இந்த வார ராசி பலன் (18.02.2013-25.02.2013)
காயத்ரி பாலசுப்பிரமணியன்
மேஷம்: உயர்கல்வியைத் தொடர்வதில் இருந்த பிரச்சனைகள் நீங்குவதால், மாணவர்கள் தெம்புடன் வலம் வருவார்கள். உறவினர்கள் சிலர் உங்களிடம் பண உதவி செய்யும்படி நச்சரிக்கலாம் . இந்த வாரம் கலைஞர்களுக்கு கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் மனநிம்மதியுண்டு. பெண்கள் முக்கியமான விஷயங்களில் குடும்பத்தாரின் ஆலோசனையின்படி செயல்படவும். பெற்றோர்கள் ஏட்டிக்குப் போட்டியாக செயல்படும் பிள்ளைகளிடம் பக்குவமாக நடந்து கொள்வது மூலம் அவர்களை நல்ல வழிக்கு மாற்ற முடியும். திடீர் பயணங்களால் உங்களின் கையிருப்பு கரையும்.
ரிஷபம் : கலைஞர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டு என்றாலும் கூடவே செலவுகளும் வந்து சேரும்! உறவுகளின அனுசரணையற்ற போக்கால், குடும்பத்தில் வீண் விவாதங்கள் அவ்வப்போது வந்து போகும். எனவே பெண்கள் சொற்சிக்கனத்தை கடை பிடிப்பது அவசியம் சுய தொழில் புரிபவர்களுக்கு இந்த வாரம் அரசு காரியங்கள் இழுபறியான நிலையில் இருப்பதால், போராடியே லாபம் ஈட்ட வேண்டி இருக்கும். .பணியில் இருப்பவர்கள் மேலதிகாரியை அனுசரித்துப் போனால், வேலைகள் விரைவாக முடிவதோடு வேண்டிய சலுகைகளும் வந்து சேரும்
.
மிதுனம் : பெண்கள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்பட்டால், வீண்செலவுகளைத் தவிர்த்து விடலாம். இந்த வாரம் உத்யோகத்தில் புதுப் பொறுப்புகள் உங்களைத் தேடி வரும் . கலைஞர்கள் வீண் கர்வம், ஆடம்பர செயல்பாடு மற்றும் பேச்சு ஆகியவைகளைக் குறைத்துக் கொண்டால், பண இழப்புகளையும், விரயங்களையும் தவிர்த்துக் கொள்வது எளிதாகும். வியாபாரிகள் வியாபார யுக்திகளையும், விளம்பர யுக்திகளையும் காலத்திற்கேற்றபடி மாற்றிக்கொண்டு செயல்பட்டால், தொழிலில் பெரும் வெற்றியும் லாபமும் வந்து குவியும்.
கடகம் : வயதானவர்களுக்கு நீண்ட காலமாக போக ஆசைப்பட்ட புண்ணிய தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்புகள் கிட்டும். இந்த வாரம் தந்தைவழி சொத்துகளால் அலைச்சல்களும், செலவுகளும் ஏற்படும். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படும். பெற்றோர்கள் பிள்ளைகளை கண்காணிப்பதோடு அவர்களின் தவறுகளை பக்குவமாக சுட்டிக் காட்டினால், அவர்களின் வாழ்க்கை சிறப்பான பாதையில் செல்வது உறுதி. பெண்கள் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி பேசாமலிருந்தால், குடும்ப உறவுகள் சீராக இருக்கும்
சிம்மம் : பெண்கள் குடும்ப விவாகாரங்களில் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. இந்த வாரம் உத்யோகத்தில் சாதக, பாதகம் இரண்டும் கலந்து இருக்கும். எனவே வேலையில் இருப்பவர்கள் இயன்றவரை உயர் அதிகாரிகளோடு வாக்குவாதத்தில் இறங்க வேண்டாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் இடம், பொருள் அறிந்து பேசுவது நலம் தரும். ஒருபுறம் விமர்சனம் இருந்தாலும் மற்றொரு புறம் கலைஞர்கள் தங்கள் திறமையால் சாதனைக்கு சொந்தக்காரர்களாக ஆகும் வாய்ப்பும் கிடைக்கும். நெருங்கிய உறவுகளால் மகிழ்ச்சி, செலவு,இரண்டும் அதிகரிக்கும்
கன்னி: பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் நடவடிக்கைகள் சற்று அதிருப்தி தரலாம் .. வியாபாரிகள் வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகளைப் போட வேண்டாம். இருப்பதை வைத்து பெருக்கப்பாருங்கள். அதுவே புத்திசாலித்தனம். கலைஞர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு உடன் இருப்பவர்களுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும் வாய்ப்பிருப்பதால், பிரச்சனைகள் பெரிதாகாமலிருக்க விட்டுக் கொடுத்துப் போவது அவசியம்.
துலாம்: இந்த வாரம் வியாபாரிகள் வரவேண்டிய பணத்தை போராடி வசூலிக்க வேண்டி இருக்கும். உத்யோகத்தில் இருந்த வீண்பழி, மோதல்கள், ஆகியவை நீங்கும். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபம் மாறுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கும், கல்கலப்புக்கும் பஞ்சமிராது. முதியவர்களுக்கு உடல் அசதி, சோர்வு, ஆகியவை அவ்வப்போது வந்து தலைகாட்டும். பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை கவனமாகக் கையாண்டால் வீண் செலவுகளைத் தவிர்க்கலாம். சிறு தொழில் செய்பவர்கள் அரசு விவகாரங்களில் அலட்சியம் காட்டாமல் கவனமாக இருப்பது அவசியம்.
விருச்சிகம்: பொது வாழ்வில் இருப்பவர்களை கௌரவப் பதவிகள் தேடிவரும். கலைஞர்கள் கவனமாய் இருந்தால், உங்களைப் பற்றிய வீண் வதந்திகள் தானே அடங்கி விடும். பெண்கள் அக்கம்-பக்கம் வீட்டாரிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை அலச வேண்டாம். ஒப்பந்த அடிப்படையில் வேலையில் சேர்பவர்கள் அதற்குரிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை படித்துப்பார்த்து பின்னர் கையெழுத்திடுவது நல்லது. வியாபாரத்தில் உள்ள நெருக்கடிகள் மாறுவதால், வியாபாரிகள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
தனுசு: . பெண்கள் கனிவாகப் பேசினால், சொந்த பந்தங்களிடையே இருந்து வந்த மனக்கசப்பு விலகி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வந்து சேரும் . இந்த வாரம் மாணவர்களுக்கு நண்பர்களால் நன்மையும், மகிழ்ச்சியும் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும் வாய்ப்பிருப்பதால், வியாபாரிகள் தேவைக்கேற்றவாறு சரக்குகளை வாங்குவது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் நீண்டதூர பயணங்களை தவிர்ப்பது அவசியம். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்களில் அவசர முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம்.
மகரம்: பொது வாழ்வில் இருப்பவர்கள் மற்றவர்களைப்பற்றிய வீண் விமர்சனங்களில் ஈடுபடாமலிருந்தால், அமைதியாக வேலைகளை செய்ய முடியும். அரசு அளிக்கும் சலுகை கலைஞர்களை உற்சாகப்படுத்துவதுடன், அவர்களின் திறமைகளை வெளியுலகுக்கு அழைத்து வருவதாக அமையும். பெண்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீட்டில் தடைபட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்கள் கூடிவரும். மாணவர்கள் பாடங்களைப் பயில்வதில் கவனமாக இருந்தால், சோம்பல், மன உளைச்சல் ஆகியவை அருகில் வராமலிருக்கும்.
கும்பம்: பெண்களுக்கு குடும்பத்தில் நிலவி வந்த குழப்ப நிலை மாறி தெளிவு பிறப்பதோடு பணப்பற்றாக்குறையும் நீங்கும் இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். கணினித் துறை பயிலும் மாணவர்களுக்கு சலுகைகளுடன் கூடிய புதிய வாய்ப்புகள் கிடைக்கும். முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் அவசரப்பட்டுப் பேசி சங்கடங்களில் சிக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். வேலையில் இருப்பவர்களுக்கு சீரான வருமானம் இருந்தாலும், இந்த வாரம் செலவுகளும் உங்களை துரத்திக் கொண்டுதான் இருக்கும்
.
மீனம்: இந்த வாரம் வேலைச்சுமையால் பெண்களின் பதட்டம் அதிகரிக்கலாம். எனவே எந்த சூழலிலும் அவசர முடிவுகளை தவிர்க்கவும். வீண் போட்டிகள் குறைய வியாபாரிகள் திட்டமிட்டு செயல்படுவது அவசியம் . பொது வாழ்வில் இருப்பவர்கள் மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி புதுப் பொறுப்புகளை எடுக்க வேண்டாம். மாணவர்கள் தேவையில்லாமல், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாமலிருப்பதே புத்திசாலித்தனம்.