தன்னை அவளுடைய நிலையில் வைத்துப் பார்த்துக் கொண்டவனின் உடலிலும் உள்ளத்திலும் ஏதேதோ மாறுதல்கள். `இவள் பட்ட பாடெல்லாம் போதும். இனியாவது நான் இவளைக் கண்கலங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்!’ என்ற எண்ணம் முதன்முதலாக எழுந்தபோது, சம்பத் திடுக்கிட்டான்.
தன் கீழ் பயிலும் மாணவியை மணப்பதா! பெயர் கெட்டுப் போகாது? அச்சத்தை மீறியது ஆண்மை. அவளைத் தூரத்தில் பார்த்தபோதே ஒரு படபடப்பு, அவள் குரலைக் கேட்கவும் உள்ளத்தில் ஒரு சிலிர்ப்பு. தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் பார்க்காதபோதோ எதையோ இழந்துவிட்டதைப் போன்ற ஏக்கம். `இதற்கு எப்படி ஒரு முடிவு கட்டுவது?’ என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான். அவளைப்பற்றியே நினைத்துப் பார்க்கக்கூடாது என்று தனக்குள் முடிவு செய்துகொண்டான். ஆனால், வேறு எந்த விஷயத்துக்குமே அவன் மனதில் இடமிருக்கவில்லை. அந்தந்த வேளைக்குப் போதை மருந்தை நாடி, அது கிட்டாவிட்டால் அல்லலுறும் மூளை, காதல் வசப்பட்டிருந்த சம்பத்தையும் அதேபோல் ஆட்டுவித்தது. படுத்தால், தூக்கம் `வரமாட்டேன்,’ என்று விலகிச் செல்ல, எண்ணப் பெருக்குக்கு ஈடு கொடுக்க முடியாது தவித்தான். காதல் நோயை வெல்ல ஒரு வழிதான் புலப்பட்டது.
கணவனின் அன்பில் திளைக்கும்போது, `மணவாழ்க்கை’ என்பது இவ்வளவு குதூகலமாக இருக்குமா, அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மட்டும் ஏன் இப்படி அமையவில்லை என்ற குற்ற உணர்ச்சிகூட உண்டாகியது வைதேகிக்கு. அம்மா அழகியோ, அதிகம் படித்தவளோ இல்லை. அதுவே அப்பாவுக்குக் குறையாக இருந்திருக்கலாம். `என் மனைவியைவிட நான் எல்லா வகையிலும் சிறப்பாக இருக்க வேண்டும்!’ என்றுதான் எந்த ஆணும் ஆசைப்படுகிறான். ஆனால், அவளைவிடச் சிறப்பாக இருக்கும் இன்னொரு பெண்ணையும், அவள் கணவனையும் பார்த்தால் பொறாமை வருகிறது என்றெல்லாம் யோசித்தாள். `பாவம், அப்பா!’ என்று பரிதாபப்பட்டாள்.
பழையதாகப்போன விளையாட்டுச் சாமானை தூரப் போட்டுவிட்டு, பெருமைப் பட்டுக்கொள்ளக்கூடிய புதியதொன்றில் மகிழ்ச்சி காணும் சிறுவனின் மனப்பக்குவத்துடன்தான் அப்பாவும் அழகும் இளமையுமான இன்னொருத்தியுடன் தொடர்பு வைத்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள். `அப்பாவைப்போல என் சம்பத்தும் ஏமாற விடமாட்டேன்! அவர் என்னால் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும். நான் நிறையப் படித்தால்தான் அது முடியும்!’ `கல்வி ரீதியிலாவது இருவரும் சமமாக இருக்கிறோமே!’ என்ற சம்பத்தின் நிம்மதி பொய்த்தது, வைதேகிக்கு முனைவர் படிப்புக்கான அழைப்பு வழங்கப்பட்டபோது.
இப்போதைக்கு, பெரிய இடத்துப் பெண் என்ற கர்வம் இல்லாமல் பணிவாக இருக்கிறாள். மேற்படிப்பு அவளை மாற்றிவிட்டால்? பயம் பிடித்துக்கொண்டது அவனை. “எதுக்கும்மா இன்னும் படிப்பு? அதான் ரெண்டு பேருமே கைநிறைய சம்பாதிக்கிறோமே?” என்று நைச்சியமாகப் பேசி, அவள் மனதைக் கலைக்கப் பார்த்தான். அவன் மனநிலையை உணராது, தான் எடுத்த முடிவிலேயே உறுதியாக இருந்தாள் வைதேகி.
டாக்டர் வைதேகி!
இப்போது, அவள் செய்வது எல்லாம் தவறாக, தன்னை மட்டம் தட்டுவதற்காகச் செய்வது போல் தோன்றியது. படுக்கையில் சுகித்தபின்னர்கூட மனம் மகிழ்வால் நிறையவிலை. “என்னைவிட ஒனக்கு `இந்த’ விஷயத்திலே பலம் அதிகம்! அதான் பெருமை ஒனக்கு!” என்று குற்றம் சாட்டினான். இவளை எந்த விதத்திலும் மீற முடியாது போலிருக்கிறதே என்ற ஆயாசம் பிறந்தது. காதல் களியாட்டத்தின் இறுதியில் ஆணின் உணர்ச்சிப் பெருக்கு ஒரேயொரு பேரலையாக எழுந்து அடங்கும் என்றால், பெண்ணின் உடற்கூற்றின்படி சிறு சிறு அலைகள் அடுக்கடுக்காக எழும் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. எதிராளியின் தன்மை புரியாததால் பலவீனம் உண்டாயிற்று.
இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளாத வைதேகி சிரிப்பாள். “படுக்கை என்ன, குஸ்தி மேடையா? இல்லே, நம்ப ரெண்டு பேருக்கும் ஏதாவது போட்டியா, யார் ஜெயிச்சது, யார் தோத்ததுன்னு கணக்குப்போட!” இப்படி அன்பும் பொறுமையும் ஓர் உருவாய் அவள் நடந்துகொள்ளும் போதெல்லாம் தன்மீதே வெறுப்பு எழும் சம்பத்துக்கு. இருப்பினும், வைதேகி ஒவ்வொரு அடியாக மேலே எடுத்து வைக்க வைக்க, அவனுடைய சுயமதிப்பு குறைந்துகொண்டே வந்தது. “நானும் ஒன்னைப்போல வசதியான குடும்பத்திலே பிறந்திருந்தா, எவ்வளவோ முன்னுக்கு வந்திருப்பேன்!” என்று அரற்றினான், ஒரு நாள்.
ஆரம்பப் பள்ளி — அதுவும் எவ்வித வசதியும் இல்லாத தமிழ்ப்பள்ளி — ஆசிரியரின் ஆறு பிள்ளைகளில் நான்காவதாகப் பிறந்தது அவனது துர்ப்பாக்கியம். `மகனும் தன்னைப்போல் வறுமைக்கோட்டின்கீழ் அவதிப்படக் கூடாதே!’ என்ற நல்லெண்ணத்துடன், அவன் எவ்வளவு மதிப்பெண்கள் வாங்கினாலும், ரோத்தானால் (மெல்லிய பிரம்பு) விளாசும் அப்பாவுக்குப் பயந்தே படித்தான். வகுப்பில் முதலாவதாக வந்தாலும், `நீயெல்லாம் முதலா! அப்போ மத்தவங்க எவ்வளவு முட்டாளா இருக்கணும்!’ என்று ஏளனம் செய்தால், அது ஊக்குவிப்பதற்குச் சமம் என்று அவர் போட்ட கணக்கு தப்பாகியது. எதற்கும் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு, அதை மறைத்துக்கொள்ளப் பெரும்பாடு பட்டவனாக வளர்ந்தான்.
வைதேகி, `பக்கபலமா இருக்க வேண்டிய நீங்களே தடை போடறதையும் ஒரு சவால்னு எடுத்துக்கலே நான்?’ என்று சொல்ல வந்ததை அடக்கிக்கொண்டாள். இந்தச் சில வருடங்களில் அவளுக்கு ஒன்று புரிந்திருந்தது. தான் எதையாவது சொல்லப்போக, கோபம் அல்லது வருத்தம்தான் மிகும் கணவனுக்கு. கோபமாக இருந்தால், அவளிடம் மேலும் தப்பு கண்டுபிடிப்பான். இல்லை, மனம் வருந்தி, மன்னிப்பு கேட்பான், `நான் ஒனக்கு ஏத்தவனே இல்லே!’ என்று. அதன்பிறகு, கொஞ்சல், பரிசுகள் என்று தொடரும். வைதேகிக்கு அலுப்பாக இருந்தது. மனைவி என்பவள் ஒருவனைவிட மேலான நிலையிலிருந்தாலும் கஷ்டம், அவனைவிடத் தாழ்ந்திருந்தாலும் கஷ்டம். அவளுக்கு எப்போதாவது தான் கற்பனையில் உறவாடிவந்த முகமற்ற மனிதனின் நினைவு எழும். அப்போது திட்டம் தீட்டியிருந்தமாதிரி, தனது உயர்வை ஒவ்வொரு வார்த்தையிலும் செய்கையிலும் பறைசாற்றிக் கொள்ளலாம்தான். ஆனால், ஒருவர்க்கொருவர் அடிமையாக இருப்பதில், அல்லது இன்னொருவரை வீழ்த்துவதால், உறவு எப்படி பலப்படும்?
சஞ்சலப்பட்டுக்கொண்டு இருந்த மனம் நிம்மதிக்காகப் புத்தகங்களை நாடியது. ஆனால், அதிலும் மனம் நிலைக்கவில்லை. “எப்பவும் புத்தகத்தை வெச்சுக்கிட்டு ஒக்காந்திருந்தா ஆச்சா?” அவள் செய்வது எல்லாமே தவறு என்ற முடிவுக்கு வந்தவன்போல், சம்பத் இரைந்தான். “என் சட்டையெல்லாம் இஸ்திரி பண்ணிவைக்கச் சொல்லி இருந்தேனே!” அவன் கட்டளையை நிறைவேற்றவேபோல் உள்ளே விரைந்த வைதேகிக்கு ஒன்று புரிந்தது. அப்பாவுக்கு அம்மா அடங்கிப்போனபோது, என்னமோ பெண் குலத்துக்கே அவமானம் ஏற்பட்டுவிட்டது என்று குமுறினோமே! அப்படி நடந்துகொண்டது அம்மாவின் விவேகம். குடும்பம் போர்க்களமானால், அதனால் குழந்தைகள் மனதில் வடு உண்டாகும் என்றுதான் எல்லா இன்னல்களையும் பொறுத்துப் போயிருக்கிறாள்! அப்பாவோ, அவளது அமைதியான, எதிர்ப்புக் காட்டாத போக்கைத் தனது வெற்றி என்று இறுமாந்து, எல்லை மீறியிருக்கிறார்!
துணிகளை ஒரு பெரிய பையில் நிரப்பிக்கொண்டு வந்து, தன்னிடம் நீட்டிய மனைவியைப் புரியாது பார்த்தான் சம்பத். “என்ன? ஒன்னை இஸ்திரி பண்ணச் சொன்னேன்!” பிசிரின்றி ஒலித்தது அவள் குரல்: “ஒங்களுக்கு வேலைக்காரி வேணுமானா, அதுக்கேத்த மாதிரி பெண்டாட்டி கட்டியிருக்கணும். பெரிய படிப்பு படிச்சு, கைநிறைய காசு சம்பாதிச்சு, அதை ஒங்க கையில குடுத்தப்புறமும் அவளை எப்படி இன்னும் கொஞ்சம் கீழே தள்ளலாம்னு யோசிக்காதீங்க!” படபடவெனப் பொரிந்துவிட்டு, அப்பால் நகர்ந்தவள் திரும்பினாள். “ஒங்க துணியை லாண்டரியிலதான் போடுவீங்களோ, இல்லே, நீங்களே இஸ்திரி போட்டுப்பீங்களோ, அது ஒங்க பாடு!”
சம்பத் பின்வாங்கினான், அகன்ற விழிகளுடன். கணவர் பயந்துவிட்டார், இனி தன்னை மிரட்ட யோசிப்பார் என்று புரிந்தது வைதேகிக்கு. ஆனால், அந்த எதிர்பார்ப்பில் மகிழ்வு என்னவோ இல்லை.
(`நான் பெண்தான்’ என்ற எனது தொகுப்பு நூல், சிறுகதைகள்.காம்)