Blog

  • குறளின் கதிர்களாய்…(56)

    -செண்பக ஜெகதீசன்

    குன்றேறி யானைப்போர் கண்டற்றாற் றன்கைத்தொன்
    றுண்டாகச் செய்வான் வினை. (திருக்குறள்:758-பொருள்செயல்வகை)

    images

    புதுக் கவிதையில்…

    குன்றில் நின்று
    இடரின்றி
    யானைகள் சண்டை
    பார்த்திடுதல் போன்றதே,
    தன் கைப்பொருளுடன்
    தொடங்கிடுதல் செயல் ஒன்றை…!

    குறும்பாவில்…

    தன் கைப்பொருளுடன் செயல் தொடங்குதல்,
    குன்றிலேறிப் பாதுகாப்பாய்
    யானைச்சண்டை பார்ப்பது போல்தான்…!

    மரபுக் கவிதையில்…

    குன்றில் நின்று பாதுகாப்பாய்க்
    கீழே போரிடும் யானைகளை
    நன்றாய்ப் பார்த்துக் களித்திடலாம்
    நமக்குச் சிறிதும் இடரிலாதே,
    என்றும் இதுபோல் பாதுகாப்பாய்
    இருக்கும் நமது கைப்பொருளில்,
    வென்றிடும் வகையில் செயல்தொடங்கி
    வெற்றி என்றும் பெறலாமே…!

    லிமரைக்கூ…

    கைப்பொருளால் செயலைத் தொடங்கிப் பார்,
    பாதுகாப்பில் இதனை ஒத்ததே
    குன்றிலேறி பார்க்கப்படும் யானைகளின் போர்…!

    கிராமிய பாணியில்…

    சண்டசண்ட யானச்சண்ட
    கிட்டபோனா காயம்படும்,
    எட்டிப்போனா ஆபத்தில்ல
    ஏறிநின்னா மலமேல
    எல்லாந்தெரியும் தெளிவாவே,
    சண்டசண்ட யானச்சண்ட..

    கதயிதுதான் கைக்காசிலயும்-
    கையிலுள்ள காசவச்சி
    வேலசெஞ்சா கவலயில்ல,
    கொளப்பமில்ல பயமுமில்ல
    பாதுகாப்புக் கொறவுமில்ல…!

     

    Share
  • பில்லியன் ஆண்டுக்குப் பிறகு பூமியின் காந்த உட்கரு எப்படி இருக்கும் என்பதற்கு மாதிரி எறிகல் [Meteorites] மறை குறிப்பு

    Hiddem magnets

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    +++++++++++++++

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=XXTEWQdu3aE&x-yt-cl=84503534&x-yt-ts=1421914688

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&x-yt-ts=1421914688&v=O-V3yR2RZUE&x-yt-cl=84503534

     

    பூமி  உட்கருவில் சுழலும் திரவத்தை
    ஆழியாய்க் கடைந்து
    மின் காந்த உற்பத்தி நிகழும் !
    சூரியக் கதிர் வீச்சு களுக்கு கவசச்
    சுவர் எழுப்பும் பூகாந்தம் !
    உட்கருத் திரவம் உறைந்து
    ஒரு காலத்தில் மரணிக்கும் பூகாந்தம் !
    பூகாந்த இழப்பு சூரியக் கதிர்வீச்சைப்
    பாதுகாக் காது !
    முரண்கோள்,  எறிகல் காந்தம் போல்
    தரணியின் காந்தமும் தேயும் !
    கணினி மாடல் நிரூபிக்கும்.
    பூகம்பம் நகர்த்தும் புவி ஈர்ப்பு விசையை !
    இயற்கை அமைப்பு மாறும் !
    அங்கு மிங்கும் பூமியில்
    காந்த தளம் மாறுது
    கவர்ச்சி விசையும் மாறுது,
    உட்கருத் திரவ இரும்பின் இயக்க
    ஓட்டம் மாறுவதால் !
    பரிதிப் புயல் கதிர்த் துகள் தாக்கி
    துருவத்தில்  ஒளிவண்ணத்
    தோரணக் காட்சி
    நேராகக் கண்கவரும் !

    ++++++++++++

     

    Earth magnetic field

     

    முரண்கோள், எறிகல் [Asteroids & Meteorites] ஆகியவற்றில் உற்பத்தியாகும் காந்த தளம் முன்பு நினைத்ததை விடப் பல் நூறு மில்லியன் ஆண்டுகள் நீடிப்பவை என்று நாங்கள் கண்டிருக்கிறோம்.   அந்தப் பூர்வீகக் காந்த தளங்கள் பூகாந்தம் போன்று தோன்றியவை.  பூர்வக் காந்த தளங்களை அறிந்து கொள்வது  ஓரண்டக் கோளின் உள்ளே நோக்கி ஆய்ந்திடும் சோதனைகளில் ஒன்று.  எறிகல் உள்ளிருக்கும் உலோக இரும்புத் துகள்கள் வறிய அளவு காந்த முள்ளவை.  மிக நுண்ணிய தாதுக்களின்  [NANA Scale Materials]  பூர்வக் காந்த தளப் பரிமாணங்களைத் துல்லியமாக நாங்கள் அளந்து, முரண்கோள்களின் காந்த வரலாற்றைப் பின்னியுள்ளோம்.

    ரிச்செர்டு ஹாரிஸ்ஸன் & ஜேம்ஸ் பிரைஸன்  [Researchers, Cambridge University, UK,  Dept of Earth Sciences]

    ‘எனக்கு முன்பு அண்ட வெளியில் மனிதர் தேடிய இடத்தைத் தாண்டி, அதற்கும் அப்பால் என் கண்கள் பிரபஞ்சத்தை ஆழமாய் நோக்கிச் சென்றன.’

    வில்லியம் ஹெர்ச்செல் (1738-1822)

     

    Solar wind

     

    எறிகல், முரண்கோள்களின் பூர்வக் காந்தத் தேய்வு வரலாறு ஆராய்ச்சிகள்

    2015 ஜனவரி 23 இல் பிரிட்டீஷ் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் முரண்கோள்களின் [Asteroids] காந்த மரணத்தை வெற்றிகரமாகத், துல்லியமாக அறிந்து கண்டுபிடித்துள்ளார் என்று இயற்கை விஞ்ஞான இதழில் வெளி வந்துள்ளது.   அந்த விளக்கம் ஓர் அகிலவியல் தொல்பொருள் ஆய்வுக் குறிப்பணிபோல்  [Cosmic Archaeological Mission] தெரிகிறது.   படப் பதிவுகளின் மூலம் அப்பணியில் 4.5 பில்லியன் ஆண்டுக்கு முன் நேர்ந்த பூர்வ எறிகற்களின் [Ancient Meteorites] காந்தப் பதிவுகள் துல்லியமாக அறியப் பட்டன.  நுண் விண்வெளிக் காந்தங்கள்  [Tiny Space Magnets] என்று கருதப்படும் அந்தக் கண்டுபிடிப்பு ஆய்வுகள், சுருங்கி உறையும் பூகோளக் காந்த உட்கருவின் வரலாற்றைக் கூற உதவும்.

    இந்த இம்மிக் காந்தப் பரிமாணங்களை  [Nano-paleomagnetic Measurements] துல்லியமாய் அளக்கப் பயன்பட்டது பெர்லினில் உள்ள பெஸ்ஸி II சின்குரோட்டிரான் [BESSY II Synchrotron in Berlin] [பெஸ்ஸி  எலெக்டிரான் சுழல்விரைவாக்கி] என்னும் ஒரு விஞ்ஞானச் சாதனமாகும்.   பூமியின் திரவ உட்கரு மெதுவாக உறைந்து வருகிறது.  அதே சமயம் அதன் திடவ உட்கரு [Solid Core] பெரிதாகி வருகிறது.   போகப் போக பூமியின் திரவ உட்கரு முற்றிலும் மறைந்து போகும்.   அப்போது நம்மைச் சூரியக் கதிர்வீச்சிலிருந்து பாதுகாத்து வரும் பூகாந்தம் முற்றிலும் மரணம் அடைந்து விடும்.    ஆனால் அப்படி நிகழப் பல பில்லியன் ஆண்டுகள் ஆகும் என்பதால் நாம் அதற்கு அஞ்ச வேண்டியதில்லை !

     

    Anatomy of Earth

     

    பூகாந்த ஆற்றல் தணிவதால், சூரியக் கதிர்த் துகள்கள் தீவிரமாய்த் தாக்க  புவி மேற்தள வாயுச் சூழ்வெளி திறக்கிறது.   துணைக்கோள் அனுப்பும் மின்தகவல் பூகாந்தத் தளம் [Geomagnetic field] தென்புற அட்லாண்டிக் அரங்கில் குன்றி வருவதாய்த் தெரிவிக்கிறது.  குறிப்பாக கிழக்குப் பிரேஸில் பகுதியில் உலகின் பிற இடங்களைக் காட்டிலும் ஒரு நீள்வட்டப் பரப்பில் மிகவும் குறைந்து விட்டதாக அறியப் படுகிறது.   இம்மாதிரி அரங்குகளில்தான் பூகாந்தக் கவசம் 60 மைல் உயரத்தில் தீவிரப் பரிதிக் கதிர்கள் தாக்கப் பேரளவு குறைந்து போய் உள்ளது.   ஆனால் அந்தக் கதிர்கள் பூமியின் உஷ்ணத்தை பாதிப்பதில்லை.  மாறாக பரிதிக் கதிர்த்துகள்கள் ரேடியோ அலை வரிசைச் சாதனங்களைப் பாதிக்கும்.

    மயோரா மாந்தியா [Mioara Mandea, Scientist, German Geo-science Research Centre, Potsdam]

    துணைக்கோள் அனுப்பி வரும் மின்தகவல் ஆராய்ச்சி, எப்படி இடத்துக்கு இடம் விரைவாகப் பூமியின் வெளிக்கருவில் இரும்புத் திரவ ஓட்டம் மாறிக் கொண்டு வருகிறது என்று அறிவிக்கின்றது.  துணைக் கோள்  படவரைவு [Satellite Imagery] முறையைப் பின்பற்றி, ஆராய்ச்சியாளர் தொடர்ந்து புவிகாந்த ஏற்ற இறக்கம், புவியீர்ப்பு சிறிய மாறுதல்களை அளக்க முடிகிறது.

    பீட்டர் ஓல்ஸன் [Geophysics Professor, John Hopkins University, Baltimore, Maryland]

     

     

    உலகின் கண்களுக்கு நான் எப்படி தோன்றுகிறேன் என்பது எனக்குத் தெரியாது. கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன், இன்றோ நாளையோ ஏதோ ஓர் அபூர்வக் கூழாங்கல் அல்லது எழிற் சிப்பியைக் கண்டெடுப்பது போல எனக்குத் தெரிகிறது. ஆனால் கண்டு பிடிக்க முடியாதபடி மாபெரும் உண்மைக் கடல் என் கண்முன்னே பரந்து கிடக்கிறது.

    ஸர் ஐஸக் நியூட்டன் (1642-1727)

    அகிலத் தூசி சேர்ந்து துகளாகி, துகள்கள் மண்ணாகி, மண் கட்டியாகி உருண்டு சிறு கோளாகி முடிவாக ஓர் பெரும் அண்டகோள் ஆனது ! இந்த “ஈர்ப்புத் திரட்சி முறையில்” (Accretion Process) 6 மைல் (10 கி.மீ.) விட்ட அளவுள்ள ஒரு சிறு பூமி உண்டாகச் சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் ஆகலாம் !

    ஆட்டோ ஸ்மித் (Otto Schmidt) (1944)

    பூமியின் இரும்புத் திரவ வெளிக்கரு ஓட்டம் விரைவாக மாறி வருகிறது.

    2008 ஜூன் 30 இல் செய்த ஓர் ஆராய்ச்சி அறிவிப்பு : பூமியின் இரும்புத் திரவ வெளிக்கரு [Liquid Iron Outer Core]  விரைவாக அடையும் மாறுதல்களால் புவித்தளத்தின் சில அரங்குகளில் காந்த தளத்தைப் பலவீனமாக்கி வருகிறது.   அதாவது திரவ வெளிக்கரு ஓட்டத்தில் ஏற்படும் திடீர் மாறுதல்கள், உடனே பூகாந்தம்,புவியீர்ப்பு ஆகிய இரண்டையும் பாதித்து வருகின்றன.  அந்தக் கண்டுபிடிப்பில் மேலும் புவித் தளத்துக்கு கீழே 1900 மைல் [3000 கி.மீ.] ஆழத்தில் திரவ உலோகத்திலும் ஓட்டம் மாறுபட்டு வருகிறது என்றும் அறியப் படுகிறது.   பூமியின் நடுவில் சுழலும் திரவ இரும்பு, நிக்கல் ஓட்டத்தில் மின்னோட்டம் உதித்து, பூகாந்தம் உண்டாக்குகிறது.  ஒன்பது வருடத் துல்லிய துணைக்கோள் மின்தகவல் சேமிப்பு ஆராய்ச்சியில் செய்த இந்த விஞ்ஞான முடிவு  “இயற்கைப் புவியியல் விஞ்ஞான”   [Nature Geo-Science] இதழில் வெளியாகி உள்ளது.    இதன் விளைவு, பூமியின் பற்பல தூர அரங்குகளில் காந்த ஆற்றல்களில் ஏற்றம்-இறக்கம் இருப்பது  தெளிவானது.

    பூகாந்தம் பலவீனப்படும் போது மேற்தள வாயுச் சூழ்வெளி திறந்து பரிதிக் கதிர்வீச்சை உள்நுழைய விடுகிறது.  2003 ஆண்டில் விஞ்ஞானிகள் ஆஸ்திரேலியா பகுதியில் காந்தப் புலம் மிகையான அளவில் மாறி இருப்பதை அறிந்தனர்.  2004  ஆண்டில் தெற்கு ஆஃப்ரிக்கா பகுதியில்  காந்த தளம் மாறுபட்டு இருந்தது.  இந்த மாறுதல்கள் எல்லாம் பிற்காலத்தில் வரப் போகும் பூகாந்த துருவ மாறுதலை [Pole Reversal ஓரளவு அறிவிக்கிறது.   கடந்த ஒரு பில்லியன் ஆண்டுகளில்  பல நூறு தடவைகள் துருவ மாறுதல் பூமியில் நிகழ்ந்துள்ளன என்று தெரிகிறது.   சுமார் 800,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியில் துருவ மாறுபாடு நேரலாம் என்பது ஓர் வெளியீட்டில் அறியப்படுகிறது.

    திரவ வெளிக்கரு ஓட்ட மாறுதல் பூமியின் ஈர்ப்பு விசையைப் பாதிக்கிறது.

    நீர்க்கோள் பூமியின் நிறை, திரவ வெளிக்கரு ஓட்டத்தால் பூமியின் பல்வேறு அரங்குகளில் மாறுதல் அடைந்து, புவியீர்ப்பு ஆற்றலை ஏற்றி இறக்குகிறது.   இந்த ஆராய்ச்சி அறிவிப்பை ஜெர்மன் பிரெஞ்ச் புவியியல் விஞ்ஞானிகள் 2012 அக்டோபர் 23 இல் [Proceedings of the National Academy of Sciences of the United States] வெளிட்டிருக் கிறார்.  புவியீர்ப்பு விசையில் நுண்ணிய மாறுதல்களை புவிக் கருவில் நிகழும் உலோகத் திரவ நகர்ச்சி, நிறை நகர்ச்சியாக மாறிக் காட்டும்.

    பூகோளத்தின் புதிரான மேற்தட்டு, நடுத்தட்டு, உட்கரு

    விஞ்ஞானிகளுக்கு இன்றும் விடுவிக்க முடியாத ஒரு பெரும் புதிராக இருந்து வருவது பூகோளத்தின் கொந்தளிக்கும் விந்தையான உட்புற அமைப்பு ! ஆழமாய்த் துளையிட்டுப் பூமியின் மையத்தைக் கண்ணாலும், கருவியாலும் நோக்க முடியாது ! பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி சேயாகப் பிறந்த காலம் முதல் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. முதல் பில்லியன் ஆண்டுகளில் உருவான அதன் மேற்தட்டு, நடுத்தட்டு, உட்கரு (Crust, Mantle & Core) மூன்றும் மென்மேலும் விருத்தி அடைந் துள்ளதாக ஊகிக்கப்படுகிறது. ஆனால் அவை எப்படி உருவாயின என்பதற்கு உள்ள விஞ்ஞான ஆதாரங்கள் மிகச் சொற்பம். ஒருவேளை ஆரம்பித்திலே ஓரினச் சீர்மைத் திணிவு நிறை (Homogeneous Mass) ஓரளவு அல்லது பூராவும் உருகி ஈர்ப்புச் சக்தி கனமான பிண்டத்தில் பகுதியைத் திரவமாகவும், பகுதியைத் திடவமாகவும் (Partly Liquid & Partly Solid) திரட்டி யிருக்கலாம் ! திடவப் பிண்டம் (Solid Matter) உட்கருவாகவும், அதைப் போர்த்தும் சூடான திரவப் பிண்டம் (Liquid Hot Matter) நடுத்தட்டாகவும் அமைந்து விட்டன என்று கருதலாம் ! நடுத்தட்டுக்கு மேல் மெல்லியதான மேற்தட்டு பரவி 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே நிலையாகப் போனது ! அதற்குப் பிறகும் நீண்ட காலமாக மாறுபாடாகி சிக்கலான முறையில் மேற்தட்டு வடிவாகியுள்ளது.

     

    jay

    4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நமது சூரிய குடும்பம் தோன்றியது என்று கணிக்கப் படுகிறது ! சுமார் 7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பூமியின் பெரும்பான்மையான திணிவுப் பிண்டம் (Matter) சூபர்நோவா (Supernova) மூலமும் விண்மீன் களின் கொடையாலும் சேர்ந்தது என்றும் அறியப்படுகிறது. அதனால் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பூமியின் முழு வடிவம் உருவாகி இருக்க வேண்டும் என்று யூகிக்கப் படுகிறது. அதிலிருந்து பூகோளம் பல்வேறு முறைகளில் மாறியுள்ளது. ஆரம்பத்தில் பூமி உருவாகும் போது வெப்பத்தாலும், ஈர்ப்புச் சக்தியாலும் கொந்தளிப்புச் சேமிப்புடன் திரண்ட வடிவம் கரடுமுரடாக உருவானது. பரிதி மண்டலத்தின் மற்ற கோள்கள் உண்டான அதே சம காலத்தில்தான் பூகோளமும் சூரியனை மையமாக வைத்துச் சுற்றிக் கொண்டு உருவானது. அனுமானிக்கப் பட்ட கோள வடிவான சூப்பர்நோவா போன்ற ஒரு பேரண்டம் (Large Body Like Supernova) ஆப்பம் போல் சுற்றிக் கோள்கள் தோன்றின என்னும் கோட்பாடு ஒப்புக்கொள்ளப் பட்டிருக்கிறது. முதலில் குளிர்ந்த சேய் பூமி (Proto Baby Earth) விரைவாகச் சூடாகி 100 மில்லியன் ஆண்டுகளில் அதன் உலோக உட்கரு (Metallic Core) உருவாகி யிருக்கலாம். ஆரம்ப காலத்தில் சேய் பூமியை அடுத்துத் தொடர்ந்து ஏராளமான விண்கற்கள், வால்மீன்கள், எரியும் விண்மீன்கள் (Asteroids, Comets & Meteorites) தாக்கின ! பேபி பூமியின் மேல் புறத்தில் கொந்தளிக்கும் திரவம் (Exterior Molten Skin) இருந்திருக் கலாம், அந்த கனல் திரவம் உஷ்ணம் தணிந்து பிறகு மேல்தட்டு (Crest) உண்டாகி இருக்கலாம்.

     

    அண்டக்கோள் (Planet) என்பது என்ன ?

    ஈர்ப்புத் திரட்சியால் (Accretion Process) சூப்பர்நோவாவின் வாயுப் பிண்டத்தை இழுத்துக் கோள வடிவமாகும் ஓர் அண்டம். ஒரு கோள் தன்னச்சில் சுழன்று முக்கியமாக ஒரு சுயவொளி விண்மீனை வட்ட வீதிலோ அல்லது நீள்வட்ட வீதிலோ சுற்றும். தனது சுற்றுவீதியில் குறுக்கிட்ட விண்கற்கள், வால்மீன்கள், எரி விண்மீன்கள், விண் தூசிகள் ஆகியவற்றைப் பற்றிக் கொள்ளும் திறமுடையது. அண்டக் கோள் ஓர் ஈர்ப்புக் கிணறு (Gravity Well). சுயவொளி விண்மீன் உண்டாக்கும் பிணைப்புச் சக்தியால் உற்பத்தியான மூலகங்களை இழுத்துக் கொள்ளும். பொதுவாக ஒரு காந்த மண்டலமும் கொண்டது.

    பூகோள வரலாற்றின் ஆரம்பத்திலே புற அண்டம் ஒன்று பூமியைத் தாக்கி அதன் துணைக்கோள் நிலவு தோன்றியது என்று கருதப் படுகிறது. இரண்டாம் முறைத் தாக்குதலில் பூமியின் மேற்தட்டு (Crest) அழிந்து போனது. 3.8 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு தற்காலம் வரைப் பிழைத்த பாறைகள் பஸால்ட் மூடிய ஸிலிகா பாறை மேற்தட்டாக (Crest of Silicic Rocks Embedded in Basaltic layer) உலகம் பூராவும் படிந்துள்ளன ! அப்போதுதான் “மேலெழுச்சி பூதட்டு நகர்ச்சி” (Convection-Driven Plate Tectonics) உந்தப்பட்டு பேபிக் கண்டங்கள் (Proto-Continents) நகரத் தொடங்கி இருக்க வேண்டும். ஆரம்ப காலத்துப் பூகோளத்தில் தோன்றிய வாயுச் சூழ்வெளியில் பெரும்பான்மையாக நைடிரஜன், கார்பன் டையாக்ஸைடு அம்மோனியா, மீதேன், சிறிதளவு நீரும் இருந்தன. இவை யாவும் இரசாயனச் சேர்க்கையில் பின்னால் ஆர்கானிக் மூலக்கூறுகள் ஆயின. 3.85 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அவற்றிலிருந்துதான் பூர்வீக ஒற்றைச் செல் பாக்டீரியா (Primitive One-Celled Bacteria) உற்பத்தியானது. அதன் பின் உயிரின ஜந்துகள் பெருகி சூரிய ஒளிச்சேர்ப்பு முறையால் பேரளவு ஆக்ஸிஜன் சூழ்வெளியில் பெருக ஆரம்பித்தது.

    பூமியின் உள்ளமைப்புத் தோற்றம் !

    பூமியின் சிக்கலான உள்ளமைப்பைப் பொதுவாக மூன்று பகுதி களாகப் பிரிக்கலாம். மற்றும் சில உட்பிரிவுகளோடு ஐந்து பகுதிகளாக வகுக்கலாம். மேற்தட்டு, மேல் நடுத்தட்டு, கீழ் நடுத்தெட்டு, உட்கரு, புறக்கரு. (Crust, Upper Mantle, Lower Mantle, Outer Core & Inner Core) என்று ஐந்து பகுதிகளாகப் பாகம்படும்.

    1. மேற்தட்டின் தடிப்பு மெல்லியது. பூமியில் 20 மைல் (32 கி.மீ) ஆழத்திலிருந்து ஆரம்பித்து இமயமலை உச்சி வரை உயர்ந்து மேடு பள்ளமாய் இடத்துக்கு இடம் மிகவும் மாறுபடுகிறது. காண்டங்களில் 5 மைல் (8 கி.மீ.) ஆழத்தில் பாறையாயும் (Granite), கடலுக்குக் கீழ் பஸால்டாகவும் (Basaltic) உள்ளன. மேற்தட்டு பலதடவை வெப்பத்தால் அழிந்து மீண்டும் உருவானது என்று கருதப் படுகிறது. கடுமையான சூரிய உஷ்ணத்தால் மேற்தட்டு உருகிச் சிதைந்தால் அதன் மீது வாழும் உயிரினங்கள் அனைத்தும் மாண்டு போகலாம். பூமியின் வாயுச் சூழ்வெளி குடை பிடித்து சூரியனின் உக்கிரக் கனல் மேற்தட்டைப் பாதிக்காமல் பாதுகாக்கிறது !

    2. மேற்தட்டுக்குக் கீழாக 375 மைல் (600 கி.மீ) ஆழம் வரை இருப்பதை மேல் நடுத்தட்டு என்ற பெயரில் குறிப்பிட்டு அதை மேலரங்கம், கீழரங்கம் (Upper Zone & Lower Zone) என்று இரண்டாக வெவ்வேறு P-அலை வேகத்தில் பிரிவு செய்யப்படுகிறது.

    3. கீழ் நடுத்தட்டு பூமியிலிருந்து 1800 மைல் (2900 கி.மீ) ஆழத்தில் செல்கிறது. மேல் நடுத்தட்டு, கீழ் நடுத்தட்டு இரண்டிலும் தாது மூலகப் பாறை (Peridotite – Mineral Rock) நிரம்பியுள்ளது.

    4. புறக்கரு பெரும்பான்மையாக திரவ இரும்பு, நிக்கல் உலோகத்தைக் கொண்டது. இந்த திரவ அரங்கம் 3200 மைல் (5120 கி.மீ.) ஆழம் வரைச் செல்வது. இந்த அரங்கத்தில் மேலெழுச்சிக் கொந்தளிப் போட்டம் (Dynamo Action of Convection Currents) உள்ளதால் பூமியின் காந்த மண்டல (Earth’s Magnetic Field) விரிப்புக்கு ஏற்புடையதாகிறது.

    5. உட்கரு 800 மைல் (1300 கி.மீ) விட்டமுள்ள ஓர் உலோகத் திடக் கோளம் (Solid Metal Globe) ! ஈர்ப்புச் சக்தியால் அங்குள்ள அழுத்தம் : பூதளத்தில் உள்ள அழுத்தத்தைப் போல் மூன்றரை மில்லியன் மடங்கு (35000 kg/mm^2) மிகையானது !

    ஓய்வில்லாமல் மெதுவாய் உப்பிடும் இன்றைய பூகோளம் !

    பல மில்லியன் ஆண்டுகளாக படிப்படியாக மிக மெதுவாகப் பூகோளத்தின் பூத வடிவம் மாறி வருகிறது ! 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஆரம்ப காலத்து விட்டம் 4000 மைல் (6600 கி.மீ.). 3.5 பில்லியன் ஆண்டில் அதன் விட்டம் 4800 மைலாக (8000 கி.மீ.) விரிந்தது. 2.8 பில்லியன் ஆண்டில் 5280 மைல் (8800 கி.மீ) விட்டமும், 600 மில்லியன் ஆண்டுகளில் 7200 மைல் (12000 கி,.மீ.) விட்டமும் இருந்து, இப்போது 7850 மைல் (12750 கி.மீ.) விட்டம் கொண்டுள்ளது. பூமியின் பூமத்திய விட்டம் 100 ஆண்டுகளுக்கு 5 அங்குலம் வீதம் நீள்கிறது ! பூதள உள்ளமைப்பில் உள்ள உலோகக் கனல் திரவம் கொந்தளிப்பதால் மேலெழுச்சி ஓட்டங்கள் (Convection Currents) நிகழ்கின்றன ! அந்த ஓட்டமே பூகோளத்தின் உந்துசக்தியாக (Driving Force) மலை மேடுகளை உண்டாக்கியும், கண்ட நகர்ச்சியைத் (Continental Movement) தூண்டியும் வருகிறது !

    பூமியின் உள்ளமைப்பை மெய்யாக நமக்கு அறிவிப்பவை நேரிடைக் கணிப்பு ஆராய்ச்சிகள் இல்லை ! மாறாக பூமிக்குள் எப்போதாவது ஏற்படும் பூகம்ப நடுக்கத்தின் அதிர்ச்சி அலைகளே (Earthquake Shock Waves) பூமியின் உள்ளமைப்பை மறைமுகமாக நமக்கு அறிவிக்கின்றன ! மனிதரின் நேரிடை அறிவு பூமியின் மேற்தட்டை 5 மைல் (8 கி.மீ.) ஆழத் துளையிட்டுக் கண்டறிந்தவையே ! நிலவையும், செவ்வாய்க் கோளையும் தெரிந்துள்ள அளவு மனிதன் பூமிக்குக் கீழ் 20 மைல் (33 கி.மீ) ஆழத்தில் உள்ள அமைப்பை அறியக் கூடிய நேரிடைக் கருவிகளை இதுவரைப் படைக்க வில்லை !

    சூரியனைக் கோண வட்டத்தில் சுற்றும் பூமியும் நிலவும்

    பூமியின் கடல் அலைகளில் உயர்ச்சி நிலை, தாழ்ச்சி நிலை (High Tide & Low Tide) எனப்படும் இரண்டையும் நிலவும், பரிதியும் தனியாகவும், நேர்கோட்டில் அமைந்தும் உண்டாக்கும். அப்போது கடல் வெள்ளம் பூமியின் ஒருபுறம் நீளமாகும் போது மறுபுறம் குறுகும். பூமி சூரியனைச் சற்று முட்டை வடிவான வீதியில் சுற்றுகிறது. அதனால் ஒரு சமயம் பூமி தன் சராசரி தூரத்தை விட 1,500,000 மைல் (2,500,000 கி.மீ) விலகிச் செல்கிறது. ஆயினும் பூமி பாதுகாப்பான “உயிர்ச்சாதகக் கோளத்தில்” (Ecosphere) இயங்க முடிகிறது. இந்தப் பாதுகாப்பு வெப்ப அரங்கம் சுக்கிரன் சுற்றுவீதி முதல் செவ்வாய்ச் சுற்றுவீதி வரை நீடிக்கிறது. ஏதாவது இயற்கை விதி மீறி பூமியின் சுற்றுவீதி மாறிப் போய் சூரியனுக்கு அருகில் சென்றாலோ அல்லது விலகிச் சென்றாலோ பேரளவு வெப்ப மாறுதல் உண்டாகி உயிரினமும், பயிரினமும் பேரளவில் பாதிக்கப்படும். விலகிச் சென்றால் பூமியின் கடல் பூராவும் உறைந்து பனிக்கோள் ஆகிவிடும். நெருங்கிச் சென்றால் சுக்கிரனைப் போல் பூமியும் சுடுபாலையாய் ஆகிவிடும் !

    பூமியின் சாய்ந்த அச்சுக் கோணம் (23.45 டிகிரி)

    பூமி தோன்றிய காலத்தில் புற அண்டம் ஏதோ ஒன்று தாக்கி அதன் சுழல் அச்சு 23.45 டிகிரி சாய்ந்து போனது. அந்த சாய்ந்த அச்சால் பூமிக்குக் காலநிலை (வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம், குளிர் காலம்) மாறுகிறது. இந்த சாய்ந்த அச்சின் கோணம் சுமார் 23.5 டிகிரியில் இம்மியளவு கோணம் கூடியோ அல்லது குன்றியோ பூமி சுற்றினால் காலநிலைக் கோளாறுகள் பேரளவு நேர்ந்து பூமியின் உயிர்னங்களும், பயிரினங்களும் பாதிக்கப்படும். சூடேறும் பூகோளமாய் ஒருபுறத்தில் ஆகும் போது, மறுபுறத்தில் குளிர் நடுங்கும் பனிக் கோளாய் ஆகிவிடும்.

    பூமியின் பூதக் காந்த மண்டலம் !

    சூரியனின் அசுரத்தனமான கதிர்ப்புயலைப் பாதுகாக்கும் ஒரு கவசமாகப் பூமியின் காந்த மண்டலம் உதவுகிறது. சூரியப் புயலில் அபாயகரமான மரண மின்னியல் கதிர்கள் பூமியை நோக்கி வீசுகின்றன. அவை யாவும் பூமியின் “வான் ஆலன் இரட்டை வளையங் களால்” (Van Allen Belts – Two Bands) தடுக்கப் படுகின்றன.

    பூமியின் பூர்வீக ஏகக் கண்டம் பாங்கியா (Super-Continent Pangaea)

    ஆரம்ப காலத்துப் பூகோளத்தில் சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்போதுள்ள தனித்தனிக் கண்டங்கள் (ஆசியா, ஆ·பிரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென்னமெரிக்கா, அண்டார்க்டிகா) எல்லாம் நெருங்கி ஒட்டிக் கொண்டு இருந்தன ! அந்த ஒற்றைப் பெருங் கண்டம் “பாங்கியா பூதக்கண்டம்” (Super-Continent Pangaea) என்று குறிப்பிடப் படுகிறது. 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அவை மெதுவாகப் பிரியத் தொடங்கின ! முதலில் பூதக்கண்டம் வடகோளம் (Laurasia), தென்கோளமாக இரண்டாய்ப் (Gondwana) பிரிந்தது. 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு பாதிகள் மேலும் பிரிந்து தற்போதுள்ள இடத்திற்கு நகர்ந்துள்ளன !

    [தொடரும்]

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)

    2. 50 Greatest Mysteries of the Universe – How did the Solar System form ? (Aug 21, 2007)

    3. Astronomy Facts File Dictionary (1986)

    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)

    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? (April 2008)

    6. Cosmos By Carl Sagan (1980)

    7. Dictionary of Science – Webster’s New world (1998)

    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)

    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)

    10 National Geographic Picture of Our Universe By Roy Gallant: (1986)

    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)

    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)

    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)

    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)

    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)

    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)

    17 The Geographical Atlas of the World, University of London (1993).

    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)

    19 The Origin of Earth (www.moorlandschool.co.uk/earth/earthorigin.htm)

    20 Structure & Composition of Earth’s Atmosphere (http//:ess.geology.ufl.edu/)

    21 History of Earth (www.mansfield.ohio-state.edu/) (March 31 2007)

    22.  National Geographic News – Earth’s Core, Magnetic Field Changing Fast, Study Says : By Kimberly Johnson [June 30, 2008]

    23   http://en.wikipedia.org/wiki/Solar_wind/   Effect of Solar Wind on the Earth’s Magnetic Field  [Oct 24, 2012]

    24  Rapid Changes of Earth’s Core :  The Magnetic Field and Gravity from a Satellite Perspective.  [Oct 23, 2012]

    25. http://en.wikipedia.org/wiki/BESSY  [November 27, 2014]

    26   http://www.dailygalaxy.com/my_weblog/2015/01/asteroids-hard-drive-clue-to-fate-of-earths-core-billions-of-years-from-now.html  [January 22, 2015]

    27  http://www.azoquantum.com/News.aspx?newsID=2868  [January 22, 2015]

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  January 24, 2015]

    Attachments area
    Preview YouTube video The Mystery of the Earth’s Core Explained

    The Mystery of the Earth’s Core Explained

    Preview YouTube video Origin of Earth’s Magnetic Field

    Origin of Earth’s Magnetic Field
    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! அகிலாண்டத்தின் (Cosmos) இறுதி முடிவு எப்படி இருக்கும் ?

     

    jay

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

    வெடித்து விரியும் பிரபஞ்சத்தின்
    அறியா முடிவைத்
    தெரிவிக்கப் போவது
    துரிதப் படுத்தும் கருமைச் சக்தி !
    உதைத்துத் தள்ளும்
    அகிலத்தை
    ஒடுக்குமா அல்லது மேலும்
    முடுக்குமா ?
    ஒளிமந்தைகளை
    கவர்ச்சி விசைக்கு எதிராய்ப் பிரித்து
    இழுத்துச் செல்கிறது
    விலக்கு விசை !
    காலவெளிக் கருங்கடலில்
    கடவுளின் குதிரைச் சக்தி
    கருமைச் சக்தியே !
    கால வெளிக் கருங்குதிரை
    கடந்த தடத்தில் பின்னோக்கிப் பாயாது !
    பிரபஞ்சத்தின் முடிவு
    வெப்ப உயர்ச்சியோ ?  அல்லது
    தட்பக் குளிர்ச்சியோ ?
    அகிலப் பெருஞ் சுருக்கமோ ?
    பெரும் முறிவோ ?
    ஒழுங்கீனச் செறிவு இறுதி !

    +++++++++++++

    fig-1e-the-gravitaional-waves

    “எப்படி இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளவை எல்லாம் முடிவடையும் என்பதை ஆராய்ந்தறிய விஞ்ஞானிகள் எவற்றால் பிரபஞ்சம் உருவாக்கப் பட்டது என்று முதலில் அறிய வேண்டும்.”

    ஜேம்ஸ் டிரிஃபில் பேராசிரியர் (James Trefil) (George Mason University)

    “வெப்ப இயக்கவியல் பௌதிகத்தின் இரண்டாம் விதி (The Second Law of Thermodynamics) பிரபஞ்சத்துக்கு “வெப்ப மரணம்” அல்லது “ஒழுங்கீனச் செறிவு” (Heat Death or Entropy Death) என்னும் முடிவைத் தவிர வேறெதுவும் இல்லை என்று முன்னறிவிக்கிறது.  அந்த நிலையில் உயிரனங்கள் எதுவும் பிழைத்திருக்க முடியாதபடி உஷ்ணம் மிகக் கீழாகத் தணிந்து விடும்.”

    ஸர் ஜீன்ஸ் ஜேம்ஸ் ஆங்கிலப் பௌதிக, வானியல் விஞ்ஞானி  (1877-1946)

    நமது பூகோளத்திலும், விண்மீன்களிலும் பிரபஞ்ச “வெப்ப இழப்பு” (Entropy) தீவிரமாய் மிகையாகிக் கொண்டு வருகிறது.  அதாவது சிறுகச் சிறுக விண்மீன்களில் அணுக்கரு எரிசக்தி தீர்ந்துபோய் முடிவிலே அவை செத்து வெறும் கனலற்ற பிண்டமாகி விடும்.  விண்மீன்கள் அவ்விதம் ஒவ்வொன்றாய்ச் சுடரொளி மங்கிப் பிரபஞ்சமானது ஒரு காலத்தில் இருண்ட கண்டமாகிவிடும்.

    டாக்டர் மிசியோ காக்கு, (அகிலவியல் விஞ்ஞான மேதை)

    fig-1a-the-big-bang-beginning


    1998 ஆண்டுக்கு முன்னால் “கருமைச் சக்தி” என்னும் ஓர் விஞ்ஞானக் கருத்தை யாரும் கேள்விப்பட்ட தில்லை !  கருமைச் சக்தி என்பது அண்டங்களின் ஈர்ப்பு விசையைப் (Gravity) போல ஒருவித விலக்கு விசையே (Anti-Gravity) ! அது முக்கியமாகக் காலாக்ஸிகளின் நகர்ச்சியை உந்த வைக்கிறது.  அத்துடன் காலாக்ஸிகளின் வடிவங்களைச் சிற்பியைப் போல் செதுக்கி, அவை ஒன்றையொன்று மோதிக் கொள்ளாதவாது அவற்றுள் இடைவெளிகளை ஏற்படுத்திக் கொண்டும் வருகிறது.

    கிரிஸ்டொஃபர் கன்ஸிலிஸ்  (வானோக்காளர், நாட்டிங்ஹாம் பல்கலைக் கழகம்)

    பிரபஞ்சம் உப்பி விரியும் போது, காலக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்கின்றன! அதை வேறு விதமாகக் கூறினால், காலாக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்வதால், பிரபஞ்சம் உப்பி விரிகிறது என்பது தெளிவாகிறது ! அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு கூண்டு என்று கருதக் கூடாது ! அது சோப்புக் குமிழிபோல் உப்பிக் கொண்டே போகும் ஒரு பெருங்கோளம் !

    அமெரிக்க வானியல் மேதை எட்வின் ஹப்பிள்

    content-of-the-universe


    பிரபஞ்சத்தின் முடிவு இறுதியில் என்னதாய் இருக்கும் ?

    பிரபஞ்சத்தின் மரணம் எப்படி இருக்கும் என்பதை ஊகிக்க முதலில் பிரபஞ்ச வடிவங்கள் எப்படித் தோன்றின என்பதை ஒருவர் அறிந்திருக்க வேண்டும் !  பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்பு விண்வெளி எப்படி இருந்தது என்றும் முன்பாக ஊகிக்க வேண்டும் !  பிறகு பிரபஞ்சம் சிதைந்தோ விரிந்தோ முறிந்தோ வெப்பம் குன்றியோ குளிர்ந்தோ அல்லது ஒடுங்கியோ போனால் என்ன நேரிடும் என்று ஊகிக்க வேண்டும் !  அதாவது பிரபஞ்சத்தின் பிறப்பு இறப்பு வளர்ப்பு போன்ற மூலாதார விளக்கங்களில் அநேகக் கருத்துக்கள் ஊகிப்பாக இருப்பனவே தவிர மெய்யான விஞ்ஞானமாக இன்னும் உருவாக வில்லை !  கடந்த நூறாண்டுகளாகத் தொலைநோக்கிகள், கதிரலை ரேடார்கள், விண்வெளிப் பயணங்கள், விண்ணுளவிகள்  மூலமாகப் பிரபஞ்சத்தைப் பற்றி அறிந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை வைத்துக் கொண்டு காலத்தை முன்னோக்கியும், பின்னோக்கியும் கோட்பாடுகள் ஊகிக்கப்பட்டும் மாறி மாறியும் வருகின்றன !  இந்த முறைகளைத் தவிர வேறு ஆய்வுப் பாதைகள் இல்லாததால் இவற்றைப் பின்பற்றி பிரபஞ்சத்தின் மரணம் எப்படி இருக்கும் என்று விஞ்ஞானிகள் வெவ்வேறு காட்சிகளை ஊகிக்கிறார்கள் !

    fig-1-the-end-scenerio

    தற்போது பிரபஞ்சம் தோன்றி 13.7 பில்லியன் ஆகிவிட்டன என்று விஞ்ஞானிகள் கணித்திருந்தாலும் எப்போது பிரபஞ்சத்தின் மரணம் இருக்கலாம் என்று தீர்மானமாக யாரும் இதுவரை ஊகிக்க முடியவில்லை !  பிரபஞ்சத்தின் ஆயுள் அடிக்கோல் டிரில்லியன் (Trillions of Years 10^12) ஆண்டுக் கணக்கில் உள்ளது என்பது மட்டும் அறியப் பட்டுள்ளதால் யாரும் அஞ்ச வேண்டிய தில்லை !  பிரபஞ்சத்தின் பிறப்பைப் பற்றி ஓரளவு அறிந்த விஞ்ஞானிகளின் ஆர்வம் அதன் இறப்பைப் பற்றி உளவிட இப்போது திரும்பியுள்ளது.  பிரபஞ்சத்தின் பிறப்பும் இறப்பும் பரிதியால் பூமியில் நிகழும் இரவு பகல் போல் மாறி மாறி வரும் ஒரு “சுற்றியக்கம்” (Cyclic Event) என்பது பல விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது !  விஞ்ஞானி ஜியார்ஜ் காமா ஊகித்த பிரபஞ்சப் “பெரு வெடிப்புக் கோட்பாட்டைப்” (The Big Bang Theory) பெரும்பான்மையான உலக விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ளார்.  பெரு வெடிப்புக்குப் பிறகு பிரபஞ்சம் கரும்பிண்டங் களைக் கொண்டு விண்மீன் ஒளிமந்தைகளை உருவாக்கி அதன் வடிவம் விரிவாகி வருகிறது.  புதிதாக மறைமுகமாய்க் கண்டுபிடிக்கப் பட்ட “கருஞ்சக்தி” (Dark Energy) அண்டங்களின் கவர்ச்சி விசையான “ஈர்ப்புச் சக்திக்கு” எதிரான விலக்கு விசை என்பது அறியப்பட்டது !  அந்தக் கருஞ்சக்தியே காலாக்ஸி ஒளிமந்தைகளைத் துரிதமாய் “விரைவாக்கம்” (Acceleration) செய்து வருகிறது என்பதும் ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளது.

    fig-1c-the-fate-of-the-universe

    பிரபஞ்சத்தின் முடிவு இறுதியில் எப்படி யெல்லாம் இருக்கலாம் ?  

    பிரபஞ்சத்தில் பரிதி போன்ற விண்மீன்களின் எரிசக்தி முற்றிலும் தீர்ந்து போய் “வெப்ப மரணம்” (Heat Death) ஏற்படலாம் !  விண்மீன்களின் கண்ணொளி மங்கிப்போய் செத்த மீன்களும், பிண்டச் சடலங்களும் கருந்துளைகளால் (Black Holes) உறிஞ்சி விழுங்கப் படலாம் !  செங்குள்ளி விண்மீன்கள் (Red Dwarf Stars) எரிந்து மெதுவாக மங்கிப் போகலாம் !  கருஞ்சக்தி துரிதமாய் உந்தித் தள்ளும் காலாக்ஸிகள் பயணம் செய்து கருஞ் சூனியக் கடலில் (Sea of Black Void) கரைந்து போகலாம் !  கருந்துளைகளின் வயிறு பெருத்து எரிசக்தி தீர்வதால் வெடித்துப் பிண்டங்கள் வெளியாக்கலாம் !  இறுதியில் அகில் “வெப்பத் தளர்ச்சியால்” அல்லது வெப்பத் தேய்வால், (ஒழுங்கீனச் செறிவால்) (Entropy) பிண்டமும் சக்தியும் பிரளயத்தில் சிக்கிக் கொள்ளலாம் !  பிரபஞ்சம் வெப்ப முறிவில் “பெருங் குளிர்ச்சி” (Big Chill) உண்டாகி முடிவு அடையலாம் !  அல்லது விரிந்தவை அனைத்தும் “பெருங் சுருக்கத்தில்” (Big Crunch) மீண்டும் ஒடுங்கிக் கொள்ளலாம் ! அல்லது “பெரு முறிவில்” (Big Rip) நொறுங்கிப் போகலாம்.

    fig-2-our-re-cycled-universe

    அகிலப் போக்கின் மூன்று வித முக்கிய முடிவுகள் !

    பிரபஞ்சத்தின் இறுதி முடிவு பல்வேறு நிபந்தனைகளைச் சார்ந்துள்ளது.  பொதுவாக காலாக்ஸிகளைத் துரிதமாய் உந்தி விலக்கி வைக்கும் கருஞ்சக்தி என்பது என்ன, மற்றும் அதன் கோர விளைவுகள் என்ன என்னும் வினாக்களுக்குக் கிடைக்கும் விடைகளைப் பொருத்தது.  இங்கே நான்கு வித முடிவுகளை அதாவது இருவிதப் பெருங் குளிர்ச்சி, பெரு முறிவு அல்லது பெருஞ் சுருக்கம் (Big Chill -1 & Big Chill -2, Big Rip & Big Chrunch) பற்றி ஆராயப் போகிறோம்.  அவற்றில் பெருமளவு உறுதியான முடிவுகள் இரண்டு :  பெருங் குளிர்ச்சி அல்லது பெரும் முறிவு !  நான்கு எதிர்பார்ப்பு முடிவுகளை உளவும் போது ஆரம்ப கால நிகழ்ச்சி “பெரு வெடிப்பாகவே” (The Big Bang Event) எடுத்துக் கொள்ளப்படுகிறது.  அடுத்து கருஞ்சக்தி (Dark Energy) உதித்த போது எழும் கேள்வி இதுதான் :  கருஞ்சக்தியின் திணிவு (Density of Dark Energy) மெதுவாக மிகையானதா அல்லது துரிதமாக மிகையானதா ?  கருஞ்சக்தியின் திணிவு மெதுவாக மிகையானல் விளைவு : பெருங் குளிர்ச்சி -2 (Big Chill -2) ! கருஞ்சக்தியின் திணிவு விரைவாக மிகையானல் விளைவு : பெரு முறிவு (Big Rip) !

    fig-1d-the-time-machine1

    பிரபஞ்சத்தின் வடிவம் என்ன என்று முதலில் ஆராயலாம்.  மூன்று வித வடிவங்களை அனுமானித்துக் கொள்ளலாம்.  முதல் வடிவம் தட்டை வடிவம் (Flat Universe).  இரண்டாவது பேரளவில் உப்பிய ஆனால் எல்லைக் குட்பட்ட மூடிய வடிவம் (Expanding but Closed Universe),  மூன்றாவது விரியும் திறந்த வடிவம் (Expanding But Open Universe) !  தட்டை வடிவத்தில் பிரபஞ்சத்தின் விரிவு வீதம் (Expansion Rate) மெதுவாகிக் கொண்டே போகும்.  முடிவில் சமநிலை அடைந்து விரிவு நிகழ்ச்சி முற்றிலும் நின்று போகும்.  காலாக்ஸிகள் தனிப்பட்ட பிண்டத் தீவுகளாய் சூனியக் கருங்கடலில் பெருங் குளிர்ச்சி (Big Chill-1) நிலையில் முடங்கிக் கிடக்கும் !  அடுத்து கருஞ்சக்தி பிரபஞ்ச விரிவை துரிதமாக்கிப் பிளக்காத முறையில் நின்று விட்டால், பிண்டம் விரிவைச் சமநிலைப் படுத்திப் பெருங் குளிர்ச்சி (Big Chill-2) நேர்ந்து விடும்.   பொதுவாகத் தட்டைப் பிரபஞ்சத்தில் இந்த முறை விரிவாக்கம் செய்திடப் பெருங் குளிர்ச்சியே நிகழ வாய்ப்பிருக்கிறது.

    fig-three-possible-future-for-the-universe

    மூடிய பிரபஞ்சத்தில் நிகழப் போவது வேறான முடிவு.  பிரபஞ்சத்தில் வெறும் பிண்டம் மட்டுமே இருக்குமானால் அல்லது கருஞ்சக்தியே இல்லாமல் போனால் ஈர்ப்புச் சக்தியின் வலு ஓங்கி பிரபஞ்சத்தின் விண்மீன்கள், அண்ட கோளங்கள் மீண்டும் ஓடுங்கிப் பெரு வெடிப்பு நிகழ்ச்சியின் எதிர்முறைக் குவிப்பு இயக்கமாகி “ஒற்றை வெப்பத் திணிவாய்” மாறிவிடும் (Collapsing into Hot Dense Singularity).  இதுவே “பெருஞ் சுருக்கம்” (Big Crunch) என்று குறிப்பிடப்படுகிறது !  மூன்றாவது கருஞ்சக்தி காலாக்ஸிகளை மிகத் துரிதமாக விரைவாக்கினால் பிரபஞ்சத்தைச் சுக்கலாகப் பிளந்து முறித்துவிடும் !  அகிலத்தின் பேருருவம் படைத்த அசுரக் கொத்துகள், கொத்துகள் (Super Clusters & Clusters) யாவும் கிழிந்து போய்விடும்.  அதுபோல் பிறகு காலாக்ஸிகள், அண்டக் கோள்கள், இறுதியில் அணுக்கள் கூடச் சிதைந்து விடும்.  இந்த முடிவு கருஞ்சக்தியால் விளையும் “பெரு முறிவு” (Big Rip) என்று குறிப்பிடப் படுகிறது !

    fig-6-the-big-bounce-theory

    உப்பி விரியும் பிரபஞ்சத்தில் கருஞ்சக்தியின் விளைவுகள் !

    பிரபஞ்சத்தில் கருஞ்சக்தி, கரும்பிண்டம், கருந்துளை ஆகிய புதிர்கள் இருப்பது கண்ணுக்கு நேராகத் தெரியாத போதும் கருவிகளின் மறைமுக உளவுகள் மூலமே அறியப் பட்டுள்ளன !  விலக்கு விசையான கருஞ்சக்தி காலாக்ஸி ஒளிமந்தைகளைத் துரிதமாக விரைவாக்கிப் பிரிப்பது ஒருவகை யில் நல்லதா அல்லது பெருவாரியாகக் கேடு விளைவிப்பதா என்பது தெரியவில்லை !  வெறும் ஈர்ப்பு விசை மட்டும் இருந்திருந்தால் காலாக்ஸி கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ள வாய்ப்புள்ளது.  அந்த முறையில் காலாக்ஸிகளை மோத விடாமல் விலக்கு விசை ஈர்ப்பு விசைக்கு எதிராகப் பிரிக்கிறது.

    fig-5-the-multiverse

    கருஞ்சக்தி, கரும்பிண்டம் ஆகிய இரண்டில் கருஞ்சக்தியே மிக்கப் புதிராக நிலவி வருகிறது.  காலாக்ஸிகளை விரைவாக்கும் கருஞ்சக்தியின் தெரியாத உட்பொருள்கள்  (Components of Dark Enery) பிரபஞ்சத்தின் தலைவிதியை முடிவு செய்யும் !  மேலும் பிண்ட-சக்தி சமன்பாடு கூறுவது போல் பிரபஞ்சத்தில் கரும்பிண்டமும், கருஞ்சக்தியும் சமநிலையில் நிலவவில்லை !  பிரபஞ்சத்தில் கருஞ்சக்தியே 74% ஆகவும் கரும்பிண்டம் 22% ஆகவும் அமைந்திருப்பது இன்னும் புதிராக உள்ளது !  பிரபஞ்சத்தில் இயற்கையாகக் கருஞ்சக்தி கரும்பிண்டத்தை விட சுமார் மூன்று மடங்கிருப்பது காரணத்தோடுதான் !  அப்போதுதான் சுழலும் காலாக்ஸி ஒளிமந்தைகளுக்கு அகிலத்தில் நகர்ந்து பயணம் செய்ய விலக்கு விசை கிடைக்கிறது !  வெறும் ஈர்ப்புச் சக்தி மட்டும் இருந்திருந்தால் பிரபஞ்சத்தில் நகர்ச்சி இல்லாது முடக்கமே நிலவி இருக்கும்.

    fig-the-cosmic-cycle-recycle

    தான் கருதிய “நிலைத்துவப் பிரபஞ்ச மாதிரியில்” (Static Universe Model) கருஞ்சக்திக்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் முதலில் “அகில நிலையிலக்கம்” (Cosmological Constant) என்று பெயர் வைத்தார்.  பிறகு தான் செய்தது பிழையானது என்று அவரே அதை நீக்கினார்.  ஆனால் பின்னாளில் அதுவே சூனியச் சக்தி (Vacuum Energy) அல்லது கருஞ்சக்தி (Dark Energy) என்று பெயர்களில் குறிப்பிடப்பட்டது.  அகில நிலையிலக்கத்தை ஐன்ஸ்டைன் பிண்டத்தின் ஈர்ப்பு விசைக்கு எதிரான “விலக்கு ஈர்ப்பு விசை” (Repulsive Gravitational Force) ஆகப் பயன்படுத்தினார்.  விண்வெளி மெய்யாகச் சூனியமில்லை என்பதே அது குறிப்பிடுகிறது.  அகிலத்தில் சூனிய சக்தி எனப்படும் கருஞ்சக்தி சமநிலையில் பின்புலமாய் நிரம்பி யுள்ளது. அந்த சக்தியில் துகள் எதிர்த்துகள் என்னும் இரட்டைத் துணைகள் எழுந்தும் எழாமலும் வசிக்கின்றன.  பிரபஞ்சம் உப்பி விரியும் போது கருஞ்சக்தியின் திணிவு மாறாமல் நிலையாக (Dark Energy Stays Constant, as Universe Expands) இருக்கிறது !  இந்த நியதிப்படி பிரபஞ்சத்தில் எத்துணை பரிமாண அளவுக் கருஞ்சக்தி இருக்க வேண்டும் என்று கணிக்கும் போது பிரச்சனை எழுகிறது.  அப்படிக் கணித்திடும் போது அதன் மதிப்பீடு நோக்கிய அளவை விட 10^120 மடங்கு இருக்க வேண்டும் என்று தெரிகிறது.

    fig-1b-cosmos-evolution

    பிரபஞ்சத்தின் இறுதி முடிவு நெருங்கி விட்டதா ?

    அகிலத்தின் முடிவுக்குக் காலம் எப்போது வருமென்று யாரும் இதுவரை அனுமானிக்க வில்லை !  தற்போது பிரபஞ்சம் தோன்றி 13.7 பில்லியன் ஆகிவிட்டன என்று விஞ்ஞானிகள் கணித்திருந் தாலும் எப்போது பிரபஞ்சத்தின் இறுதி இருக்கலாம் என்று தீர்மானமாக யாரும் இதுவரை ஊகிக்கக் கூட முடிய வில்லை !  பிரபஞ்சம் உப்பி விரிவதில் கரும்பிண்ட மும், கருஞ்சக்தியும்  வெவ்வேறு கடமைகளைச் செய்து வருகின்றன.  கரும்பிண்டம் பெரும்பான்மைக் கவர்ச்சி விசையாகப் பயன்பட்டு பிரபஞ்ச விரிவிக்கு ஓர் உன்னதத் “தடைக் கருவியாக” (Brake) நிலவி வருகிறது !  அதே சமயத்தில் கருஞ்சக்தியானது பிரபஞ்ச காலாக்ஸி ஒளிமந்தைகளை நகர்த்திச் செல்லும் உந்து விசையாக (Gas Pedal or Accelerator) இயங்கி வருகிறது !  பிரபஞ்ச வாகனத்தை இயக்க உந்து விசையும் தேவை ! தடை விசையும் தேவை !  பிரபஞ்சம் பிள்ளைப் பிராயத்தில் இருந்த போது விண்வெளி சிறிதாக இருந்தது !

    fig-3-model-of-inflation1

    அப்போது கவர்ச்சி விசையின் கைப்பலம் ஓங்கியது !  அனைத்துக் காலாக்ஸிகளும் நெருங்கி இருந்தன !  விண்வெளியின் விரிவு மெதுவாக நிகழ்ந்தது.  பிரபஞ்சத்தின் வயது 5 பில்லியன் ஆண்டுகளாய் இருந்த போது சாதாப் பிண்டமும் கருமைப் பிண்டமும் மெலிவாகிக் கருஞ்சக்தியின் வலு ஓங்கியது.  அதிலிருந்து ஆரம்பித்த பிரபஞ்சத்தின் உப்பிய விரிவாக்கம் துரிதமாகி ஒளிமந்தைகள் விரைவாக ஓடிக் கொண்டிருக்கின்றன.  இயற்கை ஏன் பிரபஞ்சத்தின் விரைவாக்க அமுக்கியை (Accelerator Pedal) வேகமாய் அழுத்துகிறது என்பதற்குக் காரணம் தெரியவில்லை !  பிரபஞ்சம் பெருங் குளிர்ச்சியில் மடியுமா அல்லது பெரும் முறிவில் முடியுமா என்பதும் யாருக்கும் தெரியவில்லை !  பிரபஞ்சத்துக்கு மரணம் எப்படி இருந்தாலும் அது நேர டிரில்லியன் (10^12) கணக்கான ஆண்டுகள் ஆகும் என்று விஞ்ஞானிகள் ஊகிக்கும் போது பொதுநபர் ஏன் அதை நினைத்து மனமுடைந்து போக வேண்டும் ?

    fig-4-high-entropy-low-entropy-universe1

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++
    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – What is the Fate of the Universe ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition -Exploring the Early Universe By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40806191&format=html (About The Universe -1)
    21 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40901081&format=htmlhttp://www.thinnai.com/?module=displaystory&story_id=40901081&format=html (About The Universe -2)
    22 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40901221&format=html (About The Universe -3)
    22(அ) http://jayabarathan.wordpress.com/2009/01/09/katturai49/ (பெருவெடிப்புக்கு முன் நேர்ந்தது என்ன ?)
    23 Sky & Telescope Magazine -Going Over the Dark Side – What is Inflating our Universe ? By : Richard Panek (Feb 2009)
    24 Astronomy Magazine – Where the Universe is Heading ? By : James Trefil (July 2006)
    25 How the Univers will End ?  WikiAnswers.com (2009)
    26 Return to the Static Universe By : Role MacRiner (Nov 2007)
    27 Astronomy Today – The End of the Universe : Big Crunch Or Big Bamg By : Marc Delehanty  [2008]
    28 What is the End of the Universe ? By : Jagadheep Pandian (Nov 2001)
    29. How the Universe Will End By : Michael Lemonick & Roger Ressmeyer/Corbis
    30 How Will the Universe End ? By : Jim Holt (March 5, 2004)
    31 Hawking Rewrites History Backwards By : Philip Ball (June 21, 2006)
    32. The End of Cosmology (An Accelerating Universe Wipes Out Traces of its Origins) By : Lawrence Krauss & Robert Scherrer [February 25, 2008]
    33 The End of Cosmology Posted By : Steve Kanaras [April 30, 2008]

    ******************

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    ”ஒருவர் படுக்க இருவர் அமர
    வருகை புரிந்தவரால் நிற்க -ஒருயிரவில்
    பொய்கைபேய் பூதத்தார் பின்னிப் பிணைந்திட
    செய்த மழையோன் சரண்”….

    ”சிந்தையில் சிக்காத சச்சிதா னந்தமே
    எந்தையே ஏகப் பரம்பொருளே -விந்தையே
    தீராத ஆட்டத்தை மாறாத தோட்டத்தில்
    சீராக ஆடிடும் சேய்”….

    ”காயாம்பூ வண்ணத்தை கற்றோர்தம் எண்ணத்தை
    ஆயர்தம் சின்னத்தை மண்ணையுன் -ஓயாத
    மாயத்தை ஒப்பில்லா சீயத்தை நேயத்தில்
    தாயொத்த தாயத்தைத் தேடு”….கிரேசி மோகன்….

    Share
  • ஒரு குடும்பத்திற்குப் பத்துக் குழந்தைகள்?

    நாகேஸ்வரி அண்ணாமலை.

    வெளியிலிருந்து பாலஸ்தீனத்திற்குள் குடியேறிய யூதர்கள் பாலஸ்தீனம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தங்கள் மூதாதையர் வாழ்ந்த இடம் என்று கூறிக்கொண்டு அங்கு ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருந்த அரேபியர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றினர்; இன்னும் வெளியேற்றிக்கொண்டிருக்கின்றனர். பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நாட்டை உருவாக்கி அதை ஆள ஆரம்பிக்கும்போது இஸ்ரேல் உருவாகக் காரணமாக இருந்த முக்கிய தலைவர்களுள் ஒருவரான பென்–குரியன் அந்த நாட்டு ஒவ்வொரு யூதப் பெண்ணையும் நான்கு குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    உலகத்து நாடுகள் அனைத்தும் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த முயன்று வரும்போது பென்–குரியன் ஏன் அப்படிச் சொன்னார் என்பதற்குப் பல காரணங்கள் உண்டு. இஸ்ரேல் யூத நாடாக உருவாக வேண்டும், அங்கு யூத மதச் சட்டங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று யூதர்கள் விரும்பினர். இஸ்ரேல் ஒரு ஜனநாயக நாடாக உருவாகும்போது அதில் யூதர்கள் பெரும்பான்மையானவர்களாக இருக்க வேண்டும், அதற்கு அரேபியர்களை வெளியேற்றுவதோடு யூதர்களின் எண்ணைக்கையையும் கூட்ட வேண்டும் என்று இஸ்ரேல் தலைவர்கள் திட்டமிட்டனர். யூதப் பெண்கள் நான்கு குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒரு வழி என்று நினைத்தனர்.

    overpopulation-in-indiaஇஸ்ரேலில் யூதர்களின் எண்ணிக்கையைப் பெருக்க நினைத்தது போல் இப்போது இந்துச் சாமியார்கள் எல்லோரும் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கையைப் பெருக்க நினைக்கிறார்கள். பா.ஜா.வைச் சேர்ந்த எம்.பி. சாக்‌ஷி மகராஜ் ‘இந்துக்கள் அனைவரும் ஐந்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி இந்த ‘அறிவுரைக்கு’ பிள்ளையார் சுழி போட்டார். அவரையடுத்து மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ. பிரமுகர் ஷியாமல் கோஸ்வாமி என்பவரும் ‘இந்துக்கள் ஐந்து குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால்தான் எதிர்காலத்தில் பிற மதங்களுடன் சம நிலை காணப்படும்’ என்று முத்து உதிர்த்திருக்கிறார். பிற மதங்களுடன் சம நிலை காணப்படும் என்று இவர் கூறுவது உலக அளவிலா அல்லது இந்திய அளவிலா? இந்த அறிவுரைகளுக்கும் மேலாக சாமியார் வசுதேவானந்த் ஒவ்வொரு இந்துவும் பத்துக்குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.

    பத்துக் குழந்தைகளைப் பெற்று அவற்றை என்னென்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறார் தெரியுமா? விவசாயத்திற்கு ஒரு பிள்ளையாம்; அடுத்த நான்கு குழந்தைகள் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும் ராணுவ வீரர் ஆகவும் உள்நாட்டு பாதுகாப்பு வீரர் ஆகவும் சமூகதொண்டர் ஆகவும் மாற வேண்டுமாம். மீதமுள்ள ஐந்து குழந்தைகளை இவரிடம் கொடுத்துவிடவாம். இவர் அவர்களை துறவிகளாகவும் சன்னியாசிகளாகவும் மாற்றுவாராம்! இந்தச் சந்தர்ப்பத்தில் கத்தோலிக்க மத குருவான போப் பிரான்ஸிஸ் பிலிப்பைன்ஸில் நடந்த ஒரு கூட்டத்தில் ‘கத்தோலிக்க மதம் கருத்தடைச் சாதனங்களைத் தடைசெய்திருந்தாலும் முயல்களைப் போல் (நாம் கூறுவதுபோல் கூறுவது என்றால் பன்றிகளைப்போல்) பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளுங்கள் என்று அர்த்தம் இல்லை’ என்று கூறியிருப்பதை நினைவுபடுத்தலாம்.

    சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்தியாவின் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த இந்திய அரசு எவ்வளவோ முயன்று இப்போது கிராமத்து ஜனங்கள் கூட குடும்பத்தின் அளவைக் கட்டுப்படுத்துவதில் உள்ள நன்மையை உணர்ந்து ‘நாம் இருவர். நமக்கு இருவர்’ என்ற கணக்கில் குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்கள். இத்தனை காலம் பாடுபட்டு அடைந்த இந்த இலக்கை இந்தச் சாமியார்கள் தங்கள் அறிவுரைகள் மூலம் முறியடித்துவிடுவார்கள் போல் தெரிகிறது.

    இந்துக்கள் இந்தியாவில் பெரும்பான்மையராக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்களே. இப்போது இந்தியாவில் அவர்கள்தானே பெரும்பான்மையர். இதற்கு மேல் என்ன பெரும்பான்மை வேண்டும்? இவர்கள் யாரைக் கண்டு தாங்கள் சிறுபான்மை ஆகிவிடுவோம் என்று பயப்படுகிறார்கள்? இஸ்லாமும் கிறிஸ்தவமும் இந்து மதத்திலிருந்து தோன்றியதாக ஒரு சாமியார் கூறியிருக்கிறார். இது என்ன பிதற்றல்? இந்து மதம்தான் மதங்களிலேயே சிறந்தது என்று வேண்டுமானாலும் கூறிவிட்டுப் போகட்டும். இந்து மதத்திலிருந்து மற்ற மதங்கள் பிறந்தன என்று கூறி மற்றவர்களின் கேலிக்கு ஆளாக வேண்டுமா?

    world-population-growth-forecastபத்துக் குழந்தைகள் பெற்றுக்கொள்வதால் யாருக்கு நன்மை? நாட்டிற்கா? உலக நாடுகளிலேயே ஜனத்தொகையில் இரண்டாவது இடம் வகிக்கும் இந்தியாவில் இன்னும் ஜனப்பெருக்கமா? தாங்காது இந்தியா. குஜராத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதாகக் கூறிக்கொண்டு முன்னாள் குஜராத் முதலமைச்சர் – இன்றைய பிரதமர் – எத்தனை குஜராத் ஏழைகளை வறுமைக் கோட்டிலிருந்து உயர்த்தினார்? எவ்வளவு பொருளாதார மேம்பாடுகள் ஏற்பட்டாலும் உயர்த்தப்பட வேண்டிய ஏழைகள் இன்னும் எத்தனையோ பேர் இருக்கின்றனர். இந்தியாவில் இருக்கும் இயற்கை வளங்கள் இப்போது இருக்கும் ஜனத்தொகைக்கே போதவில்லை. இனி ஒவ்வொரு குடும்பமும் பத்துப் பிள்ளைகள் பெற்றுக்கொண்டால் அதிகரிக்கும் ஜனத்தொகையை எப்படிச் சமாளிப்பது? இப்போதே வெளிநாட்டவரிடம் இந்தியாவின் ஜனத்தொகை 1.2 பில்லியன் என்றால் இவ்வளவு பெரிய ஜனத்தொகையை எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். ஒவொரு குடும்பமும் பத்துப் பிள்ளைகள் பெற்று இந்தியாவின் ஜனத்தொகை இன்னும் பல மடங்கு பெருகினால் உலகத்தாரின் ஏளனத்திற்குத்தான் ஆளாவோம். உலக வங்கி (World Bank), உலகநிதி மையம் (International Monetary Fund) போன்ற நிறுவனங்கள் இந்தியாவுக்கு நிதி உதவி செய்வதற்குத் தடை போட்டாலும் போடலாம்.

    பத்துப் பிள்ளைகள் பெற்றுக்கொள்வதால் நாட்டிற்கு நன்மை இல்லையென்றால் தனி மனிதனுக்கு நன்மையா? மத்தியதரக் குடும்பங்களில் இரண்டு பிள்ளைகள் பெற்று அவர்களுக்குக் கல்வி புகட்டி வேலை தேடிக் கொடுத்து அவர்களை வாழ்க்கையில் செட்டில் ஆக்குவதற்கே போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. மத்தியதரக் குடும்பங்களிலேயே இப்படி என்றால் ஏழைக் குடும்பங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். பத்துக் குழந்தைகள் பெற்றுக்கொண்டால் இந்தப் பொறுப்பு ஐந்து மடங்கு ஆகிவிடும். ஒரு குழந்தையை விவசாயம் செய்வதற்கு விட்டுவிட வேண்டுமாம். இப்போது விவசாயத்தில் இருப்பவர்களுக்கே அவர்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான வருமானம் கிடைக்கவில்லை. நிலைமை இப்படி இருக்க இன்னும் சிலர் விவசாயிகள் ஆக வேண்டுமா?

    ஒரு குழந்தையை ஐ.ஏ.எஸ். ஆக்க வேண்டுமாம். வீட்டிற்கு ஒரு ஐ.ஏ.எஸ். பதவி வேண்டுமானால் எத்தனை ஐ.ஏ.எஸ். பதவிகளை உருவாக்க வேண்டும். இப்படியே ஐந்து குழந்தைகளுக்கும் வேலை கொடுத்த பிறகு மீதி ஐந்து குழந்தைகளை இந்தச் சாமியார்களிடம் விட்டுவிட வேண்டுமாம். அவர்கள் இவர்களை துறவிகளாகவும் சாமியார்களாகவும் மாற்றுவார்களாம். இப்போதிருக்கும் சாமியார்கள் கூட்டம் போதாதென்று இன்னும் சாமியார்கள் கூட்டத்தை அதிகரிக்கவா? இப்போது உலக அரங்கில் இந்தியாவுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மதிப்பும் இந்தச் சாமியார் கூட்டங்கள் பெருகினால் போய்விடும்.

    நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் பெண்களும் பங்கு வகிக்க வேண்டும் என்பது பற்றி இந்தச் சாமியார்கள் என்ன சொல்கிறார்கள்? பத்துப் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு வேறு எதற்கு நேரம் இருக்கும்?

    இந்துத்வவாதிகளும் இந்துச் சாமியார்களும் அவர்கள் பாட்டுக்கு என்னென்னவோ உளறிக்கொண்டு போகிறார்கள். இதையெல்லாம் கண்டிக்க வேண்டியது நாட்டின் நலனுக்கும் எல்லா மக்களின் நலன்களுக்கும் பொறுப்பேற்றிருக்கும் பிரதமரின் கடமை அல்லவா? இதையெல்லாம் கண்டும் காணாததுபோல் இருப்பது எதில் சேர்த்தி? இந்துத்வவாதிகளின் பிரச்சாரங்களும் இந்துச் சாமியார்களின் கேலிக் கூற்றுக்களும் இந்தியாவையே நிலைதடுமாற வைத்துவிடாதா? உலகம் முழுவதும் முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்க இந்தியா மட்டும் பின்னோக்கிச் செல்வதா? பல நாட்டுத் தலைவர்களையும் ஐ.நா. பொதுச்சபையின் தலைவரையும் (இந்தியா மற்ற நாடுகளோடு செய்யப் போகும் வாணிபம் பற்றிய இந்த மாநாட்டில் இவருக்கு என்ன வேலை என்று தெரியவில்லை) குஜராத்தில் கூட்டி இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தப் போகிறேன் என்று சூளுரைத்த மோதியின் முயற்சிகளை இந்தச் சாமியார்களின் உபதேசம் முறியடித்துவிடும் என்பது தெரியவில்லையா? ‘நான் பாட்டுக்கு பொருளாதார வளர்ச்சி, பெருக்கம் (Economic Growth, Development) என்று கூறிக்கொண்டு போகிறேன். இந்துத்வவாதத்தைப் பறைசாற்றுவது உங்கள் பொறுப்பு’ என்று கூறுவதுபோல் இருக்கிறது மோதியின் மௌனம்.

    Picture Credits:
    http://chandigarhenvis.gov.in/beta/EnvisPdfFiles/nl070912.pdf
    http://www.english-online.at/geography/india/india-population-problems.htm

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 41

    –சு. கோதண்டராமன்.

     

    தேவ ரிஷி பித்ருக்களும் ருதமும்

     

    yoga

    பித்ருக்களும் ருதமும்:
    பித்ருக்கள் ருதத்தை நன்கு அறிந்துள்ளார்கள், அதன்படி நடப்பவர்கள், அதை வளர்ப்பவர்கள் அதனால் அவர்களும் ருதக்ஞ, ருதாவான், ருதாவ்ருத என்ற அடைமொழி பெறுகின்றனர்.

    அவர்கள் தங்கள் வம்சத்தவருக்கு ருதம் பற்றிய அறிவைப் போதித்து வந்தனர். நான் என் தந்தையிடமிருந்து ருதம் பற்றிய ஆழ்ந்த அறிவை அடைந்தேன் (8.6.10) என்கிறார் ரிஷி.

    ரிஷிகளும் ருதமும்:
    ரிஷிகளும் புரோகிதர்களும் ருதத்தைப் பின்பற்றி நன்மை அடைந்துள்ளனர். ரிஷிகள் ருதத்தின் இடத்தைக் காப்பாற்றி உயர்ந்த பெயர்களை அதனுள் மறைத்து வைக்கின்றனர். (10.5.2)

    புரோகிதர்கள் ருதத்தைப் பற்றிச் சிந்தித்து வலன் என்ற அரக்கனைக் கொன்றார்கள். குத்ஸரைப் பற்றிச் சிந்தித்து அஹி என்னும் விருத்திரனைக் கொன்றார்கள். (10.138.1)

    தேவர்களும் ருதமும்:
    எல்லாத் தேவர்களும் ருதத்திலிருந்து தோன்றியவர்களாகக் கூறப்படுகிறார்கள். அவர்கள் ருதத்தை அறிந்தவர்களாகவும் ருதத்தைப் பின்பற்றுபவர்களாகவும் உள்ளனர். அவர்கள் ருதத்தின் நண்பர்கள், ருதத்தைக் காப்பாற்றுகின்றனர், ஒரு தேரோட்டி போல வழி நடத்திச் செல்கின்றனர், ருதத்தைப் புகழ்கிறார்கள், வணங்குகிறார்கள், மக்கள் ருத வழி நடக்கத் தூண்டுகிறார்கள், அவர்களது பாதையைச் செம்மைப்படுத்தித் தருகிறார்கள். அவர்கள் ருதத்தின் ஆறுகளாகக் கூறப்படுகின்றனர். இந்திரன் வேத தெய்வங்களுக்குள் மிகுந்த வலிமை உடையவராக, பல அருஞ் செயல்களைச் செய்தவராகப் போற்றப் பட்டாலும் அவர் அச்செயல்களை ருதத்தின் உதவியால்தான் செய்ய முடிந்தது என்கிறது வேதம்.

    ருதத்தின் எண்ணங்களைக் கொண்டும் ருதக் குதிரைகளைக் கொண்டும் இந்திரன் பிளக்க முடியாத மலைகளைப் பிளந்தார். (6.39.2)

    ருதத்தின் ஆணைகள் இந்திரனை வலுப்படுத்துகின்றன.(6.68.2)

    எல்லாத் தேவர்களும் ருதத்தைப் பாதுகாத்தாலும் வருணன், மித்ரன், அர்யமான் ஆகிய மூவருக்கும் இதில் சிறப்பான இடம் கூறப்பட்டிருக்கிறது. அதிலும் வருணன் மிகச் சிறப்பான இடம் பெறுகிறார். இம்மூவரும் ருதத்தின் சிறப்பான காவலர்கள். இவர்கள் ருதத்தை நிலைநாட்டி அதைக் கவனமாகக் கண்காணிக்கிறார்கள்.

    ருதத்தை மீறியவர்-களைத் தண்டிக்கிறார்கள். மித்ரா வருணா, அன்ருதத்தை வென்று எங்களை ருதத்தோடு இணைத்து வைப்பீராக. (1,152.1)

    மித்ர வருண அர்யமான்கள் ருதத்தை நிலை நாட்டிக் கண்காணிப்பவர்கள் என்றாலும் அவர்களும் ருதத்திற்கு மேம்பட்டவர்கள் அல்லர். அவர்கள் ருதத்தில் தோன்றியவர்கள். அவர்களது வலிமைக்கு ருதமே காரணம் என்பதும் சொல்லப் பட்டிருக்கிறது.

    மித்ர, வருண, அர்யமான்கள் அன்ருதத்தைக் கண்டுபிடித்து ருதத்தின் இருப்பிடத்தில் வலிமையாக வளர்கிறார்கள். (7.60.5)

    வருணன் சூரியனுக்கு ஒரு பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். அவர் கடலை நோக்கிச் செல்லும் ஆறுகளின் அலைகளை உண்டாக்கினார். ருதத்தை அனுசரித்து அவர் இரவையும் பகலையும் பிரித்து வைத்தார். (7.87.1)

    வருணன் விண்ணில் பறக்கும் பறவைகளின் பாதைகளை அறிந்துள்ளார்(1.25.7) என்று கூறப்படுவதிலிருந்து இயற்கையின் ஒவ்வொரு அசைவும் ருதப்படியே, வருணனின் ஆணைப்படியே நடக்கிறது என்பதை அறிகிறோம். அதனால்தான் இன்றும் எல்லா வைதிகச் சடங்குகளிலும் வருணனைத் தியானிக்கிறோம்.

    த்ருவம் தே ராஜா வருணோ த்ருவம் தேவோ ப்ருஹஸ்பதி: த்ருவம் ச இந்த்ரச்ச அக்னிச்ச ராஜ்யம் தாரயதாம் த்ருவம் என்ற மந்திரம் வருணன் முற்காலத்தில் பெற்றிருந்த தேவர்களின் ராஜா என்ற பெருமையின் நினைவுச் சின்னமாக இன்றும் ஒவ்வொரு வைதிகச் சடங்கிலும் முதலில் ஓதப்படுகிறது.

    ருதமும் முழுமுதல் கடவுளும்:
    ருதத்தை அமல் நடத்துகின்ற வருணனைப் படைத்ததே ருதம்தான் என்று கூறப்பட்டிருப்பதால் அது முழு முதல் கடவுளுக்கு நிகரானதாக மதிக்கப்பட்டது என்று அறிகிறோம். படைப்பின் துவக்கத்தில் கடவுளையும் ஸ்வதாவையும் தவிர வேறு ஒன்றும் இல்லை. (10,129.5)

     

     

     

    Picture Credits:
    http://www.herbalsafari.com/2011/09/ayurveda-yoga-perspective.html

    Share
  • A SONG FOR YOU!

    – K. Ravi

    I weave a song for you
    From my dreams joy and anguish
    You take a form and wear it on – or
    Light the lamp and read the song
    As you wish
    From my dreams joy and anguish
    I weave a song for you

    Like a river it flows from me
    Take a step and drench in it
    Or hold a cup and quench y’r thirst
    As you please
    Like a mountain it rises high
    Climb up and reach the summit
    Or descend like a mist
    As you deem fit

    Like a bird it spreads its wings
    Like the wind it gently swings
    Like the moon it shines bright
    Even at midnight
    From my dreams joy and anguish
    I weave a song for you

    I felt a sudden shivering chill
    I melt and flow with the song
    You smile at me
    Writing the song all along
    You are the singer you write myself
    Just holding my finger
    You weave myself in you
    With rain lightening and thunder
    You weave myself in you
    With rain lightening and thunder
    I just wonder
    I weave a song for you

    https://soundcloud.com/advocatekravi/i-weave-a-song-for-you

     

    Share
  • நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு…

    கவிஞர் காவிரிமைந்தன்.

     

    நல்லவர்க்கெல்லாம்

    நல்லவர்க்கெல்லாம்…

    இலக்கியம், கவிதை, கலை, ஓவியம் எனப் பன்முகம் காட்டிப் பரிணமித்தாலும் இதயம் ஒன்றி ரசிக்கும்தன்மையில்தான் அடிப்படையில் மேம்பட்டது எனத்தோன்றுகிறது. கடமைக்கு நன்றி சொல்வதைவிட உளமாற நன்றிசொல்வது உகந்தது அல்லவா? உள்ளத்தின் வெளிப்பாடு வார்த்தையில் வரும்போது சொற்கள் ஆகின்றன! அதுவே உணர்ச்சியின் வெளிப்பாடாய் கவிஞனிடம் பிறக்கும்போது கவிதைகளாய் மலர்கின்றன!

    திரைப்பாடல்கள்கூட கவிதைகளாக மலரவைத்தவன் கண்ணதாசன் என்பதுதான் எத்தனை சத்தியம்!! இருபதாம் நூற்றாண்டில் – இவ்வுலகம் எத்தனையோ விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளால் தொழில்நுட்பத்துறை முன்னேற்றங்களால் வளர்ச்சியுற்று நவீன யுகத்தை நோக்கி வேகமான நகர்வு ஏற்பட்டிருந்தாலும் கூட..

    இதே காலக்கட்டத்தில்.. இதோ கேட்கும் இதுபோன்ற இனிமையான பாடல்களும் படைக்கப்பட்டிருந்தது இதயத்திற்கான விருந்தல்லவா? காயப்பட்டிருக்கும் ஆயிரமாயிரம் மனங்களுக்கு மருந்தல்லவோ?

    காலப்போக்கில் மனித வாழ்க்கை சுழற்சிமுறையில் வாட்டியெடுத்தபோதெல்லாம் வதங்கிப் போவது மனது மட்டுமே.. துவண்டுகிடக்கும் அந்த மனதைத் தொட்டு எழுப்பியபோது வார்த்தை வரவில்லையே!! விதியை எண்ணி விடையிறுப்போர் எண்ணிக்கைக் கூடுகிறதே! கண்ணதாசன் மட்டுமென்ன விதிவிலக்கா? கம்பனிடம் அவன் வாங்கிய கடனுக்கு வட்டிக் கட்டும் விதமாக.. இதோ இப்பாடலில்.. ஒரு சில வரிகள் பளிச்சிடுகின்றன!

    ஊழ்வினை உறுத்தல் என்கிற பதிகம் மனனம் ஆனதனால் இங்கே வரிகள் இப்படி ஜனனம் எனலாமா?

    நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
    விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா

    ‘தியாகம்’ திரைப்படத்திற்காக கண்ணதாசன் – இளையராஜா – டி.எம்.எஸ். – லட்சுமி.. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கூட்டணியில்..

    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
    ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
    நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
    அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா

    ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
    அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
    மனிதனம்மா மயங்குகிறேன்
    தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே
    தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே

    கண்ணதாசனே.. படைப்பதனால் என் பெயர் இறைவன் என்று மார்தட்டிச் சொன்னவனே! மனித வாழ்க்கைக் கூறுகளில் எல்லாம் நிறைந்து தெய்வமாகவே எனக்குக் காட்சி தருபவனே! மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்!

    http://youtu.be/zHJdgYyvGWA

    காணொளி: http://www.youtube.com/watch?v=zHJdgYyvGWA

    படம்:தியாகம்
    பாடல்: கண்ணதாசன்
    இசை : இளையராஜா
    குரல்: டி. எம். சௌந்தர்ராஜன்

    1234

    நல்லவர்க்கெல்லாம்…
    நல்லவர்க்கெல்லாம்…
    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
    ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
    நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
    அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
    அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
    ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா

    நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
    விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
    நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
    விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
    பறவைகளே பதில் சொல்லுங்கள்
    மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்
    மனதிற்கு மனது கொஞ்சம் தூது செல்லுங்கள்

    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
    ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா

    ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
    அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
    ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
    அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
    மனிதனம்மா மயங்குகிறேன்
    தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே
    தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே

    நல்லவர்க்கெல்லாம்…
    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
    ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
    நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
    அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
    அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

    Share
  • வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால் வேல்போல் இருக்குதடி…. கவிஞர் பூவை செங்குட்டுவன்

    காவிரி மைந்தன்

    அன்பர்களே! ஆன்மீக நண்பர்களே!

    அருந்தமிழ் விருந்துவைத்தால் அது ஆண்டவனுக்கே அமுதம் அளித்ததாய் கருதப்படும். அதுவும் முத்தமிழில் விருந்தல்லவா –  அழகன் முருகனுக்கே படைக்கின்றார் பாடலாசிரியர்!

    poovai senguttuvanஇந்தப் பாடலின் பல்லவி கற்பனையின் ஒரு சிகரம் என்றே களிப்போடு சொல்வேன்! எத்தனையோ கண்கள்  இதற்கு முன் முருகனது வேலின் வடிவத்தைக் கண்டிருக்கின்றன. எத்தனையோ கவிஞர்கள் பார்வையில் வேல் பட்டிருக்கிறது! எனினும் பட்டென்று தோன்றிய கற்பனை பூவை செங்குட்டுவனுக்குத்தானே!

    திரு.ராமச்சந்திரன் இசையின் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய இப்பாடல் பக்திரசம் வழியும் பாடல்!  கந்தன் பெருமை சொல்லும் கனிந்த மனமிங்கே எண்ணத்தில் தோன்றியதை எழுத்திலே  வடித்து ஒரு செந்தமிழ்க்கோலம் காட்டுவதைப் பாருங்கள்!

    முத்தமிழ் பிறந்தது எப்போது என்று இவரை எவரோ கேட்டிருப்பார் போலும்.. பாடலிலே பதிலுரைக்கிறார்  பாருங்கள்!

    சக்தியவள் தந்த வேலாயுதம் முத்தமிழ் முருகனுக்கு – அழகுக்கு அழகு சேர்க்கிறது! அதன் வடிவம் எண்ணித் தொடங்கிய இப்பாடல் சந்தம் சீர் மாறாமல் தமிழ் சதிராடி வருவதைப்போல் அதுவும் ‘கற்பூரம்’ திரைப்படத்திற்காக இப்பாடலை தீப ஆராதனை எனலாம்!

    வணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்
    வேல்போல் இருக்குதடி
    வேல்கொண்டு நின்றவன் திருமுகம் பர்த்தால்
    பால்போல் தெரியுதடி

    vel

    கூவிடும் சேவல் கொடிமே லிருந்து
    விழித்திடச் சொல்லுதடி
    விழித்ததும் என்னை நினைத்திரு என்றவன்
    சொல்வது தெரியுதடி

    கந்தனின் கருணை மழைவரும் என்றே
    மாமயில் ஆடுதடி!
    மாமயில் விரித்த தோகையின் கண்கள்
    வேலனைத் தேடுதடி!

    முதன்முதல் இறைவன் திருவாய் திறந்தான்
    முத்தமிழ் பிறந்ததடி!
    முத்தமிழ் இன்பம் அனைத்திலும் முருகன்
    திருமுகம் தோன்றுதடி

    எப்போது பார்த்தாலும் சிரித்திருக்கும் – அது
    ஆறு முகங்களடி!
    எப்படித் தொழுதாலும் அருள் கொடுக்கும் – அது
    பன்னிரு கைகளடி
    பாடல் ஆக்கம்: கவிஞர் திரு. பூவை செங்குட்டுவன்
    இசை: திரு. ராமச்சந்திரன்
    பாடியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்

    Share
  • பரிபாடலில் சிவன்

    –மு​னைவர் சி.​சேதுராமன்.

     

    சிவா

    மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,
    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை

    எட்டுத்​தொ​கை நூல்களுள் ‘ஓங்கு’ என்ற அ​டை​மொழியால் குறிப்பிடப்​பெறும் நூல் பரிபாடல் ஆகும். இவ்வ​டை​மொழி​யே இந்நூலின் சிறப்​பை விளக்குவதாக அமைந்துள்ளது. ​​
    தொல்காப்பியம்,
    “நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
    பாடல் சான்ற புல​னெறி வழக்கம்
    கலி​யே பரிபாட்டு ஆயிரு பாவினும்
    உரியதாகும் என்மானார் புலவர்” (அகத் – சூ. 56)
    என்று பரிபாடலுக்கு இலக்கணம் கூறுகின்றது. அகப்​பொரு​ளை கலிப்பாவினாலும் பரிபாடலாலும் பாடுதல் ​வேண்டும் என்ற ​தொல்காப்பியம் கூறும் இலக்கணத்திற்கு இலக்கியங்களாகக் கலித்​தொ​கையும் பரிபாடலும் அ​மைந்திலங்குகின்றன. இப்பரிபாடல் அகப்புற இலக்கியமாக அ​மைந்துள்ளது.

    தொல்காப்பியர் சிவ​னைப் பற்றி யாதும் ​தொல்காப்பியத்தில் குறிப்பிடவில்​லை. ​மேலும் சங்க நூல்களில் சிவன் எனும் ​பெயர் இடம்​பெறவில்​லை என்பதும் ​நோக்கத்தக்கது. சிவனு​டைய இயல்வுகள் பலவும் சங்க நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எட்டுத்​தொ​கை நூல்களில் இடம்​பெற்றுள்ள கடவுள் வாழ்த்துப் பாடலில் பாரதம் பாடிய ​பெருந்​தேவனாரால் சிவனு​டைய உருவத் திரு​மேனியின் சிறப்பு எடுத்து​ரைக்கப் ​பெற்றுள்ளது. பரிபாடலில் திருமால், ​செவ்​வேள், ​கொற்ற​வை பற்றிய பல ​செய்திகள் இடம்​பெற்றிருந்தாலும் சிவன் குறித்த ​செய்திகளும் இடம்​பெற்றுள்ள​மை ​நோக்கத்தக்கது.

    பரிபாடல் இலக்கணம்:
    தொல்காப்பியர் ​செய்யுளியலில் பரிபாடலுக்கு உரிய இலக்கணத்​தை விளக்கும்​போது, “அது நான்கு வ​கைப்பட்ட ​வெண்பா இலக்கணத்​தையு​டையது. ஆசிரியப்பா, வஞ்சிப்பா, ​வெண்பா, கலிப்பா, மருட்பா என்று கூறப்படும் எல்லாப் பாவினு​டைய உறுப்புக்க​ளைப் ​பெற்று வரும். ​கொச்சகம், அராகம், சுரிதகம் எத்து ​சொற்சீரடி அதில் அ​மைந்திலங்கும். அது காமப் ​பொருள் பற்றிப் பாடப்படும்” என்று குறிப்பிடுகிறார்.

    இந்நூலில் முருகன், திருமால் காளி பற்றியும் ​வை​யை பற்றியும் இ​றையுணர்வு மிக்க பாடல்கள் இடம்​பெறக் காண்கி​றோம். இதனால் தான் ​தொல்காப்பியர் காலத்திற்குப் பின் இ​றைபக்தி பற்றிப் பாடும் வழக்கம் உண்டாயிற்று என்பது குறிப்பிடத்தக்கது. ​வை​யை குறித்து வரும் பாடல்களில் மட்டும் காமம் கண்ணிய பாடல்கள் விளங்குகின்றன.

    சங்கத்தார் தொகுத்த பரிபாடல்கள் 70 என்பது இறையனாரகப் பொருள் உரையாலும் (சூ.1), தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் பேராசிரியர் உரையாலும் (செய்யு. சூ. 149) தெரிய வருகிறது. இப் பாடல்களில் யார் யாரைக் குறித்து எத்தனை பாடல்கள் இருந்தன என்பதை,
    “திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
    தொருபாட்டுக் காடுகாட் கொன்று – மருவினிய
    வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
    செய்யபரி பாடற் றிறம்”
    என்ற ​வெண்பா குறிப்பிடுகிறது.

    பரிபாடலில் திருமாலுக்கு 8 பாடல்கள், செவ்வேளுக்கு 31 பாடல்கள், காடுகாள் (காட்டில் இருக்கும் காளிக்கு அதாவது கொற்றவைக்கு) 1 பாடல், வையைக்கு 26 பாடல்கள், மது​ரைக்கு 4 பாடல்கள் என மொத்தம் 70 பாடல்கள் உள்ளன என்று ​வெண்பா ​தெளிவுறுத்துகிறது. ஆனால் இன்று இவை முழுமையாகக் கிடைக்கவில்லை.

    இவற்றுள் இப்பொழுது நமக்குப் பிரதிகளில் கிடைப்பன முதலிலிருந்து 22 பாடல்களே. எஞ்சியவை இறந்துபட்டன. எனினும், பழைய உரைகளிலிருந்தும், புறத்திரட்டுத் தொகை நூலிலிருந்தும் 2 முழுப் பாடல்களும், சில பாடல்களின் உறுப்புகளும் தெரிய வருகின்றன. இவை ‘பரிபாடல்-திரட்டு’ என்னும் தலைப்பில் நூலிறுதியில் சேர்க்கப் பெற்றுள்ளன. 22 பாடல்களில் 6 திருமாலுக்கும், 8 முருகனுக்கும், 8 வையைக்கும் உரியனவாயுள்ளன. பரிபாடல் திரட்டில் உள்ள 2 முழுப் பாடல்களுள் ஒன்று திருமாலைப் பற்றியும், மற்றொன்று வையையைப் பற்றியும் அமைந்தவை. பாடற் பகுதிகளுள் சில மதுரையையும் வையையையும் குறித்தன. ஒரு சில உறுப்புகள் இன்னவற்றைச் சார்ந்தவை என்று தெரியக் கூடவில்லை.

    இந் நூலைத் தொகுத்தார், தொகுப்பித்தார், பெயர் ஒன்றும் அறியக்கூடவில்லை. தொகுத்த பாடல்களின் அடிவரையறை பற்றிய குறிப்பும் கிடைக்கவில்லை. பரிபாடலின் சிற்றெல்லை 25 அடி என்றும், பேரெல்லை 400 அடி என்றும், தொல்காப்பியர் வரையறுத்துள்ளனர். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் துறை, இயற்றிய ஆசிரியர் பெயர், இசை வகுத்தோர் பெயர், பண்ணின் பெயர்,பற்றிய பழங் குறிப்புகள் உள்ளன. ஆயினும், பிரதிகளின் சிதைவினால் முதற் பாடலுக்கும் 22–ஆம் பாடலுக்கும் இக்குறிப்புகள் கிடைக்கவில்லை. 13ஆம் பாடலுக்கு இசை வகுத்தோர் பெயர் காணப்படவில்லை. முதற் பாடலில் அராகமாக வருகின்ற 14 ஆம் வரி முதல் 28 ஆம் வரி வரையிலுள்ள பகுதி தெளிவின்றி உள்ளது. இப் பகுதியில் பொருள் வரையறை செய்வதற்குப் பிரதிகளின் உதவியும் பழைய உரையின் உதவியும் கிடைக்கவில்லை. இவ்வாறே ஏனைய பாடல்கள் சிலவற்றிலும் ஒருசில இடங்கள் உள்ளன.

    “பரிந்த பாட்டு பரிபாட்​டென வரும். அதாவது ஒரு ​வெண்பாவாகி வருதலின்றிப் பல உறுப்புகளுடன் ​தொடர்ந்து ஒரு பாட்டாகி முடிவது. பரிபாடல் என்பது பரிந்து வருவது. பல வடிவம் ​பெற்று வருவது.நான்கு பாவாலும் வந்து பல அடியும் வருமாறு நிற்கும்.

    பரிபாடலின் சிறப்பு:
    பரிபாடல் இ​சை​பொருந்திய பாடல்கள் ஆகும். இப்பரிபாடல் இ​சைப் பாடலாக இருந்த​மையால் இதற்கு இ​சை அ​மைத்தனர். பிற்காலத்தில் ​தேவார திவ்விய பிரபந்த நூல்கள் ​தோன்றக் காரணமாக அ​மைந்த​வை இப்பரிபாடல்க​ளே ஆகும். இ​சைய​மைப்​பை ஒட்டி இப்பாடல்கள் அ​மைந்துள்ள​மை குறிப்பிடத்தக்கதாகும். இந்நூலில் உள்ள 12 பாடல்கள் பா​லைப் பண்ணிலும், அடுத்துவரும் 5 பாடல்கள் ​நோதிறம் பண்ணிலும், இறுதியாக வரும் 4 பாடல்கள் காந்தாரப் பண்ணிலும் அ​மைந்துள்ளன. இறுதியில் உள்ள பாடலின் பண்​ணை அறிய இயலவில்​லை. சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந் நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் பரிமேலழகர் உரையுடன் 1918-ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர்.

    பரிபாடல் திரட்டு என்பது சில நூல்களில் இறுதியில் ​கொடுக்கப்​பெற்றுள்ளது. ம.து ​தொடர்ச்சியாக உள்ள நூலில் காணப்படாமல் பண்​டைய உ​ரையாசிரியர்களால் காட்டப்பட்ட ​​மேற்​கோள்களிலிருந்தும், புறத்திரட்​னென்று ​தெரிந்த பாடல்கள் ஆகும். இதில் 11 பாடல்கள் இடம்​பெற்றுள்ளன. இதில் ஒரு பாடல்(1) திருமால் பற்றியும், 6 பாடல்கள் (6,7,8,9,10,11) மது​ரை​யைப் பற்றியும், ​வை​யை குறித்து 3 பாடல்களும் (2,3,4) இடம்​பெற்றுள்ளன. இத்திரட்டில் இடம்​பெற்றுள்ள ஐந்தாவது பாடல் ​பொருள் விளங்காத பாடலாக அ​மைந்துள்ளது. 1-4 வ​ரையுள்ள பாடல்கள் ​தொல்காப்பியம் ​செய்யுளியல்​பேராசிரியர், நச்சினார்க்கினியர், இளம்பூரணர் உ​ரைப்பகுதிகளிலும், 5-ஆவது பாடல் நாற்கவிராச நம்பியின் அகப்​பொருள் 129-ஆம் நூற்பாவின் உ​ரையில் இடம்​பெற்றுள்ளது. 6-11வ​ரையுள்ள பாடல்கள் புறத்திரட்டில் இடம்​பெற்றுள்ளது ​நோக்கத்தக்கது.

    ​சைவமும் சிவனும்:
    சைவ சமயம் என்பது சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமாகும். சைவம் சிவனுடன் ​தொடர்பு​டையது எனத் திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிடுகிறார். சிவ வழிபாட்டி​னை சிவநெறி என்றும் சைவநெறி என்றும் கூறலாம். சைவ சமயத்தினைச் சுருக்கமாகச் சைவம் என்று அழைக்கின்றார்கள். பழந்தமிழர்களின் ஐந்நிலத் தெய்வமான சேயோன் (சிவந்தவன்) சிவனாக (சிவந்தவன்) மாறியதையும், ​சே​யோன் வழிபாடே சிவன் வழிபாடாக மாறியதையும், இம்மதத்தினை சிவ மதம் என்றும் தமிழர் சமயம் என்ற நூலில் பாவணார் குறிப்படுகிறார். இச்​சைவ சமய​மே உலகில் தோன்றிய முதல் சமயம் என்று கூறப்பெறுகிறது.

    தொன்மையான ​மொகஞ்சதா​ரோ அகழ்வாராய்ச்சியின் ​போது கண்டுபிடிக்கப் பெற்ற ஒரு முத்திரை, சிவ உருவத்தின் முன்னோடியாகக் கருதப்பெறுகிறது. மூன்று தலையினையுடைய தியானத்தில் இருப்பவரைச் சுற்றி மிருகங்கள் இருப்பதாக அமைந்த இந்த முத்திரை பசுபதி முத்திரை என்று அழைக்கப்பெறுகிறது. அகழ்வாராய்ச்சி அறிஞரான சர் ஜான் மார்சல் மற்றும் பலர் இந்த முத்திரை சிவனது தோற்றத்தினைக் குறிப்பதாகக் கூறியுள்ளனர்.

    சிவன் என்ற தமிழ்ச் சொல்லிற்கு சிவந்தவன் என்று பொருளாகும். தமிழர்கள் குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வமாக வழிபட்ட​ சே​யோன் என்பதன் பொருளும் சிவந்தவன் என்பதால் சேயோனே சிவன் என்று தமிழறிஞர்கள் கருதுகிறார்கள். முது முதல்வன், ஈர்ஞ்சடை அந்தணன், காரியுண்டிக் கடவுள், ஆலமார் கடவுள் எனப் பல்​வேறுவிதமான சிவப்பெயர்கள் சங்கநூல்களில் காணக்கிடக்கின்றன. சிவம் என்ற சொல்லுக்கு “செம்மை” (பூரணத்துவம்), “மங்களமானது” என்று பொருளாகும். முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவரும் ஆன இனிய இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றனர்.

    உலகத்தின் கடவுள் (எந்நாட்டவருக்கும் இறைவன்) எனவும், பரப்பிரம்மம், ஆதி அந்தம் இல்லாதவன் என்றும் இறைவன் என்று வழங்கப்பெறுகிறார். தேவநாகிரி சொல்லான சிவ (शिव) என்பதற்கு களங்கமற்ற மற்றும் அழிப்பவர் என்று பொருளாகும். சிவபெருமானை அகங்காரத்தினை அழிப்பவர் என்று புராணங்கள் பிரம்மன் தலை கொய்தது முதல் தட்சன் அழிவு வரை மேற்கோள்களோடு கூறுகிறன. வேதங்களில் ருத்ரன் என்ற சிவ அம்சம் அழிக்கும் தொழில் செய்யும் மும்மூர்த்திகளுள் ஒருவராகக் குறிப்பிடப்படுவது ​நோக்கத்தக்கது.

    சிவ​பெருமான் எக்கணமும் யோகநிலையில் ஆழ்ந்திருப்பதால் யோகி என்றும், அட்டமா சித்திகளில் வல்லவர் என்பதால் சித்தன் என்றும், சிவபக்தர்களின் பக்தியில் மூழ்கி, அவர்கள் கேட்கும் வரங்களின் விளைவுகளை ஆராயாமல் வரம் தருவதால் பித்தன் எனவும் குணங்களின் அடிப்படையில் அழைக்கப்படுகிறார். மேலும் ச​டை முடி​யையுடையதால் சடையாண்டி, சூலாயுதத்தினை வைத்திருப்பதால் திரிசூலன், மூன்றுகண்களை உடையதால் முக்கண்ணன் எனத் தோற்றத்தினை வைத்தும் பல பெயர்களின் அழைக்கப்படுகிறார்.

    அத்துடன் கையிலாய மலையில் வசிப்பதால் கயிலைவாசன் எனவும், சுடுகாட்டில் வசிப்பதால் சுடலையாண்டி எனவும் வசிப்பிடம் கொண்டும் பல பெயர்களின் சிவ​பெருமான் அறியப் பெறுகிறார். அடைக்கலம் காத்தான் எனத் தொடங்கி யாழ்மூரிநாதன் வரை ஆயிரம் தமிழ்ப்பெயர்களும் சிவபெருமானுக்கு கூறப்படுகின்றன.

    சிவபெருமான் சிவன் என்ற சொல்லால் குறிக்கப் பெறாது பிற சொற்களாலே குறிக்கப் பெறுகிறான். அதாவது சங்க இலக்கியத்தில் சிவன் என்ற சொல்லே இல்லை என்று சொல்லலாம். அதற்குப் பதிலாக ஆதிரையான், ஆலமர் செல்வன், ஆனேற்றுக் கொடியுடையான், ஈசன், ஈர்ஞ்சடை அந்தணன், காலக் கடவுள், தாழ்சடைப் பெரியோன், நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன், மணிமிடற்றன், முக்கட் செல்வன் என்ற பெயர்களால் அழைக்கப் பெறுகிறான்.

    முப்புரங்க​ளை எரித்தல்:
    வானிடத்தில் பறந்து திரியும் இயல்புடைய பொன், வெள்ளி, இரும்பு மதில்களைக் கொண்ட நகரங்கள் மூன்றில் வாழ்ந்த அரக்கர்களைச் சிவபெருமான் தன் சிரிப்பினால் எரித்தான் என்பது புராண வரலாறு ஆகும்.
    இச்செய்தி,
    “மூவகை ஆரெயில் ஓர்அழல் அம்பின் முளிய
    மாதிரம் அழல எய்து, அமரர் வேள்விப்
    பாகம் உண்ட பைங்கண் பார்ப்பான்” (பரி.5, 25-27)
    எனப் பரிபாடலில் இடம் பெற்றுள்ளது.

    தாரகாசுரனு​டைய மகன்களான வித்யுன் மாலி, தராகாட்சன், கமலாட்சன் ஆகிய மூவரும் தந்​தையின் மரணத்திற்குப் பிறகு ​தேவர்க​ளைப் பழி வாங்க ​வேண்டு​மென்று பிரம்ம​தே​வனைக் குறித்துத் தவம் ​மேற்​கொண்டு, ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமு​றை முப்புரங்களும் ஒன்று ​சேரும்​போது ஒ​ரே பாணத்தால் அவற்​றை அழிக்கக் கூடிய ஆற்றல் வாய்ந்தவ​னே தங்​க​ளை அழிக்க வல்லவன் என அவர்கள் பிரம்மனிடம் இருந்து வரம் ​பெற்றனர். இவ்வரத்தின் வலி​மையினால் அவர்கள் அனைவருக்கும் தீங்கி​ழைத்து வந்தனர். அவ்வசுரர்கள் மூவரும் நி​னைத்த மாத்திரத்தில் பறந்து ​சென்று திரிபுரங்க​ளை அ​டைந்து ​தேவர்களுக்கும் உலகத்தவருக்கும் ​கொடு​மைகள் இ​ழைத்து வந்தனர். ​தேவர்கள் அவர்க​ளை அழிப்பதற்காகச் சிவ​பெருமா​னிடம் வந்து ​வேண்டினர். அவரும் அதற்கு இ​சை​ய​வே, அசுரர்க​ளை வதம் ​செய்வதற்காக சிவன் ஏறிச் ​செல்லும் இரதமாகத் ​தேவர்கள் தங்க​ளை​யே அர்ப்பணித்துக் ​கொண்டனர்.

    சூரியனும் சந்திரனும் இரு சக்கரங்களானார்கள். அஸ்தகிரியும் உதயகிரியும் இருசுகளாயின. மந்தர ம​லை​யே இரதமாகியது. ஆகாயம் ​கொடுமுடி ஆனது. ​தேவர்கள் இரதத்தின் அலங்காரப் ​பொருள்களானார்கள். விந்தியம​லை கு​டையாகியது. பிரம்ம​தேவன் கடிவாளத்​தைக் ​கையி​லேந்திச் சாரதியானார். பிரணவம் குதி​ரைக​ளை ஓட்டிச் ​செல்லும் சாட்​டையாக மாறியது. ​வேதங்கள் நான்கும் குதி​ரைகளாயின. ​மேரும​லை வில்லாக வாசுகி அதன் நாண் கயிறாகியது. சரசுவதி வில்லின் நுனியி​லே கலகல என ஒலிக்கும் சிறு மணிகளாக விளங்கினாள். விஷ்ணு பாணமானார்.

    பட்டணத்​தை ​நெருங்கியதும் சிவன் வில்​லை வ​ளைத்து ஊங்காரம் ​செய்தார். திரிபுரங்கள் ஒன்றாயின. ​நெற்றிக்கண்​ணைச் சிவன் திறந்தார். தீ முப்புரங்க​ளையும் எரித்தது. வில்​லை வ​லைத்துப் பாணத்​தை எய்தார். முப்புரங்களும் அழிந்தன. இக்க​தை சிவபுராணத்தில் இடம்​பெற்றுள்ளது. இத​னை​யே பரிபாடலும் எடுத்து​ரைக்கின்றது. இம்முப்புரத்​தை மும்மலங்கள் என்று கூறுவர். ஆணவம், கன்மம், மா​யை ஆகிய இவ்வான்ம பந்தமானது சிவஞானம் என்ற தீயால் எரிக்கப்படுகிறது, ஆன்மாக்கள் சிவத்​தொடர்பு ​பெற்றுச் சிறக்கின்றன. திரிபுரம் எரித்த சிவனு​டைய அருட்​செயலுக்குத் திருமந்திரமானது,
    “அப்பணி ​செஞ்ச​டை ஆதி புராதனன்
    முப்புரம் ​செற்றனர் என்பர்கள் மூடர்கள்
    முப்புரமாவது மும்மல காரியம்
    அப்புரம் எய்த​மை யாரறிவா​ரே” (திருமந்திரம்., 343)
    என்று ​விளக்கமளிக்கிறது.

    சிவ​பெருமான் திரிபுரம் எரித்த ​செய்தியானது,
    “……… ……… …. தாஅம் பணிவுஇல் சீர்ச்
    ​செல்வி​டைப் பாகன் திரிபுரம் ​செற்றுழிக்
    கல்உயர் ​சென்னி இமயவில் நாண் ஆகித்
    ​தொல்புகழ் தந்தாரும் தாம்” (பரிபாடல் திரட்டு,1;74-77)
    எனப் பரிபாடல் திரட்டில் உள்ள முதற் பாடலில் இடம்​பெற்றுள்ளது.

    சிவ​பெருமா​னை மற்றவர்க​ளே பணிவர். சிவன் பிற​தேவர்க​ளைப் பணியமாட்டார். அ​னைத்துத் ​தேவர்களுக்கும் த​லைவராக விளங்குகின்றார். சிவன் வி​ரைந்து ​செல்லும் கா​ளை​யை ஊர்தியாக உ​டையவர் என்று சிவ​பெருமானின் இயல்பி​னையும் அ​னைத்துக் கடவுளர்களுக்கும் முதன்​மையானவராக முழுமுதற் கடவுளாக விளங்குவ​தையும் இப்பாடல் எடுத்து​ரைக்கின்றது.

    சிவன் கங்​கை​யைத் த​லையில் ​வைத்தது:
    ம​லையரசனின் (பர்வதராஜன்) மற்றும்​ மைனாவதி தம்பதியினரின் மகளான கங்​கை, சிவபெருமானிடம் என்றும் புனித தன்மை உடையவளாகத் திகழ வரம் பெற்றார். இதனால்​தேவ​லோகத்தி​னைப் புனிதம் செய்ய இந்திரன் அழைப்பால் தேவலோக நதியாக மாறினாள். பகிரதனின் முன்னோர்கள் சாபம் பெற்று சாம்பலாக இருந்தார்கள். அவர்களுக்கு முக்தி கிடைக்க கங்கை நதி பூமிக்கு வந்தால் மட்டுமே இயலும் என்பதை அறிந்த பகிரதன் கங்கையை நோக்கித் தவமிருந்தார். தேவலோகத்திலிருந்து பூமிக்கு வரும் பொழுது எழும் பிரவாகத்தினை கட்டுப்படுத்த சிவபெருமானால் மட்டுமே இயலும் என்று கங்கை கூறியதால், பகிரதன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து கங்கையைப் பூமிக்கு வரும்பொழுது பிரவாகத்தினை தடுத்து காத்தருள வேண்டினார். பகிரதன் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் கங்​கை​யைச் சடாமுடியில் தாங்கிப் பூமி தாங்கும் அளவில் மட்டும் வெளிவிட்டார். இதனால் சிவபெருமான் கங்காதரன் என்றும் சலதாரி என்றும் பெயர்பெற்றார். சிவபெருமான் கங்கையைச் சடையில் வைத்திருப்பதை,
    “இரு நிலம் துளங்காமை வடவயின் நிவந்து ஓங்கி
    அரு நிலை உயர் தெய்வத்து அணங்குசால் தலை காக்கும்
    உருமுச் சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட
    எரிமலர்த் தாமரை இறை வீழ்த்த பெருவாரி
    விரிசடை பொறை ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்ப
    தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி” (பரி 9;1-7)
    என்று பரிபாடல் குறிப்பிடுகிறது.

    நீலமணிமிடற்​றோன்:
    தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெறுவதற்காகப் பாற்கடலைக் கடைந்தனர். அப்போது ஆலகால விஷம் தோன்றியது. இதனால் சகல உயிர்களும் இறந்துவிடும் என்று ​தேவர்கள் பயந்தனர். அதனால் இவ்வுல​கைக் காப்பாற்றுவதற்காக அ​னைவரும் ​சேர்ந்து சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டனர்.

    அவர்களின் ​வேண்டு​கோ​ளை ஏற்ற சிவ​பெருமான் ஆலகால விஷத்தை உண்டு இவ்வுலகைக் காப்பாற்றினார். சிவன் ஆலகால விடத்​தை உண்ட​போது அருகிலிருந்த உமா​தேவியார் எல்லா உயிர்கட்கும் உறைபவனாம் சிவனின் உடலில் நஞ்சு சேர்ந்தால் சகல உயிர்க்கும் பாதிப்பினை உருவாக்குமென அஞ்சி, ஒடி வந்து சிவனாரின் கண்டத்தை இருகப் பற்றிட, கண்டத்திலேயே உறைந்து போனது ஆலகாலம். ஆலகாலத்தின் சூட்டினாலும் விடத்தின் கருநிறத்தினாலும் கண்டம் நிறமாறிட சிவன் திருநீலகண்டரென்ற திருப்பெயர்ப் பெற்றார். இத​னை,

    “மறு மிடற்று அண்ணற்கு மாசி​லோள் தந்த
    ​நெறி நீர் அருவி அசும்பு உறு ​செல்வம்” (பரி 8: 127)

    “மணிமிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்​தோய் நீ” (பரி., 9:7)

    திருவாதி​ரை விழா:
    சிவபெருமானுக்குத் திருவாதிரை நாள் சிறப்புடையதாகக் கருதப்பட்டது. அதிலும் மார்கழித் திருவாதிரை நாள் சிறப்புடைய திருநாளாகக் கருதப்பட்டது. மழைக்காலத்தின் கடைசிப் பகுதியாகிய மார்கழி மாதத்தில் சந்திரன் முழுதாக நிறைந்துள்ள திருவாதிரை நாளில் சிவபெருமானுக்குத் திருவிழாவை முப்புரி பூணூ​லை உ​டைய பார்ப்பனர் அந்த விழாவில் இ​றைவனுக்குப் பலிப் ​பொருள் (பூ​சைப் ​பொருள்கள்) இட்ட ​பொன் கலங்க​ளையும் பிறவற்​றையும் ஏந்தித் ​தொடங்கினர். இதனை,
    “க​னைக்கும் அதிரிகுரல் கார் வானம் நீங்க
    பனிப்படு ​பைதல் வித​லைப் பருவத்து
    ஞாயிறு காயா நளிமாரிப் பின்குளத்து
    மாயிருந் திங்கள் மறுநி​றை ஆதி​ரை
    விரிநூல் அந்தணர் விழவு ​தொடங்கப்
    புரி நூல் அந்தணர் ​பொலம்கலம் ஏற்ப” (பரி., 11;74-80)
    எனப் பரிபாடல் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது.

    முருகனின் தந்​தை:
    ஆதி அந்தணனாகிய பிரமன் அறிந்து தேர்க்குதிரைகளை ஓட்ட, வேதமானவை குதிரைகளாகவும், வையகமே தேராகவும், வாசுகி நாகம் நாணாகவும், மேரு மலை வில்லாகவும், பொன்-வெள்ளி-இரும்பு ஆகிய மூவகைப் புரங்களை ஒரு தீக்கணையாலே வேகும்படியும், அத்திசையே தீயாக எய்தவனும்; அமரர் மூலமாக (அவர்களை அதிஷ்டித்து) வேத யாகங்களின் அவியுணவை ஏற்பவனும் ஆகிய இளமை பொருந்திய கண்களையுடைய பார்ப்பானாகிய சிவபெருமான், உமையம்மையைத் திருக்கரம் பற்றிய அழகு (காமர் – அழகு) பொருந்திய திருமணத்தில், விண்ணோர்களிலெல்லாம் வேள்வி முதல்வனாக இருக்கின்ற விரிகதிர் போன்ற மணிகளைப் பூண்ட இந்திரனுக்குத் நெற்றியில் இமையாத கண்ணுடைய தான் அளித்த வரமாகிய, “தனக்குக் காமப் புணர்ச்சி இல்லையாயினும் ஒரு விலக்கமாக (புத்திரனைப் பெற்று) அமைய வேண்டும்” என்பது தான் உண்மைப் பொருளாக விளங்குவதால் “செய்வதற்கில்லை” என்று கூறி ஒதுக்காது, அழிவில்லாத மழுவுடைய அவன், எரி போலக் கனன்று ஏழு உலகங்களும் அச்சமுறுமாறு உருவினைக் கொண்டான்.

    அந்த நெருப்புருவத்தின் கருவினைப் பெற்றுக்கொண்ட உடல் பழுத்துத் தவம் பெருக்கி மெலிந்த சப்தரிஷிகளும், அதன் பெருமை உணர்ந்து அதனைப் பிரித்தெடுத்துத் தாம் வசீகரணம் செய்துகொண்டு மாதவர்களாகிய அவர்கள் தம் மனைவியர் வயிற்றில் அமையச் செய்தால் அது தகாதென (அதாவது சிவபெருமான் திருவருட் பிரசாதத்தைத் தாம் உண்டு அதனை அற்பமான புணர்ச்சி மூலம் தம் மனைவியர் வயிற்றில் அமைத்தல் பெருமானுடைய திருவருளாகிய அக்கருவின் பெருமைக்குத் தாகாது என), அவர்களே பெற்றுக் கொள்ளட்டும் என்று வேள்வித்தீ வளர்த்து அந்த முத்தீயில் அவியுடன் இட்டனர். அவ்வாறு அவ்வேள்வித் தீயில் திகழ்ந்ததான பிரசாதத்தை வடதிசையில் திகழும் விண்மீன்களான ஏழு மகளிருள் அருந்ததி தவிர மற்ற அறுவரும் உண்டனர்.

    மாசு மறு ஏதும் இல்லாத கற்புடைய மாதவர் மனைவியராகிய அவர்கள் தவறாமல் உன்னைக் (முருகப்பெருமானை) கருக்கொண்டனர் என சிவனருளால் முருகப்​பெருமான் ​தோன்​றிய​தை,
    “ஆதி யந்தணன் அறிந்துபரி கொளுவ
    வேத மாபூண் வையத்தேர் ஊர்ந்து
    நாக நாணா மலைவில் லாக
    மூவகை, ஆரெயில் ஓரழல் அம்பின் முளிய
    மாதிரம் அழலவெய் தமரர் வேள்விப்
    பாக முண்ட பைங்கண் பார்ப்பான்
    உமையொடு புணர்ந்த காம வதுவையுள்
    அமையாப் புணர்ச்சி அமைய நெற்றி
    இமையா நாட்டத் தொருவரங் கொண்டு
    விலங்கென விண்ணோர் வேள்வி முதல்வன்
    விரிகதிர் மணிப்பூண் அவற்குத்தான் ஈத்த
    தரிதென மாற்றான் வாய்மைய னாதலின்
    எரிகனன் றானாக் குடாரிகொண் டவனுருவு
    திரித்திட் டோனிவ் வுலகேழு மருளக்
    கருப்பெற்றுக் கொண்டோர் கழிந்தசேய் யாக்கை
    நொசிப்பி னேழுறு முனிவர் நனியுணர்ந்து
    வசித்ததைக் கண்ட மாக மாதவர்
    மனைவியர் நிறைவயின் வசிதடி சமைப்பிற்
    சாலார் தானே தரிக்கென அவரவி
    யுடன்பெய் தோரே யழல்வேட் டவ்வழித்
    தடவுநிமிர் முத்தீப் பேணியமன் னெச்சில்
    வடவயின் விளங்கா லுறையெழு மகளிருள்
    கடவுள் ஒருமீன் சாலினி யொழிய
    அறுவர் மற்றையோரு மந்நிலை அயின்றனர்
    மறுவறு கற்பின் மாதவர் மனைவியர்
    நிறைவயின் வழாஅது நிற்சூ லினரே
    நிவந்தோங் கிமயத்து நீலப்பைஞ் சுனைப்
    பயந்தோ ரென்ப பதுமத்துப் பாயல்
    பெரும் பெயர் முருக!” (பரி 5; 21-50)
    என்ற பரிபாடல் எடுத்தியம்புகிறது.

    இப்பாடலில் சிவன் முப்புரங்க​ளை எரித்த நிகழ்வும் இடம்​பெற்றுள்ளது ​நோக்கத்தக்கது. ​மேலும் இப்பாடல் முருகப் பெருமானின் திருவவதாரத்தைக் குறிப்பது. சிவபெருமான் உண்மை பொருளாவதும், எல்லோரும் புணர்ச்சியின் மூலமே மகவு பெறும்பொழுது அரிதினும் அரிய பரமசிவம், மற்ற உயிகள் போலன்றி அரிய செயலாகப் புணர்ச்சி இன்றியே முருகப் பெருமானைப் பெற்றனர் என்பதும் இப்பரிபாடல் கூறும் சிவபெருமான் திறம் ஆகும்.

    சிவனின் தன்​மைகள்:
    சிவ​பெருமான் கா​ளை​யை வாகனமாக உ​டையவன்; ஆதி​ரை நாளுக்குரியவன். இத​னை,
    “புங்கவம் ஊர்வோனும்” (பரி., 8:2)
    “ஆதிரை முதல்வனின் கிளந்தநாதர் பன்னொருவரும் (பரி., 8: 6)
    என்று பரிபாடல் எடுத்து​ரைக்கின்றது.

    முடிவுகள்:
    பரிபாடலில் சிவன் குறித்த ​செய்திகள் 4 பாடல்களில் இடம்​பெற்றுள்ளன. பரிபாடல் திரட்டில் ஒருபாடலில் மட்டும் சிவ​னைப் பற்றிய ​செய்தி இடம்​பெற்றுள்ளது. சிவனின் அருட்​செயல்களான முப்புரம் எரித்தல் ஒரு பாடலிலும்(5), கங்​கை​யைத் தாங்கியது ஒரு பாடலிலும்(9), சிவனின் ​தோற்றம் குறித்த ​செய்தி இருபாடல்களிலும்(8,9), சிவனின் தன்​மைகள்(8) ஒரு பாடலிலும், சிவன் முருகப்​பெருமா​னைப் ​பெற்ற​மை(5) ஒரு பாடலிலும், சிவனுக்குரிய திருவாதி​ரை நாள் (11) ஒரு பாடலிலும் குறிப்பிடப்பட்டுள்ள​மை ​நோக்குதற்குரியது. பிற ​கடவுளர்க​ளைக் குறிப்பிட்டாலும் சிவ​​பெருமா​னே முழுமுதற் கடவுளாகப் பரிபாடலில் குறிப்பிடப்பட்டுள்ள​மை சிறப்பிற்குரியது. இப்பரிபாடலில் சிவன் என்று எந்தப்பாடலிலும் குறிப்பிடப் ​பெறா​மை குறிப்பிடத்தக்கது. செல்வி​டைப் பாகன், சலதாரி, மணிமிடற்றண்ணல், புங்கவம் ஊர்​வோன், ஆதி​ரை முதல்வன் என்​றே பரிபாடலில் சிவ​பெருமான் குறிக்கப்படுகிறார்.

    Picture Credits: https://www.facebook.com/LordShivaPictures

    Share
  • தயவான நீயே தாய் !

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    கடும்விரதம் பல இருந் தாய்
    கருவறையில் எனைச் சுமந் தாய்
    கருணைமழை தனைப் பொழிந் தாய்
    காதலுடன் எனை வளர்த் தாய்!                             momchild

    அரும்பொருளாய் எனை நினைத் தாய்
    அமுதெனப் பால் தனைக்கொடுத் தாய்
    பெரும்பிணிகள் தனைத் தடுத் தாய்
    பித்தாகி எனை வளர்த் தாய்!

    கரும்பெனவே எனை நினைத் தாய்
    விரும்பியெனை தினம் அணைத் தாய்
    துரும்புவிழா எனைக் காத் தாய்
    தூமணியாய் நீஇருந் தாய்!

    தொட்டிலிலே தூங்கிட வைத் தாய்
    துளிஅழுதால் நீதுடித் தாய்
    கட்டிலிலே போட மறுத் தாய்
    கைகளில் தாங்கியே இருந் தாய்!

    பொட்டிட்டு அழகு பார்த் தாய்
    பூவாக எனை நினைத் தாய்
    வட்டநிலா என நினைத் தாய்
    வாஞ்சையுடன் எனைப் பார்த் தாய்!

    முகம்பார்த்து முறுவல் தந் தாய்
    முத்தெனவே எனை நினைத் தாய்
    நகம்குத்தும் என நினைத் தாய்
    நயமுடனே அதைக் கடித் தாய்!

    கண்பட்டுவிடும் என நினைத் தாய்
    கன்னமதில் பொட்டும் வைத் தாய்
    புண்பட்டுவிடும் என நினைத் தாய்
    புழுதிபடா எனைக் காத் தாய்!

    பதமாக உணவு தந் தாய்
    பார்வைக்குள் எனை வைத் தாய்
    நிலைகுலையா எனைப் பார்த் தாய்
    நிம்மதி நான் என நினைத் தாய்!

    சொத்தாக எனை நினைத் தாய்
    சுவையாகப் பல கொடுத் தாய்
    முத்தாக எனை நினைத் தாய்
    முழுநிலவாய் எனை வளர்த் தாய்!

    அருள்தந்தாய் பொருள்தந்தாய்
    ஆசியும் கூடத் தந் தாய்
    பெருகிடவே அன்பு தந் தாய்
    பேரளும் எனக் கீந் தாய்!

    மாங்கனியாய் எனை நினைத் தாய்
    மாமருந்தாய் எனை நினைத் தாய்
    தாங்கிநின்று எனைப் பார்த் தாய்
    தயவானே நீயே தாய்!

    Share
  • ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’, – கவிஞர் வாலி

    காவிரி மைந்தன்

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்‘, 

     என்கிற பல்லவி கடமையைக் குறிக்கவே எழுதப்பட்டிருந்தாலும்.. எம்.ஜி.ஆர் என்கிற மூன்றெழுத்தையும் குறிக்கிறதே!!

    புகழுக்குப் புகழ் சேர்க்க இப்பூமியில்  அவதரித்த புருஷர்களுள் பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களும் ஒருவர் என்றே கருதுகிறேன்! அவரின் மனிதாபிமானம், கொடைத்தன்மை, விருந்தோம்பல், நற்குணங்களைப் பின்பற்றும் தன்மை, மக்கள்மீது கொண்டிருந்த பற்று, பாசம்..அவர்களிடம் காட்டிய பரிவு, வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்கிற பேராவல், இவைதான் ஒரு சரித்திர மனிதராய் எம்.ஜி.ஆரை உருமாற்றிற்று என்றால் அது மிகையில்லை!  மேலும் தாய்மீது எம்.ஜி.ஆர் கொண்டிருந்த பற்று என்பது தெய்வ பக்திக்கெல்லாம் இணையானது! அதுவே எம்.ஜி.ஆர் அவர்களுக்கு வழிகாட்டியாய் ஆன்மபலம்தந்து அடுத்தடுத்து வெற்றித் திருமகள் கட்டித்தழுவிடக் காரணமாய் அமைந்தது!

    MGR Vaali

    இவருக்காக பாடல் எழுதிய பெருமக்கள் வரிசை நீண்டிருக்க.. அதிலே யார் பாடல் எழுதினாலும் அந்த வரிகள் எம்.ஜி.ஆருக்கு பொருத்தமாய் அமைந்ததுடன்.. அவர் புகழை இன்னுமின்னும் உயர்த்திட வழிவகுத்தன! எம்.ஜி.ஆர் அவர்களுக்காக திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனம் சத்யா மூவிஸ் ஆகும்! இதிலே இடம்பெற்ற இப்பாடல்.. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்! பாடலின் பல்லவி தொட்டு பவனி வருகிற வரிகள் அனைத்திலும் கூறப்பட்டுள்ள சிந்தனைகள் மனித குலம் என்றைக்கும் மனதில் கொள்ள வேண்டியவை என்பதை எவர் மறுக்க முடியும்?

    கலைத்துறை என்பது மக்களை எளிதில் சென்றடைகிற ஊடகம் என்பதை முற்றிலும் உணர்ந்த எம்.ஜி.ஆர் அவர்கள் அதனை நல்ல கருத்துக்களைப் பரப்பவே பயன்படுத்த வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்திருக்கிறார்.  எம்.ஜி.ஆரின் கருத்துக்களை.. எண்ணங்களை உள்வாங்கிய கவிஞர்கள் வரிசையில் இதோ வாலி அவர்களின் வைர வரிகள்.. தெய்வத்தாய்க்காக.. மெல்லிசை மன்னரின் தக்கதோர் இசையமைப்பில் டி.எம்.செளந்திரராஜன் அவர்கள் குரலில்..

    “பதவி வரும்போது பணிவு வரவேண்டும்..

    துணிவும் வரவேண்டும் தோழா..”

    “நாளை உயிர்போகும்.. இன்று போனாலும்

    கொள்கை நிறைவேற்று தோழா..”

    deivaththaiமூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
    அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்

    திரைப்படம்:தெய்வத்தாய்
    இசை:எம்.எஸ்.வி 
    பாடகர்கள்: டி.எம் செளந்தராஜன்
    இயற்றியவர்: கவிஞர் வாலி  

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
    அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
    உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
    அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
    கடமை அது கடமை
    கடமை அது கடமை
    அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
    அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
    உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
    அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்

    பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
    துணிவும் வரவேண்டும் தோழா
    பாதை தவறாமல் பண்பு குறையாமல்
    பழகி வரவேண்டும் தோழா
    பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
    துணிவும் வரவேண்டும் தோழா
    பாதை தவறாமல் பண்பு குறையாமல்
    பழகி வரவேண்டும் தோழா
    அன்பே உன் அன்னை
    அறிவே உன் தந்தை
    உலகே உன் கோவில்
    ஒன்றே உன் வேதம்

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
    அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
    உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
    அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
    கடமை அது கடமை
    கடமை அது கடமை

    வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
    கோழை குணம் மாற்று தோழா
    நாளை உயிர் போகும் இன்று போனாலும்
    கொள்கை நிறைவேற்று தோழா
    வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
    கோழை குணம் மாற்று தோழா
    நாளை உயிர் போகும் இன்று போனாலும்
    கொள்கை நிறைவேற்று தோழா
    அன்பே உன் அன்னை
    அறிவே உன் தந்தை
    உலகே உன் கோவில்
    ஒன்றே உன் வேதம்

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
    அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
    உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
    அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
    கடமை அது கடமை
    கடமை அது கடமை

    http://www.youtube.com/watch?v=izPbQMhpnBc

    Share
  • குறளின் கதிர்களாய்…(55)

    -செண்பக ஜெகதீசன்

    உணர்வ துடையார்முற் சொல்லல் வளர்வதன்
    பாத்தியு ணீர்சொரிந் தற்று. (திருக்குறள்:718 – அவையறிதல்)

    புதுக் கவிதையில்…

    கற்றறிந்தவர்
    அவையறிந்து அவர்முன்
    கருத்துச் சொல்…

    அது,
    பயிர்வளரும் பாத்தியில்
    நீர் பாய்ச்சுதல் போன்றதே…!

    குறும்பாவில்…

    பயிர் வளரும் பாத்திக்கு
    நீர் பாய்ச்சுதல் போன்றது,
    அறிவுடையோர் அவையிலுன் சொல்…!

    மரபுக் கவிதையில்…

    வெற்று நிலத்தில் நீர்பாய்ச்சி
    வேலை செய்வதில் பலனில்லை,
    சுற்றியே வரப்பது அரணாகிச்
    செழிப்பாய்ப் பயிர்வளர் பாத்தியதில்
    வற்றா வகையில் நீர்பாய்ச்ச,
    விளையும் பயிரது நிறைவுடனே,
    கற்றே உணர்ந்தோர் அவைதனிலே
    களறும் சொல்லிந் நீரொப்பதே…!

    லிமரைக்கூ…

    பயிர்வளர் பாத்தியில் பாய்ச்சிடணும் நீர்,
    பாசனம் இதனைப் போன்றதே
    சொல்லதை அவையறிந்து சொல்வது பார்…!

    கிராமிய பாணியில்…

    பாச்சணும்பாச்சணும் தண்ணிபாச்சணும்
    பயிருவளர தண்ணிபாச்சணும்,
    பாத்தியில தண்ணிபாச்சணும்
    பாழாவாம தண்ணிபாச்சணும்
    பயிரப்பாத்து தண்ணிபாச்சணும்..

    அதுபோல,
    பேச்சிபேசணும் பேச்சிபேசணும்
    பெழயில்லாம பேச்சிபேசணும்,
    படிச்சறிஞ்சவன் சபயப்பாத்து
    பேச்சிபேசணும் பேச்சிபேசணும்…!

     

    Share
  • கடவுளின் நிலைக்கு உயர முடியுமா?

    மு. கோபி சரபோஜி

    தன் அண்ணன் வாலியிடமிருந்து அமைச்சர்கள் சகிதம் தப்பிய சுக்ரீவன் எங்கு சென்று பதுங்கினாலும் தன்னை வாலி துன்புறுத்தாமல் விடமாட்டான் எனக் கவலைப்பட்டான். அதனால் அவனிடமிருந்து தப்ப தனக்கு ஒரு பாதுகாப்பான இடம் அவசியம் என்பதை உணர்ந்தவன் வாலி நுழைவதற்கு 144 தடையுத்தரவு நடப்பில் இருந்த ரிஷ்யமுக பர்வத மலைக்கு வந்து சேர்ந்தான். ஒருநாள் மலையின் உச்சிக்கு வந்த சுக்ரீவன் அங்கிருந்த பம்பா நதிக்கரையில் ஆயுதங்களுடன் ஆட்களின் நடமாட்டத்தைக் கண்டதும் பதறிப் போய் விட்டான். அவர்கள் யாரெனத் தெரியாத போதும் எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிந்தது. ஆனாலும் அவனுக்கு திருப்தி வரவில்லை. மரவுரி ஆடைகள் தரித்திருந்த அவர்களின் தோற்றமும், உடற்கட்டும் சுக்ரீவனை சந்தேகப்பார்வை கொள்ள வைத்தது. அண்ணன் வாலியின் உளவாளிகளாய் இருப்பார்களோ? என யோசித்தவன் தன்னிடம் அமைச்சராக இருக்கும் அனுமனை அழைத்து உடனடியாக மாறு வேடமிட்டுச் சென்று வந்திருப்பவர்கள் யார்? என அறிந்து வா என உத்தரவிட்டான்.

    வந்திருப்பவர்கள் ஆயுதம் தாங்கிகளாக இருப்பதால் ஏதாவது ஒரு வேடத்தை நாம பாட்டுக்குப் போட்டுட்டுப் போய் அவனுக பாட்டுக்கு நம்மளைப் போட்டுத்தள்ளிட்டு போயிட்டானுகன்னா என்ன செய்றது? என யோசித்த அனுமன் எவ்வளவு பெரிய வல்லனும் எளிதில் தாக்க யோசிக்கும் அந்தணர் வேடமிட்டு அவர்கள் முன் வந்து நின்றார். ஏம்பா………..உங்களைப் பார்த்தால் எதையோ தேடிக் கொண்டிருப்பவர்கள் போல் தெரிகிறதே. நதிக்கரையில் வந்து என்ன தேடுகிறீர்கள்? யாரைத் தேடுகிறீர்கள்? நீங்க அணிந்திருக்கிற ஆடைக்கும், உங்களுக்கும் சம்பந்தமில்லாதது மாதிரி இருக்கே? நீங்கள் யார்? எனக் கேட்டார்.

    நாங்கள் அயோத்தியில் இருந்து வருகிறோம். என் தந்தை கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக நானும், என் மனைவியும் வனவாசம் கிளம்பி வர எங்களுக்குத் துணையாக என் தம்பியும் வந்தான். அப்படி வந்த இடத்தில் என் மனைவி சீதாதேவியை மாரீசனின் வித்தையால் இராவணன் ஆட்டையப் போட்டுட்டு போய்விட்டான். அவளைத் தேடித் தான் இப்பகுதிக்கு வந்திருக்கிறோம் என இராமர் சொன்னதும் அனுமன் தன் அந்தணர் வேடத்தைக் கலைந்து சுயரூபத்தில் நின்று அவர்களை வணங்கினார்.

    அடடா……வந்த இடத்தில் உங்களுக்கு வந்தப் பிரச்சனை மாதிரியே தான் வாழ்ந்த இடத்தில் எங்களின் அரசன் சுக்ரீவனுக்கும் ஒரு பிரச்சனை. அவனுடைய நாட்டையும், மனைவியையும் அவன் சகோதரன் வாலி அபகரித்துக் கொண்டு விரட்டியடித்து விட்டான். அவனுக்குப் பயந்து தான் இங்குள்ள மலையில் எங்கள் அரசன் தங்கி இருக்கிறான் எனச் சொல்லி சுக்ரீவனிடம் அவர்களை அழைத்துச் சென்றான்.

    இராமர் சுக்ரீவனிடம் உங்களின் உதவி தேவை எனக் கோரிக்கை வைக்க சுக்ரீவனும் பதிலுக்கு ஒரு கோரிக்கையை வைத்தான். அதன்படி வாலியைக் கொன்று சுக்ரீவனை மீண்டும் அரசனாக்க இராமரும், அதற்குப் பதிலுதவியாக இராமரின் மனைவியைக் கண்டு பிடித்துத் தர சுக்ரீவனும் உதவுவது என ஒப்பந்தம் முடிவானது.

    2905288-sugriva_fighting_vali”பதிலுக்குப் பதில்” என்ற ஒப்பந்த சரத்துப்படி வாலியைப் போட்டுத்தள்ள இராமர் முடிவு செய்தார். ஆனால் அதை அவரால் எளிதாகச் செய்ய முடியவில்லை. காரணம் வாலி பெற்றிருந்த ஒரு வரம். போரில் தன் எதிரில் வந்து நிற்பவனின் பலத்தில் பாதி தனக்குக் கிடைக்கும் படியான வரத்தை வாலி பெற்றிருந்ததால் அவனை நேருக்கு நேர் சந்தித்துக் கொல்லுவது சாத்தியமில்லை என்ற நிலையில் வேறு என்ன செய்யலாம்? என இராமர் யோசித்தார். ”மந்திரம் பலிக்காத இடத்தில் தந்திரம் பலிக்கும்” என்ற நியதிப்படி வாலியை வீழ்த்த முடிவு செய்த இராமர் சுக்ரீவனும், வாலியும் போர் செய்யும் சமயத்தில் ஒரு மரத்திற்கு பின் மறைந்திருந்து தந்திரமாய் அம்பெய்து வாலியைப் போட்டுத் தள்ளினார். போடனும்னு முடிவு செஞ்சதுக்கு அப்புறம் நெத்தியில போட்டா என்ன? நெஞ்சுல போட்டா என்ன? கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் விதமாக வாலியின் கதையை இராமர் முடித்தார்.

    களத்தில் நேருக்கு நேர் எதிர் கொள்வது தான் ஒரு வீரனுக்கு அழகு என்ற நிலையில் தன்னுடைய இந்தச் செயல் தனக்கும், தன் புகழுக்கும் தீராத கலங்கத்தைத் தரும் என இராமருக்குத் தெரியாமலா இருந்திருக்கும்? வாக்குறுதியா? போர் நியதியா? என யோசித்தவர் எல்லாவற்றையும் விட கொடுத்த வாக்கு முக்கியம் என நினைத்தார். வாலியை வீழ்த்தினார். வாலி இன்னொருத்தனின் மனைவியை அபகரித்த பாவி என்பதால் அவன் அழிக்கப்பட வேண்டியவன். அவனைக் கொன்றதைக் கொண்டாட வேண்டுமேயொழிய கொன்ற முறை சரியா? தவறா? என்றெல்லாம் வியாக்கானம் பண்ணக்கூடாது என்பது சிலரின் வாதம். ”கருத்துச் சொன்னா கேட்டுக்கனும். ஆராயக்கூடாது” என்பது ஆரோக்கியமானதா? இல்லையா? என்பதையெல்லாம் பட்டிமன்ற நடுவர்களின் முடிவுக்கே விட்டு விட்டு நம்ம விசயத்துக்கு வருவோம்.

    சுக்ரீவனும் இராமருக்கு கொடுத்த வாக்குறுதிப் படி உதவினான். அவனால் இராமருக்கு உதவியாக அனுப்பப்பட்ட ஒருவன் பின்னாளில் அவரின் பரம பக்தனாக, சேவகனாக மாறிப்போனான். அந்தச் சேவக பக்தன் அனுமன்! கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் முயற்சியில் சுயம் சார்ந்த விசயங்களைப் பார்க்கக்கூடாது என நினைத்து சுக்ரீவன் என்ற குரங்கரசனுக்கு உதவிய  இராமர் உயிரற்ற கல் குன்று ஒன்றிற்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக எடுத்த இன்னொரு அவதாரம் தான் “கிருஷ்ணவதாரம்”! இராமர் கிருஷ்ணராய் மறுபிறவி எடுத்துவரக் காரணமான அந்தக்குன்றின் பெயர் “கோவர்த்தனகிரி மலை”!

    இராமருக்கும், இந்த மலைக்கும் தீர்க்கப்படாத பழைய பாக்கி ஒன்று இருந்தது. ”விட்ட குறை தொட்ட குறை” என்பார்களே அதுபோல இராம அவதாரத்தில் விட்ட குறை தான் கிருஷ்ணவதாரத்தில் நிறைவடைந்தது! இந்திரன் மதுரா நகர் மக்கள் மீது கொண்ட கோபத்தால் அடைமழையை பெய்விக்க அதிலிருந்து அந்நகர மக்களைக் காப்பதற்காகக் கிருஷ்ணர் கோவர்த்தனகிரி மலையை தூக்கிப் பிடித்து அதன் கீழ் மக்களையும், ஆடு, மாடுகளையும் நிற்க வைத்து காப்பாற்றினார் என கிருஷ்ணவதாரத்தில் ஒரு கதை உண்டு. கடவுள் மக்களைக் காப்பது கடமையில்லையா? இதுல என்ன விசேசம் என்கிறீர்களா? விசேசம் கடவுள் காப்பாற்றியது அல்ல. கடவுளுக்கும், அந்த மலைக்குமான முந்தைய உறவு!

    கிருஷ்ணர் தன் ஒற்றை விரலில் தூக்கி நிறுத்திய கோவர்த்தனகிரி மலைக்கு ஒரு நெடிய கதை உண்டு. சேதுபாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. அதற்காக மிகப் பெரிய கற்கள், குன்றுகள், பாறைகள், வேரோடு பிடுங்கப்பட்ட மரங்கள் என எல்லாப் பக்கங்களிலிருந்தும் வானரங்களால் கொண்டுவந்து சேர்க்கப்பட்டன. பெருங்கற்கள் எல்லாம் இமயமலையிலிருந்து பெயர்த்து எடுத்து கொண்டுவரப்பட்டன. அப்படி அனுமனால் தூக்கி வரப்பட்ட ஒரு குன்றுதான் கோவர்த்தன கிரிமலை!

    இமயமலையில் சிறுகுன்றாய் இருந்த கோவர்த்தன கிரிமலையை அனுமன் தன் பலம் கொண்ட மட்டும் தூக்க முயன்றும் முடியவில்லை. உடனே அவர் இராமகாரியத்திற்கான பணியில் ஈடுபட்டிருக்கும் என்னோடு நீ வருவதால் இராமரின் தரிசனம் பெறும் பலனை அடைய முடியும். அவரின் அருள் கிடைக்க வேண்டுமானால் உன் பலத்தைக் குறைத்துக் கொண்டு என்னோடு வா என்றழைத்தார். உடனே கோவர்த்தனகிரி மலையும் தன் பலத்தைக் குறைத்துக் கொண்டு அனுமனுடன் கிளம்பியது. மலையோடு அனுமன் வரும் வழியில் மற்ற வானரங்கள் செய்ய வேண்டிய வேலைக்கான உத்தரவை பிறப்பித்துக் கொண்டிருந்த ஜாம்பவான் பாலம் கட்டும் பணி முடிவடைந்து விட்டதால் இனி கட்டுமானப் பொருட்களை கொண்டுவர வேண்டாம் என இராமபிரான் கூறிவிட்டார் என  அனுமனிடம் சொன்னார்.

    தலைவனின் உத்தரவை சிரமேற்கொண்டு செயல்படுத்தும் அனுமன் அந்தத் தகவலைக் கேட்ட அடுத்த நொடி தான் தூக்கி வந்த மலையை அந்த இடத்திலேயே இறக்கி வைத்தார். நதிக்கரையோரம் தன்னை இறக்கிவிட்டு கிளம்பப் போன அனுமனிடம் என்னை இராமதரிசனத்திற்காக அழைத்துச் செல்வதாய் சொன்னதால் தான் இமயமலையிலிருந்து வந்தேன். நீயோ இப்படி இடையிலேயே விட்டு விட்டுப் போனால் என்ன அர்த்தம்? எனக் கேட்டது.

    சங்கடமான சூழலாகிவிட்டதை உணர்ந்த அனுமன் தலைவரின் உத்தரவுக்கு கீழ் படிய வேண்டியது என் கடமை. அதிலிருந்து என்னால் விலகவே முடியாது. அதனால் உன்னை இங்கு விட்டுப் போவதைத்தவிர எனக்கு வேறு வழியில்லை, ஆனால், இந்த விசயத்தைத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறேன் என அனுமன் கூறினார். சொன்னபடியே தலைவர் இராமரைச் சந்தித்து நிகழ்ந்தவைகளைக் கூறினார். தொண்டனுக்கு ஒரு நெருக்கடி என்றால் அதைப் பார்த்துக் கொண்டிருப்பது நல்ல தலைவனுக்கு அழகில்லை என நினைத்த இராமர் உன் வாக்குறுதியை நான் நிறைவேற்றுவேன். கவலைப்படாதே எனக் கூறினார்.

    பாலம் கட்டும் பணி தான் முடிவடைந்து விட்டதே! அப்புறம் எப்படி? என்றார் அனுமன்.

    அடுத்த யுகத்தில் நான் பிறவி எடுப்பேன். நீ தூக்கி வந்த மலையை எங்கு இறக்கி வைத்தாயோ அதே இடத்தில் தான் வளர்வேன். அப்பொழுது என்னை நம்பி வந்த மலைக்கு நீ கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்றார். இந்தத் தகவல் உடனடியாக அனுமன் மூலம் கோவர்த்தனகிரி மலைக்குச் சொல்லப்பட்டது. தன்னை நம்பி தன் பக்தன் கொடுத்த வாக்குறுதிக்காக சொன்ன சொல் தவறாமல் அடுத்த யுகத்தில் கிருஷ்ணராய் அவதரித்த இராமர்  தன் விரலால் தூக்கி நிறுத்தி மலையை ஆசிர்வதித்தார். இன்னைக்கு அனுமன் மாதிரி பக்தர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் இராமர் மாதிரி தலைவர்களுக்குத் தான் பஞ்சம் நிலவுகிறது!!.

    கொடுத்த வாக்குறுதியை மீறாமலும், அவசியம் ஏற்பட்டால் யுகம் கடந்து வந்தேனும் கொடுத்த வாக்குறுதியை நிறைவு செய்கிறான் கடவுள். மனிதர்களாக நாமோ கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுகிறோமா? காப்பாற்றாவிட்டாலும் பொய்யான வாக்குறுதிகளையாது கொடுக்காமல் இருக்கலாமே! அப்படி இருந்தாலே போதும். இந்த நாளை மட்டுமல்ல எல்லா நாளையும் இனிய நாளாக்கிக் கொள்ளவும், அந்தக் கடவுளின் நிலைக்கு நம் வாழ்க்கையை நகர்த்திக் கொள்ளவும் முடியும். அதெப்படிங்க மனிதன் தெய்வநிலைக்கு வர முடியும்? என்கிறீர்களா? கடவுள் மனித நிலைக்கு இறங்கும் போது மனிதன் மட்டும் கடவுள் நிலைக்கு உயர முடியாத என்ன?

    படத்திற்கு நன்றி: http://www.comicvine.com/sugreeva/4005-26968/

    Share
  • பனியுகத்தின் தோற்றமும், மாற்றமும், கடற் தளங்களின் உயர்ச்சியும், தாழ்ச்சியும்

    சி. ஜெயபாரதன்.

     

     

    cover-image-continents-1

     

    (Ice Age, Sea-Floor Rise & Fall)

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    கலியுகம் விழிக்கும் முன்னே
    பதினெட் டாயிரம் ஆண்டுக்கு முன்
    பனியுகம் தவழ்ந்தது!
    கடல் நீர் சுண்டி,
    தமிழகத் தென்கரை நீண்டு
    குமரிக் கண்டம்
    கூந்தலை விரித்தது!
    சூழ்ந்திடும் பரிதிக் கணப்பில்
    படிப்படியாய்,
    பனிப் பாறை உருகிடும் !
    நீர் மட்டம் உயர
    நிலத்தின் நீட்சி மூழ்கும்!
    கடல் மடி நிரம்பி
    முடிவில் புதை பூமியாய்
    சமாதி யானது,
    குமரிக் கண்டம்!

    ++++++++++++++++

    பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பு பனிப்பாறை அரிப்பும், பனிமலைச் சரிப்பும் பூதளத்தின் மேனியைக் கோரமாக்கி அழியாத வரலாற்றுச் சான்றுகளாய் நமக்குக் கற்பாறைகளில் கல்வெட்டு செய்திருக்கிறது! பூகோளத்தில் தோன்றிய பனியுகத்தின் ஆட்சியின் போது, பனித்தாள்கள் [Ice Sheets] கண்டங்களில் படிந்து விட்டுப் போன அடையாளச் சின்னங்கள் அவை

    பால் ஃபிரிக்கென்ஸ்

    ‘யுகம் யுகங்களாய் மெதுவாக பூதளத்தின் முகம் மாறிப் போகும் படைப்பு முடிவு பெறாது நீண்டு சென்றாலும், ஒவ்வொரு பூர்வீகச் சின்னத்தை உண்டாக்கிக் கால வரலாற்றை மாற்றிய தனித்துவ இயக்கம் பிரபஞ்சத்தின் உண்மையான ஓர் ஆற்றல் கதையை நமக்குக் கூறுகிறது ‘.

    லோவெல் தாமஸ்

    ‘தளமட்டம் அதிர்ந்து கோரமாய்ச் சாய்கிறது! பூமி பிளக்கிறது! குன்றில் எரிமலை வெடிக்கிறது! பூதளத்தின் மீது உலவும் மாந்தர், கொந்தளிக்கும் அடித்தட்டு ஆட்டத்தால் குலுக்கப்பட்டு நடுங்குகின்றனர். இயற்கையின் இந்தப் பயங்கரப் பேயாட்டத்தின் காரணத்தை இப்போது நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம் ஆயினும், அவற்றை முற்றிலும் கட்டுப்படுத்த முடியாத தவிப்பு நிலையில் நாம் இருக்கிறோம் ‘.

    நோயல் புஷ்

    முன்னுரை:    ஒவ்வோர் ஆயிரமாண்டு [Millennium] பிறப்புக்குப் பிறகும் பூதளத்தின் தளப் பண்புகள் மாறி அவற்றின் தனித்துவச் சின்னங்கள் எல்லாம் மாந்தர் கண்டுபிடிக்க வேண்டும் என்று இயற்கை அன்னை புதையலாக மறைத்து வைத்திருக்கிறாள்! மலைச் சிகரங்களில் பனிமுடி! பூதளக் கண்டங்களில் படிந்துள்ள புழுதி [Sediments]! கடற் தளங்களில் காணப்படும் அற்பச் சிப்பிகள், பூர்வப் படிவங்கள் [Fossils]! மலைப் பாறைகளில் காலச் சிற்பி பதித்துள்ள மிருகங்களின் கூடுகள்! குமுறிய எரிமலை ஆறோட்டத்தின் ஆறிய குழம்புகள்! 1960 ஆம் ஆண்டு முதலாக கடற்தளங் களில் பலமட்ட அடுக்குகளில் நூற்றுக் கணக்கான துளைகளிட்டுக் காலநிலை மாறுபாடு, கடல் மட்ட வேறுபாடு, பூர்வீக உயிரினங்களின் மலர்ச்சி, மறைவு, பூதளத் தட்டுகளின் பிறப்பு, இறப்பு, பெயர்ச்சி, கண்டங்களின் பண்டைய வயது போன்ற புதிர்களைப் பூதளவாதிகள் விஞ்ஞான ரீதியாக விடுவித்திருக்கிறார்கள்.

    18,000 ஆண்டுகளுக்கு முன்னே இருந்த பூகோளத்தின் தோற்றமும், சூழ்வெளியும் இன்றைய அமைப்பை விட வேறுபட்டிருந்தன. சூழ்மண்டலத்தின் வாயு உஷ்ணம் சில டிகிரிகள் [2 C to 3 C] சற்று குறைவாக இருந்தது. பனித் திரட்டுகள் உண்டாகிக் கடல்மட்டம் தணிந்திருந்தது. அச்சமயத்தில்தான் பூமியில் பனியுகம் தோன்றி யிருக்க வேண்டும் என்று பூதளவாதிகள் கூறுகிறார்கள். பனியுகத்தின் படர்ந்த உச்சக் கட்டத்தில், வட ஐரோப்பா, கிரீன்லாந்து வட அமெரிக்காவின் வடபுறம் மற்றும் அண்டார்க்டிகா பிரதேசங்கள் பனிமண்டலம் மூடிக் குளிர்ப் பகுதிகளாய் மாறிவிட்டிருந்தன. அப்போது பூதளத்தின் நீர்வளம் சுண்டிச் சுருங்கிக் கடல் மட்டம் சுமார் 300 அடி முதல் 500 அடி வரைத் தணிந்து, உலகக் கண்டங்களின் விளிம்புகள் நீண்டு, ஆசியாவிலிருந்து அமெரிக்காவின் [வடக்கு, தெற்கு] கண்டங்களுக்குப் நிலப்பாலங்கள் [Land Bridges] அமைந்த தென்று கருதப் படுகிறது! அடுத்த 8000 ஆண்டுகள் சூழ்வெளி வெப்பம் படிப்படியாக மிகை யாகிப் பனிமலைகள் உருக ஆரம்பித்துக் கடலின் நீர் மட்டம் உயரத் தொடங்கியது. வட அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகள் [சுப்பிரீயர், மிச்சிகன், ஹூரான், ஈரி, அண்டாரியோ] போன்ற மாபெரும் சுவைநீர் ஏரிகள் அப்போதுதான் நிரம்பின என்று ஊகிக்கப் படுகிறது.

    மேலும் பனியுகத்தின் மத்தியில் பனித்திரட்சிகள் மண்டி நீண்ட காலமாக உச்சநிலை ஏறிப் பின் இறங்கி வெப்பமும், குளிர்ச்சியும் சூழ்வெளியில் மாறி, மாறி மீண்டும் சுற்றியதால், பூமி சூரியனைச் சுற்றிவரும் சுழல்வீதி [Earth ‘s Orbit] வேறானது. பூமியின் சுழல்வீதி மாறிய போது, பரிதியால் ஏற்படும் வெப்பமும், காலநிலைகளும், சூழ்மண்டலும் வேறுபட்டுப் போயின! 100,000 ஆண்டுகளுக்கு முன்பு பரிதியை நீள்வட்டச் சுழல்வீதியில் [Elliptical Orbit] சுற்றிவந்த பூமியின் பாதை, பின்னால் ஏறக்குறைய முழு வட்டவீதியாக [Near-Perfect Circular Orbit] மாறிப் போனதாக அறியப்படுகிறது! நீள்வட்டத்தில் பரிதியைக் குவிமையமாகக் [Focus] கொண்டு பூமி சுற்றும் போது, பாதிக் கோளம் ஒரு சமயம் மிக அருகில் சுற்றியும், ஆறு மாதங்களுக்குப் பிறகு வெகு தூரத்திலும் சுற்றியும் வந்துள்ளது! ஆனால் வட்டவீதியில் சுற்றும் போது பாதிக் கோளம் ஏறக்குறைய ஒரே தூரத்தில் ஆண்டு முழுவதும் சுற்றிவரும். தற்போதைய வெப்பச் சூழ்நிலை மாறி ஒருநாள் உஷ்ணம் சில டிகிரிகள் குன்றி மீண்டும் பனியுகம் வரலாம் என்று பூதளவாதிகள் கருதுகின்றனர்.

    பூதளக் கண்டங்களில் தோன்றிய பனியுகப் புரட்சி

    1960 ஆண்டுகளில் செய்த கடற்தள உளவு ஆராய்ச்சிகளில் 1.7 மைல் ஆழத்தில் தோண்டிய குழி ஒன்றில் 250,000 ஆண்டுகளுக்கு முன்னே புதைந்து போயிருந்த பனிக்கருவை [Ice Cores] எடுத்திருக்கிறார்கள். அது பண்டைய காலத்துச் சூழ்வெளி அமைப்புகள் [Prehistoric Atmospheres], தட்ப கால பனிப்பொழிவுகள் [Seasonal Snowfalls], பனிக்குன்றுகள் நொறுக்கிய பாறைகள் [Rocks crushed by Glaciers], எரிமலைச் சாம்பல்கள், காற்றுத் தூசிகள் போன்ற வற்றைக் காட்டும் ‘காலச் சின்னமாய் ‘ [Time Capsule] இருந்துள்ளது! 167 மில்லியன் ஆண்டு களுக்கு முன்னே கடற்பீடக் கருக்கள் [Sea Cores] 1.3 மைல் ஆழம்வரை தொட்டிருக்கின்றன. அவற்றின் மூலம் அந்தக் கால எரிமலைக் குழிகள் [Volcano Trenches], கடலின் அடித்தளம் அமைக்கும் பஸால்ட் துணுக்குகள் [Basalt Pieces], கடற் புழுதிகள் [Marine Sediments], உஷ்ண மாறுதலைக் காட்டும் துருவப் பனிமூட்டம் போன்ற நுண்ணுருச் சிப்பிகள் [Microscopic Shells like Polar Ice] அறியப்பட்டன. 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து 4 பில்லியன் ஆண்டுகள் வரை நிகழ்ந்த பூகோள வரலாற்றை அறியக் கடற்தளத்தின் அடித் தட்டுகள், கண்டப்பாறை மையங்களின் அரிப்புகள் [Oceanic Crust & Eroded Centers of Continents] ஆகியவை பயன் படுகின்றன! அதற்கும் அப்பால் என்ன நேர்ந்தது என்பதை அறிய பூகோளத்தில் சின்னங்களோ அல்லது பூர்வப் படிவங்களோ இருப்பதாகத் தெரியவில்லை!

    ஆஃப்பிரிக்கா, அண்டார்க்டிகா, ஆஸ்திரேலியா, தென்னமெரிக்கா, இந்தியா ஆகிய கண்டங் களில் ஒரே காலத்தில் பனிக்காடுகள் சூழ்ந்திருந்தன என்னும் கருத்து, அக்கண்டங்கள் யாவும் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஒன்றாய்ப் பிணைந்திருந்தன என்னும் கோட்பாடை ஒப்புக்கொள்பவர் புரிந்து கொள்ள முடியும். உலகக் கண்டங்கள் தற்போதுள்ள நில அமைப்பில் இருந்து பனிமண்டலத்தால் மூடிக் கிடந்ததாக அனுமானித்தால், பூமத்திய ரேகைக்கு வடபால் இருக்கும் கண்டங்களிலும் பனிமயம் சூழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அவ்விதம் வடகோளத் தில் பனிமயம் சூழ்ந்திருந்ததற்குப் பூதளவாதிகள் எந்த சான்றுகளும் காணவில்லை. மெய்யாக அச்சமயத்தில் வட அமெரிக்கா கண்டம் வெப்பக் கணப்பு சூழ்ந்ததாக இருந்ததாம்!

    18,000 ஆண்டுகளுக்கு முன் எழுந்த பனியுகம், பூகோளத்தின் சராசரி உஷ்ணம் [சிறிதளவு 2 டிகிரி C (4 டிகிரி F)] குன்றி ஒரு காலத்தில் மீளலாம் என்று பூதளவாதிகள் அஞ்சுகின்றனர்! படையெடுக்கும் பனி மண்டலம் பூகோள வெள்ளத்தைச் சுண்ட வைத்து, கடல்நீர் மட்டம் குன்றிக் கண்டங் களின் சரிவுத் தோள்களை [Continental Shelves] தெரியும்படி ஆக்கி விடலாம்! நியூயார்க் நகரம் பனிமூட்டமாகித் தடித்த பனித்தட்டு மூடி, எம்பெயர் ஸ்டேட் கட்டிடமே மூழ்கிப் போகலாம்! சிகாகோ, டெட்ராய்ட், டொராண்டோ, மாண்டிரியால் ஆகிய நகரங்களும் பனிச் சமாதியில் அடங்கி விடலாம்! ஜப்பான் ஆசியக் கண்டத்தின் நீட்சிப் பகுதியாகலாம்! இங்கிலாந்தி லிருந்து பிரான்சு நாட்டுக்கு நடந்தே செல்லலாம். இந்தியாவிலிருந்து பாத யாத்திரை செய்து இலங்கைக்குப் போகலாம். அதே சமயம் மறுபுறம் பார்த்தால், பூமியின் வெப்பச் சூழ்மண்டலத்தில் ஒரு சில டிகிரி உஷ்ண ஏற்றத்தால் [2 C] துருவப் பனிப்பாறைகள் உருகி, உலக மெங்கும் தணிந்த தளப்பகுதிகள் யாவும் கடல்நீரில் மூழ்கிப் போகலாம்!

    பூகோளத்தின் தட்ப வெப்ப நிலைகளை ஏற்றி, இறக்கி உலக மக்களைத் தவிக்க வைக்கும், இயற்கையின் யந்திர ஆற்றல்கள் விந்தையானவை! பூகோளச் சுற்று அச்சின் சரிவு [Tilt of Planet Axis], சுற்றிவரும் சுழல்வீதியின் மாறுபாடு [Changes in Earth ‘s Orbit], பரிதியின் தேமல்களால் [Sunspots] திரளும் கதிர்வீச்சின் உக்கிரம் [Swells of Radiation], எரிமலைகள் கக்கும் கரிமண்டல வாயுக்கள் சூழ்வெளியில் கலப்பு [Volcanic Activity Gas Emissions] ஆகியவை அவற்றில் முக்கிய மானவை! காலச் சிற்பி எரிமலைகளால் எழுப்பியுள்ள கடற்தீவுகளும், கண்டங்களில் உயர்த்தி யுள்ள கோபுரங்களும் உலக விந்தைகளாய் இன்றும் காட்சி அளித்துக் கொண்டிருக்கின்றன.

    அமெரிக்காவின் வயாமியில் பக்கத்து பெல் ஃபவுச் நதி [Belle Fouche River] மட்டத்திலிருந்து 1253 அடி உயரம் எழுந்துள்ள ‘பிசாசுக் கோபுரம் ‘ [Devils Tower in Wyoming] உலகப் புகழ் பெற்றது! (700-3000) அடி உயரத்தில் ஏகவடிவப் பாறையாய்த் [Monolithic Phonolite Rock] தோன்றிப் பூமியின் உட்தளத்தி லிருந்து தலைதூக்கி நிற்கும் அக்கோபுரம், எரிமலைக் குழம்பு நிரம்பிப் பனிப்புயல் அரித்துச் செதுக்கப்பட்ட சிற்பக் கோபுரம்! செந்நிறத்தில் பிரமிட் போல் தோன்றும் அக்கோபுரம் ஐம்புறம் கொண்டு கூம்பிய பல தூண்களை [Columns] உடையது! அதன் வயது சுமார் 40 மில்லியன் வருடம் என்று கணிக்கப்படுகிறது! அதுபோல் 50 அடி உயரமுள்ள ஆஸ்திரேலியாவின் அதிசய ‘அலைப்பாறை ‘ [Australia ‘s Wave Rock] இயற்கையின் பனிப்புயல் கோரப் பற்களால் அரிக்கப்பட்டதாகத் தெரிகிறது!


    பூகோளக் கண்டங்களின் இடைப்படும் கடற்தளங்கள்

    கடற்தளங்களின் வரைபடத்தைத் தயாரிக்க முதலில் குறிப்பிட்ட இடத்தின் ஆழம் அறியப்பட வேண்டும். ஒருகாலத்தில் கனத்த இரும்புக் கட்டியைக் கயிற்றில் தொங்கவிட்டுக் கடலின் ஆழங்கள் அளக்கப் பட்டன. அப்பணி களைப்பை உண்டாக்கிக் காலத்தை நீடிக்கும் ஒரு கடினப் பணி! தற்போது ஒலிச்சக்தி அதிர்வுகளை [Ultrasonic Pulses] உண்டாக்கி, எதிரொலி மீளும் நேரத்தைப் பதிவு செய்து கடலின் ஆழங்கள் துல்லியமாகப் பதியப் படுகின்றன. தொலைக்காட்சி காமிராகளை கடலில் இறக்கி, எரிமலைப் பீடங்களை படம் பிடித்துக் கொள்ளலாம். விரிந்த பெரும்பான்மையான கடற்தளப் பரப்புகள் சமதள மட்ட முடையவை. கடலின் உச்சத்தணிவுப் பகுதிகளில் [Abyssal Plains] புழுதிகள் மண்டிக் கிடக்கின்றன. ஆனால் கடலின் மற்ற பகுதிகளில் புள்ளி புள்ளியாகத் தெரியும் செத்த எரிமலைப் புண்களும், புகை கக்கிக் கொண்டிருக்கும் ஜீவனுள்ள எரிமலைச் சீறல்களும் காண முடிகிறது! அமெரிக்காவின் ராக்கி மலைத் தொடர் போன்றும், செங்குத்து மலைப் பள்ளத்தாக்குகள் [Canyon like Trenches] போன்றும், கடற்தளங்களிலும் காணப்படுகின்றன.


    கண்டத்தின் தோள்சரிப்பு [Continental Shelf] என்றால் என்ன ? எரிமலைகள் உருவாக்கிய தீவுகளின் விளிம்புகள் ஏறக்குறைய செங்குத்தாகச் சரிந்து கடற்தளத்துடன் பிணைக்கப் படுகின்றன. ஆனால் உலகக் கண்டங்களின் கடல் விளிம்புகள் தணிந்த மட்டங்களில் தோள்சரிந்து தெரிகின்றன. இச்சரிவுகள் சுமார் 650 அடி ஆழம்வரை படிப்படியாகச் சரிந்து பிறகுத் திடாரென செங்குத்தான பள்ளமாகின்றன. மெல்லச் சாயும் தோள்சரிவு சுமார் 50 அல்லது 50 மைல் தூரத்துக்கும் குறைவாக கடலுள்ளே செல்லலாம். விதி விலக்காக சைபீரியாவின் தோள்சரிவு 800 மைல் தூரம் வரை ஆர்டிக்கடலில் நீள்கிறது.


    உலகத்தின் கடல்கள் எத்தனை விதமான ஆழங்களில் இருக்கின்றன ? எல்லாவற்றிலும் குட்டையான கடல் சராசரி 5000 அடி ஆழமுள்ள ஆர்டிக்கடல். ஆனால் அதிலும் 17,880 அடி ஆழத்தில் உள்ள ஒரு பெரும் மலைத் தொடர் கடல் அரங்குகளைப் பிரித்துக் கொண்டிருக்கிறது. ஆர்டிக்கடலுக்கு அடுத்ததாக உள்ளது, சராசரி 13,000 அடி ஆழமுள்ள இந்துமாக் கடல்! அதில் உச்ச ஆழப்பள்ளம், 25,344 அடி ஆழத்தில் இருக்கும் ஜாவாக் குழி [Java Trench]! அடுத்தது சராசரி 14,000 அடி ஆழமுள்ள அட்லாண்டிக் கடல். அதில் உள்ள போர்டோ ரிக்கோ குழி 28,374 அடி ஆழமானது. எல்லாவற்றிலும் அகண்டதும், ஆழமானதாகவும் இருப்பது பசிபிக் மாக்கடல்! அதன் சராசரி ஆழம் 14,000 அடியே ஆனாலும், உச்ச ஆழம்: 36,198 அடி! அதாவது பசிபிக் மாக்கடலின் உச்ச ஆழம்: 7 மைல். இமயத்தின் உச்ச சிகரமான எவரெஸ்டை உச்சியை விட ஒருமைல் அதிக ஆழத்தில் பசிபிக் மாக்கடல் உள்ளது!

    அட்லாண்டிக் கடற்தளத்தில் S-வளைவுபோல் சுற்றிய மைய அட்லாண்டிக் கடற்தட்டுப் பீடம் [Mid-Atlantic Ridge] ஐஸ்லாத்தின் தென்திசையில் ஆரம்பித்து 40,000 மைல் தூரம் மலைப் பாம்புபோல் நீண்டுள்ளது! மைய அட்லாண்டிக் பீடம் கடற்தட்டுப் பிறழ்ச்சியால் எரிமலைகள் ஏற்பட்டுப் பெருத்துக் கொண்டே போகும் நீண்ட மலைத்தொடர்! அவற்றைப் போல் பசிபிக் மாக்கடலும் ஆயிரக் கணக்கான அடிகள் உயர்ந்த கடற் குன்றுகள் [Seamounts] உள்ளன. ‘கையட்ஸ் ‘ [Guyots] எனப்படும் ஆழ்கடல் மலைகள் [Submarine Mountains] வேறு வடிவம் கொண்டவை. அவற்றின் தலை மட்டமாக வெட்டப் பட்டிருக்கும். ஒரு காலத்தில் கடல் மட்டம் தணிந்து அவற்றின் தலை வெளியே நீட்டப்பட்டு, கடல் அலைகள் சீவி விட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

    (தொடரும்)

    தகவல்:

    1. The Continental Mosaic -Reader ‘s Digest Atlas of the World [1987]

    2. Hutchinson Encyclopedia of the Earth By Peter Smith [1985]

    3. Earth ‘s Restless Crust -ABC ‘s of Nature, Reader ‘s Digest [1984]

    4. The Long Journey of Continents By: Ronald Schiller -The Marvels & Mysteries of The World Around US, Reader ‘s Digest Publication [1972]

    5. Continental Drift & Plate Tectonics [www.zephryus.co.uk/geography/home.html] (Mar 20, 2003)

    6. Pangaea, Gondwana, Laurasia, Plate Tectonics, Alfred Wegener From: Wikipedia Encyclopedia

    7. Theory of Continental Drift By: Jim Cornish, Newfoundland, Canada (Sep 2001)

    8. Continental Frift, Geology & Oceanography. [Several Internet Articles]

    9. Everyday Geography By: Kevin McKinney (1993)

    10 Eduard Suess, Austrian Scientist From: Wikipedia Encyclopedia

    11 Our Changing Earth By: Tusco Wilson Ph.D. Frontiers of Science, National Geographic Society [1982]

    12 This Changing Earth By: Samuel Matthews, National Geographic Society [Jan 1973]

    13 Our Restless Planet Earth Rick Gore By: National Geographic Society [Aug 1985]

    14 Fossils, Annals of Life Written in Rocks By: David Jeffery, National Geographic Society [Aug 1985]

    15 The Earth ‘s Fractured Surface By: National Geographic Society [1995]

    16 Physical Earth By: National Geographic Society [1998]

    17 The Shaping of a Continent, North America ‘s Active West [1995]

    18 National Geographic Picture Atlas of our World [1990]

    19 Differences Between Continental & Oceanic Islands [www.abdn.ac.uk/zoohons/lecture1]

    20 The Evolution of the Sumatran Earthquake Fault System, Indonesia, Andy McCarthy. Ph.D. [July 9, 2002]

    21 Isotopic Dating of Sumatran Fault System By: Imtihanah & MPhil

    22 The Sumatran Fault System By Professor Kerry Sieh & Danny Natawidjaja [Nov 1999]

    23 Kumari Kandam & Lemuria [http://en.wikipedia.org/wiki/Lemuria_(continent)

    24 Kumari Kandam By: Chitta Ranjan Myilvaganan, Sydney, Australia. [Jan 30, 2005]

    25 Reader ‘s Digest Publication: The Living Earth Book of Deserts By: Susan Arritt [1993]

    26 Physical Earth, By: National Geographic Society, Millennium in Maps [1998]

    ****

     

    Share