Blog

  • இந்த வார வல்லமையாளர்!

    அக்டோபர் 26, 2015

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள்

    Chokkalingam L

    வல்லமை இதழின் இந்தவார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை “சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்” திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள். லட்சிய ஆசிரியர் என்பவர் உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் கல்வியை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் தினமலர் நாளிதழ் வழங்கிய இந்த ஆண்டுக்கான லட்சிய ஆசிரியர் விருதையும், அத்துடன் மற்றுமொரு விருதாக, “அக்னி சிறகுகள் அறக்கட்டளை” வழங்கிய நல்லாசிரியர் விருதினையும் சென்ற வாரத்தில் பெற்ற திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள், கல்வியில் ஒரு சமூக மாற்றத்தை நிகழ்த்தும் வகையில் அவர் ஆற்றிவரும் தொடர் முயற்சிகளுக்காக வல்லமை இதழ் சார்பில் வல்லமையாளராகப் பாராட்டப் படுகிறார்.

    – அக்னி சிறகுகள் அறக்கட்டளை வழங்கிய நல்லாசிரியர் விருது
    – 2015 ஆண்டுக்கான தினமலர் லட்சிய ஆசிரியர் விருது
    – 2015 ஆண்டுக்கான புதிய தலைமுறை ஆசிரியர் விருது
    – கற்பித்தலில் புதுமை புகுத்தும் ஆசிரியராக மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் தேர்வு
    – ஆனந்த விகடனில், கலாமின் காலடிச்சுவட்டில் களத்தில் 100 இளைஞரெனத் தேர்வு
    – சுட்டி விகடன் வழங்கிய கனவு ஆசிரியர் என்ற பாராட்டு
    – நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களுடன் ஆனந்த விகடன் குழுமம் இணைந்து செயல் பட உள்ள அறம் செய விரும்பு திட்டத்தில் சேவை செய்ய நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களால் தேர்வு,
    எனக் கடந்த ஆண்டில் மட்டும் இவர் பெற்ற பாராட்டு மற்றும் விருதுகளின் பட்டியல் வளர்கிறது. அந்த வரிசையில் வல்லமை இதழின் வல்லமையாளர் விருதும் சேர்கிறது.

    தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திரு.சந்திர மோகன் அவர்கள் புதியதலைமுறை வழங்கிய சிறந்த ஆசிரியர் விருது பெற்றமைக்காக தலைமை ஆசிரியர் திரு. லெ. சொக்கலிங்கம் அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்தல்
    தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திரு.சந்திர மோகன் அவர்கள் புதியதலைமுறை வழங்கிய சிறந்த ஆசிரியர் விருது பெற்றமைக்காக தலைமை ஆசிரியர் திரு. லெ. சொக்கலிங்கம் அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்தல்

    திரு. லெ. சொக்கலிங்கமும், இவரது ஆசிரியர் குழுவினரும் மாணவர்களின் கல்வியில் காட்டும் அக்கறை மற்றும் சிறப்புப் பயிற்சிகளினாலும், இவரது தலைமையிலும், வழிகாட்டுதலிலும், முயற்சிகளினாலும் இப்பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களையும் விஞ்சும் வண்ணம் பலபோட்டிகளில் வெற்றிபெற்று வருகிறார்கள். இப்பள்ளி மாணவர்களின் கல்வித்திறம் பற்றிய செய்திகள் பத்திரிக்கைகள், தொலைக்காட்சி என ஊடகங்களில் தொடர்ந்து வெளிவந்த வண்ணமிருக்கும் சாதனைகள், ஒப்பீட்டில் சிறப்புக் கவனிப்பிற்காக நடத்தப்படும் தனியார் பள்ளிகளில் எந்த வகையிலும் சளைத்ததாக இல்லை.

    – கல்வியை அதற்குரிய அனுபவத்தோடு கற்கும்போது, வாழ்க்கையின் எந்தச் சூழலிலும் அது மறக்காது
    – கல்வி கற்பது வகுப்பறைக்குள் மட்டுமல்ல, மாணவர்களின் கல்வியை வகுப்பறைக்குள்ளேயே முடக்கிவிடாமல், வகுப்பறைக்கு வெளியேயும் அவர்களுக்கு நிறைய கற்றுக் கொடுக்கத் தேவை இருக்கிறது

    என்ற தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் நோக்கில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியை வழி நடத்திச் செல்கிறார் திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள்.

    அரசு உதவி பெறும் பள்ளியான தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி, 1934 ம் ஆண்டு (இந்தியா சுதந்திரம் பெறுவதற்கும் முன்னரே) தேவகோட்டை மக்களின் கல்வி வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு துவங்கப்பட்டது. பின்தங்கிய சமுதாய மாணவர்களின் கல்வி, மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களின் கல்வி நலனுக்குக்காவும் துவக்கப்பட்ட பள்ளி இது என்பது குறிப்பிடத்தக்கது.

    நேரடியாக சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நரிக்குறவ சமுதாய இன மக்கள், ஊர் ஊராய் சென்று குறி சொல்லும், ஜோசியம் பார்க்கும் தொட்டிய நாயக்கர் சமுதாய மாணவர்கள், இலங்கை அகதிகள் முகாம் மாணவர்கள் என அனைவரையும் அவர்களின் அவர்களது இருப்பிடத்தில் நேரடியாகச் சந்தித்து இப்பள்ளியின் ஆசிரியர்கள் அவர்களைப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்.

    Chokkalingam Lakshmanan5

    கல்வி சார்ந்த நிறைய நிகழ்வுகளைப் பள்ளியிலும், களப்பயணமாக புத்தக திருவிழா, அஞ்சலகம், வங்கி, நூலகம், அறிவியல் கல்லூரி ஆய்வகங்கள் என முக்கிய இடங்களுக்கு அழைத்துச் சென்று வெளியிலும் கற்றலின் அனுபவத்தைப் புதுமையாக்கி வருகின்றார்கள். திருக்குறள், அபிராமி அந்தாதி போன்ற இலக்கியங்கள் வகுப்பறைப் பாடங்களாக முடிந்துவிடாமல், இசையோடு கூடிய நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகள் மூலமும் பயிற்றுவிக்கப்படுகிறது.

    தமிழக புள்ளியியல் துறையின் முதன்மை செயலர் இறையன்பு இ .ஆ.ப., தேவகோட்டை உதவி கலெக்டர் சிதம்பரம், கணேசன், தமிழ்நாடு மின்சார துறை பொறியாளர் சந்திரசேகர், பொம்மலாட்ட ஆசிரியர் தாமஸ் ஆண்டனி, திருக்குறள் நடனம் சொல்லும் சுந்தர மகாலிங்கம், தமிழ்நாடு அறிவியல் மையத்தின் திருச்சி அண்ணா கோளரங்க இயக்குநர் லெனின் தமிழ் கோவன் போன்ற பல்வேறு துறைகளின் வல்லுநர்களைப் பள்ளிக்கு அழைத்து மாணவர்களுடன் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்வதுடன், மாணவர்கள் அவர்களிடம் கேள்வி கேட்டு பதில் பெற்று தங்களது அறிவை விரிவாக்கிக் கொள்ளவும் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். இதனால் மாணவர்களும் தயக்கமின்றி கலந்துரையாடல்களில் பங்கு பெறுகிறார்கள்.

    மாதம் ஒரு தலைப்பின் கீழ், ஒவ்வொருவாரமும் மாணவர்களுக்கு பேச்சு, கவிதை, ஓவியம், மனக்கணக்கு, புதிர்கணக்கு, வாசிப்பு போன்று பல்வேறு தலைப்புகளில் போட்டிகளை நடத்தி பரிசு வழங்குவதுடன், ஒவ்வொரு மாதமும் பாடத்தில் வினாடி வினா போட்டிகள் நடத்தி பரிசுகளும் வழங்கப்படுகின்றன. வெற்றி பெற்றோருக்கு வாய்ப்பு ஒருமுறை மட்டுமே என்ற திட்டத்தினால் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் மாணவர்களுக்கும் உணர்த்தப்படுகிறது.

    இது போன்ற தொடர் போட்டிகளும் பயிற்சிகளும் மாணவர்களை மேலும் பல போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்குவிக்கிறது. இதனால், ஊடகங்கள் நடத்தும் போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள் பலர் தன்னம்பிக்கையுடனும் ஊக்கத்துடனும் பங்கேற்று சான்றிதழ்களையும் பரிசுகளையும் பெற்று வருகிறார்கள். அன்றாடங்காய்ச்சியான நிலையில் வாழும் குடும்பங்களின் மாணவர்களுக்காக விடுமுறை நாட்களிலும் ஆசிரியர்களே தங்கள் மாணவர்களை மற்ற ஊர்களில் நடக்கும் போட்டிகளுக்கும் அழைத்துச் சென்று பங்கேற்க உதவி வருகிறார்கள்.

    Chokkalingam Lakshmanan1-2

    மத்திய அரசின் அஞ்சல் துறையின் ஓவியப் போட்டி, நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் பேச்சுப் போட்டி, அறிவியல், பாடல் ஒப்புவித்தல், கலைநிகழ்ச்சி போட்டிகள், ஊடகங்கள் நடத்தும் கதை, கட்டுரை, ஓவியப் போட்டிகள் என இப்பள்ளி மாணவர்கள் தங்கள் திறமையைக் காட்டுவது பல ஊடகச் செய்திகளாகவும் வெளிவருகின்றன.

                                   Chokkalingam Lakshmanan3aChokkalingam Lakshmanan3b

    தங்கள் பள்ளியின் கற்பித்தல் முறையை விளக்கும் திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள், “மாணவர்கள் வெறும் மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக மாறிக் கொண்டிருக்கும் காலம் இது. ஆனால் கல்வி, வாழ்க்கையோடு தொடர்புடையது. வாழ்க்கைக்குப் பயன்படக் கூடியது. மாணவர்கள் ஏட்டுப் படிப்பிலேயே கூட்டுப் புழுக்களாய் சுருங்கிவிடாமல், முழுமையான அறிவு பெற்றவர்களாக வளர வேண்டும் என்ற எண்ணத்தில் எங்கள் பள்ளியில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களை அதில் பங்கேற்கச் செய்கிறோம். இதனால் மாணவர்களின் அறிவு, திறமை வளர்கிறது. அதுமட்டுமல்ல, பிறரிடம் பழகுவதற்கு அவர்கள் கூச்சப்படுவதில்லை” என்று தனது செய்தி ஒன்றில் குறிப்பிடுகிறார்.

    மாணவர்களின் கல்வியில் சிறந்த அக்கறை கொண்டு செயலாற்றும் திரு. லெ. சொக்கலிங்கம் அவர்களை வல்லமையாளர் எனப் பாராட்டுவதில் வல்லமை இதழ் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    _______________________________________________________

    ஊடகங்களில் வெளியான சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி பற்றிய செய்திகள் ஒருசில:

    நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி 1ம் ஆண்டு நிறைவு பேச்சு போட்டியில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி வெற்றி

    வாசம் வீசும் வகுப்பறை! – http://www.vikatan.com/article.php?module=magazine&aid=109185

    கோணங்கள் கற்றல்! – http://www.vikatan.com/article.php?module=magazine&aid=109196

    ஓட்டிக்கொண்டே படிக்கலாம்! – http://www.vikatan.com/article.php?module=magazine&aid=109792

    புதிய உருவம் அறிவோம்! – http://www.vikatan.com/article.php?module=magazine&aid=108797

    ஓவியத்தில் அறிவோம் இரட்டுற மொழிதல்! – http://www.vikatan.com/article.php?module=magazine&aid=108783

    கல்வி… வகுப்பறைக்குள் மட்டுமல்ல! – தினமணி: 27 June 2015

    மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி – தினமணி: 31 May 2015

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியின் கற்பித்தலில் புதுமை – தினத்தந்தி நாளிதழின் இளைஞர் மலர்: 13 June 2015

    _______________________________________________________

    To Contact:
    Mr. L. Chokkalingam, M.Sc, M.Phil, B.Ed, PGDHRM, BLISc, DGT
    Head Master,
    Chairman Manicka Vasagam Middle School,
    Devakottai.630 302.
    Sivagangai District
    TamilNadu
    09786113160.
    E-Mail : jeyamchok@gmail.com
    http://www.kalviyeselvam.blogspot.in/

    _______________________________________________________

    For more Info:
    Mr. Chokkalingam Lakshmanan
    https://www.facebook.com/chokka.lingam.5815
    https://plus.google.com/101382123602736134466/
    http://kalviyeselvam.blogspot.com/

    _______________________________________________________

    Share
  • யோக நெறிகளின் பிதாமகர் திருமூலர்

    — முனைவர் சி.சேதுராமன்.

    Thirumoolar_Nayanarயோக நெறிகளில் மிகச் சிறந்தவராக விளங்குபவர் திருமூலர் ஆவார். அவரே யோகநெறிகளின் தந்தையாக விளங்குகின்றார். யோகநெறிகளைத் தான் மட்டுமே பயன்படுத்திப் பயன் பெறாது அனைவருக்கும் அந்நெறியைப் போதித்து அதன் வளர்ச்சிக்கு வித்திட்டவராகத் திருமூலர் திகழ்கின்றார். இவர் எழுதிய திருமந்திரம் வாழ்க்கை நெறிகளை எடுத்துரைக்கும் பெருமை மிகுந்த யோக நூலாகத் திகழ்கின்றது.

    திருமந்திரம் பத்தாம்திருமுறையாகும். இது மூவாயிரம் பாடல்களைக் கொண்டது. யோகிகள் பல்லாண்டுகாலம் உயிர் வாழ்ந்திருப்பார் என்று கூறுவர். திருமூலர் ஒரு யோகியாவார். உடல் வேறு, உயிர்வேறு. இவையிரண்டும் ஒன்று சேர்ந்து இருந்தால் தான் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப்பொருட்களையும் அடைய முடியும் என்ற உயர் யோக நெறியைத் திருமூலர் நமக்குக் கூறுகின்றார். திருமந்திரம் ஒன்பது பகுதிகளாக உள்ளது. ஒவ்வொரு பகுதியும் ஒரு தந்திரம் எனப் பெயர் பெறும்.

    கூடுவிட்டுக் கூடுபாய்தல்:
    தன் உடலை விட்டுவிட்டு வேறொரு உடலில் புகுவதையே கூடுவிட்டுக் கூடு பாய்தல் என்று சித்தர்கள் மொழிவர். இதனைப் பரகாயப் பிரவேசம் என்று குறிப்பிடுவர். பர – வேறு, காயம் – உடல், பிரவேசம் – புகுதல். இதன் பொருள் கூடு விட்டுக் கூடு பாய்தல் என்பதாகும். அதாவது ஓர் உயிர் தான் குடியிருக்கும் உடலை விட்டுநீங்கி, மற்றோர் உடம்பினுள் நுழைந்து, அவ்வுடம்பிற்கு ஏற்றவாறு செயல் படுதல். விக்கிரமாதித்தன், ஆதிசங்கரர், அருணகிரிநாதர் ஆகியோர் கூடுவிட்டுக் கூடு பாய்ந்ததாக வரலாறுகள் தெளிவுறுத்துகின்றன. அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகிய திருமூலரும் மூலன் என்பவனின் உடம்பில் புகுந்து ஆகமப்பொருளைக் கூறியுள்ளார். உயிர் வேறு, உடல் வேறு என்ற தத்துவத்திற்குக் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை ஓர்உதாரணமாக விளங்குகிறது.

    திருமூலரின் வரலாறு:
    நந்தியெம்பெருமான் மாணாக்கரில் பதஞ்சலியும், வியாக்கிரமரும் கயிலையினின்றும் தென்னாடு வந்து தில்லையம்பலத்தில் சிவபெருமானுடைய நடன தரிசனம் காண்பதற்காக வந்த காலத்து, திருமூலநாயனாரும் தம்முடைய சொந்த உடம்புடன் (அஃதாவது மூலனுடைய சரீரத்தில் புகுவதற்கு முந்தி) அவர்களுடன் கூடவே வந்து, நடனக் காட்சியைக் கண்டு களித்துப் பின் கயிலைக்கு ஏகி, அங்குத் தவத்தினில் இருந்தார் என்பதை,

    “செப்பும் சிவாகமம் என்னுமப் போர்பெற்று
    அப்படி நல்கும் அருணந்தி தாள்பெற்றுத்
    தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
    ஒப்பில் எழுகோடி யுகமிருந் தேனே.”
    “இருந்தேனிக் காயத்தில் எண்ணிலி கோடி
    இருந்தேன் இராப்பகல் அற்ற விடத்தே
    இருந்தேன் இமயவர் ஏத்தும் பதத்தே
    இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே.”
    என்ற தமிழ் மூவாயிரச் செய்யுட்களால் அறியலாம்.

    “இமயவர் ஏத்தும் பதத்தே” என்றதாலும், “என் நந்தி இணையடிக் கீழே” என்றதாலும். நாயனார் தில்லைக்கூத்தைக் கண்டு களித்தபின் கயிலை சென்று தவம் இயற்றினார் என்பது தெளிவாகின்றது.

    திருமூலர் பதஞ்சலி வியாக்கிரமருடன் தென்னாடு போந்தது முதல் தடவையாகும். அப்போது அவருக்குத்திருமூலர் என்ற பெயர் கிடையாது. இரண்டாவது முறையாக அவர் கயிலையினின்றும் பொதியையை நோக்கிவரும்போது, சோழநாட்டுச் சாத்தனூரில் பசுக்கள் மேய்க்கும் மூலன் இறந்து கிடக்கக் கண்டு, தம் உடலை ஓர்அரசமரப் பொந்தில் வைத்துவிட்டு, தம் உயிரை மூலன் உடம்புக்குள் புகுத்தி மூலனாக எழுந்த பின்னர் அப்பெயர் ஏற்பட்டது ஆகும். யோகநெறியை நந்திதேவரிடமிருந்து கற்ற திருமூலர் சிவ யோகியாகவே முதலில் அறியப்படுகிறார்.

    மூலன் உடலில் புகுந்தது: 
    கயிலாய மலையில் நந்தி தேவரின் உபதேசத்தைப் பெற்ற சிவயோகியார் ஒருவர் இருந்தார். அவர் அட்டமா சித்திகளையும் கைவரப் பெற்றவர். இவர் அகத்தியரிடம் கொண்ட அன்பால் அவருடன் சிலகாலம் தங்குவதற்கு எண்ணி, தான் வாழ்ந்த திருக்கையிலையிலிருந்து புறப்பட்டு பொதிகை மலையை அடையும்பொருட்டு தென் திசை நோக்கிச் சென்றார்.

    செல்லும் வழியில் திக்கேதாரம், பசுபதி, நேபாளம், அவிமுத்தம் (காசி) விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சி ஆகிய திருத்தலங்களைத் தரிசித்து ஆங்காங்கே இருந்த சிவயோகிகளைக் கண்டு அளவளாவி மகிழ்ந்தார்.

    பின்னர் திருவாவடுதுறையை அடைந்தார். அங்கு இறைவனை வணங்கினார். அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே ஆநிரை மேய்க்கும் ஆயனாகிய மூலன் என்பவன் அங்கு தனியே வந்து பசுக்களை மேய்ப்பவன், அவன் தன் விதி முடிந்த காரணத்தால் உயிர் நீங்கி இறந்து கிடந்தான். மூலன் இறந்ததைக் கண்ட பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றிச் சுற்றி வந்து வருந்தி கண்ணீர் விட்டன.

    அப்போது அதன் வழியாகச் சென்ற சிவயோகியார் அதனைக் கண்டார், பசுக்களின் துயர்கண்ட சிவயோகியார்க்கு அவற்றின் துன்பம் துடைக்க எண்ணம் உண்டாயிற்று. எனவே தம்முடைய உடலை மறைவான இடத்தில் கிடத்திவிட்டு, கூடு விட்டு கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை அந்த இடையனது உடம்பினுள் புகுமாறு செலுத்தித் திருமூலராய் எழுந்தார்.

    மூலன் எழுந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ந்து அன்பினால் அவரது உடலினை நக்கி, மோந்து, களிப்போடு துள்ளிக் குதித்தன. திருமூலர் மனம் மகிழ்ந்து பசுக்களை நன்றாக மேய்த்தருளினார். வயிறார மேய்ந்த அப்பசுக்கள் காவிரியாற்றின் துறையிலே இறங்கி தண்ணீர் பருகிக் கரையேறி சாத்தனூரை நோக்கி நடந்தன. அவற்றைத் தொடர்ந்து சென்ற சிவயோகியார் பசுக்கள் தத்தம் வீடுகளுக்குச் சென்றதைக் கண்டார்.

    அதே சமயம் வீட்டிலிருந்து வெளியே வந்த மூலனின் மனைவி, மூலன் வடிவிலிருந்த சிவயோகியரை வீட்டிற்கு அழைத்தாள். திருமூலரோ தான் அவளுடைய கணவன் அல்லன் என்றும், அவன் இறந்துவிட்டான் என்றும் கூறினார். அவள் அவ்வூர்ப் பெரியவர்களிடம் முறையிடவும், மூலர் தான் ஏற்றிருந்த உடலிலிருந்து விலகி தன் ஒரு சிவயோகியார் என்பதை நிரூபித்தார். மறுபடியும் மூலனின் உடம்பில் புகுந்தார். இதைக்கண்ட சான்றோர்கள் மூலனின் மனைவியைத் தேற்றி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர்.

    சிவயோகியர் தன் உடலைத் தேடிச் சென்று அது கிடைக்காததால் மூலனின் உடலிலேயே தங்கி திருவாடுதுறைத் திருக்கோவிலை அடைந்தார். யோகத்தில் வீற்றிருந்து, நன்னெறிகளை விளக்கும்‘திருமந்திரம்’ எனும் நூலை ஓராண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடியருளினார்.

    தாம் வீடுபேறு அடைவதற்கு முன்னர் “திருமந்திரத்தைத்” தம்முடைய ஏழு சீடர்களுக்கும் கற்பித்து, உலகில் பல மடங்களை ஏற்பாடு செய்து பதி, பசு, பாச இலக்கணங்களைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்குமாறு செய்து, திருமந்திரம் எழுதப்பட்ட ஒரு சுவடியைத் திருவாடுதுறைத் திருக்கோயிலின் முன்னர் இருக்கும் பலிபீடத்தின் கீழ்ச் சேமித்து வைத்த பின்னரே இறைவனோடு கலந்தார்.

    திருமூலருக்கு ஏழு சீடர்கள் உண்டு என்பதும், அவர் ஏழு மடங்களை நிறுவினார் என்பதும்,

    “மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
    இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
    கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
    இந்த எழுவரும் என்வழி யாமே.”
    “வந்த மடமேழு மன்னும்சன் மார்க்கம்
    முந்தி உதிக்கின்ற மூலன் மடவரை.”
    என்ற திருமந்திரச் செய்யுட்களால் அறியலாம்.

    திருமூலரது நூலுக்குத் தமிழ் மூவாயிரம் என்ற பெயரே முதலில் இருந்தது, அந்த நூலில் மனித உடலுக்குத் தேவையான எல்லாவற்றையும் விளக்கியுள்ளார். அதனால் பின்னர் அந்த நூல் “திருமூலர் திருமந்திரம்” என்றுவழங்கப்பட்டது.

    திருமந்திரத்தை 3000 பாடல்களாக 9 தந்திரமாக திருமூலர் மொழிந்துள்ளார். இவற்றை 3000 ஆண்டு தவமிருந்து ஆண்டுக்கு ஒரு பாட்டாகப் பாடினார். இவர் சுந்தரநாதன் என்ற பெயருடன் முதல் தடவை தென்னாட்டுக்கு வந்து தில்லையில் தப்பிலாமன்றில் பதஞ்சலி வியாக்கிரமர்களுடன் சிவபெருமானின் தனிக்கூத்து கண்டது 8000 வருடங்கள் முன்னர் ஆகும்.

    திருமந்திரத்தில் இடம்பெற்றுள்ள சிறப்புப் பாயிரத்தில்

    “மந்திரங் கொண்டு வழிபடு வோர்க்குச்
    சுந்தர நாதன் சொல்லிய மந்திரம்
    நந்திஎந் நாதன் நாவார ஓதினன்
    பைந்தொடி மேனிப் பயனது தானே.”
    “வந்தமட மேழு மன்னுஞ்சன் மார்க்கத்தின்
    முந்தி உதிக்கின்ற மூலன் மடவரை
    தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்
    சுந்தரன் ஆகமச் சொன்மொழிந் தானே.”
    என்று குறிப்பிடப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.

    இச்செய்யுள் சுந்தரநாதருடன் ஒருங்கு கற்ற ஒருவரால் பாடப்பெற்றது. இவருக்கு நாதன் என்ற பட்டம் நந்தியெம் பெருமானால் கொடுக்கப்பட்டது. இதனை,

    “நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றொம்.”
    என்ற தமிழ் மூவாயிரச் செய்யுள் விளக்குகிறது.
    திருமூலர் மூலனின் உடலில் புகுந்ததை,
    “அகலிடத்தார் மெய்யை அண்டத்து வித்தைப்
    புகலிடத்தெம் மெய்யைப் போகவிட் டானைப்
    பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
    இகலிடத் தேயிரு ணீங்கிநின் றேனே.” (141)
    என்று திருமந்திரத்தில் விளக்கியுள்ளார்.

    மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாரா?
    திருமூலர் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் உயிரோடு இருந்தாரா? என்று பலருக்கும் ஐயம் எழும். அவர்களது ஐயத்தைப் போக்குகின்ற வகையில்,

    “வளியினை வாங்கி வயத்தி லடக்கில்
    பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
    தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
    வளியினும் வெட்டு வளியனு மாமே.”(551)
    “நீல நிறனுடை நேரிழை யாளொடும்
    சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு
    ஞால மறிய நரைதிரை மாறிடும்
    பாலனு மாவர் பராநந்தி யாணையே.”(718)
    என்றும்,

    “எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
    அங்கே அதுசெய்யில் ஆக்கைக்கு அழிவில்லை.”(552)
    “அண்டம் சுருங்கில் ஆக்கைக்கு அழிவில்லை.”(715)
    “நாட்ட மிரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
    வாட்டமு மில்லை மனைக்கும் அழிவில்லை.”(584)
    “ஈராறு கால்கொண்டு எழுந்த புரவியைப்
    பேராமற் கட்டிப் பெரிதுண வல்லிரேல்
    நீரா யிரமும் நிலமா யிரத்தாண்டும்
    பேராது காயம் பிரான்நந்தி ஆணையே.”(702)
    என்றும்,

    “காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
    கூற்றை யுதைக்கும் குறியது வாமே.”(553)
    மூல நாடி மூக்கட் டலக்குச்சியுள்
    நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காண்
    மேலை வாயில் வெளியுறக் கண்டபின்
    காலன் வார்த்தை கனாவிலும் இல்லையே.”(602)
    என்றும்,

    “உடம்பா ரழியில் உயிரார் அழிவர்
    திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
    உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
    உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.”(704)
    என்றும் திருமந்திரத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அமைந்துள்ளன.

    இப்பாடல்களில் திருமூலர் தம் அனுபவத்தைக் கூறியுள்ளார். “தாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”என்பது ஆன்றோர் கொள்கையாதலால், உலகத்தார் அறிந்து வாழ்வாங்கு வாழ்வதற்காக நீண்ட நாள் வாழ்கின்ற நெறிகளைத் திருமூலர் தம் நூலின்கண் தெளிவுறுத்தியுள்ளார்.

    திருமூலர் வைத்தியம், யோகம், ஞானம் என்ற முப்பெருந் துறைகளைப் பாடியுள்ளார். நந்தி அருளாலே மூலனை நாடினோம் (திருமந்திரம்-169) என்ற பாடல் மூலம் இதனை அறிந்து கொள்ளலாம். இவர் மூலனின் உடலில் இருந்தமையால் திருமூலர் எனப் பெயர் பெற்றார் என்பர். இவருக்குச் சுந்தரர் என்ற பெயரும் இருந்துள்ளது. இவரது வரலாற்றை சேக்கிழாரடிகள் பெரியபுராணத்தில் விரிவாக அறுபத்து மூவர் பட்டியலிலும் சேர்த்து பெருமைப்படுத்திக் கூறியுள்ளார்.

    அகத்தியர், 12 காண்டத்தில்
    1.திருமூலர் காவியம் (கிரந்தம்) – 8000
    2. திருமூலர் சிற்ப நூல் – 1000
    3. திருமூலர் சோதிடம் – 300
    4. திருமூலர் மாந்திரிகம் – 600
    5. திருமூலர் சல்லியம் – 1000
    6. திருமூலர் வைத்திய காவியம் – 1000
    7. திருமூலர் வைத்திய கருக்கிடை – 600
    8. திருமூலர் வைத்திய சுருக்கம் – 200
    9. திருமூலர் சூக்கும ஞானம் – 100
    10. திருமூலர் பெருங்காவியம் – 1500
    11. திருமூலர் தீட்சை விதி – 100
    12. திருமூலர் கோர்வை விதி – 16
    13. திருமூலர் தீட்சை விதி – 8
    14. திருமூலர் தீட்சை விதி – 18
    15. திருமூலர் யோக ஞானம் – 16
    16. திருமூலர் விதி நூல் – 24
    17. திருமூலர் ஆறாதாரம் – 64
    18. திருமூலர் பச்சை நூல் – 24
    19. திருமூலர் பெருநூல் – 3000
    20.திருமூலர் ஞானோபதேசம் 30
    21.திருமூலர் நடுவணை ஞானம் 30
    22.திருமூலர் ஞானக் குறி 30
    23.திருமூலர் சோடச ஞானம் 16
    24.திருமூலர் ஞானம் 11
    25.திருமூலர் குளிகை 11
    26.திருமூலர் பூஜாவிதி 41
    27.திருமூலர் வியாதிக் கூறு 100
    28. திருமூலர் முப்பு சூத்திரம் 100…
    என்ற நூல்களும் இவரால் இயற்றப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை ஆய்விற்குரியது. ஆனாலும் திருமந்திரமே திருமூலரின் ஒப்பற்ற நூலாக அனைவராலும் போற்றப்படுகின்றது.

    திருமூலரின் 16 சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலைச் சித்தரும் முக்கியமானவர்கள். திருமூலர் இறுதியாக தில்லை சிதம்பரத்தில் ஜீவ சமாதி எய்தினார், பின்னர் வந்த பாண்டிய மன்னனின் ஆணைப்படி திருமூலர் சமாதியை மூலவராகக் கொண்டு, கருவூரர் சிதம்பரம் கோயிலை அமைத்தார்.

    திருமூலர் லிங்க வடிவமாக எழுந்தருளிய இடம் சுயம்பு லிங்கமாக எழுந்தருளிய இடமாகக் கற்பிக்கப்பட்டு உமா பார்வதி என்ற பெயரில் ஒரு அம்மன் சந்நிதியும் இக்கோயிலில் சேர்த்துவிட்டார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். திருமந்திரத்தில் உடலோம்பு நெறிகளாகப் பல்வேறு யோகநெறிகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

    ராஜயோகம், ஹடயோகம், மந்திர யோகம், சந்திர யோகம், ஆசனங்கள், அட்டாங்க யோகம், பரியங்க யோகம் போன்ற யோகநெறிகள் திருமூலரால் தெளிவுறுத்தப்பட்டுள்ளன. எளிமையாக யோகநெறிகளைத் திருமூலர் திருமந்திரத்தில் கூறியுள்ளமை சிறப்பிற்குரியது. முதன் முதலில் யோகநெறிகளை அனைவருக்கும் ஏற்ற வகையில் இயம்பிய பெருமை திருமூலரையே சாரும் எனலாம். அதனால்தான் திருமூலரை யோகநெறிகளின் பிதாமகர் என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இவருக்குப் பின்னர் பலர் யோகநெறிகளை எடுத்துரைத்திருந்தாலும் அனைத்திற்கும் மூலமாக அமைந்திருப்பது திருமூலர் குறிப்பிடும் யோகநெறிகளேயாகும் என்பது வெள்ளிடை மலையாகும்.


    முனைவர் சி.சேதுராமன் தமிழாய்வுத் துறைத்தலைவர்,
    மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
    Malar.sethu@gmail.com

    Share
  • உன்னையறிந்தால் ……. (28)

    நிர்மலா ராகவன்

    பாதுகாப்பு யாருக்காக?

    உனையறிந்தால்

    கேள்வி: நாம் குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்த்தால், அது அவர்களுக்கு நன்மைதானே? ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்?

    விளக்கம்: சிறு பிராயத்திலிருந்தே மனிதனுக்கு முரணான இரு குணங்கள் இருக்கின்றன. ஒன்று சுதந்திரம், இரண்டாவது பாதுகாப்பு. உதாரணமாக, `நான் பெரியவன்! தானே அம்மா கை பிடிக்காமல் நடக்க முடியும்!’ என்பதுபோல் தனியாக ஓடும் ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று, குரைத்தபடி ஓடும் நாயைப் பார்த்தால், அம்மாவை ஓடி வந்து கட்டிக்கொள்ளும். இந்த இயற்கையைப் புரிந்துகொண்டு, குழந்தையை வழிநடத்திச் செல்ல வேண்டும்.

    ஒரு தாய்க்குப் பிறந்த எல்லாக் குழந்தைகளும்கூட ஒன்றுபோல் இருப்பதில்லை. ஒரு குழந்தை பசி வந்தால், பிராணன் போகிறமாதிரி அலறும். இன்னொன்று வெறுமனே முனகும். ஜீன் வித்தியாசப்படுவதால், ஒவ்வொன்றும் தனி ஜீவன்தான். இது புரியாது, தனி மனிதனின் நன்மையைவிட பொது நலனே முக்கியம் என்று வளர்க்கப்படும்போது, ஒருவனின் தனித்தன்மைகள் வெளிப்பட வாய்ப்பு இல்லாது போகிறது. எப்போதும் பாதுகாப்பாக உணர்ந்தாலும், சுதந்திரம் கிடைப்பதில்லை.

    `வயது முதிர்ந்ததும், எனக்கு ஒரு பாதுகாப்பு வேண்டாமா?’ இப்படி யோசிக்கும் தாய், மகன் தன்னைப் பாதுகாப்பான் என்ற எதிர்பார்ப்புடன், `பாசம்’ என்ற பெயரில் குழந்தைப் பருவத்திலிருந்து அவன் தன்னையே சார்ந்து, எதற்கும் நாடும்படி,வேண்டியதை எல்லாம் கவனித்துச் செய்வாள் — மகனுக்கு எத்தனை வயதானாலும். முதலில் சௌகரியம் என்று பட்டது இப்போது இரு தரப்பிலும் ஆத்திரத்தை விளைவிக்கும்.

    குழந்தை தாயை எதிர்த்து, தானே தன் காரியங்களைச் செய்ய முற்படும்போது, இத்தகைய தாய் நொந்து போகிறாள் –தன்னை உபயோகமானவள் என்று மகன் நினைக்கவில்லையே என்று.  மகன் விரும்புவதெல்லாம் சிறிது சுதந்திரம். அவ்வளவுதான். அது அவளுக்குப் புரியவில்லை.

    ஒரு சிறுவன் தானே தனது காரியங்களைச் செய்துகொள்ள வேண்டும் என்று அடம் பிடிப்பது அகம்பாவத்தால் அல்ல. `என்னாலும் முடியும்!’ என்ற தன்னம்பிக்கையைப் பெற.  இது புரிந்து, அபாயமற்ற காரியங்களில் அவனைத் தன் போக்கில்விட்டு, சிறு தவறுகள் நிகழும்போது, அவைகளைப் பெரிதுபடுத்தாது, எப்படித் தடுப்பது என்று சொல்லிக் கொடுப்பதுநல்லது. இல்லாவிட்டால், எந்த வயதிலுமே புதிய காரியங்களைச் செய்யத் தயங்குவான் — எங்கே தவறு நிகழ்ந்து, பிறரது கேலிக்கு ஆளாக வேண்டி வருமோ என்று.

    குழந்தை சுயமாகச் சிந்திக்கும் சூழ்நிலைகளை ஒன்றரை வயதிலிருந்தே சிறுகச் சிறுக  உருவாக்குங்கள்.

    `இன்னிக்கு இந்த சட்டை போட்டுக்கறியா, இல்லே இதுவா?’

    `உனக்கு மைலோ வேணுமா, ஹார்லிக்ஸா?’

    குழந்தை முதலில் ரொம்ப யோசிக்கும்.

    `மைலோ பிரௌன் கலர். ஹார்லிக்ஸ் வெள்ளையா இருக்கு, பாத்தியா? எது வேணும்?’

    காலையில் ஒன்று, மாலையில் மற்றொன்று என்று பெருமையாகத் தேர்ந்தெடுக்கும்.

    குழந்தை காலையில் ஹார்லிக்ஸ் கேட்டு, நீங்கள் தவறாக மைலோ கொடுத்தால், தன் கருத்து மதிக்கப்படவில்லையே என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்யும். வெள்ளை நிறத்தில் சிறிது பிரௌன் கலந்தால், அந்த விஷயத்திற்கு ஒரு நல்ல முடிவு கட்டிவிடலாம். குழந்தைகளை ஏமாற்றுவது எளிது!

    பொதுவாக எல்லாக் குழந்தைகளுமே தங்கள் வயதுக்கு மீறிய செயல்களைச் செய்ய முற்படுகிறார்களே, ஏன் தெரியுமா?தங்கள் எல்லை எவ்வளவு என்று அறியும் முயற்சி அது. அவ்வப்போது வாய் வார்த்தையாகக் கண்டிக்க வேண்டுவது அவசியம். `குழந்தை! அவனுக்கு என்ன தெரியும்!’ என்று நீண்ட காலம் விட்டுக்கொடுத்தால், பிறகு அடக்க முடியாது.

    குழந்தைகளுக்கு விளையாடுவதைத் தவிர மற்ற எல்லாமே அநாவசியம்தான். குளிப்பது, பல் துலக்குவது போன்ற அவசியமானவற்றைக்கூட செய்ய மறுக்கும் குழந்தைகள் உண்டு.

    `பல் தேய்ச்சாதானே பல் முத்து மாதிரி மின்னும்! இல்லாட்டா பூச்சி வரும்!’ என்று ஆசை காட்டியும், மிரட்டியும் காரியத்தைச் சாதித்துக்கொள்ள  வேண்டியதுதான். பள்ளிக்கூடத்துக்குப் போக அழுது ஆர்ப்பாட்டம் செய்த குழந்தைகள் பிற்காலத்தில் பெரிய படிப்பாளிகள் ஆவது போலத்தான்!

    தான் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையே என்று ஆத்திரப்பட்டு அடித்து மசியவைத்தால், `நான் ஒரு பயந்தாங்குளி!’என்று பெருமை பேசுகிறவர்களாகிறார்கள். இவர்களால் தனித்து எதையும் செய்ய துணிவில்லாததால், தம்மைப்போன்ற பிறரையும் கூட்டு சேர்த்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள் தம்மைப் பார்த்து பயப்பட வேண்டும் என்பதுபோல் நடப்பார்கள்.

    தம்மைப்போல் இல்லாது, சிறு வயதிலேயே போதிய சுதந்திரம், பாதுகாப்பு என்று அன்புடன் வளர்ந்தவர்களைக் கண்டுபொறாமை எழுகிறது. அவர்களை மறைமுகமாகவோ, நேரிடையாகவோ பழித்து, தங்களைப்போல் மாற்ற எண்ணுவார்கள். அவர்களுக்கு வேண்டியது நட்பு. அதனால் கிடைக்கும் பலம், பாதுகாப்பு. ஆனால், சண்டையில் துவங்குவார்கள்.

    பிறர் நம்மிலிருந்து எவ்வளவு மாறுபட்டிருந்தாலும், அவர்களை அப்படியே ஏற்பதுதான் பெருந்தன்மை. எல்லாரிடமும்இருக்கும் குற்றம் குறைகளையே பார்த்துக் கொண்டிருந்தால், நட்பும், உறவும் எப்படி வளரும்?

    Share
  • வார்த்தைகளைத் தேடும் கவிதைகள்

    க. பாலசுப்பிரமணியன்

     

    உள்ளத்தில் கொந்தளிக்கும் எரிமலைகள்

    உதடுகளின் வாசலில் உதிரத்தை சுவாசிக்கும் !:

    உயிரோடு மெய் சேர்க்காமல் உணர்வலைகள்

    சொல்லுக்குச்  சுவைதேடிச் சோர்ந்திருக்கும்  !!

     

    பெருமூச்சில் நினைவுகள் சுமையிறக்கி

    சோகத்தில் சொந்தத்தை வளர்த்திருக்கும்  ..

    கல்லில் சிலைவடிக்கத் துடிக்கும் கைகள்

    உளியின் வலிக்கு ஒத்தடம் கொடுத்திருக்கும் !!

     

    கற்பனைகள் நினைவில் கதறிக் கதறி

    கால் விலங்குகளை உடைக்கத் துடித்திருக்கும்

    காய், மா, பலாவின் கதவுகளைத் தட்டிக்

    கவிதைகள் உள்ளே வரக் காத்திருக்கும்

     

    எழுதத் துடிக்கின்ற  இதயத் தேருக்கு  இயலாமை

    முட்டுக்கட்டை போட்டு முன் நிற்கும் !

    காலத்தில் கலங்கி நிற்கும் கவிதை

    காற்றுண்ட கார்மேகமாய் கலைந்து நிற்கும் !

    Share
  • “அன்புள்ள அம்மா”

    ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி சரிதம்
    (மீ.விசுவநாதன்)
    ( பகுதி: நான்கு )
    amv
    தியானமும் உழைப்பும்

    இரவே
    தூங்கும் வேளை
    சுதாமணி
    தூங்கமாட்டாள் !
    அரவே
    தீண்டினாலும்
    தியானத்தை விட்டு
    நீங்கமாட்டாள்!
    அவளின் அப்பா
    சுகுணானந்தர்
    அவளுக்குக்
    காவலாய் நிற்கும்
    காட்சியைக் கண்டும்
    ஏங்கமாட்டாள்!

    கண்ணனை
    நெஞ்சில் வைத்து
    கடல்போல
    அன்பு வைத்து
    உலகுக்காய் வந்தவள்!
    வீட்டுச்
    செலவுக்காய் வேலை
    செய்து மகிழ்ந்தவள் !

    பள்ளிப் படிப்பும் வீட்டுச் சூழலும்

    பள்ளிக்குப் போனதோ
    நான்காண்டுகள் !
    சுள்ளி பொறுக்கவும்
    சொந்தம் காக்கவும்
    தான்கண்டதோ
    பல்லாண்டுகள் !

    வாத நோயால்
    விழுந்த தாயவள்
    பாதம் தொட்டுப்
    பணிசெய்த சேயிவள்!
    படிப்பை விட்டுத்
    தொண்டு செய்யும்
    துடிப்பைப் பெற்றவள் !
    பெற்றவள் இவளை
    அடிக்கும் போதும்
    பொறுமை காக்கும்
    படிப்பினைப் பெற்றவள் !

    சிறுமியான போதும்
    சிறுமை எண்ணாத
    பெருமை மிக்கவள் !

    குடிநீருக்காக
    தொலைதூரம் சென்று
    கிணற்றுக் குள்ளே
    “தோண்டி”யை விட்டு
    விலைமதிப்பில்லா
    நீரினை எடுத்து
    அலைகடலோரம்
    அமைதியாய் நடந்து
    “அகத்தைத் தோண்டி”
    கிருஷ்ணா என்பாள் !
    அகத்தை அடைந்ததும்
    அடுத்த வேலையை
    அம்மா தருவாள் !
    அகந்தை இல்லாமல்
    எம்மாம் பெரிய
    வேலையானாலும்
    சும்மாச் செய்வாள்
    சுதாமணி மெய்யாள்!

    கண்ணன் பெயரைச்
    சொல்லும் பொழுதே
    கண்கள் நீரைச்
    சொரியும் அமுதாள் !
    எண்ணும் வேலைகள்
    எத்தனை யாயினும்
    எண்ணத்தில் இறைவனை
    இருத்திய அமுதாள் !

    அண்ணன் தம்பியர்
    துணிதுவைத்திடுவாள் !
    பண்ணும் பாட்டால்
    பணிகளித்திடுவாள் !
    கிருஷ்ணனின்
    பீதாம்பரமாய் நினைத்து
    உடைகளை உலர்த்துவாள் !
    கிருபையைத் தாவென
    கடைக்கண் நீரவர
    அவன்மனம் மலர்த்துவாள்!

    பசுக்களை மேய்ப்பாள்
    பரந்தாமனோடு
    பிருந்தாவன மாவாள்!

    சிசுக்களைப் பெற்றோர்
    பால் வேண்டுவார்கள்
    பசிபோக்கி வருவாள் !
    அதனால் தன்
    பெற்றோர் தரும்
    அடிதாங்கி வருவாள் !
    அடித்தாலும் அவரின்
    அடிதாங்கி மகிழ்வாள் !

    …….(நம்மோடு இன்னும் தொடர்வாள் அம்மா)

    Share
  •   நான் அறிந்த சிலம்பு – 184

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக்  காதை

    மன்னனைக் கண்டு பொற்கொல்லன் செய்தி தெரிவித்தல் 

    மன்னனைக் கண்ட பொற்கொல்லன்
    அவன் காலடியில் விழுந்து
    அவனைப் பலவாறு புகழ்ந்து போற்றினான்.
    “கன்னக் கோலும், கவைக்கோலும் இன்றி
    வாயில் காத்து நின்றோரையும் மயக்கி
    அவர்களை உறங்கச் செய்து,                                  silambu
    அரண்மனை புகுந்து,
    அரசியின் சிலம்பைத்
    திருடச் சென்ற கள்வன்,
    காவலர் கண்களையும் மறைத்து
    ஒளிந்து கொண்டு இருந்தவன்,
    என்னுடைய சிறுமை பொருந்திய
    குடிலில் வந்து தங்கியிருக்கிறான்”
    என்று அரசனிடம் உரைத்தான். 

    மன்னவன் வினைவசத்தால் மயங்கிக் காவலர்க்கு இட்ட கட்டளை 

    வினையின் பயன் தோன்றிய
    காலம் வந்து விட்டது;
    ஆதலால், கொம்புகளுடன் கூடிய
    வேம்பு மாலை அணிந்த
    பாண்டிய மன்னன்
    சற்றும் ஆராய்ந்து சிந்திக்க இயலாதவனாய்க்
    காவலர்களை அழைத்து,
    “தாழ்ந்த பூங்கோதைகளையுடைய
    என் தேவியின் காற்சிலம்பு
    இவன் காட்டிக் கொடுக்கும்
    அந்தக் கள்வனது கையில் இருக்குமாயின்,
    அக்கள்வனைக் கொன்று அச்சிலம்பை
    இங்கு கொண்டு வருவீர்களாக” என்றான்.

    காவலாளருடன் திரும்பி வந்த பொற்கொல்லன் கோவலனிடம், “இவர் சிலம்பு காண வந்துள்ளனர்” என்று சிலம்பைப் பற்றிக் கூறுதல் 

    அங்ஙனம் அரசன் காவலரை ஏவியதால்
    தீயதொழில் புரியும் பொற்கொல்லன்
    ‘கோவலன் திருட்டுப்பழி ஏற்க வேண்டும்’
    என்ற தன்எண்ணம்
    ஈடேறப்போகிறது என்று நினைத்து
    அகம் மகிழ்ந்தான்.
    ஊழ்வினையின் வலையில் விழுந்து கிடந்த
    கோவலனை அணுகினான்.

    “வெற்றி பொருந்திய படைகளையுடைய
    மன்னனின் ஏவுதலினால்
    உம்மிடம் உள்ள சிலம்பைக் காண
    இங்கு வந்துள்ளனர்.
    அதனைக் காட்டுவாயாக”
    என்று கூறினான்.

    கோவலனும் தன் கையில் உள்ள சிலம்பை
    அவர்களிடம் காட்டினான்.
    அதன் அருமை பெருமைகளை
    விளக்கிச் சொல்பவன் போல
    அக்காவலர்களைத்
    தனியே அழைத்துச்சென்ற
    அக்கயவன் பொற்கொல்லன்,
    அரசியின் சிலம்பை அது எவ்வாறு
    ஒத்திருக்கிறது என்பதை
    விளக்கிச் சொன்னான்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 142 – 161

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-kolaikalakathai–

     

    Share
  • ஒருகருதிருப் பயணம்

    -மீ.விசுவநாதன்

    மலம்சூழ்ந்த பையருகில் மிதந்திருந்தேன் – ஒரு
    மகராசி மடிதிறக்க மண்விழுந்தேன்!
    பலம்கொண்ட மட்டும்நான் அழுதிருந்தேன் -அவள்
    பாலூட்ட வாய்சிரித்துக் கண்வளர்ந்தேன்!       (1)

    வருமுறவு கொஞ்சிடவே வரவிழைந்தேன் – அந்த
    வாஞ்சையிலே கைகாலை உதைத்திருந்தேன்!
    இருமலுடன் மலஜலத்தில் தவழ்ந்திருந்தேன் – தாய்
    இதயத்தில் கமலமென மலர்ந்திருந்தேன்!       (2)

    நடைபயின்று நடுவீட்டில் நான்களிப்பேன் – பலர்
    நகைப்புடனே பார்த்திருக்கும் விழியாவேன்!
    உடைபுதிதாய் அணிந்தணிந்து களைந்திடுவேன் – அப்பா
    உச்சிமோந்து பார்க்கையிலே உயிர்பெறுவேன்!     (3)

    தெருப்புழுதி பீயெல்லாம் நான்புரள்வேன் -அந்த
    விளையாட்டில் நட்புடனே நாள்மறப்பேன்!
    உருவம்தான் உயர்ந்துவர அழகானேன் – ஓர்
    ஊரூராய்ப் படிஏறிப் படிப்பறிந்தேன்!                           (4)

    பட்டகல்வி படித்தகல்வித் துணையோடு – ஒரு
    பதவியிலும் அமர்ந்தேதான் பணிசெய்தேன்!
    தொட்டவிழிப் பார்வைக்குள் சிக்கியதால் – ஒரு
    தோகையுடன் காதல்வழிக்  கைபிடித்தேன்!       (5)

    அன்பான இருகுழந்தை நான்கொண்டேன் – அவர்கள்
    அறிவோடு விளங்கிவரத் தேனுண்டேன்!
    என்போன போக்கிற்கு நானிருப்பேன் – என்ற
    இயல்பான குணத்தாலே வாழ்கின்றேன்!            (6)

    பூவைப்போல் புதிதாயும் நானிருப்பேன் – பெரும்
    புயலைப்போல் சிலநேரம் தானிருப்பேன்!
    தேவைக்குத் தேடுகின்ற விலங்கினம்போல் – சில
    வேளைக்குச் சிறுமதியின் சொல்கேட்பேன்!       (7)

    சிற்றின்பம் பேரின்பம் இரண்டிலுமே – என்
    சிந்தனைகள் சென்றதனால் மெய்ம்மறந்தேன்!
    கற்றதுவும் பெற்றதுவும் காடுவரை – என்ற
    கற்கண்டு அனுபவத்தில் மெய்யுணர்ந்தேன்!   (8)

    சரியான நேரத்தில் குருபார்க்க – இந்தச்
    சண்டாளன் மாறியதை நானறிவேன்!
    சரிபோடா வாழ்வெல்லாம் இப்படித்தான் – என்ற
    சத்தியத்தின் மனத்துள்ளே நானறிந்தேன்!          (9)

     

    Share
  • திருவெம்பாவையின் முக்கியத்துவம்

    எம் . ஜெயராமசர்மா -அவுஸ்திரேலியா 

    மார்கழி மாதத்தைப் பீடை பிடித்தமாதம் என்று சொல்லி –

    சுபநிகழ்ச்சிகள் செய்வதைத் தவிர்த்துவிட்ட நிலையினைக் காண்கின்றோம். இது பற்றிய விளக்கத்தை நாம் அறிந்து கொள்ளுதல் அவசியமானதே. பல பெயர்கள் காலத்தின் போக்கால் கருத்து மாறுபட்டு வேறு ஒரு பொருளை உணர்த்துவது நடந்தே வந்திருக்கிறது.” ஒப்பிலி அப்பன்” என்னும் சுவாமியின் பெயரை உப்பிலி அப்பன் என மாற்றி – அந்த சுவாமிக்கு உப்பில்லாத பொருட் களையே நிவேதனம் செய்யும் வழக்கம் நாளடைவில் ஏற்பட்டுவிட்டது.அதே போன்றதே மார்கழி மாதம் பற்றியதுமாகும்.” பீடுடைய மாதம்” என்பது பீடை உடைய மாதமாக்கப் பட்டுவிட்டது.பீடு என்றால் பெருமையானது, உயர்வானது என்பது பொருளாகும்.

    மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும்.தை முதல் ஆனிமாத இறுதிவரை பகல்.ஆடிமுதல் மார்கழி மாத இறுதிவரை இரவு. இந்த இறுதியானது தேவர்களுக்கு விடியற்காலமாகும்.இதனால் மார்கழி என்பது தேவர்களின் விடியற் பொழுதாக இருப்பதால் அக்காலங்களில் காலை யில் எழுந்து குளித்து, அனைவரும் பூஜை வழிபாடுகளை ஆற்றுவது மிகவும் நலனை விளைவிக்கும் என்பது நம்பிக்கையாகும்.இதனால்த்தான் மார்கழி மாதம் தேவ காரியங்களுக்கு என்று ஒதுக்கப்பட்டது.

    இந்தக் காலத்தில்த்தான் மார்கழி நோன்பும் வருகிறது. மணிவாசகப் பெருமானின் திருவெம்பாவையும் பாடப்படுகிறது.ஆண்டாளின் திருப்பாவையும் பாடப்படுகிறது. திருப்பள்ளி எழுச்சியும் பாடப்படுவதும் குறிப்பிடத்தக்கது.தேவர்களுக்கு மட்டுமே உரிய மாதத்தில் வேறு எந்தவிதச் சிந்தனைகளுக்கும் இடம் கொடுக்கும் வண்ணம் ஏனைய விஷயங்களைச் செய்தல் தவிக்கப்பட்டதே அன்றி மார்கழி கூடாதது என்பதற்காகவோ மார்கழி பீடை பிடித்தது என்பதற்காகவே அல்ல என்பதை நாங்கள் யாவரும் நன்கு விளங்கிக் கொள்ளுதல் மிகவும் அவசியமாகும்.

    ” மாதங்களிலே நான் மார்கழி ” என கண்ணன் பகவத்கீதையில் சொல்லு வதை மனத்தில் கொண்டால் மார்கழியின் மகத்துவம் யாவருக்கும் விளங்கி விடும்.வடமொழியில் ” மார்கசீர்ஷம் ” என்று மார்கழி மாதம் அழைக்கப் படுகிறது.” மார்க்கம் ” என்றால் வழி என்பது பொருள். ” சீர்ஷம் ” என்றால் உயர்ந்த என்பது பொருள்.எனவே மார்கழி என்பது உயர்வுடையது என்பதை வடமொழியும் கூட எடுத்துக் காட்டுகிறது அல்லவா?

    திருவண்ணாமலையில் மணிவாசகரால் பாடப்பட்டதுதான்’திருவெம்பாவை”. திருவெம்பாவைப் பாடல்கள் அனைத்துமே கன்னிப் பெண்களால் பாடப்படும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றது. இப்படியாகப் பாடும் பாடல் வகைகள் சங்ககாலத்திலேயே இருந்திருக்கிறது.

    பரிபாடல், நற்றிணை, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய சங்ககால நூல்களில் மார்கழி நோன்பு பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன. இங்கு பாவை நோன்பு பற்றிய செய்திகளையும் காண்கின்றோம்.எனவே மணி வாசகப் பெருமானின் பாவையர் பற்றிய இந்தவகையானது முந்தியும் இருக்கலாம் அல்லது பிந்தியதாகவும் இருக்கலாம் என்ற கருத்தும் இலக்கிய ஆராய்ச்சியாளரிடம் காணப்படுகின்றது. எது எப்படி இருப்பினும் – மார்கழி நோன்பு என்பது திருவெம்பாவையுடன் இணைகின்றது என்பதே முக்கிய செய்தி எனலாம்.

    ” திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் ” என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும்.மேல்நாட்டிலிருந்து இந்தியா வந்த டாக்டர் ஜி.யூ. போப் என்னும் ஆங்கிலேயரின் மனத்தைத் தொட்டதே இந்தத் திருவாசம்தான். தனது மனத்தைப் பறிகொடுத்த திருவாசகத்தை ஆங்கில மொழியில் மொழிமாற்றம் செய்தார் என்பதை யாவரும் அறிகின்றோம்.அந்த அளவுக்கு ஆத்மாவையே உருக்கி ஆண்டவனின் நினைப்பை ஊட்டவல்லது திருவாசகம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்பது எல்லோரதும் அவிப்பிராயமாகும்.

    அந்தத்திருவாசகத்துக்குள் அமைந்திருப்பதுதான் ” திருவெம்பாவை ” ஆகும்.விடியற்காலையிலே எழுந்த கன்னிப்பெண்கள் வீடுதோறும் சென்று இறைவனது பெருமையினை எடுத்துச் சொல்லி இன்னும் ஏன் நித்திரை செய்கின்றாய் விரைவாக எழுந்துவா எல்லோரும் நீராடி இறைவனது புகழை ஏத்திப் பாடுவோம் என்று பக்தி ததும்ப அழைக்கும் விதத்தில் அமைந்ததுதான் ” திருவெம்பாவை ” என்பது குறிப்பிடத்தக்கது.

    திரு + எம் + பாவை என்பது திருவெம்பாவை ஆகும்.தெய்வத்தை நோக்கிய பக்தி நிலையில் நின்று பாடும் பாடல்கள் என்பதே இதன் அர்த்தம் எனவும் கொள்ளலாம்.ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ” ஏலோர் எம்பாவா ” என்றே முடிகின்றதைக் காண்கின்றோம்.இதனைப் பாவைப் பாட்டு என்றும் நீராட்டுப் பாட்டு என்றும் குறிப்பிடுவார்கள்.

    இளம்பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டும் எனக்கருதி மார்கழிமாதத்தில் நோன்பு நோற்பது வழக்கம்.இந்தப் பெண்கள் அதிகாலை எழுந்து இறைவனது புகழைப்பாடி நீராடச் செல்லும் போது ” திருவெம்பாவை ” பாடல்களைப் பாடிச்சென்றுள்ளனர் என்பதையே இங்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.இதற்கு ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவையும் சான்றாகி நிற்கிறதெனலாம்.

    இதனால்த்தான் சைவத்தலங்களில் ” திருவெம்பாவையும் ” வைஷ்ணவத் தலங்களில் ” திருப்பாவையும் ” மார்கழிமாதத்தில் பாடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    முதல் நான்கு பாடல்களும் அதிகாலையில் நீராடப் புறப்பட்ட பெண்கள் இன்னும் நித்திரைவிட்டு எழாத தமது தோழியரை எழுப்புவதாக , அதற்கு அப்பெண்ணானவள் மறுமொழி கூறுவதாகவும் அமைந்திருக்கின்றது.

    ஐந்தாம் பாடல் தொடக்கம் எட்டாம் பாடல் வரை உள்ளன நித்திரை விட்டெழும் பெண்கள் கூறும் விதமாக இருக்கின்றன.
    ஒன்பதாம் பாடல் முதல் இருபதாம் பாடல் வரை நித்திரை கலைந்த பெண்கள் இறைவனைத் துதித்துப் பாடும் வகையில் அமைந்திருக்கின்றன.

    ” ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி ” ” மாலறியா நான்முகனும் காணா மலையினை ” ” என்னானை என் அரையன் இன்னமுது என்று எல்லோமும் சொன்னோம் கேள் ” கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை”

    ” முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே – பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே ” “இவ்வானும் குவலயமும் எல்லோரும் – காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி”

    ” வேதப்பொருள் பாடி அப்பொருளாம் மாபாடி
    சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தாழ்பாடி
    ஆதி திறம்பாடி அந்தமாம் மாபாடிப் பேதித்து “

    ” விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் – கண்ணார் அமுதமுமாய் நின்றான் ” என்று திருவெம்பாவைப் பாடல்கள் – எல்லாம் வல்ல இறைவனைப் பற்றிப் பெண்கள் பாடிப் பரவுவதாக எமக்கொல்லாம் விளக்கி நிற்கின்றது எனலாம்.

    திருவெம்பாவையும் திருப்பாவையும் மார்கழியில் அதிகாலை நேரத்திலே பாடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே முதலில் சுட்டிக் காட்டப்பட்ட படி தேவர்களின் காலைப்பொழுதாக இருப்பது ஒருமுக்கிய காரணம் என்பதை நம்பிக்கை எனக்கொள்வோம். அதற்குப் பின்னும் பல காரணங்களும் இருக்கின்றன என்பதும் முக்கியமானதாகும்.

    அதிகாலையில் துயில் எழுவது என்பதே ஆரோக்கியத்துக் அடிப்படை அல்லவா? அதுவும் மார்கழியில் அதிகாலை துயில் எழுந்து நீராடுவது என்பது உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டதாகும். மார்கழியில் ஏற்படும் காலநிலை மாற்றமானது உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது என்று எமது முன்னோர்கள் அறிந்து வைத்திருந்தனர். அதனை அறிவுரை ஆக்கினால் யாவரும் புறந்தள்ளியும் விடக்கூடும் என்பதால் அதனை திருவெம்பாவையுடன் இணை த்துவிட்டனர் என்றே எண்ண வேண்டியிருக்கிறது.

    அதிகாலையில் விழித்தால் புத்தி தெளியும்.உடம்பில் இரத்தத்தில் நல்ல மாற்றம் ஏற்படும் நரம்புகழ் உற்சாகம் பெறும்.பித்தம் தணியும்.வாத, பித்தம் சமனிலை அடையும்.இவையெல்லாம் ஆரோக்கியம் சம்பந்தமானவை. இவையாயுமே திருவெம்பாவையினுள் அடங்கி இருக்கிறது என்பதே இங்கு மிகவும் இன்றியமையாத விஷயமாகும் என்பதை அறிதல் வேண்டும்.

    தமிழ்ப் பண்பு, அன்புணர்வு, ஒழுக்க நிலை, சமயமரபு,ஆத்மஞானம் அத்தனையும் திருவெம்பாவால் எமக்குக் கிடைக்கின்றது என்பதை யாவரும் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

    வெறுமனவே திருவெம்பாவைப் பாடாமல் அதனூடாக எங்களுக்குக் கிடக்கும் அரிய பெரிய விஷயங்களை அறிந்து கொண்டு கோவிலில் பாடுவோமேயானால் நிச்சயம் திருவெம்பா எமக்கெல்லாம் பெரும் பயன் உடையாதாகவே இருக்கும்.

    வைகறைப் பொழுதை ” பிரம்ம முகூர்த்தம் ” என்று குறிப்பிடுவதையும் நாம் நோக்குதல் வேண்டும்.

    மார்கழியை பகவத்கீதை போற்றுகின்றது. மார்கழியில்த்தான் “ஆருர்த்தா” தரிசனம் நடக்கின்றது. மார்கழியில்த்தான் ” சுவர்க்க வாசல் ஏகாதசி ” உற்சவமும் இடம்பெறுகிறது.சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் உகந்த தெய்வீக மாதமாக மார்கழி திகழ்கிறது என்பதையும் மனத்தில் கொள்ளுதல் முக்கியமானதே.திருவெம்பாவையும்,திருப்பாவையும், இறைவன் புகழ் சேர்ப் பதற்கு மார்கழியில்த்தான் கோவில்கள் தோறும் பக்தியுடன் பாடப்படுகின்றன என்பதும் மிகவும் முக்கிய கருத்து என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.எனவே மார்கழியில் இறைவன் புகழ்பாடி எங்களின் வாழ்வு வளம்பெறப் பிரார்த்திப்போம்.

    Share
  • இதயவீணை தூங்கும்போது பாட முடியுமா?

    — கவிஞர் காவிரிமைந்தன்.

    இதயவீணை தூங்கும்போது பாட முடியுமா?

    இருவர் உள்ளம் திரைப்படத்திற்காக கவிஞர் கண்ணதாசன் வரைந்த பாடல்! திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன் தந்த இசையமைப்பில் முகிழ்த்ததும், பி. சுசீலாவின் குரலில் பிறந்துவந்ததும் மறக்க முடியுமா? இதய வீணைதூங்கும்போது பாடமுடியுமா?

    இணைந்து வாழ வேண்டிய இதயங்கள் இடையே இடைவெளி! இதை எப்படி இதைவிட எளிமையாக இனிமையாகக் கூறிவிடமுடியும்? அன்பின் சுவாசம் தவழ வேண்டிய இல்லற வாழ்வில் அகண்ட பிரிவு மனரீதியாக அமைந்துவிடும்போது, முதல்வரிக்கு ஏற்றாற்போல் இரண்டாம் வரி, இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா? இப்படிச் சொல்லத்தான் எங்கள் கண்ணதாசன் வேண்டுமென்கிறோம்!

    அப்சல் என்கிற நண்பர் இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு இப்படியெல்லாம் பாடல்கள் இருக்கின்றனவா – இதுபோல் பாடல்கள் இருந்தால் எனக்குத் தாருங்கள் என்றார்! பாடல் என்றால் ஏதோ படத்திற்காக எழுதப்படுவது என்று நினைத்துக் கொண்டிருந்த அவரின் எண்ணத்தை இந்த ஒற்றைப் பாடல் திருப்பிப்போட்டது! சொற்களை வைத்து வாழ்க்கை சூத்திரத்தை வரைந்துகாட்டிய கவிஞரின் கைவண்ணத்தை வியந்து பாராட்டாத உள்ளங்கள் ஏது?

    நடிகர்திலகம் சிவாஜி் கணேசன் அபிநயசரஸ்வதி சரோஜாதேவி இருவரின் இணையற்ற நடிப்பில் இருவர் உள்ளம். ஒருமித்து வாழவேண்டிய உள்ளங்கள் ஒட்டாமல் வாழும்போது இதயவீணை பாட முடியுமா?

    இதயவீணை தூங்கும் போது0          இதயவீணை தூங்கும் போது1           இதயவீணை தூங்கும் போது

    இதய வீணை தூங்கும் போது…

    படம்: இருவர் உள்ளம்
    உடல்: கவியரசு கண்ணதாசன்
    உயிர்: கே. வி. மகாதேவன்
    குரல்: பி.சுசீலா
    ___________________________________

    இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
    இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
    உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா?
    உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா?
    விளக்கைக் குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா?
    வீட்டுக் குயிலை கூட்டில் வைத்தால் பாட்டு பாடுமா பாட்டு பாடுமா?
    (இதய வீணை தூங்கும் போது…)

    மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே
    சில மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே
    அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
    அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே
    அடிமை செய்தானே…

    உருகிவிட்ட மெழுகினிலே ஒளி ஏது?
    உடைந்து விட்ட சிலையினிலே அழகேது?
    பழுது பட்ட கோவிலிலே தெய்வம் ஏது?
    பனி படர்ந்த பாதையிலே பயணம் ஏது?
    இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?

    காணொளி: https://www.youtube.com/watch?v=HExEutUANAY

    https://www.youtube.com/watch?v=HExEutUANAY

    Share
  • படக்கவிதைப் போட்டி 35-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்துள்ள இப்புகைப்படத்தைப் இவ்வாரப் போட்டிக்குத் தேர்வுசெய்துள்ளார் திருமதி. சாந்தி மாரியப்பன். ஒளிஓவியருக்கும் தேர்வாளருக்கும் வல்லமையின் நன்றி.

     laughing dolls

    ’சிரித்து வாழவேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!’ என்ற புகழ்பெற்ற திரைப்பாடல் ஒன்றுண்டு. சிரித்துவாழ வேண்டும் என்றால் அதற்கு நாம் மெய்வருத்தி உழைக்கவேண்டியது அவசியமாகும். உழைப்பினால் வாராத உறுதிகள் உளவோ?

    நமது அடுத்த வேலை, இவ்வாரப் போட்டிக்குக் கவிஞர்கள் வரைந்திருக்கும் இனிய கவிதைகளைப் படித்துமகிழ்தல்!

    ***
    கொலு பொம்மைக்கும் குபேர பொம்மைக்கும் வேறுபாடு அறியாத அழகி ஒருத்தியின் செயலைச் சுவையான கவிதையாக்கியிருக்கிறார் திரு. கவிஜி.

    கொலு பொம்மை
    என்று நினைத்து
    பார்த்து ரசித்து
    சத்தமில்லாமல்
    சிரித்த
    குபேரன் பொம்மையை
    சற்று தள்ளி வைத்தாள்
    கொலு பார்க்க வந்த
    பக்கத்து வீட்டு
    அழகி…

    ***
    நம்முடைய செல்வ வளத்தை உயர்த்துதற்கு நவராத்திரி நாயகியர் புன்னகையோடு காத்திருக்க, நாம் ஏன் அந்நிய நாட்டு குபேர பொம்மைகளின் சிரிப்பை நாடவேண்டும்? என்று வினா எழுப்புகிறார் திருமிகு. புனிதா கணேசன். 

    நவரசத்தின் ஒரு ரசமாய் சிரித்திருக்கும்
    நவ சீன குபேர, குண்டு பொம்மைக் கூட்டம்!
    பொருள் பெருகும் பெரு நனைவு கொண்டு
    மருள் அடைந்த மாந்தர் கொலு வைத்தார்!
    அருள் பெருகும் மகா லக்ஷ்மி கடைக்கண்
    திருப் பார்வை பெற சிறப்பான நவராத்திரி
    இருக்கிறதே! மகத்தான செல்வம் ஈந்திடவே!
    இம்மைக்கும் மறுமைக்கும் என்றென்றும்
    செம்மையுடன் மனமொடுக்கி வழிபடினே
    ஏழேழு பிறப்பிற்கும் கிடைத்திடுமே மங்காது
    வாழ்வே துலங்கி நிற்கும் வையகம் வியக்க
    செழுமையுடன் செழிக்குமே செல்வம் சீராய்!

    ***
    ”சிரிப்பைத் தொலைத்துவிட்ட (மனிதர்களாகிய) நாங்கள், உழைக்க மனமில்லாது, சிரிக்கும் பொம்மைகளான நீங்கள் எமக்குச் செல்வத்தைக் கொண்டுவருவீர்கள் என்று (தவறாக) நம்பிக்கொண்டிருக்கின்றோம்” என்கிறார் திருமிகு. எஸ். நித்தியலட்சுமி.

    உன்னைப் போல் எங்களுக்கு
    சிரிக்க தெரியவில்லை சந்தோஷமாக!
    உன்னை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும்
    என்று நம்புகிறார்கள்!
    ஆனால் , நாள் முழுவதும் உழைத்தால் தான்
    செல்வம் பெருகும் என்று தெரியவில்லை நம்மவர்க்கு!!!!

    ***
    ’ஆசையே துன்பத்துக்குக் காரணம்’ என்ற புத்தரைச் சிலையாக்கிச் சிரிக்க வைத்துப் பணத்தாசையை மக்களிடம் விதைக்கும் மனிதனின் குணத்தை என்னவென்பது? என்று வேதனையுறுகிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அதிக ஆசை வேண்டாமெனும்
    அந்த புத்தரை மறந்துவிட்டே
    புதிதாய்ச் சிரிக்கும் புத்தரென்ற
    பேரை வைத்துச் சிலைசெய்தே
    அதிகமாய் விற்கும் மனிதர்தான்,
    அளவிலாச் செல்வம் பெருகிடவே
    துதிக்கக் குபேரன் எனச்சொல்லி
    தொடர்ந்தார் ஆசையின் பாதையிலே…!

    ***
    ’குபரே பொம்மைகளைக் கொலுவைக்கும் வேடிக்கைமனிதரை எண்ணி வயிறுகுலுங்கச் சிரியுங்கள்!’ என்று விளம்புகின்றார் திருமிகு. வேதா. இலங்காதிலகம். 

    கலகல சிரிப்பாய் பணமும்
    கலகலக்கட்டுமென சீன பொம்மையும்
    கல்வி கலைகளோடு கைநிறைய
    கவனமாய் கொலுவில் அலங்காரம்.

    வேடிக்கை மனிதரை எண்ணி
    கூடி வயிறு குலுங்க
    நீடித்துச் சிரியுங்கள்! பணமுடக்கம்
    ஓட தேடுவார் மனிதர் உங்களை.

    ***
    சிரிக்கும் புத்தர்களைக் கொலுபொம்மைகளாக்குவதை விட்டுவிட்டு அவர்கள் கற்பித்த சீரியவாழ்வை வாழத் தலைப்படுங்கள்! என்று நல்லுரை பகர்கின்றார் திரு. இளவல் ஹரிஹரன்.

     

    உழைக்கும் கைகளை நம்பாமல்
    அடிவயிற்றைத் தடவி எடுத்தால்
    அமோக செல்வம் பெற எண்ணும்
    அதிமூட மனிதர்காள்……..

    உள்ளங்கைகளை நம்பாமல்
    மேலே விரிந்த கைகளில்
    பணம் வைத்தெடுத்துப்
    பணம் பண்ண நினைக்கும்
    பகுத்தறியாச் செல்வங்காள்….

    […]

    பணத்தைத் தேடி
    வாழ்வை இழக்கும்
    பயனிலாப் பொழுதாய்
    தொலைத்தல் வேண்டாம்…..

    சிரிப்பாய்ச்சிரிக்கும்
    சீரற்ற வாழ்வில்
    தொலைந்த கணங்கள்
    திரும்ப மீளா……

    அன்றைய பொழுதை
    அன்றன்றே ரசிக்க
    ஒவ்வொரு கணமும்
    ரசித்து ரசித்து வாழும்
    அர்த்தமுள்ள வாழ்வை
    வாழ்ந்திடச் சொல்லும்
    ஜென் மகிழ்வை போதிக்கும்
    சிரிக்கும் புத்தர்கள்……
    வெறும் பொம்மைகளல்ல…..
    அன்றாட வாழ்வை வாழக்
    கற்றுக் கொடுக்கும்
    அற்புத குரு….ஆசிரியர்கள்!

    வணங்குவீர்…..
    வாழ்வைக் கண்டடைவீர்!

    ***
    கவிஞர்களே! சிரிக்கும் பொம்மைகளை வைத்துச் சிறப்பான வாழ்க்கைத் தத்துவங்களைச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள் உங்களுக்கு!

    அடுத்து நாம் காணவிருப்பது இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை!

    நாம் வாழும் உலகு அறத்தைச் சார்ந்து இயங்குகின்றதா? அல்லது…பணத்தைச் சார்ந்து இயங்குகின்றதா? என்றொரு பட்டிமண்டபம் வைத்தால் பணத்தின் பக்கமே நீதிபதி சாயவேண்டியிருக்கும். காரணம்… ’பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்று பொய்யாமொழிப் புலவரே  விளம்பிவிட்டாரே! அறச்செயல்கள் செய்வதற்குக்கூடப் பொருளின் துணையைத் தேடவேண்டியிருக்கின்றதே!

    ’குபேர பொம்மையை விற்றே குபேரனானவர்கள் உண்டு; ஆயினும் உண்மைப் புதையல்களை உழைப்பால் கண்டடைவீர்!’ என்று எளிய சொற்களில் எதார்த்தம் பேசும் இனிய கவிதை ஒன்று என் இதயம் கவர்ந்தது.

    அக்கவிதை…

    உலகம் முழுதும்
    உயிர்ப்பொருள் தெய்வம்
    பணம் பணமே !
    குபேரன் பொம்மைகண்டால்
    குஷிகளில் உள்ளம்
    குழந்தையாய் துள்ளும்
    கீரிப்பிள்ளை
    வீட்டிற்குள் வந்தால் கூட
    குபேரன் வருவதாக
    குறி சொல்லும்
    அறியா மக்கள்
    குறுக்கு வழியில்
    குபேரன் ஆகத்தான்
    குவலயமே விரும்புகிறது
    குபேரன் பொம்மையை விற்றே
    குபேரனானார்கள் பலர்
    உண்மைப் புதையல்கள்
    உழைப்பால்தான் வரும்
    நம்புங்கள் குபேரனை
    நம்பி உழையுங்கள்
    உவகையுடன் வந்திடுவான்
    குபேரனும்!

    இந்தக் கவிதையை யாத்திருக்கும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுத்திருக்கின்றேன். பாராட்டுக்கள் கவிஞரே!

     ***

    ”பொம்மையே…! நீ ஏன் வயிறு குலுங்கச் சிரிக்கிறாய்? பணத்தைச் செலவுசெய்து உன்னை வாங்கியிருக்கும் என் ஊதாரித்தனம் கண்டா? இல்லை…உழைத்தால் வாராத செல்வம் உன்னை அழைத்துவந்தால் வந்துவிடும் என நம்பவைக்கும் வியாபாரியின் தந்திரத்தைக் கண்டா?” என்று அழகிய வினாக்களை நம்முன் அடுக்குகின்றது ஒரு கவிதை!

    அக்கவிதை…

    இருந்த பணத்தை செலவுசெய்து
    உன்னை வாங்கி ஊதாரியாகிவிட்டதாக
    சிரிக்கிறாயோ?

    உழைத்தாலும் வாராத செல்வம்
    உன்னை வாங்கினால் பெருகுமென்று
    உன்னை உருவாக்கியவனின்
    விற்பனை தந்திரத்தை எண்ணி
    தொந்திக் குலுங்கச் சிரிக்கிறாயோ?

    சிரி சிரி...
    பொம்மைகளில் உயிரை வைத்திருக்கும்
    விஷயத்தில் நானும் குபேரன் என்னும்
    உண்மை புரியுவரை மட்டுமல்ல
    அதை விளையாடி உடைக்கும்
    குழந்தை செல்வத்தை பெருக்கிவிட்ட
    உண்மையையும் புரிந்து சிரி.

    திரு. மெய்யன் நடராஜின் இக்கவிதையைப் பாராட்டுக்குரியது என்று அறிவிக்கின்றேன்.

    புகைப்படங்களுக்கும் புதிய புதிய கவிதைகள் எழுதி அசத்தமுடியும் என்று அழகாய் நிரூபித்துவரும் கவிஞர்களுக்கு என் மனங்கனிந்த பாராட்டுக்கள் பல! தொடர்ந்து கவிதைகள் எழுதுங்கள்! உங்கள் சிந்தனைத் திறனை வளப்படுத்துங்கள்!

     

     

     

    Share
  • செவ்வாயில் நீரோட்டம்!

    ஒரு அரிசோனன்

    உவர்நீர்க்கொடுகள்-செவ்வாய்செவ்வாய்-ஆய்வு விண்கலம் அனுப்பி, நாசா[NASA], ஜே.பி.எல்[JPL], யுனிவர்சிட்டி ஆஃப் அரிசோனா இணைந்து அசோசியேடட் பிரஸ் மூலமாக வெளியிடப்பட்ட, தேதி குறிப்பிடப்படாத புகைப்படத்தில் காணப்பட்ட கருமையான கோடுகள் உவர்நீர் ஓட்டத்தினால் ஏற்பட்ட தடங்களே என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

    பதினான்கு கோடிமைல்கள் தொலைவிலுள்ள செவ்வாய்க்கோளின் கடுங்குளிரால் உறைந்துபோன தரையில் இப்பொழுது தண்ணீர் நிறைகிறது.  அந்த கிரகத்தில் உவர்நீர் ஓடுவதற்கான வலுவான சான்று இருக்கிறது என்று விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள். செவ்வாயில் உயிரினங்கள் இருக்கலாமோ என்று ஆராய்ந்தறிய இது ஒரு முக்கியமான அடிப்படையாக அமைகிறது.

    சமீபத்தில் வெளியிடப்பட்ட நேச்சர் ஜியோசயின்ஸ்[Nature Geoscience] என்னும் விஞ்ஞான இதழில் லுஜென்ர ஓஜ்ஹாவும், மேரிபெத் வில்ஹெல்மும், “நமக்குத்தெரிந்த உயிரினங்கள் வாழத் தண்ணீர் மிகவும் தேவையான ஒன்று.  செவ்வாயில் நீர் இருப்பதனால் வானுயிரியல், கனிம, நீரியல் விளைவுகள் ஏற்படுத்தும்;  எதிர்கால மனித ஆய்வுப் பயணங்களின் நிலமை மாறுதல் ஏற்படவும் வழிவகுக்கும்,” என்று எழுதியுள்ளார்கள்.

    மாபெரும் அறிவிப்பாக நாசாவினால் முழங்கப்படும் இது முற்றிலும் புதிதல்ல.  ஏனெனில் செவ்வாயில் தண்ணீரைப் பற்றிய ஆராய்ச்சி பல்லாண்டுகளாக விஞ்ஞானிகளின் கவனத்தைப் ஈர்த்திருக்கிறது.  பனி எரிமலைகளின் கண்டுபிடிப்பும் இவ்வாறே அவர்களை குதூகலப்படுத்தியுள்ளது.

    தொன்மையான் ஆற்றுப்படுகைகளில் உள்ள தடங்கள் மூலம் செவ்வாயில் ஒருகாலத்தில் தண்ணீர் நிறைந்திருக்கலாம் என்று வானுயிர் வல்லுனர்கள் ஊகித்துவந்திருக்கிறார்கள்.  நூறுகோடி ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சேறும் சகதியுமான, பழமையான பெருங்கடல்கள் அங்கு இருந்திருக்கலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

    உவர்நீர்க்கொடுகள்-செவ்வாய் 2செவ்வாயில் மேற்பரப்பில் வளைந்து நெளிந்து காணப்படும் அமைப்புகள் அங்கு மிகமிகப் பழங்காலத்தில், நெடுங்காலமாகத் தண்ணீர் ஓடியிருக்கலாம் என்பதையே ஊகிக்கவைக்கிறது.  குறைந்தபட்சம் பாக்டீரியா, இன்னும் எளிமையான உயிரினங்கள் வாழும் அளவுக்குத் தண்ணீர் இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

    தண்ணீர் ஏதோ ஒரு வடிவத்தில் செவ்வாயில் இன்னும் இருக்கிறது என்பது கடந்த சில ஆண்டுகளில் தெளிவாகியது.  அது அதிக அளவில், நிலத்தில் பனிப்படிமங்களாகவோ, துருவங்களுக்கருகே பெரிய பனிக்கட்டி ஆறாகவோ [glacier], விண்கல் பள்ளங்களிலும், மலை இடுக்குகளிலும் பெரிய பனிக்கட்டிப் பாளங்களாகவோ இருக்கலாம் என்றே எண்ணப்பட்டது.  உயிரனமில்லாத, ஒன்றுமே நடக்காத, வரண்டதொரு கோள் செவ்வாய் என்று இதுகாறும் நினைக்கப்பட்டுவந்த முன்னுதாரணம், “செவ்வாய் இன்னும் நீரினால் மாற்றியமைக்கப்பட்டுவரும் ஓர் உலகமே,” என்ற மாற்றத்தை அடைந்தததற்குக் காரணம், அங்கு தண்ணீர் இருக்கிறது என்ற அறிவே.

    செவ்வாயில் உயிர் தோன்றியிருந்தால், அது இன்னும் பிழைத்து வாழ்ந்துகொண்டிருக்கலாம் என்ற கருத்தை செவ்வாய் ஆய்வுத் திட்டப் பகுப்பாய்வுக் குழு [Mars Exploration Program Analysis Group] முன்வைக்கிறது.

    இரண்டாண்டுகளுக்கு முன்னர், 2013ல் நேச்சர் ஜியோசயின்ஸ் என்ற விஞ்ஞானப் பத்திர்கையில் வெளிவந்த கட்டுரையில் செவ்வாயின் நில வடிவமைப்பு கோள்நடுக்கோட்டின் அருகில் வியப்புக்கும் அதிகமான அளவு உவர்நீர் இருக்கிறது என்ற கருத்தை விஞ்ஞானிகள் முன்வைத்தனர். செப்டெம்பர், 2015ல் விடப்பட்ட அறிக்கையும் அதையே உறுதிசெய்கிறது.

    நாசா தலைமையகத்தில் நடந்த ஒரு செய்திக் கருத்தரங்கில், அதன் கோள் அறிவியல் இயக்குனர் [director of planetary science] ஜிம் கிரீன், “கடந்த காலத்தில் நாம் நினைத்துவந்ததைப்போல செவ்வாய் ஒரு வரண்ட கோள் அல்ல,” என்றார்.

    இதற்குமுன்னர் செவ்வாயில் நீரோட்டம் இருக்கிறது என்பது சூழ்நிலைச் சான்றாகவே {based on circumstancial evidence}வரையறுக்கப்பட்டது.

    புதிதாகக் கிடைத்த நிலவடிமைப்பை நிறப்பிறிகைத் தரவுகள்மூலம் ஆராய்ந்து, செவ்வாயில் நீருள்ள உப்புகள் இருப்பதைக் கண்டார்கள்.  இது பருவகால நீரோட்டமாகவிருக்கலாமென்று எண்ணவைத்தது.

    கடந்த அறிக்கையில், “நிறப்பிரிவு உள்வாங்குமுறையுடன் மிகவும் ஒத்துப்போகும் — எங்களால் கண்டுபிடிக்கப்பட  நீருள்ள உப்புகள் — மக்னீசியம் பெர்குளோரேட், மக்னீசியம் குளோரேட், சோடியம் பெர்குளோரெட் ஆகும்,” என்ற விஞ்ஞானிகள், “செவ்வாயில் காணப்படும் சாய்வுகொடுகள், அங்கு ஒரேகாலத்தில் நடக்கும் நீரோட்டத்தின் விளைவே என்பதை எங்களுடைய கண்டுபிடிப்புகள் உறுதிசெய்கின்றன,” என்றும் எழுதியுள்ளார்கள்.

    அங்கு காணப்படுவது உவர்நீர், நல்நீர் அல்ல என்று நம்பப்படுவதும் ஒரு உற்சாகத்தைத் தரும் ஒன்றேயாகும்.  அந்த உவர்நீர் உயிரினம் இருக்கக் கிட்டத்தட்ட துணையாகும் என்றே சுட்டுகிறது.

    “இந்தக் கண்டுபிடிப்பு செவ்வாயின் இந்த தன்னிகரில்லாத பகுதியில் ஆய்வுப்பயணம் மேற்கொள்ளவேண்டியதும் மேலும் வானஉயிரினவியல் இயல்பாய்வு செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது,” என்று அந்த அறிக்கை சொல்லுகிறது.

    எனவே, இக்கண்டுபிடிப்பு செவ்வாயைப் பற்றிய பெரிய கேள்வி ஒன்றுக்கு விடையளித்தாலும், மற்றபல கேள்விகளுக்கு வழிவகுக்கிறது.

    ஒருகாலத்தில் செவ்வாயில் மேகங்கள், பனிப்போர்வையால் மூடப்பட்ட மலைத்தொடர்கள், நல்நீர் ஏரிகள்  இவற்றுடன் ஒரு பெருங்கடலும் இருந்தது.  அத்தனை தண்ணீரும் செவ்வாயின் காற்றுமண்டலம் மெலிந்தவுடன் காலம் செல்லச்செல்ல சிதறடிக்கப்பட்டது.  அது ஏன் நிகழ்ந்தது என்று விஞ்ஞானிகள் பலவிதமான விளக்கம் அளித்துவருகிறார்கள்.

    அங்கிருக்கும் உவர்நீரில் எந்த அளவு உப்பு இருக்கிறது, அது எவ்வளவு குளிர்ந்ததாக இருக்கிறது என்று ஆராயவும், அத்தண்ணீர் செவ்வாயின் உயிரினங்களை மட்டும் வாழவைக்கிறதா என்பதோடு மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் அங்கு பயணிக்கும் மனிதர்களுக்கு ஒரு நீராதாரமாக அமையுமா என்றும் உறுதிசெய்யவும் விரும்புகிறார்கள்.

    ஜான் மேசி கிரன்ஸ்ஃபெல்டு என்ற இயற்பியல்துறை வல்லுநர் [physicist] சமீபத்தில் நடந்த  செய்தியாளர் கருத்தரங்கில் இவ்வாறு கூறினார்: “பூமியிலிருந்து வேறொரு இடத்திலுள்ள இன்னும் இருந்துவருகின்ற இயற்பியல் வளமுள்ள இருப்பிடமாகவே செவ்வாய் தோன்றுகிறது.  அங்கு அதற்கான வளங்கள் உள்ளன.”

    ***

    கட்டுரை/படங்கள் உதவி:

    Water in Mars, by Adiranne La France, The Atlantic Magazine, September 28, 2015

    http://www.msn.com/en-us/news/technology/water-is-flowing-on-mars/ar-AAeSOCo?ocid=spartandhp

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். அகிலவெளி மரண விண்மீன் அண்டக் கோளைச் சிதைக்கிறது

    White dwarf destroying a planet

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    +++++++++++++++++++++

    http://dai.ly/x3alb22

    http://www.dailymotion.com/video/x2067zr

    https://youtu.be/4Wx1HHoh0SA

    https://youtu.be/d4VajzbvQmY

    https://youtu.be/aFVwJZMC6Kw

    +++++++++++++

    அகிலவெளி அரங்கிலே
    முகில் வாயுவில் மிதக்கும்
    காலாக்ஸிகள் இரண்டு மோதினால்
    கைச்சண்டை புரியாது
    கைகுலுக்கிப் பின்னிக் கொள்ளும் !
    கடலிரண்டு கலப்பது போல்
    உடலோடு உடல்
    ஒட்டிக் கொள்ளும் !
    வாயு மூட்டம்
    தாவித் தழுவிக் கொள்ளும் !
    கர்ப்பம் உண்டாகி
    காலாக்ஸிக்கு
    குட்டி விண்மீன்கள் பிறக்கும் !
    இட்ட எச்சத்திலே
    புதிய கோள்கள் உண்டாகும் !
    ஈர்ப்புச் சக்தியால்
    விண்மீனைச் சுழல வைக்கும்
    காலாக்ஸி !
    கோள்களை நீள்வட்டத்தில்
    சுற்ற வைக்கும்
    விண்மீன் ஈர்ப்பு விசை !
    வெண்குள்ளி விண்மீன்
    சுற்றும் கோளைச் சிதைத்து
    விழுங்கி விடும்
    ஆவியாக்கி !

    +++++++++++++++++

    ajay

    ஒரு சிறு அண்டக்கோள் தீவிர ஈர்ப்பு விசையால் சிதைவாகி, கதிர்ச் சூட்டில் ஆவியாகிப் பாறைத் துணுக்குகள் ஒரு மரணப் பரிதி மேல் பொழிவதை, நாங்கள் முதன்முதலாய்க் கண்டு தெளிவு பெறுகிறோம். அந்த அரிய நிகழ்ச்சியைக் கண்டுபிடித்த தருணத்தில், அழியும் ஓர் வெண்குள்ளி [White Dwarf] விண்மீனைச் சுற்றி என்ன நேர்கிறது என்னும் அபூர்வக் காட்சி பளிச்செனத் தெரிந்தது.  அந்தக் கோளின்  சிதைவுத் திருப்பம், ஆழம், வடிவம் அனைத்தும் மறுக்க முடியாத கையொப்பங்கள். விண்வெளியில் ஒரு மரணப் பரிதி மண்டல முறிவைக் கண்டு வருகிறோம். அண்டக் கோள் சிதைந்து, விண்மீன் ஒளிக்கனலில் ஆவியாகி நிறை இழப்பதையும், அது மறைந்து தூசியாய் உறைந்து போவதையும், அது கடப்பதால் பரிதி ஒளி தடுக்கப் படுவதையும் காண்கிறோம்.

    ஆன்ரு வான்டன்பர்க் [Astrophysics Student, Harvard-Smithsonian Center, Cambridge, Mass]

    NASA Kepler Telescope

    NASA Kepler Telescope

    வெண்குள்ளி விண்மீன்கள் தம்மைச் சுற்றி வரும் பாறைத் துணுக்கு மிச்சங்களை விழுங்கி வருகின்றனவா என்று நாங்கள் கடந்த பத்தாண்டு காலமாக ஐயுற்று வந்தோம்.  இந்த ஆய்வுக் காட்சி எங்களுக்குத் தேவை யான மூலாதாரக் காட்சியே.   ஆயினும் நாங்கள் இந்த நிகழ்ச்சியின் வரலாற்றை ஆழ்ந்தறிய இன்னும் மேலான ஆய்வுப் பணிகள் செய்ய வேண்டும்.

    ஃபெர்கல் முல்லல்லி [K2 Mission Scientist, NASA Ames Research Center, California]

    சிதைந்து முறியும் அண்டக் கோள், சிதறும் துணுக்குகளின் பரிமாணம் டெக்கஸ் [Texas, USA] மாநிலப் பரப்பளவை ஒத்தது.  அந்த வடிவம் நமது பரிதி மண்டத்திலே பெரிய முரண்கோள் செரிஸைப் [Asteroid Ceres] போன்றது.  அந்த அண்டக் கோள் ஒரு மில்லியன் ஆண்டுக்குள் முழுவதும் அழிந்து போய்விடும்.

    நாசா கெப்ளர் K2 திட்ட ஆய்வுக் குழுவினர்.

    K2 Mission

    நாசா விஞ்ஞானிகள் அழியும் விண்மீன் முறித்து விழுங்கும் அண்டத்தைக் கண்டார்.

    2015 அக்டோபர் 21 ஆம் தேதி நாசா விஞ்ஞானிகள் கெப்ளர் விண்ணோக்கி மூலம் முதன்முதல் ஓர் அழியும் வெண்குள்ளி விண்மீன் [White Dwarf] தன்னைச் சுற்றி வரும் அண்டக்கோளைச் சிதைத்து, தீவிர ஒளிக்கனலில் ஆவியாக்கி விழுங்குவதைக் கண்டு பெருவியப்படைந்தார்.  அந்த மரண விண்மீன் தன் எரிசக்தி முழுதும் வற்றி 100 இல் 1 பங்காகக் குறுகி ஒரு வெண்குள்ளி ஆனது !  சிதையும் அண்டக்கோள் அழியும் விண்மீனை ஒருமுறைச் சுற்றும் காலம் [Orbital Period] 4.5 மணி நேரம்.  இத்துணை வேகமாய் மிக நெருங்கிச் சுற்றும் சிறு கோள், மரண விண்மீன் ஈர்ப்பு விசையாலும், ஒளிக்கனல் வெப்பத்தாலும் முறிக்கப் பட்டுத் துணுக்குகள் ஆவியாயின.  இச்சிதைவுகள் தொடர்ந்து, அண்டம் முழுவதும் அழிய ஒரு மில்லியன் ஆண்டுகள் ஆகும் என்று கணிக்கப் படுகிறது.  இம்முறைப்படி நமது சூரியனும் ஒருநாள் தன் எரிசக்தி முழுதும் இழந்து ஓர் வெண்குள்ளி ஆகி, புதன், வெள்ளி, பூமியைச் சிதைத்து விழுங்க சுமார் 5 பில்லியன் ஆண்டுகள் ஆகலாம் என்று கருதப்படுகிறது.

    வெண்குள்ளி விண்மீன் மிகச் சிறியதாய் இருப்பதால், அதைக் கடக்கும் அண்டக்கோள் மிகையான ஒளியை மறைத்து, காட்சியைத் தெளிவாய்ப் பதிவு செய்கிறது.   குறிப்பிட்ட இந்த வெண்குள்ளி [WD 1145+017] பூமி யிலிருந்து சுமார் 570 ஒளியாண்டு [Light year] தூரத்தில் உள்ளது.  அதைச் சுற்றும் அண்டக்கோள் சுமார் 520,000 மைல் [837,000 கி.மீ] தூரத்தில் விண்மீனை வலம்வருகிறது.  இச்செய்தி 2015 அக்டோபர் 21 ஆம் தேதி ஆங்கில இதழ் ‘இயற்கையில்’ [Nature] வெளிவந்துள்ளது.

    “நமது பால்வீதி காலாக்ஸி பக்கத்தில் நெருங்கும் ஆன்ரோமேடா காலாக்ஸியுடன் ஐந்து பில்லியன் ஆண்டுகள் கடந்து மோதப் போகிறது !  (எதிர்பார்க்கப்படும்) அந்த பிரபஞ்ச நிகழ்ச்சிக்குப் பிறகு வான மண்டலம் இரவில் எப்படித் தோன்றும் என்பது யாருக்கும் தெரியாது !”

    ஆப்ரஹாம் லோப் வானியல் பேராசிரியர், ஹார்வேர்டு பல்கலைக் கழகம் (Abraham Loeb)

    விண்மீன்களின் மூர்க்கத்தனமான வாயுத் தூசி இயக்க விண்வெளியில் பெரும்பானமையான காலாக்ஸிகள் மோதிக் கொந்தளித்து, ஒற்றை வடிவத்தில் முழுவதும் சேர்ந்து கொள்கின்றன !  பெரிய காலாக்ஸி சிறிய காலாக்ஸியுடன் பின்னிக் கொள்வது பொதுவாக விண்வெளியில் நேரும் ஒரு சாதாரண நிகழ்ச்சியே !

    டேனியல் கிறிஸ்ட்லைன் (Daniel Christlein, Astronomer Yale University)

    “காலாக்ஸிகள் முட்டிக் கொள்ளும் போது ஈர்ப்புச் சக்தியால் பாதிக்கப்பட்டுச் சிக்கலான ஒரு புதிய வடிவத்தில் உருவாகி விடுகின்றது.  முதலில் அவை இரண்டும் ஒன்றை ஒன்று சுருள் வடிவத்தில் சுற்றி வருகின்றன !  வாயுவும், தூசியும் பலவிதங்களில் பிணைந்து கருந்துளைகள் தோன்றவும், குவஸார்களைத் (Black Holes & Quasars) தூண்டவும் வழி வகுக்குகின்றன.”  (Quasar is a Quasi-Steller Object which appears Starlike but emits more energy than 100 Giant Galaxies).

    டாக்டர் ஆன்ரூ பங்கர் (Dr. Andrew Bunker Anglo-Australian Observatory)

    “கடந்த பத்தாண்டுகளில் வானியல் விஞ்ஞானம் மூன்று முறைகளில் முற்போக்கு ஆகியுள்ளது.  முதலாவது முன்னேற்றம் : விண்வெளியில் வெகு ஆழமாக நோக்கிக் காலாக்ஸிகளின் பூர்வீக நிலையை உளவ முடிகிறது !  வடிவில்லாத வாயுவாக இருந்து பிரபஞ்சம் எப்படிப் படிப்படியாக விருத்தியடைந்து பிரமாண்ட தோரணமாக விரிந்தது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது !  இரண்டாவது முன்னேற்றம் :  பேபி பிரபஞ்சம்  எப்படி இருந்திருக்கிறது என்பதற்கு எண்ணிக்கை மிக்கச் சான்றுகள் இப்போது நமக்குக் கிடைத்துள்ளன !  என்ன விதமான கலவைக் கூறுகளை (Ingredients) பிரபஞ்சம் கொண்டிருந்தது, எப்படி அது விரிந்து கொண்டு வந்துள்ளது என்பதை நாம் அறிய முடிகிறது.  மூன்றாவது முன்னேற்றம் :  பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததை விட இப்போது நாம் நோக்கும் இரவு வானம் மிக்க ஆர்வத்தைத் தூண்டும் ஓர் அற்புதமாகத் தெரிகிறது !

    ராயல் மார்டின் ரீஸ், வானியல் நிபுணர் (Royal Martin Rees) (Jan 2007)

    ஒளியில்லாத, காலாக்ஸிகள் உண்டாகாத, விண்மீன்கள் தோன்றாத ஒரு பிரபஞ்சத்தைக் கற்பனை செய்து பார்ப்போமா ?  மூல வாயுக்கள் கொந்தளித்து கண்ணுக்குப் புலப்படாத பிண்டத்தில் மூழ்கிய காலவெளிக் கருங்கடல் இது !  பெரு வெடிப்பு நேர்ந்து பேரொளி வீசி ஒருசில நூறாயிரம் ஆண்டுகள் கடந்து பிரபஞ்சம் அரை பில்லியன் வருடங்களாக இருள் யுகத்தில் (Dark Age) மூழ்கிக் கிடந்தது !  அதற்குப் பிறகு ஏதோ ஒன்று நிகழ்ந்து எல்லாமே மாறிவிட்டது !  அந்தப் புதிரான ஒன்று விண்மீன்களை உண்டாக்கியது !  காலாக்ஸிகளைப் படைத்தது !  மேலும் கோள்களை உருவாக்கியது !  புல், பூண்டு, விலங்கினம், மனித இனத்தைப் படைத்தது !  அந்த மகத்தான ஆதிச்சக்தி யாது ?  அகியவியல் புதிரான (Cosmology Puzzle) அந்த மூல காரணியை அறிய பல சிக்கலான கணனி மாடல்களை (Computer Models) விஞ்ஞானிகள் இப்போது வடித்து வருகிறார்கள் !

    ரான் கோவன் (Ron Cowan, National Geographic Magazine)

    “(பரிதிபோல்) கோடான கோடி விண்மீன்கள் கொட்டிக் கிடக்கும் வாயு, தூசி மயமான பால்வீதி காலாக்ஸியில் நாம் வசித்து வருகிறோம் !  சுமார் 2 மில்லியன் ஒளியாண்டு தூரத்துக்கு அப்பால் (நமது காலாக்ஸியை) நெருங்கி வரும் ஆன்ரோமேடா என்னும் காலாக்ஸி அசுர அளவிலும், சுருள் வடிவிலும் (Spiral Galaxy) பால்வீதியை ஒத்துள்ளது !  (இடைவெளியைக்) கணித்து வரும் போது சுமார் 3 பில்லியன் ஆண்டுகளில் இரண்டு காலாக்ஸிகளும் மோதிக் கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் கருது கிறார்கள் !  அப்படியானால் அந்த நிகழ்ச்சியில் என்ன நேரிடும் ?  பரிதியைப் போன்ற விண்மீன்கள் (ஒவ்வொன்றுக்கும் வலுவான ஈர்ப்புச் சக்தி இருப்பதால்) ஒன்றோடு ஒன்று அவை மோதிக் கொள்ள மாட்டா என்று சொல்லலாம்.  ஆனால் காலாக்ஸிகளின் பூத ஈர்ப்பு விசைகள் ஒன்றை ஒன்றை இழுத்து, சுருள் வடிவைத் திரித்து மாற்றி ஒரு பில்லியன் ஆண்டுகள் கடந்து ஒரு புதிய பெரிய நீள்வட்ட காலாக்ஸியாக (Elliptical Galaxy) உருவாகிவிடும் !”

    ஜான் டொபின்ஸ்கி (John Dubinski, University of Toronto, Canada)

    “பூதக்கணனிப் போலி இயக்கத்தில் (Supercomputer Simulation) பால்வீதி-ஆன்ரோமேடா மோதலை இட்டுப் பார்த்த பல ஊகிப்பு நிகழ்ச்சிகளில் ஓர் எதிர்பார்ப்பு மோதல் காட்சி (Possible Collision Scenario) இது : அந்தக் காட்சி அரங்கில் ஒவ்வொரு சுருள் காலாக்ஸியும் விண்மீன்கள் நிரம்பிய தட்டாக வைத்துச் சுற்றிலும் கோள வடிவுக் கூண்டில் கருமைப் பிண்டம் உள்ளதாக (Disk of Stars Surrounded by a Spherical Dark Matter Halo) எடுத்துக் கொள்ளப் பட்டது.  அந்தப் போலி இயக்கத்தில் 10 கோடிக்கும் மேற்பட்ட போலித் துகள்கள் (Virtual Particles) இடம் பெற்றன.  பால்வீதி காலாக்ஸி கீழிருந்து மேலே எழுந்தது !  ஆன்ரோமேடா சாய்வாக மேலிருந்து கீழ்நோக்கி நெருங்கியது.  காணப்படும் தளத்தின் அகலம் : ஒரு மில்லியன் ஒளியாண்டு தூரம்.  நிகழ்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட காலம் : ஒரு பில்லியன் ஆண்டுகள்.  மோதலின் கொந்தளிப்பில் ஈர்ப்பு விசைகளும், அலையடிப்புகளும் பூமியின் கடல் கொந்தளைப்பு போல் சிக்கலான விளைவுகளை உண்டாக்கி காலாக்ஸியை மாற்றி அமைத்தன !  ஒவ்வொரு காலாக்ஸி விண்மீன்களின் ஈர்ப்பு விசைகளும், கருமைப் பிண்டமும் பின்னி, ஊடுருவி, பெயர்த்து, திரித்து இறுதியில் ஒரு புதிய நீள்வட்ட காலாக்ஸி படைக்கப் பட்டது.”

    கார்டன் மையர்ஸ் (Gordon Myers’ Supercomputer Simulation)

    பரிதி மண்டலம் சுற்றும் நமது பால்வீதி காலாக்ஸி

    பால்வீதி மந்தையின் மில்லியன் கணக்கான விண்மீன்க¨ளைத் தனது பூர்வீகத் தொலைநோக்கியில் முதன்முதல் கண்டவர் இத்தாலிய விஞ்ஞானி காலிலியோ !  இப்போது பால்வீதி மந்தையில் 200 பில்லியனுக்கும் மேலாக விண்மீன்கள் சுற்றிக்கொண்டு வருகின்றன !  மேலும் பால்வீதியில் பரிமாணம் கூற முடியாத பேரளவில் அகிலமீனின வாயும் தூசியும் (Interstellar Gase & Dust) மண்டிக் கிடக்கின்றன.   பூமியி லிருந்து இரவில் வான்வெளியை நோக்கினால் பால்மய வண்ணத்தில் தூரிகையில் வரைந்தால் போல் தெரிவதால் அந்தப் பெயர் அளிக்கப் பட்டது !  சுருள் காலாக்ஸியான (Spiral Galaxy) நமது பால்வீதியின் ஒரு கரமான ஓரியன் வளைவில் (Orion Arm) நமது சூரிய மண்டலம் வசித்து வருகிறது !

    18 ஆம் நூற்றாண்டில் வானியல் விஞ்ஞானிகளான வில்லியம் ஹெர்செல் அவரது சகோதரி கரோலின் ஹெர்செல் (William Herschel & Caroline Herschel) இருவரும் பல்வேறு விண்மீன்களின் இடைத் தூரங்களைப் பல்வேறு திசைகளில் கணித்தனர்,  பால்வீதி காலாக்ஸி தட்டு போல் அமைந்த விண்மீன் முகில் என்றும் நமது பரிதி பால்வீதி மையத்தில் இருப்பதாகவும் கூறினார்.  1781 ஆம் ஆண்டில் சார்லஸ் மெஸ்ஸியர் (Charles Messier) வான வெளியில் மங்கல் பொட்டு ஒளிகளான (Faint Patches of Light) பல்வேறு நிபுளாக்களை பதிவு செய்து அவற்றை எல்லாம் சுருள் நிபுளாக்கள் (Spiral Nubulae) என்ற வகுப்பில் பிரித்தனர்.  20 ஆம் நூற்றாண்டில் வானியல் நிபுணர் ஹார்லோ ஸேப்லி (Harlow Shapely) கோள் வடிவில் உள்ள விண்மீன் கொத்துக்கள் (Globular Star Clusters) பரவி இருப்பதையும், அவை இருக்கும் தளங்களையும் அளந்து பால்வீதி மந்தையின் மையம், பூமியிலிருந்து 28,000 ஒளியாண்டு தூரத்தில் இருக்கிறது என்றும், விண்மீன் தோரணங்களான ஸாகிட்டாரியஸ், ஸ்கார்ப்பியோ (Constellations Sagittarius & Scorpio) இரண்டுக்கும் அருகில் உள்ளது என்றும், பால்வீதி மையம் தட்டாக இல்லாமல் ‘ஆப்பம் போல்’ (Pan Cake) நடுவில் தடித்த தென்றும் அறிவித்தார்கள் !

    மெஸ்ஸியர் கூறிய சுருள் நிபுளா பிரபஞ்சத் தீவுகள் அல்லது காலாக்ஸிகள் (Island Universe or Galaxy) என்று பின்னால் ஹார்லோ ஸேப்லி தர்க்கம் செய்தார்.  1942 இல் வானியல் விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் (Edwin Hubble) தனது புதிய மிகப் பெரும் 100 அங்குலத் தொலைநோக்கி மூலம் உளவித் தர்க்கங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

    பேபி பிரபஞ்சத்தில் நேர்ந்த காலாக்ஸிகளின் மோதல்கள் !

    பிரபஞ்சத்தில் நேரும் காலாக்ஸி மோதல்கள் பலவற்றைக் கண்கவரும் வண்ணப் படங்களில் ஹப்பிள் தொலைநோக்கி எடுத்துள்ளது !  அந்த ஹப்பிள் படத்தொகுப்பில் (Hubble Atlas) சில காலாக்ஸிகள் மோதுகின்றன !  சில காலாக்ஸிகள் பங்கெடுத்துப் பேரளவில் பின்னிச் சேர்ந்து கொள்கின்றன !  காலாக்ஸிகள் முட்டிக் கொள்ளும் போது ஈர்ப்புச் சக்தியால் பாதிக்கப்பட்டுச் சிக்கலான ஒரு புதிய வடிவத்தில் உருவாகி விடுகின்றது.  முதலில் அவை இரண்டும் ஒன்றை ஒன்று சுருள் வடிவத்தில் சுற்றி வருகின்றன !  வாயுவும், தூசியும் பலவிதங்களில் பிணைந்து கருந்துளைகள் தோன்றவும், குவஸார்களைத் (Black Holes & Quasars) தூண்டவும் வழி வகுக்குகின்றன.” (Quasar is a Quasi-Steller Object which appears Starlike but emits more energy than 100 Giant Galaxies).

    காலாக்ஸிகள் பின்னிச் சேர்ந்து கொள்ளும் போது விண்மீன்கள் வெடித்துப் பிறக்கின்றன !  அப்போது நீண்ட வாயு முகில் அலை வால்கள் (Tidal Tails of Gas & Dust) காலாக்ஸிகளைச் சுற்றி முளைக்கின்றன !  காலாக்ஸியில் பெரும்பகுதி வெற்றிடமாக உள்ளதால் அவை மோதிக் கொள்ளும் போது சிதைவடைவதில்லை.  பூர்வீக காலத்தில் பேபி பிரபஞ்சத்தில் பக்கத்தில் இருந்த காலாக்ஸிகளிடையே சேர்ப்புகள், கலப்புகள் பல நூறு மில்லியன் ஆண்டுகளாய் நிகழ்ந்து வந்துள்ளன.  இப்போது வானியல் நிபுணர் சுமார் ஒரு மில்லியன் காலாக்ஸிகளின் மோதலை அருகில் உள்ள பிரபஞ்சத்தில் காண்கிறார்கள்.

    ஆன்ரோமேடா காலாக்ஸி (Andromeda Galaxy or Messier Object # M31) பால்வீதி மந்தைக்கு அருகில் பூமிக்கு அப்பால் 2.2 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ளது.  பொதுவாக வானியல் நிபுணர் விண்வெளித் தூரங்களை “மெகாபார்செக்ஸ்” (Megaparsecs – Mpc) (One Mpc = 3.26 Million Light Years) (One parsec = 3.26 Light Years = Unit Distance Between Earth & Sun) அளவீட்டில் குறிப்பிடுகிறார்கள்.

    நமது பால்வீதியும் கடந்த பல பில்லியன் ஆண்டுகளாய்ப் பல சிறு காலாக்ஸிகளை இழுத்துத் தன்னுடன் சேர்த்துப் பின்னிக் கொண்ட ஒரு சேர்க்கை காலாக்ஸிதான் !  அதுபோல் நமது பூத அண்டை காலாக்ஸி ஆன்ரோமேடா பின்னொரு யுகத்தில் நமது பால்வீதியைப் பற்றித் தன்னுடன் சேர்த்துக் கொள்ளும் என்று நம்பப் படுகிறது !  ஆன்ரோமேடா காலாக்ஸி நமது பால்வீதி காலாக்ஸியை மணிக்கு 216,000 மைல் வேகத்தில் (348,000 Km/Hr) நெருங்கி வருகிறது !  இன்னும் 2 பில்லியன் ஆண்டுகள் கடந்து இரண்டும் பூத நீள்வட்ட வடிவத்தில் புதிய காலாக்ஸி யாக “மில்கோமேடா”  (Milky Way + Andromeda =Milkomeda) என்னும் பெயரில் நடமாடி வரும் !

    காலாக்ஸிகள் சேர்ந்து கொள்ள இரண்டு நிபந்தனைகள்

    ஒன்றை ஒன்று நெருங்கும் இரண்டு காலாக்ஸிகள் சேர்ந்து கொள்ள இரு நிபந்தனைகள் பூர்த்தியாக வேண்டும் !

    1.  அவை இரண்டும் பக்கத்தில் இருந்து ஒப்புமை நிலையில் ஒன்றை நோக்கி ஒன்று நகர்ந்து நெருங்கி வரவேண்டும் !

    2.  அவை இரண்டும் ஒப்புமை வேகத்தில் மெதுவாகப் பயணம் செய்து ஒன்றை ஒன்று நெருங்கி வரவேண்டும் !

    காலாக்ஸிகள் வெகு தூரத்தில் இருந்தால் அவற்றின் ஈர்ப்பாற்றல் விசை நலிந்து போய் ஒன்றை ஒன்று இழுத்துக் கொள்ள வலு இருக்க முடியாது.   அவை நெருங்கும் போது விரைவாகச் சென்றால் பற்றிக் கொள்ள முடியாது கப்பல்கள் இரவில் கடப்பது போல் நழுவிச் செல்லும் !

    ஒரே பரிமாணத்தில் இல்லாது வெவ்வேறு அளவில் உள்ள இரு காலாக்ஸிகள் மெதுவாக நெருங்கி வந்தால்,  பெரிய காலாக்ஸி, சிறு காலாக்ஸியைத் தன்வசம் இழுத்துக் கொண்டு தன்னுரு சிதைந்து மாறாமால் பார்த்துக் கொள்கிறது !  அதாவது பெருங்காலாக்ஸி சுருள் காலாக்ஸியாக இருந்தால் அதன் வடிவம் மாறுவதில்லை !

    ஏக அளவுள்ள, ஒரே மாதிரியான இரண்டு காலாக்ஸிகள் ஒன்றை நோக்கி ஒன்று நெருங்கும் போது, ஒளி வேடிக்கைகள் கிளம்பி ஏராளமான வாயுப் பிண்டம் சிதறி வால்களாய் நீண்டு வெளியே எறியப் படுகின்றன !  பிறகு அவையெல்லாம் ஈர்ப்புச் சக்தியால் வாயு முகிலாய் இழுத்துச் சுருக்கிப் புதிய விண்மீன்கள் பிறக்கின்றன !  அலங்கோலமான கொந்தளிப்புக்குப் பிறகு புதிய காலாக்ஸியில் சீரொழுக்கம் மீண்டும் (Re-order After Chaotic Condition) நிலைபெறுகிறது !

    பால்வீதிச் சீரமைப்பு பற்றி விஞ்ஞானிகள் அறிந்த விபரங்கள்

    நமது காலாக்ஸி பால்வீதி பல்வேறு சிறு காலாக்ஸிகள் சேர்ந்த ஓர் இணைப்புக் காலாக்ஸியாக விஞ்ஞானிகள் கருதுகிறார்.  பேபி பிரபஞ்சத்தில் முதலில் காலாக்ஸிகள் உருவாகும் போது பலச் சிறு பூர்வாங்க காலாக்ஸிகளைப் (Proto-Galaxies) பின்னிக் கொண்டு வடிவாகின என்று தெரிகிறது.  பால்வீதி காலாக்ஸி முதல் சில பில்லியன் ஆண்டுகளில் 100 உட்பட்ட சிறு பூர்வாங்க காலாக்ஸிகளைப் பிடித்து உருக்குலைத்துச் சேமித்து உண்டானது என்று விஞ்ஞானிகள் எண்ணுகிறார்.  மேலும் கடந்த சில மில்லியன் ஆண்டுகளாக 5 முதல் 11 சிறு காலாக்ஸிகளைப் பின்னிக் கொண்டது என்றும் விஞ்ஞானிகள் சான்றுகள் காட்டுகிறார்.  இம்மாதிரி காலாக்ஸி சேர்ப்புகள் பிரபஞ்ச விண்வெளியில் பெருத்த வான வேடிக்கைகளை நிகழ்த்துவ தில்லை என்றும் கவனித்துள்ளார் !

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – What Happens When Galaxies Collide ? & Will the Milky Way Merge with Another Galaxy (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20 Astronomy Magazine – What Secrets Lurk in the Brightest Galaxies ? By Bruce Dorminey (March 2007)
    21 National Geographic Magazine – Dicovering the First Galaxies By : Ron Cowen (Feb 2003)
    22 Astronomy Magazine – All About Galaxies [March 2008]
    23 Astronomy Magazine – Our Galaxy’s Collision with Andromeda -5 Billion Years A.D. Our Galaxy’s Date with Destruction By : Abram Loeb & T.J. Cox [June 2008]
    24 Milky Way – Andromeda Galaxy Collision By : John Dubinski (University of Toronto)
    25 Galaxies in Collision (http://spacescience.spaceref.com/
    26 On a Collision Course or Uniting as an Intergalatic Super System By : Chee Chee Leung [April 25, 2008]
    27 The Merger of the Milky Way & Andromeda Galaxies By : John Dubinski (University of Toronto) (Jan 2001).

    28. http://www.spacedaily.com/reports/Final_kiss_of_2_stars_heading_for_catastrophe_999.html  [October 22, 2015]

    29. http://www.spacedaily.com/reports/Cosmic_Death_Star_is_destroying_a_planet_999.html  [October 22, 2015]

    30. http://www.scientificamerican.com/article/dying-star-destroys-a-dwarf-planet/?WT.mc_id=SA_DD_20151022  [October 22, 2015]

    31.  http://www.jpl.nasa.gov/news/news.php?feature=4743  [October 21, 2015]

    32.  http://www.peoplespunditdaily.com/news/science/2015/10/22/nasa-k2-spacecraft-discovers-real-life-death-star-vaporizing-a-mini-planet/  [October 23, 2015]

    33.  http://keplerscience.arc.nasa.gov/K2/MissionConcept.shtml

    34.  http://www.onenewspage.com/video/20151022/3463138/Real-Life-Death-Star-Observed-Destroying-Planets-in.htm
    ******************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) [October 23, 2015]

    Real Life ‘Death Star’ Caught in the Act of Destroying a Planet

    Preview YouTube video Mysterious Planet Sized ‘Death Star’ Appears to ‘Refuel’ at the Surface of the Sun

    Mysterious Planet Sized ‘Death Star’ Appears to ‘Refuel’ at the Surface of the Sun

    Preview YouTube video Death Star Killing Planet 😀

    Death Star Killing Planet 😀
    Share
  • சிவபிரதோஷம்

    –மீ.விசுவநாதன் 

     

    arunachaleswarar-tiruvannamalai

     

    மலைமலையாய்ச் செல்வம் வந்தாலும் – அண்ணா
       –மலையானை என்றும் மறவாதே!
    அலையலையாய்த் துன்பம் வந்தாலும் – அந்த
       —அருணகிரி யானைத் துறவாதே! 

    மலைமலையாய் உறவு வந்தாலும் – அண்ணா
        –மலைஉறவை யென்றும் தள்ளாதே!
    அலையலையாய்க் கவிதை வந்தாலும் – அருணை
        –அழகனவன் அடியைத் தள்ளாதே! 

    மலைமலையாய்ப் பதவி வந்தாலும் – அண்ணா
        –மலைஉதவி யென்று நம்பிடுவாய்!
    அலையலையாய்ச் சிதறிப் போனாலும் – சிவன்
        –அன்பென்றே பணிவாய்க் கும்பிடுவாய் !

        (அரையடி வாய்பாடு: காய்,மா,காய்)

      

     

    Share
  • காலகாலன்

    இசைக்கவி ரமணன்

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    keshav

     

    “பயில்வான் இறந்தாலும் , பண்டிதனாய் வாழ்ந்த
    பயில்வோன் இறந்தாலும் பைசா -துயில்வோன்மேல்;
    வீடு வரையுறவு வீதி வரைமனைவி
    காடு வரைநெற்றிக் காசு”

     

    “சாந்த சொரூபியாய் ஆந்தையின் மீதமர்ந்த
    கோந்தை இவள்பேர்சொல் கேசவா; -தாந்திரிக
    அன்னையே வாஞ்சையாய் ஆரோ கணிக்கவா
    என்னையுன் வாகனமாய் ஏற்று”….கிரேசி மோகன்….

    Share