வன்புணர்வுக்கெதிரான
போராட்டக் களத்தில்
எவனோ
இடுப்பைக் கிள்ளிவிட்டான்!
இதை மற்றவரிடம்
சொல்வதா? வேண்டாமா??
ஆறுதல் கிடைக்குமா?
அவமானம் நேருமா??
சீற்றம் கொண்ட புயலே
சிக்குண்டது புயலில்!!
இதை எல்லாம் வீணாக
எதுக்கு பெரிசு பண்ணிட்டு?!
அரவமற்று அடங்கிப் போனது
களமாடிய ஆவேசப் பெருங்காற்று!!
Blog
-
அச்சம் தவிர்!
-
இந்த வார வல்லமையாளர்!
திவாகர்
1980 களின் ஆரம்பங்களில் எனக்கு ஒரு ஆருயிர்த்தோழி இருந்தாள். வீடு எதிர் வீடுதான். சாலை சற்று அகலமானது என்பதால் நாங்கள் இருவரும் ஏதாவது இருக்கும் இடத்திலிருந்தே பேசவேண்டுமானாலும் சைகை மொழிதான்.. எப்போதாவதுதான் என் வீட்டுக்கு வருவாள்.. ஏனெனில் வச வசவென நண்பர்கள் கூட்டத்துக்கு குறைவே கிடையாத நாட்கள் அவை. அவளுக்கு கூட்டம் பிடிக்காது, கூச்சப்படுவாள். நான் அவள் வீட்டுக்குப் போவதுண்டு.. அவ்வப்போது பலகாரம், சாப்பாடு கூட உண்டு. ஐயப்ப பூஜை சமயங்களில் மட்டும் தன் அப்பாவுடன் சாயங்காலம் பூராவும் எங்களுடனே அவள் ஆஜர்தாம்..
இரவு எந்நேரம் படுக்கப் போனாலும் நான் கண்டிப்பாக காலை எழுந்தே ஆகவேண்டும்தான்.. காரணம் அவள் அங்கேயிருந்து என்னைக் கண்டதும் குட்மார்னிங் திவாம்மா.. (திவா மாமா) என்று கூவுவதைக் கேட்டே ஆகவேண்டும். ஆமாம்.. எதிர்வீட்டு நண்பர் திரு சுப்பாராவ் அவர்களின் குழந்தை சுசீலாவுக்கு அத்தனை பிரேமை என் மீது.. மழை நாளானாலும் பனியானாலும் அந்தக் குழந்தை ஜன்னலருகே இந்தக் கூவலுக்காக காத்துக் கிடக்கும் . அவள் தந்தையும் தாயும் என்னுடைய இனிய நண்பர்கள் ஆதலால் ஒரு செல்ல கோபத்துடன் என்னைக் கண்டிப்பார்கள்.. ‘எங்களுக்குக் கூட அவள் குட்மார்னிங் சொல்வதில்லை’ என்று குறை வேறு சொல்வார்கள்.. நாள் தவறினாலும் அவள் கூவும் குட் மார்னிங் மட்டும் தவறவே தவறாது (நாங்கள் எங்காவது வெளியூர் பயணத்தில் இருந்தால் தவிர)..
அவள் இதை விளையாட்டாகவோ அல்லது அன்பால் ஏற்பட்ட கடமையாகவோ, இப்படி தினம் செய்யலாம். ஆனால் எனக்கு அப்போதெல்லாம் சுசீலா மிகப் பெரிய டானிக்.. ஒரு சுறுசுறுப்பும் பரபரப்பும் என்னையறியாமல் தொற்றிக்கொள்ளும். . குட் மார்னிங் சொல்வதெல்லாம் எப்படி டானிக் ஆகும் என்று கேள்வி வரும்.. அதை அந்தக் கணங்களில் அனுபவித்தவர்தாம் அதன் மகிமையையும் உணரமுடியும். நல்ல வார்த்தை நாலு சொல்லும்போது அந்த நல்லதின் விளைவும் அலைகளும் நம்மையும் தொற்றி பற்றிக் கொள்ளும். உற்சாகம் கூடவே தோன்றும். அந்த நாள் இனிய நாள்தான். இப்போதும் கூட சில நண்பர்களிடமிருந்து நல் வணக்கமும் வாழ்த்தும் எஸ் எம் எஸ் மூலமாக வந்து கொண்டிருக்கிறது. இங்குள்ள (மிகப் பெரிய பதவியில் இருந்தாலும்) தமிழ் நண்பர் திரு முத்துசாமி அவர்கள் ’இந்த நாள் இனிய நாளாகட்டும்’ என்று செய்தி அனுப்பிக் கொண்டே இருப்பார். அதைப் பார்த்ததும் நமக்குள்ளே ஒரு புது உற்சாகம் தோன்றி மறைவதை மறுக்கவே முடியாது.
இனிய நாள் என்றதும் இந்த நாள் இனிய நாள் என்று தினம் குழுமங்களில் கூவும் நண்பர் ஜோ’வை இணைய நண்பர்களுக்கு நினைவு வந்துவிடும். ஜோ’வும் நாள் தவறாமல் இந்த நாள் இனிமையாக இருக்கட்டும் என்று எல்லோருக்கும் சொல்லி வருகிறார். விடா முயற்சியாக நாளும் அலுக்காமல் அவர் இந்த நல்ல வார்த்தைப் பதிவிடும் போதெல்லாம் பார்க்கும், படிக்கும் எல்லோருக்குமே உற்சாகம் வரத்தான் செய்யும்.இதோ புது வருடம் வந்துகொண்டே இருக்கிறது. சற்று திரும்பிப் பார்த்து நடந்து போன நிகழ்ச்சிகளை சற்று நினைவு கூர்ந்தால் சென்று போன வருடம் நல்லதை விட கெட்டதுகளை அதிகம் உண்டாக்கிச் சென்ற வருடமாகிவிட்டதோ எனக் கூட தோன்றலாம். இருந்தும் நாம் நல்லவைகளையே இனி எதிர்பார்ப்போம்.. நல்லவைகளையே நினைப்போம். ஜோ’வைப் போலவே அவர் தரும் இனிய செய்திகளைப் போலவே இந்த நாள் என்றல்ல, இந்தப் புதிய வருடத்தில் வரும் ஒவ்வொரு நாளும் இனிய நாளாக அமைந்திட பிரார்த்திப்போம்.
ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு நாளும் புதுப்புது உற்சாகத்தை உண்டாக்கி, இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என நினைக்க வைத்து இந்த நாள் இனிய நாளென்று நல்லதையே நாளும் நினைக்க வைத்து வரும் இனிய தோழர் ஜோ எனும் ஜோசப் அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமையாளர் குழுவினர் சார்பில் அறிவிப்பது இந்த வருடத்தில் கடைசியாக நான் செய்துகொண்டிருக்கும் செயல்களில் ஒரு மிக நல்ல செயலாகக் கருதுகிறேன். ஜோ’வுக்கு ஜே போட்டு அவருக்குப் பொது வாழ்த்தோடு புது வருட வாழ்த்தையும் சொல்லிக் கொள்கிறேன்.
கடைசி பாரா:
உற்றார்கள் எமக்கில்லை யாரும் என்னும்
உற்றார்கள் எமக்கிங்கே எல்லாரும் என்னும்என்ற நம்மாழ்வாரின் தீர்க்கதரிசன வார்த்தைகளை, அதன் சத்தியத்தை எண்ணி எண்ணி அனுக்கணமும் வியந்து கொண்டே, உங்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகளை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
-
நான் அறிந்த சிலம்பு – 51 (31.12.12)
புகார்க்காண்டம் – 07. கானல் வரி
(4)
ஆற்றினில் புதுப்புனல் கண்ட
உழவர் மகிழ்ந்து ஆர்க்கும் ஓசை,
நீர் மதகுதனில்
நிறைந்து வடிகின்ற ஓசை,
கரைகளை வரப்புகளை
உடைத்துப் பாய்கின்ற நீரின் ஓசை,
புதுப்புனல் விழாவில்
களித்து மகிழும் மாந்தர்
எழுப்பி நிற்கும் பல்வித ஓசை,இவை அனைத்தும் கரையின்
இருபக்கமும் ஆர்ப்பரிக்க
நின் கடமையாகிய
நல்லொழுக்கம் தவறாது
நடந்து செல்லும் காவிரியே,
நீ வாழ்க!சோழனின் வளத்தை
அதிகரிக்க எண்ணியே
நீ அங்ஙனம் நடந்து செல்கிறாய்!
உன் வளத்தில் கொழித்திருக்கும்
போர் மறவர் வாயை மூடாமல்
ஆரவாரித்துக்கொண்டே இருக்கின்றர்.
அத்தகு வளத்துக்குக் காரணமான
காவிரியே நீ வாழ்க!(காப்பியத்தின் திருப்புமுனை – மாதவி தவறாகப் புரிந்து கொள்ளுதல்
தான் உடன் இருப்பதால், பரத்தையருடன் கூடி மகிழ முடியாத கோவலன் வருந்துகிறான்;
மாதவி தன்னிடம் இருக்கும் வளமெல்லாம் தான் அருளிய வளம்தான் என்று பாடுகிறான்;
இவ்வாறாக மாதவியின் சந்தேகம் அதிகரித்தது.
இந்த இப்பகுதிதான் காப்பியத்தின் திருப்புமுனையாக அமைகிறது.)(5)
சார்த்து வரி- முகச் சார்த்து
புகார் நகரைச் சிறப்பித்துப் பாடுதல்
தோழி தலைமகன் முன் நின்று வரைவு கடாதல்கருங்குவளை மலர்போலும்
நீண்ட கண்களை உடையவள்
எம் தலைவி;
அவளிடம்
கடலின் பெருந்தெய்வமான
வருணனைச் சுட்டிக் காட்டிச்
சாட்சியாக வைத்திருந்து
நின்னைப் பிரிய மாட்டேன்;
விரைவில் மணம்புரிந்து கொள்வேன்
என அன்று கூறிய எம் தலைவர்
அச்ச்சுளுரைகள்
நிறைவேற்றாமல் பொய்த்துவிட்டார்.ஐயனே!
அறனில்லாதவர் அவர் என்று
எங்ஙனம் நாங்கள் அறிவோம்!நிலத்தில் கிடக்கின்ற வெண்சங்குகளையும்
வெண்முத்துகளையும் கண்டு
அவைதாம் தம்மை மலர்விக்க வந்த
வெண்மதியும் விண்மீன்களும் என்றெண்ணி
மொட்டவிழும் ஆம்பல்கள்
பகலை இரவென்று
தவறாக நினைக்கும்
தன்மை வாய்ந்த
புகார் அன்றோ எம் நகரம்!(ஆம்பல் பொழுது கண்டு ஏமாந்தது போல, தலைவனின் இயல்பு குறித்துத் தவறாக
நாங்கள் புரிந்து கொண்டோம்…என்பது கருத்து)அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram18.htmlபடத்துக்கு நன்றி:
http://www.eegarai.net/t77585-topic -
குறும்பா!
-தனுசு-
பக்கம் பக்கமாய்
படித்த
பாக்களெல்லாம்
இன்றைய
பறக்கும் உலகில் சுருக்கப்பட்டு
ஆனது குறும் பா!அது
கடுகு முதல் கடவுள் வரை
அணு முதல் ஆழி வரை
அத்தனையும் நயமாய்
சொல்லவைக்கும் ரொம்ப குறும்பா!அதில்
காரம் முதல் கனல் வரை
காதல் முதல் காமம் வரை
அத்தனையும் கண்டு
சுவைக்கலாமடா என் செல்லக் குறும்பா!அதன் சுவைப்பற்றி
சொல்ல
நான் எதைக்கொண்டு வர…
அட அட டா
அது
இனிக்கும் கரும்பின் அடிக் குறும்பா! -
தண்டனை
மருத்துவ சேவையில்
மணக்க வேண்டிய …மலரை
மனமில்லா
பாவிகள் பலர்
காமவெறி கொண்டு ….
சிதைத்து ….சேதாரப் படுத்திவிட்டார்கள்
சேதாரத்திற்கு
ஆதாரம் இருந்தும் ..
நாடாளும் அரசு
தண்டிக்காமல்
நாட்களை நகர்த்திக் கொண்டு இருக்கிறது ,……
நாடக காட்சிகளாக .
மறந்தும் அவர் களுக்கு
மரண தண்டனை அளிக்க கூடாது .
காமத்தை …….
கனவிலும் நினைக்கமுடியாதபடி
உடலில் அந்த
உணர்வுகளை தூண்டும் நரம்புகளை
ஊனப்படுத்தி …..
உயிர் உள்ளவரை அந்த ……
உணர்வுக்கு…. ஏங்கி…… ஏங்கி…..
கடைசி வரை காலத்தை கழிக்கவேண்டும் .
அடக்கு முறையில்
காம வெறியை களிப்பவர்களை
அண்டத்திலிருந்தே கழித்துவிடவேண்டும்படத்துக்கு நன்றி: http://my.englishclub.com/profiles/blogs/silent-of-tears
-
பாரத நாட்டின் பெளதிக மேதை ஸர்.சி.வி. ராமன்
(1888-1970)
http://www.youtube.com/watch?v=XaWBI9w129w
(Scattering of Yellow Light)
[Raman Effect]
நோபெல் பரிசு பெற்ற முதல் இந்திய விஞ்ஞானி
ஆப்பில் பழம் மரத்திலிருந்து கீழே விழுந்த போது, ஏன் தரை நோக்கி விழுந்தது என்ற வினா, ஐஸக் நியூட்டன் [Isaac Newton] முதன் முதல் ஈர்ப்பு விசையைக் [Gravitation] கண்டு பிடிக்க ஏதுவாயிற்று! அதுபோல் ஒரு நிகழ்ச்சி, சி.வி. ராமன் வாழ்க்கையிலும் ஒரு பெரும் திருப்பத்தை உண்டாக்கியது! 1921 ஆம் ஆண்டு பிரிட்டனில் நிகழ்ந்த ஓர் விஞ்ஞானப் பேரவையில் ராமன் பங்கெடுத்துக் கப்பலில் மீளும் சமயம், ஓர் விஞ்ஞானப் புதிர் அவரது கவனத்தை ஈர்த்தது. கப்பல் மத்திய தரைக் கடல் [Mediterranean Sea] வழியாக ஊர்ந்து செல்கையில், கடல் நீரின் அடர்த்தியான நீல நிறம் அவரது கண்களைக் கவர்ந்து, சிந்தனா சக்தியைத் தூண்டியது! நீலம் நிற கடல் நீரிலிருந்து எப்படி உண்டாகிறது ? அந்த மூல வினாவே அடிப்படையாக இருந்து, ஒளியின் மூலக்கூறுச் சிதறலை [Molecular Scattering of Light] அவர் கண்டு பிடித்து, ராமன் பின்னால் பெளதிகத்திற்கு நோபெல் பரிசு பெறுவதற்கு ஏதுவாயிற்று!
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பாவில் ஜெர்மன் விஞ்ஞானி ராஞ்சன் எக்ஸ்ரேக் கதிர்களைக் கண்டு பிடித்து நோபெல் பரிசு பெற்ற போது, பிரான்ஸில் ஹென்ரி பெக்குவரல், மேடம் கியூரி ஆகியோர் இருவரும் கதிரியக்கத்தைப் பற்றி விளக்கி நோபெல் பரிசைப் பகிர்ந்து கொண்ட போது, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது ஒப்பியல் நியதிக்கு நோபெல் பதக்கம் அடைந்த போது, இந்தியாவில் சி.வி. ராமன் தனது ஒளிச்சிதறல் [Scattering of Light] நியதியை வெளியாக்கி 1930 இல் நோபெல் பரிசைப் பெற்றார். தமிழ் நாட்டைச் சேர்ந்த சி.வி. ராமன்தான் பிரிட்டிஷ் இந்தியாவில் முதன் முதல் பெளதிக விஞ்ஞானத்தில் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்து, இத்தகைய பெரும் மதிப்பைப் பெற்றவர்.
திரவம், திடவம் அல்லது வாயுவில் உள்ள மூலக்கூறுகள் [Molecules in Liquid, Solid or Gas] தம்முள் ஊடுறுவும் ஒளியை ஓரளவுச் சிதறடித்து, சிதறிய ஒளியின் அலை நீளத்தை [Wavelength] மாறும்படிச் செய்கின்றன. இதுவே ராமன் சிதறல் [Raman Scattering], அல்லது ராமன் விளைவு [Raman Effect] என்று பெளதிகத்தில் கூறப் படுகிறது. ராமன் ஒளிநிறப் பட்டை [Raman Spectrum] மூலக்கூறுகளின் அமைப்பைக் [Structure of Molecules] காண உதவுகிறது. இந்திய விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தவர் என அகில நாடுகளில் போற்றப் படுகிறார், சி.வி, ராமன்.
சி.வி. ராமனின் ஆரம்ப வாழ்க்கை வரலாறு
சந்திரசேகர வெங்கட ராமன் 1888 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளி நகரில் பிறந்தார். தந்தையார் விசாகப் பட்டணத்தில் கணித, பெளதிகப் பேராசிரியராய் A.V.N. கல்லூரியில் பணி யாற்றி வந்தார். ராமன் முதலில் A.V.N. கல்லூரியில் பயின்றார். அப்போது ராமன் கணிதம், பெளதிக முற்போக்குக் கோட்பாடுகளை [Advanced Concepts of Maths & Physics] எளிதில் புரிந்து ஆழ்ந்து கற்றுக் கொண்டார். அடுத்து சென்னைப் பட்டணம் பிரசிடென்ஸிக் கல்லூரில் படித்து, முதல் வகுப்பில் சிறப்புயர்ச்சி [First Class with Distinction] பெற்று, மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் 1904 இல் B.A. பட்டமும், 1907 இல் M.A. பட்டமும் பெற்றார். ராமன் 16 வயதில் பி.ஏ. படித்த போது சிறப்பாக பெளதிகத்தில் முதல்வராகத் தேறித் தங்கப் பதக்கம் பெற்றார். ராமன் எம்.ஏ. வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போதே அவரது ஈடுபாடு ஒளி, ஒலி ஆராய்ச்சிகளில் [Optics, Acoustics] ஆழ்ந்திருந்தது. விஞ்ஞானக் கல்வியை மேலும் தொடர அவர் வெளிநாடு செல்ல வேண்டி யிருந்ததாலும், அந்தக் காலத்தில் விஞ்ஞானப் படிப்பால் உத்தியோக வாய்ப்புகள் எதுவும் இல்லாததாலும், ராமன் விஞ்ஞானத்தில் மேற்படிப்பைத் தொடர முடியாது போயிற்று.
1907 ஆம் ஆண்டில் அரசியலார் நிதித்துறை நிறுவனத்தில் [Financial Division of the Civil Service] கணக்காளராக [Accountant] வேலை செய்ய, ராமன் கல்கத்தாவுக்குச் சென்றார். அப்பணியில் அவர் பத்தாண்டுகள் அங்கே வேலை செய்தார். அந்த சமயத்தில்தான் ராமன் தனியாகக் கல்கத்தாவில் இருந்த இந்திய விஞ்ஞான வளர்ச்சிக் கூட்டகத்தில் [Indian Association for the Cultivation of Science] தன் விஞ்ஞானப் படிப்புகளைத் தனியாகத் தொடர்ந்தார். அவர் கணக்கராக முழு நேரம் வேலை செய்து வந்ததால், முதலில் ஓய்வு நேரத்தில் மட்டுமே கல்கத்தா விஞ்ஞான வளர்ச்சிக் கூட்டகத்தில் பெளதிக ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார். ஓய்வு நேர ஆராய்ச்சிகள் செய்த அந்தக் குறுகிய காலத்திலே அவர் ஓர் சிறந்த சோதனை நிபுணர் என்று பெயர் பெற்றார்.
அவர் முதலில் ஒலியின் அதிர்வுகள் பற்றியும் [Vibrations in Sound], இசைக் கருவிகளின் கோட்பாடு [Theory of Musical Instruments] பற்றியும் ஆராய்ச்சிகள் செய்ய ஈடுபட்டார். இசைக் கருவிகளின் பெளதிக ஈடுபாடு அவரது வாழ்க்கை பூராவும் நீடித்தது. அவரது நுண்ணிய விஞ்ஞான ஆராய்ச்சிகளைப் பற்றி அறிந்த, கல்கத்தா பல்கலைக் கழகம் 1917 இல் பெளதிகப் பேராசிரியர் வேலையை ராமனுக்குக் கொடுக்க முன்வந்தது. ராமனும் அதை விருப்பமுடன் ஏற்றுக் கொண்டு, ஏறக்குறைய 16 ஆண்டுகள் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் பெளதிகப் பேராசிரியராகப் பணி யாற்றினார்.
ராமன் விஞ்ஞான ஆராய்ச்சிகளின் பொற்காலம்
கல்கத்தா பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய அந்தப் பதினாறு ஆண்டுகளை ராமனின் பொற்காலம் என்று சொல்லலாம். அப்போதுதான் அவரது அரிய, புதிய, அநேக விஞ்ஞானப் படைப்புகள் தோன்றி உலகத்திற்கு அறிமுக மாயின. 1926 இல் ராமன் இந்தியப் பெளதிக வெளியீடு [Indian Journal of Physics] பதிவைத் துவங்கித் தனது விஞ்ஞானப் படைப்புகள் வெளியாக ஏற்பாடு செய்தார். 1928 இல் இந்திய விஞ்ஞானப் பேரவையின் [Indian Science Congress] தலைவராக ராமன் தேர்ந்தெடுக்கப் பட்டு முதலில் இந்தியருக்கு அறிமுக மானார். பிரிட்டிஷ் அரசாங்கம் ராமனது விஞ்ஞானப் படைப்புகளைப் பாராட்டி, 1929 இல் ஸர் [Sir] பட்டம் அளித்துத் தீரமேதமை [Knighthood] அங்கிகரிப்பும் செய்தது. மேலும் பிரிட்டன் பேரரசுக் குழுவினரின் ஹூஸ் பதக்கத்தையும் [Hughes Medal of the Royal Society] ராமனுக்குக் கொடுத்தது. 1930 ஆம் ஆண்டு நோபெல் பரிசையும் ராமன் பெளதிகத்திற்குப் பெற்று, உலகப் புகழடைந்தார்.
நோபெல் பரிசு பெற்றபின் 1934 இல் பெங்களூர் இந்திய விஞ்ஞானக் கழகத்தில் [Indian Institute of Science] ஓர் பெரும் பதவி ராமனுக்காகக் காத்துக் கொண்டிருந்தது! பெளதிகத் துறைப் பிரிவில் தலைவர் [Head of the Physics Dept] பதவியை ஏற்றுக் கொள்ள, ராமன் கல்கத்தாவிலிருந்து பெங்களூருக்குச் சென்றார். பிரிட்டிஷ் இந்தியாவில் அந்தக் காலத்தில் [1909] செல்வாக்குடைய டாடா தொழிற்துறைப் பேரரசு [Tata Industrial Empire] கட்டிய ஆசியாவிலே உயர்ந்த ஓர் விஞ்ஞான ஆராய்ச்சிப் பயிற்சிக் கூடம் அது! பெங்களூரில் 1948 வரை அப்பதவியில் இருந்து கொண்டே, இடையில் நான்கு ஆண்டுகள் விஞ்ஞானக் கழகத்தின் அதிபதியாகவும் [President] பொறுப்பேற்றார். கல்வி புகட்டும் கடமையில் அவர் ஆழ்ந்து கண்ணும் கருத்தோடும் வேலை செய்தார். அவரிடம் பெளதிக விஞ்ஞானம் படித்து மேன்மை யுற்றுப் பிற்காலத்தில் பெரும் பொறுப்பான பணி யாற்றியவர்கள், பலர். 1939 இல் அகிலக்கதிர் [Cosmic Rays] ஆய்வுத் துறைப் பகுதியில் ஆராய்ச்சி செய்ய வந்த விஞ்ஞானி டாக்டர் ஹோமி ஜெ. பாபா [Dr. H.J. Bhabha]. பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆசியாவிலே மிகவும் முற்போக்கான அணுவியல் ஆராய்ச்சி உலைகளையும், அணுசக்தி நிலையங் களையும் பாரதத்தில் தோற்றுவித்த அரிய மேதை டாக்டர் பாபா! இரு மேதைகளும் ஒருவர் மீது ஒருவர் மதிப்பும், நட்பும் கொண்டிருந்தார்கள்.
சுதந்திர இந்தியா 1948 இல் அவருக்காகப் பெங்களூரிலே ஓர் புதிய ஆராய்ச்சிக் கூடத்தைக் [Raman Research Institute] கட்டி அவர் தனியாக ஆராய்ச்சிகள் புரிய வசதி செய்தது. அதன் ஆணையாளராக [Director] சி.வி. ராமன் நியமிக்கப் பட்டார். பெங்களூரில் [1970 நவம்பர் 21] அவர் காலமாகும் வரை, ராமன் அந்த ஆராய்ச்சிக் கூடத்திலே ஆய்வுகள் புரிந்து வந்தார்.
ராமனின் பெளதிக விஞ்ஞானப் படைப்புகள்
1921 ஆம் ஆண்டு பிரிட்டனில் நிகழ்ந்த விஞ்ஞானப் பேரவையில் பங்கெடுத்துக் கப்பலில் மீண்ட சமயம், ஓர் விஞ்ஞானப் புதிர்க் காட்சி அவரது கவனத்தை ஈர்த்தது. மத்திய தரைக் கடல் [Mediterranean Sea] வழியாகக் கப்பல் ஊர்ந்து செல்கையில், கடலின் அடர்ந்த எழில்மிகு நீல நிறம் அவரது கண்களைக் கவர்ந்து, சிந்தனா சக்தியைத் தூண்டியது! நீல நிற ஒளி கடல் நீரிலிருந்து எப்படி உண்டாகிறது ? கடல் நீரில் தொங்கும் துகள்கள் [Suspended Particles in Water] பரிதியின் ஒளியைச் சிதற வைத்து நீல நிறம் எழுகிறது, என்று நோபெல் பெற்ற பிரிட்டிஷ் பெளதிக விஞ்ஞானி ஜான் ராலே [John W.S. Rayleigh (1842-1919)] கூறிய விளக்கத்தை ராமன் ஒப்புக் கொள்ள வில்லை. கல்கத்தாவை அடைந்த பின், ராமன் அந்த நிகழ்ச்சியைச் பற்றி ஆராய்ந்தார். ராமன் சோதனைகள் செய்து, நீரில் ஒளியைச் சிதற வைத்து, நீரில் நீல நிறத்தை உண்டாக்குபவை, நீரில் தொங்கும் துகள்கள் அல்ல, நீரின் மூலக்கூறுகள் [Water Molecules] என்று நிரூபித்துக் காட்டினார்.
1923 இல் அமெரிக்க பெளதிக விஞ்ஞானி ஆர்தர் காம்ப்டன் [Arthur Compton (1892-1962)] காம்ப்டன் விளைவைக் [Compton Effect] கண்டு பிடித்தார். அதன்படி எக்ஸ்ரேக் கதிர்கள் [X-Rays] பிண்டத்தை [Matter] ஊடுறுவும் போது, சில கதிர்கள் சிதறி முன்னை விட நீண்ட அலைநீளம் [Longer Wavelength] அடைகின்றன. அந்த நிகழ்ச்சியில் எக்ஸ்ரே ஒளித்திரள்கள் [X-Ray Photons] பிண்டத்தில் உள்ள எலக்டிரானுடன் மோதி, ஓரளவு சக்தியை இழக்கின்றன. 1925 இல் ஜெர்மன் கணித விஞ்ஞானி வெர்னர் ஹைஸென்பெர்க் [Werner Heisenberg (1901-1976)] காம்ப்டன் விளவை ஆக்குவவை எக்ஸ்ரே ஒளித்திரள்கள் மட்டும் அல்ல, கண்ணுக்குத் தெரியும் சாதாரண ஒளியும் [Visible Light] உண்டாக்கும், என்று முன்னறிவித்தார். வெர்னர்தான் விஞ்ஞானத்தில் புரட்சி ஏற்படுத்திய குவாண்டம் யந்திரவியல் [Quantum Mechanics] நியதியை உருவாக்கி, 1934 இல் நோபெல் பரிசு பெற்றவர்!
மேதைகள் ஒரே மாதிரி சிந்திப்பார்கள் [Great men think alike] என்பது ஓர் பழமொழி! 1923 இல் ராமனும் மேற் குறிப்பிட்ட காம்ப்டன் விளைவைத் தனித்த முறையில் தானும் ஆராய்ந்து அதே முடிவுக்கு வந்தார்! 1925 இல் வெர்னர் கூறியதை இரண்டாண்டுகளுக்கு முன்பே கண்ணில் தெரியும் ஒளியும் பிண்டத்தில் சிதறிக் காம்ப்டன் விளைவு நிகழ்த்துவதை முன்னோடிச் சோதனை முடிவுகளில் [Preliminary Observations] ராமன் கண்டறிந்தார்.
ராமன் விளைவு என்றால் என்ன ?
ஒளியானது ஓர் பளிங்குக் கடத்தி [Transparent Medium] ஊடே நுழையும் போது, ஒளியின் சில பகுதி சிதறி அதன் அலை நீளம் மாறுகிறது. அந்த நிகழ்ச்சி ராமன் சிதறல் [Raman Scattering] என்று இப்போது அழைக்கப் படுகிறது. அதுவே ராமன் விளைவு [Raman Effect] என்றும் பெயர் பெறுகிறது.
ராமன் தனது சோதனைகளைச் சீராக்கி 1928 இல் தூசியற்ற வாயுவிலும், தூய அடர்த்தியான திரவத்திலும் ஒற்றை நிற ஒளியை [Monochromatic Light] ஊடுறுவச் செய்து, ஒளிச் சிதறல் [Scattering of Light] நிகழ்வதை ஆராய்ந்தார். வாயுவில் ஒளியின் தனித்துவக் கோடுக்கு [Normal Line] இருபுறமும் இடம் தவறிய கோடுகளும் [Displaced Lines], திரவத்தில் தொடர்ந்த பட்டையும் [Continuous Band] தெரிந்தன. இவையே ராமன் ஒளிநிறப் பட்டைகள் [Raman Spectra] என அழைக்கப் படுபவை. அவ்விளைவுகள் மூலக்கூறுகளின் உள்ளே நிகழும் நகர்ச்சியால் உண்டாகு கின்றன. மூலக்கூறுகளுடன் மோதும் போது ஒளித் திரள்கள் [Photons] சக்தியை இழக்கலாம்! அல்லது சக்தியை சேர்க்கலாம்! ராமன் ஒளிச்சிதறல் [Raman Scattering] ஒளிநிறப் பட்டைகளைத் தனியே காட்டி, மூலக்கூறுகளின் வடிவத்தையும், அவற்றின் நகர்ச்சியையும் பற்றிய தகவலைத் துள்ளியமாகக் காட்டுகிறது.
ஒற்றைநிற ஒளி ஓர் பளிங்குக் கடத்தி ஊடே நுழையும் போது, ஓரளவு ஒளிச் சிதறுகிறது. சிதறிய ஒளிநிறப் பட்டையை [Spectrum] ஆராய்ந்தால், மூல ஒளியின் அலை நீளத்துடன், [Wavelength of the Original Light] அதற்குச் சம அளவில் மாறுபடும் வேறு நலிந்த கோடுகளும் காணப் பட்டன. அவை ராமன் கோடுகள் [Raman Lines] என்று அழைக்கப் படுகின்றன. ஊடுறுவும் ஒளித்திரள்கள் [Photons] கடத்தியின் கொந்தளிக்கும் மூலக்கூறுகளுடன் கூட்டியக்கம் [Interaction with Vibrating Molecules] கொள்வதின் விளைவால், ஒளித்திரள் சக்தியை இழந்தோ, அல்லது சக்தியைப் பெருக்கியோ அவ்வாறு மாறுபட்ட கோடுகள் தோன்றுகின்றன. ஆதலால் ராமன் விளைவு மூலக்கூறுகளின் சக்தி மட்டத்தின் நிலைகளை [Molecular Energy Levels] அறியப் பயன்படுகிறது.
ராமன் பலவித ஒளிச் சுரப்பிகளைப் [Light Sources] பயன்படுத்தி ஒளித் திரட்சியை [Intensity of Light] மிகைப் படுத்த முயன்று பலன் அடையாது, இறுதியில் பாதரஸப் பொறி மின்விளக்கு [Mercury Arc Lamp] ஒளியில் தேவையான ஒளி அடர்த்தி கிடைத்தது. அந்த ஒளித் திரட்சியை உபயோகித்துப் பலவித திரவங்கள் [Liquids], திடவங்கள் [Solids] ஆகியவற்றில் சிதறிய ஒளியின் ஒளிநிறப் பட்டைகளை [Spectra] ஆராய்ந்தார். அப்போது பாதரஸப் பொறி ஒளிநிறப் பட்டையில் இல்லாத வேறுவிதக் கோடுகள் பல, சிதறிய ஒளிநிறப் பட்டையில் தெரிந்தன! திரவ, திடவ மூலக்கூறுகள் சிதறிய அப்புதிய கோடுகளே ராமன் கோடுகள் [Raman Lines] என்று குறிப்பிடப் படுகின்றன.
ராமன் செய்த மற்ற விஞ்ஞான ஆராச்சிகள்
ராமன் செய்த மற்ற விஞ்ஞான ஆராய்ச்சிகளில் முக்கியமானவை, 1935 இல் ஒளிச் சிதறல் மீது ஒலி அலைகள் [Sound Waves on the Scatting of Light], 1940 இல் படிமங்களில் அணுக்களின் அதிர்வுகள் [Vibrations of Atoms in Crystals], 1950 இல் வைரம் போன்ற பளிங்குக் கற்களில் எழும் ஒளிவீச்சு [Optics in Gemstones], 1960 இல் உயிரியல் விஞ்ஞானத்தில் மனிதக் கண்கள் காணும் பன்னிறக் காட்சி [Physiology of Human Colour Vision] போன்ற பெளதிக அடிப்படைகள். மற்றும் சில தலைப்புகள்: ஒலிவியல் அதிர்வுகள், [Acoustical Vibrations], படிமங்களால் எக்ஸ்-ரே கதிர்த் திரிபுகள் [X-Ray Diffraction by Crystals], படிமக் கொந்தளிப்பு [Crystal Dynamics], படிம உள்ளமைப்பு [Crystal Structure], திரவத்தேன் ஒளி ஆய்வு [Optics of Colloids], மின்சாரப் பலகுணவியல்/காந்தப் பலகுணவியல் [Electric & Magnetic Anisotropy]. இசைக் கருவிகளின் இசை ஒலியின் பெளதிக இயல்பையும் [Physical Nature of Musical Sounds], இசைக் கருவிகளின் இயக்கவியலையும் [Mechanics of Musical Instruments] ராமன் ஆராய்ச்சி செய்தார். ஒலியியலில் ஈடுபாடுள்ள ராமன் வயலின் இசைக்கருவி எவ்வாறு ஒலி அதிர்வை நீடிக்கிறது என்று ஆராய்ச்சிகள் புரிந்து, இசைக்கம்பி இசைக் கருவிகளைப் பற்றி ஆய்வு நூல்களும் எழுதியுள்ளார்.
ராமனின் பெளதிகக் கண்டுபிடிப்புகள் விஞ்ஞான வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றவை. அவரது பெளதிக ஆக்கம் மூலக்கூறுகளின் உள்ளமைப்பை [Molecular Structure] ஆராய்ச்சி செய்யப் பயன்படும் பல முறைகளில் ஒன்றாக உள்ளது. அவரது கோட்பாடுகள், ஒளியானது ஒளித்திரள் [Photons] வடிவத்தில் துகள்களைப் [Particles] போல் நடந்து கொள்கின்றன என்று அழுத்தமாக எடுத்துக் காட்டி, குவாண்டம் நியதியை [Quantum Theory] மெய்ப்பிக்கின்றன. குவாண்டம் என்பது சக்தியின் மிகச் சிறிய, பிரிக்க முடியாத துணுக்கு அளவு [Smallest Indivisible Unit of Energy]. ஒவ்வோர் துணுக்கும் ஓர் முழு இலக்கப் [Integral Number] பகுதியாகப் பல எண்ணிக்கையில் சேர்ந்து, முழுச் சக்தியை உண்டாக்குகிறது.
இந்திய விஞ்ஞான வளர்ச்சிக்கு ராமன் செய்த பணிகள்
ராமன் புதிய இந்தியப் பெளதிக வெளியீடு [Indian Journal of Physics] விஞ்ஞான இதழை முதன் முதல் ஆரம்பித்து, அதன் ஆசிரியராகவும் இருந்தார். அந்த வெளியீட்டுப் பதிவுகளில் பல விஞ்ஞானப் படைப்புகள் வெளிவர ராமன் ஏற்பாடு செய்தார். 1961 இல் ராமன் கிறித்துவ விஞ்ஞான கழகத்தின் [Pontificial Academy of Sciences] அங்கத்தினர் ஆகச் சேர்ந்து கொண்டார். அவரது காலத்தில் கட்டப் பட்ட ஒவ்வோர் இந்திய விஞ்ஞான ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் அவர் நிதி உதவி செய்திருக்கிறார். இந்திய விஞ்ஞானப் படிப்பகத்தைத் [Indian Academy of Sciences] துவங்கி, அவர் அதன் அதிபதியாகப் பணி யாற்றினார். நூற்றுக் கணக்கான இந்திய, பர்மிய [Myanmar] மாணவர்களுக்குக் விஞ்ஞானக் கல்வி புகட்டி, அநேகர் பல்கலைக் கழகங்களிலும், அரசாங்கத் துறைகளிலும் உயர்ந்த பதவிகளில் பணி புரிந்து வந்தார்கள். உலக நாடுகள் சி.வி. ராமனுக்குப் பல விருதுகளையும், கெளரவ டாக்டர் பட்டங்களையும், விஞ்ஞானப் பேரவைகளில் அதிபர் பதவியையும் அளித்தன.விஞ்ஞான மேதை ஸர் சி.வி. ராமன் பெங்களூரில் 1970 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி காலமானார். இந்தியாவில் முன்னோடியாக விஞ்ஞான வளர்ச்சிக்கு விதையிட்டு, அதை விருத்தி செய்ய அநேக இளைஞர்களை விஞ்ஞானத்தில் உயர்வாக்கிய ஸர் சி.வி. ராமனை, இந்திய விஞ்ஞானத்தின் தந்தை என்று உலகம் போற்றிப் புகழ்வதில் உண்மை இருக்கிறது!
+++++++++++++++++
தகவல் :
1. The Biographical Dictionary of Scientists, Editor : David Abbott, Ph.D [1984]
2. http://www.maattru.com/2011/12/blog-post_4629.html [ இந்திய அறிவியல் = ராமன் விளைவு ? ]
3. http://en.wikipedia.org/wiki/C._V._Raman [December 29, 2012]
4. www.physics.iitm.ac.in/~labs/amp/CVRaman-Life-and-Works.pdf Life and Works of C.V. Raman
[January 18, 2009]
5. http://portal.acs.org/portal/acs/corg/content?_nfpb=true&_pageLabel=PP_SUPERARTICLE&node_id=515&use_sec=false&sec_url_var=region1&__uuid=e678ec59-ed47-4834-9489-7e088c0af6fb [The Raman Effect] [December 15, 1998]
+++++++++++++++++++
Previous Entry: கணித மேதை ராமானுஜன்
+++++++++++++++++++++++S. Jayabarathan (jayabarat@tnt21.com) December 30, 2012 [R-1] -
கவிஞர் பிறந்தார்!!!
தேமொழி
அவசரக் குறிப்பொன்று எழுதி
கொடுக்கிறேன் அதைத் தோழிக்கு
படித்தபின் அவள் சொன்னது
சொன்னதே இல்லையே இதுவரை!!!
குறுங்கவிதையும் எழுதுவாயா நீ?
படம் உதவி:
http://southyourmouth.blogspot.com/2012/08/lunchbox-notes.html
-
இந்த வார ராசிபலன் (31- 12 – 2012 முதல் 06 – 01- 2013 வரை)
காயத்ரி பாலசுப்பிரமணியன்
மேஷம்: பொது வாழ்வில் இருப்போர்கள், வீண் வதந்திகளை நம்பி செயலில் இறங்காமலிருந்தால், உங்களின் உயர்வு சீராக இருக்கும். கலைஞர்களுக்கு: உங்கள் திறமைகளை மிளிரச் செய்யும் வாய்ப்புக்கள் பல தேடி வரும். அதனை நல்ல முறையில் பயன்படுத்துவது உங்கள் கையில்தான் உள்ளது!
மாணவர்கள் புதிய இடங்களில் பழக்கமில்லாதவர்களிடம் அதிகம் ஒட்டி உறவாட வேண்டாம். பெண்கள் குடும்ப விஷயங்களில் கோப தாபத்தை கட்டுக்குள் வைத்தால், எல்லோர் மனதிலும் இடம் பிடித்து விடலாம்! சிறிய சச்சரவுகளை பெரிதாக்காதவாறு சமாதானமாக நடந்துகொள்ளுங்கள். அலுவலகச்சூழலில் இருக்கும் இறுக்கமும் தானே விலகி விடும். வியாபாரிகள் எதிலும் நேர்மைக்கு இடம் கொடுக்க, வெற்றியோடு நல்மதிப்பும் உங்களுக்கே!ரிஷபம்: வியாபார வாய்ப்புக்களில், சில சந்தர்ப்பங்களில், கைக்கெட்டிய பொருள் வாய்க்கெட்டவில்லை என்ற நிலை நேரிடும். எனினும் விடாமுயற்சியால் விரும்பியதை அடைந்து விடுவீர்கள். பெண்கள் உழைப்பிற்கு நேரம் ஒதுக்குவதைப் போல, ஆரோக்கியத்திற்கும் நேரம் ஒதுக்கினால், மருத்துவச்செலவுகள் கணிசமாகக் குறையும். வரவும் செலவும் சமமாக இருப்பதால், சேமிப்பு என்பது பெயரளவில்தான் இருக்கும். தம்பதிகள் மன வேற்றுமைகள் நீங்க மனம் விட்டுப் பேசுங்கள். குடும்பத்தில் மீண்டும் மகிழ்ச்சி மலர்ந்து விடும். பங்குச் சந்தையில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும், அதிக ஆசை யினால் அதிக பணம் முடங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஞாபக மறதியால் வரும் சிக்கல்களைத் தவிர்க்க, எதையும் உடனுக்குடன் குறித்து வைப்பது நல்லது.
மிதுனம்: பொருட்களை வாங்கி விற்பவர்கள் தேடி வரும் வாய்ப்புகளை வியாபாரமாக, உங்கள் வாய்ச் சொல்லால் மாற்றி விடுவீர்கள். உங்கள் தொழில் தொடர்பான பிரச்சனைகளை வளர விடாமல் உடனுக்குடன் சுமூகமான முறையில் முடித்துக் கொண்டால், தேக்க நிலை உருவாகாமலிருக்கும். மாணவர்கள் எந்தச் சூழலிலும், தவறான திசைப் பக்கம் திரும்பாமலிருங்கள்! வாழ்க்கை வசந்தமாகும். பண விவகாரங்களில் பிறர்க்கு சிபாரிசு செய்யும் முன் அவர்களின் பின்புலம் பற்றி அறிந்து செயல்பட்டால், சட்டச்சிக்கல்களுக்கு இடமிராது. நெருங்கிய நண்பர்களுடன் வாக்குவாதத்தில் இறங்குவதைத் தவிர்த்துவிட்டால், நட்பின் இழை விலகாமலிருக்கும்.
கடகம்: பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவைகள் உங்களின் விருப்பப்படியே நடைபெறும் . வீண் செலவுகளைக் குறைப்பதில் சற்று கவனமாக இருங்கள். சேமிப்பதற்கான வழி வகைகள் மேலும் அதிகரிக்கும். வியாபாரிகளும், தொழிலதிபர்களும், பொருளாதாரத்தில் அகலக் கால வைக்காமல், கட்டுக் கோப்பாய் செயல்பட்டால், லாபத்தின் வரவில் குறைவிராது. பணிபுரியும் இடங்களில் முரண்பட்ட கருத்துள்ளவர்களுடன் மோதுதலைத் தவிர்க்கவும். பெண்கள் கணவன் வழி உறவினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு முதலிடம் கொடுத்து விடுங்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்!
சிம்மம்: பெண்கள் எந்த நல்ல விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடனடியாக செயலில் இறங்குங்கள். கிடைக்கும் பலனும், மகிழ்ச்சியும் இரட்டிப்பாகும். நண்பர்களின் சந்தோஷத்திற்காக அதிக பணம் செலவழித்து சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள்! வியாபார விரிவாக்க விவகாரங்களில், பங்குதாரர்களுடன் கலந்து பேசி செயல்படுதல் நல்லது. நீண்ட நாட்களாக பிரிந்த உறவுகள் மீண்டும் குடும்பத்தில் இணைவதால், மகிழ்ச்சிப்பூ மீண்டும் மலர்ந்து விடும். மாணவர்கள் தேவையில்லாமல் அதிக நேரம் கண் விழித்தலைக் குறைத்துக் கொண்டால், ஆரோக்கியம் சீராகத் திகழும்.
கன்னி: பிறரிடம் உள்ள குறைகளை விடுத்து, நிறைகளை மட்டும் கணக்கில் கொள்ளுங்கள். நேசம் பாராட்டி உதவுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும். மாணவர்கள் வாகனம் ஓட்டும் போது சிந்தனையை சிதற விடாமலிருப்பது நல்லது. வரும் வாய்ப்புகளை தட்டிப் பறிப்பவரிடம் கலைஞர்கள் உஷாராக இருந்தால், உங்கள் திறமைகளை பிறர் எளிதில் கண்டு கொள்ள முடியும். அலுவலக அளவில் பொதுப் பிரச்னைகளுக்காக, நண்பர்கள் சிலரின் நட்பை முறித்துக் கொள்ள நேரிடும். முக்கிய பொறுப்புக்களில் இருப்பவர்களுக்கு எதிரிகளின் தொல்லை சற்று அதிகரிக்கலாம். எனவே கவனமாகச் செயல்படுவது அவசியம்.
துலாம்: நிலுவையில் உள்ள பாக்கியெல்லாம் வசூலாகி விடுவதால், புதிய முயற்சிகளில் ஆர்வத்துடன் இறங்குவீர்கள். பொதுவாழ்வில் இயங்கிக் கொண்டிருப்பவர்கள் தம்முடைய பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால், உங்கள் பணிகளில் எவரும் பழுது சொல்ல முடியாது. மாணவர்கள் புதிய சூழலில் வீண் வம்பு தும்புக்கு வேலை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பெண்கள் அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாமல் அளவாகப் பழகிவருவது நல்லது. வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களைப் பெற, சில நெருக்கடிகளை தாண்டிச் செல்ல வேண்டியிருக்கும் .எனவே நிதானமாக செயல்படுவது அவசியம்.
விருச்சிகம்: இயன்ற வரை வீண் செலவுகளைக் குறைக்கப் பாருங்கள். வரவுக்குள் செலவுகள் அடங்கிவிடும். காரணமற்ற கோபம் மற்றும் எரிச்சலால் பெண்களுக்கு வேலைகள் தேங்கும் நிலை உருவாகலாம். போட்டிகள் மூலம் உங்கள் திறமை வெளிப்படும்வரை கலைஞர்கள் பொறுமையாய் இருப்பது நல்லது. வியாபாரிகள் ஆரோக்யமான போட்டி மூலம் வாடிக்கையாளர்களின் வரவைத் தக்க வைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனமாகும். முதியவர்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். சுறுசுறுப்புடன் திகழலாம். சொத்து விஷயங்களில் உங்களின் நேரடி கவனம் தேவை.
தனுசு: புதுப்புது யுக்திகளை பயன்படுத்துவதன் மூலம், கூட்டுத் தொழிலில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். பொருளாதாரச் சிரமங்கள் குறைவதால், பெண்கள் உற்சாகத்துடன் திகழ்வார்கள். இல்லத்தில்,கோபத்தைக் குறையுங்கள். பிரச்சனைகளின் தாக்கமும் தானே குறைந்து விடும். சக மாணவர்களின் மனோபாவத்திற்கேற்றவாறு , உங்கள் அணுகு முறையை மாற்றிக் கொண்டால், கல்வி தொடர்பான வேலைகள் கடகடவென்று முடிந்து விடும். கடும் பணியில் உள்ளவர்கள் உழைப்பில் சலிப்பு சேராமல், பம்பரமாய்ச் சுழல, சத்தான உணவு வகைகள் சாப்பிடுவது நல்லது. இது நாள் வரை எட்டியும், தட்டியும் சென்ற வாய்ப்புகள் மீண்டும் கலைஞர்களை நாடி வரும்.
மகரம்: வாழ்க்கைத் துணையுடன் இணக்கமாக இருக்கும் தம்பதிகளுக்கு வாழ்வு இனிக்கும். மாணவர்கள் கல்லூரி விழா, போட்டிகள் ஆகியவற்றில் உற்சாகத்துடன் கலந்து கொள்வீர்கள்.சில நேரங்களில் உடன் பணி புரிபவர் ஏட்டிக்குப் போட்டியாக செயல்படுவர். முக்கிய பொறுப்புக்களை ஏற்றுள்ளவர்கள் பதவிக்குரிய அதிகாரம் வரம்பு மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நினைத்ததைவிட நல்ல பலன் நிறையவே கிடைக்கும். வியாபாரிகள் நிர்ப்பந்தத்தின் பேரில் சலுகைகளை வலுக்கட்டாயமாய் பெற முயற்சிப்பவர்களோடு கூட்டு முயற்சியில் இறங்க வேண்டாம்.சிறு உடல் உபாதைகளால், பெண்கள் அவதிப்பட நேரிடும்.
கும்பம்: பெண்கள் பணச் செலவில் கட்டுப்பாடாய் இருந்தால்,கடன்களை கட்டுக்குள் வைத்துவிடலாம். பங்குச் சந்தை வியாபாரத்தில் இருக்கும் ஏற்றமும், இறக்கத்திற்கேற்ப வியாபாரிகள் செயல்படுவது அவசியம். வேலையில் இருப்போர்கள், பல சமயம் நேரம் காலம் பாராமல் உழைக்க வேண்டியிருக்கும் .சிலர் சொந்த வீடு வாங்குவதற்காக எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும். சுய தொழிலில் இருப்பவர்கள் சில இழப்புக்கள் சில லாபங்கள் இரண்டையும் பெறுவர். அன்புக் கட்டளையால், நண்பர்களுக்கு சில உதவிகளை மகிழ்வுடன் செய்து கொடுப்பீர்கள்.
மீனம்: வியாபாரிகளுக்கு முன்பிருந்த சுணக்கமான நிலை என்பது மறைந்து இணக்கமான சூழல் நிலவும். பெண்கள் வேலைப்பளு ஆரோக்கியத்தோடு மோதாமல் பார்த்துக் கொள்ளவும். மாணவர்கள் பிறரிடம் கைமாற்றாக பணம் பெற்று செலவழித்தால், வீண் தொல்லைக்கு ஆளாக வேண்டியிருக்கும். புதிதாக வேலையில் சேர்ந்திருப்பவர்கள் பேச்சில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும், பணியில் கவனம் செலுத்தினால், பாராட்டு பல வந்து சேரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் நடவடிக்கைகளில் தென்படும் மாறுதல்களை இதமாகச் சுட்டிக் காட்டுங்கள். உங்களை புரிந்து கொள்வார்கள்.
-
பாத யாத்திரை (திருவேங்கடமலை) அனுபவங்கள்::
பெருவை பார்த்தசாரதி ::
இறை வழிபாட்டு முறைகளை நமது முன்னோர்கள் மிக நேர்த்தியாக வகைப்படுத்தி, அதை எவ்வாறேல்லாம் பின்பற்ற வேண்டும் என்று பின் வரும் சந்ததியினருக்கு மிகத் தெளிவாக வழங்கி இருக்கிறார்கள். இவ்வழிபாட்டு முறைகளை எல்லாம் மஹான்கள், ரிஷிகள், ஆசார்ய புருஷர்கள், குருமார்கள் போன்றோர்கள் அவ்வப்போது நமக்கு நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இவ்விதம் புனிதமான ஆலயங்களுக்குச் செல்லுதல், தீர்த்த யாத்திரை, பாதயாத்திரை, நாம சங்கீர்த்தனம், பஜனை செய்தல், அனுதினமும் வீட்டிலேயே பெருமானை ஆராதனம் செய்தல் போன்ற பல வழிகளைப் பின்பற்றும் அன்பர்கள் இருக்கிறார்கள். நமது வசதிக்காக நாம் பின்பற்றும் வழிபாட்டு முறைகளை மாற்றிக் கொள்ளாமல் முறைப்படி பின்பற்றுவதே மேல் என்றும், மாறாக வழிபாட்டு முறைகளை மாற்றிக் கொண்டால் புனிதத்தலங்களின் ‘சாந்நித்தியம்’ மாசுபடத்தொடங்கிவிடும் என்பதையும் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே எடுத்துரைத்திருக்கிறார்கள். இறை வழிபாட்டுக்கென்று இடமும், தகுந்த நேரமும் இருக்கிறது, ‘ஏதோ நமக்கு நேரம் கிடைக்கிறது’ என்று நினைத்து ஆலயங்களுக்கும், பூஜை போன்ற சுபகாரியங்களுக்கும் நாம் நினைத்த நேரத்தில் செல்ல முடியாது, அதற்கும் பகவானின் அருள் வேண்டும் என்பதால்தான், “ஏழுமலையான் அழைத்தால் மட்டுமே திருமலைக்குச் செல்ல முடியும்” என்பதைச் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக இறை சிந்தனையும் நம்மோடு கைகோர்க்கவேண்டும். ‘பசி’ எடுக்கிறது என்று யாரும் நமக்குச் சொல்வதில்லை, அதுபோல் ‘தாகம்’ எடுக்கிறது தண்ணீர் குடி என்று யாரும் தூண்டுவதில்லை. பசியும், தாகமும் இயற்கையாக தோன்றுவதுபோல், ‘இறை சிந்தனை’ என்பதும் இயற்கையாகவே எழவேண்டுமாம். நம்மை அறியாமலேயே நமது உடம்பும் மனமும் மாசு படிந்து இருக்கலாம். ஆதலால் தான் நாம் குளித்து முடித்து, மடித்துணி தரித்த சமயத்தில் மாத்திரம் இறைச்சிந்தனையோடு ஆலயத்துக்குச் செல்கிறோம். தருமமிகு பாரதத்தில் எண்ணற்ற ஆலயங்கள் இருக்கின்ற போதிலும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்துவிக்கப் பட்ட வைணவ திவ்ய ஆலயங்களுக்கு (108) செல்வதையும், இதேபோல ‘அப்பர்’, ‘சுந்தரர்’, ‘மாணிக்கவாசகர்’ போன்ற நாயன்மார்களால் பாடல்பெற்ற சைவத்தலங்களுக்கு (274) யாத்திரை செல்லுதலை மட்டுமே ஒரு கடமையாகக் கொண்டுள்ள பக்தர்களையும் நம்மிடையே காணலாம். இப்படிக் குறிப்பிட்ட தலம், குறிப்பிட்ட நேரம் என்பது மனிதன் செய்கின்ற எல்லா நல்ல காரியங்களோடும் இணைந்து விடுவது மிகவும் அவசியமாகிறது, அது மாறும் போது தவறாகிறது. இப்படிப்பட்ட நல்ல நேரமும், சந்தர்ப்பமும் கைகூடும் சமயத்தில்தான் மனமொத்த கருத்துடைய நண்பர்கள் ஒருங்கே இணைந்து, மார்கழித் திங்களில், ‘ஓங்கி உலகளந்த உத்தமனின் பேர் பாடிக்கொண்டு’ (திருப்பாவையின் மூன்றாவது பாசுரம்) பாதயாத்திரையை பதினெட்டு நண்பர்களுடன் சென்னை மகாலிங்கபுரத்திலிருந்து பிரசன்னவேங்கடேஷ் என்பவரது வழிகாட்டுதலுடன் தொடங்கினோம். நான்கு நாட்கள் பாதயாத்திரை சென்ற அனுபவத்தில், பல ஆலயங்களைக் காண முடிந்த போதிலும், மிகச்சிறப்பாக அமைந்த ஒரு சில விஷேசமான ஆலயங்களின் சிறப்பை மட்டுமே இங்கே மிகச்சுருக்கமாகக் கூற விரும்புகிறேன். என்னதான் பத்திரிகையிலும், மாத இதழ்களிலும் இத்தலங்களைப் பற்றி அனேகர் அறிந்திருந்தாலும், புதிதாக பாதயாத்திரை தொடங்கும் அன்பர்களுக்கு நிச்சயமாக உதவும் என்பதால், ஆலய பட்டர்களிடமிருந்தும், பக்தர்களிடமிருந்தும் நேரடியாக பெறப்பட்ட இத்தகவல்களை உங்கள் முன் வைக்கிறேன். இந்த அரிய ஆலயத் தகவல்கள், நம்மை ஆச்சரியத்துக்குள் ஆழ்த்துகின்றன.முறைகளை நமது முன்னோர்கள் மிக நேர்த்தியாக வகைப்படுத்தி, அதை எவ்வாறேல்லாம்பாற்கடலைக் கடைந்து, அமுதத்தை எடுக்கும்போது ஆலகால விஷத்தை ஈஸ்வரன் உண்டதாக நாம் படித்திருக்கிறோம். அந்த விஷத்தை அப்படியே விழுங்கி விட்டதால் சர்வ லோகமும் அழியும் என்பதாலும், விழுங்கியதை உமிழ்ந்து விட்டால் அதைவிட ஆபத்து என்பதாலும் பார்வதி தேவி, ஈஸ்வரனை தன் மடியில் கிடத்தி, அவ்விஷத்தை கண்டத்தில்(கழுத்தில்) கைவைத்து அதே இடத்தில் நிறுத்திவிட்டார். ஆலகால விஷத்தைத் தடுத்து சர்வ லோகத்தையும் காப்பாற்றி அமுதத்ததயும் வழங்கியதால் இறைவி “அமுதாம்பிகை” என்றும், இறைவன் “பள்ளி கொண்ட பரமன்” என்றும் அழைக்கப் படும் ‘சுருட்டப் பள்ளி என்ற இடத்தில் முதல் நாள் இரவு தங்கினோம். சயனத் திருக்கோலத்தில் ஈஸ்வரன், பார்வதிதேவியின் மடியில் பள்ளிகொண்டிருக்கும் ஒரே ஆலயம் என்று சொல்லும்படியாக சுருட்டப்பள்ளி திகழ்கிறது. இங்கே வைணவ ஆலயத்தைப் போல், பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி, துளசி வழங்குவது ஆலய சிறப்பம்சத்தில் ஒன்று. குடும்ப சமேதரராக தட்சிஷினாமூர்த்தியை இவ்வாலயத்தில் மட்டுமே காணமுடியும்.
அடுத்து வருவது நாகலாபுரம் ‘ஸ்ரீவேதநாராணப் பெருமாள்’ ஆலயம். திருவரங்கத்தில் பெருமாள் தெற்கு நோக்கி அருள்பாலிப்பதுபோல், இங்கே வித்தியாசமாக அனைத்து ஆலயங்களிலிருந்தும் மாறுபட்டு மேற்கு நோக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வருடத்தில் ஒரு நாள் சூரியாஸ்தமனத்தின் போது, ஒரு குறிப்பிட்ட நாழிகையில் சூரியநாராயணனின் சூரியக்கிரணங்கள் வேதநாராயணப் பெருமானின் சன்னிதியில் பகவானின் பாதம் தொடங்கி, நாபி, சிரசு என்று மூன்று நாட்கள் தொடர்ந்து விழுந்து கொண்டே இருப்பது அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் சூரியபூஜை என்று நான்கு நாட்கள் கொண்டாடப்பட்டு தெப்போற்சவமும் நடைபெறுமாம். பத்து அவதாரங்களில் முதலாவதாரத்தில் “மச்சாவதாரம்” என்கிற மீன் வடிவத்தில் ‘மூலவர்’ தோற்றமளிக்கிறார். கோவிலின் சிற்பங்கள் அனைத்திலும் மச்சாவதாரத்தின் மகிமையைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
மூன்றாவதாக நாராயண வனத்தில் எழுந்தருளியிருக்கும் “கல்யாண ஸ்ரீனிவாச பெருமாள்” ஆலயம். ஆலயத்தின் தோற்றமே அனனவரையும் பிரமிக்க வைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. பகவான் ஸ்ரீனிவாசனுக்கும், பத்மத்தில் (தாமரை மலர்) அமர்ந்திருக்கும் தேவி பத்மாவதிக்கும் திருமணம் நடந்த இடம் என்று தலவரலாறு சொல்கிறது. திருமணத்தின் போது பங்கு கொண்ட அனைவருக்கும் ‘மஞ்சள் பிரசாதம்’ வழங்குவதற்காக சுமார் ஒரு டன் எடைகொண்ட மஞ்சள் தயாரிக்கும் மிகப் பெரிய பாறைக்கல்லால் ஆன இயந்திரம் ஒன்று தாயாரின் சந்நிதிக்கு முன்பு வைக்கப்பட்டு பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறது. எம்பெருமான் வேட்டைக்கு வரும்போது இச்சம்பவங்கள் நிகழ்ந்ததால், எம்பெருமானின் விழிகள் திறந்த நிலையிலும், திருக்கரத்தில் உடைவாளுடன், திருஒட்டியானத்தில் பத்து அவதாரங்களின் தோற்றங்களும் இடம்பெற்றிருப்பது அபூர்வம். யாத்திரையின் இடையில் ‘ராமகிரி’ என்றொடு தலத்தைப் பற்றிய தகவலை அறிந்தோம், பிரதான சாலையிலிருந்து சற்று தொலைவில் இருப்பதாலும், நேரக்குறைவின்மையாலும் அங்கு செல்லமுடியவில்லை.
நீண்ட தூரம் நடந்து ஒரு இடத்தைக் கடப்பது, அவ்வளவு எளிதல்ல என்பதை பாதயாத்திரையின் போது தோன்றும் ‘உடல் உபாதைகள்’ மூலம் அறியலாம். இதனைக் கருத்தில் கொள்ளும்போது, இங்கே திருமங்கையாழ்வார் பாசுரம் ஒன்று நினைவுக்கு வருகிறது. திருமங்கையாழ்வார் தனது பெரியதிருமொழியில் “நாராயணா” என்னும் திருநாமத்தை அனுசந்தித்துக் கொண்டிருக்கும் அடியார்களுக்கு, அவர்கள் படும் துன்பங்களெல்லாம் கதிரவனைக் கண்ட பனித்துளிபோல் மறைந்து விடும் என்கிறார். மகத்தான இச்சொல், சகலவிதமான செல்வத்தையும், தாய் தன் மகவுக்குச் செய்யும் நலனைவிடவும், தீவினைகளைப் போக்கி பரமபதத்தையும் கூட அளித்துவிடும் என்பதை பின்வரும் பாடல் மூலம் விளக்குகிறார். அதனால்தான் ‘நாராயணா’ என்ற சொல்லை “நலம் தரும் சொல்” என்கிறார்.
“குலம்தரும் செல்வந் தந்திடுமடியார் படுதுய ராயின வெல்லாம்
நிலந்தரஞ் செய்யும் நீள்விசும் பருளும் அருளொடு பெருநிலமளிக்கும்
வலம்தரும் மற்றுந் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலந்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன் ‘நாராயணா’ வென்னும் நாமம்”
அடியார்கள் அனைவரும் மாஹாலிங்கபுரத்தில் ஒன்றுகூடித் தொடங்கிய பாதயாத்திரை, சூளைமேடு, அண்ணாநகர், வில்லிவாக்கம், கொளத்தூர் வழியாக ரெட் ஹில்ஸ், பிறகு கண்ணணோடை பாலம், மதுரவாயல், சூளைமேனி, ஊத்துக்கோட்டை, சுருட்டப்பள்ளி, நாகலாபுரம், பிச்சாட்டூர், நாராயணவனம், புத்தூர், ‘புடி’ ரயில் நிலையம், திருச்சானூர் வழியாக முடிவில் திருமலை சென்றடைந்து ஏழுமலையானைத் தரிசித்து சென்னை வந்தடைந்தோம்.
“திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஒர் திருப்பம் நேருமடா” என்பது போல், பாத யாத்திரை முடித்து சென்னை திரும்பிய அன்று (20-12-12)எனக்கோர் மகிழ்ச்சியான செய்தி, வல்லமை குழுவினர் மீண்டும் ஓர் முறை தொடர் கட்டுரைக்கு “வல்லமை விருது” வழங்கி சிறப்பித்திருந்தார்கள்.
-
வால்ட் விட்மன் வசனகவிதை -4 அவனுக்கு ஒரு பாடல்
(1819-1892)
(புல்லின்இலைகள் -1)அவனுக்கு ஒருபாடல்
மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா
வால்ட்விட்மன் வாழ்க்கை வரலாறு:
அமெரிக்காவின் உன்னதக் கவிஞருள் ஒருவரான வால்டயர் விட்மன்1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார். தனது 12 வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார். அவர் 11 வயதினராய் உள்ளபோது வீட்டில் வருவாயின்றி வேலை செய்து பணம் சம்பாதிக்கப் பள்ளி யிலிருந்து தந்தையால் நிறுத்தப் பட்டார். ஆகவே அவர் சிறு வயதிலேயே ஓர் அச்சகத்தில் பணிசெய்ய வேண்டிதாயிற்று. பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு நாளிதழ் களுக்கு எழுதியும், அவற்றுக்குப் பிறகு தொகுக்கும் ஆசிரியராகவும் பணி யாற்றினார். அவரது 17 வயதில் பள்ளி ஆசிரியராகச் சில காலம் வேலை செய்தார். 27 ஆவது வயதில் புரூக்லின் தின இதழின் ஆசிரியரானார். புரட்சி கரமான அவரது கவிதைப் படைப்புகள் மிகவும் தனித்துவ முறையில் பாலுறவு உட்பட ஆவேச உணர்ச்சியில் எழுதப் பட்டவை. அவர் அமெரிக்கக் குடியாட்சியை பேரளவு மதிப்புடன் கொண்டாடியவர். படைப்புகளில் குறிப்பாக அவர் முதலில் வெளியிட்ட சிறிய கவிதைத் தொகுப்பு “புல்லின் இலைகள்” [Leaves of Grass] அவராலே பன்முறைத் திருத்தமாகிப் பின்னால் விரிவு செய்யப் பட்டது.
வால்ட் விட்மன் தனது கவிதைகளில் ஒளிமறைவின்றி எதையும் வெளிப் படையாக வெளியிட்டதால், அவரது படைப்புகள் ஆபாசமானவை, வெறுக்கத் தக்கவை என்று முதலில் பலரால் ஒதுக்கப் பட்டன ! அவரது கவிதைகள் அனைத்தும் எதுகை, மோனைத் தளை அசையின்றி இலக்கண விதிக்கு அப்பாற்பட்ட வசன நடைக் கவிதைகளாய்[Free Verse] எழுதப் பட்டவை. அவரது கவிதைகளை உயர்வாகப் பாராட்டி யவருள் ஒருவர் கவிஞர் எமர்ஸன் [Ralph Waldo Emerson]. 1855 இல் 12 பாடல்களுடன் முதற்பதிப்பு “புல்லின் இலைகள்” புத்தகத்தை வெளியிட்டார். பின்னால் அது 300 கவிதைகளுடன் விரிவானது. அதற்கு ஆரம்பத்தில் அமெரிக்கர் ஆதரவு கிடைக்க வில்லை.
1848 இல் வால்ட் விட்மன் நியூயார்க்கிலிருந்து நியூ ஆர்லியன்ஸ் சென்றார். அவர் அங்கேதான் முதன் முதலில் அடிமைகள் நடுத்தெருவில் ஏலம் விடப்படும் அருவருப்பு வாணிபத்தையும்,அடிமைக் கறுப்பர் படும் கொடுமைகளையும் கண்டு மனவேதனை அடைந்தார். ஆர்வமாய்ப் படிக்கும் வேட்கை மிகுந்த வால்ட் விட்மன் 1848 இல் தனது சொந்தச் செய்தித்தாள் “உரிமைப் பூமி“ [Free Soil] என்பதை வெளியிட்டு அதற்கு அதிபதி ஆனார். மின்சார உடல் பற்றி என் பாடல் [I Sing the Body Electric] & என்னைப் பற்றிய எனது பாடல்[Song of Myself] ஆகிய இரண்டு நூல்களும் மனித உடம்பைப் பற்றியும், உடல் நலம்,பாலுறவு பற்றியும் எழுதப் பட்டவை.
தென்னக மாநிலங்களில் கொடுமைப் படுத்தப்படும் அடிமைகளை விடுவிக்க ஆப்ரஹான் லிங்கன் கடுமை யான போர் நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. அதுவே சகிக்க முடியாத “சிவில் போர்” [Civil War] எனப்படும் உள்நாட்டுப் போரானது. அரசாங்க ஐக்கியப் படைக்கும், “கூட்டு மாநிலங்கள்” என்னும் கன்ஃபெடரேஷன் படைக்கும் யுத்தம் உண்டானது. இறுதியில் இருபுறமும் சமப்போர் புரிந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 30,000 மேற்பட்டது. அப்போது ஐக்கியப் படைகளுடன் போர் புரிந்த வால்ட் விட்மன் சகோதரன் ஜார்ஜ் விட்மன் காய முற்றதால் அவரைக் குணப்படுத்த வால்டயர் வாஷிங்டன். D.C. வர வேண்டிய தாயிற்று. அவர் சுயப்பணி யாளராய்ச் சேர்ந்து காயமுற்ற சுமார் 100,000 நபர்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்தது. வாஷிங்டன் D.C., மருத்துவ மனைக்கு பணிபுரிய வால்ட் விட்மன் 600 தடவை வந்ததாக அறியப் படுகிறது.
சிவில் போர் வெற்றியில் முடிந்து, ஆப்ரஹாம் லிங்கன் இரண்டாம் முறையாக நின்று, ஜனாதிபதி தேர்வு வெற்றி பெற்ற விழாவில் வால்ட் விட்மன் கலந்து கொண்டவர் என்று அறியப் படுகிறது. போர் முடிந்து சட்ட மூலமாக அடிமை வைப்பு முறை அமெரிக்காவில் நீக்கப் பட்டது. போர் நின்ற ஐந்தாம் நாள், அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் பலியானார். லிங்கன் சுடப்பட்டு மரித்ததைப் பற்றி வால்டர் விட்மன் எழுதிய இரங்கற்பா “ஓ காப்டன், என் காப்டன்” படிப்போரை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துவது. 19 ஆம் நூற்றாண்டில் கவிதைப் படைப்புகள் எழுதிய வால்ட் விட்மனுக்கு 20 ஆம் நூற்றாண்டில்தான் அவரது படைப்புகளின் உன்னதம் வெளியாகிப் பரவியது. அவருடைய படைப்புகளின் செல்வாக்கு,மேன்மை புகழ் பெற்ற கவிஞர்கள் பாப்லோ நெரூடா, அல்லன் கின்ஸ்பெர்க், [அமெரிக்கா] ஃபெர்னான்டோ பெஸ்ஸோவா [போர்ச்சுகல்] ஆகியோர் ஆக்கங்களில் தெரிகிறது. வால்ட் விட்மன் கவிதைப் படைப்புகள் சில : அடிமை ஒழிப்புப் போர் பற்றி “டிரம் டாப்ஸ்”, “பீட் பீட் டிரம்ஸ்”, “இரங்கற்பா ஆப்ரஹாம் லிங்கனுக்கு”, குடியாட்சித் திறப்புகள்,” “இந்தியா நோக்கிப் பாதை.” [Drum-Taps, Beat ! Beat ! Drums !” “When Lilacs Last in the Dooryard Boom’d”, Democratic Vistas,” “A Passage to India.”].
1873 இல் மூளை அடிப்பில் [Stroke] அவர் பாதிக்கப் பட்டு ஒரு பகுதி உடலுறுப்புகள் பயன்படுத்த இயலாது போயின. அதோடு ஒன்பது ஆண்டுகள் காலந் தள்ளி 1892இல் அமெரிக்கக் கவிதை மேதை வால்ட் விட்மன் தனது 73 ஆம் வயதில் காலமானார்.
+++++++++++++++++++++++++++++
அவனுக்கு ஒரு பாடல்
[வால்ட் விட்மன்]
அவனுக்காக நான் பாடுகிறேன்
முற்காலத்தின் மேலிருந்து எழுப்புகிறேன்
தற்காலத்தை நான் !
என்றும் நிலைத்த மரவேரி லிருந்து
இழுப்பது போல்
இறந்த காலத்தின் மேலிருந்து
எடுத்து வருகிறேன்
இந்த நிகழ் காலத்தை !
காலவெளி நீட்சியில் நான் அவனை
மேலாக்கி வருகிறேன்.
தனக்கென விதிகள் படைத்து
அந்த முறைகளால்
தன்னையே தான் ஆக்கிக் கொள்ள
பின்னிப் பிணைக்கிறேன்
காலம் அழிக்கா விதிகளை !
++++++++++++++++++++++
மாநிலங்களுக்கு எச்சரிக்கை
[To the States]
ஒரு மாநிலத் துக்கு அல்லது
எந்த ஒரு மாநிலத் துக்கும்
அல்லது மாநிலத்தில் உள்ள
எந்நகரத் துக்கும் என்னுரை இதுவே :
எதிர்த்து நில் தீவிரமாய் !
எதற்கும் சிறிது கூட அடிபணி யாதே !
ஏனென்று எந்த வினா யின்றி
அடி பணிந்து நீ ஓர்
அடிமை யாக ஆக்கப் பட்டால்,
முழு அடிமை யாக ஆக்கப் படின்,
இந்த பூமியிலே
எந்த நாட்டுக்கும், எந்த நகரத் துக்கும்,
எந்த மாநிலத் துக்கும்
இழந்த சுதந்திரம் மீளாது
என்றென்றும் !
+++++++++++++
தகவல்:
1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]
3. Britannica Concise Encyclopedia [2003]
4. Encyclopedia Britannica [1978]
5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]
6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
[ஆப்ரஹாம்லிங்கன்நாடகம்]
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (December 27, 2012)
http://jayabarathan.wordpress.com/
-
ஆருத்ரா தரிசனம்
ராஜேஸ்வரி ஜெகமணி
ஊர்திரை வேலை யுலாவும் உயர்மலைக்

கூர்தரு வேல்வல்லார் கோற்றங் கோள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே போதியார் பூம்பாவாய்”திருமயிலையில் சாம்பலாகிய பெண்ணை உயிர்ப்பிக்க திருஞான சம்பந்தர் பாடிய மயிலையில் கொண்டாடப்படும் பல்வேறு சிறப்பு மிக்க திருவிழாக்களுள் திருவாதிரையும் ஒன்று.
ஆருத்ரா தரிசனம் சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் ஒன்று
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளோடு இணைந்து திருவாதிரை வருவதால் விண்ணிலிருந்து சந்திரன் தன்னை தலையில் அணிந்து சாப விமோசனம் அளித்த சிவபெருமானின் அன்பர்களை தன் பதினாறு அமுத கலைகளால் தழுவுகின்றான்.
ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியாக
ஓருருவம் ஓர் நாமம் இல்லாத சிவ பெருமான் செம்பவள மேனி வண்ணன் என்பதனால் அவரை சிவப்பு நட்சத்திரமான திருவாதிரைக்கு உரியவனாக்கி அவரை திருவாதிரையான் என்றும் அழைத்தும் அந்த திருவாதிரையன்று, ஆடும் அந்த அம்பலக்கூத்தனை சிறப்பாக வழிபடுகின்றோம்..ஆருத்ரா என்பது ஆதிரையை குறிக்கும் சொல். சிவனுக்கு உரிய ஜென்ம நட்சத்திரம் திருவாதிரை. எனவேதான் இந்த திருவாதிரை நாளில் ஆடல் அரசனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது
ஆருத்ரா தரிசன விழா ராமநாதபுரம் உத்தரகோசமங்கையில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது. இங்குள்ள மங்களநாதசுவாமி கோயிலில் உள்ள மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்ட நிலையில்
அருள்பாலிப்பார்.ஆண்டுக்கு ஓரு முறை ஆருத்ரா தரிசனத்தன்று சிலையில் சந்தனம் களையப்பட்டு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெறும்..
கும்பகோணத்தில், மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் மிகச் சிறப்பாக நடைபெறும்.
அன்று 16 கோயில்களிலிருந்து சிவகாமியுடன் நடராஜர் தனித்தனியே புறப்பட்டு, திருக்குடந்தைக்கு ராஜாவாகிய அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயிலைப் பிரதட்சணம் செய்கின்றனர்.
தொடர்ந்து கிழக்கு வீதியில் ஒவ்வொரு கோயிலிலிருந்தும் வந்த நடராஜரும், ராஜாவாகிய ஆதி கும்பேஸ்வரர் சுவாமிக்கு தங்களுடைய மரியாதையைச் செலுத்தும் வகையில் அர்ச்சனைகள் நடைபெறும்.
பதிலுக்கு,ராஜாவாகிய ஆதி கும்பேஸ்வர ஸ்வாமியும் அந்தந்த கோயிலுக்கு உண்டான ஸ்வாமிக்கு பதில் மரியாதை செய்வார்.
திருமணமான பெண்கள் தங்கள் தாலி பாக்கியம் நிலைக்கக் காண வேண்டிய விழா ஆருத்ரா தரிசனம்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புண்ணிய ஸ்தலமான சுசீந்திரம் அறம் வளர்த்த நாச்சியார் கோவில் பிரசித்தமானது.
“ஆடல்வல்லான்’ என்று போற்றப்படும் ஆனந்த தாண்டவமாடும் நடராஜரை வழிபட்டால், மகிழ்ச்சி என்றென்றும் நிலைக்கும்.
சிவபெருமானுக்குரிய வடிவங்களில் முதன்மையானது நடராஜர் வடிவமே. இவர் ஆடுவது ஆனந்த தாண்டவம். அம்பலவாணர், சபாபதி, கூத்தப்பெருமான், நடேசன், சித்சபேசன், நடராஜன், கனகசபாபதி, பொன்னம்பலம் என்ற பெயர்கள் உண்டு.
திருவாதிரை நட்சத்திரம் நாள் தில்லை அம்பலத்தரசனுக்கு சிறப்பான விரத நாளாகும்.
திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசனம் செய்து சகல பாவங்கள், தோஷங்கள், தடைகள் நீங்கி வளமான வாழ்வு பெறலாம் ..
ஆருத்ரா தரிசனத்தன்று ஆதிரைக் களி படைக்கும் வழக்கம் உண்மையான பக்தியுடன் எளிமையான உணவு படைத்தாலும் ஆண்டவன் ஏற்றுக்கொள்வான் என்பதே தாத்பர்யம்
திருவாதிரைக்கு ஒருவாய்க்களி’ என்பது பழமொழி.
எனவே மார்கழி திருவாதிரை அன்று விரதம் உள்ள பக்தர்கள் அன்று ஒரு வாய்களி தின்று மகிழ்கின்றனர். இதே திருவாதிரை நாளன்று ஒருவாய் களி தின்றால், அதன்பலன் அளவிடற்கரியது.
திருவாதிரைக்கு ஒரு வாய்க் களி தின்னாதவர் நரகக்குழி என்பது பழமொழி மூலம் பிரசாதத்தின் மகிமை விளங்கும்.
களி என்றால் ஆனந்தம் என்று ஒரு அர்த்தம் ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜரை நாம் உண்மையான உள்ளன்புடன் வழி பட்டால் அவர் நமக்கு உண்மையான ஆனந்தமான மோக்ஷத்தை வழங்குவார் என்பதை உணர்த்துவதே களி படைப்பதன் உள்ளார்த்தம்.
கோவை பேருரில் எம்பெருமானின் பின்னே பின்னி தொங்கவிடப்பட்டிருக்கும் ஜடா முடியையும் நாம் கண்டு ஆனந்தம் பெறலாம்.
சப்த விடங்க ஸ்தலமான திருநள்ளாற்றிலும் அருணோதய காலத்தில் ஒரே சமயம் நடராஜப் பெருமானுக்கும், தியாகராஜப் பெருமானுக்கும் அபிஷேகம் நடப்பதை நாம் கண்டு ஆனந்தம் அடையலாம்.
சுயம்புவாக தோன்றி மிகப்பெரிய திருவுருவமாக விளங்கும் திருநல்லம் என்னும் கோனேரி ராஜபுரத்திலும் திருவாதிரைத்திருவிழா பத்து நாள் மாணிக்கவாசகர் விழாவாக கொண்டாடப்படுகின்றது.
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரை நாள்
நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர்குழாங்கள் திசையணைத்தும்
நிறைந்து
பாரார் தொல் புகல் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே.என்று ஆனந்த சேந்தன் பாடிப் பரவியபடி, திருமால், பிரம்மன், இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம் வந்து எம்பெருமான் ஆதிரைத் தேரோட்டத்தை காணும் அழகை தரிசிக்கும் திருநாளே திருவாதிரைத்திருநாள் ..
கோயிலின் உள்ளே சென்று வழிபட முடியாதவர்களுக்காக தானே வெளியே வந்து தேரார் வீதியில் திருத்தேரில் வந்து நடராஜப் பெருமான் பஞ்ச மூர்த்திகளுடன் அருட்காட்சி அளித்து ஆனந்தம் பொழியும் அற்புதத்திருநாள் ..!
-
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு ஆகுமா?
போதி மரத்துப் புனிதன் சொன்னான்
“சாவினை அறியாத் தனி மனை இல்லை”
“பிறந்தவர் இறப்பதும் இறந்தவர் பிறப்பதும்
உலகினில் இயல்பாம். ஒழித்திடு சோகம்”
கண்ணன் உரைத்தான் கடும் சமர் நாளில்
“நேற்றைய வலியும் நாளைய கனவும்
நெஞ்சினில் பாரம். நீக்குக அதனை.
இன்றெது உள்ளதோ இதுவே உண்மை”
தத்துவ ஞானி ஜே.கே. பகர்ந்தான்.
“சென்றது மீளுதல் செகத்தினில் இல்லை
இன்று தான் புதிதாய்ப் பிறந்தோ மென்று
எண்ணிக் களிக்க. இன்பமாய் வாழ்க.”
ஆசையாய்ப் போற்றும் மீசைக் கவிஞன்
அழுத்திச் சொன்ன கருத்துக ளாமிவை.
அனைத்தும் கற்றேன். அறிஞன் ஆனேன்.
இத்தனை அறிவையென் மூளைக்கனுப்பிய
எந்தன் கண்களோ இன்னமும் அசடு.
எட்டுச் சுரைக்காய் சுவைக்க அறியா.
கண்டிராக் க்ண்ணனைக் காணவே வேண்டி
கரைந்து உருகினாள் கவிதையில் மீரா.
நிசிதின் பரசத நைன ஹமாரி
(இரவும் பகலும் சொரியுதெம் கண்கள்)
பெற்ற உறவைப் பிரிந்து நிற்கையில்
இரவும் பகலும் சொரியுதெம் கண்கள்.
ஏட்டுக் காயை எடுத்துச் சமைத்து
அசட்டுக் கண்களுக் கருத்துவார் உளரோ?
படத்துக்கு நன்றி
http://nutrihealth.in/health/bottle-gourd-guard-against-diseases/








