குறும்பா!
-தனுசு-
பக்கம் பக்கமாய்
படித்த
பாக்களெல்லாம்
இன்றைய
பறக்கும் உலகில் சுருக்கப்பட்டு
ஆனது குறும் பா!
அது
கடுகு முதல் கடவுள் வரை
அணு முதல் ஆழி வரை
அத்தனையும் நயமாய்
சொல்லவைக்கும் ரொம்ப குறும்பா!
அதில்
காரம் முதல் கனல் வரை
காதல் முதல் காமம் வரை
அத்தனையும் கண்டு
சுவைக்கலாமடா என் செல்லக் குறும்பா!
அதன் சுவைப்பற்றி
சொல்ல
நான் எதைக்கொண்டு வர…
அட அட டா
அது
இனிக்கும் கரும்பின் அடிக் குறும்பா!
அழகாகச் சொன்னீர்கள். அற்புதம்
குறும்பா, புதுவகை பா
கரும்பின் சுவை தரும்பா
படிப்பார் மனம் நிறை பா
அப்பப்பா!! அதன் புகழ்
பெரிதப்பா
அற்புதமாய்ச் சொன்னீர்கள்
சூப்பர்ப்பா!!!
மிக்க நன்றி தனுசு.