Blog

  • பாலும் பழமும் கைகளில் ஏந்தி …

    —கவிஞர் காவிரிமைந்தன்.

     

    Paalum_Pazhamum1

     

     

    1961ல் வெளிவந்த திரைப்படம் பாலும் பழமும். நடிகர் திலகமும் கன்னடத்துப்பைங்கிளி என்றழைக்கப்படும் சரோஜா தேவியும் போட்டி போட்டு நடித்திருக்கும் அற்புதக் காவியம்! விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரிசையில் அனைத்துப்பாடல்களும் அமரத்துவம் பெற்றவை! கவிஞரிடம் வார்த்தைகள் இப்படி வரிசையாய் வந்து காத்திருக்கும் என்று பலரும் பலமுறை சொல்கிறார்களே… அதற்கான சத்திய சாட்சியான பாடல்கள்!

    இன்றைக்குக் கூட இணையதளத்தில் ஒரு தொலைக்காட்சி நேர்முகத்தைக் காணும் பேறு பெற்றேன்! ஆம்.. கவிஞர் பஞ்சு அருணாசலம் அவர்கள் கண்ணதாசன் பாடல் எழுதிய தருணங்களைப் பற்றியெல்லாம் சுவைபட எடுத்துரைத்த காட்சியில் மெய்மறந்துபோனேன்!

    Paalum_Pazhamumகதையை முழுதாய் கேட்கும் பழக்கமில்லாமல்… எந்த இடத்தில் பாடல் இடம்பெற வேண்டுமோ அந்தக் காட்சியமைப்பை … அவ்விடத்துக் கதையை மட்டும் கேட்பாராம்! ம்… சரி… என்ன டியூன் போட்டிருக்கிங்க என்று இசையமைப்பாளர் பக்கம் திரும்புவாராம்! அடுத்த சில நொடிகளில் பாடல்… (ஏதோ முன்பே எழுதிவைத்ததை எடுத்துத் தருவதுபோல்) வந்து விழுமாம்! இதையும் தாண்டி இன்னும் பல படங்களில் கவிஞரே… ஒரு ஐந்து அல்லது ஆறு பாடல்கள் வேண்டும்… எந்த இடங்களில் என்பதை நீங்களே முடிவு செய்து எழுதித்தாருங்கள் என்கிற வகையினரும் உண்டாம்! கேட்க கேட்க ஆனந்தம் மேலிட்டது! ஒரு சூரியன்… ஒரு சந்திரன்… ஒரு கண்ணதாசன் என்றே எனக்குப் பட்டது!

    இதோ இந்தப் பாடல்.. படத்தின் பெயரைத் தாங்கி.. அன்பின் பூரணமாய் விளங்கிய மனைவி நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாய் இருக்கிறார்! அழகுநிலாவை மடியில் எடுத்து ஆனந்தத்தேன் ஊட்டும் கதாநாயகன் தன் பொறுமையால், பண்பட்ட நடிப்பால், அமைதியாய்… உள்ளம்உருகவைக்கும் உன்னத ஆற்றலால் உயிரூட்டமிக்க பாடல் தருகிறார்!

    பாடல்… அது கதையோடு இணைந்து நடந்து வருகிறது! வார்த்தைகள் ஒவ்வொன்றும் இயல்பானவையாக… சராசரி மனிதன் உச்சரிக்கும் எளிமையானவையாக அமைவதுதான் கண்ணதாசன் பாடலின் தனிச்சிறப்பு! இப்பாடலை இசையமைத்து எழுத வைத்தார்களா? அல்லது எழுதிவிட்டு இசையமைத்தார்களா என்று உறுதியாய் சொல்லமுடியாத அளவு பாடலும் இசையும் இணைந்து காட்சிதருகின்றன!

    கணவன் – மனைவி ஒருவரையொருவர் எப்படித் தாங்க வேண்டும் என்கிற இலக்கணம்காட்டும் திரைப்படம்! குறிப்பாக உடல்நலம் குன்றிடும்போது … காட்டவேண்டிய அக்கறை, பரிவு, பாசம், கருணை, இவைகளை எள்ளளவும் குறையின்றி இருவருமே நடிப்பில் பரிணமித்திருப்பது இப்படத்தின் முக்கிய அம்சமாகும்!

    உச்சமாய் கவிஞர் தொட்டுக்காட்டும் வரிகளைப் பாருங்கள்… ஈன்ற தாயை நான் கண்டதில்லை… எனது தெய்வம் வேறெங்குமில்லை… உயிரைக்கொடுத்தும் உனை நான் காப்பேன்… உதயநிலவே கண்துயில்வாயே…

    இல்லறவாழ்வில் இதயவீணை மனைவிதான் என்பதை நிரூபணம் செய்துவைக்கிற பாடலிது! இதயம் முழுவதும் அன்பில் ஆட்சிநடத்திடும் அன்புத் துணைவியை எண்ணி உருகிடும் கணவன் உச்சரிக்கும் அத்தனையும் அன்புமலர்களே!

    டிஎம்.செளந்திரராஜன் தனக்கே உரித்தான பாவணைகளுடன் பாடிய பாடலிது! அச்சரம் பிசகாத உச்சரிப்பிற்கு அவரைவிட இங்கே வேறு யார்? இயக்குனர் ஏ.பீம்சிங் அவர்களின் வெற்றிப்படைப்புகளில் பாலும் பழமும் பவித்ரமானது!

    பாலும் பழமும் கைகளில் ஏந்தி
    பவழ வாயில் புன்னகை சிந்தி
    கோல மயில் போல் நீ வருவயே
    கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே

    பிஞ்சு முகத்தின் ஒளியிழந்தாயே
    பேசிப் பழகும் மொழி மறந்தாயே
    அஞ்சி நடக்கும் நடை மெலிந்தாயே
    அன்னக் கொடியே அமைதி கொள்வாயே

    உண்ணும் அழகைப் பார்த்திருப்பாயே
    உறங்க வைத்தே விழித்திருப்பாயே
    கண்ணை இமைபோல் காத்திருப்பாயே
    காதற் கொடியே கண் மலர்வாயே

    ஈன்ற தாயை நான் கண்டதில்லை
    எனது தெய்வம் வேறெங்கும் இல்லை
    உயிரைக் கொடுத்தும் உனை நான் காப்பேன்
    உதய நிலவே கண் மலர்வாயே

    (பாலும்)

    ____________________________________________________
    படம்: பாலும் பழமும் (1961)
    பாடல்: கண்ணதாசன்
    இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
    குரல்: டி எம் சௌந்தரராஜன்

    காணொளி: https://www.youtube.com/watch?v=KBRKgeC_qZU

    http://youtu.be/KBRKgeC_qZU

    Share
  • இமெயில் காதல் …

    –ரா. பார்த்தசாரதி.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

    Love-Emailசுமதியும், சுரேஷும் ஒரே தெருவில் வசிப்பவர்கள். இருவரும் வெவ்வேறு கல்லூரி. அவர்களின் சந்திப்பே பஸ்சில்தான்.

    தினம் இருவரும் இமெயில் மூலமே தொடர்பு கொண்டு அவர்களுடைய சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வர். நாளடைவில் இமெயில் நட்பு காதலில் முடிந்தது.

    சுரேஷ் படிப்பை முடித்து அயல்நாட்டு வங்கியில் பணியில் சேர்ந்தான். சுமதியின் சம்மதம் பெற அன்புடன் அவன் அனுப்பிய வார்த்தைகள்.

    Ennodu-Mattum Anbudan Iniya Life-ல் இணைவாயா !

    Share
  • அகில உலகில் அணு ஆயுதப் போர்களின் அச்சமும், அணு ஆயுதக் குறைப்பிலே அகில தேச உடன்பாடுகளும்

     

    jay

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=d3oSS_FP-cA

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1MSKoSbqHq0

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=sgFYApuxZ0E

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lKcwYViygf8

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=sXwCRVtidZ4

     

    Russia and American treaties

    Gorbachev and Reagan

     

    பேரழிவுப் போராயுதம்
    உருவாக்கி
    மனித இனத்தின்
    வேரறுந்து
    விழுதுகள் அற்றுப் போக,
    விதைகளும் பழுதாக
    ஹிரோஷிமா நகரைத் தாக்கி
    நரக மாக்கி
    நிர்மூல மாக்கியது,
    முற்போக்கு நாடு !
    நாகசாகியும்
    நாச மாக்கப் பட்டது !
    புத்தர் பிறந்த நாட்டிலே
    புனிதர் காந்தி வீட்டிலே
    மனித நேயம்
    வரண்டு போன
    வல்லரசுகள் பின் சென்று
    பாரத அன்னைக்குப்
    பேரழிவுப்
    போரா யுதத்தை
    ஆரமாய்
    அணிவிக்க லாமா ?

    ++++++++++++++

     

     

    அணு ஆயுதத் தடுப்பு முயற்சிகளில் அகில நாட்டுச் சூழமைவில்  எவ்விதப் பலவீனமும் அனுமதிக்கப் பட வில்லை.   அந்தத் தடுப்புக் காலம்  இன்னும் முற்றுப் பெறவு மில்லை.   அச்சம் உண்டாக்கும் இந்த உலகில் அணு ஆயுதங்கள் யாவும் அபாயகர மானவையே !  அதே சமயத்தில் பிரான்ஸ் அவை தரும் பாதுகாப்பையும் இழக்க விரும்ப வில்லை.  நம்மை நேரிடை யாகவோ, மறை முகமாகவோ பாதிக்கக் கூடிய, பிரான்சின் எதிர்காலப் பாதுகாப்பு நிலைமையை நாம் தவிர்த்திடக் கூடாது.

    பிரான்காய் ஹொலாண்டே [Francois Hollande, French President]

    அணு ஆயுதங்கள் உலகைப் பாதுகாப்புக் களங்களாய் மாற்றாது பயங்கர தளமாய் ஆக்கிக் கொண்டு வருகின்றன.   பிரான்ஸ் அரசாங்கத்தின் அணு ஆயுதத் தகர்ப்புத் தளர்ச்சியை நாங்கள் வன்மையாய்க் கண்டிக்கிறோம்.  ஜனாதிபதியின் பேச்சு அகில நாட்டு மனத் துடிப்பு களைக் [Tension] குறைக்காது,  உலக அமைதிக்கு முரணான நிலைமையை உண்டாக்குகிறது.

    ஐகான், பிரான்ஸ் [ICAN – International Campaign to Abolish Nuclear Weapons]

     

     

    உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் !

    கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)

    “ஹைடிரஜன் குண்டு அணு ஆயுதச் சோதனைகள் ஆரம்பமாகி விட்டால் இனி பூமியில் வாழும் உயிரினங்கள் அழிவுக்கும், சூழ் மண்டலத்தில் கதிரியக்க நச்சுப் பொழிவுக்கும் விஞ்ஞான யந்திரம் பாதை விரித்து விட்டது என்று அர்த்தம் !”

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

    “எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகின்றது !  அதை அகில நாடுகள் உணர வேண்டும் !  அபாயங்களை அனைவரும் அறியப் பிறகு உலக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும் !  உடனே அப்பணியைச் செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை வலியுறுத்தி விரைவு படுத்துகிறோம்.  நாடுகள் இடையே எழும் தீராச் சச்சரவுகள் போரிடு வதால் ஒருபோதும் தீரப் போவதில்லை !  உலக நாடுகள் தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்”.

    பெர்டிரண்டு ரஸ்ஸல் (ஏப்ரல் 16, 1955)

     

     

    அணு ஆயுதத் தடுப்பு பற்றி பிரெஞ்ச் ஜனாதிபதியின் அறிவிப்பு:

    2015 பிப்ரவரி 19 இல் பிரெஞ்ச் ஜனாதிபதி செய்த அறிவிப்பில், உலகம் பயங்கரத் தளமாய் ஆகி விட்ட தென்றும்,  அதனால் பிரான்ஸ் பாதுகாப்பைத் தொடர்ந்து நிலைப் படுத்த அணு ஆயுதக் காப்பு முறை முக்கியம் என்றும் கூறினார்.   உடனே அதை எதிர்த்து மட்டம் தட்ட,  ஐகான் [ICAN – International Campaign to Abolish Nuclear Weapons] பிரான்ஸ் கிளை எதிர்ப்பாளர் மறுப்புரை ஒன்றை வெளியிட்டார்.   “அணு ஆயுதங்கள் உலகைப் பாதுகாப்புக் களங்களாய் மாற்றாது பயங்கரத் தளமாய் ஆக்கி விட்டன.   பிரான்ஸ் அரசாங்கத்தின் அணு ஆயுதத் தடுப்புத் தளர்ச்சியை  நாங்கள் வன்மையாய் கண்டிக்கிறோம்.  ஜனாதிபதியின் பேச்சு அகில நாட்டு மனத் துடிப்புகளைக் [Tension] குறைக்காது,  உலக அமைதிக்கு முரணான நிலைமையை உண்டாக்குகிறது,”  என்று குறிப்பிட்டார்.   2009 இல் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா உலகில் அணு ஆயுதங்களைக் குறைத்த பிறகு  முற்றிலும் நீக்கப் போவதாய் வாக்குறுதி அளித்துத் தளர்ச்சியுற்றதை, பிரெஞ்ச் ஜனாதிபதியின்  2015 பிப்ரவரி அறிவிப்பு மேலும் பலவீனமாக்கி யுள்ளது.

    ரஷ்ய-அமெரிக்கா ஊமைப் போர் [Cold War] கால உச்சத்திலிருந்து [70,000 – 80,000], அணுப்போர் ஆயுதங்களின் எண்ணிக்கைகள்  குறைந்துள்ளன !  தற்போது [2015 பிப்ரவரி] இன்னும் நீக்கப் படாமல் சுமார் 16,300 அணுப்போர் ஆயுதங்கள் உள்ளன.  அவற்றுள் 4000 இயக்கத் தகுநிலை ஏற்பாட்டில் இருக்கின்றன.  மற்றும் 1800 குறுகிய ஆணைத் தருணத்தில் ஏவிடத் தயாராக உச்ச எச்சரிக்கை []High Alert on Short Notice] நிலையிலும் உள்ளன.

     

     

    தற்போது உறுதி செய்யப் பட்ட முறையில் ஒன்பது உலக நாடுகளில் அணுப்போர் ஆயுதங்கள் இருப்பு தெளிவாகியுள்ளன. பிரான்ஸ், பிரிட்டன், சைனா, பாகிஸ்தான், இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா, ரஷ்யா, வட கொரியா ஆகியவை.  பிரான்சிடம் சுமார் 300 அணுப்போர் ஆயுதங்கள்,  16 அடிக்கடல் ஏவு  கணை அணுப்போர் ஆயுதக் கப்பல்கள் [Submarines], 54 வான் – தரை இடைநிலைப் பயண [Air to Surface Medium Range Missiles] ஏவு கணைகள் உள்ளன.

    அணு ஆயுதப் பெருக்கத்தை ஆரம்பித்த உலக விஞ்ஞானிகள் !

    அணு ஆயுதப் படைப்புக்கு ஐம்பது ஆண்டுகளாக நேரிடையாகவோ அன்றி மறைமுக மாகவோ வழி வகுத்தவர்கள், முக்கியமாக ஐந்து விஞ்ஞான மேதைகள்! முதலில் கதிரியக்கம் [Radioactivity] கண்டு பிடித்த மேரி கியூரி! அடுத்து செயற்கைக் கதிரியக்கம் [Artificial Radioactivity] உண்டாக்கிய அவரது புதல்வி ஐரீன் கியூரி! அதன்பின் அணுவைப் பிளந்து, முதல் தொடரியக்கம் [Nuclear Chain Reaction] புரிந்த என்ரிகோ ஃபெரிமி! இரண்டாம் உலகப் போரின் போது, ஹிட்லர் தயாரிக்கும் முன்னே, அமெரிக்க ஜனாதிபதியை அணு ஆயுதம் ஆக்கத் தூண்டிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்! முடிவில் போர் முடியும் தறுவாயில் பன்னாட்டு விஞ்ஞானிகளைப் பணி செய்ய வைத்து வெற்றிகரமாய் அணுகுண்டை உருவாக்கிச் சோதனை செய்த ராபர்ட் ஓப்பன்ஹைமர் !

    ஜப்பான் ஹிரோஷிமா நாகசாகியில் அணுகுண்டுகள் விழுந்து கோர விளைவுகள் நிகழ்ந்த பின் உலகின் வல்லரசுகளும், மெல்லரசுகளும் உடனே அணு ஆயுதங்களை ரகசியமாய் உற்பத்தி செய்ய முற்பட்டன ! 1945 இல் அமெரிக்கா ஆக்கியதை, ஒற்று மூலம் பிரதி அடித்து, 1949 இல் ரஷ்யா தனது முதல் அணுகுண்டைச் சோதித்தது ! அதன் பிறகு 1952 இல் பிரிட்டன், 1960 இல் பிரான்ஸ், 1964 இல் சைனா, 1974 இல் இந்தியா, 1998 இல் பாகிஸ்தான் போன்ற நாடுகள் அணு ஆயுதப் பந்தயத்தில் பின் தொடர்ந்தன !  இப்போது இஸ்ரேல், வட கொரியா ஈரான் ஆகிய நாடுகளும் அணு ஆயுத வல்லமை பெற்றுக் கொண்டு உலகைப் பயமுறுத்தி வருகின்றன ! உலக நாடுகளில் 115 தேசங்கள் முன்வந்து அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பு [Non Proliferation Treaty, NPT] உடன்படிக்கையை மதித்துக் கையெழுத்துப் போட்டுள்ளன! ஆனால் அர்ஜென்டைனா, பிரேஸில், சைனா, பிரான்ஸ், இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் ஆகிய பல நாடுகள் அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பில் கையெழுத்திட ஒருங்கே மறுத்து விட்டன !

    அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஐன்ஸ்டைன்

    இரண்டாம் உலகப் போரை விரைவில் நிறுத்த அணு ஆயுதத்தை உருவாக்கும்படி 1939 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்கலின் ரூஸவெல்ட்டுக்கு ஆலோசனைக் கடிதம் எழுதி அனுப்பியவர், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்!  அதுமுதல் அணு ஆயுத அரக்கன் உலகில் தோன்றி அவன் வமிசாவளி பெருகிக் கொண்டே போகிறது!  அணுசக்தி யுகத்தைத் துவக்கி, உலக சரித்திரத்தில் ஒப்பிலாப் பெயர் பெற்ற ஐன்ஸ்டைன் அணுகுண்டுகளின் பெருக்கத்தையும், அணு ஆயுத வெடிப்புச் சோதனைகளின் அபாயத்தையும், தடுக்க முடியாமல் கடைசிக் காலத்தில் மனப் போராட்டத்தில் தவித்தார்.

    ஐன்ஸ்டைன் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் 1955 ஏப்ரல் 16 இல் வேதாந்த மேதை, பெர்டிரண்டு ரஸ்ஸல் (Bertrand Russell) தயாரித்த “அணு ஆயுதப் போர்த் தடுப்பு” விண்ணப்பத்தில் ஒன்பது விஞ்ஞானிகளுடன் தானும் கையெழுத்திட்டு ஒன்றாகக் கூக்குரல் எழுப்பினார்!  “எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகின்றது!  அதை அகில நாடுகள் உணர வேண்டும் !  அபாயங்களை அனைவரும் அறியப் பிறகு உலக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும்!  உடனே அப்பணியைச் செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை வலியுறுத்தி விரைவு படுத்துகிறோம்.  நாடுகள் இடையே எழும் தீராச் சச்சரவுகள் போரிடுவதால் ஒருபோதும் தீரப் போவதில்லை !  உலக நாடுகள் தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்”.

    இவ்வாறு விஞ்ஞானிகளில் அமைதி மயவாதிகள் ஒருபுறம் அணு ஆயுதங்களை நிறுத்தம் செய்ய முற்படுகையில், அழிவு மயவாதிகள் மறுபுறம் ரகசியமாய் அணு ஆயுதங்களைப் பெருக்கிக் கொண்டு வந்தார்கள் !

    ஆக்கப் போவது அணு குண்டா ? அல்லது ஹைடிரஜன் குண்டா ?

    1942 ஆம் ஆண்டு அமெரிக்க மன்ஹாட்டன் திட்டத்தில் மறைமுக மாகப் பணிசெய்த விஞ்ஞானிகள் முதலில் அணுப்பிளவுக் குண்டை [Fission Bomb] ஆக்குவதற்கு முயன்ற சமயத்தில் அணுப்பிணைவுக் குண்டையும் [Fusion Bomb] உண்டாக்க ஒரு சிலருக்கு ஆர்வம் எழுந்தது! அந்தப் பயங்கரப் படைப்பை மிக்க வெறியோடு நிறைவேற்றப் பல்லாண்டுகள் காத்துக் கொண்டிருந்த விஞ்ஞான மேதை, எட்வர்டு டெல்லர் [Edward Teller]! தீவிர அந்த வேட்கையை எட்வெர்டு டெல்லருக்கு முதலில் தூண்டி விட்டவர், என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi]! சிகாகோப் பல்கலைக் கழகத்தில் முதல் ஆராய்ச்சி அணு உலையை அமைத்து அணுக்கருத் தொடரியக்கம் புரிய ஃபெர்மியின் கீழ் டெல்லர் பணி செய்யும் போது அவர்களுக்கு ஹைடிரஜன் குண்டைப் பற்றி ஓர் எண்ணம் உதயமானது! ஆனால் ஆரம்பத்திலேயிருந்து எட்வெர்டு டெல்லரை அதைரியப் படுத்தி, முதலில் ஆக்கப் போவது அணுப்பிளவுக் குண்டு, வெப்ப அணுக்கருக் குண்டு [Thermo Nuclear Bomb] அல்ல என்று அதிருப்தி உண்டாக்கியவர், மன்ஹாட்டன் திட்ட அதிபதி ராபர்ட் ஓப்பன்ஹைமர்!  ஹைடிரஜன் குண்டுக்கு மறு பெயர் வெப்ப அணுக்கருக் குண்டு! சூப்பர் பாம் [Super Bomb], ஹெச் பாம் [H Bomb] எல்லாம் ஒன்றுதான்! அடுத்து 1947-1952 ஆண்டுகளில் ராபர்ட் ஓப்பன்ஹைமர் அமெரிக்க அணுசக்திப் பேரவைக்கு அதிபதியாக [Chairman, Atomic Energy Commission] இருந்த சமயத்திலும் டெல்லர் மறுமுறை உயிர்ப்பித்த ஹைடிரஜன் குண்டு திட்டத்தை அங்கீகரிக்காது ஒதுக்கித் தள்ளினார்!

     

     

    இரண்டாம் உலகப் போர் முடிந்தபின் அமெரிக்கா, சோவியத் ரஷ்யா இரு நாடுகளுக்கும் இடையே ஊமைப் போர் [Cold War] மூண்டு பெரும் அளவில் வலுத்தது ! 1949 செப்டம்பரில் ரஷ்யா தனது முதல் புளுடோனிய அணுகுண்டைச் சோதனை செய்ததைக் கேட்டு, அதை எதிர்பாராத அமெரிக்கா அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தது! அமெரிக்காவின் மித மிஞ்சிய அணு ஆயுதப் பேராற்றல் சமமாகிப் போனதால், உடனே ஜனாதிபதி ட்ரூமன் மறைமுகமாய் வெப்ப அணுக்கரு ஆயுதம் உருவாக, எட்வெர்டு டெல்லருக்குப் பச்சைக் கொடி காட்டினார்! அதற்காகக் காத்துக் கொண்டிருந்த எட்வெர்டு டெல்லர், ரஷ்யாவுக்குப் பயம் உண்டாக்க ஓர் ராட்சத குண்டை உருவாக்கி, அமெரிக்காவை உலக நாடுகளில் உச்ச வலுத் தேசமாக ஆக்க உறுதி எடுத்துக் கொண்டார்! அந்த முயற்சியில் வெற்றி பெற்று 1952 நவம்பர் முதல் நாள் பசிபிக் கடலில் உள்ள எனிவெடாக் அடோல் [Enewetak Atoll] என்னும் தீவில் முதல் ஹைடிரஜன் குண்டு வெடித்துச் சோதிக்கப் பட்டது! ஏட்டிக்குப் போட்டியாக அடுத்து சோவித் ரஷ்யாவும் எட்டு மாதங்களுக்குள், 1953 ஆகஸ்டு 12 ஆம் தேதி ரஷ்ய விஞ்ஞானி பீட்டர் கபிட்ஸா [Peter Kapitsa] மூலம் உருவாக்கி, முதல் வெப்ப அணுக்கரு ஆயுத வெடிப்பச் சோதனையை வெற்றிகரமாகச் செய்து காட்டியது ! அந்த அணு ஆயுதப் பந்தயத்தைத் தொடர்ந்து 1957 இல் பிரிட்டன், 1967 இல் சைனா, 1968 இல் பிரான்ஸ் தமது முதல் ஹைடிரஜன் குண்டுகளைச் சோதனை செய்து, அமெரிக்கா, ரஷ்யாவுடன் சேர்ந்து ஐம்பெரும் வல்லரசுகள் என்று பெயர் பெற்றன !  இப்போது அமெரிக்கா, ரஷ்யா, (யுக்ரேய்ன்), பிரிட்டன், பிரான்ஸ், சைனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய ஏழு நாடுகளும் சோதனைகளை நடத்தி உலகத்துக்கு அணு ஆயுத நாடுகளாய்த் தம்மை உறுதிப்படுத்தி உள்ளன.

     


    அணு ஆயுதப் போர் மூன்றாவது உலகப் போராய் நிகழுமா ?

    1945 இல் அமெரிக்கா ஜப்பானில் முதன்முதலாகப் போட்ட இரண்டு அணுக்குண்டுகளை ஒருபோக்குத் தாக்குதலாகத்தான் கருத வேண்டும்.  பதிலுக்குத் தாக்க ஜப்பானிடம் அப்போது அணு ஆயுதங்கள் கிடையா.  இதுவரை உலகம் இருதரப்பு அணு ஆயுத யுத்தத்தைக் கண்டதில்லை ! ஆனால் இப்போது அணு ஆயுதமுள்ள ஏழு நாடுகள் இரண்டுக்குள் நட்புறவு குன்றி அப்படி ஓர் இருபுற யுத்தம் நிகழ்ந்து அணு ஆயுதங்கள் பயன்பட்டால் பயங்கரச் சிதைவுகள், அழிவுகள், கதிரியக்கப் பொழிவுகள் ஏற்படும்.  அவ்விரு நாடுகளுக்குச் சேதங்கள் நேருவதோடு அண்டை நாடுகளும் பாதிப்படையும்.  இந்தியாவுக்கும் பாகிஸ் தானுக்கும் இடையே போர் மூண்டால் இரண்டு நாடுகளும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டா என்பது கட்டுரை ஆசிரியர் கருத்து.  காரணம் இரண்டு நாடுகள் வேறானாலும் எலும்பும் சதையும் போல் நிலத்தாலும், நீராலும், இனத்தாலும், மதத்தாலும் ஒன்றாகச் சேர்ந்துள்ளன.  போர் மூண்டாலும் இரண்டு நாடுகளும் அணுவியல் தொழிற்கூடங்களை ஒன்றை ஒன்று தாக்கக் கூடாதென்று வாக்கு மொழிகள் எழுத்து மூலம் கூறியுள்ளன !  ஆனால் பாகிஸ்தானில் தற்போதுள்ள கொந்தளிப்பு நிலையில் எந்த மூர்க்கர் குழு நாட்டைப் பிடித்து ஆட்டப் போகிறது என்பது பெரும் ஐயப்பாட்டில் இருப்பதால் அடுத்து என்ன நடக்கும் என்று யூகிப்பது கடினம்.

     

     

    எத்தனை விதமான அணு ஆயுதங்கள் உள்ளன ?

    இரண்டு விதமான அணு ஆயுதங்கள் இதுவரைச் சோதனைக்குள்ளாகி ஆக்கப் பட்டுள்ளன.  நியூட்ரான் குண்டுகள் (Neutron Bombs) ஒருவித அணு ஆயுதமாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.  அணுப்பிளவு ஆயுதங்கள் (Fission Weapons), அணுப்பிணைவு ஆயுதங்கள் (Fusion Weapons) என்று இருபெரும் பிரிவில் பல்வேறு ஆற்றலைக் கொண்ட அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பட்டு பதுக்கி வைக்கப் பட்டுள்ளன !  கடந்த அறுபது ஆண்டுகளாக உருவான அணு ஆயுதங்கள் யாவும் ஓய்வாகத் தூங்கிக் கொண்டிருப்பதால் துருப்பிடித்து இப்போது முடக்கத்தில் தளர்ந்து போய்க் கிடக்கின்றன !  அவை யாவும் தூசி துடைக்கப் பட்டுப் புதுப்பிக்கப் படவேண்டும் !  அல்லது தற்போதைய கணினி யுகத் தொழில்நுட்பம் புகுத்துப்பட்டு புது விதமாக மாற்றப் பட வேண்டும்.

    பல பில்லியன் டாலர் மதிப்பில் படைப்பான பழைய அணு ஆயுதங்களை இப்போது ஏவினால் அவை பகைவரை நோக்கித் தாக்குமா அல்லது சண்டி மாடுபோல் படுத்துக் கொள்ளுமா என்று எழுப்பி விட்டால்தான் தெரியும் !

    அணுப்பிளவு ஆயுதங்களில் (அணுக்குண்டு) எரிசக்தியாக யுரேனியம் -235, புளுடோனியம் -239 ஆகிய கன உலோகங்கள் பயன்படுகின்றன.  மாறாக அணுப்பிணைவு ஆயுதங்களில் (ஹைடிரஜன் குண்டு) எளிய வாயுக்களான டியூடிரியம், டிரிடியம் (ஹைடிரஜன் ஏகமூலங்கள் ) (Deuterium & Tritium -Hydrogen Isotopes) உபயோகம் ஆகின்றன.  டியூடிரியமும் டிரிடியமும் பிணைந்து சக்தி உண்டாக்குவதற்குச் சூரியன் போல் பல மில்லியன் டிகிரி உஷ்ணம் தேவைப் படுகிறது.  அந்த உஷ்ணத்தை உண்டாக்க ஒரு சிறு அணுப்பிளவு இயக்கம் முதலில் ஹைடிரஜன் குண்டில் தூண்டப் படுகிறது.  அவ்விதம் முதல் உந்து யுரேனிய வெடிப்பில் உண்டாகும் பல மில்லியன் டிகிரி உஷ்ணத்தில் டியூடிரியமும் டிரிடியமும் பிணைந்து வெடிப்பு சக்தியை வெளியேற்றுகிறது.  பொதுவாக அணுப்பிணைவு ஆயுதம் அணு ஆயுதத்தை விட சுமார் ஆயிரம் மடங்கு அழிவு சக்தியை வெளியாக்கும் !  நியூட்ரான் குண்டு அணுக்குண்டு ஆற்றலில் பத்தில் ஒரு பங்கு பாதகம் விளைவிக்க வல்லது.

     

     

    பல்வேறு டன் டியென்டி ஆற்றல் கொண்ட அணு ஆயுதங்கள்.

    அமெரிக்கா ஹிரோஷிமாவில் போட்ட யுரேனியம் அணுக்குண்டு 15 கிலோ டன் டியென்டி ஆற்றலும், நாகசாக்கியில் போட்ட புளுடோனியம் அணுக்குண்டு 21 கிலோ டன் டியென்டி ஆற்றலும் கொண்டவை.  அணு ஆயுதங்களின் வெடிப்புப் பரிமாணம் டியென்டி அளவீட்டில் [(TNT) -Trinitrotoluene -CH3C6H2(NO2)3  (A Powerful High Explosive)] கிலோ டன் அல்லது மெகா டன் எண்ணிக்கையில் குறிப்பிடப் படுகிறது !  கிலோ டன், மெகா டன் டியென்டி என்று அளவீடு செய்யும் போது அணு ஆயுதங்களின் எடையைக் குறிப்பிடாது அவற்றின் வெடி ஆற்றலை ஒரு டியென்டி இராசயன வெடிக்கு ஒப்பிடப் படுகிறது.  ஒரு கிலோ டன் அணு ஆயுதம் 1000 டன் டியென்டி ஆற்றல் வெடிக்குச் சமம்.  ஒரு மெகா டன் அணு ஆயுதம் ஒரு மில்லியன் டன் டியென்டி ஆற்றல் வெடிக்கு இணையாகும்.  தற்போது வெப்ப அணுக்கரு ஆயுதம் (Thermonuclear Weapon OR Hydrogen Bomb) ஒன்று 25 மெகா டன் டியென்டி வெடி ஆற்றல் கொண்டதாக உள்ளது.  மேலும் இப்போது 50 மெகா டன் டியென்டி வெடியாற்றல் உள்ள அணு ஆயுதங்கள் தயாரிக்கப் படுகின்றன.  தற்போது பாதி உலகைக் கடந்து செல்லும் கட்டளை ஏவு கணைகளில் (Guided Missiles) அணுத்தாக்கு ஆயுதங்களை (Nuclear Strategic Weapons) ஏந்திக் கொண்டோ அல்லது ஆகாய விமானங்களிலிருந்து விடுவித்தோ நகரங்கள், தொழிற்துறை மையங்கள், இராணுவத் தளங்கள் ஆகியவை தகர்க்கப்படத் திட்டமிடப் படுகின்றன.

     

    Target Hiroshima Nagasaki Tokyo Fire Raid Average of 93
    Attacks on Cities
    Dead/Missing 70,000-80,000 35,000-40,000 83,000 1,850
    Wounded 70,000 40,000 102,000 1,830
    Population Density 35,000 per sq mile 65,000 per sq mile 130,000 per sq mile ?
    Total Casualties 140,000-150,000 75,000-80,000 185,000 3,680
    Area Destroyed 4.7 sq mile 1.8 sq mile 15.8 sq mile 1.8 sq mile
    Attacking Platform 1 B-29 1 B-29 334 B-29s B-29s
    Weapon(s) ‘Little Boy’ 15 kT

    (15,000 tons of TNT)’Fat Man’ 21 kT

    (21,000 tons of TNT)1,667 tons1,129 tons

     

     

    அணு ஆயுத வெடிப்புகளில் நேரும் அகோர விளைவுகள்

    1945 இல் அமெரிக்க போட்ட “லிட்டில் பாய்” அணுக்குண்டு ஹிரோஷிமா நகரை முற்றிலும் தகர்த்தது.  அடுத்துப் போட்ட “·பாட் மான்” அணுக்குண்டில் நாகசாக்கி நகரம் தரைமட்டம் ஆனது.  இவ்விரு நகரங்களில் ஏற்பட்ட விளைவுகளும், கதிர்வீச்சுக் காயங்கள், மரணங்கள், கதிரியக்க பொழிவுகளின் தீவிரம், நீண்ட கால விளைவுகள் அனைத்தும் மாதிரிப் பாடங்களாய் உலக நாடுகளுக்கு அறிவைப் புகட்டுகின்றன.  ஆயுதங்களின் கிலோ டன் டியென்டி, மெகா டன் டியென்டி வெடிப்பு ஆற்றலுக்கு ஏற்ப விளைவுகளின் தீவிரம் குறையவோ கூடவோ செய்கிறது.

    1.  அணுக்குண்டு வெடிப்பு அலைகள் (Bomb Blast):

    அணு ஆயுத வெடிப்பின் போது வெளியேறும் ஏராளமான வெப்ப அலைச்சக்தி சூழ்வெளிக் காற்றை அதிவிரைவில் சூடாக்குகிறது.  வெப்ப வாயு விரைவாக விரிவாகிப் பாய்ந்து பரவும் அதிர்ச்சி அலையாகத் தாக்குகிறது.  இவ்விதம் வெளியாவது பாதி அளவு வெடிப்புச் சக்தி.  அந்த விளைவில் குண்டு வீழ்ந்த இடத்துக்கு நெருங்கிய கட்டடங்கள் தரை மட்டமாக்கப் பட்டுப் பல மைல் தூரம் வீடுகள் தகர்ந்து பொடியாகும் !  அத்துடன் போட்ட இடத்தில் பெருங்குழி ஒன்றுதோண்டப்படும்.

    2.  வெப்ப சக்தி வெளியேற்றம் (Heat Wave Spread):

    அணு ஆயுத வெடிப்பால் ஒரு மில்லியன் டிகிரி உஷ்ணமுடைய ஒரு பெரும் தீக்கோளம் உண்டாகும்.  அந்தத் தீப்பிழம்பில் தகர்க்கப் படாத வீடுகள், கட்டங்கள் பற்றிக் கொண்டெரியும்.  வெப்ப வெளியேற்றம் முழு ஆற்றலில் மூன்றில் ஒரு பங்காக கணிக்கப் படுகிறது.  இந்த பயங்கரத் தீப்பிழம்பே ஒரு பெரு குடைக் காளான் முகில்போல் (Huge Mushroom Cloud) உயரே விரிந்து செல்கிறது.

     

     

    3.  கதிர்வீச்சு & கதிரடிப்பு (Direct Radiation Dose):

    வெப்ப வெடிப்போடு அதிதீவிரக் கதிர்வீச்சு எல்லாத் திசைகளிலும் பாய்ந்து உயிரனங்களைத் தாக்குகிறது.  அதில் முதலாக மோதும் நியூட்ரான்கள், காமாக் கதிர்களைத் “துரிதக் கதிர்வீச்சு”  (Prompt Radiation – Mostly Neutrons & Gamma Rays) என்று குறிப்பிடப் படுகிறது.  அதிதீவிரக் கதிரடிகள் (High Amount of Radiation Dose)  மனிதரையும், விலங்குகளையும் உடனே அல்லது சில தினங்களில் கொன்றுவிடும் !  குறைந்த அளவு கதிரடிப்புகள் கதிர் நோய்களை உண்டாக்கி மெதுவாகக் கொல்லும்.  பேரளவு கதிர்வீச்சுக் கதிரடி புற்றுநோய்களை (Cancer) உண்டாக்கும்.

    4.  தாமதக் கதிரெழுச்சி விளைவுகள் (Delayed Radiation Effects) :

    அணுப்பிளவு விளைவுகளால் பின்னெழும் கதிரியக்கப் பாதிப்புகள் மாந்தருக்கு நீண்ட காலம் கேடு தருபவை.  அக்கொடிய பாதிப்புகள் அணுப்பிளவு மூலகங்களின் “அரை ஆயுளைப்” (Half Life) பொருத்தவை.  அரை ஆயுள் என்பது கதிரியக்கத் தேய்வு முறையில் நிலையற்ற மூலகம் (Unstable Elements due to Radioactive Decay) படிப்படியாகத் தேய்ந்து நிறை பாதியாகும் காலத்தைக் குறிப்பது.  சீக்கிரமாகத் தேயும் நிலையற்ற மூலகம் சிறிது காலம் உயிரினத்தைப் பாதிக்கும்.  மெதுவாகத் தேயும் நிலையற்ற மூலகந்தான் நீண்ட காலம் உயிரினத்துக்குத் தொல்லை கொடுப்பது.  இந்த கதிர்வீச்சு வாயு மூலகங்கள் சூழ்வெளிக் காற்றில் பல நாடுகளுக்கு பயணம் செய்து மக்களைப் பாதிக்கின்றன.

    5.  கதிரியக்கப் பொழிவுகள் (Radioactive Fallouts):

    இறுதியாக நூற்றுக் கணக்கான மைல் காற்றில் கொண்டு செல்லப்பட்டு இந்த கதிரியக்கத் துணுக்குகள்தான் பொழிவுகளாகப் பூமியில் நிரந்தரமாகப் படிந்து விடுகின்றன.  நீண்ட அரை ஆயுள் உடைய மூலகத் துணுக்குகள் பூமியில் தங்கி நெடுங்காலம் மனித இனத்துக்குத் தொல்லைகள் அளிக்கின்றன.  அவையே நிலவளம், நீர்வளம், சூழ்வெளியைத் தீண்டி பல ஆண்டுகளுக்கு நாசம் புரிகின்றன.

     

    6.  விண்வெளிப் பாதிப்புகள் (Effects in Space):

    அணு ஆயுதச் சூழ்வெளிப் பாதிப்புகள் குண்டு போடும் போது எந்த உயரத்தில் வெடிக்கிறது என்னும் மேல்மட்டத்தைப் பொருத்தது.  அதிர்ச்சி அலைகளைப் பரப்பப் போதிய வாயு இல்லாமல் வெறும் கதிர்வீச்சுத் தாக்குதலே பெரும்பான்மையாக விளைந்திடும்.  வெப்ப சக்தி பரவிச் சென்று தீ மூட்டும் நிகழ்ச்சிகள் குன்றும்.  பொதுவாக நியூட்ரான், காமாக் கதிர்களின் தீங்கு மிகைப்படும்.

    7.  மின்காந்த அதிர்வு விளைவுகள் (Electromagnetic Pulse Burst):

    அணு ஆயுத வெடிப்பிலே மிகவும் விந்தையான விளைவு :  ஒரு பெரும் மின்காந்தத் துடிப்பு (Production of an Electromagnetic Pulse – A Powerful Burst of Electric Current) உண்டாவது !  கதிர்வீச்சில் பாய்ந்து செல்லும் காமாக் கதிர்கள் சூழ்வெளி வாயுவோடுச் சேரும் போது அவ்வித மின்காந்தத் துடிப்பு ஏற்படுகிறது !  அந்த மின்னோட்டம் மின்சார, மின்னியல் சாதனங்களை – கணினிகள், மின்சக்தி நிலையங்கள், தொலைக் கட்சி நிலையங்கள், ரேடியோ தொடர்புகள் போன்ற வற்றைப் பெரும் அளவில் பாதிக்கும்.

    பாரத அணு ஆயுதச் சோதனைகளைப் பற்றி ராமண்ணாவின் கருத்துக்கள்

    “பொக்ரான் பாலை வனத்தில் 1998 மே மாதம் பாரதம் இரண்டாம் தடவை செய்த, ஐந்து அடித்தள அணு ஆயுதச் சோதனைகள் இந்திய துணைக் கண்டத்தின் பொருளாதாரம், சூழ்வெளி, பாதுகாப்பு, அரசியல், பொறியல் துறை போன்றவற்றை, ஏன் வாழ்க்கையைப் பற்றிய நமது எண்ணத்தைக் கூட மிகவும் பாதித்துள்ளது !  பல நாடுகள் இதற்கு முன் பல தடவைச் சோதனைகள் செய்து, உலகப் பெரு நகரங்கள் யாவற்றையும் அழிக்க வல்ல பேரளவில் அணு ஆயுதங்களைச் சேமித்து வைத்துள்ளன !

    இந்த ஐந்து சோதனைகளால் உலக வல்லரசுகள் அதிர்ச்சி அடைந்து, அவை இந்தியாவுக்கு தீவிர எச்சரிக்கை விடுத்து, பயமுறுத்தியும் இருக்கின்றன !  இந்தியா நீண்ட காலப் போராட்டத்திற்குப் பின்பு எழுந்து நிற்கும் தனிச் சுதந்திர நாடு.  இந்த நாள்வரை இந்தியா எந்த விதியையும் மீறியதும் இல்லை !  அகில நாட்டு உடன்படிக்கை எதையும் முறித்ததும் இல்லை !  உலக நாடுகள் தயாரித்த அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பு உடன்படிக்கை (Non-Proliferation Treaty NPT), அணு ஆயுதத் தகர்ப்பு (Nuclear Disarmament) ஆகியவற்றில் இந்தியாவுக்கு நம்பிக்கை இருக்கிறது.

     

    (தொடரும்)

    *****************************

    தகவல் :

    Picture Credit : 1. Scientific American (December 2001) & (November 2007)  2. Time Magazine (Feb 14, 2005) 3. National Geographic (August 2005)

    1.  Scientific American Magazine :  India, Pakistan & the Bomb By : M.V. Ramana & A. H. Nayyar (December 2001)

    2.  Grolier Online :  Nuclear Weapons From Grolier’s The New Book of Knowledge By : Benoit Morel Garnegie Melton University (2003)

    3.  Time Magazine : The Merchant of Menace – A. Q. Khan Became the World’s Most Dangerous Nuclear Trafficker By : Bill Powell & Tim McGrirk (February 14, 2005)

    4.  National Geographic Magazine : Living With the Bomb By : Richard Rhodes (August 2005)

    5.  Scientific American Magazine :  Do We Need New Nukes ? A Special Report on the Nuclear Arsenals & Replacing Warheads (November 2007)

    6.  Nuclear Weapons – Wikipedia Report (December 6, 2009)

    7.  Neutron Bombs – Wikipedia Report (December 9, 2009)

    8.  http://www.history.com/topics/cold-war/cold-war-history/videos/reagan-meets-gorbachev [1985]

    9. http://www.greenworldinvestor.com/2011/07/08/pros-and-cons-of-nuclear-weapons-list-of-facts-and-debate/ [July 8, 2011]

    10.  http://healthresearchfunding.org/pros-cons-nuclear-weapons/  [April 28, 2014]

    11. http://www.spacewar.com/reports/Nuclear_deterrent_important_in_dangerous_world_says_Hollande_999.html  [February 19, 2015]

    ******************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  February 28, 2015

    Attachments area
    Preview YouTube video This 1946 film shows actual footage of the atomic bomb destruction of Hiroshima and Nagasaki Japan

    This 1946 film shows actual footage of the atomic bomb destruction of Hiroshima and Nagasaki Japan

    Preview YouTube video Hiroshima & Nagasaki After the Atomic Bombings: Documentary Film – People, Radiation

    Hiroshima & Nagasaki After the Atomic Bombings: Documentary Film – People, Radiation

    Preview YouTube video 10 Horrifying Facts About Nuclear Weapons

    10 Horrifying Facts About Nuclear Weapons

    Preview YouTube video [ #documentaries ] THE FACTS ABOUT NUCLEAR WEAPONS

    [ #documentaries ] THE FACTS ABOUT NUCLEAR WEAPONS

    Preview YouTube video THERMONUCLEAR WAR: Physics of the Atomic Bomb (720p)

    THERMONUCLEAR WAR: Physics of the Atomic Bomb (720p)

    Share
  • வையவனின் புதிய தொடர் ஆரம்பம்!

    avaiya

    சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்திருப்பவர் வையவன். இயற்பெயர் முருகேசன். வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் டிசம்பர் 24, 1939ல் பரமசிவம் – அமிர்தசிகாமணி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். கீழ்மத்தியதரக் குடும்பம். குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. தந்தை ஒரு சிறந்த வாசகர். அவர் வையவனுக்கு நல்ல நூல்களை அறிமுகப்படுத்தினார். குறிப்பாக ஆங்கில நூல்களை வாங்கிக்கொடுத்து படிக்க ஊக்கப்படுத்தினார். சிறுவயதிலேயே ஆங்கிலத்தில் புலமைபெற்றார் வையவன். தாயும் இவரது கற்பனை விரியக் காரணமானார். அவர் சொன்ன கதைகளும், சம்பவங்களும் இவரது கற்பனையை விரியச் செய்து எழுத்தார்வத்தைத் தூண்டின. குடும்பம் மீண்டும் சென்னையிலிருந்து வேலூரில் உள்ள திருப்பத்தூருக்குக் குடி பெயர்ந்தது. வையவன் சென்னையிலேயே தங்கினார். ஏதிலியர் இல்லத்தில் அவரது கல்வி தொடர்ந்தது.

    வாசிப்பார்வமும் எழுத்தார்வமும் இவரை எழுதத் தூண்டின. மாணவர்களுக்காகதமது 12ம் வயதில் ‘தமிழொளி’ என்ற கையெழுத்துப் பத்திரிக்கையைத் தொடங்கி நடத்தினார். அதில் கட்டுரை, சிறுகதைகளை எழுதியதோடு ஆசிரியராகவும் பொறுப்பு வகித்தார். பள்ளியிறுதி வகுப்பை நிறைவுசெய்த பின்னர் குடும்பத்தார் வசித்த திருப்பத்தூருக்குச் சென்றார். அங்குள்ள இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டார். வருவாய்க்காக நியூஸ் ஏஜெண்ட், கணக்கர், மளிகைக்கடை உதவியாளர், மலேரியா ஒழிப்பு சூபர்வைசர் எனப் பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். அவற்றில் கிடைத்த அனுபவங்கள் அவரது எழுத்துப் பணிக்கு மெருகூட்டின. ஓய்வுநேரத்தில் கதை, கட்டுரைகளை ’வையவன்’ என்ற புனைபெயரில் எழுதினார். முதல் சிறுகதை 1956ல் ‘அமுதசுரபி’ இதழில் வெளியானது. தொடர்ந்து விகடன், கல்கி, குமுதம் போன்ற இதழ்களில் சிறுகதைகள் வெளியாகிப் பரவலான வாசக கவனம் பெற்றன. எழுத்துப் பணிக்கு வேலை இடையூறாக இருந்ததால் அதிலிருந்து விலகினார். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். 1963ல் ஆசிரியர் வேலை கிடைத்தது. மேலும் கற்கும் ஆர்வத்தில் தொடர்ந்து பயின்று முதுகலைப் பட்டங்களையும், பட்டயங்களையும் பெற்றார். கூடவே சிறுகதை, நாவல்களை தீவிரமாக எழுதத் துவங்கினார்.

    இவரது முதல் புதினம் ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருதைப் பெற்றது. இரண்டாவது புதினமான ‘ஜமுனா’விற்கு பாரத ஸ்டேட் வங்கியின் இலக்கிய விருது கிடைத்தது. தொடர்ந்து நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகளை எழுதி குவித்தார். உயிரோட்டம், மணல்வெளி மான்கள், கன்னியராகி நிலவினிலாடி, வைரமணிக் கதைகள், ஜங்ஷனிலே ஒரு மேம்பாலம், போன்றவை இவரது சிறந்த படைப்புகளாகும். பாடிப்பறந்த குயில், நங்கூரம், செண்பக மரங்கள், தீபிகா போன்றவை இவரது குறுநாவல்களில் குறிப்பிடத்தகுந்தவை. நிசப்தகோபுரம், வெடிவழிபாடு போன்றவை இவரது கவிதை நூல்கள். கண்ணாடிச் சிறையில் சில கடல்கள், ஒரு புதிய பறவை போன்ற இவரது கட்டுரைத் தொகுதிகளும் முக்கியமானவை. ஆனந்த பவன், இடிபாடுகள் போன்றவை நாடகங்கள் ஆனந்தபவன் பாரத வங்கியின் சிறந்த நாடகத்திற்கான விருதைப் பெற்றது. ‘Loving Animals’ Nation builder Nehru’ போன்ற இவரது ஆங்கில நூல்களும் குபிப்பிடத்தகுந்தன. “வையவன் கதைகள் என்ற தலைப்பில்இரு பாகங்களாக வெளியாகியுள்ளன.

    நேர்மை, உண்மை, அறம், சமூக உயர்வு இவையே இவரது கதைகளின் பேசுபொருளாகும். வார்த்தை ஜாலங்களோ, மிகைப்படக் கூறுதலோ இல்லாமல் உள்ளதை உள்ளபடிச் சித்தரிப்பவை இவரது படைப்புகள். இவரது பல படைப்புகள் இளமுனைவர், முனைவர் பட்ட மாணவர்களால் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

    வையவன் ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளை நன்கறிந்தவர். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வைக்கம் முகம்மது பஷீரின் காமுகண்டே டைரி என்ற நாவலை ஒரு காதல் டைரி என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார். இவர் மலையாளத்திலிருந்து மொழிபெர்த்த மகாபலியின் மக்கள் (1982) என்ற நூல் தமிழக அரசின் சிறந்த மொழியாக்க நூலுக்கான பரிசினைப் பெற்றது. ஆண்மை, மாலை மயக்கம் போன்ற படைப்புகளுக்காக இலக்கியச்சிந்தனை பரிசினைப் பெற்றுள்ளார். இளஞ் சிறார்களுக்காக நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவரது விமர்சனக் கட்டுரை நூல்களும் குறிப்பிடத்தகுந்தன. மகாகவி என்னும் பாரதி பற்றிய விமர்சனக் கட்டுரை நூல் அமுதசுரபி – ஸ்ரீராம் அறக்கட்டளையின் விருதையும், பாரதி பண்பாட்டு மைய விருதையும் பெற்றிருக்கிறது. ஜெகசிற்பியனின் படைப்புலகம்பற்றி ஆராய்ந்து இவர் எழுதியிருக்கும் ஜெகசிற்பியன் ஒரு பார்வை நூலும் குறிப்பிடத்தகுந்தது. ஆழ்கடலியல் லேசர், அழிவில்லாத ஆற்றல், விண்வெளியும் மனித மேம்பாடும், நோயறியும் கருவிகள் போன்ற இவரது அறிவியல் நூல்கள் வாசக வரவேற்பைப் பெற்றவை. தனது அறிவொளித் திட்ட எழுத்தறிவுப் பணிக்காக மால்கம் ஆதிசேஷையா விருது பெற்றிருக்கிறார். இவரது கதை வசனத்தில் உருவான நம்ம ஊரு நல்ல ஊரு குறும்படம் கிராமப்புற மேம்பாடுபற்றிச் சித்திரிக்கும் சிறந்த குறும்படமாகும்.

    சென்னை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும் தமிழ்ப் பண்டிதராகவும் பணியாற்றிய வையவன், பணி ஓய்விற்குப் பின் தீவிரமாக எழுத்துப் பணியில் ஈடுபட்டு வருகிறார். தாமே ஆசிரியராக, பதிப்பாளராக இருந்து தனது படைப்புகளில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து 100 நூல்களாகக் கொண்டு வந்திருக்கிறார். தனது மகள் பெயரில் அமைந்த தாரிணி பதிப்பகம் மூலம் தமிழிலும், English Titles பதிப்பகம் மூலம் ஆங்கிலத்திலும் நல்ல பல நூல்களை வெளியிட்டு வருகிறார். பள்ளிப்படிப்பை முறையாக முடிக்க இயலாதவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பதற்காக மத்திய அரசின் ஜன் சிக்ஷன் சன்ஸ்தான் திட்டத்தின் ஆதரவுடன் ஐக்கியா டிரஸ்ட் என்ற அமைப்பை ஏற்படுது்தி மாணவர்களுக்கு உதவி வருகிறார். தனது பள்ளிப் பருவத்தில் எழுதத் துவங்கிய வையவன் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவருகிறார். அகவை எழுபத்தைந்தைக் கடந்த போதும் இளைஞர்களுக்கு இணையாக இணைய தளங்களிலும், வலைப்பூக்களிலும் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். ஐம்பதிற்கும் மேற்பட்ட வலைப்பூக்களில் பங்களித்து வருகிறார். innaiyaveli.blogspot.in என்பது இவரது வலைப்பதிவாகும்.

    மனைவி சகுந்தலா, மகள் தாரிணி, மகன் ஜீவகன்.மகனுடன் சென்னையில் வசித்துவரும் வையவன், புகழையோ, பிரபலத்தையோ விரும்பாது, தன்னை எதிலும் முன்னிறுத்திக் கொள்ளாது அமைதியாக எழுத்துப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். சிறந்த எழுத்தாளராக மட்டுமல்ல, சிறந்த மனிதராகவும் மதிக்கத்தக்கவர் வையவன்.

    ‘ஐந்து கை ராந்தல்’ புதினம் குறித்த மதிப்புரை

    “உலக இலக்கிய வரிசை யில் சேர வேண்டிய நாவல்”

    டாக்டர். திரு. வி.ஆனந்தமூர்த்தி
    ((M.A. (Tamil), M.A. (His.) M.A. ((Pol. Sc), M.A.(Eco), M.A. (Pub. Admn), M.A.(Soc.), M.A. (Joul.), M.A. (Phil.), M.A. (Pop.Edun.), M.A. (Gandhian), M.Com., M.Com., (Banking), M.Com., (Insurance). M.Ed., M.Lib.Sc.,Dip. in Telugu& Ph.D )

    எனது ஆய் வுப் படிப்பிற்காக நான் பல மொழிகளில் வெளிவந்த உலக நாவல்களை வாசிக்கவே ண்டி வந்தது. தமிழ் வாசக தளத்திற்கு பல்வே று அயல்நாட்டு நாவல்களை அறிமுகப்படுத்திய விமர்சகர் திரு. க.நா.சு ப்ரமணியம் அவர்கள் மொழிபெயர்த்துத் தந்த பல நாவல்களை அந்த ஆய்வின் பொருட்டு வாசிக்க வே ண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது
    அந்தப் பின்னணியில் உலக நாவல் இலக்கியம் எனக்களித்த மாபெரும் தரிச னத்தில் ஏற்பட்ட புலப்பாட்டில் திரு.வையவன் அவர்கள் எழுதியுள்ள ஐந்து கை லாந்தர் கையெழுத்துப் பிரதியாக என்னிடம் வந்தது.

    தமிழில் எத்தனையோ நாவல்கள் வந்திருக்கின்றன. தம் நாவல் கலைத்திறனையும் இலக்கிய மே தைமையையும் வெளிப்படுத்திய பல நாவலாசிரியர்கள் தொட்ட கதைக் கரு எதுவும் இல்லாத புதுமையாக வளர்ந்துவரும் ஒரு நகரத்தின் பல நூற்றாண்டுகளைப் பிரதிபலிக்கிற கருப்பொருள் வையவன் ஏற்ற கருப்பொருள்.

    இந்திய நாகரிகத்தை.. இந்திய நாட்டை வந்து தாக்கிய ஜைனம் பௌத்தம் இஸ்லாம் கிறிஸ்தவம் என்ற நான்கு மதங்களையும் சார்ந்த கதாபாத்திரங்களை வெவ்வே று நாட்டின் மக்களை ஒன்றுகூடி ச ந்திக்க வைத்து ஒரே நகரின் வாழ்க்கைக் களத்தில் அவர்களை நடமாடவிட்டு ஏற்கெனவே பெரும்பான்மையினராக உள்ள ஹிந்துக்கள் அவர்களை எப்படி தமக்குள் ஒருவராக ஏற்றுக்கொண்டு நேசித்தும் பகைத்தும் அதே சமயம் பின்னிப்பிணைந்து வாழ்கிற வாழ்க்கையைக் காட்டும் நாவல் இது.

    வையவனின் பாத்திரப்படைப்புகள், நாவல் கலை ,உணர்வுகள் உரையாடல்களையும் சூழ்நிலைகளையும் அவர் விவரிக்கும் பாங்கு தமிழுலகம் நன்கறிந்த சேதி. இந்த நாவலின் உலகு தழுவிய பார்வையால் மனித குலத்தைஏ மார்போ டு மார்பாகக் கட்டித தழுவிக்கொள்ளும் அவரது மே ன்மை எடுத்துக் காட்டாகி நிற்கிறது.

    ரஷ்ய எழுத்தாளனின் இதயம் மாணிக்க மணியாகத் திகழ்ந்தது என்று புஷ்கினைப் பற்றிக் கூற னே ர்ந்தபோ து கோகுல் கால் கூறியதை எண்ணிப்பார்க்கிறேன்

    இந்திய எழுத்தாளனின் அதுவும் தமிழ் எழுத்தாளனின் இதயம் எந்த மொழி இலக்கியத்திற்கும் இளைத்ததல்ல. நேசம் ம் தவிர அவர்களால் வே று எவ்விதமாகவும் மனிதர்களையோ தேசத்தையோ பார்க்க முடியாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த நாவல். கருத்தோ ட்டங்கள் நாவல் கலை நுணுக்கங்கள் நாளுக்கு நாள் மாறிக் கொண்தே போ னாலும் அறிவுத் தேட்டங்கள் கணத்திற்குக் கணம் புதுமைகளைப் படைத்துக் கொண்டே எ ன்றாலும் உயிர் நேசம் உயிர்கள் ஒன்றோடு ஒன்று காட்டும் பரிவு பற்று பாச ம் என்பன ஒருபோ தும் மாறாது மகர நட்சத்திரம்போல் ஒளி வீ”வதை நாவல் வடிவில்வையவன் புலப்படுத்தி இருக்கிறார்

    “‘பொறியினுள் சிக்கிய எலி, விரல் நகங்களால் கீறி அந்தத் தகரச் சட்டத்தைப் பிய்த்து விடுவது போல் முயற்சித்தது. பிறகு தன் முயற்சியின் வியர்த்தம் தனக்கே உறைத்தது போல் சட்டத்தின் வழியே பொருள் விளங்காத ஒரு பார்வையோடு பரிதாபமாக அவரைப் பார்த்தது.

    ஸ்ருதியில் அவர் மனதை ஈர்த்த அந்த சுலோகம் மௌனத்தின் கதவிடுக்கு வழியே நழுவி வந்த ஓசை போல்அவருக்கு ஞாபகம் வந்தது.

    பயாதஸ்யா க்னிஸ்தபம் பயாத்தபதி சூர்ய:
    பயாத்திந்திரஸ்ச வாயுஸ்ச மிருத்யுர் தாவதி பஞ்சம:

    ‘இதன் அச்சத்தினால் நெருப்பு எரிகிறது. சூரியன் வெப்பத்தைத் தருகிறான். இந்திரனும் வாயுவும் தத்தம் தொழிலைச் செய்கின்றனர். மரணம் உலகத்திலே உலாவுகின்றது..” என்று மனித வாழ்வின் அடிப்படைப் பிரச்னையான உயிர்வாழ்தல் பற்றிய அவர் பார்வை வெளிப்படுகிறது

    வேற்றுமையில் ஒற்றுமை என்ற அபூர்வமான பந்தப்பிணைப்பை விலகி நின்று அவர் தரிசித்து நம்மையும் தரிசிக்க வைக்கிறார்.

    இத்தகைய ஒரு நாவல் தமிழுக்கு லபித்தது அதிருஷ்டம் என்று தான்சொல்ல வேண்டும் உலக நாவல் இலக்கிய வரிசை யில் ஒன்றாக வைத்துப் போ ற்ற வே ண்டிய நாவல் இது.எனக்கு டால்ஸ்டாய் நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை

    Share
  • ஏமாற்றமளிக்கும் புதிய நிதிநிலை அறிக்கை!

    பவள சங்கரி

    தலையங்கம்

    நம்முடைய நிதியமைச்சர் அறிவித்துள்ள புதிய நிதிநிலை அறிக்கை மக்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துமா, ரூபாயின் மதிப்பையும் வேலை வாய்ப்பையும் அதிகப்படுத்துமா. இந்தியப் பொருளாதாரத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லுமா என்றால், அதற்கான பதிலாக முழு மன நிறைவுடன் ‘ஆம்’ என்று சொல்லும் நிலையில் இல்லை என்பதே நிதர்சனம்.

    இன்றைய நிலையில், பெட்ரோல் விலையில் ரூ. 3 விலையேற்றம், மேலும் சரிந்துள்ள ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் விலையேற்றம் போன்றவற்றால் மக்கள் மத்தியில் ‘இவர்கள் என்ன செய்யப் போகிறார்களோ’ என்ற சந்தேகம் வலுவாகிறது. மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிப் பணம் நாட்டு நலனுக்காக பல வகையிலும் பயன்படுத்தப்படுகிறது. இராணுவத்திற்கான செலவுகளை ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே செல்வது நாட்டின் பாதுகாப்பிற்குத் தேவையான ஒன்று என்றாலும், அதில் எத்தனை சதவிகிதம் தளவாடங்கள் உற்பத்திக்காகவும், வெளிநாட்டு கொள்முதலுக்காகவும் செலவிடப்படுகிறது என்பது தெரியவில்லை. வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்படும் தளவாடங்களுக்காக நாம் செலவிடும் தொகையும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் தளவாடங்களுக்காக எத்தனை சதவிகிதம் ஒதுக்கப்பட்டுள்ளது, அதன் மூலம் எத்தனை இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப் போகிறது, என்பதைப் பற்றியெல்லாம் குறிப்புகள் இல்லை. கல்வி வளர்ச்சி, ஆய்வுப் பணிகள் மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கான திட்டங்களுக்காக எத்தனை சதவிகிதம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதற்கான பதிலுமே மிகப்பெரிய கேள்விக்குறிதான். பாரதப் பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ என்ற ஆக்கப்பூர்வமான திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்கான ஒதுக்கீடும், அதன் பலாபலன்களும் கடைக்கோடியில் வாழுகின்ற இந்தியனுக்கும் பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது இந்த நிதிநிலை அறிக்கையில் தெளிவாக இல்லை. தாழ்த்தப்பட்ட பிரிவினருக்காகவும், சிறு முதலீட்டாளர்களுக்காகவும் துவக்கப்பட்டுள்ள ரூபாய் 20,000 கோடி அளவில் முதலீட்டுடன் ஆரம்பிக்கப்படவுள்ள ‘முத்ரா’ என்ற இந்த வங்கி கடைக்கோடியில் உள்ள தாழ்த்தப்பட்ட சகோதரருக்கு சென்றடையுமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ‘மகிளா’ என்ற மகளிருக்கான நலவாழ்விற்காக பெண்களால் நடத்தப்படும் வங்கி, ஏழை மாணவர்களுக்கான கல்விக் கடன் திட்டம் போன்றவைகள் போல இதுவும் ஏட்டுச் சுரைக்காய் ஆகிவிடுமோ என்ற அச்சமே மேலோங்குகிறது.

    பெரிய நிதி நிறுவனங்களும், மிகப்பெரும் தொழிலதிபர்களும் பயன் பெறும் வகையில் மட்டுமே இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது என்பதே மறுக்கவியலாத உண்மை. மிகப்பெரும் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருந்த நம் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் அரசு கீழ்த்தட்டு மக்களுக்கு அந்த நம்பிக்கையை இழக்கச் செய்திருப்பதோடு, பத்தோடு இதுவும் ஒன்று என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட திட்டங்களுக்கு பாராட்டுகளை அள்ளி வழங்கி, கீழ்த்தட்டு மக்கள் நிரம்பியுள்ள நம் இந்திய நாட்டின் பொருளாதார நிலை நின்ற இடத்திலேயே நிலையாக நிற்பதற்கு வழியமைக்காமல் இருப்பதும் நமது முக்கிய கடமையாகிறது.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    “விட்டத்து உறிப்பானை வெண்ணை வழங்கிட
    சட்டாம்பிள்ளை (LEADER ) போல்முன் செல்வோனை
    சட்டத்துள் -சிற்பமாய் வைத்தான் சகாதேவன் போல்கேசவ்
    கற்பனையின் அற்புதம் காண் “….கிரேசி மோகன் ….

    Share
  • காலம்

    மீ.விசுவநாதன்

     

    sea

    ஆர்பரிக்கும் பேரருவி ஆளோடும் ஆடுமே
    சேர்த்து அடித்துடன் சீறியே பாயுமாம் ;
    தீர்ப்பை இறைவனும் தீம்பின்றிக் கூறுவான்
    சீர்மதி கொண்டோன் சிறப்பு .

    Share
  • அடித்தாலும் கணவன், மிதித்தாலும் கணவன்

    — நாகேஸ்வரி அண்ணாமலை.

     

    domestic-violenceபிப்ரவரி 28-ஆம் தேதியிட்ட நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த செய்தியின்படி அமெரிக்காவில் ஒரு வழக்கு நடந்து முடிந்திருக்கிறது. ஒரு காதலன் (ஆங்கிலத்தில் உள்ள ‘boy friend’-ஐ எப்படித் தமிழில் குறிப்பிடுவது என்று தெரியவில்லை), இந்தக் கதையில் உள்ளவன் வழக்கமான boy friend கூட இல்லை. மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கும்போதே இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறான்) தன் காதலியை (வழக்கமான காதல் தோழி… ‘girl friend’ இல்லை.) தாறுமாறாக அடித்திருக்கிறான். அவள் வலியால் துடித்துக்கொண்டு அப்பார்ட்மெண்டிற்கு வெளியே ஓடிவந்து படிக்கட்டின் மேல் உட்கார்ந்து அழுகொண்டிருந்திருக்கிறாள். பக்கத்து வீட்டுக்காரர் வெளியே ஓடிவந்து பார்த்து உடனே காவலர்களை அழைத்திருக்கிறார். அவர்கள் வருமுன்பே தாமஸ் (அதுதான் காதலனின் பெயர்) அலிஸனை (அலிஸன் என்பது காதலியின் பெயர்) குளித்துவிட்டு அவள் உடம்பின் மீதுள்ள ரத்தக் கறைகளை அகற்றும்படி கூறியிருக்கிறான். அப்பார்ட்மெண்டின் வாசலிலிருந்து படிக்கட்டு வரை வழிந்திருந்த ரத்தக் கறைகளைத் துடைத்தெடுத்திருக்கிறான்.

    காவலர்கள் வந்து நடந்தது என்னவாக இருக்கும் என்று ஓரளவு ஊகித்து இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்திருக்கிறார்கள். அன்று அவள் என்ன சொன்னாள் என்று தெரியவில்லை. அவளுடைய உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர், மனைவிகளைத் துன்புறுத்தும் கணவன்மார்களின் செயல்களை ஆராயும் ஒரு நிபுணர் ஆகியவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து விசாரித்தார்கள். அலிஸன் ஒரு சாட்சியாக வர மறுத்துவிட்டாள். எல்லோருடைய கருத்துகளையும் கேட்டுவிட்டு நீதிபதி தாமஸை குற்றவாளி என்று தீர்மானித்திருக்கிறார். தாமஸுக்கு ஒன்பது ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம்.

    தாமஸுக்குத் தண்டனை வழங்கியதன் மூலம் நீதிமன்றம் தனக்குப் பெரிய தீங்கு இழைத்திருக்கிறது என்று அலிஸன் புலம்பியிருக்கிறாள். தாமஸ் தனக்குத் தீங்கு எதுவும் இழைக்கவில்லை என்றும் அவனுக்குத் தனடனை வழங்கியதன் மூலம் அவளுடைய வாழ்க்கையே பாழடைந்துவிட்டதாகவும் தன்னுடைய உயிர் நண்பனைச் சிறைக்கு அனுப்பியதன் மூலம் தான் அவனை இழந்துவிட்டதாகவும் தான் அவனுடன் வசித்துவந்த அப்பார்ட்மெண்டிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும் அழுதிருக்கிறாள்.

    domestic-violence2மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கும் ஒருவனோடு கள்ளத் தொடர்பு வைத்துக்கொண்டு அவனைத் தன் உண்மை நண்பனாக ஏற்றுக்கொண்டு அவன் தன்னை அடித்துத் துன்புறுத்தியும் அவனை நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்லாமல் பக்கத்து வீட்டுக்காரர் மூலம் அவன் காவலர்களால் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோதும் அவன் தன்னைத் துன்புறுத்தவில்லை என்று கூறிய அலிஸனின் வாதத்தைக் கேட்ட நீதிபதி “தீங்கிழைக்கப்பட்ட (victim) அலிஸனே தாமஸ் தனக்குத் தீங்கிழைக்கவில்லை என்று கூறினாலும், அது என்னைப் பொறுத்தவரை இந்த வழக்கிற்குத் தொடர்பற்ற, பொருத்தமில்லாத, சம்பந்தமில்லாத விஷயம்” என்று கூறியிருக்கிறார். அவர் எப்பேர்ப்பட்ட நீதிபதி! எப்பேர்ப்பட்ட தீர்ப்பு!

    அமெரிக்காவில் குடும்பங்களில் நடக்கும் வன்முறைச் செயல்களுக்கு (அநேகமாக ஆண்கள் பெண்களைத் துன்புறுத்தும் விஷயங்களுக்கு) மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்; பெரிய தண்டனையும் கொடுக்கிறார்கள். ஒரு முறை நான் கீழே விழுந்து என் வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்குச் செல்ல நேரிட்டது. என்னை மருத்துவர் வந்து பரிசோதிக்கும் முன்பே “வீட்டில் உங்கள் கணவர் உங்களைத் துன்புறுத்தி இப்படி ஏற்பட்டதா?” என்று கேட்டார்கள். அந்த வேதனையிலும் எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. இது அமெரிக்காவில் மாமூலான விஷயம். பெண்கள் காயம் பட்டு வந்தால் அவர்களைக் கணவனோ மற்ற ஆண்துணையோ அவர்களை துன்புறுத்தியிருக்கலாம் என்று முதலில் நினைக்கிறார்கள். அப்படி நடந்திருந்தால் அதற்குரிய தண்டனையை ஆண்களுக்கு வழங்கத் தவறுவதில்லை.

    domestic-violence--300x214இந்தியாவில் இதற்கு நேர் மாறாக நடக்கிறது. கணவன் மனைவியை அடித்துத் துன்புறுத்தினால், காவலர்களைத் தள்ளுங்கள், உற்றார் உறவினர்கள் கூட ஏன் என்று கேட்பதில்லை. அடிக்கிற கைதான் அணைக்கும் என்ற பழமொழி வேறு. ‘இன்று அடித்துக்கொள்வார்கள். நாளை கூடிக்கொள்வார்கள்’ என்று கணவன் கொடியவனாக இருந்தாலும் அவனுடைய மனைவியைக் கணவனிடமிருந்து பிரிப்பதைப் பற்றி யோசிப்பதே இல்லை.

    உடல் ரீதியாகத் துன்புறுத்துவதை விடுங்கள். மனரீதியாக எத்தனை கணவன்மார்கள் மனைவிமார்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள். இந்த மனைவிமார்களும் மேலே குறிப்பிட்ட அலிஸன் போல்தான் கணவன்மார்கள் மேல் எந்தக் குற்றமும் கண்டுபிடிப்பதில்லை. காலம் காலமாகப் பெண்களை மூளைச்சலவை செய்திருக்கிறோம்.

    கணவனைப் பரத்தை வீட்டிற்குக் கூட்டிச்சென்ற நளாயினியையும், கட்டிய மனைவியைக் கைவிட்டுவிட்டு மாதவியிடம் தஞ்சம் புகுந்த கணவன் பணத்தை எல்லாம் தொலைத்துவிட்டு மீண்டும் கண்ணகியிடம் வந்தபோது அவள் அவனைக் கடிந்துகொள்ளாமல் திரும்பவும் அவன் தொழில் நடத்தத் தன் சிலம்புகளை விற்றுப் பணம் திரட்டுமாறு கூறிய கண்ணகியையும் கற்புக்கரசிகள் என்று பட்டம் சூட்டிவிட்டோம். பழைய கதைகள் இருக்கட்டும். சென்ற நூற்றாண்டில் எழுதப்பட்ட மனோகரா கதையில் தந்தையின் இரண்டாவது மனைவிக்குத் தன் மகன் தீங்கிழைக்க முயலும் போதெல்லாம் ‘அவள் உன் தந்தை விரும்பும் பொருள். அவளுக்கு எந்தவிதத் தீங்கும் நேரக் கூடாது’ என்று கணவனின் ஆசையை நிறைவேற்றுவதையே – கணவன் தன் நலன்களுக்கு எதிராக நடந்துகொண்டாலும் – அந்த மனைவி தன் கொள்கையாகக் கொண்டிருக்கிறாள்.

    எனக்குத் தெரிந்த எங்கள் உறவினப் பெண் ஒருத்தியின் தந்தை வழிச் சொத்துக்களை எல்லாம் கணவன் தொலைத்துவிட்டான். இருக்கும் ஒரே ஒரு சின்னச் சொத்தையாவது அவளுடைய கணவனிடமிருந்து காப்பாற்ற எவ்வளவோ முயற்சிகள் நான் செய்துகொண்டிருக்கிறேன். அவள் எதற்கும் ஒத்துழைக்கவில்லை. எல்லாச் சொத்துக்களையும் இழப்பதற்குக் கணவன் காரணமாக இருந்தாலும் இன்னும் கணவன் தன்னை நன்றாக வாழவைப்பான் என்று நம்பிக்கொண்டிருக்கிறாள். தாமஸ் தன்னைத் துன்புறுத்தவே இல்லை என்று கூறியும் நீதிமன்றம் தாமஸைத் தண்டித்ததுபோல் எங்கள் உறவுக்காரப் பெண்ணைக் காப்பாற்ற இந்தியச் சட்டத்தில் இடம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

    படம் உதவி:

    A domestic violence attorney can help you

    Domestic Violence Essay Sample, Example


    http://www.abetterwaydomesticviolence.org/Abuse

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சத்தின் வயதென்ன ?

    —சி. ஜெயபாரதன்.

     

    பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சத்தின் வயதென்ன ?

    fig-1-our-milkyway

    நமது பால்வீதி ஒளிமந்தை

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

    பிரபஞ்சப் பெரு வெடிப்பில்
    பொரி உருண்டை
    சிதறிச்
    சின்னா பின்னமாகித்
    துண்டமாகித்
    துணுக்காகித் தூளாகி
    பிண்டமாகிப் பிளந்து
    அணுவாகி,
    அணுவுக்குள் அணுவாகித்
    துண்டுக் கோள்கள் திரண்டு,
    அண்டமாகி,
    அண்டத்தில் கண்டமாகித்
    கண்டத்தில்
    துண்டமாகிப் பிண்டமாகி,
    பிண்டத்தில் பின்னமாகிப்
    பிளந்து தொடர்ப் பிளவில்
    பேரளவுச் சக்தியாகி
    மூலகமாகி, மூலக் கூறாகிச்
    சீராகிச் சேர்ந்து
    நுண்ணிய அணுக்கருக்கள்
    பிழம்பில் பின்னிப்
    பிணைந்து பேரொளியாகிப்
    பிரம்மாண்டப் பிழம்பாகி,
    பரிதி ஒளிக்கோளாகி,
    பம்பரமாய்ச் சுழலும் பந்துகளை,
    ஈர்ப்பு வலையில்
    பரிதியைச் சுற்றி வீசி விட்டு
    அம்மானை ஆடுகிறாள்
    அன்னை !

    +++++++++++++++++

    “விஞ்ஞானத்துறை போலி நியதிகளில் [Myths] முதலில் துவக்கமாகி, பிறகு அந்நியதிகள் அனைத்தும் திறனாயப்பட வேண்டும்.”

    டாக்டர் கார்ல் போப்பர், ஆஸ்டிரியன் பிரிட்டீஷ் வேதாந்தி, பேராசிரியர் (Dr. Karl Popper)

    “பிரபஞ்சத்தைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியாத பிரச்சனை என்ன வென்றால், அதை நாம் அறிந்து கொள்ள இயலும் என்னும் திறன்பாடு.”

    டாக்டர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955)

    பிரபஞ்சத்தில் ஒளிந்திருக்கும் எண்ணற்ற புதிர்களில் ஒரு புதிரை விடுவிக்கப் போனால், ஒன்பது புதிர்கள் எழுகின்றன.”

    கட்டுரை ஆசிரியர்.

    விண்மீனை விழுங்கும் கருந்துளை

    பூமியின் வயதென்ன ?  சூரியன் வயதென்ன ?

    வற்றாத நீரும், வளமான நிலமும், வாயு மண்டலமும் சூழ்ந்து உயிரினமும், பயிரினமும் வளர்ந்து வரும் நாமறிந்தும், அறியாத விந்தை மிகும் அண்டகோளம் நாம் வசிக்கும் பூகோளம் ஒன்றுதான் !  அந்த கோளம் சுற்றிவரும் சூரியன் ஓர் சுயவொளி விண்மீன்.   அத்தகைய கோடான கோடி சுயவொளி விண்மீன்களைக் கொண்டது “காலக்ஸி” (Galaxy) எனப்படும் “ஒளிமய மந்தை.”  பால்மய வீதி (Milky Way) எனப்படும் நமது ஒளிமய மந்தை பிரபஞ்சத்தின் மில்லியன் கணக்கான காலாக்ஸிகளில் ஒன்று !  புதன், வெள்ளி, பூமி, சந்திரன், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் போன்ற அண்ட கோளங்கள் ஈர்ப்பு விசைகளால் இழுக்கப்பட்டுச் சூரிய குடும்பத்தில் கூட்டாக இருந்தாலும், பிரபஞ்சம் ஏதோ ஓர் விலக்கு விசையால் பலூன் போல் உப்பி விரிந்து கொண்டே போகிறது !

    பூமி சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.  அந்த நாள் முதலாக பூமியின் தளவடிவம் தொடர்ந்து மாறுபட்டு வந்திருக்கிறது என்றும் நாம் அறிகிறோம்.  பூமியின் மிக்க முதுமையான பாறை மூலகத்தின் கதிரியக்கத் தேய்வை ஆராயும் போது, (Radioactive Decay of Elemets) புவியின் வயது 3.8 பில்லியன் என்று விஞ்ஞானிகள் கணிக்கிட்டிருக் கிறார்கள்.  மேலும் பூமியில் விழுந்த மிகப் புராதன விண்கற்களின் (Meteorites) மூலகக் கதிரியக்கத் தேய்வை ஆய்ந்த போது, சூரிய குடும்பத்தில் பூமியின் வயது 4.6 பில்லியன் என்று இப்போது தெளிவாக முடிவு செய்யப் பட்டிருக்கிறது.

    சூரிய குடும்பத்தை ஆட்சி செய்யும் வேந்தாகிய பரிதி எப்போது தோன்றியது ?  பரிதியின் பிளாஸ்மா (Plasma) ஒளிப்பிழம்பு வெப்பத்தையும், விளைந்த வாயுக்களையும் கணிக்கும் போது, சூரியனின் வயது 10 பில்லியன் ஆண்டுகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.  சூரிய குடும்பத்தைப் போல் கோடான கோடி சுயவொளி விண்மீன்களைக் கொண்ட ஒளிமய மந்தைகள் எப்போது உருவாயின ?  கோடான கோடி ஒளிமய மந்தைகளைச் சுமந்து செல்லும் பிரபஞ்சம் எப்போது தோன்றியது ?  உப்பி விரியும் பிரபஞ்சக் குமிழி எத்தனை பெரியது ?  பிரம்மாண்டமான பிரபஞ்சத் தோற்றம் எப்படி உருவானது ?  எப்படி ஒளிமய மந்தை என்னும் காலாக்ஸிகள் உண்டாயின ?  பூமியிலே வாழும் நாம் மட்டும்தானா மானிடப் பிறவிகளாக இருந்து வருகிறோம் ?  முடிவிலே பூதள மாந்தருக்கு என்ன நேரிடும் ?  அப்புதிர் வினாக்களுக்கு இத்தொடர்க் கட்டுரைகள் ஒரளவு விடைகளைச் சொல்லப் போகின்றன.

    விண்வெளி விஞ்ஞானம் விருத்தியாகும் மகத்தான யுகம்

    விண்வெளி ஏவுகணைகள் பாய்ந்து செல்லும் இருபதாம் நூற்றாண்டில் பிறந்த இளைஞ ரெல்லாம் பல விதங்களில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.  முக்கியமாக விண்வெளி விஞ்ஞானம் பேரளவில் விருத்தி அடையும் ஒரு மகத்தான யுகத்திலே உதித்திருக்கிறோம்.  வெண்ணிலவில் தடம் வைத்து மீண்ட மனிதரின் மாபெரும் விந்தை களைக் கண்டோம் !  அடுத்து இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகளில் மனிதரின் மகத்தான தடங்கள் செவ்வாய்த் தளத்தி லேயும் பதிவாகப் போகின்றன என்று நினைக்கும் போது நமது நெஞ்ச மெல்லாம் துள்ளிப் புல்லரிக்க வில்லையா ?

    பூதளத்தில் தோண்டி எடுத்த பூர்வ மாதிரிகளையும், உயிரின எலும்புக் கூடுகளையும் சோதித்து கடந்த 100,000 ஆண்டு முதல் வாழ்ந்து வந்த மானிடரின் மூல தோற்றத்தைக் காண முடிகிறது !  5000 ஆண்டு களுக்கு முன்னே நாகரீகம் தோன்றி கிரேக்க, ரோமானிய, எகிப்த், இந்திய, சைன கலாச்சாரங்களை அறிய முடிந்தது.  பிரபஞ்சத்தின் பல்வேறு பூர்வப் புதிர்களை விடுவிக்க பல்லாயிரம் ஆண்டுகளாக மானிடச் சித்தாந்த ஞானிகள் முயன்று எழுதி வந்திருக்கிறார்கள்.  சிந்தனைக்குள் சிக்கிய மாபெரும் சில புதிர்கள் விடுவிக்கப் பட்டாலும் பல புதிர்கள் இன்னும் அரைகுறையாக விடுவிக்கப் படாமல்தான் தொங்கிக் கொண்டிருக்கின்றன !

    ஒளி மந்தை [காலாக்ஸி]

    பிரபஞ்சத்தின் பல புதிர்களில் ஒரு புதிரை விடுவிக்கப் போனால் ஒன்பது புதிர்கள் முளைக்கின்றன. பரமாணுக்களில் நுண்ணிய நியூடிரினோ துகள்கள் (Neutrino Particles) எப்படி விண்வெளியில் உண்டாகின்றன ?  காமாக் கதிர் வெடிப்பு (Gamma Ray Bursts) என்றால் என்ன ?  செவ்வாய்க் கோளின் தளப்பகுதி ஏன் வரண்டு போனது. அகிலக் கதிர்கள் (Cosmic Rays) என்பவை எங்கிருந்து வருகின்றன. பிரபஞ்சத்தைப் புதிய “நூலிழை நியதி” (String Theory) கட்டுப்படுத்து கிறதா ?  ஈர்ப்பாற்றல் அலைகளை (Gravitational Waves) உருவாக்கு வது எது ?  இந்தக் கிளைப் புதிர்களுக்கும் விஞ்ஞானிகள் விடைகாண வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது ஏற்பட்டது.

    இப்புதிர்களுக்குக் கட்டுரைகளில் விடை பூரணமாகக் கிடைக்கலாம்.  கிடைக்காமலும் போகலாம்.  வானியல் விஞ்ஞானம் வளர்ச்சி அடையும் ஒரு விஞ்ஞானத் துறை.  பெருவாரியான புதிர்களுக்கு விடை கிடைக்க இன்னும் நெடுங்காலம் ஆகலாம்.  புதிய கருவிகள் படைக்கப்பட்டு, கண்டுபிடிப்புகளும் உண்டாகி முன்பு மெய்யாகத் தோன்றியவைப் பின்னால் பொய்யாக நிரூபிக்கப் படலாம்.  குறிப்பாக விண்வெளியைச் சுற்றிவந்த ஹப்பிள் தொலைநோக்கி பல அரிய விண்வெளிக் காட்சிகளை ஆராயத் தந்திருக்கிறது.

    பிரபஞ்சத்தின் வயதுக் கணிப்பு

    பல நூற்றாண்டுகளாக விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் வயதைக் கணக்கிடப் பல்வேறு முறைகளைக் கடைப்பிடித்து வந்துள்ளார்கள்.  புதிய நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலேயும் விஞ்ஞானிகள் இன்னும் உறுதியாக அதன் வயதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை.  2003 பிப்ரவரியில் ஏவிய “வில்கின்ஸன் பல்கோண நுண்ணலை நோக்கி விண்ணுளவி”  [Wilkinson Microwave Anisotropy Probe (WMAP)] அனுப்புவதற்கு முன்பு பிரபஞ்ச உப்புதலை அளக்கும் “ஹப்பிள் நிலையிலக்கம்” (Hubble Constant) பயன்படுத்தப்பட்டுப் பலரது தர்க்கத்துக்கு உட்பட்டது.  விண்மீன்கள் பூமியை விட்டு விலகிச் செல்லும் வேக வீதத்தை அறிந்து கொண்டு ஹப்பிள் நிலையிலக்கம் நிர்ணயமாகும்.  அதாவது காலாக்ஸி தொடர்ந்து மறையும் வேகத்தை அதன் தூரத்தால் வகுத்தால் வருவது ஹப்பிள் நிலையிலக்கம். அந்த நிலையிலக்கின் தலைகீழ் எண்ணிக்கை [Reciprocal of the Hubble Constant] பிரபஞ்சத்தின் வயதைக் காண உதவும்.  அவ்விதம் கண்டுபிடித்ததில் பிரபஞ்சத்தின் வயது 10-16 பில்லியன் ஆண்டுகள் என்று அறிய வந்தது.  இம்முறையில் ஒரு விஞ்ஞானி பல்வேறு அனுமானங்களைக் கடைப்பிடிக்க வேண்டி உள்ளதால், அம்முறை உறுதியுடன் பலரால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை.

    அடுத்த முறை பூதளத்தின் மிகப் புராதனப் பாறைகளில் உள்ள மூலகங்களின் கதிரியக்கத் தேய்வைக் (Radioactive Decay of Elements in Oldest Rocks) கணக்கிட்டு பிரபஞ்சத்தின் ஆரம்ப காலம் கணிக்கப் பட்டது.  பூமியில் விழுந்த மிகப் புராதன விண்கற்களின் மூலக கதிரியக்கத் தேய்வைக் கணக்கிட்டுப் பூகோளத்தின் வயது 4.6 பில்லியன் ஆண்டுகள் என்று அறியப்பட்டது.

    அதே திடப்பொருள் விதிகளைப் பயன்படுத்தி காலாக்ஸி அல்லது புராதன விண்மீன்களில் எழும் வாயுக்களின் கதிரியக்கத் தேய்வுகளை ஆராய்ந்தனர்.  அவ்விதம் கணக்கிட்டதில் பிரபஞ்சத்தின் வயது 12-15 [plus or minus 3 to 4 billion] பில்லியன் ஆண்டுகள் என்று தீர்மானிக்கப் பட்டது !  ஒளிமிக்க விண்மீன்களின் ஒளித்திரட்சியையும் அதன் உஷ்ணத்தையும் [Brightness versus Temperature] பல மாதங்களுக்குப் பதிவு செய்து விண்மீனின் தூரத்தோடு ஒப்பிட்டுப் பிரபஞ்சத்தின் வயதை 12 பில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிட்டார்கள்.  ஈசா [ESA] எனப்படும் ஈரோப்பியன் விண்வெளிப் பேரவை அனுப்பிய ஹிப்பார்கஸ் துணைக் கோள் (Hipparcos Satellite) விண்மீன் தூரத்தை அளக்கப் பயன்படுத்தப் பட்டது.  அவ்விதம் கணக்கிட்டதில் மிகப் புராதன விண்மீனின் வயது சுமார் 12 பில்லியன் ஆண்டுகள் என்று அறியப்பட்டது.

    வெண்குள்ளி விண்மீன் சிதைவு மூலம் வயதைக் கணக்கிடுதல்

    சூரியனைப் போன்று பெருத்த கனமும் பூமியைப் போல் சிறுத்த வடிவமும் கொண்ட “வெண்குள்ளி விண்மீன்கள்” [White Dwarfs Stars] குறுகிப் போகும் போது விளைந்த விண்சிதைவுகளைக் கொண்டு பிரபஞ்ச வயதைக் கணக்கிடும் போது, மிக மங்கிய அதாவது மிகப் புராதன வெண்குள்ளி ஒன்று எத்தனை ஆண்டு காலமாகக் குளிர்ந்து வருகிறது என்று தேர்ந்தெடுத்துப் பதிவு செய்து வருகிறார்கள்.  அவ்விதம் பார்த்ததில் நமது பால்மய வீதித் தட்டின் வயது 10 பில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிடப் பட்டுள்ளது.  பெரு வெடிப்புக்கு 2 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு பால்மய வீதித் தட்டு தோன்றியதால், பிரபஞ்சத்தின் வயது 12 (10+2) பில்லியன் ஆண்டு என்று கூட்டிச் சொல்லலாம்.

    இவ்விதம் பல்வேறு வயது வேறுபாடுகள் இருந்தாலும் 2003 ஆண்டு “வில்கின்ஸன் பல்கோண நுண்ணலை நோக்கி விண்ணுளவி” [Wilkinson Microwave Anisotropy Probe (WMAP)] அனுப்பிய தகவலை வைத்து நுணுக்கமாகக் கணக்கிட்டதில் பிரபஞ்சத்தின் வயது 1% துல்லியத்தில் 13.7 பில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டு முடிவாகி எல்லாத் தர்க்கங்களையும் நீக்கியது !

    (தொடரும்)

    *********************

    தகவல் :

    Picture Credit : 1. Astronomy (August 21, 2007) 2.  Universe 6th Edition (2002)  3. National Geographic Encyclopedia of Space (2005) 5. 50 Years of Space (2004)

    1.  Astronomy Magazine : 50 Greatest Mysteries of the Universe (Aug 21, 2007)

    2.  Universe By Roger Freedman & William Kaufmann III (2002)

    3.  National Geographic Encyclopedia of Space By Linda Glover.

    4.  The World Book Atlas By World Book Encyclopedia Inc (1984)

    5.  Scientific Impact of WMAP Space Probe Results (May 15, 2007)

    ******************

    S. Jayabarathan (jayabarat@tnt21.com) November 1, 2007

     

    Share
  • ஆட்கொள்ள வேண்டும் ஐயா !

    -எம். ஜெயராம சர்மா- மெல்பேண்

    கருணைகூர் முகங்கள் ஆறும்
    கரத்தினில் வேலும் கொண்டு
    அருமையாம் தமிழைக் காக்கும்              lord muruga
    அழகுடைக் கந்த வேளே
    உரிமையால் உன்னைப் பாட
    உவப்புடன் நிற்கும் என்னைக்
    கரிசனை கொண்டு நாளும்
    காத்திட வாரும் ஐயா !

    பாயிலே படுக்கா முன்னம்
    பன்னிரு கையா உன்னைக்
    காவியம் ஆக்கி நானும்
    கற்பவர்க் கீதல் வேண்டும்
    சேயென நினைத்து என்னைத்
    தினமுமே காக்க வேண்டி
    மாமயில் ஏறும் கந்தா
    மலரடி போற்று கின்றேன் !

    செந்தமிழ்க் கொண்டு நாளும்
    நின்றனைப் போற்ற வேண்டும்!
    வந்தஎன் வினைகள் போக
    சந்ததம் உதவு கந்தா!
    அந்தமில் உருவம் ஆனாய்
    அனைத்து மாய் நிற்கின்றாயே
    கந்தனே நாளும் என்னைக்
    காத்திட வேண்டும் ஐயா!

    ஆணவம் போக்கி என்னை
    ஆட்கொள்ள வேண்டும் ஐயா!
    அலைபாயும் மனத்தை நாளும்
    அடக்கிட வேண்டும் ஐயா!
    நாளெலாம் உந்தன் நாமம்
    நான் சொல்லி நிற்கவேணும்
    நீயெனக் கருள்வாய் ஐயா
    நித்தமும் கந்த வேளே !

     

    Share
  • மௌனம்

    -மணிமுத்து

    பார்ப்பவர் கண்களுக்கு!
    எதை கேட்டாலும்
    மெளனத்தையே
    பரிசாகத் தந்தாள்
    எனவே
    அவன் கேள்வியையும்
    அவள் பாஷையிலே
    கேட்க
    ’பக்’கென்று சிரித்துவிட்டாள்
    அடடா!
    இவளுக்கு இவ்வளவு அழகான மொழி
    தெரியும்போது
    ஊமை என்கிறார்களே!!!

    Share
  • திருமலை தெய்வம்!

    -ரா.பார்த்தசாரதி

    திருவருள்  தரும்  தெய்வம்  திருமலை தெய்வம் !
    தீராத  வினை எல்லாம் தீர்த்திடும்  தெய்வம் !

    வரும்துயர் பகையையும் போக்கிடும் தெய்வம்!         balaji
    வாய்திறந்து கேட்டாலே வழங்கிடும் தெய்வம் !

    தாயாரைத்  தரிசித்து  வேங்கடவனைத் தரிசிப்போம் !
    தரணியில்  யாவரும் நலம்பெற  யாசிப்போம் !

    மனிதனைப்  புனிதம்  ஆக்குவது தெய்வ தரிசனம் !
    மனதில்  சலனம்  போக்குவது தெய்வ தரிசனம் !

    திருமலைவாசா  என்று அழைத்தாலே  குறைதீர்க்கும் தெய்வம் !
    தினமும்  நினைத்தாலே நல்வழி காட்டும் தெய்வம் !

    கோவிந்தா கோவிந்தா என்றாலே பரவசம் !
    கோவிந்தன்  அருளும் கிடைத்திடுமே  நம்வசம் !

    என்றும் நினைப்போம் பணிவோம் அவன்தாள் !
    எல்லார்க்கும் உகந்த தெய்வம்  திருமலை தெய்வம் !

     

    Share
  • மனதில் நிறைந்தவர் எம். ஜி. ராமசந்திரன்…

    –திருக்குவளை மீ.லதா.

     

    அள்ளி தந்த கைகள் எங்கே ,
    அரவணைத்த நெஞ்சம் எங்கே,
    சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல தமிழரின் நல்வாழ்விற்காய் பிறந்தாரோ நல் மாணிக்கமாக எம் ஜி ஆர். அவர் சிம்ம குரல் எடுத்து கர்ஜனை செய்ய வேண்டாம். ஒலிப்பெருக்கியில் ஒரு குரல் கொடுத்தால் போதும் என் இரத்தத்தின் இரத்தங்களே… என் இனிய உடன் பிறப்புகளே என்று சொன்னாலே போதும்… ஒடி வரும் மக்கள் வெள்ளத்தில் அவர் திணறிய நாட்கள் எத்தனையோ! பொன்மன செம்மலாய் பூமிதனில் இன்றும் ஒளிரும் தீபங்களாய் இருப்பவரை பற்றி எழுதுகிறேன். அவர் மீது அன்பு கொண்ட நான்.

    இலங்கையில் உருவாகி தமிழகத்தில் நிலைக்கொண்ட புயலாக வந்தார். அன்பு என்ற மந்திரத்தில் அடங்கிப் போனோம் நாம்.

    ஏழையின் பங்காளனாக அவர் இருந்தார். ஏட்டுக் கல்வியை ஏழைக்கும் அளித்த காமராசரின் வாரிசாக வந்து கொடுத்தார் இலவசமாய்.

    தாய் சத்தியபாமாவின் கண்டிப்பான வளர்ப்பும், நேசமான உறவும், பாசமான பரிவும் உலகை ஆள வைத்தவையோ??

    1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.

    இச்சம்பவத்திற்குப் பின்னர் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் காவல்காரன். இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971 ஆம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான “ரிக்சாக்காரன்” படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது படம்.

    அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்.

    1972-இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக மாறியது. முதன் முதலாக போட்டியிட்ட திண்டுக்கல் பகுதியில் பெரும் வெற்றி பெற்றது.

    திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற வழிவகுத்தது. 1984 ல் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் எம்.ஜி.ஆர். இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

    1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். மறைவிற்குப் பின் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

    எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா என்று எம்.ஜி.ஆர் 25ல் ஆனந்த விகடனில் வெளி வந்தது.

    mgr“இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும்
    இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்”

    “மாபெரும் சபைதனில் நீ நடந்தால் – உனக்கு
    மாலைகள் விழவேண்டும்
    ஒரு மாற்றுக்குறையாத மன்னவன் இவனென்று
    போற்றிப் புகழ வேண்டும்”

    இவை வெறும் பாடல் வரிகள் அல்ல. சாகாவரம் பெற்ற ஒரு சகாப்தத்தைப் பற்றிய ஆழமான பதிவுகள். அந்த சகாப்தம் தான் எம்.ஜி.ஆர்.

    இருபதாம் நூற்றாண்டில் எம்.ஜி.ஆர் என்ற இந்த மூன்றெழுத்து மந்திரச் சொல், தமிழகத்தை, இந்தியாவை, ஏன் உலகின் ஒரு பகுதியை எவ்வாறு ஆட்டிப்படைத்தது. மக்களை எப்படி ஈர்த்திருந்தது என்பதை நம்மில் பலரும் அறிவோம்.

    எழுபதுகளில், ஒரு ஆங்கிலப் பத்திரிகை, இந்தியாவில் மக்களின் பேரன்பைப் பெற்ற பெருமகன்களாக இருவரைச் சுட்டியது. ஒருவர் பண்டித ஜவஹர்லால் நேரு. மற்றொருவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

    நாடக அரங்கிலும், திரையுலகத்திலும், அரசியல் பொதுவாழ்விலும் எவராலும் வெல்ல முடியாத சக்தியாக, மக்கள் மனம் கவர்ந்த முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். நின்றால் பொதுக்கூட்டம். நடந்தால் ஊர்வலம். அமர்ந்தால் மாநாடு…என்பார்களே…. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆருக்கு பொருந்தும்.

    மதத்தால், இனத்தால், மொழியால் அவர் யார் என்பதை விட, மனத்தால், குணத்தால், எண்ணத்தால், செயலால் ஒரு மாபெரும் மனிதராக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.

    குழந்தைத் தொழிலாளராக நாடகத்துறையில் அடியெடுத்து வைத்த எம்.ஜி.ஆரின் அந்தப் பாலப் பருவத்திலேயே பட்ட துன்பங்களும், துயரங்களும் ஏராளம், ஏராளம்.

    “உழைப்பவரே உயர்ந்தவர்” எனும் உன்னத லட்சியத்தை கொள்கையாகக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் “ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும்” எனும் பாடல்களுக்கு ஏற்ப வாழ்நாளெல்லாம் தாம் பாடுபட்டு உழைத்துச் சேர்த்த பணத்தை வாரிக்கொடுத்து வள்ளலானார். அந்த வள்ளலின் பொன்மனத்தைப் போற்றித்தான் திருமுருக கிருபானந்த வாரியார் எம்.ஜி.ஆருக்கு பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை வழங்கினார்.

    திரையுலகிலும், அரசியல் பொதுவாழ்விலும் எம்.ஜி.ஆர் சந்திக்காத சோதனைகள் இல்லை. அத்தனையையும் முறியடித்து சாதனைகள் பல புரிந்தவர்.

     

     

     

     
    திருக்குவளை மீ.லதா
    நாகை மாவட்டம்

    Share
  • சற்றே நினைத்துப்பாருங்கள் !

    –ரா. பார்த்தசாரதி.

     

    சற்றே  நினைத்துப்பாருங்கள்  !

    why_you_must_think_positive

     

    ஞானத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்
    அது சக்தியின் பிறப்பிடமாகும் !

    கடவுளின் அருளை வேண்டுங்கள்
    அது பக்தியின் இருப்பிடமாகும் !

    தியானம் செய்ய விரும்புங்கள்
    அது மனஅமைதியின் உறைவிடமாகும் !

    யோகாசனங்களை செய்ய பழகுங்கள்
    அது உணர்சிகளை நிலைநிறுத்தும் இடமாகும் !

    நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்
    அது அறிவு எனும் ஊற்று தோன்றும் இடமாகும் !

    உடற்பயிற்சியும், நடை பயிற்ச்சியும் தினமும் கடைபிடியுங்கள்
    அது இளமையென்னும் ரகசியத்தை ரசிக்கும் இடமாகும் !

    பிறருக்கு நல்லதை செய்ய நினையுங்கள்
    அது உங்கள் புகழினை பரப்பும் இடமாகும் !

    நாணயமாக இருக்க முயற்சி செய்யுங்கள் ,
    அது உங்கள் நேர்மைக்கு இடமாகும் !

    வாழ்வில் சேமிப்பை கற்றுக்கொள்ளுங்கள்
    அது எதிர்காலத்தில் நம்மை தாங்கும் தூணாகும் !

    சிரித்து வாழக் கற்றுக்கொள்ளுங்கள்
    அது நோயினை நீக்கும் மருந்தாகும் !

    ஆம்,
    வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் !
    சிரிக்க தெரிந்தவனே, சிந்திக்க தெரிந்தவனாவான் !!

     
     
     
     
     
     

    படம் உதவி:
    http://idiva.com/opinion-relationships/why-smart-people-practice-positive-thinking/28852

    Share