Blog

  • காதல் பாடம்…!

     

    ஜெயஸ்ரீ ஷங்கர்

     
    கவின் முகில் மெல்லக் கடந்தது காடு…!
    இருள் சூழ் வேளை தனில் சூழ்ந்தது தென்றல்
    தொட்ட மரங்கள் சிலிர்த்தெழுந்தது
    பச்சை இலைகளுக்குள் கலகலப்பு…. சலசலப்பு…!.

    இச்சைக் கிளிகள் இரவோடு இரவாக
    அலகுரசிக் கொஞ்சும்போது….
    குண்டு விழிகள் கெஞ்சும்..அஞ்சும்..
    மிஞ்சியே சேர்ந்து விரிக்கும் சிறகு..

    காதல் கிளிகளாய் மலர்ந்த விடியலில்
    உல்லாச ஊர்கோலம் மோகங்களோடு
    மேகங்களும் சந்தோஷ வானில்
    காதல் கொண்டு கட்டிக் கலக்கும்..

    உயர் மலைகள் ஊடே புகுந்து
    ஆடை கலைந்து அழுதிடுங்கால்
    பூமி சிலிர்த்துச் சிரித்துப் பூக்கும்
    காய்த்துப் பழுத்து இனிக்கும்…!

    இங்கிருந்து அங்கு சென்று
    வண்ணக் கால்கள் ஊன்றி
    வான் வீதியில் ஊஞ்சல்
    கட்டி தூது சாற்றும் வானவில்…!

    மௌனமாய்த் தலை திருப்பும்
    ஆதவனின் நாயகி…காந்தி..
    காந்தமாய் இழுப்பிற்கெல்லாம்
    உறவு சொல்லிச் சிரிக்கும் முகம்..!.

    கார் வண்டு மொய்த்துத்
    தடாகத் தட்டில் பெயர் பொறித்து
    மலருக்கு மலர் தூது சொல்லித்
    தேனால் கவி எழுதும் தாமரைகள்..!

    உலகத்து நாயகிகள் காதலாய்
    நித்தமிடும் கையெழுத்து
    உள்ளத்தைத் தட்டி இன்பம்
    தரும் இயற்கை தேவதைகள் ..!

    குற்றால அருவி போல்
    வற்றாத அலைகள் போல்
    பாரெங்கும் சிதறிச் சிரிக்கும்
    காதல் சில்மிஷங்கள்.!

    ஏட்டிக்குப் போட்டியில்லை….
    கண்களில் பொறாமையில்லை….
    இதயத்தில் ஈட்டி எரிவதில்லை…
    முகத்தில் திராவக வீச்சுமில்லை..!

    மனங்களைக் கொல்லாமல்
    மதங்களைக் கொள்ளாமல்
    மௌனமாய் நித்தம் நடத்தும்
    புகட்டும் காதல் பாடம்…!

    கண்ணிறைந்து நெஞ்சம் நிறைத்து
    அழகு தரும் அற்புத காட்சி கண்டு
    காதலர் மனம் ஆழ்ந்து சுவாசிக்க
    இயற்கையாய் காதல் செய்வோம்..!

    உறவால் பிரிவின்றி
    உயிருள் பயமின்றி
    புள்ளிமான் மனதோடு
    திடமாய் காதல் செய்வோம்…!

    ஆயிரம் பிறைகள் கடந்தும்
    ஜென்மங்கள் பல தொடர்ந்தும்
    தோன்றிய காதலாய் நெஞ்சங்கள்
    அமைதியில் ஆடட்டுமே..!

     

    Share
  • உபயகுசோலபரி!…..3

    இன்னம்பூரான்

    அன்பார்ந்த நண்பர்களே.

    இனிமேல் எல்லாம் கடுதாசி தான். நலம் நலம் அறிய அவா. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி எழுதுகிறார்கள். நான் கடிதம் போடுகிறேன். அதில் என்ன வசதியென்றால், நாமே திசை மாறலாம்; திசை திருப்பலாம், மற்றவர்கள் கடுக்காய் கொடுக்கும் முன். இன்று மிகவும் அசதி. அதை போக்க வந்து சேர்ந்த வரன்கள் பல.

    ஆதவன் மறையும் வேளையில் இந்தியாவிலிருந்து பரிச்சியம் இல்லாத நண்பர் ஒருவரிடமிருந்து, என் மகன் மூலமாக வந்த பரிசுகள் என்னை திக்குமுக்காட வைத்தன. தத்க்ஷணமே அவர் இன்னம்பூர் ஶ்ரீநிவாசப்பெருமாளுக்கு (குலதெய்வம்) என் பெயரில் அர்ச்சனை செய்து அனுப்பிய பிரசாதம்; திருமலை தேவஸ்தான காலெண்டர், டயரி, லட்டு, காஞ்சி மஹாப்பெரியவாளின் அனுக்ரஹவர்ஷா 2013 & வேதகோஷம் ஆடியோ பதிவுகள். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், இந்த சாயரக்ஷை, ஒரு உஷத்கால ஆலயமணி. அவை என் முன் வந்து குவிந்து, என்னை வியப்பிலும், இறை வணக்கத்திலும் ஆழ்த்துவதற்கு முன்னால், இந்த கடிதம் எழுதுவதற்குப் பிரமேயமாக சில காரியங்கள் நடந்தன. எனவே, வேறொரு திசையில் இது ஒரு அறிமுகம் என்க.

    ஒரு வருடமாக திறக்காத ஒரு கருவூலத்தை, யதேச்சையாக பார்வையிட்டேன். அது சொன்ன கதை. வருடங்கள் கடந்தோடின. 60 வருடமே ஒரு சுற்று. 70 வருடங்கள் ஆயின. முனைவர் பாண்டியராஜா கணக்குப்போட சொல்லிக்கொடுத்தாலும், பத்து விரலை வைத்துக்கொண்டு 85 வருடங்களை எப்படி எண்ணுவது, ஐயா? 85 வருடங்களுக்கு முன்னால் திருச்சி பிரமுகர் ஒருவரின் பரிந்துரையின் படி, ஏகலைவனாகிய என்னுடைய குருநாதர் திரு.வி.க. அவர்களின் நவசக்தியில் ‘தேனீ ‘ என்ற பெயரால் ஒருவர் உதவி ஆசிரியராக பணி புரிந்தார். மஹாகவி பாரதியாரின் அருமை தம்பி பரலி.சு.நெல்லையப்பர் அங்கு அவருடைய சகபாடி. அவர் ‘தேனீ’’யை ஒரு இதழாசிரியரிடம் அழைத்து செல்கிறார். அடுத்து வருவது தேனீயின் ‘ஏட்டிக்குப்போட்டி’ என்ற படைப்பு. ஹாஸ்யம் துள்ளாமல், துள்ளி விளையாடுகிறது. அதிசயித்த இதழாசிரியர் அதை தன் அன்னையிடம் வாசித்துக் காண்பிக்கிறார். அவரும் சுவைக்க, ‘ஏட்டிக்குப்போட்டி’ அச்சேறுகிறது. தமிழுக்கு ஒரு புதிய இலக்கிய நீச்சல்/தவழல்/தளர்நடை/காந்தியை போல் விறுவிறுப்பு நடை/ துள்ளல்/ ஓட்டம் எல்லாம் புதிய வரவுகளாக திகழ்கின்றன. எல்லாம் சொற்பகாலத்தில் மட்டும். (15 வருடங்கள்) ‘தேனீ’ யாக வந்து செந்தமிழை நமக்கு தேனாக, தேன்பாகாக, பாகு வெல்லமாக, வெல்ல அச்சுகளாக, அக்காரவடிசலாக அளித்த கல்(யாண) கி(ருஷ்ணமூர்த்தி மறைந்து விடுகிறார், 70 வருடங்கள் முன்னால். பிற்காலம் தான் அவர் எழுதி பிரசுரமாகாத கையெழுத்து பிரதி ஒன்று கிடைத்தது. அது 1976ல் கல்கியில் தொடராக வந்திருந்தாலும், ப்ராஜெக்ட் மதுரை வாயிலாக இன்று தான் சற்று நேரம் முன்னால் மின்னாக்கப்பதிவாகக் கிடைக்கப்பெற்றேன். அதிலிருந்து, நம்ம கமலாவின் கடிதத்தை உங்கள் பார்வைக்கு வைத்து மகிழ்கிறேன். இந்த வரவுக்கு அடிகோலியவர் நம் மின் தழிழர் நு.த.லோ. என்பது கூடுதல் மகிழ்ச்சி.

    அப்பப்போ லெட்டர் போட்றது. என்ன சொல்றேள்? எஸ். எஸ். வாசன் எழுதிய உபயகுசலோபரி படித்தீர்களோ? வருத்தமாக இருக்கிறது.

    வரேன்.

    இன்னம்பூரான்

    16 02 2013

    ***********

    கமலாவின் கடிதம்

    “மகாஶ்ரீஶ்ரீ கல்யாணம் அவர்களுக்கு, அடியாள் கமலா எழுதிக் கொண்டது…”

    திருவாளர் கல்யாணம் அவர்களுக்கு அபாக்கியவதி கமலா அநேக கோடி நமஸ்காரங்கள்…..”

    “வணக்கம்’… இந்தக் கடிதம் தங்களுக்கு வியப்பளிக்கலாம்…”

    இப்படிப் பலவிதமாகக் கடிதம் எழுத ஆரம்பித்துக் கிழித்துப் போட்டுக் கொண்டே இருந்தாள் கமலா. நாற்பது பக்க நோட்டுப் புத்தகத்தில் பாதித் தாள்களுக்கு மேல் அடுப்பெரிக்கக் குவிந்துவிட்டன. பாக்கிப் பத்துத் தாள்களைப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டு விட்டு, ‘இதுதான் கடைசி முயற்சி’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு எழுத ஆரம்பித்தாள்.

    “என் இன்னுயிர்க் காதலர்’ கல்யாணம் அவர்களுக்கு,

    ஆம், இந்தக் கடிதத்திலாவது ஒரே ஒருமுறை இப்படித் தங்களை அழைக்க அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறேன். தயவு செய்து இந்தக் கடிதத்தைப் படித்து முடித்த தும் உடனடியாகக் கிழித்துப் போட்டுவிடுவதுடன் என்னைப் பற்றிய நினைவுகள் தப்பித் தவறித் தங்கள் மனத்தில் ஏதும் இருந்தால் அவற்றையும் அழுத்துவிடுமாறு கோருகிறேன்.

    இக்கடிதம் தபால் மூலம் தங்களுக்கு வந்துசேரும்போது நான் இந்த ஊரைவிட்டோ அல்லது உலகை விட்டோ (எது என்று இன்னும் முடிவு செய்யவில்லை) கிளம்பிப் போய் நீண்ட நேரமாகி விட்டிருக்கும்.

    சிறு வயதிலிருந்தே பெரிய படிப்பெல்லாம் படித்து உலகம் வியக்க விளங்கப் போவதாகக் கனவு கண்டவள் நான். கடைசியில் அடுப்பு ஊதுவது தவிர வேறு எதற்கும் லாயக்கற்றவள் என்பதாக என் தாய் தகப்பனார் தீர்மானித்து விட்டனர். தங்களை முதன் முதலாகப் பார்த்த கணத்திலிருந்து பட்டம் பதவியெல்லாம் ஒரு மண்ணும் வேண்டாம் தங்கள் மனைவி என்ற பட்டமும் தங்கள் இதய சிம்மாசனப் பதவியும் கிடைத்தாலே நான் பெரிய பாக்கியசாலி என்று கருதினேன். அதற்கும் நான் கொடுத்து வைக்கவில்லை.

    இரண்டு ஆசைகளுமே நிறைவேறாவிட்டாலும் பாதகமில்லை. ஏதோ வீட்டோடு இருந்து பெற்றோருக்குச் சமைத்துப் போட்டுக் கொண்டிருந்தாலே, எனக்குப் போதும். ஆனால் அதுவும் முடியாது போலிருக்கிறது. அப்பாவும் அம்மாவும் என் பெற்றோர்களே இல்லை என்பதும் நான் வளர்ப்பு மகள்தான் என்பதும் சமீபத்தில் எனக்குத் தெரியவந்தது. அத்துடன் இவர்கள் சுயநலம் கருதி என்னைப் பெரும் பணக்காரரான ஒரு கிழக் கோட்டானுக்கு விற்றுவிடத் தீர்மானித்துவிட்டார்கள். குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியும் பறித்ததாம் என்ற கதையாகி விட்டது என் வாழ்க்கை.

    இந்த அநீதிகளை எதிர்த்துப் போராடும் ஆற்றல் எனக்கு இல்லை. பவானி அக்காவாக இருந்தால் பணிந்து கொடுக்கவே மாட்டாள். ஆனால் நான் பவானி இல்லையே? இந்தத் துன்பங்களைச் சகித்துக்கொள்ளும் சக்தியும் எனக்கு இல்லை. எனவே நான் யாருமறியாமல் ஓடிவிடப் போகிறேன். தற்கொலை செய்து கொண்டு சாவேனோ, பிச்சை எடுத்துப் பிழைப் பேனோ அல்லது எங்கோ கண் காணாத ஊரில் யார் வீட்டிலாவது பத்துப் பாத்திரம் தேய்த்துப் போட்டு வயிறு வளர்ப்பேனோ தெரியாது. இறைவன் விட்ட வழி.

    உங்களிடம் சொல்லிக் கொள்ளாமல் கிளம்ப மனம் இடம் தரவில்லை. அதனால்தான் எழுதினேன். தவறானால் மன்னித்து விடுங்கள். என் நினைவால் தாங்கள் அல்லல் ..” **** கமலா கையெழுத்துப் போடப் போன சமயம் வாசலில் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. பரபரப்புடன் எழுந்து சென்று ஜன்னல் வழியே பார்த்தாள். “யார் அது?”

    “நான் தான் ரங்கநாதன்” என்று பதில் கிடைத்தது.

    “அப்பா,   அம்மா இல்லையே?”

    “பரவாயில்லை. நான் உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்.”

    கமலாவுக்குக் ‘குப்’ பென்று வியர்த்துவிட்டது. ‘இப்போது என்ன செய்வது? கதவைத் திறப்பதா, கூடாதா?’

    இரண்டொரு கணங்களே யோசித்த கமலா மனத்தைத் தேற்றிக் கொண்டாள். ‘இந்தப் பட்டப் பகலில் என்னை என்ன செய்து விடும் அந்தக் கிழம்?’ என்று தனக்குத்தானே தைரியம் சொல்லிக் கொண்டு வாசல் கத வைத் திறந்தாள். ‘ஏண்டி மாப்பிள்ளையை வாசலில் நிற்க வைச்சே பேசி அனுப்பிவிட்டாயா? அவர் தன்னை அவமதித்து விட்டதா எண்ணிக் கொண்டிருந்தால் என்ன பண்ணுவது?’ என்று அம்மா கேட்டுத் தன்னைக் கோபித்துக் கொள்வாளே என்ற பயமும் கமலாவை இயக்கியது.

    கதவைத் திறந்ததுமே சில்லென்ற வாடைக் காற்று ரங்கநாதனுக்கு முன்பாக வீட்டினுள் நுழைந்தது. மேஜை மேலிருந்து காகிதங்கள் பறந்தன. “அடடா! ஏதோ கடிதம் எழுதிக் கொண்டிருந்தாய் போலிருக்கிறது. எல்லாம் பறந்து விட்டதே” என்ற ரங்கநாதன், ஒரு மூலையில் போய் விழுந்த, எழுதிய தாளைப் பொறுக்கி எடுக்க நடந்தார்.

    “பாதகமில்லை, இருக்கட்டும். நான் எடுத்துக்கொள்கிறேன்” என்று பதறினாள் கமலா. வாய் குளறிப் பேசியதே தவிர உடல் செயலற்றுப் போயிற்று. ரங்கநாதன் செல்கிற அறையின் அந்த மூலைக்கு அவசரமாகத் தானும் விரைந்து அவர் மீது பட்டும் படாததுமாக நெருங்கி நின்று தாளைப் பொறுக்க அவளுக்குக் கூச்சமாகவும் பயமாகவும் இருந்தது. தான் அந்தக் கடித்தத்தில் எழுதியுள்ள ஏதோ ஒன்றை அவரிடமிருந்து மறைக்க முயல்வதாக அவர் கருதிவிடக் கூடாதே என்ற கவலை வேறு.

    அவள் நின்ற இடத்தை விட்டு நகராமலே பதறிக் கொண்டிருக்க அவர் போய் அந்தத் தாளைக் குனிந்து எடுத்து விட்டார். கமலாவுக்கு உள்ளமெல்லாம் வெல வெலத்துப்போக உடலும் நடுங்க ஆரம்பித்தது.

    “யாருக்குக் கடிதம்?” என்று கேட்ட படியே நிமிர்ந்து அவளைப் பார்த்தார் ரங்கநாதன்.

    ***************

    சித்திரத்துக்கு நன்றி: http://s-pasupathy.blogspot.co.uk/2012/06/blog-post_28.html

    உசாத்துணை:

    Project Madurai 443 அரும்பு அம்புகள்

    http://s-pasupathy.blogspot.co.uk/2012/06/blog-post_28.html

    Share
  • ஞான கணேசா!.. சரணம்!… சரணம்!…

    பார்வதி இராமச்சந்திரன்

    இந்து தர்மத்தில் மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள்?….என்ற கேள்வி அநேகமாக பெரும்பாலோருக்கு மனதில் எழும் அடிப்படையில், ‘ஒன்றே பரம்பொருள்’ என்பதே இந்து தர்மத்தின் கொள்கை ஆகும். உலகெங்கிலும் உள்ள எல்லா மதங்களின் அடிப்படைக் கோட்பாடான, ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதே இந்து தர்மத்தின் அடிநாதம். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போது இதற்கு மாறுபட்ட, முரண்பாடுடைய கொள்கைகள் உள்ளதாகத் தோன்றினாலும், ஆழமாகச் செல்லும்போது இந்த உண்மையை யாவரும் உணரலாம்.

    மனிதர்கள் எல்லோரும் ஒரே விதமான மனப்போக்குக் கொண்டவர்களல்லர். அவரவர் சூழ்நிலையைப் பொறுத்து எண்ணங்கள், கொள்கைகள் முதலியவை மாறுபடும். இத்தகைய ஒரு நிலையில், அவரவர் மனப்பாங்குக்கு ஏற்றாற்போன்ற தெய்வத்தை (உருவ) வழிபாடு செய்து, ஆன்மீகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நிலையை எட்டிய பிறகு நிர்க்குண நிராகார பரம்பொருளை வழிபடும் விதமாகவே இந்த ‘பல தெய்வக் கட்டமைப்பு’ ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

    இந்த உருவ வழிபாட்டு முறையிலும், வழிபடுபவர் மனோ தர்மத்துக்கு ஏற்ற வகையில், அம்பிகை, விநாயகர், ஸ்ரீகிருஷ்ணர், முருகன், என்று எந்த திருவுருவின் மீது மனம் லயிக்கிறதோ அதைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு வழிபடலாம். ஏதேனும் ஒரு தெய்வத்தை உபாசனா மூர்த்தியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அதை அன்னையாக, தந்தையாக, குருவாக, குழந்தையாக, தோழனாக, எஜமானனாக எந்த பாவனையில் மனம் லயிக்கிறதோ அந்த பாவனையில் வழிபடலாம். உதாரணமாக, ஸ்ரீ கிருஷ்ணரை, குழந்தையாகக் கருதி அலங்கரித்து, சின்னத் தொட்டிலிலிட்டு வழிபடலாம். கீதை உரைத்த ஞான குருவாகக் கருதி வழிபடலாம். ‘சிங்காதனத்திருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள் ஏலோரெம்பாவாய்’ என்று ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் அருளியது போல், எஜமான பாவத்திலும் வழிபடலாம். ஒவ்வொரு தெய்வத்தைக் குறித்த புராணங்கள் யாவும் இந்த அடிப்படையிலேயே அருளப்பட்டிருக்கின்றன. ஸ்ரீமத் பாகவதத்தில், யசோதைக்குக் குழந்தையாகவும், அர்ஜூனனுக்குத் தோழனாகவும், இடையர்களுக்குத் தலைவனாகவும் ஸ்ரீகிருஷ்ணர் புரிந்த லீலைகளைச் சொல்வது, எந்த பாவனையில், நம் மனம் லயிக்கிறதோ, அந்த பாவனையில் வழிபடும் மார்க்கத்தை நமக்குக் காட்டுவதற்காகத்தான்.

    வழிபடும் முறைகளிலும், எளிய முறையில் வழிபடுவதிலிருந்து, விஸ்தாரமான பூஜா முறைகளில் வழிபடுவது வரை பல்வேறுவிதமான வழிபாட்டுமுறைகள் இருக்கின்றன. மானசீக பூஜைக்கும் மிக உன்னத இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எந்த முறையில் வழிபட்டாலும், இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது ஆத்மார்த்தமான பக்தி உணர்வு மட்டுமே என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

    ஒவ்வொரு தெய்வத்திற்கும் உரிய நிவேதனப் பொருள்களிலும் ஆழமான உள்ளர்த்தங்கள். பொதுவாக, ஒவ்வொரு பண்டிகைக்கும் வெவ்வேறு நிவேதனப் பொருள். பெரும்பாலும், அந்தந்தக் காலகட்டங்களில் கிடைக்கும் காய், பழங்களே நிவேதனத்தில் முக்கிய இடம் பெறுகின்றன. முக்குணங்களான, சத்வ, ரஜோ, தமோ குணங்களின் அடிப்படையிலும் நிவேதனப்பொருள்கள் அமைகின்றன. உதாரணமாக, குழந்தை ரூபத்தில் வழிபடு தெய்வம் இருக்குமானால், பசும்பால், நெய், வெண்ணை முதலிய சத்வ குணம் நிரம்பிய நிவேதனம் குறிக்கப்படுகிறது.

    ஒருவருக்கு துன்பம் நேரிடும்போது, அந்தத் துன்பத்திலிருந்து அவரைக் காப்பாற்றியவரை ‘கைகொடுத்துத் தூக்கிவிட்டுட்டார்’ என்றே சொல்வது வழக்கம். பக்தர்களுக்கு ஏற்படும் சகலவிதமான துன்பங்களிலிருந்தும் கை கொடுத்துக் காக்க வேண்டும் என்பதற்காகவே தெய்வ உருவங்களுக்கு நான்கு, எட்டு, பன்னிரண்டு, பதினாறு எனக் கரங்கள் அமைத்து வழிபடும் முறை வந்தது. சூட்சுமமாகப் பார்க்கும் போது இதற்கு வேறு விதப் பொருளும் உண்டு. அது போல், பரம்பொருளின், படைத்தல், காத்தல், மறைத்தல், அருளல், பிரளய காலத்தில் ஒடுக்குதல் ஆகிய செயல்களைக் குறிக்கும் விதமாகவும், அந்த செயல்களின் சுருக்கம் மற்றும் விரிவாக்கமாகவே மூன்று, ஐந்து, ஆறு, என்று முகங்களுடையவர்களாக தெய்வ உருவங்கள் இருக்கின்றன. ஆனால் எத்தனை முகங்கள் அல்லது எத்தனை கரங்கள் கொண்டதாக தெய்வ உருவம் இருப்பினும், திருவடிகள் மட்டும் இரண்டு. பக்தர்கள் தம் இரு கைகளால் பற்றிக் கொண்டு வணங்க எளிதாக இருக்கும் பொருட்டே அனைத்து தெய்வ உருவங்களிலும் திருவடிகள் மட்டும் இரண்டு என்று கிருபானந்த வாரியார் சுவாமிகள் அருமையாக விளக்குவார்.

    ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு வாகனம். அதிலும் ஆழ்ந்த உட்பொருள். பசுபதியாகிய சிவனாருக்கு காளை வாகனம். பசு என்பது உயிர்கள் எனவும் பதி என்பது இறைவன் எனவும் பொருள்படும். அதைக் குறிக்கும் விதமாக காளை வாகனம். காக்கும் கடவுள் ஸ்ரீ விஷ்ணு, பக்தனுக்குப் பறந்து வந்து உதவுவார் என்பதற்காக கருட வாகனம். பணம் மனிதனை ஆட்சி செய்ய வல்லது என்பதை உணர்த்துவதற்காக, நவநிதிகளின் அதிபதியாகிய குபேரனுக்கு நர (மனிதன்) வாகனம்.

    மந்திரங்கள் அல்லது வழிபாட்டுத் துதிகள் எனப் பார்த்தால் அவை பெரும்பாலும் மறைமுகமாக, auto suggestion என்பதாகவே அமைந்திருப்பதைப் பார்க்கலாம். இறைவனின் எல்லையற்ற பலத்தை, சக்தியைப் போற்றும் அதே நேரத்தில், அவை நமது நம்பிக்கையை வலுப்படுத்துவதாக, எல்லையற்ற சக்தியை வழங்குவதாகவும் இருக்கிறது. நம் உள்ளிருப்பதும் இறைவன் அல்லவா?

    மேற்சொன்னவற்றின் ஒரு உதாரணமாக, ஸ்ரீ கணேசரைப் பற்றி பார்க்கலாம். எப்போது பார்க்க நேரிட்டாலும் ஸ்வாரஸ்யத்தை ஏற்படுத்துகிற விஷயங்களில் ஒன்று யானை. அந்த யானையின் முகத்தைக் கொண்டுள்ள கடவுள் அவர். பெரிய தலை, வயிறு, நான்கு கரங்கள், நீண்ட துதிக்கை, இவற்றுடன் கூடிய ஞானச்செல்வம் கணபதி. பூர்ண ஞானத்தின் வடிவமாகக் குறிக்கப்படுவதால், எல்லா தெய்வங்களின் பூஜைகளிலும் முதல் பூஜை இவருக்குத்தான். தெளிந்த அறிவுச்சுடரின் முன் எந்த இருளும் நில்லாது. அது போல், எடுத்த காரியத்தில் எவ்விதத் தடங்கலும் வராமல் காப்பார் கணபதி. பெரிய தலை, இவர் ஞானத்தின் திருவுரு என்பதைக் குறிக்கிறது. அறிவு எப்போதும் நிறைவாக, ஆழமாக இருக்க வேண்டுமென்பதைக் குறிப்பதே இவரது நீண்ட துதிக்கையுடன் கூடிய யானை முகம்.

    புராணங்களின்படி, ஒவ்வொரு யுகத்திலும் வெவ்வேறு விதமாக கணேசரின் அவதாரம் குறிக்கப்பட்டிருந்தாலும், பார்வதி தேவி, தான் நீராடப் போகும் போது, யாரும் வராமல் காவல் காப்பதற்காக, தன் ஸ்நானப் பொடியைப் பிசைந்து உயிரூட்டிய வடிவமே விநாயகர் என்பதே பொதுவாக வழங்கப்படும் புராணக்கதை.

    நினைவாற்றல் அதிகமுள்ளதாக சொல்லப்படுவது யானை. ஆழ்ந்த அறிவின் வெளிப்பாடுக்கு அபரிமிதமான நினைவாற்றலும் அவசியம். அதன் காரணமாகவும் யானை முகம். தந்தங்களில் ஒன்று ஒடிந்து காணப்படுவது, ஆணவமற்ற தன்மையைக் குறிக்க. பெரிய வயிறு இவ்வுலகனைத்தும் அவருள் அடக்கம் என்பதைக் குறிப்பதாகும். மிகச்சிறிய ஊசியிலிருந்து, மிகப்பெரிய மரம் வரை தூக்கக் கூடிய சக்தி படைத்தது யானையின் துதிக்கை. அது போல், விநாயகரும், ப்ரச்னை என்ன அளவானாலும் அதிலிருந்து மீட்டுக் காக்கக் கூடிய சக்தி படைத்தவர்.

    பரம்பொருளின் அருளிச் செயல்நிலைகளைக் குறிக்கும் விதமாக, கணபதியின் வடிவங்களை, 16 வித கணபதி (ஷோடச கணபதி), 32 வித கணபதி என்று வேறுபடுத்தி வழிபடுகிறோம்.

    மேலும், பஞ்சமுக விநாயகர், மூன்று முகத்தோடு கூடிய விநாயகர் (த்ரிமுக கணபதி) இரண்டு முக கணபதி (த்விமுக கணபதி) என ஒன்றிற்கு மேற்பட்ட திருமுகங்கள் உடையவராகவும் விநாயகர் வழிபடப்படுகிறார். ஷோடச கணபதிகளில், வரத கணபதி, 10 கரங்கள் கொண்டவராகவும், நிருத்ய கணபதி, க்ஷிப்ர ப்ரஸாத(உள்முக வழிபாட்டை விரும்புபவர்) கணபதி முதலான திருவுருவங்களில், விநாயகர் 6 கரங்கள் கொண்டவராகவும், விக்ந கணபதி எட்டுக்கரங்கள் கொண்டவராகவும் வழிபடப்படுகிறார்.

    வழிபடு முறை என்று பார்த்தால், மஞ்சள் கூம்பு முதற்கொண்டு, ஐம்பொன் விக்ரகம் வரை கணநாதரை எதில் வேண்டுமானாலும் வழிபடலாம். மிகச் சுலபமான, எளிமையான வழிபாட்டு முறைகளே அவருக்கு போதுமானது. ஆனால் விஸ்தாரமான பூஜை செய்ய வேண்டும் என்று ஆரம்பித்தால், மிக விரிந்த பூஜாகல்பம் அவருக்கு. அருகம்புல், பலவித மலர்கள், இலைகள் என்று பூஜை செய்யும் பொருட்களும், முறைகளும் விரியும். கணபதியின் புகழ்பாடும் துதிகளும் அநேகம்.

    நிவேதனங்களில், பிரதானமாக மோதகம் விளங்குகிறது. பூரணத்துடன் கூடிய வேக வைக்கப்பட்ட கொழுக்கட்டையே மோதகம். பரந்த உலகினுள் பூரணமாக விநாயகர் இருக்கிறார் என்பதை விளக்குவதாக இந்த நிவேதனம். லௌகீகமாகப் பார்த்தால், பூரணத்தின் இனிப்புச் சுவை மனச்சோர்வை விலக்கும். மேலும் வேக வைக்கப்பட்டதால் சாத்வீக குணம் நிரம்பியதாகவும் கொள்ளலாம். அமைதியாகவும் சாந்தமாகவும் இருக்கும் மனதிலேயே ஞானம் குடிகொள்ளும் என்பதால், சாத்வீக குணம் தரும் நிவேதனம் பிரதானப்படுத்தப்படுகிறது.

    மிக மெல்லிய மூச்சுக் காற்று, வினைப் பயனான இவ்வுடலைச் சுமந்து செல்வதைக் காட்டும் முகமாக அத்தனை பெரிய விநாயகருக்கு சிறிய மூஷிக வாகனம்.

    இது போல், ஒவ்வொரு தெய்வ உருவத்திலும், ஆயிரமாயிரம் உட்பொருள்கள் உள்ளன. ஆழ்ந்த பக்தியின் மூலம், சாதகன் இவற்றை அறிந்து, பின், படிப்படியாக, ஆன்மீக சாதனையில் உயரும் போது, நிர்க்குண நிராகாரபரம்பொருளை அறிந்து பேரின்பமெய்துகிறான். மனிதப் பிறவியின் பயனான மோக்ஷ நிலைக்கு ஒவ்வொரு ஆன்மாவையும் உயர்த்துவதற்கே, ஆன்மீக நிலையில் இப்படிப்பட்ட கட்டமைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

    Share
  • தொல்லை காட்சி- ஆடலாம் பாய்ஸ் – தேவயானி – ஒரு தாயின் சபதம்

    மோகன்குமார் 
    ஆடலாம் பாயிஸ்  சின்னதா டான்ஸ் – இது ஒரு படத்தோட பெயர். சுருக்கமா முதல் எழுத்துக்களை வைத்து ABCD  !. பிரபு தேவா ஹீரோவாக நடிக்கும் இப்படம் முழுக்க முழுக்க டான்ஸ் படமாம். டான்ஸ் – 3 D – யில் பார்க்கலாம்.  புதுமுக இயக்குனர் இயக்க பிரபல தயாரிப்பு நிறுவனமான UTV தயாரிக்கிறது. இதன் பாடல் வெளியீட்டு விழா ஜெயா டிவி யில் காட்டினர். படம் ஓட வைக்க டான்ஸ்  3- D  யில்   பாருங்க என்றெல்லாம் வித்யாசம் காட்ட முயல்கிறார்கள் .   கதை ஒழுங்கா இருந்தாலே படம் ஓடிடும் என்பதை சில நேரம் மறந்து விடுகிறார்கள்

    ஜீ தமிழில் ஒரு தாயின் சபதம் 

    டி. ராஜேந்தர் சினிமா தலைப்பான ” ஒரு தாயின் சபதம் ” என்கிற தலைப்பில் ஜீ தமிழில் உமா பத்மநாபன் ஒரு நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகிறார். கணவரை இழந்து தங்கள் குழந்தைகளை தனி மனுஷியாக வளர்த்த அம்மாக்கள் பற்றிய தொடர் இது. சனிக்கிழமை  மாலை  8:30 க்கு ஒளிபரப்பாகிறது.  அம்மாவை நேசிக்காதோர் யாருமே இருக்க முடியாது. அதிலும் கணவன் இன்றி தானே உழைத்து, குழந்தைகளையும் வளர்த்து நல்ல நிலைக்கு கொண்டு வரும் தாய்மார்கள் போற்றுதலுக்குரியவர்கள். 

    ஆனால் இந்த நிகழ்ச்சி மிக பெரும் அழுகாச்சி காவியமாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். பேசும் மகன் / மகள் அழ, அதை கேட்டு அம்மா அழ,,,, பார்வையாளர் எல்லாம் அழுகிறார்கள். ஒரே ஒரு நாள் பத்து நிமிஷம் பார்த்ததில் டென்ஷன் ஆகி போன என் பெண் ” இனிமே இந்த சான்ல பக்கம் வந்தே தொலைச்சுடுவேன்” என்று சொல்லியபடி சானல் மாற்றி விட்டாள் !

    டிவியில் பார்த்த படம்  – உள்ளத்தை அள்ளி தா
    எப்பவும் பிடித்த காமெடி படங்களில் ஒன்று உள்ளத்தை அள்ளி தா. கவுண்டர் கலக்கி இருப்பார். இந்த படம் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்பேன் 

    பார்க்கும் ஒவ்வொரு முறையும் கொசுவர்த்தி சுற்ற ஆரம்பித்து விடும். ACS என்கிற கடினமான கோர்ஸ் நான் பாஸ் செய்த   போது வந்த படம். மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தேன். அந்த கொண்டாட்ட மனநிலைக்கு ஏற்ற படி இருந்தது உள்ளத்தை அள்ளி தா. 
    ரம்பாவின் அழகு, கவுண்டர் மற்றும் கார்த்திக்கின் கெமிஸ்ட்ரி, சிற்பியின் பாட்டுகள்  என சூப்பர் ஹிட் ஆன இப்படம் இன்றைக்கும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. ” பாத்து போட்டு கொடுங்க; வேன் எல்லாம் வச்சி கடத்திருக்கோம்  ” போன்ற டயலாக்குகள் அமரத்துவம் பெற்றவை !

    ஆட்டோ கிராப்பில் தேவயானி  

    சுஹாசினி தொகுத்து வழங்கும் ஆட்டோ கிராப்பில் தேவயானி  உரையாடினார். வழக்கம் போல் சொல்லும் ” காதல் கோட்டை தான் எனக்கு திருப்பு முனை, etc ” ( 15 வருஷமா இதையே தான் கேட்டுகிட்டு இருக்கோம் மேடம் !) 

    40 வயதாவது இருக்கும் இவரை பார்க்க 30 க்கும் குறைவாய் தான் தோன்றுகிறது. வெயிட் போடாமல் இருப்பதன் விளைவு ! 

    ” ராஜ் குமாரனை கல்யாணம் செய்து கொள்ள குடுத்து வைத்திருக்க வேண்டும்; அவருக்கென்றே பிறந்தவள் நான் ” என்றார்.

    இவர்கள் இருவரும் இணைந்து மிரட்டும் புது பட டிரைலர் நினைவில் வந்து வயிற்ரை கலக்கியது. சானல் மாற்றி விட்டேன் 

    பிளாஷ்பேக் – தூர்தர்ஷனில் பிராந்திய மொழி திரைப்படங்கள் 

    டிவி வந்த புதிதில் வாரம் இரண்டே படம் பார்க்க தான் வாய்ப்புண்டு. ஒன்று – ஞாயிறு மாலை வரும் தமிழ் திரைப்படம். மற்றொன்று அதே ஞாயிறு மதியம் ஒளிபரப்பாகும்  பிராந்திய மொழி திரைப்படம். நல்ல விஷயம் என்னவென்றால், பெரும்பாலும் தேசிய விருது பெற்ற அல்லது பிற மொழியின் சிறப்பான படங்கள் இதில் திரையிடுவார்கள். சப் டைட்டிலுடன் தான் வந்த ஞாபகம்.   சத்யஜித்ரே, கே. விஸ்வநாத் உள்ளிட்ட புகழ் பெற்ற இயக்குனர்களின் படங்களை இதில் பார்த்து மகிழ்ந்துள்ளோம். வெகு அரிதாய் சுழற்சி முறையில் ஒரு தமிழ் படமும் கூட இந்த ஸ்லாட்டில் வரக்கூடும். அன்றைக்கு நமக்கு மகிழ்ச்சி சொல்லி மாளாது. அடடா ” இன்னிக்கு ரெண்டு சினிமா பார்க்கலாம்; மதியம் ஒரு படம்; இரவு ஒரு படம் என குதிப்போம் ழ்’ ம்ம் அது ஒரு காலம் !
    அம்மா நடத்தி வைத்த திருமணங்கள்
    தனது 65வது பிறந்த நாளை முன்னிட்டு அம்மா 65 பேருக்கு திருமணம் நடத்தி வைத்ததை விரிவாக ஜெயா டிவியில் காட்டி மகிழ்ந்தார்கள். அம்மா ” மணமக்கள் மாலையை எடுங்கள். கழுத்தில் போடுங்கள். இப்போ தாலி எடுங்கள்.. ம்ம் கட்டுங்கள் ”  என்றதும் மணமகன்கள் ” மாண்புமிகு” மாதிரி அடிபணிந்தனர்.

    அம்மா ஓரிரு குட்டி கதைகளை பார்த்து பார்த்து படித்தார். ஆவ்வ்வ்  என நமக்கு கொட்டாவி வர, நிகழ்ச்சியில் அமர்ந்திருந்த அமைச்சர் பெருமக்கள் சட்டசபை போல, ஒவ்வொரு நிமிடமும் கை தட்டி அம்மாவை மகிழ்வித்தனர். பார்க்க செம காமெடியா இருந்தது. டிவி யில் காட்டும் சட்ட சபை நிகழ்சிகள் கூட இந்த காமெடிக்காக சில நிமிடங்கள் பார்த்து மனம் விட்டு சிரிக்கலாம் என முடிவெடுத்துள்ளேன்.
    Share
  • கனவையுண்ணும் நதி

    வருணன்

    முன்னரே தோற்றவனும்

    பின்னர் தோற்கவிருப்பவனும்

    சந்தித்துக் கொண்டனர்

    நதியிடை பாய்ந்த

    பாலத்தின் நடை பாதையில்.

    முன்னவன் மௌனித்திருக்க

    பின்னவன் பேசிக் கொண்டேயிருந்தான்
    தொகுப்பாளினி யுவதி போல்

    கடிதங்கள் நிழற்படங்கள்
    வாழ்த்து அட்டைகளில்
    முத்தமிட்ட இதழ்களின் முத்திரைகள்
    பிறக்கப் போவதாய் கனாக் கண்டிருக்கும்
    மழலைக்கான கிங்கிணியென
    யாவற்றையும் காட்டினான்

    தன்னிலை மாறா முன்னவனோ
    கழிந்த காலத்தில் இதைப் போலவே
    தானுளறிய கதைகளை
    விசிறியெறிந்த நதியைப் பார்த்தான்
    இதழிலரும்பிய புன்னகையோடு

    தோற்றவனிடம் தோற்பவன் காட்டிய
    யாவும் போலொன்றை
    முன்னொரு நாளில் விழுங்கிய நதியோ
    தீராப் பசியுடன் அசைவாடியது.

     

    படத்துக்கு நன்றி
    Share
  • இந்த வார ராசி பலன் (18.02.2013-25.02.2013)

    காயத்ரி பாலசுப்பிரமணியன்

    மேஷம்: உயர்கல்வியைத் தொடர்வதில் இருந்த பிரச்சனைகள் நீங்குவதால், மாணவர்கள் தெம்புடன் வலம் வருவார்கள். உறவினர்கள் சிலர் உங்களிடம் பண உதவி செய்யும்படி   நச்சரிக்கலாம்   . இந்த வாரம் கலைஞர்களுக்கு  கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் மனநிம்மதியுண்டு. பெண்கள் முக்கியமான விஷயங்களில்   குடும்பத்தாரின் ஆலோசனையின்படி  செயல்படவும். பெற்றோர்கள் ஏட்டிக்குப் போட்டியாக செயல்படும் பிள்ளைகளிடம் பக்குவமாக நடந்து கொள்வது  மூலம் அவர்களை நல்ல வழிக்கு மாற்ற முடியும். திடீர் பயணங்களால் உங்களின் கையிருப்பு கரையும்.

    ரிஷபம் : கலைஞர்களுக்கு  எதிர்பாராத பணவரவு உண்டு என்றாலும் கூடவே செலவுகளும் வந்து சேரும்!  உறவுகளின  அனுசரணையற்ற போக்கால், குடும்பத்தில் வீண்  விவாதங்கள் அவ்வப்போது வந்து போகும். எனவே பெண்கள் சொற்சிக்கனத்தை கடை பிடிப்பது அவசியம்  சுய தொழில் புரிபவர்களுக்கு இந்த வாரம் அரசு காரியங்கள் இழுபறியான நிலையில் இருப்பதால், போராடியே லாபம் ஈட்ட வேண்டி இருக்கும். .பணியில் இருப்பவர்கள்   மேலதிகாரியை அனுசரித்துப் போனால், வேலைகள் விரைவாக முடிவதோடு வேண்டிய சலுகைகளும் வந்து சேரும்

    .
    மிதுனம் : பெண்கள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்பட்டால், வீண்செலவுகளைத் தவிர்த்து விடலாம்.  இந்த வாரம் உத்யோகத்தில் புதுப் பொறுப்புகள் உங்களைத்   தேடி வரும் . கலைஞர்கள்  வீண் கர்வம், ஆடம்பர செயல்பாடு மற்றும்  பேச்சு ஆகியவைகளைக் குறைத்துக் கொண்டால், பண இழப்புகளையும், விரயங்களையும் தவிர்த்துக் கொள்வது எளிதாகும். வியாபாரிகள்  வியாபார யுக்திகளையும், விளம்பர யுக்திகளையும் காலத்திற்கேற்றபடி மாற்றிக்கொண்டு செயல்பட்டால், தொழிலில் பெரும் வெற்றியும் லாபமும் வந்து குவியும்.

    கடகம் : வயதானவர்களுக்கு நீண்ட காலமாக போக ஆசைப்பட்ட  புண்ணிய தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்புகள் கிட்டும். இந்த வாரம் தந்தைவழி சொத்துகளால் அலைச்சல்களும், செலவுகளும் ஏற்படும்.    பணியில் இருப்பவர்களுக்கு  எதிர்பாராத இடமாற்றங்கள்  ஏற்படும். பெற்றோர்கள் பிள்ளைகளை கண்காணிப்பதோடு  அவர்களின் தவறுகளை பக்குவமாக சுட்டிக் காட்டினால், அவர்களின் வாழ்க்கை சிறப்பான பாதையில் செல்வது உறுதி.  பெண்கள் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி   பேசாமலிருந்தால், குடும்ப உறவுகள் சீராக இருக்கும்

    சிம்மம் : பெண்கள் குடும்ப விவாகாரங்களில் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது.   இந்த வாரம் உத்யோகத்தில் சாதக, பாதகம் இரண்டும் கலந்து இருக்கும். எனவே வேலையில் இருப்பவர்கள் இயன்றவரை உயர் அதிகாரிகளோடு  வாக்குவாதத்தில் இறங்க  வேண்டாம். பொது வாழ்வில் இருப்பவர்கள்  இடம், பொருள் அறிந்து பேசுவது நலம் தரும். ஒருபுறம் விமர்சனம் இருந்தாலும் மற்றொரு புறம் கலைஞர்கள் தங்கள் திறமையால் சாதனைக்கு சொந்தக்காரர்களாக ஆகும் வாய்ப்பும் கிடைக்கும்.  நெருங்கிய உறவுகளால்  மகிழ்ச்சி, செலவு,இரண்டும்  அதிகரிக்கும்

    கன்னி: பெற்றோர்களுக்கு பிள்ளைகளின்  நடவடிக்கைகள் சற்று அதிருப்தி  தரலாம் .. வியாபாரிகள் வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகளைப் போட வேண்டாம். இருப்பதை வைத்து பெருக்கப்பாருங்கள். அதுவே புத்திசாலித்தனம்.   கலைஞர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு உடன் இருப்பவர்களுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும் வாய்ப்பிருப்பதால்,   பிரச்சனைகள் பெரிதாகாமலிருக்க விட்டுக் கொடுத்துப் போவது அவசியம்.

    துலாம்: இந்த வாரம் வியாபாரிகள் வரவேண்டிய பணத்தை போராடி வசூலிக்க வேண்டி இருக்கும். உத்யோகத்தில் இருந்த  வீண்பழி, மோதல்கள், ஆகியவை நீங்கும். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபம் மாறுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கும், கல்கலப்புக்கும் பஞ்சமிராது.  முதியவர்களுக்கு  உடல் அசதி, சோர்வு, ஆகியவை அவ்வப்போது வந்து தலைகாட்டும்.  பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை கவனமாகக்  கையாண்டால் வீண் செலவுகளைத் தவிர்க்கலாம். சிறு தொழில் செய்பவர்கள் அரசு விவகாரங்களில் அலட்சியம் காட்டாமல் கவனமாக இருப்பது அவசியம்.

    விருச்சிகம்: பொது வாழ்வில் இருப்பவர்களை கௌரவப் பதவிகள் தேடிவரும். கலைஞர்கள் கவனமாய்  இருந்தால், உங்களைப் பற்றிய வீண் வதந்திகள் தானே அடங்கி விடும்.   பெண்கள் அக்கம்-பக்கம் வீட்டாரிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை அலச வேண்டாம்.  ஒப்பந்த  அடிப்படையில் வேலையில் சேர்பவர்கள்  அதற்குரிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை படித்துப்பார்த்து பின்னர் கையெழுத்திடுவது நல்லது. வியாபாரத்தில் உள்ள  நெருக்கடிகள் மாறுவதால், வியாபாரிகள்  எடுக்கும்  முயற்சிகளுக்கு நல்ல  பலன் கிடைக்கும்.

      தனுசு: . பெண்கள் கனிவாகப் பேசினால், சொந்த பந்தங்களிடையே இருந்து வந்த மனக்கசப்பு விலகி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வந்து சேரும் . இந்த வாரம் மாணவர்களுக்கு  நண்பர்களால் நன்மையும், மகிழ்ச்சியும்  உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும் வாய்ப்பிருப்பதால், வியாபாரிகள் தேவைக்கேற்றவாறு சரக்குகளை வாங்குவது நல்லது.   கர்ப்பிணிப் பெண்கள் நீண்டதூர பயணங்களை தவிர்ப்பது அவசியம். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்களில்  அவசர முடிவுகள் எதுவும்  எடுக்க  வேண்டாம்.

    மகரம்: பொது வாழ்வில் இருப்பவர்கள் மற்றவர்களைப்பற்றிய வீண் விமர்சனங்களில் ஈடுபடாமலிருந்தால், அமைதியாக வேலைகளை செய்ய முடியும். அரசு அளிக்கும் சலுகை கலைஞர்களை உற்சாகப்படுத்துவதுடன், அவர்களின் திறமைகளை வெளியுலகுக்கு அழைத்து வருவதாக அமையும்.  பெண்களுக்கு  பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீட்டில் தடைபட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்கள் கூடிவரும். மாணவர்கள்  பாடங்களைப் பயில்வதில் கவனமாக இருந்தால், சோம்பல், மன உளைச்சல் ஆகியவை அருகில் வராமலிருக்கும்.

    கும்பம்: பெண்களுக்கு குடும்பத்தில் நிலவி வந்த குழப்ப நிலை மாறி தெளிவு பிறப்பதோடு  பணப்பற்றாக்குறையும்  நீங்கும் இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.  கணினித் துறை பயிலும் மாணவர்களுக்கு  சலுகைகளுடன் கூடிய புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் அவசரப்பட்டுப் பேசி சங்கடங்களில் சிக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். வேலையில் இருப்பவர்களுக்கு சீரான வருமானம்  இருந்தாலும், இந்த வாரம் செலவுகளும் உங்களை  துரத்திக் கொண்டுதான் இருக்கும்

    .
    மீனம்: இந்த வாரம்  வேலைச்சுமையால் பெண்களின் பதட்டம் அதிகரிக்கலாம். எனவே எந்த சூழலிலும் அவசர முடிவுகளை தவிர்க்கவும். வீண்  போட்டிகள் குறைய வியாபாரிகள் திட்டமிட்டு செயல்படுவது அவசியம் .  பொது வாழ்வில் இருப்பவர்கள் மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி  புதுப் பொறுப்புகளை   எடுக்க வேண்டாம். மாணவர்கள் தேவையில்லாமல்,  நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாமலிருப்பதே புத்திசாலித்தனம்.

    Share
  • நாற்பது மில்லியன் ஆண்டுகட்கு முன்பு இந்தியா ஆசியாவுடன் மோதி இணைந்தது

    (Subduction Zones Drift & Sea-Floor Spreading) [2]

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    கால்பந்து ஒட்டுபோல் தையலிட்ட

    கடற் தளத்தின் மேல்

    கோல மிட்டுக்

    காலக் குயவன் எல்லை வரைந்த

    ஓவியப் பீடங்கள்

    நடம் புரியும் கடலில் மிதந்து !

    நண்டு போல் நகர்ந்து,

    கண்டத் தட்டுகள் இங்குமங்கும்

    துண்டு துண்டாய்ச் சேரும், பிரியும்

    கடல் சூழ்ந்திட !

    நாற்பது மில்லியன் ஆண்டுகட்கு

    முந்தி இந்தியா

    உந்தி நகர்ந்து ஆசியாவுடன்

    முட்டிப் படிப் படியாய்

    எட்டாச் சிகரமாய் வளர்ந்துள்ளது

    இமய மலை !

    +++++++++++++

    Fig 1A Ages of Plates

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=L8CT3UHp0IE

    [The Formation of Himalayas]

    +++++++++++++

    “இந்திய உபகண்டம் 40 மில்லியன் ஆண்டுகட்கு முந்தி வெகு வேகமாக ஆசியக் கண்டத்தை நோக்கி வந்து மோதியது. ஆனால் அப்படி இந்தியா மோதியது ஒரு தடவை மட்டுமில்லை. [பலமுறையாக இருக்கலாம்]. இந்த முடிவு இமயமலை எவ்விதம் நகர்கிறது என்னும் யூகிப்பைப் பெருமளவில் மாற்றப் போகிறது. புகழ் பெற்ற அடித்தட்டு நகர்ச்சி [Plate Tectonic Movement] பற்றிய கால யுகம் இந்த முடிவால் மாற்றம் அடையும். இந்திய உப கண்டம் ஆண்டுக்கு 10 செ.மீ. [4 அங்குலம்] நகர்கிறது. 10 மில்லியன் வருடங்களுக்குப் பிறகு 1000 கி.மீடர் [600 மைல்] நகர்ந்திருக்கும். புவி & அண்டக் கோள் விஞ்ஞான இதழில் [Earth and Planetary Science Letter] இந்த அரிய, புதிய விளைவுகள் வெளியிடப் படும். “

    ஆலிவர் ஜொகட்ஸ் [Oliver Jagotz] [Boston MIT Assistant Professor of Geology]

    ‘450 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆஃபிரிக்காவின் ஸகாராப் பாலையின் மீது துருவப் பனிக்கூண்டு [Polar Ice Dome] படிந்து கிடந்தது. அதை மெய்ப்பிக்க அல்ஜீரியா பாலைவனத்தில் பனிப்பாறை செதுக்கிய கற்பாறைகள் இப்போதும் பிழைத்திருப்பதை காணலாம். பூர்வக் காந்தத்தைச் [Paleo-magnetism] சோதிக்கும் போது அல்ஜீரியா பகுதி ஒருகாலத்தில் தென்துருவத்தில் பனிமூடிக் கிடந்திருக்க வேண்டும் என்று தெரிய வருகிறது. அல்ஜீரியா பகுதி இப்போது பூகோளத்தின் வளைவில் பெயர்ச்சியாகி 8000 மைல் தூரம் வடக்கே நகர்ந்துள்ளது.

    250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆஃபிரிக்காவின் ஸகாரா பாலைவனம் தென்துருவத்தில் இருந்து பனிப்பாறையால் மூடியிருந்த காலத்தில், பூமத்திய ரேகை வட அமெரிக்காவின் மத்தியப் பகுதி வழியாகச் சென்றிருக்க வேண்டும். குளிர்ப் பிரதேசங்களான அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற இடங்களில் நிலக்கரிச் சுரங்கங்கள் அந்த யுகத்தில்தான் தோன்றி யிருக்க வேண்டும் ‘.

    டாக்டர் ரோட்ஸ் ஃபேர்பிரிட்ஜ், கொலம்பியா பல்கலைக் கழகம்.

    Fig Continents Drifts

    முன்னுரை: பிரபஞ்சத்தின் அண்டங்கள், பஞ்ச பூதத்தின் அங்கங்கள், உலகத்தில் வாழும் உயிரினங்கள் எல்லாம் சக்தி மயத்தால் முறையே ஓர் ஒழுக்க நியதியைப் பின்பற்றி இயங்கினாலும், அவற்றின் இயக்கத்திலும் வடிவத்திலும் தொடர்ந்து மாறுபாடுகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வேறுபாடுகளை நோக்கும் போது, பிரபஞ்ச நியதிகள் முற்றிலும் சீரானவை என்றோ அல்லது முழுவதும் சீரற்றவை என்றோ அழுத்தமாகச் சொல்லமுடியாது. ஆனால் நமக்குத் தெரிந்த பிரபஞ்சக் கோட்பாடு களைச் [Laws of the Universe] ‘சீரற்ற ஒழுங்கு நியதிகள் ‘ [Disorderly Order Hypothesis] என்று இரண்டு முரண்பாடுகளையும் இணைத்து நாம் விளக்கம் சொல்லலாம்!

    அட்லாண்டிக் பெருங்கடல் மெதுவாக அகன்று வருகிறது என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது! ஆனால் பசிபிக் பெருகடல் மெதுவாகக் குறுகிக்கொண்டு வருகிறது! ஈரோப்பில் இருக்கும் ஆல்ஃப்ஸ் மலைத்தொடர் வளர்ச்சியாகி உயரம் அதிகமாகிக் கொண்டே போகிறது! பூதக் கண்டம் ஆஃப்பிரிக்கா செங்கடல் வட முனையில் பிளக்கப் போகிறது! இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டம் அடித் தட்டுக்கு மேல் புகுத்தி, அழுத்தி அவற்றின் உயரத்தை மிகை யாக்கிய வண்ணமா யிருக்கின்றன! ஹவாயி தீவுகள் வடமேற்குத் திசையில் மெதுவாகப் பெயர்ந்து ஜப்பான் தீவுகளை நோக்கிச் செல்கின்றன!

    Fig 2 Major Plates

    நாற்பது மில்லியன் ஆண்டுகட்கு முந்தி இந்திய உபகண்டம் வடதிசை நோக்கி நகர்ச்சி

    பாஸ்டன் மாஸ்ஸெசுஸெட்ஸ் தொழில் நுணுக்கக் கூடத்தின் விஞ்ஞான வல்லுநர்கள், இந்தியா ஆசியா வுடன் முட்டி மோதிய அடித்தட்டு நகர்ச்சி 40 மில்லியன் ஆண்டுகட்கு முந்திதான் நிகழ ஆரம்பித்தது என்று இப்போது கண்டு பிடித்துள்ளார்கள். இதுவரை 50 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு என்று கணிக்கப் பட்டிருந்தது. சமீபத்தில் இமய மலைச் சரிவுகளில் தேடி அறிந்த மூலக / மூலக்கூறு உலோகச் சான்று களை வைத்து அந்த நிகழ்ச்சி 10 மில்லியன் ஆண்டுகட்குப் பிந்தி [50-10=40] நேர்ந்திருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்கள். விஞ்ஞானிகள் இமயமலைத் தொடர்களில் தற்போது இரண்டு வெவ்வேறு அரங்குகளில் எடுத்த மாதிரிப் பாறைகளை ஆராய்ந்ததின் விளைவுகள்தான் இந்த முடிவை வெளியிட ஆதாரமாக இருந்துள்ளன.

    இப்போது நாம் காணும் இந்தியா 50 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு சிறிய பரப்புள்ள உபகண்டமாய் இருந்திருக்கும். இந்தியாவின் எத்தனை வடபுறப் பரப்பளவு யுரேசியக் கண்டத்தின் அடியிலே நகர்ந்துள்ளது என்று அறிந்து கொள்வது கடினம். ஆனால் இந்திய அடித்தட்டு எந்த வேகத்தில் நகர்கிறது என்று நுட்பமாய்த் தெரிவதிலும், எப்போது ஆசியத் தட்டுடன் மோதியது என்று தெரிவதின் மூலமும் விடை கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார். இமயத்தின் பல்வேறு சிகரங்கள் அவற்றின் கீழியங்கும் பூதப் பெரும் அடித்தட்டு நகர்ச்சி விசைகளால் எழுப்பப் பட்ட கோபுரங்களே.

    Fig 1 North America's Shaping

    முந்தைய கணிப்புகளின்படி இந்திய-யுரேசிய மோதல் விரைவான வேகத் தாக்குதல் ஏற்பட்டது சுமார் 50 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு நேர்ந்ததாகக் கருதப் பட்டது. இடையில் தூளாக்கப்பட பாறைகளே பிறகு இமயமலைச் சிகரமாக உயர்ந்தன என்பது மாதிரி ஆதாரங்களை வைத்து ஊகிக்கப்படுகிறது. இந்தப் பேரளவு மோதலே அடித்தட்டு நகர்ச்சி தாக்கங்களில் பெரும் கொந்தளிப்பு நிகழ்ச்சியாக கருதப் படுகிறது. அந்த அசுர மோதலில் பெரும்பான்மையான இந்தியப் பகுதி யுரேசியத் தட்டின் கீழ் புகுந்துவிட்டது என்று ஊகிக்கப் படுகிறது. இந்திய-யுரேசிய மோதலை உறுதியாகத் தெரிந்து கொள்ள அதுபோல் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். கடந்த 2 மில்லியன் ஆண்டுகளாக ஆஸ்திரேலியக் கண்டத்தின் அடித்தட்டு அருகில் உள்ள “சுந்தா வளைவு” [Sunda Arc] என்னும் பற்பல தீவு மந்தைகளைத் மோதி வருகின்றன. அந்த மோதல்களை ஆராய்ந்து, முந்தைய இந்திய மோதல்கள் எப்படி நேர்ந்தன என்று கண்டறிந்தனர்.

    Fig Zigzaw Puzzle

    Half Globe

    வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் எதிர்ப்புறம் மெல்ல மெல்ல நகர்ந்து இடைவெளியை அகலமாக்கி வருகின்றன! அமெரிக்காவில் காலிஃபோர்னியா கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் வடபுறமாகச் சரிந்து கொண்டிருக்கிறது! மைய அட்லாண்டிக் கடற்தட்டுப் பிறழ்ச்சிப் பீடம் [Mid-Atlandic Tectonic Plate Ridge] குறுக்கே வெட்டிச் செல்லும் ஐஸ்லாந்து தீவின் அருகில் உள்ள சூர்ட்ஸி [Surtsey, Iceland] என்னும் தீவு 1963 நவம்பர் 14 இல் வட அட்லாண்டிக் கடலில் திடீரென எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது!

    ‘கடற்தளங்கள் நீட்சியைக் கண்டுபிடித்து விளக்குவது நம் கையில்தான் இருக்கிறது. மைய அட்லாண்டிக் பிறழ்ச்சிப் பீடத்தின் இருபுறமும் உள்ள கடற்தளம் ஆண்டுக்கு சுமார் ஓரங்குல நீளம் நகர்ந்து கொண்டு வருகிறது. கடற்துளையில் எடுத்த மாதிரிகள் வடிகால் புழுதிக்கும், அடிக்கடற் பாறைக்கும் இடையில் உள்ள எல்லையைக் காட்டின. அத்துடன் அவை எத்துணை இளைய பருவத்தை உடையவை என்று வயதைக் காட்டி, அடிக்கடல் பூர்வப்படிவங்கள் [Undersea Basement Fossils] வெஜினரின் [Alfred Wegener (1880-1930] மகத்தான கண்டங்களின் புலப்பெயர்ச்சி நியதியை மெய்ப்பித்தது ‘.

    டாக்டர் ஆர்தர் மாக்ஸ்வெல் [Co-Leader, Wood Hole Oceanographic Institution]

    ‘ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே மத்தியதரைக் கடல் பிரதேசம், நீரில்லாத இரண்டு மைல் ஆழக் குழியாக உப்புக் கலவைப் பொருள் மிகையாகக் கொண்டிருந்தது. அட்லாண்டிக் கடலை ஜிப்ரால்டர் பெரு மலைத்தொடர் மறைத்து, ஒருசில நதிகள் மட்டும் சேரும் மத்திய தரைக் கடல் வெள்ளம் அனைத்தும் ஆவியாகப் போனது. கப்பலின் துளைக்கருவி வெகு ஆழத்தில் தோண்டிப் பார்த்ததில், பல பகுதிகளில் பாலைவன வெப்பத்தில் காய்ந்துபோன ஆயிரக் கணக்கான அடி உயர உப்புக் குளங்களும், ஏரிகளும் காணப்பட்டன ‘.

    டாக்டர் வில்லியம் ரயான், [Glomar Challenger Deep Sea Exploration (1970)]

    அட்லாண்டிக் பெருங்கடல் மெதுவாக அகன்று வருகிறது என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது! ஆனால் பசிபிக் பெருகடல் மெதுவாகக் குறுகிக்கொண்டு வருகிறது! ஈரோப்பில் இருக்கும் ஆல்ஃப்ஸ் மலைத்தொடர் வளர்ச்சியாகி உயரம் அதிகமாகிக் கொண்டே போகிறது! பூதக் கண்டம் ஆஃப்பிரிக்கா செங்கடல் வடமுனையில் பிளக்கப் போகிறது!

    இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டம் அடித்தட்டுக்கு மேல் புகுத்தி, அழுத்தி அவற்றின் உயரத்தை மிகை யாக்கிய வண்ணமா யிருக்கின்றன! ஹவாயி தீவுகள் வடமேற்குத் திசையில் மெதுவாகப் பெயர்ந்து ஜப்பான் தீவுகளை நோக்கிச் செல்கின்றன!

    வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் எதிர்ப்புறம் மெல்ல மெல்ல நகர்ந்து இடைவெளியை அகலமாக்கி வருகின்றன! அமெரிக்காவில் காலிஃபோர்னியா கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் வடபுறமாகச் சரிந்து கொண்டிருக்கிறது! மைய அட்லாண்டிக் கடற்தட்டுப் பிறழ்ச்சிப் பீடம் [Mid-Atlandic Tectonic Plate Ridge] குறுக்கே வெட்டிச் செல்லும் ஐஸ்லாந்து தீவின் அருகில் உள்ள சூர்ட்ஸி [Surtsey, Iceland] என்னும் தீவு 1963 நவம்பர் 14 இல் வட அட்லாண்டிக் கடலில் திடாரென எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது!

    தென்துருவத்தில் இருக்கும் அண்டார்க்டிகாவில் முதலில் 1967 ஆண்டிலும், அடுத்து 1969 ஆண்டிலும் நெடுத்தொடர் மலைகளின் [Transantarctic Mountains] பனிபாறைகளில் டைனோசார்ஸ் காலத்திய நிலத்துறை விலங்குகளின் பூர்வப்படிவத் துணுக்குகளைக் [Fossil Fragments of Land Creatures] கண்டுபிடித்து, அமெரிக்க தேசீய விஞ்ஞான அறக்கூடம் [National Science Foundation] உளவு செய்தது. அந்த மாதிரிகளில் ஒன்று செம்மறி ஆடு போல் ஊர்ந்திடும் விலங்கான லிஸ்டிரோசாரஸ் [Lystrosaurus]. அண்டார்க்டிகாவில் முதன்முதல் கண்டுபிடிக்கப் பட்ட முதுகெலும்புள்ள பூர்வ மூலப்படிவம் [Index Fossil] அந்த விலங்கு. அந்த விலங்குகள் ஆஃபிரிக்கா, இந்தியா, சைனா ஆகிய நாடுகளில் 180-225 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக அறியப்படுகின்றன.

    குலோமர் சாலஞ்சர் கப்பலின் கடற்தள உளவுப் பயணம்:

    1968 ஆம் ஆண்டில் ‘ஆழக்கடல் துளை தோண்டுத் திட்டம் ‘ [Deep Sea Drilling Project] என்று பெயர் பெற்ற மாபெரும் கடற்தட்டு உளவுப்பணி ஆரம்பிக்கப் பட்டது. குலோமர் சாலஞ்சர் கப்பல் காலிஃபோர்னியா கடற்தள ஆயில் துளைக் கம்பெனி [California Offshore Oil Drilling Co. Global Marine Inc] தயாரித்தது. கடற்தளப் பாறைகளில் 20,000 அடி ஆழத்தில் துளையிட்டு மாதிரிகளைக் கொண்டுவந்து சோதிப்பதே அதன் முக்கியப் பணி. தேசீய விஞ்ஞான அறக் கட்டளை [National Science Foundation] வழியாக அமெரிக்க மைய அரசு உளவுக்கு நிதிக்கொடை அளித்தது. அப்பணிகளைச் செய்தவை அமெரிக்காவின் பூதள ஆய்வுக் கூட்டு நிறுவகங்கள் [JOIDES Gruop (Joint Oceanographic Institutions for Deep Earth Sampling)].

    குலோமர் சாலஞ்சர் கடற்துளைக் கருவி 1968 ஆம் ஆண்டு போட்ட முதல் துளையில் மெக்ஸிகோ வளைகுடாவில் 12,000 அடி ஆழத்தில் நுழைந்து பெட்ரோலியம் கச்சா ஆயில் இருப்பதைக் கண்டுபிடித்தது! இதுவரைக் கடலில் இத்தனை ஆழத்தில் ஆயில் ஒளிந்துள்ள தென்று யாரும் ஊகித்தது கூட இல்லை! மூன்றாவது துளையை அட்லாண்டிக் கடற்தளத்தில் தோண்டி, அட்லாண்டிக் கடல் மெய்யாக அகன்று வருகிறது என்று கண்டு பிடித்தது. 1968 ஆண்டு இறுதியில் ஆஃபிரிக்காவின் மேற்திசையில் சென்று, மைய அட்லாண்டிக் கடற்தட்டுப் பீடத்தின் தென்புற மிருந்து துவங்கி இருபுறமும் தொடர்ந்து துளைக்கு மேல் துளையிட்டு மாதிரிகளைச் சோதித்து மகத்தான கடற்தட்டு மெய்ப்பாடுகளைக் கண்டு பிடித்தது.

    குலோமர் கப்பல் நான்கு வருடங்களாகப் பணி செய்து சுமார் 400 துளைகளைக் கடற் பாறைகளில் தோண்டி பல அரிய புதிய பூகோளச் செய்திகளைக் கூறி யிருக்கிறது. உலகக் கண்டங்களை விட, கடற்தளங்கள் இளைய காலத்தவை என்று கண்டுபிடித்துள்ளது. பூர்வ வடிகால் புழுதிகள் [Oldest Sediments] 160 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் உண்டாகி யிருக்கின்றன என்று கண்டுள்ளது.

    அதற்கு முரணாகச் சமீபத்தில் உளவிய கிரீன்லாந்தின் பாறைகள் சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று காட்டி யுள்ளது. பூகோள விஞ்ஞானிகள் தற்போது பூமியின் முழு வயதை 4.5 பில்லியன் ஆண்டாகக் கணிக்கிறார்கள். ஆனால் பூகோளக் கடற்தளத்தின் வயதை சுமார் 180 மில்லியன் ஆண்டாகத்தான் மதிப்பிடுகிறார்கள்.

    1970 இல் குலோமர் கப்பல் ஆய்வாளர்கள் ஆஃபிரிக்கா கண்டம் வடதிசை நோக்கி மெதுவாக நகர்ந்து, மத்தியதரைக் கடல் அகலத்தைக் குறுக்கி வருகிறது என்று நிரூபித்திருக்கிறார்கள். அந்த நகர்ச்சியால் கடற்தட்டுகள் பிறழ்ந்து, எப்போதாவது ஸிசிலியில் உள்ள எட்னா சிகரத்தில் [Mount Edna, Sicily] எரிமலைக் குமுறலையும், கிரீஸ், துருக்கி ஆகிய நாடுகளில் நிலநடுக்கத்தையும் உண்டாக்குகின்றன! படிப்படியாக அழுத்தி மத்தியதரைக் கடற்தட்டு மடங்கி ஆல்ஃப்ஸ் மலைத் தொடரை உயர்த்திக் கொண்டே போகிறது என்றும் கூறி யிருக்கிறார்கள்!

    சுனாமி உண்டாக்கிய சுமாத்திரா கடற்தட்டுப் பிறழ்ச்சி:

    இந்தோனேசியாவுக்கு மேற்கே சுமாத்திரா தீவுக்கு அருகே கடற்தளத்தில் அதே கோணத்தில் சாய்திருக்கும் சுமாத்திர நிலநடுக்கப் பழுது [Sumatran Fault] சுமார் 1100 மைல் நீளத்தில் இருப்பதாக அறியப்படுகிறது. 2004 ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி வெடித்த கடற்தள பூகம்பத்தில் பூதவடிவில் எழுந்த சுனாமி கால் மில்லியன் நபர்களைக் கொன்றதோடு, பனிரெண்டு நாட்டுக்குக் கடற்கரை நகரங்களைத் தகர்த்து விட்டது.

    நிலநடுக்கத்தின் போது மாபெரும் ஆற்றல் மிக்க அசுர சுனாமியை எழச்செய்த கடற்தள முறிவின் நீளம்: சுமார் 700-800 மைல், அகலம்: 60 மைல்! அதாவது 48,000 சதுர மைல் [800×60] பரப்பும், பல ஆயிரம் அடி ஆழமுள்ள கடல் வெள்ளத்தை செங்குத்தாகத் தூக்கிப் பல முறைக் குலுக்கிப் போட்டுச் சுனாமிப் பேரலைகள் கரைநோக்கி அடுத்தடுத்துப் படையெடுத்துள்ளன! அபார ஆற்றல் கொண்ட அந்த அசுர நிலநடுக்கத்தைத் தூண்டிய கடற்தட்டுப் பிறழ்ச்சிப் பழுது [Plate Tectonic Fault] சுமாத்திரா பழுது! பல்லாண்டு களாக இக்கடற்தட்டுப் பழுது எண்ணற்ற நிலநடுக்கங்களை உண்டாக்கியுள்ள பூகம்பத் திடலாக இருந்து வருகிறது. 1833 ஆம் ஆண்டில் அதே பழுதுத் தொடரில் மிகப்பெரும் பூகம்பம், Mw:9 [Mercalli Scale] அளவு நிர்ணயத்தில் எழுந்து பேரழிவு செய்துள்ளது..

    சுமாத்திரா தீவு 1100 மைல் நீளமும், 250 மைல் அகலமும் கொண்டது. தீவுக்கு மேற்கே 180 மைல் தூரத்தில் அதன் முழு நீளத்திற்கும் இணையாக, ஒரு பயங்கர நில அதிர்வுப் படுகுழி காணப் படுகிறது. சுமாத்திரா பூகம்ப பழுதுக்குழி [Sumatran Fault Trench] குமுறிக் கொண்டிருக்கும் உலகக் கடற்தளப் பிறழ்ச்சிக் குழிகளிலே மிகப் பெரியது. அன்னத்தின் கழுத்துபோல் வளைந்த அந்தப் பூகம்ப பழுது 1100 மைல் நீண்ட தாக தீவுக்கு இணையாகக் கடற்தளத்தில் தோன்றி யிருக்கிறது. கடற்தட்டுத் திணிப்பால் [Ocean Plate Subduction Process] வளர்ந்திருக்கும் சுமாத்திராவின் மலைத்தொடரும், பழுதுக் குழிக்கு இணையாக மலைப் பாம்புபோல் படுத்துக் கிடக்கிறது!

    Fig Drift Maps

    மெஸோசாயிக் யுகத்தின் [Mesozoic Era] ஆரம்ப காலத்தில், அதாவது 240 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு குமுறிக் கொண்டிருந்த கடற்தட்டுத் திணிப்பு அரங்கத்தில் [Subduction Zone], சுமாத்திரா தீவு அமைந்துள்ளது. அந்த நாட்டிய அரங்கம் சுமாத்திரா தீவு போல் இணை யாகச் சாய்ந்த கோணத்தில் நீண்டு வளைந்துள்ளது. பல மில்லியன் ஆண்டுகளாக படிப்படியாகக் கடற்தட்டுத் திணிப்பால் உண்டான கருங்கல் குன்றுகளில் மாதிரிகளை எடுத்து ஆராய்ந்ததில் கீழிருக்கும் கடற்தட்டின் உயர அளவுகளையும், பண்புகளையும் கண்டிருக் கிறார்கள்.

    அவை யாவும் திணிப்பைச் சார்ந்த கருங்கல் வகையான, நிலநடுக்கத் தன்மை கொண்ட கால்க்-ஆல்கலைன் ரகத்தைச் [Subduction Related I-type, Volcanic Arc, Calc-Alkaline type] சேர்ந்தவை. கருங்கல் மாதிரியில் உள்ள ஸ்டிராஞ்சியம் ஏகமூலத்தின் ஆதி விகிதத்தை [Strontium Isotope Initial Ratio] உளவு செய்தால், திணிப்புத் திடல் கலந்துள்ள பூதளக் குழம்பின் மேற்தட்டு பகுதியைச் [Magmas from Upper Mantle with Subduction Contamination] சேர்ந்ததாக அறியப் படுகிறது.

    ஆர்கான் ஏகமூலங்கள் [Ar40-Ar39 Dating], ருபீடியம், ஸ்டிராஞ்சியம் கதிரியக்கத் தேய்வு காலத்தை [Rubidium-Strontium (Rb-Sr) Dating] ஆராய்ந்து, சுமாத்திரா குன்றுகளின் கருங்கல் மாதிரிகளின் வயதைக் காண முடிந்தது. கருங்கற்கள் 5.5 முதல் 192 மில்லியன் ஆண்டு வயதுகளைக் கொண்டிருந்தன. [Sulit Granite: 192 Ma], [Lassi Pluton: 52 Ma], [Lolo Pluton: 12 Ma], [Sungaipenuh Granite: 5.5 Ma] [Ma (Million Years Ago)]. சுமாத்திரா பாறைகளில் காந்தசக்தி ஜுராஸிக் யுகத்தின் [Jurassic Era] ஆரம்பத்தில் சுமார் [193-15 Ma] மில்லியன் ஆண்டுகளுக்கு இடையிடையே ஏற்பட்டுள்ளது என்பதும் அறியப்பட்டது.

    Fig Satellite Monitoring1

    கண்டத் தீவுகளுக்கும் கடற் தீவுகளுக்கும் உள்ள வேறுபாடுகள்:

    உலகிலே உண்டாகி யிருக்கும் தீவுகளை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். 1. கண்டத் தீவுகள். 2. கடற் தீவுகள். கண்டத் தீவுகள் [Continental Islands] என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம். பெருங் கண்டத்துடன் அதன் அருகே தணிந்த கடல் ஆழத்தில் தளப்பரப்பால் இணைக்கப்பட்ட தீவே, கண்டத் தீவு என்று அழைக்கப்படுகிறது. இலங்கைத் தீவு உப கண்ட மான இந்தியாவின் கண்டத் தீவு என்று சொல்லலாம். கடந்த 20,000 ஆண்டுகளில் பெருங் கண்டத்துடன் பிணைந்து கொண்ட தீவுகளே அப்பெயரைப் பெறுகின்றன. கண்டத் தீவுகளில் உள்ள சில செடி கொடிகள், உயிர் ஜந்துகள் [Fauna & Flora, Species] பெருங் கண்டத்தில் உள்ளவை போல் இருக்கின்றன. குறிப்பிட்ட இடத்தில் பிறந்து விருத்தியாகும் ஜந்துகள் [Endemic Species] அங்கு இருப்பது அபூர்வந்தான்.

    கடற் தீவுகள் [Ocean Islands] என்றால் என்ன ? பூமியின் உட்கருவிலிருந்து கடற்தளத்தில் துளையிட்டு எரிமலைகள் சீறி எழுந்து, கடல் ஆழத்தில் உண்டாக்கப்பட்ட தீவுகள் இப்பெயரால் அழைக்கப்படுகின்றன. ஹவாயி தீவுகள், ஐஸ்லாந்து தீவுகள் ஆகிய வற்றை இவற்றுக்கு உதாரணமாகக் கூறலாம். கண்டங்களை ஒட்டாமல், கண்டங்களுக்கு அப்பால் உண்டானவை இத்தீவுகள். மைய அட்லாண்டிக் பிறழ்ச்சித் தட்டுக் கடற்பீடம் குறுக்கே செல்லும் ஐஸ்லாந்தில் உள்ள சூர்ட்ஸி [Surtsey, Iceland] என்னும் தீவு 1963 நவம்பர் 14 இல் வட அட்லாண்டிக் கடலில் எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது! அத்தீவுகள் எப்போதும் ஒரு பெருங் கண்டத்துடன் பிணைக்கப் படுவதில்லை. செடி, கொடிகள், விலங்கினங்கள் கடல் வழியாகக் கொண்டு செல்லப்பட வேண்டும். கடல்மீது வந்த தாவர இனங்கள், விலங்கினங்கள் மட்டுமே அத்தீவுகளில் பிழைத்திருக்க முடியும். நிலப் புதுநீரில் வளரும் மீனினம் போன்ற பலதரப்பட்ட உயிர் ஜந்துகள் அந்த தீவுகளில் கிடையா. கண்டத்திற்கு அப்பாலிருக்கும் கடற்தீவுகளில் புத்தின ஜந்துகள் வளர்ச்சிக்கு மையமாக [Centres of Speciation]

    இருக்கின்றன. குறிப்பிட்ட இடவிருத்தி ஜந்துகள் [Endemic Species] வளர இத்தீவுப் பகுதிகளின் சூழ்நிலைகள் உதவுகின்றன.

    கடலில் மூழ்கிய தமிழகத்தின் தென்திசைக் குமரிக் கண்டம்

    1960 ஆம் ஆண்டில் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிதிக்கொடை அளித்து, இந்து மாக்கடலில் கடற்தள ஆராய்ச்சியாளர் செய்த உளவில், தமிழகத்தின் கன்னியா குமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதைக் கண்டுபிடித்திருக் கிறார்கள். முதலாக கப்பலில் சென்று ஒலிச் சமிக்கை அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டார்கள். அத்திட்டம் ஏனோ 1960 ஆண்டுக்குப் பிறகு தொடரப்பட வில்லை! 1960-1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாக்கடல் கடற்தள வரைபடங்களில், குமரிக் கண்டத்தின் பூர்வீக அமைப்பு நிலை காணப்படுகிறது. அரபிக் கடலுக்குத் தெற்கில், லட்சத் தீவுகள் நீட்சியில் மால்டிவ் தீவின் வடக்குப் பகுதியுடன் பிணைந்து, தெற்கில் சாகோஸ் ஆர்கிபிலாகோ [Chagos, Archipelago] வரை சுமார் 2000 மைல் தூரம் வரைக் குமரிக் கண்டம் இருந்திருப்பதாகத் தெரிகிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த [கி.மு.8000] பனி யுகத்தின் போது [During the Ice Age] இந்து மாக்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் புறத்தே தெரியும்படி மேலாக உயர்ந்திருந்தது.

    பனி யுகத்தில் எங்கோ பனி திரண்டு நீர் சுண்டிப்போய் உலகெங்கும் கடல் மட்டநீர் தணிவாக இருந்தது. அப்போது உலகத்தில் கண்டங்கள், தீவுகள் பல பகுதிகளில் பிணைந்திருந்தன! ஐரோப்பாவுடன் இங்கிலாந்து, பிளாரிடாவுடன் கியூபா தீவு, ஆஸ்திரேலியாவுடன் பப்பா நியூகினி தீவு, தமிழகத்துடன் இலங்கைத் தீவு, சுமாத்திரா ஜாவா போர்னியோ தீவுகள் தென் கிழக்காசியாவின் பெருந்தளத்துடன் இணைந் திருந்தன என்று கருதப்படுகிறது! இலங்கை தமிழகத்துடன் இணைந்திருந் ததற்கு, இப்போதும் தெரியும் தணிவாக உள்ள கடல்மட்ட நீர் நிலையே சான்றாக இருக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்து வால்மீகி முனிவர் எழுதிய இராம கதையில், அனுமார் படையினர் பாறாங் கற்களைக் கொண்டு வந்து, ஈழத்தின் தணிந்த கடற்தள மீது கற்பாலம் கட்டிக் கடந்திருப்பது அறியப்படுகிறது. பனியுகம் மாறி வெப்பம் மிகையான காலத்தில் பனிப் பாறைகள் உருகி கடல் மட்டம் மெதுவாக படிப்படியாக உயர்ந்து குமரிக் கண்டம் மூழ்கிப் போயிருக்கலாம் என்று உறுதியாக நம்ப இடமிருக்கிறது. அதன் விளைவில் குமரிக் கண்டம் சிதறி ஆஃபிரிக்கா முதல், ஆஸ்திரேலியா வரை உள்ள மடகாஸ்கர், லட்சத் தீவுகள், அந்தமான் தீவுகள், இந்தோனியாவின் தீவுகள் போன்றவை பிரிவு பட்டன என்று ஒரு சாரார் குறிப்பிட்டுள்ளார்கள்.

    ‘லெமூரியா கண்டம் ‘ [Lemuria Continent] இந்து மாக்கடல் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்று முதலில் கூறியவர் 19 ஆம் நூற்றாண்டு பூதளவாதி பிலிப் ஸ்கிலேட்டர் [Geologist, Philip Sclater]. விக்டோரியன் டார்வின் நியதியைப் பின்பற்றுவோர் மடகாஸ்கர் தீவில் மட்டும் தனித்து வாழும் லெமூர் குரங்குகளை [Lemurs] எடுத்துக் காட்டி யிருக்கிறார்கள். அவற்றின் பூர்வப்படிவப் பிரதிகள் [Fossils of Lemurs] ஆஃபிரிக்காவிலும், தென் கிழக்காசியாவிலும் தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஜெர்மன் டார்வின்வாதியான ஏர்னெஸ்ட் ஹேக்கல் [Ernst Haeckel] ஆதி லெமூரியாவின் உயிர் மூலவிகள் [Genes] யாவும் இந்து மாக்கடலில் மூழ்கி மடிந்ததால் காணாமல் போயின என்று கூறியதை எடுத்துக் கொண்டு பிலிப் ஸ்கிலேட்டர் லெமூரியா கண்டம் (குமரிக் கண்டம்) ஒன்று ஆங்கே இருந்திருக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.

    ++++++++++++++++++++++++++

    From: http://www.sepiamutiny.com/sepia/archives/004456.html

    R. Mathivanan, then Chief Editor of the Tamil Etymological Dictionary Project of the Government of Tamilnadu, in 1991 … [produced] the following timeline …:

    ca. 200,000 to 50,000 BC: evolution of “the Tamilian or Homo Dravida”, ca. 200,000 to 100,000 BC: beginnings of the Tamil language 50,000 BC: Kumari Kandam civilisation 20,000 BC: A lost Tamil culture of the Easter Island which had an advanced civilisation 16,000 BC: Lemuria submerged 6087 BC: Second Tamil Sangam established by a Pandya king 3031 BC: A Chera prince in his wanderings in the Solomon Island saw wild sugarcane and started cultivation in Tamilnadu. 1780 BC: The Third Tamil Sangam established by a Pandya king 7th century BC: Tolkappiyam (the earliest extant Tamil grammar)… [Link]

    +++++++++++++++++++++++++++++++

    (தொடரும்)

    தகவல்

    1. The Continental Mosaic -Reader ‘s Digest Atlas of the World [1987]

    2. Hutchinson Encyclopedia of the Earth By Peter Smith [1985]

    3. Earth ‘s Restless Crust -ABC ‘s of Nature, Reader ‘s Digest [1984]

    4. The Long Journey of Continents By: Ronald Schiller -The Marvels & Mysteries of The World Around US, Reader ‘s Digest Publication [1972]

    5. Continental Drift & Plate Tectonics [www.zephryus.co.uk/geography/home.html] (Mar 20, 2003)

    6. Pangaea, Gondwana, Laurasia, Plate Tectonics, Alfred Wegener From: Wikipedia Encyclopedia

    7. Theory of Continental Drift By: Jim Cornish, Newfoundland, Canada (Sep 2001)

    8. Continental Frift, Geology & Oceanography. [Several Internet Articles]

    9. Everyday Geography By: Kevin McKinney (1993)

    10 Eduard Suess, Austrian Scientist From: Wikipedia Encyclopedia

    11 Our Changing Earth By: Tusco Wilson Ph.D. Frontiers of Science, National Geographic Society [1982]

    12 This Changing Earth By: Samuel Matthews, National Geographic Society [Jan 1973]

    13 Our Restless Planet Earth Rick Gore By: National Geographic Society [Aug 1985]

    14 Fossils, Annals of Life Written in Rocks By: David Jeffery, National Geographic Society [Aug 1985]

    15 The Earth ‘s Fractured Surface By: National Geographic Society [1995]

    16 Physical Earth By: National Geographic Society [1998]

    17 The Shaping of a Continent, North America ‘s Active West [1995]

    18 National Geographic Picture Atlas of our World [1990]

    19 Differences Between Continental & Oceanic Islands [www.abdn.ac.uk/zoohons/lecture1]

    20 The Evolution of the Sumatran Earthquake Fault System, Indonesia, Andy McCarthy. Ph.D. [July 9, 2002]

    21 Isotopic Dating of Sumatran Fault System By: Imtihanah & MPhil

    22 The Sumatran Fault System By Professor Kerry Sieh & Danny Natawidjaja [Nov 1999]

    23 Kumari Kandam & Lemuria [http://en.wikipedia.org/wiki/Lemuria_(continent)

    24 Kumari Kandam By: Chitta Ranjan Myilvaganan, Sydney, Australia. [Jan 30, 2005]

    25. http://www.sepiamutiny.com/sepia/archives/004456.html (May 22, 2007)

    26. http://www.crystallotus.com/Lemuria/04.htm

    27. http://en.wikipedia.org/wiki/Lemuria_(continent) [July 3, 2011]

    28. http://en.wikipedia.org/wiki/Kumari_Kandam [July 7, 2011]

    29. India Joined with Asia 10 million years later than previouly thought By: Jennifer Chu, MIT News Office, Boston, MA [February 14, 2013]

    30. http://en.wikipedia.org/wiki/Continental_drift [February 15, 2013]

    **********************

    jayabarat@tnt21.com [S. Jayabarathan (February 16, 2013) [R-2]

    http://jayabarathan.wordpress.com/

    YouTube – Videos from this email
    Share
  • HEALTHY BODY MAKES HEALTHY MIND (16)

            

     BUCK WHEAT

    Sangeetha

     

    A ¼ cup serving of Buckwheat contains 100 calories, most of which come from carbohydrates. buckwheat flour does supply 10 percent or more of the daily value of three B vitamins. One serving supplies 10 percent of thiamine, which assists with healthy circulation. One serving also provides 12 percent of niacin. Niacin is also necessary for proper circulation. It also supports your nervous system. Additionally, one serving of buckwheat flour provides 14 percent of the daily value of B-6. B-6 helps you absorb fats and proteins.


    BUCK WHEAT PURI:


    Ingredients

    In a bowl, add buckwheat (kuttu) flour, salt, red pepper powder and thyme. Mix water little at a time to make firm dough.

    *Additional Notes*

     

    Add water little at a time since buckwheat flour absorbs water very quickly.

    Dust bread board with some buckwheat flour. Make small balls from dough of 1-2 Inch diameter and keep placing on flour dusted bread board.

    Heat oil in a wide frying pan or electric fryer to 350 F. While oil is heating up, flat the dough balls to 5-6 inch round flat circles.

    *Additional Notes*

     

    If you do not have thermometer to check oil temperature, add a peanut size dough ball in the hot oil. If ball sizzles on contact with oil and appears of oil surface at count of 5 then Oil is perfectly. If it takes longer then 5 seconds or stays at the bottom, oil is not hot enough hot. If dough ball turns brown very quickly then oil is too hot and it will burn your puris.

    Deep fry flat breads in fryer one at a time for around 15-20 seconds each side or till bread appears to be crisp and fully cooked.

    *Additional Notes*

     

    Bread generally puffs when it is fully cooked.

    Serve Puffed Bread Or Puri with your choice of Potato Curry and Raita. Enjoy!!!

    BUCKWHEAT DOSA

    Ingredients (for 8 dosas):

    1 cup buckwheat flour

    1/2 tsp. salt

    1/2 tsp. baking powder

    1/2 tsp. curry powder

    1.5 cups vegetable broth

    Directions:

    1. Mix dry ingredients together, and slowly whisk in the veggie broth until smooth.

    2. Heat up a skillet until hot (say med-high heat) – spray with oil, and ladle about 2 tbs. of batter in a circular motion.  Once bubbles form, flip, and cook for a few more seconds.Add green chillies, coriander.

    3.Serve with hot chutney and sambar.

    Wheat Buck  products are good for gall stones,Diabetes,and good for health.

    Share
  • Annual sports day celebrations

    SEVALAYA

    (Registered Charitable Trust)

    No 2/25, Ground Floor, Rajaji Nagar Main Road, Pillaiyar Koil Street, Thiruvanmiyur, Chennai 600041.

    Kasuva Village, Pakkam Po, Near Thiruninravur – 602024. Tamil Nadu, India.

    Vadanallur Village, Uthiramerur, Kanchipuram Dt., TamilNadu, India

    Phone: 04424484009, 9444620289, 9444620286, 044-64611488.

    E-mail:   Sevalayamurali@gmail.com,   Sevalayaprm@sevalaya.org,   Visit us at: www.Sevalaya.org.

    ———————————————————————————————————-                    

                                    செய்திக்குறிப்பு                    

    சேவாலயாவில் ஆண்டு  விளையாட்டு விழாக் கொண்டாட்டம்

    திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே செயல்பட்டுவரும் சேவாலயா அறக்கட்டளையில் இன்று 15.02.2013 காலை 11.00 மணியளவில் ஆண்டு விளையாட்டு விழாவின் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திரு. எம்.உலகநாதன் (மேலாளர், LIC of India, திருவள்ளூர்) அவர்கள் கலந்து கொண்டு வெற்றிப் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.  மேலும் அவர் பேசுகையில், மாணவர்கள் படிப்பில் சிறந்தவர்களாகவும் அதனுடன் விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று கூறினார்.  மாணவர்கள் உடலாலும், மனதாலும் மேன்மைப் பெற விளையாட்டுப் போட்டிகள் உறுதுணையாக உள்ளது.  கிராமங்களில் விலங்கினங்களை எருதுவிடுதல், ஜல்லிக்கட்டு என்ற பெயரில் துன்புறுத்தப்படுகிறது. இதற்கு மாற்றாக சேவாலயாவானது, கிராம இளைஞர்களுக்கு வருடந்தோறும் கைப்பந்துப் போட்டியை நடத்தி அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்புகளைக் கொடுத்து பரிசுகளை வழங்கி வருகிறது. மேலும் சேவாலயா 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பெரியவர்கள், பெண்கள் உள்ளிட்டோருக்கு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கோலப்போட்டிகள்  நடத்தி பரிசு அளிப்பது ஒரு புதிய அனுபவமாக உள்ளது.

     இதுபோன்ற  நிகழ்ச்சிகள் தொடர்ந்து  நடைபெற வேண்டும் எனவும், சேவாலயாவின் சேவைகள் மென்மேலும்  பரந்து விரிந்து எண்ணற்ற  கிராமங்களுக்கு சென்றடைய  வேண்டும் எனவும் பாராட்டினார்.

    மேலும்  திறமைகள் என்பது ஒவ்வொருவருக்குள்ளும் உள்ளது. அதை வெளிக்கொணர்வதற்கு  ஒரு வாயிலாக இருப்பது பள்ளிக்கூடங்களாகும். தமக்குள்ள திறமைகளை மாணவர்கள்  கண்டறிந்து அதற்கேற்றாற் போல் தம்மை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும் கூறினார்.

    2012-13ம் ஆண்டில் விளையாட்டுத் துறையின் சாதனைகளின் அறிக்கைகளைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் திரு.துரைராஜ் அவர்கள் சமர்ப்பித்தார். ஆண்டு விளையாட்டு விழாவில்  அதிகப்புள்ளிகளைப் பெற்ற காந்திஅணி ஒட்டு மொத்த சேம்பியன் பட்டத்தை வென்றது. 48 அணிகள் பங்குப்பெற்ற கையுந்து பந்துப் போட்டியில் இந்து கல்லூரி அணியினர் முதலிடமும், வெள்ளியூர் E. R  பிரெண்ட்ஸ் அணி இரண்டாமிடமும் பெற்றனர்.

    முன்னதாக சேவாலயாவின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திரு.வி.முரளிதரன் வரவேற்க, சேவாலயா பள்ளியின் உதவி தலைமையாசிரியர் திரு.ஆதிமுத்து அவர்கள் நன்றி நவில நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுப்பெற்றது.

    சேவாலயாவிற்காக

    (திரு. வி. முரளிதரன்)

    நிறுவனர்  மற்றும் நிர்வாக அறங்காவலர்

    ————————————————————————————

    Board of Trustees

    Mr.V.Muralidharan (Founder & Managing Trustee)

    Mr.G.Ilayaraja, Ms.Jayanthi, Dr.K.Kannan, Mr.E.Lakshmi Narayanan, Mr.Manu Kapila,

    Mr. K.C.Prem Babu ,Mr.G.Ramesh, Mr.R.Shankar, Mr.N.Vikram

    Advisory Committee: Dr.G.Nammalvar,

    Dr.D.K.Oza, IAS(Retd) Mr.R.Nataraj IPS (Retd), Mr. Amarchand Jain, Dr. Malavika Vinothkumar

    Hony, Co-Ordinator:                                                                   Hony.Correspondent:

    Mr.T.S.Venkataramani                                                  Mrs. Bhuvaneshwari Muralidharan

     

      

     

     

     

    SEVALAYA

    (Registered Charitable Trust)

    No 2/25, Ground Floor, Rajaji Nagar Main Road, Pillaiyar Koil Street, Thiruvanmiyur, Chennai 600041.

    Kasuva Village, Pakkam Po, Near Thiruninravur – 602024. Tamil Nadu, India.

    Vadanallur Village, Uthiramerur, Kanchipuram Dt., TamilNadu, India

    Phone: 04424484009, 9444620289, 9444620286, 044-64611488.

    E-mail:   Sevalayamurali@gmail.com,   Sevalayaprm@sevalaya.org,   Visit us at: www.Sevalaya.org.

    ———————————————————————————————————-                          Please publish the following PRESS REPORT in your esteemed newspaper.                                       15th Feb. 2013          

    PRESS REPORT

    Sevalaya Annual Sports Day Function

    The Annual Sports Festival was celebrated at Sevalaya on 15 Feb 2013 at the service centre at Kasuva. Mr. M. Loganathan, Senior Manager, Life Insurance Corporation of India, Thiruvallur was the chief guest on the occasion and distributed prizes to the winners of the various sports events held for the various categories like the students, staff, youth, village women, parents, villagers etc., Speaking on the occasion Mr. Loganathan lauded Sevalaya for the opportunities the institution provides for the wholesome development of the students. He was all praises for Sevalaya’s initiative in conducting a volleyball tournament for the village as a creative alternative to channelize their energies instead of the traditional Jallikkattu.

    Sevalaya’s Physical Education Teacher, Mr. Durairaj presented the annual sports report for the year 2012-2013. The Gandhi Team was the overall champions in School. 48 teams from the nearby villages participated in the Volleyball tournament conducted by Sevalaya.  The Hindu College Team were the winners and E. R. Team from Velliyur were the runners up.

    Earlier Managing Trustee Mr. V. Muralidharan welcomed the gathering. Mr. Aadhimuthu, (Asst., Head Master) proposed Vote of Thanks. The function came to a close with the singing of National Anthem.

       For Sevalaya,

           

      (V.Muralidharan)

    Founder & Managing Trustee

    ————————————————————————————

    Board of Trustees

    Mr.V.Muralidharan (Founder & Managing Trustee)

    Mr.G.Ilayaraja, Ms.Jayanthi, Dr.K.Kannan, Mr.E.Lakshmi Narayanan, Mr.Manu Kapila,

    Mr. K.C.Prem Babu ,Mr.G.Ramesh, Mr.R.Shankar, Mr.N.Vikram

    Advisory Committee: Dr.G.Nammalvar,

    Dr.D.K.Oza, IAS(Retd)  Mr.R.Nataraj IPS (Retd),  Mr. Amarchand Jain,  Dr. Malavika Vinothkumar

    Hony, Co-Ordinator:                                                                   Hony.Correspondent:

    Mr.T.S.Venkataramani                                                  Mrs. Bhuvaneshwari Muralidharan

    Share
  • ஐ.ஏ.எஸ். இலவச பயிற்சி முகாம், புதுக்கல்லூரி

    செல்வரகு

    சீட் அறக்கட்டளை தமிழ்நாடு சார்பாக இலவச ஐ.ஏ.எஸ்.பயிற்சி முகாம் துவக்க விழா புதுக்கல்லூரி கணினி அறையில் சிறப்பாக நடைபெற்றது.விழாவில் டாக்டர் வி.இறைஅன்பு I.A.S தமிழ்நாடு அரசு பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறை,V.H.முஹம்மது ஹனிபா I.P.S, எஸ்.எம்.இதயத்துல்லா,தலைமை நிர்வாகி சீட் அறக்கட்டளை,கலீலுல்லாஹ் சாஹிப் ,தலைவர் மியாசி மற்றும் புதுக்கல்லூரி, முகமது அஷ்ரப், செயலாளர் மியாசி மற்றும் புதுக்கல்லூரி,அபூபக்கர், அகில இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவர்,டாக்டர் கே.அல்தாப், முன்னாள் முதல்வர் புதுக்கல்லூரி, டாக்டர் அப்துல் மாலிக்,முதல்வர் புதுக்கல்லூரி,எஸ்.அப்துல் கரீம், நிர்வாகி சீட் அறக்கட்டளை, எம்.எஸ்.ஹபீப் ரஹ்மான், நிர்வாகி சீட் அறக்கட்டளை.ஆகியோர் கலந்துகொண்டனர்.

    Share
  • கனம் கோர்ட்டார் அவர்களே! – 15

    இன்னம்பூரான்

    புதிய தொடர் ~ 1

    சில வருடங்களுக்கு முன்னால் ஒரு விபத்தினால் ஆஸ்பத்திரியில் இறந்த ஒரே மகனின் உடலுறுப்புகளை அவனுடைய பெற்றோர்கள் தங்கள் துயரத்தை அடக்கிக்கொண்டு, தானம் செய்தார்கள். 20 நிமிடங்களுக்குள் மற்றொரு ஆஸ்பத்திரிக்கு அவனுடைய இதயத்தை எடுத்துச் சென்றால் தான், மற்றொருவர் உயிர் பிழைக்கலாம். சென்னை வீதிகள், போக்குவரத்துச்சிக்கல்கள்படி இந்த இதயப்பயணம் இரண்டு மணி நேரம் பிடிக்கும். முன்னும் பின்னும் அலறும் சங்குகளும், ஒளி வீசும் சிவப்பு விளக்கு வண்டிகள் கட்டியம் கூற, சென்னை போலீஸ் டிரைவர்களில் திறன் மிக்கவர் ஒருவர் 19 நிமிடங்களில் நின்று போன இதயத்தை ஓடோடிச் சேர்ப்பித்தார். அது ஒரு சாதனை மட்டுமல்ல. சிவப்பு விளக்கும், சங்கொலியும் இட்ட பணியை செவ்வனே செய்தன. அவருக்கு சலாம். சிவப்பு விளக்குக்கும் சங்கொலிக்கும் சலாம். சலாம்.

    சிவப்பு விளக்கும், சங்கொலியும் கன்னாபின்னாவென்று அதிகார துஷ்பிரயோகமாக, மானிடப்பதர்களுக்குக் கூட கட்டியம் கூறுவது அன்றாடக்காட்சி, பாரத தேசம் என்னும் பெயரை தாங்கி வரும் இந்தியாவிலே.  அது மட்டுமல்ல. பெண்களுக்கு உரிய பாதுகாப்புத் தர இயலாத போலீஸ் படை, உருப்படாத மனித ஜன்மங்களுக்குக் கூட, பல வகை துப்பாக்கிகள் ஏந்தி பந்தோபஸ்து அளிக்கிறது. கோடிக்கணக்கான ரூபாய் இந்த  ‘குட்டிச்சுவர்’ கைங்கர்யத்தில் விரயமாகிறது.

    ஒரு மனுதாரர் இதை குறை கூறி, நிவாரணம் நாடி உச்சநீதி மன்றத்தை அணுகினார். அவர் தமிழ்நாட்டில் இருந்து ஒரு உதாரணத்தை முன் வைத்தார். கட்டபொம்மன் முதற்கொண்டு பலர் பட்ட இன்னல்களுக்குக்காரணம், கும்பினிக்காரனிடன் அந்தக்காலத்து ஆற்க்காட்டு நவாப் பட்ட அபரிமிதமான கடனே. செலவாளியும், கடனாளியும் ஆன அந்தக்காலத்து ஆற்க்காட்டு நவாப், நிலம், புலன், மானம், மரியாதை எல்லாவற்றையும் பரங்கிக்காரனிடன் அடகு வைத்தார். மக்களுக்கு அவர் மீது ஏகப்பட்ட வருத்தம். அதனால் அவருக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்று கும்பினிக்காரன் அவருக்குக் கொடுத்த ரக்ஷணை, இன்று மக்களுடன், பண்புடனும், நேசமுடனும் பழங்கி வந்து, அவர்களின் நன்மதிப்பைப் பெற்ற இன்றைய ஆற்காட்டு நவாப் அவர்களுக்கு எதற்கு? சிவப்பு விளக்கும், சங்கொலியும் எதற்கு? அது மட்டுமல்ல. கிரிமினல் பின்னணி உடைய மண்டை வீங்கிகளுக்கும் கூட இந்த மரியாதை சாங்கோபாங்கமாக அளிக்கப்படுவதை நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி அவர்களும், ஹெ.எல். கோகலே அவர்களும் கண்டித்திருக்கிறார்கள். மனுதாரர் ஹரீஷ் ஸால்வே அவர்கள் பிரபல வழக்கறிஞர். ‘இந்த ‘சிவப்பு விளக்கு/ சங்கொலி’ கலாச்சாரம் ஒரு தொத்து வியாதியாகி விட்டது என்று அங்கலாய்த்தார். இது பொதுஜனவைரியாகி விட்டது என்றார். வர, வர, நமது ராஸ்தாக்கள் பெரும்புள்ளிகளின் பயணத்துக்கு ஆபத்து ஆகிவிட்டன என்ற சால்ஜாப்புக்கு, நீதிபதி. ஜி.எஸ். சிங்வி அவர்கள் சாட்டையடியாக ஒரு கருத்துத் தெரிவித்தார். அதை மட்டும் சொல்லி, இன்றைய கட்டுரையை முடித்து விடுகிறேன். கனம் கோர்ட்டார், லேசுபாசு அரசு மந்தகதி, ஊழலுலகம், தணிக்கை தடாலடி எல்லாம் பற்றி சொல்ல விஷயம் நிறைய இருக்கிறது. வாசகர்களுக்கு ஆர்வமிருந்தால், இது தொடரும். இல்லையெனில் இது முற்றுப்புள்ளி.

    “ மக்களுக்கு இந்த ராஸ்தாக்கள் பாதுகாப்பாற்றவை என்றால், அமைச்சருக்கும் அப்படியே தான் இருக்கவேண்டும். அவர் உசத்தி ஒன்றுமில்லை.” ~ நீதிபதி. ஜி.எஸ். சிங்வி.

    இன்னம்பூரான்

    15 02 2013

    Share
  • அறுமுகநூறு (1)

     

    -D.சச்சிதானந்தம்-

     

    காப்பு

     

    கணபதி என்னும் குணபதி போற்றி,

    சினமதி நீக்கும் அவனடி போற்றி,

    தனபதி சிறுமதி களைந்தவன் போற்றி,

    மனமதில் பூத்த பாசெய் கின்றேன்!

     

    நூல்

     

    வெண்முக நிலவின் தண்முகம் தன்னைத்

    தன்முக மாகக் கொண்டசண் முகனை

    இன்முகம் கொண்டு என்மனம் தன்னில்,

    கொண்டொரு பன்முகப் பாசெய் கின்றேன்!                                                                   1

     

    சிவன்மலை ஆண்டவன் சீரடி போற்றி,

    சினங்கொண்டு தணிந்தவன் திருவடி போற்றி,

    சிகரங்கள் தோறும் சேர்ந்தவன் போற்றி,

    சிவந்தசெவ் வடியினைச் சிரங்கொண்டு தொழுவோம்!                                                   2

     

    படியேறி வந்துனது மடி ஏறுவேன்,

    மடியேறி உன்மனதில் குடி ஏறுவேன்,

    கொடியேறும் சேவலுடன் படி ஏறியே.

    அடிமீது அடிவைத்து வருவே னடா!                                                                                 3

     

    படிக்கொரு பாடல் கொடுப்பாய் போற்றி,

    படித்திடும் ஆவல் விதைப்பாய் போற்றி,

    பனிக்குட வாழ்வை அறுப்பாய் போற்றி,

    படைத்தவ னுன்னை அடைவேன் போற்றி!                                                                    4

     

    அடிக்கொரு பாடல் அருள்வாய் போற்றி,

    அனைத்துல குயிரின் கருவே போற்றி,

    அமைத்தொரு பாவைத் தருவாய் போற்றி,

    அடிக் கரும்பாக இனிப்பாய் போற்றி!                                                                                5

     

    (தொடரும்)

     

    படத்துக்கு நன்றி: http://murugan.org/screensavers.htm

    Share
  • சித்திரம் சிறக்க…


     செண்பக ஜெகதீசன்

    அவரவர்க்கும் இருக்குது

    ஆயிரம் வேலை- அதில்

    அடுத்தவர் நிலைமீது

    ஆகுமா கவலை,

     

    சுவரின்றி அழகாய்ச்

    சித்திரம் எழுதவா- அது

    சுவடின்றி அழிவதில்

    சுவையென்ன வாழுது..

     

    கவலையை மறந்திடக்

    கைவசம் யுக்திகள்- அதைக்

    காட்டிடத் தோன்றுதே

    கண்ணிலே பக்திகள்,

     

    சவலைப் பிள்ளையாய்ச்

    சமுதாயம் ஆனதே- அதைச்

    சீரிடா நாட்டிலே

    சிதையுதே மானமே…!

     

     http://www.istockphoto.com/stock-photo-20966885-sad-worried-young-man-with-hands-on-face.php               

    Share
  • எது கவிதை?

    மேகலா இராமமூர்த்தி

    சிந்தனை விதையைச் சிந்தையில் விதைத்தால்
    எண்ண மென்றொரு எழுச்சியின் விளைவாய்
    வந்து விழுந்திடும் வார்த்தைகள் அன்றோ
    சந்தக் கவிதையாய் மலர்ந்திடு கின்றது!
    சொந்தக் கருத்தைச் சுதந்திர மாக
    வழங்க வாய்த்திட்ட வடிவமே கவிதை!
    நொந்த மனங்களின் காயம் ஆற்றிடும்
    மாயம் செய்ய வல்லது கவிதை!
    கருத்து மலர்களைக் கொத்தாய்ச் சுமந்து
    படிப்போர் உளத்தில் நல்மணம் பரப்பியே
    விருப்பத் துடனே படிக்கச் செய்திடும்
    ஆற்றல் கொண்டது அன்றோ கவிதை?
    வரிகளை மடித்து எழுதிடு வதனால்
    வருவன வெல்லாம் கவிதைகள் ஆமோ?
    புரட்சிச் சிந்தனைப் புகுத்திடும் நல்ல
    புதுக் கவிதைகள் புனைவதே சிறப்பு!
    விருத்தம் எழுதிட இயல வில்லையா?
    வஞ்சிப் பாவும் அஞ்சிடச் செய்குதா?
    வருத்தம் வேண்டாம்! வாடுதல் வேண்டாம்!
    சிரமம் தன்னில் சிக்கவும் வேண்டாம்!
    சொல்லும் கருத்தில் தெளிவு இருந்திட்டால்
    சோர்வைக் போக்கும் மருந்தாய் அமைந்திட்டால்
    வெல்லும் மக்கள் உளந்தனை என்றும்
    வீற்றி ருக்குமே என்றும் நிலையாய்!
    நல்ல கவிதையை நாளும் படைத்திடும்
    ”வல்லமை” உண்டு வாருங்கள் செய்வோம்!!

    படத்துக்கு நன்றி

    http://www.bnbforum.com/music-albums-f15/bharathiyar-audio-songs-by-unnikrishnan-t110.html

    Share