Blog
-

(Peer Reviewed) தொல்காப்பிய அகனைந்திணையில் முதற்பொருளும் கருப்பொருளும்
புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், மொழிகள் துறை
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்,
பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
வல்லம், தஞ்சை மாவட்டம் – 613403.
மின்னஞ்சல் முகவரி– egowrisss@gmail.comமுன்னுரை
தமிழின் தலையிலக்கணமாகிய தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களையும் அதிகாரத்திற்கு ஒன்பது இயல்களையும் கொண்டு விளங்குகிறது. மொழியின் எழுத்திலக்கணத்தை எழுத்ததிகாரத்திலும், சொல் அமையும் பாங்கினைச் சொல்லதிகாரத்திலும் விளக்கிக் காட்டிய தொல்காப்பியம், சொற்களால் அமையும் இலக்கியம் பற்றிய கருத்துக்களைப் பொருளதிகாரத்தில் ஆராய்கிறது. இப்பொருளதிகாரத்தைத் தமிழர்தம் வாழ்வியலோடு தொடர்புபடுத்திச் சிந்திக்கும் அறிஞர்களும் உளர். இலக்கணமாயினும் இலக்கியமாயினும் தாம் தோன்றுகின்ற சமுதாயத்தின் தாக்கம் இல்லாது அமைதல் அரிது என்பது உண்மையாயினும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தைக் கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டிலின் ‘கவிதையியல்’(Poetics) என்னும் நூலோடு ஒப்புவைத்து ஆராய்வதே பொருத்தமானதாகும்.
பொருளதிகார அமைப்பு
தொல்காப்பியப் பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்னும் ஒன்பது இயல்களைத் தனது உள்ளடக்கமாகக் கொண்டு திகழ்கிறது. அகத்திணை மாந்தர்களின் கூற்றுப்பகுதியில் அமையும் உவமப்பாங்கை ஆராய்வதே உவமவியல் என்னும் கருதுகோள் ஏற்கப்படின், அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், உவமவியல் ஆகிய ஐந்தும் அகப்பொருள் பற்றியும், புறத்திணையியல் புறம் பற்றியும் ஏனைய மூன்றும் இருதிணைக்கண் செய்யுள் முறைமை பற்றியும் ஆராய்வதாகக் கொள்ள முடியும். அகத்திணைக்கண் சுட்டப்பட்டுள்ள முதற்பொருள், கருப்பொருள் ஆகியன பற்றி இக்கட்டுரை சுருக்கமாக ஆராய்கிறது.
அகத்திணை உள்ளடக்கம்
பொருளதிகாரத்தின் முதல் இயலான அகத்திணையியல் அகத்திணைகள் ஏழு என்னும் வரையறையோடு தொடங்குகிறது. அகவொழுக்க மரபும், தாயர், தோழி, கண்டோர், தலைவன் முதலியோர்தம் கூற்றுப்பகுதிகளும் நடுவண் ஐந்திணைகளின் உரிப்பொருள் அமைதியும் கூறப்படுகின்றன. உள்ளுறை உவமம், ஏனை உவமம், தமக்கென நிலம், பொழுது இல்லாத கைக்கிளை, பெருந்திணை முதலியவற்றின் இயல்புகளும் சுட்டப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து அகப்பொருள் இலக்கியங்கள் கலிப்பா, பரிபாடல் ஆகிய இருவகைப்பாக்களில் மட்டும் பாடப்பெறும் என்பதும் கூறப்படுகிறது. அகத்துறைப் பாடல்களில் தலைமக்களின் இயற்பெயர் சுட்டுவது மரபன்று என்னும் உயரிய இலக்கியக் கொள்கை வற்புறுத்தப்படுகிறது. இத்தனைச் சிறப்புக்களும் கொண்ட இந்த அகத்திணையியல், தலைவியின் கூற்றுப்பகுதியைக் கூறாதது சிந்தனைக்குரியது.
திணைக்குத் துணையாகும் முதலும், கருவும்
‘திணை’என்னும் சொல் முதற்கண் ஒழுக்கத்தைக் குறித்துப் பின் ஆகுபெயராய் அவ்வொழுக்கம் நிகழும் நிலத்தினைக் குறித்தது. ‘நெய்தற்கண் குறிஞ்சி மயங்கியது’என்பதில் ‘குறிஞ்சி’என்பது ஒழுக்கம். ‘காட்டுக்கோழி குறிஞ்சிக்குரியது’ என்பதில் ‘குறிஞ்சி’என்பது நிலம். திணையாகிய ஒழுக்கத்தைப் பாடுவதே புலனெறி வழக்கம். இப்புலனெறி வழக்கம் சிறக்க வேண்டுமாயின் முதற்பொருளின் பின்புல அமைதி மிகவும் வேண்டப்படுவதாகும். அப்பின்புலம் முதற்பொருளாலும் கருப்பொருளாலும் அமையும். சான்றாகப், பாலையாகிய பிரிவைப் பாடும் ஒருசூழலில், அப்பிரிவொழுக்கத்தின் பின்புலம் மனத்துன்பத்தை மிகுவிப்பதாக இருத்தல் வேண்டும். காலையிலோ, மாலையிலோ, இரவிலோ பாடுவதாக அமைந்தால் அப்பாடல் சிறக்காது., மேலும் தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் வேதனையை அருவி, சாரல், மயில், குயில் என்னும் பின்புலத்திலும் விளக்க முடியாது., விளக்கினால் செய்யுள் சிறக்காது. பட்டமரம்,, சுடுமணல், பறக்கும் பருந்து என்னும் பின்புலத்தில் நண்பகல் பொழுதில் விளக்கினால் பாட்டின் சிறப்பும், தலைவிபடும் பிரிவுத்துன்பமும் கற்பார் உள்ளத்தில் ஆழப்பதியும். எனவே முதற்பொருள் என்பதும் கருப்பொருள் என்பதும் ஒழுக்கமாகிய திணை பற்றிய பாடல் சிறக்க தொல்காப்பியம் அமைத்துத் தந்த ‘அமைப்பு’(Settings) என்பதை நினைவில் இருத்துதல் வேண்டும். இன்றைய திரைப்படம் வரை இந்த மரபு பின்பற்றப்படுகிறது என்பதும் ஈண்டுச் சுட்டத்தகுந்தது.
முதற்பொருள் அமைப்பில் தொல்காப்பியத்தின் அறிவியல் பார்வை
இயங்குதிணையும் நிலைத்திணையுமாகிய உலகத்துப் பொருள்கள் தோன்றுவதற்குக் காரணமும் அவற்றிற்கு ஆதாரமுமாக விளங்குவது புவியும் அப்புவியின் சுழற்சியால் நிகழும் கூறுபாடுகளுமாகும். புவியின் இயற்கையமைப்பை ஒட்டி மலை சார்ந்த நிலம், காடு சார்ந்த நிலம், ஆறுகள் பரந்து செல்லும் சமநிலம், கடற்கரையைச் சார்ந்த மணற் பரப்புடைய நிலம் எனப் பிரித்து நிலத்தை நானிலம் என வழங்குவர். இதனைத் தொல்காப்பியம் ‘காடுறை உலகம், மைவரை உலகம், தீம்புனல் உலகம், பெருமணல் உலகம்’ என வழங்கும். புவி ஞாயிற்றினின்றும் தோன்றியது. அப்புவி கதிரவனின் ஈர்ப்பாற்றலுக்கு உட்பட்டு, அதன் ஒளியையும் ஏனைய நாள்மீன்களின் ஒளியையும் பெற்றுச் சுழன்று வருவதுடன், தனக்குத் தானே சுழன்று வரும் இயல்பினை உடையது. புவியின் இருவேறு சுழற்சிகளால் ஏற்படுவனவே பெரும்பொழுதும் சிறுபொழுதும் ஆகும். பெரும்பொழுதினை வழக்கில் ‘பருவம்’என்பர். இவ்வாறு ஞாயிற்றினால் அமைந்த புவியையும் அப்புவியின் சுழற்சியினால் தோன்றும் இருவகைப் பொழுதுகளையும் ‘முதற்பொருள்’எனச் சுட்டுவது நேரியதே ஆகும்.
“முதல் எனப்படுவ நிலம்பொழு திரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே” 1என்பது தொல்காப்பியம்.
ஐந்திணைகளும் முதற்பொருள்களும்
கைக்கிளை முதலாகப் பெருந்திணை இறுதியாகச் சொல்லப்பட்ட அகத்திணைகள் ஏழனுள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணைகளுக்கு நிலம் வகுக்க வேண்டிய தொல்காப்பியம் பாலை தவிர்த்த ஏனைய நான்கு திணைகளுக்கு மட்டுமே நிலத்தை வரையறை செய்திருக்கிறது. முதற்பொருள்கள் இரண்டனுள் தலையாயதான நிலத்தினை,
“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி, மருதம்,நெய்தல்எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே”2என்னும் நூற்பாவில் சுட்டிச்செல்கிறார் தொல்காப்பியர். ‘காடுறை உலகம்’ முல்லை எனவும், ‘மைவரை உலகம்’குறிஞ்சி எனவும், ‘தீம்புனல் உலகம்’மருதம் எனவும், ‘பெருமணல் உலகம்’நெய்தல் எனவும் பெயர்பெறும். இந்நூற்பாவில் அகன் ஐந்திணைகளில் ஒன்றாகிய பாலைக்குத் தனித்த நிலம் ஒதுக்கப்படவில்லை. தட்பவெப்பநிலை காரணமாக அமையும் நானிலங்களின் திரிபே பாலையாகும் என்பதே இதற்குக் காரணம்.
ஐந்திணைப் பிரிவும் இருவகைப் பொழுதுகளும்
ஏனைய கோள்களைப் புவி சுற்றுவதாலும், புவி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதாலும் உண்டாகும் பருவ மாறுதல்களும் பொழுது மாறுதல்களும் முறையே பெரும்பொழுது, சிறுபொழுது எனத் தொல்காப்பியத்தால் வகுத்துரைக்கப்படுகின்றன. இதில் ஆண்டின் உட்பகுதியைப் பெரும்பொழுது என்றும் நாளின் உட்பகுதியைச் சிறுபொழுது என்றும் கூறலாம்.முல்லையாகிய இருத்தல் ஒழுக்கத்திற்குக் கார்காலமாகிய பெரும்பொழுதையும் அக்கார்காலத்துள் மாலையைச் சிறுபொழுதாகவும் தொல்காப்பியம் உரித்தாக்குகிறது. இதனைக்,
“காரும் மாலையும் முல்லை”3
என்னும் நூற்பாவில் கூறும் தொல்காப்பியம், குறிஞ்சியாகிய புணர்தல் ஒழுக்கத்திற்குப் பெரும்பொழுதில் கார்காலமும் முன்பனிக்காலமும், சிறுபொழுதில் மாலைக்காலமும் உரித்தாகக் கூறுகிறது. இதனைக்,
“குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர்”4
“பனியெதிர் பருவமும் உரித்தென மொழிப”5
என்னும் நூற்பாவில் சுட்டுகிறார்.
“வைகறை விடியல் மருதம்”6
என்னும் நூற்பாவினால், மருதமாகிய ஊடல் ஒழுக்கத்திற்கு ஆறு பெரும்பொழுதுகளையும் குறிப்பாக உரிமையாக்கி,, அப்பெரும்பொழுதுகளில் அமையும் வைகறை, விடியல் ஆகிய இருவகைச் சிறுபொழுதுகளையும் உரிமையாக்கினார். நெய்தல் திணைக்கு,
“எற்பாடு நெய்தலாதல் மெய்பெறத் தோன்றும்”7
என விதி செய்த தொல்காப்பியர், மருதத்தைப் போலவே அறுவகைப் பெரும்பொழுதுகளையும் நெய்தலுக்கு உரிமையாக்கிச், சிறுபொழுதுகளில் ‘எற்பாடு’என்பதையும் உரிமையாக்கினார்.
‘நடுவுநிலை’த் திணையும் முதற்பொருள் அமைதியும்
பாலையை ‘நடுவுநிலைத் திணை’ என்பார் தொல்காப்பியர். நடுவுநிலைத் திணை என்றால் ‘ஏனைய திணைகளுக்கு நடுவே இருக்கும் திணை’என்பது பொருளன்று. ஏனைய திணைகளின் நிலங்கள் திரிந்த நிலையையே தனக்கு நிலமாகப் பயன்படுத்திக் கொள்வதாலும், ஏனைய நால்வகை ஒழுக்கங்களுக்கிடையே தனக்குரிய பிரிவை நிகழ்த்திக் கொள்வதுமாகிய சிறப்பு நிலையே ‘நடுவுநிலை’எனப்படும். எதனையும் சாராது இருப்பது பற்றற்ற நிலை. எல்லாவற்றோடும் சார்ந்திருப்பதே நடுவு நிலை. எனவே தான் தொல்காப்பியம் ‘நடுத்திணை’என்னாது ‘நடுவுநிலைத் திணை’எனச் சுட்டுகிறது. நான்கு திணைகளோடும் பிரிவால் உறவு பாராட்டுவது பாலைத் திணையாதலின் அது நடுவுநிலைத் திணையே. நிலமாகிய முதற்பொருள் இல்லையாயினும் பாலைக்கென பிரிவாகிய உரிப்பொருள் உண்டு. அப்பிரிவொழுக்கம் நிகழ வேண்டுமாயின் பொழுது கூறியே ஆதல் வேண்டும். எனவேதான் தொல்காப்பியம்,
“நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலோடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே”8“பின்பனி தானும் உரித்தென மொழிப”9
என்னும் நூற்பாக்களினால் பெரும்பொழுதுகளில் இளவேனில், முதுவேனில் ஆகிய இருவகை வேனிற்காலத்தையும், பின்பனிக் காலத்தையும், சிறுபொழுதுகளில் நண்பகலையும் அதற்கு உரிமையாக்குகிறது. பாலையொழுக்கம் ஏனைய நான்கு திணைகளுள் நிகழ்ந்தாலும், அவ்வொழுக்கம் பாடுபொருளாகிற பொழுது, பாலையின் பின்புலத்தையே கொண்டிருக்க வேண்டும் என்பதே இந்நூற்பாவின் சாரமாகும். குறிஞ்சியில் நிகழும் பாலையொழுக்கத்தைக் குறிஞ்சிப் பின்புலம் கொண்டு அமைத்தல் கூடாது என்பது கருத்து.
இருபொழுதும் மயங்கினால் தான் திணையா?
திணைகளுக்குரிய பொழுதுகளை வரையறுக்கும் பொழுது பெரும்பொழுது, சிறுபொழுது ஆகிய இரண்டனையும் இணைத்தே தொல்காப்பியம் கூறுவதைக் காணலாம். ‘காரும் மாலையும் முல்லைக்குரிய’என்பது போலத் திணை பற்றிய புலனெறி வழக்கத்தில் இவ்விருபொழுதுகளும் இவ்வாறு இணைந்துதான் கூறப்பட வேண்டுமா? என்னும் ஐயம் நிகழ்கிறது. ஏதேனும் ஒருபொழுது மட்டும் இருந்தால் வழுவாய் விடுமோ? என்னும் ஐயத்தைத் தொல்காப்பியம் பின்வரும் நூற்பாவினால் அகற்றுகிறது.
“இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றலும்
உரிய தாகும் என்மனார் புலவர்”10என்பது தொல்காப்பியம். இதில், ‘இருவகைப் பொழுதும் தோன்றலும் உரியதாகும்’என்பதனால் ‘தோன்றாமையும் உண்டு’என்பது பெறப்படும். ‘தோன்றலும்’என்பதில் உம்மை எதிர்மறைப் பொருளதாகும்.
அகத்திணை மயக்கம்
குறிப்பிட்ட நிலத்தில் குறிப்பிட்ட ஒழுக்கந்தான் நிகழும் என்பது நடைமுறையாகாது. குறிஞ்சியில் புணர்தல் மட்டுமே நிகழும் என்பது பொருத்தமாகாது., நெய்தலில் இரங்கலைத் தவிர ஏனைய ஒழுக்கங்கங்கள் நிகழாது என்பது கற்பனை. எல்லா ஒழுக்கங்களும் எல்லா நிலத்திலும் நிகழும். அதாவது ஒருநிலத்துக்கென்று ஓதப்பட்ட ஒழுக்கம் மற்றொரு நிலத்திலும் நிகழ வாய்ப்புண்டு. இதனைத் தான் ‘மயக்கம்’என்னும் சொல்லால் பொருளதிகாரம் குறிக்கிறது. சொல்லதிகாரத்தில் சுட்டப்படும் வேற்றுமை மயக்கம் போன்றது இது. தொல்காப்பியம்,
“திணைமயக் குறுதலும் கடிநிலை இலவே
நிலனொருங்கு மயங்குதல் இல்லென மொழிப
புலன்நன்கு உணர்ந்த புலமை யோரே”11என்னும் நூற்பாவில் இது பற்றி ஆராய்கிறது. ஒருநிலத்துக்குரிய ஒழுக்கம் மற்றொரு நிலத்தில் மயங்குவது உண்டு., அவ்வாறு மயங்குதல் கூடாது என்னும் வரையறை இல்லை., ஆனால் ஒருநிலம் இன்னொரு நிலத்தில் மயங்குதல் கூடாது. ‘ஒருநிலத்திற்குரிய மாந்தர் மற்றொரு நிலத்துக்குச் செல்லுங்கால், தத்தமக்குரிய ஒழுக்கத்தைப் பின்பற்றுவதால் ஒழுக்கமாகிய திணை மயங்கலாம் எனவும், ஒருநிலம் அசைந்து மற்றொரு நிலத்துக்குள் செல்லாதாதலால் நிலம் மயக்கம் ஏற்படையது அன்று’எனவும் தொல்காப்பியம் கூறியிருப்பது நுண்ணிய சிந்தனையாகும். நிலம், பொழுது, அவற்றின் மயக்கம் என்னும் முதற்பொருள் பற்றிய கருத்துக்களை அகத்திணையியலில் பதினெட்டு நூற்பாக்களில் விரித்துரைத்த தொல்காப்பியம்,’ முதலெனப் படுவது ஆயிரு வகைத்தே’என மீண்டும் எடுத்துரைத்து முதற்பொருள் ‘நிலம், பொழுது என இரண்டே’என வரையறுப்பதையும் ஈண்டுச் சுட்டலாம்.
ஐந்திணைகளும் கருப்பொருள்களும்
முதல், கரு, உரி என்பதே முறையாயினும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இந்த நெறி பின்பற்றப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. முதல், உரி, கரு என்றே அது இலக்கணம் கூறிச் செல்கிறது. அந்த வகையில் கருப்பொருள் என்பது ஒருதிணைக்குரிய தெய்வம், திணைமக்களுக்குரிய உணவு, அந்நிலத்தில் திரியும் விலங்கு, அந்நிலத்தில் விளையும் மரம், பறக்கின்ற பறவை, மக்களுடைய தொழில், அந்நில மக்கள் அடிக்கின்ற பறை, இசைக்கின்ற யாழ் இவற்றின் விரிவு ஆகியவற்றைக் குறிக்கும் என விளக்குகிறது.
“தெய்வம் உணாவே மாமரம் புள்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப”12என்பது கருப்பொருள் பற்றிய தொல்காப்பிய நூற்பாவாகும். இந்த நூற்பாவில் ‘பிற’என்னும் பயன்பாட்டால், ஒருநிலத்துக்குரிய பூவும், ஊரும், நீரும் கருப்பொருளாகத் தழுவிக் கொள்ளப்படும். கருப்பொருள்களில் ஒன்றாகிய தெய்வத்தோடு சேர்த்தே தொல்காப்பியம் முதற்பொருளாகிய நிலத்தை அறிமுகம் செய்கிறது என்பதும் பொதுவாக இன்னின்னவை கருப்பொருள் என்றுதான் இந்நூற்பா உரைக்கிறதேயன்றி, இந்த நிலத்துக்கு இன்னவை கருப்பொருள் என விதந்தோதவில்லை என்பதும் அவை சான்றோர் நெறியும் மரபும் பற்றிக் கொள்ளப்படும் என்பதும் ஈண்டுச் சுட்டப்படுகின்றன.
திணைகளும் கருப்பொருள்களும்
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வகுக்கப்பட்ட நிலங்களும் அவற்றிற்குரிய கருப்பொருள்களும் சான்றோர் நெறி பற்றிப் பின்வருமாறு பட்டியலிடப்படுகின்றன.
குறிஞ்சித் திணையின் கருப்பொருள்கள்
தெய்வம் – சேயோன் (முருகன்)
உயர்ந்தோர் – சிலம்பன்
தாழ்ந்தோர் – குறவன்
பூ – குறிஞ்சிப்பூ
மரம் – வேங்கை
பறவை – மயில்
விலங்கு – புலி, யானை
உணவு – மூங்கில் அரிசி
பறை – தொண்டகப் பறை
யாழ் – குறிஞ்சி யாழ்
பண் – குறிஞ்சிப் பண்
ஊர் – சிறுகுடி
நீர் – அருவிநீர், சுனைநீர்
தொழில் – வேட்டையாடுதல்முல்லைத் திணையின் கருப்பொருள்கள்
தெய்வம் – மாயோன் (திருமால்)
உயர்ந்தோர் – நாடன்
தாழ்ந்தோர் – இடையர்
பூ – முல்லைப்பூ
மரம் – பிடவம்
பறவை – காட்டுக்கோழி
விலங்கு – முயல்
உணவு – சாமை
பறை – ஏறுகோட்பறை
யாழ் – முல்லை யாழ்
பண் – முல்லைப் பண்
ஊர் – பாடி
நீர் – காட்டாறு
தொழில் – ஆனிரை மேய்த்தல்மருதத் திணையின் கருப்பொருள்கள்
தெய்வம் – வேந்தன்
உயர்ந்தோர் – ஊரன்
தாழ்ந்தோர் – உழவன்
பூ – தாமரைப்பூ
மரம் – மருதமரம்
பறவை – அன்னம்
விலங்கு – எருமை
உணவு – செந்நெல்
பறை – மணமுழவு
யாழ் – மருத யாழ்
பண் – மருதப் பண்
ஊர் – ஊர்
நீர் – ஆற்றுநீர்
தொழில் – விதைத்தல்நெய்தல் திணையின் கருப்பொருள்கள்
தெய்வம் – வருணன்
உயர்ந்தோர் – புலம்பன்
தாழ்ந்தோர் – பரதவர்
பூ – தாழம்பூ
மரம் – விளரியாழ்
பறவை – அன்றில்
விலங்கு – பகடு, சுறா
உணவு – மீன்
பறை – மீன்கோட்பறை
யாழ் – நெய்தல் யாழ்
பண் – நெய்தற் பண்
ஊர் – பாக்கம்
நீர் – கடல்நீர்
தொழில் – உப்பு விளைத்தல்பாலைத் திணையின் கருப்பொருள்கள்
தெய்வம் – கொற்றவை
உயர்ந்தோர் – விடலை
தாழ்ந்தோர் – எயினர்
பூ – குராஅம்பூ
மரம் – ஓமை
பறவை – கழுகு, பருந்து
விலங்கு – வலியிழந்த யானை
உணவு – கொள்ளையடிப்பன
பறை – சூறைகோட்பறை
யாழ் – பாலை யாழ்
பண் – பாலைப் பண்
ஊர் – பறந்தலை
நீர் – அறுநீர்க் கூவல்
தொழில் – கொள்ளையடிப்பனமுடிவுரை
மேற்கண்ட கட்டுரைப் பகுதியில் இதுகாறும் சுட்டப்பட்டிருக்கும் கருத்துக்களின் அடிப்படையில், தொல்காப்பியத்தின் முதற்பொருள் பாகுபாடு அறிவியலுக்கு இசைந்ததே என்பதும், ஒருதிணைக்குரிய நிலமும் அந்நிலத்திற்குரிய பெரும்பொழுதும் சிறுபொழுதும் முதற்பொருள் என்பதும், பாலைக்கெனத் தனித்த நிலத்தைத் தொல்காப்பியம் சுட்டவில்லை என்பதும் ஆனால் பாலைத்திணையாகிய ஒழுக்கத்திற்குரிய இருவகைப் பொழுதுகளையும் தொல்காப்பியம் சுட்டத் தவறவில்லை என்பதும் புலனெறி வழக்கத்தில் இருவகைப் பொழுதுகளுள் ஒன்றிருந்தாலும் இழுக்கில்லை என்பதும், திணையாகிய ஒழுக்கம் மயங்கலாம் என்பதும், எந்நிலையிலும் நிலங்கள் இரண்டு தம்முள் மயங்கல் கூடா என்பதும், கருப்பொருளாகிய தெய்வத்தை முன்னிறுத்தியே முதற்பொருளாகிய நிலத்தைத் தொல்காப்பியம் அறிமுகம் செய்கிறது என்பதும் பொதுவாகக் கருப்பொருள்களைச் சுட்டிச்செல்கிறதேயன்றிக் குறிப்பிட்டு இன்ன திணைக்கு இன்னின்னவை கருப்பொருள் எனக் கூறவில்லை என்பதும் கருப்பொருள்கள் மரபுவழியாகவே கூறப்பட்டு வருகின்றன என்பதும் ஓரளவு விளக்கப்பட்டன.
சான்றெண் விளக்கம்
- தொல்காப்பியர் தொல்காப்பியம் (பொருள்) நூற்பா எண். 4
- மேலது நூற்பா எண். 5
- மேலது நூற்பா எண். 6
- மேலது நூற்பா எண். 7
- மேலது நூற்பா எண். 8
- மேலது நூற்பா எண். 9
- மேலது நூற்பா எண். 10
- மேலது நூற்பா எண். 11
- மேலது நூற்பா எண். 12
- மேலது நூற்பா எண். 13
- மேலது நூற்பா எண். 14
- மேலது நூற்பா எண். 20
துணை நூற்பட்டியல்
தொல்காப்பியர், தொல்காப்பியம்
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
சென்னை – 600001. முதற்பதிப்பு – 1940
ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):
தொல்காப்பிய அகனைந்திணையில் முதற்பொருளும் கருப்பொருளும் என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு
- பொருளுணர் அச்சம் பொறுமையின்மை முதலியன காரணமாக இன்றைக்கும் பெறவேண்டிய கவனத்தைப் பெறாமல் இருக்கும் நமது தமிழின் தலைச்செல்வம் தொல்காப்பியத்தை மீளாய்வு செய்து அறிமுகக் கட்டுரை செய்திருக்கும் கட்டுரையாளருக்குப் பாராட்டு!
- கட்டுரையின் உள்ளடக்கத்தை முன்னுரையில் அளவாகவும் செறிவாகவும் கூறியிருப்பது ஆய்வாளரின் கட்டுரை வன்மையைக் காட்டுகிறது. .
- அகத்திணை உள்ளடக்கத்தை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு பதிவு செய்திருக்கும் ஆய்வாளர். இத்தனைச் சிறப்புக்களும் கொண்ட இந்த அகத்திணையியல், தலைவியின் கூற்றுப்பகுதியைக் கூறாதது சிந்தனைக்குரியது.’ என துணிந்து கூறுவது அவர்தம் ஆய்வில் அவர் கொண்டிருக்கும் உறுதியையும் நம்பிக்கையையும் பறைசாற்றுகிறது.
- “முதற்பொருள் என்பதும் கருப்பொருள் என்பதும் ஒழுக்கமாகிய திணை பற்றிய பாடல் சிறக்க தொல்காப்பியம் அமைத்துத் தந்த‘அமைப்பு’(Settings) என்பதை நினைவில் இருத்துதல் வேண்டும்.” என்னும் கருத்தியல் தொல்காப்பியத்தை இலக்கியத்திற்கான இலக்கண நூல் என்பதை உரக்கச் சொல்கிறது.
- நிலம் பொழுதாகிய இரண்டின் பகுப்பிலும் அறிவியல் உணர்வு மேலோங்கி நிற்கிறது என்பதை ஆய்வாளர் தகுந்த சான்றுகளுடனும் எடுத்துக்காட்டுகளுடனும் தந்திருப்பது போற்றுதற்குரிய்து.
- பாலையை நடுவுநிலைத் திணை என்பதற்கான காரணத்தை விளக்க வந்த கட்டுரையாளர் எதனையும் சாராது இருப்பது பற்றற்ற நிலை. எல்லாவற்றோடும் சார்ந்திருப்பதே நடுவு நிலை. என வரையறை செய்து எல்லாத் திணைகளிலும் தனது பிரிவொழுக்கத்தை நிகழ்த்திக் ;கொள்ளும் பேராற்றல் வாய்ந்த திணை பாலைத்திணை என்பதை அழகுற விளக்கியிருக்கிறார்.
- ‘குறிஞ்சியில் நிகழும் பாலையொழுக்கத்தைக் குறிஞ்சிப் பின்புலம் கொண்டு அமைத்தல் கூடாது’ என்றும் பாலைநிலப் பின்புலத்தைக் கொண்டே அமைக்க வேண்டும் என்றும் கட்டுரையாளர் எச்சரிப்பது தொல்காப்பியத்தைச் சரியான தளத்தில் வைத்துப் புரிந்து கொண்டிருக்கும் அவர்தம் புலமைச் சதுரப்பாட்டை உணர்த்துகிறது.
- இருபொழுதும் அமைந்தால்தான் திணையா? ஒரு பொழுது மட்டும் சுட்டினால் திணையாகாதா? என்னும் சிந்தனையை முன்னெடுக்கும் ஆய்வாளர் “இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றலும் உரிய தாகும் என்மனார் புலவர்”10 என்னும் நூற்பாவில் அமைந்த உம்மையை எதிர்மறை உம்மையாக் கொள்ளும் நச்சினார்க்கினியர் கருத்தினை வழிமொழிந்து தனது கருத்துக்கு வலிமையூட்டுவது பொருத்தமான ஆய்வு நெறியே!
-
முதற்பொருள் கருப்பொருள் பட்டியலைத் தந்திருக்கும் கட்டுரையாளர், முன்னுரை மற்றும் முடிவுரை ஆகியவற்றை மாட்டேற்றாக அமைத்து ஒரு சிறிய அரிய ஆய்வுக் கட்டுரையையும் செம்மையாக வடிவமைக்க இயலும் என்பதை உறுதி செய்திருக்கிறார்.
-

ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 1
மீனாட்சி பாலகணேஷ்
அமுதத் தமிழ்மொழியில் சிற்றிலக்கிய வகைகள் நாள்தோறும் வளர்ந்து பெருகிக் கொண்டிருக்கின்றன. பிரபந்தங்கள் எனப்படும் இவை 96 என்று கூறப்பட்டாலும், பல நிகண்டுகளையும் பிரபந்தங்களையும் இணைத்துப் பார்க்கும்பொழுதில் கிட்டத்தட்ட 196 இலக்கிய வகைகள் காணப்படுவதாக பேராசிரியர் ச. வே. சுப்பிரமணியம் ஆராய்ந்து வெளியிட்டுள்ளார்.
கலம்பகம், உலா, பிள்ளைத்தமிழ், மாலை இவற்றோடு அம்மானை, ஊசல், வள்ளை, பந்தடி, கும்மி, சாழல், அலங்காரம், வண்ணம், தாலாட்டு, திருவுந்தியார் என இன்னும் பலவற்றையும் குறிப்பிடலாம்.
‘குழவி மருங்கினும் கிழவதாகும்’ எனத் தொல்காப்பியம் கூறுவதற்கிணங்க ‘சிறுபிள்ளைகளும் பாட்டுடைத்தலைவர்களாகக் கொள்ளப்படுவர்’ என்பதனால், பிள்ளைத்தமிழ் எனப்படும் பெருமை வாய்ந்த இலக்கியம் மட்டும் நெஞ்சையள்ளும் வகையில் விரிந்து பரந்து எண்களில் பலவாகப் பல்கிப் பெருகி வளர்ந்தும், இன்னும் வளர்ந்து கொண்டும் உள்ளது. காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, எனப் பொதுவான பருவங்களையும், ஆண்பாலுக்கு சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் பருவங்களையும், பெண்பாலுக்கு அம்மானை, நீராடல், ஊசல் எனும் பருவங்களையும் கொண்டு பத்துப் பருவங்களால் அமைவது பிள்ளைத்தமிழ். பிள்ளையின் (குழந்தையின்) வளர்ச்சியைப் பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட பருவங்களால் போற்றுவது இந்தப் பிரபந்தம்.
இவ்வகை இலக்கியம் வேறு எந்த மொழியிலும் இல்லாததனால் இது பிள்ளைத்தமிழ் எனும் அருமையான பெயர்கொண்டு, தமிழ் எனும் பொதுப்பெயரே அடையெடுத்துச் சிறப்புப் பெயராயிற்று என்று கதிரகாம பிள்ளைத்தமிழை இயற்றிய சிவன் கருணாலய பாண்டியப்புலவர் கூறுவார்.
தமிழகத்தைப்போல் ஈழத்திலும் 17, 18ம் பொது நூற்றாண்டுகளில் பல பிள்ளைத்தமிழ் நூல்கள் எழுந்தன. ஈழநாடும் பிள்ளைத்தமிழ் இலக்கியத்திற்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்துள்ளது. ஈழத்தில் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த இணுவில் சி. சின்னத்தம்பிப் புலவர் பாடிய ‘இணுவில் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்‘ எனும் நூலே காலத்தால் பழமையானதென அறியப்படுகிறது. ஆனால் இந்நூல் இன்னும் பார்வைக்குக் கிடைக்கவில்லை.
ஈழத்தில் விநாயகர், முருகன், அம்பிகை ஆகிய தெய்வங்கள் பேரில் பல பிள்ளைத்தமிழ் நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இவை யாவும் தமிழின் பலவிதமான நயங்களிலும் சிறந்து விளங்குவன. இக்கட்டுரையின் நோக்கம் இவற்றைப்பற்றி அறிந்து மகிழ்வதற்காகவே!
விநாயகர் மீது மட்டும் நான்கு பிள்ளைத்தமிழ் நூல்கள் பார்க்கக் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில் இயற்றப்பெற்று நாமறிந்த விநாயகர் மீதான பிள்ளைத்தமிழ் நூல்கள் அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ் (இயற்றியவர் பெயர் அறியவில்லை), கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் (சிவஞான யோகிகள்) ஆகிய இரண்டாகும். இவ்விரண்டும் எவ்வாறு கவிநயமும் பொருள் நயமும் மிகுந்து சிறந்து விளங்குகின்றவோ அவ்வாறே நாம் காணப்போகும் ஈழத்துப் பிள்ளைத்தமிழ் நூல்களும் இனிய, எளிய தமிழில் கற்பனைவளம் செறிந்து காணப்படுகின்றன.
எந்தவொரு செயலைத் தொடங்கும்போதும் அது இடையூறுகளின்றி நிறைவேற வேண்டி சிவபிரானின் மூத்த மகனான விநாயகப்பெருமானை முதலில் வணங்கிவிட்டே தொடங்குவது வழக்கம். ஆகவே நமது வழிபாடுகளிலும் அனைத்துச் செயல்களிலும் விநாயகர் முதலிடம் வகிக்கிறார். விநாயகரைப் பற்றி, அவர் தோன்றிய வரலாறு, கதைகள் பற்றி விரிவான விநாயகர் புராணம் உள்ளது. அவ்வையாரும் விநாயகர் அகவல் பாடியுள்ளார். தமிழில் எழுந்த எந்தச் சைவசமய நூலும் விநாயகர் வழிபாட்டுடன்தான் ஆரம்பிக்கின்றது. விநாயகர் எனும் பிள்ளையாருக்குப் பல சிறப்புகள் உள்ளன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த பிள்ளையார் மீது ஈழத்திலிருந்து நான்கு பிள்ளைத்தமிழ் நூல்கள் காணக் கிடைத்துள்ளன. இன்னும் கூட இருக்கலாம். காலங்கனிந்து வரும்போது கிடைக்கலாம். இப்போது கிடைத்தவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.
——————————————
1. மட்டுவில் மருதடி தான்தோன்றி வீரகத்தி விநாயகர் பிள்ளைத்தமிழ்
இப்பிள்ளைத்தமிழ் நூல் மட்டுவில் நா. நல்லதம்பி அவர்களால் இயற்றப்பட்டது. 2014-ல் முதல்பதிப்பு வெளியிடப்பட்டது. கோயில் வரலாற்றைப் பார்த்துவிட்டுப் பின் நூலைப் பார்ப்போம்.
நாவாலியூர் சோமசுந்தரப்புலவர் என்பவர் மருதடி விநாயகர் பதிகம் எனும் நூலை இயற்றியுள்ளர். இதனைப் பதிப்பித்த அவர்களின் திருமகளாம் திருமதி வை. மங்கையர்க்கரசி என்பவர் இவ்விநாயகர் கோவிலின் வரலாற்றை எனது பேராசிரியர் முனைவர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்களிடம் கூறியுள்ளார். இதனை முனைவர் ஐயாவின் அருட்சொற்களிலேயே காண்போமா?
“விநாயகக் கடவுள் “அருவமு முருவுமாகி யனாதியாய்ப் பலவா யொன்றாய்ப் பிரமமாய் நின்றசோதிப் பிழம்பு” ஆய் இருப்பார். ஆயினும், அடியார்களுக்கு அருள் சுரக்கும்படி பூமியிலே பல இடங்களிலும் தமது அருட்டிரு மேனியைக் காட்டி வெளிப்படுவார். அங்ஙனம் வெளிப்பட்டருளிய விடங்களில் அன்பர்கள் அவருடைய அருண்மேனித் திருக்குறியை நிறுத்தித் திருக்கோவில் சமைத்து வழிபட்டுவருவர். அங்ஙனம் வழிபட்டுவரும் திருக்கோவில்களில் மருதடியும் ஒன்று.
இஃது இலங்கைக்கு மணிமுடியாக விளங்கும் யாழ்ப்பாண நாட்டிலே வண்டுபடு தாமரைக் குண்டுநீர்க் குளமும், கொண்டல் கண்படுக்கும் தண்டலை வளனும், காய்குலைத் தெங்கும் தீஞ்சுலைப் பலவும், நெடுஞ்சினை மாவும் தீஞ்சுலைக் கதலியும், கன்னலுஞ் செந்நெற் கழனியும் நிறைந்த அருந்தமிழ் மருதச் செழுந்திணை நலனுமுள, வானினனம் மாறாத மானியம்பதியிலே யாழ்ப்பாணத்துக்குப் போகும் தெருவின் முடக்கில் உள்ள முக்கோணத்திடர் என்னும் இடத்தில் தேனினம் முரலச் செழுந்தேன் பிலிற்ற வானளவோங்கும் ஒரு மருதமரத்தின்கீழ் அமைந்துள்ளது. இது மிகவும் பழையது. யாழ்ப்பாண நாட்டை ஆண்ட தமிழரசர் காலத்திற்கு முன் தோன்றியது என்று பெரியோர் கூறுகின்றனர்; அது எப்போது தோன்றியதென்று அறுதியிட்டுக் கூற முடியாது.
ஆதியில் அது அடியார் பொங்கல் செய்து பூசிக்கும் இடமாகவே இருந்தது. பின்பு வேளாள மரபில் உதித்த சிவபூசையாளரால் பூசிக்கப்பட்டு வந்தது. இப்பொழுது அந்தணரால் பூசை செய்யப்பட்டு வருகின்றது. இதற்குத் தென்மேற்குப் புறமாகப் பிள்ளையார் குளம் என்னும் பெயருடைய ஓர் திருக்குளமுண்டு. இங்கே ஒருநாளும் குறையாது பொங்கல் வணக்கம் நடைபெற்று வருகின்றது. திருக்கோவில் கிழக்கும் மேற்கும் வாசலும் கோபுரமுமுடையது. வாயில் மேற்கு வாயில். சுவாமிக்கு வீரகத்தி விநாயகர் என்ற பெயருண்டு. தாடொழு மடியவர் நாடொறுங் குழுமி, இங்கிதமொடுபுரி பொங்கல் மண்டபமும், வாய்த்திடு பங்குனி வருநாள் விழவினிற் தீர்த்த நின்றாடும் தீர்த்த மண்டபமும், அணித்தேர் நிறுத்து மணித்தேர் நிலையமும், விழுமிய சிறப்பிற் கழுநீர்க் கூவலும், உண்ணீருதவும் நன்னீர்க்கிணறும், அடியவவர் குழுமும் தெளிபுனற் குளனும், மாவும் மருதும் வன்னி மந்தாரையும் பாமலி செந்நெற் பழன நற்பரப்பும் வீதியிலுடையதாய் இப்பொழுது விளங்குகின்றது. நாட்பூசையும் திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.
விழாக்காலங்களில் அடியவர்கள் திருவீதியில் உடம்பினாலுருளுதல், காவடி எடுத்தல் முதலாகிய தொண்டுகளைச் செய்து விரதமிருந்து வழிபாடாற்றி வருவர். ஆண்டுதோறும் பங்குனித் திங்கள் பதினைந்தாநாள் கொடி ஏறிச் சித்திரைத்திங்கள் முதலாம் நாளில் தேர்த்திருவிழாவும், இரண்டாநாள் தீர்த்தத் திருவிழாவும் நடந்து வருகின்றன. இவையிரண்டின் காட்சி வெகுமாட்சியானது. ஆதிநாட்டொடங்கி அடியார்கள் வேண்டியதை வேண்டிய வண்ணங் கொடுக்கும் அற்புதமான தலமிது வென்று அன்பர்கள் கூறுகின்றார்கள்.‘ (மருதடி விநாயகர் பதிகம்- தாரகை மின்னிதழ்)
இந்தப் பிள்ளையார் மீதான பிள்ளைத்தமிழ் நூலும் அருமையாகத் தொடங்குகிறது. பிள்ளைத்தமிழ் இலக்கணப்படி காப்புப் பருவத்து முதற்பாடல் திருமால் மீதே அமையும். பின்பு, சிவபிரான், உமையம்மை, ஏனைய தெய்வங்கள் என விளித்துப் பாடப்படுவர். அப்போது அவர்களின் சிறப்புகளும் பெருமைகளும் கூறப்படும். இந்த பிள்ளைத்தமிழ் நூலிலோ வினாயகப் பெருமானின் பெருமைகளைக் கூறி, அத்தகைய பெரியோனைப் பாடுதற்கு விக்கினங்கள் வராமல் காத்தருள் எனப் புலவர் வேண்டுவது ஒரு மாறுபாடான உத்தி. இந்நூலின் காப்புப் பருவத்துப் பாடல்கள் அனைத்துமே பெரும்பாலும் இவ்வண்ணமாகவே உள்ளன.
செங்கீரைப்பருவத்தின் முதற்பாடல் அழகானது.
அம்மையும் அப்பனும் உலகென உணர்ந்து
அங்கவர்க் காணாது, அங்கம்புரண்டு
வெம்பியும் விசும்பிற் தேடியுங் காணார்
விம்மியும் கண்ணீர் மல்கியும்
தம்பியோ மயிலேறித் தாவிப் பறந்தான்
தாயும் தந்தையும் உலகென
நம்பிய மட்டுவில் மருதடி விநாயகன்
நலமுடன் செங்கீரை யாடியருளே.என ஒரு இனிய தத்துவத்தை உள்ளடக்கிய பாடலிது.
பின்னும் ‘கைத்தல நிறைகனி’ எனும் திருப்புகழ் வரியையும், அவ்வையாரின் ‘பாலும் தெளிதேனும்’ என்ற பாடல் வரியையும் உள்ளடக்கி யாத்த செய்யுட்களையும் இப்பருவத்தே காணலாம்.
தாலப்பருவத்துப் பாடலொன்று:
தலைபத்தோ னிராவணன் தாய்வணங்க இமயகிரி
தனையசைக்க உமையாள் கரம்பற்றுந்
தலைமகனே!….. ” எனத் தொடங்குகிறது.இராவணன் கயிலையைப் பெயர்க்க அதனை அசைத்தபோது உமையம்மை அஞ்சினாள். சிவபிரானைத் தழுவிக் கொண்டாள். தாய்க்குத் தலைமகனான விநாயகப் பெருமானும் அவளுடைய கரத்தைப் பற்றி ஆறுதலளித்தார் என்பது இனிய கற்பனை! விநாயகப்பெருமான் ஒரு கொம்பன், இரு கையன், மும்மதத்தன், நால்வாயன், ஐங்கரத்தன், ஆனைமுகன் என விளங்குகிறான் என்கிறார் சப்பணிப் பருவப் பாடலொன்றில்.
‘வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்,’ எனவும், ‘திருவாக்கும் செய்கருமம் கைகூடும் செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும்‘ என்ற பழம் தோத்திரப் பாடல்களின் வரிகளையும் தம் கவிதையில் எடுத்தாண்டுள்ளார் இப்புலவனார்.
அம்புலிப்பருவத்தை இப்புலவர் எடுத்தாண்டுள்ளது பிள்ளைத்தமிழ் நூல்களினின்றும் வேறுபட்டுள்ளது. வழக்கமாக சாம, தான, பேத, தண்டம் ஆகிய் உபாயங்களால் அம்புலியை குழந்தையோடு விளையாட அழைப்பர். “காசினியிற் பிள்ளைக்கவிக் கம்புலி புலியாம்,” என்ற சொற்றொடரே இதனாற்றான் எழுந்தது எனலாம். இந்நூலில் பிள்ளையாரின் பெருமைகளைக் கூறி, அத்தகைய விநாயகனுடன் ஆடவா அம்புலியே! எனக் கூறுவதாகவே பத்துப் பாடல்களும் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக,
‘கண்டவர் வியப்புறும் வகைஅருணன் ஒளியால்
கவினார் ஒளியைப் பெற்றிடும்
பண்பினால் நின்னி யொத்திடும் வேழமுகன்
மட்டுவிற் பதியினில் மருதமர நிழலமர்
வெண்டரளக் கொம்பன், வேழமுகத் தெம்பிரான்
விநாயகனோ டம்புலீ! ஆடவாவே
அண்டரும் பழமறையும் ஓலமிட நின்றஎம்
ஆனைமுக னொடம்புலீ! ஆடவாவே,‘ என ஒரு பாடல்.அடுத்துக் காணும் சிற்றிற்பருவத்திலும், “மிகுந்த விருப்பினில் முயன்று கட்டிய அச்சிறு மங்கையர் சிற்றில் சிதையேலே,’ என்றும், “தேனிகர் மொழிபகர் அழகியர் செய்சிறு சீர்பெறு சிற்றில் சிதையேலே,’ எனவும், வேண்டுவதாகவே அமைந்துள்ளன.
சிறுபறை, சிறுதேர்ப் பருவங்களின் பாடல்களும் இவ்வாறே விநாயகர் புகழையே முன்னிலைப்படுத்தி இய்ற்றப்பட்டுள்ளன.
2. இணுவில் செகராச பிள்ளையார் பிள்ளைத்தமிழ்
இணுவில் பரராச சேகரப் பிள்ளையார் கோயில் ஈழத்தில் ஜாஃப்னா விலிருந்து 4 மைல்கள் தள்ளி இருக்கும் இணுவில் எனும் இடத்தில் உள்ளது. சுமார் 600- 700 ஆண்டுகள் பழமையான இக்கோயில் ஜாஃப்னா அரசுடன் தொடர்பு வாய்ந்ததாகும். முக்கிய தெய்வம் பரராச சேகரப் பிள்ளையார். 14-15 பொது நூற்றாண்டுகளில் ஜாஃப்னாவை ஆண்ட அரசனான சிங்கைப் பரராஜசேகரனால் இக்கோவில் கட்டப்பட்டது. தான் எக்காரியத்தைத் தொடங்கு முன்பும் இக்கோவிலில் வழிபட்டுச் செல்வது அவனுடைய வழக்கம். இதனை மடத்து வாசல் பிள்ளையார் கோவில் எனவும் அழைப்பார்கள்.
இந்தப் பிள்ளையார் மீதான பிள்ளைத்தமிழ் நூலானது ச. வே. பஞ்சாட்சரம் எனும் புலவரால் 1988ல் இயற்றப்பெற்றதாகும். இந்தப் பிள்ளையார் இவருடைய குலதெய்வமாவார். தன்மீது பிள்ளைத்தமிழ் பாடுமாறு பிள்ளையாரே இவருடைய கனவில் வந்து ஆணையிட்டார்; அதனால் இதனைப் பாடினார் என அறிகிறோம்.
காப்புப் பருவத்தில் வழக்கம்போலப் பல கடவுளர்களையும் அழைத்துக் குழந்தையைக் காக்க என வேண்டுகிறார் புலவர்.
செங்கீரைப் பருவத்துப் பாடல்களுள் ஒன்று ஈழத்துக் கோயில் விசேடங்களின்போது நடக்கும் பலவகையான காவடியாட்டங்களையும், பிரதட்சிணம், தீமிதிப்பு ஆகிய வேண்டுதல்களை விளக்குகிறது. இப்படிப் பலவகையான வேண்டுதல்களை நிறைவேற்றி பக்தர்கள் கொண்டாடும் தந்தமுகனே! தம் தலையிற் குட்டிக்கொண்டு உன்னை வழிபடுவதல்லது உன் தலையிலேயே குட்ட வரும் (கோவில் சொத்தைக் கொள்ளையடிப்பவர்கள் எனப் பொருள் கொள்ளலாமா?) மனிதர்களும், மண், பெண், பொன் ஆகியவற்றால் மதிகெட்டவருமாகியோரின் ஆட்டத்தைக் கண்டு அவர்களை நெறிப்படுத்துபவனே! செங்கீரையாடுக! என வேண்டுவதாக அமைந்த பாடல். பொதுவாக அனைத்துப் பாடல்களுமே இத்தொனியிலேயே அமைந்து இயற்றியவரின் மனக்கிலேசத்தையும் தாபத்தையும் வெளிப்படுத்துகின்றன. அதைத் தணிவித்து அருள்பவன் செகராசப்பிள்ளையார் எனுங்கருத்து வெளிப்படுகின்றது.
பறக்குங் காவடி, துள்ளாட்டம்
பல்குங் காவடி, பாலமுதம்
நிறைக்குங் காவடி, பிரதட்டை
நிகழ்த்துங் காவடி தணல்பொங்கும்
தெறுந்தீ மிதிப்பு முதற்பத்தி
சிறக்கும் வைராக் கியர்ஏத்தும்
கறந்த பால்வெண் தந்தமுகா!
கையால் தம்தலை தமில்குட்ட
மறந்துன் தலையிற் குட்டவரும்
மண்,பெண், பொன்னில் குலைந்தவர்கள்
திறங்காண் செகரா சக்குருவே!
சிறுதளி இணுவை மாமன்னா!
முறம்பயில் செவிகள் மொய்த்தலைய
முக்கண்! ஆடாய் செங்கீரை!
வறங்கெட மாரி வான்பொழிய
மகிழ்ந்தெழுந் தாடாய் செங்கீரை!இன்னும் ஒரு பாடலைக் காண்போம். சொன்னயமும் கவிதை நயமும் மிகுந்த ஒரு தாலப் பருவப்பாடல்:
முப்புரமெரிக்கச் சென்ற சிவபிரான் பிள்ளையாரின் அருளை முதலில் பெற்றே சென்றான்; செகராசப் பெருமானே! பிரணவமாகிய உன்னையீன்ற பிடிபோலும் உமையன்னை உன்னைப் பூந்தொட்டிலில் வளர்த்தித் தாலாட்ட நீ கேட்டுச் சிரித்தபடி உறங்குவாயாக எனும் அழகான பாடல்:
மூன்று புரமெரிக்க முக்கண்ணன் போங்காலை
ஆன்ற மகனாமுன் அருள்பெற்றான் என்பார்கள்!
ஊன்றி உனையெண்ணும் உத்தமர்நெஞ் செல்லாமே
தோன்றி இனிமைபல தூண்டச் செகராசக்
கோன்றன் கோவில் குடிகொண் டமர்வோனே!
ஈன்றாள் பிரண் வமென்னும் பிடியானை
போன்றாள்- உமையாள்- பூந்தொட்டி லாட்டவெழுந்
தேன்பா யிசைகேட்டிச் சிரித்துறங்கு தாலேலோ!(வளரும்)
-

இலங்கையில் பாரதிய ஜனதா கட்சி
இந்தியாவின் ஆளும் கட்சியாக, மாபெரும் சக்தியுடன் திகழ்கிறது, பாரதிய ஜனதா கட்சி. இந்நிலையில் இலங்கையிலும் பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சிவசேனா என்ற பெயரில் கட்சி இருக்க, அதே பெயரில் இலங்கையில் சிவசேனை என்ற பெயரில் ஒரு கட்சியை மறவன்புலவு சச்சிதானந்தன் தொடங்கியுள்ளார். இலங்கை பா.ஜ.க. குறித்தும் சங்கி என்ற வசை குறித்தும் அவருடன் ஓர் உரையாடல்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

திருவல்லிக்கேணி கண்டேனே | திருமங்கை ஆழ்வார்
திருமங்கை ஆழ்வார் அருளிய ‘திருவல்லிக்கேணிக் கண்டேனே!’ என்ற பாடலை ஸ்ரீ நவநீத கிருஷ்ண பக்த பஜனை சபைக் குழுவினர் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் அமுதத் தமிழில் திளையுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

பங்குச் சந்தைகள் மேலும் சரியுமா?
பங்குச் சந்தைகள் இறங்குமுகமாக உள்ளன. அந்நிய முதலீடுகள் பெரிய அளவில் வெளியேறியுள்ளன. பணவீக்கமோ உச்சத்தில் உள்ளது. பொருளாதார மந்தநிலை வருமோ என்ற அச்சம் உள்ளது. இந்தப் பின்னணியில் பங்குச் சந்தைகள் மேலும் சரியுமா? இத்தகைய சூழலில் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் வழங்கும் ஆலோசனைகள் இதோ. பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

கிளாசிக் கொசுவலை – ஒரு மதிப்பாய்வு
அண்மையில் நாங்கள் வாங்கிய கொசுவலை, இரண்டு சிக்கல்களைத் தீர்க்கிறது. இது குறித்து எங்கள் அனுபவத்துடன் கூடிய மதிப்பாய்வு.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

பல்லாண்டு பல்லாண்டு | பெரியாழ்வார்
பாடப் பாட இனிப்பது, பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டுப் பாடல். இதை ஸ்ரீ நவநீத கிருஷ்ண பக்த பஜனை சபைக் குழுவினர் பாடக் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

Marie Biscuits and Thayir Saadham
Baskar SeshadriWhen I was away on my work this morning I stopped for a while to look at the sunrise and of course the water Birds . When I was enjoying the scenic beauty I spotted one young girl sitting in front of the steps area and Pavement . I initially thought she was doing a sun rise prayer and was about to leave.But I quickly understood that she was actually feeding those four legged with Marie Biscuits . I was surprised to them enjoying the breakfast with such a speed. When I just asked the girl how she was able to understand that they love biscuits, she said she saw an elderly man sometime ago feeding the same. She was impressed by the action and make it a point to feed whenever she finds time. Its just not a service ,feed , donation or a pass time hobby .She does this with a big love and literally she speaks with them and loves them . She talks in their language and does all this sitting comfortably for long time in front of them . Shanthi , this young girl says they all love curd-rice among other things . Its a big deal to be nothing inside but with just love . This is wholesome of life and I see the same In Shanthi. Long Live Shanthi. -

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் இமயச் சரிவில் உலகிலே உயர்ந்த இரும்பு வளைவு இரயில் பாலம்
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா
The world’s tallest iron arch is the Indian Railway Bridge, Jammu & Kashmir. https://youtu.be/3sgcG40gYIM
On 7th November, 2017, the main arch of the rail bridge on river Chenab in Jammu and Kashmir which is being called the of world`s tallest rail bridge has been launched by Indian Railways.
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் இமயச் சரிவில் உலகிலே உயர்ந்த இரும்பு வளைவு இரயில் பாலம்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ரயில் பாதைகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் 2004 ஆண்டில் இந்திய இமயச் சரிவில், செனாப் ஆற்றைக் கடக்க மாபெரும் இரும்பு வளைவு ரயில் பாலம் ஒன்றைக் கட்ட, இந்தியா திட்டமிட்டது. நீண்ட பாலம் இணைக்கும் பக்கால் & கௌரி பகுதிகள் ஜம்மு காஷ்மீரில் உள்ளன. இரும்பு காங்கிரீட் வளைவுப் பாலம் செனாப் நதிக்கு மேல் 1180 அடி [360 மீடர்] உயரத்தில் முதன்மையாக உலகத்திலே உயர்ந்த ஒரு ரயில் பாலமாக கட்டப்பட்டு உள்ளது. 2004ஆம் ஆண்டில் திட்டம் சிந்தையில் உருவாகி, 2017ஆம் ஆண்டில் செனாப் நதிப் பாலத்தின் அடித்தளப் பீடம் கட்டி முடிக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டில்தான் இருபுறத்துப் பெரும் வளையங்களின் மையத் துண்டு இணைக்கப்பட்டது. 1486 கோடி ரூபாய்ச் செலவில் கட்டப்பட்ட இந்தப் பெரிய பாலம், இந்திய உள்கட்டமைப்பின் உன்னதமாகக் [Infrastructure Marvel] கருதப்படுகிறது.
செனாப் நதிப் பால இடைத் தூரம் ; 4050 அடி [1315 மீடர்]. ஆக மொத்தம் 17 இடைவெளித் தூண்கள் கொண்டது. இந்த பாலம் குறைந்தது 120 வருடம் நீடிக்கும் என்று திட்டமிடப்பட்டது. இமாலயப் பூகம்பப் [Seismic Zone IV ] பகுதி 4 இல் 8 ரிக்டர் ஆற்றல் தாங்கும் வலிமை உள்ளது. புயலடிப்பு வேகம் 150 mph [260 kmph ] எதிர்கொள்ளும் நிலைப்புத் திறன். பாலத்தில் போகும் ரயில் 100 kmph [60 mph] வேகத்தில் கடக்க டிசைன் செய்யப்பட்டது.
ConstructionThe Chenab Rail Bridge was originally intended to be completed in December 2009. However, in September 2008, the project was halted due to fears over the bridge’s stability and safety. Work on the bridge restarted in 2010, with the plan to complete it in 2015.
The design and construction was awarded to Afcons Infrastructure, a part of the Shapoorji Pallonji Group, the third-largest construction group in India, with the help of IISc Bangalore. Major construction decisions were taken by Konkan Railway Corporation. The Defence Research and Development Organisation (DRDO) helped in the design of the bridge, making it blast-proof using special steel.
The erection scheme for the bridge is a project in itself. Two pylons (about 130 m and 100 m high) were erected on either side of the river, and two auxiliary self-propelled cable cranes (capacity of 20 tonnes each) were used to tow temporary auxiliary ropes across these pylons. The ropes were used to support the partly finished arch parts. After arch completion, the trusses will be added, finally the girder will be constructed as a horizontal sliding type platform.
Project status
- Jul 2017: Construction work resumed on the bridge.
- Nov 2017: The work bridge’s arch is was expected to be completed By May 2019.
- Nov 2018: The bridge is now under active construction.
- Dec 2018: The project was expected to be completed by the end of 2019, but at this time, it seems unlikely.
- Aug 2019: 80% of construction work has been completed on the bridge, and is expected to be opened in mid-2020.
- Nov 2019: 83% work has been completed on the bridge, and is now expected to be opened in March 2021.
- Jan 2020: It is now expected to be opened in December 2021.
- April 2021: Work on both the ends of the bridge’s arch is finally completed. It is now expected to be opened in 2022.
- June 2022: About 90% of construction work has been completed, and is now confirmed to make the bridge operational by December 2022.
Maintenance
Regular painting of large bridges is an intimidating task; hence, a painting scheme was developed, having renewal of over 15 years, compared to approx. 5 to 7 years in most other Indian railway bridges.
Interesting Facts about the Chenab Railway Bridge
Given below are some interesting facts on the Chenab Railway Bridge.The total cost estimated of the Chenab rail bridge is Rs 1,486 crores.
The Chenab bridge covers a total length of 1,315 metres.
There are 17 spans in total over the Chenab Rail Bridge.
The life of the Chenab Railway bridge is 120 years.
Trains are allowed to pass across the Chenab bridge at a maximum speed of 100 kilometres/hour.
The highest bridge in India has been designed by consulting DRDO (Defence Research and Development Organisation).
The Chenab Bridge is designed to withstand wind speed up to 266 kilometres/hour.
It is designed to bear earthquakes of up to 8 magnitudes.
For joining the different parts of the bridge, approximately 584km (Jammu to New Delhi) of welding has been done.
For the first time, the Indian Railways have launched the curved viaduct portion by using the method of End-launching.
Warning and health monitoring systems have been extensively planned through state-of-art instrumentation.
Srinagar’s cable crane pylon stands at the height of 127 metres, making it higher than Delhi’s Qutub Minar (72 metres).
For testing the welds, a phased array ultrasonic machine has been used by the Indian Railways for the first time.
Features of the Arch of the Chenab Bridge
Here are some of the features of the spectacular arch of the Chenab River Railway Bridge.The Chenab River bridge is 35m higher than the world-famous Eiffel Tower in Paris.
The arch is made by using boxes of steel. The boxes will be stuffed with concrete to improve stability.
The arch of the Chenab River bridge weighs 10,619MT.
A first in the Indian Railways history, the members of the arch were erected by using overhead cable cranes.
The construction of the Chenab River Rail Bridge involved the usage of 28,660 Meta Tons of steel.
For structural detailing of the Chenab River bridge, Tekla software has been used.
List of Contractors Involved in the Chenab River Project
Below is the list of the contractors who were actively involved with the Chenab River Project.Department Name of Project Contractor
Foundation Protection Designer Indian Institute of Science (IISc), Bangalore
Slope Stability Analysis Indian Institute of Technology (IIT), Delhi
Executing Agency Konkan Railway Corporation Ltd.
Seismic Analysis Indian Institute of Technology (IIT), Delhi & Roorkee
Proof Consultant for Foundation and Foundation Protection M/s COWI, UK
Arch Designer M/s Leonhart, Andra and Partners (Germany)
Viaduct and Foundations Designer M/s WSP (Finland)
Executing Agency Konkan Railway Corporation Ltd.
Challenges Faced while constructing the Chenab Railway Bridge
Here are the challenges faced while constructing the Chenab Railway Bridge.The rugged and mountainous Himalayan terrain posed a threat to the construction of the Chenab Rail Bridge. 900 metres tall cable cranes were installed on both sides of the Chenab gorge to build the arch of the bridge.
At such a high altitude, the bridge construction was festered with winds up to 50-60 kmph. The construction work was also hampered because of frequent and unprecedented rains, thunderstorms, landslides and snowfall.
This is why assembling the arch showcased the great work projection of the engineering skill.
Work on the arch construction started back in 2005. It was only finally linked after 16 years in March 2021.Analysis for tunnel construction and earthquake also posed a challenge due to the persisting winds and the treacherous terrain.
Never Seen before view from Crown of Arch of Chenab Bridge
INFORMATION
-

குறளின் கதிர்களாய்…(411)
செண்பக ஜெகதீசன்
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை விழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
-திருக்குறள் -137 (ஒழுக்கமுடைமை)புதுக்கவிதையில்…
ஒழுக்கத்தில் நல்லதாய்
ஒழுகுவோர் பெறுவர்
ஒப்பிலா மேன்மை
உலக வாழ்வினிலே,
ஒழுக்கம் தவறுவோர்
பெறுதற்குத் தகாத
பெரும்பழியே பெறுவர்…!குறும்பாவில்…
ஒழுக்கமுடையோன் பெறுவான் வாழ்வில்
ஒப்பிலா மேன்மை, இல்லாதான் எய்துவான்
ஒன்றுமிலாப் பொல்லாப் பழியே…!மரபுக் கவிதையில்…
நிலத்தில் மனித வாழ்வினிலே
நித்தம் தேவை நல்லொழுக்கம்,
நலமே பெறுவர் அதனாலே
நன்மை யோடு மேன்மைசேரும்,
பலமாம் இதனைப் பேணாதார்
பயனே இல்லா மாந்தராகிப்
பலனே இல்லா அழிவுதரும்
பழியை மட்டும் பெறுவரே…!லிமரைக்கூ…
மேன்மைதரும் நல்லொழுக்க வழியே,
மேதினி வாழ்வில் இதைப்பேணார் பெற்றிடுவர்
மிகவும் அழிவுதரும் பழியே…!கிராமிய பாணியில்…
வேணும் வேணும்
ஒழுக்கம் வேணும்,
வாழ்க்கயில நல்ல
ஒழுக்கம் வேணும்..ஒழுக்கத்தோட வாழுறவுங்களுக்கு
வாழ்க்கயில நல்ல
மேன்ம கெடைக்கும்,
ஒழுக்கமில்லாதவங்களுக்கு
ஒரு பயனுமில்லாத
பழிதான் வருமே..அதால
வேணும் வேணும்
ஒழுக்கம் வேணும்,
வாழ்க்கயில நல்ல
ஒழுக்கம் வேணும்…! -

இராகவனே தாலேலோ | குலசேகர ஆழ்வார்
‘கொங்குமலி கருங்குழலாள்’ மற்றும் ‘ஆலினிலைப் பாலகனாய்’ எனத் தொடங்கும் தாலாட்டுப் பாடல்கள் இதோ. குலசேகர ஆழ்வார் இயற்றி, நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இடம்பெற்ற இந்த அழகிய பாசுரங்களை முகுந்த இராமானுஜ தாசர் பாடக் கேளுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

மன்னுபுகழ்க் கௌசலை | குலசேகர ஆழ்வார்
குலசேகர ஆழ்வாரின் இனிய தாலாட்டுப் பாடல், ‘மன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே’. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் இந்த அழகிய பாசுரத்தை முகுந்த இராமானுஜ தாசர் பாடக் கேளுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

ராமானுஜா ராமானுஜா | முகுந்த இராமானுஜ தாசர்
வையகம் போற்றும் வைணவ ஆசார்யர், இந்து மதத்தின் எழுச்சித் தலைவர், புதிய சீர்திருத்தங்களை நிறுவிய புரட்சிக் கனல் இராமானுஜரை அடியவர்கள் வணங்கி மகிழ்கிறார்கள். ‘ராமானுஜா ராமானுஜா’ என்ற பாடலை முகுந்த இராமானுஜ தாசர் பாடி ஆடுவதைப் பாருங்கள். திருநீர்மலை இராமானுஜர் கூடத்தில் நடைபெற்ற பஜனை.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)










