-மீ.விசுவநாதன்
களிமண் சேர்த்துச் செய்கின்றான் – எழில்
காளியைக் கண்முன் தருகின்றான்!
துளிவிண் தீயைக் கக்குதல்போல் – விழி 
துலங்கிட பொம்மை படைக்கின்றான்!
வண்ணம் பலவாய்க் குழைத்தாலும் – கலை
வடிவினை அருளால் இழைக்கின்றான்!
பண்ணும் தொழிலை இறைக்காக – இவன்
பசிதனை மறந்தே உழைக்கின்றான்!
மண்ணை நம்பி இருக்கின்றான் – கை
மகத்துவத் தாலே சிறக்கின்றான்!
எண்ணம் போல வாழ்கின்றான் – இவன்
எதையுமே கலையாய் ரசிக்கின்றான்!
சிலையைச் செய்து கடவுளிடம் – நம்
சிந்தனை ஒன்ற வைக்கின்றான்!
அலையைப் போன்ற ஆசைகளை – அதில்
அழித்திட அவன்தான் உதவுகிறான்!

Leave a Reply